Advertisement

அத்தியாயம் ஆறு:

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்

இந்த யுத்தம் எனக்குள்ளும் உனக்குள்ளும்

நீ வென்றால் நான் வென்றேனா தெரியாது?

நான் வென்றால் நீயே வென்றாய்!

விதி என்ன வைத்திருந்தாலும்

நான் உன்னை வெற்றி பெற வைப்பேன்

 

ஜெயந்தியிடம் பேசிவிட்டாலும், அபிக்கு என்ன செய்வது? எங்கிருந்து ஆரம்பிப்பது? தெரியவில்லை. அவளுக்கு யாரும் பிரச்சனையில்லை, யார் வந்தாலும் எதிர்த்து நிற்பாள். இரண்டு பேரை தவிர. முதலில் பார்த்திபன். பிறகு அவள் அம்மா.

இந்த பார்த்திபன் தன்னை பிடிக்கும் என்று சொன்னால் தானே ஏதாவது செய்யலாம். நிச்சயமாய் இப்பொழுது அவளுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. படித்து முடித்த பிறகு தான் அவள் அதை பற்றி நினைத்திருப்பாள்.

நடுவில் இந்த பார்த்திபன் எல்லாவற்றையும். அவளே எதிர்பாராமல்  அவள் வாழ்வில் நுழைந்து மாற்றி அமைத்துவிட்டான். இரண்டு நாட்களில் என்ன மாற்றம். அவள் படிப்பை முடிக்கும் வரை அவன் காத்திருப்பானா. அடுத்த வாராம் நிச்சயம். பிறகு திருமணம். அந்த திருமணத்தை தடுத்து நிறுத்த மட்டும் செய்ய வேண்டுமா! இல்லை. தான் அவனை திருமணம் செய்ய வேண்டுமா??????????

அவனுக்கு விருப்பமில்லாதபோது எப்படி செய்வது??????????

ஆண்கள் பெண்களை திருமணம் செய்ய கட்டாய தாலி கட்டுகின்றனர். இந்த பெண்கள் எப்படி செய்வது கட்டாயமாக என்று யோசிக்க. அவளுக்கே புன்னகை மலர்ந்தது

“கட்டாய திருமணம் ஆண்களை செய்வது எப்படி என்று ஃபேஸ் புக்கில் அல்லது ட்விட்டரில் ஒரு கேள்வியை தட்டிவிடலாமா என்று நினைத்தவள்.”,

“அபி இது உன் வாழ்க்கை பிரச்சினை. நீ இதில் விளையாடக்கூடாது!”, என்று அவளுக்கு அவளே சொல்லி கொண்டாள், ஆனால் மனதில் இல்லை வாய் மொழியில் எப்பொழுதும் போல் சத்தமாக.

அதை கேட்டது. அவள் அம்மா! “என்ன அபி”, என்று வர. “ஒண்ணுமில்லை”, என்று அவள் சொன்ன விதமே. “எல்லாம் இருக்கு”, என்று கலாவதிக்கு சொல்லாமல் சொன்னது.

ஒரு வகையில் ஏதோ பார்த்திபன் விஷயத்தோடு தொடர்புடையது என்று உள்மனது சொல்லியது. கேட்க தைரியமில்லாமல் அமைதியானார். ஏனென்றால், “ஆமாம்”, என்று அபிராமி சொல்லிவிட்டாள் அதை மாற்றுவது சிரமம்.

எதுவாகினும் அங்கே இருந்தே வரட்டும் என்று நினைத்தவருக்கு ஒரே நிம்மதி பார்த்திபனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பது தான்.

அபிராமிக்கு எப்படி யோசித்தாலும் நன்கு தெரிந்தது. கட்டாய தாலி பெண்களுக்கு கட்டலாம். ஆண்களுக்கு முடியாது என்று. அதனால் அவள் முதலில் ஆரம்பிக்க வேண்டியது பார்த்திபனிடம் தான். அதே சமயம் நிச்சயத்தை நிறுத்த வேண்டும் எப்படி???

யோசித்து, முடிவெடுத்து. இது நடக்க வேண்டுமே! நடக்காவிட்டால் என செய்வது? என்று கவலை கொள்ள துவங்கினாள். அவள் முகபாவனைகள் பார்த்து. அதன் தீவிரம் உணர்ந்த அவள் தமையன் ஸ்ரீகாந்த் நேரே அவன் அப்பாவிடமும் அம்மாவிடமும் சென்றவன்.

“அப்பா, ஐ ஃபீல், அபி இஸ் நாட் நார்மல்”, என்றான்.

“ஐ ஃபைண்ட் சம்திங் ஃபிஷி இன் ஹெர் அப்பா”, என்றான். ஏதோ பயங்கறமா யோசிக்கரா. நான் ரூமுக்குள்ள போனது. செய்யறது. வந்தது. எதுவுமே தெரியலை. சின்ன சின்ன விஷயம் கூட அவ கண்ணுக்கு தப்பாது. ஏன் இப்படின்னு தெரியலை?”, என்றான்.

“ஒண்ணுமில்லை டா, எக்ஸாம் சரியா பண்ணலைன்னு சொன்னா! அந்த டென்ஷன்னா இருக்கும்”, என்று வாய்க்கு வந்ததை உளறி வைத்தார் சத்தியமூர்த்தி.

அவன் சென்ற பிறகு அவன் அன்னையை பார்க்க.

“பார்த்திபன்னு நினைக்கிறேன்! இன்னும் அவ பார்த்திபன் விஷயத்தை  விடலை, எனக்கு பயமாயிருக்கு. ஏதாவது காதல்ன்னு வந்து நின்னா., நேத்து அவனுக்காக எவ்வளவு பேசினா. இத்தனை நாளா நித்யா ஆன்டின்னு எப்படி பின்னாடி சுத்தினவ, அவளுக்கு ஏதாவது காரணம் இருக்குமான்னு கூட யோசிக்கலை. இந்த பார்த்திபன் நினைப்பு தான் அவளுக்கு”,

“அப்படியெல்லாம் பன்னுவாளா நம்ம அபி”, என்று கவலை குரலில் கலாவதியிடமே திருப்பி சத்த்யமூர்த்தி கேட்க.

“உங்களை. எனக்கு தைரியம் சொல்வீங்கன்னு பார்த்தா, நீங்க என்னை விட பயபடறீங்க. என்ன பையனை வளர்த்து வச்சிருக்காங்களோ உங்க அப்பா அம்மா. என் பொண்ணுக்கு இருக்கிற தைரியம் பாதி கூட உங்ககிட்ட இல்லை! என்ன சொல்றது.”,

“இப்போதைக்கு அவகிட்ட எதுவும் பேச முடியடாது, பேசிட்டு நான் அப்படிதான் அப்படின்னு சொல்லிட்டா ஒண்ணும் பண்ண முடியாது!  வரும்போது பார்த்துக்கலாம். எந்திரிங்க போய் தூங்குங்க!”, என்று அவரிடம் எறிந்து விழுதார் கலாவதி தன் பெண்ணை பற்றி நன்கு அறிந்தவர்.

“இவளுக்கு பார்த்திபனிடம் இருப்பது பரிதாபமா. காதலா? அதை அப்படியே விடுவாளா. திருமணத்தை நினைப்பாளா”, என்று மண்டை குழம்பி தூங்க. அங்கே அபியும், “எப்படி பார்த்திபனை அணுகுவது? அவனுக்கு தன்னை பிடிக்காவிட்டால்.”, இதுவே அவள் தலையாய பிரச்சனையாக இருந்தது.

மறுநாள் விடியல். அவளுக்கு சூரிய உதயத்திற்கு முன்பே ஆரம்பித்தது. சீக்கிரமாக உறக்கம் கலைந்து எழுந்தவள். ஓடினாள், பாத்ரூமிற்கு இல்லை மேல் மாடிக்கு பார்த்திபனை பார்க்க.

சீக்கிரம் பார்த்திபன் வீட்டில் எல்லாரும் எழுந்து விடுவர். ஓடிச்சென்று மேலே இருந்து கீழே பார்த்தாள். அவளின் ஹீரோ அந்த நேரத்தில் செடிகளுக்கிடையில் நின்று ஏதோ செய்துகொண்டிருந்தான். நேரம் அப்போது தான் காலை ஐந்தரை மணியை நெருங்கி கொண்டிருந்தது.

யாரும் பார்க்கிறார்களா? என்று சுற்றும் முற்றும் கவனித்தாள். யாரும் இல்லை. மனதை தைரியபடுத்தி, “ஹாய்”, என்றாள் சத்தமாக. அவனுக்கு கேட்குமாறு.

தினமும் கேட்கும் குரல்தானே யாரிடமோ பேசுகிறாள் என்று. குரல் காதில் விழுந்தாலும் இவன் வேலையே பார்த்துகொண்டிருக்க.

மறுபடியும், “ஹாய்! மேலே பாருங்க பார்த்தி”, என்றாள். விதிர்த்து மேலே பார்த்தான்.

அவனை பார்த்து மறுபடியும், ஒரு “ஹாய்”, போட்டு சிரித்தவள் சிரிப்பு. காலையில் நாம் எழுந்தவுடன், நாம் வைத்த ரோஜா செடியில், ரோஜா மலந்திருந்ததை பார்த்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்குமோ அவ்வளவு இருந்தது. 

“காலையில இவ்வளவு சீக்கிரம்  எழுந்துடுவீங்களா?”, என்றாள். அவன் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்ப்பார்த்த மாதிரியே தெரியவில்லை. அவளே தொடர்ந்து பேசினாள். 

“என்ன பண்றீங்க”, என்றாள்.

அவளை காலையில் அவ்வளவு சீக்கிரத்தில் பார்த்த அதிர்ச்சி., அங்கே இருந்து அவள் கூப்பிடுவாள் என்று கனவிழும் நினைத்தான் இல்லை. அப்போதுதான் தன்னுனர்வுக்கே வந்தான் பார்த்திபன். சுற்றும் முற்றும்  யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க. “யாரும் இல்லை!”, என்று பதில் அபியிடம் இருந்து வந்தது.

ஒன்றும் பேசாமல் உள்ளே போக திரும்பினான். “ஹலோ! என்கிட்ட பேசாம போனா இங்கயே நிற்பேன்! எல்லாரும் வந்து என்கிட்ட கேட்டா நீங்கதான்னு சொல்லுவேன்”, என்று அங்கே இருந்த மதில்சுவர் மேல் எம்பி அமர்ந்தவள், அன்று சுடிதாரோடு தூங்கி விட்டதால். அவளுடைய  காலை மதில்சுவர் மேல்  இருபுறமும் போட்டு அமர்ந்தாள்.

அவளை முறைப்பதற்க்காக மேலே பார்த்த பார்த்திபன். இவள் உட்கார்ந்த விதம் பார்த்து பயந்து. “காலை அப்படி போடு, விழுந்துடபோற”, என்று மெதுவாக சொன்னான்.

அவளுக்கு கேட்கவில்லை. “என்ன”, என்றவளை பார்த்து.

“காலை அப்படி போட்டு இறங்கு! விழுந்துடபோற”, என்றான் உண்மையான பதட்டத்துடன்.

ஆனால் காலை, இவன் வீட்டை நோக்கி வெளிப்புறம் போட்டாள். “ஏய்! விழுந்துடபோற”, என்று பார்த்திபன் பதட்டம் அதிகரிக்க.

“எனக்கு உன்கூட பேசணும்! பேசறேன்னு சொல்லு, போயிடறேன்.”, என்றாள்.

அவள் ப்ளாக் மெயிலில் எரிச்சலானவன். “போடி”, என்று சொல்லி உள்ளே போனான்.

அபிக்கு அப்படி உட்கார்வது பயமாக இருந்தது. சுவரை பிடித்திருந்தாலும், கீழே பார்த்தால் பயம் அதிகரித்தது. கண்களை மூடிகொண்டாள்.

ஐந்து நிமிடத்திற்கு மேல் பார்த்திபனால் பொறுமையாக இருக்க முடியவில்லை. வெளியே வந்து பார்த்தால் கண்மூடி அமர்ந்திருந்தாள்.

அவனுக்கு பயம் அதிகரித்தது, விழுந்தால். அதுவும் அவள் வீட்டு புறம் கூட இல்லை. தன் வீட்டு புறம்.

அவசரமாக, “ஹலோ! உள்ள காலை போடு! விழுந்துடுவ, இல்லை. உங்க வீட்டுக்கு நான் இப்போ வருவேன்”, என்று பதிலுக்கு பார்த்திபன் மிரட்ட.

“”,வாங்க எப்போ வர்றீங்க”, என்றாள் குரலில் உற்சாகத்தோடு, இந்த புறம் கால் போட்டு அமர்ந்த பயம் தெரிந்தாலும், அதை மீறி உற்சாகம் தெரிந்தது.

“இவளை”, என்று ஆத்திரமாக வந்தது பார்த்திபனுக்கு. எதிரே இருந்த்தால் அடித்திருப்பான்.

“சொல்லு! என்ன செய்யனும்னு? ஆனா காலை அந்த பக்கம் போட்டு நீ இறங்கினா தான் கேட்பேன்”, என்றான் மிரட்டலாக.

இவன் இவ்வளவு இறங்கி வந்ததே பெரிது என்றுணர்ந்த அபிராமி. மாடியில் இறங்கி நின்றவள், “எனக்கு உங்ககூட பேசணும்! எங்கே பார்க்கிறது?”, என்றாள்.

“என் கடைக்கு போன் வாங்க வருவயில்லை, அப்போ பேசலாம்”, என்று சொல்லி. இவள் மொட்டை மாடிக்கு அவனை பார்க்க வந்த வேகத்தை விட அதிகமான வேகத்தோடு உள்ளே சென்றான். 

சிறிது நேரம் கழித்து வந்து அவளை பார்த்தான். அவள் இல்லை என்ற பிறகே நிம்மதியாக மூச்சுவிட்டான். “என்ன பெண் இவள்? காலையில் இருந்து என்னை ஒரு பாடு படுத்தி விட்டாள்”,.

“இவள் அப்பன் படுத்தியது போதாது என்று இவளா இப்போது. யார் வந்தாலும் நடக்காது”, என்று மனதிற்குள் நினைத்தான்.

அவனை பார்த்தவுடனே ஜெயாமாவுக்கு வித்தியாசம் தெரிந்தது. “ஏண்டாப்பா காலையிலயே  மூட் அவுட். என்ன விஷயம்?”, என்றார் முகத்தில் இருந்த தீவிரத்தை பார்த்து.

“இந்த பக்கத்துக்கு வீடு, என்னை ரொம்ப தொந்தரவு பண்ணுது”, என்றான்.

“என்னடா?”, என்றார் புறியாதவராக. “உங்க பொண்ணோட நண்பர் இவ்வளவு நாளா உங்க பொண்ணுக்காக தூது வருவார். இப்போ அவரோட பொண்ணை அனுப்பறார்”, என்றான்.

“எரிச்சலா வருது. நான் அம்மா இல்லை, அப்பா இல்லைன்னு. என்னைக்காவது பீல் பண்ணியிருக்கேனா? என்ன ஜெயம்மா இப்படி! எனக்கு நீங்களும் தாத்தாவும் எப்பவும் போதும். அவங்க உங்க பொண்ணு மட்டும் தான். எனக்கு யாரும் கிடையாது. எனக்கு அதுல வருத்தம் கிடையாது”.

“அவங்க வாழ்க்கை அவங்க பார்த்துகிட்டாங்க. அவ்வளவு தான். என்னை இப்படி உயிரை எடுக்க வேண்டாம்னு சொல்லுங்க”, என்றான் கோபமாக.

சத்தியமூர்த்தி இரண்டு மூன்று முறை நித்யாவுக்காக இங்கே சென்னை வந்த பிறகு. பார்த்திபனை பார்த்து அவளுடைய அன்றைய நிலையை விளக்க சென்றிருந்தார். அவன் காது கொடுத்து கேட்காததோடு சற்று கடுமையாக வேறு பேசி அவனை அனுப்பிவிட்டான். இது ஜெயாமாவுக்கும் நித்யாவுக்கும், சத்தியமூர்த்திக்கு மட்டுமே தெரியும். வேறு யாருக்கும் தெரியாது.

அதனால் இப்போது பார்த்திபன் அவள் பேச வேண்டி வரும்போதெல்லாம் நினைத்தது அவனை பெற்றவளுக்காக என்று தான். அபிராமி அவன் மேல் விருப்பம் கொண்டுள்ளாள், என்பது போல் எல்லாம் அவன் சிறு மூளைக்கு எட்டவேயில்லை.

அவள் வரட்டும். அவள் அப்பனை விட அவளை அதிகமாக இந்த புறமே திரும்ப முடியாதபடி பேசி அனுப்புகிறேன் என்று நினைத்தான்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால். பார்த்திபன் நினைத்தது வேறு, நடந்தது வேறோ வேறு., அபிராமி பேசியதை கேட்ட அதிர்ச்சியில் நின்றவனின் வாய் திறக்கவேயில்லை.

அபிராமி இரண்டு நாட்களாக கோயிலுக்கு போய் தானே அவனை பார்த்தாள். அதனால் இன்றும் கோவிலுக்கு போக முடிவெடுத்து  போய் அமர்ந்து கொண்டாள். கடவுளிடம் அவனை இங்கே அனுப்பி வையேன் என்ற பிரார்த்தனையோடு.

அவள் வேண்டுதல் வீண் போகவில்லை. இரண்டு கோவிலுக்கு போய்விட்டு மூன்றாவது கோவிலாக அங்கே பார்த்திபன் வந்தான்.

பிரகாரத்தில் படியில் அமர்ந்திருந்தாள். அவன் எப்பொழுதும் போல் பார்க்கவே இல்லை. கடவுளை வணங்கி படி இறங்கும் பொழுது, “ஹலோ பார்த்தி சர்”, என்றாள்.

குரல் கேட்டவுடனே யாரென்று தெரிந்தது. டக்கென்று திரும்பினான். “உனக்கு வேற வேலையே இல்லையா”, என்று சூடாக ஆரம்பிக்க.

“இப்போதைக்கு உங்க கிட்ட ஐ லவ் யூ சொல்லனும். அது மட்டும் தான் வேலை”, என்றாள் பட்டென்று சிறிது தயங்கிய குரலில்.

“லவ்வா?????????? ”, என்றான். அவன் முகத்தில், குரலில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. தெறித்தது.,  இதை பார்த்திபன் எதிர்பார்க்கவேயில்லை. அவன் அடுத்து கேட்ட கேள்வி அவனையறியாமல் வந்தது, “நீ என்கிட்ட விளையாடுறியா, பொய் சொல்றியா”, என்பதே.

“ச்சே, ச்சே, நான் ரொம்பவும் சீரியஸ். இந்த விஷயத்தில், உங்களுக்கு கல்யாண நிச்சயம் பண்ண போற சமயத்துல, யாராவது விளையாடுவாங்களா”, என்றாள் தீவிரமாக.

பார்த்திபனுக்கு பதிலே பேசமுடியவில்லை. அவளை பார்த்தது பார்த்த படி நின்றான்

இன்னொருவனுக்கும் இதை கேட்டு அதிர்ச்சியில் நின்றான். அவன் ரேகாவின் அண்ணன். நேற்றிலிருந்து பையனை பற்றி விசாரித்தவரை யாரும் ஒரு சொல் தவறாக கூறாவிட்டாலும். தான் அவனை கண்காணித்து இருக்க வேண்டுமோ என்று நினைத்த ரேகாவின் அண்ணன். காலையிலேயே இன்று பார்த்திபனை ஃபால்லோ செய்ய ஆரம்பித்தான் பார்த்திபன் வீட்டிலிருந்து. அவன் காரில் இருந்ததால் பார்த்திபனுக்கு தெரியவில்லை.

பார்த்திபன் முதலில் சென்ற இரு கோவில்களிலும் மூலஸ்தானம் மட்டுமே இருந்தது, சுற்றி  பிரகாரம் பெரியதாக இல்லை. அதனால் இறங்கி கண்காணிக்கவில்லை.  இது பெரிய கோவில் என்பதால் அவன் கண்பார்வையில் படாமல் பார்க்கலாம் என்று அப்போது தான் உள்ளே வந்தான்.

வந்தவன் கண்களில் பார்த்திபனுக்காக காத்திருந்த அபிராமி பட்டாள். “என்ன பேசுகிறார்கள்”, என்று தூண் மறைவில் இருந்து கேட்க முற்பட.,

பார்த்திபன் ஏதோ கோபமாக கேட்பதை பார்த்த அவன். இன்னும் காதை பக்கத்தில் வைத்து கேட்க முற்பட “ஐ லவ் யூ”., என்ற வார்த்தை தான் கேட்டது.      

பிறகு நடந்த சம்பாஷனையும் கேட்டான். இந்த பெண் ஏதோ அவனை தொந்தரவு செய்கிறாளா. இல்லை ஏற்கனவே இருவருக்கும் தொடர்பா. இப்போது திருமணம் நிச்சயம் ஆனதால் அவளை பார்த்திபன் தவிர்கிறானா என்று அறியாமல் குழம்பினான்.

முடிவில் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய், என்றரிந்தவன் பார்திபனிடமே கேட்டு விடலாம் என்று தீர்மானித்து அவனை தேட.,

பார்த்திபன் அபிராமியிடம் என்ன திருப்பி கூறுவது என்று கூட உணர இயலாத அதிர்ச்சியில் இருந்தான். அதனால் அவளிடம் பதில் பேசாமல் வண்டியை எடுத்து கிளம்பியிருந்தான்.

அபியும் அவனிடம் தன் மனதை தெரிவித்த திருப்த்யில் இருந்ததால் எதுவாகினும் பார்த்துக்கொள்ளலாம் என்று அவனை போகவிட்டு அமைதியாக மறுபடியும் படியில் அமர்ந்து கொண்டாள்.

பார்த்திபனை காணாது தேடிய ரேகாவின் அண்ணன் கண்களில் அபிராமி அமர்ந்திருந்தது பட, நேராக அவளிடம் வந்தவன், “ஹலோ! நீ யாரு? உனக்கும் எங்க மாபிள்ளைக்கும் என்ன சம்பந்தம்?”, என்று அதட்டலாக வினவ.

“அதை கேட்க நீ யாரு.”, என்றாள் அலட்சியமாக அபி,

“என்ன இப்படி பேசற?”, என்ற ரேகாவின் அண்ணனை பார்த்து.

“வேற எப்படி பேசுவாங்க. நீ யாருன்னே எனக்கு தெரியாது. சும்மா உட்கார்ந்திருக்கிற என்கிட்ட வந்து மிரட்ற மாதிரி பேசுற! யாரு உன் மாப்பிள்ளைன்னு எனக்கு எப்படி தெரியும்?”, என்றாள் வேண்டுமென்றே.

“ஏய்! நேத்து நீ எங்களை மாப்பிள்ளையோட கடையில பார்க்கலை”,

“ஏய் கீய்ன தெரியும்!”, என்றாள் மிகுந்த கோபத்துடன். அந்த கோபம் கொடுத்த உந்துதல்.

“சும்மா மாப்பிள்ளைன்னு சொல்லாத. கல்யாணம் வரைக்கும் எதுவுமே நிச்சயம் கிடையாது, பார்த்தி என் மாப்பிள்ளை தான்!  போ!”, என்றவள் நிற்காமல் அந்த இடத்தை விட்டு சென்றாள்.

ரேகாவின் அண்ணன் மிகுந்த டென்ஷன் ஆனான். “அடுத்த வாரம் நிச்சயம் எல்லோரையும் கூப்பிட. இன்னைக்கு வீட்ல அப்பாவும் அம்மாவும் போறாங்க. இந்த பொண்ணு இப்படி சொல்லுது”, என்று நினைத்தவன் முதலில் செய்த வேலை அப்பாவிற்கு போன் செய்து.

“அப்பா எனக்கு இன்னும் கொஞ்சம் மாப்பிள்ளைய விசாரிக்கணும்! நாளைக்கு நீங்க கூப்பிட போங்க”, என்றான்.

“டேய்! என்னடா சொல்ற”, என்ற அவனின் தந்தைக்கு பதில் சொல்லாமல் போனை வைத்தான்.

கோபமாக அவன் பார்த்திபனின் ஷோ ரூமை நோக்கி கிளம்ப. அபி அவனுக்கு முன்னே அங்கே சென்றிருந்தாள்.  

ஏற்கனவே தலையை பிடித்தபடி பார்த்திபன் அங்கே அமர்ந்திருந்தான், அபி கூறியதன் தாக்கத்தால்.

ரேகாவின் அண்ணன் தன்னிடம் வந்து பேசிய எரிச்சலில் இருந்த அபி. “தான் பேசியது சரியோ தவறோ. அது பார்த்திபன் சம்பந்தப்பட்டது என்பதால். அவனை பார்த்து சொல்லிவிடுவது தான் சரி.”, என்று நினைத்தவள் அங்கே செல்ல.

“இந்த பெண் என்ன பேசுகிறாள்! என்ன நடக்குது! முதலில் மாப்பிள்ளையிடம் நேரில் பேசவேண்டும்”, என்று தெரிந்து கொள்ள ரேகாவின் அண்ணனும் சென்றான்.

Advertisement