Advertisement

ஹாய் மக்களே,

 

மறுபடியும் நான் தான்… ஒரு புது கதையோட வந்திருக்கேன், கதையோட பேரு இளவேனில் என் மனவானில்…

வேர் தீண்டும் இலை முடிஞ்சது இல்லையா, அது போல இதுவும் ஒரு சின்ன கதை தான், இன்னும் நீ சிறு பூக்களின் தீ(வே)யே முடிக்கலைன்னு நீங்க கேட்கறது எனக்கு புரியுது…

அந்த கதையோட பதிவுகள் வழக்கம் போல வாரம் ஒன்றோ இரண்டோ கண்டிப்பா வரும், அதனுடன்இந்த கதையின் பதிவுகளும் வாரம் இரண்டாய் வரும்…

 

நாயகன்: ராகவ் பிரசாத்

நாயகி: ஜெயக்னா

கதையோட சின்ன ப்ரீகேப் உங்களுக்காக… எல்லா பதிவுகளுக்கும் ப்ரீகேப் கிடையாது, முதல் பதிவாச்சேன்னு தான் போடுறேன்…

 

ராகவை ஓங்கி அறைந்திருந்தாள் ஜெயக்னா. பின் அவனை நோக்கி “இட்ஸ் நன் ஆப் யூவர் பிசினெஸ், மைன்ட் இட்…” என்று கோபமாய் அவனிடம் மொழிந்துவிட்டு அவனை முறைத்து வெளியில் சென்றுவிட்டாள் அவள்.

 

ஒரு கணம் ஒன்றுமே ஓடவில்லை ராகவிற்கு. இவளை போன்ற பெண்களுக்கே இவ்வளவு திமிரென்றால் இன்னும் நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு எவ்வளவு இருக்கும் என்று தான் அவனுக்கு தோன்றியது.

 

அவளை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டோமே என்று அவள் அவனை கடந்து சென்ற பின்னே தோன்றியது அவனுக்கு.

 

 

ச்சே என்றிருந்தது அவனுக்கு, அவளுடன் வந்த விக்டர் என்பவன் அவளிடம் காசைக் கொடுத்துவிட்டு வெளியில் எட்டிப்பார்க்க அவன் செல்வதற்கு வண்டி வந்து காத்திருந்தது அங்கு.

 

“பை டியர் யூ ப்ளீஸ் டேக் கேர், ஐ ஹாவ் டு கோ…” என்றுவிட்டு அவன் கிளம்பிச் சென்றுவிட்டான்.

 

அந்த நேரத்தில் ராகவின் வாய் சும்மாயில்லாமல் அவளை கேள்வி கேட்டிருந்தது.

 

அவளிடம் காசை வாங்கி உள்ளே வைத்தவன் லெட்ஜரில் அவளிடம் கையெழுத்து வாங்கி முடிந்த பின்“இது அந்த மாதிரி லாட்ஜ் இல்லை, இனிமே இது போல விஷயத்துக்கு எல்லாம் இங்க புக் பண்ணாதீங்க”

 

“அதுக்குன்னு வேற இடம் இருக்கு அங்க போங்க… நெக்ஸ்ட் டைம் நீங்க வந்தா நானே உங்களுக்கு ரூம் கொடுக்க மாட்டேன்…”

 

“வாட்?? என்ன சொன்னே??” என்றாள் அவள் கோபமாய்.

 

 

யாரும் பார்க்கவில்லை என்று அவன் நினைத்திருந்தாலும் அவன் கன்னத்தில் அவளின்மூவிரல் நன்றாய் அழுத்தமாய் பதிந்திருந்தது.

 

இரவு நேரமென்பதால் அவன் அதை சரியாய் கவனித்திருக்கவில்லை. அன்னையாயிற்றே அப்போதே அதை கவனித்துவிட்டார்.

 

நேரடியாய் என்னவென்று கேட்காமல் பொத்தாம்பொதுவாய் அவனை கேள்வி கேட்டார்.

“திடிர்னு ஏன்மா அப்படி கேட்கறீங்க??”

 

“உன் முகம் வாட்டமா தெரியுதுய்யா…”

 

“அது ஒண்ணுமில்லைம்மா…” என்றவன் முதல் நாள் நடந்ததை சொல்லி முடிக்கவும் சப்பென்று அவனைஅறைந்திருந்தார் ராகவின் அன்னை மீனாட்சி…

Advertisement