Advertisement

நான் இனி நீ – 9

தீபனுக்கு எப்படியாவது அனுராகாவை பிரஷாந்த் கண்ணில் இருந்து மறைத்திட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே..

அவனை இங்கிருந்து போ என்று சொல்ல முடியாது. இது அவனின் தொழில். வந்தவர்களை வா என்றுதான் வரவேற்கும் இடம்.. போ என்று சொன்னாலோ, இல்லை மிரட்டி கிளம்பிட செய்தாலோ ‘ D வில்லேஜ்’ பெயர் தான் கெட்டுவிடும்..

ஆக தீபன் சக்ரவர்த்திக்கு வேறு வழியில்லை.. அனுராகாவை தான் மறைத்து வைக்க வேண்டும்..

அவளுக்கென கொடுத்த குடிலை விட்டு, அவன் தங்கியிருக்கும் அறைக்குத்தான் இழுத்துக்கொண்டுப் போனான்..   

அனுராகா அவனின் பிடியில் இருந்து தன் கையை உருவ முயன்றவளோ பின் அந்த முயற்சியை விட்டு, அவனோடு நடந்தவள் அந்த புதிய குடிலுக்குள் வந்ததுமே தன் கரங்களை உதறி  “தீபன்.. நீ தப்பு மேல தப்பு பண்ற….” என்று அனுராகா கத்த,

“நான் பண்றது எது சரி எது தப்புன்னு எனக்குத் தெரியும்.. கேம் தானே.. உன்னை போகவிடாம தடுக்க நான் எதுவும் செய்றேன்.. நீ உன்னோட ஸ்டெப் மூவ் பண்ணு.. அவ்வளோதான்..” என்றான் அசால்டாய்..

“ஹேய்.. இடியட்… இதெல்லாம் வெளிய தெரிஞ்சா என்னாகும் தெரியுமா??!! அவ்வளோ ஏன் என் டாட்க்கு இதெல்லாம் தெரிஞ்சா யூ ஆர் க்ளோஸ்..” என்று அனுராகாவும் சொல்ல,

“ஹா ஹா.. தெரியட்டுமே…” என்று சிரித்தான்..

அவனின் சிரிப்பு அவளுக்கு வேறெதுவோ உணர்த்த, புருவங்கள் உயர்த்தி அவனைப் பார்க்க,  

“என்ன பேபி புரியலையா?? உன் அப்பா உனக்கு போட்ட பாடிகார்ட்ஸ தூக்கினதே நான் தான்..” என, “என்னது??!!!” என்று அதிர்ந்துதான் போனாள் அனுராகா..

அவள் பழகிய வட்டத்தில் யாரும் இப்படியில்லை.. பணக்காரர்கள் என்றாலும் சட்டென்று நட்பு பாராட்டுவதும், ஒருவருக்கு விருப்பமில்லை என்று உணரும் நேரத்தில் பை சொல்லிடுவதும் இயல்பாகாவே இருந்தது.

ஆனால் இவன்??!!!!

இவன் மனதில் எதையோ வைத்துக்கொண்டு தான் தன்னிடம் நட்புக்கரம் நீட்டினானோ என்று தோன்றியது அவளுக்கு.. லேசுபட்ட ஆளில்லை என்று தெரியும். இருந்தாலும் அவள், பிறரை போல் இவனையும் எண்ணியது தவறு என்று நன்குப் புரிந்தது.

இவன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்… இவனிடம் தான் தோற்பதா??!!

அவன் சொல்ல சொல்ல இறுகிப் போய் இருந்தவள், “நீ என்னை என்ன நினைச்ச தீபன்..??!!! நீ சொல்றத எல்லாத்தையும் கேட்பேன்னா??!!” என்று பார்க்க,

“நான் அப்படி நினைக்கவேயில்லையே…” என்றான் வெகு கூலாய்..

“ம்ம்ம்….” என்று உதடு சுளித்தவள், “இப்படி என்னை ரூம் அரெஸ்ட் பண்ற அளவுக்கு அப்படியென்ன பெருசா??!!!!” என்று அடுத்துக் கேட்க,

“ஹா ஹா… கேம் மா கேம்… நம்ம சீரியஸா இருந்தாதானே த்ரில் குறையாம இருக்கும்..” என்றவன்,

“இங்க நீ என்ன கத்தி கூச்சல் போட்டாலும் யாருக்கும் எதுவும் கேட்காது.. அப்படியே கேட்டாலும் திஸ் இஸ் மை ரூம்.. சோ யாரும் வரமாட்டாங்க.. அதனால கத்தி கத்தி உன்னோட அழகான குரல ஸ்பாயில் பண்ணிடாத..” என்றுவிட்டு அவளின் முன்னே ஒரு இருக்கை போட்டு அமர,

“நீ கேம் ஸ்டார்ட் பணிட்ட தீபன்.. பட் நான்??!!!” என்று அவனைப் பார்த்து நக்கலாய் சிரித்தவள்,  “வெய்ட் அண்ட் சீ…” என,

“ஹா ஹா என்ன ராகா ஜோக் எல்லாம் சொல்ற..” என்று தீபன் சிரிக்கும்போதே “சோ.. பிரஷாந்த் இஸ் ஹியர்…” என்றாள் அமைதியாய் அழுத்தமாய்..

அவள் சொன்னதில் தீபனுக்குத்தான் திக்கென்று ஆனது. சிரித்துக்கொண்டு இருந்தவனின் சிரிப்பு அப்படியே நின்றும் போனது.

‘பார்த்திருப்பாளோ…’ என்று எண்ணியவனுக்கு, தன் தோல்வியை ஒத்துக்கொள்ளவே முடியாது என்று தோன்ற “என்ன உளறல் இது..” என,

“நான் முட்டாள் இல்லை தீபன்… சில விஷயங்கள் கால்குலேட் பண்ணினா நம்ம ரொம்ப யோசிக்க வேண்டியது இல்லைன்னு எனக்குத் தெரியும்.. உன்னோடது அரசியல் மூளைன்னா.. என்னோட பிசினஸ் மூளை..” என்று சொல்லி சிரித்தவளை, வெறித்துப் பார்த்தான் தீபன் சக்ரவர்த்தி.

“என்ன என்னோட கால்குலேசன் சரியா??!!” என்று இரு புருவத்தையும் மாறி மாறி உயர்த்தியவள்,

“நீ யாருன்னு தெரியும்.. எப்படியும் என்னை இங்க வைக்கனும்னு நீ முடிவு பண்ணப்போவே பிரஷாந்த் பத்தி புல் டீடெய்ல்ஸ் உனக்கு வந்திருக்கும்.. ஆனா நீ இவ்வளோ அவசரமா என்னை ரூம்ல லாக் பண்ற அளவுக்குன்னா பிரஷாந்த் இங்கதான் ரொம்ப கிட்ட இருக்கணும்.. இல்லை இங்க வர்றதா செய்தி வந்திருக்கணும்.. ஆம் ஐ ரைட்…” என, தீபன் சிறிது நேரம் பேசவேயில்லை..

அமைதியாய் அமர்ந்திருந்தான்.. எத்தனை யோசித்து எத்தனை செய்தாலும் இவளிடம் தான் செய்யும் அனைத்துமே செயலிழந்து தான் போகிறது என்று எண்ணம் போனது அவனுக்கு..

“பேசு தீபன்…!!!” என்று அனு சொல்ல,

அவனின் எண்ணவோட்டத்தை வெளியே காட்டாது “நீ உளறிட்டு இருந்தா நான் பதில் சொல்லனுமா??!!!” என்றான்.

“ஹா ஹா.. நல்லா சமாளிக்கிற நீ. இட்ஸ் ஓகே.. இப்போ என்ன இந்த ரூம்ல நான் இருக்கணும்.. த்ரீ டேஸ்ல நான் உன்னை மீறி இங்கிருந்து போயிட்டா கேம் ஓவர் அப்படிதானே.. சரி பார்த்துக்கலாம்..” என்று உறுதியாய் சொல்வது போல் சொல்லிவிட்டு,

அங்கிருந்த அப்பிளை எடுத்து கடித்தபடி இருக்கையில் சம்மணமிட்டு அமர்ந்துவிட, அவளையே பார்த்தபடி தான் அமர்ந்திருந்தான்..

என்ன செய்தாலும் அசராது பதிலடி கொடுக்கிறாள். அவளின் தோற்றம், பார்வை பேச்சு எல்லாமே ஒருவித நிமிர்வைத்தான் காட்டியது. நீ என்ன செய்தாலும் நானாக ஏற்றுக்கொள்ளாத வரையிலும் என் தோல்வி என்பது நீ முடிவு செய்ய முடியாது என்று..

ஒருவகையில் தீபனுக்கு ஆச்சர்யமாகவும் இருந்தது ‘இவளா ஒருவனைத் தேடி இத்தனை தூரம் வருகிறாள்..’ என்று..

ஆச்சர்யம்தான்.. தன்னையே சட்டை செய்வதில்லை.. ஒரு பொருட்டாய் கூட மதிப்பதில்லை.. அப்படியிருக்க இவளின் அப்பாவின் கீழ் வேலை செய்பவனைத் தேடி இத்தனை தூரம்.. ஒருபக்கம் பிரஷாந்தை நினைத்து பொறாமையாகக் கூட இருந்தது.

தீபன் கர்வி அல்ல திமிர்பிடித்தவனும் அல்ல… இதெல்லாம் அவனின் ஈகோ என்ற ஒன்றை யாரும் சீண்டாத வரையில்.. அனுராகா ஒவ்வொரு முறையும் அதனை தான் செய்துகொண்டு இருந்தாள். அதனாலேயே தீபன் மேலும் மேலும் மூர்கன் ஆகிக்கொண்டு இருந்தான்.  

இவளிடம் இப்போது எதுவும் பேசக்கூடாது என்று எண்ணியபடி வெளியே எழுந்து வந்தவன் வெளியே பூட்டிவிட்டு மெதுவாகவே நடைபோட்டான்.  வெளியே ஆயிரம் சமாதானங்கள் சொன்னாலும், தீபனுக்கு அவன் மனதே சொல்லியது நீ செய்வது சரியில்லை என்று. இதற்கான விளைவுகளும் சந்திக்கவேண்டும் என்று.. அனைத்தும் தெரிகிறது.. அனைத்தும் புரிகிறது.. இருப்பினும்…..

ஆரம்பித்தாகிவிட்டது.. அதை முடிக்கவும் செய்யவேண்டும்..

அவனுக்கான வேலைகள் நிறைய இருக்கிறது.. இனி அடுத்த வாரம் ஒரு பெரிய பொதுக்கூட்டம் இவனின் பொறுப்பில் தான் சக்கரவர்த்தி விட்டிருந்தார்.. அதற்கான வேலைகள் இப்போதிருந்து ஆரம்பித்தால் தான் உண்டு.. 

தீபன் சக்ரவர்த்தி அங்கேயில்லை என்றாலும் அவன் சொல்படி அங்கே வேலைகள் நடக்கும்தான் ஆனால்?? என்றுமே பொறுப்பில் இருந்து விலகாதவன் என்று பேர் வாங்கிவிட்டு இன்று அதைக் கெடுப்பதா??!!

நெற்றியை தடவியபடி யோசனை செய்ய முயன்றான் ஆனால் அவனின் மனது திரும்ப திரும்ப அனுராகாவிடம் தான் போனது.. இழுத்துப் பிடித்து திரும்ப யோசிக்க, அவனின் அலைபேசியோ வைப்ரேட் ஆகிக்கொண்டே இருந்தது.

எடுத்துப் பார்த்தான்,  உஷாவின் எண்ணிலிருந்தும், அப்பாவின் பிஏ எண்ணில் இருந்தும் ஏகப்பட்ட அழைப்புகள்.

அம்மா என்ன சொல்வார் என்று தெரியும்.. இப்போதைக்கு அவரிடம் பேசவும் முடியாது.. ஆக சக்ரவர்த்தியின் பிஏ அழைப்பிற்கு மட்டும் பதில் பேசினான்..

எடுத்துப் பேசியவனுக்கோ கண்மண் தெரியாத கோபம்.. அவன் ஒன்று நினைத்திருக்க நடப்பது எல்லாம்.. எல்லாமே அவன் நினைப்பதற்கு மாறாக நடக்க,  

 “உங்களை யார் அவங்கக்கிட்ட பணம் வாங்க சொன்னா??!!” என்றவன் கிட்டத்தட்ட கத்தினான் என்றுதான் சொல்லவேண்டும்..

அங்கே நடந்துகொண்டு இருந்தவர்கள் அவனைத் திரும்பிப் பார்க்க, “ஷிட்..!!!!” என்று பல்லைக் கடித்தவன், திரும்ப அறைக்குள் வந்து அமர்ந்தவன் “டூ வாட் ஐ சே… அப்பாக்கிட்ட அண்ணாக்கிட்ட நான் பேசிக்கிறேன்..” என,     

இது என்னவோ வேறு விஷயம் என்று அனுராகா அவனின் பேச்சில் கவனமில்லாது இருக்க,

“முதல்ல வாங்கின பணத்தை கொண்டுபோய் கொடுங்க.. பொதுக்கூட்டம் நடத்த பணம் வரும்.. நான் கொடுத்து விடறேன்..” என்றவனின் முகத்தில் அப்படியொரு எரிச்சல் வேறு.

தீபன் பேசுவது காதில் விழுந்தாலும் கவனிக்காதது போலிருந்தவள், அவனின் இந்த கூற்றில், ‘பார்ரா… வாங்கின பணத்தை திரும்ப கொடுக்க சொல்றான்..’ என்றுதான் பார்த்தாள் அனுராகா..

தீபனுக்கோ ‘சும்மாவே இவ என்னை மோசமா நினைக்கிறா.. இதுல பொதுக்கூட்டம் நடத்த பணம் இவங்க அப்பாக்கிட்ட இருந்து வந்தது தெரிஞ்சா அவ்வளோதான்…’ என்று எண்ணிக்கொண்டவன்,

“அண்ணாக்கு லைன் கனெக்ட் பண்ணுங்க..” என, சிறிது நேரத்தில் மிதுன் “என்னடா எங்க இருக்க??” என,

“நான் இருக்கிறது எல்லாம் இருக்கட்டும்.. பொதுக்கூட்டம் என் பொறுப்புதானே.. உன்னை யார் பணம் வாங்க சொன்னா..?!!” என்றான் என்றுமில்லாத விதமாய் மிதுனிடம்.

“இதில என்னடா இருக்கு…??!!!”

“என்ன இருக்கா??!!! மிதுன்… என்னை கேட்காம ஏன் வாங்கனும்னு கேட்கிறேன்.. என்னோட பொறுப்புல இருக்கிற விசயத்தை நான் ஹேண்டில் பண்ண மாட்டேனா??!!!” தீபன் அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க, அவனின் கன்ன கதுப்புகள் எல்லாம் புடைத்துக்கொண்டு தான் இருந்தது..

சிறிது நேரத்திற்கு முன்னேயும் அனுராகாவோடு கோபமாய் பேசினான்தான் ஆனால் அதில் அத்தனை தீவிரமில்லை என்று அனுராகாவிற்கு தோன்ற, அவனையே பார்த்துகொண்டு இருந்தாள்.

அவளின் மீது கோபத்திற்கும் இப்போது தீபன் பேசும் விதத்திற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்க, ‘இவன் என்ன மாதிரி??!!!’ என்றுதான் யோசித்தாள் அனுராகா..

நல்லவன் என்றும் சொல்லிட முடியவில்லை.. கெட்டவன் என்றும் சொல்லிட முடியவில்லை.. அவளால் தீபன் பற்றி இன்னமும் கூட ஒரு முடிவிற்கு வரவே முடியவில்லை.. அவன் பேசுகையில் எதிர்த்துப் பேசுகிறாள்தான்.. அதெல்லாம் அவன் செய்யும் செயலின் காரணமாய் வந்த எதிர்ப்பு..

அதைத் தாண்டி அவனின்பால் வெறுப்பு என்ற ஒன்றை அவள் இதுவரை உணரவில்லை..

“மிதுன்… அஞ்சு கோடியோ அம்பது கோடியோ நமக்கு விசயமில்லை.. பட் இப்போ இவங்கள்ட இந்த அமௌன்ட் வேணாம்…” என்று திரும்ப தீபன் சொல்ல,

“ஏன்டா.. அம்மா இந்த மேரேஜ் விஷயம் பேசினதுனால வேணாம் சொல்றியா??!!” என,

“ம்ம்ச்…” என்று வெளிப்படையாய் தன் விருப்பமின்மையை காட்டினான் தீபன்..

மிதுனுக்கு இவன் ஏன் இப்படி செய்கிறான் என்று ஒன்றும் விளங்கவில்லை. எப்போதும் இப்படியில்லை.. பொதுக்கூட்டங்கள் எப்போதுமே தீபனின் பொறுப்புதான்.. அது மிதுனுக்கும் நன்கு தெரியும்.. ஆனால் பணம் யாரிடம் இருந்து எவ்வளவு வரும். அதை யார் யாருக்கு பிரித்துக் கொடுக்கவேண்டும் என்றெல்லாம் தீபன் தான் செய்வானும் கூட..

இப்போது அவனில்லை என்றதும், வேலைகள் நடந்தாலும் கூட லோகேஸ்வரன் கொடுத்துவிட்ட பணம், தீபன் சொல்லியே வந்திருக்கும் என்ற எண்ணத்தில் தான் மிதுனும் வாங்கி வைத்துக்கொண்டான்.

சொல்லப்போனால் அதை யாருக்கு என்ன எவ்வளவு என்று பிரித்துக்கொடுக்கும் வேலையில் இருந்தான்.

தீபனின் அழைப்பு என்றதும் தான் வேலையை விட்டு அழைப்பை ஏற்க, தீபனோ இப்படி சொல்ல மிதுன் பதில் சொல்லாது அமைதியாய் இருந்தது..

“மிதுன்..!!!!”

“ம்ம் சொல்லு தீப்ஸ்.. உனக்கு என்னாச்சு.. ஐ திங் யு ஆர் நாட் நார்மல்..” என்று மிதுன் சரியாய் சொல்ல,

“நோ…!!” என்றான் வேகமான ஒரு மறுப்போடு..

அந்த வேக மறுப்பே மிதுனுக்கு நன்றாய் புரிந்தது தீபன் சரியில்லை இல்லை தீபனுக்கு எதுவோ சரியில்லை என்று..

“தீப்ஸ்.. அம்மாக்கிட்ட ஒன்ஸ் பேசிடு..” என, “ம்ம்ச் டேய் நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன சொல்ற??!!” என்று தீபனின் கத்தலில் அனுராகா திகைத்துப் போய் தான் பார்த்தாள்.

‘இவன் என்ன இப்படி பீகேவ் பண்றான்…’ என்று பார்க்க, தீபனின் பார்வை அனுராகாவை தொட்டு மீண்டது..

‘பாக்குற நேரத்துல பாக்க மாட்டா..’ என்று அப்போதும் கூட செல்லமாய் அவனின் மனது சிணுங்க, கொஞ்சம் சிரமப்பட்டே தன் முகத்தினை மாற்றிக்கொண்டவன்,

“சொல்றதை கேளு மிதுன்.. அந்த பணம் நமக்கு வேணாம்.. திரும்ப கொடுத்துவிட.. இதுக்கு முன்ன வாங்கினது எப்படியோ.. ஆனா இனி வேணாம்…” என்றவன் அழைப்பை துண்டித்தும் விட்டான்.

இதற்குமேல் பேசினால் கண்டிப்பாய் மிதுன் அது இதென்று சமாதானம் செய்வான் என்று தெரியும்.

அழைப்பை வைத்தவன் அடுத்து நாகாவிற்கு அழைத்து “என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க ரெண்டு பேரும்..” என்று திரும்ப கத்த, அனுராகா இப்போது எழுந்தே விட்டாள்.

எங்கே போகிறாள் என்று தீபனின் பார்வை அவளைப் பின் தொடர, அவளோ அங்கிருந்த ஒரு ஜன்னல் பக்கம் போய் நின்றுகொண்டாள்.

அவளின் மனதினில் பல யோசனைகளை.. அத்தனை பலவிலும் தீபன் தான்..

அவனைப் பற்றிய அனுமானத்தில் அனுராகா இருக்க, தீபனோ “நாகா…!! திரும்ப அந்த ஷர்மாவை பிடி… தன்னைப்போல பணம் வரும்.. இதுபோல என்னோட அக்கவுண்ட்ல இருந்து தர்மாவை எடுத்து இனிசியல் அமவுண்ட் மிதுன் கிட்ட கொடுக்கச் சொல்லு.. இதுக்கு மேல வேற யார் பணமும் வேணாம்.. மிதுன் நோ சொன்னாலும் எடுத்துக்கொண்டு போய் திரும்ப கொடுத்திட்டு வா.. இப்போவே..” என்றவனின் குரலில் நீ இதை செய்தே ஆகவேண்டும் என்றுதான் இருந்தது.

அனுராகாவோ ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்றவள்,

“நீ என்ன மாதிரி தீபன்??!!” என்றுமட்டும் கேட்டாள் பார்வையை திருப்பாது..

தீபன் இந்த சிந்தனையில் இருக்க, அனுராகா கேட்டது அவனுக்கு மனதில் ஏறவேயில்லை.

“தீபன்…” என்று திரும்ப கொஞ்சம் சத்தமாய் அழைக்க,

“ஹா..!!!” என்று பார்த்தான்..

“நீ என்ன மாதிரி??!!” என்று திரும்பவும் அனுராகா கேட்க,

“என்னது??!! என்ன??!!” என்றான் ஒன்றும் புரியாது..

நிஜமாய் அவனுக்குப் புரியவில்லை. அவள் என்ன கேட்கிறாள் எதை மனதில் வைத்துக் கேட்கிறாள் என்று..  அவனின் முகத்தினை ஆழ்ந்துப் பார்த்தவள்,

“நத்திங்.. நீ உன் வேலைப் பாரு..” என்றவள் “நான் பாத் பண்ணனும்.. என்னோட ட்ரெஸ் எல்லாம் அங்க இருக்கு..” என,

சட்டென்று தீபனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.. சிரிப்பை மறைக்காது அதை செய்தும் விட்டான்..

‘நான் எப்படி டென்சன்ல இருக்கேன்.. இவ எப்படி ஒரு சூழ்நிலைல இருக்கா.. கூலா பாத் பண்ணனும் கேட்கிறா…!!!’ என்று எண்ண, அவளின் தைரியம் கண்டு கொஞ்சமில்லை நிறையவே பிடித்தது அவனுக்கு..

‘பொண்ணுன்னா இப்படித்தான்டா இருக்கணும்.. அதைவிட்டு அழுது ஆர்பாட்டம் பண்ணி ச்சே ச்சே…’  என்று பார்த்துக்கொண்டே தான் இருந்தான்.

“உன்னைத்தான்.. கூட்டிட்டு வந்த தானே.. என்னோட திங்க்ஸ் எடுத்துட்டு வரணும் தெரியாதா…” என,

“ம்ம்ம் போர்ட்டர் ஆகிடுவா போல..” என்று முனுமுனுத்தபடி,

“சொல்லு என்ன ட்ரெஸ் வேணும்..” என்றவனுக்கு சின்னதாய் அவளை சீண்டிப் பார்க்கும் ஆர்வம் தோன்றியது.

“என் திங்க்ஸ் எல்லாம் இங்க வரணும்..”

“அது பாசிபிள் இல்ல… ஒருநாளைக்கு ஒரு செட் வரும்.. கம்மான் சீக்கிரம் டெல் மீ.. எது வேணும் என்னென்ன வேணும் சொல்லு சொல்லு..” என்று சொல்ல,

“ஹா ஹா ஹா..!!” என்று அனு சிரித்தவள், அங்கிருந்த சிறிய மர அலமாரியைத் திறக்க, அதில் தீபனின் உடைகள் இருக்க, அதைப் பார்த்தபடி நின்றாள்.

“ஏய் என்ன பண்ண போற நீ??!!” என்று தீபன் கேட்க,

“ம்ம்… இதெல்லாம் இப்படியே எடுத்து வெளியே போடலாமா இல்லை நான் போட்டுக்கலாமான்னு பாக்குறேன்…” என்று அவள் அசராது சொல்ல, இம்முறையும் அசந்துபோனது தீபன் சக்ரவர்த்தியே.                           

தெரிந்தோ தெரியாமலோ இருவருக்கும் இடையில் ஒரு மென் உணர்வு தோன்ற ஆரம்பிக்க, அங்கே தாராவோ ஏகப்பட்ட குழப்பத்தில் இருந்தார். மகளின் இந்த ட்ரிப் விஷயம் அவருக்கு சந்தேகமாகவே இருந்தது..

ஒன்று அவள் பிரஷாந்தைக் காண சென்றிருக்கவேண்டும்.. அதற்கு தீபனிடம் உதவி கேட்டு இருக்கவேண்டும்.. ஆனால் அனுராகா யாரிடமும் உதவி என்று கேட்கும் ரகமல்ல..

இல்லையோ தீபனின் மனதில் வேறேதாவது எண்ணம் இருக்கவேண்டும்..

இந்த இரண்டுமே ஒன்றிற்கு ஒன்று ஒத்துப்போகாது இருக்க, இது போதாது என்று தீபன் கொடுத்துவிட்டான் என்று ஒரு பணப் பெட்டி வேறு வந்து வீட்டில் அமர்ந்திருந்தது..

அதைக் கண்டதுமே தன் கணவரை வீட்டிற்கு அழைத்துவிட்டார்.. லோகேஸ்வரனும் கொடுத்த பணம் திரும்ப வந்ததைக் கேட்டு வீட்டிற்கு வந்தவர், சக்ரவர்த்தியின் பிஏ விற்கு அழைத்துக் கேட்க,

“தீபன் சார் கொடுக்கச் சொல்லிட்டார்..” என்ற பதிலே வந்தது..  

லோகேஸ்வரன் சிறிது நேரம் அமைதியாய் இருந்தவர், எப்போதும் இல்லாது இப்போது ஏன் இப்படி என்ற கேள்வி அவருக்கும் இருந்தது..

தாராவோ “லோகேஷ்.. இதெல்லாம் எனக்கு சரியா படலை.. பிசினஸ் வேற.. பேமிலி வேற..” என்று தாரா சொல்ல,

“எப்போ இருந்து தாரா நீ இப்படி யோசிக்க ஆரம்பிச்ச??” என்றார் லோகேஸ்வரனும்.

“ஏன்.. யோசிக்கிறதுல என்ன தப்பு.. எனக்கென்னவோ சக்ரவர்த்தி பேமிலி விஷயம் அவ்வளோ மனசுக்கு சரியா படலை.. இதுல நீங்க அவ்வளோ பணம் வேற கொடுத்து இருக்கீங்க..” என்று முடிக்கும் முன்னே,

“அதான் திரும்பி வந்திடுச்சே..” என்று அவரும் சொல்ல,

“இதுதான் எனக்கு டவுட்டா இருக்கு லோகேஷ்..” என்றார் தாராவும்.   

“ஹா ஹா.. இது நார்மல் தானே.. இதுக்குமுன்ன நம்ம கொடுக்கலையா??? இவங்களுக்கு மட்டுமில்லை.. நமக்கு பேவரா இருக்கிற எல்லாருக்கும் கொடுக்கிறோம்.. சோ வாட் தாரா…?!!!”

“இல்லை… அனு வராம எனக்கு எதுவும் அவ்வளோ சரின்னு இல்லை..”

“அனுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..??!! நீ ஏன் இதெல்லாம் கனெக்ட் பண்ணிப் பாக்குற…”

“கனக்ட் நான் பண்ணலை.. தானா ஆகுது.. அனு அந்த தீபனோட ட்ரிப் போயிருக்கா.. இங்க என்னடான்னா கொடுத்த பணம் திரும்ப வந்திருக்கு.. கேட்டா தீபன் கொடுத்தது சொல்றாங்க.. அப்போ இங்க நடக்கிற எல்லாமே அந்த பையனுக்குத் தெரியுதுன்னா என்ன அர்த்தம்??!!!” என்ற தாராவின் சொல்லும் சரியே எனப்பட,  

“பாலிட்டிக்ஸ்ல இதெல்லாம் சகஜம் தானே தாரா.. வெளியப் பார்க்க ஒவ்வொருத்தருக்கு அப்படி பகையா இருக்கும்.. உள்ளப் போய் பார்த்தா எல்லாரும் ஒரே புள்ளியில ஒண்ணா நிப்பாங்க.. நமக்கு நம்ம பிசினஸ் சரியா போகுதா அதுமட்டும் தான் பாக்கணும்.. அண்ட் அனு பத்தி நீ வொர்ரி பண்ணிக்காத..”  என்று லோகேஸ்வரன் சொல்ல,

“நீங்க அந்த பிரஷாந்த அப்போவே மீட் பண்ண விட்டிருந்தா அவ இவ்வளோ தூரம் போயிருக்கவே மாட்டா…” என,

“ஹேய்… பிரஷாந்த் யாரு.. என்கிட்டே கை நீட்டி சேலரி வாங்கற ஒருத்தன்.. அவனைப் போய்.. ச்சே ச்சே…” என்று தலையாட்டிவிட்டு லோகேஸ்வரன் எழுந்து சென்றுவிட, தாராவின் மனதினில் வேறொரு முடிவு தோன்றியது.

ஒன்று அனு பிரஷாந்த் தேடிப் போயிருக்கவேண்டும் இல்லை தீபன் வேறேதும் எண்ணத்தில் இருக்கவேண்டும்..

பிரசாந்த்??!! தீபன்??!!

இருவரில் யார்.. என்று தாராவின் எண்ணம் போனது. பிரஷாந்த் பலவருடங்களாய் அவருக்குத் தெரியும்.. நல்லவன் என்று அடித்துச் சொலல் முடியும்.. அதையும் தாண்டி அனு கூட அவனை ஏற்றுக்கொள்ளும் எண்ணத்தில் இருந்தாள்.

இதெல்லாம் தாராவின் மனதில் ஓட, பிரஷாந்த் ஒருபடி மேலே நின்றான் அனைத்திலும்..    

Advertisement