Advertisement

அத்தியாயம் மூன்று:

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்,

இதன் யுத்தகளம் நம் மனம்,

பூமியின் பரப்பளவை அறிந்த மாந்தர்,

இதன் பரப்பளவை கையளவு என்றனர்,

இதன் கொள்ளளவு ?

அதை அறிந்தவர், தெரிந்தவர், புரிந்தவர்,

எவர் ?????????????

பூமியின் கொள்ளளவை விட

இதன் கொள்ளளவு மிக மிக அதிகம்,

அளக்க முடியாதது, அளவிட முடியாதது.

 

“என்ன கலா, பொண்ணு முன்னாடி இப்படி பேசற!”, என்று சத்தியமூர்த்தி கடிந்து கொள்ள………….

“பொண்ணு வளர்ந்துட்டா நம்ம செய்யறது பொண்ணுக்கு தெரிஞ்சிருக்கணும்,  நம்ம எல்லோருக்கும் தெரியும், நீங்களும் நித்யா அண்ணியும், பிரகாஷ் அண்ணாவும் எவ்வளவு க்ளோஸ்ன்னு. அப்படியிருக்கறவங்க இங்க சென்னை வந்ததுல இருந்து தொடர்பே இல்லாம இருக்காங்கன்னா ஏன்ன்னு கேட்கமாட்டாளா அபி”, என்று பொறிய.

“என்ன செய்ய சொல்ற. அதுக்கு என்ன காரணம்னு அவகிட்ட எப்படி சொல்ல முடியும்”,

“முடியணும்! அவ சின்ன பொண்ணு இல்லை! நல்லது கெட்டது தெரியும். காரணம் சொன்னா என்ன தப்பு?”, என்று அம்மாவாக பொண்ணுக்கு பரிந்து பேச.

“புரிஞ்சு பேசறியா நீ, இல்லை புரியாம பேசறியா நீ, இது நித்யா சம்பத்தப்பட்ட விஷயம். இதை நான் சொல்லகூடாது”,

“என்ன கூடாது? வேற யார் மூலமாவது தெரிஞ்சா அப்போ என்ன செய்வீங்க. வேற யாரும் தேவையில்லை உங்க அப்பா போதும், என்னைக்காவது அவர் முன்னாடி அவ சம்பந்தபட்டவங்களோ இல்லை அவ பேச்சோ வந்தா.”, என்று நிறுத்தியவர். 

“என்னைக்கு விஷயத்தை போட்டு உடைக்க போறாரோ”, என்றார்.

இதற்கு எதுவும் பதில் பேசாதவராக சத்திய மூர்த்தி பார்க்க.

பிறகு மெதுவாக மனைவியை பார்த்து, “என்ன செய்யனும்”, என்றார்,

கலாவதிக்கும் தெரியும், நித்யா அவரின் இன்றியமையாத நண்பி என்று, அதனால் அவரை மேலும் கஷ்டபடுத்தாமல்.

“நீங்களா விஷயத்தை சொல்லாதீங்க. ஆனா ஏதாவது பேச்சு வரும் போது சொல்லுங்க. ஏன்னா நித்யா அண்ணி உங்க பொண்ணுக்கு ரோல் மாடல் மாதிரி. அவங்களை பத்தி வாய் ஓயாம பேசுவா. அவங்க வாழ்க்கை நிகழ்வு அவளுக்கு தானா தெரிய வரும் போது இப்படியா என்று தப்பா நினைக்க கூடாது இல்லையா”.

“நீங்க அவங்களை பத்தி அபி கிட்ட பேசினா என்ன? அவ போய் அவங்க கிட்ட கேட்கவா போறா. மாட்டா. ஆனா எனக்கு என்னவோ தெரிஞ்சிட்டா பரவாயில்லைன்னு தோணுது. நம்ம பொண்ணு வளர்ந்துட்டாங்க”,. என்றவர் மறுபடியும் வேலையை பார்க்க செல்ல. யோசனையில் ஆழ்ந்தார் சத்தியமூர்த்தி.

இங்கே சத்தியமூர்த்தியை போனில் அழைத்த நித்யா அடுத்து அழைத்தது தன் அன்னையை, “அம்மா”, என்றவர். “எனக்கு என்னவோ உன்னை பார்க்கணும் போல இருக்கும்மா”, என்றார்.

“நான் தான் அங்கே வரமாட்டேன், நீ எப்பவும் போல ஒரு தடவை வந்துட்டு போயேன். எனக்கு பார்க்கணும் போல இருக்கு”, என்றவரிடம் அவர் அன்னை.

“இப்போல்லாம் முதல்ல மாதிரி அப்பாவை விட்டுட்டு வரமுடியறதில்லை நித்யா. நீ சென்னை வாயேன், எங்கயாவது இங்க இரு. நான் வந்து  பார்க்கறேன்”, என்றார்.

“வீட்டுக்கு வான்னு கூப்பிட மாட்டியே”, என்று நித்யா குறைபட.

“எல்லாம் தெரிஞ்சும் நீயே இப்படி பேசினா எப்படி?”, என்றவர். “சரி மாப்பிள்ளை குழந்தைங்க எப்படி இருக்காங்க?”, என்று வேறு பேச ஆரம்பித்தார்.   

பின் வந்த நாட்களில் நித்யாவை பற்றி பேசும் சந்தர்பம் இல்லாததால்  அவரை பற்றி பேச அவசியம் சத்திய மூர்த்திக்கு  இருக்கவில்லை.

அப்பொழுது செமஸ்டர் எக்ஸாம் டைம் என்பதால் எதையும் அபிராமி சிந்திதாளில்லை. தாத்தா பாட்டி போடும் ரூல்ஸ் கூட அவளை அணுகமுடியவில்லை. அவளுக்கு ஞாபகம் எல்லாம் அவளுடைய எக்ஸாம்! எக்சாம்! எக்சாம்! மட்டுமே.

இதற்குள் ஜெயாம்மா பார்த்திபனுக்கு பெண்ணை பார்த்து, பார்த்திபனுக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லி  நிச்சயம் செய்ய நாள் குறித்திருந்தார்.

“உங்களுக்கு பிடிச்சா எனக்கு ஓ.கே”, என்று பார்த்திபன் சொல்லியிருந்ததால் தைரியமாக பொண்ணை பார்த்து நிச்சயம் செய்திருந்தார். பார்த்திபனும் பெண் பார்க்க வந்திருந்தான். பெண் ரேகா நன்றாக இருந்தாள், படித்திருந்தாள், காலேஜில் விரிவுரையாளராக பணியாற்றி கொண்டு இருந்தாள்.

“சரி”, என்று விட்டான்.  

இங்கே அபி முழுவதும் எக்சாம் டென்ஷனில் இருந்தவள், எக்சாம் முடித்து செமஸ்டர் லீவ் வர. எச்சாமின் ரிசல்டிற்க்காக கடவுளிடம் கோரிக்கை வைக்கலாம் என்று நினைத்தவள் காலையிலேயே வண்டியை எடுத்துகொண்டு கிளம்பினாள்.

முதலில் பக்கத்தில் உள்ள வேம்புளியம்மன் கோவிலுக்கு செல்ல. அங்கே கடவுளை வணங்கி விட்டு வெளியே வந்தாள். அவள் வெளியேறும் சமயம் பார்த்திபன் உள்ளே நுழைந்தான். எப்பொழுதும் போல் அவன் அபிராமியை கவனிக்கவில்லை. அபிராமி அவனை கவனித்தாள்.

மிக அருகில் அன்று தான் அவனை நேருக்கு நேர் பார்த்தாள். ஜெயந்தி சொல்வது போல் ஹாண்ட்சமாக இருந்தான். உயரமாக அளவான உடற்கட்டில், நல்ல முகவடிவத்துடன் மாநிறமாக இருந்தான்.

நிமிடத்தில் அவனை அளவிட்டாலும் கால்கள் தானாக வெளியே வந்திருந்தன. அவன் உள்ளே சென்றவன் கடவுளை வணங்குவதை பார்த்தாள் வேறு எதையும் அவன் பார்க்கவில்லை.

“இதேதுடா இவன் பக்தி பழமா இருப்பான் போல இருக்கே”, என்று நினைத்தவள் அடுத்து வேறு கோவிலுக்கு சிவன் சன்னதிக்கு செல்ல. அங்கே பிரகாரத்தை வளம் வந்து கொண்டிருக்கும் போதே மறுபடியும் பார்த்திபனை பார்த்தாள்.

இந்த முறையும் அவள் தான் பார்த்தாள், அவன் வேறு யாரையும் பார்க்கவில்லை. கடவுளை வணங்கி இவளுக்கு முன் சென்றிருந்தான்.

கடவுளிடம் இவள் வந்த வேலையான எக்சாம் ரிசல்டை மறந்து பார்த்திபனை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தாள். “ஒரு வேளை இவன் நம்மை தொடர்கிறானோ, பார்க்காதது மாதிரி போவது வேஷமோ”, என்று எண்ணியவள்.

பிறகு வேறு ஒரு கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்கி, கண்மூடி திறந்தால், எதிரே  பார்த்திபன் வணங்கி கொண்டிருந்தான்.

“என்னடா இது இன்ன்றைக்கு அபிக்கு வந்த சோதனை”, என்று நினைத்தவளுக்கு. “இவன் தன்னை தொடர்கிரானா? இல்லை சாமி கும்பிடத்தான் வந்தானா? அப்படியென்றாலும் தான் மூன்று கோவிலுக்கு போனால் இவனும் மூன்று கோவிலுக்கு வருவான்”, என்று யோசனையாக இருந்தது.

இவள் யோசித்து நின்றிருக்கு போதே பார்த்திபன் சென்றிருந்தான். அபிக்கு தெரியவில்லை, தினமும் எப்படியும் பார்த்திபன் மூன்று கோவிலுக்கு செல்வான் அது அவன் தினசரி வழக்கம் என்று.

அபிக்கு யோசித்து யோசித்து தலைவலியே வந்துவிட்டது. அவளுக்கு தெரியவேண்டி இருந்தது பார்த்திபன் கோவிலுக்கு வந்தானா அவளை தொடர்ந்தானா என்று

யோசனையோடே வீட்டிற்கு வந்தவள் நாளை கண்டுபிடிக்கலாம் என்று முடிவெடுத்து. மறுநாள் வேறு கோவிலுக்கு போக, அன்று பார்த்து பார்த்திபனும் அந்த கோவில்களுக்கு வர. இவள் குழப்பம் அதிகம் தான் ஆனது.

அவன் உடல் மொழி பார்த்தால் நிச்சயமாக அவன் தொடர்வது போல் தெரியவில்லை. ஆனால் எப்படி தான் போகும் இடங்களுக்கே வருகிறான் என்று மண்டையை உடைத்தவள். இதற்கு மேல் தாங்காது என்றவளாக அவனோடு ஏதாவது பேசலாம் என்று அவன் அருகில்  போகும் சமயம் பார்த்து.

 செல் போன் அலற. கோவில், மற்றவர்களுக்கு இடையூறு அளிக்கும்  என்பதால் அதை சைலண்டில் போடும் பொருட்டு பதட்டமாக  அதை அழுத்த. அன்று அவள் கைகள் நிறைய வேர்த்திருந்ததால் அது நழுவி கீழே விழுந்தது சத்தத்துடன். பார்த்தால் மூடி நழுவி பாட்டரி கழண்டு, பாகம் பாகமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுந்தது.

இரண்டு நாட்களாக, அவள் அவனை கடக்கும் போது. அவள் பார்க்கும் பார்வை. என்று  எந்த சத்தத்திற்கும் அசையாத பார்த்திபன் ஃபோன் கீழே விழும் சத்தத்திற்கு திரும்பினான்.

அது புது செல்ஃபோன். “அச்சோ”, என்று அவளையரிமால் சிறிது சத்தமாக வார்த்தை வந்துவிட.

“இந்த குரல்.”, என்று யோசித்தபடியே பார்த்திபன் ஃபோன் விழுந்ததை பார்த்து அருகில் வந்தாலும் சட்டென்று கைகள் அந்த விழுந்த, பாகம் பாகமாக கழண்ட, செல்போனை எடுத்து அசெம்பல் செய்ய ஆரம்பித்தது.

அவனுக்கு, ”அச்சோ”, என்ற வார்த்தையை மட்டும் சத்தமாக கேட்டதால் அது அவன் தினமும் கேட்கும் குரல் என்று தெரியவில்லை.

அமைதியாக அவள் கையில் இருந்த மற்ற பாகங்களையும் வாங்கி பூட்டினான்.

அது கருங்கல் பாதையில் விழுந்ததால் அதிர்வு அதிகமாக இருந்தது போல அதனால் அது வேலை செய்யவில்லை.

அவன் அதை ஆராய. அபிராமி அவனை ஆராய்ந்தாள். “பக்கத்துல பார்த்தாலும் நல்லா தான் இருக்கான், இதை ஜெயந்திகிட்ட சொல்லனும், உன் சைட் நல்லா தான் இருக்குன்னு என்று”, அவள் நினைத்து கொண்டிருக்க.

“மேம், என்னன்னு தெரியலை வொர்க் ஆகலை. கம்பெனி சர்வீஸ் எதுவும் போட்டு இருகீங்களா”,

அவன் குரலில் நடப்புக்கு வந்தவள்

“இன்சூர் பண்ணியிருக்கேன்”, என்றாள்.

“அப்போ நான் ஓபன் பண்ணினா கிளைம் பண்ண முடியாது. நீங்க வாங்குன கடைக்கே கொண்டு போங்க”, என்றான்.

“நீங்க ஓபன் பண்ணுவீங்களா”, என்றாள் அவன் பின் சொன்னதை விடுத்து.

“நான் இந்த ஷாப் தான் வைத்திருக்கிறேன்”, என்றான்.

அவனை பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆவலில், “எங்கே”, என்றாள்.

ரங்கநாதன் ஸ்ட்ரீட் என்றவனிடம். “நீங்க பாருங்க சர், சரியாகலைன்னா நான் அங்கே கொண்டு போறேன்”, என்றாள்

ஏதோ தூண்ட. “இப்படி யாருன்னு தெரியாம சொன்னவுடனே குடுத்துடுவீங்களா”, என்று பார்த்திபன் அபியை பார்த்து கேட்க.

அவனை ஆச்சர்யமாக பார்த்தவள், “நிஜமாவே உங்களுக்கு என்னை தெரியாதா”, என்றாள்.

“இந்த பெண் என்னடா இப்படி கேட்கிறாள்? நாம் முன்னமே ஒரு வேளை இவளை பார்திருகிறோமோ! நமது கடைக்கு வந்திருகிராளா, இல்லை நாம் கல்யாணத்திற்கு பார்த்த பெண்ணா?”, என்று விழித்தவன் அவன் திருமணத்திற்கு பார்த்த பெண்ணை மனக்கண்ணில் கொண்டு வர.

அந்தோ பரிதாபம்! சிறிது நேரமே பார்த்த அந்த பெண்ணை நினைவில் கொண்டு வர முடியவில்லை.

“எனக்கு உங்களை தெரியுமா”, என்றான் அவளை பார்த்து ஒரு ஆராய்ச்சி பார்வையோடு.

அவனை அறியாமல் தோன்றியது அழகாக இருக்கிறாள். இவ்வளவு அழகு நாம் பார்த்த பெண் கிடையாதே என்று.

“அது எனக்கு தெரியாது. ரெண்டு நாளா நான் அதுக்கு தான் மண்டையை உடைச்சிட்டு இருக்கேன்”, என்றாள்.

நன்றாக பேசினாலே எனக்கு ஞாபகம் வருமா தெரியவில்லை? இந்த பெண் ஏன் உளறுகிறது என்று நினைத்தவன், “எனக்கு புரியலை”, என்றான்.

“நேத்து இருந்து நீங்க என்னை பால்லோ பண்றீங்களா என்று நினைத்தேன்.,” என்று ஆரம்பிக்கும் போதே அவன் மனதில் நினைத்தது வெளியே வார்த்தையாக வந்தது, “என்ன உளறல் இது”, என்று.

“உளர்றனா? நானா?”, என்றவள் ரோஷமாக. “நீங்க இங்கே தானே இருக்கீங்க”, என்று ஏரியாவின் பெயரையும் தெருவின் பெயரையும் சொல்ல. “ஆமாம்”, என்று இன்னும் குழப்பமாக பார்த்தான்.

“நான் உங்க பக்கத்து வீட்ல தான் இருக்கேன்”, என்றவள் மேலே பேசும் முன். “எந்த பக்கத்துக்கு வீட்ல”, என்றான்.

பிறந்ததில் இருந்து அங்கே தான் என்பதால் அவனுக்கு அந்த வீதியில் ஓரளவிற்கு எல்லா முகங்களையும் தெரியும். ஏன் ஜெயந்தியை கூட தெரியும். அபிராமி இரண்டு வருடமாக தான் இருப்பதால் அவளை தெரியவில்லை.  

“உங்களுக்கு ரைட் சைடு வீடு, அப்பா பேர் கூட சத்திய மூர்த்தி”, என்று அவள் சொன்ன க்ஷணம். “நீங்க இதை உங்க சர்வீஸ் சென்டர்ல கொடுத்துடுங்க”, என்று சொல்லி வேறு பேசாமால் திரும்பி நடக்க துவங்கினான்.

அவன் வேகத்திற்கு பின்னோடு ஓடினாள். “ஏன் நீங்க சரி பண்ணி தரமாட்டீங்களா”, என்று ஓடிய படியே பேச.

அதற்கு வாய் மொழியாக பதில் கூட சொல்ல முடியாமல். தலையை மட்டும் முடியாது. என்பது போல் ஆட்டி சென்றான்.

“ஏன்”, என்று அவள் பின்னோடு சென்ற கேட்ட கேள்விக்கு வாய் மொழியாகவும் பதில் வரவில்லை, தலையசைப்பும் இல்லை.

அபிக்கு அவன் பார்வை முன்பு அவளை அறியாத பார்வையாக பார்த்த மாதிரி இருந்தது. இப்பொழுது அந்நியத்தன்மையுடன் பார்த்ததாக தோன்றியது.

நேற்றிலிருந்து அவனை பற்றி அவள் மனதில் அறியாமல் எழுந்த குழப்பம் தற்பொழுது மிகவும் அதிகமாக ஆகியது

அதே குழப்பத்துடன் வீட்டிற்கு சென்றாள்.

பார்த்திபன் அவளுக்கு சற்றும் குறையாத குழப்பத்துடன் இருந்தான். அந்த வீட்டில் இருக்கும் இவள், என்னோடு ஏன் பேசவேண்டும். நான் தான் அவர்களுடன் சம்பத்தப்பட்ட யாரும் வேண்டாம் என்று இருக்கிறேனே.

சமனப்பட்டிருந்த மனது சஞ்சலமானது. முன்பு போல் கோபம் ஆத்திரம் எல்லாம் வரவில்லை. அவனுக்கு இப்போது வருத்தம் மட்டுமே இருந்தது.

தான் மட்டும் ஏன் மற்றவற்களை போல் சந்தோஷமாக இருக்க மாட்டேன் என்கிறேன். என் சந்தோஷம் என்னுள் இருக்கிறதா? யாராவது எனக்கு அதை கொடுப்பார்களா? இல்லை நான் ஏற்கனவே சந்தோஷமாக இருக்கிறேனா. இப்படித்தான் எல்லாரும் இருப்பார்களா.

விடை தெரியாத கேள்விகள்.  

அடுத்த வாரத்தில் என் திருமண நிச்சயம், எனக்கு சந்தோஷமாக இருக்கிறதா இல்லையா? அந்த பெண்ணின் முகம் என் நினைவில் கூட இல்லையே? குழம்ப ஆரம்பித்தான். 

அங்கே பிரகாரதிலேயே அமர்ந்தவன். எங்கிருந்து வந்தாள் இவள்? என்னை குழப்ப. என்று கோபம் முழுவது அபிராமி  மீது திரும்ப. என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான், அவள் என்ன செய்தாள் என்னை?  மனம் சமனப்பட்டே ஆக வேண்டும் என்று யோசித்தபடி கண்மூடி தியானத்தில் அமர்ந்தான். 

வீட்டிற்கு வந்த அபியிடம் அவள் அம்மா. “என்ன அபி லேட் பண்ணிட்ட? இந்த ஜெயந்தி வேற பத்து தடவை என்னை கேட்டுட்டா! நாளையில இருந்து அவளை கூட்டிட்டு போயிடு”, என்று சலித்தவர்.

“அவள் போன் பண்ணினாலாமே ஏன் ஸ்விட்ச் ஆப்ன்னு வருது”, என்றவரிடம்.

“போன் கோயில்ல கீழ விழுந்துடிச்சும்மா வொர்க் ஆகலை”, என்றாள் குரலில் கலக்கத்துடன்.

போன் விழுந்தது, அவனின் ரியாக்ஷன் அவள் குரலில் தானாக கலக்கத்தை சேர்க்க.

தன் பெண்ணிடம் வித்தியாசத்தை உணர்ந்த கலாவதி. “ஏன்மா காஸ்ட்லியோன்னு கவலைபடறியா? வேற வாங்கிக்கலாம். விடு!”, என்றார் தன் பெண் கலங்குவது பொறுக்காமல்.

“இல்லை வேற ஏதாவது பிரச்சனையா?”, என்று கூடவே சந்தேகம் தோன்ற வினவினார்.

“அதும்மா”, என்று ஆரம்பித்தவள், “பக்கத்துக்கு வீட்ல ஒருத்தங்க இருக்காங்க இல்லையா, என் போன் கீழ விழுந்தது இல்லையா.  அப்போ எடுத்து குடுத்தாங்க”, என்றாள்.

இல்லையா, இல்லையா, என்று அவள் தடுமாரியத்தை பார்த்த அவள் அம்மா.  “யாரு பார்த்திபனா?”, என்றார் ஆச்சர்யமாக.

“உங்களுக்கு அவங்க பேர் தெரியுமா?”, என்றாள்.

“தெரியும்! ஆனா உன் ஃபோன்னு தெரிஞ்சா அவன் கைல கூட தொட்டிருக்க மாட்டானே.”, என்றார்.

இரண்டு நாட்களாக தான் அவனை கோயிலில் பார்ப்பதையும் அவன் தன்னை தொடர்கிரானா என்று அவள் சந்தேகப்பட்டததையும் சொல்லாமல்,

“என்னை அவங்களுக்கு தெரியலைமா. எடுத்த பிறகு நான் பக்கத்துக்கு வீடுன்னு சொன்னேன். அப்படியே என் கைல கொடுத்துட்டு போய்ட்டாங்க.”,

“எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு! நமக்கும் அவங்களுக்கு ஏன் ஆகாது”, என்றாள்.

“எனக்கு தெரியும் அபிம்மா! என்னன்னு? ஆனா நான் சொன்னா அப்பா திட்டுவாங்க, நீ அப்பாகிட்டயே கேளு! அப்பா சொல்லலைன்னா நான் சொல்றேன்!”, என்றபடி அவர் செல்ல.

என்னவாக இருக்கும் என்று மறுபடியும் மண்டையை உடைக்க தொடங்கினாள்.

மாலையில் அவள் தந்தை வந்ததுமே. தாத்தாவும் பாட்டியும் இல்லாத சமயமாக பார்த்து நடந்ததை கூறி. “யார் அவன்? நமக்கும் அவனுக்கும் என்ன பிரச்சினை?”, என்று கேட்க.

ஒற்றை வார்த்தையில் அதற்கு அவள் தந்தை சொன்ன பதில் இன்னும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

பழையபடி அவளை கத்த வைத்தது.

“என்ன?????????? நித்யா ஆன்டியோட மகனா பார்த்திபன்!”, என்று.    

Advertisement