Advertisement

அத்தியாயம் –17

 

இன்னுமொரு உயிலா என்று வாயை பிளந்தவாறே வக்கீலை பார்த்தாள் நளினி. அந்த உயிலில் இந்த சொத்துக்கள் தன்னை வந்து சேரும் பட்சத்தில் தான் அதற்கு உரிமையுள்ளவன் இல்லை. ஆதலால் அவை அனைத்தும் தன் அக்கா நளினியையே சேரும் என்று அதில் எழுதியிருந்தது.

 

அதையும் அவள் குதர்க்கமாகவே யோசித்தாள். “என்னடா இப்படியெல்லாம் நாடகமாடினால் நாங்கள் நம்பிவிடுவோமா, நீ ஒண்ணும் எனக்கு பிச்சை போடவேணாம்டா, இந்த சொத்தை எப்படி வாங்கணும் எனக்கு தெரியும்என்றுசவால்விட்டாள்

 

“சீய், நீயும் ஒரு மனுஷியாடி, நீயெல்லாம் பேய்டி பணப்பேய். உன்னை கல்யாணம் பண்ணது நினைச்சாலே எனக்கு அருவெறுப்பா இருக்கு. அவனுடைய நல்ல மனசு உனக்கு எப்போது தான் புரியுமோ. இந்த உயில்க்கு, முன்னாடியே அவன் இதை எழுதி பதிவு பண்ணியிருக்கான் இது கூடவா உனக்கு புரியல. இந்த சின்ன விசயம்கூட புரிஞ்சுக்க முடியாம பணம் வந்து உன் கண்ணை மறைக்குதாடி, உனக்கு இன்னொரு விசயம் தெரியுமா, உங்கம்மா நீ பார்த்தேன் பார்த்தேன்னு சொன்னியே, எப்படி பார்த்த. அவன் மாசம் மாசம் பணம் அனுப்புனது உனக்கு தெரியுமா.

 

“உங்கம்மாவோட மருந்து, மாத்திரை ஏன் இப்போது நடந்த காரியம் வரை அவன் தான் அவர்களுக்கு பெற்ற பிள்ளையாக இருந்து எல்லாமும் செய்தான், பணம் வேண்டாம் என்று நான் சொல்லியும் இது எனது உரிமை நான் என் அன்னைக்கு செய்ய கடமைப்பட்டவன் என்று கூறி என் வாயை அடைத்துவிட்டான். இதற்கு மேலும் நீ புரிந்து கொள்ளவில்லை என்றால் நீ முட்டாள் அடி முட்டாள். அவன் உன்னை தன் உடன் பிறந்த சகோதரியாக தான் நினைக்கிறான் என்பதை புரிந்து கொள்என்றுகோபமாகஇரைந்துவிட்டுவெளியேறிவிட்டான்.

 

வக்கீல் உயில் படித்து முடித்ததும் சித்தார்த்தை ஸ்ரீ அழைத்துச் சென்றுவிட்டான். யாருமற்ற தனிமையில் இருந்த நளினிக்கு அப்போது தான் உண்மை புரிய ஆரம்பித்தது. சொத்துக்கள் தன்னை வந்து சேரும் பட்சத்தில் தான் அதற்கு உரிமையுள்ளவன் அல்ல என்று வக்கீல் படித்தது அவளுக்கு உரைத்தது.

 

சரிந்து அமர்ந்து அழத்தொடங்கியவளை தேற்ற யாரும் அங்கிருக்கவில்லை. ராகவன் வெளியே சென்று வெகு நேரம் கழித்தே வீடு திரும்பினான். நளினி தான் கிளம்பும் முன் எங்கு அமர்ந்து இருந்ததாலோ அங்கேயே இருந்தது அவனை தாக்கியது. பிள்ளைகள் வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர்.

 

மனது கேட்காமல் அவளை தொட்டு திருப்பியவனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. நளினி கதறி கதறி அழ ஆரம்பித்துவிட்டாள். தான் பெரும் தவறு செய்து விட்டதாக கூறி அழுது அழுது மயங்கி விழுந்தாள்.

 

அவளை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றான் ராகவன். மருத்துவர் அவளுக்கு காய்ச்சல் வந்திருப்பதாகவும் அவள் ஒரு இரண்டு நாட்கள் ஓய்வாக மருத்துவமனையில் இருக்கட்டும் என்று கூறினார்.

 

சுரவேகத்தில் அவள் சித்தார்த் சித்தார்த் என்று புலம்ப, ராகவன் அருகே சென்று என்னவென்று அவளை கேட்க தான் அவனை பார்க்க வேண்டும் என்று அவள் கூறினாள். ராகவன் சென்று அவனை அழைத்துவந்தார். அவனை கண்டவள் அவனிடம் தன்னை மன்னிக்குமாறு கேட்டவள் மீண்டும் மயங்கினாள்.

 

ஒருவாறு நளினி குணமடைந்து வீட்டுக்கு வர ஒரு வாரம் ஆகியது. சித்தார்த்திடம் மனம் விட்டு பேசியவள், அவள் அன்னை விருப்படியே அவன் சொத்துகளை ஆளவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாள். சித்தார்த் அதற்கு மறுத்துவிட்டான். நளினி முகம் வாடினாள். தன்னை அவன் மன்னிக்கவில்லை என்று நினைத்து மீண்டும் அழுதாள்.

 

சித்தார்த் அவளை அழவேண்டாம் என்று கூறி “என்னை தங்கள் மகனாக நினைத்து வளர்த்தவர்கள் எனக்கு உன்னை உறவாக விட்டுச் சென்று இருக்கின்றனர். எனக்கு சொத்து முக்கியம் அல்ல, உங்கள் உறவு தான் எனக்கு முக்கியம். தயவு செய்து என்னை புரிந்து கொள்ளுங்கள் அக்கா, எனக்கு என்றும் உங்கள் அன்பு போதும்என்றுவிட்டான்.

 

பெங்களூரில் அகிலேஷிடம் மொத்த பொறுப்பையும் ஒப்படைத்து விட்டான். ஸ்ரீயின் ஏற்பாட்டின் படி சித்தார்த் கோயம்பத்தூரில் ஒரு அலுவலகம் தொடங்கி தினமும் சென்று வந்தான். வால்பாறையில் எஸ்டேட் ஒன்று விலைக்கு வந்திருப்பதாக கூறிய ஸ்ரீ சித்தார்த்திடம் அதை வாங்குமாறு கூறி அதற்கு தேவையான பணத்தை வங்கியில் கடன் வாங்க உதவி செய்தான்.

 

சித்தார்த்துக்கு ஏனோ வெண்பாவின் நினைவே வந்தது, வால்பாறைக்கு செல்லும் போது. ஸ்ரீ எஸ்டேட் விலைக்கு வருவதாகக் கூறியதும் முதலில் மறுத்தவன், அந்த எஸ்டேட் வால்பாறையில் இருக்கிறது என்று அறிந்ததும் அதை உடனே வாங்க முடிவு செய்தான்.

 

நளினி தான் ஆரம்பித்தாள் சித்தார்த்திற்கு திருமணம் செய்ய வேண்டும் என்று, சித்தார்த் திட்டவட்டமாக கூறிவிட்டான் தனக்கு இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று உறுதியாக கூறிவிட்டான். நளினி ராகவனிடம் கூறி சித்தார்த்திடம் அது பற்றி பேசச் சொன்னாள்.

 

ஸ்ரீ ராகவனிடம் சித்தார்த் வெண்பா பிரிந்தது பற்றி கூறியிருந்தான். “எத்தனை நாட்கள் தான் நீ அவளையே நினைத்து கொண்டு இருப்பாய், வேண்டாம் என்று முடிவு செய்தபின் நீ உனக்கு ஒரு வாழ்க்கையை அமைத்து கொள்வது தானே நல்லதுஎன்றுகூறினான்.

 

“இல்லை மாமா என்னால் அவளை தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லைஎன்றுகூறினான். “எப்படிசித்தார்த்நீகடைசிவரைக்கும்இப்படியேஇருக்கமுடியுமாஎன்றான்ராகவன்.

 

“அதைபற்றிபிறகுயோசிக்கலாம்மாமா, தயவுசெய்துஇனிஎன்திருமணம்பற்றியபேச்சைஎடுக்காதீர்கள்என்றான். விட்டுதான்பிடிக்கவேண்டும்என்றுநினைத்தராகவன்அதுபற்றி மேலே அவனிடம் எதுவும் பேசவில்லை. நளினியிடம் கொஞ்ச நாட்கள் கழித்து இந்த பேச்சை எடுக்கலாம், அது வரை சித்தார்த்திடம் எதுவும் இது பற்றி பேசவேண்டாம் என்று கூறிவிட்டான்.

 

நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி மாதங்களும் வருடங்களாக உருண்டோடியது. ஒரு நாள் காலையில் நளினி அவனை வந்து எழுப்பினாள். ஒரு பெண் வந்து இருப்பதாகவும் அவள் அவனை காண வந்து இருப்பதாகவும் கூறினாள்.

 

திடிரென்று மனதில் ஒரு மின்னலடிக்க வந்திருப்பது வெண்பாவோ என்று நினைத்து அவன் மனம் ஒரு கணம் மகிழ்ச்சியில் துள்ளியது, மறுகணம் அது அவளாக இருக்காது என்ற எண்ணம் தோன்ற யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே கீழே இறங்கி வந்தான்.

 

வேகமாக படியிறங்கி கீழே வந்தவன், வந்தவளை பார்த்ததும் ஏமாற்றமும் யோசைனையுமாக அவளை நோக்கினான். வந்திருந்தது வெண்பாவின் தோழி சுஜி, ஒருவேளை வெண்பாவை பற்றி ஏதாவது பேச வந்திருப்பாளோ என்று ஏதேதோ எண்ணங்கள் மனதில் தோன்றியது. வாசலிலேயே நின்றிருந்தவளை உள்ளே அழைத்து உட்கார வைத்தான்.

 

“சொல்லும்மா சுஜி என்ன விசயம் என்னை தேடி இவ்வளவு தூரம் வந்து இருக்க, இந்த விலாசம் உனக்கு எப்படிம்மா கிடைத்ததுஎன்றான். அவளிடம்கேட்டுக்கொண்டிருக்கும்போதேஸ்ரீஉள்ளே நுழைய அந்த கேள்விக்கு அவன் பதிலளித்தான்.

 

“அவங்க முதல்ல என்னை தேடித் தான் வந்தாங்க, நான் தான் உன் விலாசம் கொடுத்தேன். மீதி விஷயத்தை நீ சுஜிகிட்டையே கேளுஎன்றான்ஸ்ரீ.சித்தார்த் யோசைனையுடன் அவளை ஏறிட்டான். சுஜி வாய் திறந்தாள், “அண்ணா நான் கேட்குறதுக்கு நீங்க எனக்கு பதில் சொல்லணும்என்றாள்பீடிகையுடன். “கேளும்மா, என்னவிசயம்என்றான்சித்தார்த். “உங்கஅம்மா, அப்பாபேருஎன்னன்னுசொல்லுங்கஅண்ணாஎன்றாள்.

 

‘இவள் ஏன் இதையெல்லாம் கேட்கிறாள்என்றுயோசித்தவாறே, “எதுக்கும்மாகேட்குற, அவங்கபேருசிவபிரகாசம், கோதைஎன்றான்அவன். “நான்உங்களைபெற்றதாய், தந்தைபற்றிகேட்கிறேன், நீங்கள்உங்களைவளர்த்தவர்களைபற்றிசொல்கிறீர்கள்என்றாள்அவள்.

 

“என்ன சுஜி பேச்சு ஒரு மாதிரியா போகுது, நீ எதுவா இருந்தாலும் நேராகவே சொல்லிவிடுஎன்றான்சித்தார்த். சுஜிதன்கைப்பையில்இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து அவனிடம் காண்பித்தாள். அதை பார்த்தவனுக்கு பிரமிப்பும், ஆச்சரியமும் உண்டானது. அது கணவன், மனைவி சேர்ந்திருந்த ஒரு பழைய புகைப்படம் அதில் இருந்தவர் தற்போது சித்தார்த் இருப்பது போல் இருந்தார். ஆனால் சிகை மட்டும் அந்தகால அலங்காரத்தில்  இருந்தது.

 

“யார் இவர்கள், என் ஜாடையாகவே தெரிகிறாரே யார் இவர்என்றான்சுஜியைபார்த்து. “இவர்கள்தான்நம்தாயும்தந்தையும்என்றபதிலில்அவனிடம்ஒருஅதிர்ச்சிதெரிந்தது. “என்னசொல்கிறாய்சுஜிஎன்றுகுழம்பினான்அவன்.

 

“அம்மா, அப்பா, நீ நிர்மலா அக்கா எல்லாரும், நம் ஊர் கோவில் திருவிழாவிற்கு போய் இருந்தீங்க, நான் அப்போது அம்மா வயிற்றில் இருந்தேன். விளையாட சென்ற நீ காணாமல் போனாய். உங்களை தேடாத இடம் இல்லை. அம்மா பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டார்கள்.

 

“கடைசியாக யாரோ ஒருவர் உன்னை ஒரு பேருந்து அருகே பார்த்ததாகக் கூறினார், உங்களை தேடி காவல் நிலையத்தில் கூட மனு கொடுத்திருந்தார்கள். உங்களை நினைத்து அவர்கள் கண்ணீர் விடாத நாளே இல்லை.

 

“ஓவ்வொரு நாளும் நீ இன்று கிடைப்பாய் நாளை கிடைப்பாய் என்று தங்களை சமாதானப்படுத்தி கொண்டு தினமும் உன்னை பற்றி தகவல் கிடைக்காதா என்று காவல் நிலையம் சென்று வருவார் நம் அப்பா.

 

“நான் முதலில் உங்களை பார்த்தபோது எங்கேயோ பார்த்ததுபோல் தோன்றியது. உங்களை பார்க்கும் போது எனக்குள் என்னை அறியாமலே ஒரு பாச உணர்வு உங்கள் மேல் உண்டானது. அதனால் தான் நான் உங்களை அண்ணா என்று அழைத்தேன். ஆனால் உண்மையாகவே நீங்கள் என் அண்ணன் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறதுஎன்றுகூறிமேலும்தொடர்ந்தாள்.

 

“கல்லூரி படிப்பு முடிந்து நான் ஊருக்கு சென்று விட்டேன். சமீபத்தில் அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் சேர்த்து இருந்தோம். அவருக்கு எதனால் அப்படி ஆகியது என்று தெரியுமாஎன்றுநிறுத்தினாள்அவள்.

 

அவன்கேள்வியாய்நோக்க, “மருத்துவமனையில்அப்பாஎன்னைஅருகேஅழைத்துஅவர்சட்டையில்இருந்துஒருபுகைப்படத்தைஎடுத்துகாட்டினார். அந்தபுகைப்படம்நாம்வால்பாறைக்குசென்றபோதுஎடுத்தது, அந்தபுகைப்படம்பார்த்த அதிர்ச்சியில் தான் அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்து  இருக்கிறது.

 

“அந்த புகைப்படத்தை எடுத்து உங்களை சுட்டி காட்டி உங்கள் பெயர் மற்றைய விபரங்கள் கூறுமாறு கேட்டார். வீட்டிற்கு சென்று பரண் மேல் உள்ள பெட்டியில் ஒரு புகைப்படம் இருக்கும் அதை எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார். நானும் வீட்டிற்குச் சென்று அந்த புகைப்படத்தை பார்த்தபோது தான் எனக்கு புரிந்தது. நீங்கள் நம் அப்பாவை போலவே இருக்கிறீர்கள் என்று உடனே மருத்துவமனைக்கு விரைந்தேன்.

 

“அப்பாவிடம், அம்மாவிடமும் புகைப்படத்தை காட்டி விபரம் கேட்டேன். அப்போது தான் நீங்கள் எப்படி தொலைந்து போனீர்கள் என்ற விபரம் எனக்கு தெரிய வந்தது. நான் சிறிய பெண் என்பதால் அதுவரை என்னிடம் உங்களை பற்றி வீட்டில் எதுவும் சொன்னதில்லை.

 

:எல்லோரும் உனக்கு ஒரு அண்ணன் இருந்தான் அவன் தொலைந்துவிட்டான் என்று கூறியிருக்கிறார்கள். அப்போது வீட்டில் விபரம் கேட்க அவர்களும் நீங்கள் தொலைந்துவிட்டீர்கள் என்று மட்டுமே சொல்லியிருந்தனர்.

 

“அப்பா உன்னை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறார், அம்மா உன்னை பற்றி கேட்டதில் இருந்து அன்ன ஆகாரம் கூட இல்லாமல் உன்னை பார்க்கும் சந்தோசத்தில் இருக்கிறார்கள். அவர்களே நேரில் வருவதாக தான் கூறினார்கள். அப்பாவின் உடல் நிலையை காரணம் காட்டி நானே உங்களை அழைத்து வந்து விடுவதாக கூறி இங்கு வந்தேன்.

 

“ஸ்ரீ அண்ணனைத் தேடித்தான் நான் முதலில் சென்றேன். அவர் வால்பாறையில் இல்லாததால் அவர் பணி புரிந்த வங்கியில் விசாரித்து அவரிடம் சென்று விபரங்கள் கேட்டறிந்தோம். அவர் தான் உங்களை பற்றி எல்லாம் கூறினார். எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, நீங்கள் தான் என் அண்ணன். உங்களுக்கு நம்ம அப்பா அம்மா வைத்த பெயர் என்ன தெரியுமா கௌதம்என்றுகூறிகண்ணீர்மல்கினாள்.

 

சித்தார்த்தின் முகத்தில் விவரிக்க இயலாத பல உணர்ச்சிகள் தோன்றின. தான் காணாமல் போனது பற்றி தன் பெற்றோர் கவலைப்படாமல் இருக்கிறார்கள் என்று எண்ணி பல நாட்கள் வேதனை பட்டிருக்கிறான்.

 

எப்போதும் அவன் மனதில் அந்த வேதனை ஆட்கொண்டிருந்தது. எல்லா சந்தேகத்துக்கும் சுஜியே விளக்கம் கொடுத்துவிட்டாள். ஆனாலும் எதுவோ அவனை மேலே பேசவிடாமல் தடுத்தது.

 

“நான் உங்களுக்கு ஒருத்தரை அறிமுகப் படுத்த போகிறேன்என்றுகூறிவெளியேசென்றாள். ராகவனும்நளினியும்கூடஒருவிதபிரமையில்இருந்தனர், நடந்தவைகளைப்பார்த்து. வெளியில்சென்றவள்அழைத்துவந்தவரைபார்த்துசித்தார்த்தன்னையறியாமலேஓடிச்சென்று “நிம்மிஎன்றுஅழைத்துஅவள்கைகளைபற்றிக்கொண்டான்.

 

“கெளதம் அண்ணாஎன்றுகூவியபடிஓடிவந்தவள்மேலேபேசமுடியாமல்சித்தார்த்தைகண்டுமகிழ்ச்சியுடன்கண்ணீர்உகுத்தாள். ஒருவழியாகஅவர்கள்அழுதுசமாதானமடைந்துஇயல்பாகபேசஆரம்பித்தபோதுஇருவர்உள்ளேநுழைந்தனர்.

 

“போச்சுடா, அக்காவும் தங்கையும் அண்ணனை பார்த்ததும் எங்களை அடியோட மறந்தாச்சா. ஏன் நிம்மி நீ கட்டின புருஷனகூட மறந்துவிடுவியாஎன்றான்ஒருவன். “அண்ணா, மதினிகட்டினபுருஷனமறந்தாஅவங்கதங்கைகட்டிக்கபோறவனைமறக்கறாங்கஎன்னபண்றதுஎல்லாம்நம்மதலைஎழுத்துஅண்ணாஎன்றான்மற்றொருவன்.

 

சுஜி சிறு வெட்கத்துடன் அவர்களை அறிமுகப்படுத்தினாள். “அண்ணா, இவர் பெரியத்தான் மாணிக்கம் நிம்மி அக்காவின் கணவர். இவர் சின்னத்தான் தினகரன். இவர்கள் வேறு யாருமல்ல நம் அத்தையின் மகன்கள் தான்என்றுகூறினாள்.

 

அவர்களைவரவேற்றுஉபசரித்தவன் மனதில் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது. சுஜியும், நிம்மியும் அவனை உடனே கிளம்பி தங்களுடன் வருமாறு கூறினார். தந்தையில் உடல் நிலை மோசமாக இருப்பதால் உடனே செல்ல வேண்டும் என்றனர். சித்தார்த் அவர்களுடன் கிளம்பத் தயாராகினான்.

 

ராகவன் நளினியை பார்த்தான், நளினியின் முகம் வாடியிருந்தது. கண்கள் கலங்க அவள் நின்றிருந்த கோலம் அவனை சங்கடப்படுத்தியது. கிளம்பயத்தனித்த சித்தார்த் நளினியை அருகே அழைத்து அவளையும்  ராகவனையும் குழந்தைகளையும் எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான்.

 

சிவப்ரகாசம், கோதை, நளினி இல்லாவிட்டால் தான் இல்லை என்று கூறினான். நிம்மியும், சுஜியும் நளினியை அக்காவென்று அன்புடன் அழைத்து அவளையும் தங்களுடன் கிளம்பி வருமாறு கூறினார். சித்தார்த்தும் எல்லோருமாக கிளம்பி போகலாம் என்று கூறினான். நளினி ராகவனை பார்த்தாள், அவன் தலையசைத்ததும் கிளம்ப ஆயத்தமாகினாள்.

 

நளினிக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது, முதலில் வாரத்தில் ஒரு நாளாவது காவல் நிலையம் சென்று விசாரித்து வந்த அப்பா, சித்தார்த் அவர்களுக்கு உயிராகி போனதில் இருந்து அங்கு சென்று விசாரிப்பதை நிறுத்தியிருந்தார்.

 

தனக்கு இப்படி ஒரு உறவை கொடுத்துவிட்டுச் சென்ற தாய், தந்தை மீது அவளுக்கு மிகுந்த மரியாதை உண்டானது. பூஜை அறைக்கு உள்ளே சென்றவள் தாய், தந்தை படத்தின் அருகில் நின்று கண்ணீர் உகுத்தாள்.

 

எனக்கு உங்களுக்கு அப்புறம் எந்த சொந்தமும் இல்லாமல் போய்விடக் கூடாது என்று தான் இப்படி ஒரு சொந்தத்தை ஏற்படுத்தி குடுத்தீர்களா என்று மனதார அவர்களிடம் பேசினாள். ஊருக்கு கிளம்பி சென்றவர்கள் மருத்துவமனை சென்றால் அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர் என்று கூறினார்கள்.

 

போன் செய்து வீட்டிற்கு பேச அவர்கள் அப்போது தான் வீடு வந்த விபரம் கூறினர். ஒருவித எதிர்பார்ப்புடன் அமர்ந்து இருந்த சித்தார்த்தின் கைகளை ஸ்ரீ பற்றிக் கொண்டான் ஆறுதல் படுத்தும் விதமாக. ஸ்ரீக்கே இது பிரமிப்பாக இருந்தது. கனவில் நடப்பது போல் இருந்தது அது.

 

சித்தார்த் வீட்டு வாசலில் இறங்கி நின்றான், அவனுள் விவரிக்க இயலாத பல உணர்ச்சிகள் வந்தது. நிம்மியும், சுஜியும் அவனை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு உள்ளே விரைந்து சென்று ஆரத்தி தட்டுடன் வந்தனர். உள்ளேயிருந்து அன்னை வெளியே வருவார் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

 

ஒரு தயக்கத்துடனே உள்ளே சென்றவன் கண்களில் கலங்கிய விழிகளுடன் மூலையில் நின்று அழுது கொண்டிருந்தவர் ஓடி வந்து அவனை கட்டிக் கொண்டு கதறி அழுதார். “அம்மா ரொம்பவும் உணர்ச்சி வசப்படுவாங்க அண்ணா, அதுனால தான் நான் அவங்களை வெளியே வரவேனாம்ன்னு சொல்லிட்டேன் என்றாள் சுஜி.

 

அவன் அன்னையை கண்டு பேசமுடியாமல் தவித்தவன், “அம்மா என்றதை தவிர வேறு வார்த்தைகள் அவன் வாயில் இருந்து வரவில்லை. கண்களாலேயே தந்தையை தேடியவனை கண்ட அவன் அன்னை சரளா, அவனை உள்ளே அழைத்துச் சென்றார். கட்டிலில் சோர்ந்து படுத்து இருந்தவரை பார்த்ததும் மனம் வலிக்க “அப்பா என்று அழைத்தான் சித்தார்த்.

 

அவன் குரல் கேட்டு எழுந்து அமர்ந்தவர், அவனை கட்டிக்கொண்டு மௌனமாக கண்ணீர் வடித்தார். அவன் சட்டை நனைய அவர் கண்ணீரை துடைத்துவிட்டான். அவர் தான் சோர்ந்து தெரிந்தாரே தவிர அவர் கம்பீரம் அப்படியே இருந்தது. சித்தார்த் எல்லாருக்கும் ராகவன், நளினி, குழந்தைகள் மற்றும் ஸ்ரீயை அறிமுகப்படுத்தினான்.

 

சுஜி அதற்குள் அவள் அன்னையிடம் கோதையின் மறைவு பற்றி சொல்ல, சரளா நளியை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டார். தன் பிள்ளையை கண்ணும் கருத்துமாக வளர்த்து அவனை நல்ல முறையில் ஆளாக்கியவர்களின் மேல் அவருக்கு பெரும் மதிப்பு வந்தது. பெற்றோரை இழந்த அந்த பெண்ணுக்கு இனி தாங்கள், தாயாகவும், தந்தையாகவும் இருந்து கவனிக்க வேண்டும், இது தான் அவர்களுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் என்று எண்ணினார் அவர்.

சித்தார்த் மற்றும் அனைவரும் அவன் தந்தையின் அறையில் இருக்க சரளா எல்லாருக்கும் விருந்து சமைக்க வெளியே வந்தார். வாசலில் அரவம் கேட்க எட்டி பார்த்தவள், “வாங்க மதினி நீங்க அப்பவே வருவீங்கன்னு நினைச்சேன். போங்க போய் உங்க மருமகனை பாருங்க. உங்கண்ணன் மகனை பார்த்த சந்தோசத்தில் எழுந்து உட்கார்ந்து பேசிட்டு இருக்கார் போய் பாருங்க என்றார் சரளா அவளின் நாத்தனார் கோமதியை பார்த்து.

 

“தம்பிங்க இப்ப தான் வந்து சொன்னாங்க மருமகன் வந்தது பத்திச் சொன்னாங்க, போட்டது போட்டபடி ஓடி வந்துட்டேன். வாங்க மதினி போய் என் மருமகனை பார்க்கலாம் வாங்க என்றாள். “நான் புள்ளைங்களுக்கு விருந்து சமைக்க போறேன், உங்களுக்கும் இன்னைக்கு இங்க தான் விருந்து நீங்க வந்துருங்க மதினி என்று கூறிவிட்டு சமையலறைக்கு சென்றார். கோமதி உள்ளே செல்லவும் நளினி வந்து சரளாவுக்கு சமையலில் உதவி புரிந்தாள்.

 

உள்ளே சென்று மருமகனை பார்த்த கோமதி அவனைக் கட்டிக்கொண்டு அழுது தீர்த்துவிட்டார். “அண்ணே மருமகன் உன்னைய அப்படியே உரிச்சு வைச்ச மாதிரி இருக்குண்ணே, ஒரு கணம் நான் மலைச்சு போயிட்டேன். நீ தான் நிற்கிறாய்ன்னு தோணி போச்சு என்றார். “என்னப்பா பார்க்கற இது உங்க அத்தை கோமதி, என்னோட தங்கச்சி என்றார் சுந்தரலிங்கம்.

 

“மாணிக்கம், தினகரன் என் தங்கச்சி பசங்க தானப்பா. உன் பெரிய தங்கச்சிய நம்ம மாணிக்கத்துக்கு தான் குடுத்து இருக்கோம் என்று விளக்கினார். சுந்தரத்திற்கு உடம்பு குணமானதும் குலதெய்வம் கோவிலுக்கு கிளம்பிவிட்டனர். சரளா அவன் கிடைத்தால் குல தெய்வம் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து கும்பிடுவதாக வேண்டி இருந்தார். எல்லோரும் சென்று பொங்கல் வைத்து ஊருக்கு திரும்பினர்.

 

ராகவன், நளினி வந்த இரண்டாம் நாளே குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஊருக்கு கிளம்பிவிட்டனர். சரளாவுக்கு அவர்களை அனுப்ப மனசேயில்லை. நளினி மீண்டும் வருவதாக சொல்லிச் சென்றாள். சித்தார்த் தந்தையிடம் வந்தான், “அப்பா உங்களிடம் பேசவேண்டும் என்றான். “சொல்லுப்பா என்றார் சுந்தரலிங்கம்.

 

“எனக்கு ஊருல நிறைய வேலையிருக்குப்பா, நான் போட்டது போட்டபடி கிளம்பி வந்துட்டேன். இங்கு வந்து கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஊருக்கு போகவேண்டும் என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே சரளா வந்துவிட்டார்.

 

கண்கள் கலங்க “மறுபடியும் எங்களை விட்டு போகப் போறியாப்பா என்றார். “அம்மா நான் பேசி முடிக்கறதுக்கு முன்னால நீங்க பேசினா எப்படி என்றான் சித்தார்த். “இல்லப்பா கௌதம் அம்மா எதுவும் பேசமாட்டா, நீ சொல்ல வந்ததை சொல்லுப்பா என்றார் சுந்தரலிங்கம்.

 

“அப்பா, அம்மா நீங்களும் என்னோட ஊருக்கு வரணும், நான் ஸ்ரீகிட்ட சொல்லி வீடு பார்க்க சொல்லிட்டேன், நீங்க தான் சொல்லணும் நாம எப்ப அங்க கிளம்பலாம் என்றான் அவன். பார்த்தியா நம் மகனை என்பது போல் மனைவியை பார்த்தார் சுந்தரம்.

 

“நீ எங்க கூப்பிட்டாலும் நாங்க வரோம், இனிமே உன்னை பிரிஞ்சு எங்களாலே இருக்க முடியாதுப்பா என்றார் சரளா. “அப்பா நீங்க எதுவும் பேசலையே என்றான். “உங்க அப்பா உன் தங்கை சுஜி கல்யாணம் முடிஞ்சதும் போகலாம்னு நினைக்கிறார் என்றார் சரளா. “என்ன என்னை பத்தி ஏதோ பேச்சு ஓடற மாதிரி இருக்குது என்று சொல்லிக்கொண்டே சுஜி அங்கு வந்து சேர்ந்தாள்.

 

தினகரன் பற்றி கூறியது அவனுக்கு ஞாபகம் வந்து வேண்டுமென்று அவளை சீண்டினான், “ஆமாம் வாலு உன் கல்யாணம் பத்தி தான் பேசிட்டு இருந்தோம், சரிப்பா நாம நல்ல மாப்பிள்ளையா பார்த்து சுஜிக்கு கல்யாணம் பண்ணிடலாம் என்றான் அவன் விளையாட்டாக.

 

“வேற மாப்பிள்ளை எதுக்குப்பா நம்ம தினகரனுக்கு தான் சுஜியை பேசி வைச்சு இருந்தோம், எனக்கு உடம்பு சரியில்லாம போனதால இந்த கல்யாணம் தள்ளி போயிடுச்சு. இப்போ போய் நாம பேசி முடிச்சுடுவோம் என்றார் அவர்.

 

கோமதி அப்போது உள்ளே நுழைந்தாள், “அண்ணே நீ பேசினது கேட்டேன், நானும் இப்ப அதை பத்தி தான் பேசலாம்னு வந்தேன். சொல்லுண்ணே நம்ம தினா சுஜாதாவோட கல்யாணம் எப்போ வைச்சுக்கலாம். நீங்களே சொல்லுங்க மருமகனே என்றார் அவர்.

 

சுஜிக்கு அவர்களின் அந்த பேச்சில் வெட்கம் வந்தது. இதை கவனித்துவிட்ட சித்தார்த் அவளை சீண்டவென “ஒரு வருஷம் கழிச்சு வைச்சுக்கலாம் அத்தை என்றான் அவளை பார்த்துக் கொண்டே, சுஜியின் முகம் விழுந்துவிட்டது.

 

“என்ன சுஜி உனக்கு சம்மதம் தானே என்றான் சீண்டலுடன். “நீ சொன்னா சரியா தான் இருக்கும்ண்ணே என்றாள் அவள். “அத்தை சும்மா தான் சொன்னேன், அடுத்த முகூர்த்ததிலேயே கல்யாணம் வைச்சுக்கலாம் என்றான் அவன். “அண்ணா என்று அவனை கட்டிக் கொண்டாள் சுஜி.

 

சுஜியின் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்தினான் சித்தார்த். அந்த ஊரிலேயே நடந்த மிகப்பெரிய திருமணமாக அது இருந்தது. சுஜி கண்கள் கலங்க அனைவரிடமும் விடைபெற்று புகுந்த வீடு சென்றாள். தினகரனுக்கு டெல்லியில் வேலை அதனால் அவளும் அவனுடன் டெல்லி கிளம்பினாள், அவளை விட்டுவர நிர்மலாவும் மாணிக்கமும் உடன் சென்றனர்.

 

சித்தார்த் பெற்றவர்களுடன் ஊருக்கு கிளம்பும் நாளும் வந்தது. கோமதி மிகுந்த வருத்தத்துடன் பேசினாள். அண்ணனும் மதினியும் வேறு ஊருக்கு செல்வதில் அவளுக்கு வருத்தமாக இருந்தது, சிறு வயதிலேயே கணவனை இழந்த அவருக்கு சுந்தரமும், சரளாவும் தான் எல்லாமுமாக இருந்தார்கள். அவர்களின் பிரிவு அவளை அதிகமாக தாக்கியது. வீட்டை பூட்டி சாவியை கோமதியிடம் கொடுத்துவிட்டு அவர்களையே நிலத்தையும் பார்த்துக்கொள்ள சொன்னார் சுந்தரம். மாணிக்கமும் வந்து வழியனுப்ப நிர்மலாவும் கண்கள் கலங்க அவர்களுக்கு விடை கொடுக்க சித்தார்த் பெற்றோருடன் கிளம்பினான்..

 

அத்தியாயம் –18

 

அவர்கள் ஊருக்கு கிளம்பும் நாள் சுஜியும் வந்திருந்தாள் அவர்களை வழியனுப்ப, சித்தார்த் அவர்களிடம் “நிர்மலா, சுஜி, அத்தை எதுக்கு அழறீங்க, நாங்க இங்க இருக்கற பொள்ளாச்சிக்கு தானே போறோம், நீங்க நினைச்சா எங்களை வந்து பார்த்துட்டு போகலாம். மாப்பிள்ளை பார்த்துகோங்க, எதாச்சும்னா ஒரு போன் போடுங்க நாங்க உடனே வந்துடுவோம்

 

“ஆமாம்மா, அண்ணே சொல்றான் இல்ல, நாங்க உங்க ரெண்டு பேருக்கும் செய்ய வேண்டிய கடமையை செஞ்சுட்டோம். ஆனா உங்க அண்ணனை பார்த்துக்கற கடமையும் அவனுக்கு ஒரு நல்லது நடத்தி பார்க்கணும்கற எண்ணமும் கடமையும் எங்களுக்கு இருக்கு, இப்போது தான் அவன் எங்களுக்கு திரும்ப கிடைத்திருக்கிறான். எங்கள் வாழ்நாள் முழுவதும் அவனை நாங்கள் இனி பிரியவே மாட்டோம்என்றார்சுந்தரலிங்கம்உணர்ச்சிவயத்துடன்.

 

கிளம்பும் போது சித்தார்த் திருமணம் பற்றிய பேச்சு எழுந்தது. “அண்ணா இனி அடுத்த விஷேசம் உன் திருமணம் தான். நாங்கள் விரைவில் அதை எதிர்பார்க்கிறோம். அம்மா, அண்ணாவுக்கு ஏற்ற மாதிரி பொண்ணு தேடிட்டு எங்களை கூப்பிடுங்க. நாங்க கடைசியா வந்து ஓகே பண்றோம்என்றாள்நிம்மி. அண்ணனுக்கு ஏற்ற பொண்ணா பார்க்கறதவிட அவன் மனசுக்கு பிடிச்ச பொண்ணா தான் பார்க்கணும்என்றாள்சுஜி.

 

“என்னண்ணே சரி தானேஎன்றாள்மேலும். அப்போதைக்குசிரித்துவிட்டுகிளம்பினாலும்அவனுக்குள்வெண்பாவின்நினைவு தீயாய் தகிக்க ஆரம்பித்தது. அவன் எண்ணம் முழுக்க அவளை சுற்றியே வட்டமிட்டது. வலுகட்டாயமாக அவன் மனதை வேறு திசையில் திருப்ப எண்ணி தோற்று போனான்.

 

சரளாவும் மகளுக்கு புத்தியுரைத்துவிட்டு மாப்பிள்ளைகளிடமும் சொல்லிவிட்டு கோமதியை ஆறுதல் படுத்திவிட்டு ஒருவழியாக ஊருக்கு கிளம்பினர். சித்தார்த் எல்லோரிடமும் விடைபெற்று பெற்றோரை கூட்டிக்கொண்டு ஊருக்கு கிளம்பினான்.

 

காரில் சென்றுக் கொண்டிருந்தவனின் எண்ணங்கள் சுஜி கேட்டதில் வந்து நின்றது. சுஜி எதை கேட்கக்கூடாது என்று பயந்தானோ அந்த கேள்வியை அவள் ஊருக்கு வந்த இரண்டாம் நாளே கேட்டுவிட்டாள்.

 

“அண்ணா உங்களை கேட்க மறந்துட்டேன், நீங்க இனியா, வெண்பாவோட போன் நம்பர் எனக்கு தாங்க நான் அவகிட்ட பேசணும். என் போன் தொலைஞ்சு போனதுனால என்கிட்டே யாரோட எண்ணும் இல்லை. நீங்க இன்னும் இனியா, வெண்பாகூட தொடர்புல தானே இருக்கீங்கஎன்றாள்.

 

“இல்லம்மா, வால்பாறை வந்து போன பிறகு எனக்கு அவர்களுடன் தொடர்பு விட்டு போனது. அதன் பின் நான் வேலை விஷயமாக பெங்களூர் சென்று விட்டேன்என்றான்சித்தார்த்உண்மையைமறைத்து.

 

அவள் உடனே ஸ்ரீயை பிடித்து கேட்க ஆரம்பித்துவிட்டாள், “அண்ணா கண்டிப்பா உங்ககிட்ட அவங்க எண் இருக்கும் தானே, தயவு செஞ்சு குடுங்கண்ணா. அவங்ககிட்ட நான் சித்தார்த் அண்ணா பற்றி எல்லாம் சொல்லணும். நான் அவங்களை ரொம்பவே தேடுறேன்என்றாள்கெஞ்சுதலாக.

 

நீ அவள் எண்ணை தான்…

தொலைத்துவிட்டாய்…

நான் என்னையே…

அவளிடம் தொலைத்துவிட்டேன்…

தேடிக்கொண்டிருக்கிறேன்…

என்னவளையும்…

அவளது எண்ணையும்…

என்று அவசரமாக அவன் மனம் கவிதை சொன்னது.

 

“என்னம்மா நீ, சித்து கிட்டவே இல்லைனா என்கிட்ட மட்டும் எப்படி இருக்கும், நீங்க வால்பாறை வந்து இருக்கும் போது வைத்திருந்த எண் மட்டும் தான் என்னிடம் உள்ளது, அந்த எண்ணும் இப்போது உபயோகத்தில் இல்லைஎன்றான்.

 

சித்தார்த் ஸ்ரீயையும், ராகவனையும் அழைத்து வெண்பாவை பற்றியும் தன்னை பற்றியுமான விசயம் எக்காரணம் கொண்டும் சுஜிக்கு தெரியக்கூடாது என்றும், சுஜிக்கு மட்டுமல்ல வேறு யாருக்குமே தெரியக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டான்.

சுஜியின் திருமணத்தின்போது சுஜி அவனை கட்டாயப்படுத்தி சென்னைக்கு செல்ல வேண்டும் தோழிகளை நேரில் பார்த்து கல்யாண பத்திரிகை கொடுக்க வேண்டும் என்று கூற, ஸ்ரீயுடன் அவளை சென்னைக்கு அனுப்பிவைத்தான்.

 

அங்கு வெண்பா வீட்டில் யாருமில்லை, அவர்கள் வேறு ஊருக்கு போய்விட்டார்கள் என்ற தகவல் மட்டுமே கிடைத்தது, இனியா வீட்டிற்கு சென்றால் அவர்கள் இனியாவிற்கு திருமணமாகி வெளிநாட்டில் இருப்பதாகக் கூற அவளை பார்ப்பதற்காக அவள் வீட்டினர் அனைவரும் அங்கு சென்று இருப்பதாகக் கூறினார் அங்கிருந்த காவலாளி.

 

வேறு வழியில்லாமல் அவள் அவர்கள் வீட்டிற்கு காவலுக்கு இருந்தவரிடம் பத்திரிக்கையை கொடுத்துவிட்டு கிளம்பினாள். சித்தார்த்திடம் ஸ்ரீ விஷயத்தை சொல்ல சித்தார்த் ஓரளவு இதை எதிர்பார்த்திருந்தான். அவன் முகம் சுத்தமாக உணர்ச்சிகளை தொலைத்திருந்தது. அவன் நினைவுகள் கலைய அவர்கள் ஒருவாறு ஊருக்கு வந்து சேர்ந்தனர்.

 

ஒருவாறு பொள்ளாச்சிக்கு வந்து குடியமர்ந்தனர் சித்தார்த்தின் குடும்பத்தினர். சித்தார்த் அந்த வீட்டை போகியத்திற்கு எடுத்திருந்தான். ஸ்ரீயின் வீட்டிற்கு அடுத்ததாக இருந்தது அந்த வீடு. சித்தார்த் வால்பாறையில் புதியதாக ஒரு தொழிற்சாலையை உருவாக்கியிருந்தான்.

 

எஸ்டேட்டில் இருந்து வரும் தேயிலையை பதப்படுத்தி தேயிலை செய்து அவன் நிறுவனம் மார்க்கெட்டில் விற்பனை செய்தது. அவனுடைய தேயிலைக்கென்று தனி மவுசு அங்கு இருந்தது. காலையில் சித்தார்த்தும், சுந்தரமும் வால்பாறைக்கு கிளம்பி செல்வர்.

 

சுந்தரம் தோட்டத்தை மேற்பார்வை பார்க்க போய்விட சித்தார்த் தொழிற்சாலைக்கு சென்று விடுவான். மதியம் அன்னை செய்து கொடுத்தனுப்பும் உணவை இருவரும் சேர்ந்து உண்டுவிட்டு மாலையானதும் வீட்டிற்கு செல்வர்.

 

அங்கு ஸ்ரீயின் வீடு இருக்கும் அதே தெருவிலேயே வீடு ஒன்று விலைக்கு வருவதாகக் கூற சித்தார்த் வங்கியில் மீண்டும் கடன் வாங்கி அந்த வீட்டை வாங்கினான், எஸ்டேட் வாங்கிய கடன் முடிந்திருக்க அவன் கடன் பத்திரம் உடனே அங்கீகரிக்கப்பட்டது.

 

அவன் தந்தையை அங்கும் இங்கும் அலைய வைக்க கூடாது என முடிவெடுத்து அவர்களை வால்பாறை வீட்டில் குடியமர்த்தினான். “என்னப்பா சித்தார்த் நீயும் இங்கயே தங்கலாமே, எங்களை மட்டும் இங்க தங்க வைச்சுட்டு நீ ஏன்பா இப்படி அலையற என்றார் சரளா.

“அம்மா, அப்பா அலைய வேணாம்னு தான் நான் இங்க ஒரு வீடு வாங்கினேன். எனக்கு கொஞ்ச நாளைக்கு அங்க வேலை இருக்கும்மா அதெல்லாம் முடிச்சுட்டு நான் இங்கவே வந்து தங்கிடுறேன்ம்மா. அங்க மாமாகிட்ட எல்லா பொறுப்பும் ஒப்படைச்சுட்டு நான் இங்க வந்துடுறேன். நீங்க கவலைபடாதீங்க, நான் தினமும் இங்கு வந்துட்டு தான் போவேன்ம்மா. காலையில இங்க வந்துட்டு தொழிற்சாலைக்கு போய்ட்டு வீட்டுக்கு வந்து தான் போவேன், போதுமாம்மா என்று சமாதானப்படுத்தினான்.

 

சுந்தரம் தோட்டத்தையும் தொழிற்சாலையையும் பார்த்துக் கொள்ள சித்தார்த் தினமும் காலையில் வால்பாறைக்கு கிளம்பி சென்று அங்கு உள்ள அலுவலகத்தில் சென்று கணக்கு வழக்கு பார்த்துவிட்டு மீண்டும் மதிய வேளைக்கு வீட்டிற்கு வருவான். மதிய உணவை முடித்துக் கொண்டு அவன் தந்தையை ஓய்வெடுக்க அனுப்பிவிட்டு அவன் கிளம்பி பொள்ளாச்சிக்கு வந்து சேருவான், ராகவனுக்கு அங்கு உள்ள வேலைகளை பழக்கிவிட்டு அவர் மேற்பார்வையில் அந்த அலுவலகம் நடக்க ஏற்பாடு செய்தான்.

 

அவன் தந்தையும், தாயும் அவர்கள் வால்பாறைக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே அவன் திருமண பேச்சை எடுக்க அவன் தனக்கு இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்றும் தான் இன்னும் பெரிய அளவில் சம்பாதிக்க வேண்டும் என்று கூறி தள்ளிப்போட்டான்.

 

மேலும் ஒரு வருடம் கடந்த நிலையில் மீண்டும் அவர்கள் அவன் திருமணப்பேச்சை எடுத்தனர். “ஏன் தம்பி, நீ தான் கை நிறைய சம்பதிக்கறயே இப்பவாச்சும் உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கறோம்ப்பா. நீ என்ன சொல்றஎன்றுஆரம்பித்தார்சரளா. அப்போதுசுஜிக்குகுழந்தைபிறந்துஅவள்அங்குதான்இருந்தாள். அவளும்சேர்ந்துசித்தார்த்தைகேள்விகேட்கஆரம்பித்துவிட்டாள்.

 

“என்னண்ணா என்ன நினைச்சுட்டு இருக்கற உன் மனசில நீ எப்போதான் கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிற. அம்மாவும் அப்பாவும் அதுக்காக தான் தவமா தவம் இருக்காங்க. நீ பிடி கொடுக்க மாட்டேங்கறயேஎன்றுஅவளும்சேர்ந்துஅங்கலாய்த்தாள். “நீயாரையாச்சும்விரும்பறயாசொல்லுஉனக்குஅவங்களையேபேசிமுடிச்சுடலாம்என்றாள்அவள்.

 

சித்தார்த்தின் முகமே மாறிவிட்டது, இதில் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்தான். ஒரு முடிவெடுத்தவனாக இருவரையும் நோக்கினான். “நீங்க நினைச்சாலும் நான் விரும்பிய பெண்ணோட எனக்கு திருமணம் நடக்காது. ஏன்னா, அவளுக்கு கல்யாணமாகிடுச்சுஎன்றான்சித்தார்த்.

 

“எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், நானே கண்டிப்பா உங்களிடம் வந்து ஒரு நாள் எனக்கு பெண் பார்க்கச் சொல்வேன், அதுவரை பொறுத்திருங்கள்என்றுவிட்டுசென்றுவிட்டான்.

 

“அண்ணாஎன்றுஆரம்பித்தவளிடம்“நீஎன்னகேட்கபோகிறாய்ன்னுஎனக்குதெரியும், தயவுசெய்துஅந்தபொண்ணுயாருன்னுமட்டும்கேட்காதீங்க. என்னால அவளோட வாழ்க்கைக்கு எப்போதும் தடங்கலாக இருக்க முடியாது.

 

“அதுனால தான் நான் அவளை பார்க்க வேண்டாம் என்று வேறு ஊருக்குச் சென்றுவிட்டேன். முடிஞ்சு போன விசயம் இதை பற்றி மேலும் கிளறவேண்டாம். வேறு யாரிடமும் இதை பற்றி பேசவும் வேண்டாம்என்றுகூறிமுடித்துவிட்டான்.

 

சரளாவுக்கு மகனின் வேதனை மனதைப் போட்டு அரித்தது. தன் கணவரிடம் விஷயத்தை சொன்னால் அவரும் மனமுடைந்து போனார். இப்படியே மாதங்கள் கடக்க சரளா மீண்டும் பொறுக்க முடியாமல் இந்த முறை ஸ்ரீயை அழைத்து பஞ்சாயத்து வைத்தார். “அம்மா நீங்க கொஞ்ச நாள் அவனை விட்டு பிடிங்க, அப்புறம் சரியாகிடும்என்றுஏதேதோகாரணம்கூறிசமாளித்தான்.

 

சித்தார்த்திடம் சென்று “டேய் உன் மனசில என்ன தான் இருக்கு, அம்மா, அப்பா பாவம்டா உன் கல்யாணத்தை பார்க்கணுங்கறது தான் அவங்க நினைப்பே, அவங்களுக்காகவாவது நீ உன் மனசை மாத்திக்கடாஎன்றான்ஸ்ரீ.

 

“ஸ்ரீ என்னை பற்றி முழுவதுமாக அறிந்த நீயே, இப்படி சொல்லலாமா. என்னால் அவளை மறக்க முடியாம நானே தவிச்சுக்கிட்டு இருக்கேன்டா, நான் வால்பாறையில் எஸ்டேட் வாங்க சம்மதிச்சதே அவளை மறக்க முடியாமல் தான், தினமும் நானும் அவளும் தனியாக போன இடங்களை பார்க்காமல் நான் தூங்கினதே இல்லை ஸ்ரீ. தயவு செய்து நீயாவது என்னை புரிஞ்சுக்க. எனக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் குடுங்க. என்னை இனி இது போல் சங்கடத்துக்கு ஆளாக்காதீர்கள்என்றுமுடிவாககூறிவிட்டான்.

 

அதன்பின் ஸ்ரீ வால்பாறைக்கு வருவதை வெகுவாக குறைத்துக் கொண்டான். ஏனெனில் சித்தார்த்தின் தாய்க்கும் தந்தைக்கும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அவர்கள் வேதனை படுவதையும் பார்க்க முடியவில்லை.

 

இத்தனை வருடங்கள் கழித்து அவன் இப்போது தான் அவளை பார்க்கிறான். சாலையில் அவளை பார்த்ததும் அவனுக்கு உண்டான சந்தோசத்திற்கு அளவே இல்லை எனலாம். அவளை பார்த்தபோது தன்னையறியாமல் அவன் காரை நிறுத்தினான். அவளை பார்த்தபோது ஆராய்ந்தவனுக்கு அவள் கழுத்தில் தாலி இல்லாதது உறுத்தியது, அவள் அறியாவண்ணம் அவள் காலை பார்த்தவனுக்கு காலில் மெட்டி இல்லாமல் இருந்தது தெரிந்தது. எப்படி அவளிடம் கேட்பது என்று யோசித்தவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.

 

அவளை பற்றி தெரிந்து கொள்ள அவளை வேண்டுமென்று அவன் சீண்ட அவளும் தான் வாயாலேயே அவளுக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறினாள். அவளுக்கு திருமணம் ஆகவில்லை என்றதும் அவன் மனம் லேசானது போல் உணர்ந்தான். அவன் காத்திருப்பு வீண் போகவில்லை என்று அவன் மனம் உற்சாக துள்ளல் போட்டது.

 

அவன் வாழ்வில் மீண்டு(ம்) வந்த வசந்தமாக அவளை நினைத்தான், அவள் வாழ்க்கையில் எவ்வளவோ அவனுக்கு கிடைத்திருந்தாலும் ஒரு வெறுமை அவனை சூழ்ந்திருந்தது. அவன் அவனுடைய உயிர்ப்பை தொலைத்திருந்தான். அவனுக்கு உயிராய், உயிர்ப்பாய், துடிப்பாய் இருந்தவளை தூக்கி எறிந்துவிட்டு வந்த அந்த கணம் அவன் கண் முன் நிழலாடியாது. அவன் மனபாரம் அவளுக்கு திருமணமாகவில்லை என்றதும் அடியோடு தீர்ந்தது.

 

மந்திரத்திற்கு கட்டுண்டவன் போல் அவள் பின்னேயே தொடர்ந்து சென்றான். கோவிலில் அவளை பார்த்ததும் தன்னை மீறி கடவுளிடம் பிரார்த்தனை செய்தான். அவளை இனி ஒரு தரம் பிரிவதில்லை என்றும் சத்தியம் செய்தான். யாரோ ஒரு கவிஞர் எழுதிய கவிதை அந்நேரம் அவன் நினைவிற்கு வந்தது

 

முன்னோக்கிச் செல்லும்

நீயில்லா…

ஒவ்வொரு பயணத்திலும்

பின்னோக்கி…

இழுத்துச் செல்கிறது

உன் நினைவுகள்…

 

அவன் நினைவுகள் இப்படியிருக்க வெண்பாவிற்கு அன்றைய நாளின் நினைவு வந்தது. அவள் மீண்டும் அவனை பார்க்க வேண்டும் என்று தவமிருந்தது அவனை நன்றாக கேள்வி கேட்க வேண்டும் என்ற நினைவில் தான். ஆனால் அவனை பார்த்ததும் மனம் அவனுக்காக பரிந்தது நினைவு வர தன்னையே நினைத்து வெட்கினாள் அவள். அவனை பிரிந்த அந்த நாள் அவள் மறக்க நினைக்கும் நாள்.

 

அவன் வீட்டில் இருந்து வெளியேறி அவள் வீடு நோக்கி நடந்தாள். வீட்டிற்கு சென்றால் வீடு பூட்டி இருந்தது. ‘என்ன இது வீடு பூட்டியிருக்கிறது. அப்பா வரும் நேரம் அம்மா எங்கும் சென்றிருக்க வாய்ப்பில்லையே, எதற்கும் பக்கத்து வீடு பர்வதம் மாமியிடம் கேட்கலாம்என்றுநினைத்தவாறேகேட்அருகில்அவள்வரமாமியும்எதிரேவந்தார்.

 

“வெண்பா உன்னை பார்த்துட்டு தான் நான் வரேன், என்ன பொண்ணும்மா நீ உன் போன் என்னாச்சு. அம்மா பாவம் உனக்கு போன் போட்டு போட்டு ஓய்ந்து போய்விட்டார்கள்.

 

“என்ன மாமி என்னவாயிற்று, இல்லை மாமி என் போனில் சார்ஜ் இல்லை அதனால் அது அணைந்து போயிருக்கிறது. நான் இப்போது தான் பார்த்தேன். ஏதாவது பிரச்சனையாஎன்றாள்பதட்டத்துடன்.

 

“நீஒண்ணும்பயப்படாதேம்மா, உங்கஅப்பாவுக்குநெஞ்சுவலிவந்துடுச்சு. உங்கஅம்மாதான்மருத்துவமனைக்கு போய் இருக்கா கூடவே என் மருமக சாந்தியும் போயிருக்கா துணைக்கு. நீ கவலைப்படாதே. உங்க அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாதுஎன்றார்மாமி.

 

“ரொம்ப நன்றி மாமி நான் இப்பவே கிளம்பறேன்என்றாள். “இரும்மாவெண்பா, வீட்டிற்குபோய்பிளாஸ்கில்பாலைகாய்ச்சிஎடுத்துப்போம்மா, அவர்கள் அவசரமாக கிளம்பினார்கள், பணம் கூட எடுத்து போனார்களோ தெரியவில்லை. நீ உன் அம்மாவிடம் போன் செய்து கேட்டுவிட்டு அதன் படி செய், இந்தம்மா வீட்டு சாவிஎன்றுமுன்யோசனைசொன்னார்.

 

கதவை திறந்து உள்ளே சென்றவள் போனை சார்ஜில் போட்டாள். உள்ளே சென்று பீரோவில் இருந்து தேவையான பணம் எடுத்துக் கொண்டு அவள் அன்னைக்கு போன் செய்து பேசிவிட்டு பின் மாமி கூறியது போல் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு அவள் மருத்துவமனைக்கு விரைந்தாள். அவசரத்தில் போனை வீட்டிலேயே மறந்துவிட்டு சென்றாள். பின்னாளில் அதுவும் அவர்கள் பிரிவுக்கு ஒரு காரணமாகியது.

 

மருத்துவமனை சென்று தந்தையை அவசர பிரிவில் சென்று பார்த்தாள். நிலைமை சற்று கவலைக்கிடமாக இருந்தது. தாயிடம் சென்று விசாரித்தாள், அவரை அழாமல் இருக்குமாறு சமாதானம் செய்தாள்.

 

அவள் அண்ணனுக்கு இப்போதைக்கு ஒன்றும் சொல்ல வேண்டாம் தூர தேசத்தில் இருப்பவன் பயந்துவிடுவான், அப்பா குணமாகிவிடுவார் என்று கூறி அவள் அன்னையை ஆறுதல்படுத்தினாள். அவள் அன்னைக்கு ஆறுதல் கூறினாலும் மனதளவில் அவள் மிகவும் உடைந்து போனாள்.

 

“சாந்தியக்கா ரொம்ப ரொம்ப நன்றி நீங்க இல்லையென்றால் அம்மா மிகவும் சிரமப்பட்டு இருப்பார்கள். உங்களை நான் மறக்கவே மாட்டேன்என்றாள்உணர்ச்சிவசப்பட்டு.“அதுக்கென்னம்மா வெண்பா, மனுஷனா பொறந்தா ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்ய வேண்டாமாஎன்றார்அவர்.

“அக்காநீங்ககிளம்புங்க, எங்களாலேஉங்களுக்குசிரமம், நான்தான்வந்துட்டேன்ல. நான்பார்த்துக்கறேன்என்றுஅவள்கூற, “இதுல எனக்கு ஒரு சிரமும் இல்லை, உனக்கு எதாச்சும் உதவி தேவைன்னா தயங்காம எனக்கு ஒரு போன் பண்ணும்மா நாங்க கண்டிப்பா வரோம். நான் வீட்டுக்கு போய் போன் போடறேன் என்று கூறி கிளம்பியவளை வெண்பா ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவிட்டு வந்தாள்.

 

அப்போது அம்மாவிடம் இருந்த அப்பாவின் கைபேசி அழைக்க அதை அவரிடம் இருந்து வாங்கி எடுத்தவள் “ஹலோ என்றாள். “ஹலோ நான் அருண் பேசறேன், உங்க போனுக்கு தான் போட்டேன். அது அடிச்சுட்டே இருந்துச்சு, அதான் உங்க அப்பா போனுக்கு போட்டேன். எங்க போய்டீங்க என்றான் அவன். “ஹலோ கேட்குதா என்று அவன் கேட்க அந்த பக்கம் சத்தமில்லாமல் இருந்தது. “ஹலோ, நான் உங்க வீட்டுக்கு வாசல்ல தான் நிற்கிறேன், என்னாச்சு என்றான்.

 

“சாரி போன்ல சரியா சிக்னல் கிடைக்கல, இங்க அப்பாவுக்கு நெஞ்சுவலி நாங்க அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம், நான் அங்கு தான் இருக்கிறேன். போன்ல சார்ஜ் இல்ல அதான் வீட்டில சார்ஜ் போட்டேன், மறந்து வைச்சுட்டு வந்துட்டேன் என்றாள்.

 

“சரி நான் உடனே வரேன் என்று கூறி போனை வைத்தவன், அடுத்த அரைமணியில் மருத்துவமனைக்கு விரைந்து வந்தான், அவளிடம் மருத்துவமனை விலாசம் வாங்காமல் விட்டது ஞாபகம் வர வரும் வழியிலேயே அவளுக்கு போன் செய்து விபரம் கேட்டு அங்கு சென்றான்.

 

“என்னாச்சு திடிர்னு எப்படி இப்படி ஆச்சு என்றான் அவன். “நானும் அம்மா கிட்ட அது தான் கேட்டுட்டு இருக்கேன், அவங்க அழுதுட்டே இருக்காங்க, வேற ஏதும் பேசமாட்டேங்கறாங்க என்றாள். “வாங்க நான் வந்து அவங்ககிட்ட கேட்கிறேன் என்றான் அவன்.

 

அருணை கண்டதும் எழுந்தவர் அப்போது அழுது கொண்டே இருந்தார். “அம்மா இப்பவாச்சும் சொல்லும்மா என்ன ஆச்சு, எதுக்கும்மா அழுதுட்டே இருக்க என்றாள் அவள்.

 

“நீ ஆபீஸ் கிளம்பி போனதும், உங்க அப்பாவும் கிளம்பிட்டு இருந்தாரு, திடிர்னு காலையிலேயே நெஞ்சு வலின்னு சொன்னாரு, ஒரு மாத்திரை எடுத்து போட்டுக் கொண்டு கொஞ்ச நேரம் அப்படியே படுத்துவிட்டார்.

 

“அப்புறம் என்னவென்று அவரிடம் துருவி துருவி விசாரித்தால் அப்போது தான் சொல்கிறார், இதற்கு முன்னும் இது போல் வந்திருக்கிறது என்று. நம்மிடம் சொன்னால் நாம் பயந்துவிடுவோம் என்று சொல்லி உன் அப்பா நம்மிடம் இருந்து மறைத்திருக்கிறார். கொஞ்சம் படுத்து எழுந்தவர் அலுவலகம் செல்கிறேன் என்று கூறி கிளம்பிவிட்டார். நான் இன்று விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியும் கேட்கவில்லை. ஏதோ முக்கிய வேலை என்று கிளம்பிவிட்டார்.

 

“மாலை சிக்கிரமே வீட்டிற்கு வந்தவர், நெஞ்சை பிடித்து உட்கார்ந்துவிட்டார், எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பர்வதத்திடம் கூற அவர்கள் தான் ஆம்புலன்ஸ் வரவழைத்து இந்த மருத்துவமனை வந்து சேர்ந்தோம். உனக்கு போன் செய்தால் உன்னை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறி மீண்டும் அழுதார் அவர்.

 

“அப்புறம் இன்னொரு விசயம் என்று நிறுத்தினார் அவர். “என்னம்மா என்றாள் அவள். “உன் அண்ணனிடம் திருமணம் பற்றி உன் அப்பா பேசியிருக்கிறார், அவன் இந்த திருமணத்திற்கு மறுத்துவிட்டானாம். அவன் அங்கு ஒரு பெண்ணை காதலிப்பதாவும், அவர்களுக்கு பதிவு திருமணம் நடந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறான்.

 

“அதற்கு பிறகு தான் உன் தந்தைக்கு நெஞ்சு வலி அதிகமாகிவிட்டது என்று நினைக்கிறேன். அவர் உன் திருமணமும் இதனால் தடை படும் என்று எண்ணி மனதை போட்டு உழப்பிக்கொண்டு இருந்திருக்கிறார். உன் அப்பாவின் ஆபீசில் உடன் பணிபுரியும் அவர் நண்பர் வெங்கட் அண்ணா தான் போன் செய்து இந்த விவரம் எனக்கு கூறினார்.

 

“உன் அப்பாவிற்கு சரியானதும் தான் அவரிடம் இது பற்றி பேசவேண்டும் என்று அவர் கூறினார். வெண்பா இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. அண்ணன் திருமணம் வேண்டாம் என்றதும் தந்தை நெஞ்சுவலியில் விழுந்துவிட்டாரே.

 

நம் விஷயம் தெரிந்தால் என்ன நடக்குமோ என்று உள்ளுர ஒரு தகுளிர் பிறந்தது அவளுக்கு. ஒருவழியாக மருத்துவர் அவர் தந்தை இப்போது நலமாக இருப்பதாக கூற அவர்கள் சென்று அவரை பார்த்தனர்.

 

மருத்துவர் வீட்டிற்கு அனுப்பும் நாள் அன்று அவளிடம் “அவருக்கு அதிர்ச்சி தரும் விஷயத்தை பக்குவமாக சொல்லுங்கள், அவர் கொஞ்சம் அதிர்ந்தாலும் அது அவர் உயிருக்கு பாதகமாக முடியும் என்று அறிவுரை கூறியனுப்பி வைத்தார்.

 

வெண்பாவிற்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை, தனக்கு மட்டும் ஏன் இப்படி அடுக்கடுக்காக சோதனைகள் கொடுக்கிறான் ஆண்டவன் என்று அவளுக்கு கோபம் வந்தது. அடுத்த கணமே என்னை பண்படுத்துவதற்காகவே அவன் என்னை சோதிக்கிறான் என்ற எண்ணம் எழுந்து அவளுக்கு வலிமையை கொடுத்தது. மனதை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு தந்தையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

“வெண்பா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்மா என்றார் குழலி. “என்னம்மா, சொல்லுங்க என்றாள் அவள். “உன் கல்யாணம் சிக்கிரமே நடக்கணும் வெண்பா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு, உன் அப்பா ரொம்பவும் துவண்டு போய்டுவார் என்று கூறி நிறுத்தினார் அவர். மகள் முகத்தை பார்க்க அவள் முகம் எந்தவித உணர்ச்சிகளும் காட்டவில்லை.

 

“சரிம்மா நீ போ, நான் போய் அப்பாகிட்ட பேசிவிட்டு வரேன் என்று அவளை அனுப்பிவிட்டு அவர் தன் கணவரை போய் பார்த்தார். அந்த நேரம் அருண் அவர்கள் வீட்டிற்கு வந்தான். “வாங்க வாங்க தம்பி அவனை வரவேற்று அமரவைத்தார்.

 

வெண்பாவின் தந்தையை பார்த்து “உங்களுக்கு இப்ப எப்படி இருக்கு அங்கிள் என்றான். “நான் நல்லா இருக்கேன் தம்பி, நானே உங்களை பார்க்க வரணுமின்னு நினைச்சேன் என்று தயங்கினார் அவர்.

 

“சொல்லுங்க அங்கிள் என்ன விஷயம் என்றான் அவன். “அது வந்து,வெண்பாவோட அண்ணன் காவியன் பத்தி தான் என்று கூறி மீண்டும் தர்மசங்கடமானார். “தெரியும் அங்கிள், நீங்க ஏன் தயங்குறீங்க இதை பற்றி என்னிடம் பேச என்றான் அவன்.

 

“இல்ல தம்பி, இதுனால வெண்பாவோட கல்யாணம் என்னவாகும்னு யோசிச்சேன் என்றார் அவர். அந்த நேரம் அங்கு வந்த வெண்பாவின் தவிப்பை அவன் கண்டுகொண்டான்.

 

அவளை பார்த்து தான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல் பார்த்துவிட்டு “அங்கிள் தப்பா எடுத்துக்காதீங்க, நாம ரெண்டு கல்யாணம் பற்றி பேசினோம், ஆனா ஒண்ணு மட்டும் நடந்தா என்னோட தங்கைக்கு தர்மசங்கடமாக இருக்கும். அவள் மனதிலும் ஆசைகள் உண்டாகிவிட்டது. நாளைக்கு நாம் எல்லோரும் ஒன்றாக சந்திக்கும் போது அவளுக்கு அது கஷ்டமாக இருக்கும் என்று அவன் கூற அவன் பேசியதில் இருந்த நியாயம் அவருக்கு புரிந்தது.

 

“நீங்க சொல்றது புரியுது தம்பி, என்ன நடக்கணும்னு இருக்கோ அது தான் நடக்கும், ஆனா வெண்பாவுக்கு இதற்கு மேல் திருமணம் தள்ளிப்போட எனக்கு விருப்பம் இல்லை அவளுக்கு உடனே திருமணம் செய்து வைக்க வேண்டும். நான் நன்றாக இருக்கும்போதே அவள் திருமணத்தை நான் பார்த்துவிட வேண்டும் என்றார் அவர்.

 

“ஏன் அங்கிள் இப்படி பேசறீங்க, உங்களுக்கு எதுவும் ஆகாது. கண்டிப்பா நீங்க நினைச்ச மாதிரி அவங்களுக்கும் பிடிச்ச மாப்பிள்ளையா பார்த்து கட்டிவைக்கணும், கண்டிப்பா என்னை நீங்க கூப்பிடணும் அங்கிள் என்றான் அவன்.

 

“நீங்க இல்லாமயா, கண்டிப்பா தம்பி அவளோட கல்யாணம் ரொம்ப விமரிசையா நடக்கணும் என்றார் அவர்.

 

 

Advertisement