Advertisement

அத்தியாயம் –13

 

சோலையாரில் இருந்து அடுத்து அவர்களை நீரார் அணைக்கு கூட்டி சென்றான் சித்தார்த். அந்த அணை பற்றியும்  அவர்களுக்கு கூறினான். “நீரார்அணை,முக்கியமாகநீர்மின்சாரம்உற்பத்திமற்றும்பாசனதேவைக்காகபயன்படுத்தப்படுகிறதுஎன்று அதன் முக்கியத்துவம் பற்றி கூறினான்.

 

அங்கேயே அவர்கள் எடுத்து வந்திருந்த சாப்பாட்டை பிரித்து உண்டனர். மீண்டும் ஒரு முறை அணையை சுற்றி பார்த்துவிட்டு அடுத்து அவர்கள் சென்றது சின்னகல்லார்நீர்வீழ்ச்சிக்கு. சின்னகல்லார்நீர்வீழ்ச்சிநாட்டின்இரண்டாவதுமிகஉயர்ந்தமழைபொழிவுபகுதியில்உள்ளது என்று ஸ்ரீ அதனை பற்றி ஒரு குறிப்பு கொடுத்தான்.

 

“டாப் ஸ்லிப் என்று ஒரு இடம் இருக்கிறது, அங்கு தான் புலிகள் சரணாலயம் இருக்கிறது, அங்கு சென்றால் யானைகளில் பயணம் செய்யலாம், மரக்குடில்களில் தங்கலாம். நமக்கு நேரம் கிடைத்தால் அங்கு கண்டிப்பாக செல்லலாம் அல்லது மீண்டும் உங்களுக்கு இங்கு வர சந்தர்ப்பம் கிடைத்தால் நாம் அங்கு செல்லலாம் என்றான் ஸ்ரீ.

 

ஆங்காங்கே வண்டியை நிறுத்தி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். வீட்டிற்கு செல்லும் போது நேரம் மூன்றை நெருங்கியிருந்தது. வீட்டிற்கு சென்று கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டனர். நான்கு மணிக்கு மேல் பாலாஜி கோவிலுக்கு செல்லலாம் என்று கூறினான் சித்தார்த்.

 

ஓய்வேடுத்தபின் அனைவரும் கிளம்ப ஐந்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. ஸ்ரீயை ஐஸ்வர்யாவுக்கு துணைக்கு வைத்துவிட்டு பெரியவர்கள் சகிதம் மற்ற அனைவரும் கிளம்பினர். கோவிலுக்கு செல்லும் மலை பாதைக்கு முன்பே சித்தார்த் வண்டியை நிறுத்திவிட்டான்.

 

“இதற்கு மேல் நடந்து தான் செல்ல வேண்டும் ஏதாவது முக்கிய காரியம் என்றால் மட்டுமே மலை மேல் வண்டி ஏற அனுமதி உண்டு அதுவும் எளிதல்ல என்று கூறிவிட்டு காரின் கதவை இழுத்து அடைத்து பூட்டினான்.

 

பேசிக்கொண்டே மெதுவாக ஏறினர். எங்கும் பசுமையாக ஒரு ஏறு பாதையில் கோவிலை நோக்கி நடந்தது கொண்டிருந்தது மிகவும் இனிமையான தருணமாக மனதில் தோன்றியது. அவ்வப்போது அமர்ந்து ஓய்வெடுத்தவாறே மேலே ஏறினர். சுஜி, ராதாவுடன் மெதுவாக அவருக்கு தோதாக நடந்து வந்தாள். சந்திரசேகரும், இனியாவும் வேகமாக போட்டி போட்டுக் கொண்டு மேலே ஏறினர்.

 

வெண்பாவும் ராதாவுடன் தான் நடந்து வந்தாள். சுஜியும், ராதாவும் மெதுவாக மேலே ஏறி நடக்க வெண்பா “சுஜி, நீங்க போங்க, நான் கொஞ்சம் உட்கார்ந்துட்டு வரேன் என்றாள்.

 

“என்னம்மா கால் வலிக்குதா, நாங்களும் உன்கூடவே வர்றோம்மா என்றார் ராதா. “ஆன்ட்டி நீங்க நடங்க, நான் வெண்பாவை கூட்டிட்டு வரேன் என்று சித்தார்த் கூற அவர்களும் அதை ஆமோதித்து மேலே நடக்க தொடங்கினர்.

 

அவளருகில் வந்த சித்தார்த் என்னவென்று விசாரித்தான். “ஒரு பத்து நிமிஷம் ப்ளீஸ், எனக்கு கால் வலிக்குது அதான் கொஞ்சம் உட்கார்ந்துட்டு போகலாம்ன்னு, இதெல்லாம் என்னோட நினைவுகள்ல நான் சேமிச்சு வைச்சுகுவேன். இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு என்றாள் அவள்.

 

“அதுக்காக மட்டும் தானா, நான் வேணா உன்னை அப்படியே தூக்கி போகவா என்றான் அவளை பார்வையால் விழுங்கிக்கொண்டே. அந்த குளிரிலும் வியர்த்தது அவளுக்கு.

 

“என்ன பயந்துட்டியா, நான் இப்பவே அப்படி எல்லாம் செய்ய மாட்டேன், அதுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது, நீ பயப்படாதே. எனக்கும் அப்படி செய்ய ஆசை தான், நீ அதுக்கு தடை சொல்ல மாட்டனா நான் இப்பவே தூக்கி போறேன் என்றான் அவன்.

 

“என்னங்க நீங்க, நாம கோவிலுக்கு போய்கிட்டு இருக்கோம். போதும் இந்த பேச்சு, வாங்க நாம நடக்கலாம் என்று அவள் எழுந்துக் கொண்டாள். அவன் அசையாமல் நிற்கவும் அவன் கையை பிடித்து இழுக்காத குறையாக நடந்தாள்.

 

ஒரு கணம் அப்படியே நின்றவன், பின் அவள் கையுடன் தன் கையை கோர்த்தவாறே நடந்தான். “என்னங்க இது என் கையை பிடிச்சுகிட்டு நடக்குறீங்க, எல்லாரும் என்ன நினைப்பாங்க, வாங்க போகலாம் என்றாள்.

 

“ஹேய் என்னடி விளையாட்டு காட்டுகிறாயா, நீ தானே முதலில் என் கையை பிடித்து இழுத்தது. நானும் அதை விடாமல் பிடித்துக் கொண்டு வந்தேன். இதில் என் தவறு என்ன வெண்பா என்றான்.

 

அவளுக்கு வெட்கமாக போய்விட்டது. அவள் தற்செயலாகத்தான் அவன் கையை பிடித்ததே, அவன் அதை வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொண்டான் என்பது அவளுக்கு அப்போது தான் புரிந்தது. லேசாக அவனை பார்த்து அசடு வழிந்தாள்.

 

ஏதோ தோன்ற “ஆமாம், உங்களை கேட்கணும்ன்னு நினைச்சேன். உங்க பேச்சில உங்க ஊரு பாஷையே தெரியலையே எப்படி. நீங்க என்னை ‘டி போட்டு கூப்பிடுறீங்க என்றாள்.

 

“நான் தான் பாதி சென்னைகாரனா ஆகிட்டேனே, ஆனா அது மட்டும் காரணமில்லை. எங்க அப்பாகூட அம்மாவை அம்மிணின்னு கூப்பிட்டதா லேசா ஞாபகம் இருக்கு. ஆனா நான் உன்னை எப்படி அப்படி கூப்பிட்டேன் தெரியல, உன் மேல உள்ள உரிமையாலேயே தான் அப்படி கூப்பிட்டு இருக்கிறேன் நினைக்கின். நீ என்னை ‘டான்னு கூப்பிட்டாலும் எனக்கு சந்தோசமாக இருக்கும் என்றான் அவன்.

 

“அப்படியா டா, சரி டா, ரொம்ப சந்தோசம் டா, இப்போ வா டா, போகலாம் டா என்று அந்த ‘டாவிற்கு அழுத்தம் கொடுத்து அவள் கூற, “இருடி, உன்னை அப்புறம் வைச்சுக்கறேன், இது கோவிலா போச்சு இல்லைனா நீ இத்தனை டா போட்டதுக்கு உனக்கு நல்லா குடுத்து இருப்பேன் என்று கூறி அவன் அவள் இதழ்களை நோக்க அவள் ஓடியே விட்டாள்.

 

வெளிச்சம் மறைந்து இருள் கவிழ ஆரம்பித்தது, ஒளிவிளக்குகளின் ஒளியில் கோவில் மிக அழகாக தெரிந்தது. மனம் நிறைந்த பிரார்த்தனையை பெருமாளிடம் வைத்தவள் மனதுக்குள் ஒரு அமைதி வந்தது. வெளியே வந்து அமர்ந்தனர், வளைகாப்பு பற்றிய விஷயங்களை பேசிக் கொண்டிருந்தனர்.

 

முடிந்தால் போகும் வழியிலேயே கண்ணாடி வளையல் போன்ற பொருட்களை வாங்கிச் செல்லலாம் என்று முடிவெடுத்து கிளம்பினர். ஏறும் போது தெரிந்த சோர்வும் பயண நேரமும், இறங்கும் போது குறைந்து போயிருந்தது.

 

சித்தார்த் அவர்களை அழைத்துக்கொண்டு வழியில் ஒரு கடையில் நிறுத்தி தேவையான சில பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றனர். அவர்கள் வீட்டிற்கு வந்து சேர எட்டு மணிக்குமேல் ஆகியது. கதவை தட்ட ஸ்ரீ வந்து கதவை திறந்தான்.

 

மகனுக்கு, மருமகளுக்கும் குங்கும பிரசாதம் இட்டுவிட்டு சாப்பாட்டை கவனிக்கச் சென்றார் ராதா, கூடவே தோழியர் பட்டாளமும் சென்றது அவருக்கு உதவி செய்ய. சித்தார்த் நேரமாகி விட்டதால் கிளம்பயத்தனித்தான். “சரி ஸ்ரீ நான் கிளம்பறேன்டா, மணியாகிடுச்சு என்றான்.

 

“எங்கடா போகப் போற, இப்போ நீ கிளம்பி போய் எப்ப வீட்டுக்கு போவ, நாளைக்கு நேரமா வந்து எப்படி வெண்பாவை கூட்டி போவ என்றான். “நான் இங்க தான் ரூம் எடுத்து தங்க போறேன், அதுக்கு ஏற்கனவே சொல்லிட்டேன் என்றான் சித்தார்த்.

 

“ஏன்டா, இவ்வளவு பெரிய வீடு இருக்கும் போது நீ ஏன்டா வெளிய தங்கப்போற, அதெல்லாம் ஒண்ணும் வேணாம், நீ இங்கேயே தங்கு என்றான் ஸ்ரீ. “ஹே அது சரியா வராதுடா, இங்க ஏற்கனவே நிறைய பேர் இருக்காங்க நீ வேற பேசாம இருடா நான் பார்த்துக்/கறேன் என்றான் சித்தார்த்.

 

“என்னடா கொழுப்பா உனக்கு, நீ என்கிட்டே அடி வாங்க போற, மரியாதையா இங்கேயே தங்கற. ஐஷு இங்க பாரும்மா உங்க அண்ணாவை கிளம்பறேங்கறான் வந்து என்னன்னு கேளு என்றான் ஸ்ரீ. “ஏய், ஏன்டா அவளை தொந்தரவு பண்ற, நான் இங்கயே தங்கறேன் போதுமா என்றான்.

 

“இவ்வளவு பெரிய வீடு இப்போது தான் நிறைஞ்சு இருக்கு, அது தான் எங்களுக்கு சந்தோசமே, நீ ஸ்ரீ அறைக்கு பக்கத்து அறையில படுத்துக்கோ சித்தார்த் என்றார் சந்திரசேகர்.

 

சித்தார்த் வெளியே சென்று காரை எடுத்து வந்து உள்ளே நிறுத்தி பூட்டினான். உள்ளே வந்தவன் கையில் சிறு பெட்டி இருந்தது, அறைக்கு சென்று இரவு உடைக்கு மாறி வெளியே வந்தான்.

 

அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு மேஜையில் அமர்ந்து உண்டனர். சித்தார்த் பார்வையாலேயே வெண்பாவை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சாப்பிட்டுவிட்டு  சிறிது நேரம் பேசிவிட்டு போய் படுத்தனர் அனைவரும்.

 

வெண்பா காலை ஏழு மணிக்கே அங்கு இருக்க வேண்டுமாதலால் ஐந்து மணிக்கே அலாரம் வைத்து எழுந்தாள். அலாரம் அடித்ததும் எழுந்தவள், காலை கடனை முடித்து குளித்து உடைமாற்றினாள்.

 

அவளுக்கு மிகப்பிடித்த வெள்ளை நிறத்தில் அடர்ந்த நீல நிறத்தில் மயில் தொகையுடன் சிறப்பான வேலைப்பாடுடன் அமைந்த சுடிதாரும், அதற்கு பொருத்தமாக நீல நிற துப்பட்டாவும் அணிந்தாள். கூந்தலை வாரி பின்னலிட்டாள்.

 

அவள் கிளம்பிக் கொண்டிருக்க, சுஜி எழுந்து வந்து அவளுக்கு வாழ்த்துக்கள் சொல்லி பரிசளித்தாள், இனியாவும் எழுந்து வந்து அவளுக்கு முத்தமிட்டு விட்டு பரிசளித்தாள். இருவருமே அவளுக்கு சுடிதார் வாங்கி பரிசளித்திருந்தார்கள்.

 

வெண்பாவுக்கு அவளின் பிறந்த நாள் அன்று என்பதே சுத்தமாக மறந்திருந்தாள். “எப்படிடீ, நீங்க, இதை வாங்கினீங்க, நாம் ஒன்றாகத்தானே இருந்தோம் என்றாள் வெண்பா ஆச்சரியத்துடன்.

 

“இதை சென்னையிலேயே வாங்கிவிட்டோம். இரவு தான் இருவருக்கும் நினைவு வந்தது இன்று உனக்கு பிறந்தநாள் என்று, உன் வேலை நல்லபடியாக அமைய மீண்டும் வாழ்த்துகிறேன் என்றாள் சுஜி. ராதா அவர்களுக்கு காபி கொண்டு வந்தார்.

 

இரவே ஸ்ரீ சொல்லியிருந்தான் வெண்பா காலையில் நேரமாக கிளம்பவேண்டும் என்று. எப்போதும் போல் அதிகாலையில் கண் விழித்தவர், மாடி அறையில் விளக்கெரியவும் அவர் காபி போட்டு கொண்டு வந்துவிட்டார்.

 

“நீங்க ஏம்மா கொண்டு வந்தீங்க, நாங்க கீழே வந்து வரமாட்டோமா என்றாள் சுஜி. “நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கேம்மா, உன் வேலை நல்லபடியா அமையும் என்று வாழ்த்தினார் ராதா.

 

“அம்மா அவளுக்கு இன்று பிறந்தநாள் அதற்கும் சேர்த்து வாழ்த்துங்க என்றாள் இனியா. “என்னம்மா நீங்க, இவ்வளவு லேட்டா சொல்றீங்க, நேற்றே சொல்லி இருக்கக் கூடாதா நான் ஒன்றுமே செய்யவில்லையே என்று வருந்தினார் அவர். “நீ வாம்மா என்று வெண்பாவை கீழே அழைத்துச் சென்றார்.

 

அதற்குள் சித்தார்த்தும் கிளம்பித் தயாராக இருந்தான், மாடியில் இருந்து ஒரு தேவதை போல் இறங்கி வந்தவளை கண்டு மயங்கி போனான். அப்போது தான் ஸ்ரீ கதவை திறந்து வெளியில் வந்தான். நண்பனின் பார்வை போன திசையை ஏறிட்டவன், அவளை பார்த்து “என்னம்மா இன்று என்ன விசேஷம் நீ ரொம்ப கலக்குற மாதிரி தெரியுது என்றான் கேலியாக.

 

பின்னாலேயே இறங்கி வந்த இனியாவும், சுஜியும் கோரஸாக “இன்று அவளுக்கு பிறந்தநாள் என்றனர். சித்தார்த்துக்கு அவள் அவனிடம் இது பற்றி கூறவில்லையே என்று உடனே மனம் சுனங்கினான்.

 

வெண்பா சித்தார்த்தின் முகம் மாற்றம் கவனித்து விட்டாள். அவனை பார்த்துக்கொண்டே “எனக்கே அது ஞாபகம் இல்லை, இவங்க வாழ்த்து சொல்லும் போது தான் எனக்கு ஞாபகமே வந்துச்சு. சாரி தப்பா எடுத்துக்காதீங்க என்றாள் அவள் பொதுவாக.

 

“ஏய் வாலுங்களா, நீங்க சொல்லி இருக்கலாமே எப்படி மறந்தீங்க என்றான் ஸ்ரீ. “ஊருக்கு கிளம்பி வரும் போது ஞாபகம் இருந்துச்சு, இங்க வந்ததும் எங்களுக்குமே மறந்து போச்சு.

 

“நேற்று அறைக்கு வந்து படுக்கும் போது தான் என் கைபேசியில் இவள் பிறந்தநாள் பற்றி பதிந்திருந்தேன், அலாரம் அடித்த போது தான் எனக்கே நினைவுக்கு வந்தது. அதன் பின் உங்களை தொந்திரவு செய்யமுடியாது இல்லையா, அது தான் காலையில் சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன் என்றாள் சுஜி.

 

ராதா அவளை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று அவளை வாழ்த்தி அவளுக்கு ஒரு பட்டு புடவை பரிசளித்தார். சந்திரசேகரும் அவளை வாழ்த்தினார். வெண்பா இருவர் காலிலும் விழுந்து எழுந்தாள். “என்னம்மா நீங்க எதுக்கும்மா இதெல்லாம் எனக்கு எங்க அம்மா, அப்பாவை நீங்க நினைவுபடுத்திடீங்க என்றாள் கலங்கிய விழிகளுடன்.

 

சரியாக அந்த நேரத்தில் அவள் கைபேசி சிணுங்க அவள் பெற்றோர் அவளை வாழ்த்துவதற்காக தான் போன் செய்திருந்தனர்.சாப்பிட்டுவிட்டு கிளம்புவதற்கு நேரமாகிவிட்டது. அனைவரிடமும் விடைபெற்று வெளியில் வந்தனர். சித்தார்த் காரை எடுத்து வெளியில் வைத்து அவளுக்காக காத்திருந்தான்.

மீண்டும் ஒரு முறை எல்லோரையும் பார்த்து தலையசைத்து விடைபெற்று காரில் ஏறி அமர்ந்தாள். ஸ்ரீ ஓடி வந்து சித்தார்த்தின் காதில் ஏதோ சொல்லிவிட்டு போனான். அதுவரை இறுகி இருந்த அவன் முகம் அப்போது தான் சற்று தெளிவாக இருந்தது.

 

காரை கிளப்பியவன் நேரே அவள் போக வேண்டிய இடத்துக்கு வண்டியை திருப்பினான். வழியில் எதுவம் பேசாமல் வந்தவனை ஏக்கத்துடன் பார்த்தாள் வெண்பா.

 

“சித்து என்கூட பேசமாட்டீங்களா, நான் வேணுமின்னு மறைக்கல, உண்மையிலேயே நான் இதை மறந்துட்டேன். நீங்க தான் அதை மறக்கடுச்சுட்டீங்களே. என்னையே நான் மறக்கறதுக்கு காரணம் நீங்க தான் சித்து. நேற்று நடந்த எதுவும் எனக்கு மறக்கவில்லை, அது மட்டுமில்லை அன்று காரில் நான் புடவை கட்டி வந்தபோது நீங்கள் என்னை ஒரு பார்வை பார்த்தீர்கள் அது இன்று வரை மறக்கவில்லை எனக்கு

 

“என்னிடம் நீங்கள் சரியாக பேசாத போதும்கூட எனக்கு உங்கள் மேல் அளவுக்கதிகமாக நேசம் பெருகியதே தவிர குறையவில்லை. சித்து, தயவுசெய்து ஏதாவது பேசுங்கள் என்றாள் அவள் கெஞ்சும் பார்வையில்.

 

வண்டியை நிறுத்தியவன் ஆள் காட்டி விரலால் அவள் விழி நீரை துடைத்துவிட்டான். பின் அவளை இழுத்து அவன் மேல் சாய்த்துக் கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்டு “என் தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றான் காதலுடன்.

 

“உன்னை நான் புடவையில பார்த்த அந்த நாள் எல்லாம் ஞாபகமா சொல்ற, உனக்கு அப்பொல இருந்தே என்னை பிடிக்குமா என்றவனிடம் “ச்சு போங்க தெரிஞ்சுகிட்டே கேட்குறீங்க, எனக்கு நேரமாச்சு போகலாம் என்றாள் அவள்.

 

“இப்படியெல்லாம் இனிமே என் முன்னே நீ அழக்கூடாது. என்னால தாங்க முடியாது. நானே உன்னை காலையில் பார்த்ததில் இருந்து மயங்கி போய் இருக்கேன். எப்படா உன்னை வெளிய கூட்டி வருவோம்னு இருந்துச்சு. சொல்லு உனக்கு என்ன வேணும் என்கிட்டே இருந்து என்றான்.

 

“எனக்கு நீங்க மட்டும் இருந்தா போதும் என்றவளை விட மனமில்லாமல் அவள் இதழ்களை தன்வசப்படுத்தினான் அவன். சில நிமிடங்களுக்கு பின் அவளை விடுவித்தவன் அவளை அலுவலகத்தில் விட்டுவிட்டு வெளியில் காத்திருக்கலானான்.

 

அவளுக்காக காத்திருந்தவன் தன்னை மறந்து அயர்ந்துவிட்டான். கனவில் அவளுடன் இன்ப உலா வந்தான்.திடிரென மணி அடிக்கும் சத்தம் கேட்டதும் விழிப்புற்றவனாக கைபேசியை எடுத்து “ஹலோ என்றான்.

 

“என்னங்க எங்க இருக்கீங்க, நான் வந்த வேலை முடிஞ்சுது, நாம கிளம்பலாமா என்றாள். “நான் உன்னை எங்கு இறக்கிவிட்டேனோ, அதே இடத்தில் தான் காத்திருக்கிறேன் நீ வெளியே வா என்றான் சித்தார்த்.

 

மகிழ்ச்சியுடன் வெளியே வந்தவள், அவனை நோக்கி நடந்தாள். அருகினில் வந்து உள்ளே ஏறி அமர்ந்தாள். அப்போது தான் கைகடிகாரத்தை கவனித்தவன், “நீ இரண்டு மணி நேரம் கழித்தா வருகிறாய். பார் வெண்பா நான் நன்றாக உறங்கிவிட்டேன். கனவில் உன்னுடன் தான் உலா வந்தேன்.

 

“இது போல் நான் தூங்கி எனக்கு கனவு வந்ததில்லை. எனக்கு இந்த தூக்கமும் கனவும் பிடித்திருக்கிறது, உன்னையும் தான் என்றான் அவளை பார்த்து கண் சிமிட்டியவாறே.

 

காரை கிளப்பியவன் நேரே பொள்ளாச்சிக்கு காரை செலுத்தினான். அவளுக்கு பசிக்குமென்று கூறி ஆங்காங்கே காரை வழியில் நிறுத்தி அவளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்துக் கொண்டே வந்தான்.

 

அவர்களின் அந்த பயணம் அவர்களுக்கு என்றுமே மறக்க இயலாததாக இருந்தது. அவர்கள் ஐஸ்வர்யாவின் வீட்டை அடையும் போது நேரம் பகல் வேளையை தொட்டிருந்தது.

 

வாசலில் அரவம் கேட்டு உள்ளேயிருந்து வெளியே வந்த பெண்மணி நடுத்தர வயதை தாண்டியவர் வந்தார். சித்தார்த்தை கண்ட அவருடைய முகத்தில், மகிழ்ச்சி, இயலாமை, கோபம் என்று பலவித உணர்சிகள் வந்து போனது.

 

அவள் காதருகே குனிந்து “இவர்கள் ஒருவகையில் என் உறவினர் தான், ஆனால் தூரத்து உறவினர் என்றான். “என் அக்காவின் திருமணத்தில் தான் ஸ்ரீ ஐஸ்வர்யாவை பார்த்தது, கண்டதும் காதலாகி போனார்கள் என்று கதை சொல்ல ஆரம்பித்தவன் பாதியில் நிறுத்தினான்.

 

“சரி வா, உள்ளே போகலாம், சித்தி நம்மையே முறைச்சு பார்க்கறாங்க என்றான். “வாப்பா சித்தார்த், உள்ளே வா, வாம்மா, வீட்டில் எல்லாரும் சுகமா. அம்மாவுக்கு உடம்பு எப்படி இருக்கு என்றார் அவர்.

 

தன் மகளை பற்றி கேட்க நினைத்தவர், அதை மட்டும் விட்டுவிட்டு மற்ற அனைவரையும் விசாரித்தார். ஏனெனில் ஐஸ்வர்யாவின் தந்தை வீட்டில் தான் இருந்தார். கோபத்தில் மகளை தலைமுழுகி விட்டதாக கூறிவிட்டு உள்ளுக்குள் அவளை நினைத்து அவள் அன்னை மறுகாத நாளில்லை. சித்தார்த் அவருக்கு பதில் கூற அவர் நினைவுகளில் இருந்து விடுபட்டார்.

 

“அம்மா, அக்கா, மாமா, பசங்க எல்லாரும் ரொம்ப நல்லா இருக்காங்க. அம்மாவுக்கு இப்ப உடம்பு பரவாயில்லை சித்தி. அவர்களை உள்ளே அழைத்து சென்று அமர வைத்தார் ஐஸ்வர்யாவின் தாய் மரகதம். உள்ளே சென்று கணவரை அழைத்து வந்தார்.

 

வந்தவர்களை ஏற இறங்க பார்த்துவிட்டு தன் கண்ணாடியை சரி செய்துக் கொண்டார். “வாப்பா சித்தார்த் என்றார் சம்பிரதாயமாக. வெண்பாவை ஏற இறங்க பார்த்துவிட்டு கேள்வியுடன் நோக்கினார்.

 

“இவங்க பேரு வெண்பா, ஸ்ரீயோட தூரத்து சொந்தம், தங்கை மாதிரின்னு வைச்சுகோங்க என்றான். “இதெல்லாம் எதுக்குப்பா என்கிட்ட சொல்லற என்றார் ஐஸ்வர்யாவின் தந்தை நடராஜன்.

 

“ரொம்ப சரி தான் சித்தப்பா, உங்களுக்கு தான் உங்க மகளே வேண்டாம் அவங்களையே யாரோன்னு முடிவு பண்ணிட்டீங்க, இவங்கள பத்தி நீங்க தெரிஞ்சுக்கணும்னு நினைப்பீங்களா என்றான் எகத்தாளமாக.

 

சட்டென்று அவருக்கு கோபம் எழுந்தது, “நாங்க ஏன் அவளை பற்றி நினைக்கணும் நாங்க வேணாம்னு முடிவு பண்ணிட்டு என்று அவள் சென்றாளோ அன்றே நாங்கள் அவளை தலை முழுகிவிட்டோம் என்றார் அவர் வேதனை கலந்த கோபத்தில்.

 

“நீ எதுக்குடா இங்க வந்த, அவளை பற்றி பேசி என்னை என் கோபத்தை அதிகமாக்காவா. என்னை உதாசீனப்படுத்திட்டு போனவளை பற்றி நாங்க ஏன் நினைக்கணும் என்று ஆவேசமாக பேசினார்.

 

“அம்மா, அப்பா யாரும் வேணாம் அவ சந்தோசம் தான் முக்கியம்னு போனாளே. அவளை நாங்க எதுக்கு நினைக்கணும். அவளை நாங்க என்னைக்கோ தலைமுழுகியாச்சு என்றவர் வார்த்தைகளை அள்ளி தெளித்தார்.

 

வெண்பா மரகதத்தை பார்த்தாள். அவரின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டவுடன் மனம் தாளாதவளாக எழுந்து சென்று அவரை அணைத்து ஆறுதல்படுத்தினாள். அவர் கண்ணீரை துடைத்துவிட்டாள். அதே வேகத்தில் திரும்பி ஐஸ்வர்யாவின் தந்தையை நோக்கி கேள்விகளை அடுக்கினாள்.

 

“என்ன சார் என்ன பிரச்சினை உங்களுக்கு, ஏன் தலை முழுகிட்டோம்ன்னு சொன்னீங்க. எப்படி அப்படி ஒரு வார்த்தை சொன்னீங்க. நீங்க தலை முழுகிட்டா அவங்க உங்க பொண்ணு இல்லன்னு ஆகிவிடுமா அல்லது நீங்கள் தான் பெற்றவர் இல்லை என்று ஆகிவிடுமா. இந்த ஜென்மத்தில் நீங்கள் தான் அப்பா, ஐஸ்வர்யா தான் உங்கள் மகள் இது என்றுமே மாறப்போவதில்லை.

 

“ஒருவேளை உங்க பொண்ணு நீங்க தான் முக்கியம்னு சொல்லி ஸ்ரீ அண்ணனை மறக்க முடியாம வேற எதாச்சும் விபரீத முடிவு எடுத்து இருந்தா என்ன செய்து இருப்பீங்க. அப்படி நடந்திருந்தா அய்யோ, அம்மான்னு வருத்தப்பட்டு இருப்பீங்க தானே.

 

“அதுக்கு அப்புறம் ஒருவேளை அவங்க விரும்புன வாழ்க்கை அமைச்சு குடுத்திருக்கலாமேன்னு அதையே நினைச்சு கண்ணீர் வடிச்சு இருப்பீங்க. அப்படித்தானே சார் என்றாள்.

 

அவள் பேச்சில் இருந்த நிதர்சனம் அவரை யோசிக்க வைத்தது. தன் மகள் தவறான முடிவெடித்திருந்தால், அப்படி நினைக்கவே அவருக்கு முடியவில்லை. அவருக்கு கோபமாக வந்தது, ‘என்னவெல்லாம் பேசுகிறாள் இந்த பெண், யாரோ இவள், நம்மை கேள்வி கேட்பதா என்ற வீம்பு மனதில் எழ அவளை ஏறிட்டு பதில் கூற ஆரம்பிக்கும் முன்னே அவள் மீண்டும் தொடர்ந்தாள்.

 

“என்ன சார் இவ யாரோ எவரோ இவள் யார் என்னை கேள்வி கேட்க என்று தானே நினைக்கிறீர்கள் என்றாள் அவர் மனதை படித்தவளாக. கண்களில் ஆச்சரியத்துடன் அவளை நோக்கினார். ‘இவள் மிகவும் புத்திசாலி, என் முகத்தை வைத்தே நான் நினைப்பதை சொல்லுகிறாளே என்று நினைத்தார்.

 

“ஐஸ்வர்யா எனக்கு யாரோ தான் ஏன் நீங்க, அம்மாகூட எனக்கு யாரோ தான் அவங்க இப்படி நிலைமையில இருக்கும் போது யாரோவான எனக்கே உருகுதுனா பெற்ற தாய்க்கு எப்படி இருக்கும்ன்னு எனக்கு நல்லா புரியும். ஏன்னா நாங்க எல்லாரும் ஒரே இனம் பெண் இனம். எங்கள் கவலைகளை பற்றி என்றுமே நீங்கள் புரிந்து கொள்ளப் போவதில்லை.

 

மரகதம் அவளை ஏறிட்டார். ‘இவள் என்ன சொல்லுகிறாள், என் மகளுக்கு என்னவாயிற்று என்று அவர் மனம் பதறியது. அவரின் கலக்கம் உணர்ந்தவளாக அவளே அதற்கும் பதில் கூறினாள். “பதறாதீங்கம்மா, உங்க பொண்ணு மாசமா இருக்காங்க இது அவங்களுக்கு ஏழாவது மாதம் என்றாள்.

 

ஒரு கணம் மனம் மகிழ்ச்சியுற்றவர் முகம் உடனே வாடியது, மகளை எப்படி பார்க்க முடியும் என்ற வேதனையில். நடராஜருக்கு உள்ளம் உருகியது எனினும் அதை வெளிக்காட்டாதவராக விரைப்புடனே நின்றார்.

 

“ஒரு பெண்ணா என்னால அம்மாவோட கஷ்டமும், ஐஸ்வர்யாவோட கஷ்டமும் புரியுது. ஆனா பெற்ற தகப்பனா ஒரு கணவனா ஏன் உங்களுக்கு உங்க மகளையும் மனைவியையும் புரியாம போச்சு என்றாள். “நமக்கு கிடைச்ச இந்த வாழ்கையில மனசுக்கு பிடிச்சவரோட வாழ்றதுலதான ஒரு அர்த்தம் இருக்கும். உங்க பொண்ணு செஞ்ச பெரிய தப்பு என்ன தெரியுமா என்று நிறுத்தினாள்.

 

‘என்னடா இவ இப்பதான் என்னை போட்டு தாக்கினாள். இப்போது என்னவென்றால் இவள் நம் மகளையும் குறை கூறுகிறாளே இவள் என்ன தான் சொல்ல வருகிறாள் என்று அவளை ஏறிட்டார். சித்தார்த்தும் யோசனையாய் அவளை நோக்கினான். அவள் பேசுவதை அவனும் வாய் பேசாமல் மௌனித்து கேட்டுக்கொண்டிருந்தான்.

 

“அவங்க உங்க கூடவே இருந்து போராடி இருக்கணும், உங்க மனசை மாற்றி உங்க ஆசிர்வாதத்திலே அவங்க கல்யாணம் செஞ்சு இருக்கணும். இதுனால இப்போ யாருக்கு கஷ்டம். உங்களுக்கு, உங்களை மீறி வந்துட்டோம்னு தினமும் வேதனை படுற ஐஸ்வர்யாவுக்கு, அதை தினமும் பார்க்கும் ஸ்ரீ அண்ணாவுக்கும், அவங்க குடும்பத்துக்கும் கூட வேதனை தான் என்றாள்.

 

“உங்களுக்கு உங்க பொண்ணு மேல உண்மையான அன்பிருந்தா, பாசமிருந்தா நீங்க ஒண்ணு செய்யணும் என்றாள்.என்ன என்பது போல் அவளையே பார்த்தனர் ஐஸ்வர்யாவின் பெற்றோர். “உங்க பொண்ணுக்கு நாளை மறுநாள் வளைகாப்பு அதுக்கு நீங்க வரணும் என்றாள் சற்றே குரலை இறக்கி.

 

“வரவில்லை என்றால் என்றார் நடராஜன். “ஹ்ம்ம் அதுவே சொல்லிவிடும் உங்கள் மகளின் மேல் உங்களுக்கு இருப்பது பாசாமா அல்லது வேஷமா என்று என்றாள்.

 

நடராஜருக்கு வெண்பாவை மிகவும் பிடித்துவிட்டது. பேசியே கரைத்த அவளை ஒரு பரிவுடன் பார்த்தார். இத்தனை நாட்களாக மகளுக்காக ஏங்கியவரின் ஏக்கத்துக்கு ஒரு முற்று புள்ளி வைத்துவிட்டாள். வெளிப்படையான அவள் பேச்சு இருபக்க மனநிலையும் பிட்டுபிட்டு வைத்து அவள் கேள்வி கேட்டது எல்லாமுமாக அவரை ஈர்த்தது.

 

தன் மகள் ஒரு வாரிசை சுமக்கிறாள் என்று தெரிந்ததுமே உள்ளுக்குள் உருக ஆரம்பித்தவரை வெண்பாவின் பேச்சு முற்றிலுமாக கரைத்துவிட்டது. தன்னை பற்றி மட்டுமே யோசித்தவர், தன் மனைவின் மனநிலை பற்றி யோசிக்காமல் இருந்துவிட்டதை நினைத்து வருந்தினார். பிள்ளை பாசத்தில் அவர் உருகி தவிப்பது புரிந்தது. எனினும் எதுவும் பேசாமல் அவர் மௌனியாகவே இருந்தார்.

 

அதற்கு மேலும் பொறுக்க மாட்டாதவளாக மீண்டும் ஒருமுறை அவர்களிடம் நயமாக பேசிப்பார்த்தாள். சித்தார்த்தும் கேட்டு பார்த்துவிட்டான், அவர் வாயே திறக்கவில்லை. திரும்பி மனைவியை ஒரு பார்வை பார்த்தார் அர்த்தத்துடன். “கிளம்பலாம் வாருங்கள், இவர்கள் வராவிட்டால் வளைகாப்பு நடக்காதா, வாருங்கள் நாம் போய் ஆக வேண்டிய வேலைகளை பார்ப்போம் என்று அழைத்தாள் அவள்.

 

அப்போது ஒரு குரல் அவர்களை ஆச்சரியப்படுத்தியது……….

 

அத்தியாயம் –14

 

அந்த குரலுக்கு சொந்தக்காரர் ஐஸ்வர்யாவின் தந்தை நடராஜர் தான். “ஏம்மா, நாங்களும் உங்க வேலைகளை பகிர்ந்துக்கலாம் தானேஎன்றார்அவர். “சித்தப்பாநிஜமாகவா சொல்கிறீர்கள்என்றான்சித்தார்த்.

 

“என் மக மேல எனக்கு இருக்கறது உண்மையான அன்பு தான் சித்தார்த். தப்பு தான் அவர்கள் என்னிடம் வந்து ஆசிர்வாதம் வாங்க வந்த அன்று நான் அவர்களை விரட்டிவிட்டேன்.

 

“ஏதோ கோபம், நான் அப்படியே இருந்து விடுவேனா. போதும் இத்தனை நாட்கள்ல ஒரு நாள் ஒரு முறை அவ எங்ககிட்ட பேசியிருந்தாலோ, பார்த்து இருந்தாலோ அன்றே நான் மாறி போயிருப்பேனோ என்னவோ. இப்போவாச்சும் ஒத்துக்கறியாம்மா என் பொண்ணு மேல எனக்கிருக்கறது உண்மை அன்பு தான்னு

 

“எனக்கு கோபம் அவள் இஷ்டப்படி திருமணம் செய்ததில், என்னால தலை நிமிர்த்து வெளிய நடக்க முடியல. என் மகளோட பிரிவு என்னை ரொம்பவே வாட்டியது, நானே சென்று பார்த்து இருக்கலாம், என்னுடைய சுயகௌரவம் அதை தடுத்துவிட்டது.

 

“நான் இப்போது அளவில்லா சந்தோசத்தில் இருக்கிறேன். என் வம்சம் தழைத்துவிட்டது. இதற்கு மேலும் என் மகளை பார்க்காமல் இருந்தால் நான் மனிதனே அல்லஎன்றார்மிகவும்உணர்ச்சிவசத்துடன்.

 

“சொல்லுங்க என் மகள் வளைகாப்புக்கு நான் என்ன செய்ய வேண்டும், மரகதம் பீரோவில் இருக்கும் பணத்தைக் கொண்டு வா. நாம் ஜவுளி கடைக்கு செல்லலாம், நம் மகளுக்கு பட்டு புடவை எடுக்கஎன்றார்அவர்.

 

மரகதத்திற்குஉற்சாகம்தாங்கவில்லை, வெண்பாவைஅணைத்துமுத்தமிட்டார், சித்தார்த்திற்குநன்றிகூறினார். கணவரை உணர்ச்சிப் பெருக்கோடு நோக்கினார்.“சரி அவங்களை பார்த்துட்டு இருந்தா எப்படி, முதல்ல அவங்களை உட்காரவைச்சு சாப்பாடு போடு, சாப்பிட்டு கடைக்கு கிளம்பலாம்என்றார்அவர்.

 

ஐஸ்வர்யாவின்பெற்றோர்உள்ளேசெல்லகிடைத்ததனிமையில்வெண்பாவைபாராட்டினான்சித்தார்த். வெண்பாவும் உள்ளே சென்று மரகதத்திற்கு உதவி புரிந்தாள். அவர்கள் சாப்பிட்டு விட்டு புடவை எடுக்கச் சென்றனர்.

 

ஐஸ்வர்யாவின் பெற்றோரே மகளுக்கான புடவை, மருமகனுக்கு துணிமணி என்று சளைக்காமல் எடுத்தனர். சித்தார்த் மேலும் சில புடவைகளை எடுக்கச் சொன்னான். புடவை எடுத்து பில்லுக்கு பணம் கொடுத்துவிட்டு வெளியே வந்தனர்.

 

அப்போது நடராஜரின் கைபேசி அழைக்க அவர் எடுத்துப் பேசினார். ஸ்ரீயும் அவன் பெற்றோருமே பேசினார். அவர்களை வளைகாப்புக்கு  வரச் சொல்லி அழைப்பு விடுத்தனர். நேரில் வந்தால் ஏதும் தர்ம சங்கடம் ஆகிவிடுமோ என்று நினைத்து வராமல் விட்டதாகக் கூறி மன்னிப்பு கேட்டனர்.

 

மனைவியிடம் பேசச்சொல்லி குடுத்துவிட்டு கண்டிப்பாக வருவதாகக் கூறி போனை அணைத்தார். “என்னடா சித்தார்த் இதெல்லாம் உன் வேலை தான்என்றுசெல்லமாககடிந்துகொண்டார். பிறகுநகைக்கடைக்குச்சென்றுஐஸ்வர்யாவுக்குநெக்லஸ், வளையல், காப்பு என்று வாங்கினார்கள் அவர்கள்.

 

தேவையான அனைத்தும் வாங்கிக்கொண்டு காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தனர். அவர்களை இறக்கிவிட்டு சித்தார்த்தும் வெண்பாவும் கிளம்புகையில் ஐஸ்வர்யாவின் பெற்றோர் உள்ளே வருமாறு அழைத்தனர். மறுக்கமுடியாமல் உள்ளே சென்றனர். ஐஸ்வர்யாவுக்கு விசயம் தெரியாது, இது அவளுக்கு சர்ப்ரைஸாக இருக்க வேண்டும் என்று கூறி அவர்களுக்கு நினைவு படுத்தினான் அவன்.

 

“அது தான் மாப்பிள்ளை சொல்லிவிட்டாரே நீ வேற ஏன்டா, அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்என்றார்அவர். மரகதம்வெண்பாவிடம்ஒருகோரிக்கைவைத்தார். “ஏம்மா வெண்பா எங்க பொண்ணுக்கு நாத்தனாரா இருந்து அவளுக்கு நீ தான் வளைவி போட்டு விடணும்என்றார்அவர். வெண்பாவுக்குபேசநாயேழவில்லை.

 

“சித்தி நீங்க கவலையேபடாதீங்க, கண்டிப்பா அதை இவ தான் செய்வா. ஐஸ்வர்யா எனக்கு தங்கைனா இவ தானே அந்த சீரை செய்யனும்என்றான்சித்தார்த். வெண்பாவிற்கு வெட்கமாக போய்விட்டது, இப்படி பட்டென்று போட்டு உடைத்து விட்டானே என்று முகம் சிவந்து போனாள்.

 

“நான் நினைச்சேன்டா பயலே நீ இப்படி எதாச்சும் சொல்வியோன்னு, வீட்டில சொல்லிட்டியாஎன்றார்அவர். “அவங்கசம்மதம்தெரிஞ்சபிறகுதான்இவகிட்டஎன்விருப்பத்தை நான் சொன்னேன். இப்பவே எங்க அம்மாவுக்கு இவளை ரொம்ப பிடிச்சு போச்சுஎன்றான்சித்தார்த்பெருமையுடன்.

அவர்கள் அங்கிருந்து கிளம்ப மணி ஐந்தை நெருங்கி இருந்தது. அவசரமாக விடை பெற்றவர்கள் இன்னும் சில வேலைகளை அவர்களுக்கு கொடுத்துவிட்டுச் சென்றனர். சடை, பூ, மாலை இதெல்லாம் அவர்கள் வரும்போது வாங்கி வர சொல்லியிருந்தனர். அவர்களை வாழ்த்தி வழியனுப்பினர் ஐஸ்வர்யாவின் பெற்றோர்.

 

வெண்பா அவர்களிடம் விடைபெற்று வெளியே வரும்போது சித்தார்த் யாருடனோ கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தான். “வெண்பா கிளம்பலாமா, வண்டியில ஏறுஎன்றுகூறி காரை கிளப்பியவன் ஒரு பத்து நிமிட பயணத்தின் பின் ஒரு வீட்டின் முன் காரை நிறுத்தினான்.

 

“என்னங்க இது என்ன இடம், யார் வீடு நாம எதுக்கு இங்க வந்து இருக்கோம்என்றுகேள்விகளைஅடுக்கினாள்வெண்பா. “உள்ளேவாசொல்கிறேன்என்றான்அவன், தயங்கியவாறேஉள்ளேநுழைந்தாள் அவள்.

 

அவளை அங்கு பக்கவாட்டில் இருந்த ஒரு அறைக்கு உள்ளே கூட்டிச் சென்றான். ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் கட்டிலில் படுத்து இருந்தார். ‘ஒரு வேளை இவர் தான் சித்தார்த்தின் தாயாரோஎன்றுமனதுள்எண்ணிக்கொண்டுஇருந்தாள்.

 

அவரை பார்த்தவுடன் கைகள் தன்னை அறியாமலே கூப்பியது. “அம்மா நீங்க பார்க்கணும் சொன்னீங்களே, அதான்மா நான் உங்க மருமகளை வீட்டுக்கு கூட்டி வந்து இருக்கேன். நல்லா பார்த்துக்கோங்கஎன்றான்.

 

அவர்கள்இருவரும்சேர்ந்துநிற்பதைபார்த்துமனம்குளிர்ந்தவர்அவளைஅருகேஅழைத்துஉச்சிமுகர்ந்தார். அவர் அருகில் சென்று கட்டிலில் அமர்ந்தாள் அவள். “சொல்லுங்க அத்தை, உங்களுக்கு இப்ப உடம்பு சுகம் தானேஎன்றுவிசாரித்தாள்.

 

“நான்நல்லஇருக்கேன், உன்னைபார்த்ததுலஎன்சந்தோசம்பலமடங்குகூடிபோச்சு. என்னுடையகவலைஎல்லாம்இவனைபற்றிதான்இருந்தது,

 

உன்னைபார்த்தபிறகுஎனக்குஇவனைபற்றிகவலைஇல்லாமல் போய்விட்டது. இனி எங்க சித்தார்த் உன் பொறுப்புமா. எனக்கு பிறகு நீ தான் அவனுக்கு எல்லாமேஎன்றார்அவர்நெகிழ்ந்தகுரலில்.

 

அவர் கண்களாலே சித்தார்த்தை அழைக்க அருகே சென்றான் அவன். அவன் காதில் அவர் ஏதோ கூற வெளியே சென்றவன் கையில், ஒரு சிறு நகை பெட்டியும், குங்கும சிமிழும் இருந்தது.

 

சித்தார்த்தின் தாய் குங்குமம் எடுத்து அவள் நெற்றியில் வைக்கச் சொன்னார். நகைபெட்டியில் இருந்த மோதிரத்தை வெளியில் எடுத்தார் அதையும் அவன் கையில் கொடுத்து வெண்பாவுக்கு அணிவிக்குமாறு கூற அவனும் அவ்வாறே செய்தான்.

 

இதைக் கண்ட அவர் மனமும் முகமும் ஒருசேர மலர்ந்தது. இதை வேண்டாம் என்று கூற வெண்பாவும் முயலவில்லை. அவள் நெகிழ்ந்த மனநிலையில் இருந்தாள்.

 

அவரிடம் குங்கும சிமிழை நீட்டி வைத்து விட சொன்னாள், தான் அது போல் வைக்கக் கூடாது என்று அவர் கூற வெண்பா பிடிவாதமாக வைத்து விடச்சொல்லி அவரிடம் ஆசிர்வாதம் பெற்றாள்.

 

கிளம்பும்முன் அவரின் பாதங்களை இருவருமே தொட்டு வணங்கி பின் விடை பெற்றுச் சென்றனர். காரில் ஏறியதில் இருந்து வெண்பா எதுவுமே பேசவில்லை. இந்த நாளை தங்கள் வாழ்வில் என்றுமே மறக்க முடியாது என்ற எண்ணம் ஒரு சேர இருவர் உள்ளத்திலும் தோன்றியது.

 

கையை அவள் பக்கம் நீட்டி அவளை அருகே அழைத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டான் அவன். “நாம உங்க வீட்டிற்கு போகப் போவதை ஏன் முன்னமே என்னிடம் கூறவில்லைஎன்றாள்அவள்.

 

“எனக்கேஅதுமுதலில்தெரியாதுவெண்பா. மாமாதான்உன்னைபார்த்துவிட்டுவந்ததுமுதல்அதுபற்றிஅம்மாவிடம்கூறியிருக்கிறார். அம்மாவுக்கு அது முதல் உன்னை நேரில் பார்த்தே ஆக வேண்டும் என்று மாமாவிடம் கூறியிருக்கிறார். மாமா எனக்கு நாம் நகைக்கடையில் இருக்கும் போது தான் போன் செய்து விஷயத்தை கூறினார்.

 

“ஆமா உங்க அக்கா, மாமாவை நாம் பார்க்காமல் வந்துவிட்டோமேஎன்றாள்அவள் வருத்ததுடன். “அவர்கள் கோயிலுக்கு சென்று விட்டார்கள், அதுமட்டுமில்லாமல் அக்காவுக்கு நீ இது போல் திருமணத்திற்கு முன்பே நம் வீட்டிற்கு வருவது பிடிக்காது. அது தான் மாமா அவளை கோவிலுக்கு அழைத்துச் சென்று விட்டார்என்றான்.

 

வால்பாறையை அடைந்தவுடன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினான். “என்னங்க வண்டியை நிறுத்திட்டீங்க ஏதாவது பிரச்சினையாஎன்றாள்வெண்பா. “உன்கிட்டகொஞ்சம்மனசுவிட்டுபேசணும், அதுக்குதான்இப்பவண்டியைநிறுத்தினேன்என்றான்அவன். “சொல்லுங்கஎன்றாள்அவள்.

 

“இந்த வருடத்துடன் உன் படிப்பு முடியப் போகுது, நீ ஆசைப்பட்ட மாதிரி நீ வேலைக்கும் போகப் போற. நீ ஊருக்கு போனதும் உன் கல்லூரி தேர்வுகள் ஒரு இரண்டு மாதத்தில் தொடங்கிவிடும். நீ நன்றாக படிக்க வேண்டும், உன் படிப்பு முடியும் வரை நான் உன்னை எந்த விதத்திலும் தொந்திரவு செய்ய மாட்டேன். எப்போதாவது போன் செய்வேன் அவ்வளவு தான். என்னால் உன் படிப்பு கெடக்கூடாது என்று தான் இது நாள் வரை உன்னிடம் என் காதலை சொல்லாமல் இருந்தேன்.

 

“உன் மனம் புரியாமல் காத்திருக்க என்னால் இயலவில்லை, உன் மனம் புரிந்தால் எவ்வளவு வருடங்கள் ஆனாலும் காத்திருக்கலாம் என்று தோன்றியது. அதனால் தான் நான் உன்னிடம் காதல் சொன்னேன்.

 

“இதுவரை என் காதலாக உணரப்பட்டது, இப்போது நம் காதலாகி போனதில் என் மனம் இறக்கையில்லாமல் பறக்கிறது. ஆனால் ஒன்று இந்த ஜென்மத்தில் நீ தான் என் மனைவி, காதலி எல்லாம். இந்த கைகள் உன் கழுத்தில் மாலையிடுவதற்கும், தாலி கட்டுவதற்கும் மட்டுமே காத்திருக்கின்றனஎன்றான்அவன்.

 

அவன் ஆழ் மன உணர்வுகளை ஒளியாது அவளிடம் கொட்டினான். அவள் எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்து இருந்தாள். அவன் வார்த்தைகளில் நெகிழ்ந்து போய் கண் கலங்கினாள்.

 

“ஏய் என்ன இப்ப எதுக்கு கண் கலங்குற, நான் இப்போ என்ன சொல்லிட்டேன்என்றான்அவன். அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடைய அந்த கண்களால் அவள் வசீகரிக்கப்பட்டாள்.

 

அவளின் பார்வையில் தெரிந்த வித்தியாசம் கண்டு அது பேசும் காதல் மொழி கண்டு அவனும் பதிலுக்கு அவளை சளைக்காமல் பார்த்தான். அவனுடைய பார்வையை கண்டவளுக்கு அதற்கு மேல் அவனை பார்க்க முடியாமல் அவள் பார்வையை தழைத்துக் கொண்டாள்.

 

“என்னடி அப்படி முழுங்கற மாதி பார்த்துட்டு இப்போது தலையை குனித்துக் கொள்கிறாயே, என்ன விஷயம்என்றான். “உங்களுடையகண்களைஎன்னால்நேருக்குநேர்நோக்கமுடியவில்லை. “ஏன்என்றான். “அந்தபார்வைஎன்னைகாந்தமாக இழுக்கிறதுஎன்றாள்அவள்ஒளியாமல். “வெண்பாஎன்றான். “இம்ம்ம்ம்என்றாள்அவள்.

 

எல்லா காதலர்கள் போல் அவன் வழக்கமான கேள்வியை அவளிடம் கேட்டான். “நாம இப்பவே கல்யாணம் செஞ்சுக்கலாமாஎன்றான். அவளிடம்பதில்இல்லை, மௌனமாகஅமர்ந்துஇருந்தாள்.

 

அவள்முகம்பார்த்தபின், “சாரி வெண்பா, நானே உன் படிப்பு முடியனும் சொல்லிட்டு இப்ப போய் இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டேன். ஸ்ரீ எத்தனையோ முறை சொல்லியிருக்கிறான், ஐஷுவை இப்பவே கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்துடணும்னு அப்போவெல்லாம் நான் அவளுக்கு ரொம்ப அறிவுரை எல்லாம் கூறினேன்.

 

“அப்போது அது முட்டாள்தனமாக கூட இருந்தது. எனக்கும் அது போல் சூழல் அமையும் என்று நான் நினைக்கவில்லை. அதே முட்டாள்தனமாக நானும் உன்னிடம் கேட்டுவிட்டேன்.“மன்னித்துக் கொள் கண்மணிஎன்றான். அவள்மனம்உருகினாள், தனக்காகதான்அவன்தணிந்துபோகிறான்என்றுஉணர்ந்தவளாக அதை விடுத்து வேறு பேசலானாள்.

 

“என்னங்க நாம் சீமந்தத்திற்கு போவோமா, இல்லையாஎன்றாள். “என்னவெண்பாநீஇப்படிகேட்டுட்ட, அதுநம்வீட்டுவிழாஎன்மனைவிஸ்தானத்தில்இருந்துஐஸ்வர்யாவிற்குநீதான்அண்ணியாஇருந்துசீர்செய்யவேண்டும், இப்போதுபோய்இப்படிகேட்கிறாயேஎன்றான் அவன்.

 

“எனக்கு அப்படி தெரியவில்லைஎன்றாள்அவள்நம்பிக்கையில்லாமல். “எதைவைத்துஅப்படிசொல்கிறாய்என்றான்அவன். “இல்லஇப்படிவழியில்காரைநிறுத்திபேசிக்கொண்டுஇருக்கிறீர்களே. நாம்எப்போதுவீட்டிற்குபோவோம்என்றுயோசித்தேன். அதுதான்அப்படிஒரு கேள்வியை கேட்டேன்என்றாள்.

 

சற்றே அசடு வழிந்தவனாக “உன்னிடம் பேசிக் கொண்டிருக்க எனக்கு ஆசை தான், ஆனால் நீ சொன்னதிலும் உண்மை இருப்பதால் நாம் கிளம்பலாம்என்றான்.

 

“ஒருநிமிடம்என்றுகூறிஇறங்கிபின்இருக்கையில்இருந்துஒருபெட்டியைஎடுத்துவந்தான். அவளிடம் கொடுத்துவிட்டு அவள் நெற்றில் இதமான முத்தமொன்றை வைத்து அவளுக்கு மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினான்.

 

“என் இனியவளுக்கு பிறந்த நாள் பரிசுஎன்றான். பிரித்துபார்த்தவள்பிரமிப்பில்ஆழ்ந்தாள். அழகியபட்டுபுடவைஇருந்தது, அதுவும்அவளுக்குபிடித்தஇளம்பச்சை வண்ணத்தில். அவனுக்கு மனமார நன்றியுரைத்தாள்.

 

“ப்ச்ஏமாத்திட்டவெண்பா, பாராட்டைவெறும்வாய்வார்த்தையில்கூறிவிட்டால்போதுமா, வேறுஎதுவும்இல்லையாஎன்றான்ஏக்கத்துடன். “அதெல்லாம்அப்புறம்தான், இப்போதுகிளம்பலாமாஎன்றாள்.

 

“அப்புறம்ன்னாஎப்போநானாஎடுத்துகிட்டா நல்லா தான் இருக்கும், ஆனா நீயா குடுத்தா அதுல ஒரு போதை இருக்கும்என்றான் கிறங்கிய குரலில். “இப்படியேபேசிட்டுஇருந்தாஉங்களுக்குஉதைதான்இருக்கும்என்றாள். இம்மென்றுஏக்கப்பெருமூச்சுடன்காரைகிளப்பினான்.

 

அவர்கள் வீட்டை நெருங்குகையில் மணி பத்தை நெருங்கிவிட்டது. ஸ்ரீ வேறு போன் மேல் போன் போட்டு எங்கிருக்கிறாய், எப்போது வருவாய் என்று கேட்டுக் கொண்டே இருந்தான். ஸ்ரீ கவலையுடன் நேரத்தை பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தான்.

 

தன்னால் அவர்களுக்கு ஏதும் சிரமம் ஆகிவிடக்கூடாதே என்று கவலையுற்று காத்திருந்தான் அவர்கள் வருகைக்காக. ஐஸ்வர்யாவிற்கு சந்தேகம் வராமல் சமாளித்துவிட்டு அவளை தூங்கச் செய்துவிட்டு வந்து இருந்தான்.

 

அப்போது சித்தார்த்தின் கார் உள்ளே நுழைய ஸ்ரீ நிம்மதி பெருமூச்சு விட்டான். காரின் பின் இருக்கையில் இருந்து ஒவ்வொரு பையாக எடுத்துக் கொண்டிருந்தாள் வெண்பா.

 

அவளிடம் இருந்து பைகளை வாங்க முயன்றவனிடம் நானே தூக்கி வருகிறேன் என்று அவள் பைகளை எடுத்துக் கொண்டு முன்னேறினாள். மீண்டும் அவனருகில் வந்து “என்னங்கஎன்றாள். “என்னம்மாஎன்றான், உங்கள்கன்னத்தில்ஏதோஇருக்கிறதுஎன்றாள்.

 

அவன்உடனேகைகளால்தட்டிவிடமுயன்றான்.“இருங்கள் நானே தட்டி விடுகிறேன்என்றுகூறிஅவனருகில்வந்தவள்எம்பிஅவன்கன்னத்தில்முத்தவிட்டுவிட்டுஒரேஓட்டமாகவீட்டிற்குள்ஓடிச்சென்றுவிட்டாள். “ஏய், வெண்பாஎன்றுகுதூகலித்தவன்பைகளைஎடுத்துக்கொண்டுஅவள்பின்னேஓடினான்.

 

பக்கவாட்டில் நின்றிருந்த ஸ்ரீ “என்னடா நடக்குது இங்கஎன்றான். “என்னநடக்குதுநான்தான்நடந்துவரேன். உனக்குகண்ணுதெரியலையாஎன்றான்சித்தார்த். “எல்லாமேஎன்கண்ணுலதானேபடுதுஎன்றான்ஸ்ரீ. “பார்த்துட்டியாடாஎன்றான்லேசாகசிரித்துக்கொண்டே. “இம்என்றுகூறிஅவனைஉள்ளேஅழைத்துச்சென்றான்ஸ்ரீ.

 

அவர்களுக்காக மற்றவர்களும் சாப்பிடாமல் காத்திருந்தனர். ஸ்ரீ மட்டும் ஐஸ்வர்யாவுடன் சாப்பிட்டுவிட்டான். ஐஸ்வர்யாவிற்கு சித்தார்த் வெண்பாவின் விசயம் ஓரளவு தெரிந்திருந்ததால் அவர்கள் வர நேரமானதைப் பற்றி அதிகமான கேள்விகள் எதுவும் கேட்கவில்லை. ஸ்ரீ அவர்கள் பழக்கம் பற்றி அவளிடம் அன்று தான் கூறியிருந்தான்.

 

ஒருவழியாக சாப்பிட்டு முடித்து ராதாவின் அறைக்கு சென்று வாங்கிய பொருட்களை சரி பார்த்தனர். ஐஸ்வர்யாவின் புடவையை அழகாக தேர்ந்து எடுத்து இருப்பதாக அனைவரும் அவளை பாராட்டினர். “இதுக்கே இப்படி பாராட்டுகிறீர்கள், ஐஸ்வர்யாவின் வீட்டில் இவள் போட்ட போடு இருக்கிறதே அதற்கு என்ன செய்ய போகிறீர்கள்என்றான்அவன்.

அங்கு நடந்தவற்றை அனைவருக்கும் விவரித்தான் அவன். பின் ஐஸ்வர்யாவின் பெற்றோர் மனம் மாறி அவர்களும் கூடவே வந்து மகளுக்கும் மருமகனுக்கும் உடைகள், நகைகள் என்று வாங்கிய கதையும் கூறினான். அங்கிருந்து தான் அவன் போன் செய்து ஸ்ரீயின் குடும்பத்தினரை ஐஸ்வர்யாவின் பெற்றோரிடம் பேச வைத்தான்.

 

“ரொம்ப நன்றி வெண்பாஎன்றகுரல்கேட்டுதிரும்பினார்கள். ஸ்ரீஅவளைநோக்கிவந்துஅவள்கைகளைஎடுத்துகண்களில்ஒற்றிக்கொண்டான்.“ஐஸ்வர்யா என்னை சந்தோசமாகத்தான் திருமணம் செய்து கொண்டாள், இருந்தாலும் அவள் மனதில் எப்போதும் ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது.

 

“அவள் எதைக் கேட்டாலும் வாங்கிக் கொடுக்க முடிந்த என்னால் அவளின் இந்த சொந்தத்தை திருப்பி கொடுக்க முடியாமல் போனது. இப்போது அது உன்னால் தான் நடந்திருக்கிறது. உனக்கு எவ்வளவு நன்றியுரைத்தாலும் தகும் வெண்பாஎன்றான்உணர்ச்சிபரவசத்துடன்.

 

“என்ன அண்ணா நான் பெரிசா ஏதும் செய்யவில்லை. அவர்கள் மனதில் ஏற்கனவே ஐஸ்வர்யாவின் பிரிவு வாட்டிக் கொண்டிருந்தது. நான் அதை தூண்டி பேசினேன் அவ்வளவு தான், அவர்கள் மடை திறந்த வெள்ளமாக உடைந்து விட்டார்கள். எனக்கு போய் நீங்க நன்றி கூறி கொண்டு, விடுங்கள் அண்ணாஎன்றாள்அவள்.

 

அவளுக்கும் கண்கள் கலங்கிவிட்டது. “பாசமலர் சினிமா பற்றி என் அப்பா சொல்லியிருக்கிறார், அதை நான் இப்போது தான் நேரில் பார்க்கிறேன்என்றாள்இனியாதன்வழக்கமானபாணியில்.

 

சூழ்நிலைகககலப்பாகமாறியது. ராதாஅவர்களைநேரமாகிவிட்டதுஎன்றுகூறிபடுக்கச்சொன்னார். மறுநாள் சித்தார்த் அவர்களை டாப்ஸ்லிப்பிற்கு அழைத்துச் சென்றான்.

 

உயர்ந்த மலைகளும், மலையின் நடுவே தவழ்ந்து செல்லும் மேகமும் அருகே இருப்பவர்களே தெரியாத அளவிற்கு சூழ்ந்து இருக்கும் பனிமூட்டமும் அற்புதமானதொரு அழகை அள்ளி வழங்கியது.

 

தோழியர் மூவருக்குமே அது மறக்க முடியாததொரு பயணமாக அமைந்தது. மறுநாள் வளைகாப்பு வேலைகள் இருப்பதால் அவர்கள் சீக்கிரமாகவே வீட்டுக்கு கிளம்பிச் சென்றனர்.

 

மறுநாள் காலையில் அனைவரும் சீக்கிரமாக எழுந்து குளித்து தயாராயினர். ஐஸ்வர்யாவிடம் விஷயத்தை சொல்லி கிளப்பும் வேலையை ஸ்ரீயும், சித்தார்த்தும் எடுத்துக் கொண்டனர். முதலில் வேண்டாமென்று மறுத்தாலும் பின் அவளும் அதற்கு ஒப்புக் கொண்டு தயாரானாள், ஒரு பெண்ணுக்கு வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே நடக்கும் நிகழ்வு அது என்பதால் அவளும் அதற்கு சம்மதித்தாள்.

 

ஆனால் ஐஸ்வர்யாவிற்கு அவளுடைய பெற்றோர் வரப் போகும் தகவல்  மட்டும் சொல்லாமல் அவளை சம்மதிக்க வைத்திருந்தனர். அவளும் அவர்கள் இல்லையே என்று நினைத்து உள்ளுக்குள்ளேயே உருகி அழுது தவித்தாள். தோழியர்  மூவரும் சேர்ந்து அவளை அலங்காரம் செய்தனர்.

 

அக்கம் பக்கத்தில் உள்ள தெரிந்தவர்கள் எல்லாம் வரத்துவங்கினர். விழா துவங்கும் நேரம் வந்திருந்த விருந்தினர் ஒருவர் வீண் வம்பை ஆரம்பித்து வைத்தார்.

 

“என்ன பெண் வீடு சார்பாக யாரும் வரவில்லையா, எந்த வரிசை தட்டும் இன்னும் வைக்கப்படவில்லையே, பெண்ணுக்கு சொந்தம் யாரும் இல்லையாஎன்றார்.

 

“ஏன் இல்லை, நாங்கள் இருக்கிறோம், பெண் வீடு சார்பாக, எங்களால் எல்லா சீரும் செய்ய முடியும்என்றுகூறியவெண்பாதோழியருடன்வரிசைத்தட்டுகளைகொண்டுவந்துஅடுக்கலானாள். “என்னதான்இருந்தாலும்தாயும், தகப்பனும்இருந்துசெய்வதுபோலாகுமாஎன்றார்அந்தவிருந்தினர்.

 

“அவளுக்கு தாய், தகப்பன் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் எல்லா கடமையும் அவளுக்கு செய்வோம்என்றுகூறிஉள்ளேயிருந்துவெளியேவந்தனர்ஐஸ்வர்யாவின்பெற்றோர்.

 

அவர்களைபார்த்தஐஸ்வர்யாவிற்குகண்ணில்நீர்தளும்பிவிட்டது. அவளின்தாய்அருகேவந்துமகளைஉச்சிமுகர்ந்தார். தந்தைஆசிர்வதிப்பதுபோல்தலையில்கைவைத்தார்.

 

ஓவ்வொருவராக வந்து அவளுக்கு வளையல் அடுக்கினர். நாத்தனார் முறையை வெண்பாவை செய்யச் சொன்னர் ஐஸ்வர்யாவின் பெற்றோர். விழா நல்லபடியாக நடந்து முடிந்தது. ஐஸ்வர்யா அவளுடைய பெற்றோரிடம் பேசிக் கொண்டிருந்தாள், அப்போது வெண்பா ஏதோ கூற உள்ளே வந்தாள் அவளை பார்த்து நன்றியுடன் கைகூப்பினாள் ஐஸ்வர்யா.

 

“என் அப்பாவும், அம்மாவும் எனக்கு திரும்ப கிடைச்சதுக்கு நீங்க தான் காரணம் வெண்பா, நான் உங்களுக்கு எப்பவும் கடமைப்பட்டவள். நன்றி சொல்லிட்டா அது முடிஞ்சு போகும் என்னால என்னைக்குமே உங்களை மறக்கவே முடியாதுஎன்றுகூறிநெகிழ்ந்தாள்ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யாவின் பெற்றோர் அவளை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார், அதன் பின் ஸ்ரீயின் முகமே மாறிவிட்டது. நண்பனின் முகம் மாற்றம் கண்ட சித்தார்த் தன் சித்தப்பாவிடம் திரும்பினான்.

 

“சித்தப்பா ஐஸ்வர்யாவுக்கு இது ஏழாம் மாதம் தானே, அவளை நீங்கள் ஒன்பதாம் மாதம் அழைத்துச் செல்லுங்கள். இப்போது வேண்டுமானால் அவளை ஒரு இரண்டு நாட்கள் உங்கள் வீட்டில் வைத்து சீராட்டி விட்டு அனுப்புங்கள்என்றான்.

 

சித்தார்த் இங்கு மருத்துவமனை வசதி இருக்க மாதிரி தெரியல, இவ்வளவு நாள் நாங்க பார்த்துக்க முடியாம போச்சு. இனியாவது நாங்க அவளுக்கு பேறுகாலம் பார்த்து தாயும் சேயுமாக அனுப்பி வைக்க ஆசைப்படுகிறோம், இதுல எதுவும் தப்பில்லைங்களே என்றார் ஐஸ்வர்யாவின் தாய் மரகதம்.

 

“சித்தி நீங்க சொன்னது சரி தான். ஐஸ்வர்யாவுக்கு பொள்ளாச்சி பெரிய ஆஸ்பத்திரியில தான் பார்த்துட்டு இருக்காங்க என்றான். அதற்குள் ஸ்ரீயின் தாயார் ராதா “இன்னைக்கே எல்லோரும் கிளம்பி பொள்ளாச்சியில இருக்க எங்க வீட்டுக்கு தான் போகப் போறோம்.

 

“நாளைக்கு வெண்பா, இனியா, சுஜி ஊருக்கு கிளம்பறாங்க. அதுனால தான் கொஞ்சம் தாமதம் ஆச்சு. நீங்க வேணா இன்னைக்கே உங்க பொண்ணை கூட்டிட்டு போங்க, ரெண்டு நாள் கழிச்சு நாங்க வந்து கூட்டிட்டு வர்றோம். எங்க மருமக இல்லாம வீடே வெறிச்சுன்னு இருக்கும் சம்பந்தி தப்பா எடுத்துக்காதீங்க. ஒன்பதாம் மாதம் நீங்க வந்து பிரசவத்துக்கு கூட்டிப்  போங்க என்றார்.

 

மேற்கொண்டு பேச்சை வளர்த்த விரும்பாத ஐஸ்வர்யாவின் தந்தை அதை ஆமோதித்தார் ஒரு சின்ன வேண்டுகோளுடன். மருமகனும் உடன் வந்து தங்கி இருந்து போகவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஸ்ரீ தயங்க சித்தார்த் தான் அவனை சம்மதிக்க வைத்தான்.

 

தோழியரும் ஊருக்கு கிளம்ப ஆயத்தமானார்கள். மறுநாள் காலையிலேயே அவர்களுக்கு ரயில் என்பதால் அன்றே அவர்கள் கிளம்பி பொள்ளாச்சி வந்தடைந்தனர்…..

 

 

 

Advertisement