Advertisement

அத்தியாயம் –11

 

“என்னடா அவளும், சுஜியும் இப்ப எப்படி இருக்காங்க, நீ ஏன் என்கிட்டே சொல்லவே இல்ல, ரொம்ப கஷ்டபட்டுடாங்களாஎன்றான்.

 

“நீ இப்ப வருத்தப்படுற இல்ல அதான் நான் சொல்லல, என்னடா நீ உனக்கு தெரியாதா மலை ஏறும் போது ஒரு சிலருக்கு வாந்தி, மயக்கம் வருவது இயற்கை தானே. அவங்க இப்ப ரொம்ப நல்லா இருக்காங்கஎன்றான்.

 

“அவளை கொஞ்சம் பார்த்துகோடா ரொம்பவும் சிரமபட்டாளா, எனக்கு எப்போது அங்கு வருவோம் என்று இருக்கிறது.

 

“அப்புறம் ஸ்ரீ சொல்ல மறந்துட்டேன், மாமா இப்ப அங்க தான் கிளம்பி வந்துட்டு இருக்கார்.

 

“எதுக்குடா உங்க மாமா இப்போது இங்கு வருகிறார்என்றான்ஸ்ரீ

 

“அவர் அவருடைய தங்கையை பார்க்க வருகிறார்என்றான்அவன்பதிலுக்கு.

 

“தங்கையா, இந்த ஊருல அவருக்கு ஒரு தங்கை இருக்கறதா நீ சொன்னதே இல்லையே, அவங்க வீட்டில அவர் ஒரே பிள்ளை தானே. இப்ப எதுக்குடா குழப்பறஎன்றான்.

 

“டேய், டேய் நான் தங்கைன்னு சொன்னது வெண்பாவை தான். மாமாவுக்கு அவளை நேர்ல பார்க்கணுமாம். என்னோட வரேன்னு சொன்னார், நான் இன்னைக்கே கிளம்புனா அம்மா வருத்தப்படுவாங்க. அதுவுமில்லாம நான் மாமாவோட வந்தா கொஞ்சம் ப்ரீயா இருக்க முடியாது.

 

“அதான் அவரை முதல்ல அனுப்பறேன். அப்புறம் நான் அவர் கிட்ட ரெண்டு சிம் கார்டு குடுத்தனுப்பறேன். ஒண்ணு வெண்பாகிட்ட கொடுத்துடு. இன்னொரு சிம் கார்டு சுஜி, இனியாகிட்ட கொடுத்திடுஎன்றான்.

 

“என்னடா நடக்குது இங்க, நல்ல மாமன் நல்ல மச்சான். நல்ல குடும்பம் பல்கலைகழகம்டா நீங்க, சரி மாமா திடிர்னு வந்தா நான் என்னன்னு சொல்லி சமாளிக்கறதுஎன்றான்ஸ்ரீ.

 

“அதெல்லாம் அவர் பார்த்துப்பார், அவர் ரொம்ப நாசுக்கானவர். நீ சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி சமாளிச்சுக்கோ. அப்புறம் சிம் கார்டு வெண்பா கைக்கு போனதும் எனக்கு ஒரு மிஸ்டு கால் மட்டும் குடுஎன்றான்சித்தார்த்.

 

ஸ்ரீ அவனிடம் பேசிவிட்டு கீழே இறங்கி சென்று விட்டான். சந்திரசேகர் வெளியே வேலையாக சென்றிருந்தார்.தோழிகள் மூவரும் ராதாவுக்கு உதவிக் கொண்டிருந்தார்கள். சுஜியும் வெண்பாவும் வீட்டில் வேலைகளை செய்து பழக்க பட்டவர்கள், இனியா தான் தட்டுத்தடுமாறி கொண்டிருந்தாள்.

 

பாவம் அவள் வீட்டில் அவள் வேலையே செய்ததில்லை. அனைத்து வேலைகளுக்கும் ஆட்கள் இருப்பதால் அதற்கான வாய்ப்பு அவளுக்கு இருந்ததில்லை. அவள் வீட்டில் அவளை வேலை செய்யசொல்லி யாரும் கட்டாயப்படுத்தியதும் இல்லை.

 

இனியாவை எதுவும் செய்ய வேண்டாம் பழக்கமில்லாதவள் பாவம் என்று மூவரும் கூற அவள் அதை மறுத்து தானும் வேலை செய்ய பழகி கொள்வேன் என்று கூறி அவர்கள் வாயை அடைத்துவிட்டாள்.

 

தோழிகள் மூவரும் இயல்பாக பழகியதில் ராதாவுக்கு மிகுந்த சந்தோசம். ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவும் எழுந்து வந்து அவர்களுடன் சேர்ந்து கொள்ள ஐவருமாக சேர்ந்து வீட்டை களேபரப்படுத்திக் கொண்டிருந்தனர்.

 

ஐவருமாக ஏதோ புது வித சமையல் தயார் செய்யப் போவதாக கூறி பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தனர்.

 

ஸ்ரீ அவர்களை வந்து கலாய்த்து விட்டு போனான். சற்று நேரத்தில் கார் வரும் ஓசை கேட்க ஸ்ரீ எழுந்து வெளியே சென்று பார்த்தான். ராகவன் தான் வந்தது, அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றான்.

 

“வாங்க அண்ணா உள்ள வாங்க உட்காருங்கன்று அவரை இருக்கையில் அமரச் செய்தான்.

 

“அம்மா, அம்மா கொஞ்சம் காபி கொண்டு வாங்க. இங்க சித்தார்த்தோட மாமா வந்து இருக்காங்கஎன்றான்உரக்க.

 

உள்ளேயிருந்து வெண்பா ஆர்வமாக வெளியே எட்டிப் பார்த்தாள். ராதா மேல் வேலையாக இருந்ததால் வெண்பா தானே காபி போடுவதாகக் கூறினாள்.

 

ராதா அவளையே காபி கொண்டு செல்லுமாறு கூறிவிட்டு பின்னோடு பலகாரம் எடுத்துக் கொண்டு வந்தார்.

 

ஹாலுக்கு வந்து தயங்கி நின்றாள் அவள், ராதா அதை ராகவனுக்கு குடுக்குமாறு பணித்து அவர் அவர்களுக்கு பலகாரம் பரிமாறினார்.

 

“எப்படி இருக்கீங்க தம்பி, நளினி குழந்தைங்க எப்படி இருக்காங்க. சித்தார்த் அம்மா எப்படி இருக்காங்கஎன்றுபரஸ்பரம்நலம்விசாரித்தார்ராதா.

“எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா, அப்பா வீட்ல இல்லையாஎன்றுஅவனும்விசாரித்துக்கொண்டான்.

 

“வெளியே வேலையா போய் இருக்காங்கஎன்றுகூறிவிட்டுஅவர்களைபேசவிட்டுஉள்ளே சென்று விட்டார்.

 

“ஸ்ரீ இவங்க தான் சித்தார்த் சொன்னவங்களாஎன்றான்ராகவன்.

 

ஸ்ரீ திருதிருவென்று விழித்தான். வெண்பா ஒருவித கலக்கத்துடன் அவனை ஏறிட்டாள்.

 

“அதான்பா, சித்தார்த் மூணு பேர் உங்க வீட்டில தங்க வைச்சு இருக்கறதா சொன்னான்ல. அது இவங்களான்னுதான் நான் கேட்டேன். அதுக்கு போய் நீ ஏன் இப்படி முழிக்கறஎன்றான்ராகவன்.

 

வெண்பா காலி கோப்பைகளை எடுத்துக் கொண்டு உள்ளே விரைந்து விட்டாள். ஸ்ரீக்கு அப்போது தான் மூச்சு வந்தது, “என்னண்ணா இப்படி கவுத்திட்டீங்களே நான் பயந்தே போய்ட்டேன். இவன் வேற இன்னும் காதலை சொல்லல அதுக்கு முன்ன எதாச்சும் குழப்பம் ஆகிடுமோன்னு பயந்துட்டேன்என்றான்.

 

“சொல்லு ஸ்ரீ இப்ப வந்ததுதான் வெண்பாவா, ரொம்ப நல்ல பெண்ணா தெரியறா எங்க சித்தார்த்துக்கு பொருத்தமா இருப்பாளான்னு யோசிச்சேன். ஆனா இப்போ முடிவே பண்ணிட்டேன், இவ தான் எங்க வீட்டு மருமகஎன்றான்ராகவன்.

 

“அவ தான் வெண்பா நீங்க சரியா தான் சொன்னீங்க அண்ணா, சித்தார்த் முதல் முறையா ஒரு விசயம் ஆசைப்பட்டிருக்கான். அது அவனுக்கு நல்லபடியா அமையணும்என்றான்ஸ்ரீ.

 

“கொஞ்சம் இருங்க, உங்களுக்கு எல்லோரையும் அறிமுகப்படுத்திடுறேன் என்று கூறி மற்றவர்களையும் அழைத்து ராகவனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

 

சித்தார்த் அவர்களை பற்றி கூர்யிருப்பதாகவும் மரியாதை நிமித்தமாக தான் அவர்களை சந்திக்க வந்திருப்பதாக கூறினான். அனைவரையும் ஒரு முறை வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்து போனான்.

 

ஸ்ரீயிடம் தனியே சென்று சிம் கார்டை கொடுத்து விட்டு ராகவன் அனைவரிடமும் விடைப் பெற்று கிளம்பிச் சென்றான்.

 

ராகவன் சென்றதும் ஸ்ரீ அவர்களிடம் வந்தான். “வெண்பா இந்த BSNL சிம்கார்டுஇதுஉனக்குஏன்னா, நீவெளியேபோகும்போதுநாங்கஉன்னைதொடர்புகொள்றதுக்குஉதவும்என்றான்.

 

“இனியா, சுஜி இந்த கார்டு உங்க ரெண்டு பேருக்கும், நீங்க உங்க வீட்டில இருக்கறவங்க கிட்ட பேசிக்கறதுக்கு இது உதவும். அடிக்கடி என்கிட்ட போன் கேட்க நீங்க சங்கடப்படுவீங்க அதான்என்றான்.

 

சந்திரசேகர் வீட்டுக்கு வந்ததும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர்.

 

ஸ்ரீ நண்பனுக்கு வெண்பாவிடம் சிம் கார்டு கொடுத்ததைப் பற்றி குறுஞ்செய்தி அனுப்பினான்.

 

சாப்பிட்டு விட்டு வந்த தோழிகள் சந்திரசேகரிடமும், ராதாவிடமும் வழக்கடித்துக் கொண்டிருந்தனர்.

 

வெண்பா திடிரென்று யோசனை செய்தவளாக அவள் போனில் இருந்த பழைய கார்டை எடுத்து பத்திரப்படுத்தி விட்டு புது கார்டை போட்டாள். சற்று நேரத்திற்கெல்லாம் அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது, உடனே அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு.

 

‘யாராக இருக்கும், ஒரு வேலை இதற்கு முன்பு இதை உபயோகப் படுத்தியவராக இருக்குமோஎன்றுயோசித்தவள்போனைஎடுத்துக்கொண்டுதனியேவந்துவிட்டாள்.

 

அப்போது அதே குறுஞ்செய்தி எண்ணிடம் இருந்து அழைப்பு வந்தது. எடுக்கலாமா, வேண்டாமா என்ற யோசனையுடனே போனை எடுத்து “ஹலோஎன்றாள்.

 

“ஹாய், நான் தான் பேசுறேன்என்றதுஅந்தகுரல் மகிழ்ச்சியுடன்ல். அதுவேறுயாருமல்லசித்தார்த்தான்அவளுக்குபோன்செய்திருந்தான்.

 

“இந்த எண் எப்படி உங்களுக்குத் தெரியும், நீங்களும் வேற எண்ணில் இருந்து கூப்பிடுகிறீர்கள்என்றாள்அவள்.

 

‘கொடுத்தவனுக்கு தெரியாதாஎன்றுமனதில்நினைத்துக்கொண்டான். “என்னசொன்னீங்கஎன்றாள்.

 

“இல்ல, ஸ்ரீ தான் உனக்கு கார்டு கொடுத்தான், அவன் எனக்கு உன் எண் குடுத்து இருக்க மாட்டானாஎன்றான்.

 

“ஓஎன்றாள்அவள். “நீபோட்டகாபிநல்லாஇருந்துச்சுன்னுமாமாசொன்னாங்க,எனக்கும்கொஞ்சம்காபிபோட்டுதருவியாஎன்றான்.

 

“நான் தான் காபி போட்டேன்னு உங்களுக்கு யார் சொன்னதுஎன்றாள்.

 

“வால்பாறை போனதுல இருந்து உனக்கு ஞாபக மறதி வந்துடுச்சு, நல்ல டாக்டரா பார்த்து காட்டணும்என்றான்.

 

“எதுக்கு நான் நல்லா தானே இருக்கேன்என்றாள்அவள்.

 

“தாயே என்னை மறந்துடாதேஎன்றான்அவன்கிண்டலாக.

 

“ஏன் அப்படி சொல்றீங்கஎன்றாள்அவள்ஆவேசமாக.

 

“நீ தான் காபி போட்டேன்னு ஸ்ரீ என்கிட்ட சொல்லி இருக்க மாட்டானா, இல்ல மாமா தான் சொல்லி இருக்க மாட்டாரா. நான் தான் அவரை வந்து பார்த்துட்டு போக சொன்னேன். நீ எல்லாவற்றையும் மறந்து விட்டு ஏன், எதற்கு என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாய்என்றான்.

 

“சாரிங்க நான் அப்படி யோசிக்கவே இல்லை, வேற ஏதோ யோசைனையா இருந்துட்டேன்என்றாள்அவள்.

 

“உன்கிட்ட ஒரு விசயம் சொல்லலாம்னு தான் கூப்பிட்டேன், நான் அம்மா பார்க்க கிளம்பி வந்தேன். அவங்களை பார்த்துட்டு நாளைக்கு கிளம்பிடுவேன்என்றுஅவன்வேண்டுமென்றுஅவளைவெறுப்பேத்தினான்.

 

அவன் ஊருக்கு வந்திருக்கிறான் என்றதும் முகம் மலர்ந்தவள் அவன் உடனே கிளம்புவதாக கூறியதை கேட்டதும் முகம் கூம்பினாள்.

 

என்ன பேசுவதென்று தெரியாமல் “ஓ, எப்போ வந்தீங்க, முதல்லயே சொல்லலஎன்றாள்.

 

“திடிர்னு தான் யோசிச்சு கிளம்பினேன், அப்போவே சொல்லலாம் நினைச்சேன். காலையில உன்கிட்ட பேசும்போது தான் முடிவு பண்ணேன், அம்மாகிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதான் வந்தேன்என்றான்பாதிஉண்மையும்பாதிபொய்யும்கலந்து.

 

“இம், சொல்லுங்க உங்க அம்மா எப்படி இருக்காங்க, உங்களை பார்த்ததில் அவர்களுக்கு உடம்பு பாதி குணமாகி இருக்கும் இல்லையாஎன்றாள்.

 

“நல்லா இருக்காங்க, பாவம் அவங்களுக்கு என்னை பற்றிய கவலை தான், எனக்கு ஒரு கல்யாணம் பண்ணா தான் நிம்மதின்னு சொல்லிட்டு இருக்காங்கஎன்றான்.

 

“அப்போ உடனே கல்யாணம் பண்ணிட வேண்டியது தானே. பொண்ணு யாரும் பார்த்து வைச்சு இருக்காங்களாஎன்றாள்உள்ளம் மறைத்த வேதனையுடன்.

 

“ஸ்ரீ தான் ஒரு பொண்ணு பார்த்து அம்மாகிட்ட சொல்லி இருக்கான், அம்மாவுக்கும் அந்த பொண்ணு ரொம்ப பிடிச்சு போச்சு. நான் சரி சொல்றதுக்காக தான் காத்துட்டு இருக்காங்கஎன்றான்அவன்.

 

மனதில் பெரிய பாறாங்கல் வைத்தது போன்று இருந்தது. இதற்கு மேல் அவன் பேசுவதை கேட்டால் அவள் உடைந்து அழுது விடுவாள் என்று தோன்ற, “சரி என்னை கூப்பிடுற மாதிரி இருக்கு நான் போனை வைத்துவிடவாஎன்றாள்.

 

“ஏன் நான் பேசுறது உனக்கு பிடிக்கலையா, அப்ப சரி நான் போனை வைக்கறேன்என்றுகோபத்துடன்அழைப்பைதுண்டித்தான்.

 

அவன் கோபம் அவளை மேலும் துன்பத்துக்குள்ளாகியது. மீண்டும் அவனுக்கு போன் செய்து பேச அவளுக்கு தெம்பு இல்லை உள்ளே விரைந்து சென்று விட்டாள்.

 

அவள் அமைதியாக இருப்பதை பார்த்து சந்திரசேகர் அவளை பேசவைக்க முயற்சி செய்தார். ஆனால் அவளால் அதில் இயல்பாக ஒன்ற முடியவில்லை.

 

தலைவலிப்பதாக கூறி எழுந்து வந்து விட்டாள். பின்னோடு வந்த சுஜி என்னவென்று கேட்க உடம்புக்கு ஒரு மாதிரி இருக்கு. அதான் படுக்கலாம்ன்னு வந்துட்டேன் என்றாள். “நீ பாட்டுக்கு ஒண்ணும் சொல்லாம பொசுக்குனு கிளம்பி வந்தா என்ன அர்த்தம் என்றாள் சுஜி.

 

“சாரிடி, நான் யோசிக்காம வந்துட்டேன், இரு நான் கீழே வந்து எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வந்துடுறேன் என்று கூறி கீழே இறங்கி வந்து அவர்களிடம் மன்னிப்பு கோரினாள்.

 

“அம்மா, அப்பா தப்பா எடுத்துக்காதீங்க, எனக்கு உடம்புக்கு முடியல. நான் கொஞ்சம் படுத்து தூங்கறேன்என்றுகூறிவிட்டுவந்தவளைராதா கட்டாயப்படுத்தி பாலை அருந்தச் செய்தார்.

 

வெண்பாவுக்கு ஏனோ அவள் அன்னையின் நினைவு வந்தது இந்த செயலில். அவள் கண்கள் கலங்கினாள். பாவம் பெற்றோரை பிரிந்து வந்திருக்கிறாள், வருந்துகிறாள் போலும் என்று நினைத்துக் கொண்டார் ராதா.

 

“உங்க அம்மா, அப்பாவை பிரிஞ்சு முதல் தடவையா வந்து இருக்கல, வருத்தப்படாதேம்மாஎன்று ஆறுதல் கூறினார் அவர்.

 

அவர்களிடம் சொல்லிவிட்டு வந்து படுக்கையில் விழுந்து மௌனமாக கண்ணீர் உகுத்தாள். தான் மட்டுமே அவனை விரும்புகிறோம், ஆனால் அவனுக்கு அது போல் எண்ணம் எதுவும் இருப்பது போல் இல்லை என்று நினைத்து மேலும் மேலும் அழுதவள், எப்படியாவது அவன் மனம் அறிந்து கொள்வது என்று முடிவு செய்தாள். அவன் அன்னை வேறு அவனுக்கு பெண் பார்த்து இருக்கிறார் என்று யோசிக்கும் போதே அவளுக்கு அந்த எண்ணம் எழுந்தது.

 

ஸ்ரீ அண்ணா தானே பொண்ணு பார்த்து இருக்காங்க, அவரிடம் கேட்டால் எதாவது தகவல் கிடைக்கும் என்று எண்ணினாள். காலையில் முதல் வேலையாக அவரை கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தாள்.

 

அப்போது அறை கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டு யோசித்தாள், யாராக இருக்கும். ஏனெனில் அவள் அறை கதவை லேசாகத்தான் அடைத்து வைத்திருந்தாள். சுஜியோ, இனியாவோ வந்திருந்தால் நேராக உள்ளே வந்து இருப்பார்கள். யோசித்துக்கொண்டே எழுந்து சென்று வெளியே பார்க்க அங்கு ஸ்ரீ நின்றிருந்தான்.

 

“என்னம்மா ஏதாவது பிரச்சினையா, எதுவா இருந்தாலும் சொல்லும்மா, டாக்டரிடம் செல்லலாமா. என்னை உன் சகோதரனை போல தானே நினைக்கிறாய், வித்தியாசமாக எண்ணாமல் என்ன செய்கிறது என்று சொல் வெண்பா என்றான்.

 

உண்மையான அக்கறையுடன் பேசுபவனிடம் என்ன காரணம் சொல்வதுஎன்று திணறினாள் அவள். “எனக்கு என் அம்மா, அப்பாவை தேடுகிறது. அதனால் தான் வேறு ஒன்றும் இல்லை அண்ணா, நீங்கள் தவறாக எண்ணாதீர்கள்என்றாள்.

 

நிம்மதியுற்றவனாக “ சரிம்மா அப்போ நீ அவங்களுக்கு போன் செய்து பேசு, உன்னோட வருத்தம் குறையும் இல்லையா என்று கூறிவிட்டு வெளியே செல்லயத்தனித்தான்.

 

அவளின் “அண்ணா என்ற அழைப்பில் திரும்பி பார்த்தவன் “சொல்லும்மா என்றான்.

 

“உங்க நண்பருக்கு நீங்க பெண் பார்த்து வைச்சு இருக்கறதா சொன்னாரு. பொண்ணு எப்படியண்ணா நல்ல பெண்ணா அவருக்கு பொருத்தமாக இருப்பாங்களா, அவங்க அம்மாகூட நீங்க பார்த்த பொண்ணை சரின்னு சொல்லிட்டங்களாம் என்றாள்.

 

இதை கேட்கும் போது அவள் முகம் சுத்தமாக உணர்ச்சிகளை தொலைத்திருந்தது. சித்தார்த் ஏதோ இவளிடம் சொல்லி இருக்கிறான். இவள் அதை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்து விட்டது.

 

அவளை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று யோசித்தான். “எங்கம்மா அவன் தான் எதுக்கும் பிடி கொடுக்க மாட்டேங்கறானே. அவன் மனசுல வேற யாரும் இருக்காங்களோ என்னவோ. வாயை திறந்து சொன்னாதான தெரியும். அவன் ரொம்ப அழுத்தமானவன். லேசில் எதையும் விரும்பமாட்டான். விரும்பினா அதை அடையாமல் விட மாட்டான் என்று கூறினான்.

 

இதை கேட்டதும் அவள் முகத்தில் பிரகாசம் தோன்றியது. சட்டென்று அது அணைந்து போனது. ஐயோ இது தெரியாமல் அவரை மூட் அவுட் செய்து விட்டோமே. கோபமாக போனை வைத்துவிட்டாரே, என்ன செய்யலாம் என்று யோசித்தாள்.

 

ஸ்ரீ அவளிடம் பேசிவிட்டு கீழே இறங்கிச் சென்றவன், சித்தார்த்துக்கு போன் செய்தான். “சொல்லுடா என்றான் சித்தார்த், எதிர்முனையில் இருந்து.

 

“என்ன சொல்றது, நீ என்ன செஞ்ச, வெண்பா எதுக்கு அழுத்துட்டே இருக்கா. அவகிட்ட நீ தானே போன்ல பேசிட்டு இருந்த, அதுக்கு பிறகு தான் அவளோட முகமே சரியில்லை என்றான் ஸ்ரீ.

 

உடனே பதறியவன் “என்னடா சொல்ற, நான் எதுவும் தப்பா அவகிட்ட பேசலடா என்றான் அவன்.

 

“நான் உனக்கு பொண்ணு பார்த்து இருக்கிறதா அவகிட்ட சொன்னியா என்றான் ஸ்ரீ. “அது சும்மா விளையட்டுக்குடா, நீ அம்மாகிட்ட வெண்பா பற்றி சொன்னல, அது உண்மைதானே. நான் அவளைப்பற்றி அவகிட்டயே சொல்லி விளையாடினேன்டா என்றான் சித்தார்த்.

 

“இது அவளுக்கு தெரியாதில்ல, எப்படி துடிச்சு போயிருப்பா நீ சொன்னது கேட்டு என்றான். அப்போது தான் அவனுக்கும் புரிந்தது அவன் இழைத்த தவறு….

 

அத்தியாயம் –12

 

“சரி அவகிட்ட இப்ப உடனே பேசு, அப்பதான் அவ சரியா ஆவாஎன்றான்ஸ்ரீ. “ம்ஹும், நான்பண்ணமாட்டேன், அவளேபண்ணட்டும்என்றான்மீண்டும்முருங்கைமரம்ஏறியவனாக.

 

“இன்னும் என்னடாஎன்றான்அவன்ஆயாசமாக. “பேசிட்டு இருக்கும்போது போனை வைக்கட்டுமான்னு கேட்டா. என் கூட பேச பிடிக்கலையான்னு கேட்டு போனை வைச்சுட்டேன்என்றான்.

 

“நீ நேர்ல என் முன்னாடி இருந்து இருக்கணும், என்கிட்டே நல்லா அடி வாங்கி இருப்பஎன்றான்ஸ்ரீ. “ஏன்டாஎன்றான்சித்தார்த்.

 

“நீ எங்க வீட்டில பொண்ணு பார்த்திருப்பாங்கன்னு சொல்லுவா, அதை அவளும் சிரிச்சுட்டே கேட்டுகிட்டு உன்கிட்ட பேசிட்டே இருக்கணும் அப்படி தானேஎன்றான். “அப்படியல்லாம்இல்லை, ஆனாஅதுக்காகஅவஅப்படிசொல்லலாமாஎன்றான்.

 

“எங்க வீட்டில எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க, அம்மா, அப்பாவுக்கு ரொம்ப பிடிச்சு போச்சுன்னு நீ சொன்ன மாதிரி அவ சொல்லிருந்தா என்ன பண்ணியிருப்பஎன்றான்.

 

அந்த பேச்சே புடிக்காதவனாக “இம் சரி தான் போனை வைச்சுட்டு போயிருப்பேன்என்றான்.

 

“அவ அப்படி செய்யாம உன்கிட்ட போனை வைக்கட்டுமான்னு தானே கேட்டா, அதுல என்ன தப்புன்றான் ஸ்ரீ.

 

தன் தவறை முழுதும் உணர்ந்தவனாக நண்பனிடம் மன்னிப்பு கோரினான். அவன் உடனே வெண்பாவிடம் பேசுமாறு கூறினான்.

 

என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு அவனிடம் இருந்து அழைப்பு வந்தது.

 

முதல் அழைப்பிலேயே போனை எடுத்தவள் “ஹலோஎன்றாள்.“என்ன செய்யற, சாப்பிட்டாச்சாஎன்றான். “பேசுறதுநீங்கதானா, கோபமாபோனைவைச்சுட்டீங்க, பேசமாட்டீங்கன்னுநினைச்சேன்என்றாள்.

 

“கோபமா எனக்கா, அப்படி ஏதும் இப்போது இல்லைஎன்றான். “சரிநீஎன்றைக்குஅந்தஅலுவலகம்போகவேண்டும்என்றான்.

 

“திங்கட்கிழமை காலை ஏழு மணிக்கு மேல் வர சொல்லியிருக்கிறார்கள் என்றாள். “அப்போ நாளைக்கு நீங்க ஊர் சுற்றி பார்க்கலாம், நான் ஸ்ரீகிட்ட சொல்லி ஏற்பாடு பண்றேன், அப்புறம் ஒரு விசயம்என்றுஇழுத்தவன்.

 

“என்ன என்னஎன்றாள்அவள்ஆர்வமாக, “இம்ஒன்றுமில்லைஎன்றான்.இரவு படுத்தவளுக்கு சுத்தமாக நித்திரை தொலைந்து போனது, சித்தார்த்தின் நினைவுகளை அசைபோட்டாள். ‘கடைசியாக ஏதோ சொல்ல வந்து நிறுத்திவிட்டான், என்ன சொல்ல நினைத்திருப்பான்.

 

ஒரு வேளை நான் அவனை விரும்புவதுபோல் அவனும் என்னை என்று யோசித்தவளுக்கு அப்படி இருந்ததால் தான் சொல்லி இருப்பானேஎன்றுதோன்றியது. ஒருவாறுநித்திராதேவிவந்துஅவளைஅழைக்கவிடியலின்ஆரம்பத்தில்அவள்துயிலஆரம்பித்தாள்.

யாரோ அவளை உலுக்கி எழுப்ப, என்ன என்றாள். “ஏய், பிசாசே எழுந்திருடிஎன்றாள்இனியா. “ப்ளீஸ்டிஇன்னும்கொஞ்சம்நேரம்தூங்கிக்கறேனேஎன்றாள் அவள். எப்போஎழுந்துக்குவ, மதியசாப்பாட்டுக்கா, விடிஞ்சுஎவ்வளவுநேரம்ஆகுதுஎழுந்துக்கபோறியாஇல்லையாஎன்றாள்அவள்.

 

“என்னதுஎன்றுஎழுந்துஉட்கார்ந்துவிட்டாள். அருகில்இருந்தகைபேசியில்மணிபார்க்கஅதுஒன்பதரையைநெருங்கிக்கொண்டிருந்தது. “சுஜிஎங்கடிஎன்றாள்அவள்.

 

“அவ எழுந்து குளிச்சுட்டு ராதாம்மாக்கு உதவி செய்யப் போறதா சொல்லிட்டு எட்டு மணிக்கெல்லாம் கீழே போய்விட்டாள்என்றாள்இனியா.

 

வேகவேகமாக குளித்து உடைமாற்றி வெளியே வந்தவள், இனியாவையும் அழைத்துக்கொண்டு கீழே விரைந்தாள்.

 

“வாங்க மகாராணி, உங்களுக்கு இப்போது தான் விடிந்ததாஎன்றாள்சுஜிகிண்டலாக.

 

“சாரிம்மா, சாரிப்பா நேற்று இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரலை, விடியும் போது தான் தூங்கினேன் அதான் இவ்வளவு நேரம் தூங்கிவிட்டேன், தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்என்றாள்மன்னிப்புடன்.

 

“நீ வேற எதுக்கும்மா மன்னிப்பு கேட்குற, புது இடம் இல்லையா அதுனால தூக்கம் வந்து இருக்காது, நீ எங்க பொண்ணு மாதிரி தானேம்மா, இதெல்லாம் போய் நாங்கள் தப்பா எடுத்துக்குவோமாஎன்றார்ராதாஅன்புடன்.

 

“அண்ணா எங்கம்மா, ஐஷு எங்க போய்ட்டாங்கம்மாஎன்றான்வெண்பா.“ஐஸ்வர்யா இப்ப தான் சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வு எடுக்கறாம்மா, ஸ்ரீ உங்களை தயாரா இருக்கச் சொன்னான். வண்டிக்கு டீசல் போட்டுட்டு வரேன்னு சொல்லி கிளம்பி போய் இருக்கான். நீங்க வாங்கம்மா நாம சாப்பிடலாம்என்றுஅழைத்தார்ராதா.

 

ஸ்ரீ, ஐஸ்வர்யா, சந்திரசேகர் முதலிலேயே சாப்பிட்டு விட ராதாவும், சுஜியும் இவர்களுக்காக காத்திருந்தனர். பெண்கள் நால்வரும் ஒரு சேர சாப்பிட உட்கார்ந்தனர். ஒருவருக்கொருவர் பரிமாறியபடி உணவருந்தினர்.

 

அவர்கள் சாப்பிட்டு எழவும் வெளியில் கார் வந்து நிற்கும் ஓசையும் கேட்டது. ஸ்ரீ வந்துவிட்டான் போலும் என்று நினைத்து வெளியில் எட்டி பார்த்தாள் வெண்பா. பார்த்தவள் திகைத்து நின்றுவிட்டாள், சித்தார்த் காரை நிறுத்தி கொண்டிருந்தான். நேற்று வரை வரமாட்டேன் என்று கண்ணாமூச்சி காட்டியவன் கண்ணெதிரில் வந்து நிற்கவும் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

கால்கள் நிற்கமுடியாமல் துவண்டது, வெண்பா வெறிக்க நின்றிருப்பதை பார்த்து சுஜியும், இனியாவும் ஓடிவர அவன் உள்ளே நுழைத்து கொண்டிருந்தான். சத்தம் கேட்டு ராதாவும், சந்திரசேகரும் வந்து அவனை அன்புடன் அழைத்து உபசரித்தனர்.

 

சித்தார்த்தின் குரல் கேட்டு உள்ளேயிருந்து ஐஸ்வர்யா வெளியில் வந்தாள். சித்தார்த்திடம் பேச வேண்டும் என்று ஆசைப்பட்ட வெண்பாவுக்கோ வாயில் வார்த்தைகள் வரவில்லை, தொண்டைக்கு உள்ளேயே வார்த்தைகள் அகப்பட்டு கொண்டன.

 

உரிமையுடன் ஐஸ்வர்யா அவன் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அவன் வாஞ்சையுடன் அவள் தலைகோதி அவள் நலம் விசாரித்து கொண்டிருந்தான். வெண்பா அதை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்க ராதா தான் கூறினார்.

 

ஐஷுவுக்கு எப்போதுமே சித்தார்த்தின் மீது தனி பிரியம், அண்ணா, அண்ணாவென்று உரிமையாக இருப்பாள். ஒற்றையாய் வளர்ந்த பெண் பிள்ளை இவனைத்தான் கூட பிறந்த பிறப்பாக நினைக்கிறாள் என்றார்.

 

இவர்கள் திருமணத்தில் இவன் தான் இவளுக்கு தாய் வீட்டு முறை செய்தான் என்று கூறினார். பொள்ளாச்சிக்கு எப்போது வந்தாலும் நம் வீட்டுக்கு வராமல் போக மாட்டான்.

 

“என்ன சார் நீங்க வரமாட்டீங்கன்னு வெண்பா சொன்னா, நாங்க கேட்ட போதும் அதே சொன்னீங்க. இப்ப எங்களுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து பாசமலர் படம் காட்டுறீங்கஎன்றாள்இனியா.

 

“சும்மா அண்ணாவை கிண்டல் பண்ணாதீங்க, நான் தான் அவரை இங்க வரச் சொன்னேன். எனக்கு அவரை பார்க்கணும் போல இருந்துச்சு, பிள்ளைதாச்சி பொண்ணு ஆசைபட்டுட்டான்னு அண்ணாவும் புறப்பட்டு வந்துட்டாங்க என்னை பார்ப்பதற்குஎன்றாள்ஐஷுபெருமையாக.

 

வெண்பாவுக்குள் எதுவோ நொறுங்கியது போல் இருந்தது. ஒரு சில நிமிடங்கள் அவன் அவளுக்காகத் தான் வந்திருக்கிறான் என்று நினைத்து மிகவும் சந்தோசத்துடன் இருந்தாள், அது அத்தனையும் தூள் தூளாக போனது.

 

சந்திரசேகர் அவனை பார்த்து “என்னப்பா சித்தார்த் எப்படி இருக்கே, இப்பதான் உனக்கு இந்த பக்கம் வழி தெரிஞ்சுதா, வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்கஎன்றார்அவர்.

 

“என்ன மாமா நீங்க தெரிஞ்சுக்கிட்டே கேட்கிறீங்க நேற்று மாமா வந்தபோது இதெல்லாம் சொல்லிருப்பார் தானேஎன்றான்அவன்பதிலாக. அதற்குள்ஸ்ரீஉள்ளேநுழைந்தான்.

 

“என்னடா எங்க போய்ட்டஎன்றான்சித்தார்த். “டீசல்போட்டுட்டுவந்தேன்டா, இவங்களைசுற்றிபார்க்ககூட்டிபோகப்போறேன்என்றான்.

 

“டேய், நான் மாமா வண்டி எடுத்து வந்து இருக்கேன், வாங்க இன்னைக்கு என்னோட வண்டியிலேயே போகலாம்என்றுகூறினான்.

 

“என்ன ஸ்ரீ கிளம்பலாமா, அம்மா நீங்க வரவில்லையாஎன்றான்சித்தார்த்.

 

“இல்லப்பா, ஐஸ்வர்யாவுக்கு துணையாக நானும் அவரும் வீட்டிலேயே இருக்கிறோம், நீங்கள் பத்திரமாக போய்விட்டு வாருங்கள், மாலையில் வேண்டுமானால் பாலாஜி கோவிலுக்கு போய்விட்டு வரலாம்என்றார்.

 

சுஜியும், இனியாவும் விடைபெற்று வெளியில் வந்து காரில் ஏறி அமர்ந்து விட்டனர். வெண்பா கிளம்பாமலேயே நிற்கவும் அவளருகில் சென்றவன் “என்ன மேடம் கிளம்பவில்லையா, என்னை பார்த்த அதிர்ச்சியில் இருக்கிறாயாஎன்றான்.

 

அவன் கேட்டதும் தான் தாமதம் அவள் அவளுடைய இயலாமையை அவனிடம் வெளிப்படுத்திவிட்டாள்.“ஆனா நீங்க தான் என்னை பார்க்க வரவில்லை போல் இருக்கிறதே, நான் ஏன் அதிர்ச்சி அடைய வேண்டும்என்றாள்அவள்.

 

கோபத்தில் அவள் முக சிவப்பதை கண்டு ரசித்தவன், ‘ஆஹா கோபமா இருக்கா போல என்று நினைத்தவன் “நம்ம பஞ்சாயத்தை அப்புறம் வைச்சுக்கலாம், இப்ப வா போகலாம்என்றுஅவளைஅழைத்துச்சென்றான்.

 

ஸ்ரீயும், சித்தார்த்தும் அவர்களை சோலையார் அணைக்கட்டுக்கு அழைத்து சென்றனர். செல்லும் வழியெங்கும் பசுமை, பசுமை, பசுமை மட்டுமே.

 

ஆங்காங்கே பனி புகை போல் என்று படர்ந்து மலையை சூழ்ந்து கொள்வதும் பின் விலகுவதுமாக பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவளுக்கு. செல்லும் வழியில் திடிரென்று பனிமூட்டம் சூழ்ந்து கொள்ள வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டான் சித்தார்த். எதிரில் வருபவர்கள் கூட தெரியாத அளவுக்கு இருந்தது பனிமூட்டம்.

 

சுஜியும், இனியாவும் அதை ரசித்துகொண்டே வேகமாக கிழிறங்கினர். ஸ்ரீயும் வண்டியை விட்டு இறங்கினான். சுஜி வெண்பாவையும் இறங்குமாறு கூற, இறங்கயத்தனித்தவளை சித்தார்த்தின் குரல் வேகமாக தடுத்தது.

“வெண்பா ப்ளீஸ் இறங்காதே, நான் உன்னுடன் தனியாக பேசவேண்டும் என்று யாருக்கும் கேட்டகாமல் அவளுக்கு மட்டுமே கூறினான். ஸ்ரீயை பார்த்து ஏதோ சைகை செய்ய அவன் அவர்களுடன் பேசிக்கொண்டே சற்று தூரம் நடந்து சென்றுவிட்டான்.

 

அவர்களும் அவனுடன் சென்று விட்டனர், அவர்கள் கண் முன் இருந்து மறையும் வரை பார்த்திருந்தவன், மெதுவாக காரில் இருந்து இறங்கி பின்பக்கம் வந்து ஏறி அவள் அருகில் அமர்ந்தான்.

 

வெண்பாவின் நெஞ்சுக்கூடு லேசாக அதிர்ந்தது. கை கால்கள் சில்லிட்டு போனது போல் உணர்ந்தாள், ஒரு மெல்லிய பதட்டம் சூழ வாய் மூடி மௌனியாக அமர்ந்திருந்தாள். இதயம் பலமாக துடித்தது, இதயத்தின் ஓசை அவளுக்கு துல்லியமாக கேட்பது போல் இருந்தது.

 

அவளை ஏற இறங்க பார்த்தான் அவன், அவள் பதுமை போல் அசையாது ஆனால் முகத்தில் பலவித உணர்ச்சி கலவையுடன் அவள் இருப்பது தெரிந்தது. அவனின் பார்வையை தாங்க முடியாதவளாக சிரம் தாழ்த்தினாள். மெல்ல அவன் கைகளை உயர்த்தி அவள் தலை நிமிர்த்தினான்.

 

லேசாக வியர்த்திருந்த அவள் நெற்றியில் தன் கைக்குட்டையை ஒற்றி எடுக்க பதறி விலகினாள் அவள். “கோபமா வெண்பா, என் மேல் கோபமா என்றான்.

 

“உங்கள் மேல் எனக்கென்ன கோபம், எந்த கோபமும் இல்லை என்றாள் அவள். “அப்புறமும் உனக்கு என்னை புரியவில்லையா என்றான். அவள் புரியாமல் அவனை ஏறிட்டாள்.

 

“நான் உன்னை பார்க்கத்தான், உன்னிடம் பேசவென்று தான் சென்னையில் இருந்து இங்கு வந்தேன். என் தாயை பார்க்க நான் வந்திருந்தாலும், முக்கிய காரணம் நீ தான் நீ மட்டும் தான் என்றான்.

 

நம்பமுடியாமல் அவனை பார்த்தாள், அவன் கண்கள் சொல்லிய செய்தி, அதில் நிச்சயம் பொய்யில்லை. ஆனாலும் எதுவோ அவளை குழப்பியது.

 

“ஐஷு சொன்னது நிஜம் தான், நான் நேற்று காலையே பொள்ளாச்சிக்கு வந்துவிட்டேன், நீங்கள் ஊரில் இருந்து ரயிலில் கிளம்பிய சில மணி நேரத்தில் நானும் கிளம்பிவிட்டேன். நீ கோயம்பத்தூரில் இருந்து போன் செய்யும் போது நான் பொள்ளாச்சிக்கு வந்துவிட்டேன்.

 

“உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி குடுக்க எண்ணினேன். நிச்சயம் அது தான் உண்மை வெண்பா. ஐஷு போன் செய்திருந்தாள் நேற்று, நான் இன்று வந்து அவளை பார்க்க வேண்டும் என்று, அவள் போன் செய்யாமலிருந்தாலும் நான் இங்கு வந்திருப்பேன்.

 

“எனக்கு பெண் பார்த்த விசயமும் உண்மைதான், பெண் யார் தெரியுமா, நீ தான். ஸ்ரீ உன்னை பற்றித்தான் அம்மாவிடம் கூறியிருந்தான். அவனுக்கு நான் உன்னை விரும்புவது முன்பே தெரியும். அம்மாவுக்கு உன்னை பார்த்ததுமே பிடித்துவிட்டது, என்னிடம் உன் புகைப்படம் இருந்தது.

 

“அதை தான் அவர்களுக்கு காண்பித்தேன். என்ன அப்படி பார்க்கிற, உனக்கு இன்னுமா புரியவில்லை. என் மாமா, எதற்கு இங்கு வந்தார் என்று நினைக்கிறாய். அவருக்கு உன்னை பார்க்க வேண்டுமாம், என்னிடம் கோபித்துக் கொண்டார், அவர் தங்கையை அந்த வீட்டில் தங்க வைக்கவில்லையாம்.

 

“என்னடா இவ்வளவு நாள் இதை பற்றி பேசாதவன் திடிரென்று ஞானோதயம் வந்தவனாக இவ்வளவு பேசுகிறானே என்று யோசிக்கிறாயா என்றான். ‘நான் மனதில் நினைக்க நினைக்க இவன் பதில் கூறிக்கொண்டு இருக்கிறானே என்று எண்ணி வியந்தாள் அவள். அவன் கூறப்போவதை ஒரு எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி காத்திருந்தாள்.

 

“உன்னிடம் இப்போது கூட சொல்ல நான் நினைக்கவில்லை, உன் படிப்பு முடியும் வரை காத்திருக்கவே முடிவு செய்தேன். ஆனால் என்னால் அப்படி இருக்கமுடியவில்லை, நீயும் என்னை விரும்புகிறாய் என்று தெரிந்த பின்பு தான் என்னால் நிம்மதியாக இருக்க முடியும் என்று தோன்றியது.

 

“உன் விருப்பமும் தெரிந்தால் அதன் பின் வாழ்நாள் முழுவதும் உனக்காக காத்திருக்கலாம் என்று தோன்றியது. அன்று உன்னை கோவிலில் சந்தித்த பின் தான் நான் இதை பற்றி முடிவெடுத்தேன்.

 

“உனக்கு இன்னும் என் மேல் நம்பிக்கை இல்லையா, என்னை பாரு வெண்பா உனக்கு இன்னுமா புரியல நான் என்ன சொல்ல வரேன்னு, என்னை மயக்க வந்த மேனகை நீ தான்னு உனக்கு புரியலையா, அன்னைக்கு உன்னை மேனகான்னு கூப்பிட்டு என் மனசுல நீ நுழைஞ்சுட்டன்னு சொல்லாம சொன்னது உனக்கு புரியலையா

 

“உங்க ப்ராஜெக்ட் முடியபோற அந்த நாட்கள்ல நான் என்னை கண்ட்ரோல் பண்ணிக்க ரொம்பவும் சிரமப்பட்டேன் தெரியுமா அதுவும் உனக்கு புரியலையா, உன்கிட்ட மட்டும் என்னோட கோபத்தை காட்டினேனே அதுவும் ஏன்னு உனக்கு புரியலையா.

 

“இது வரை எனக்கு வந்த கோபம் உன் மேல் உள்ள காதலினால் தான் இதுவாவது புரிகிறதா உனக்கு, நானே சொல்லிவிடுகிறேன் எனக்கு உன்னை பிடித்திருக்கிறது, சொல் வெண்பா உனக்கு என்னை பிடித்திருக்கிறதா, பிடிக்கும் என்று தெரியும் ஆனாலும் உன் வாயால் அதை கேட்க ஆசைபடுகிறேன் என்றான்.

 

அவள் மனதில் ஓடிய எண்ணங்களுக்கு அவன் பதிலளித்துவிட அவளுக்கு அவனிடம் என்ன பதில் சொல்ல போகிறோமென்று திணறி தவித்தது. மகிழ்ச்சியில் திளைத்திருந்தவளுக்கு வார்த்தைகள் தந்தி அடித்தன.

 

“எனக்கு… எனக்கு… எனக்கும் உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு என்றாள் அளவில்லா வெட்கத்துடன்.

 

அவள் சொன்னதை கேட்டதும் மகிழ்ச்சியில் அவன் மனம் துள்ளியது, அவள் கையை எடுத்து தன் விரல்களுடன் கோர்த்தவன் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான். உடலெங்கும் ஒரு மின்சாரம் பாய அவன் அணைப்பில் கட்டுண்டிருந்தவள் அவன் நெஞ்சின் மீது சாய்ந்து அளவில்லா நிம்மதி கொண்டாள்.

 

அவளை விலக்கி நிறுத்தியவன் கண்கள் அவள்  கண்களை நோக்கி எதையோ யாசிக்க புரியாமல் விழித்தவளை அருகிழுத்து இரு கைகளாலும் அவள் முகத்தை ஏந்தி அவள் இதழ்களை சிறை செய்தான்.

 

சில நிமிடங்களில் விடுவித்தவன் அவள் கண்களை நோக்க அவள் கண் மூடி நின்றநிலை அவனை தூண்ட மீண்டும் அவளை அணைத்து அடைக்கலம் கொடுத்தவன் அவள் இதழ்களுக்கு அவன் இதழ்களால் அடைக்கலம் கொடுத்தான்.

 

அவன் தன்னை கட்டுப்படுத்தி கொள்ள பெரும்பாடு பட்டான். அவளை விடுவித்தவன் கண்கள் அவள் கண்களில் வழிந்த நீர் கண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அவளை நோக்கி “சாரி வெண்பா என்றான். அவனுக்கு அவளை பார்க்கவே தர்மசங்கடமாக இருந்தது.

 

கீழே இறங்கி நிற்கலாம் என்று அவளை அழைத்தவன் முதலில் அவன் கீழே இறங்கி நின்றான். வெண்பா தன்னை சரி செய்துகொண்டு அவளும் இறங்கி நின்றாள். அதற்குள் ஸ்ரீயும் மற்ற இருவரும் நெருங்கி வர, சுஜி அவளிடம் “என்னடி நீங்க பின்னாடியே வருவீங்கன்னு பார்த்தா ஆளே காணோம்.

 

“அங்க அழகான ஒரு சிற்றோடை இருந்தது தெரியுமா, இவ்வளவு நேரம் அங்க தான் நாங்க இருந்தோம், காலாற கொஞ்சம் தூரம் அந்த நீரில் நடந்துவிட்டு வந்தோம். நீங்கள் வருவீர்கள் வருவீர்கள் என்று காத்திருந்துவிட்டு ஒருவழியாக நாங்களே திரும்பி வந்துவிட்டோம். ஏண்டி வரல என்றாள்.

 

“நாங்க இறங்கி வர்றதுக்குள்ள ரொம்பவும் பனிமூட்டம் ஆகி போச்சு, நீங்க எந்த பக்கம் போனீர்கள் என்று தெரியவில்லை, அது தான் நான் வெண்பாவை காரில் இருக்க சொல்லிவிட்டு நான் இறங்கி நின்றிருந்தேன்

 

“நீங்க வர்றீங்களான்னு பார்க்க இப்போ தான் உங்க தோழியும் கீழிறங்கினாள், நீங்களும் ஆடி அசைந்து இப்போது தான் வருகிறீர்கள் என்று சித்தார்த் பதிலளித்தான். “சரி வாங்க வந்து வண்டியில ஏறுங்க, நாம சோலையார் போய் பார்த்துடலாம் என்று அவசரப்படுத்தினான்.

 

அவர்கள் சோலையார் அணைக்கட்டுக்கு வந்து சேர்ந்தனர், எவ்வளவு பெரிய அணை என்று வியக்கும் போதே ஸ்ரீ சொல்ல ஆரம்பித்துவிட்டான். “சோலையார் அணைஆசியாவிலேயேஇரண்டாவதுஆழமானஅணையாக கருதப்படுகிறது. இதுதமிழ்நாடுநீர்மின்சாரதிட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கு, இந்த அணையை சுற்றியுள்ள20கி.மீ. தொலைவில்வால்பாறைஅமைந்துள்ளது.

 

பறந்து விரிந்திருந்த அந்த அணை பார்பதற்கு அழகுடன் இருந்தது, அந்த அணைக்கட்டை சுற்றி இருந்த நீர் பார்ப்பதற்கு கடல் போல் காட்சியளித்தது. வியப்புடன் ஏறிட்டனர் தோழிகள். அமைதியாக இருக்கும் நீரை முகில் நீர் தெளித்து சிலும்பச் செய்தது.

 

ஸ்ரீயும் சித்தார்த்தும் அப்போது தான் அந்த பேச்சை எடுத்தனர், ஸ்ரீயின் மனைவி ஐஸ்வர்யாவுக்கு வரும் புதன் அன்று வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்திருப்பதாகவும் தோழிகள் மூவரும் இருந்து விழாவை சிறப்பித்து தருமாறும் ஸ்ரீ கேட்டுக்கொண்டான்.

 

மேலும் இதுபற்றி ஐஸ்வர்யாவுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் அவளுக்கு அது ஆனந்த அதிர்ச்சியாக அமைய வேண்டும் என்று கூறினான். அவளின் தாய், தந்தையை எப்படியாவது சமாதானப்படுத்தி சித்தார்த் கூட்டி வரப்போவதாகவும் கூறினான்.

 

அதன் பின் சித்தார்த் தொடர்ந்தான் “உங்க மூணு பேர் உதவி எங்களுக்கு வேணும். சுஜி, இனியா நீங்க ரெண்டு பேரும் ஐஸ்வர்யாவுக்கு தேவையானவை மற்றும் விழாவிற்கு தேவையானவை வாங்குவது, தாம்பூலம் இன்ன பிற விஷயங்கள் அனைத்தும் ராதா ஆன்ட்டிகிட்ட கேட்டு அவங்களுக்கு தேவையானது மொத்தமும் வாங்க நீங்க தான் உதவி செய்யணும்

 

“வெண்பா உனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு, திங்கட்கிழமை நீ உன் வேலை முடிந்ததும் என்னுடன் ஐஸ்வர்யா வீட்டுக்கு வரவேண்டும், நான் அவங்ககிட்ட பேசி சமாதானப்படுத்த முயற்சி செய்வேன், ஆனா நீயும் என்கூட இருக்கணும். பெண்களோட பலமும் பலவீனமும் இன்னொரு பெண்ணால தான் உணர முடியும். ஐஸ்வர்யாவோட நிலைமை எடுத்துச் சொல்லி அவங்க அம்மாவோட நீ தான் பேசணும் சரியா என்றான் சித்தார்த்.

 

“வெண்பா நாளைக்கு நான் தான் உங்களை வெளிய கூட்டி போகப்போறேன். நீங்க ரெண்டு பேரும் ஸ்ரீயை ஐஸ்வர்யாவுக்கு துணை வைத்துவிட்டு அங்கிள், ஆன்ட்டி கூட்டிட்டு வெளியபோய் தேவையானது வாங்கிகோங்க என்றான்.

 

தோழிகள் மூவரும் வாயை பிளந்தவாறே கேட்டு கொண்டிருந்தனர். “என்ன உங்களுக்கு சம்மதமா என்றான் அவன்.

 

“பிரமிப்பா இருக்கு சார், எனக்கு இது போல் ஒரு அண்ணன் இல்லையே என்று ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது என்று சுஜி கூற, “நீயும் எனக்கு ஒரு தங்கை போல் தான் சுஜி, உன்னை பார்க்கும் போது எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது என்றான் சித்தார்த்.

 

“என்ன சார் நீங்க சம்மதம்லாம் கேட்டுட்டு இது எங்க கடமை என்றாள் இனியா. ஸ்ரீ வெண்பாவை பார்க்க “என்னண்ணா நீங்க, இனியா சொன்னது தான் எனக்கும், நீங்க யாரோ நாங்க யாரோன்னு நான் நினைக்கல, உங்கள் தங்கையாக நான் தானே இதை செய்யவேண்டும் என்றாள் சித்தார்த்தை பார்த்துக்கொண்டே.

 

‘போதும் என்பது போல் அவன் நிறைவாக அவளைப் பார்த்தான்….

 

 

Advertisement