Advertisement

அத்தியாயம் –9

 

நளினிக்கு எப்போதுமே சித்தார்த்தை கண்டால் பிடிப்பதில்லை. எங்கோ தொலைந்து போனவனை அவள் பெற்றோர் வீட்டிற்கு கூட்டி வந்துவிட்டதாக பொருமுவாள்.

 

சித்தார்த்துக்கு அப்போது ஐந்து வயது இருக்கும், அவனை பெற்றவர்கள், அவர்கள் ஊர் திருவிழாவிற்கு அவனையும் அவன் தங்கை நிர்மலாவையும் அழைத்துக் கொண்டு சென்று இருந்தனர்.

 

சித்தார்த்துக்கு எப்போதுமே விளையாட்டுத்தனம் அதிகம், தங்கையை கூடவே கூட்டிக்கொண்டு ஊரைச் சுற்றுவான். நிர்மலாவுக்கு சிறு வயது விவரம் அறியாத பிள்ளை, அவளும் அண்ணனுடன் சேர்ந்து கொள்வாள். அவன் மழையில் நனைந்தால் அவளும் உடன் நனைவாள். அவன் ஓடிபிடித்து விளையாடினால் அவளும் அவனுடன் ஒண்டிக்கொண்டே செல்வாள்.

 

அன்று அவள் தூங்கிவிட்டதால் சித்தார்த் மட்டும் தனியே விளையாட வெளியே சென்றிருந்தான். கோவிலை சுற்றியுள்ள ஒரு காலி மனையில் அவனையொத்த சிறுவர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டுடிருந்தான்.

 

விளையாட்டின் போது ஒளிந்து கொள்ள இடம் தேடியவன் அங்கு காலியாக நின்றுக்கொண்டிருந்த பேருந்தில் ஏறி ஒளிந்துக் கொண்டான்.

 

அந்த பேருந்து பழுதடைந்து நின்றிருந்தது, அதை அப்போது தான் சரி செய்து விட்டு போயிருந்தனர்.

 

பேருந்தில் ஒளிந்து கொண்டவன் அசதியில் உறங்கிவிட்டான். பழுது சரி செய்த பேருந்தை ஓட்டுனர் வந்து எடுக்க நடத்துனரும், காத்திருந்த பயணிகளும் ஏறி அமர பேருந்து புறப்பட்டுச் சென்றது.

 

உறக்கத்தில் இருந்தவன் விழித்து எழுந்த போது பேருந்து ஒரு பேருந்து நிலையத்தில் நின்றிருப்பதைக் கண்டான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

 

தான் எங்கு இருக்கிறோம் என்ன விபரம் எதுவும் புரியாமல் அழ ஆரம்பித்துவிட்டான். பேருந்தில் இருந்து கீழே இறங்கி நின்று கொண்டிருந்தான். அம்மா, அப்பா என்று அழுதுக் கொண்டிருந்த சிறுவனை நளினியின் தந்தை சிவப்பிரகாசமும், கோதையும் கண்டனர்.

அவனை அழைத்து விசாரிக்க அவனுக்கு அவன் இருக்கும் ஊர், தாய், தந்தை பெயர் எந்த விவரமும் சரிவர கூறத் தெரியவில்லை. அவனுக்கு சிறு வயதில் பேச்சு சரியாக வராது.

 

அவன் வாயில் இருந்து அம்மா, அப்பா, நிம்மி என்ற வார்த்தைகள்தான் ஓரளவு சரியாக வந்தது. அவன் பெயர் என்னவென்று கேட்டால் “தத்தம்என்றுஅவன்கூறஅவனைபற்றியவிவரங்களைசரிவரஅறியமுடியவில்லை.

 

அவன் எப்படி இங்கு வந்தான் என்று கேட்டதற்கும் அவனிடம் பதில் இல்லை.அவனின் சிறு சிறு அசைவுகள் மூலம் ஓரளவு விபரம் தெரிந்து கொண்டனர்.

 

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பேருந்தில் ஏறி ஒளிந்துக்கொண்டது, அப்படியே உறங்கி போனது பற்றிய விபரம் அவன் சைகை மொழியிலும் ஓரளவு அவன் பேச முயற்சித்ததிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இணைத்து அவர்கள் கோர்வைபடுத்தி கண்டுபிடித்தனர்.

 

அவனை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று அவனை பற்றிய விபரங்களை கூறினர். கோதைக்கு குழந்தையை தனியே விட்டுச் செல்ல மனமில்லை.

 

கணவரிடம் கூறி குழந்தையை அவர்களே அழைத்து செல்லலாம் என்றும் அவனை தேடி வருவோர்க்கு அவர்களின் முகவரியை காவல் நிலையத்தில் குடுத்து செல்லலாம் என்றும் கூற சிவபிரகாசமும் அதை ஆமோதித்தார்.

 

சிவபிரகாசம் வருமான வரித்துறை அதிகாரியாக இருப்பவர், ஆதலால் காவல் அதிகாரியும் அவரை நம்பி குழந்தையை அவர்களுடன் அனுப்பி வைத்தார். அவனை தேடிவருபவர்களுக்கு தன் விலாசம் கொடுக்குமாறு கூறி விலாசத்தையும் குடுத்துவிட்டு கிளம்பினர்.

 

அவனை வீட்டிற்கு கூட்டி வந்தனர், அவனை நளினிக்கு அறிமுகப்படுத்தினர்.அவன் பெயர் சரியாக கூறாத காரணத்தினால் அவனுக்கு அவர்களே ஒரு பெயரை வைக்க முடிவு செய்தனர்.

 

நளினி அப்போது அவள் படித்துக்கொண்டிருந்த பாடப்புத்தகத்தில் கௌதம புத்தரின் சிறுபிராயம் பற்றி படித்துகொண்டிருந்தது நினைவு வந்தது, அவளுக்கு ஒரு யோசனை வர “அம்மா இவனுக்கு நாம் சித்தார்த்தன் என்று பெயரிடுவோம்என்றாள்.

 

கோதைஅதைசற்றுமாற்றிசித்தார்த்என்றுஅழைக்கலாம்என்றுகூறசிவபிரகாசமும்அதைஆமோதித்தார்.

 

நளினி முதலில் அவன் மேல் பிரியமாகத் தான் இருந்தாள். தாய், தந்தையின் பாசம் தன் மீது குறைந்து அவன் மீதே கவனம் செலுத்துவதாக நினைத்தாள். அவன் மீது பொறாமை உணர்வு கொண்டாள்.

 

இதை தூண்டுவது போல் அவள் சித்தி பெண் ஒரு நாள் இங்கு வர சித்தார்த் நன்றாக படிப்பதை பார்த்து அவள் சித்தி அவள் மகளை அவனுடன் ஒப்பிட்டு பேசினாள்.

 

சிறு பெண்ணுடன் ஒப்பிட்டு பேசுவதை அவள் அவமானமாக நினைக்க, அவள் நளினியிடம் அவனை பற்றி தேவை இல்லாத பயத்தை விதைத்துவிட்டு சென்றாள்.

 

அவள் தாய், தந்தையை அவன் அவளிடம் இருந்து பிரித்து விட்டதாக அவள் கூற ஏற்கனவே ஒரு சிறு பொறாமையுடன் இருந்த நளினிக்கு நெஞ்சில் அது கனலானது.

 

கோதையும் சிவபிரகாசமும் சித்தார்த்தின் மேல் பாசத்தை பொழிய அவள் தாய், தந்தையை அவன் தான் பிரிப்பதாக முழுதாக நம்ப ஆரம்பித்துவிட்டாள். அது முதல் அவள் அவனிடம் ஒதுக்கம் காட்ட ஆரம்பித்தாள்.

 

வேண்டுமென்று ஏதாவது செய்துவிட்டு அவனை மாட்டி வைத்தாள். முதலில் அவனை கண்டித்தவர்கள், அது போன்ற நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழ அவர்களை கண்காணித்தனர்.

 

தவறு நளினி மேல் என்று தெரிந்ததும் அவளை கண்டித்தனர். அவளை கண்டிக்கவும் அவள் ஆங்காரம் அதிகம் ஆக வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து அவன் மனம் நோக பேசினாள். அவனை அனாதை என்று கூற குழந்தை மனம் வெதும்பி போனான்.

 

தற்செயலாக வெளியே சென்ற கோதை வீட்டுக்கு திரும்பி வந்திருந்தவர்  இதை கவனித்துவிட்டு நளினியை விளசிவிட்டார். சித்தார்த் அழுவது பொறுக்காமல் வாரி அணைத்தவர், “உனக்கு நாங்க இருக்கோம் செல்லம் இந்த அப்பா, அம்மா எப்பவும் உன் கூட தான் இருப்போம். நீ வருத்தப்படாதேஎன்றுகூறிஅவனைஆறுதல்படுத்தினார்.

 

அவனுக்கு பேச கற்றுக் கொடுத்து அவனை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர். சிவபிரகாசம் அவ்வப்போது காவல் நிலையத்திற்கு சென்று அவனை தேடி யாரும் வந்தார்களா என்று விசாரித்து வருவார். நாளாக ஆக அவர் அங்கு செல்வது குறைந்தது.

 

அவர்களுக்கு அவன் உயிராகிப் போனான். நளினியின் புறக்கணிப்பு அவனுக்கு வலியை கொடுத்தாலும் அப்பா, அம்மாவிற்கு அவன் செய்யும் கைம்மாறாக நன்றாக படித்தான். முதல் மாணவனாக தேறினான்.

 

உபகாரசம்பளத்திலேயே அவன் படித்தான், சிவபிரகாசம் எவ்வளவோ கூற அவன் அதை மறுத்துவிட்டு உபகாரசம்பளம் மூலமே படித்தான். அவன் நன்றாக படித்து கல்லூரியில் மட்டுமல்லாமல் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவனாக வந்து தங்க பதக்கமாக வாங்கி குவித்து அவர்களுக்கு பெருமை தேடித்தந்தான்.

 

சிவபிரகாசத்தின் நண்பர் ஒருவர் மூலமாக அவன் சென்னைக்கு வேலைக்குச் சென்றான். நளினிக்கும் ராகவனுக்கும் திருமணம் நடந்தது. இவன் சென்னை சென்ற சில மாதங்களிலேயே சிவபிரகாசம் உடல் நிலை குன்றி இறந்து போனார்.

 

அவருடைய இறப்புக்கு பின் கோதையின் உடல் நலம் சீர்குலைய ஆரம்பித்தது. மகனுடன் இருக்கப் பிரியப்பட்டவரை வற்புறுத்தி தன்னுடன் வைத்து பார்த்துக் கொண்டாள் நளினி.

 

நளினிக்கு தான் சித்தார்த்தை பிடிக்காதே தவிர ராகவனுக்கு, அகில், விமலுக்கும் அவன் என்றால் உயிர். சித்தார்த்துக்கு ஸ்ரீ எப்படியோ அது போல் தான் ராகவனும். சித்தார்த் அவன் மனதில் உள்ள எல்லாமும் ஸ்ரீக்கு பின் ராகவனிடம் மட்டுமே கொட்டுவான்.

 

மெல்ல பழைய நினைவுகளில் இருந்து அவன் மீண்டு ஒருவாறு உறங்கினான். சிறு உறக்கத்தின் பின் எழுந்தவன் காலை கடன்களை முடித்து குளித்துவிட்டு தயாராகி வெளியே வந்தான்.

 

ராகவனும் அவனுக்காக சாப்பிடாமல் காத்திருந்தான். அகில், விமல் அப்போது தான் எழுந்து வந்தார்கள். மாமனை கண்டதும் அவன் இரு தோள்களிலும் ஆளுக்கொருவராக ஏறிக் கொண்டனர். அவன் அவர்களுக்காக வாங்கிய விளையாட்டு பொருட்களை எடுத்துக் கொடுத்து எப்படி விளையாட வேண்டும் என சொல்லிக் கொடுத்தான்.

 

ராகவனும், சித்தார்த்தும் சேர்ந்து உணவருந்த அமர்ந்தார்கள். நளினி இருவருக்கும் உணவை பரிமாறினாள். நளினிக்கு ராகவனிடம் கொஞ்சம் பயம் உண்டு அவன் முன் அவள் சித்தார்த்தை எதுவும் சொல்லமாட்டாள்.

 

சாப்பாட்டின் ஊடே ராகவன் அவனிடம் அந்த கேள்வியை கேட்டான்.“சொல்லுங்க மச்சான், திடிர்னு வந்து இருக்கீங்க, நீங்க அத்தையை மட்டும் பார்க்க வரலைன்னு தோணுது, வேற எதாச்சும் முக்கியமான வேலையா வந்து இருக்கீங்களா, நாங்க உங்களுக்கு ஏதாவது உதவணுமா, சொல்லு சித்தார்த்என்றான்உண்மையானஅக்கறையுடன்.

 

“எப்படி மாமா நீங்களும் ஸ்ரீ மாதிரியே இருக்கீங்க, என்னை விட நீங்க ரெண்டு பேரும் என்னை சரியா கணிச்சு வைச்சு இருக்கீங்க, நான் இப்போது அம்மாவை பார்க்கத்தான் வந்து இருக்கேன் மாமா, ஆனா உங்ககிட்டையும் ஒரு விஷயம் பேசணும்.

 

“அம்மாவுக்கு அப்புறம் என்னை புரிஞ்சுகிட்டது நீங்களும் ஸ்ரீயும் தான். எனக்கு உங்ககிட்ட எந்த ஒளிவு மறைவும் இல்ல மாமா, நாம இது பத்தி மேல மாடியில போய் பேசலாம். அதுக்கு முன்னாடி நான் அம்மாவை போய் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்என்றுகூறிஅவசரஅவசரமாகசாப்பிட்டுவிட்டுதாயின்அறையைநாடிச்சென்றான்.

 

“அம்மா சாப்பிடீங்களா, மாத்திரை எல்லாம் போட்டாச்சாஎன்றான்.

 

“நான் சாப்பிட்டு, மாத்திரையும் போட்டுட்டேன்பா, சொல்லுப்பா நீ ஏதோ என்கிட்டே பேசணும்னு வந்த இருக்க மாதிரி தெரியுது சொல்லு கண்ணு, என்ன விசயம்என்றார்அவர்வாஞ்சையுடன்.

 

எப்படி சொல்வது, எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கியவாறே நின்றிருந்தான் சித்தார்த்.

 

“இங்க வாப்பா வந்து பக்கத்துல உட்காரு. என்கிட்டே என்னப்பா தயக்கம், நீ என்கிட்ட வெண்பா பற்றி தானே பேச நினைச்ச, உனக்கு அதிலென்ன தயக்கம், அந்த பொண்ணு தான் இந்த வீட்டுக்கு மருமக. அம்மா உன் விருப்பத்துக்கு மாறா எதுவும் சொல்வேனா. நீ எதுக்கும் கலங்கி நிக்ககூடாதுப்பாஎன்றார்கலங்கி.

 

சித்தார்த்துக்கு சந்தோசத்தில் கண்ணீரே வந்துவிட்டது, அவன் கோதையை சந்தோசமாகவும், ஆச்சரியமாகவும் பார்த்தான்.

 

“ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குமா, உங்களுக்கு இந்த விசயம் எப்படிம்மா தெரியும். ஸ்ரீ எதுவும் சொன்னானாஎன்றான்.

 

“ஆமாப்பா, ஸ்ரீ தான் சொன்னான், அவன்கிட்டயிருந்து இந்த விசயத்தைவாங்குறதுக்குள்ள நான் என்ன பாடுபட்டேன். அவன் லேசில் இந்த விசயத்தை என்கிட்டே சொல்லவே இல்லை. நீ இங்க இல்லாத குறையை போக்க அவன் தான் அடிக்கடி இங்கு வந்து போய் ஆறுதலா இருந்தான். உனக்கு ஒரு கல்யாணம் பண்றது பற்றி பேசினேன்.அவன் பிடி கொடுத்து பேசவில்லை. அவன்கிட்ட பலதடவை பேசி தான் அவன் உன்னை பத்தி என்கிட்டே சொன்னான்.

“எனக்கு அதுல ரொம்ப சந்தோசம், நீ எங்ககிட்ட வந்ததுல இருந்து இவ்வளவு சந்தோசப்பட்டியான்னு எனக்கு தெரியல. ஆனா இப்ப உன்னை பார்க்கும் பொது மனசுக்கு நிறைவா இருக்கு. நீ எப்பவும் இப்படியே இருக்கணும் நான் கடவுளை வேண்டிக்கிறேன்என்றார்.

 

“சீக்கிரமா அந்த பொண்ணுகிட்ட பேசி சம்மதம் வாங்குப்பா, அப்புறம் நாம அவங்க வீட்டுக்கு போய் சம்பந்தம் பேசி முடிச்சுடலாம்என்றார்அவர்விடாமல், பேசும்போதுஅவருக்குமுச்சிரைத்தது.

 

“சரிம்மா நான் அவகிட்ட பேசிடறேன், நீங்க ரெஸ்ட் எடுங்கம்மாஎன்றுவிடைபெற்றுஎழுந்தான்.

 

கோதைக்கு அவளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. “தம்பி போட்டோ எதுவும் வைச்சு இருக்கியா, என் மருமகளை பார்க்கணும் போல இருக்குஎன்றார்ஆவலாக.

 

அவன் சட்டையில் இருந்த அந்த புகைப்படத்தை எடுத்துக் காட்டினான். அவர்கள் அவன் தொழிற்சாலைக்கு வந்த போது தோழிகள் மூவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் அது. அவளை அவன் தாய்க்கு அடையாளம் காட்டினான்.

 

அவளை பார்த்தவருக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சி உண்டாயிற்று.

 

தாயிடம் பேசிவிட்டு ராகவனிடம் பேசுவதற்காக படியேறி மாடிக்குச் சென்றான். மொட்டை மாடியின் பக்க சுவரின் மேல் ஏறி அமர்ந்திருந்தான் ராகவன்.

 

“என்ன மாமா ரொம்ப நேரமா காக்க வைச்சுட்டனாஎன்றான்.

 

“வா சித்தார்த் அதெல்லாம் ஒண்ணும் இல்லை, அத்தைகிட்ட பேசிட்டியா, சரி இப்போது சொல்லு என்ன விசயம்என்றான்ராகவன்.

 

“மாமா எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு, அவளையே கல்யாணம் பண்ணிக்கணும் விரும்பறேன், அதுக்கு உங்க அனுமதி வேணும் மாமாஎன்றான்.

 

“நினைச்சேன், இப்படித்தான் இருக்கும்னு நினைச்சேன், என்ன நீ அனுமதி அது இதுன்னு உன் விருப்பம் போல நீ வாழ்க்கை தேர்ந்தெடுக்க எங்க அனுமதி எதுக்கு சித்தார்த்.

 

“இவ்வளவு நாளா திருமணம் வேணாம்ன்னு சொல்லிட்டு இருந்த இப்போது உனக்கு ஒரு பொண்ணு பிடிச்சிருக்கு சொல்லற, சொல்லு சித்தார்த் அந்த பொண்ணை எங்க பார்த்த, எப்படித் தெரியும்என்றான்ராகவன்.

 

வெண்பாவை எங்கு எப்படி சந்தித்தான், எப்படி அவனுக்கு அவள் மேல் எப்படி ஈர்ப்பு வந்தது என்ற விவரத்தை சுருங்க கூறினான்.

 

“ரொம்பவும் சுட்டியான பொண்ணா இருப்பா போல இருக்கு, உனக்கு அவள மாதிரி பொண்ணுதான் சரி, அந்த பொண்ணுகிட்ட எப்போ உன் காதலை சொல்லப் போற, அவ மனசுல நீ இருக்கறது தெரிஞ்ச பிறகு நீ ஏன் சும்மா இருக்கிறாய், அவளிடம் பேசி அதை உறுதி படுத்திக் கொள்ளவேண்டியது தானேஎன்றான்.

 

“நாளைக்கு நான் என் காதலை அவகிட்ட சொல்ல போறேன் மாமா, அவ வால்பாறைக்கு ஒரு வேலை விசயமாக அவள் தோழிகளுடன் வந்திருக்கிறாள். நான் தான் அவங்களை ஸ்ரீ வீட்டில் தங்க ஏற்பாடு செஞ்சேன்என்றான்.

 

“ஏன் சித்தார்த் இங்க கூட்டி வந்து இருக்கலாமே, நாங்க அவங்களை பார்த்துக்க மாட்டோமாஎன்றான்ஆதங்கத்துடன்.

 

“அது சரியா வராது மாமா, கல்யாணத்துக்கு முன்னாடி அவளை நம்ம வீட்டுல தங்க வைக்கறது நல்லா இருக்காது. அதான் நான் ஸ்ரீ வீட்டில் தங்க ஏற்பாடு செய்தேன்என்றான்.

 

“பரவாயில்லை மச்சான் நல்லா சமாளிக்கறீங்க. உங்கக்கா இருக்கும் போது கொஞ்சம் கஷ்டம் தான். ஒரு வகையில நீங்க சொன்ன மாதிரி கூட வைச்சுக்கலாம்.

 

“இந்த விசயத்துல நீ ரொம்ப சரியாதான் முடிவேடுத்து இருக்க, ஆனா எனக்கு என் தங்கச்சிய பார்க்கணுமே, அதுவும் நேர்ல. இவ்வளவு தூரம் வந்து இருக்கா அந்த பொண்ணை நான் பார்த்தே ஆகணும். நாளைக்கு நானும் உன்கூட ஸ்ரீ வீட்டுக்கு வரேன்என்றான்ராகவன்.

 

“மாமா, அக்காகிட்ட இந்த விஷயத்தை எப்படிஎன்றுஇழுத்தான்அவன்.“நீ எதுவும் சொல்ல வேணாம், நான் பார்த்துக்கறேன்என்றுஅந்தவிஷயத்திற்குமுற்றுபுள்ளிவைத்துவிட்டான். “அப்புறம்நீஉன்னைபற்றிஅந்தபெண்ணுக்குஎதுவும்தெரியுமா என்றான்.

 

“நான் அவகிட்ட என்னை பற்றி பேசுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்ததில்லை மாமா, முதல்ல நான் என்னோட காதலை சொல்லிவிடுகிறேன், என்னை பற்றி அதன் பின் தான் சொல்ல வேண்டும். ஒரு சமயம் யோசிச்சா என்னை பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது மாமா.

 

“எனக்கு அப்பா, அம்மா எல்லாமே இவங்க தான் மாமா. என்னை பெத்தவங்க என்னை தொலைச்சு இருந்தா கண்டிப்பா என்னை தேடி இருப்பாங்கல்ல, ஆனா இதுவரைக்கும் என்னை தேடி யாருமே வரவே இல்லையே. இவங்க மட்டும் இல்லாம போயிருந்த நான் என்னவாகியிருப்பேன் என்று வருந்தினான்.

 

“நான் ஒருத்தன் உன்னோட நல்ல மூடை கெடுத்துட்டேன், சாரி மாப்பிள்ளை நீ வருத்தப்படாதே. உனக்கு அவங்கள பத்தி எதுவுமே ஞாபகம் வரவே இல்லையா. அவங்க முகம் உனக்கு நினைவிருக்கா என்றான்.

 

“நிழலாக மட்டுமே எனக்கு ஞாபகம் வருகிறது, ஒன்றிரண்டு விசயங்கள் மட்டுமே எங்கோ நினைவுக்கு வருகிறது. எனக்கு என் தங்கை நிர்மலா முகம் மட்டும் நன்றாக நினைவிருக்கிறது. அவளும் நானுமாக நிறைய சுற்றி இருக்கிறோம் அதற்கு மேல் என் நினைவுக்கு வேறு எந்த விஷயமும் வந்ததில்லை மாமா என்றான்.

—————————————–

 

ரயில் நிலையத்தில் காத்திருந்த ஸ்ரீயும் அவன் தந்தை சந்திரசேகரும் ரயில் வருவதை பார்த்துவிட்டு முன்னே சென்று நின்றனர்.வெண்பா அவனுக்கு போன் செய்யவும் அவன் அவர்களை அடையாளம் காணவும் சரியாக இருந்தது.

 

இருவரும் பெண்கள் மூவரையும் வரவேற்றனர். சந்திரசேகர் மூவரையும் தனித்தனியே பிரயாணம் பற்றி விசாரித்தார். ஸ்ரீ ஒரே பிள்ளையாய் போனதில் அவர்களுக்கு வருத்தம்.

 

ஆதலால் ஸ்ரீதரனின் தாய் ராதாவுக்கும் சந்திரசேகருக்கும் பெண் பிள்ளைகள் என்றால் உயிர், ஐஸ்வர்யாவை தங்கள் மகள் போலவே பார்த்துக் கொண்டார்கள். இவர்கள் மூவரையும் கண்டவருக்கு சந்தோசம் தாங்கவில்லை.

 

இனியா வழக்கம் போல் கலகலத்துக் கொண்டிருந்தாள். வெண்பாவும் அவர்கள் பேச்சில் சந்தோசமாக கலந்துக்கொண்டாள். சுஜிக்கும் கூட அவர்கள் இருவரையும் மிகவும் பிடித்திருந்தது.

 

பேசிக்கொண்டே அவர்கள் உடமைகளை காரில் வைத்து விட்டு ஸ்ரீ காரை எடுக்க வண்டி வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தது. சேகர் தான் மகனை வாரிக்கொண்டிருந்தார்.

 

“கண்ணுங்களா என் மகன் ஒரு காரியம் செஞ்சான் பாருங்க, ஐஸ்வர்யா அதான் எங்க மருமகள், அவளை திடிர்னு சொல்லாம கொள்ளாம தாலிகட்டி கூட்டிட்டு வந்துட்டான். இவனுக்கு அந்த சித்து பயலும், ஹரி பயலும் கூட்டு. ரெண்டு பேரும் சேர்ந்து கல்யாணம் பண்ணி வைச்சுட்டு வந்து வீட்டில எதுவும் தெரியாத மாதிரி நான் இவனை திட்ட என்னோட சேர்ந்து அவங்களும் திட்டுறா+னுங்க

 

“நான் எப்படி ஆளு, இவனுங்க கூட்டு சேர்ந்து தான் கல்யாணம் பண்ணி வைச்சானுங்கன்னு தெரிஞ்சு அந்த குட்டை என் பொண்டாட்டி முன்னால உடைக்க, பயலுக மூக்குடைஞ்சு போய் நின்னானுங்க. எங்களுக்கு என்ன வருத்தம்னா இவன் கல்யாணத்தை பார்க்க முடியலயேன்னு தான்

 

“ஆனா இந்த பய அதுக்கும் ஒரு காரணம் சொல்லி என் வாயை அடைச்சுட்டான். ஐஸ்வர்யாவின் அப்பா, அம்மா கல்யாணத்துல கலந்துக்கல, அவங்களுக்கு விருப்பம் இல்லாம தான் இவங்க கல்யாணம் நடந்தது. அவங்களும் வரல, நீங்களும் வரலனா தான் பின்னால எந்த பிரச்னையும் வாராதுன்னு சொன்னான்

 

“அந்த புள்ளையும் வருத்தப்படும் நம்ம அப்பா, அம்மா கல்யாணத்துல இல்லன்னு, ஆனா பாருங்க இப்ப நீங்களும் இல்ல, இப்ப அந்த வருத்தமிருக்காதுன்னு சொல்றான். அவ வருத்தபட்டா நான் இதை சொல்லியே சமாளிச்சுடுவேன்.

 

“அவங்க அப்பா, அம்மா நாளை பின்ன வந்த நீங்க தானே இந்த கல்யாணம் பண்ணி வைச்சீங்கன்னு எங்களை பார்த்து எதுவும் கேட்டு விடக்கூடாதாம்என்றார்.“அப்பா ஏன்பா என் மானத்தை வாங்கறீங்கஎன்றான்ஸ்ரீ.

 

“நான் எங்கடா உன் மானத்தை வாங்குனேன், நீ எங்க மானத்தை வாங்குன கதையை சொல்லிக்கிட்டு இருக்கேன்என்றார்அவர்சிரித்துக்கொண்டே.“அப்பா நம்ம கதையை பேசி போர் அடிக்க வேணாம், கொஞ்சம் பேசாம வாங்கப்பா, அவங்க எதாச்சும் நினைச்சுக் போறாங்கஎன்றான்.

 

“அய்யோ அப்படி எல்லாம் எதுவும் இல்லை அண்ணா, அப்பா பேசுறது கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு,  கலகலன்னு பேசுறாங்க, அது ரொம்ப பிடிச்சு இருக்கு, எங்க இனியா கூட இப்படி தான் பேசுவா, என்ன சுஜி நான் சொல்லறது சரி தானேஎன்றாள்அவள்.

 

“ஆமாம் அண்ணா, அவள் சொல்வது சரி தான், அப்பா மனசுல எதுவும் இல்லாம ரொம்பவும் இயல்பா பேசுறாங்க, இங்க வரும் போது எப்படி இருக்க போறோம் நினைச்சு தான் வந்தோம். ஆனா இப்போ அந்த மாதிரி எந்த கவலையும் எங்களுக்கு இல்லைஎன்றாள்அவள்.

 

ஸ்ரீயும், சந்திரசேகரும் நெகிழ்ந்து விட்டனர், அவர்கள் உரிமையாக அப்பா, அண்ணா என்று அழைத்தது அவர்களுக்கு மிகப் பிடித்திருந்தது.

 

“ஏன்பா, அம்மாவும் இப்படித்தானா கலகலப்பா இருப்பாங்களா, அண்ணா, அண்ணியும் இப்படித்தானா என்றாள் வெண்பா இருவரையும் பார்த்து.

 

“இப்ப அவங்கள பார்க்கத்தானே போறீங்க என்று பீடிகை போட்டனர் இருவரும்.

 

அத்தியாயம் –10

 

வரும் வழியில் வண்டி ஒரு மிகப்பெரிய மருத்துவமனை வாயிலில் நின்றது, அங்கு வாயிலில் ஒரு இளவயது பெண்ணும், நடுத்தர வயதை கடந்த ஒரு பெண்மணியும் நின்றிருந்தனர்.

 

சேகர் கிழிறங்கி அவர்கள் இருவரையும் அழைத்து வந்தார். “பாருங்க பொண்ணுங்களா, நீங்க கேட்ட என்னோட பொண்டாட்டி ராதா இவங்க தான். இது என் மருமக ஐஸ்வர்யா என்றவர், வெண்பா, சுஜி, இனியாவை மனைவி மருமகளுக்கு அறிமுகப்படுத்தினார்.

 

“மருமக மாசமா இருக்கு, இன்னைக்கு அதுக்கு பரிசோதனை பண்ணனும், அதான் இவன் கூடவே நாங்களும் தொற்றிக்கொண்டு வந்துட்டோம்என்றார்சந்திரசேகர்.அனைவருமே கலகலப்பாக பேசிக் கொண்டு சென்றனர். வரும் வழியில் வண்டியை நிறுத்தி காலை உணவை முடித்தனர்.

 

வெண்பா இயற்கையை வேடிக்கை பார்க்கலானாள். ‘என்ன அழகான ஊர், எங்கும் பசுமை, சுற்றிலும் தென்னந்தோப்புகளே இருந்தன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை தோப்புகளே, காலை நேர பயணமே ஒரு சுகமான அனுபவம். அதிலும் சுற்றிலும் பசுமையுடன் ரம்யமான காலை பொழுதும் சேர்ந்து  மனத்துக்கு இதம் கொடுப்பதுடன் ஒரு அமைதியையும் கொடுத்தது.

 

வெண்பாவுக்குள் தீயாய் சித்தார்த்தின் நினைவுகள், அவனை நினைத்ததும் உடலும் மனமும் ஒன்றாக விதிர்க்க ஆரம்பித்தது. அவனை பற்றிய நினைவுகளில் குப்பென்று வியர்த்தது அவளுக்கு அந்த குளிரையும் மீறி.

 

அவனுக்கு ஒரு போன் போட்டுக்கூட சொல்ல முடியவில்லையே என்ற வருத்தம் மேலோங்கியது. அவன் குரலை கேட்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகியது.வண்டி அப்போது ஆழியாறு அணையை வந்தடைந்திருந்தது.

 

கடவுள் இயற்கை வளத்தை மொத்தமாக அந்த ஊருக்கே கொடுத்திருப்போரோ என்று என்னும் அளவுக்கு எங்கும் பசுமையுடன் இருந்ததை எண்ணி வியந்தாள் வெண்பா.

 

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அவர்களை அணைக்கட்டுக்கு அழைத்துச் சென்றான் ஸ்ரீ.

 

ஐஸ்வர்யா அதிகம் நடக்க வேண்டாம் என்று ராதா கூற அவரும் ஐஸ்வர்யாவும் அங்கு இருந்த கல் பெஞ்சில் அமர்ந்துகொண்டனர்.

 

தந்தையும், மகனுமாக அவர்களுக்கு சுற்றிக் காண்பித்தனர்.

 

வெண்பாவுக்கோ வியப்போ வியப்பு சுற்றி இருந்த நீரும், ஒரு பக்கம் மலைகளும் அதன் மீது பஞ்சு பொதி போல் மேகக்கூட்டங்கள் கால் வலித்தால் உட்காருவது போல் அந்த மலைகளின் மீது அமர்ந்தும் பின் கடந்தும் சென்றது அந்த பொழுதை மேலும் அழகாக்கியது. காணக்காண தெவிட்டவில்லை அவளுக்கு.

 

சித்தார்த்துடன் வந்து இருந்தால் எப்படி இருக்கும் என்று மனம் அவனிடமே மீண்டும் சென்றது. சந்திரசேகர் தான் பேசிக் கொண்டே வந்தார்.

 

அங்கு இருந்த ஒரு வீடு பல திரைப்படங்களில் வந்திருப்பதாகவும், காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் அங்கு தான் எடுத்ததாகவும் கூறிக்கொண்டு இருந்தார்.

 

வெண்பாவுக்கு அணையை விட்டு கீழிறங்கவே மனமில்லை. வெண்பாவின் எண்ணம் முழுவதும் சித்தார்த் ஆக்கிரமித்திருந்தான். வால்பாறைக்கு செல்லவேண்டுமே நேரமாகிவிட்டதே என்று ஒரு வழியாக அவள் ரசித்து முடித்து வந்தாள்.

 

சுஜியும், இனியாவும் சந்திரசேகருடன் பேசியவாறே வேகமாக கீழிறங்கி விட்டனர்.வெண்பாவுக்கு சித்தார்த் பற்றி அவன் நண்பனிடம் கேட்கும் ஆவல் மிகுந்திருந்தது. ஸ்ரீயிடம் லேசாக விசாரிக்க ஆரம்பித்தாள்.

 

“அண்ணா, நீங்க இங்க நிறைய தடவை வந்து இருக்கீங்களா, உங்க நண்பர்களுடன்என்றாள்தயங்கியவாறே, ஒருவேளைஅவள்எண்ணஓட்டம்அவன்கண்டுபிடித்துவிட்டால்என்றுயோசிக்கஆரம்பித்தாள்.

 

அவன் எந்த வித்தியாசமும் காட்டாமல் பதில் கூறினான். “சித்துக்கு இந்த இடம் ரொம்ப பிடிக்கும், இங்க ஒரு தியானக் கூடம் இருக்கு, அவன் ஊருக்கு வந்தா இங்க வராம இருக்கமாட்டான்.

 

“நானும், சித்துவும் தான் அடிக்கடி இப்படி ஒண்ணா வந்து ஊரு சுத்துவோம், சித்து படிப்பில் ரொம்ப கெட்டி, தங்கப்பதக்கம் எல்லாம் கூட வாங்கி இருக்கான். அவன் ரொம்ப திறமைசாலியும் கூட

 

“நீங்க அவரை சித்துன்னு தான் கூப்பிடுவீங்களாஎன்றாள்.

 

இம்மென்று தலையை ஆட்டினான் ஸ்ரீ. அவள் கேட்காமலே ஸ்ரீ, சித்தார்த் பற்றி பல விஷயங்கள் கூறினான்.

 

“அவனுக்கு கொஞ்சம் சட்டுன்னு கோபம் வரும், ஆனா தங்கமான குணம் அவனுக்கு, தனக்கு உரிமை உள்ளவர்களின் மேல் மட்டுமே அவன் உரிமையுடன் கோபித்துக்கொள்வான்என்றுநண்பனைபற்றிசொல்லிக்கொண்டிருந்தான்.

 

கீழிறங்கி வந்து அனைவரும் வண்டியில் ஏறினர். வண்டி ஒரு மலை மேல் ஏறுவது போல் இருந்தது. சுஜி அதை பற்றி கேட்க சேகர் “மலை மேல் ஏறுவது போல் அல்ல மகளே, மலைமேல் தான் நாம் ஏறிக்கொண்டிருக்கிறோம்என்றார்.

 

ஆழியாறு தாண்டி ஏறுபாதையில் ஏறிய வண்டி ஒரு வளைவில் திரும்பி நின்றது. அங்கு நிறைய வண்டிகள் நின்றிருந்தன. என்னவென்று இனியா சேகரிடம் கேக்க அவர் “இதுதாம்மா நம்ம முன்னோர்கள் அருவிஎன்றார்.

 

“அருவியா, அப்புறம் எப்படி இது முன்னோர்கள் அருவின்னு சொல்றீங்கஎன்றாள்இனியா.

 

“அய்யோ, அப்பா போதும் உங்க ஜோக். அவங்களே ஒண்ணும் புரியாம முழிக்கறாங்க. இனியா இது தான் குரங்கு அருவி இந்த சுற்றுவட்டாரத்தில் மிக முக்கியமான அருவிக்கரை இது தான். நீங்க மாற்றுடை எடுத்துக் கொண்டு போய் இங்க குளிங்க. நாங்க இங்க இருக்கோம், அம்மா உங்க கூட துணைக்கு வருவாங்கஎன்றுகூறினான்.

 

“நீங்கள் குளித்து இங்கு உள்ள உடை மாற்றும் அறைக்கு சென்று உடை மாற்றிக்கொள்ளுங்கள், அம்மா நீங்கள் அவர்களுக்கு துணையாக செல்லுங்கள்என்றான்ஸ்ரீ.

 

“நான் என்ன வயசானவனா நானும் போய் ஆண்கள் பக்கம் சென்று குளிப்பேன்என்றுஅடம்பிடித்தார்சேகர்.

 

ராதா அவரை ஒரு பார்வை பார்க்க “நான் ஒண்ணும் சொல்லலையே, நான் இங்கேயே ஒரு ஓரமா அமைதியா உட்கார்ந்துக்கறேன் ராதும்மாஎன்றுஅந்தர்பல்டிஅடித்தார்அவர்.

 

அவர்கள் குளித்துவிட்டு உடைமாற்றிக்கொண்டு கீழிறங்கி வந்தனர்.இதற்குள் ஸ்ரீக்கு சித்தார்த்திடம் இருந்து பல அழைப்புகள் வந்துவிட்டது. அவர்கள் குளிக்கச் சென்ற நேரமாக பார்த்து அவன் போன் செய்தால் ஸ்ரீ தான் என்ன செய்வான்.

 

“என்னடா போன் பண்ணா எடுக்க மாட்டியா, என்னாச்சோ ஏதாச்சோன்னு பயந்தே போயிட்டேன், அவங்க நல்லபடியா வந்துட்டாங்களா, வெண்பா எப்படி இருக்காஎன்றுஅடுக்கடுக்காகஅவன்கேள்விமேல்கேள்விகேட்டுக்கொண்டுஸ்ரீயைபேசவிடாமல்பேசினான்.

 

“போதும், போதும் கொஞ்சம் மூச்சு வாங்குடா, அவங்கள பார்த்தாச்சு, பேசியாச்சு, நாங்க இப்ப குரங்கு அருவில தான் இருக்கோம், எல்லாரும் குளிக்க போய் இருக்கிறார்கள். நாங்கள் காவலுக்கு இருக்கிறோம்என்றுஸ்ரீயும்அவனுக்குசரியாகவேகமாகபதிலளித்தான்.

“நாங்கனா, யார் யாருடாஎன்றான்சித்தார்த். “ஐஸ்வர்யா இன்னைக்கு செக்கப், அதான் எல்லோரும் கிளம்பி வந்தோம். அம்மாவும் ஐஷும் மருத்துவனைக்கு சென்றுவிட்டார்கள், நானும், அப்பாவும் தான் அவர்களை சென்று அழைத்து வந்தோம்.

 

“வர வழியில அவங்களை மருத்துவமனையில் இருந்து ஏற்றிக்கொண்டு சற்று முன்பு தான் குரங்கு அருவிக்கு வந்தோம், போதுமா, இல்ல இன்னும் வேணுமாஎன்றான்.

 

அப்புறம் ஒரு விசயம் எனக்கென்னவோ வெண்பா மனசு முழுக்க நீதான் இருக்கறன்னு தோணுது ஆழியாறு அணைக்கு கூட்டி போய்த் சுத்திக் காண்பிச்சோம்.

 

“வெண்பா அங்க வைச்சு உன்னை பற்றித்தான் விசாரிச்சா, உன்னை பற்றி பேசும் போது அவ முகத்துல அப்படி ஒரு மலர்ச்சியை என்னால பார்க்க முடிஞ்சது. நீசீக்கிரமா இங்க வந்து அவகிட்ட உன்னோட காதலை சொல்லிடுடாஎன்றான்ஸ்ரீ.

 

“நீ அவளுக்கு போன் போடவே இல்லையா, பாவம் அவ முகம் அப்பப்போ வாடிபோயிடுது. அவகுளிச்சுட்டு வந்ததும் நான் உனக்கு மிஸ் கால் தரேன். நீ அப்ப அவளுக்கு போன் போட்டு பேசுஎன்றான்.

 

சித்தார்த்துக்கு கால்கள் தரையில் இல்லாமல் அந்தரத்தில் மிதப்பது போல் இருந்தது, நேசிப்பதை விட, நேசிக்கப்படுவது மிகச் சிறந்த உணர்வு என்பதை அவன் அந்த கணம் உணர்ந்தான். எப்போது அவளை பார்ப்போம் என்று இருந்தது அவனுக்கு. அவன் உணர்வுகளுக்கு புது வேகம் வந்தது போல் இருந்தது.

 

“ஹலோ, ஹலோஎன்றுஸ்ரீபலமுறைஅழைத்தகுரல் கேட்டு தன்னுணர்வுக்கு வந்தான் சித்தார்த்.

 

“டேய், அவ மட்டும் கீழிறங்கி வந்துட்டா, நீ இப்போது உடனே அவளுடன் பேசுஎன்றுகூறிவிட்டுதொடர்பைதுண்டித்தான்ஸ்ரீ.

 

வெண்பாவுக்கு ஏனோ வெகு நேரம் குளிக்க மனமில்லை. அவள் நினைவுகள் முழுவதும் சித்தார்த்தை சுற்றியே இருந்தன. ஒரு வேளை குளித்துக்கொண்டிருக்கும் போது அவன் போன் செய்து விட்டால் என்ற நினைவு வர அவசர அவசரமாக குளித்துவிட்டு காருக்கு விரைந்து வந்து தன் கைபேசியை வெளியில் எடுத்தாள்.

 

சரியாக அழைப்பு மணி ஒலிக்க அது அவன் எண்களை காட்டியது..உடம்பு முழுவதும் ஒரு புது ரத்தம் பாய்ந்தது போல் ரத்தம் சூடேற ஒரு  விதிர்ப்புடன் போனை எடுத்து “ஹலோஎன்றாள்.

“ஹலோ, என்ன பேச்சை காணோம் வால்பாறைக்கு போனதும் என்னை மறந்துட்டியா வெண்பாஎன்றான்அவன்ஆழ்ந்தகுரலில்.

 

உடனே கண்களில் நீர் துளிர்த்துவிட்டது அவளுக்கு, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு “விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதீங்க நான் எப்போதுமே உங்களை மறக்க மாட்டேன்என்றாள்.

 

அவள் குரலில் வித்தியாசம் கண்டவன் சட்டென்று பேச்சை மாற்றினான். “எங்க அந்த வாலு இனியா, அப்புறம் சுஜி எல்லாம்என்றான்.“அவங்க அருவியில குளிச்சுட்டு இருக்காங்கஎன்றாள்.

 

“நானும் உங்களோட ஊருக்கு வந்து இருக்கலாமோன்னு தோணுதுஎன்றான்.“நிஜமாகவா, அப்ப உடனே கிளம்பி வாங்கஎன்றாள்குரலில்ஒருகுதூகலத்துடன்.

 

“என் வரவு உனக்கு அவ்வளவு முக்கியமானதா வெண்பாஎன்றான்.‘ஆமாம், உன் வரவு மட்டுமில்லை நீயும் எனக்கு முக்கியமானவன்என்றுஅவள்இதயம்கூறியது.

 

“என்ன பதிலை காணோம்என்றான்.“சரி அம்மா, அப்பாகிட்ட பேசிட்டியா, நீங்க பாதுகாப்பா வந்து இறங்கிட்டீங்கனு அவங்ககிட்ட சொல்லிட்டியா, ஏன்னா அவங்க என்னை நம்பி தான் உன்னை அனுப்பிருக்காங்கஎன்றான்.

 

“இல்லங்க இனிமே தான் பேசணும், நாங்க இங்க குரங்கு அருவியில தான் இருக்கோம், வீட்டுக்கு போனதும் பேசலாம்னு நினைச்சேன்என்றாள்.

 

“நல்லா பேசுன போ, இதுக்கு மேல போனா உன் போன்ல டவர் கிடைக்காது. அப்புறம் எப்படி பேசுவா. முதல்ல அவங்களுக்கு பேசு, வீட்டுக்கு போன பிறகு ஸ்ரீ போன்ல இருந்து பேசிக்கோஎன்றான்.

 

“சரி நான் போனை வைக்கட்டுமாஎன்றான்.

 

அவள் பதிலேதும் கூறவில்லை. “ஹலோ, லைன்ல தான் இருக்கியாஎன்றான்.

 

“இம் இருக்கேன், சரிங்க நான் அம்மா, அப்பாகிட்ட முதல்ல பேசுறேன்என்றுகூறிபோனைவைத்துவிட்டாள்.

 

அவனுடன் பேசி முடித்ததும் அவள் அன்னைக்கு போன் செய்தாள். எதிர்முனையில் பேசியவர் அவளை நலம் விசாரித்தார். பத்திரமாக வந்து சேர்ந்து விட்டதாக கூறினாள் மகள். மேலும் ஸ்ரீதரனின் குடும்பம் நல்ல மாதிரி என்றும் அனைவரும் இனிமையாக பழகுவதாகவும் கூறினாள். அவளுடைய தந்தையிடமும் பேசிவிட்டு போனை வைத்தாள். அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

 

இதுவரை அவள் அவர்களை பிரிந்ததேயில்லை, முதல் முறையாக ஒருவர் கூட இல்லாமல் கிளம்பி வந்திருக்கிறாள்.

 

குளித்துவிட்டு வந்ததும் சூடாக சுக்கு காபி வாங்கி கொடுத்தார் சந்திரசேகர்.

 

அந்த குளிருக்கு இதமாக சூடாக அருந்திய காபி தேவாமிர்தமாக இருந்தது.

 

ஸ்ரீ வண்டியை மெதுவாகவே ஓட்டலானான். ஏனெனில் ஐஸ்வர்யாவுக்கு தலை சுற்றும் என்று பயந்து அவ்வாறு ஓட்டலானான்.

 

ஆனால் அவன் மனைவியோ மிகவும் இயல்பாகவே இருந்தாள். வெண்பாவுக்கும், சுஜிக்கும் மட்டுமே மலையேற்றம் ஒத்துக் கொள்ளவில்லை.

 

சுஜிக்கு ஒரே தலைசுற்றலாக இருந்தது. ராதா அவளை தான் மடியில் சாய்த்துக் கொண்டார். கண்ணை மூடி உறங்குமாறு அவளை கூறினார்.

 

வெண்பாவுக்கோ தலைசுற்றலுடன், வாந்தியும் சேர்ந்துக் கொண்டு படுத்தி எடுத்துவிட்டது. ஆங்காங்கே வழியில் நிறுத்தி அவள் வாந்தி எடுத்துக் கொண்டு வந்தாள்.

 

ராதா அவளையும் தன்னோடு சேர்த்து, அணைத்துக் கொண்டு உறங்குமாறு பணித்தார். இனியா இவர்கள் படும் பாட்டைக் கண்டு கலக்கமுற்றாள்.

 

ஒரு வழியாக அனைத்து கொண்டை ஊசி வளைவுகளையும் கடந்து அவர்கள் வண்டி வால்பாறையை அடைந்தது. வண்டியை ஸ்ரீ அவர்கள் வீட்டிற்கு ஓட்டிச் சென்று வாயிலில் நிறுத்தினான்.

 

இனியாவும், ராதாவும், சுஜியையும் வெண்பாவையும் தாங்கி பிடித்து வீட்டிற்குள் கூட்டிச் சென்றனர்.

 

அவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த அறையில் சென்று அவர்களை உட்கார வைத்தனர். ஒருவாறு தன்னிலைக்கு மீண்டவர்கள் எழுந்து சென்று முகம் கழுவிக் கொண்டு வந்து அமர்ந்தனர்.

 

ராதா அவர்களை சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்குமாறு கூறினார். அன்று முழுவதும் அவர்கள் ஓய்வெடுத்தனர்.

 

மாலையில் மூவரும் அமர்ந்து அவர்கள் அறையில் பேசிக் கொண்டிருந்தனர். சுஜி தான் ஆரம்பித்து வைத்தாள். “ஏய் வெண்பா, சித்தார்த் சாருக்கு ஒரு போன் செய்து நாம நன்றி சொல்ல வேணாமா, இப்படி ஒரு நல்ல ஊரையும் நல்ல மனிதர்களையும் அவர் தான் நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கார். ஒரு சின்ன நன்றி கூட நாம் சொல்லலைனா எப்படிஎன்றாள்.

 

“ஏய் எப்படிடீ, நான் தானே நீங்க இங்க வரதுக்கு காரணம் முதல்ல எனக்கு தானே நீங்க நன்றி சொல்லணும் என்றாள் வெண்பா.

 

“சார் மட்டும் உதவி பண்ணலைனா நாங்க மட்டும் இல்லை, நீயும் இங்க வந்து இருக்க முடியாது முதல்ல அதை தெரிஞ்சு பேசு. இப்ப சொல்லு சார்கிட்ட எப்படி பேசுறது. நம்ம யார் போன்லயும் சிக்னல் கிடைக்கல என்ன செய்யறதுஎன்றாள்சுஜி.

 

“சாரிடீ சொல்ல மறந்துட்டேன், இந்த ஊர்ல BSNL லைன்மட்டும்தான்கிடைக்குமாம். நம்மபோன்டவர்இங்ககிடைக்காதுன்னுசொன்னாங்க. நான்தான்மறந்துட்டேன், நாமஇப்பஸ்ரீஅண்ணாகிட்டதான்போன்வாங்கிபேசணும்என்றாள்வெண்பா.

 

“சரி நான் போய் ஸ்ரீ அண்ணாகிட்ட சொல்லி சித்தார்த் சார்கிட்ட பேசணும் சொல்லறேன்என்றுசுஜிகிளம்பயத்தனிக்கஸ்ரீயேஉள்ளேவந்தான்.

 

“என்னம்மா வட்ட மேஜை மாநாடா, நானும் கலந்துக்கலாமாஎன்றான்.

 

“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை அண்ணா, நாங்க சித்தார்த் சார்கிட்ட பேசணும்னு சொல்லிட்டு இருந்தோம். உடனே நீங்க வந்துட்டீங்க. அவருக்கு லைன் போட்டு தாங்கண்ணா. சுஜியும், இனியாவும் அவர் கூட பேசணுமாம்என்றாள்வெண்பா.

 

சட்டைப்பையில் இருந்து போனை எடுத்தவன் சித்தார்த்துக்கு போன் செய்தான்.

 

எதிர்முனையில் “ஹலோஎன்றவன், “என்னடாசொல்லுஅவஎன்னபண்றா, எப்படிவந்துசேர்ந்தீங்கஎன்றுபரபரத்தான்.

 

“கொஞ்சம் இரு சித்து, நாம அப்புறம் பேசலாம், உன்கிட்ட, வெண்பா, இனியா, சுஜி பேசணுனுமாம், முதல்ல அவங்ககிட்ட பேசுஎன்றான்.

 

“ஏய், போனை முதல்ல வெண்பா கிட்ட குடுடாஎன்றான்சித்தார்த்.

 

போனை வெண்பாவிடம் கொடுத்தான் ஸ்ரீ, அதை வாங்கி “ஹலோஎன்றாள்.

 

“சொல்லுங்க மேடம், என்ன பேசணுமாம் சுஜியும், இனியாவும் என்கிட்டஎன்றான்.

 

“ஏய் போனை ஸ்பீக்கர்ல போடுடிஎன்றனர்மற்றஇருவரும்.

 

“போனை ஸ்பீக்கர்ல போட சொல்றாங்க, போட வாஎன்றாள், சரியென்றான்அவன்.

 

இனியா வழக்கம் போல பாடி வைத்தாள். “நன்றி சொல்ல உனக்கு எங்கள் தலைவா வார்த்தையில்லையே என்றாள்.

 

“என்ன எல்லாரும் சேர்ந்து மறுபடியும் என்னை கலாட்டா பண்றீங்களா, அது ஒண்ணும் சென்னை இல்லை எங்க ஊருங்க மேடம்என்றான்.

 

“சார் அவ கிடக்கறா, நன்றின்னு சொல்லறத விட்டு விட்டு பாட்டாவே பாடி காமிசுட்டா. ரொம்பவும் நன்றி சார் நீங்க உதவி பண்ணலைனா வெண்பாவோட கனவு சிதைஞ்சு போயிருக்கும்.

 

“இந்த வேலை கிடைக்கும், கிடைக்காது அது வேற விசயம் ஆனா எங்களுக்கு இது ஒரு அனுபவம் சார். ஒரு புது அனுபவம் புது மனுஷங்க புதிய ஊர்னு இருந்தாலும் எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை.

 

“எங்களோட சொந்த வீட்டில இருக்கற மாதிரி நாங்க உணர்றோம். எங்க வீட்டில தான் வேலைக்கு போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க, வெண்பாவாச்சும் போக போறான்னு சந்தோசம் சார்என்றாள்.

 

“எப்படியோ, அவளுக்கு வேலைக்கு வேலையும் ஆச்சு, எங்களுக்கு ஊரை சுற்றி பார்த்த மாதிரியும் ஆச்சு. இதெல்லாம் உங்களால தான் உங்களுக்கு ரொம்ப நன்றி சார்என்றாள் சுஜி நெகிழ்ச்சியாக.

 

சித்தார்த் ரொம்பவே நெகிழ்ந்து போய்விட்டான். சுஜியின் பேச்சில், “எனக்கு எதுக்கும்மா நன்றி எல்லாம், இது ஒருத்தருக்கொருத்தர் செஞ்சுக்கற உதவி தானே சுஜி. சரி நீங்க எப்படி வந்தீங்க. மலைபிரதேசம் வாந்தி, மயக்கம் எதுவும் இல்லையேஎன்றான்.

 

வெண்பா சொல்ல வேண்டாம் என்று சைகை செய்ய இனியா தான் வாயை விட்டாள்.

 

“எங்க சார் சுஜிக்கு ஒரே தலைசுற்றல், வெண்பாவுக்கு தான் நீங்க சொன்னா எல்லாமும் வந்தது. ரெண்டு பேருக்கும் இப்ப தான் தெளிஞ்சது“ என்றாள் இனியா.

 

“உடம்பை பார்த்துக்கோங்க, புதுசா வர்றீங்க இல்லயா அப்படித்தான் இருக்கும், அப்புறம் பழகிடும் சரி போனை ஸ்ரீ கிட்ட கொடுங்கஎன்றான்.

 

“இம்சொல்லுடாசித்துஎன்னவிஷயம்என்றான்….

 

 

Advertisement