Advertisement

அத்தியாயம் பத்தொன்பது:

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்

உலகில் அதிகமான பேர்

வெற்றி பெரும்

யுத்தம் முத்தம் !!

இதழ்கள் போரிட்டாலும்.

யாருக்கும் தோல்வி இல்லை

உனக்கும் வெற்றி !

எனக்கும் வெற்றி !

வெற்றி பெறுவோமா ??

அபிராமிக்கு பார்த்திபனின் திடீர் பாராமுகம் ஏன் என்று புரியவில்லை. எப்பொழுதும் கம்மியாக தான் பேசுவான். இப்பொழுது இன்னும் கம்மியாகி போனது.

இந்த இருபத்தியைந்து தினங்களாக எல்லாம் நன்றாக தான் சென்றது. என்னவாயிற்று  என்றே புரியவில்லை. அவளிடம் மட்டுமில்லை, வீட்டில் அவன் சத்தமே இல்லை. கேட்கும் கேள்விகளுக்கு பதில் அவ்வளவே.

இவள் எப்பொழுதும் போல சகஜமாகவே பழகினாள். ஏதாவது வலிய கேட்டு பதில் வாங்கி கொண்டிருந்தாள். அதுவும் காலை வேளைகளில் இப்பொழுது ஸ்ரீகாந்த், பார்த்திபனிடம்  மேக்ஸ் படிக்க வந்துவிட அபி பார்த்திபனிடம் பேசும் அந்த நேரமும் குறைந்தது.

காலையில் அவன் தோட்டத்தில் இருக்கும்பொழுது ஒரு கால் மணிநேரமாவது பேசுவாள். இப்பொழுது அதற்கு வழியில்லை. ஸ்ரீகாந்த் வந்துவிடுகிறான். இவளுக்கும் காலேஜிற்கு நேரமாகி விடுகிறது. ஜெயந்தி தினமும் இவளுக்காக வந்து காத்திருக்க. எப்படியும் நேரமாகி விடும். பிறகு பஸ் ஸ்டாபிற்கு ஓடுவார்கள்.

இரண்டு பேர் இருப்பதால் இவன் கொண்டு போய் விடவும் வழியில்லை.     

வீட்டில் அவளுக்கு அதிக வேலைகள் இல்லை, அந்த வயதிலும் சமையல் ஜெயாம்மாவே செய்தார். உதவிக்கு ஒரு பெண் காலை எட்டு மணிக்கு வந்தாள். மாலை ஆறுமணிக்கு சென்று விடுவாள். சமையலில் மேல் வேலைகள், கூட்டுவது, துடைப்பது, துணி துவைப்பது என்று அத்தனை வேலைகளும் அந்த பெண்மணியே செய்துவிடுவார்.

காலை வேளைகளில் ஜெயாம்மாவாள் அவளுக்கு டிஃபன் செய்து தருவது சிரமம் என்றுணர்ந்த கலாவதி, காலை அவளுக்கு டிஃபன்  ஜெயந்தியிடம் கொடுத்து விடுவார். ஆனால் அதை சாப்பிட கூட நேரம் இருக்காது. பார்த்திபனுக்கு அவளை எழுப்புவதற்க்குள் போதும் போதும் என்றாகிவிடும். 

அவனுக்கு எழுப்புவது இரு வகையில் சிரமம். அவள் தூங்கும் அழகில் இருந்து எழுப்புவது சிரமம். அவள் அழகை ரசித்து கொண்டே எழுப்புவது இன்னும்  சிரமம். “ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம், இன்னும் கொஞ்ச நேரம்,” என்று கெஞ்சி கொண்டே தூங்குவாள்.

“காலேஜ் டைம் ஆகிடுச்சு”, என்று கத்து. கத்து. கத்திய பிறகே எழுவாள். அவளுடன் பேசுவதை பழகுவதை தவிர்த்தாலும். அது  எல்லாம் அவளை எழுப்புவதில் அடிபட்டு போகும்.     

இரவு அவன் வீட்டிற்கு வரும்போதே பத்து மணியாகியிவிடும், இரவு படித்துக்கொண்டு தான் இருப்பாள்.  அவன் வந்த பிறகு அவனுக்கு பரிமாறுவாள். அந்த ஒரு நேரம் தான் அவனுக்கு பரிமாறுவதால் அதை தவிர்க்க மாட்டாள்.

அவள் எட்டு மணிக்கே உண்டு விடுவாள், பசி தாங்க மாட்டாள். ஜெயாம்மாவும் அதையே விரும்புவார். “நீ சாப்பிட்டிடு”, என்று அவள் உணவு உண்ட பிறகு பெரியவர்கள் இருவரும் உறங்க சென்று விட. இவள் அவன் வரும்வரை விழித்திருப்பாள். பரிமாறி பிறகு தான் தூங்க செல்வாள்.

முன்பெல்லாம் சாப்பிட்டு சிறிது நேரத்திலேயே பார்த்திபன் இவள் உறங்கும் முன் உறங்க வந்துவிடுவான். இப்பொழுதெல்லாம் டீ.வீ பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான். இவள் உறங்கிய பிறகு உறங்க வருவான், இவளுக்கு முன் எழுந்துவிடுவான். எப்படி இப்படி சரியான தூக்கம் இல்லாமல் இருந்தால் உடம்பு கெட்டுவிடாதா என்று தோன்ற தொடங்கியது.

மனதில் வைத்து பழக்கமில்லாத அபிராமி. இன்று அவனை கேட்டு விடுவது என்று அமர்ந்திருந்தாள்.

 அன்று இரவு வரும்போதே மணி பத்தரையை நெருங்கி இருந்தது. கதவை திறந்தவள், எப்பொழுதும் ஏதாவது அவனிடம் பேசுவாள், இன்று ஒன்றும் பேசவில்லை. அமைதியாக கதவை திறந்து விட்டவுடனே உள்ளே சென்றாள்.

என்னடா இது எப்பொழுதும் வந்தவுடனே ஏதாவது பேசும் அபிராமி இன்று ஒன்றும் பேசாமல் போகிறாளே என்று யோசனையாக அவளையே பார்க்க.

அவன் பார்வை தன்னை தொடர்வதை உணர்ந்தாலும் ஒன்றும் பேசவில்லை.

ஒரு மௌனமான நேரமாக அமைந்தது அது. அவன் கை கால் கழுவி வர அமைதியாக அவனுக்கு பரிமாறினாள். ஏன் இப்படி இருக்கிறாள் என்று யோசித்துக்கொண்டே உண்டான்.

“இன்னும் தேவையா” என்று கூட கேட்கவில்லை. இந்த நாட்களில் அவன் எவ்வளவு அளவு எடுத்துக்கொள்வான் என்று தெரிந்திருந்ததால் அந்த அளவு வைத்து நிறுத்தி விட்டாள்.

அமைதியாக என்ன காரணம் என்று கேட்க வேண்டும் என்று நினைத்தவளுக்கு அவள் பேசாத போதும் அவன் பேசாதது கோபத்தை கொடுக்க.

அவன் சாப்பிடவுடன் எப்பொழுதும் தூங்க போய் விடுபவள். இன்று தூங்காமல் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து கொண்டு அமர்ந்தாள்.

ஏனோ அவள் கோபமாக இருக்கிறாள்  அவளின்  ஒவ்வொரு அசைவும் சொன்னது.                   

“தூங்கலையா அபிராமி, நாளைக்கு காலேஜ் லீவா”, என்றான். வேகமாக வெளியே சென்று கதைவை திறந்து பார்த்தாள்.

“என்ன பார்க்கிற அபிராமி”, என்றான் ஒன்றும் புரியாமல்.

“மழை வருதான்னு பார்த்தேன்”, என்றாள்.

புரியாமல் பார்த்தவனிடம். “நீங்க என்கிட்ட பேசிடீங்கலே. அதனால மழைவருதான்னு பார்த்தேன்”.

அவளையே முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் பார்த்தான்.

“தினமும் லூசு மாதிரி நானே தானே உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன். நீங்க பேசறதேயில்லை. பேசறதேயில்லை என்ன? என்னை  பார்க்கவே பிடிக்கலை போல.”,

“காலையில தோட்டம். பிறகு என்னை எழுப்பியவுடனே ஸ்ரீகாந்த் வந்துடுவான். அப்புறம் நான் காலேஜ் போயிடுவேன். அப்புறம் நைட் வருவீங்க. சாப்பிடுவீங்க. நான் தூங்கற வரைக்கும் ரூமுக்குள வரமாட்டீங்க. நான் தூங்கின பிறகு வருவீங்க. காலையில எனக்கு முன்னாடி எழுந்துபீங்க. என்னை நீங்க தவிர்கறீங்க. என்னை பார்க்கவே பிடிக்கலையா உங்களுக்கு.”, என்றாள்.

என்ன முயன்றும் குரலில் சிறிது கலக்கம் தோன்றியது.

“அப்படி எல்லாம் எல்லாம் எதுவுமில்லை அபிராமி”, என்றான் அப்படிதான் என்று தெரிந்தே.

“ஒஹ்! என்கிட்ட காரணம் சொல்ல கூட பிடிக்கலையா? ஒரு வேலை உங்களுக்கு என்னை பிடிக்கவேயில்லையா. நான் ரொம்ப தொந்தரவு பண்ணி கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிட்டேனா.”, என்றாள்.

இந்த முறை அடக்கியும் அழுகை எட்டி பார்த்துவிட்டது.

இவன் கலங்கி விட்டான்.

அவள் அருகில் சென்றவன் அவள் அருகில் அமர்ந்து. “அப்படி எல்லாம் இல்லை அபிராமி, இப்போதைக்கும் எப்போதைக்கும் உன்னை தவிர இனிமே யாரையும் பிடிக்கும்னு தோணலை” என்றான்.

“இல்லை நீ என்ன அவாய்ட் பண்ற எனக்கு புரியுது”, என்றாள்.

“அது அப்படி இல்லை அபிராமி, நீ படிக்கற உன்னை தொந்தரவு பண்ண வேண்டாம்னு தான்”, என்றான்.

அபிராமிக்கு புரியவில்லை. “என்ன தொந்தரவு பண்ற நீ”, என்றாள். 

“அதான் அபிராமி சொல்றேன் எனக்கு உன்கிட்ட பேசிட்டு மட்டும் இருக்க முடியும்னு தோணலை”.

“எனக்கு புரியலை, தெளிவா சொல்லு” என்றாள்.          

“இதெல்லாம் சொல்வாங்களா என்ன?”, என்றான்.

அவனை முறைத்தாள். “உன்கூட சேர்ந்து நானும் ட்யூப் லைட் ஆகிட்டேன். போடா டேய்”. என்று எழுந்துகொள்ள போக. கையை பிடித்து அமர்தியவன், அவளை நெருங்கி அமர்ந்தான். பிறகு.

அவள் கையை விடாமலேயே. “கோபப்படாத அபிராமி, உனக்கு நிஜமாவே புரியலையா”, என்றான்.

இன்னுமா புரியாமல் இருக்கும் அபிராமிக்கு. ஆனால் என்னவோ இனம் புரியாத கலக்கம். அவனிடம் கத்தினாள்.  “புரியலையா, புரியலையான்னு, கேட்டா என்ன சொல்வேன். உனக்கு புரியவைக்க முடியலைன்னு சொல்லு”, என்று குரல் உயர்த்த.

“கத்தாத ஜெயாம்மா எழுதுப்பாங்க, வா நம்ம ரூமிற்கு போகலாம்”.

“நான் வரமாட்டேன். டெய்லி நான் தூங்கின பிறகு தானே வருவ. இன்னைக்கு மட்டும் என்ன? நீ போய் தூங்கு. நான் அப்புறம் வர்றேன்”, என்று முறுக்கினாள்.

“ஷ்! இப்போ நீ வர்றையா இல்லையா?

“முடியாது போ” என்றாள்.

அப்போது தான் கவனித்தான், மரியாதையெல்லாம் பறக்க விட்டிருந்தாள்.

எவ்வளவு சொன்னாலும் திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிகொண்டிருந்தாள்.

பிடிவாதம். ஆனால் அந்த பிடிவாதம் தான் தாங்கள் திருமணத்திற்கே காரணம் என்பதை பார்த்திபன் மறந்துவிட்டான்.

சற்று கோபம் வந்தது பார்த்திபனுக்கு. “சும்மா அடம் பண்ணாத இப்போ நீ வர்றையா இல்லையா?”,

“முடியாது நீ உன் வேலையை பார்த்துட்டு போ”

“இப்போதைக்கு உன்னை பார்க்கறது தான் என் வேலை. நீ வரலை உன்னை தூக்கிட்டு போவேன்’, என்றான்.

“நீ கிழிச்ச.” என்ன பேசுகிறோம் என்றே புரியாமல் வாயடித்தாள். “பக்கத்துக்கு வீட்ல இருந்ததுக்கும் இங்க இருக்கறதுக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது” என்று பதிலுக்கு வாயடிக்க.

ஒன்றும் பேசாமல் லைட்டை அனைத்தவன், அவள் கையில் வைத்திருந்த புத்தகத்தை பிடிங்கி கீழே வைத்து. அவள் திமிர திமிர அப்படியே தூக்கினான்.

ரூமிற்குள் தூக்கி செல்ல. “விடு. விடு,” என்ற அவள் திமிறல் சற்றும் வேலைக்காகவில்லை. கட்டிலில் விட்டவன், “சொன்னா புரிஞ்சிக்கோ என்னை டெம்ப்ட் பண்ணாம ஒழுங்கா படு”, என்றான்.

 “நான் என்ன உன்னை டெம்ப்ட் பண்றேன்?”, என்று கோபத்தில் பதிலுக்கு கத்த.

“இவ்வளவு அழகா என் மனைவி பக்கத்தில இருக்கும் போது தொடாம எப்படி என்னால படுக்க முடியும்”,

“நான் உன்னை எப்போ தொடவேண்டாம்னு சொன்னேன்”.

சொன்ன பிறகு தான் தான் சொன்னதை உணர்ந்தவள், “அச்சோ! நீ என்னை  ரொம்ப பேச வைக்கற. நீ போ”, என்றவள், பேச்சு திசை மாறுவதை உணர்ந்து அதற்கு மேல் மேலே பேசாமல் பிடிக்காமல் அமைதியாக ஏறி படுத்துகொண்டாள்.

அவனும் படுத்தவன், இனி விடுவதாயில்லை. புதிதாய் அவளை அணைத்து படுத்தான்.  அவளை அணைத்து படுத்தவனுக்கு உறக்கம் வரவில்லை. இதற்காகவா தன்னை அவாய்ட் செய்தான் என்று தோன்ற அமைதியாகவே அனுமதித்தாள்.  அவளுடையை அருகாமையே அவனை இம்சிக்கும். இப்பொழுது அவளை தொட்டு கொண்டு எப்படி அமைதியாக படுக்க முடியும்.

இவன் யோசனைகள் ஓடும்போதே அபிராமி உறங்கி இருந்தாள். அதற்குள் மேல் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று அவளை ஆக்ரமிக்க.

அபிக்கு நல்ல உறக்கம். கலைந்தவள். “என்ன இது?”, என்க. “ப்ளீஸ் அபிராமி”, என்ற அவனின் ஒரு சொல் எல்லாவற்றையும் அவர்களுக்குள் மெளனமாக அரங்கேற்றியது.        

காலையில் ஸ்ரீகாந்த் மேக்ஸ் படிக்க வந்தபோது. ஜெயாம்மா எழுப்பிய பிறகே எழுந்தான்.

அபிராமியை, “இன்னைக்கு லீவ் போட்டுகறியா”, என்று கேட்க. “இல்லையில்லை, இன்டர்னல் எக்ஸாம் இருக்கு”, என்று எழுந்து அவசரமாக குளித்து படிக்க உட்கார்ந்தாள். அதற்குள் ஜெயந்தி வர மீண்டும் பஸ் ஸ்டாப் நோக்கி ஓட்டமான நடை. கொஞ்சம் தூரம் போக வேண்டும் மெயின் ரோடிற்கு.

எதையும் காலையில் உணர கூட நேரமில்லை. இனிய நினைவுகளாக எதுவும் தோன்றவில்லை, ஏனென்றால் தோன்ற நேரமில்லை. அவளுக்கு அவசரம், அவசரம், அவன் முகம் பார்க்க முடியாத அவசரம்.

மாலை அவள் வீட்டிற்கு வந்ததும், அவளுக்கு பார்த்திபனிடம் இருந்து போன் வந்தது, “என்ன கலர் பிடிக்கும் உனக்கு”, என்று.

“பேபி பிங்க்”, என்றாள்.

“வேற சொல்லு”, என்றான்.

“என்ன கலர் பிடிக்கும்னு கேட்டுட்டு. வேற சொல்லுன்னா, எனக்கு இது தான் பிடிக்கும்”, என்றாள்.       

“இந்த கலர் வராது அபிராமி”, என்றான் பொறுமையாக.

அவன் ஏதாவது டிரெஸ் வாட்ச் மாதிரி பொருள் கிப்ட் செய்ய கேட்கிறான் என்று அவள். “கொஞ்சம் தேடினா கிடைக்கும்”, என்றாள் புத்திசாலித்தனமாக.

“தேடினாலும் கிடைக்காது” என்றான்.

“ஏன் என்ன வாங்க போறீங்க?”,

“கார்”,

“என்ன காரா?”,

“என்ன கார் இல்லை, வெறும் கார் தான்”, என்று கடித்தான். 

“அச்சோ அச்சோ பார்த்திபன், ஜோக் ஆ. எப்படி, இப்படி”, என்றாள்.

“அது நேத்து நைட் யாரோ என்ன கிட்ட மந்திரம் செஞ்சிட்டாங்க. அதனால அப்படி இப்படி ஆகிட்டேன் போல”,  என்றான் குரலில் குதூகலம் எட்டி பார்க்க.

அபிராமிக்கு முகம் சிவந்து விட்டது

“என்ன பேச்ச காணோம்”, என்றான்

“நாங்கல்லாம் அப்ப அப்படி, இப்ப இப்படி, இல்லை. எப்பவும் ஒரே மாதிரி  தான்.”, என்றாள்.

“இந்த மொக்கை எல்லாம் நமக்கு தாங்காது”, என்றான்.

“ஒஹ்! நீங்க எங்க காலேஜ் பாஷை எல்லாம் பேசறீங்க”,

“நான் மட்டும் என்ன ஸ்கூல் லையா டிகிரி வாங்கினேன்”.

“அது உங்களுக்கு தான் தெரியும்! இவ்வளவு நாளா நீங்க ஸ்கூல் பையன் மாதிரி தான் இருந்தீங்க”, என்றாள்.

“நேத்து நைட்க்கு அப்புறமும் நீ என்னை ஸ்கூல் பையன்னு சொல்றீயா”, என்றான்.

மறுபடியும் முகம் சிவந்து விட்டது அபிராமிக்கு. அமைதியாகிவிட்டாள்.

“ஹேய்! என்ன மறுபடியும் அமைதியாகிட்ட “,

“அது அப்படி அப்படி தான்”, என்றவள்.

“இப்போ எதுக்கு கார்”, என்றாள்.

“உன்னை காலேஜ் ஸ்டாப் வரைக்கும் ட்ராப் பண்ண”

“அதுக்கு காரா. கொஞ்சம் ஓவரா தெரியலை”

“தெரியலையே”

“காலேஜ் வரைக்கும் பண்ணினாகூட பரவாயில்லை”, என்று முணுமுணுக்க.

“அது கூட பண்றது தான். நீ சும்மாவே எந்திரிக்க மாட்டே. இனி அடிக்கடி காலையில டயர்டா வேற ஃபீல் பண்ணுவியா. உன்னை காலேஜ் வரைக்கும் ட்ராப் பண்ண ஈசியா இருக்குமில்லை, அது தான்”, என்றான். 

“நான் ஏன் டயர்டா ஃபீல் பண்ணுவேன்”, என்று அசட்டுத்தனமாக கேட்டு.

அவன் அந்த புறம் வாய்விட்டு சிரிக்க.

அவளே “அச்சோ!”, என்று தலையில் வலிக்காமல் தட்டி கொண்டாள்.

இப்படியாக. ஸ்வீட் நத்திங்க்ஸ் ஆக வெகு நேரம் பேசினர்.

பார்த்திபன் அவன் இயல்பையும் மீறி அவளிடம் அதிகமாக பேசினான். அவன் அப்படி இதுவரை யாரிடமும் பேசியதேயில்லை. திருமணம் ஆகியிருந்தாலும் அபிராமி தான் அவனிடம் உரிமை எடுத்து பேசுவாள். இப்பொழுது அவன் உரிமை எடுத்து பேசினான். அதை அவன் ரசிக்கவும் செய்தான்.

அவன் சந்தோஷம் அபிராமிக்கு நிறைய திருப்தியை கொடுத்தது. நித்யா அவனை விட. தன் தந்தையும் ஒரு காரணம் என்று அவள் நினைத்ததால்  தான் பார்த்திபன் மீது அவள் பார்வை திரும்பியது.

பார்த்த முதலே ஒரு ஈர்ப்பு. சத்தியமூர்த்தியை கொண்டு பார்த்திபன்  அபிராமியை  தவிர்க்கவும் அது அதிகமாகியது. அதுவும்  அவனை அன்று ரேகாவும் அவள் அண்ணனும் பார்க்க வந்தபோது அவனை விட்டு கொடுக்க முடியாது என்று தோன்ற செய்து. காதலாக அவன் மேல் மாறியது.  

நித்யாவிற்க்காகவும் சத்தியமூர்த்திக்காகவும் அபிராமியால் திரும்பி பார்க்க பட்ட பார்த்திபன். பிறகு அவள் பார்வையை அவன் மீது இருந்து திரும்பச் செய்யாமல் ஆக்கிவிட்டான்.

எத்தனை நாட்களாக ராமகிருஷ்ணனும் ஜெயாம்மாவும் அவனை கார் வாங்க சொல்லி சொல்லிகொண்டிருந்தனர்.

ஜெயந்தி இருப்பதால். காலை அபிராமியை மட்டும் பைக்கில் கொண்டு போய் விடமுடியாது என்பதால்.  இன்று அபிராமியை காலேஜ் ஸ்டாப் வரை விடுவதற்கு கார்  வாங்கிவிட்டான்.

ஜெயாம்மாவிற்க்கும் ராமகிருஷ்ணனுக்கும் தன் பேரனின் செய்கையை பார்த்து சந்தோஷம் தான் பொங்கியது.     

Advertisement