Advertisement

அத்தியாயம் –23

 

நண்பர்கள் இருவரும் சேர்ந்து திட்டமிடலாயினர். சுந்தரத்திடமும் சரளாவிடமும் விஷயத்தை கூறும் பொறுப்பை ஸ்ரீ எடுத்துக் கொண்டான். குழலியிடம் பேசும் பொறுப்பை சித்தார்த் பார்த்துக் கொள்வதாகக் கூறினான். ஸ்ரீ சித்தார்த்தின் அன்னை தந்தையை தனியே அழைத்துப் பேசினான்.

 

“அம்மா, அப்பா நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் நம்ம சித்தார்த் கல்யாண விஷயமாக என்று கூறி பீடிகை போட்டான். “சொல்லுப்பா, நாங்க இந்த விஷயத்தை கேட்கத் தானே இத்தனை வருஷமா காத்துட்டு இருக்கோம். கடவுளே என் பிள்ளைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும் என்றார் சரளா கண்களில் கண்ணீர் வழிய.

 

சுந்தரமும் ஆச்சரியமும் திகைப்புமாக பார்த்தார். ஸ்ரீதரை நோக்கியவாறே “சொல்லுங்க தம்பி பொண்ணு யாரு என்று கேட்டார் அவர் நேரிடையாக. “அப்பா பொண்ணும் வேற யாரும் இல்ல, நம்ம சித்தார்த் விரும்பின பொண்ணு தான் அவ பேரு வெண்பா என்று நிறுத்தினான் அவன்.

 

“என்னப்பா சொல்ற அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு நம்ம தம்பி சொல்லிச்சி. நாங்களும் அதுனால தானே தம்பிக்கு வேற பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ண நினைச்சோம், இப்ப என்னாச்சு என்றார் சரளா.

 

அம்மா அது வந்து நம்ம சித்தார்த்தோட வேலை தான்என்றுகூறிநடந்ததைபற்றிசுருக்கமாகக்கூறினான். “அவங்கவீட்டிலஅந்தபொண்ணுக்குவரன்வந்ததுஉண்மைதான்ஆனாஅந்தபொண்ணுக்குஅதுலவிருப்பம்இல்லம்மா. இவன்தான்அவசரப்பட்டுஊரைவிட்டுபோய்ட்டான். அப்புறம் அந்த பொண்ணு வாழ்க்கையிலயும் என்னென்னமோ நடந்து போச்சு. போனது போகட்டும்மா, இனி அவங்க கல்யாணம் நல்லபடியா நடக்கணும். நாம் தான் அதுக்கு வழி செய்யணும்என்றான்ஸ்ரீதர்.

 

“ஆமா அந்த பொண்ணு இப்ப எங்க இருக்கப்பாஎன்றார்சுந்தரம். “அப்பாஅந்தபொண்ணை சித்தார்த் இந்த ஊருல பார்த்து இருக்கான். அப்புறம் ஒரு விசயம் அந்த பொண்ணு இவன் மேல கொஞ்சம் கோவமா இருக்கா. அதை சித்தார்த் சரி பண்ணிடுவான். வர்ற ஞாயிற்றுக்கிழமை நீங்க அவங்க வீட்டுக்கு பெண் கேட்டு போகணும்என்றுமுடித்தான்ஸ்ரீ. “ஏன்ப்பா, அந்தபொண்ணுவீட்டில யாருக்காச்சும் இது பத்தி தெரியுமாஎன்றுதயங்கினர்சரளா.

 

“அவங்க அம்மாவுக்கு ஓரளவு விஷயம் தெரியும். நீங்க கவலைப்படாதீங்கம்மா, இது தெய்வம் போட்ட முடிச்சு என்ன கொஞ்சம் லேட் ஆச்சு அவ்வளவோ தான். நம்ம சித்தார்த் மனசுக்கு பிடிச்ச பொண்ணு தான் அவன் பொண்டாட்டியா வரணும்கறது தான் விதி அது நடக்கும்‘நடக்கணும்என்பதைமட்டும்மனதுள்கூறிக்கொண்டான்.

 

__________________________

 

சுஜியை பற்றிய எண்ணம் மனதுள் ஓடியது வெண்பாவுக்கு. சுஜிக்கு போன் செய்தால் அவள் ஊருக்கு சென்று விட்டதாகச் சொன்னாள், அவசரமாக அவள் கணவர் அழைத்தால் சொல்லாமல் சென்று விட்டதாகக் கூறி வருந்தினாள், கூடிய விரைவில் அவள் வருவதாகக் கூறியிருந்தாள். அவளை பற்றி யோசித்துக் கொண்டே இரவு உறங்கினாள்.

 

ஞாயிறு விடியல் பொழுது வெண்பாவிற்கோ படுக்கையை விட்டு எழவே மனமில்லை, என்றும் இல்லாத திருநாளாக இன்று அம்மா வேறு ஏன் இப்படி எழுந்திருக்க சொல்லுகிறார் என்று அலுத்துக் கொண்டே எழுந்தாள் வெண்பா. “என்னம்மா இது நம்ம வீடு தானா, வீடு முழுக்க நெய் வாசம் வீசுது என்ன விசேஷம் இன்றைக்கு என் பிறந்த நாளும் கிடையாது. நீங்க செய்யற இனிப்பு வாசம் ஊரே தூக்குதும்மா கலக்குறீங்கஎன்றாள்அவள்.

 

“வெண்பா குளிச்சுட்டு வாம்மா உங்கிட்ட கொஞ்சம் பேசணும்என்றார்குழலி. “என்னம்மாஇப்பவேசொல்லுங்கநான்எங்கபோகப்போறேன்என்றாள்அவள். “என்னம்மாவெண்பாஅம்மாசொல்றாங்கஇல்லபோம்மா. போய்குளிச்சுட்டுவாஎன்றார் கல்யாணியும் குழலியுடன் சேர்ந்துக் கொண்டு. ‘என்னாச்சு இன்னைக்கு இவங்க என்னை இப்படி விரட்டுறாங்கஎன்றுயோசித்துக்கொண்டேகுளிக்கச்சென்றாள்வெண்பா.

 

வெண்பா எப்போதும் வீட்டில் இருக்கும்போது தலைக்கு குளிப்பாள். குளித்துவிட்டு ஈரக்கூந்தலை காயவைத்துக் கொண்டிருந்தாள் அவள். அப்போது குழலி, நரசிம்மன், கல்யாணி சகிதம் உள்ளே நுழைந்தார். “என்னம்மா இப்பவாச்சும் சொல்லுங்க, இன்னைக்கு நம்ம வீட்டில என்ன விசேஷம், நீங்களாச்சும் சொல்லுங்க மாமாஎன்றுஉரிமையுடன்நரசிம்மனைபார்த்துகேள்வியைதிருப்பினாள்அவள். “இன்னைக்குஉன்னைபொண்ணுபார்க்கவர்றாங்க, அதுதான்இன்னைக்குவிசேஷம்என்றார்குழலிஒருவாறு.

 

“என்னம்மா சொல்றீங்க, நான் தான் எனக்கு கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டேனே, அப்புறம் ஏன்மா இப்படி, தயவு செய்து என்னை வற்புறுத்தாம என் இஷ்டப்படி விட்டுடுங்க ப்ளீஸ்என்றாள்அவள். “வெண்பாநீஎனக்காகஇதுக்குசம்மதிக்கணும். அந்தபையன்நல்ல மாதிரி நீ வேணா நம்ம கல்யாணியை கேளு, அவங்க அப்பா, அம்மாவும் ரொம்ப நல்ல மனுஷங்களா இருக்காங்க. இது ரொம்ப நல்ல சம்பந்தமா தெரியுது. நீ வருத்தப்படற மாதிரி எதுவும் நடக்காதுடா, அம்மா உன்ன நல்லதுக்கு தான் சொல்லுவேன் புரிஞ்சுக்கோடா, இது உன் அம்மவோட கடைசி ஆசையா நினைச்சுக்கோ. உனக்கு பிடிக்காத ஏதும் நடக்காது. அவங்கள வேற வர சொல்லியாச்சு, இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க வந்துடுவாங்க நீ சீக்கிரம் தயாராகி வாம்மாஎன்றுஒரு வழியாக கெஞ்சி மிரட்டி என்று அவளை தயாராகசொன்னார் குழலி.

 

வெண்பாவுக்கு மீண்டும் ஒரு அடியாக இது இருந்தது. ஒரு வேலை சித்தார்த்தான் ஏதோ பேசி இவர்களை சம்மதிக்க வைத்து இருப்பானோ என்று ஒரு ஓரத்தில் அவளுக்கு எழுந்த சந்தேகத்தை குழலியின் பேச்சு மாற்றியது. பாவம் அவளுக்கு சித்தார்த்தின் ரகசியம் பற்றி தெரியவில்லை. நளினியின் அன்னை அவனை பெற்றவர் இல்லை வளர்த்தவர் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. அவனை பெற்றவர்கள் பற்றியும் அவள் அறியவில்லை.

 

இதை எப்படி சமாளிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்படியாவது வருபவர்களை சமாளித்து அனுப்பிவிட வேண்டும் என்று எண்ணியவள் தேவை இல்லாமல் தோன்றிய எண்ணங்களை ஒதுக்கினாள். குழலி கட்டிலின் மேல் ஒரு அழகிய புதிய பட்டு புடவையை எடுத்து வைத்து அதை கட்டிக் கொள்ளுமாறு அவளை பணித்தார். கல்யாணியை அவளுக்கு துணையாக இருந்து அவளை தயார் செய்யுமாறு கூறிவிட்டு அவரும் நரசிம்மனும் வெளியேறினர்.

 

‘இந்த புடவையை அம்மா தனக்கு தெரியாமல் எப்போது எடுத்தார். அதுவும் எனக்கு பிடித்த நிறமாக வேறு இருக்கிறது என்று உள்ளுர வியந்தவாறே புடவையை ஒரு வழியாக கட்டி முடித்தாள். புடவையை கட்டி முடிக்கும் பொது அவள் மனதில் ஓரம் ஓர் வலி எடுப்பதை உணர்ந்தாள். இதற்கு முன் அவளுக்கு திடிரென்று வந்து அருண் வீட்டினர் பெண் கேட்டு போனது அதன் பின் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் கோர்வையாக அவள் மனதில் வலம் வந்தன. என்ன முயன்றும் மறக்க முடியாத நினைவுகளால் அவள் மனம் மேலும் சோர்ந்து போனது.

 

‘சித்தார்த் மட்டும் இப்படி தன்னை பார்த்தால் அவ்வளவு தான் கொதித்து போவான்என்றுநினைத்தாள். யாரோஒருவர்முன் போய் நிற்பதும் கேவலமாக தோன்றியது எல்லாம் இந்த அம்மாவால் வந்தது என்று பல்லைக் கடித்து பொறுத்தாள். சித்தார்த் பற்றிய எண்ணம் மேலோங்கியதும் மிகவும் தவித்து போனாள். அவனை தவிர வேறு யாரும் தன்னை இவ்வாறு வந்து பார்ப்பதுகூட அவளுக்கு பிடிக்கவில்லை. ஒருமுறை நடந்தது அவள் எதிர்பாராதது ஆனால் அதற்கே அவள் நிறைய வேதனைப்பட்டு போனாள்.

 

‘கடவுளே என்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்று, இதில் இருந்து மீண்டு வர எனக்கு தைரியம் கொடு இறைவாஎனமனமுருகிவேண்டினாள். அதுவரைஅவளையேபார்த்துக்கொண்டிருந்தகல்யாணிஅவளைஅமர வைத்து தலையில் பூ வைத்தவாறே மெதுவாகக் கூறினார். “ஏன்மா வெண்பா கவலைபடுற உனக்கு பிடிக்காதது எதுவும் நடக்காது, நீ தைரியமா இரும்மாஎன்றார்அவர். ‘இவர்என்னசொல்லவருகிறார், அம்மாவும் இதே தான் சொன்னார்கள் இப்போ இவரும் அதையே திருப்பி படிக்கிறாரேஎன்றுயோசித்தாள் அவள்.

 

வாசலில் ஏதோ அரவம் கேட்க குழலி கல்யாணியை அழைத்தார். “கல்யாணி அவங்க வந்துட்டாங்க கொஞ்சம் வந்து அவங்கள உள்ள கூட்டி வாஎன்றார். வெண்பாவுக்குள் பயம் முகாமிட்டது. முகம் கலவரத்தை சுமந்தது, அவள் நெஞ்சு வேகமாக துடித்தது. “வாங்க வாங்க உட்காருங்கஎன்று கூறி அவர்கள் சம்பிரதாயமாக ஏதோ பேசிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது.

 

“பெண்ணை அழைத்து வரச் சொல்லி கேட்பது காதில் விழுந்தது. கல்யாணி உள்ளே வந்து அவளை அழைத்துக் கொண்டு வந்து ஹாலில் நிறுத்தினார். எல்லோரையும் பணிந்து வணங்குமாறு அவளுக்கு மட்டுமே கேட்குமாறு கூறினார். தலை நிமிர்ந்தும் பார்க்காமல் குனிந்தவாறே அனைவரையும் வணங்கினாள். அவளை அங்கு போடப்பட்டிருந்த ஜமுக்காளத்தில் அமர வைத்தார் கல்யாணி.

 

அவள் அமர்ந்ததும் அவளருகில் வந்து இரு பெண்களும் ஒரு சிறுமியும் வந்து அமர்ந்தனர். “எங்க வீட்டுக்கு ஏத்த மருமக நீதான்மா, இத்தனை வருஷமா கல்யாணம் வேணாம்னு சொன்னவன் இப்போ தான் சரின்னு தலையாட்டி இருக்கான். எல்லாம் உன்னால தான்மாஎன்றார். ‘இவங்கபிள்ளைக்குஎன்னைவிட்டால்வேறுபெண்கிடைக்கமாட்டாளா, கடவுளேஎன்னைஇந்தஇக்கட்டில்இருந்துகாப்பாற்றுஇவர்கள்பேசுவதைபார்த்தால்இன்றேதட்டை மாத்தி திருமணத்தை உறுதி செய்து விடுவார்கள் போலிருக்கிறதேஎன்றுஎண்ணினாள்.

 

“ஆமாம் அண்ணி, நீங்கள் தான் எங்கண்ணனுக்கு ரொம்ப பொருத்தமான ஜோடி. நான் கூட பொண்ணு எப்படி இருப்பாங்களோ என்னவோன்னு தான் யோசிச்சுட்டு வந்தேன், உங்களை பார்க்கும் போது ரொம்பவும் பிடிச்சு போச்சு அண்ணிஎன்றுமிகவெளிப்படையாகபேசினாள்அவள். ‘முதலில்அன்னை, இப்போதுதங்கையாஎன்றுமனம்நொந்தாள்அவள். ஆனாலும்அவர்கள்வெள்ளந்தியாகஅவளிடம்பேசியதுஅவளுக்குபிடித்திருந்தது. அந்த சின்ன பெண் எழுந்து வந்து அவள் அருகில் அமர்ந்தாள். அவளிடம் வெண்பா “உன் பேரு என்னம்மாஎன்றாள்.

 

“நானு நிரஞ்சனிஎன்றாள்அவள். “அழகானபேரு, நீயும்அழகாகஇருக்கிறாய்என்றாள்வெண்பா. “நீங்கதான்என்சித்துமாமாவைகல்யாணம்பண்ணிக்கபோறீங்களாஎன்றது குழந்தை காதலுக்கு மரியாதை பட பாணியில், அதிர்ந்து போய் நிமிர்ந்தவள் எதிரில் சித்தார்த்தைக் கண்டாள்.

அவனோ கண்களில் குறும்பு மின்ன அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். கோபமாக எழுந்தவள் தாயை நோக்கி “அம்மா எனக்கு இப்ப கல்யாணம் வேணாம், அப்படியே நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நீங்க விரும்பினா, இவரை தவிர யாரை வேணாலும் கல்யாணம் பண்ணிக்கறேன். நீங்க வேற மாப்பிள்ளை பாருங்கஎன்றுகூறிவிட்டுவிடுவிடுவென்று எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்.

 

குழலி மனம் நொந்து போனார். சித்தார்த்தின் முகம் கருத்துவிட்டது. நிம்மி தான் பேசினாள், “அம்மா வாங்க போகலாம், இவங்க என்ன பெரிய ரம்பையா எங்கண்ணனை வேணாம்னு சொல்றதுக்கு அவருக்கு ஆயிரம் பொண்ணுங்க கிடைப்பாங்க, நீ வாண்ணா போகலாம்என்றுஅங்கலாய்த்தாள்.

 

“நிம்மி வாயை மூடு, இந்த ஜென்மத்தில் இவள் தான் என் மனைவியாக வரமுடியும். அவள் கோபத்தில் ஆயிரம் பேசுவாள், தவறு என் மேல் தான் இருக்கிறது. நீ தேவையில்லாமல் பேசாதே. வெண்பா என் வாழ்வில் இல்லை என்றாள் அதற்காக நான் வேறு தேடுபவன் கிடையாது வா போகலாம்என்றான்.

 

நிம்மிஒருஆற்றாமையில்மட்டுமேஅவ்வாறுபேசினாள். அவளுக்கும்தெரியும்அண்ணன்வெண்பாவைவிரும்பியவிசயம், ஸ்ரீ சொல்லியே அனுப்பியிருந்தான். “தம்பி, கொஞ்சம் நில்லுங்க, நீங்க எல்லாரும் எங்களை மன்னிக்கணும். என் பொண்ணு பேசினது மனசில வைக்காதீங்க. நான் அவகிட்ட பேசறேன்என்றுகூரியாவரைசித்தார்த்கையசைத்துதடுத்தான்.

 

“பரவாயில்லை, தவறு என் மேல் தான். அவளை கட்டாயப்படுத்தி மணக்க எனக்கு இஷ்டமில்லை. அவள் மறுப்பாள் என்று எனக்கு தெரியும். ஆனால் அவளை பேசி சமாதானப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் என்னை அவமானப்படுத்துவதாக நினைத்து வேறு யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று கூறுபவளை என்ன செய்ய முடியும், விடுங்கள் அத்தை. நான் அவளை விட்டுப் போன குற்றத்திற்காக அந்த தண்டனையை நான் அனுபவிக்கிறேன். நீங்கள் வருத்தப்படாதீர்கள்என்றுவேதனையுடன் கூறி அங்கிருந்து கிளம்பினான் சித்தார்த்.

 

போகும் வழியில் “அப்பா, அம்மா என்னை மன்னித்துவிடுங்கள், உங்களை இங்கு கூட்டி வந்து அவமானப்படுத்திவிட்டேன். அவளுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்என்றுகலங்கினான்அவன். எதற்கும்கலங்காதவன்கலங்கிபேசுவதைக்கண்டுபதைத்துப்போனசுந்தரம்“விடுப்பா வெண்பா நம்ம வீட்டு பொண்ணு, எங்க மருமக, நீ வேணா பாரு அந்த பொண்ணு மனசு மாறி இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பா. என் மருமக ஏதோ கோபத்தில பேசிட்டா, நீ ஏன்பா வருத்தப்படுறஎன்றுகூறிமனைவியைபார்த்தார்.

‘என்ன நான் சொல்லறது சரிதானேஎன்பதுபோல்அவர்சரளாவைபார்த்தார். “உங்கப்பாமாதிரிதான்தம்பிநானும்நினைச்சேன்விடுப்பா. வாவீட்டுக்குபோகலாம்என்றார்சரளாவும். நிம்மியும் வேதனையுடன் இருந்தாள்.சித்தார்த் மொத்தமாக துவண்டு போனான். அலுவலக வேலையில் அவன் மனம் லயிக்கவில்லை.

 

வேறு யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துக் கொள்ள சம்மதம் என்று அவள் முகத்தில் அடித்தது போல் கூறியதில் இருந்து அவன் மனம் மிகவும் சோர்ந்துவிட்டான். ஒரு வாரமாக சவரம் செய்யப்படாத முகத்துடன் கண்களில் ஜீவனில்லாமல் தன்னறையிலேயே முடங்கியவனை கண்டு வேதனையில் கண்ணீர் வடித்தார் சரளா. ஸ்ரீக்கு போன் செய்து அவனை வரச் சொன்னார்.

 

“ஸ்ரீ நீ எப்பப்பா வருவ, இங்க தம்பியோட நிலைமை ரொம்ப மோசமாயிருக்கு. வாய்விட்டு எதுவும் பேசமாட்டேங்கறான். உன் டிரைனிங் முடிஞ்சு நீ எப்பப்பா வருவாஎன்றார்.“அம்மா மன்னிச்சுடுங்க, திடிர்னு தான் என்னை டிரைனிங் அனுப்பிட்டாங்க. நான் அதுனால தானே அவன் பெண் பார்க்க போனப்ப வரமுடியாம போச்சு. நான் இன்னும் ரெண்டு நாள்ல வந்துடுவேன். நான் வந்து எல்லாம் பேசிடுறேன்மாஎன்றுகூறிஆறுதலாகபேசிவிட்டுபோனைவைத்தான்.

 

சித்தார்த் அவளை விட்டு பிரிந்து வந்தபோது கூட இந்த அளவு துவண்டு போயிருக்கவில்லை. ஆனால் இப்போது அவன் மிகவும் மனம் சோர்ந்து போனான். எந்த வேலையிலும் அவன் கவனம் செல்லவில்லை. பெரும்பாலான நேரங்களில் அறையிலேயே அடைந்து கிடந்தான்.

_____________________

 

அவர்கள் வந்து போன அன்று உள்ளே சென்று அழுது தீர்த்தவள் அப்படியே உறங்கிப் போனாள். காலையில் கண் விழித்த போது சிறிது நேரம் ஒன்றுமே புரியாமல் விழித்தவளுக்குள் நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக ஞாபகம் வர ஆரம்பித்தது. அம்மா ஏன் இப்படி செய்தார்கள், அவர்களிடம் கேட்டே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

 

அப்போது அவளுக்கு ஒன்று உரைத்தது. நேற்று சித்தார்த் அவன் அன்னை தந்தையுடன் வந்தானே, அப்படியென்றால் அவன் என்னிடம் பொய் சொல்லியிருக்கிறானா என்று பலவாறு யோசித்து குழம்பியவள், முதலில் அவள் அன்னையிடம் பேசும் முடிவுக்கு வந்தாள். முதல் வேலையாக பல்லை தேய்த்துவிட்டு அன்னையை நாடிச் சென்றாள்.

 

“அம்மா, அம்மா என்று அழைத்தவாறே அடுக்களைக்குள் நுழைந்தாள். குழலி அவளை திரும்பிப் பார்க்காமலே காபியை எடுத்து அடுப்புத் தட்டின் மேல் வைத்தார். “அம்மா, நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள் அவள். குழலி அடுக்களையில் இருந்து வெளியேறி சென்று கல்யாணியை அழைத்து வந்தார். “கல்யாணி உன்கிட்ட பேசணும், அவகிட்ட சொல்லிடு, இனிமே நான் அவகூட பேசறதா இல்லை. என் பேச்சுக்கு இங்க எந்த மதிப்பும் இல்லை. கொஞ்ச நாள் என்னை பொறுத்துக்கொள்ள சொல்லு, நான் காவியன்கிட்ட போய் இருந்துக்கறேன். எனக்கு மதிப்பில்லாத இந்த வீட்டில் இனி நான் எப்படி இருக்க முடியும் என்றார் குழலி.

 

“அம்மா ஏன்மா இப்படி பேசறீங்க யாரோ ஒருத்தருக்காக நீங்க உங்க பொண்ணை வேணாம்னு சொல்றீங்களேம்மா, அம்மா தயவு செய்து இப்படி இருக்காதீங்கம்மா என்கிட்டே பேசுங்க என்றாள் வெண்பா.

 

“கல்யாணி நான் இதுக்கு மேல எதுவும் பேசறதாயில்லை. அவளுக்கு அந்த பையனை பிடிக்காம போச்சுனா கல்யாணம் வேணாம்னு சொல்லியிருக்கலாம் அவங்க குடும்பத்தில உள்ள எல்லாரையும் வைச்சுட்டு அவரை அவமானப்படுத்தினது எந்த விதத்தில நியாயம் அவங்க மனசு நொந்து போனாங்க. என் பொண்ணு இப்படி செய்வான்னு நான் நினைச்சு கூட பார்க்கல என்று கூறினார்.

 

“அம்மா ஒரு நிமிஷம் எனக்கு ஒரு விஷயம் புரியல, அவருக்கு அம்மா அப்புறம் ஒரு அக்கா அவங்க குடும்பம் மட்டும் தானே இருந்தாங்க. இப்ப புதுசா எப்படி அப்பா, அம்மா, தங்கை எல்லாம் வந்தாங்க. என்கிட்ட இதுபத்தி அவர் சொன்னதே இல்லையே, இதுல இருந்தே தெரியலையா அவர் எப்படிபட்டவர்ன்னு என்று அவளும் பதிலுக்கு பொறிந்தாள்.

 

“நீ என்னைக்கு தான் அவர் பத்தி முழுசா தெரிஞ்சுகிட்ட, இப்ப தெரிஞ்சுக்கறதுக்கு அவரோட சொந்த அப்பா அம்மா இவங்க தான், நீ சொன்னவங்க அவரை எடுத்து வளர்த்தவங்க, இதுக்கு மேல நீ எதுவும் என்கிட்டே கேட்காதே என்று கூறி உள்ளே சென்றுவிட்டார் குழலி.

 

“அத்தை பாருங்க அம்மாவை எப்படி எல்லாம் சொல்லிட்டு போறாங்க. நான் எவ்வளவு வேதனைப்பட்டேன் அதை அவங்க புரிஞ்சுக்காம போய்ட்டாங்க. அதெல்லாம் தெரிஞ்சா அவங்க கஷ்டப்படுவாங்களேன்னு நான் இதுவரைக்கும் எதுவுமே சொன்னது இல்லை. அம்மா என்னை போய் தப்பா பேசிட்டாங்களே, என்கூட பேசமாட்டேன்னு சொல்லிட்டாங்களே என்று கூறி அழுதவளை கல்யாணி சமாதானப்படுத்தினார்.

 

“வெண்பா வருத்தப்படாதேம்மா, அம்மாவுக்கு உன் கல்யாணம் நடக்கணும்மேன்னு தான் கவலைம்மா. நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே என்று நிறுத்தினார் கல்யாணி. “சொல்லுங்க, நான் எதுவும் தப்பா எடுத்துக்கமாட்டேன் என்றாள் அவள். “நீயும் அந்த தம்பியும் விரும்பறீங்க தானே, அப்புறம் ஏன்மா கல்யாணம் வேணாம்னு சொல்ற, உங்க ரெண்டு பேரையும் முதடவை பார்த்தப்பவே எனக்கு புரிஞ்சுடுச்சி. உங்க ரெண்டு பேருக்குள்ளும் ஆழமான ஒரு அன்பு இருக்கறது என்று.

 

“அந்த தம்பி பால் குடிக்காதுன்னு நீ காபி கலந்து கொடுத்தாய். உன்னை பார்க்கறதுக்காகவே அன்றைக்கு அந்த தம்பி கோவிலுக்கு வந்துச்சி. நீ ஊருக்கு போயிருந்த அந்த ரெண்டு நாளும் அந்த தம்பி இங்கேயே தான் சுத்தி சுத்தி வந்துட்டு இருந்துச்சு. உன்னை தேடி தவிச்சது நல்லாவே தெரிஞ்சது. நீ கொஞ்சம் யோசிச்சு பேசி இருக்கலாம்மா சரி விடு என்று கூறிவிட்டு அவரும் சென்றுவிட்டார்.

 

வெண்பாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சித்தார்த்தை பற்றி கல்யாணி கூறிய சேதி அவளுக்கு புதிது. ‘ஆனால் அவன் அவள் ஊரில் இருந்து வந்த பின் கேட்ட கேள்விகளை அவளால் மறக்கமுடியவில்லை. என்னவெல்லாம் பேசினான், ஒரு வேளை என் மீது உள்ள அளவுக்கு அதிகமான அன்பில் தான் அப்படி நடந்தானோ என்று அவள் மனம் குழம்பி தவித்தது.

 

எந்த ஒரு முடிவுக்கும் அவளால் வரமுடியாவில்லை. இந்நிலையில் தான் அவள் சுஜியை மீண்டும் சந்தித்தாள். ஏனோ அன்று வெகு சீக்கிரமாக வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தாள் வெண்பா. அவள் அன்னை அவளிடம் பேசி பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. மனசே சரியில்லாமல் வீட்டிற்கு செல்லும் பாதை நோக்கி மெதுவாக நடந்துக் கொண்டிருந்தாள்.

 

யாரோ அழைப்பது போல் தோன்ற திரும்பி பார்த்தாள். அங்கு சுஜி நின்றுக் கொண்டிருந்தாள். அவளை பார்த்ததும் ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொண்டாள். “ஏய், என்னாச்சி வெண்பா, அழாதே வெண்பா. சரி நீ என்னோடு வா, எங்கள் வீட்டுக்கு போகலாம், வா என்றாள் அவள்.

 

வெண்பாவுக்கும் அவளிடம் மனம் விட்டு பேசினால் தேவலாம் போலிருந்தது. சுஜி அவளை காரில் உட்கார வைத்துவிட்டு கைப்பேசியில் யாரிடமோ பேசிவிட்டு வந்தாள். “சரி போகலாம் என்று கூறி அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். “உள்ளே வா வெண்பா என்று அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.

 

“வீட்டில யாரும் இல்லையா, வெண்ணிலா எங்க என்றாள் வெண்பா கேள்வியாக. “எல்லாரும் கோவிலுக்கு போய் இருக்காங்க, நீ வா வந்து உட்காரு என்று கூறி அவளை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தாள். “வெண்பா ஒரு பத்து நிமிஷத்துல வந்துடறேன். அவங்களை கோவில்ல இருந்து கூட்டிட்டு வரணும். அம்மா உன்னை பார்க்கணும்ன்னு சொன்னாங்க. ப்ளீஸ் கொஞ்சம் காத்திரு என்றாள் சுஜி.

“சுஜி இரு நானும் வரேன், அவங்களை அங்கே வந்து பார்த்துட்டு நான் கிளம்பறேனே என்றாள் வெண்பா. “எனக்கு உன்கிட்ட நிறைய பேசணும் வெண்பா, ப்ளீஸ் ஒரு பத்து நிமிஷத்துல நான் வந்துடுவேன் என்றாள் அவள். அதற்குள் ஒருவர் காபியுடன் உள்ளே நுழைய அதை வாங்கி வெண்பாவிடம் நீட்டி குடிக்குமாறு சொல்லிவிட்டு சுஜி வெளியே கிளம்பினாள்.

 

“சரி சீக்கிரம் வந்துடு சுஜி, நீ வர தாமதமானா நான் கிளம்பிடுவேன் சரியா என்று கூறி அவளை அனுப்பி வைத்தாள்.

 

___________________________

 

“சித்தார்த் ஏன்டா இப்படி வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிற, நீ முதல்ல வா நாம கொஞ்சம் வெளிய போய்ட்டு வரலாம் என்று அவனை அழைத்தான் ஸ்ரீ. சித்தார்த்துக்கும் ஒரு மாறுதல் தேவையாய் இருந்தது. நண்பனுக்காக வெளியே வர ஒத்துக் கொண்டான்.

 

“நீ வா வீட்டில பசங்களும், ஐஸ்வர்யாவும் உன்னை பார்க்கணும்னு சொன்னாங்க, நாம போய் பார்த்துட்டு அப்புறம் வெளியே கிளம்பலாம் என்று கூறி அருகில் இருந்த அவனுடைய இல்லத்திற்கு சித்தார்த்தை அழைத்துச் சென்றான் அவன்.

 

வீட்டுக்கு அருகில் வந்தவுடன் திடிரென்று நினைவு வந்தவனாக “சித்து சாரிடா மறந்துட்டேன். ஐஷுவும், குழந்தைகளும் கோவிலுக்கு போனாங்க, நீ வீட்டில இரு நான் கொஞ்ச நேரத்துல அவங்களை கூட்டிட்டு வந்துடறேன் என்று கூறினான்.

 

“விடுடா நான் அப்புறம் வரேன் என்று திரும்பி நடந்தவனை “உள்ளே வாடா என்று கூறி அழைத்து வந்து வரவேற்பறையில் அவனை அமர வைத்தான். அரவம் கேட்டு வெளியே வந்த வேலைக்காரியை ஏதோ ஒரு வேலை கூறி வெளியே அனுப்பி வைத்தான்.

 

“சித்தார்த் கதவை பூட்டிக்கோடா, இல்லைனா சிறுத்தை வந்துட போகுது. நேற்றுக்கூட பேப்பர்ல பார்த்தேன். இங்க பக்கத்துல ஒரு வீட்டிற்கு சிறுத்தை வந்து கதவை தட்டிட்டு போச்சாம் என்று போகும் தருவாயில் கூறிவிட்டுச் சென்றான் அவன். எழுந்து சென்று கதவை அடைத்துவிட்டு வந்து மீண்டும் வரவேற்பறையின் சோபாவிலே அமர்ந்தவன் யோசனையிலாழ்ந்தான்.

 

______________________

 

சுஜி சென்று அரைமணி நேரத்திற்கு மேல் ஆனதால் பொறுமையிழந்த வெண்பா, வேலைக்காரியிடம் சென்று அவர்கள் எந்த கோவிலுக்கு சென்றிருக்கிறார்கள் என்று விசாரித்து வரலாமென நினைத்து எழுந்து வெளியே வந்தாள். வேலையாளும் வீட்டில் இல்லாது போன்று தோன்ற ஹாலை தாண்டி வரவேற்பறைக்கு வந்தவள் அதிர்ந்து போய் நின்றாள். சவரம் செய்யப்படாத முகத்துடன் முகத்தில் எல்லையில்லா வேதனையுடன் சித்தார்த் விட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த தோற்றம் அவள் மனதை பிசைந்தது. உனக்கு நானிருக்கிறேன் என்று கூறி அவனை தான் மடி சாய்த்துக் கொள்ள துடித்த வெட்கம் கெட்ட மனதை அடக்கினாள்.

 

ஏதோ ஒரு உள்ளுணர்வு தோன்ற பார்வையை தழைத்தவனின் எதிரில் கண்களில் காதலுடன் வெண்பா நின்ற தோற்றம் கண்டவனின் முகமும் அகமும் மலர்ந்தது. அவன் அவளை கண்டு கொண்டான் என்று உணர்ந்தவள் முகத்தில் ஒரு கடுமை வந்தது. அவளை நெருங்கி “என் வெண்பா என்று கூறியவாறு அவளை இழுத்து காற்று கூட புகமுடியாத அளவுக்கு அவளை இறுக அணைத்தான்.

 

விடுபட போராடியவள் தொய்ந்து போய் அவன் மேலேயே சாய்ந்தாள். மெல்ல மெல்ல இறுக்கத்தை குறைத்தவன் அவள் முகவாயை நிமிர்த்தினான். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. “கடைசியில் நீங்க ஜெயிக்கணும்கறதுக்காக என்னை அடையணும் முடிவு பண்ணீட்டீங்கல்ல, அதுக்காக சுஜியை உங்க வழிக்கு கொண்டு வந்து என்னை தனியா வரவைச்சு இருக்கீங்கல்ல என்று அள்ள முடியாத வார்த்தைகளைக் கொட்டினாள்.

 

அவளிடமிருந்து விலகி தனியே சென்று நின்றான் அவன். மனதில் எல்லையில்லா துயரம் வந்து அவனை சூழ்ந்தது. அவன் திடிரென்று விலகி சென்றதும் அவளுக்கு வேதனையாக இருந்தது. அவள் வார்த்தை தந்த வலி தான் அதற்கு காரணம் என்று உணராமலேயே மீண்டும் அவன் மேல் கோபம் கொண்டாள்.

 

“முட்டாள் என்ன வார்த்தை எல்லாம் பேசுற, நீ தான் வேணும்னு நினைச்சு இருந்தா நான் அப்பவே உள்ள வந்து இருக்கமாட்டேனா, நீ இங்க இருக்கறதே முதல்ல எனக்கு தெரியாது. அப்புறம் எப்படி நீ அப்படி சொன்ன, சுஜி யாருன்னு தெரியுமா. தெரியாம என்னெல்லாம் பேசற, சுஜி என்னோட கூடபிறந்த தங்கை. எனக்காக தான் அவளும் ஸ்ரீயும் இந்த வேலையை செஞ்சு இருக்காங்கன்னு நினைக்கிறேன் என்றான் அவன்.

 

“என்ன புதுசா ஒரு கதை சொல்றீங்க, சுஜி உங்க தங்கையா அது எப்படி என்றாள் புரியாமல். “ஏன் சுஜி, உன்கிட்ட இதைப்பற்றி எதுவும் சொல்லலையா என்றாள். இல்லை என்பது போல் அவள் தலை அசைத்தாள். சித்தார்த் அவனை பற்றிய விவரங்களை அவளிடம் கூறினான். ஆச்சரியமும் அதிர்ச்சியும் என்று பலவித உணர்வுகள் அவள் முகத்தில் பிரதிபலித்தது. “நீங்க இதைப்பற்றி ஒரு தடவை கூட என்கிட்டே சொன்னது இல்லையே நீங்க அவங்களுக்கு வளர்ப்பு மகன்னு ஏன் என்கிட்டே சொல்லவே இல்லை என்றாள்.

 

“உனக்கு என் அக்கா பற்றி தெரியாது. அப்போதெல்லாம் அவள் என் மனம் காயப்படும் படியாக பலமுறை பேசியிருக்கிறாள். நான் அநாதை என்று பேசும் போதெல்லாம் ரொம்பவும் வருந்தியிருக்கிறேன். ஆனால் என்னை வளர்த்தவர்கள் என்னை வேறாகவே நினைத்ததில்லை, அவர்கள் தான் எனக்கு பெற்றவர்களாக இருந்தார்கள். உன்னிடம் நான் சொல்லக் கூடாது என்று நினைத்ததில்லை. எனக்கு அவர்கள் என் பெற்றவர்கள் இல்லை என்று கூற இயலவில்லை, ஏனேனில் நானும் அவர்களை வேறாக நினைத்தது இல்லை வெண்பா என்றான்.

 

“உன்னிடம் பேசும் போது தான் மிகவும் ஆறுதலாகவும், நிம்மதியாகவும் உணர்ந்தேன். எனக்கென்று என்னை வளர்த்தவர்களுக்கு பின் நீ மட்டும் தான் என்று நான் நினைத்தேன் என்று நிறுத்தினான்.

 

“வெண்பா ப்ளீஸ் சொல்லு உனக்கு இப்ப என்ன பிரச்சனை ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்ற. எனக்கு தெரியும் நீ என்னை வெறுக்கறது எல்லாம் வெறும் வெளி வேஷம். நீ என்கிட்டே உண்மையை சொல்லு வெண்பா. எனக்கு தெரியும் நீ என் மேல் எவ்வளவு காதலா இருக்கேன்னு, என்னோட அணைப்பில் நீ இருக்கும் போது உன் காதலை நான் உணர்றேன். என்கிட்ட மனசுவிட்டு பேசு, உனக்கு என்கிட்ட என்ன கேட்கணுமோ கேளு என்றான் ஆதங்கத்துடன்.

 

எதுவும் கூறாமல் எழுந்து வெளியே செல்ல கிளம்பியவளை கைபிடித்து நிறுத்தினான். “ப்ளீஸ் வெண்பா, சொல்லிட்டு போ என்றான். தன்னை அவன் கண்டு கொண்டதில் அவள் வாயடைத்துப் போயிருந்தாள்.

 

அத்தியாயம் –24

 

சித்தார்த் அவளை கண்டுகொண்டதில் அவள் வாயடைத்து போயிருந்தாள். “என்ன சொல்லணும் என் அப்பா எங்களைவிட்டு போனதுக்கு நான் தானே காரணம். என்னால அவர் சொன்ன மாப்பிள்ளையை கட்டிக்கவும் முடியாம, உங்களையும் பிரிஞ்சு நான் தவிச்ச தவிப்பு எனக்குத் தான் தெரியும். நாம அன்னைக்கே போய் எங்க அப்பாகிட்ட பேசியிருந்தா அவர் சந்தோசமா நம்ம கல்யாணத்தை நடத்தி வைச்சு இருந்திருப்பார். இப்படி எங்களை தவிக்கவிட்டு போய் இருக்க மாட்டார். என்னோட சுயநலம் தான் எங்கப்பாவை எங்ககிட்ட இருந்து பிரிச்சது. என் சுயநலமான காதல் எனக்கு தேவையில்லை. அப்புறம் நீங்க என்னை சந்தேகப்பட்டதும் என் மனசுல ஆறாத வடுவா இன்னும் இருக்குங்க. எதையுமே என்னால மறக்க முடியலை. தயவுசெய்து இனி என் வழியிலே நீங்க வராதீங்க என்று முடிவாகக் கூறினாள்.

“வெண்பா ஒரு நிமிஷம். நீ என் தரப்பையும் கேட்டுட்டு போ, அப்புறமா நீ என்ன முடிவு பண்ணணுமோ அதை நீயே முடிவு பண்ணிக்கோ என்றான் சித்தார்த். அவன் கூறவிரும்புவதை கேட்க விரும்பாதவளாக வெளியேற நினைத்தவளை அவன் கை பிடித்து நிறுத்தினான்.

 

“தயவு செய்து நீ இதையும் கேட்டுட்டு போ வெண்பா. உங்க அப்பா உண்மையிலேயே உடம்பு  சரியில்லாம தான் இறந்து போனார். அதுக்கு நீயோ இல்லை நானோ இல்லை மற்ற யாரும் காரணம் இல்லை. நீ தேவை இல்லாமல் குழப்பிக் கொள்ளாதே. உங்கப்பாவோட கடைசி ஆசை என்ன தெரியுமா, அதை நான் சொன்னா நீ நம்பமாட்டே, அது என்னன்னு நீ உங்க அம்மாகிட்ட போய் கேட்டு தெரிஞ்சுக்கோ

 

“எங்க அப்பாவோட கடைசி ஆசை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று சீறினாள் அவள். “அதை நீ உங்க அம்மாகிட்ட போய் கேளுன்னு தான் சொல்லிட்டேனே. இனி உனக்கு தெரிய வேண்டியது நான் ஏன் உன்னை சந்தேகப்பட்டேன்னு தானே, அதையும் தெரிஞ்சுக்கோ. உன்னை வேறு ஒருவன் வந்து பெண் பார்க்க வந்தபோது நான் எப்படி துடித்து போனேன் உனக்கு தெரியாது, அந்த கோபத்தில தான் நான் அன்னைக்கு அப்படி உன்கிட்ட கோபமா பேசிட்டேன்.

 

“ஒரு வாரமா உன்னை பார்க்காம பேசாம நான் தவிச்சது எனக்கு மட்டும் தான் தெரியும். என் கோபத்தை எல்லாம் மூட்டைகட்டி வைத்து விட்டு உன்னை தேடி வந்த அன்று காலையில் உன்னை அருணுடன் பார்த்தேன். எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது, எப்படியாவது உன்னிடம் பேசினால் எல்லாம் சரியாகும் என்று நினைத்து தான் மீண்டும் அன்று மதியமே உன்னை தேடி வந்தேன். நீ அப்போது தான் அருணுடன் காரில் ஏறிப் போனாய். அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவள் இடையிட்டாள்.

 

“அன்னைக்கு நான் அவர்கிட்ட என்ன பேசப் போனேன்னு உங்களுக்கு தெரியுமா, அது தெரியாம என்னை என்னவெல்லாம் பேசிட்டீங்க என்றாள் அவள். “வெண்பா குறுக்க பேசாம நான் சொல்லறதை கேளு, நீங்க அன்னைக்கு என்ன பேசினீங்கன்னு நான் எப்பவும் கேட்க மாட்டேன். நான் சொல்வதை மட்டும் குறுக்கிடாமல் கேள், உன்கிட்ட இனியும் நான் எதையும் மறைக்க நினைக்கல, எல்லாமும் உன்கிட்ட பேசிடணும் நினைக்கிறேன் என்று தொடர்ந்தான் அவன். “அப்போது தான் நான் உங்களை பின் தொடர்ந்து வந்தேன், உங்களை ஓட்டலில் சந்தித்தேன். நீ அழுக அவன் கைக்குட்டையை எடுத்துக் கொடுக்க அதை பார்த்து மனம் வெறுத்துப் போய் அங்கிருந்து கிளம்பி வெளியே வந்தேன்

 

“அங்கு தான் நான் இனியாவை பார்த்தேன், அதுவரை நிச்சயமில்லாமல் இருந்த அந்த விஷயத்தை அவள் தான் உறுதிப்படுத்துவது போல் பேசினாள். அதற்கு பிறகு நடந்த விசயங்கள் எல்லாம் சேர்ந்து தான் நான் உன்னை பிரிய முடிவெடுத்தேன் என்றான். “என்ன சொல்றீங்க, இனியா என்ன சொன்னா என்றாள் அவள். அன்றைய நிகழ்வு அவன் கண்முன் விரிந்தது

 

_______________________

 

மனம் சோர்ந்து போய் ஓட்டலில் இருந்து வெளியேறியவன் முகத்தை முடியவாறு சிறிது நேரம் நின்றான். ஒருவாறு தன்னை நிலைப்படுத்தி கொண்டு கிளம்பயத்தனித்தான். அப்போது இனியா அவனருகே வந்தாள். “ஹலோ சார், எப்படி இருக்கீங்க, உங்களை இங்க பார்ப்பேன்னு நான் நினைக்கவே இல்லை சார். நான் கொஞ்சம் வெளியூர் போயிருந்தேன் சார். அதான் உங்களை எல்லாம் என்னால பார்க்க முடியலை. அப்புறம் சார் ஒரு நல்ல விஷயம் சொல்லணும், எனக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு சார் என்று படபடவென பொரிந்தாள்.

 

“ஓ ரொம்ப நல்ல விஷயம் வாழ்த்துக்கள் என்றான் அவன். “சார் மாப்பிள்ளை யாருன்னு நீங்க கேக்கவே இல்லையே, அவர் வேற யாரும் இல்லை நம்ம வெண்பாவோட அண்ணா தான். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்ன்னு சொல்லுவாங்க. அது போல எனக்கு அவளுக்கும் ஒண்ணா கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கு. ரொம்ப குழப்பறேனா. என்னோட அண்ணா அருணுக்கு வெண்பாவை நிச்சயம் பண்ணி இருக்கோம்.

 

“எங்க வீட்டிலே அப்புறம் அவங்க வீட்டில எல்லாருக்கும் சம்மதம் தான் அடுத்த வாரம் நிச்சயம் பண்ணலாம்னு இருக்கோம். வெண்பாகூட முதல்ல கல்யாணம் வேணாம்னு சொன்னாளாம். அப்புறம் தான் ஒத்துகிட்டாளாம். அது பத்தி பேசத்தான் இப்போது நான், வெண்பா எங்க அண்ணன் எல்லாரும் வந்தோம். வாங்களேன் நாம உள்ள போய் பேசலாம் அவங்களும் வந்து இருப்பாங்க என்றாள் அவள். “இல்லை நான் வரலை, நீங்க போங்க என்றான் சித்தார்த்.

 

மனம் ஏதேதோ எண்ணத்தில் குழம்பி தவிக்க அவனால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. அவளிடம் பேசினால் மட்டுமே தன்னால் இதற்கு விடை காண முடியும் என்று தோன்றியது. ஆனால் ஒன்று அவளுக்கு அவள் வீட்டில் விரைவில் திருமணம் முடிக்க நினைக்கிறார்கள் என்பது மட்டும் இனியாவின் கூற்றில் இருந்து கண்டு கொண்டான்.

 

நேரே கிளம்பி வீட்டுக்கு போகாமல் பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்றான். மனம் சலனமாக இருக்கும் போது அவன் அங்கு செல்வது வழக்கம். காரை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்று அமர்ந்தவன், கண் மூடி இறைவனை பிரார்த்தித்தான். “பெருமாளே எந்த குழப்பமும் இல்லாமல் வெண்பாவை என்னிடம் சேர்த்து விடு என்று மனமுருகி பிரார்த்தனை செய்தான்.

 

பெருமாளை சேவித்துவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்தவன் கண்களில் குழலி கண்மூடி அழுது கொண்டிருந்த கோலம் தென்பட்டது. பதைத்து போய் அவரிடம் பேச அவர் வெண்பாவின் தந்தையின் நிலை பற்றியும் திருமணம் பற்றிய பேச்சு வார்த்தை பற்றியும் கூறினார். ஒரு கணம் யோசித்தவன் உடனே அவரிடம் “நீங்கள் வீட்டுக்கு போங்கள், வெண்பா நிச்சயமாக இந்த திருமணத்திற்கு சம்மதிப்பாள் என்று கூறி அவரை ஆறுதல் படுத்திவிட்டு வீட்டிற்கு வந்தான். தலையில் கை வைத்து அமர்ந்தவனின் மண்டை கனத்தது. அவளை விட்டு தரமுடியாது என்று நினைத்தாலும் அவள் தந்தையின் உடல் நிலை, அவள் தாயாரின் கண்ணீர் எல்லாமும் சேர்ந்து அவனை குழப்பியது.

 

_________________________

 

“என்னை நிலைப்படுத்திக் கொண்டு உன்னிடம் இருந்து எப்படி விலகுவது என்பது பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். அதற்கு தகுந்தாற்போல் நீயும் வீட்டிற்கு வந்தாய், உன்னை அருணுடன் சம்மந்தப்படுத்தி தவறாக பேசினேன், மனம் வலிக்க தான் அவ்வாறு பேசினேன். உன்னை தவறாக பேசினால் மட்டுமே நீ என்னை விட்டு விலகுவாய் என்று தோன்றியது.

 

“உன்னை எப்படியும் என்னால் கைபிடிக்க முடியும் ஆனால் அது உன் வீட்டாரை கஷ்டப்படுத்தி நடக்கக் கூடாது என்று நினைத்தேன். ஐஸ்வர்யா அவள் தாய் தந்தையை பிரிந்து பட்ட கஷ்டம் நமக்கு தெரியும். அதுபோல் ஒரு நிலையில் உன்னை நிறுத்தி நான் உன்னை மணக்க நினைக்கவில்லை. உன் அன்னை உனக்கு அருணுடனான திருமணத்தில் உன் தந்தை ஆர்வமாக இருப்பதாக் கூறினார்.

 

“நீ தான் விருப்பமில்லாமல் இருப்பதாகவும் உன் தந்தையின் நெஞ்சு வலி பற்றியும் கூற என்னால் சுயநலமாக யோசிக்க முடியவில்லை. ஆனாலும் ஒரு வார்த்தை உன்னிடம் பேச நினைத்து தான் உனக்கு போன் செய்து பேசலாம் என்று நினைத்து போன் செய்தேன், ஆனால் நீ போனை எடுக்கவில்லை. இனியும் அந்த ஊரில் இருந்தால் நான் மீண்டும் உன்னை சந்திக்க நினைப்பேன், என்னால் என்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என்று தோன்றியது. அதனால் தான் ஊரைவிட்டு போக முடிவு செய்தேன்.

 

“உன் வாயால நீ என்னை வேணாம்ன்னு சொன்ன இந்த ஒரு வாரமும் நான் எப்படி பைத்தியக்காரனா இருந்தேன்னு எனக்கு தான் தெரியும். என்னால எந்த வேலையும் பார்க்கக் கூட முடியல. செத்துடலாம் போல இருந்துச்சு. உன் வார்த்தைகள் என்னை காயப்படுத்துச்சு. அப்போது தான் எனக்கு புரிந்தது நான் உன்னை விட்டு விலகி வரும்போது நீ எப்படி தவிச்சு இருப்பேன்னு. என்ன இருந்தாலும் நான் அன்னைக்கு பேசிய வார்த்தைகள் அதிகம், என்னை மன்னிச்சுடு வெண்பா.

“உன்னை திரும்ப வால்பாறையில சந்திப்பேன்னு நான் நினைக்கவே இல்லை. உன்னை பார்த்த போது வேண்டும் என்று தான் உன்னை சீண்டி பேசினேன், அப்போது தான் உனக்கு திருமணம் ஆகவில்லை என்று தெரிந்து கொண்டேன். உன்னையே சுற்றி சுற்றி வந்தேன், அதற்கு பிறகு நடந்த எல்லாம் உனக்கே தெரியும் என்றான் அவன் குரலில் வேதனையுடன்.

 

அவனிடம் எதுவும் கூறாமல் “நான் வர்றேன் என்று கூறி விர்ரென்று கிளம்பிச் சென்றுவிட்டாள் அவள். “வெண்பா என்று அவன் கூப்பிட்டது காற்றிலே கரைந்து போனது. இதற்கு மேலும் இங்கு நின்றால் தான் ஓடிச் சென்று அவனிடம் சரணடைந்து விடுவோம் என்று எண்ணி அவள் அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

 

நேரே வீட்டிற்கு சென்றவளின் முகம் ஒரு மாதிரி இருப்பதை குழலி உணர்ந்தார். வெண்பா படுக்கையறைக்குச் சென்று கட்டிலில் விழுந்தாள். கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது. அவன் கூறியது அவள் காதுகளில் இன்னமும் கேட்டுக் கொண்டிருந்தது.

 

‘எனக்காக என் அன்னையும் தந்தையும் வருந்தக் கூடாது என்று என்னை பிரிந்தவனை நான் தப்பாக நினைத்துவிட்டேனா. அவன் கூறுவது உண்மை தானா, இனியாவை பற்றி வேறு ஏதோ கூறுகிறானே. பேசாமல் அன்னையிடமே கேட்டு விடலாமா, ஆனால் அவரிடம் சென்று எப்படி கேட்கமுடியும் அவள் தந்தையின் கடைசி ஆசை என்னவென்று, அது தன் தாயை வேதனைப்படுத்துவது போல் ஆகாதா. ஆனால் இனியா அவளை பற்றி அருணிடம் கேட்கலாமே என்று பலவாறான யோசனைகளுடன் நீண்ட நேரமாக அமர்ந்திருந்தாள்.

 

அவள் மேல் ஆதரவாக ஒரு கரம் விழ எழுந்து அமர்ந்தவளின் எதிரில் குழலி அமர்ந்து இருந்தார். “என்ன வெண்பா என்கிட்டே உனக்கு என்ன தயக்கம் எதுவானாலும் என்கிட்டே கேளும்மா என்றார் அவர் ஆதரவாக. “ஒண்ணுமில்லைம்மா என்றாள் அவள்.

 

“எனக்கு தெரியும் வெண்பா, சித்தார்த் தம்பி இப்ப தான் சொன்னாங்க. உன்கிட்ட எல்லா விஷயமும் சொல்லிட்டதா, அவர் சொன்னது நிஜம் தான் அன்னைக்கு உன் அப்பாவோட நிலைமை பார்த்து நான் கோவில்ல அழுதது நிஜம் தான், திருமண விஷயம் பற்றி நான் அவரிடம் சொன்னதும் நிஜம் தான்

 

“நீ அந்த தம்பிகிட்ட பேசறதுல எனக்கு வித்தியாசம் தெரிஞ்சது வெண்பா, நீ அவரை விரும்பறேங்கற சந்தேகம் எனக்கு முதல்ல இருந்தே இருந்துச்சு. ஒருவேளை நான் தான் தெரியாம யோசிக்கறனோன்னு தான் பேசாம இருந்துட்டேன். உன் கல்யாணம் பத்தி இனியா வீட்டில் இருந்து வந்து பேசிட்டு போனதுல இருந்து உன் முகம் சந்தோஷமாக இல்லை. அப்போது தான் உன் அப்பா நெஞ்சு வலின்னு படுத்தார்.

“என்னால எதையும் யோசிக்க முடியல, அவர் நல்லா இருக்கும் போது அவர் விரும்பின மாதிரி உன் திருமணம் நடக்கணும் நினைச்சேன். அன்னைக்கு கோவில்ல நான் அந்த தம்பிய யதேச்சையாக தான் சந்திச்சேன். என் மனசுல இருந்ததை எல்லாம் யதேச்சையா தான் சொன்னேன். ஆனா நீங்க பிரிய அது தான் காரணமா இருக்கும்ன்னு நான் நினைக்கலம்மா.

 

“ஆனா எப்படியோ உன் அண்ணா கல்யாண விஷயம் தெரிஞ்சு, அருண் தம்பி ஏதோ பேசி இந்த கல்யாணம் நின்னது. உன் அப்பா இறந்து போவதற்கு முதல் நாள் நான் உனக்கு சித்தார்த் தம்பியின் மேல் விருப்பம் இருப்பதை பற்றி அவரிடம் பேசினேன். அவர் எவ்வளவு சந்தோசமாக இருந்தார் தெரியுமா, காலையில் விடிந்ததும் நேரே அவரை சென்று சந்தித்து உன் திருமணம் பற்றி பேசப் போவதாக கூறி மகிழ்ந்தார். ஏகப்பட்ட கனவுகளுடன் அன்று இரவு படுத்தவர் எழாமலே போய்விட்டார் என்றார் குழலி ஒருவித கவலை தோய்ந்த குரலில்.

 

“உன் அப்பாவுக்கு உன் மேல எந்த கோபமும் இல்லை, உன் விஷயம் கேள்விபட்டதும் அவர் அளவில்லா சந்தோசம் தான் அடைஞ்சார். உன் அண்ணன் மேல தான் கொஞ்சம் வருத்தமா இருந்தார். ஏன்னா அவன் கல்யாணத்தைக் கூட பார்க்கவிடாம செய்துட்டானேன்னு தான் அவருக்கு கவலை. மற்றபடி உங்க மேல எந்த வருத்தமும் அவருக்கு இருந்தது இல்லை.

 

“போன வாரம் சித்தார்த் தம்பி இங்க வந்து இருந்தார். உங்கப்பா மறைவுக்கு காரணம் அவர் தான்னு நினைச்சு மன்னிப்பு கேட்டார். அப்போது தான் நான் உங்கப்பாவோட ஆசை பற்றி சொன்னேன். னாம் இந்த ஊருக்கு வரணும்னு தான் எனக்கு உடம்பு சரியில்லைன்னு டாக்டரை சொல்லவைச்சேன்.

 

“அவங்களும் ஏதாச்சும் மலை பிரதேசம்னு சொல்ல நீயும் இந்த ஊருக்கு வரலாம்னு சொல்லிட்ட. அப்போ நீங்க ஏன் பிரிஞ்சீங்கன்னு எனக்கு தெரியாது. எப்படியோ அந்த தம்பிய இங்க பார்த்தோம், அதுவே நல்லதா போச்சு, நீ இனியாவது ஒரு நல்ல முடிவை எடுப்பேன்னு நான் நினைக்கிறேன். யோசிச்சு நல்ல முடிவு எடும்மா என்று கூறி வெளியே சென்று விட்டார் குழலி.

 

யோசித்து யோசித்து வெண்பாவுக்கு தலையே வெடித்துவிடும் போல் இருந்தது. வெகுநேர யோசனைக்குப்பின் கண்ணயர்ந்தாள். குழலி அவ்வளவு கூறிய பின்னும் அவள் மனம் சமாதானமடைய மறுத்தது, அவளின் மனதின் ஓரத்தில் ஒரு கேள்வி அவளை குடைந்தது. அவன் ஏன் இனியாவை பற்றி தப்பாக சொன்னான், இனியா அப்படி எதுவும் கூறி இருக்க வாய்ப்பில்லை ஏனேனில் அவள் அருணுடன் ஹோட்டலுக்கு சென்ற அன்று அவள் தான் இனியாவிற்கு போன் செய்து சித்தார்த்தை அவள் விரும்புவதை பற்றி கூறியிருந்தாள்.

இனியும் யோசித்தால் வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்தவள், அவள் போனை எடுத்து அருணுடைய எண்ணை தேடினாள். அவனுடைய எண்ணுக்கு தயங்கியவாறே போன் செய்தாள். அவள் தந்தையின் இறப்புக்குப்பின் ஓரிரு முறை மட்டுமே அவள் அவனுடன் பேசியிருந்தாள், அதன் பின் அவள் அவனிடம் பேசியதேயில்லை.

 

ரிங் போய் கொண்டேயிருந்தது. எதிர்முனையில போனை எடுக்கும் அரவம் தெரிந்தது. “ஹலோ என்றது ஒரு இனிய பெண் குரல். “ஹலோ நான் வெண்பா பேசறேன், இனியாவோட தோழி. அருண்கிட்ட பேசணும் என்றாள் அவள்.

 

“நீங்க தான் அந்த வெண்பாவா, இவர் உங்களை பத்தி சொல்லியிருக்கார். நான் கூட உங்ககிட்ட பேசணும்னு நினைச்சு இருக்கேன். உங்க நம்பர் இவங்ககிட்ட இல்லையாம், நீங்க உங்க பழைய நம்பர் மாத்திட்டீங்கன்னு சொன்னாங்க. அய்யோ, பாருங்களேன் நான் பாட்டுக்கு வளவளன்னு பேசிட்டு இருக்கேன்.

 

“என் பேரு நந்தினி நான் அவரோட மனைவி தான் பேசறேன், அவர் சாப்பிட்டுட்டு இருக்கார். நீங்க அதுவரைக்கும் என்கூட பேசிட்டு இருக்கலாமே என்று அவள் மூச்சு விடாமல் பேசியதில் வெண்பா மலைத்தாள்.

 

“என்னம்மா நீ யார்கிட்ட பேசிட்டு இருக்க என்றது ஒரு குரல். “ஏங்க நீங்க சொல்லியிருக்கீங்களே வெண்பா, அவங்க தாங்க பேசுறாங்க, நீங்க சாப்பிட்டுட்டு இருந்தீங்க. அதான் நான் அதுவரைக்கும் பேசிட்டு இருந்தேன். இந்தாங்க நீங்க பேசுங்க என்று கூறி போனை அருணிடம் கொடுத்துவிட்டு சென்று விட்டாள்.

 

“ஹலோ, சொல்லுங்க வெண்பா, எப்படி இருக்கீங்க. நீங்க ஏன் உங்க நம்பரை என்கிட்டே குடுக்காம போய்டீங்க. நான் எதுவும் உங்களை தொந்திரவு செய்வேன்னு நினைச்சுட்டீங்களா என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்.

 

“அய்யோ அப்படி எல்லாம் நான் நினைக்கல, மனசு சரியில்லாம இருந்தேன், யார் கூடவும் பேச எனக்கு சக்தியில்லை. அதான் அப்படியே இருந்துட்டேன், அது தப்பு தான், நீங்க என்னை மன்னிச்சுடுங்க. இனியா எப்படி இருக்கா, அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சா, எங்க இருக்கா என்று கேள்விகளை அடுக்கினாள்.

 

“இனியா கல்யாணத்துக்கு கூட உங்களுக்கு பத்திரிகை வைக்க முடியல, நீங்க அப்போ இந்த ஊரிலேயே இல்லைன்னு சொன்னாங்க, அவ இப்ப லண்டன்ல இருக்கா. ஒரு பையன் இருக்கான், அம்மா அப்பா கூட அவளை பார்க்கத்தான் போய் இருக்காங்க.

 

திடிரென்று நினைவுக்கு வந்தவனாக “வெண்பா, இன்னொரு விஷயம் சொல்லணும். ஆனா நீங்க அதை தப்பா எடுத்துக்கூடாது என்று பீடிகை போட்டான். சட்டென்று ஒரு பயம் உள்ளே பரவ என்னவாக இருக்கும். ஒருவேளை சித்தார்த் சொன்னது உண்மையாக இருக்குமோ என்று யோசித்துக்கொண்டே “சொல்லுங்க, நான் ஏன் தப்பாக நினைக்க போகிறேன் என்றாள் அவள்.

 

“வெண்பா இந்த விஷயத்தை நீங்க இனியாவோட நிலையில் இருந்து யோசிக்கணும் என்று கூறித்தொடர்ந்தான். “அன்று நீங்கள் என்னிடம் பேசவேண்டும் என்பதற்காக ஹோட்டலுக்கு சென்றோமே நினைவிருக்கிறதா என்றான். எப்படி அவளால் அந்த நாளை மறக்க முடியும், சித்தார்த்தும் அவளும் பிரிந்த நாள் அது. அதை நினைக்கும் போதே உள்ளே ஒரு வலி எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை. “இம் என்று பதிலிறுத்தாள் அவனுக்கு.

 

“இனியாவுக்கும் உங்க அண்ணாவுக்கும் நிச்சயம்ன்னு முடிவு பண்ணதுல இருந்து இனியா உங்கண்ணன் தான் அவளுக்கு எல்லாமேன்னு முடிவு பண்ணிட்டா, அந்த எண்ணத்துல அவர் ஒரு தப்பு பண்ணிட்டா என்று தயங்கியவாறே நிறுத்தினான். அந்த பக்கத்தில் கனத்த மௌனம் நிகழவே அவனே மேலும் தொடர்ந்தான்.

 

“அன்னைக்கு நீயும் நானுமாக முதலில் ஹோட்டலுக்கு சென்றுவிட்டோம். வீட்டில் இருந்து கிளம்பி வர இனியா தாமதம் செய்தது உனக்கும் நினைவிருக்கும் என்று நினைகிறேன். அவள் தாமதமாக வந்த வேளையில் உள்ளே வர இருந்தவள், அப்போது தான் உள்ளேயிருந்து வெளியே வந்து கொண்டிருந்த சித்தார்த்தை பார்த்திருக்கிறாள்.

 

“அவர் முகம் எதையோ உணர்த்த இவளும் உன் அண்ணனை திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணத்துடன் அவரிடம் நீ என்னுடனான திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டாய் என்று கூறியிருக்கிறான். உன் அப்பாவின் நிம்மதிக்காக நீ சம்மதித்ததாக சேர்த்து சொல்லியிருக்கிறாள். அதன்பின் உன் அண்ணன் திருமணம் நடந்துவிட்டது என்று தெரிந்ததும் பிரமை பிடித்தது போல் இருந்தவளை மாற்றி அவளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தோம். அவள் திருமணம் நடந்த சில மாதங்களில் என்னிடம் வந்து இந்த விஷயம் கூறி மன்னிப்பு கேட்டாள்.

 

“உண்மையான காதல் என்னவென்று உணர்ந்ததாக கூறினாள். உன் அண்ணன் மேல் அவள் வைத்திருந்தது காதல் அல்ல என்றும் இருவரும் சேர்ந்து அன்பு கொண்டால் மட்டுமே அது உண்மையான காதலாக இருக்கமுடியும் என்று புரிந்துக் கொண்டதாகக் கூறினாள். உங்களுக்கு புரிந்த விஷயம் கூட எனக்கு புரியாமல் என் தோழிக்கு துரோகம் செய்துவிட்டேன் என்று மிகவும் வருந்தினாள். உன்னிடம் அவளே பேச வேண்டும் என்று முயற்சி செய்தாள், ஆனால் நீங்கள் எந்த தகவலும் தராமல் வேறு இடம் மாறிவிட்டதால் என்னாலும் இதுபற்றி உடனடியாக எதுவும் தெரிவிக்க முடியவில்லை. இனியா செய்தது சரி என்று நான் சொல்லவில்லை, அவளை புரிந்து கொள்ளுமாறு தான் கேட்கிறேன் என்றான்.

வெண்பா பேச்சிழந்து நின்றாள், பலமுறை அருண் அழைத்தபின்னே அவள் சுயஉணர்வுக்கு வந்தாள். பின் அவனிடம் ஆறுதலாக பேசினாள். இனியாவின் மீது தனக்கு எந்த கோபமும் இல்லை கூறி பின் பொதுப்படையாக பேசிவிட்டு போனை வைத்தாள். போனை வைக்கும்முன் அருண் அவளிடம் “உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்றான். “விரைவில் நடக்கும் என்று கூறி போனை வைத்துவிட்டாள்.

 

ஆதியோடந்தமாக அவளுக்கு எல்லாமே கண்முன் விரிந்தது. பேருந்தில் முதன் முதலாக அவனை பார்த்தது, காற்றில் அலைமோதியத அவன் முடியை கோதிவிட்டது இன்றும் கண்முன் தோன்றி ஒரு சிலிர்ப்பை உண்டாக்கியது. அவன் காதலை சொல்லி முத்தமிட்டது, அவன் தாயின் முன் மோதிரம் மாற்றியது என்று எண்ணம் விரிந்தது.

 

“மோதிரம் பற்றி யோசித்ததும் பீரோவில் லாக்கரில் பொக்கிஷமாக வைத்து இருந்த மோதிரத்தை எடுத்து கையில் அணிந்தாள். ஏனோ அவனே சீண்டுவது போல் இருந்தது, கோர்வையான நிகழ்வுகளில் அவர்கள் பிரிந்த சம்பவமும் அதன்பின் நடந்த நிகழ்வுகளும் தோன்றியது. கடைசியாக அவனை எவ்வளவு கேவலமாக பேசிவிட்டோம் என்று நினைத்தவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

 

அவனிடம் எப்படி பேசப் போகிறோம், அன்று அவனை பெற்றவர்களை கூடமதிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டோமே என்று மருகினாள். இரண்டு நாட்களாக வேலைக்குகூட செல்லாமல் அறையிலேயே அடைந்து கிடந்த மகளைக் கண்டு கவலையடைந்தார் குழலி.

 

வீட்டிலேயே அடைந்துகிடந்தவளை அதட்டி உருட்டி மறுநாள் வேலைக்கு கிளப்பினார். வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தவள் வாசலுக்கு வந்து குழலியிடம் விடைபெற்றாள். அந்த நேரம் சரியாக உள்ளே நுழைந்த கல்யாணி சத்தமாக குழலியை அழைத்தார். “அண்ணி, அண்ணி என்றார்.

 

“என்ன கல்யாணி என்ன விஷயம் காலையிலேயே என்னை தேடி வந்துட்ட என்றார் குழலி. “அந்த சித்தார்த் தம்பிக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்க என்றார் கல்யாணி. சித்தார்த்தின் பெயரை கேட்டதும் சடன் பிரேக் போட்டு நின்றுவிட்டாள் வெண்பா.

 

“அப்படியா, ரொம்ப நல்ல விஷயம். நமக்குதான் கொடுத்து வைக்கல என்று பெருமூச்செறிந்தார் குழலி. “உங்க தம்பி நேற்று இரவு தான் இந்த விஷயத்தை சொன்னார். அதான் சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன். என்னமோ நாம ஒண்ணு நினைக்க வேறா நடக்குது. மனசு கேக்கல. சரி நீங்க வேலையை பாருங்கண்ணி என்று திரும்பியவர் வெண்பா செல்லாமல் நின்ற கோலத்தை பார்த்து, “இனிமே உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை வெண்பா. நீ சந்தோசமாக இருக்கலாம். அந்த சித்தார்த் இனிமே உன்னை தொந்திரவு பண்ணமாட்டார் என்று கூறினார் கல்யாணி.

 

குழலியும், கல்யாணியும் கண்களால் பேசுவதை அறியாதவள் விசுக்கென்று திரும்பி வேகமாக வெளியே சென்றுவிட்டாள். கைப்பையை கூட அவள் விட்டுச் சென்றுவிட்டாள். அவள் வேகமாக எங்கு செல்கிறாள் என்று உணர்ந்த குழலியும், கல்யாணியும் நிம்மதியாக உணர்ந்தனர்.

 

அவனில்லாமல் இனி அவள் எப்படி சந்தோஷமாக வாழ்வது, அவனை இனி ஒரு தரம் பிரிந்த தான் சவமாகி விடுவோம் என்று உணர்ந்தவள் நடையில் வேகத்தை கூட்டினாள். ஒருவழியாக அவன் வீட்டை கண்டுபிடித்து உள்ளே செல்ல முயலும் முன் உள்ளிருந்து பேச்சுக் குரல் கேட்டது. கல்யாணி விளையாட்டாகத் தான் சித்தார்த்துக்கு நிச்சயம் என்று சொன்னார். ஆனால் உண்மையிலேயே அங்கு அது போல ஒரு சம்பவம் நடந்துக் கொண்டிருந்தது.

 

“என் பொண்ணுக்கு உங்க பையனை ரொம்ப பிடிச்சு போச்சு. எஸ்டேட்ல வைச்சு பலதடவை பார்த்து இருக்கா, என்கிட்டயும் சொன்னா. அதான் உங்ககிட்ட பேசிட்டு போகலாம்ன்னு வந்தேன் என்றார் ஒருவர். தான் இந்த நிமிடமே காணாமல் போய் விடமாட்டோமா என்று எண்ணினாள். அடக்க முடியாத அழுகையுடன் வாயை பொத்தியவாறே அங்கிருந்து கிளம்பினாள், பாலாஜி கோவிலுக்கு சென்று வெளியில் அமர்ந்தாள்.

 

அடக்கமுடியாமல் ஓவென்று அழுதாள் அவள், எவ்வளவு நேரம் சென்றிருக்குமோ அவளை தோளோடு யாரோ அணைப்பது போல் தோன்ற மெல்ல நிமிர்ந்தாள். பதறி திரும்பியவள் சூழ்நிலை மறந்து “சித்து, என்னை மன்னிப்பீங்களா என்று கூறி கதறியவள் சுற்றுபுறம் மறந்து அவனை கட்டிக் கொண்டாள்.

 

அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்தான் சித்தார்த். அவளோ அவன் மார்பில் தஞ்சம் அடைந்தவள் இது தான் என் இடம் என்பது போல் அவனிடம் மேலும் ஒண்டினாள். “வெண்பா தயவுசெய்து சுற்று முற்றும் பாரு, எல்லாருமே நம்மளை தான் கவனிக்கறாங்க. இது கோவில், வா நாம் கார்ல உட்கார்ந்து பேசலாம் என்றான்.

 

அதன் பிறகும் அவள் அவனை விடாது பிடித்திருக்க “யாரோ ஒருத்தர் சென்னையில என்கிட்ட ஒண்ணு சொன்னாங்க என்று சொல்லி நிறுத்தினான். “என்ன சொன்னேன் என்றாள் அவள்.

 

“இது கோவில் இங்க எனக்கு தெரிஞ்சவங்க நிறைய பேரு இருக்காங்கன்னு நான் கையை பிடிச்சதுக்கு சொன்னாங்க. இப்போ என்னடான்னா என்னை பிடிச்ச பிடியை விடமாட்டேங்கறாங்க என்று அவளை கிண்டலாக பார்த்தான்.

“ஹ்ம்ம்… என்று தொடர்ந்து சிணுங்கியவள் அவன் சட்டையில் மூக்கை தேய்த்தாள். “மூக்கை துடைக்க என் சட்டை தான் கிடைச்சுதா. இங்க பாரு இங்க எனக்கு தெரிஞ்சவங்க நெறைய பேரு இருக்காங்க. எனக்கு யாரை பத்தியும் கவலையில்லை, நீ இப்படியே அழுதுட்டே வந்த அப்புறம் அன்னைக்கு சொன்ன மாதிரி உன்னை தூக்கிட்டே போய்டுவேன் பரவாயில்லையா என்றான் அவன். ‘அய்யோ என்று பதறியவள் கண்களை துடைத்துக் கொண்டாள்.

 

காரில் ஏறியபின்னும் அவன் அவளை பேசவிடவில்லை. நேராக காரை செலுத்தி சென்றவன் ஒரு வீட்டின் முன் நிறுத்தினான். அது அன்று அவள் வந்த வீடு, ஸ்ரீயின் வீடு. வாசலில் கார் வரும் அரவம் கேட்டு ஸ்ரீயும், ஐஸ்வர்யாவும் வெளியே வந்தனர்.

 

ஐஸ்வர்யா ஓடிவந்து வெண்பாவை கட்டிக் கொண்டாள். அவர்களை உள்ளே சென்று அமரவைத்துவிட்டு “நீங்கள் பேசிக் கொண்டிருங்கள் என்று நாகரீகமாக விலகிச் சென்றனர் ஸ்ரீயும், ஐஸ்வர்யாவும். “இங்கே வா என்று அவளை அழைத்தான் சித்தார்த். வெண்பாவுக்கு வெட்கமாக இருந்தது.

 

“ஏய் என்னடி கோவில்ன்னு கூட பார்க்காம கட்டிபிடிச்ச, இப்ப இங்க நாம ரெண்டு பேர் தான் இருக்கோம். என்னை பார்த்து தயங்குற என்று கூறிச் சிரித்தான் சித்தார்த். அவன் அருகில் வந்து அமர்ந்தவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் அவன்.

 

“சித்து என்னை மன்னிப்பீங்களா, நான் உங்களை ரொம்ப காயப்படுத்திட்டேன். நீங்க உண்மையிலே என்னை புரிஞ்சுகிட்டது தெரியாம நான் ஏதேதோ பேசிட்டேன் மன்னிச்சுடுங்க என்று கூறி அவன் தோளில் சாய்ந்தாள். “உங்களுக்கு கல்யாணம்னு பேசினாங்களே, நானே கேட்டேனே. அது என்னாச்சு என்று மென்று முழுங்கியவாறே கேட்டாள்.

 

“நீ சுஜிகிட்ட தானே வீட்டு அட்ரஸ் வாங்கின, அவ தான்  எனக்கு போன் பண்ணி சொன்னா, அதுக்குள்ள அந்த எஸ்டேட் ஓனர் வேற வந்துட்டார். அவங்ககிட்ட பேசிட்டு இருக்கும்போது தான் யாரோ வெளிய ஓடற சத்தம் கேட்டுது. வெளிய வந்து பார்த்தது நல்லதா போச்சு. அவங்ககிட்ட நான் என்னோட மறுப்பை சொல்லிட்டேன்டி. அவங்களை ஒரு வழியா அனுப்பிவைச்சுட்டு உன்னை தேடி தான் ஓடிவந்தேன். நீ பெரிய வீராங்கனை நடந்தே கோவிலுக்கு போயிட்டு இருந்த, அப்புறமும் எனக்கு நம்பிக்கையில்லை.

 

“நீ அழறது பார்த்து மனசு கேட்காம தான் உன்னை தோள்ல சாய்ச்சுகிட்டேன். ஆனா நீ சித்துன்னு சொல்லி என் தோள்ல சாய்ந்ததும் அந்த நிமிஷமே எனக்கு புரிஞ்சு போச்சு. நீ உன்னை உணர்ந்து தான் வந்து இருக்கேன்னு, இப்போ நீ தெளிவாகிட்ட தானே என்றான். “நான் தெளிவாகிட்டேன், ஆனா உங்ககிட்ட எப்படி மன்னிப்பு கேட்கறதுன்னு தான் நான் உடனே வரல, ஆனா உங்களுக்கு நிச்சயமாயிருச்சுன்னு கல்யாணி அத்தை சொன்னதும் எனக்கு எங்கிருந்து தான் ஆவேசம் வந்துச்சுன்னு தெரியல. அப்புறம் தான் சுஜிகிட்ட பேசி உங்கவீட்டு அட்ரஸ் வாங்கினேன், உங்க வீட்டை தேடி வந்துட்டேன்.

 

“என்னை மன்னிச்சுடுங்க சித்து, என்னை அருண் வீட்டில இருந்து பொண்ணு கேட்டு வந்தபோது வெளியே இருந்த நீங்க என்ன பாடுபட்டு இருப்பீங்கன்னு, இப்ப எனக்கு புரியுது. கிட்டத்தட்ட நானும் இன்னைக்கு அது போல ஒரு நிலையில தான் இருந்தேன். எனக்கே என் மேல கோபம் வந்துச்சு, செத்துபோய்டலாம்னு கூட தோணுச்சு என்றவளை இழுத்தணைத்தான் அவன்.

 

“நம் வாழவே ஆரம்பிக்கல அதுக்குள்ளே நீ ஏன் சாகறதை பத்தி பேசறே என்று அவளை கண்டித்தான். “நான் என்னோட மனநிலையை சொன்னேங்க, நீங்களும் இப்படித்தானே வேதனைப்பட்டு இருப்பீங்க என்றாள் அவள். “விடு வெண்பா பழசை பேச வேணாம். உனக்கு என்னை புரிஞ்சுடுச்சு தானே. எனக்கு அது போதும், அது போல எனக்கும் உன்னை நல்லா புரிஞ்சு போச்சு என்று கூறி கண்ணடித்தான்.

 

“என்ன புரிஞ்சு போச்சு என்றாள். “அன்னைக்கு என்னை வேணாம்ன்னு சொல்லிட்டு மறுநாள் கோவில்ல வைச்சு எங்கப்பா, அம்மா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டியாமே. உன் மாமியார், மாமனார் கண்டிப்பா சொல்லிட்டாங்க. நீ தான் அவங்க மருமகளா வரணும்னு, நீ வெறும் வாய் சவடால்காரி தான், அப்புறம் மன்னிச்சுடுங்கன்னு சொல்லி கால்ல விழுவ, கட்டிபிடிப்ப என்றவனை பிடித்து தள்ளிவிட்டாள்.

 

“என்னையே கிண்டல் பண்ணவளாச்சே நீ இந்த விசுவாமித்ரனை மயக்குன அந்த மேனகையும் நீ தானேடி என்று கூறி கிண்டல் செய்தான். “அய்யோ இன்னுமா அதெல்லாம் ஞாபகம் வைச்சு இருக்கீங்க என்று வெட்கினாள் அவள். “அது மட்டும் இல்ல, நீயா எனக்கு ஒண்ணு கொடுத்தியே அது கூட எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. அதுபோல இப்ப ஒண்ணு கிடைக்குமா என்று கூறி அவளை கிறக்கமாக பார்த்தான்.

 

அவன் பார்வையில் வெட்கியவளைஅவன் இழுத்து அணைத்து முத்தங்கள் பரிமாறினான், இதழ்கள் மௌன யுத்தம் நடத்திக் கொண்டிருந்தது அங்கு. அவளை மெதுவாக அவன் விடுவிக்க அவன் கேட்ட ஒன்றை அவன் எதிர்பார்க்காத தருணத்தில் அவள் கொடுத்தாள். அவனை அணைத்து அவன் முகம் எங்கும் அவள் முத்தமிட அவன் மகிழ்ந்து போனான்.

 

“என்னங்க நாம கல்யாணம் பண்ணிக்கலாம் என்றாள். “ஏய் கள்ளி, அவ்வளவு ஆசையா, நான் இப்பவே ரெடி. எதுக்கு கல்யாணம் பண்ற வரைக்கும் காத்திருக்கணும். இங்க எல்லா வசதியும் இருக்கு கண்ணம்மா என்றான் அவன். அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்தவள் “சீய், நீங்க எப்படி ஆளு, ரொம்ப மோசம் போங்க. நான் அதுக்காக சொல்லலை, இனி ஒரு பிரிவை என்னால தங்க முடியாது, உங்களை பிரிஞ்சு இத்தனை வருஷம் இருந்ததே போதும் என்று கூறி கண்ணீருடன் அவன் மார்பில் சாய்ந்தாள்.

 

மறுநாள் நல்ல நாளாக இருந்ததால் சித்தார்த் வீட்டினர் முறைப்படி வந்து நிச்சயம் செய்துவிட்டு சென்றனர். மறுவாரமே அவர்கள் திருமண தேதி உறுதி செய்யப்பட்டு ஆளாளுக்கு ஒரு வேலையை எடுத்துக் கொண்டு செய்யலாயினர். ஐஸ்வர்யாவின் தாயும், தந்தையும் கூட வந்து கல்யாண வேலைகளில் தங்கள் பங்கு இருக்குமாறு பார்த்துக்கொண்டனர்.

 

பொள்ளாச்சி மயூரா மஹால் திருமண அலங்காரம் கொண்டது. அடர்ந்த ரோஜா நிற வண்ணத்தில் சேலையுடுத்தி மணப்பெண்ணுக்கு உரிய அலங்காரத்துடன் வந்தவளை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த். பட்டு வேட்டி சட்டையில் முதன் முதலில் அவனை பார்த்தவளும் அதே நிலையில் இருந்தாள்.

 

“டேய் நாங்க எல்லாரும் இங்க தான் இருக்கோம். கொஞ்சம் எங்களையும் பாருடா, என் தங்கச்சியவே முழுங்கற மாதிரி பார்க்குற என்று கூறி ஸ்ரீ கிண்டலடித்தான். “ஏன் சொல்லமாட்டீங்க, எங்க அண்ணனுக்கு சப்போர்ட்டா நாங்க இருப்போம். நீங்க கொஞ்சம் திரும்பி உங்க தங்கச்சிய பார்த்துட்டு எங்கண்ணனை பேசுங்க, பாருங்க அவங்க எங்க அண்ணனை எப்படி பார்க்குறாங்க பாருங்க என்று பதிலுக்கு கொடுத்தாள் ஐஸ்வர்யா.

 

“ஆமா ஐஷு அதுவும் சரி தான், ஆனாலும் எல்லாருமா சேர்ந்து எங்கண்ணனை அண்ணியையும் ஓட்டாதீங்க, ரெண்டு பேருக்கும் நான் தான்பா ஆதரவு என்றாள் சுஜி. “அண்ணியா என்னடி இதெல்லாம் என்றாள் வெண்பா.

 

“நான் மட்டும் உன்னை அண்ணின்னு கூப்பிடல, உன் மாமியார் என் வாயில சூடு போடுவாங்க. ஏற்கனவே என்னையும், நிம்மியையும் கூப்பிட்டு சொல்லிட்டாங்க என்றாள் சுஜி.

 

“சரிங்கண்ணி என்று ஆமோதித்தாள் வெண்பா. “நீ எதுக்கு என்னை அண்ணின்னு கூப்பிடுற என்றாள். “எங்கண்ணன் மனைவி எனக்கு அண்ணி தானே என்று கண்ணடித்தாள் வெண்பா. “போதும் போதும் ஆளாளுக்கு பாசத்தை பிழிஞ்சு ஊறுகாய் போடாதீங்கப்பா, நடக்க வேண்டியது சீக்கிரம் நடக்கட்டும் என்று இடையிட்டான் சித்தார்த். சம்பிரதாயங்கள் முடிந்து சித்தார்த் வெண்பாவின் கழுத்தில் பொன் தாலி அணிவிக்க் மூன்றாம் முடிச்சை நளினி போட்டாள். வெண்பாவின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டன.

 

காவியன் குடும்பமாக வந்திருந்தான், தங்கையை தாரை வார்த்துக் கொடுத்தவன் கண் கலங்கி நின்றான். சித்தார்த்தின் கைகளை பிடித்துக்கொண்டு அவளை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு கூறினான். குழலியும் கண்கள் கலங்க வெண்பா அவரை பார்த்து ஓவென அழ சித்தார்த் ஆதரவாக அவள் கைகளை பிடித்தான்.

 

திருமணம் பொள்ளாச்சியில் நடைபெற்றதால் அவர்கள் அனைவரும் அன்று இரவு நளினியின் வீட்டில் தங்குவதாக ஏற்பாடானது. சிவபிரகாசம், கோதை படத்திற்கு முன் நின்று இருவரும் வணங்கி எழுந்தனர். தன் தாயின் நகைகளை நளினி வெண்பாவுக்கு போட அவள் கண் கலங்கி நின்றாள்.

 

குழந்தைகள் ஒரு பக்கமாக விளையாட பெரியவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு பக்கம் பேச, நண்பர்கள் வட்டம் சேர்ந்து சித்தார்த்தையும், வெண்பாவையும் கிண்டலடித்துக் கொண்டிருந்தனர். எல்லாருமாக சேர்ந்து சூழ்நிலையை கலகலப்பாக்கியவாறே முதலிரவு அறையை அலங்கரித்தனர். சுஜி, நிம்மி, ஐஸ்வர்யா புடைசூழ வெண்பா முதலிரவு அறைக்கு சென்றாள். அவர்கள் அவளை வெளியில்விட்டு செல்ல தயங்கியாவாறே உள்ளே சென்றாள்.

 

அதுவரை ஒரு மனநிம்மதியுடன் இருந்த வெண்பாவிற்கு புதுப்பெண்ணுக்கே உரிய வெட்கமும், கூச்சமும், பயமும் வந்தது. அழகான வெண்ணிறப்பட்டு உடுத்தி அறைக்குள் வந்தவளை இமைக்காது பார்த்தான் அவன்.

 

கதவை அடைக்காமல் பதட்டத்துடன் நின்றவளைக் கண்டு லேசாக சிரித்துவிட்டு அவனே வந்து கதவை அடைத்தான். அவளை கைகளை மெதுவாக பிடிக்க அது சில்லிட்டு போயிருந்தது. அவள் இடையில் ஒரு கை கொடுத்து இரு கைகளாலும் அவளை தூக்க “ஒருவழியா என்னோட ஆசை நிறைவேறிடுச்சு என்றான் அவன்.

 

‘என்ன என்பது போல் அவள் பார்க்க “உன்னை தூக்கணும்னு எவ்வளோ நாள் நினைச்சுட்டு இருந்தேன், அதை தான் சொன்னேன் என்றவன் அவளை கீழே போடுவது போல் ஒரு கையை விட அவளோ அவளோ இருகைகளாலும் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவன் தோளில் முகம் புதைத்தாள்.

 

மெதுவாக அவளை கட்டிலில் இறக்கிவிட்டான். தூரத்தில் எங்கோ இனிமையான பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

 

“நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை…

கண்களை உயர்த்தி அவளைப் பார்த்தான், அவள் கண்களில் வழிந்த கண்ணீரை ஒருவிரலால் துடைத்தான். “வேண்டாம் வெண்பா, இனி எதைப்பற்றியும் யோசிக்காதே, இனி உனக்கு நான், எனக்கு நீ. இந்த நிமிடம் நிஜம் வெண்பா, நீ எனக்கானவள், காத்திருந்தாலும் உன்கை பிடித்துவிட்ட சந்தோசம் எனக்கு நிறைய இருக்கிறது. அதுபோலவே உனக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன் என்றான்.

 

“ஐ லவ் யூ சித்து என்று நெகிழ்ந்து போய் கூறியவள் அவன் மார்பினில் முகம் புதைத்தாள். வானம் இருள் போர்வையை போர்த்திக் கொண்டு சாரலாகி பன்னீர் தூவி அவர்களுக்கு வாழ்த்து சொல்லியது. இனிமையானதொரு இல்லறம் அங்கு அரங்கேறஅவர்கள் வானில் இனி எந்த மாற்றம் வந்தாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் எந்த மாற்றமும் இல்லாமல் சந்தோசமாக வாழ்வர். இனி அவர்கள் வாழ்வில் என்றும் இன்பமே தொடரும்……….

 

“பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

அட எண்ணம் மீறுது, வண்ணம் மாறுது கண்ணோரம்

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்….“

 

 

 

…… நன்றி …..

 

 

Advertisement