Advertisement

அத்தியாயம் –15

 

சித்தார்த்தும் வெண்பாவுக்கும் தனியே பேசிக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. ஸ்ரீ இருந்தாலாவது அவர்களை தனியே சந்திக்க வைத்திருப்பான்.

 

இருவர் மனதிலும் பலத்த போராட்டங்கள் பிரிவு அவர்களை வாட்டியது. கிட்டத்தட்ட மூன்று நாட்களாக ஒன்றாகவே இருந்தனர். நாளை ஊருக்கு கிளம்ப வேண்டுமே என்று அவளும் அவனும் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தனர்.

 

இனியா கூட கிண்டல் செய்தாள். “என்ன சார் ரொம்ப அமைதியா இருக்கீங்கஎன்று.அவர்களைகாலையில்நேரமேஅழைத்துசெல்லவேண்டும்என்பதால்சித்தார்த் அவர்களுடனே தங்க நேர்ந்தது.

 

காலையில் அவர்களை அழைத்து சென்று ரயிலேற்றிவிட்டு வீட்டுக்கு வந்தவனுக்கு இருப்பே கொள்ளவில்லை. ராகவன் அவளை இரண்டு நாட்கள் இருந்துவிட்டு போகச் சொன்னான். ஆனால் ஒரு நிமிடம் கூட அவனால் அங்கிருக்க முடியாது போல் தோன்றியது. அவனுடைய தாயாரை சமாதானப் படுத்துவதற்காக இருந்துவிட்டு அன்று இரவு கிளம்புவதாகக் கூறி கிளம்பிவிட்டான்.

 

காலையில் கல்லூரிக்கு அவசர அவசரமாக கிளம்பும் வெண்பா அன்று ஒரு சுறுசுறுப்பே இல்லாமல் நடமாடிக் கொண்டிருந்தாள். அவளின் தந்தை கூட கேட்டுவிட்டார். “என்னம்மா வெண்பா இன்று கல்லூரி விடுமுறையாஎன்று. “இல்லைப்பா, இதோகிளம்பிட்டேஇருக்கேன்என்றுகூறிகிளம்பஆயத்தமானாள்.

 

சுவாதீனமாக கிளம்பியவள் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தடைந்தாள். பேருந்துக்காக காத்திருந்தவள் எதிர்சாரியில் பார்க்க சட்டென்று பூரிப்படைந்தாள். ‘இவன் எப்போது இங்கு வந்தான். நம்மை ரயில் ஏற்றி விட்டு உடனே கிளம்பியிருப்பானோ, ஒரு போன் செய்தாவது சொல்லியிருக்கக் கூடாதாஎன்றுஏதேதோயோசித்தவாறேசாலையைகடந்துசென்றுஅவன்முன்சென்றுநின்றாள்.

 

“என்னங்க இது ஆச்சரியம் நீங்க நாளைக்கு தானே கிளம்புவதாக கூறியிருந்தீர்கள், இப்படி என் கண் முன் வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கிறீர்கள்என்றாள்மகிழ்வுடன்.

 

“நீ இல்லாம என்னால அங்க இருக்க முடியல வெண்பா, அதன் கிளம்பிட்டேன். எங்க அம்மாவுக்காக சாயங்காலம் வரை இருந்துவிட்டு பின் அங்கிருந்து கிளம்பினேன். சென்னைக்கு இன்று அதிகாலை இரண்டு மணிக்கு வந்தேன்என்றான்அவன்.

 

“இப்பத்தான் எனக்கு சந்தோசமாக இருக்கு, சரி நீ கல்லூரிக்கு கிளம்பு நேரமாகிவிட்டது. நான் உனக்கு ஞாயிறு அன்று போன் செய்கிறேன், உனக்கு பரீட்சை வேறு துவங்குகிறது நாம் வாரம் ஒரு தரம் மட்டும் பேசிகொள்வோம். என்ன நான் சொன்னது சரிதானே வெண்பாஎன்றான்.

“சந்தோசமாக இருக்குங்க, எனக்காக நீங்க யோசிச்சு செய்யறது எனக்கு உங்க மேல உள்ள அன்பை இன்னும் அதிகப்படுத்துது. சரிங்க நான் கிளம்பறேன்என்றுகூறிவிடைபெற்றாள். வாரம்ஒருதரம்அவன்அவளுடன்போனில்பேசுவான். நாட்கள்நகரஆரம்பித்தது.

 

தற்செயலாகஒருநாள் அவனை கோவிலில் சந்திக்க நேர்ந்தது. அன்று முழுநிலவு நாள் ஆதலால் அவள் கோவிலுக்கு வந்து இருந்தாள்.அவனும் குளக்கரை அருகே நின்றுக் கொண்டிருந்தான். அவளுக்கு ஏனோ இதற்கு முன் ஒரு தரம் அவர்கள் இப்படி கோவிலில் சந்தித்துக் கொண்ட நினைவு வந்தது.

 

அவனுக்கும் அதே நினைவு தான் பால்நிலாவை பார்க்கும் போது ஏனோ அவனுக்கு அவளின் நினைவு தான் வந்தது.வால்பாறை ஞாபகமும் வந்தது, கேளாமலே அவள் கொடுத்த முத்தம் கண் முன் விரிந்து இனித்தது. அதே நினைவில் திரும்பியவன் எதிரில் சிரித்துக்கொண்டே அவள் நின்றாள்.

 

“என்னடி எப்போ வந்த, இப்ப தான் உன்னை பற்றி நினைச்சுட்டே இருந்தேன், நீ எதிரில் நிற்கிறாய். என்றான்“இன்று பௌர்ணமி மறந்து விட்டீர்களாஎன்றாள். “எனக்குநினைவிருக்கிறது, உன்பழக்கம்என்னையும்தொற்றிக்கொண்டது. நானும்பௌர்ணமிநாளில்தவறாதுஇங்குவருகிறேன்‘இவனும்வருகிறானா, நான்பார்க்கவில்லையே என்று நினைத்தாள்.

 

“நான் நீ வந்து சென்ற பின் தான் எப்போதும் வருவேன்என்றான்அவள்மனதைபடித்தவனாக. உனக்கேதெரியும்நான்ஞாயிற்றுக்கிழமைகோவிலுக்குவருவேன்என்றுஇன்றுஅந்தஞாபகத்தில்தான்சீக்கிரம்வந்துவிட்டேன்போலும், அப்படிவந்ததால்தான்இன்றுஎனக்குதேவிதரிசனம்கிடைத்ததுஎன்றான்அவளைஓரக்கண்ணால்பார்த்துக்கொண்டே.

 

“கடவுளுக்கு என் மேல் கருணை அதிகம் அது தான் உன்னை என் கண்ணில் அவ்வப்போது காட்டுகிறார்என்றான். “கடவுள்கருணைஇல்லையென்றால்நீங்கள்என்னைபார்ப்பதேஇல்லையாசொல்லுங்கள், நீங்கள்மறைந்துமறைந்துஎன்னைபார்ப்பதுஎனக்குதெரியும்என்றாள்அவள்.

 

“நான்பார்க்கறதை நீ மறைஞ்சு பார்க்கிறாயாஎன்றான்அவன்பதிலுக்கு. இருவருக்குமேசிரிப்புவந்தது. ஒருவரைஒருவர்மாற்றிமாற்றிகாலைவாரிக்கொண்டதைநினைத்து.

 

ஊரில் இருந்த வந்ததிலிருந்து வெண்பாவின் நடவடிக்கைகள் குழலிக்கு வித்தியாசமாகப்பட்டது. அவரும் அவர் கணவரை விரும்பித் தானே திருமணம் செய்தார். மகள் முகம் உரைத்த செய்தி அவள் காதலில் விழுந்திருக்கிறாள் என்ற சந்தேகத்தை விதைத்தது.

 

எப்போதும் தன்னிடம் மனம்விட்டு பேசும் மகள் சற்று தள்ளி நிற்பது போல் தோன்றியது அத்தாய்க்கு. காதல் வந்தால் கள்ளமும் வரும் என்பார்களே அது போல் அவள் எதையோ மறைப்பது போல் தோன்றியது அவருக்கு.

 

ஒரு நாள் லேசுபாசாக மகளிடம் விசாரித்தார். “வெண்பா என்னடா ஒரு மாதிரியா இருக்க, இப்போலாம் நீ அம்மாகிட்ட எதுவும் சொல்ல மாட்டேங்குற. என்னடா ஆச்சு எதுவும் பிரச்சனையா என்றார் அவர்.

 

வெண்பாவுக்கு தூக்கி வாரி போட்டது, குற்றம் செய்தவளாக முழித்தாள் அவள். ‘அய்யோ அம்மா நம்மை கவனிக்கறாங்க போல, நாம அம்மாகிட்ட இந்த விஷயத்தை பத்தி சொல்லிடலாமா என்று எண்ணியவளுக்கு அதை எப்படி சொல்வது என்று இருந்தது.

 

எல்லாமும் ஒளியாது பேசும் தனக்கு தன் காதலை பற்றி மட்டும் ஏன் அவரிடம் சொல்ல முடியவில்லை என்று தெரியவில்லை. அன்னை வெகு நேரம் அவள் பதிலுக்காக காத்திருப்பது புரிய தன் காதலை பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தவள் அவள் அன்னையை சமாதானப்படுத்த முனைந்தாள்.

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லைமா, இது கடைசி வருஷம் இல்லையா எனக்கு நல்லா படிச்சு முதல் வகுப்பில் வரவேண்டும் என்று ரொம்பவே டென்ஷன். அதான்மா உங்ககிட்ட எதுவும் பேசாமல் இருந்துவிட்டேன். இன்னும் ஒரு சில மாதம் தானே அப்புறம் என் தேர்வு முடிந்துவிடும்

 

“நானும் முன் போல சரியாகிவிடுவேன், சரி தானே அம்மா என்றாள் அவள் சிரித்துக் கொண்டு. ‘ச்சே நம் பெண்ணை நாமே தவறாக நினைத்துவிட்டோமோ, பாவம் நன்றாக படிக்க வேண்டும் என்று கவனத்தில் இருக்கிறாள் என்று தன்னையே திட்டிக் கொண்டார் குழலி.

 

ஏதோ தோன்ற அப்போது தான் அவள் கையில் அணிந்திருந்த மோதிரம் அவர் கண்ணில் பட்டது. “என்னடா செல்லம் புது மோதிரம் போட்டிருக்க, என்கிட்ட சொல்லவே இல்லை என்றார் அன்னை.

 

ஹாவென வாயை திறந்து மூடியவள் “அம்மா அது வந்து நான் உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். என்னோட பிறந்தநாளுக்கு என்னோட தோழிகள் சேர்ந்து அளித்த பரிசு என்றாள் அவள் எச்சிலை கூட்டி விழுங்கியவாறே.

 

மீண்டும் குழலிக்கு ஏதோ உறுத்த அதற்கு மேல் மகளை கேள்வி கேட்பது அவருக்கு உசிதமாக படவில்லை. சொல்ல வேண்டிய விஷயமாக இருந்தால் கண்டிப்பாக அவளே சொல்லுவாள் என்று நினைத்துக்கு கொண்டு அவர் பேச்சை வளர்த்தாமல் சென்று விட்டார்.

 

அன்று இரவு அவள் அறைக்கு வந்ததும் சித்தார்த்துக்கு போன் செய்தாள். அப்போது தான் அவன் சாப்பிட்டுவிட்டு வால்பாறையில் நடந்தவைகளை அசை போட்டுக் கொண்டிருந்தான்.

 

அவன் தனிமையை அந்த நினைவுகளே எப்போதும் போல் அந்த நினைவுகளே போக்கி கொண்டிருந்தன. அந்த இனிய தருணத்தில் தன்னவளின் அழைப்பு அவனுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்த அதை எடுத்து “ஹலோ, சொல்லு செல்லம் எப்படியிருக்க என்றான் அவன்.

 

அவனின் புது அழைப்பில் தேகம் சிலிர்க்க “என்ன புதுசா கூப்பிடுறீங்க என்றாள் அவள். “ஏன் கூப்பிடக் கூடாதா எனக்கு அந்த உரிமை இல்லையா என்றான் அவனும் பதிலுக்கு.

 

“நான் அப்படி சொல்லவே இல்லையே, நீங்க எப்படி வேணா கூப்பிடுங்க என்றாள் அவள். “நீ என்ன எனக்கு அனுமதி கொடுக்கிறது, எனக்கு மட்டும் உங்க அப்பா, அம்மா ஓகே சொல்லட்டும். அப்புறம் எப்படி எல்லாம் கூப்பிடுறேன் பாரு என்றான் சித்தார்த்.

 

அவன் அம்மா என்றதும் தான் அவள் பேச வந்த விஷயமே அவளுக்கு ஞாபகம் வந்தது. “ஏங்க… என்று அவள் ஆரம்பித்ததும் “சொல்லுங்க ஏங்க என்னை இப்படி ஏங்க வைக்கிறீங்க என்றான் அவன் விளையாட்டாக.

 

“அய்யோ என்னை பேச விடுங்க என்று அவள் சீரியசாக சொன்னதும் அவனும் விளையாட்டை விட்டு “சொல்லு வெண்பா என்றான். “இன்னைக்கு அம்மா என்கிட்ட அந்த மோதிரம் பத்தி கேட்டாங்க என்று நிறுத்தினாள்.

 

“நீ என்ன சொன்ன என்றான் அவன். “அது என்னோட பிறந்த நாள் பரிசா தோழிகள் கொடுத்ததுன்னு சொல்லிட்டேன். அம்மாவுக்கு என்மேல ஏதோ சந்தேகம்ன்னு நினைக்கிறேன். அவங்ககிட்ட நான் இதுவரைக்கும் எதுவும் சொல்லாம இருந்ததே இல்லை

 

“எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கு, அம்மாகிட்ட இப்படி போய் சொன்னது என்றாள் அவள் உள்ளார்ந்த வருத்தத்துடன். “அப்போ நீ உண்மையை சொல்லியிருக்க வேண்டியது தானே வெண்பா. எப்படியும் ஒரு நாள் நாம சொல்லி தானே ஆகணும் என்றான் சித்தார்த்.

 

“அதுவும் சரி தான், ஆனா நானா தானே அவங்ககிட்ட சொல்லியிருக்கணும். அவங்க கேட்ட பிறகு சொன்னா ஏதோ தப்பு செஞ்ச மாதிரி ஆகாதா. அதுனால தான் நான் அப்போதைக்கு அம்மாவை சமாதானபடுத்தினேன் என்றாள் அவள். “சரி விடு நல்ல சந்தர்ப்பம் பார்த்து நீயே அம்மாகிட்ட பேசிடு வெண்பா. அது தான் நல்லது, சரி சாப்பிட்டியா என்றான் அக்கறையாக.

“ஹ்ம்ம் சாப்பிட்டேன், நீங்க என்றாள் அவள். “நானும் சாப்பிட்டேன், இப்போ படுத்தேன், வால்பாறை ஞாபகம் தான் என்றான். “முக்கியமா அன்னைக்கு எனக்கு கேளாமலே ஒரு பரிசு கிடைச்சுதே எனக்கு அந்த ஞாபகமாவே இருக்கு

 

“எப்போதடா அப்படி ஒரு தருணம் மீண்டும் நிகழும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றான் அவன். “சீய் உங்களுக்கு வேற ஞாபகமே வராதா என்றாள் வெண்பா.

 

“அடிப்பாவி இதை நினைக்காம வேற எதை நினைக்கிறது. ஓ கள்ளி நீ அந்த கார்ல நடந்ததை நினைக்க சொல்றியா என்று அவன் அடுத்து ஆரம்பிக்க. “போதும், நான் போனை வைக்கிறேன். குட் நைட்“ என்று விட்டு போனை வைக்க போக அவனும் சிரித்துக் கொண்டு குட் நைட் சொல்லி போனை வைத்தான்.

 

நாட்கள் விரைந்து சென்றன. வெண்பாவுக்கு தேர்வு தொடங்கி விட்டது. தோழியர் மூவரும் நன்றாக படித்து தேர்வை நல்லபடியாக எழுதி இருந்தனர். வெண்பாவுக்கு தேர்வு முடிவு வரும் முன்னே வேளையில் சேரச் சொல்லி உத்தரவு வந்திருந்தது, வரும் மாதம் முதல் தேதியில் இருந்து அவளை வரச் சொல்லி உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

 

வெண்பா வேலைக்கு செல்ல ஆரம்பித்தபின் அவர்கள் வாரம் ஒரு முறை வெளியில் சந்தித்துக் கொண்டனர். வெண்பாவின் தேர்வு முடிவுகள் வெளி வந்துவிட்டன.தோழியர் மூவருமே முதல் வகுப்பில் தேறியிருந்தனர். சித்தார்த் மிகவும் மனம் மகிழ்ந்து போனான்.

 

அந்த வாரயிறுதில் அவன் அவர்களின் வீட்டிற்கு அவளை பெண் கேட்டு வருவதாகக் கூறியிருந்தான். அவனை அவள் விரும்புவதை அவளுடைய தோழிகளுக்கு கூட சொல்லாமல் வைத்திருந்தாள் அவள்.

 

சுஜியிடம் கூறலாமேன்றால் பரீட்சை முடிந்து ஊருக்கு சென்றவள் தான் அதன் பின் எந்த தொடர்பும் இல்லை.போன் செய்தால் அது தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறியது பதிவு செய்யப்பட்ட குரலில். நிறைய முறை முயற்சி செய்து பார்த்துவிட்டாள்.

 

இனியாவிடம் கூறலாமேன்றால் எதுவோ அவளை தடுத்தது. அவள் இனியாவுடன் சேர்ந்து எத்தனையோ நாட்கள் கலாட்டா செய்திருக்கிறாள். ஆனால் அவள் அந்தரங்கம் பற்றி இதுவரை அவளிடம் பகிர்ந்ததில்லை.

 

ஆனால் சுஜியிடம் அதுபோல் இருந்ததில்லை. பள்ளியில் படிக்கும் போது பின்னால் சுற்றியவர்கள், உடன் படித்த தோழி ஒருத்தியின் மறைவு என்று அவள் வாழ்வில் நடந்த அத்தனை நல்ல மற்றும் துயர சம்பவங்களை அவளுடன் பகிர்ந்து கொண்டிருகிறாள். அவள் சுஜியிடம் மறைத்து வைத்த ஒரே விசயம் சித்தார்த்தை பற்றியது மட்டும் தான். அதுவும் கூட தங்கள் படிப்பு முடிந்தபின் கூறிக் கொள்ளலாமென்று சொல்லாமல் விட்டிருந்தாள்.

 

ஏதேதோ சிந்தனைகள் ஓட அதை ஒதுக்கி கடிவாளமிட்டவள், இனியாவிடம் நாளை சித்தார்த் வந்து போனபின் விஷயத்தை கூறிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டாள். சுஜிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பிவிடலாம் என்று எண்ணினாள்.

 

நாளைய நினைவில் மனம் செல்ல மகிழ்ச்சியில் துள்ளலானாள். இறக்கையில்லாமலே பறந்து கொண்டிருந்தாள். வெண்பாவின் அன்னை குழலி வந்து அவளை தட்டி எழுப்பி சுய உணர்வுக்கு கொண்டு வந்தார்.

 

“என்னம்மா என்னாச்சு உனக்கு, இப்படி விட்டத்தை வெறிச்சு பார்த்துட்டு உட்கார்ந்து இருக்கிறாயேஎன்றார். “அதுவந்துஒண்ணுமில்லைஅம்மாஎன்றாள்தயக்கத்துடனே.

 

அவன்வருகையைபற்றிஅன்னையிடம்கூறநினைத்தவள்அதைஎவ்வாறுகூறுவதுஎன்றுயோசனையுடன்கூறாமல்விடுத்தாள். அவன்குடும்பத்துடன்வந்துபெண்கேட்கபோகிறான்.

 

அதன்பின்அன்னையிடம்அவளுக்கு பிடித்து தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தாள்.அவள் கூறாமல் விட்டது அவள் வாழ்க்கையை புரட்டி போடப் போகிறது என்று அப்போது அவளுக்கு தெரியாது.

 

சித்தார்த்தும் அவனிடம் பலமுறை சொல்லி விட்டான் அவள் அன்னையிடம் அவர்கள் காதலை பேசுமாறு. ஏனோ அவளால் அதை மட்டும் வாய்விட்டு அவள் அன்னையிடம் கூறமுடியவில்லை. எத்தனையோ முறை அவள் அன்னையிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்து அவர் முன் சென்று நிற்க ஏதோ ஒரு தயக்கம் அவளை வாய் பேசமுடியாமல் இருக்க வைத்தது.

 

ஒரு சிறு தயக்கத்தினால், அவள் பாதை திசை மாறப் போவது அறியாமல் அன்னையிடம் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு இரவு சாப்பிட்டு படுத்துவிட்டாள். விதி என்று ஒன்று இருக்கும் போது அது மதியை வேலை செய்யவிடாமல் அவளை பார்த்து சிரித்தது.

 

காலையில் அவன் வருவான் என்று சிக்கிரமே எழுந்து அவள் குளித்து அவளுக்கு பிடித்த புடவையை எடுத்து அணிந்துக் கொண்டாள். குழலி அவளை வினோதமாக பார்த்தார், என்றுமில்லாமல் இன்று வீட்டில் இருக்கும் நாளன்று புடவை கட்டியதே அவரை ஆச்சரியப்படுத்தியது.

 

சித்தார்த் காலையிலே போன் செய்திருந்தான் அன்று காலை பத்து மணிக்கு அவன் வருவதாகக் கூறியிருந்தான். காலை டிபன் முடிந்து சிறிது நேரத்திலேயே வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டு வெளியே வந்து பார்த்தாள்.

 

ஒருவேளை அவன் காத்திருக்க முடியாமல் சிக்கீரமாக வந்துவிட்டானோ என்று நினைத்துக் கொண்டே வெளியில் வந்தவள் வந்தவர்களை பார்த்ததும் யோசைனயுடன் ஏறிட்டாள். வந்தவர்கள் வேறு யாருமல்ல இனியாவின் பெற்றோர் மற்றும் சகோதரன் வந்திருந்தனர்.

 

“வாங்க, உள்ளே வாங்கஎன்றுகூறிஅவர்களைவரவேற்றுஉள்ளேகூட்டி வந்து அமர வைத்தாள். அவளுடைய, தாய், தந்தைக்கு அவர்களை அறிமுகம் செய்வித்தாள்.

 

வெண்பாவின் தந்தைக்கு இனியாவின் குடும்பம் பற்றி ஓரளவு தெரியும். குழலி அவளை காபி கொண்டுவருமாறு பணித்தார். வந்தவர்கள் சும்மா வரவில்லை இனியாவின் அண்ணன் அருணுக்கு வெண்பாவை பெண் கேட்டு வந்திருந்தனர்.

 

அப்போது தான் வெண்பா வீட்டிற்கு நுழைந்து வெளிவராண்டாவின் அருகே வந்த சித்தார்த்தின் காதுகளில் அந்த செய்தி விழவும் இடிந்து போனான். அப்போது வெண்பாவும் அவர்களுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள்.

 

அதை பார்த்தவனுக்கு இடியே அவன் மேல் விழுந்தது போல் ஆனது. அவனுக்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறியது. சட்டென்று அவன் நிதானம் தொலைந்து போனது.

 

அடுக்களையில் நின்றிருந்த அவளுக்கு வெளியே பேசிய பேச்சு எதுவும் காதில்விழவேயில்லை. காபி கொடுத்துவிட்டு வெண்பாவும் அங்கு யதேச்சையாக நின்றாள். அப்போது தான் பேச்சு திசை மாறுவதை அறிந்தாள்.

 

“அருணுக்கு நாங்க பெண் பார்த்துட்டு இருந்தோம், அப்போது தான் அருண் சொன்னான். வெண்பாவின் மீது அவனுக்கு ஒரு விருப்பம் இருப்பதாக, எங்களுக்கும் அதில் திருப்தி தான், எங்களுக்கு இன்னொரு விருப்பமும் தோன்றுகிறது. அதை சொல்லலாமாஎன்றுநிறுத்தினார் இனியாவின் தந்தை.

 

“சொல்லுங்கள்என்றுஊக்கினார்வெண்பாவின்தந்தை. “நாம்ஏன்பெண்எடுத்துபெண்கொடுக்கக்கூடாது. எங்கள்பெண்இனியாவைஉங்கள்மகனுக்குதரவிரும்புகிறோம்என்றார்அவர்.

 

வெண்பாவின் தந்தைக அளவில்லா பூரிப்பு அடைந்தார். தாங்கள் தேடாமலே நல்ல சம்மந்தம் கிடைத்தது எண்ணி மகிழ்ந்தார். வெண்பாவின் தந்தைக்கு தலை கால் புரியவில்லை. இனியாவின் தந்தை அந்த வட்டாரத்தில் மிகப் பிரபலமானவர். அவர் மகனும் சொந்தக்காலில் உழைத்து முன்னேற்றம் அடைந்தது பற்றியும் அவர் கேள்விப்பட்டிருந்தார்.

 

அவர் ஜாதி, மதம் பார்ப்பவர் அல்ல, ஆதலால் அவரை பொறுத்தவரை இப்படி ஒரு சம்பந்தம் தேடி வந்தது பெரிய வரமாக நினைத்தார். சந்தோசமாக அவர் அதற்கு சம்மதித்துவிட்டார். மனைவி, மக்களின் விருப்பம் பற்றி சற்றும் யோசியாமல் அவர்களுக்கு சரியென்றுவிட்டார் அவர்.

 

வெண்பா முள் மேல் நிற்பது போல் நின்றிருந்தாள், வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். சித்தார்த் வந்தால் எப்படியாவது தந்தையிடம் பேசிவிடலாம் என்று எண்ணினாள். அவன் ஏன் இன்னும் வரவில்லை. பலவாறு யோசித்து குழம்பி தவித்தாள். வந்தவர்கள் விடைபெற்று சென்று விட்டனர்.

 

குழலிக்கு அவர்களை கேட்காமல் சம்மதம் கூறியதில் கணவரின் மேல் சிறிது வருத்தமிருந்தது. அதை அவரிடம் நேரடியாக கேட்டும் விட்டார். “என்னங்க, நீங்க பாட்டுக்கு அவங்க கிட்ட சம்மதம் சொல்லிட்டீங்க, நம்ம புள்ளைங்களை ஒரு வார்த்தை கூட கேட்காமல் சம்மதம் சொல்லிவிட்டீர்களேஎன்றுகணவரிடம்அங்கலாய்த்தார்.

 

“என்ன குழலி நான் நம்ம பசங்க நல்லா இருக்கக் கூடாதுன்னு நினைப்பேனா, நாம காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டோம். நம்ம புள்ளைங்க காதல் ஏதும் பண்ணி இருந்த கண்டிப்பா நம்மகிட்ட சொல்லி இருப்பாங்க

 

“அப்படி ஏதும் இருந்தா நான் சந்தோசம் தான் படுவேன். நம்மோட வீட்டுக்கு சொந்தம்ன்னு யாரும் அவ்வளவா வந்ததில்லை. நமக்கு எந்த சொந்தமும் இல்லாம போய்ட்டாங்க.

 

“நம்ம பசங்களுக்கும் அப்படி எதுவும் ஆகிடக்கூடாதுன்னு எனக்கு தோணுது. ரெண்டு பேரையும் ஒரே இடத்துடல குடுத்தா ஒண்ணுமன்னா இருப்பாங்கன்னு தான் நான் சம்மதம் சொன்னேன். நான் செஞ்சது எதுவும் தப்பா குழலிஎன்றார் அவர்.

 

குழலிக்கு ஒரு சின்ன சந்தேகம் இருந்தது, வெண்பாவின் மனதில் வேறு விருப்பம் இருக்குமோ என்று, கணவர் சொல்லியது போல் அப்படி எதுவும் இருந்திருந்தால் வெண்பா அவர்களிடம் கண்டிப்பாக சொல்லியிருப்பாள் என்று அவரும் எண்ண ஆரம்பித்தார்.

 

கணவரின் பேச்சில் ஒரு நியாயம் இருப்பதாக தோன்றியது. எதற்கும் வெண்பாவிடமும், காவியனிடமும் ஒரு வார்த்தை சொல்லிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டார். நிகழப்போவது போவது பற்றி அறியாமல் ஒவ்வொருவரும் அவரவர் மனநிலை எண்ணி முடிவெடுத்துக் கொண்டிருந்தனர்.

அவன் வருவான் என்று காத்திருந்தவள் அவனுக்கு போன் செய்தாள். மணி அடிக்கும் சத்தம் கேட்டு தன்னுணர்வுக்கு வந்த சித்தார்த் போனை எடுத்து பார்த்தான். அழைத்தது வெண்பா தான். போனை அணைத்து தூக்கி எறிந்தான்.

 

அவள் மீண்டும் முயற்சி செய்ய போன் அணைக்கப் பட்டிருக்கிறது என்றது பதிவு செய்யப்பட்ட குரலில். மனம் வலிக்க உள்ளுக்குள்ளே விசும்பினாள். வெண்பா கோவிலுக்கு போவதாகக் கூறிவிட்டு வெளியே கிளம்பினாள்.

 

வெண்பா வீட்டில் இருந்து சித்தார்த் எப்படி கிளம்பினான் எப்போது கிளம்பினான் என்றே அவனுக்கு நினைவில்லை. வீடு வந்து சேர்ந்தவன் அப்படியே சோபாவில் அமர்ந்துவிட்டான். நடந்த நிகழ்வுகளை அசை போட்டான்

 

ராகவன் நளினியை எப்படியாவது அழைத்துக் கொண்டு வந்துவிடுவதாகக் கூறியவன், நேற்று நள்ளிரவு போன் செய்து வரமுடியவில்லை என்றும், அவனுடைய அம்மாவிற்கு லேசாக உடல் நலம் சரியில்லாமல் போய்விட்டதாகவும் கூறினான்.

 

வெண்பாவை ஏமாற்ற வேண்டாம் என்று அவன் மட்டும்மாவது போய் அவர்கள் வீட்டில் அவர்கள் விருப்பம் பற்றி சொல்லிவிடச் சொன்னான் அவன். அதற்கு பின் அவர்கள் வந்து முறைப்படி பெண் கேட்பதாக கூறினான் அவன்.

 

சித்தார்த்திற்கும் அதுவே சரியெனப்பட அவளிடம் காலையில் போன் செய்து வருவதாகக் கூறியவன் அவன் மட்டுமாக வருவதை பற்றி அவளிடம் கூறாமல் விட்டான். அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்றால் அவள் வருத்தப்படுவாள் என்று எண்ணி சொல்லாமல் விட்டான் அவன்.

 

கோவிலுக்கு செல்வதாகக் கூறிவிட்டு வெண்பா சித்தார்த்தின் வீட்டிற்கு வந்தாள். அதுவரை அவள் அவன் வீட்டிற்கு வந்ததில்லை. அழைப்பு மணியை அழுத்த வினோத் தான் வந்து கதவை திறந்தான். அவன் மனைவி ஊருக்கு சென்று இருப்பதால் அவன் அன்று சித்தார்த்தை பார்க்க வந்திருந்தான். அவனுக்கு வெண்பா பற்றி ஓரளவு தெரியும் அவளை அழைத்து உட்கார வைத்தான்.

 

உள்ளே சென்று சித்தார்த்தை அழைத்து வந்தான். உள்ளேயிருந்து வந்த சித்தார்த்தின் முகம் பயங்கரமாக இருந்தது. இவன் ஏன் இப்படி இருக்கிறான், வீட்டிற்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல் இருந்துவிட்டான்.

 

அவன் முகம் கோபத்தில் இருந்தது போல் இருந்தது. நான் தான் இவன் வீட்டிற்கு வராததற்கு கோபப்படவேண்டும் என்று மனதுள் எண்ணினாள்.வினோத் வெளியே சென்று வருவதாகக் கூறி கிளம்பிவிட்டான். “நீ எதுக்குடா, வெளியே கிளம்புற, வெளியே போகவேண்டியது இவ தான், நீ போடி வெளியேஎன்றான்ஆத்திரத்தில்கண்மண்தெரியாமல்.

ஏதோபிரச்சினைஎன்றுஉணர்ந்தவினோத்மேலேநில்லாமல்சென்றுவிட்டான். சித்தார்த்அப்படிபேசியதில் வெண்பாவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. “இப்ப எதுக்கு இப்படி பேசறீங்க, நான் தான் உங்க மேல கோபப்படனும், ஆனா நீங்க என் மேல் கோபப்படறீங்க. சொல்லுங்க வீட்டிற்கு வரேன்னு சொல்லிட்டு ஏன் வராம போனீங்கஎன்றாள்.

 

“நான் வீட்டிற்கு வந்திருந்தால் அப்படியே அவனுக்கு உபசரித்தது போல் எனக்கும் உபசரிப்பாயோ, என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது. நான் உங்க வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டேன், ஆனா அங்க எனக்கு முன்னாடி ஒருத்தன் உன்னை பெண் பார்க்க வர்றான்.

 

“நீ அவனுக்கு காபி குடுத்து உபசரிக்கிற, இதை பார்த்து நான் சந்தோசப்படவேண்டுமா, சொல்லுஎன்றான்.“என்ன பேசறீங்க எனக்கு புரியற மாதிரி சொல்லுங்கஎன்றாள்அவள்.

 

“உனக்குபுரியாமலாஉன்னைபெண்கேட்டுவந்தவங்கமுன்னாடிபோய்நின்றாய். பணக்காரசம்பந்தம்ன்னுபல்லிளித்துக்கொண்டுநீஅவர்களுக்குகாபிகொடுத்துஉபசரித்தாய். பார்த்தேன்டிஎல்லாம்பார்த்தேன், செத்துட்டேன், அந்த நிமிஷமே நான் செத்துட்டேன்.

 

“ரொம்பவும் சந்தோசத்தோட உன்னை பார்க்க வந்தேன். என் தலையில் இடிவிழுந்தது போல் ஆனது அங்கு நடந்ததை பார்த்த போது. எதுக்குடி நீயும் என்னை விரும்பறதா சொன்ன, அவனளவுக்கு பணக்காரன் இல்லை தான் ஆனா உன்னை உண்மையான நேசிக்கறவன் என்று வார்த்தைகளை உமிழ்ந்தான்.

 

“இப்ப எதுக்குடி வந்த, என்னை மறந்துடுங்கன்னு சொல்ல வந்தியா, ஏன் பேசாமலே இருக்க, உன்னை என்னைக்கு பார்த்தேனோ அன்றிலிருந்து இன்று வரை உன்னை சுற்றியே என் மனம் வந்துக் கொண்டிருக்கிறது.

 

“நீயும் என்னை உண்மையா விரும்பறதா நினைச்சேன். ஆனா என் வாழ்கையில் எனக்கு எதுவுமே நிரந்தரம் இல்லைன்னு இப்ப தான் புரியுதுஎன்றுமனதில்தோன்றியஎல்லாம்பேசினான்அவன்.

 

“பேசிட்டீங்களா உங்க இஷ்டத்துக்கு என்னவெல்லாம் பேசிட்டே போறீங்க. காலையில் அவங்க பெண் பார்க்க வந்த என்ற விபரமே எனக்கு முதலில் தெரியாது. வந்தவர்களை வரவேற்று காபி கொடுத்தேன் அவ்வளவு தான். இது ஒரு தவறா, அதற்கு பிறகு தான் அவர்கள் என்னை பெண் கேட்டு வந்ததே எனக்கு தெரியும்.

 

“நீங்கள் வந்திருந்தாலாவது நான் எங்கள் வீட்டில் உங்களை பற்றி பேசியிருப்பேன், நீங்கள் வந்தவர் வாசலோடு போவீர்கள் என்று எனக்கு எப்படி தெரியும். நாம் இருவருமாக சென்று என் பெற்றோரிடம் பேசுவது தான் சரியாக இருக்கும். இதற்கு மேல் தாமதிக்கக் கூடாது. வாருங்கள் போகலாம்என்றாள்.

 

“நான் எப்படி உன்னை நம்புவதுஎன்றுஅவன்மேலும்அவளைகுத்தஅவளும்கொதித்தெழுந்தாள். “இவ்வளவுநாளாகஎன்னுடன்பழகுகிறீர்கள். நான் எப்படிப்பட்டவள் என்று நம்புவது உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதா. நீங்கள் என்னை நம்ப வேண்டாம். நான் கிளம்புகிறேன்என்றுகூறிஅவள்கிளம்பிசென்றுவிட்டாள்.

 

பேசாத வார்த்தைக்கு நீ எஜமானன், பேசிய வார்த்தை உனக்கு எஜமானன் என்று உணராமல் அவன் ஆத்திரத்தில் வார்த்தையை கொட்டிவிட்டான். தான் தவறாக நினைத்து விட்டோமோ, அவள் பக்க நியாயம் இருப்பதை யோசியாமல் இருந்துவிட்டோமென்று நினைத்து மனம் லேசாக வருந்த ஆரம்பித்தது. அவளை தடுக்க வழியில்லாமல் அவன் ஈகோ அவனை தடுத்தது.

 

வீட்டிற்கு வந்த வென்பாவிற்கோ அழுகை பீறிட்டு வந்தது, அதை அடக்கியவள் இயல்பாக இருப்பது போல் பெற்றோர் முன் காட்டிக் கொண்டாள். தந்தையும், தாயும் அவர்கள் சென்ற பின் பேசியதை கேட்டவள் எப்படியாவது பெற்றோரிடம் அவர்கள் மனம் புண் படாமல் இந்த திருமணம் வேண்டாம் என்று தடுத்து விடவேண்டும் என்று எண்ணினாள்.

 

அவன் வீட்டில் இருந்து வந்த பின் அவனை அவள் தொடர்பு கொள்ளவில்லை அவனும் அவளுக்கு முயற்சிக்கவில்லை. நாலைந்து நாட்களாகவே யோசனையாக இருந்தவள், எப்படி வீட்டில் விஷயத்தை சொல்லி இந்த திருமண பேச்சை நிறுத்துவது இரவெல்லாம் யோசித்து ஒரு முடிவிற்கு வந்தாள். விடிந்த பின்னே உறக்கம் அவளை ஆட்க்கொண்டது.

 

குழலி ஆறாவது முறையாக வந்து அவளை எழுப்பினார். அப்போது தான் மணி பார்த்தவள் அதிர்ந்து போனாள். மணி எட்டரையை நெருங்கியிருந்தது. அவசரமாக எழுந்து குளித்து உடைமாற்றிக் கொண்டு கிளம்பினாள். காலை டிபனை வெளியில் பார்த்துக் கொள்வதாகக் கூறிவிட்டு கிளம்பினாள்.

 

இனியா வீட்டில் வெண்பாவை வந்து பெண் கேட்டு போனதில் இருந்தே மகளின் முகம் தெளிவில்லாததை பார்த்தும் பார்க்காதது போல் குழலி கண்டு கொண்டார். அவளிடம் எப்படியும் இன்று பேசி விடவேண்டும் என்று முடிவெடுத்தார்.

 

வெண்பாவை பார்த்து முழுதாக இன்றோடு ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. வேலையை கண்ணும் கருத்துமாக செய்தாலும் அவன் மனம் முழுக்க அவளையே சுற்றி சுற்றி வந்தது. சித்தார்த்துக்கு ஏனோ மனம் கேட்கவில்லை, தான் அவளை நம்பாமல்விட்டது தவறு என்ற எண்ணம் மேலோங்கியது.

இரவெல்லாம் தூங்காமல் விழித்தவன், விடிந்ததும் குளித்து தயாராகி வெளியில் வந்தான். வெண்பா அலுவலகம் செல்லும் முன்பு அவளை பார்த்து விடவேண்டும் என்ற தவிப்பு அவனிடம் இருந்தது.

 

அவள் வழக்கமாக வரும் நேரம் கடந்தும் அவள் வராதது அவனுக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியது. தான் அன்று பேசிய பேச்சால் அவள் ஏதும் மனமுடைந்து போயிருப்பாளோ என்று அவன் மனதில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றியது. எதிரில் அவள் வந்து கொண்டிருந்தாள், அவளை பார்த்தபின் தான் அவனுக்கு உயிரே வந்தது.

 

அவள் வந்து நின்ற சில நொடிகளில் இனியாவின் அண்ணன் அருண் வந்து அவளிடம் பேசலானான். அவளுக்காக காத்திருந்தவன் மனநிலை மீண்டும் முருங்கை மரம் ஏறியது. சில நிமிடங்கள் நின்று பார்த்துவிட்டு வேகமாக காரை கிளப்பிக் கொண்டு சென்று விட்டான் அவன்.

 

அலுவலகத்துக்கு சென்றவனுக்கு வேலையே ஓடவில்லை. கிட்டத்தட்ட எல்லோரையுமே கடிந்துக் கொண்டான். இதற்குமுன் இது போல் ஒரு தரம் அவன் எல்லோரிடமும் இப்படி எரிந்து விழுந்தது நினைவுக்கு வந்தது.

 

தன்னையே நொந்து கொண்டவனுக்கு அதற்கு மேல் இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது அவளை பார்த்து பேசினால் மட்டுமே மனம் அமைதியடையும் என்று தோன்றியது.

 

மதியம் வரை பொறுத்திருந்தவன், மதியத்திற்கு மேல் விடுப்பு எடுத்துக் கொண்டு அவளை சந்திக்கச் சென்றான். அவன் அவளுக்கு ஒரு போன் செய்து கூட சொல்லாமல் அவளை பார்க்க கிளம்பிவிட்டான். இதற்கு முன்னும் அவளை பார்க்க அவன் அவ்வாறு கிளம்பி சென்று இருக்கிறான்.

 

அவள் வேலைக்கு செல்ல ஆரம்பித்ததில் இருந்து அவ்வப்போது அவளை பார்க்கவென்று சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிச் சென்று அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பான். அந்த எண்ணத்தில் அவன் அவளிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கிளம்பிவிட்டான்.

 

விதி அவர்கள் வாழ்வில் குறுக்கிடும் போது இயல்பான விஷயங்கள் கூட எதிர்மறையாக மாறிவிடும் போலும்.காலையில் அருண் வந்து அவளிடம் பேச ஆரம்பித்ததும் வெண்பா அவனிடம் “நான் உங்களுடன் தனியே பேசவேண்டும், நான் மதியத்திற்கு மேல் அரை நாள் விடுப்பு எடுத்து வருகிறேன்என்றுகூறினாள்.

 

‘என்னடா இது நாம சொல்ல நினைச்சத இவளே சொல்றாளே, அவளுக்கும் நம்ம மேல ஒரு இது வந்து இருக்குமோ. ஆனால் அவள் முகம் இதை சொல்லும் போது சுத்தமாக உணர்சிகளை தொலைத்து இருந்தது. வேறு ஏதோ விசயமாக இருக்கும்என்றுயோசித்தவன், “சரிநான்உங்களுக்குபோன்போடுறேன், நீங்ககிளம்பிதயாராஇருந்தாநானேவந்துஉங்களைஅழைச்சுட்டுபோறேன்என்றுஅருண்கூறவெண்பாதலையசைத்தாள். இனி……….

 

அத்தியாயம் –16

 

அருண் அவன் அலுவலகத்தில் இருந்து கிளம்பி வெண்பாவின் அலுவலகம் வந்தடைந்தான். அவளுக்கு போன் செய்து அவன் வந்துவிட்ட விபரம் உரைத்தான். அவள் அலுவலகத்தில் அரை நாள் விடுப்பு கூறிவிட்டு கிளம்பினாள்.

 

அதே நேரம் சித்தார்த்தும் அவன் அலுவலகத்தில் இருந்து வெண்பாவின் அலுவலகம் அருகே வந்துவிட்டிருந்தான். தூரத்தில் வரும் போதே அவன் அருணை கவனித்துவிட்டான். ‘இவன் ஏன் வெண்பா அலுவலகத்துக்கு வெளியில் காத்திருக்கிறான் என்று யோசனை செய்தவாறே காரை நிறுத்தினான்.

 

அப்போது வெண்பா அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தவள், அருணை பார்த்து கையசைத்து அவனை நோக்கிச் சென்றாள். அவனிடம் ஏதோ பேசிவிட்டு, அவன் கார் கதவை திறக்க அவள் முன் இருக்கையில் ஏறி அமர்ந்தாள்.கார் கிளம்பியது, சித்தார்த் சிறிது இடைவெளிவிட்டு அவர்களை பின் தொடர்ந்தான்.

 

சிறிது தூரம் சென்றவுடன் கார் ஒரு ஓட்டலின் முன் நின்றது. வெண்பாவும் அருணும் இறங்கி உள்ளே சென்றனர். சித்தார்த்தும் அவர்களை பின் தொடர்ந்தான். வெளியிலேயே கார்டன் வசதி செய்யப்பட்ட அந்த ஓட்டலின் ஒரு ஓரமாக சென்று அவ்விருவரும் அமர்ந்தனர். சித்தார்த் அங்கேயே அருகில் இருந்த இருக்கையில் தொப்பென விழுந்தான்.

 

வெண்பா எல்லா விஷயத்தையும் அருணிடம் மறைக்காமல் கூறினாள். அருண் முதலில் இதை நம்பவில்லை. “அப்படி ஒரு விஷயம் இருந்தால் இனியா என்னிடம் கூறியிருப்பாளே. நீங்கள் என்னை வேண்டாம் என்று சொல்வதற்காக இப்படி கூறுகிறீர்களா என்றான்.

 

“இல்லை அப்படி எந்த அவசியமும் எனக்கில்லை. எங்கள் காதல் விவகாரம் இனியா, சுஜி இருவருக்குமே கூடத்தெரியாது. எங்கள் படிப்பு முடிந்ததும் இருவரிடமும் கூறலாமென்று எண்ணியிருந்தேன். அதன்பின் ஊருக்குச் சென்ற சுஜியிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

 

“இனியாவும் மேல் படிப்பு என்று அலைந்து கொண்டிருந்தாள். சுஜி, இனியா இருவரிடமும் ஒரே சமயத்தில் இதை பற்றி கூறவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது இப்படி முடியும் என்று நான் நினைக்கவில்லை என்றாள் அவள்.அவளின் கண்களில் பொய்யில்லை, உண்மையை மட்டுமே அது பேசியதை அருண் கண்டுகொண்டான்.

 

மேலும் சித்தார்த் இல்லை என்றால் தனக்கு வேறு எதுவும் இல்லை. தன்னால் வேறு ஒரு வாழ்வு பற்றி சிந்திக்க முடியாது என்று கூறி கண் கலங்கினாள்.அவள் கண்ணீரை கண்டவன் இயல்பாக அதை துடைக்க தன் கைக்குட்டையை நீட்டினான்.

 

“என் அப்பாவிடம் என்னால் இது பற்றி பேச முடியவில்லை, ஏனெனில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என் திருமணம் பற்றிய பேச்சில். அதனால் தான் நான் உங்களிடம் இது பற்றி கூறினேன் என்றாள் அவள். அவள் கை மேல் தன் கையை வைத்து தான் பார்த்துக் கொள்வதாக கூறி அவன் அவளை ஆறுதல் படுத்தினான் அவன்.

 

சித்தார்த்தால் அவர்களை பார்க்க முடிந்ததே தவிர அவர்கள் பேசியதை கேட்க முடியவில்லை. அருண் வெண்பாவின் கையை பிடிப்பதை பார்த்தவனுக்கோ பெரும் ஆத்திரமும் கோபமும் வந்தது. விர்ரென்று ஓட்டலைவிட்டு கிளம்பி வேகமாக வெளியேறினான்.

 

வெண்பாவுக்கு மனம் லேசாகி இருந்தது, அருணிடம் பேசியது பற்றி சித்தார்த்திடம் கூறலாமென்று அவனைத்தேடி அவன் வீட்டிற்குச் சென்றாள். கிட்டத்தட்ட அவனை பார்த்து ஒரு வாரம் ஆகிவிட்டது, என் மேல் அப்படி என்ன கோபம், பேசவே இல்லை என்று வருந்தினாள்.

 

ஆனால் பாவம் அவனுக்கும் கோபம் இருக்கத்தானே செய்யும். அவன் கண் முன் நான் வேறு ஒருவருக்கு காபி கொடுப்பதாக நினைத்துக் கொண்டான், அதுவும் அவர்கள் பெண் பார்க்க வந்தவர்கள் என்று தெரிந்த பின் அவனுக்கு எப்படி இருந்திருக்கும்.

 

காதலியை வேறு ஒருவன் பார்த்தால் எப்படி ஒருவன் உணர்ச்சி வசப்படுவானோ, அப்படிதானே அவனும் உணர்ச்சி வசப்பட்டான். இப்போது போய் அவனிடம் அருணிடம் தான் பேசியது பற்றி கூறினால் சரியாகிவிடுவான் என்று அவனுக்காக பரிந்து யோசனை செய்துகொண்டே அவனை பார்க்கச் சென்றாள்.

 

வீட்டின் கதவு திறந்திருந்தது, அவன் வந்துவிட்டான் போலும் என்று மகிழ்ச்சியுடன் நினைத்தவாறு உள்ளே சென்றாள். இரு கைகளாலும் தலையை தாங்கி பிடித்தவாறே சோபாவில் உட்கார்ந்து இருந்தவனின் அருகில் சென்று ஓசையின்றி அமர்ந்தாள். தன்னருகே யாரோ அமரும் அரவத்தில் திரும்பி பார்த்தவனது கண்கள் கோபத்தில் துடித்தது.

 

அனல் வீசும் பார்வையை அவள் மேல் வீசினான். வெண்பாவுக்கு உள்ளுர குளிர் பிறந்தது அவனுடைய பார்வையில். “எதுக்குடி, இங்கு வந்தாய். ஓட்டலில் அவனுடன் கொஞ்சி குலாவிவிட்டு இங்கு எதற்காக வந்தாய், இங்கு வந்து என்னுடன் கடலை போடலாம் என்று நினைத்தாயாஎன்றுகோபத்தில்வார்த்தைகளைஅள்ளிவீசினான்.

 

‘என்னது இவன் அங்கு வந்திருந்தானா, அங்கு என்ன பேசினோம் என்று தெரியாமல் ஏதேதோ பேசுகிறானேஎன்றுஇருந்ததுஅவளுக்கு. அவள்மனதைபடித்தவனாக“உங்கள்இருவரையும் காலையில் பேருந்து நிற்குமிடத்தில் பார்த்தேன். உன்னை பார்த்து கிட்டதட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது.

 

“அன்று ஏதோ கோபத்தில் பேசிவிட்டோமே,உன்னை பார்க்கலாம் என்று வந்தேன். உன்னை பார்க்காமல் நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். ஆவலுடன் உன்னை பார்க்கலாம் என்று வந்தால் அவன் அங்கு வந்து நிற்கிறான்.

 

“அதன்பின் நான் கிளம்பி அலுவலகம் சென்றுவிட்டேன். அங்கு சென்றால் எனக்கு வேலையில் மனம் செல்லவில்லை. உன்னை பார்த்து பேசினால் தான் நிம்மதியாக இருக்கும் என்று தோன்ற, மதியத்திற்கு மேல் அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு உன்னை பார்க்க உன் அலுவலகம் வந்தேன். ‘என்னதுஅலுவலகம்வந்தானாஎன்றுயோசித்தாள்அவள்.

 

“ஆனால் என் கெட்ட நேரம் அவன் அங்கும் எனக்கு முன்னால் வந்து நிற்கிறான், நீயும் அவனுடன் காரில் ஏறிக் கொண்டு செல்கிறாய், எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பார். எங்கு செல்கிறீர்கள் என்று பின்தொடர்ந்து வந்தால் நீங்கள் ஓட்டலுக்கு சென்றீர்கள்.

 

“அங்கு தான் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டேன். அவன் கைக்குட்டையை உன்னிடம் கொடுக்க நீயும் அதை வாங்கிக் கொள்வதை பார்த்தேன். இப்போ சொல்லு உனக்கு என்னை பார்த்தால் எப்படி தெரிகிறது. போதும் இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம்.

 

“உன் முகத்தை பார்க்கவே எனக்கு இஷ்டமில்லை. போ என் கண் முன்னால் நிற்காதே போ, போய்விடு, போய் உங்க அப்பாவோட விருப்பத்தை நிறைவேற்று அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டும்என்றுவார்த்தைகளைமேலும்மேலும்கொட்டினான்அவன்.

 

“என்னை பார்த்தால் உங்களுக்கு எகத்தாளமாக இருக்கிறதா, என் அக்கா என்று ஒருத்தி என்னை வார்த்தைகளால் குத்தி கிழிக்கிறாள், நீ என் இதயத்தையே குத்தி கிழித்துவிட்டாய். மொத்தமாக என்னை உருக்குலைத்து விட்டாய். நீ அவனுடன் கொஞ்சி குலாவுவதை பார்த்துக் கொண்டிருக்க என்னால் இயலாது. நீ இரட்டை குதிரையில் சவாரி செய்ய எண்ணுகிறாய். இந்த ஜென்மத்தில் நான் உன்னை பார்ப்பது இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தயவு செய்து இங்கு இருந்து போய் விடுஎன்றான்சித்தார்த்.

 

அவன் வார்த்தையின் சீற்றத்தில், பேசிய வார்த்தையில் துடித்து போனாள் அவள். அவனிடம் திரும்பி “நிச்சயமாக இனி நான் உங்களை தேடி வரமாட்டேன். என்ன வார்த்தை எல்லாம் பேசிவிட்டீர்கள். நான் எப்படி பட்டவள் என்று இத்தனை நாள் பழகிய உங்களுக்கு தெரியவில்லையா. இரட்டை… இரட்டை… குதிரையில்அவளுக்குநாதழுதழுத்தது.

 

“என்தரப்பைசொல்லக்கூடநீங்கள் எனக்கு அவகாசம் தரவில்லை. நான் வருகிறேன்என்றுகூறிகண்ணீருடன்விரைந்துசென்றுவிட்டாள். மீண்டும்திரும்பியவள்“மன்னித்துகொள்ளுங்கள்நான்போகிறேன்என்றுசொல்லிவிட்டுசென்றாள்.

 

அவளைகண்டசித்தார்த்தின்மனம்ஒருநிமிடம்அவளுக்காகதுடித்தது, அவள்கண்ணீரைகண்டவனது மனம் அவளிடம் எதுவோ கேட்க நினைக்க அவனுக்குள் பலவிதமான எண்ணங்கள் சூழ்ந்து அவனை பேசவிடாமல் தடுத்தது.

 

அவள் சென்றதும் சித்தார்த் பலவாறாக யோசித்து குழம்பினான். அவள் சென்றதும் சூனியமாக உணர்ந்தவனுக்கு அவள் பேசிய வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது, அவள் சொல்லிய அவகாசம் கூடதான் அவளுக்கு கொடுக்கவில்லையோ என்று எண்ணினான்.

 

எதுவாக இருப்பினும் அவளை பேசவிட்டிருக்க வேண்டும் என்று அவன் அறிவு அவனுக்கு உணர்த்தியது.மீண்டும் அவன் மனம் முரண்டு பிடித்தது, அவளை நம்பித்தானே காலையில் அவளை பார்க்கச் சென்றோம், அப்போது அவன் வந்து கெடுத்தான்.

 

மதியம் அவளை பார்க்கச் சென்றால் அப்போது அவள் அவனுடன் காரில் ஏறிச் சென்றுவிட்டாள். இதற்கு மேல் அவளை எப்படி நினைப்பது, என்ற எண்ணம் தோன்றியது அவன் உள்ளத்தில்.பலவாறு யோசித்து குழம்பியவன் மனம், முடிவான ஒரு சிந்தனைக்கு வந்தது.

 

கடைசியாக ஒரு முறை அவளிடம் பேசிவிடுவது என்று நினைத்து பால்கனிக்கு வந்தவன் அவளுக்கு போன் செய்தான், பலமுறை முயற்சி செய்தும் அவள் போனை எடுக்கவேயில்லை. என்னவோ ஏதோ என்று மனம் பதற அவள் வீட்டை நோக்கி நடந்தான். வெளியில் ஒரு கார் நின்றிருந்தது.

அதிலிருந்து வெளியே வந்தவனை பார்த்தவனது முகம் கருத்தது. அந்த அருண் தான் அங்கு நின்றிருந்தான். அவன் கோபம் மேலும் அதிகரித்தது.“ஹலோ, எங்க இருக்கீங்க, நான் உங்க வீட்டு வாசலில் தான் நிற்கிறேன். என்னாச்சு, சரி நான் உடனே அங்கு வருகிறேன்என்றுகூறிபோனைவைத்தான்அருண். உடனேகாரைஎடுத்துக்கொண்டுசீறிப்பாய்ந்துவிட்டான்.

 

அவன் வெண்பாவுடன் தான் பேசினான் என்பதை புரிந்துக் கொண்டவனுக்கு மேலும் மனம் புண்பட்டது. அவன் கோபமும், வெறுப்பும், இயலாமையும், காதலும் என்று போட்டி போட்டுக் கொண்டு எல்லாமும் சேர்ந்து அவனை அலைகழித்தது.

 

தான் அவளை அழைத்தபோது போனை எடுக்காதவள், அவனிடம் மட்டும் பேசுகிறாளே என்று எண்ணி மனம் குமைந்தான் அவன். நடந்ததை முழுவதுமாக அவளிடம் கூறலாம் என்று நினைத்தால் அவள் போனை  எடுக்கவில்லையே. அவளிடம் ஒரு முறை பேசிவிட்டு செல்லலாம் என்று நினைத்தவனுக்கு ஏதோ ஞாபகம் வர அப்படியே கிளம்பிச் சென்றான்.

 

இனிமேலும் இங்கிருந்தால் தனக்கு அவளை பார்க்கும் எண்ணம் அதிகரிக்கும் என்று தோன்றியது. அவனுக்கு தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. இரவெல்லாம் தூங்காமல் யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தான், விடிந்ததும் அலுவலகத்திற்கு சென்று வேலையை ராஜினாமா செய்வதாக கூறினான்.

 

நண்பனுடைய மகனை உடனே வேலையை விட்டு அனுப்ப அந்த குழுமத்தின் தலைவருக்கு இஷ்டமில்லை என்றாலும், அவன் தீவிரம் கண்டு சரி என ஒப்புக்கொண்டார். அவன் எப்போது வேண்டுமானாலும் அங்கு திரும்பி வரலாம் என்று கூறினார் அவர்.

 

தன் உதவி எப்போது தேவைப்பட்டாலும், தயங்காமல் கேட்குமாறு கூறினார். அவனுடைய சம்பளம் மற்றும் இதர தொகைகள் முதலிய அணித்து அவனுக்கு உடனே கிடைக்குமாறு செய்தார். அவன் எங்கு செல்வதாக இருக்கிறான் என்று கேட்டார். அவன் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறினான்.

 

அவருக்கு மிகுந்த நன்றியுரைத்து விட்டு அலுவலகத்தில் எல்லோரிடமும் விடைபெற்று அவன் பயன்படுத்திக் கொண்டிருந்த அலுவலகக் காரையும் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

 

காலையில் வீட்டில் இருந்து கிளம்பும்போதே அவனுக்கு தேவையான அனைத்தும் அடங்கிய பையை எடுத்து வந்திருந்தான். வீட்டின் சாவியைவினோத்திடம் ஒப்படைத்துவிட்டு அதை ஸ்ரீயிடம் கொடுத்துவிடுமாறு கூறினான். அவன் எங்கு செல்ல போகிறான் என்ற விபரம் மட்டும் கூறாமல் விடுத்தான்.

 

எங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் கிளம்பியவனின் கால்கள் தன்னிச்சையாக அவள் வீட்டை கடந்து சென்று நின்றது. வீடு வெளியே பூட்டி இருந்தது. மனம் வேதனையில் சுழல நேற்று நடந்த நிகழ்வுகளை எண்ணினான்.

 

எதையோ இழந்தது விட்ட வேதனை மனதில் தோன்றியது, இதற்கு முன் தன் தந்தை இறந்த போது இதுபோல் வேதனையில் உழன்றது ஞாபகம் வந்தது. தன்னையே ஒருவாறு தேற்றியவனாக கோயம்பேடு செல்லும் பேருந்தில் ஏறினான்.

 

கோயம்பேடு வந்து பெங்களூர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தவனுக்குள் மீண்டும் மீண்டும் இனம் புரியாத வேதனை வந்தது. சென்னையில் அவனுடன் வேலை பார்த்தவன் தற்போது பெங்களூரில் செட்டிலாகி இருந்தான். முன்னரே அவன் சித்தார்த்தை அங்கு வருமாறு அழைத்திருந்தான்.

 

அப்போதெல்லாம் அவனுக்கு அங்கு செல்ல இஷ்டமில்லாமல் இருந்தது. இப்போது அவன் மனம் அமைதியடைய அவன் சென்னையில் இருந்து வெகு தூரம் செல்ல வேண்டும் என்று எண்ணியே பெங்களூருக்கு சென்றான்.

 

அவன் நண்பன் அங்கு தற்போது தனியாக ஒரு நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறான். அவனுடன் கூட்டு சேர்ந்து வியாபாரம் செய்யலாமென்று அவன் பல முறை அழைத்தும் சித்தார்த் அவன் பார்த்துக் கொண்டிருந்த வேலையைவிட்டு வரவிரும்பாமல் நண்பனிடம் மறுத்தது நினைவுக்கு வந்தது.

 

அவனுக்கு போன் செய்து அங்கு வரும் விபரம் உரைத்தான். மனம் முழுவதும் ஒரு வெறுமை சூழ்ந்திருந்தது. எதிலோ தோற்றுவிட்டதாக உணர்ந்தான். யாரிடமும் அவனுக்கு பேசப்பிடிக்கவில்லை. வீட்டிற்கு மட்டும் போன் செய்து அம்மாவிடம் பேசினான்.

 

வேலை மாறப்போவதாக மட்டும் அவரிடம் கூறினான், வேறு எந்த விபரமும் கூறி அவர்களை மனவேதனைப்பட வைக்க அவன் விரும்பவில்லை.ஸ்ரீக்கு போன் செய்ய அவனுக்கு மனம் வரவில்லை, அவனிடம் சொன்னால் அவன் வேறு வேதனை படுவான்.

 

ஊருக்கு செல்லும் போது அவனிடம் இது பற்றி பேசிக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டான். சித்தார்த்தின் நண்பன் அகிலேஷ் அவனை அழைத்துச் செல்ல பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தான்.நண்பனின் வாடிய முகத்தைக் கண்டவன் ஏதாவது பிரச்சினையா என்று கேட்க இல்லை என்று பதிலிறுத்தான் சித்தார்த். அகிலேஷ் அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனியாக தங்கியிருந்தான். அவன் வீட்டிற்கு சென்றதும் சித்தார்த் குளித்துவிட்டு கிளம்பினான்.

இருவருமாக வீட்டில் இருந்து கிளம்பி நேரே ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு பின் அவனுடைய அலுவலகம் பார்க்கச் சென்றனர். சித்தார்த் அகிலேஷிடம் அவனுக்கு ஒரு புது சிம் கார்டு வாங்கி தருமாறு கேட்டிருந்தான்.

 

அகிலேஷ் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து அலுவலகமாக மாற்றி இருந்தான், அவன் மட்டுமே தனியாக நடத்தி வந்ததால் குறைந்த அளவிலான முதலீடும் அதற்கேற்ப சொற்ப வருமானமும் மட்டுமே வந்துகொண்டிருந்தது. சித்தார்த்திற்கு மனதுக்குள் ஏதோ யோசனை தோன்ற அகிலேஷிடம் கேட்டான்.

 

“அகில் நாம ஏன் நாம தங்கி இருக்கற வீட்டையே அலுவலகமாக மாற்றக் கூடாது. எதற்கு இரு வாடகை குடுக்கிறாய்என்றான். இல்ல சித்தார்த் அலுவலகம் ஒரு பிரபலமான இடத்துல இருந்தா எல்லாருக்கும் தெரியும், அதான் நான் இங்க வாடகைக்கு எடுத்து இருக்கேன்என்றான்.

 

“நீ ஏன்டா அப்படி நினைக்கிற, நாம இருக்கற இடத்தை நாம பிரபலமாக்கலாம். நீ இங்கு வாடகைக்கு எடுத்து இருக்கும் இடம் மிகவும் சிறியது, ஆனால் நீ தங்கியிருக்கும் வீடு இதை விட மிகவும் பெரியது. முன்பக்கம் அலுவலகமாக நாம் உபயோகித்தால் கூட பின்பக்கம் நமக்கு நிறையவே இடம் இருக்கும், அதுவும்மில்லாமல் நமக்கு வாடகையும் மிச்சமாகும்என்றான்சித்தார்த்.

 

அவன் சொல்லிய வண்ணம் அவர்கள் இருக்கும் இடம் தேடி அவர்களின் வாடிக்கையாளர்களை வரவைத்தான். இவர்கள் தேடி போய் வேலையை பிடித்து வரும் காலம் போய் இவர்களை தேடி வாய்ப்புகள் வந்து குவிந்தது.

 

சித்தார்த்தும் அகிலேஷுமாக சேர்ந்து பணம் போட்டு அவர்கள் தங்கியிருந்த வீட்டை விலைக்கு வாங்கினர். வேலைக்கு கூடுதலாக ஆட்களை போட்டு அவர்கள் வாடிக்கையாளர்களை அவர்களைவிட்டு போகாமல் பார்த்துக் கொண்டனர்.

 

சித்தார்த்தும் அகிலும் சேர்ந்து மேற்பார்வை பார்ப்பதும் புது வாடிக்கையாளர்கள் கொண்டு வருவதுமாக தங்கள் தொழிலை வளர்த்து கொண்டிருந்தனர்.இடையில் ஒரு தரம் சித்தார்த் ஊருக்கு சென்று தாயை பார்த்துவிட்டு வந்தான். ஸ்ரீயை பார்த்தால் எதுவும் பதில் சொல்ல நேரிடுமோ என்று சென்ற அன்றே ஊருக்குத் திரும்பிவிட்டான்.

 

ஸ்ரீ எதையும் லேசில் விடுகிறவன் அல்ல அவன் சித்தார்த்தை தொடர்பு கொள்ள முயற்சித்தான். அது உபயோகத்தில் இல்லை என்று வந்தது. வெண்பாவையும் தொடர்பு கொள்ள முயற்சிக்க அவளுடைய எண்ணும் உபயோகத்தில் இல்லை என்றே வந்தது.

 

இடையில் அவன் ஒரு தரம் வந்து அவன் அன்னையை பார்த்துவிட்டு போனதை தெரிந்து கொண்டான். அவனுக்கும் வெண்பாவுக்கும் ஏதோ பிரச்சனை என்றவரையில் அவனுக்கு புரிந்தது. எப்படியோ அவன் எண்ணை கண்டுபிடித்து வேறு ஒரு எண்ணில் இருந்து தொடர்பு கொண்டான்.

 

போனை எடுத்து “ஹலோ சித்தார்த் பேசுகிறேன்என்றான். “நான்ஸ்ரீதர்பேசுகிறேன்என்றதுமறுமுனை. ஒருநிமிடம்அங்குகனத்தஅமைதிநிலவியது, ஸ்ரீயேமௌனத்தைகலைத்தான், “உன்னக்குஎன்னதான்டாபிரச்சனை, என்னைஎதற்குஒதுக்குவதுபோல்நடந்து கொள்கிறாய்என்றான்அவன்.

 

ஸ்ரீயின் நேரடியான கேள்வியில் திகைத்தவன் எதுவும் பேசாமல் இருந்தான். பின் தொண்டையை செருமியவாறு அவனை நேரில் பார்த்து பேசுவதாக் கூறி அவனை பெங்களுருக்கு வரச் சொன்னான்.

 

நண்பன் ஏதோ பிரச்சனையில் இருக்கிறான், ஆதலால் தான் இது போல் நடக்கிறான் என்று உணர்ந்த ஸ்ரீ உடனே கிளம்பிச் சென்று அவனை நேரில் பார்த்தான். நேரில் கண்ட இருவருக்குமே பேச நாயெழவில்லை. தன்னை மன்னிக்குமாறு கூறிய சித்தார்த் நடந்த விபரங்களை ஸ்ரீயிடம் கூறினான். அவன் கூறுவதை பொறுமையாகக் கேட்ட ஸ்ரீ மெல்ல வாய் திறந்து பேசினான்.

 

“சித்தார்த் நான் சொல்லறேன்னு தப்பா எடுத்துக்காத, நீ வெண்பாவை சரியா புரிஞ்சுக்கலயோன்னு தோணுதுடா, வெண்பா அப்படிப்பட்ட பெண்ணே அல்லஎன்றான்ஸ்ரீ.

 

“நீநடந்ததைமுழுசாகேட்டுட்டுசொல்லுஎன்றுகூறிஅவனிடம்மேலும்ஏதோசொல்ல, ஸ்ரீயின்முகம்மாறியது, சித்தார்த்அவளைவிட்டு பிரிந்ததற்கான காரணம் அவனுக்கு நியாயமாக பட்டாலும் அவனுக்கு ஒரு உறுத்தல் இருந்தது, “நீ எதற்கும் வெண்பாவிடம் ஒரு தரம் பேசியிருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறதுஎன்றான்அவன்மனதில்பட்டதை.

 

“பேசியிருந்தால் மட்டும் என்ன நடந்து இருக்கும், நான் எப்படி அவளிடம் பேசமுடியும். நான் அவளை பிரிஞ்சு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. அவ்வளவு நடந்தபின் எனக்கு அங்கு செல்லவே பிடிக்கவில்லை. அவளை வேறு ஒருவன் மனைவியாக பார்க்கும் தைரியமும் எனக்கில்லை.

 

“இந்நேரம் அவளுக்கு ஒரு குழந்தை கூட பிறந்திருக்கலாம். இதை எல்லாம் பார்க்க என்னால் முடியாது, அதனால் தான் நான் இங்கு வந்து ஒளிந்து வாழ்கிறேன்என்றவனின்குரலில்பெரும்தடுமாற்றமும்துயரமும்இருந்தது.நண்பனின் துயர் துடைக்க எது வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தான் ஸ்ரீ. அவன் வெண்பாவை நேரில் சந்தித்து பேசப் போவதாகக் கூறினான்.

இதைக் கேட்டு கொதித்தெழுந்த சித்தார்த் “ஸ்ரீ என்னிடம் உனக்கு உண்மையில் அன்பிருந்தால் தயவு செய்து நீ அங்கு போக வேண்டாம். இனி அவள் வாழ்கையில் எந்த குழப்பமும் வேண்டாம். இது என் மேல் ஆணைஎன்றுகூறிவிட்டுவெளியேசென்றுவிட்டான்.

 

ஸ்ரீயும் அதற்கு மேல் எதுவும் பேச முயற்சி செய்யவில்லை, நண்பனிடம் விடைபெற்று ஊருக்கு கிளம்பிச் சென்றுவிட்டான், யாருக்கு தெரியாமல் வெண்பா பற்றியும் விசாரித்தான். அவர்கள் வீட்டில் யாரும் இல்லை என்ற விபரம் மட்டுமே அவனால் அறிய முடிந்தது, அதற்கு பின் நடந்தவை ஏதும் தெரிந்து கொள்ள முடியவில்லை.

 

இனியாவிடம் கேட்கலாமென்று முயற்சி செய்தால் அவள் மணமாகி வெளிநாட்டில் இருப்பதாக தகவல் மட்டுமே அவன் அறிய முடிந்தது. ஒருவேளை வெண்பாவும் இனியாவின் அண்ணனும் தற்போது வெளிநாட்டில் தான் வசிக்கிறார்களோ என்று நினைத்தான் ஸ்ரீ.

 

அவ்வாறு இருக்கவே முடியாது என்று அவன் மனம் சொல்லியது, வெண்பா சித்தார்த்தை தவிர வேறு ஒருவனை மணக்க நிச்சயமாக சம்மதிக்கமாட்டாள் என்று அவன் நம்பினான். இருந்தாலும் சித்தார்த்திற்கு கொடுத்த வாக்கிற்காக அதற்கு மேல் ஏதும் அவன் விசாரிக்க முனையவில்லை.

 

ஒரு நாள் இரவு அவனுக்கு சித்தார்த்தின் மாமா ராகவனிடம் இருந்து போன் வந்தது. சித்தார்த்தின் அன்னையின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் இந்த தகவலை பக்குவமாக சித்தார்த்திடம் கூறி அவனை வரச்செய்யுமாறும் அவர் ஸ்ரீக்கு போன் செய்திருந்தார்.

 

அங்கு சென்று அவரை பார்த்த ஸ்ரீக்கு அவர் நிலைமை புரிய சித்தார்த்திற்கு போன் செய்து விபரம் உரைத்தான், அவன் பதறியடித்துக் கொண்டு உடனே வருவதாகக் கூறி போனை வைத்தான்.

 

அவன் அன்னையின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது, யாரையோ எதிர்பார்த்து காத்திருந்தது அந்த உயிர். ஸ்ரீயை அருகே அழைத்து சித்தார்த்தை பார்த்துக் கொள்ளுமாறும், அவனுக்கு நல்லபடியாக திருமணம் செய்து வைக்குமாறும் சைகையிலேயே கூறினார்.

 

விடியும் வேளையில் சித்தார்த் வந்து சேர்ந்தான், அதற்காகவே காத்திருந்ததுபோல் அவன் அன்னையின் உயிர் அவனை கண்டதும் பிரிந்தது. சித்தார்த் தாங்க முடியாத துயரத்தில் இருந்தான். தனக்கு மட்டும் எதுவுமே நிரந்தரமில்லை என்று நினைத்து மேலும் துயரம் கொண்டான்.

 

தாய்க்கு செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் நல்லபடியாகச் செய்தான். காரியம் முடிந்த மறுதினம் உயிலை படிக்க வக்கீல் வந்தார். சொத்துக்கள் அனைத்தும் நளினிக்கும் சித்தார்த்திற்கும் சரிபாதியாக பிரித்து எழுதியிருந்தது.

 

அவருடைய நகைகள் அனைத்தும் மகளுக்காக கொடுக்க வேண்டும் என்றும் வைர கம்மல், ஆரம், வளையல், மூக்குத்தி பரம்பரையாக வந்த நகையாதலால் அது அந்த வீட்டின் மருமகளுக்கு சேர வேண்டும் என்று கூறியிருந்தது.

 

நளினி இதைக் கேட்டு ரௌத்திரமானாள், எங்கிருந்தோ வந்த அனாதை பயலுக்கு சொத்தும் எழுதிக் கொடுத்து, அவனை கட்டுக் கொள்ள போகிறவளுக்கும் வைர நகைகளையும் தூக்கி கொடுத்திருக்கிறார்கள். இது சட்டப்படி செல்லாது என்றும் தான் மட்டுமே அவர்களுடைய ஒரே வாரிசு என்றும் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடரப் போவதாகவும் கூறி ஆர்ப்பாட்டம் செய்தாள்.

 

வக்கீல் அவளை நிதானமாக இருக்குமாறு உரைத்தார். ராகவனுக்கு கோபம் தலைக்கேற அவளை ஓங்கி அடித்துவிட்டான். நளினி அவனிடமும் சண்டைக்குச் சென்றாள். “இது ஒன்றும் உங்கள் சொத்தல்ல எனக்கு உரிமையுள்ள சொத்து அதை தடுக்க உங்களுக்கு கூட உரிமை இல்லைஎன்றுஅவனிடமும்ஆர்ப்பாட்டம்செய்தாள்.

 

“இனி நான் செத்தாலும் உன் விஷயத்தில் தலையிட மாட்டேன், போடி போ உன் இஷ்டத்திற்கு ஆடுஎன்றுசத்தம்போட்டுவிட்டுவெளியேசெல்லகிளம்பினான்ராகவன். சித்தார்த்எதற்குமேவாயேதிறக்கவில்லை, நளினியைராகவன்அடிக்கும்போதுமட்டுமேதடுத்தான்.

 

வக்கீல் எல்லோரையும் அமைதியாக இருக்குமாறு பணித்துவிட்டு இன்னுமொரு உயில் இருப்பதாகவும்  அதையும் படித்தபின் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்றார்.

 

 

Advertisement