Advertisement

அத்தியாயம் –12

 

மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்த வேளை கைபேசி அழைப்பு விடுக்க அப்போது தான் உறக்கத்தை தழுவியிருந்த வல்லவரையனுக்கு உறக்கம் கலைந்ததில் கண்கள் எரிந்தது.

 

போனை எடுத்து பார்த்தவன் அவசரமாய் பொத்தானை அழுத்தி “சொல்லு ராம்” என்றிருந்தான்பதட்டக்குரலில்.

 

“வல்லா ஒண்ணும் பயமில்லை. ஒரு முக்கியமான சேதி சொல்ல தான் கூப்பிட்டேன். நான்ரொம்பலேட் நைட்கூப்பிட்டேன் சாரி…”

 

“பரவாயில்லை ராம் என்ன விஷயம் சொல்லு…”

 

“வதனாகொஞ்சம் முன்னாடி தான்கூப்பிட்டிருந்தா… புது கவர்னர் மாறுறதால நெறைய பேருக்கு ட்ரான்ஸ்பர் வந்திருக்கு போல. கபிலன் போன மாதிரி இப்போ வதனாக்கும்…”

 

“ஏன் ஏன் அப்படி?? அப்படி எல்லாம் கூட செய்வாங்களா??”

 

“ஹ்ம்ம் செய்வாங்க வல்லா… சில சமயம் அப்படி நடக்கறதுண்டு. அவங்களுக்கு ஏத்தப் போலஆளுங்களை மாத்திக்குவாங்க…”

 

“எங்க மாற்றல் வந்திருக்கு?? எந்த ஊருக்கு??”

 

“சென்னையில தான்… அறநிலையத்துறைக்கு மாற்றலாகி இருக்கு… அதை சொல்லத் தான் உனக்கு டைம் கூட பார்க்காம கூப்பிட்டேன் வல்லா… நான் ஒரு மீட்டிங் முடிச்சுட்டு இப்போ தான் வர்றேன்”

 

“அதான் இந்த நேரத்துல கூப்பிட வேண்டியதா போச்சு. விஷயத்தை உடனே உனக்கு கன்வே பண்ணனும்ன்னு தான்கூப்பிட்டேன்…”

 

“தேங்க்ஸ் ராம்… நான் பார்த்துக்கறேன்… ட்ரான்ஸ்பர் என்னைக்குன்னு சொன்னாளா??”

 

“இன்னும் பத்து நாள்ல அதுவரை கவர்னர் மாளிகைல தான் இருப்பா…”

 

“ஓகே ராம்… நான் பார்த்துக்கறேன்…”

 

“டேக் கேர் வல்லா… நான் வைக்குறேன்…” என்றுவிட்டு போனை வைத்தான் ராம்.

 

அதன்பின் எங்கே தூக்கம் வரும் வல்லவரையனுக்கு. மனம் ராமைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தது. தானும் அவனும் எப்போதும் முட்டியும் முட்டாமலும் கடந்து செல்லும் நினைவுகள் அவனுக்குள்ளே.

 

அந்நினைவுகளில் சில்லென்றே பனிச்சாரலாய் வதனாவை பற்றிய நினைவுகளும் மேலெழும்ப உறக்கம் முற்றிலும் விரட்டப்பட்டு பசுமை நிறைந்த நினைவுகளுக்குள் பிரயாணிக்க ஆரம்பித்தது.

 

முஸ்தபா முஸ்தபா

டோன்ட்ஒர்ரி முஸ்தபா

காலம்நீ நேஸ்தம் முஸ்தபா

டே பை டே டே பை டே

காலம் ஓடிலோ டே பை டே

பயனிஞ்சி ஷிப்பேபிரண்ட்ஷிப் ரா…

 

ஜூன் போயி ஜூலைபுடிதே

சீனியர்கி ஜூனியர் கி

காலேஜ் கேம்பஸ்லோனேராகிங் ஆரம்பம்…

 

என்று சுந்தர தெலுங்கில் பாதியும் ஆங்கில கலப்பும் கொண்ட பிரேமதேசம்(நம்ம தமிழ்ல காதல் தேசம் படங்க) பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது கல்லூரி ஆடிட்டோரியத்தில்.

 

முதல் வருட மாணவர்கள் வருகையை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று களைக்கட்டிக் கொண்டிருந்தது அந்த அரங்கம்.

 

கடைசிவருடத்தின் ஆரம்பத்தில் இருந்த பவளப்பிரியன் அப்போது தான் கல்லூரிக்குள் நுழைந்திருந்தான் தன் யமஹாவில்.

 

அது பிரசித்திபெற்ற ஜவஹர்லால் நேரு டெக்னாலஜிகல் யூனிவர்சிட்டி ஹைதராபாத், குகட்பள்ளியில் அமைந்திருந்த மிகப்பெரிய தொழிற்கல்வி பல்கலைக்கழகம்.

 

“டேய் பவள் ஏன்டா லேட்டு” என்றவாறே ஓடி வந்தான் அவன் நண்பன்ராக்கி என்ற ராகேஷ்.

 

“என்னடா எதுக்கு என்னை இவ்வளவு தீவிரமா தேடுறே??” என்றவாறே பைக்கில் இருந்து இறங்கினான் பிரியன்.

 

கல்லூரியில் அவன் பெயர் பவளப்பிரியன். நண்பர்களுக்கு பவள் சிலர் பவன் என்றும் அழைப்பர் அவனை.

 

“மச்சி ஒரு தமிழ் பொண்ணு பர்ஸ்ட் இயர்ல அதுவும் புடவை எல்லாம் கட்டிட்டு வந்திருக்காடா… இன்னைக்கு அவளை நாம வைச்சு செய்ய வேணாமா… அதுக்கு தான் உன்னை தேடிட்டு வந்தேன்” என்றான் அவன்.

 

“என்னது தமிழா எப்படிடா கண்டுப்பிடிச்சே?? என்ன பேரு எதுவும் தெரியுமா ராக்கி”

 

“அது தெரிஞ்சா நான் ஏன் உன்னை தேடப் போறேன்” என்றவனை முறைத்தான் பிரியன்.

 

“அதெல்லாம் உனக்கு தான் கைவந்த கலைடா எனக்கு வராது… வா ஆடிட்டோரியம் போவோம்” என்றுஅவனை பிடித்து இழுத்துச் சென்றான் அவன்.

 

வேகமாய் ஓடி வந்ததில் யார் மீதோ மோதியிருக்க நிதானமாய் அங்கு நின்றிருந்தவனோ இவனை பார்த்து முறைத்திருந்தான்.

 

“கல்லு தெலிதா நீகு… சரிகாசூஸுகோனிராவேஇடியட்” என்றது நம் ராம் மோகன் ராவே தான்.

 

முதலில் யாரோ நின்றிருக்கிறார்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திரும்பிய பிரியனோ ராமை கண்டதும் முறைத்தான்.

 

அது என்ன விட்டக்குறை தொட்டக்குறையோ இருவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமே!! இன்று நேற்றல்ல இருவரும் கல்லூரியின் முதல் நாளில் இருந்தே இப்படி தான் முறைத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

பிரியன் எப்போதும் ஜாலியாக இருப்பான் அவன் நண்பர்களுடன். அவன் பேச்சும் அரட்டையும் தான் எந்நேரமும் காதில் விழுந்துக் கொண்டே இருக்கும் அந்த வகுப்பறையில்.

 

ராம் நன்றாக படிப்பவன், அவன் குடும்ப தொழிலுக்காய் பயிற்றுவிக்கப்படுவன் என்பதால் படிப்பிலும் சரி மற்ற நேரத்திலும் சரி அவன் மிகப் பொறுப்பாய் தானிருப்பான்.

 

அதனாலேயே பிரியனின் கூச்சலும் சத்தமும் அவனுக்கு பிடிப்பதில்லை. ராம் இருக்குமிடம் தெரியாது என்றால் பிரியன் இருக்குமிடம் அடுத்த தூரத்தில் இருந்தால் கூட தெரிந்துவிடும்.

 

“ஏவுன்டரா லுக்கு”

 

“அவுனுறாகல்லுதெலேது… நுவுஏமிசெஸ்தாவு!!!?

 

“உன்கிட்ட போய் சொன்னேன் பாரு… திருந்தாத ஜென்மம், முட்டாள்…” என்று முணுமுணுத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்திருந்தான் ராம். (தெலுங்கில தான் பேசினான், எனக்கு இதுக்கு மேல தெரியலை, அதான் தமிழ்க்கு போயிட்டேன்)

 

ராம் எப்போதும் அப்படி தான் வீணாக நின்று சண்டை எல்லாம் போட்டுக் கொண்டிருக்கவே மாட்டான். இந்த விஷயத்தில் ராமின் எதிர்ப்பதம் பிரியன், வீணாகவே சண்டைக்கு போவான்.

 

“டேய் அவன்கிட்ட எதுக்குடா வம்பு பண்ணிட்டு இருக்கே??” என்றான் ராக்கி.

 

“அவன் தான் முதல்ல பேசினான், பதிலுக்கு நான் பேசினேன்”

 

“உனக்கு ஏன் அவனை கண்டா ஆக மாட்டேங்குதோ தெரியலை. அவனும் உன்னை மாதிரி தான்டா… ரொம்ப நல்ல மாதிரி, ஒரு ஹெல்ப்ன்னு போய் கேட்டா யோசிக்கவே மாட்டான் உடனே செய்வான்”

 

“போதும் கொஞ்சம் நிறுத்தறியா…” என்று பிரியன் முறைத்தில் அடங்கினான் ராக்கி.

 

அப்போது அவன் துறை பேராசிரியர் அவனை கடந்து செல்ல ராக்கி அவருக்கு வணக்கம் செய்ய பிரியனோ “ஹாய் சார்” என்றிருந்தான்.

“டேய் ஏன்டா இப்படி அடாவடியா இருக்கே??”

 

“என்னத்தை அடாவடியை கண்டுட்ட நீ?? போ நீ பேசி என்னை மூட் அவுட் பண்ணிட்ட, நான் வரலை. நீ மட்டும் போ…” என்றவன் ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்து அங்கிருந்த காலி இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டான்.

 

“டேய்…” என்று கெஞ்சலாய் பார்த்தவனை கண்டுக்கொள்ளவில்லை அவன். தற்செயலாய் தன் இடது புறம் பார்வையை செலுத்த பயந்த பார்வையுடன் பெண்ணொருத்தி அமர்ந்திருந்தாள்.

 

அவள் பார்வை பார்த்து என்ன தோன்றியது “எவரு நீவு, பர்ஸ்ட் இயரா??”

 

அவளோ மெல்ல தலையசைத்து இல்லைஎன்றிருந்தாள். கை விரலில் இரண்டு என்பதாய் காட்ட “செகண்ட் இயரா நுவு??”

 

இப்போது ஆமென்பது போல் தலையசைத்தாள். தூரத்தில் நின்றிருந்த ராக்கி இவனை பார்த்து கையசைக்க “ஒக்க நிமிஷம்” என்றவாறே எழுந்து சென்றான் அவன்.

 

“என்னடா??”

 

“டேய் எப்படிடா?? நான் சொல்லாமலே அந்த பொண்ணை கண்டுப்பிடிச்ச, எவ்வளவு அழகா இருக்கால்ல” என்றவன் அப்பெண்ணை பார்த்து வழிய ஏனென்றே தெரியாமல் கோபம் வந்தது பிரியனுக்கு. “கொஞ்சம் வாயை மூடு” என்றான்நண்பனை.

 

“அந்த பொண்ணு பேரு என்ன கேட்டியா??”

 

“அந்த பொண்ணு தான் நீ சொன்ன பர்ஸ்ட் இயரா?? லூசு அவ செகண்ட் இயர்டா…” என்றிருந்தான் பிரியன்.

 

“அப்படியா அந்த சைதன்யா அப்போ தப்பா சொல்லிட்டான் போலடா… சரி பேரு என்ன??”

 

“தெரியாது… இவ தான் அந்த பொண்ணுன்னே தெரியாம இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தேன். இப்போ சொல்லிட்டல்ல போய் விசாரணையை போட்டிற வேண்டியது தான்…” என்றவன் அங்கிருந்து நகர்ந்து அவளை நோக்கிச் சென்றான்.

 

“நீபேருஏமி” என்றான் அவளைப் பார்த்து.

 

“இவர் என்ன கேக்குறாரு என் பேரை கேக்குற மாதிரி தான் இருக்கு…” என்று அவள் ஸ்பஷ்டமாய் தமிழில் முணுமுணுப்பது கேட்ட போதும் அதை கண்டுக்கொள்ளாமல் வேண்டுமென்றே அவளிடம் தெலுங்கில் பேசினான்.

 

“பேரு… பிரியம்வதனா… மை நேம்” என்றாள்.

 

“நியூவா…”

 

“ஹ்ம்ம் எஸ்… டைரக்ட் செகண்ட் இயர்… டிப்ளமோ கம்ப்ளிட்டட்”

 

“ஒஹ்… தமிழா நுவு…”

 

அவன் அப்படி கேட்டதும் அவளுக்கு அவ்வளவு சந்தோசம் “உங்களுக்கு தமிழ் தெரியுமா??” என்றாள் வெகு ஆர்வமாய்.

 

“தெலேது… நுவு எக்கடஉண்டிஒஸ்தாவு??”

 

“என்ன கேக்குறார்ன்னு புரியலையே…” என்றாள் அவள் வாய்விட்டு.

 

“எந்துகுதெலுகுதெலகண்டஇக்கடசதுவந்துகுவச்சாவு” (தெலுங்கு தெரியாம இங்க ஏன் படிக்க வந்தே)

 

“சார்ஐநோ இங்கிலீஷ்… ப்ளீஸ் டாக் டு மீ இன் இங்கிலீஷ்… ஐ கேன் அண்டர்ஸ்டான்ட்”

 

“வாட் யூஅண்டர்ஸ்டான்ட்!! தெலுங்கு இஸ் தி ஸ்டேட் லேங்குவேஜ் ஹியர்… ஹவ் யூ டோன்ட் நோ… ஹவ் யூ காட் தி சீட் ஹியர்…”

 

இப்போது அவளுக்கு கோபம் வந்துவிட்டது. ‘ஏன் தெலுங்கு தெரிஞ்சா தான் இங்க படிக்க வரணுமா… அப்படி இருந்தாலும் அதை கேட்க நீ யாரு??’ என்ற கோபம் அவளுக்கு.

 

“இட்ஸ் நன் ஆப் யூவர் பிஸ்னஸ்” என்றுவிட்டு திரும்பிப் பார்க்காமல் எழுந்து சென்றே விட்டாள் அவள்.

 

“அழகா இருக்கா திமிராவும் இருக்கா… என்னை பார்த்து உனக்கு தேவையில்லாததுன்னு சொல்றியா… பார்த்திட்டே இரு என்னைத் தேடி வந்து பேச வைக்குறேன் உன்னைய” என்று சொல்லிக்கொண்டு அவனும் எழுந்து சென்றுவிட்டான்.

 

இரண்டு மாதங்கள் தன்னை போல ஓடியிருந்தது.கல்லூரிவிட்டு வெளியில் வந்துக் கொண்டிருந்தான் பிரியன் ராமும் அதே நேரம் அவனை உரசியவாறே கவனிக்காமல் வந்திருந்தான்.

 

இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் வெட்டி நின்றிருந்தது. “பார்த்து வரமாட்டியா??” என்று இவனும் “நீ பார்த்த தானே தள்ளி போக வேண்டியது தானே??” என்று அவனும் பதிலுக்கு பதில் பேசிக்கொண்டனர்.

 

ஒருவரை ஒருவர் முறைத்தவாறே நகரஎங்கிருந்தோ வேகமாய் ஓடிவந்து பிரியனின் முன் நின்றான் ராகேஷ்.

 

“எதுக்குடா இவ்வளவு அவசரமா ஓடி வர்றே??”

 

“ஒண்ணுமில்லை மச்சி உன்கிட்ட பேசணும்ன்னு தான் ஓடிவர்றேன். காலையில இருந்து கிளாஸ்ல தானே இருந்தே அப்போவே சொல்ல வேண்டியது தானே”

 

“இல்லைடா உன்கிட்ட ஈவினிங் தனியா பேசிக்கலாம்ன்னு தான் வெயிட் பண்ணேன்”

“ஆமா அப்படி என்ன தலை போற அவசரம். என்கிட்டே இன்னைக்கே பேசியாகணும்ன்னு… இவ்வளோ நேரம் நீ எங்க போயிருந்தே??”

 

“சிவில் டிபார்ட்மெண்ட் வரை போயிட்டு வந்தேன்” என்றவனை ஏற இறங்க பார்த்தான் பிரியன்.

 

“அங்க உனக்கென்ன வேலை?? உனக்கு தெரிஞ்ச யாரும் அங்க படிக்கறாங்களா??”

 

“ஹ்ம்ம் ஆமா…”

 

“வெயிட் பண்ணு சொல்றேன் அதுக்கு முன்னாடி நீ எனக்கு ஒரு உதவி பண்ணணும். பண்ணுவேன்னு சொல்லு”

 

“முத நீ விஷயம் என்னன்னு சொல்லு??”

 

“எனக்கு ஒரு பொண்ணைரொம்பபிடிச்சிருக்குடா… ஐ லவ் ஹர்டா…”

 

“என்ன உனக்கா?? நீ வருஷத்துக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்க?? இந்த வருஷம் எவளோ??”

 

“மத்த பொண்ணுங்க மாதிரி எல்லாம் இவ இல்லைடா… இவ ரொம்ப ஸ்பெஷல் தமிழ் பொண்ணுடா… எங்க வீட்டிலயும் ஒத்துப்பாங்கல்ல”

 

“டேய் அவ்வளவு தூரத்துக்கு போயிட்டியா… ஒழுங்கா விளக்கமா சொல்லுடா யாருடா அந்த பொண்ணு??”

 

“அதான்டா அந்த பொண்ணு பிரியா…”

 

“பிரியாவா யாரு நம்ம கிளாஸ்ல இருக்காளே அந்த ஹரிபிரியாவா??”

 

“டேய் பவள் அவள் இல்லைடா… நீ கூட பேசினியேடா காலேஜ் பர்ஸ்ட் டே அன்னைக்கு அந்த பொண்ணுடா” என்று ராகேஷ் சொன்னதை ஏனோ பிரியனால் சாதாரணமாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை.

 

அது ஏனென்றும் அவனுக்கு புரியவில்லை. “அதுக்கென்ன இப்போ??” என்றான் வெடுக்கென்று இப்போது.

 

பிரியனுக்குவதனாவின்ஞாபகங்கள்மறந்து போயிருந்தது என்று நினைத்திருக்கஅவளை நினைவு படுத்தும் விதமாய் பேசினான் ராகேஷ்.

 

அவனும் அவளும் ஒரே கல்லூரி தான் என்றாலும் வேறு வேறு துறை என்பதால் அதிகம் பார்த்துக் கொண்டதில்லை. எப்போதாவது கான்டீனில் பார்க்க நேர்வதுண்டு.

 

பிரியனோ யாரையும் கண்டுக்கொள்ளாமல் தனக்கென்று ஒரு கும்பல் ஒரு குழு என்று கூட்டமாய் எப்போதும் கலாட்டாவாகவே இருப்பான். அவளோஅவனை பார்த்தும் பார்க்காமல் கடந்துவிடுவாள் அந்நேரங்களில்.

 

“அந்த பொண்ணுகிட்ட ப்ரொபோஸ் பண்ணப்போறேன்டா இன்னைக்கு. கொஞ்சம் பயமா இருக்கு அதான் நீ கூட வந்தா நல்லா இருக்கும்டா” என்று சொல்லிக் கொண்டிருந்த ராகேஷை கொலைவெறியாய் பார்த்தான் அவன்.

 

“என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது??” என்றவன் சற்றும் யோசிக்காமல் ராகேஷின் சட்டையை கொத்தாய் பற்றினான்.

 

அந்நேரம் கல்லூரி முடிந்து வதனா வெளியில் வர இருவரும் தமிழில் பேசி சண்டையிட்டு கொள்வதை பார்த்தாள்.

 

‘அப்போ இவனுக்கு தமிழ் தெரியுமா?? திமிர் பிடிச்சவன்?? ரவுடி?? அப்போ அன்னைக்கு என்கிட்டே சொன்னது பொய்யா?? தமிழே தெரியாத மாதிரி என்னமா சீன் போட்டான்…’

 

‘என்னை வேற பாஷை தெரியாம எப்படி உனக்கு சீட் கிடைச்சதுன்னு கேள்வி வேற… இவன் ஆளும் மூஞ்சியும்’என்ற எண்ணத்தோட நடந்தவளுக்கு அவன் ராகேஷின் சட்டையை பற்றியிருப்பதை கண்டு அவனை முறைத்தாள்.

 

‘அச்சோபாவம் அந்த அண்ணா அவரு சட்டையை வேற பிடிச்சு ரவுடித்தனம் பண்ணுறான்’ என்றுஎண்ணிக்கொண்டு அவர்களை கடந்து சென்றாள் அவள்.

 

“டேய்பவள் அவ போறாடா?? என்னை சட்டையை விடுடா என் இமேஜ் டேமேஜ் ஆகுது” என்ற ராகேஷ் அவன் கையை தன் சட்டையில் இருந்து விலக்கினான்.

 

“போடா போய் சொல்லு அவ உடனே சரின்னு சொல்லிட்டு தான் மறுவேலை பார்ப்பா… உன் வேலையை பாருன்னு என்கிட்டவே சொன்னவ தானே…” என்று அவனிடமிருந்து விலகி நடந்து செல்லும் ராகேஷை நோக்கிச் சொன்னான்.

 

அவனுக்கு எங்கே அதெல்லாம் கேட்டிருந்தால் தானே… ராகேஷ் அவளை பின்தொடர்ந்து சென்றான்.

 

“எக்ஸ்க்யூஸ் மீஒன் மினிட்” என்று சொல்ல சுற்று முற்றும் பார்த்தவள் பிரியனிடம் அடிவாங்கிக் கொண்டிருந்தவன் அவள் முன்னே நின்றிருக்கவும் என்னவோ ஏதோவென்று பார்த்தாள் அவனை.

 

“என்னையா??” என்றாள் உறுதிபடுத்திக் கொள்ளும் பொருட்டு.

 

“உங்ககிட்ட தான் பேசணும்…”

 

அவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.தன் பைக் நிறுத்தியிருந்த இடத்திற்கு விரிந்தவன் வண்டியை உதைத்து கிளப்பி நேரே அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்தின் வெகு சமீபத்தில் அவளை இடிப்பது போல கொண்டு நிறுத்தினான்.

 

“அறிவில்லை உங்களுக்கு இப்படி தான் இடிக்கிற மாதிரி வருவீங்களா??” என்று கத்தியேவிட்டாள் வதனா.

 

“உனக்கு முதல்ல அறிவிருக்கா?? பைக்ல வர்றேன்னு தெரியுதுல தள்ளி நிக்க மாட்டியா நீ??” என்று அவளை பார்த்து உறுமியவன் “ராக்கி வண்டியில ஏறு” என்றான்.

 

“டேய் எதுக்கு நான் வரலைடா??” என்றவனிடம்“வரப்போறியா இல்லையா” என்று அவன் கேட்கவும்‘இவனுக்கு என்னாச்சு?? இப்படி முறைக்கிறான்??’ என்றபீதியுடனே அவன் வண்டியில் ஏறி அமர்ந்தான் ராகேஷ்.

 

“எதுக்கு இப்போ அவரை கூப்பிடுறீங்க?? தனியா கூட்டிட்டு போய் அடிக்கிறது கூப்பிடுறீங்களா அவரை??” என்றிருந்தாள் வதனா.

 

இப்போது அவன் முறையாயிற்றே சொல்லாமல் இருப்பானா பிரியன் “இட்ஸ் நன் ஆப் யூவர் பிஸ்னஸ்” என்றுவிட்டு பைக்கை முறுக்கிக்கொண்டு வேகமாய் பறந்துவிட்டான் அவன்.

 

“பொறுக்கி… திமிர் பிடிச்சவன்… அகங்காரன்…” என்று அவனைத் திட்டிக்கொண்டே வதனா தன் ஹாஸ்டல் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

 

பிரியன் என்ன சொன்னானோ ஏது சொன்னானோ ராகேஷ் மறுநாளில் இருந்து அவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை. பதினைந்து நாட்கள் கடந்திருக்க அன்று கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் நடந்துக் கொண்டிருந்தது.

 

பிரியன் இரு நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தான். கேலரியில் அமர்ந்திருந்தவளோ “இவனா” என்று பார்த்திருந்தவள் “கடவுளே இவன் தோத்து போய்டணும்” என்றுவேண்டிக் கொண்டாள்.

 

அன்றைய நாள் தான் இருவருக்கிடையில் ஓடிக்கொண்டிருக்கும் வெறுப்பு என்ற புள்ளியை பெரிதாக்கி விருப்பு என்ற வட்டத்திற்குள் நுழைக்க அச்சாரமாக போகும் நாள் என்பதை இருவருமே அறியவில்லை…

 

ஸ்போர்ட்ஸ் டே முடிந்த மறுநாள் கல்லூரி விடுமுறை விட்டிருந்தனர். அதற்கு மறுநாள் கல்லூரி வந்தவர்களில் பிரியன் மட்டும் விதிவிலக்கு அவனிருந்ததோ போலீஸ் ஸ்டேஷனில்…..

 

வெறுப்புக்கும் விருப்புக்கும்

இடைவெளி அதிகமில்லை

நல்லதிற்கு கெட்டதிற்கும்

வித்தியாசம் அதிகமில்லை

புரிதலுக்கும்புரியாமைக்கும்

தூரம் அதிகமில்லை

உனக்கும் எனக்குமான

நேசத்திற்கும் எல்லையில்லை!!

 

Advertisement