Advertisement

அத்தியாயம் – 9
 
“என்ன பாவை என் முகத்தை என்ன பாக்குற… மாப்பிள்ளைக்கு அந்த ஸ்வீட் எடுத்து ஊட்டு” என்று அவளின் உறவு பெண்மணி சொல்ல வேண்டா வெறுப்பாய் அவள் இலையில் இருந்த குலோப்ஜாமூனை எடுத்து அவன் வாயில் திணித்தாள்.
 
பதிலுக்குஅவனும் ஊட்டி முடிக்க அதை கஷ்டப்பட்டு விழுங்கி வைத்தாள். அதோ இதொவென்று எல்லாம் முடிந்து அவர்கள் வீட்டிற்கும் வந்து சேர்ந்தனர்.
 
இரு ஜோடி மணமக்களும் முதலில் சிவாவின் வீட்டிற்கு சென்று பின் பாவையின் வீட்டிற்கு சென்றனர். அன்று இரவு அவளின் வீட்டில் தங்குவதாக தான் ஏற்பாடு.
 
பாவையின் வீட்டில் விருந்தினர்கள் இருந்தாலும் யாரும் அன்று இரவு அங்கு தங்குவதற்கு பிரியப்படவில்லை.
 
அதனை மாருதியும் பாவையும் எதிர்பார்த்திருக்கவில்லை தான். அவர்கள் அன்னைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதில் இருந்தே அப்படி தான், அதனால் அவர்களுக்கு அது பழகியிருந்தது.
 
மாருதியும் சங்கவியும் சிவாவின் வீட்டில் தான் அன்று இரவு தங்கியிருக்க வேண்டும். ஆனால் மகேஸ்வரியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் அங்கு வந்திருந்தனர்.
 
சிவாவின் அண்ணன்சந்திரனுக்கும் அவன் மனைவிக்கும் இந்த திருமணத்தில் அவ்வளவு ஒப்புதல் இல்லை.
 
சிவாவின் ஏற்பாடு என்பதாலேயே பேசாமல் வாயை மூடிக்கொண்டு போய்விட்டான் சந்திரன்.
 
சிவாவை பற்றி தான் அவனுக்கு தெரியுமே, ஒன்றை நினைத்தால் செய்து முடிப்பவன் அவன். வேண்டாம் என்பதை காரண காரியம் இல்லாமல் சொன்னால் அதை ஒப்புக்கொள்ளவே மாட்டான்.
 
பதிலுக்கு கேள்வி கேட்டு அவர்களை திணறடித்து விடுவான் என்பதை அவன் தந்தை மருந்துவமனையில் இருந்த போதே உணர்ந்திருந்தான்.
 
அதுவுமில்லாமல் அவனுக்கு சிவாவின் மூலம் வேறு ஒரு வேலையும் முடிக்க வேண்டி இருந்தது. அதனாலேயேசந்திரன் அதிகம் எதிலும் தலையிட்டுக் கொள்ளவில்லை.
 
பாவையின் வீட்டிற்கு மணமக்கள் வந்திறங்க விருந்தினர் பெண்மணி ஓரிருவர் அங்கிருந்தனர். அவர்களே மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து  முடித்திருந்தனர்.
 
அக்கணம்தன் வீடே தனக்கு அந்நியமாய் தெரிந்தது பாவைக்கு. வீட்டிற்கு வந்ததும் உள்ளே செல்ல பரபரத்த கால்களை காலையில் பேசிய அன்னையின் பேச்சு கட்டி வைத்திருந்தது.
எங்கு சென்றாலும் மாப்பிள்ளையை தனியே விட்டு செல்லக் கூடாது என்பது அவரின் அறிவுரைகளில் ஒன்று.
 
அங்கிருந்த இருக்கையில் அவனருகில் எவ்வளவு நேரம் தான் அமர்ந்திருப்பது. அவள்திரும்பிமாருதியை பார்க்க “என்ன பாவை??” என்றான் அவன்.
 
“உள்ளே போகவா??” என்றாள் வாயசைப்பில்.
 
“சிவாவையும் உள்ள கூட்டிட்டு போ, அவர் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று தங்கைக்கு சொன்னவன் சிவாவிடம் “உள்ள போங்க சிவா…” என்றான்.
 
பாவை அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள். ‘அப்படிபார்த்தா நாங்க பின்னாடியே வந்திடணுமா நான் என்ன உன் வீட்டு நாய்க்குட்டியா…’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டு அவன் பேசாமல் இருக்கையில் அமர்ந்திருந்தான்.
 
மாருதி சங்கவியை அழைத்துக்கொண்டு அவனறைக்கு சென்றிருந்தான்.
 
‘இப்போ எதுக்கு இவன் இங்கவே உட்கார்ந்திருக்கான்’ என்று அவனை திரும்பி பார்த்தாள் அவள். அவனோ அசையாமல் அமர்ந்திருந்தான்.
 
‘திமிரு… வாயை திறந்து கூப்பிட்டா தான் அய்யா வருவாரோ… வெத்தலை பாக்கு வைக்கணும் போல’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு “உள்ள வாங்க…” என்றிருந்தாள். ‘அப்படி வாடி வழிக்கு’ என்று ஒரு பார்வை பார்த்தவன் அவளுடன் சென்றான்.
 
அவனோ உள்ளே சென்றதும் வசதியாக கட்டிலில் சாய்ந்து கொண்டான். கை காலை நீட்டிக்கொண்டு அவன் படுத்திருக்க அவளால் ஒரு ஓரத்தில் கூட அங்கு அமர வழியில்லை.
 
அணிந்திருந்த பட்டுப்புடவைவேறு கசகசவென்றிருந்தது. வேறு மாற்றலாம் என்றால் இவன் பாட்டுக்கு எனக்கென்ன என்று படுத்திருக்கிறானே என்றிருந்தது அவளுக்கு.
 
அவனிடம் கேட்க எரிச்சலாகவும் கூச்சமுமாகவும் இருக்க வேறு வழியில்லாமல் அவள் அணிவதற்கு வேறு புடவை ஒன்றை எடுத்துக்கொண்டு குளியறைக்குள் சென்று மறைந்தாள்.
 
எழுந்து அவள் சென்ற திசையை பார்த்தவன் தனக்குள் லேசாய் சிரித்துக் கொண்டான். ‘இப்போ தானே ஆரம்பிச்சிருக்கு. இனிமே தான் இருக்கு’ என்று மனதிற்குள்ளாக சொல்லிக்கொண்டான்.
 
அவள் வருவதற்குள் அவனும் இப்போது வேறு உடைக்கு மாறியிருந்தான். அங்கிருந்த அவன் உடமைகள் அடங்கிய பையில் அவன் அணிந்திருந்த உடையை அழகாய் மடித்து கவரில் வைத்தான்.
 
அதற்குள் அவளும் வெளியே வந்தவள் அவனை பார்த்ததும் முறைத்தாள். அவன் மட்டும் இங்கே ஹாயாக உடை மாற்றிக் கொள்ள தான் மட்டும் கஷ்டப்பட்டு குளியலறையில் மாற்றி வந்தோமே என்று கோபம் அவளுக்கு.
 
எதுவும் சொல்லாமல் அவள் வெளியேற அவனும் அவளை கண்டுக்கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
 
வீட்டில் இருந்த ஒன்றிரண்டு விருந்தினர்களும் கிளம்புவதற்கு ஆயத்தமாய் இருந்தனர். பாவை அவள் அறையில் இருந்து வெளியில் வரவும் “அப்போ பாவை நாங்க கிளம்புறோம்” என்றார் அவளின் ஒன்றுவிட்ட அத்தை.
 
“கொஞ்சம் இருங்க அத்தை” என்றுவிட்டு மாருதி அறையை நாடிப் போக அவனே அந்நேரம் வெளியில் வந்திருந்தான்.
 
“நானே கூப்பிடலாம்ன்னு நினைச்சேன், நீயே வந்திட்ட என்றவள்“அவங்க எங்கே??” என்றாள்.
 
“உங்க அண்ணியா டிரஸ் மாத்திட்டு இருக்கா…” என்று அவன் சொல்லவும் ‘இவனும் இருக்கானே’ என்று சிவாவை மனதிற்குள் வைதுக்கொண்டு “அத்தை கிளம்பறேன்னு சொல்றாங்க”
 
“நீ ரொம்ப போர்ஸ் பண்ணாதே அண்ணா” என்றுஅவனிடம் ரகசியம் போல் சொன்னாள்.
 
“நாங்க கிளம்பறோம் மாருதி” என்றனர் அவர்கள்.
“என்ன அத்தை இப்போவே கிளம்பணுமா காலையில கிளம்பலாமே. இங்க நிலைமை தான் உங்களுக்கு தெரியுமே” என்ற மாருதியை பாவை முறைத்தாள்.
 
‘அவங்களை பத்தி தெரிஞ்சும் கேக்குறியே’ என்பதாய் இருந்தது அவள் பார்வை.
 
“இல்லைப்பா வீட்டில பசங்களை இருக்காங்க. பரீட்சை நேரமா வேற இருக்கு அதான்…” என்று அவர் இழுத்தார்.
 
அதற்கு மேலும் அவர்களை நிறுத்தி வைக்க முடியாது என்று புரிந்தவன் “சரிங்கத்தை பார்த்து போங்க. கொஞ்சம் இருங்க நான் உங்களுக்கு ஆட்டோ பிடிச்சு கொடுக்கறேன்” என்று அவருடனே வெளியில் சென்றான்.
 
சிறிது நேரத்தில் அவன் திரும்பி வர “எதுக்குநீ அவங்ககிட்ட கெஞ்சிட்டு இருக்க, அவங்களை பத்தி தான் நமக்கு தெரியும்ல. இவ்வளவு தூரம் அவங்க இருந்ததே பெரிசு” என்றுபொரிந்தாள் பாவை.
 
“அதை விடு பாவை, நைட்க்கு இப்போ என்ன வாங்கிட்டு வரட்டும் அதை சொல்லு”
 
“எதுக்கு வெளிய வாங்கிட்டு வர்றே?? நானே சமைக்கிறேன் எப்படியும் அம்மாக்கு லைட்டா தான் கொடுக்கணும் அப்படியே சேர்த்து செஞ்சிடறேன்” என்றாள் அவள்.
 
“இன்னைக்கு எதுவும் வீட்டில செய்ய வேண்டாம் பாவை. நான் கடையில வாங்கிட்டு வர்றேன், அம்மாக்கு இடியாப்பம் இல்லை இட்லி போல வாங்கிட்டு வர்றேன் லைட்டா இருக்கும்” என்றான்.
 
“எதுக்கு தேவையில்லாம??” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே சிவா வெளியில் வந்தான்.
 
“என்னாச்சு??”
 
“நைட் டிபன் வாங்க கடைக்கு போகப் போறேன். அதான் என்ன வாங்கிட்டு வரட்டும்ன்னு…” என்றான் மாருதி.
 
“நானும் வர்றேன், ரெண்டு பேரும் போகலாம்…”
 
“அதெல்லாம் வேணாம் சிவா. நீங்க ரெஸ்ட் எடுங்க நான் போயிட்டு உடனே வந்திடுவேன்” என்றான்.
 
“பரவாயில்லை நானும் வர்றேன்” என்று சிவா சொல்லவும் இருவரும் வெளியில் கிளம்பினர். மாருதி பைக்கை எடுக்க சிவா பின்னால் ஏறி அமர்ந்தான்.
 
“கடை எங்க இருக்கு மாம்ஸ்” என்றதும் மாருதிக்கு சிரிப்பு வந்துவிட்டது.
 
“என்னது மாம்ஸ்ஆ??” என்றான்.
 
“வேற எப்படி கூப்பிடுறது உங்களை. தங்கச்சி புருஷன் எங்க அண்ணன் வயசு உங்களுக்கு. அதான் மாம்ஸ் ஆக்கிட்டேன் உங்களை”
“பிடிக்கலைன்னா எப்படி கூப்பிடணும் சொல்லுங்க அப்படியே கூப்பிடுறேன்” என்றான் சிவா.
 
“அப்போ நீங்களும் என் தங்கச்சி ஹஸ்பன்ட் தான் நான் எப்படி கூப்பிட உங்களை??”
 
“நான் உங்களைவிட வயசில சின்னவன் தானே, நீங்க பேர் சொல்லி கூப்பிடலாம் தப்பேயில்லை” என்று விளக்கம் கொடுத்தான் அவன்.
 
“சரி சிவா நீங்களும் உங்க இஷ்டம் போலவே என்னை கூப்பிடுங்க…” என்றுவிட்டு வண்டியை மெயின்ரோட்டை நோக்கி திருப்பினான்.
 
“சிவா நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே??” என்று பீடிகை போட்டான் மாருதி.
 
“என்னன்னு சொல்லுங்க மாம்ஸ்?? நான் ஒண்ணும் தப்பா எல்லாம் எடுத்துக்க மாட்டேன்”
 
“உங்களுக்கு பாவையை முன்னாடியே தெரியுமா??” என்று வெகு நாளாய் மனதை அரித்த விஷயத்தை கேட்டு விட்டான்.
 
பாவையிடம் கேட்டால் சரியான பதிலில்லை. சிவா பதில் சொல்வான் என்று எண்ணி கேட்டுவிட்டான் அவன்.
 
“என்னாச்சு மாம்ஸ் திடீர்ன்னு இப்படி கேட்கறீங்க??”
 
அவன் என்னவென்று சொல்லுவான் என் தங்கை உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொன்னாள் என்றா!! அது நன்றாகவா இருக்கும். இப்போதுபதில் சொல்ல முடியாமல் விழித்தான் மாருதி.
 
ஓரிரு நிமிடம் காத்திருந்த சிவா பின் “தெரியும்” என்றான் ஒற்றைச் சொல்லாக தொடர்ந்தவாறே “ஆனா உங்க தங்கைக்கு என்னை அவ்வளவா பிடிக்காது”
 
“ஏன்?? உங்களுக்குள்ளஎன்ன பிரச்சனை?? நீங்க ரெண்டு பேரும் முன்னாடியே…” என்றது இழுத்து நிறுத்திக் கொண்டான் அவன்.
 
“ஹா ஹா அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பேயில்லை மாம்ஸ். உங்க தங்கச்சி பார்வையாலேயே பொசுக்கிருவாங்க!!”
 
“ரெண்டு பேரும் ஒரே காலேஜ் தான்…”
 
“காலேஜா அவ பாலிடெக்னிக் தான் கம்பிளிட் பண்ணா… நீங்க BE தானே…”
 
“மாம்ஸ் அதுக்கு முன்னாடி நானும் அதே பாலிடெக்னிக் தான்… இருந்தாலும் நீங்க ரொம்ப டூ மச் மாம்ஸ், பாலிடெக்னிக் கூட காலேஜ் தானே… நீங்க என்ன இப்படி இளப்பமா சொல்லிட்டீங்க…”
 
“அய்யோ நான் தப்பா சொல்ல வரலை சிவா…”
 
“புரியுது மாம்ஸ்…”

“ஆனா நீங்க எப்படி அங்க??”
 
“அந்த கதையை ஏன் கேக்கறீங்க… நான் பிளஸ்டூல கோட்டடிச்சு எங்கப்பாகிட்ட திட்டு வாங்கி எல்லாருமா நல்லா திட்டி இவன் உருப்படவே மாட்டான்னு சொல்ல எங்கம்மா எங்கப்பா கையில கால்ல விழுந்து அதுல சேர்த்துவிட்டாங்க”
 
“அங்கயாச்சும் ஒழுங்கா படிச்சனா எல்லாமே அரியர் தான்… நடுவுலஅங்க ஒரு சின்ன பிரச்சனை ஆகிடுச்சு அதுல அம்மா என்கிட்ட பேசாமலே இருந்திட்டாங்க”
 
“நீ நல்லா படி, நீ எப்படி சரின்னு தோணுதோ அப்போ தான் பேசுவேன்னு சொல்லிட்டாங்க… அப்போ கொஞ்சம் வெறியோட படிக்க ஆரம்பிச்சேன். பாலிடெக்னிக் முடிச்சேன்”
 
“சென்னை அண்ணா யூனிவர்சிட்டில பார்ட் டைம்ல B.E ஜாயின் பண்ணேன். அப்பாக்கு உடம்பு சரியில்லைன்னு அதைபாதியில விட்டுட்டேன். இன்னும் ஒரு வருஷ படிப்பு மிச்சமிருக்கு…”
 
“அப்புறம் அப்பாவோட கடையை பார்த்திட்டு அப்படியே ஓடி போச்சு”
 
“ஏன் படிப்பை கண்டினியூ பண்ணியிருக்கலாம்ல??”
 
“எங்கண்ணன் கொஞ்சம் பொறுப்பா இருந்திருந்தா பரவாயில்லை. கண்டிப்பா படிப்பை முடிச்சிருப்பேன்…” என்றான் சிவா பெருமூச்சுடன்.
 
அதற்குள் ஹோட்டல் வந்துவிட இருவரும் இறங்கிக்கொண்டனர். “உங்களுக்கு என்ன வாங்கட்டும் சிவா??”
 
“எனக்கு லைட்டா டிபன் தான்… இட்லி, சப்பாத்தி இப்படி எதுனாலும் ஓகே” என்றான் அலட்டாமல்.
 
“பாவைக்குஇந்த கடை சில்லி பரோட்டான்னா ரொம்பவும் இஷ்டம்” என்ற மாருதியிடம் வெறும் இம் கொட்டிக் கொண்டான் சிவா.
 
“இப்போ அது வாங்கினா ஹெவி ஆகிடும்ல, அவளுக்கும் இட்லி வாங்கிக்கலாம்” என்ற மாருதியிடம் “அவங்க காலையிலயும் மதியமும் சரியா சாப்பிட்ட மாதிரி தெரியலை”
 
“அவங்களுக்கு பிடிச்ச மாதிரியே வாங்கிடுங்க” என்றான் சிவா.
 
கொஞ்சம் ஆச்சரியமாய் அவனை ஏறிட்டாலும் ஒன்றும் சொல்லாமல் அதையே ஆர்டர் செய்தவன் “சங்கவிக்கு என்ன பிடிக்கும்??” என்று கேட்டான்.
 
“அவளும் என்னை மாதிரி தான் நைட்ல லைட்டா தான் சாப்பிடுவா…”
 
“ஸ்பெஷலா எதுவும் பிடிக்காதா??”
 
“அவளுக்கு சோலா பூரி பிடிக்கும்” என்றதும் தன் மனையாளுக்கு அதையே ஆர்டர் செய்தான் அவன்.
 
காத்திருக்கும் தருவாயில் சிவாவிடம் மீண்டும் ஆரம்பித்தான். “உங்களுக்கும்பாவைக்கும் என்ன பிரச்சனை??” என்று விட்ட இடத்தை தொடர்ந்தான்.
 
“பிரச்சனைன்னு எல்லாம் ஒண்ணுமில்லை… ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ன்னு வேணா சொல்லிக்கலாம்” என்றுநடந்ததை ஒன்றுமில்லாதது போல சொன்னான் சிவா.
 
“நிஜமாவே அவ்வளவு தானா…”
 
“ஆமா மாம்ஸ்…”
 
“ஹ்ம்ம் அப்போ ஓகே, ஆனா சிவா உங்களுக்கு பாவையை பிடிச்சு தான் மேரேஜ் பண்ணீங்களா”
 
“தெரியாது”
 
‘இதென்ன பதில்’ என்ற பார்வை பார்த்தான் மாருதி.
 
“அம்மாக்காக தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆல்ரெடிஅண்ணன்குடும்பத்தோட ஒட்டாம போய்ட்டான்… நானும் கவியும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கணுங்கறது அம்மாவோட ஆசை”
 
“அதனால தான் மேரேஜ்க்கு ஒத்துக்கிட்டேன். இல்லைன்னா இப்போதைக்கு எனக்கு கல்யாணம் செஞ்சுக்கற ஐடியா இல்லை மாம்ஸ்” என்று உண்மையை மறைக்காமல் ஒத்துக்கொண்டான் அவன்.
 
“உங்க தங்கைக்கும் என்னை பிடிச்சு எல்லாம் ஒத்துக்கிட்டு இருக்க மாட்டாங்க தானே… அத்தைக்காக தான் இந்த கல்யாணம் நடந்திருக்கும் சரி தானே மாம்ஸ்” என்று நடந்ததை பார்த்தவன் போல் சொன்னான் அவன்.
 
“ஹ்ம்ம் கரெக்ட் தான் சிவா, அத்தை மாதிரி தான் அம்மாவும் சொன்னாங்க… நானும் பாவையும் ஒருத்தர்க்குஒருத்தர் விட்டுக் கொடுக்காம ஒண்ணா இருக்கணும்ன்னு…”
 
“அதனால தான் பாவையும் ஒத்துக்கிட்டா… ஆனா சிவா ஒரு விஷயம் பாவைக்கு பிடிவாதம் அதிகம் தான்.ஒரு விஷயம் அவளுக்கு தப்புன்னு தோணிடுச்சுன்னா மொத்தமா வெறுப்பா”
 
“அதுவே தப்பு அவ மேலன்னு தெரிஞ்சா கொஞ்சமும் யோசிக்காம மன்னிப்பு கேட்டிடுவா… உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியலை”
 
“நீங்க சொல்றதை வைச்சு பார்த்தா அவ ஏதோ உங்களை புரிஞ்சுக்காம இருந்திருக்கான்னு நினைக்கிறேன். உங்களை சரியா புரிஞ்சுக்கிட்டா சீக்கிரமே எல்லாம் சரியாகிடும்ன்னு நம்புறேன்…” என்று தயங்கி நிறுத்தினான்.
“மாம்ஸ் நோ மோர் பீலிங்க்ஸ்… இது தான் வாழ்க்கைன்னு ஆகிடுச்சு. நான் அப்படியே எல்லாம் விட்டிற மாட்டேன். எல்லாம்தன்னாலசரியாகும் மாம்ஸ்…”
 
“இதுல நீங்க பெரிசா கவலைப்பட எதுவும் இருக்காது… கூல்…” என்று முடித்தான் சிவா.
 
தன் உடன்பிறந்தவனிடம் கூட என்ன என்றால் என்ன என்று இருக்கும் சிவாவிற்கு மாருதியிடம் சகஜமாய் பேச முடிந்தது குறித்து சந்தோசமே.
 
வீட்டிற்கு வரும் போது இருவருமேவெகு இயல்பாய் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்திருந்தனர்…
 
வந்தாருவந்தாருமாப்பிள்ளசிங்கம் 
எந்நாளும்மங்காதஆம்பளதங்கம் 
பாருஇவருமாசுபடிக்காதகாமராசு 
பதறாமஊரபாதுகாக்கும் பக்காவானபாசு
பாசமானபேச்சுபண்பானஜோதிபாசு 

Advertisement