Advertisement

அத்தியாயம் –7

 

 

வெண்பா அவள் அன்னையிடம் சித்தார்த் வருவதாகக் கூறினாள். அவள் தாய்க்கு அவளை அவ்வளவு தூரம் அனுப்ப இஷ்டமில்லை என்றாலும் அவன் வருவதாக கூறியதை வேண்டாம் என்று எப்படிச் சொல்வது, மேலும் அவன் தன் மகளுக்கு பல முறை உதவி இருக்கிறான்.

 

ஏற்கனவே அவளை அழைத்து வருமாறு மகளிடம் கூறியவள், அவன் வந்தால் அவனுக்கு நன்றி கூறி, உபசரித்து அவனை அனுப்பலாம் என்று நினைத்தார்.வெண்பாவுக்கு அவன் வருவதாகக் கூறியது மிகவும் சந்தோசமாக இருந்தது. பலநாட்களாக பேசாதவன் வீட்டிற்கே வருவதாகக் கூறியதும் அவளுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

 

அவனுக்காக காத்திருக்கலானாள், வெண்பாவின் தந்தைக்கு ஏதோ முக்கியமான வேலை இருந்ததால் அவர் காலையில் கிளம்பிவிட்டிருந்தார், இரவு தான் வீடு திரும்ப முடியும் என்று கூறிவிட்டே சென்றிருந்தார்.

அவள் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டு அவளுக்கு போன் செய்தான் சித்தார்த். போனை எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தவள் அவனை வாசலில் கண்டதும் உள்ளே வருமாறு அழைத்தாள். அவனை கண்டதும் அவளிடம் ஒரு வித பரவசம் வந்தது. சூரியனை கண்ட தாமரையாக அவள் முகம் மலர்ந்திருந்தது.

 

அவனுடன் பேசிக்கொண்டே உள்ளே வந்தாள். மகிழ்ச்சியாக அவனுடன் அவள் பேசிக்கொண்டே உள்ளே வந்ததை ஹாலில் இருந்து பார்த்த அவள் அன்னைக்கு ஏனோ மனதில் இருவரையும் கண்டதும் மனதிற்குள் மின்னலென ஒரு எண்ணம் சடுதில் தோன்றி மறைந்தது.

 

இது என்ன முட்டாள்தனம் அவர் யாரோ எவரோ, நம் மனதில் ஏன் இப்படி ஒரு எண்ணம் தோன்றியது. மனதில் தோன்றிய எண்ணத்தை ஒரு ஓரமாக ஒதுக்கி விட்டு அவனை வரவேற்க தயாரானார் அவர். வழக்கத்திற்கு மாறாக மகளின் முகத்தில் தோன்றிய மலர்ச்சியை தாய் மனம் கண்டுகொண்டது.

 

“வாங்க தம்பி, உட்காருங்க உங்களை பற்றி வெண்பா நிறைய சொல்லி இருக்கிறாள். நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப ரொம்ப நன்றி தம்பிஎன்றார்.

 

அவன் மிக பணிவாக “நன்றி எல்லாம் எதுக்காக ஆன்ட்டி, நான் ஒண்ணும் பெரிசா செய்துடலஎன்றான்.

 

உள்ளே சென்று அவனுக்கு காபி எடுத்துக்கொண்டு வந்தார். அதை பருகியவன் காபி சுவையாக இருக்கிறது என்று அவரை பாராட்டினான்.

 

அவனுக்கு அந்த பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவளின் அன்னை அந்த பேச்சை ஆரம்பித்தார்.

 

“தம்பி இவ நான் சொன்னா கேட்க மாட்டேன்கறா, ஏதோ கேம்பஸ்ல செலக்ட் ஆகிட்டாளாம், அதுனால வால்பாறை போயே ஆகணும் பிடிவாதம் பண்றா. எங்களுக்கு இருக்கறது ஒரு பெண்ணும், பையனும்.

 

“பையன் தான் வெளிநாட்டில் இருக்கான், இப்ப இவளும் வெளியூருக்கு வேலைக்கு போறேன்னு சொல்லுறா, நீங்களாவது சொல்லுங்க தம்பிஎன்றுஅவனையேஉதவிக்குஅழைத்தார்அவர்.

 

அவன் அவரிடம் திரும்பி “ஆன்ட்டி உங்க பொண்ணு படிப்பு இன்னும் முடியல, அதுக்கு இன்னும் ஆறு மாசம் இருக்கு, அவ இப்ப கேம்பஸ்ல தான் தேர்வாகி இருக்கா. அதுக்கு இன்னும் சில தேர்வுகள் இருக்கு அதுக்காக தான் அவங்க வால்பாறை போக நினைக்கிறாங்க

“மத்தபடி அவங்க வேலை எல்லாம் இங்க இருக்கற நிர்வாக அலுவலகத்துல தானே, அவங்க போகட்டும் ஆன்ட்டி அப்போ தானே பெண்களுக்கு தன்னம்பிக்கை பெருகும். ஏன் வெண்பா உங்க வேலை இங்க தாங்கறதை பற்றி நீங்க ஆன்ட்டி கிட்ட சொல்லவே இல்லையாஎன்றான்.

 

“எங்க என்னை சொல்லவிட்டாதானே, போக வேணாம் போக வேணாம்னு அதையே அப்பாவும் அம்மாவும் மாத்தி மாத்தி சொன்னா நான் என்ன பண்றது, அதான் எதுவும் சொல்லலைஎன்றாள்.

 

“பாருங்க ஆன்ட்டி இதுல நீங்க ஏன் தடுக்கணும், அப்புறம் ஒரு ஆறு மாசத்துல என்ன நடக்கும்னு யாருக்கும் எதுவும் தெரியாது. இது வெண்பாவோட கனவு, ஒரு வேளை வெண்பா திருமணமாகி போய்விட்டால் அவளை பிரிந்து நீங்கள் இருப்பீர்கள் தானே, இதையும் அது போல எடுத்து கொள்ளுங்கள் ஆன்ட்டி.

 

“இது அவளுக்கு ஒரு அனுபவமே, அதை அவங்க தெரிஞ்சுக்கட்டும், வாய்ப்புகள் தேடி வரும் போது நாம அதை தள்ளிவிடக்கூடாது ஆன்ட்டி, நமக்கு எது கிடைக்கணுமோ அது கண்டிப்பாக கிடைக்கும். கீதை வழி தான் நம்மோட பயணமும் இருக்கும், நாம தடுக்கறதுனால எதுவும் தடைபடாதுஎன்றுநீளமாகபேசிமுடித்தான்.

 

“சரி தம்பி நீங்க சொல்ற மாதிரி நாங்க அவளை அனுப்பறோம்ன்னு வைங்க, அந்த ஊர்ல அவ எங்க தங்குவா, அவளுக்கு யாரையுமே தெரியாதே. இவங்க அப்பாக்கு வேற லீவு கிடையாது, இல்லைனா நாங்களே கூட வந்திடுவோம், இப்ப எப்படி அவளை அனுப்பறதுஎன்றார்.

 

“நான் அதுப்பற்றி தான் பேச வந்தேன் ஆன்ட்டி, எங்க அக்கா வீடு பொள்ளாச்சியில் தான் இருக்கிறது என் அம்மாவும் அங்கு தான் இருக்கிறார்கள், அது மட்டுமில்லாமல் வால்பாறையில் தான் என் நண்பன் ஸ்ரீயின் வீடு இருக்கிறது, இவர்களை அங்கு தங்க வைக்க நான் ஏற்பாடு செய்கிறேன்.

 

“என் நண்பன் அவன் குடும்பத்தினருடன் அங்கு தான் வசிக்கிறான். அவங்ககிட்ட நான் பேசிட்டேன், அவங்களுக்கு ரொம்பவே சந்தோசம் இவங்க அங்க தங்கறதுல, ஏன்னா என் நண்பனுக்கு கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை. அவன் ஒற்றையாக நின்றுவிட்டான்.

 

“அவன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெண் பிள்ளைகள் என்றால் உயிர், இவர்களை அவர்கள் பிள்ளைகளாகவே பார்த்துக்கொள்வார்கள். என் நண்பன் மனைவி ஐஸ்வர்யாவும் நல்ல மாதிரி. நீங்கள் பயப்படாமல் அனுப்புங்கள் ஆன்ட்டிஎன்றுஉறுதிகொடுத்தான்அவன்.

 

கூடவே நண்பனின் கைபேசி எண்ணையும் அவனின் எண்ணையும் குறித்துக்கொள்ளுமாறு அவரிடம் கொடுத்தவன், அவளுடைய தாயிடம் உறுதி வாங்கிக் கொண்டு அவர்களிடம் விடைபெற்றான்.

 

கிளம்பும் முன் “ஆன்ட்டி நீங்க தமிழ் இலக்கியமாஎன்றான். “எப்படிதெரியும்உங்களுக்குஓ, வெண்பாசொன்னாளாஎன்றார்அவர்.

 

“வெண்பாகிட்ட ப்ராஜெக்ட்க்கு அப்புறம் நான் இப்ப தான் பேசுறேன் ஆன்ட்டி, நானா தான் கேட்டேன், சும்மா போட்டு வாங்குனேன் நீங்களே சொல்லிட்டீங்க. ஒண்ணுமில்லை ஆன்ட்டி உங்க பெண்ணுக்கு வெண்பான்னு பெயர் வைச்சு இருக்கீங்க

 

“அவங்க அண்ணனுக்கு காவியன் பெயர் வைச்சு இருக்கீங்க, ஒருவேளை உங்களுக்கு தமிழ் ஆர்வம் அதிகமோன்னு நினைச்சு தான் கேட்டேன், அப்புறம் ஆன்ட்டி ஒரு உதவி என் வாரிசுகளுக்கு கண்டிப்பாக தமிழ் பெயர் தான் வைப்பேன்

 

“கண்டிப்பாக உங்களிடம் தான் வருவேன், நீங்க தான் தமிழ் இலக்கியமாச்சே, எனக்கு உதவி பண்ணுவீங்க தானேஎன்றான்விளையாட்டாக, தொடர்ந்து“அப்புறம்ஆன்ட்டிஅங்கிள்கிட்டயும்பேசிசம்மதம்வாங்கிடுங்க, அவங்கசம்மதம்இல்லைனாஇந்தபயணம்வேண்டாம்ஆன்ட்டிஎன்றுசொல்லிவிட்டுசென்றான்.“கண்டிப்பா வாங்க பெரிய லிஸ்டே தரேன்என்றார்அவரும்விளையாட்டாகவே.

 

அவரிடம் விடைபெற்று கிளம்பியவன், வீட்டிற்கு செல்லாமல் பார்த்தசாரதியை தரிசிக்க சென்றான், அவன் எப்போதுமே இப்படித்தான் மனதுக்கு நிறைவாகவும், சந்தோசமாகவும் இருக்கும் போதும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவிலுக்கு செல்வது வழக்கம். அந்த பெருமாளை மனமார தரிசித்தவனுக்கு மனதுள் மிகப்பெரிய நிறைவு வந்திருந்தது.

 

கோவிலில் இருந்து வெளியே வந்தவன், குளக்கரையில் சென்று நின்றுக் கொண்டிருந்தான். நிச்சலனமாக ஆழ்ந்த அமைதியுடன் இருந்தது குளக்கரை. அன்று முழுநிலவு நாள் ஆதலால் அதன் பிம்பம் பட்டு குளம் வெள்ளிதகடு போல் காணப்பட்டது.

 

எந்தவித சலனமும் இல்லாத அந்த குளத்தில் மீன்கள் சந்தோசமாக துள்ளி விளையாடி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.அவன் மனம் கல்கியின் சிவகாமியின் சபதம் நோக்கி பயணித்தது.அவன் கற்பனை குதிரை பல்லவர் காலத்திற்கு சென்றது. நரசிம்ம பல்லவனும், சிவகாமியும் காதல் சொல்லி மகிழ்ந்தது மாமல்லபுர கடற்கரை கோவில் அருகில் தானே.

ஒரு முழுநிலவு நாளில் இருவரும் கடற்கரை மணலில் அமர்ந்து காதல் பேசுவது போன்ற கற்பனை அவன் மனதில் எழுந்தது…அவன் எண்ணங்கள் அதனை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது, அவனும், வெண்பாவும் அது போல் காதல் பேசுவதாக எழுந்த அவனுடைய கற்பனையை அவனால் அடக்க முடியவில்லை….

 

அவன் மனம் கரையில்லா காதலில் புரண்டது, தன் காதலை எப்படி அவளிடம் சொல்லுவது என்று எண்ணி அவன் மனம் ஏங்கியது.அவள் மேல் அவனுக்கிருந்த காதலில் அவன் உரிமையுடன் அவளை கோபித்துக் கொண்டிருக்கிறான், பலமுறை அதற்காக அவன் வேதனை பட்டிருக்கிறான்.

 

ஏனோ அவன் மனதில் தோன்றிய சஞ்சலம் அது. அவளை தான் இழந்து விடுவோமோ என்ற எண்ணம் அவனை அச்சம் கொள்ள செய்திருந்தது. அதனாலே அவன் சற்று அதிகமாகவே கோபம் காட்டி, உரிமையுடன் பேசி இருக்கிறான்.

 

கையை திருப்பி மணியை பார்த்தான், மணி ஏழரையை நெருங்கி இருந்தது, அவன் வெண்பா வீட்டில் இருந்து கிளம்பும்போது மணி ஐந்து, கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் கடந்திருந்தது.

 

நேரம் போவது கூட தெரியாமல் காதலில் முழ்கி இருந்தவன், மணி பார்த்து கிளம்பயத்தனித்தான்.திடிரென்று மனதுக்குள் சாரல் மழை அடித்தது எதிரில் வந்தவளை பார்த்து, வந்தவள் அந்த சிவகாமி தான் இல்லையில்லை அவனுடைய வெண்பா தான்.

 

அவன் அவள் வீட்டை விட்டு கிளம்பியதும், வெண்பாவின் தாய் “என்ன வெண்பா இது, எதுக்குடா இப்படி செஞ்ச, பாவம் அவர் வேற இங்க வந்து உங்களுக்காக பேசிட்டு போறார்.

 

“நீங்க அங்க போய் தங்கறதுக்கான எல்லா ஏற்பாடும் பண்றதா சொல்லி இருக்கார். நல்ல மனுஷனா தெரியறார், எதுக்கும் உங்க அப்பா வரட்டும் பேசிப் பார்ப்போம். இல்லைனா அந்த தம்பிகிட்ட சொல்லிக்கலாம். நீ இதுக்காக அந்த தம்பிய ஏம்மா தொந்தரவு செய்தாய்என்றுசெல்லமாகவைதார்.

 

“ஏம்மா, நான் சொல்ல வர்றத நீங்க எங்க கேட்டீங்க, போங்கம்மாஎன்றுசொல்லிவிட்டு“நான்மாடியில்போய்படிக்கறேன்என்றுசென்றுவிட்டாள்அவள்.

 

மாடிக்குச் சென்று புத்தகத்தை கையில் எடுத்தவளுக்கோ மனம் அதில் லயிக்கவில்லை, சற்று முன்பு தனியாக வந்து சென்றவன், கிளம்பும் போது அவள் எண்ணங்களையும் களவாடிச் சென்று விட்டான். முதலிலே அவள் மனதை களவாடியவன் தானே அந்த கள்வன் என்று மனதுக்குள் செல்லமாக அவனை திட்டினாள்.

 

மனதை ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்த முயன்றாள். என்ன முயன்றும் அவள் மனம் அவளின் கட்டுபாட்டுக்குள் வரவில்லை.யோசித்து யோசித்து அவளுக்கு தலைவலியே வந்துவிட்டது. அவன் மனதில் இருப்பது என்னவென்று தெரியாமல் மிகவும் மனம் குழம்பினாள்.

 

வானில் வெள்ளி முளைத்து அவளை பார்த்து சிரித்தது போன்று தோன்றியது, அப்போது தான் அது அவள் கவனத்திற்கு உரைத்தது, இன்று பௌர்ணமி என்று, எப்போதும் பௌர்ணமி தினத்தன்று அவள் பார்த்தசாரதி கோவிலுக்கு செல்வது வழக்கம். கோவில் குளக்கரையில் நின்று அந்த குளத்தில் நிலவின் பிம்பம் கண்டு ரசிப்பது அவளது வாடிக்கை.

 

புத்தகத்தை எடுத்துக் கொண்டு கிழிறங்கி வந்தவள், முகத்தை அலம்பிக் கொண்டு வேறு உடைக்கு மாறினாள். அவளுக்கு பிடித்த வெளிர்நீல சேலையை எடுத்து அணிந்தாள்.

 

“வெண்பா இந்த நேரத்துல எங்கம்மா கிளம்பிட்டஎன்றார்அவளின்தாய்.

 

“அம்மா இன்னைக்கு பௌர்ணமி, அதான் கோவிலுக்கு கிளம்பிட்டேன்என்றுபதிலிறுத்தாள்.

 

அவள் கிளம்ப எத்தனித்த நேரத்தில் வெண்பாவின் தந்தை நடராஜன் உள்ளே நுழைந்தார்.

 

“குழலிஎன்றுஅழைத்தவாறேஉள்ளேவந்தார்.

 

“வந்துட்டீங்களா, வாங்க, வாங்க ரொம்ப நேரமாச்சே இன்னும் வரலையேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன் வந்துட்டீங்கஎன்றார்குழலி.

 

“வெண்பா அப்பாவுக்கு காபி போட்டு கொண்டு வாம்மா, அப்புறமா நீ கோவிலுக்கு போவ, போடா தங்கம்என்றார் குழலி.

 

‘நான் கோவிலுக்கு கிளம்பிட்டேன் சொல்றேன், அம்மா அப்பாவுக்கு காபி போட்டு தரச் சொல்றாங்க, எப்போமே இப்படி செய்ய மாட்டாங்களே. சரி காபி போட்டு குடுத்துட்டே கிளம்பலாம்என்றுமனதுள்நினைத்தவாறே“சரிம்மா, இதோபோட்டுகொண்டுவரேன்என்றாள்.

 

உள்ளே சென்று காபி போட்டுக்கொண்டு வந்தாள். காபியை கொண்டு சென்று தந்தைக்கு கொடுத்தாள்.

 

அதை வாங்கி குடித்தவர் அவளை அருகே அமருமாறு கூறினார்.

 

“என்னம்மா எங்க கிளம்பிட்ட, ஒரு பத்து நிமிஷம் இப்படி உட்காரும்மாஎன்றார்நடராஜன்.

 

“சரிப்பாஎன்றவாறேஅவர்அருகேஅமர்ந்தாள்.

 

“குழலி சொன்னாம்மா, நீ வால்பாறைக்கு போகணும்னு விரும்புறன்னு, உனக்கு ப்ராஜெக்ட்க்கு உதவி செஞ்ச தம்பி இங்க வந்துச்சாமே, நீ தங்கறதுக்கான இடம் எல்லாம் அந்த தம்பியே ஏற்பாடு செய்யறதா அம்மா சொன்னாடா. எனக்கும் திருப்திதான் நீ ஊருக்கு போயிட்டு வாஎன்றுஅனுமதிவழங்கினார்.

 

ஒரு கணம் விழியகல இருவரையும் பார்த்தவளுக்கு அப்பா சொன்னது நிஜம் தானா, அல்லது கற்பனையோ என்பது போல் தோன்றியது. தந்தை சம்மதிக்க மாட்டார் என்று நினைத்தவளுக்கு அவருடைய சம்மதம் கிடைத்ததில் அளவில்லா சந்தோசம்.

 

முதலில் அவன் வால்பாறைக்கு செல்ல வேண்டும் என்று கூறியபோது தாய், தந்தை இருவருமே சம்மதிக்கவில்லை. இதுவரை அவர்கள் அவளை பிரிந்ததே இல்லை. அவளை தனியாக அனுப்பியதும் இல்லை, தெரியாத ஊர், தங்குமிடம், பாதுகாப்பு என்று பலவிதமாக யோசித்துவிட்டு இருவருமே திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

 

தன்னை பற்றிய கவலையினால் தானே தனியாக அனுப்ப மறுக்கின்றனர், தனக்கு உரிய பாதுகாப்பு கிடைத்தால் அனுப்புவார்கள் என்ற எண்ணத்தில் தான் அவள் சித்தார்த்தின் உதவியை நாடினாள்.

 

“என்னம்மா அப்படி பார்க்கிறே, நான் சம்மதிக்க மாட்டேன்னு முடியவே பண்ணிட்டியா, நான் உன்கூட வரமுடியாதுங்கரதுனால தான் ரொம்பவும் யோசிச்சேன். மத்தபடி உன் விருப்பத்துக்கு நான் எப்படி தடை சொல்வேன். ஆனா ஒண்ணு நீ வேலை பார்க்கணும் முடிவு பண்ணா அது இந்த ஊர்லயே பாரு சரியாஎன்றார்.

 

“அப்பா எனக்கு வேலை இங்கதான், நான் அங்க நேர்ல போய் சில போட்டி தேர்வுகள் இருக்கு, அது எல்லாம் முடிஞ்சதும் நான் திரும்பி வந்துடுவேன். எப்படியும் நாலு நாள்ல திரும்பி வந்துடுவேன்ப்பாஎன்றாள்.

 

“சரி வெண்பா, நீ கோவிலுக்கு கிளம்பு, சிக்கிரமா போயிட்டு சிக்கிரமா வாடா தங்கம்என்றுகூறிஅனுப்பினார்குழலி. தாயைநன்றியுடன்பார்த்துவிட்டுகிளம்பினாள்வெண்பா.

 

தாயின் சுட்சுமம் இப்போது புரிந்தது அவளுக்கு, அவளை காபி கலக்க உள்ளே அனுப்பிவிட்டு அவள் வால்பாறை செல்வதை பற்றி தந்தையிடம் பேசி சம்மதம் வாங்கியிருக்கிறார்.

 

இருவரிடமும் விடைபெற்று அவள் கோவிலை சென்று அடையும் பொது மணி ஏழை நெருங்கியிருந்தது. உள்ளே சென்று பெருமாளை சேவித்துவிட்டு வெளியே வந்தாள்.

 

வெளியே வந்தவள் அருகில் இருந்த கடையில் பொறியை வாங்கிக்கொண்டு குளக்கரையை நாடிச் சென்றாள். இந்த பழக்கம் இன்று நேற்றல்ல பல வருடமாக அவள் இப்படி இங்கு வருவது வழக்கமாயிற்று.

 

ஒருமுறை அவள் அன்னை அவளை ஒரு பௌர்ணமி நாளில் கோவிலுக்கு அழைத்து வந்தார். அப்போது குளத்தில் உள்ள மீன்களுக்கு பொறி வாங்கி வந்து அவளிடம் கொடுத்து போடச் சொன்னார் அவர்.

 

எத்தனையோ முறை அவள் கோவிலுக்கு வந்திருக்கிறாள், ஆனால் ஒரு முழுநிலவு நாளில் அவள் இங்கு வந்து பொறி போட்டு சென்றது அதுவே முதல் முறை, குளத்தில் நிலவின் பிம்பம் பார்த்து ரசித்தவள், தவறாமல் அதைப் பார்க்க ஓவ்வொரு முறையும் வருவதை கடமையாகிக் கொண்டாள்.

 

பொறியை வாங்கிக்கொண்டு அவள் குளக்கரையை அடையவும், சித்தார்த் கிளம்பலாம் என்று எத்தனித்து மணி பார்த்து நிமிரவும் சரியாக இருந்தது.

 

அப்போது கோவிலில் மணியோசை கேட்டது சில விஷயங்கள் நடப்பது ஏன், எதற்கு, எப்படி என்று யோசித்தாலும் காரணம் கிடைக்காது.

 

சில சந்தர்ப்பங்கள் தேடாமலே கிடைக்கும், அது போல் இது ஒரு தருணம், இருவருக்குமே இது தெய்வ சங்கல்பமாகபட்டது.

 

பாவையவள் நடந்து வருவதை இமைக்காமல் பார்த்தான், அவன் மனதில் சிம்மாசனமிட்டவள் அவன் முன் வந்து நின்றதில் அவனுக்கு உற்சாகம் கரைபுரண்டது.

 

மீண்டும் மணியோசை கேட்கவுமே இருவரும் நனவிற்கு வந்தனர். முதலில் சுதாரித்த சித்தார்த் அவளை பார்த்து புன்னகை செய்தான்.“என்ன கோவிலுக்கு வந்து இருக்கிறீங்க, இன்னைக்கு ஏதாவது விசேஷமாஎன்றான்.

 

அவளிடம் பழைய துடுக்குத்தனம் வந்திருந்தது. அவள் பதிலுக்கு “நீங்க எந்த விசேஷமா வந்தீங்க அதை முதல்ல சொல்லுங்கஎன்றாள்.

 

“நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையில் இங்கு வருவதுண்டு. எனக்கு பொழுது போகவும் குளக்கரைக்கு வருவதுண்டு. அதுவும் இல்லாமல் பெருமாள் என் இஷ்ட தெய்வம் அவரையும் பார்த்துவிட்டு போவேன்என்றான்.

 

“அவர் உங்களுக்கு மட்டுமில்லை எங்களுக்கும் இஷ்ட தெய்வம் தான், நான் ஒண்ணும் உங்களை மாதிரி பொழுது போக்கறதுக்காக இங்க வர்ற ஆள்கிடையாது.

 

‘அப்புறம் நீங்க யாருடைய ஆள்என்றுகேட்கநினைத்தவன்வேறுகேட்டான். “அப்படியாஅப்பநீங்கவேறஎப்படிஆள்என்றான்.

 

“எனக்கு பௌர்ணமி நாளில் இந்த குளத்தை பார்க்க ரொம்பவும் பிடிக்கும். பல வருடங்களாக நான் இதை பார்க்க இங்கு வருவதுண்டுஎன்றாள்.

 

“யாரோ ஒருத்தர் இங்க பொழுது போகறதுக்காக வரலைன்னு சொல்லிட்டு வருடக்கணக்கில் இங்கு வந்து பொழுது போக்கற மாதிரி தெரியுதுஎன்றான்.

 

ரோஷத்துடன் “நான் இயற்கையை ரசிக்க வந்தேன்என்றாள்.

 

அவனும் ரசனையுடன் அவளை பார்த்தவாறே அதை வார்த்தைகளைக் கூறினான். “நானும் இயற்கையை ரசிக்கத் தான் வந்தேன்என்றுகூறிஅவளையேபார்த்தான்.

 

அவன் தன்னை பார்த்துக்கொண்டு இதை கூறியதை அவள் மனம் உணர்ந்தது, அவள் முகம் நாணத்தை பூசியது, அது அவளுக்கு மேலும் அழகை கொடுத்தது.

 

பேச்சிழந்து நின்றுவிட்டவள், தரையை பார்த்தாள், அவன் சிரிப்புடனே அவளை மேலும் சீண்டினான். “என்ன பேச்சையே காணோம், வாயடைச்சு போய் நின்னுட்ட மாதிரி தெரியுதுஎன்று புருவத்தை உயர்த்தி என்ன என்பது போல் பார்த்தான் அவன்.

 

“என்னை சீண்டுவதற்காக நீங்கள் பேசுகிறீர்கள், நான் வேறு என்ன பேசுவது நான் கிளம்புறேன்என்றுகிளம்பச்சென்றாள்அவள்.

 

அவன் சட்டென்று அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்தினான், பதறி விலகியவள் தள்ளி நின்றாள். அவளின் இந்த செய்கை கண்டு அவன் முகம் வாடியது.

 

“சாரி என்னை மன்னிச்சுக்கோ, நீ கிளம்ப வேணாம் சொல்றதுக்கு தான் கையை புடிச்சேன், தயவு செஞ்சு தப்பா எடுத்துக்காத வெண்பா, ப்ளீஸ் வெண்பாஎன்றான்அவன்உண்மையானவருத்தத்துடன். வெண்பாஎன்னகூறப்போகிறாள்….

 

அத்தியாயம் –8

 

சித்தார்த் அவள் கையை பிடித்ததும் பதறி விலகியவள், அவன் மன்னிப்பை யாசிக்கவும் மனம் வருந்தினாள்.

 

“பரவாயில்லைங்க, நான் எதுவும் தப்பா எடுத்துக்கல, ஆனா இது கோவில் இங்க என்னை நிறைய பேருக்கு தெரியும், பார்க்கறவங்க தப்பா நினைச்சுடக்கூடாது அதான் விலகி நின்னேன், நீங்க எதுவும் தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றாள் அவள்.

 

அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது, அதுவரை மனதில் இருந்த இதம் காணாமல் போக அவன் முகம் வாடியது.அவன் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டான்.

 

“அப்போ நான் கிளம்பறேன் வெண்பா, மணியாச்சு வரேன் பை என்று கூறி கிளம்பிட்டான்.

 

அவள் எதுவோ கூறயத்தனித்தாள் அதை உணராதவன் போல் அவன் சென்றுவிட்டான்.

 

குளக்கரை அருகில் சென்று நின்றாள். இதுவரை அந்த நிலவின் அழகை ரசித்தவளுக்கு, இன்று ஏனோ அதை ரசிக்கும் எண்ணம் கூட வரவில்லை. மனம் சஞ்சலமாக இருந்தது. அவன் எதுவும் கூறாமல் சட்டென்று கிளம்பியது அவள் மனதை அறுத்தது.

 

உடனே அவனுக்கு போன் செய்தாள், முதலில் எடுக்காதவன் இரண்டாவது அழைப்பில் கைபேசியை எடுத்தான்.

 

“ஹலோ!, சொல்லுங்க வெண்பா என்றான். “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும், ப்ளீஸ் கொஞ்சம் குளக்கரைக்கு வரமுடியுமா, எனக்கு தெரியும் நீங்க பாதி தூரம் கூட போய் இருக்க மாட்டீங்க, ப்ளீஸ் வாங்க என்றாள்.

 

அவளின் வருத்தம் அவனை ஏதோ செய்தது, வருகிறேன் என்ற ஒற்றை சொல்லை உதிர்த்துவிட்டு கைபேசியை அணைத்தவன் மெதுவாக திரும்பி வந்த வழியே நடந்தது சென்றான். குளக்கரையில் அவள் நின்றிருந்தாள்.

 

சற்று தள்ளி நின்று அவளிடம் “என்ன வெண்பா என்னை எதுக்கு வரச் சொன்னீங்க என்றான் அவன்.

அவன் திடிரென்று அவளை மரியாதையாக அழைத்தது அவள் மனதில் வலியை ஏற்படுத்தியது.

 

“அப்பா சம்மதிச்சுட்டாங்க, நீங்க வந்து போன கொஞ்ச நேரத்துல அப்பா வீட்டுக்கு வந்துட்டாங்க. அம்மா நீங்க எல்லா ஏற்பாடும் பண்றது பத்தி அப்பாகிட்ட சொல்லி இருக்காங்க.

 

“அப்பாவும் என்னை சந்தோசமாக போய்ட்டு வரசொல்லிட்டாங்க. அதை பற்றி சொல்லத்தான் நான் உங்களை கூப்பிட்டேன். எனக்கு இப்போது தான் ரொம்பவும் சந்தோசமாக இருக்குங்க. நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே என்று வினவினாள்.

 

“என்ன விஷயம் வெண்பா, எதுக்கு இந்த பீடிகை எல்லாம் என்றான்.

 

“இல்லை நீங்க உங்க அம்மாவை பார்க்க ஊருக்கு போகமாட்டீங்களா, நாங்க போகும் போதே நீங்களும் வந்தா நல்லா இருக்கும்ன்னு நினைச்சேன் என்றாள்.

 

மனதில் இருந்ததை சட்டென்று அவளை அறியாமல் கொட்டிவிட்டாள்.

 

கண்களில் ஒரு ஆச்சரியம் மின்ன “நான் வரதுனால உனக்கு ரொம்ப சந்தோசமா‘[]என்றான் அவளை ரசனையுடன் பார்த்தவாறே, சற்றுமுன் அவனுக்கு இருந்த மனத்தாங்கல் எங்கோ போய்விட்டது அவளில் இந்த எதிர்பார்ப்பில்.

 

வெட்கம் பிடுங்கி தின்றது அவளை, ஏன் இவ்வாறு அவனை கேட்டு வைத்தோம் என்று நொந்து போனாள் அவள்.

 

சித்தார்த் அவளிடம் “என் அம்மாவை பார்க்க நான் இந்த மாத கடைசியில் தான் போகப் போகிறேன். ஏற்கனவே அதற்கான டிக்கெட்டை முன் பதிவு செய்துவிட்டேன், அதுனால மன்னிச்சுடு வெண்பா, என்னால உங்ககூட வரமுடியாது.

 

“நீங்க ஒண்ணும் கவலைப்பட வேணாம் அங்கு என் நண்பன் ஸ்ரீ வந்து உங்களுக்கு வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்வான் என்றான் அவளை பார்த்துக்கொண்டே.

 

‘ஏன் இந்த வாரம் போனா என்ன, டிக்கெட் முன் பதிவு செஞ்சா அதை ரத்து பண்ண முடியாதாமா என்று மனதிற்குள் அவனை வைதாள். அவனின் பதிலில் மனம் சோர்ந்து போனது.

 

“சாரிங்க, நான் தான் ஏதோ தெரியாமல் கேட்டுட்டேன், சரி நான் கிளம்பறேங்க அம்மா தேடுவாங்க நேரமாச்சு என்றாள் அவள்.

 

“இம் சரிங்க நீங்க கிளம்புங்க வெண்பா, நேரமாச்சு உங்க அம்மா உங்களை தேடுவாங்க என்றான் அவள் கூறியதை திருப்பி படித்தவனாக.ஒருவித கோபமும், இயலாமையுமாக அவள் கிளம்பிச் சென்றுவிட்டாள்.

 

‘கோபத்தை பாரேன், நான் வர வேண்டும் என்று உனக்கு அவ்வளவு ஆசையா, இவ்வளவு செஞ்சவன் நான் வராம எப்படி செல்லம் போவேன் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

 

அவளுடைய கோபத்தை ரசித்தவனுக்கு அவள் அவனுக்காக ஏங்குவதும் புரிந்தது. ஒரு முடிவுடன் நேரே கிளம்பி வீட்டிற்கு சென்றான்.

 

வீட்டிற்கு வந்தவளின் முகம் சோர்ந்திருப்பதை பார்த்த அவளின் தாய் குழலி என்னவென்று வினவினார்.

 

“கோவிலில் ரொம்ப கூட்டமா இருந்துச்சா வெண்பா, ஏன் இப்படி சோர்ந்து தெரியற என்றார்.

 

“அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா என்று கூறிவிட்டு உள்ளே சென்று உடை மாற்றலானாள்.

 

அவள் தாய் விவரமானவர், அவள் முகத்தை பார்த்தே எல்லாம் கண்டு பிடிக்கிறார் என்று உணர்ந்தவள் இயல்பாக இருப்பது போல் நடித்தாள்.

 

சாப்பிட்டு விட்டு படுத்தவளுக்கு எதற்கென்றே தெரியாமல் கட்டுப்படுத்த இயலாமல் அழுகை பீறிட்டு எழுந்தது. மௌனமாக கண்ணீர் உகுத்தாள்.

 

வீட்டுக்கு வந்த சித்தார்த் ஒரு முடிவெடுத்தவனாக ஸ்ரீக்கு போன் செய்தான்.

 

“சொல்லுடா, இப்ப என்ன விஷயம் என்றான்.

 

“சும்மாதான்டா உனக்கு போன் பண்ணேன் என்றான் சித்தார்த்.

 

“நீ… எனக்கு சும்மா போன் பண்ண, நான் அதை நம்பணுமா, நீ எந்த காரியமும் இல்லாம எனக்கு போன் செய்யமாட்டே. சொல்லுடா நான் இப்போ என்ன செய்யணும் என்றான் அவன் ஆருயிர் நண்பன் ஸ்ரீ.

 

“நீ ஏன்டா இப்படி இருக்க, நான் என்ன செஞ்சாலும் நீ எப்படிடா கண்டுபிடிக்கற, சரி விஷயத்துக்கு வரேன். நான் அம்மாவை பார்க்க இந்த வாரம் ஊருக்கு வரலாம்ன்னு இருக்கிறேன். அவங்ககிட்ட வெண்பா பத்தி பேசி சம்மதம் வாங்கிடலாம்னு தான், தான் அங்கு வருகிறேன். அக்கா, மாமாகிட்டயும் சம்மதம் வாங்கணும், நீ என்ன சொல்லற என்றான் சித்து.

 

“சித்து என்ன திடிர்னு அம்மா பார்க்கணும் உனக்கு தோணி இருக்கு, நீ அம்மா மட்டும் தான் பார்க்க வர போறியா இல்ல, தாய்க்கு பின்னால் வரபோகும் உன் தாரத்தை பார்க்க வர்றியா, சொல்லுடா என்றான் ஸ்ரீ.

 

சற்றே அசடு வழிந்தவனாக “உன்னோட என்னால பேசி ஜெயிக்க முடியாது நான் என் அம்மாவையும் பார்க்க வரேன், அப்படியே வெண்பாகிட்டயும் என் மனசு திறந்து சொல்லலாம்னு முடிவு பண்ணிட்டேன், அதுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமா தோணுது. அதான் நான் அங்க கிளம்பி வரலாம்னு முடிவெடுத்தேன் என்றான்.

 

ஸ்ரீ உடனே “திடிரென்று உனக்கு இது எப்படி தோன்றியது, முதல்ல பேசினபோது கூட நீ எதுவும் கூறவில்லையே என்றான்.

 

“ஆமாம் ஸ்ரீ, அது நான் இப்போது எடுத்த முடிவு தான், அவகிட்ட என் காதலை சொல்லணும்னு நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன், ஆனா எப்படின்னு யோசனை செய்து கொண்டு இருந்தேன். அதை இப்போது தான் முடிவு செய்தேன்.

 

“நானும் வால்பாறை வருகிறேன், அங்கு வைத்து தான் அவளிடம் என் மனதை திறக்க முடிவு செய்திருக்கிறேன். இப்போது தான் நான் அவளை கோவிலில் பார்த்து விட்டு தான் வருகிறேன் என்று அப்போது நடந்த நிகழ்வுகளை அவனிடம் பகிர்ந்தான்.

 

“ரொம்பவும் காவியக் காதலா தெரியுது, அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள், கலக்குடா நானும் தான் காதலிச்சேன் ஆனா உடனே கல்யாணம் பண்ணிகிட்டேன், கொஞ்சம் லேட்டா கல்யாணம் பண்ணிருக்கலாம் போல.

 

“உன்னை இப்படி பார்க்கும் போது எனக்கு சந்தோசம் தான்டா, உன் வாழ்கையில் இப்போது தான் வசந்தம் வீச ஆரம்பித்து இருக்கிறது. கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருந்தவன், ஒரு பொண்ணை காதலிக்கிறேன், கல்யாணம் பண்ணிக்க விரும்புகிறேன் என்றதே எனக்கு மிக நிறைவாக இருக்கிறது. அம்மாவும் ரொம்பவும் சந்தோசப்படுவார்கள் என்றான் ஸ்ரீ மனமார.

 

இனியா, வெண்பா, சுஜி மூவரும் வெள்ளிக்கிழமை அன்று புறப்படுவதாக ஏற்பாடாகியிருந்தது, ஏனெனில் திங்களன்று தான் வெண்பாவுக்கு சில நேர்முக தேர்வுகள் இருந்ததன.

 

வெள்ளிக்கிழமை அன்று தான் அவர்களுக்கு டிக்கெட் கிடைத்தது. அவர்கள் இரண்டு நாள் ஊரை சுற்றி பார்க்கலாம் என்று நினைத்தனர்.கிளம்புவதற்கு முதல் நாள் வெண்பா அவனுக்கு போன் செய்தாள். கோவிலில் கடைசியாக பேசியது தான், அதன் பின் அவள் அன்று தான் போன் செய்கிறாள்.

 

“ஹலோ, நான் சித்தார்த் பேசறேன் என்றான் ஆழ்ந்த குரலில்.

 

“ஹலோ, நான் தாங்க வெண்பா பேசறேன், நாங்க நாளைக்கு இரவு ப்ளூ மௌன்டைன் ரயிலில் கோவை சென்றுபின் அங்கிருந்து வால்பாறை செல்கிறோம். நீங்க தான் நாங்க எப்படி கிளம்புறோம்னு சொல்லச் சொன்னீங்களே அதான் போன் செய்தேன் என்றாள் அவள்.

 

“எப்படி ஊருக்கு கிளம்புறதுக்கு முத நாள் தான் போன் பண்ணி சொல்லுவீங்களா, கோவையில இருந்து வால்பாறை எப்படி போகப் போறீங்க, அதை முடிவு பண்ணலையா என்றான் குரலில் கடுமையுடன்.

 

அவன் கடுமை அவளை பேச்சிழக்க செய்தது, மெதுவாக அவனிடம் “அது வந்து நீங்க தான் கோவையில இருந்து வால்பாறைக்கு போக ஏற்பாடு பண்றேன்னு சொல்லி இருந்தீங்களே. அதான் உங்க கிட்ட சொல்லாம்னு என்று இழுத்தாள் அவள்.

 

“அதை நாளைக்கு ரயில் ஏறின பிறகு சொல்லி இருக்கலாமே, ஏன் கோவைக்கு போய்ட்டு கூட சொல்லி இருக்கலாம் இல்லையா என்றான் கடுமை மாறாமல்.

 

“இல்லங்க அன்னைக்கு கோவில்ல நீங்க கோபமா போன மாதிரி தெரிஞ்சது, அப்புறம் நான் போன் பண்ணப்ப திரும்பி வந்தீங்க, அதுக்கு அப்புறமும் நீங்க பட்டும் படாமலும் தான் பேசுனீங்க. அதுக்கு அப்புறம் நீங்க போன் போடவே இல்லை, எனக்கு உங்களுக்கு போன் செய்ய பயமா இருந்துச்சு, அதான் மன்னிச்சுடுங்க என்றாள்.

 

லேசாக மனமிறங்கியவன், “சரி நீங்க கோவையில இறங்கறதுக்கு முன்னாடி போன் பண்ணுங்க, அங்க என் நண்பன் ஸ்ரீ வந்து உங்களை அழைத்து போவான் சரியா என்றான்.

 

பொழுது விடிந்தது, அவர்கள் கிளம்புவதற்கு சற்று முன் அவனுக்கு போன் செய்தாள்.

 

அவன் ரயில் நிலையத்திற்கு வருவான் என்று அவள் எதிர்ப்பார்த்தாள். ஆனால் அவன் வரவில்லை, ரயில் நிலையத்திற்கு வெண்பாவின் தாய், தந்தை, இனியாவின் தாயும், சகோதரனும் வந்திருந்தனர்.

 

சுஜியின் மாமா ரயில் நிலையத்திற்கு அவளை வழியனுப்ப வந்திருந்தார். மூவரிடமும் பத்திரமாக இருக்குமாறு பலவாறு அறிவுறித்திவிட்டு அவர்களை வழியனுப்பி வைத்தனர் அவர்கள் சொந்தங்கள்.

 

அன்று காலையில் சித்தார்த் வெண்பாவின் தாயிடம் போன் செய்து பேசி அவர்கள் தங்கபோகுமிடத்தின் விலாசம், போன் எண் எல்லாம் கொடுத்தான்.

 

எப்போது வேண்டுமானாலும் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசுமாறு கூறிவிட்டு போனை வைத்துவிட்டான்.

 

வெண்பா வேறு கிளம்பும்முன் போன் செய்தது, அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அவளை எப்போது பார்ப்போம் என்று தவித்து போனான், ரயில் நிலையத்திற்கு செல்ல அவனுக்கும் ஆசை தான்.

 

ஆனால் அங்கு அவர்களை வழி அனுப்பவென்று அவர்கள் சொந்தங்கள் இருக்கும், தான் ஒரு பார்வையாளனாக அங்கு சென்று நிற்க வேண்டும் என்று பலவாறு யோசித்து அவன் செல்லவில்லை.

 

ஊருக்கு போன் செய்து தாயிடம் அவன் வரும் விபரம் கூறினான். சனிக்கிழமை காலை கிளம்பி மதியம் வருவதாகக் கூறியிருந்தவனுக்கு இருப்பு கொள்ளவில்லை, எப்போது அவளை பார்ப்போம் என்று தவித்திருந்தவன், உடனே முடிவெடுத்து அன்று இரவே காரில் கிளம்பிவிட்டான்.

 

கிளம்பும் முன் அக்காவின் மக்கள் அகில், விமலுக்கு விளையாட்டுப் பொருட்களும், இனிப்புகளும் வாங்கிக் கொண்டு கிளம்பினான்.

 

அவன் வாங்கியவைகளில் மிக முக்கியமான ஒன்றை எடுத்து தனியே சீட்டுக்கடியில் வைத்தான். அதிகாலை நேரத்தில் அவன் பொள்ளாச்சியை அடைந்தான்.

 

வெண்பாவிடம் இருந்து அவனுக்கு போன் வந்தது, அவர்கள் கோவையை அடைந்து விட்டதாக அவள் கூறினாள்.

 

அவர்களிடம் ஸ்ரீயின் எண்ணை அவன் குறித்துக் கொடுத்திருந்தான். அவள் ஸ்ரீக்கும் போன் செய்து வந்த விபரத்தை கூறிவிட்டாள்.

 

சித்தார்த் இவர்கள் வரும் விபரம் பற்றி ஏற்கனவே ஸ்ரீக்கு தெரிவித்திருந்தான். அவன் ஸ்ரீக்கு போன் செய்து அவன் எங்கு இருக்கிறான் என்று விபரம் கேட்டான்.

 

“ஸ்ரீ எங்க இருக்க, அவங்க ரயில், நிலையத்திற்கு உள்ள வந்துட்டு இருக்கு, சீக்கிரம் போய் அவங்களை பாரு, அவங்களுக்கு இது தெரியாத ஊரு, உன்னை தேடப்போறாங்க என்றான் சித்தார்த்.

 

“சித்து நான் ஸ்டேஷன்ல தான் இருக்கேன், நீ என்னமோ அந்த ரயில்ல வரப்போறவன்  மாதிரி ரயில் உள்ள நுழையுதுன்னு சொல்லற, நான் அவங்க கோச் எங்க நிக்குமோ அங்க தான் நிற்கிறேன். எல்லாம் நான் பார்த்துகறேன். “அவங்களுக்கு தான் என்னை தெரியாது, ஆனா எனக்கு தான் வெண்பாவை நல்லா தெரியுமே நான் அவங்கள பத்திரமா கூட்டிட்டு போறேன் நீ ஒண்ணும் கவலைபடாதே என்றான்.

 

“சரி நீ எத்தனை மணிக்கு கிளம்பற, இங்க எப்ப வரப்போற என்ற விபரம் கேட்டான்.

 

“நான் இப்போது பொள்ளாச்சிக்கு வந்துவிட்டேன், வால்பாறைக்கு எப்போது வரப்போகிறேன் என்ற விஷயம் அப்புறம் கூறுகிறேன், ஒரு சின்ன விண்ணப்பம் எனக்காக நீ ஒரு ரெண்டு மூணு நாள் விடுமுறை எடுத்துக்கோடா என்றான் சித்தார்த்.

 

“அடப்பாவி ரொம்ப முன்னேறிட்ட, நான் நினைச்சதை விட நீ ரொம்பவும் வேகமா இருக்கடா. சரி நீ வர்றதுக்காக நான் லீவ் போடணுமா. டேய் நான் தான் அந்த கிளையின் மேனேஜர் நானே எப்படிடா இப்படிவிடுமுறை எடுக்கறது.

 

“சரி நண்பன் இவ்வளவு தூரம் கேட்குறதுனால நான் லீவ் போடுறேன் சரியா என்று அவன் பேசிக்கொண்டு இருக்கும் போதே ரயில் உள்ளே நுழைந்தது. “சரி, சரி ரயில் வருது நான் அப்புறம் பேசறேன் என்று கூறி போனை வைத்துவிட்டான்.

 

சித்தார்த் வீட்டை நெருங்கி, அழைப்பு மணியை அடித்தான். இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசித்தவாறே நளினி ராகவனை உசுப்பி எழுப்பினாள். என்ன என்றவாறே எழுந்தவன் “இந்த நேரத்தில் யாரோ அழைப்பு மணியை அழுத்தறாங்க போங்க, போய் கதவை திறங்க என்றாள் நளினி.

 

ராகவன் தூக்க கலக்கத்துடனே சென்று கதவை திறந்தான். எதிரில் சித்தார்த்தை கண்டதும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. “வாங்க மச்சான், என்ன காலையிலே வந்து அதிர்ச்சி குடுக்கறீங்க, மதியத்துக்கு மேலே தான் வர்றதா சொன்னீங்க. உள்ளே வாங்க மச்சான் என்று வரவேற்றான்.

 

“இல்ல மாமா, நான் நேற்று இரவே கிளம்பிவிட்டேன், உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி குடுக்கலாம்ன்னு நினைச்சேன். அதான் சொல்லல, ஆமா அகில், விமல் எங்க தூங்கறாங்களா. அக்கா எங்க, அம்மா எப்படி இருக்காங்க என்று விசாரித்தான்.

 

“நான் இங்க தான் இருக்கேன், இப்ப என்ன அவசரம்னு அவர் கிளம்பி வந்தாராம், ரொம்ப தான் அக்கறைன்னு காமிச்சுக்க வேணாம் என்று நொடித்துவிட்டு போனாள் நளினி.

 

தாயிடம் சென்று நலம் விசாரித்தான். இவன் வரும் அரவம் கேட்டு அவர் எழுந்து விட்டிருந்தார். “எப்படிம்மா இருக்கீங்க, உடம்புக்கு ஒண்ணும் கஷ்டமா இல்லையேம்மா, நல்லா சாப்பிடுகிறீர்களா என்று விசாரித்தான்.

 

“நான் நல்லா இருக்கேன்பா, நீ தான் இப்படி துரும்பா இளைச்சு போய்ட்ட, உனக்கு ஒரு வாய் ருசியா சமைச்சு போட்டு உன் கூட இருந்து என்னால பார்த்துக்க முடியலன்னு எனக்கு வருத்தமா இருக்குப்பா என்றார் அவன் தாய் கோதை.

 

“ரொம்பவும் தான் உருகறீங்க, உண்மையிலேயே தாயா, புள்ளையா இருந்தா இன்னும் என்ன என்ன பண்ணுவீங்களோ தெரியலையே. சார் என்னமோ சாப்பிட்டியா சாப்பிட்டியானு கேக்குறார், இவ்வளவு அக்கறை இருக்கறவன் ஆடிகொரு தடவை அமாவாசைகொரு தடவைன்னு வந்து பார்த்துட்டு போறார்.

 

“என்ன உலகமகா நடிப்பு இது, அவன் நடிக்கறது புரியாம, அம்மா என்னடானா துரும்பா இளைசுட்டன்னு கவலை படுறாங்க. உன்னை விட எனக்கு தான் உரிமை அதிகம் இவங்க மேல, ஏன்னா அவங்க என்ன பெத்த அம்மா, நான் அவங்களுக்கு ஒரே பெண் நீ என்னமோ உருகற மாதிரி நடிக்கற என்று வார்த்தைகளில் அமிலத்தை தோய்த்து உமிழ்ந்து விட்டு போனாள் நளினி.

 

அந்தப்பக்கமாக வந்த ராகவன் அவளை ஒரு அதட்டு போடவும் தான் அவள் அங்கிருந்தே நகர்ந்தாள்

 

அவள் வார்த்தையில் இருந்த விஷம் சித்தார்த்தின் இதயத்தை துளைத்து துடிக்கச் செய்தது. அவன் மனம் வலியில் ஊமையாக அழுதது. பிள்ளையின் முகம் வாட்டம் கண்டு கோதை மனமுடைந்தார்.

 

“கண்ணா, உனக்கு அக்காவை பற்றி தெரியாதா அவள் இன்று நேற்றா இப்படி செய்கிறாள், நீ வருத்தப்படாதே கண்ணா, நீ நான் பெறாமல் பெற்ற பிள்ளை தங்கம். நீ எப்போதும் எங்கள் மகன் தான், அவள் பேச்சை கேட்டு நீ வருந்தாதே என்று கூறிவிட்டு கோதை கண்ணீர் வடித்தார்.

 

தாயின் கண்ணீரை கண்டதும் தன் கவலை மறந்தவனாக “அம்மா நீங்க ஏன் அழறீங்க, விடுங்க நான் எதுவும் பெரிசா நினைக்கல. என்னை கண்டால் தான் அக்காவுக்கு பிடிப்பதில்லையே, அக்கா சங்கடப்படக்கூடாதுன்னு தான் நான் இங்க வருஷத்துக்கு ஒரு தடவை வரேன்.

 

“அக்காவுக்கு இன்னும் என் மேல் என்ன வருத்தம் அது தான் அம்மா எனக்கு கவலையாக இருந்தது, மற்றபடி அவள் சொன்னதிற்காக நான் வருந்தவில்லை. அவள் சொன்னாள் ஆகிவிடுமா, நீங்கள் எப்போதுமே என் தாய் தான், நான் எப்போதுமே உங்கள் பிள்ளை தான் அம்மா என்றான் உடைந்த குரலில்.

 

தாயை சமாதானம் செய்து தூங்க வைத்துவிட்டு மேலே சென்று அவன் உடமைகளை வைத்தவன் படுக்கையில் விழுந்தான். மனம் பழைய விஷயங்களை அசை போட்டது….

 

 

Advertisement