Advertisement

அத்தியாயம் –21

 

தூரத்திலேயே அவளை பார்த்துவிட்ட சித்தார்த்துக்கோ தன் உயிரையே பிரிந்த வேதனையாக இருந்தது, அவளை விட்டு ஊருக்கு செல்வது. இத்தனை வருடம் அவளை பிரிந்து மிகவும் துன்பப்பட்டுவிட்டான். இனி ஒரு போதும் அவளை பிரியக்கூடாது என்று நினைக்கும் போது கரடி போல் இந்த வெளிநாட்டு பயணம் வந்து அதற்கு இடையூறாக அமைந்துவிட்டது என்று எண்ணி வருந்தினான்.

 

“சித்தார்த் என்று மெதுவாக அழைத்தான் ஸ்ரீதர் காரை சீரான வேகத்தில் ஓட்டியபடி. “சாரி ஸ்ரீ, எனக்கு அவளோட நினைப்பாவே இருக்குடா. நான் ரொம்பவும் தப்பு பண்ணிட்டேன். இத்தனை வருஷத்துல அவளை ஒரு தடவை நான் தேடி போய் இருந்தா அவளை அப்பவே கல்யாணம் பண்ணி கூட்டி வந்து இருப்பேன். மனசே சரியில்லைடா ஸ்ரீ. எல்லாம் என் தலைவிதிஎன்றான் அவன் சலிப்புடன்.

 

“தப்புடா அது விதி இல்லை எல்லாம் என்னோட தப்பு தான். அவளுக்காக தான் அவளை பிரிஞ்சேன், அவ சந்தோசமா இருக்கணும்னு நினைச்சு தான் அவளை விட்டு வந்தேன். அவளையும் கஷ்டப்படுத்தி நானும் கஷ்டப்பட்டு இப்ப என்ன சந்தோசம் எனக்கு கிடைச்சது, யாருமே சந்தோசமா இல்லையேடா என்றான். “போதும் சித்து விடு அதை பத்தி பேச வேணாம் என்று ஆறுதல் படுத்தினான் ஸ்ரீ.

 

சித்தார்த் இதுவரை இப்படி வேதனைப்பட்டு பார்த்தறியாத ஸ்ரீயால் அவனை அப்படி பார்க்க இயலவில்லை. எப்படியாவது வெண்பாவும் அவனும் ஒன்றாக சேர்ந்து விடவேண்டும் என்று இறைவனை வேண்டினான். அதற்கு தன்னால் ஆன முயற்சிகளை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தவன் நண்பனிடம், மேலும் விசாரித்தான். அவளை அவன் மீண்டும் எப்போது சந்தித்தான் என்று அவனிடம் விபரம் கேட்டான்.

 

ஒரு பெருமூச்சுடன் நண்பனிடம், அவளை மீண்டும் பார்த்த அந்த நாளை நினைவிற்கு கொண்டு வந்தான் சித்தார்த். அவர்களுக்குள் நடந்த பிரச்சினை முதல் நேற்று நடந்தது வரை அனைத்தையும் அவனிடம் கூறினான். ஸ்ரீதருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை, நண்பன் அவளை காயப்படுத்தியது மட்டுமில்லாமல் அவனும் காயப்பட்டு போய் நிற்கிறான் என்று புரிந்தது. இவர்கள் மனம் விட்டு பேசினாலே இந்த பிரச்சினை முடிந்து விடும் என்று தோன்றியது அவனுக்கு.

 

“ஸ்ரீ இன்னொரு விஷயம் இப்போ தான் உணர்ந்தேன், அவளுக்கு அவளோட அப்பா வேலை தான் கிடைச்சுருக்குன்னு நினைக்கிறேன். அவங்க அப்பா இப்ப உயிரோட இல்லன்னு நினைக்கிறேன். அய்யோ நான் அவளை தனியா விட்டுட்டு வந்துட்டேன். நானும் அவளுக்கு வேதனையை குடுத்துட்டு அவளை விட்டு ஓடி ஒளிஞ்சுட்டேன். பாவம்டா அவ ரொம்பவும் கஷ்டப்பட்டு இருப்பால்லடா. எல்லாம் என்னால தான் அவளுக்கு நல்லது செய்யறதா நினைச்சு கெட்டது செஞ்சுருக்கேன் என்று கண்ணீர் விட்ட நண்பனை தேற்றும் வழி தெரியாமல் திகைத்தான் ஸ்ரீ.

 

சாலை ஓரமாக காரை நிறுத்தியவன், நண்பனிடம் திரும்பி “நீ கவலைப்படாதே சித்து. நீ ஊர்ல இருந்து வர்றத்துகுள்ள இந்த நிலைமை மாறிடும். என்னால முடிஞ்ச வரைக்கும் இந்த பிரச்சினை முடிக்க ஏதாச்சும் செய்யறேன்என்றான்ஸ்ரீ.

 

“இல்லடாநீங்க யார் போய் அவகிட்ட பேசினாலும் சரியா வராது. ஏற்கனவே அவ ரொம்பவும் கோபமா இருக்கா, நீங்க யார் போய் பேசினாலும் பிரச்சனை பெரிசாகும். என்னால மட்டும் தான் அவகூட பேசமுடியும். அவளை நானே பேசி சரி பண்றேன்என்றான்அவன்.

 

“நீயும் வெண்பாவை நினைச்சு கல்யாணம் பண்ணிக்காம இவ்வளவு நாள் இருந்துட்ட, வெண்பாவும் உன்னை இன்னும் மறக்கலன்னு தெரியுது, நீங்க சீக்கிரம் ஒண்ணுசேரனும். உன் வேலை சீக்கிரம் முடிச்சுட்டு நீ இங்க வா, ஆமா நீ அங்க எவ்வளவு நாள் தங்க வேண்டி இருக்கும்என்றுவிசாரித்தான்ஸ்ரீ.

 

“ஒரு வாரம் ஆகும்னு நினைக்கிறேன், முடிந்த அளவு சீக்கிரம் வரேன். அப்புறம் அம்மா, அப்பா தனியா இருப்பாங்க, நிர்மலா இல்லைனா சுஜியை வந்து அவங்களோட இருக்க சொல்லணும். அது நீ கொஞ்சம் பார்த்துக்கோ, நானும் அவங்ககிட்ட பேசறேன்என்றான்சித்தார்த்.

 

“நீசுஜிகிட்டபேசிவரச்சொல்லு, நானும்சுஜிகிட்டபேசறேன்என்றான்ஸ்ரீயோசனையுடன். “சரிடாநீஅம்மா, அப்பாபார்த்துக்கோ, நான்ஊருக்குபோயிட்டு போன் பண்றேன். என்றான்சித்தார்த். நண்பனைவிமானம்ஏற்றிவிட்டுசுஜிக்குபோன்செய்தான்ஸ்ரீ.

 

மறுநாளைய விடியல் மீண்டும் விமான நிலையத்திற்கு வந்தான் ஸ்ரீ, விமானத்தில் இருந்து இறங்கியவர்களை காரில் ஏற்றிக் கொண்டு விரைந்தான் வால்பாறையை நோக்கி.

 

“என்ன அண்ணா, போன் பண்ணி உடனே வரச் சொன்னீங்க, அண்ணா வேற ஊருக்கு போய் இருக்காங்க. என்கிட்டே எதுவும் சொல்லவே இல்லை. நீங்க வேற ஏதோ முக்கியமான விசயம் பேசணும் சொன்னீங்க அண்ணன் திருமணம் பற்றின்னு, என்ன அண்ணா சொல்லுங்கஎன்றாள்எல்லாவிதஉணர்சிகளையும்காட்டி.

 

“உன் அண்ணன் விரும்பின பொண்ணு யாருன்னு உனக்கு தெரியுமாஎன்றான்ஸ்ரீகேள்வியுடன். அவனைபுரியாதஒருபார்வைபார்த்தாள். சுஜி, வண்டியின்சீரானகாற்றுவேகத்தில்அவளின்குழந்தைதூங்கிபோயிருந்தாள். ஸ்ரீகாரைநிறுத்திகுழந்தையைபின்இருக்கையில்வசதியாகபடுக்கவைக்குமாறுஅவளிடம்கூறினான். குழந்தையை படுக்க வைத்துவிட்டு அவள் வந்து முன்னிருக்கையில் ஏறிக் கொண்டாள்.

 

“சொல்லுங்க அண்ணா, யார் அந்த மகராசி. எங்க அண்ணனை விட்டுட்டு வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு போன அவளை பற்றி எதுக்கு இப்போது பேச்சு. அதும் இல்லாமல் அவளைப்பற்றி யாரிடம் கேட்டாலும் தான் எனக்கு யாரும் சரியான பதிலை சொல்லவே மாட்டேங்கறாங்க, எனக்கும் அவளைப்பற்றி இனி தெரிந்துக் கொள்ள எந்த அவசியமும் இல்லைஎன்றுநினைக்கிறேன்என்றுநீளமாககூறிமுடித்தாள்அவள்.

 

சிறு சிரிப்புடன் “அது யாருன்னு தெரிஞ்சா நீ இப்படி பேசமாட்டே சுஜிம்மாஎன்றான்ஸ்ரீதர். மீண்டும் அவனை நோக்கி புரியாத பார்வை ஒன்றை வீசினாள் அவள். யார் அந்த பெண் என்று அவளுக்கு இப்போதே தெரிந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது தலை கனத்தது.

 

“உன் குழந்தைக்கு பெயர் வைத்தது யார்என்றான்அவன். “என்னகேள்விஇதுஉங்களுக்குதெரியாதா, அவளுக்குவெண்ணிலான்னு பெயர் வைத்தது அண்ணன் தானேஎன்றாள்சுஜி.

 

“நீ கொஞ்சம் யோசிச்சு பார்த்தா உங்க அண்ணன் விரும்பின பொண்ணு யாருன்னு உனக்கு எப்பவோ தெரிஞ்சு இருக்கும்என்றான்ஸ்ரீ. “எதுக்குஅண்ணாஇப்படிசுத்திவளைக்கிறீங்க, யார்அந்தபெண்என்றாள்அவள்தாளமாட்டாதவளாக.

 

அவன் கூறியதை கேட்டவளுக்கு தன் காதுகள் கேட்டது உண்மைதானா என்று தோன்ற ஆரம்பித்தது. மீண்டும் சுயஉணர்வுக்கு வந்தாள். “என்னது வெண்பாவா, என்னண்ணா சொல்றீங்க, இது பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாம போச்சே, அவகூட என்கிட்டே இது பற்றி எதுமே சொன்னது இல்லையேஎன்றாள்அவள்.

 

“நடந்தது என்ன இப்பவாச்சும் என்கிட்ட எல்லாம் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க அண்ணாஎன்றாள்சுஜி. நடந்தவற்றைஅவளிடம்சுருக்கமாகவிவரித்தான்ஸ்ரீ. அவன்சொல்லிமுடிக்கவும்அவர்கள்வீட்டைஅடையவும்நேரம்சரியாகஇருந்தது. இயந்திரமாகஇறங்கியவள்குழந்தையைதூக்கிக்கொண்டு உள்ளே விரைந்தாள். சுஜியையும், குழந்தையையும் பார்த்த சரளாவும், சுந்தரமும் மகிழ்ந்தனர்.

 

வெண்ணிலா பாட்டியிடம் தாவினாள், ஸ்ரீ வீட்டுக்கு சென்றுவிட்டு பிறகு வருவதாக கூறிவிட்டு சென்று விட்டான். ஸ்ரீ அவன் சம்பாதித்ததில் சொந்தமாக அங்கு ஒரு வீடு வாங்கியிருந்தான். அவன் தந்தை வாங்கியிருந்த வீட்டிற்கு சற்று தள்ளி அந்த வீடு இருந்தது. அவன் வீட்டுக்கு சென்றவன் ஐஸ்வர்யாவிடம் நடந்ததை கூறி என்ன செய்யவேண்டும் என கலந்தாலோசித்தான். அவளையும் அழைத்துக் கொண்டு அடுத்திருந்த சித்தார்த்தின் வீட்டிற்கு சுஜியை காணச் சென்றான்.

 

“சுஜி இப்ப நீ தான் எனக்கு உதவி செய்யணும், நாம எல்லாரும் ஒண்ணா சேர்ந்து தான் அவங்களை ஒண்ணு சேர்க்கணும். அதுக்கு நீ வெண்பாவை போய் பார்க்கணும் சரியாஎன்றான். “சரிண்ணா, நான்போய்பார்க்கறேன். ஆனாஅப்படிபார்த்தாஎன்னநடக்கும்எனக்குபுரியலையேஎன்றாள்அவள்.

 

“என்னசுஜி நீ, இது கூட உனக்கு புரியலியா, வெண்பா உனக்கு தோழி தானே. உன்னால தான் அவகிட்ட சுலபமா பேசமுடியும்என்றாள்ஐஸ்வர்யா. மீண்டும்முழித்தாள்அவள். “சுஜி, நீ அவளை உன் தோழியா மட்டும் தான் சந்திக்க போற, சித்தார்த்தோட தங்கையா இல்லைஎன்றான்ஸ்ரீஅழுத்தம்திருத்தமாக.

 

“நீ போய் அவ வாழ்க்கையில் நடந்த விஷயங்களை யதேச்சையாக கேட்பது போல் அவள் மனதில் உள்ளதை கேட்டு அவள் மனதில் உள்ளதை அறியவேண்டும். அதன்பின் தான் நாம் மேலே என்ன செய்வது என்பது பற்றி யோசிக்க முடியும்என்றுகூறினாள்ஐஸ்வர்யா.

 

“என்னோட பெற்றோர் எனக்கு திரும்ப கிடைச்சதுக்கு சித்தார்த் அண்ணனும் வெண்பாவும் தான் காரணம். அவங்க இப்படி பிரிஞ்சு இருக்கறது. பார்க்க எங்களாலேயே முடியல, அவங்க ஒண்ணா சேரணும். ரெண்டு பேர் முகத்திலயும் சந்தோசத்தை பார்க்கணும். அப்போது தான் நாங்க சந்தோசமாக இருக்கறதுக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்என்றாள்அவள்மேலும்.

 

“எனக்கு புரியுது அண்ணா, நான் இப்ப எப்படி அவளை பார்க்கறது, என்ன செய்யலாம்என்றாள்சுஜி. அதன்படிஅவர்கள்திட்டமிடலாயினர். அன்றுமாலையேஅவள்வெண்பாவைசந்திக்கதிட்டமிட்டனர். ஆனால்அந்தநிகழ்வுயதேச்சையாகஇருப்பதுபோல்பார்த்துக் கொண்டனர்.

 

ஏனோ மனதுக்குள் உற்சாகம் இல்லாதது போல் உணர்ந்தாள் வெண்பா. காரணம் பெரிதாக ஒன்றுமில்லை நேற்று காலையில் அவனை குழந்தையுடன் பார்த்ததில் இருந்து தான் அவள் அவ்வாறு இருப்பதாக உணர்ந்தாள்.மனதில் ஒரு பெரிய பாறாங்கல்லை வைத்தது போல் இருந்தது.

 

கோவிலுக்கு சென்றால் மனம் சற்று அமைதியடையும் போல் தோன்றியது அவளுக்கு. அன்று ஏதோ விடுமுறை தினமாதலால் அவள் தனியாக கிளம்பி பாலாஜி கோவிலுக்கு சென்றாள்.அங்கு அவளுக்கு ஆனந்த அதிர்ச்சியாக ஒன்று நடக்கப்போவது அறியாமல் கோவிலுக்கு விரைந்தாள். கடவுளை தரிசித்ததில் அவள் மனம் சற்று லேசானது. தூணின் ஓரமாக வந்து அமர்ந்தாள். ‘யார் இந்த பெண் எங்கோ பார்த்தது போல் “ஏய் சுஜி என்று கத்திவிட்டாள் அவள். “நீ எப்படி இங்க என்று மகிழ்ச்சியில் சந்தோசமாக கூவினாள் வெண்பா.

 

“ஹேய் வெண்பா, நீ எப்படி இருக்க என்றாள் அவளும் பதிலுக்கு. “நான் நல்லாயிருக்கேன், நீ எப்படி இருக்க, ஆமா நீ எங்க இங்க என்றாள் வெண்பா. “அம்மா, அப்பா இங்க தான் இருக்காங்கடி, நான் அவங்களை பார்க்க தான் வந்தேன்.

 

“சரி என்னை பற்றி அப்புறமாக ஒரு நாள் பேசலாம். நீ முதல்ல உன்னை பற்றி சொல்லு. நீ எங்கடி இங்க, நீ சென்னையில் இருக்கேன்னு நினைச்சுட்டு இருக்கேன். நீ இங்கு எப்படியடி வந்தாய். உன்னை பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றாள் சுஜி. “அது இருக்கட்டும், ஆமா இந்த சுட்டி பெண் யாரு, உன் ஜூனியரா என்றாள் வெண்பா குழந்தையை வாங்கிக் கொண்டே. “இம், ஆமாடி, இவ பேரு வெண்ணிலா என்றாள் அவள்.

 

“என்னடி என் ஞாபகத்துல, என் பேரு வர மாதிரி பேரு வைச்சுட்டியா என்று கண்ணடித்தாள் வெண்பா. “உன் ஞாபகத்துல வைச்சது தான் என்றாள் அவளும் மறுக்காமல். ஆனால் மனதினுள் ‘அது உன் ஞாபகத்தில் என் அண்ணன் வைத்த பெயர் என்று எண்ணினாள் சுஜி. “சீய் விளையாடதேடி என்றாள் வெண்பா. “நிஜமாகத்தான் சொல்கிறேன் என்றாள் மற்றவள். வெண்பாவிற்கு பேச்சேயெழவேயில்லை.

 

சுஜி தான் மீண்டும் பேசினாள், “ஆமா உன் கணவர் எங்கே, அம்மா, அப்பா, அண்ணா எல்லாரும் எப்படி இருக்காங்க என்றாள் அவள். சட்டென்று முகம் கருத்தவள் “எனக்கு இன்னும் திருமணம் ஆகலைடி, அப்பா இப்ப உயிரோட இல்லை. அண்ணன் திருமணமாகி வெளிநாட்டில் இருக்கிறான். அப்பா வேலையில இருக்கும் போதே இறந்து போனதால எனக்கு அப்பாவோட வேலை கிடைச்சுது. அம்மாக்கு அப்பா போனதுல இருந்து உடம்பு சரியில்லை அம்மாவோட உடல்நிலையை யோசிச்சு தான் இந்த இடத்துக்கு மாற்றலாகி வந்தோம் என்று அவளைப் பற்றி சுருங்கக் கூறினாள் வெண்பா.

 

“என்னடி சொல்ற, அப்பாவுக்கு திடிர்னு உடம்புக்கு என்ன வந்தது என்றாள் மற்றவள். “உன்கிட்ட நான் நிறைய பேசணும்டி, நாம திரும்ப சந்திக்கலாம். நீ இப்ப வந்து அம்மாவை பார்த்துட்டு போ, அவங்க சந்தோசப்படுவாங்க என்று கூறி அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் வெண்பா. வெண்ணிலாவை தோளில் போட்டுக் கொண்டு இருவரும் வெண்பாவின் வீடு நோக்கி நடந்தனர். வாசலில் அரவம் கேட்டு குழலி வெளியே எட்டிப் பார்த்தார்.

 

இந்தப் பெண்ணை எங்கோ பார்த்திருக்கிறோமே எங்கு என்று யோசனை செய்தவளிடம் “என்னம்மா அப்படி பார்க்கறீங்க, யாருன்னு தெரியலையா. நம்ம சுஜிம்மா என்னோட காலேஜ்ல ஒன்னா படிச்சவ என்று விளக்கம் கொடுத்தாள் வெண்பா. “வாம்மா சுஜி, எப்படி இருக்க, அம்மா, அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க. உன் குழந்தையா, பெயர் என்னம்மா என்று விசாரித்தார் குழலி.

 

“இவ பெயர் வெண்ணிலாம்மா நாங்க எல்லாரும் நல்ல இருக்கோம்மா என்றாள் சுஜி. வெண்பா அவளை அமரச் செய்துவிட்டு உள்ளே சென்றாள். “ஏன்மா வெண்பா இன்னும் கல்யாணம் செய்துக்கலை என்று குழலியை பார்த்து கேட்டாள் சுஜி.

 

“எல்லாம் எங்க தலைவிதிம்மா, அவ மனசுல ஏதோ எண்ணமிருக்கு, அவளுக்கு கல்யாணத்துல விருப்பமேயில்லைன்னு சொல்றா, நீயாவது அவகிட்ட கொஞ்சம் பேசும்மா என்றார் வேதனையுடன்.

 

“அம்மா நான் உங்ககிட்ட நிறைய பேசணும். வெண்பா இல்லாத போது நான் வருகிறேன். அவளுக்கு இது பற்றி ஏதும் தெரிய வேண்டாம். அவள் வாழ்க்கையை பற்றி ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் அம்மா என்று அவசரமாக கூறிமுடித்தாள்.

 

வெண்பா வரும் அரவம் கேட்டு அவள் குழந்தையை தூக்கிக்கொண்டு எழுந்து நின்றாள். “இந்தா சுஜி காபி குடி என்று அவளுக்கு கொடுத்துவிட்டு குழந்தையிடம் ஒரு சாக்லேட் பாரை நீட்டினாள். அது சுஜியை பார்த்துவிட்டு அவள் சரி என்பது போல் தலையாட்டவும் வாங்கிக் கொண்டது.

 

குழலி உள்ளே சென்றதும் வெண்பா சுஜியிடம் திரும்பி “சரி நீ திரும்ப எப்போதடி வருவ, நான் உன்கிட்ட நிறைய பேசணும் மனசுவிட்டு. யார்கிட்டயாவது என் மனதை திறந்து சொல்லணும் தோணுதுடி. இந்த சனிக்கிழமை பேசலாமா. எனக்கும் அன்று அரைநாளில் வேலை முடிந்துவிடும். உனக்கு வேலை இருந்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றாள் வெண்பா.

 

அவள் பேசும் போது லேசாக கலங்கிய கண்ணை சுஜியும் கவனித்துவிட்டாள், மிகுந்த வேதனை அதில் தெரிந்தது.கடவுளே என் அண்ணனும், வெண்பாவும் நல்லபடியாக இணைய வேண்டும். எங்களின் இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் என்று மனமுருக வேண்டினாள்.

 

“சுஜி, சுஜி என்று வெண்பா கொஞ்சம் சத்தமாக குரலெழுப்ப சுயநினைவுக்கு வந்தவளாக “என்னடி, நாம கண்டிப்பா சனிக்கிழமை பார்க்கலாம். நான் வெண்ணிலாவை அம்மாவிடம் விட்டுவிட்டு வருகிறேன் எனக்கும் உன்னிடம் நிறைய பேசவேண்டி இருக்கிறது என்றாள் சுஜி. அவளிடம் விடைபெற்று கிளம்பினாள் சுஜி. நினைவு வந்தவளாக “வெண்பா நான் போய் அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன் என்று கூற வெண்பா அவசரமாக குழலியை அழைத்தாள்.

“அம்மா, அம்மா இங்க வாங்க, சுஜி கிளம்பறாம்மா என்றாள் அவள். “என்னம்மா சுஜி அதுக்குள்ள கிளம்பிட்ட, நான் உங்களுக்கு தான் டிபன் ரெடி பண்ணிட்டு இருந்தேன். இருந்து சாப்பிட்டு போங்கம்மா என்று வாஞ்சையுடன் அழைத்தார். “இல்லம்மா, நான் கண்டிப்பா இன்னொரு நாள் வரேன். அம்மா, அப்பாகிட்ட சொல்லிட்டு வரலம்மா அவங்க தேடுவாங்க. நான் கிளம்பறேன் என்று கூறி அவரிடம் கண்களால் ஜாடை செய்து அவள் கிளம்பினாள்.

 

கடவுளே என் மகளுக்கு இந்த பெண்ணின் மூலமாகவாவது ஏதாவது நல்லதை நடத்திக்குடு. அவள் பட்ட கஷ்டங்கள் போதும் என்று கண்கள் கலங்க இறைவனிடம் சென்று பிரார்த்தனை செய்தார் குழலி. சுஜி, வீட்டிற்கு வந்ததும் ஸ்ரீயிடம் நடந்ததை விவரித்தாள். இதுவரை அவர்கள் எதிர்பார்த்ததுபோல் நடந்துவிட்டது. இனி மீதி பயணமும் நல்லபடியாக நடக்க அவர்கள் ஆலோசனை செய்தனர்.

 

சித்தார்த் ஸ்ரீக்கு போன் செய்திருந்தான். “என்னடா எப்படி இருக்கே என்றான் ஸ்ரீ. “அவ நினைப்பாவே இருக்கேன்டா, ரொம்ப தனிமையா உணர்றேன். நீ மறுபடியும் அவளை பார்த்தியாடா என்றான் சித்தார்த். “நீ தான் எதுவும் பேச வேண்டாம்ன்னு சொல்லிட்டு போய்ட்ட. அப்புறம் நான் என்னடா பண்றது. அதான் நீ எப்ப வருவேன்னு யோசிச்சிட்டு இருக்கேன் என்றான்.

 

“வேலை முடியல இன்னும் ரெண்டு நாள் ஆகும் போல் இருக்கிறது. ஆமாம் சுஜி வந்துவிட்டாளா, நான் மாப்பிள்ளைக்கு போன் செய்தேன். அவர் தான் சுஜி கிளம்பிவிட்டதாக சொன்னார். கொஞ்சம் அவளிடம் கொடேன் என்றான் சித்தார்த்.

 

சுஜி அவனிடம் சண்டை போட்டுவிட்டு போனை வைத்தாள். சித்தார்த்துக்கு இப்போது தான் தங்கை ஞாபகமே வருகிறதாம், ஒரு போன் செய்து கூட பேசமாட்டானாம் என்று அவனிடம் பொய் கோபம் கொண்டு சண்டையிட்டு, கடைசியாக சமாதானமாகி போனை வைத்தாள்.

 

சித்தார்த்துக்கு ஏனோ வெண்பாவிடம் பேசவேண்டும் போல் இருந்தது. நரசிம்மனுக்கு போன் செய்தான், ஏனேனில் அவனிடம் அவர் எண் மட்டுமே இருந்தது. வெண்பாவை அவர் வீட்டில் விட்டுச் சென்ற முதல் நாள் அவர் அவனிடம் அவருடைய எண்ணை பரிமாறியிருந்தார். “ஹலோ அங்கிள், நான் சித்தார்த் பேசறேன். எப்படி இருக்கீங்க, ஆன்ட்டி எப்படி இருக்காங்க, என்னை ஞாபகம் இருக்கா என்றான் அவன்.

 

“என்ன தம்பி அப்படி கேட்டுடீங்க, நல்ல ஞாபகம் இருக்கு, நாங்க நல்லா இருக்கோம். நீங்க எப்படி இருக்கீங்க, என்ன விஷயம் தம்பி எனக்கு போன் செஞ்சு இருக்கீங்க. சொல்லுங்க தம்பி என்றார் அவர். “நான் நல்லா இருக்கேன் அங்கிள், ஒரு சின்ன உதவி எனக்கு வெண்பாவோட எண் கிடைக்குமா, நான் அவங்க எண்ணை தொலைச்சுட்டேன். அதான் உங்ககிட்ட வாங்கி பேசலாம்னு என்று முடிக்க முடியாமல் இழுத்தான்.

 

ஓரளவு விஷயம் உணர்ந்தவர் இயல்பாக கூறுவது போல் அவளுடைய எண்ணை அவனிடம் கொடுத்தார். மேலும் தொடர்ந்தவன் “அங்கிள் எனக்கு இன்னொரு உதவியும்… என்றுவிட்டு அவரிடம் ஏதோ பேச அவருடைய பதிலில் திருப்தியுற்றவன் அவருக்கு மிகப்பெரிய நன்றி கூறி போனை வைத்தான் சித்தார்த்.

 

தனிமையில் இருந்ததாலோ என்னவோ அவனுடைய எண்ணம் அவளை சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஒரு முடிவுடன் அவளுக்கு போன் செய்தான். சுஜி வந்து போனதில் இருந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவளை அவளின் கைபேசி அழைத்தது. “ஹலோ என்றாள் அவள்.

 

“நான் உன்னோட சித்தார்த் பேசறேன் என்ற குரல் ஆழமாக சென்று அவளை தீண்டியது. உடல் முழுதும் ஒரு சூடேற அந்த இனிய சொல் அவளை பிரமிப்பாக்கியது. உடனே சுதாரித்தவள் “எனக்கு அப்படி யாரும் இல்லை, தயவு செஞ்சு போனை வைங்க என்றாள் கோபத்துடன்.

 

“ப்ளீஸ் போனை வைச்சுடாத, உனக்கு ஞாபகம் இருக்கா, நான் உன்கிட்ட காதலை சொன்ன அந்த நாள் என்று அவன் பழைய நினைவுகளை அவளிடம் கிளறிவிட்டுக் கொண்டிருந்தான். ‘இப்போது எதற்கு இதை ஞாபகப்படுத்துகிறான் என்று நினைத்தாள்.

 

மறந்துட்டியா வெண்பா, பனிமூட்டமாக இருந்த அந்த பொழுது. நமக்குள் நிகழ்ந்த அந்த ரசாயன மாற்றம் பின் நான் உன்னை அணைத்த அந்த தருணம் என்று இடையில் நிறுத்தினான் அவன். அவன் கூற ஆரம்பித்ததும் அன்றைய நிகழ்வுக்கே போய் திரும்பியவளை அவனின் கடைசி வரிகள் உலுக்க சுயநினைவுக்கு வந்தாள் அவள்.

 

“சீய், எப்படி இப்படி பேசமுடியுது உங்களால. நான் வேணாம்னு தானே போனீங்க திரும்பவும் வந்து ஏன் என் நிம்மதியை கெடுக்கறீங்க. இனிமே எனக்கு போன் செய்யாதீங்க என்று கூறி போனை அணைத்து தூக்கியெறிந்தாள் அவள். சித்தார்த்தும் அவளின் பதிலால் துடித்துப் போனான் செய்வதறியாது திகைத்தான். சீக்கிரமாக வேலை முடித்து கிளம்ப வேண்டும் என்று வேலையில் கவனத்தை செலுத்தினான்.

 

________________

 

இரவு முழுவதும் விழித்திருந்து திட்டத்தை தயார் செய்தான், காலை பத்து மணிக்கு மேல் தான் அதை சமர்ப்பிக்க வேண்டும் ஆதலால் அன்றே வேலைகளை முடித்தான். அலாரம் வைத்துவிட்டு படுத்தவன் அது அடிக்கும் முன்பாகவே எழுந்து அதை அணைத்துவிட்டு குளித்து தயாராகி டிபன் சாப்பிட்டுவிட்டு தயாராக இருந்த காரில் ஏறி பயணமானான். அந்த பலமாடி கட்டிடத்தின் முன் கார் நிற்க இறங்கி ஒரு நிமிடம் கண்மூடினான்.

 

எப்போதும் ஒரு புதிய முயற்சி எடுக்கும்போது அவன் அவ்வாறு கண்மூடி பிரார்த்தனை செய்வது வழக்கம். இன்று கண்மூடி பிரார்த்தனை செய்ய நினைத்தால் ஏனோ வெண்பாவின் முகமே அவன் மனக்கண்ணில் தோன்றியது. மீண்டும் பிரார்த்தனை செய்ய முயன்று தோற்று போனான்.

 

“கடவுளே நல்லபடியாக இந்த வேலை முடிய வேண்டும் என்று வாய் விட்டு சொல்லிக் கொண்டே உள்ளே சென்றான். தன்னையே நினைத்து லேசாக சிரித்துக் கொண்டவன் தலையை சிலுப்பிக் கொண்டு லிப்ட்டை நோக்கி பயணித்தான். நிறுத்தி நிதானமாக அவன் திட்டத்தை விவரிக்க அங்கு உள்ளவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

____________________

 

இரவு முழுவதும் தூங்கா இரவாக அமைந்தது வெண்பாவுக்கு. கண்மூடி உறங்க முயற்சி செய்தால் அவன் முகம் தான் தோன்றியது, தான் தவறு செய்துவிட்டோமோ, தான் இங்கு வந்து இருக்கவே கூடாது என்று வருந்தினாள் அவள்.

 

மீண்டும் அவனுடன் இணைந்தால் தான் என்ன என்று நினைத்த மனதை கடிவாளமிட்டு அடக்கினாள். தன்னால் தானே இன்று தான் தந்தை உயிருடன் இல்லை என்ற குற்ற உணர்வு அவளை தின்றது. இந்த எண்ணம் எழுந்ததும் அவன் மேல் மீண்டும் கோபமும், ஆத்திரமும் ஒரு சேர எழுந்தது.

 

இப்படி பலவாறு யோசனை செய்து கொண்டே ஒருவாறு தூங்கிப் போனாள் அவள். “வெண்பா, வெண்பா எழுந்திரும்மா, அலுவலகம் செல்ல வேண்டாமா என்று குழலி பலமுறை எழுப்பியபின் ஒருவாறு கண்ணை கசக்கி எழுந்தாள். ரொம்பவும் நேரமாகி விட்டதை உணர்ந்து வேகமாக கிளம்பி அலுவலகம் சென்றாள். அவள் கிளம்பி சென்ற சில மணி நேரத்தில் சுஜியும், ஸ்ரீயும் அங்கு வந்தார்கள்.

 

ஸ்ரீ கதவை தட்ட கல்யாணி வந்து கதவை திறந்தார். “தம்பி நீங்க யாரு, யாரு வேணும் உங்களுக்கு என்றார் அவர். “நாங்க வெண்பாவோட நண்பர்கள் அவங்க அம்மாவை பார்க்க வந்தோம் என்றான் ஸ்ரீதர். அதற்குள் ஏதோ அரவம் கேட்டு வாசலுக்கு வந்தார் குழலி. “வாம்மா சுஜி உள்ள வா, வாங்க தம்பி உட்காருங்க என்றார் குழலி. “தம்பி நீங்க ஸ்ரீ தானே சித்தார்த் தம்பியோட நண்பன் தானே என்றார் குழலி.

 

“ஆமாம்மா நான் ஸ்ரீதர், சித்தார்த்தோட நண்பன் தான். வெண்பா வால்பாறைக்கு வந்த போது எங்கள் வீட்டில் தான் தங்கியிருந்தாள். நான் கூட உங்களிடம் ஒரு முறை போனில் பேசி இருக்கிறேன் என்றான் ஸ்ரீ.

 

“ஓ, ஆமாம் தம்பி வெண்பா போட்டோவை காண்பிச்சு இருக்க, எப்படி இருக்காங்க, வீட்டில எல்லாரும் சுகம் தானே என்று விசாரித்தார். “எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா, நாங்க ஒரு முக்கியமான விஷயம் பேசலாம்னு தான் உங்களை பார்க்க வந்தோம் என்று இடையில் நிறுத்தினான் தயங்கியவாறு.

 

“கல்யாணியும் எங்க குடும்பத்துல ஒருத்தர் தான் நீங்க எதுவா இருந்தாலும் தயங்காம பேசுங்க என்ராய் குழலி அவன் தயக்கத்தை உணர்ந்து. “அதற்கு கல்யாணி ஞாபகம் வந்தவராக நீங்க அந்த டீ ட்ரீ இண்டஸ்ட்ரீஸ் சித்தார்த் தம்பியோட நண்பரா என்றார் அவர். “உங்களுக்கு சித்தார்த்தை தெரியுமா என்றான் ஸ்ரீ.

 

“தம்பி தானே வெண்பாவை பத்திரமா கூட்டி வந்தது. பாவம் வெண்பா நடுரோட்டில பஸ் பிரேக் டவுன் ஆகி நின்னப்ப தம்பி தான் கூட்டி வந்து வீடு வரைக்கும் விட்டுட்டு போனார் என்றார் அவர். “அப்புறம் ஒரு முறை அவரை கோவிலில் கூட பார்த்தோம், ஆனா என்று இழுத்தார் கல்யாணி. “என்ன கல்யாணி என்ன ஆனா சொல்லு என்றார் குழலி.

 

“வெண்பாவும் அந்த தம்பியும் ஏற்கனவே பழகினவங்க மாதிரி இருந்துச்சு. நான் கூட உங்க தம்பிகிட்ட சொல்லி அந்த தம்பிய பத்தி விசாரிக்க சொல்லியிருந்தேன் என்று முடித்தார் அவர். “உண்மை தான் அம்மா, அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறாங்க என்றாள் அதுவரை அமைதியாக இருந்த சுஜி.

 

“உங்களுக்கு இது அதிர்ச்சியா இருக்கா அம்மா என்றாள் அவள் மேலும். “இல்லைம்மா சுஜி, இது நான் எதிர்பார்த்தது தான். அவள் திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்த போதே அது எனக்கு உறுதியாகிவிட்டது.

 

ஒருமுறை வெண்பாவும் தம்பியை வீட்டிற்கு அழைத்து வந்தபோது என் மகள் முகம் மலர்ந்திருந்தது. அப்போதே ஒரு சின்ன சந்தேகம் இருந்தது, நான் தான் அதை அவளிடம் கேட்டு தெளிவு பெறவில்லை. அதனால் தான் ஏதேதோ விபரீதங்கள் நடந்துவிட்டது என்று முடித்தார் ஆயாசத்துடன்.

 

 

 

அத்தியாயம் – 22

 

குழலியின் பேச்சை கேட்ட சுஜி அவரிடம் நடந்த விஷயம் என்ன என்று கேட்டாள். “என்னம்மா என்ன தான் நடந்தது கொஞ்சம் சொல்லுங்கள், இப்ப ரெண்டு பேரும் தனித்தனியா இருக்காங்க, அவர்களை எப்படியாவது ஒன்று சேர்க்கணும். அதுக்கு பிரச்சினையோட ஆணிவேர் எதுன்னு தெரியணும், சொல்லுங்கம்மா என்ன நடந்தது என்றாள் சுஜி.

 

“ஏன்மா அவங்களுக்குள்ள என்ன பிரச்சினை உங்களுக்கும் அது தெரியலையா என்றார் அவர் கவலையுடன். “அம்மா, சித்தார்த் வெண்பாவை ஏதோ தப்பா நினைச்சு பிரிஞ்சுட்டான். அதாவது வெண்பாவுக்கு திருமணம் என்ற தகவல் அவனுக்கு போய் இருக்கு. அது தான் அவங்க பிரிவுக்கு காரணமாயிருந்து இருக்கு. இப்ப சொல்லுங்கம்மா அதுக்கு அப்புறம் வெண்பா வாழ்க்கையில நடந்தது என்ன என்றான் ஸ்ரீ.

 

“எனக்கு என்னமோ என்னால தான் அவங்களுக்குள்ள பிரச்சினை தொடங்கி இருக்கும்ன்னு தோணுது என்று கூறி கோவிலில் அவர் சித்தார்த்திடம் பேசிய விஷயத்தை கூறினார். “புரியுதுமா, அண்ணா அதுனால தான் ஏதோ வெண்பாகிட்ட வேற மாதிரி பேசி இருப்பாங்கன்னு நினைக்கிறேன் என்றாள் சுஜி.

 

ஸ்ரீயிடம் சித்தார்த் வெண்பாவின் அன்னையை பார்த்ததுவரை மட்டுமே கூறியிருந்தான். அவளுக்கு திருமணம் நிச்சயம் பற்றி அவர் தான் கூறினார் என்று மட்டுமே அவன் நினைத்திருந்தான். அவர்கள் கோவிலில் என்ன பேசினார்கள் என்பது தற்போது குழலி சொல்லியபின் தான் அவனுக்கு புரிந்தது. சித்தார்த் வேண்டுமென்றே தான் அவளிடமிருந்து விலக வேண்டியே ஏதோ அவளை தவறாக பேசியிருக்கிறான் என்ற அளவில் அவன் விஷயத்தை ஊகித்தான்.

 

குழலி வெண்பாவை பெண் கேட்டு வந்ததில் இருந்து ஆரம்பித்து அனைத்தையும் அவர் அவர்களிடம் சுருங்கக் கூறினார். பின் கலங்கிய விழிகளுடன் “வெண்பா பிடிவாதமாக திருமணமே வேண்டாம் என்கிறாள். என்னுடனே காலம் முழுவதும் இருக்கப் போவதாக கூறுகிறாள்.

 

எனக்கு அவளை நினைத்து பெரும் கவலையாக இருக்கிறது, வெண்பாவின் அப்பாவோட கடைசி ஆசை அவளுக்கு அவள் விரும்பிய திருமணமே. ஆனால் இந்த பெண் திருமணமே வேண்டாம் என்கிறாள். நீங்க தான் ஏதாவது செய்ய வேண்டும், என்னால் முடிந்த உதவியை நானும் செய்கிறேன் என்றார் குழலி.

 

“அம்மா நீங்க கவலைபடாதீங்க, அவர்கள் நிச்சயமாக ஒன்று சேருவார்கள். அதற்கு நாங்கள் பொறுப்பு, அப்புறம் நாங்க இங்கே வந்து பேசியது வெண்பாவுக்கு தெரியவேண்டாம் என்றான் ஸ்ரீ. “நிச்சயமாக சொல்ல மாட்டேன் என்றார் குழலி. “தம்பி வெண்பா எங்களுக்கும் மக மாதிரி தான், அவங்க ஒண்ணா சேர எந்த உதவி செய்யமுடியுமோ, அதை நாங்களும் செய்யறோம் என்றார் கல்யாணி.

 

“கண்டிப்பாக அம்மா, உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் கூடிய விரைவில் அவர்கள் திருமணம் விமரிசையாக நடக்கும் பாருங்கள் என்றான் ஸ்ரீ. “அப்புறம் அம்மா இன்னொரு விஷயம் சுஜி வேற யாருமில்லை சித்தார்த்தோட தங்கை தான். இப்போதைக்கு இந்த விஷயமும் வெண்பாவுக்கு தெரிய வேணாம் என்று வேண்டிக் கொண்டான் அவன்.

 

குழலி ஆச்சரியமாக அவளை நோக்க ஸ்ரீ  சித்தார்த்தின் பூர்விக கதையை விவரித்தான். இருவரும் விடைபெற்று செல்ல மனதில் ஒரு நிம்மதியை உணர்ந்தார் குழலி. ஆதரவாக கல்யாணியின் கரம் அவர் மீது படிந்தது. “கவலைபடாதீங்க அண்ணி, நம்ம பொண்ணு நல்லா இருப்பா என்று ஆறுதல் கூறினார்.

 

மறுநாள் பொழுது அழகாக விடிந்தது, ஆனாலும் மனதில் ஒரு வெறுமை எழுந்தது வெண்பாவுக்கு. ‘சித்தார்த்தை பார்த்து நான்கு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஏன் வரவில்லை ஒருவேளை அன்று பார்த்த அந்த குழந்தை அது அவனுடையதாக இருக்குமோ என்று நினைத்த மாத்திரத்தில் உடம்பு முழுவதும் ஒருவித பதற்றம் வந்து தொற்றிக்கொண்டது.

 

பின் அவளே அவளை சமாதானப் படுத்திக் கொண்டு பின் ஏன் அன்று அவன் அவளை அணைத்தான். ஒருவேளை நான் பேசிய பேச்சுக்காக என்னை பழிவாங்க நினைத்து அணைத்திருப்பானோ, ச்சே இருக்காது அவன் அவ்வளவு கீழ்த்தரமானவன் கிடையாது என்று யோசித்தாள். திடிரென்று ஒன்று தோன்ற அப்படியே திகைத்துப் போனாள். அவன் எப்படி இருந்தால் எனக்கென்ன நான் ஏன் அவனைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறேன் என்று விதிர்த்து போனாள்.

 

சுஜியிடம் மனம்விட்டு பேசினாலாவது தன் மனம் அமைதி பெறும் என்று நினைத்தவள் அவசரமாக கிளம்பி அலுவலகம் சென்றாள். அன்று அவளின் வேலை காரணமாக வெளியே செல்ல வேண்டி இருந்தது.

 

ஒரு புதிய தொழிற்சாலைக்கு அமைக்க வேண்டி மின்சார இணைப்பு மற்றும் பாதுகாப்பு பற்றிய விளக்கங்கள் அடங்கிய கோப்புகளை எடுத்துக் கொண்டு அங்கு செல்ல வேண்டி இருந்தது. அந்த தொழிற்சாலையின் முதலாளி வெளியூர் சென்றிருப்பதால் அவரின் உதவியாளரிடம் பேசிவிட்டு கோப்புகளை சமர்ப்பித்துவிட்டு வந்தாள் அவள்.மாலையில் சுஜியும் அவளும் பாலாஜி கோவிலில் சந்திப்பதாக முடிவெடுத்திருந்தனர்.

 

நேரே கிளம்பி வெண்பா கோவிலுக்குச் சென்றாள், அங்கு ஏற்கனவே வந்துவிட்ட சுஜி அவளுக்காக காத்திருந்தாள். கடவுளை தரிசித்துவிட்டு வெளியே வந்து ஓர் ஓரமாக அமர்ந்தனர். “சொல்லு வெண்பா, உனக்கு என்ன பிரச்சனை மனசு திறந்து எங்கிட்ட சொல்லு உன் மனபாரம் கொஞ்சமாவது குறையும் சொல்லுடி என்றாள் சுஜி. வெண்பா தாளமாட்டாதவளாக கண்ணீர் விட்டு அழுதாள். அவளை அணைத்து ஆறுதல் படுத்தினாள் அவள்.

 

அழுகையினூடே அவள் மனதில் உள்ளதை தோழியிடம் கொட்டினாள் வெண்பா. “சரி இப்ப உன்னோட முடிவு தான் என்ன, நீ அவரை ஏத்துக்கறதுல ஏதும் பிரச்சனை இருக்கா என்றாள் சுஜி.

 

“என்ன சுஜி இப்படி கேட்கிற, நான் எப்படி அவரோட சேர முடியும். அப்படி ஒண்ணு நடந்தா என் மனசாட்சியே என்னை கொன்னுடும். என் அப்பாவோட மறைவு எனக்கு நீங்காத ரணத்தை குடுத்துச்சு, உண்மை சொல்லணும்மின்னா என்னால தான் எங்கப்பா இறந்து போய்ட்டார். என்னோட கவலை தான் அவருக்கு பெரிய கவலையா இருந்தது.

 

“அது தான் அவரோட மறைவுக்கு காரணம். எனக்கு சித்தார்த்தை பார்க்கும் போது அது தான் நினைவுக்கு வரும், அப்புறம் எப்படி நான் அவரோட பேசமுடியும். அவரை எப்படி ஏத்துக்கறது பத்தி யோசிக்க முடியும், எல்லாமே என்னாலதான் நடந்தது. நான் தப்பு பண்ணிட்டேன் சுஜி, எங்க அப்பாவோட இறப்புக்கு நான் தான் காரணம் என்னால அவருக்கு எந்த நிம்மதியும் கிடைக்கல, கடைசி வரைக்கும் என் கவலை தான் அவருக்கு என்று கூறி கதறி அழுதாள்.

 

அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்வுகளை மொத்தமாகக் கொட்டிக் கொண்டிருந்தாள். அவளை ஆறுதல் படுத்த சுஜி படாதபாடு பட்டாள். ஒரு வழியாக அவளைத் தேற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். சுஜியுடன் பேசியதில் மனது லேசாக ஆனது போல் உணர்த்தாள் வெண்பா. வெண்பாவிடம் பேசிய விஷயத்தை சுஜி ஸ்ரீதரிடம் பகிர்ந்துக் கொண்டாள். ஸ்ரீக்கும் பிரச்சினையை எப்படி முடித்து வைப்பது என்று கவலையிழாழ்ந்தான்.

 

மறுநாளைய விடியல் இனிதாக புலர்ந்தது. வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு சரளா எழுந்துவந்தார். அதிகாலை நேரத்தில் யாராக இருக்கும் என்று என்னமிட்டவாறே வந்து கதவை திறந்தவருக்கு ஆச்சரிய மின்னல் ஓடியது. “சித்தார்த் எப்படிப்பா வந்த, எப்படி இருக்க தம்பி ஒரு போன் கூட போடவே இல்லையேப்பா. உங்கப்பா கூட ரொம்ப வருத்தப்பட்டார். நான் ஒரு முட்டாள் உன்னை வாசல்லயே வைச்சு பேசறேன் உள்ள வா கண்ணா என்றார் அன்புடன்.

“அம்மா உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் ககொடுக்க நினைச்சேன். அப்புறம் ஒரு சந்தோசமான செய்தி நான் போன வேலை வெற்றிகரமாக முடிஞ்சது. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கும்மா. இது என் கனவு பயணம், அது நிறைவேறும் தருணம் அம்மா, அது நல்ல வர்றதுக்கு என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க என்றான் சித்தார்த்.

 

“சந்தோசம்ப்பா நீ நல்லா வருவா, நீ தொட்டது துலங்கும் கண்ணா என்று மனதார வாழ்த்தினார் அவர். “மாமாவுக்கு தான் முதல்ல போன் பண்ணி சொன்னேன்மா அவர் என்னை போகச் சொல்லலனா நான் போய் இருக்கவே மாட்டேன் என்று மகிழ்ந்தான்.

 

சுந்தரத்தை சென்று பார்த்து அவரிடம் ஆசி பெற்றான், சுஜியையும் வெண்ணிலாவையும் எழுப்பி அவர்களிடம் கலாட்டா செய்தான். வெண்ணிலாவும் எழுந்து அவனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள், சித்தார்த் ஸ்ரீக்கு போன் செய்து அவனை வரச் சொன்னான்.

 

“என்ன அண்ணா ரொம்ப குஷியா இருக்க போல இருக்கு என்ன விஷயம். இது வெறும் ஒப்பந்தம் முடிஞ்சதுனால மட்டும் வந்த சந்தோசம் மாதிரி தெரியலையே என்று ஆரம்பித்தாள். சரியாக அதே சமயத்தில் ஸ்ரீ உள்ளே நுழைந்தான்.

 

“என்னடா போனே போடல ரொம்ப வேலையா சித்து என்றான் கரிசனத்துடன். “போன வேலை நல்லபடியா முடிஞ்சது, இனி இங்க விட்டு போன வேலையை நல்லபடியா முடிக்கணும் என்றான் சித்தார்த். “விட்டு போன வேலையா அது என்ன அண்ணா என்றாள் சுஜி அப்பாவியாக.

 

“உன்கிட்ட சொல்ற நேரம் வரும் போது சொல்றேன். நீ போய் எங்களுக்கு காபி கொண்டு வா என்று அவளை விரட்டினான் சித்தார்த். “எப்போ சொல்லுவ ரெண்டு பேரும் சரியான ஊமை கோட்டான்கள். என்னை பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு, நான் என்ன இன்னும் சின்ன குழந்தைன்னு நினைப்பா உனக்கு. எப்பயோ முடிய வேண்டிய பிரச்சனை இது. இப்படி என்கிட்ட சொல்லாம இருந்திட்டியே என்று பொருமி தள்ளினாள் சுஜி. ‘சொல்லிட்டியா என்பது போல் ஸ்ரீயை பார்த்தான் சித்தார்த். ‘ஆம் என்பது போல தலையை அசைத்தான் ஸ்ரீ.

 

“சாரி சுஜிம்மா, அவ உன்னோட தோழி அதுவும் இல்லாம அப்ப அவளுக்கு கல்யாணம் ஆகி இருந்தா நீ போய் பேசி ஏதும் பிரச்சனை வந்து விடக்கூடாதுன்னு நினைச்சேன் என்றான் சித்தார்த். மூவருமாக சேர்ந்து நடந்த விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர். வெண்பாவின் கவலை என்னவென்று சித்தார்த் புரிந்துக் கொண்டான். அவனால் மட்டுமே அவளை சமாதானப் படுத்தமுடியும் என்று கூறி அந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்தான் அவன்.

சுஜி அன்றே ஊருக்கு கிளம்பிவிட்டாள். சுஜியின் கணவர் அங்கு தனியாக திண்டாடுவதாகவும் உடனே வருமாறு அழைப்பு விடுத்ததால் அவள் வெண்பாவிடம் கூட விடைபெறாமல் கிளம்பினாள். போகும்போது சித்தார்த்திடம் பார்த்து பேசுமாறு கூறிவிட்டுச் சென்றாள்.

 

“வெண்பா இங்க கொஞ்சம் வாம்மா என்று அழைத்தார் நரசிம்மன். “சொல்லுங்க அங்கிள் என்று அவர் முன் சென்று நின்றாள். “அன்னைக்கு போனியேம்மா அந்த புது தொழிற்சாலைக்கு மின் வினியோகம், பாதுகாப்பு நடவடிக்கை பற்றி சொல்ல அங்ககூட முதலாளி இல்லைன்னு திரும்பி வந்துட்டியேம்மா. இன்னைக்கு முதலாளி ஊருல இருந்து வந்துட்டாராம் நீ கொஞ்சம் பார்த்துட்டு வந்துடும்மா என்றார் நரசிம்மன். “அங்கிள் அங்கு நீங்கள் சென்றால் நன்றாக இருக்குமே என்று கேட்டாள் அவள்.

 

“நானே போறதா தான்மா இருந்துச்சு. எனக்கு கொஞ்சம் உடம்பு ஒரு மாதிரியா இருக்கும்மா, நீ கொஞ்சம் விவரமான பொண்ணு      நீயே அவங்களுக்கு கொஞ்சம் விளக்கி சொல்லிடுவே. நானும் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்மா என்றார் அவர்.

 

சரியென தலையாட்டிவிட்டு அவள் கிளம்பினாள். அலுவலக வண்டியின் டிரைவர் விடுமுறை எடுத்து இருப்பதால் தொழிற்சாலையில் இருந்தே கார் வந்திருப்பதாகக் கூறி அவளை அதில் ஏற்றி அனுப்பிட்டார் நரசிம்மன். பின் ஒரு வெற்றிபுன்னகையுடன் போனை கையிலெடுத்து யாருக்கோ பேசினார்.

 

“அங்க தான் வாரங்க, கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க என்று கூறி போனை வைத்தார். வெண்பாவுக்கு யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தது, சித்தார்த்தை பார்த்து கிட்டத்தட்ட ஒரு வாரமாகிவிட்டது. அவனைக் காணாமல் உள்ளுர ஏங்கிப் போனாள். ஆனாலும் அவள் மனம் இது வேண்டாம் என்று இடித்துரைத்தது. எண்ணங்களை தூர ஒதுக்கி வெளியே வேடிக்கை பார்க்கலானாள். கார் தொழிற்சாலையை சென்றடைந்தது அனுமதி பெற்று உள்ளே நுழைந்தாள்.

 

“தங்கள் வரவு நல்வரவாகுக என்ற குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கியவளுக்குள் மகிழ்ச்சி கலந்த கோபம் “நீங்களா என்றாள் அவள். “உள்ள வா வெண்பா, வா… வா… வந்து உட்காரு என்று அழைத்து இருக்கையை காட்டினான். “நீங்க எப்படி இங்க என்றாள். “நல்லா கேட்ட போ, இது என்னோட தொழிற்சாலை, நான் இங்கு இல்லாமல் எங்கு போவேன் என்றான் அவன். “என்னை திட்டம் போட்டு தான் வரவழைச்சீங்களா என்று எழப் போனாள்.

 

“வெண்பா அதுப்பற்றி நாம அப்புறம் பேசலாம், இப்ப இந்த இனிப்பு எடுத்துக்கோ என்று கூறி ஒரு ஸ்வீட் பாக்சை அவளிடம் நீட்டினான். “எதற்கு என்றாள் அவள். “எடுத்துக் கொள், சொல்லுகிறேன் என்றான் அவன் மீண்டும். “இன்று உங்கள் பிறந்த நாள் கூட இல்லையே. உங்கள் கல்யாண நாளா அல்லது உங்கள் குழந்தையின் பிறந்த… பிறந்த நாளா என்று திணறினாள் அவள்.

 

“பாரவாயில்லையே, நீ என்னைப்பற்றி இவ்வளவு யோசிக்கிறாயா. அப்புறம் ஒரு விஷயம் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. குழந்தை அதுக்கும் வாய்ப்பு இல்லை, ஆனா இந்த விஷயம் உனக்கு முதல்லயே புரிஞ்சு இருக்கணுமே என்றான் அவன்.

 

“ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம், இன்னொரு பொண்ணை தொடற அளவுக்கு நான் ஒன்றும் கீழ்தரமானவன் இல்லை. உன்னை காதலிச்சுட்டு இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ற அளவுக்கு நான் மோசமானவனும் அல்ல என்றான் அவன் அழுத்தந்திருத்தமாக.

 

 “அப்போ அன்னைக்கு அந்த குழந்தை உங்களை அப்பான்னு என்றாள் அவள். ‘ஓ அன்று இவள் என்னை ஸ்ரீயின் குழந்தையுடன் பார்த்திருக்கிறாள் போலும் என்று நினைத்தவன் அவளுக்கு பதிலிறுத்தான். ஒரு புருவத்தை உயரே தூக்கியவாறே “அந்த குழந்தை அப்பான்னு கூப்பிட்டது என்னை அல்ல, ஸ்ரீயை என்றான் அவன். “சரி ஸ்வீட் எடுத்துக்கோ என்றான் அவன் விடாமல். “நீங்க ஸ்வீட் எதுக்குன்னு சொல்லவே இல்லையே என்றாள்.

 

“எல்லாம் சந்தோசமான விஷயம் தான் எடுத்துக்கோ, இல்லைனா நானே ஊட்டி விட்டுடுவேன் என்று கூறி இனிப்புடன் அவளை நெருங்கினான். ஒரு அடி பின்னோக்கியவள் “இல்லை நானே எடுத்துக்கறேன் என்று எடுத்துக் கொண்டாள்.

 

‘இம் பரவாயில்லையே எனக்கு பிடிச்ச ஸ்வீட்டா வாங்கி இருக்கான், மறக்காம நினைவு வைச்சு இருக்கானே என்று நினைத்தாள். “இந்தா இது எல்லாமே உனக்கு தான், உனக்கு பிடிக்கும்ன்னு தான் இந்த முந்திரி ஸ்வீட் வாங்கினேன் என்று அவளிடம் கொடுக்க “வேண்டாம் என்று மறுத்தாள் அவள்.

 

“நீ எடுக்க போறீயா, இல்லை மொத்தத்தையும் உன் வாயில திணிக்கவா என்று எழுந்தான் அவன். “இல்லை என்று பதறியவள் அந்த பாக்சை எடுத்து தன் கைப்பையில் வைத்தாள்.அவளின் அந்த செயலில் உள்ளம் குளிர்ந்தவன் அவள் அருகே சென்று “ஸ்வீட் கண்ணம்மா என்று செல்லமாக அவள் கன்னம் தட்டினான் அவன்.

 

சும்மா இராமல் அவளை இழுத்து மேலோடு சாய்த்துக் கொண்டு ஆலிங்கனம் செய்தான். “எல்லாமே உன்னால தான் நான் வெளிநாட்டுக்கு போன வேலை நல்லபடியா முடிஞ்சுது, உன்னை நினைச்சுட்டே தான் அந்த திட்டத்தை தயார் செய்தேன், உன்னை நினைச்சுட்டே தான் ஒப்பந்தத்துல கையெழுத்து போட்டேன். எல்லாமே உன்னால தான் அதுக்கு தான் உனக்கு ஸ்வீட் கொடுத்தேன் கண்ணம்மா. வெண்பா ஐ லவ் யூ டி. நீ எப்பவும் என்கூட இருக்கணும் என்று கூறி அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

 

எதுவும் புரியாமல் திகைத்து நின்றவள் திமிறிக் கொண்டு அவனை தள்ளி நின்றாள். “சீய், உங்களுக்கு வெட்கமாயில்லை, இதுக்கு தான் என்னை வரவைச்சீங்களா, நான் அதுக்கு ஆள் இல்லை. இதுக்கெல்லாம் வேற ஆள் இருப்பாங்க அங்க போங்க என்று கூற அவன் கைகள் வேகமாக மேலே எழ சட்டென்று அதை கீழே இறக்கினான்.

 

அவளின் வார்த்தைகள் அவனுக்குள் ரணத்தை ஏற்படுத்தின. “சீய், நீயெல்லாம் ஒரு மனுஷியா, ஆமா நான் தப்பு தான் பண்ணிட்டேன் உன்னை புரிஞ்சுக்காம உன்னை விட்டு விலகினது தான் நான் செஞ்ச தப்பு. இதை புரிஞ்சுக்காம ஏண்டி என்னை காயப்படுத்துற என் தரப்பு என்னன்னு கேட்டுட்டு நீ அப்புறம் முடிவு பண்ணு என்றான் அவன்.

 

“நீங்க தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சுடுங்கன்னு சொன்னா, நான் மன்னிக்கணுமா அப்படித்தானே. நான் இழந்தது காதலை மட்டுமில்ல, என் அப்பாவையும் தான், இழந்த காதல் திரும்ப கிடைக்கலாம் ஆனா எங்கப்பா, கடைசி வரைக்கும் என்னை நினைச்சு என் கவலையில தானே அவர் இப்ப இல்லாம போனாரு. தயவு செய்து இனிமே இது பற்றி பேசாதீங்க என்று கூறி வெளியே செல்ல முயன்றாள்.

 

“நான் யாருங்கறது உனக்கு காட்டறேன். அப்போ நீயே என்கிட்டே வருவ. இப்ப நீ வந்த வேலையை பார்த்துட்டு போ, அது விஷயமாகத்தான் உன்னை இங்க வரச் சொன்னது என்று கூறினான். எதுவும் செய்ய இயலாதவளாக மீண்டும் சென்று இருக்கையில் தொய்ந்து அமர்ந்தாள். அவனுக்கு மின் இணைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி விவரிக்கலானாள்.

 

அந்த புதிய தொழிற்சாலையை அவளுக்கு சுற்றிக் காண்பித்தான். எங்கெங்கு என்ன மாதிரி இணைப்பு குடுக்காலாம் என்று வெண்பாவும் அவனுக்கு கூறிக் கொண்டு வந்தாள். நடுவில் சில மாற்றங்களை அவன் கூற அவளும் அதை ஆமொத்தித்து ஏற்றுக் கொண்டாள்.

 

புதிதாக கட்டிய தொழிற்சாலை என்பதால் அவனும் வேலைகளை சிக்கிரம் முடித்து உற்பத்தி தொடங்க விழைந்தான். அதன்படி வேலையை முடித்து தருவதாக அவளும் கூறினாள், பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியாமல் இருந்து விட்டனர் இருவரும்.

 

பிற்பகலுக்கு மேல் வேலை முடிய வெண்பா கிளம்பயத்தனித்தாள். சித்தார்த் தானே கூட்டி வந்து விடுவதைக் கூறினான், வெண்பா அதை மறுத்தாள். “பின் எப்படி போவாயாம். இங்கு எந்த பஸ் வசதியும் கிடையாது. தொழிலாளிகளுக்கு கூட நாங்கள் தனியாக ஒரு பேருந்து அமர்த்துவது என்றே முடிவு செய்திருக்கிறோம். அதற்கு இன்னும் கொஞ்சம் நாட்களாகும்.

 

“இப்போது,  சொல்லும்மா எப்படி போகப்போகிறாய். நடந்தே போவதானாலும் இங்கு போகும் வழியில் சிறுத்தை மற்றும் யானை நடமாட்டம் இருக்கும் என்று கூறி அவளை பயமுறுத்தினான் அவன். பயந்து போனவள் வேகமாக தலையை ஆட்டி அவளுடைய ஒப்புதலைக் கூறினாள்.

 

அமைதியாக காரில் ஏறி அமர்ந்தாள், “இது தான் சரி… போகலாமா என்று கூறி காரை கிளப்பினான் அவன். சாலையில் கவனம் செலுத்தி அவன் காரை ஓட்டினான். அவ்வப்போது அவனுடைய பார்வை அவளின் மீது படிந்து மீண்டதை அவள் திரும்பி பார்க்காமலே உணர்ந்தாள்.

 

மலையின் அழகில் மனதை செலுத்தினாள். திடிரென்று பனிமூட்டம் சூழ பாதை தெரியாமல் போனது. சித்தார்த்துக்கு பழைய நினைவுகள் சரம் கோர்க்க வெண்பாவுக்குள்ளும் அதே நினைவுகள் அணிவகுத்தன. சித்தார்த் காரை ஒரு ஓரமாக நிறுத்தினான்.

 

அவளையே வைத்த கண் வாங்காமல் அவன் பார்க்க அவளுக்கு உள்ளுர குளிர் பிறந்தது. அவன் பார்வையை தாளாதவளாக காரின் கதவை திறந்து கீழிறங்கி நின்றாள். இறங்கி நின்றவள் மெதுவாக நடந்து பாதையின் விளிம்பில் சென்று நின்று எட்டிப் பார்த்தாள்.

 

பனிமூட்டத்தால் மலையின் உயரம் துல்லியமாக தெரியாவிட்டாலும் பார்த்தவரை அவளுக்குள் ஏதோ செய்து தடுமாறினாள். அவளின் தடுமாற்றம் கண்டு சித்தார்த் ஓடிவந்து அவளை தன் புறம் திருப்பி அவன் மேல் சாய்த்துக் கொண்டான்.

 

பயத்தில் கண்களை மூடி அவனை மேலும் இறுக்கக்கட்டிக் கொண்டாள் அவள். அவள் முதுகை இடக்கையால் தடவிக் கொடுத்துக் கொண்டே வலது கை ஆட்காட்டி விரலால் அவள் முகத்தை உயர்த்தினான். பயத்தில் கண்களை இறுக்க மூடியிருந்தவளின் இமை மீது மென்மையாக முத்தமிட்டவன் குனிந்து அவள் இதழ்களை சிறைபிடித்தான்.

 

வெண்பாவுக்குள் ஏதேதோ இனிய நினைவுகள் ஆட்கொள்ள தன்னை மறந்து நின்றவளுக்குள் பழைய நினைவுகள் முட்டி மோதிக் கொண்டு வந்தன. மெல்ல மெல்ல சுய உணர்வுக்கு வந்தவள், தான் இருக்கும் நிலை உணர அவனிடமிருந்து விடுபட முயன்றாள். அவளுடைய திமிறலைக் கண்டு அவள் இதழ்களை விடுவித்தவன், அவளை மீண்டும் ஒரு தரம் இழுத்து இறுக அணைத்தான், அதன் பின் மெதுவாக அவளை விடுவித்தான்.

 

அவனை விட்டு விலகி ஓடிச் சென்று காரில் ஏறி அமர்ந்துவிட்டாள். ஒருவாறு தன்னை சுதாரித்துக் கொண்டவளின் கண்கள் கலங்கின. பனிமூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது, பின்னோடு வந்த சித்தார்த் காரில் ஏறி அமர்ந்தான். இயலாமையில் அவளுக்கு அவள் மீதே கோபம் வந்தது. அந்த ஆத்திரத்தில் அவனை நோக்கித் கோபமாக திரும்பியவளை அவன் அமைதியாக இருக்குமாறு சைகை செய்தான்.

 

“என்ன சொல்ல போற, சீய் உங்களுக்கு வெட்கமாயில்லைன்னு சொல்லுவ அது தானே என்றான் அவன். “ஏன் இப்படி செய்யறீங்க, உங்களுக்கு வேற பொண்ணு கிடைக்கலியா, சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே என்று வெடித்தாள் அவள்.

 

“ஒண்ணு தெரிஞ்சுக்கோ, எனக்கு வேற பொண்ணு யாரும் வேணாம், அப்படி வேணும்னு நினைச்சு இருந்தா உன்னை விட்டு பிரிஞ்சு இருந்த இத்தனை வருஷத்துல அது எப்பவோ நடந்து இருக்கும். என்னோட உணர்ச்சிகளை நான் உன்கிட்ட மட்டும் தான் கொட்டமுடியும்.

 

“ஏன்னா என்னுடைய கோபம், ஆசை, கனவு, காதல், தாபம் எல்லாமும் நீ தான். எனக்கு எப்போதுமே நீ மட்டும் தான். என்ன இப்ப நான் அப்படி செஞ்சது உனக்கு பிடிக்கலை அதானே, சரி அப்படி உனக்கு பிடிக்லைன்னு நீ நினைச்சா நான் கொடுத்ததை திருப்பி கொடுத்துடு. என்னடி அப்படி முழிக்கற, ஒருத்தர் கன்னத்தில அடிச்சா திருப்பி அடிக்கறது இல்லையா அது மாதிரி தான் என்று கூறி கண் சிமிட்டினான்.

 

“என்ன இந்த ஒப்பந்தம் பிடிச்சுருக்கா என்றான் கண்களில் குறும்பு மின்ன. அவள் முகத்தில் கோபம் தாண்டவமாடியது, பல்லைக் கடித்து பொறுத்துக் கொண்டாள். “கொஞ்சம் கிளம்பறீங்களா, எனக்கு நேரமாச்சு என்றாள் அவள். “ஒயேஸ் போகலாமே என்றான் அவன். மாலை நேரம் தொடங்க ஆரம்பித்திருந்ததால் லேசாக குளிர ஆரம்பித்தது.

 

வெண்பாவின் கைகள் சில்லிட்டு போயின. ஓரக்கண்ணால் அவள் தவிப்பதை பார்த்தவன் காரை நிறுத்தினான். ஏன் என்பது போல் அவள் அவனை ஒருவித பயத்துடன் நோக்க, ஒண்ணுமில்லை என்று கூறி பின் இருக்கையை துழாவியவன் கைகளில் ஜெர்கின் இருந்தது.

 

“இந்தா இதை போட்டுக்கோ என்றான் அவன். அவளுக்குள் மீண்டும் பழைய நினைவுகள் தலைத்தூக்க “வேண்டாம் என்றாள் அவள். “இப்படி குளிர்ல நடுங்குறயே, போட்டுக்கோ. நீ போடுறயா இல்ல நானே போட்டு விட்டடும்மா என்று கூறி அவளை நெருங்கினான். “இல்லை குடுங்க நானே போட்டுக்கறேன் என்று அவனிடம் இருந்து ஜெர்கினை பிடிங்கினாள் அவள்.

“ஆமா இங்க தான் எப்பவும் குளிரா இருக்கே நீ ஏன் ஸ்வெட்டேர் போட்டுக்க மாட்டியா என்றான். “இல்லை அதை போட்டா வேண்டாத எண்ணங்கள் வருது அதுனால தான் போடப்பிடிக்கல என்றாள் அவள். ‘இப்ப மட்டும் எப்படி போட்டா, இதை இவகிட்ட கேட்டா உடனே கழட்டி குடுத்துடுவா பேசாம இருக்க வேண்டியது தான் என்று நினைத்தான் சித்தார்த்.

 

‘இவ்வளவு நாளா போடாம இருந்த நான் இன்னைக்கு மட்டும் ஏன் இவன் சொன்னான்னு வாங்கி போட்டுகிட்டேன், இதை இவனிடம் சொன்னால் நம்மை இளப்பமாக எண்ணுவான், நான் வேறு ஏதேதோ இவனிடமே உளறிவிட்டேனே, நம்மை என்ன நினைத்திருப்பான் என்று எண்ணினாள்.

 

அதன் பின் இருவருக்குள்ளும் எந்த பேச்சும் இருக்கவில்லை. இருவரின் மனங்களும் ஊமையாக பேசிக் கொண்டிருந்தன. காரை விட்டு இறங்கியவள் ஜெர்கினை கழட்டி அவனிடம் கொடுத்தாள். அவள் கண்களில் அவன் எதையோ தேட அவன் பார்வையை புறக்கணித்தவள் அங்கிருந்து விலகினாள். “ஒரு நிமிஷம் வெண்பா என்ற அழைப்பினில் தயங்கி நின்றாள்.

 

“நீ உன்னையே ஏமாத்திக்கற, என் மனசுல நீ தான் இருக்கிறாய். அது போல தான் நானும் உனக்குன்னு எனக்கு தெரியும். இனியும் நீ உன்னை ஏமாத்திக்காதே, நான் உன்கிட்ட நிறைய பேசணும். அதுக்கான சந்தர்ப்பம் இது இல்லன்னு நினைக்கிறன். சீக்கிரமே வருவேன் உன்னைத் தேடி, ஒரு நல்ல சேதியோட.

 

“அப்புறம் ஒரு விஷயம் உனக்கு பிடிக்காதது எதுவும் நான் செய்யல, அது உனக்கு பிடிச்சிருந்தது எனக்கும் தெரியும். நான் எதை சொல்லறேன்னு உனக்கு புரிஞ்சு இருக்கும் நினைக்கிறேன், சரி நீ போ என்று கூற அவள் தயங்கி… தயங்கிச் சென்றாள்.

 

அன்று இரவு மனம் குழப்பத்தில் தவிக்க கண் அயராமல் இருந்தாள். என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று நினைத்தவள், அவள் முடிவில் அவள் மிகத் தெளிவாக இருந்தாள். அதன் பின்னே உறக்கம் அவளை தழுவியது

 

வீட்டிற்கு சென்ற சித்தார்த்தை சரளா வினோதமாக பார்த்தார். “தம்பி, தம்பி என்று பலமுறை அழைத்தும் சித்தார்த்திடம் இருந்து எந்த பதிலும் இல்லை. “என்னங்க என்னாச்சு நம்ம புள்ளைக்கு, அந்த கம்பளிய அப்படி தூக்கிட்டு போகுது என்று கணவரிடம் முறையிட்டார் அவர். ஜெர்க்கினை தான் அவர் அப்படி கம்பளி என்று விளித்தார்.

 

“சரி விடும்மா, எங்க போறான், அவனோட அறைக்கு தானே போ, போய் புள்ளைக்கு ஏதாச்சும் சாப்பிடக்கொடு என்றார் சுந்தரலிங்கம். சரியாக அந்த நேரம் பார்த்து ஸ்ரீதர் உள்ளே நுழைந்தான். “வாப்பா, உன்னை பத்தி தான் நினைச்சுட்டு இருந்தேன். என்னாச்சுப்பா உன் நண்பனுக்கு கம்பளிய கைல தூக்கி வைச்சுட்டு போறான் கூப்பிட கூப்பிட பேசாமல் போறன்பா. என்னாச்சு இவனுக்கு, நீ போய் அவன்கிட்ட பேசிவிட்டு இருப்பா. நான் உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன் என்று கூறி அவனை அனுப்பி வைத்தார் சரளா.

 

போகும் போது “கடவுளே என் புள்ளைக்கு பேய் எதுவும் பிடிச்சுகிருச்சா, ஆத்தா நாங்க குடும்பத்தோட வந்து பொங்க வைக்கிறோம், என் புள்ளைக்கு ஏதும் இருக்கக்கூடாது என்று புலம்பியவாறே சென்றார்.

 

“என்னடா, உன் விஷயம் எப்படி போயிட்டு இருக்கு, அவகிட்ட பேசிட்டியா என்று விசாரித்தான் ஸ்ரீதர். “என்ன, என்னடா கேட்ட என்று வினவினான் சித்தார்த் “சரியா போச்சு போ, ஆமா அம்மா ஏதோ சொன்னாங்களே என்ன விஷயம் என்றான் ஸ்ரீ. “என்னடா என்று கேட்டு மீண்டும் விழித்தான் சித்தார்த்.

 

“திரும்பவும் நீ ஜெர்க்கின்னோட டூயட் பாடுறியாமே, என்ன விஷயம். அம்மா வேற ஏதோ உன்கிட்ட கேட்க நீ பதில் பேசாமல் டூயட் பாடிட்டு போனதை பாத்து அம்மா உனக்கு பேய் புடிச்சு இருக்குமோன்னு பயந்துட்டாங்க என்றான் ஸ்ரீ. “பேய் தான்டா மோகினி பேய் என்றான் அவன். “டேய் என் தங்கச்சிய மோகினி பேய்ன்னா சொல்ற, அடிபட போற பாரு நீ என்றான் ஸ்ரீ விளையாட்டாக.

 

“ஏதோ நல்ல விஷயம்னு நினைக்கிறன், நான் அது பத்தி மேல எதுவும் கேட்கமாட்டேன். சொல்லு நீ அவகிட்ட உங்க கல்யாணத்தை பத்தி பேசினியா என்றான் சார். “அது எப்படிடா உனக்கு மட்டும் சரியா மூக்கு வேர்க்குது. நான் என்ன செஞ்சாலும் உன்கிட்ட மாட்டிக்கறேன் என்று சிரித்தான் சித்தார்த்.

 

“இன்னொரு விஷயம் தெரியுமா, அந்த டூயட் விஷயம் அம்மா சொல்றதுக்கு முன்னாலேயே எனக்கு தெரியும். இன்னைக்கு நான் பேங்க் விட்டு வரும் போது தான் நீயும் உள்ள நுழைஞ்ச, அய்யாவுக்கு ரோடுன்னு கூட நினைப்பில்லாமல் கட்டின பொண்டாட்டிய கொஞ்சற மாதிரி ஜெர்கினை தடவி தடவி பார்த்துட்டு இருந்தியே. அது எல்லாமே தெரிஞ்சு தான் நான் உள்ளேயே நுழைஞ்சேன் என்றான் ஸ்ரீயும் விடமால்.

 

“அப்பா சாமி எனக்கு இப்பவே, தாங்கல போதும்பா என்னை விட்டுடுடா என்றான் சித்தார்த். “சரி நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்லையே, வெண்பாகிட்ட பேசினியா என்றான் ஸ்ரீதர். “நானே அதுபத்தி உன்கிட்ட பேசணும் நினைச்சேன் நீயே வந்துட்ட என்றான் சித்தார்த். அவர்கள் தீவிரமாக அதைப்பற்றி பேச ஆரம்பித்தனர்.

 

ஒரு முடிவுடன் அந்த வாரம் ஞாயிறு அன்று அவளை பெண் கேட்டு போவது என் தீர்மானித்தனர். வெண்பா என்ன செய்ய போகிறாள்.

 

Advertisement