Advertisement

அத்தியாயம் – 3

 

 

அவனுக்கு அங்கு நல்ல மரியாதை இருந்தது, அவனோடு சென்றதால் மற்றவர்களும் அவர்களை மரியாதையோடு நடத்தினார்கள். அவர்களுக்கு வேண்டிய சில குறிப்புக்கள் கொடுத்து அவர்களை ஓரிடத்தில் அமரவைத்து விட்டு அவன் வேலையை கவனிக்கச் சென்றான்.

 

தேநீர் வேளையின் போது அவனே நேரிடையாக வந்து அவர்களை அழைத்து சென்றான், அப்போது இனியா அவனிடம் “உங்களை என்னமோன்னு நினைச்சோம் சார், உங்களை பார்த்தால் எங்களுக்கு ரொம்ப மரியாதை வருகிறது சார்.

 

“எல்லாரும் உங்ககிட்ட நல்லா பழகுறாங்க பணிவாகவும் அன்பாகவும் நடந்துகிறாங்க, நாங்க தான் தப்பு பண்ணிட்டோம் சார்என்றுவருந்தினாள். மேலும்“சார்எனக்குஒருசின்னசந்தேகம்கேட்கலாமா, தப்பாஎடுத்துக்கமாட்டீங்களேஎன்றாள்

 

அவன் இல்லை என்பதாய் தலை அசைத்து அவளை கூறுமாறு ஊக்கினான். “சார் காலையில நீங்க ஏன் சார் பஸ்ல வந்தீங்க, உங்க அந்தஸ்து பதவிய பார்க்கும்போது கண்டிப்பா உங்ககிட்ட கார் இருக்கும் தானே, அப்புறம் ஏன்என்றாள்.

 

அவன் சிரித்துக்கொண்டே “இனியா நீங்க நல்ல வசதியானவங்க தானே உங்க வீட்டில் கார் இருக்கும் போது ஏன் பேருந்தில் பயணம் செய்தீர்கள்என்றுவினவினான்.

 

“அது இவர்கள் இருவரும் கார் பயணம் வேண்டாம் என்று சொன்னதால் வந்த வினை சார் அது, மழையில் பேருந்து பயணம் நன்றாக இருக்கும் அது இது என்று கூறி என்னை சம்மதிக்க வைத்துவிட்டனர்.

 

“காலையில் புயல் எச்சரிக்கை கேட்டதும் நான் தான் காரில் சென்றால் வழியில் எங்கேயாவது மாட்டிகொள்வோமோ என்று பஸ்சில் பயணம் செய்தேன், அதுவும் ஒரு நல்ல அனுபவமாகத்தான் எனக்கு இருந்தது ‘மறக்க முடியாத அனுபவம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

 

“அது மட்டுமல்ல எனக்கு மழை பிடிக்கும் கார் பயணத்தில் மழையை கடந்து செல்ல மட்டுமே முடியும் ஆனால் பேருந்து பயணத்தில் மழையை ரசிக்க முடியும், மழையில் நனைவதும் எனக்கு பிடிக்கும், சிறு வயதில் நானும் என் தங்கையும் மழையில் நனைவோம்

 

“முதலில் வரமறுத்தாலும் என் தங்கை பின்னோடு என்னையும் இழுத்துக்கொண்டு வந்து மழையில் குதியாட்டம் போடுவாள் என்றான் பெருமூச்சுடன். இதை கேட்ட வெண்பா, சுஜி இருவர் முகமும் ஒருசேர மலர்வதை அவன் கண்டுகொண்டான்.

 

மழையில் நனைவது பலருக்கு பிடிக்கும் வெண்பாவும் அதில் ஒருத்தி ஆனால் அவள் அன்னை மழையில் நனைந்தால் அவளை கண்டிப்பார், அதற்கு பயந்து வெண்பா ரசிப்பதுடன் நிறுத்திக்கொள்வாள்.

 

தனக்கு பிடித்த விஷயம் தன்னை சார்ந்தவருக்கும் பிடிக்கும் என்றால் நம் மனதுக்குள் எவ்வளவு இதமாக இருக்கும் அது போல் ஒரு மனநிலையில் இருந்தாள் வெண்பா, ஆனால் என்ன அவளே அறியாமல் அந்த எண்ணம் அதிகப்படியாக இருந்தது. அவனுக்கு மழை பிடிக்கும் என்பதை கேட்டதும் அவளுள் ஒரு பூஞ்சாரல் வீசியது.

 

‘பரவாயில்லையே நம்ம விசுவாமித்திரர்க்கும் ரசனை இருக்கே என்று எண்ணினாள். ஏதேதோ எண்ணங்களில் இருந்தவள் சுற்றுபுறம் கவனிக்கவில்லை.

 

பேருந்தில் வெண்பா முணுமுணுத்ததை பார்த்திருந்தவன் இனியாவிடம் யதார்த்தமாக கேட்பது போல் வெண்பா அவளருகில் இல்லாத சமயமாக பார்த்து “இனியா உங்க தோழி வெண்பாக்கு என் மேல எதுவும் கோபமா, பேருந்தில் அவர்கள் என்னை நன்றாக திட்டியது போல் இருந்தது என்றான்.

 

“இல்லை நீங்க எந்த பாவமும் காட்டாம உம்முன்னு உட்கார்ந்து இருந்தீங்க, அதை பார்த்து அவ உங்கள விசுவாமித்திரர் தவம் பண்ணிட்டு இருக்கார் போலன்னு சொன்னா சார், நீங்க தப்ப எடுத்துக்காதீங்க சார் எதோ விளையாட்டா பேசிட்டோம்என்றாள். “நான் எதுவும் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை இனியா என்று கூறி சென்று விட்டான்.

 

சிறிது நேரம் கழித்து வந்தவன் வெண்பாவிடம் சென்று “என்னங்க மேனகா எங்கே உங்கள் தோழியர் இருவரும் என்று கேட்டதும் திடுக்கிட்டு திரும்பி அவனை பார்த்தாள்.

 

அவன் என்ன கேட்டான் என்று சற்று நேரம் புரியாமல் திரு திருவென விழித்தாள். “நீங்க என்ன கேட்டீங்க என்று அவனிடம் கேட்டாள்,

 

“உங்க மத்த ரெண்டு தோழிகளும் எங்கே வெண்பான்னு கேட்டேன் நீங்க என்னமோ நான் ஏதோ கேட்கக்கூடாத கேள்வி கேட்ட மாதிரி முழிக்கறீங்கஎன்றான்.

 

‘அப்போ நாம தான் இவன தப்பா புரிஞ்சுகிட்டோம் போல அவன் சரியா தான் கேட்டு இருக்கான், எங்கே இந்த இனியா லூஸ் எதாச்சும் உளறிட்டாளோன்னு பயந்துட்டேன் என்று சமாதானப்படுத்திக் கொண்டாள்

 

‘நான் விசுவாமித்திரனா உனக்கு, நீ தானே என்னை சீண்டுன அப்போ நீ தானே மேனகா, என்கிட்டயே வா பாத்துகறேன் என்று மனதுக்குள் நினைத்து சிரித்துக்கொண்டான்.

 

ஏனோ அவள் மேனகை என்று நினைக்கும் போது அவன் மனதுக்கு பிடித்தமானதாக இருந்தது, அவனுக்கு இது போன்ற உணர்வு வித்தியாசமாக இருந்தது.

 

 

“என்னங்க நான் கேட்டதுக்கு பதில் சொல்லல என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே சுஜியும், இனியாவும் வந்து சேர்ந்தனர்.

 

“எங்கடி போய் தொலைஞ்சீங்க, என்ன மட்டும் தனியா விட்டுட்டு என்று வெண்பா அவர்களை கோபமாக கேட்டாள்.

 

“ஆமா உன்ன கூப்பிட்டு பார்த்தோம் மகாராணி பயங்கரமான யோசனையில இருந்தீங்க, என்னமோ ராக்கெட் விட போறவ மாதிரி வானத்தையே வெறிக்க வெறிக்க பார்த்துட்டு இருந்த அதான் நானும் சுஜியும் மட்டும் போய் அங்கே அங்கே என்று இழுத்தாள் இனியா.

 

“என்னடி அங்கே என்ன என்றாள் அவள். “சொன்னா திட்டமாட்டியே, அங்க கான்டீன்ல சூடா பஜ்ஜி போட்டுட்டு இருந்தாங்க அதான் போய் சாப்பிட்டு வந்தோம் என்று கூறினாள்

 

“இது ரொம்ப முக்கியம் என்று தலையில் அடித்துக்கொண்டாள் வெண்பா.

 

அவர்களின் இந்த விளையாட்டை பார்க்காமல் பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது அடக்கிக் கொண்டான். வேலை நேரம் முடிந்து எல்லோரும் கிளம்ப அவன் அவர்களை கிளம்பச் சொன்னான்.

 

“கொஞ்சம் காத்திருங்கள் நானும் உங்களுடனே வருகிறேன் என்று கூறி சிறிது நேரத்தில் வந்தவன் அவர்களுடனே கிளம்பினான், அனைவரும் கேளம்பாக்கம் பேருந்து நிறுத்தம் வந்தடைந்தனர்.

 

நால்வரும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர், அவர்கள் காலையில் நடந்ததுக்கும் இப்போது இருக்கும் சூழ்நிலையும் யோசித்து தங்களுக்குள் நகைத்துக் கொண்டனர்.

 

காலையில் அவனை கிண்டல் செய்துவிட்டு இப்போது அவன் தயவிலேயே இருக்க வேண்டியதை நினைத்தனர், தற்போது அவனுடனே பயணம் செய்வதை நினைத்து சிரித்தனர்.

 

அப்போது அவனும் அதை நினைத்து சிரித்தான் போலும், வெண்பா தற்செயலாக அதை பார்த்துவிட்டாள், அவள் பார்த்ததை அவனும் பார்த்துவிட்டான், வெண்பா திகைத்தாள் அவன் கண்கள் அவளை காந்தமாக இழுத்தது, ஏன் இப்படி அவளால் அவன் கண்களை நேருக்கு நேர் பார்க்கும் சக்தி இல்லாது போனது சட்டென்று தலை குனிந்தாள்.

 

இது என்ன மாதிரியான உணர்வு இது அவனை பார்ப்பதை என் மனம் ஏன் விரும்புகிறது, இவனை காலையில் தானே சந்தித்தோம், அதற்குள் எப்படி இப்படி எல்லாம் தோன்றுகிறது என்று குழம்பினாள்.

 

நால்வரும் பாரிஸ் வந்தடைந்தனர், பேருந்து நிலையத்தில் இனியாவின் கார் அவளை ஏற்றிச் செல்ல காத்திருந்தது. சுஜியின் மாமா வீடு (சுஜி சென்னையில் அவள் மாமாவின் வீட்டில் தங்கி படித்துக்கொண்டிருகிறாள்) இனியாவின் வீட்டுக்கு போகும் வழியில் இருந்ததால் அவளே சுஜியை இறக்கிவிட்டு செல்வதாக கூறினாள்.

 

முதலில் வெண்பாவை விட்டுவிட்டு பின் அவர்கள் செல்வதாக இனியா கூறினாள், வெண்பா அதற்கு மறுத்து விட்டாள். “ஏற்கனவே ரொம்பவும் நேரமாகி விட்டது, நீங்கள் வீட்டுக்கு செல்லுங்கள், பக்கத்தில் இருக்கும் திருவல்லிக்கேணி தானே நான் போய் கொள்வேன் நீங்கள் சுற்றிக்கொண்டு போக வேண்டும்  என்று கூறினாள்.

 

சித்தார்த்தும் அவள் கூறியதை ஆமோதிக்க சரி என்று கூறி அவர்களும் கிளம்பினர், அவர்கள் சென்றதும் திரும்பி வெண்பாவை பார்க்க அவள் லேசான தலையசைப்புடன் விடைபெற்று வேகமாக சென்றுவிட்டாள். அவன் ஏதோ கூறவந்தது கூட கவனிக்காமல் சென்றுவிட்டாள்.

 

மழை சுத்தமாக நின்றிருந்தது, ஆங்காங்கே நட்சத்திரங்களும் ஒன்றிரண்டாக கண் சிமிட்டியது, வெண்பா ஆட்டோ பிடித்து செல்ல வேண்டி பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்து நின்றாள். ஒரு ஆட்டோவும் அங்கு இல்லை தொலைவில் ஒரு வண்டி வருவது தெரிந்தது, அதுவும் நிற்காமல் சென்று விட்டது.

 

அவள் அங்கேயே காத்திருந்தாள், அப்போது தான் அதை கவனித்தாள், ஒரு ஓரமாக ஐவர் அங்கேயே உட்கார்ந்துகொண்டு மது அருந்திக்கொண்டு இருந்தனர், மற்றொரு பக்கம் ஒருவன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

 

அவளுக்குள் எதுவோ செய்தது. மது அருந்தியவர்களில் ஒருவன் அவள் சில நிமிடங்களாக அங்கு நிற்பதை பார்த்துவிட்டு அவளை நோக்கி நடந்து வந்தான்.

 

வெண்பாவுக்கு அடிவயிற்றில் ஒரு பந்து உருள ஆரம்பித்தது, அந்த பந்து உருண்டு தொண்டை வரை வந்துவிட்டது. அவளுக்கு நாக்கு உலர்ந்து போனது. அங்கு இருந்து நகர்ந்தால் போதும் என்று நினைத்து கிட்டத்தட்ட ஓடினாள் அவள்.

 

அப்போது அவளுக்கு அவன் ஞாபகம் வந்தது, உள்ளே சென்றால் அவன் இருப்பான் அவனிடம் உதவி கேட்டு சென்று விடவேண்டும் என்று முடிவு செய்து அவனை தேடினாள், ஆனால் அதற்குள் இவளை பின்தொடர்ந்து வந்தவன் இவளை நோக்கி வர பயந்தே போய்விட்டாள்.

 

“என்ன வெண்பா யாரை தேடுறீங்க என்னை தானே என்ற குரல் கேட்க தூக்கிவாரிப் போட திரும்பியவள் அவனை பார்த்ததும் நிதானத்திற்கு வந்தாள், வெளியே நடந்ததை கூறி அவளை ஒருவன் தொடரவும் பயந்து போய் சித்தார்த்தை தேடியதாகக் கூறினாள். அவளை ஒரு ஆட்டோவில் ஏற்றி விடுமாறு கேட்டுக்கொண்டாள்.

 

“நான் ஆட்டோவில் ஏற்றிவிட மட்டுமல்ல நானும் உங்களுடனே வருகிறேன் என்றான். ‘ஐயோ இது வேறா என்று யோசித்தவள் “இல்லை சார் நீங்க ஏத்தி விடுங்க நான் பத்திரமாக போய்விடுவேன் என்றாள்.

 

“எப்படி கொஞ்சம் முன்னாடி என்கிட்டே சொல்லாம கொள்ளாம போன மாதிரியா என்றான். பிறகு “நானும் திருவல்லிக்கேணி தான் செல்ல வேண்டும் அதை சொல்றதுக்குள்ள நீ தலையாட்டிட்டு கிளம்பிட்ட, என்ன ஆட்டோ பிடிக்கட்டுமா இல்ல வேண்டாமா என்றான்

 

அசடு வழிந்தவள் “போகலாம் சார் என்றாள், “அப்புறம் என்னை நீ சித்தார்த்துன்னு கூப்பிட்டா போதும் சார் மோர் எல்லாம் வேணாம், கேட்க நல்லாவே இல்லை என்றான்.

 

உடனே ஒரு ஆட்டோ பிடித்து அவளை ஏறுமாறு பணித்து தானும் ஏறி அமர்ந்தான், அவள் ஆட்டோவின் ஒரு மூலையில் போய் ஒண்டி உட்கார்ந்துகொண்டாள்.

 

அதை கண்டவனுக்கு சிரிக்காமல் இருக்க முடியவில்லை, விட்டால் ஆட்டோவில் இருந்து குதித்து விடுவாள் போல் அமர்ந்து இருந்தாள் அவள்.

 

ஆட்டோ கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஆட்டோ ஒரு பள்ளத்தில் விழுந்து மேலே ஏற ஓரமாக உட்கார்ந்து இருந்தவள் இசகு பிசகாக அவன் மேல் வந்து விழுந்து வைத்தாள், அவன் அவளை தூக்கி நிதானப்படுத்தினான், அவனால் முடியவில்லை வாய்விட்டுச் சிரித்து விட்டான்.

 

அவளுக்கு கோபம் வந்துவிட்டது, “எதுக்கு இப்போ சிரிக்கிறீங்க, இப்படி அடிபட்டா சிரிப்பீங்களா என்று சண்டைகோழியாக அவள் தலை சிலுப்பினாள். அவன் நிதானமாக “முதல்லயே கொஞ்சம் நடுவில் உட்கார்ந்து இருக்கலாம், அதைவிட்டு எங்கோ ஒரு ஓரமா போய் உட்கார்ந்துக்கறேன் பேர்வழின்னு அடம்பிடிச்சா இப்படி தான் நடக்கும். அதான் சிரிச்சேன், தப்பா இருந்தா சாரி என்றான்.

 

அவளுக்குமே அவள் செயல் சிரிப்பை வரவழைத்தது. ‘கொஞ்சம் ஓவரா பண்ணிட்டமோ என்று எண்ணிக்கொண்டு மேலே எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டாள். ஆட்டோ டிராப்பிக்கில் மாட்டிக்கொண்டது.

 

 

அது சரியாக ஒரு மணி நேரம் ஆகும் என்றார்கள். அவன் அவளை பார்த்து “நாம் இறங்கி நடந்து போய்விடலாம், ஒரு அரைமணி நேரம் கூட ஆகாது, போவோமா என்று கேட்டான்.

 

அவளும் சரி என்று கூற அவன் ஆட்டோவிற்கு பணம் கொடுத்து விட்டு அவளுடன் நடக்கலானான். கடற்கரை காற்று சில்லென்று முகத்தில் மோதியது, மழை பெய்து விட்டிருந்ததால் காற்றில் ஈரபதமும் சேர்ந்து அவளுக்கு குளிர்ந்தது.

 

 

அவள் கைகளும் கால்களும் நடுக்க ஆரம்பித்தன. இரு கைகளையும் ஒன்றாக சூடுபறக்க தேய்த்து கன்னத்தில் வைத்துகொண்டாள், எவ்வளவு நேரம் அப்படி செய்வது, அதை பார்த்துக்கொண்டிருந்தவன் அவன் தோளில் மாட்டியிருந்த பையில் இருந்து ஜெர்கினை எடுத்து அவளிடம் கொடுத்து அணித்து கொள்ள சொன்னான்.

 

அவள் மறுக்க இயலாமல் குளிர் வாட்ட அதை வாங்கி அணிந்து கொண்டாள், சுற்றுபுறம் மறந்து அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே பார்த்தசாரதி கோவில் வரை வந்துவிட்டனர். அங்கு தான் இருவரும் பிரிய வேண்டிய இடமாக இருந்தது.

 

அவள் அவனிடம் விடைபெற்று எதிர்புறமாக நடந்து சென்றாள், அவனும் லேசாக தோளை குலுக்கியவாறு அவன் வழி நடக்கலானான், அப்போது தான் அவனுக்கு அவளை இப்போது திரும்ப பார்த்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.

 

பின்னே யாரோ நடந்து வரும் சத்தம் கேட்க திரும்பியவன் அவள் ஓட்டமும் நடையுமாக வர பயந்துவிட்டான். பேருந்து நிறுத்தம் போல் இங்கும் யாரும் அவளை தொடர்ந்து இருப்பார்களோ, அதற்கு பயந்து தான் ஓடி வருகிறாளோ என்று சுற்றுமுற்றும் பார்த்தான்.

 

அதற்குள் அவள் அவனை நெருங்கி வந்துவிட்டாள் மூச்சு வாங்க “ஜெர்கின் குடுக்க மறந்துட்டேன் சாரி என்று அதை அவனிடம் ஒப்படைத்தாள். அவன் “இதற்கு இப்போது என்ன அவசரம் நாளை குடுத்து இருக்கலாமே என்று கேட்க, அவள் “என் வீட்டிற்கு யார் பதில் சொல்வது என் அம்மா கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள் சார் என்றாள்

 

அந்த ஜெர்க்கினை வாங்கியவன் அவள் முன்னேயே அதை அணிந்து கொண்டான். அவள் அவனிடம் மீண்டும் விடைபெற்று சென்றாள். அவனை திரும்பி திரும்பி பார்த்தவாரே சென்று விட்டாள்

 

அவனுக்கு சற்றுமுன் அவள் அந்த ஜெர்கினை அணிந்திருந்தது ஞாபகம் வந்தது, அவள் உடலின் சூடு அதில் இன்னமும் மிச்சம் இருந்தது, ஒரு இதமான சுகம் அவனை ஆட்கொண்டது. விசிலடித்தபடியே அந்த பெரிய வீட்டின் கேட்டை திறந்து உள்ளே சென்றான்.

 

 

வீட்டில் ஆட்கள் வந்துவிட்டதற்கு அறிகுறியாக உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இவன் விசில் சத்தம் கேட்டு வராந்தாவிற்கு வந்தவன்  அவன் மகிழ்ச்சியை கண்டு ஆச்சரியமாகவும் அதே சமயம் நிம்மதியும் கொண்டான்.

 

“என்னடா ரொம்ப சந்தோசமா இருக்க மாதிரி தெரியுது, என்ன விஷயம் என்றான் அவன் நெருங்கிய தோழனான ஸ்ரீதர் என்கிற ஸ்ரீ.

 

“நானா! நீயா! நீதான் சந்தோசமா இருக்க மாதிரி தெரியுது, உன் மனைவி கிட்ட பேசினியா, டாக்டர் என்ன சொன்னார்களாம் என்றான்

 

“எல்லாம் நல்ல விஷயம் தான்டா நாற்பத்தஞ்சு நாள் ஆகுதுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க, எனக்கு இப்பவே போய் அவள பாக்கணும் போல இருக்குடா, பாவம் அவளுக்கு ரொம்ப மசக்கையா இருக்காம் என்ன பண்றாளோ, எனக்கு கவலையாய் இருக்குடா என்றான் ஸ்ரீ

 

“டேய் ஸ்ரீ இப்படி கவலை படுறதுக்கு பதிலாய் நீ நேரே போய் தங்கச்சிய பார்க்கலாம்லடா என்றான்.

 

“லீவு கிடைக்கலடா நான் வர வெள்ளி, சனி கிழமை லீவு போட்டுட்டு வியாழ கிழமையே ஊருக்கு கிளம்பலாம்னு இருக்கேன், ஞாயிறு கிளம்பி திங்கள் காலையில் இங்க வந்துடுவேன்டா.

 

“சரி இப்ப என் கேள்விக்கு பதில் சொல்லு, உன் முகத்தில இப்ப ரொம்ப சந்தோசம் தெரியுது, அதுக்கு என்ன காரணம் சொல்லுடா என்றான்.

 

“டேய் எனக்கு பயங்கரமாய் பசிக்குதுடா, நான் போய் முகம், கை, கால், கழுவிட்டு வரேன், நாம ஹோட்டலுக்கு போய் சாப்பிடலாம் என்றான் நழுவினான் சித்தார்த்.

 

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம், நான் சப்பாத்திக்கு பிசைஞ்சு வெச்சு இருக்கேன், சூடா குருமாவும் பண்ணிட்டேன், நீ உடைமாற்றி வருவதற்குள் இதெல்லாம் சுட்டு ரெடியா வைக்கிறேன் என்றான் ஸ்ரீ.

 

“டேய் உனக்கு ஏன்டா வீண் சிரமம், இரு நானும் வந்து உதவி செய்யறேன் என்று உடைமாற்ற சென்றான் அவன்.

 

அவன் உடைமாற்றி வருவதற்கும் ஸ்ரீ சப்பாத்தி குருமாவை டேபிளில் கொண்டு வந்து வைப்பதற்கும் சரியாக இருந்தது

 

“என்னடா, நான் தான் வரேன்னு சொன்னேன்ல அதுக்குள்ள செஞ்சிட்டியா

 

“இல்லடா நான் ஏற்கனவே தேய்ச்சு வைச்சுட்டேன், நீ வரதுக்குள்ள சூடா தவால போட்டு கொண்டு வந்தேன் அவ்வளோதான், சரி வா சாப்டலாம் என்றான் ஸ்ரீ.இருவரும் சாப்பிட்டு முடித்தனர், சித்தார்த் இருவருக்கும் பால் சூடாக எடுத்து வந்தான்.

 

ஸ்ரீ பாரத ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்றில் பணிபுரிகிறான், அவனுக்கு சொந்த ஊர் கோயம்புத்தூர், பணி மாற்றலில் அவன் சென்னைக்கு வந்திருந்தான். சித்தார்த் அவனுக்கு கல்லூரி தோழன்.

 

ஸ்ரீ சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி அதில் தங்கி இருந்தான். ஸ்ரீயின் தந்தை மிக பெரிய பணக்காரர் , ஆனால் ஸ்ரீக்கு சொந்தமாக உழைத்து சம்பாதிக்க ஆசை அதனால் அவன் நன்றாக படித்து ஒரு வங்கியில் உதவி மேலாளராக இருக்கிறான்.

ஸ்ரீயின் தந்தைக்கு வருத்தம் தான் ஆனால் மகன் தன் காலில் நிற்க நினைப்பதை அவர் தடுக்க நினைக்கவில்லை, ஸ்ரீ காதலித்து மணமுடித்தவன் அதற்கும் அவன் வீட்டில் எந்த எதிர்ப்பும் இல்லை.

 

அவன் தான் அவ்வப்போது அவன் மனைவி ஐஸ்வர்யாவை நினைத்து வருந்துவான், தனக்காக அவள் குடும்பத்தை விட்டு வந்துவிட்டாள், இப்போது நானும் இங்கு வந்து வேலை பார்க்கிறேன் என்று புலம்புவான்.

 

சித்தார்த் அவனுக்கு ஆறுதல் கூறுவான், நீ தான் இன்னும் கொஞ்ச நாளில் மேலாளர் ஆகி மீண்டும் சொந்த ஊருக்கு தானே போகப்போகிறாய் அது வரை கொஞ்சம் பொறுத்துக்கொள் என்று கூறி சமாதானப்படுத்துவான்.

 

சித்தார்த்துக்கு சென்னையில் வேலை கிடைத்ததும் அவன் நண்பனின் வீட்டில் வந்து தங்கி வேலை செய்கிறான். இவர்களுடன் தங்கி இருந்த மற்றுமொரு தோழன் வினோத், அவன் மாதத்தில் பாதி நாட்கள் வேலை செய்யும் இடத்திலேயே தங்கி விடுவான். எப்போதாவது இங்கு வந்து தங்குவான். அவன் இருவருக்கும் தெரிந்தவன்.

 

ஆழ்ந்த யோசனைக்கு பின் மீண்டும் சித்தார்த்திடம் ஸ்ரீ அதே கேள்வியை கேட்டான். “இப்ப சொல்லு உன் மலர்ச்சிக்கு என்ன காரணம் என்றான்.

 

“ஆரம்பிச்சுட்டியா அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லடா ஏன் அப்படி கேக்குற, நான் எப்பவும் போல தானடா இருக்கேன், என்னடா ஆச்சு உனக்கு என்றான் அவனும் விடாமல்.

 

“அப்போ சரி அந்த பொண்ணு யாரு, அது போட்டு இருந்த ஜெர்கினை உன்கிட்ட கழட்டி குடுக்க நீ அதை வாங்கி போட்டுகிட்ட, ஆமா அப்புறம் உன் ஜெர்கின் எதுக்கு அந்த பொண்ணு போட்டு இருந்துச்சு என்று கேட்ட நண்பனின் கேள்வியில் அயர்ந்து போனான் சித்தார்த். ‘இவன் நேர்ல பார்த்த மாதிரியே கேட்குறான் எப்படி என்று யோசித்தான்.

 

“அதை வாங்கி போட்டுக்கிட்ட உன் முகத்தில ஒரு ஆயிரம்வாட்ஸ்பல்புஎரிஞ்சமாதிரிசந்தோசம் தெரிஞ்சுது, அதுமட்டும் இல்லாம ஜாலியா விசிலடிச்சுகிட்டு வீட்டுக்கு வந்தியே அதான் கேட்டேன்.

 

‘கண்டிப்பா இவன் நம்மள பார்த்து இருக்கான், அதான் வளைச்சு வளைச்சு கேள்வி கேட்குறான் என்று நினைத்துக்கொண்டான் சித்தார்த்

 

“சொல்லுடா, இப்ப சொல்லு என்ன விஷயம், உன்ன இப்படி பாக்குறதுக்கு எனக்கு சந்தோசமா இருக்குடா, ஆனா என்ன விஷயம்னு சொன்னா, நானும் சந்தோசப்படுவேன்லடா என்றான். “சொல்லு யார் அந்த பொண்ணு என்று அவன் நீளமாக பேசி முடித்தான்.

 

நண்பனின் புத்திசாலித்தனத்தை மெச்சியவனாக அவனுக்கு பதிலளித்தான். காலையில் பேருந்தில் நடந்தது முதல் சற்று முன்பு நடந்தது வரை அனைத்தையும் சுருக்கமாக விவரித்தான்.

 

ஆச்சரியமாக அனைத்தையும் கேட்டவன், “அவர்கள் உன்னை கிண்டல் பண்ணும்போது உனக்கு கோபம் வரலையா என்றான் ஸ்ரீ. சித்தார்த் அவனுக்கு பதில் சொல்லும்முன் அவன் கைபேசி அழைத்தது.

 

ஆச்சரியத்துடன் கைபேசியை எடுத்தான், இந்நேரம் யாராக இருக்கும்…

 

அத்தியாயம் – 4

 

“அவர்கள் உன்னை கிண்டல் பண்ணும்போது உனக்கு கோபம் வரலையாஎன்றுஸ்ரீகேட்டதற்குசித்தார்த்தின்பதில்இல்லைஎன்பதுதான்

 

“எனக்கே அது தான் ஆச்சரியம் எனக்கு கோபம் வரல ஆனா சிரிப்பு தான் வந்துச்சு, இவங்க நம்மகிட்ட தனியா என்றாவது ஒருநாள் மாட்டும் போது பார்த்துக்கலாம் நினைச்சேன். அப்போது எனக்கு தெரியாது அவர்கள் என்னை தேடி வருவார்கள் என்று, அப்படி வந்த போது எனக்கு சிரிப்பு தான் வந்ததுஎன்றான்அவன்.

 

அவன் பேசிக்கொண்டு இருக்கும்போது அவனுடைய கைபேசி அழைத்தது. ஆச்சரியத்துடன் கைபேசியை எடுத்தான், இந்நேரம் யாராக இருக்கும்…

 

எதிர்முனையில் பேசியது வேறு யாருமல்ல வெண்பா தான், இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு நடந்து வரும் போது தத்தம் எண்களை பரிமாறிக்கொண்டிருந்தனர்.

 

“ஹலோ, சொல்லுங்க ஆச்சரியமா இருக்கு நீங்க போன் பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கலஎன்றான்உண்மையானமகிழ்ச்சியுடன்.

 

வெண்பா அவனிடம் “மிக்க நன்றிஎன்றாள். தன்வீட்டில்அவனைப்பற்றிகூறியதாகவும்அதற்குஅவர்கள்அவனைபுகழ்ந்ததாகவும்கூறினாள். “எங்கம்மாஎன்னநல்லதிட்டிட்டாங்கஎன்றாள்

 

“எதற்கு?என்றுஅவன்கேட்க, காலையில்உங்களை கிண்டல் செய்த நபரே உனக்கு உதவி செய்திருக்கிறார், ஏதோ நல்ல நேரம் நீங்கள் செய்ததை அவர் விளையாட்டாக எடுத்துக்கொண்டார் போல் தெரிகிறது வேறு யாரும் இவ்வாறு இருக்கமாட்டார்கள்என்றுகண்டித்ததாககூறினாள்.

 

“அடக்கடவுளே என்னை கிண்டல் பண்ண விஷயம் கூடவா உங்க வீட்ல சொன்னீங்கஎன்றான்அவன்.

 

“ஆமாம் நான் இது போன்ற விஷயங்களை மறைப்பதில்லை, என்னை பற்றி என் வீட்டினருக்கு நன்றாக தெரியும், மேலும் அவர்கள் நான் உங்களை வீட்டிற்கு அழைத்து வரவில்லை என்று அதற்கு வேறு அவர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டேன்என்றாள்.

 

“எல்லா விஷயமும் இப்படி தான் உங்க வீட்டில சொல்லுவீங்களா என்றான் வேறு மாதிரியான குரலில். “என்ன சொல்லணும் சொல்லக் கூடாதுன்னு இருக்குல, சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி உண்மையை சொல்லிடுவேன் என்றாள் அவளும் ஒளியாமல்.

 

“நீங்கள் வீட்டிற்கு போய் விட்டீர்கள் தானே, உங்க வீட்ல ஒண்ணும் பிரச்சினையில்லையே உங்க மனைவி எதுவும் கோவிச்சுகலையேஎன்றுகேட்டாள்.

 

எதை கேட்க கூடாது என்று நினைத்தாளோ அதையே அவனிடம் கேட்டு விட்டாள், அவளுக்கு அவன் மணமானவனா என்று தெரிந்து கொள்ளவேண்டும் போல் ஒரு ஆவல் கேட்டு விட்டாள்.

 

அவன் எதிர்மறையான பதிலை தரவேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். அவன் சும்மா இல்லாமல் வேண்டுமென்று அவளை சீண்டினான். அதற்கு அவன் கூறிய பதிலை கேட்டவள் முகம் கூம்பிவிட்டது.

 

“ஆமாங்க, என் பொண்டாட்டிக்கு என் மேலே ரொம்ப பிரியம் நான் வர வரைக்கும் சாப்பிடாமலே எனக்காக காத்துட்டு இருந்தாஎன்றுகூறிஎரியும்கொள்ளியில்மேலும்எண்ணெய்விட்டான்அவன்.

 

அதற்கு மேல் வார்த்தையே வரவில்லை அவளுக்கு, மனது பாரமானது போல் உணர்ந்தாள். தான் ஏன் இப்படி உணர்கிறோம் என்றே புரியவில்லை அவளுக்கு, இமையோரம் லேசாக கரிப்பது போல் தோன்ற அவனுடன் இதற்கு மேல் தொடர்ந்து பேச இயலாது என்று தோன்றியது.

 

அதற்குள் அவனிடம் இருந்து பல ஹலோக்கள் வந்து போனது, எதையும் உணராதவளாக போனை மீண்டும் காதுக்கு கொடுத்தாள்.

 

“ஹலோஎன்றாள், அவன்அவளிடம்“ஏங்கஎங்கபோய்டீங்க, ரொம்பநேரமாஹலோ, ஹலோன்னுநான்கத்திட்டுஇருக்கேன்என்றான்.

 

“ஒண்ணுமில்ல அம்மா கூப்பிட்ட மாதிரி இருந்தது, அதான் என்னன்னு கேட்டுட்டு இருந்தேன், தப்பா எடுத்துகாதீங்கஎன்றாள்.

 

“உங்க மனைவிகிட்ட போனை குடுங்க நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்என்றாள். அவன்“இம்குடுக்கலாமே, ஆனாஒண்ணுஅவவந்ததும்தான்நான்போனைஅவகிட்ட குடுக்க முடியும் பரவாயில்லையாஎன்றான்.

 

“கடைக்கு போய் இருக்காங்களா, நான் வேணா கொஞ்சம் நேரம் கழிச்சு போன் போடுறேன்என்றாள். அதற்குஅவன்அதுக்குள்ளஎன்னாலஅவளைகூட்டிவரமுடியாதே, நீங்கஎப்பகூப்பிட்டாலும்அவஇங்கஇருக்கமாட்டா, ஏன்னாஅவஇப்பஅவங்கவீட்டிலஇருக்கா

 

“இனிமே தான் நான் அவளை போய் பொண்ணு கேக்கணும் அப்புறம் கல்யாணம் பண்ணனும் எவ்வளோ வேலை இருக்கு. என்னங்க பயந்துட்டீங்களா, நான் சும்மா தான் சொன்னேன். எனக்கு இன்னும் மணமாகவில்லைஎன்றஅவன்வார்த்தைஅவளுக்குதேனாகஇனித்தது, நெஞ்சில்ஏறிஇருந்தபாரம்லேசானது.

 

“என்ன இப்ப சந்தோசமாஎன்றுகேட்டான். “எதுக்குநான்சந்தோசப்படனும்என்றாள்அவள்வீம்பாக. “அப்போசரிஎன்றுஅப்போதைக்குஅந்தபேச்சுக்குமுற்றுபுள்ளிவைத்தான்அவன்.

 

“சரி வீட்டில் அம்மா, அப்பா யாரும் இங்க இல்லையாஎன்றாள். சிறுமௌனத்தின்பின்அவன்பதிலிறுத்தான், அப்பா இப்ப உயிரோட இல்ல, ஒரு அக்கா, அவங்க திருமணமாகி பொள்ளாச்சியில் இருக்காங்க, அம்மா இப்போ அவங்க கூட தான் இருக்காங்க, அப்பா போனதுல இருந்து அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லைஎன்றான்.

 

அவனுடன் நடந்து வரும்போது அவன் அவள் பற்றிய விவரங்கள் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்ததால் அவனை பற்றி அவள் அறிந்து கொள்ளமுடியவில்லை. இப்போது அவன் அதை பற்றி பேசியது தான் அவனிடம் எதுவும் கேட்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

 

“சாரிஎன்றாள்உண்மையானவருத்தத்துடன், மேலும்ஏதோபேசிவிட்டுஅவனிடம்விடைபெற்றுபோனைவைத்தாள்.

 

அவளுக்கு அன்று முழுவதும் ஏகாதசியாய் இருந்தது. விடிய விடிய தூங்காதவள் விடியும் வேளையில் தான் உறங்கினாள்.

 

சித்தார்த் போனை வைத்ததும் அவனிடம் வந்த ஸ்ரீ “என்னடா காதலாஎன்றான். இல்லைஎன்றுசித்தார்த்தலையைஆட்டினான்.

 

ஸ்ரீ நிச்சயமாக “இது காதல் தான் என்றான், சித்தார்த்க்கு ஆச்சரியமாக இருந்தது, இது தான் காதலா என்று யோசித்தான்.

 

தான் எப்படி ஒரு பெண்ணிடம் மாட்டிகொள்வோம் என்று அவன் நினைக்கவில்லை, யோசித்தவன் உறுதியாக இல்லை என மறுத்தான். “ஆமா நீ எப்படி அவ்வளவு உறுதியாக சொல்லுகிறாய்என்றான்ஸ்ரீயை பார்த்து.

 

அதற்கு ஸ்ரீதரன் “நான் பால் வாங்கலாம்ன்னு கடைக்கு வந்தேன், அப்போ தான் உங்களை பார்த்தேன், ஊட்டி குளிர்லையே ஸ்வெட்டர் போடாதவன், இந்த சென்னை குளிருக்கு ஜெர்கின் போடுறது கொஞ்சம் ஓவரா தெரியல, அப்போவே தோணுச்சு ஏதோ விஷயம்ன்னு, அதை நீ இப்ப ஊர்ஜிதப்படுத்திட்டஎன்றான்.

 

“எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்றடாஎன்றான்சித்தார்த்.

 

“நண்பர்களை விட தான் வாழ்கையில எதுவும் முக்கியமில்லைன்னு சொல்றவன் நீ, எல்லார்க்கும் குடுக்கற மரியாதையைவிட நண்பர்களுக்கு அதிக மரியாதை கொடுக்கறவன் நீ, ஏன் உங்க அம்மாக்கு பிறகு நீ எங்களை முன்னிறுத்தி தான் எதுவும் செஞ்சு இருக்கஎன்றுநிறத்தினான்.

 

“இப்பவும் அப்படி தானே நான் இருக்கேன்என்றான்.

 

“ஆனா ஒரு சின்ன போன்ல அந்த பொண்ணு உனக்குள்ள எங்க இருக்கான்னு நீ தெரியவைசுட்டஎன்றான்.

 

சித்தார்த்துக்கு அவன் எங்கு வருகிறான் என்று புரிந்தது, ஸ்ரீயுடன் பேசிக் கொண்டிருக்கும்போது தான் வெண்பா போன் செய்தாள், அவனுடன் பேசிக்கொண்டிருந்ததை பாதியில் விட்டுவிட்டு அவன் வெண்பாவுடன் பேசச் சென்று விட்டான்.

 

சித்தார்த்க்கு என்னமோ போல் ஆகிவிட்டது, ஸ்ரீ வருத்தத்துடன் பேசுகிறான் என்று புரிந்தது, அவன் உடனே சமாளித்துக்கொண்டு “போன் வந்தா எப்படிடா, பேசாம போகமுடியும், அவளை நான் தானே பத்திரமா கூட்டிட்டு வந்தேன், அதான் அவ வீட்டுக்கு போனதும் போன் பண்ணா, ஒரு ஆர்வத்துல எடுத்துட்டேன், அதுக்குள்ளே நீ என்னென்னவோ சொல்லற, உங்களைவிட எனக்கு வேற யாரும் முக்கியம் இல்லடாஎன்றான்.

 

“சித்து நான் இப்பவும் சொல்லறேன், நீ எங்களுக்கு முக்கியத்துவம் கண்டிப்பாக தருவ. நான் எதுவும் தப்பா சொல்லலை, ஆனா அந்த பொண்ணு எதோ ஒரு விதத்துல உனக்குள்ள சலனத்த ஏற்படுத்திட்டா, அது நிஜம். இன்னைக்கு நீ மூணு பொண்ணுங்கள பார்த்த, மத்த ரெண்டு பேருக்கிட்டயும் நீ இவ்வளவு அக்கறை எடுத்த மாதிரி தெரியலையே

“இதுல எதுவும் தப்பில்லைடா, நீ இப்படி ஆகணுமின்னு நாங்க எத்தனை நாளா கடவுளை வேண்டி இருப்போம். நீ ரொம்ப கஷ்டபட்டவண்டா, இனியாவது உனக்கு வாழ்கையில் வசந்தம் வீசட்டும், அதை பார்க்கற எங்களுக்கு ரொம்பவும் மகிழ்ச்சி தான் ஓகே வாஎன்றான்.

 

ஆனா ஒண்ணு அந்த பொண்ணு மனசுலயும் நீ இருக்கியான்னு தெரிஞ்சுகிட்டு சீக்கிரமா பேசி ஒரு முடிவுக்கு வாங்க, நான் நெறைய பேசிட்டேன், என் பொண்டாட்டிகிட்ட பேசிட்டு தூங்க போறேன்என்றுகூறிச்சென்றுவிட்டான்.

 

சித்தார்த்துக்கு தான் உறக்கம் தொலைந்தது, ‘ஒருவேளை தான் அப்பெண்ணை நேசிக்க ஆரம்பித்துவிட்டோமோ, இம் இப்போதே இதை பற்றி ஏன் யோசிக்கவேண்டும். அப்படியே காதலாக இருந்தால் தான் என்ன, அதிலென்ன தவறு, ஏன் நான் என்னை குழப்பிக் கொள்கிறேன்.

 

விடை தெரியாத பல கேள்விகளுக்கு காலம் தான் பதில் சொல்லும் எவ்வளவு உண்மை அது என்று யோசித்துவிட்டு தூங்க சென்று விட்டான்.

 

விடியல்…

 

இதமான கடற்காற்று முகத்தில் மோத பால்கனியில் உட்கார்ந்து கடலை பார்த்த வண்ணம் காபி அருந்துவது அவனுக்கு மிக பிடித்தமான ஒன்று.

 

ஏனோ அவளும் தன் எதிரில் அமர்ந்து தன்னுடன் காபி அருந்தினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடியது.

 

எதிரில் அமர்ந்து அவன் மாற்றங்களை ரசித்தவாறே ஸ்ரீ காபியை உறிஞ்சி கொண்டிருந்ததை சித்தார்த் கவனிக்கவில்லை.

 

“என்னடா கனவாஎன்றான்ஸ்ரீ, கனவில்இருந்துகலைந்தவனாக“அப்படிலாம்ஒண்ணும்இல்லடாஎன்றுபொய்யுரைத்தான்சித்தார்த். “ஹேய்,நீஊருக்குபோறேன்சொன்னல என்னைக்கு கிளம்புறன்றான்

 

“என்னடா மறந்துடுச்சா, அடுத்த வாரம் தான்டா ஊருக்கு போறேன்என்றான். “சாரிடாஇன்னைக்குவெள்ளிக்கிழமைஅதான்நீஊருக்குபோறேன்சொன்னியே, அதான்கொஞ்சம்குழம்பிட்டேன்என்றான்.

 

“நான் ஸ்ரீ உன் நண்பன் அதை கொஞ்சம் குழம்பாம ஞாபகம் வைச்சுக்கோ, சரியாஎன்றான் கூறிச் சென்றுவிட்டான்.

 

‘இவன் ஒருத்தன் எதாச்சும் சொல்லி குழப்புறான்என்றுநினைத்துக்கொண்டுஅலுவலகம்கிளம்பச்சென்றான்சித்தார்த்.

 

வெண்பாவுக்கு விடிந்ததில் இருந்து ஒரே பரபரப்பு, இன்று என்ன ஆடை உடுத்திக் கொள்வது என்பது தான் அது.

 

வெள்ளிக்கிழமை ஆதலால் புடவை கட்டிசெல்லுமாறு தாய் உரைக்க, அதே செய்யலாம் என்று பீரோவை திறந்து எல்லா சேலையையும் எடுத்து கடை பரப்பி விட்டாள்.

 

“ஒரு சேலை கட்டுறதுக்கு எதுக்குடி இப்படி எல்லாத்தையும் கடை பரப்புறஎன்றுவைதார்குழலி.

 

எதுவுமே காதில் வாங்காதவளாக, அவளுக்கு பிடித்த ரோஜா வண்ண சேலையை எடுத்து உடுத்தினாள். தாய்க்கு தன் மகளை கண்டு பெருமிதம், ‘கடவுளே இவளுக்கு ஏற்றவன் கிடைக்க வேண்டும்என்றுஅந்தமுருகனிடம்பிரார்தனைசெய்தார்.

 

 

நெருக்கமாக கோர்த்த மல்லிகை சரத்தை எடுத்து பெண்ணுக்கு சூட்டிவிட்டார். அதற்குள் அவள் தந்தை காபி கேட்க அவரை கவனிக்க சென்று விட்டார் அவள் அன்னை.

 

அவளுக்கு சாப்பாட்டை டப்பாவில் அடைத்து எடுத்து வந்தார். வெண்பா அவரை ஏற இறங்க பார்த்தாள். “அம்மா நான் தான் அங்க கான்டீன் இருக்கு சாப்பிட்டுக்கறேன் சொல்றேன்ல ஏம்மா இப்படி பண்றீங்கஎன்றாள்.

 

“மறந்து போய் கட்டிட்டேன்டா, இன்னைக்கு ஒரு நாள் எடுத்து போடா கண்ணு, ப்ளீஸ்என்றார்குழலி. மறுக்கமுடியாதவளாகஅதைவாங்கிதோல்பையில்வைத்தாள்அவள்.

 

இனியா தெருமுனையில் வந்து அழைத்து செல்வதாக கூறியிருக்க தாய், தந்தையிடம் விடைபெற்று வெளியில் வந்தாள். முன்தினம் அவளும் சித்தார்த்தும் விடைபெற்ற இடத்துக்கு அருகில் வந்தவள், சுற்றுமுற்றும் பார்த்தாள் அவன் தென்படுகிறானா என்று.

 

தொழிற்சாலைக்கு செல்ல கிளம்பி வெளியே வந்தவன், தூரத்திலேயே அவளை பார்த்துவிட்டான். அவன் வீட்டில் இருந்து பார்த்தால் அந்த தெரு நன்றாக தெரியும், காலையிலேயே நல்ல தரிசனமா இருக்கே. புடவை வேற கட்டியிருக்கா, அவன் கண்களுக்கு அப்போது அவள் ஒரு தேவதையாக தோன்றினாள், கண்ணிமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவள் அவர்கள் முன்தினம் பிரிந்த இடத்தில் நின்றுகொண்டு அக்கம்பக்கம் பார்ப்பதை பார்த்தவன், பின் அவள் திரும்பி நடக்க ஆரம்பிப்பதையும் பார்த்தான்.

‘அய்யோ, இனியா வேறு காத்திருப்பாளே என்று நடையை எட்டிப்போட்டாள். சித்தார்த்க்கு கம்பெனியில் கார் கொடுத்து இருந்தனர். என்னை தான் தேடுறா போல என்று நினைத்தவன் அவள் திரும்பி நடப்பதை பார்த்து தாள மாட்டாதவனாக அவன் வேகமாக சென்று காரை கிளப்பிக்கொண்டு அவளை நோக்கிச் சென்றான்.

 

பக்கத்தில் ஒரு கார் உராய்வது போல் வந்து நிற்கவும் கோபத்துடன் திட்டப்போனாள் அவள், காரில் இருந்து இறங்கியவனை கண்டதும் கோபம் மறந்து இயல்பானாள்.

 

காரில் இருந்து இறங்கியன் அவளை அருகில் கண்டு மயங்கிவிட்டான் அவளின் அழகில். அவளை விடவும் அழகானவர்கள் இருக்கிறார்கள். அவன் படித்த கல்லூரியில் அவன் பின்னாடியே சுற்றிய நிஷா இவளை விடவும் சிறந்த அழகி.

 

வசதி படைத்தவள், ஆனால் அவள் மேல் ஒரு சின்ன ஈர்ப்போ, சலனமோ கூட அவனுக்கு வந்ததில்லை, அவள் மேல் மட்டுமல்ல வேறு எந்த பெண்ணிடமும் அவனுக்கு வந்ததில்லை.

 

இவள் எனக்கானவள் என்பதினால் வந்த சலனம் தான் அது என்பதை அவன் ஒரு தடுமாற்றத்துடன் அந்த கணம் உணர்ந்தான். ஸ்ரீ நீ சொன்னது நிஜம் தான் இவளால் நான் சலனப்பட்டுவிட்டேன்.

 

அவள் மாநிறமானவள், சீராக வெட்டப்பட்ட அளவான கூந்தலை பின்னி மல்லிகை சரம் வைத்திருந்தாள். அழகிய விழிகள் துருதுருவென்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தது. அவள் புடவை கட்டியிருந்தது அவளுக்கு வெகு பாந்தமாக இருந்தது.

 

அவனுக்கு லேசாக வியர்க்க ஆரம்பித்துவிட்டது. உடனே தன்னிலைக்கு வந்தவன், “உங்களுக்கு ஆட்சேபனை இல்லனா என்னோட வர்றிங்களாஎன்றான்அவன்யதார்த்தமாக.

 

அவள் உடனே மறுத்துவிட்டாள், ஏனோ அவனுக்குள் அது சட்டென்று கோபத்தை வரவழைக்க குரலில் சற்று கடுமையுடன் “ஏன்என்றான், “தப்பாஎடுத்துக்காதீங்கசார், இனியாஎனக்காககாத்துக்கொண்டிருக்கிறாள்என்றாள்.

“ஓகேஎன்றுரைத்துவிட்டு மேலே எதுவும் பேசாமல் கோபமாக காரை எடுத்துக் கொண்டு வேகமாக சென்று விட்டான் அவன்.

 

வெண்பாவுக்கு அவனுடன் செல்ல வேண்டும் என்று தோன்றினாலும் இனியா வேறு காத்திருப்பாள் அக்கம்பக்கம் என்ன நினைப்பார்கள், இனியாவிற்கு என்ன பதில் சொல்வது, என்று அவள் யோசனை செல்லும் திசை அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

 

அவனை பார்த்து முழுதாக ஒரு நாள் கூட ஆகவில்லை, அவனும் உரிமையாக கூப்பிடுகிறான், எனக்கும் அவனுடன் செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது என் மனம் ஏன் இப்படி யோசிக்கிறது. ஆனால் அவனின் கோபம் அவளுக்குள் எதுவோ செய்ய அவள் வயிற்றில் எதுவோ பிசைவது போல் உணர்ந்தாள்.

 

இனியாவுடன் சுஜியும் இருக்க  காரில் ஏறி அவர்கள் தொழிற்சாலைக்கு விரைந்தனர், வரும் வழியில் வண்டி டிராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டு அவர்கள் அங்கு அலுவலகம் செல்ல ஒரு மணி நேரம் தாமதமானது.

 

அதற்குள் அவன் கோபம் அதிகமானது, எல்லோரையும் வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டான். எப்போதும் கோபம் படாதவன் ஆதலால் அவன் உடனிருப்பவர்கள் அவனுக்கு ஏதோ கோபம் அதனால் தான் அதை தங்களின் மேல் காட்டுகிறான் என்று அதை பெரிது படுத்தவில்லை.

 

அதே கோபத்தில் தாமதமாக வந்தவர்கள் மேல் பாய்ந்தான், “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க, ப்ராஜெக்ட் பண்றதுன்னா தாமதமாக வரலாமா, ஏன் ஒரு போன் பண்ணி சொல்ல முடியாதா உங்களால என்று பொரிந்தான்.

 

“சார் சாரி சார் வர வழியில ட்ராபிக் ஜாம் சார், உங்களுக்கு போன் பண்ணி சொல்லறதுக்கு உங்க நம்பர் எங்ககிட்ட இல்லை சார், நான் அங்கிள்கிட்டயாச்சும் சொல்லி இருக்கலாம், தப்பு தான் சார் மன்னிச்சுடுங்க என்றனர் இனியாவும் சுஜியும் சேர்ந்தார் போல்.

 

“என் போன் நம்பர் உங்க கிட்ட இல்லையா“ என்றான் ஒருமாதிரியான குரலில், அந்த கணம் அவன் கண்கள் வெண்பாவை நோக்கின. அவள் விழிகள் சொல்லிய மொழியில் அவன் மேலும் எதுவும் பேசவில்லை. அவன் உதவியாளரை கூப்பிட்டு அவர்களுக்கு உதவுமாறு சொல்லிவிட்டு எங்கோ வெளியில் கிளம்பிச் சென்றுவிட்டான்.

 

மதியத்திற்கு மேல் திரும்பி வந்தவன் அவர்களை பார்த்துக்கொண்டே அவன் இருப்பிடத்திற்கு சென்று விட்டான். சேகரை அழைத்து அவர்களுக்கு வேண்டிய விபரங்கள் தெரிவித்தானா என்று கேட்டறிந்தான், காலையில் அவன் கோபமாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கோரினான், சுஜியை உள்ளே வரச்சொல்லி அனுப்பினான்.

 

“சாரி, காலையில நான் கொஞ்சம் டென்ஷன்ல பேசிட்டேன், தப்பா எடுத்துக்காதீங்க, சேகர் உங்களுக்கு ஹெல்ப் பண்ணிருப்பான் நினைக்கிறேன், உங்களுக்கு அதுல எதுவும் பிரச்சனை இருந்தா சொல்லுங்க, அப்புறம் நீங்க சாப்பிட்டாச்சா என்றான் பார்வையை வெளியே பதித்தபடி.

 

“பரவாயில்ல சார், நாங்க ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம் தப்பு எங்க பேர்ல தான். சேகர் சார் எங்களுக்கு ரொம்ப நல்ல ஹெல்ப் பண்ணார் சார். அவர் தான் என்னையும் இனியாவையும் கூட கட்டாயபடுத்தி சாப்பிட கூட்டிப்போனார்.

 

“இந்த வெண்பா தான் பசிக்கல சாப்பாடு வேணாம் சொல்லிட்டா, அவ எப்போதுமே இப்படி தான் சார், சொல் தாங்க மாட்டா, நாங்க பேசி சமாதானப்படுத்திட்டோம் சார் என்றாள்.

 

இதை கேட்ட அவனுக்கு நெஞ்சுக்குள் வலித்தது, அய்யோ தன்னால் தான் அவள் சாப்பிடவில்லையா. அவள் சாப்பிடவில்லை என்றறிந்ததும் மனம் கேட்கவில்லை. “சுஜி வாங்க கான்டீன் போய் காபி சாப்பிடலாம் என்று கூறி அவளையும் அழைத்துக்கொண்டு வெளியில் வந்தான்.

 

“இனியா, வெண்பா காலையில நடந்ததுக்கு ரொம்ப ரொம்ப சாரி, நான் எதோ டென்ஷன்ல பேசிட்டேன், என்னோட நம்பர் முதல்ல குறிச்சுக்கோங்க, அப்புறம் நீங்க மூணு பேரும் என்னோட கான்டீன் வாங்க போய் சூடா ஒரு காபி சாப்பிட்டு வரலாம் என்று அழைத்தான் அவன்.

 

“நீங்க போயிட்டு வாங்க, நான் வரல என்று மறுத்தாள் வெண்பா. திரும்பி அவளை பார்த்தவன் “அப்போ நீங்க இன்னும் அதை மறக்கலன்னு நினைக்கிறேன் என்றான்.

 

“அப்படிலாம் எதுவும் இல்லை சார், எனக்கு இப்போ காபி வேணாம் என்றாள். “அப்போ நான் காலையில திட்டினது தான் உங்களுக்கு ஞாபகம் இருக்கு அதான் வரமாட்டேங்கறீங்க என்றதும். சுஜி அவளிடம் “ரொம்பவும் பிக பண்ணாதேடி, வா போகலாம் என்றாள் அவள்.

 

காண்டீனுக்கு சென்று மற்றவர்களுக்கு காபி சொல்லிவிட்டு வெண்பாவுக்கு ஒரு தோசையும் சேர்த்து சொன்னான். தோசையை பார்த்ததும் வெண்பா கையை பிசைந்தாள், சுஜியை பார்த்து முறைத்தாள். ‘நீ அவள பார்த்து ஏன் முறைக்கிற, எனக்காக சாப்பிட மாட்டியா என்பது போல் சித்தார்த் அவளை பார்த்தான்.

 

சித்தார்த்தின் மொழி புரிந்தவள் போல் எதுவும் பேசாமல் அவள் தோசையை சாப்பிட்டு முடித்தாள்.

 

‘சித்தார்த்தின் கோபம் தான் என்ன என்று வெண்பா ஆராய, சித்தார்த்தோ ‘வெண்பாவிடம் தான் என்னுடைய எண் இருக்கிறதே பிறகு ஏன் அவள் அதை மறைத்தாள் அவள் தோழிகளிடம் என்று ஆராய்ந்தான் அவன். அதற்கு வெண்பாவின் பதில் என்ன…

 

Advertisement