Advertisement

                           நான் இனி நீ – 40

தீபனுக்கு அனுராகாவை சென்று பார்க்கவேண்டும் என்றுதான் இருந்தது. அது எப்படி அவனுக்கு அவளைக் காணவேண்டும் என்று தோன்றாது போகும். சொல்லப்போனால் வெளிவந்ததுமே அவன் நேரே அவளைக் காணச் செல்லவேண்டும் என்றுதான் நினைத்தான்.

ஆனால், அவன் அவளிடம் என்ன பேசுவான்..?!!

முதலில் அவள் இப்படியொரு விசயத்தை செய்திருக்க, அவளை எதிர்கொள்ளவே தீபன் சக்ரவர்த்திக்கு பயமாய் இருந்தது.

பயம் தான்…

அவனுக்கு அவளைக் கண்டு இப்போது ஓர் பயம். அவள் ஏதேனும் கேட்டால், தான் என்ன சொல்வது என்ற பயம்?!!

‘இதெல்லாம் வேண்டாம்..’ என்று அவள் சொன்னாள், அவனால் அதை மறுக்க முடியுமா என்ன??

அவள் மனதில் அப்படியான எண்ணம் இருக்கிறதா தெரியாது, ஆனால் அவளுக்கு ஓர் அமைதியான வாழ்வு வேண்டும் என்ற உறுதி இருக்கிறது. அது அவனுக்கு நன்குத் தெரியுமே. அனைத்தும் தெரிந்த அவனே, அவளை இந்த நிலைக்கு தள்ளியதாய் ஓர் உணர்வு அவனுள். என்ன சொல்லி அவளிடம் தான் பேசுவது என்ற பயம்.  என்னால் தானே எல்லாம் என்ற கோபம் வேறு.

அவள்மீதும் கோபம் இருந்ததுதான். தான் சொல்லியும் கேட்கவில்லை என்று. அவள் மீதான கோபத்தைவிட அவன்மீதான கோபம் தான் நிறைய இருந்தது அவளுக்கு. அதிலும் அனுராகாவைக் காண்கையில் அக்கோபம் இன்னும் அதிகரிக்கும். அவனின் உணர்வுகள் அந்நொடி எப்படி இருக்கும், அவளின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்று அவனால் வரையருக்கவே முடியவில்லை.

ஒன்று அவளை நோகச் செய்யும். இல்லை தன்னைத் தானே நோகடிக்கும்..

இத்தனையை மனதில் சுமந்துகொண்டு தான் அல்லாடிக்கொண்டு இருந்தான்.

சக்ரவர்த்தி, உஷா எல்லாம் சொல்லிப் பார்த்தாகிற்று. அதிலும் உஷா “தீபன் மத்தது எல்லாம் சரி. அட்லீஸ்ட் அனுராகாவோட பேரன்ட்ஸ நீ மீட் பண்ணனும். அனுக்கும் உனக்கும் நடுவில யாரும் வரல. ஆனா பெரியவங்களுக்கு கொடுக்கிற மரியாதைன்னு ஒன்னு இருக்கு..” என, அதுவேறு போட்டு அவனைப் பாடாய் படுத்தியது.

எந்த முகத்தினை வைத்துக்கொண்டு போய் தாராவிடமும் லோகேஸ்வரனிடம் நிற்பான். எத்தனை கர்வமாய் அன்று தாராவிடம் பேசினான். அவனின் அந்த கர்வம் இன்று எங்கு போனது??!

‘எங்க பொண்ணு, எங்க பொண்ணா இருக்கிற வரைக்கும் இப்படியான எந்த பிரச்னையும் அவளுக்கு இல்லை. நீ அவ லைப்ல வந்தப்பிறகு தான் இவ்வளோவும்…’ என்று தாரா கேட்டால், என்ன சொல்வான்??!!

தலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டவன் அவன் அறையில் தான் உலாத்திக்கொண்டு இருந்தான். உடன் பிறந்தவனை வாழ்வு எதிரியாய் கூட நிறுத்தவில்லை, துரோகியாய் நிறுத்திவிட்டது. காதல் செய்து, கரம் பிடிக்கப் போகும் ஒருத்தியை, ஒரு பெண் சொல்லத் தயங்கும், செய்யத் தயங்கும் செயலை செய்ய வைத்துவிட்டான்.

நேரடியாய் இல்லையென்றாலும், அனைத்தும் அவனால் தானே.. அவனுக்காகத்தானே என்ற நினைப்பு வேரோடிப் போனது அவனுள். 

இத்தனை விஷயங்கள் அவன் மனதில் அழுத்திக்கொண்டு இருக்க, முதலில் அவன் தன்னைத் தானே சமன் செய்துகொள்ள வேண்டும், அதன்பின்னே தான் யாரையும் சந்திப்பது எல்லாம் என்று இருந்துவிட்டான்.   

அவனின் அந்த சைக்கில் பேரணிக்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருந்தது.சக்ரவர்த்தி கேட்டார் “நான் எதுவும் செய்யனுமா??!!” என்று.

“நீங்களோ… கட்சி ஆளுங்களோ யாரும்.. யாருமே அந்த பக்கம் எட்டிப் பார்க்காம இருந்தா போதுமப்பா..” என்றுவிட்டான்.

காதரைக் கூட தீபன் அழைத்துக்கொள்ளவில்லை. முழுக்க முழுக்க அவன், நாகா தர்மா மட்டுமே. என்னென்ன செய்யவேண்டும், யார் யாரைக் காண வேண்டும், யார் யாருக்கு எல்லாம் அழைப்புகள் விடுக்கவேண்டும். என்று எல்லாமே தீபனின் திட்டம் தான்.

தப்பித்தவறிக்கூட அரசியல் ஆட்கள் யாரையும் இதில் அவன் உள் நுழைக்க விரும்பவில்லை. அரசியல் சாயம் அல்லாத ஒரு நிகழ்வை நிகழ்த்திட விரும்பினான்.

அதாவது இன்றைய தலைமுறையினர் மத்தியில் தன்னை ‘யூத் ஐகான்..’ என்று காட்ட, மந்திரியின் மகன், அரசியல் நிழல் உலகத்தில் அவன் வேலைகள் நிறைய என்பது எல்லாம் தாண்டி, தீபன் சக்ரவர்த்தி என்ற தனிமனித அடையாளத்திற்காக இதனை செய்ய நினைத்தான்.

தீபன் சக்ரவர்த்தி வீட்டிற்கு வருகிறான் என்றதுமே, மிதுனை அவர்கள் வீட்டில் இரண்டாவது தளத்திற்கு மாற்றிவிட்டனர். முன்னிருந்த காவலை விட இப்போது இன்னும் அதிகமாய்.

மிதுனின் திட்டம் எல்லாம் தவிடு பொடியாகவும், கண்டிப்பாய் மேலும் ஏதாவது செய்ய நினைப்பான் என்று அவனை வீட்டிலேயே முடங்கும்படி செய்துவிட்டார் சக்ரவர்த்தி.

தீபன் சக்ரவர்த்தி அனைத்தையும் தாண்டி, என்னை வீழ்த்த இப்படியொரு பழியா என் மீது இவன் சுமத்த வேண்டும் என்ற வெறுப்பு வந்துவிட்டது. மற்றது எல்லாம் சரி. ஆனால் அந்த மாடலின் மரணம், அதுவும் தீபனுக்கும் அவளுக்கும் இருக்கும் தொடர்பு என்று.. ச்சே என்றாகிப் போக,

“ப்பா அவன் விசயத்துல நீங்க எதுவேனா முடிவு பண்ணிக்கோங்க.. ஆனா தப்பித் தவறி அவனோட முகத்தை இல்லை, அவன் பேரைக் கூட நான் கேட்க விரும்பலை..” என்றுவிட்டான்.

அதற்குமேல் அவனைப் பற்றி பேசவும், சிந்திக்கவும் அவன் விரும்பவில்லை. முழுக்க முழுக்க தன்னை தன் வேலையில் ஆட்படுத்திக்கொள்ள, சைக்கிள் பேரணி விசயமாய் நாகாவோடும் தர்மாவோடும் பேசிக்கொண்டு இருந்தான்.

“சரியா எலக்சன் ரிசல்ட்ஸ் வர்றதுக்கு நாலு நாள் முன்னாடி இதை செய்யணும்.. எந்த மாற்றமும் இல்லை. அதுக்குள்ள சைக்கிள்ஸ் எல்லாம் ரெடியாகிடனும். இம்பார்ட்டன்ட்டா மிடில் கிளாஸ் அண்ட் லோயர் மிடில் கிளாஸ் பீப்பில்ஸ் கிட்ட இது ரீச் ஆகணும்..” என்று சொல்லிக்கொண்டு இருந்தவன், பின் அமைதியாய் மேஜை மீது விரித்து வைக்கப்பட்டு  இருந்த  சென்னை மாநகர மேப்பினை பார்த்துக்கொண்டு இருந்தான். எவ்வழியில் ஆரம்பித்து எப்படி எங்கே செல்லவேண்டும் என்று.

நாகாவும் தர்மாவும் அவன் சொல்வதற்கு எல்லாம் பதிலே சொல்லாது அமைதியாகவே நிற்க, “என்னடா சைலண்ட்டா இருக்கீங்க..” என்று தீபன் கேட்க, 

“இருந்தும் நீங்க போய் பார்த்திருக்கணும்…” என்று தர்மா சொல்ல,

“என்னடா??!!!” என்றான் புரியாது.

“நீங்க தப்பு பண்றீங்க..” என்றான் அடுத்து நாகா.

இத்தனை ஆண்டுகளில் இருவரும், தீபனிடம் இப்படி பேசியதே இல்லை. அத்தனை ஏன், அவன் எது சொல்கிறானோ அதை அப்படியே ஏற்று சரி என்றுதான் சொல்வரே தவிர, இதுபோல் எல்லாம் அவர்கள் சிந்தித்தது கூட இல்லை.

அப்படியிருக்க, திடீரென்று இப்படிச் சொல்லவும்,“நானா??!! நான் என்ன பண்ணேன் இப்போ..” என்றவன், இருவரையும் மாறி மாறிப் பார்க்க,

“அதில்ல.. வந்ததுமே நீங்க போய் அவங்களை பார்த்திருக்கணும்..” என்றான் நாகாவும்.

“எவங்களை…??!!” என்று கேட்டவனுக்குப் புரிந்தது. அனுராகாவைத் தான் சொல்கிறார்கள் என்று.

இருந்தும் கேட்க, “நீங்க கிளம்புங்க.. போய் முதல்ல பார்த்துட்டு வாங்க..” என்று நாகா சொல்லியபடி அந்த மேப்பினை மடக்க,

“டேய்.. என்னடா இப்படி மாறிட்டீங்க..??!!” என்றான் அதிர்ச்சியாய்.

“கூட இருக்கிறது பெருசில்ல.. நல்லது செய்யணும்.. நல்லது எடுத்து சொல்லணும்.. நீங்க சொல்றத எல்லாம் கேட்டு செய்றது மட்டும் உங்களுக்கு நல்லது பண்றதுன்னு ஆகிடாது..” என்று தர்மா சொல்லவும்,

“ஓ!!! அப்போ போங்களேன்.. போய் அவங்கக்கிட்டயே வேலைக்கு இருந்துக்கோங்களேன்..” என்று தீபன் சொன்னாலும், அவனையும் மீறி முகத்தினில் ஒரு முறுவல்..

“எதுக்கு அவங்க பல நேரம் திட்றது எல்லாமே புரியாத வார்த்தைல..” என்று நாகா சொல்ல, தீபனின் அந்த முறுவல் அப்படியே சத்தமான சிரிப்பாய் மாறியது..

தீபனுக்கு அப்படியொரு சிரிப்பு..??!!

மனதில் இருக்கும் அழுத்தங்கள் எல்லாம் மீறி, இப்படி அவன் சிரிப்பான் என்பது அவனுக்கே ஆச்சர்யமாய் இருந்தது.

ஆனால் சிரிப்பு அடக்கமாட்டாமல் வர, இரட்டையர்கள் இருவரும் அமைதியாகவே இருக்க,

“என்னடா இப்படி மாறிட்டீங்க??!!” என்றான் சிரிப்பினூடே.  

“இனி அப்படித்தான்..”

“அதுசரி.. நானே மாறிட்டேன்.. நீங்க மாறினதா அதிசயம்..” என்றெண்ணியவன் “இப்போ என்ன நான் போய் பார்க்கணுமா..” என,

“நாங்க சொல்றதுக்காக எல்லாம் போகணும்னு இல்லை..” என்று இருவரும் ஒருசேர சொல்ல,

“டேய் ரொம்ப பண்றீங்கடா நீங்க..” என்றவனும், எத்தனை நாளைக்குத் தள்ளிப்போடுவது என்று கிளம்பியும் விட்டான்.

முக்கியமாய் லோகேஸ்வரனுக்கு நன்றி சொல்லவேண்டும். அவர் முயற்சி செய்திராவிட்டால் அந்த ‘மஹிட்..’ என்பவனை கண்டுபிடித்திருக்கவே முடியாது. அதையும் தாண்டி திருமண தேதியும் குறித்தாகிப் போனது.

‘தள்ளிப்போடாதே…’ என்று மனம் சொல்ல, கிளம்பிவிட்டான்.

உஷாவிடம், சக்ரவர்த்தியிடம் என்று யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. நாகாவிடமும் தர்மாவிடம் பேசிக்கொண்டு இருந்தவன் அவர்களிடம் கூட ‘சரி..’ என்று சொல்லவில்லை.

“போய் வேலையைப் பாருங்க.. வந்துட்டானுங்க எனக்கு அட்வைஸ் பண்ண..” என்று அவர்களிடமும் கடுப்படித்தவன், அவர்கள் செல்லவுமே கிளம்பிவிட்டான்.        

அனுராகாவின் வீடு வரைக்கும் வந்துவிட்டான். அத்தனை ஏன் அங்கே அவர்கள் வீட்டின் ஹாலில் கூட வந்து அமர்ந்துவிட்டான். தாராவிடம் கூட பேசியாகிவிட்டது.

“சாரி ஆன்ட்டி..” என்று தீபன் சொல்ல வர, “இருக்கட்டும் பா..” என்றுவிட்டார்.

அதற்குமேல் அவருக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை,  தீபனும் சங்கடமாகவே அமர்ந்திருக்க, “ரூமா, அனு வர சொல்லு..” என்று தாரா சொல்ல,

“இல்ல.. நான்.. நானே போய் பார்த்துக்கிறேன்..” என்றான் இவன்.

ஆனால் எழுந்துச் செல்லத்தான் அவனால் முடியவில்லை.. ‘ராகா…’ என்று அவள் பெயர் சொல்லி அழைக்கக் கூட அவனுக்கு அப்படியொரு தயக்கம்.

தாராவிடம் நானே செல்கிறேன் என்று சொன்னவன், அமர்ந்தபடி இருக்க “நான் போய் சொல்லட்டுமா??!!” என்றார் தாரா.

“இல்ல.. ஆன்ட்டி.. நான் நானே போறேன்..” என்றவன், “அ.. அனுராகா அப்பா இல்லையா??” என,

“அவர் நேத்தே நியு யார்க் போயிட்டார்.. வர டென் டேஸ் மேல ஆகும்..”  என,

“ஓ..!! ஓகே..” என்றவன், தயங்கியே எழுந்து  சென்று அவளின் அறை கதவினைத் தட்ட, தாராவிற்கே தீபனின் இந்த தயக்கம், இந்தத் திணறல் எல்லாம் அதிசயமாய் இருந்தது.

அனுராகா அறைக் கதவு தட்டப்படவுமே,  “எஸ்…” என, அவளின் குரல் வந்து எட்டியது இவனை.

அலுவலகம் கிளம்பிக்கொண்டு இருப்பாள் போலும். மேஜை மீதிருந்த இரண்டு பைல்களை புரட்டிப் பார்த்து அவளின் ஆபிஸ் பேக்கில் வைத்தபடி  “ப்ரேக்பாஸ்ட் வேண்டாம்.. மீட்டிங் இருக்கு.. அங்க பார்த்துக்கிறேன்..” என்றவள், பதிலே வராது போகவும், திரும்பிப் பார்க்க, தீபன் நின்றிருந்தான்.

அவனைக் கண்டதுமே, கண்கள் தானாக விரிய, செய்துகொண்டு இருந்த வேலையை கைகள் நிறுத்திவிட, “தீப்ஸ்…” என்று அவளின் இதழ்கள் மெதுவாய் அசை, இதயம் தாறுமாறாய் துடிக்கத் தொடங்கியது.

வந்துவிட்டான்…. என்னெதிரே வந்துவிட்டான்.. என்னிடமே வந்துவிட்டான்..

அனுராகாவின் மனது அதிலேயே ஆசுவாசப்பட்டுவிட “தீப்ஸ்… நீ.. வா.. உள்ள வா..” என்றாள் வேகமாய்.

என்னவோ புதிதாய் பார்ப்பதுபோல் ஒரு எண்ணம். ஒரு துடிப்பு.. ஒரு பரவசம்.

கதவின் அருகேயே நின்றவன், அசையவே இல்லை. அசையும் நினைப்புக் கூட வரவில்லை அவனுக்கு.. பார்வை முழுவதும் அவள்மீதே நிலைக்க, இதயம் படபடவென அடிக்கத் தொடங்கியது.

இப்படியே திரும்பிப் போய்விடலாமா என்ற நினைப்புக் கூட வந்துவிட, ‘தீப்ஸ்.. நீயா இது..’ என்று அவனுக்கு அவனே கேட்டுக்கொள்ள,

“ஹேய்..!! என்ன இது.. கம்மான்.. உள்ள வா..” என்றாள் அனுராகா.

“இ.. இல்ல.. அது.. நீ ஆபிஸ் போறியா.. மீட்டிங் இருக்குன்னு..” எனும்போதே, அவனை ஒரு பார்வை பார்த்தவள்,

“உள்ள வா நீ முதல்ல..” என, வந்தான்.

“சிட்.. சிட்..” என்று அங்கிருந்த சோபாவை காட்டியவள் “வந்திடுறேன்..” என்றுவிட்டு, அவள் எடுத்து வைத்திருந்த பைலை எடுத்துக்கொண்டு “மாம்..” என்று அறைக்கு வெளியே ஓடினாள்.

தாரா அவரின் அறையில் இருக்க, “ரூமா மாம் எங்க..” என,

“மேம் ஆபிஸ் கிளம்புறாங்க..” என்றாள்.

தாராவிற்கு தீபன் வரவுமே தெரிந்துபோனது, மகள் கிளம்ப மாட்டாள் என்று. ஆக அவரே கிளம்பிக்கொண்டு இருக்க “ஓகே கூட்.. இந்த பைல்ஸ் அம்மாக்கிட்ட கொடுத்திடுங்க.. தென் மீட்டிங் நோட்ஸ் எல்லாம் என்னோட பிஏ கொடுத்திடுவார்.. ” என்றவள்,

“ஒரு பைவ் மினிட்ஸ் கழிச்சு பிரெஷ் ஜூஸ் ரெண்டு..” என்றவள் திரும்ப அவளின் அறைக்குச் செல்ல,

“நீ.. பிசின்னா நான் அப்புறம் கூட வர்றேன்..” என்றான் தீபன்.

இதனைக் கேட்டவளோ ‘தோடா..!!!’ என்று பார்க்க, தீபன் பார்வையைத் திருப்பிக்கொள்ள “சோ.. கோவமெல்லாம் போயாச்சா..” என்றாள் இலகு குரலிலேயே.

அவ்வளோதான். அத்தனை நேரம் இருந்த தயக்கம் நொடியில் விடுபட, பட்டென்று திரும்பி தீபன் அவளை முறைக்க,

“திட்டனுமா??!! அடிக்கனுமா??!!” என்றாள் அவனை நேருக்கு நேர் பார்த்து.

இப்படிக் கேட்டதும் வந்ததே அவனுக்கு ஒரு ஆவேசம்.

“ஸ்டாப் இட் ராகா.. என்ன கேட்ட.. என்ன கேட்ட நீ.. திட்டனுமா அடிக்கனுமாவா??!! இதுல ஏதாவது ஒன்னு என்னால செய்ய முடியுமா? அப்படி ஒரு நிலைமை தானே நீ கொடுத்திருக்க..” என்று கத்த, அனுராகா அமைதியாய் அவனைப் பார்த்தாள்.

“டெல் மீ ராகா.. பதில் பேசு.. இப்படிச் சொல்லித்தான் நான் வெளிய வரணுமா??!! என்ன டி  நீ இப்படி பண்ணிட்ட..” என்று கேட்கும்போதே அவனுக்கு சர்வமும் பதறித்தான் போனது.

எப்படி இவளால் இதனை செய்ய முடிந்தது??!!

அனுராகா சொல்லியிருந்த ஜூஸ் வரவும், அதனை வாங்கியவள் “அம்மா கிளம்பிட்டாங்களா??!!” என,

“எஸ் மேம்..” என்று சொல்லி வேலையாள் சென்றுவிட, “ம்ம் ஜூஸ் குடி தீப்ஸ்..” என்றாள் அவனிடம்.

“ம்ம்ச் ராகா…!!!”

“நடந்தது எதையும் மாத்த முடியாது தீப்ஸ்.. அக்சப்ட் தான் பண்ணிக்கணும். வேற வழி இல்ல..” என்றவள், வம்படியாய் அவன் கரங்களில் ஜூஸ் க்ளாசினை திணிக்க,

“ஏன் இல்ல?!! எனக்கு எப்படி வெளிய வரணும்னு தெரியாதா ராகா..??!! நீ உன்னோட நேம் ஸ்பாயில் பண்ணித்தான் என்னை வெளியக் கொண்டு வரணுமா??!! அந்த இண்டர்வியு நானும் பார்த்தேன்.. உன்ன நோக்கி வந்த ஒவ்வொரு வார்த்தையும்..” எனும்போதே, அவன் கைகளில் இருந்த அந்த கண்ணாடி டம்பளர் விரிசல் விட்டு நொறுங்கத் தொடங்க, அவன் கரங்களில் கூட கீறல்கள் விழ,

“ஓ..!! காட்.. என்ன தீப்ஸ் நீ..” என்று கடிந்தவள்,  வேகமாய் கதவு திறந்து “ரூமா..” என்றழைக்க, ரூமாவும் வந்துவிட்டாள்.

“பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் கொண்டு வாங்க.. கம்மான் க்விக்.. ” என, அவளின் குரலில் தெரியும் பதற்றம் கண்டு ரூமா ஓடிச் சென்று தான் திரும்பி ஓடி வந்தார் கையினில் பர்ஸ்ட் எய்ட் பாக்ஸோடு.

“கிளீன் பண்ண சொல்லுங்க..” என்று அறையினைக் காட்டியவள், தீபனிடம் வந்து “வா.. அங்க வந்து உட்கார்..” என, அவனோ வலி நிறைந்த ஒரு பார்வை பார்த்தான்.

“தீப்ஸ்.. ப்ளீஸ்.. நமக்குள்ள நடந்த எல்லா மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கும் போதும்..” என்றவள், அவனை எழுப்பி, அவளின் கட்டிலில் அமர வைக்க, அடுத்த இரண்டு நொடியில் ஜூஸ் கொட்டிய இடம் சுத்தம் செய்யப்பட, அனுராகாவும் தீபனின் கரத்தினை சுத்தம் செய்து மருந்து போட்டாள்.

“தேங்க் காட்.. டீப் கட் இல்ல..” என்றபடி மருந்திட,

“டீப் கட் இங்க..” என்றான் அவனின் நெஞ்சைத் தொட்டு.

அவனை தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்தவள் “அப்படியா.. இந்தா இந்த மருந்து கொஞ்சம் குடி.. உள்ள இருக்க கட்டும் சரியாகும்..” என, அவனின் இதழில் லேசாய் ஒரு புன்னகை.

‘ராட்சஸி…’ என்று உள்ளம் சொல்லியது..!!

மின்னல் வேகத்தில் ஒரு புன்னகை வந்து எட்டிப் பார்த்து போனது அவளின் கண்களுக்கும் தெரிய அவனி முகத்தைத் தான் பார்த்தாள்.

அன்று அங்கே சிபிசிஐடி அலுவலகத்தில் எப்படி இருந்தானோ அதுபோலவே இன்றும். இன்னமும் தாடி வைத்து, முகத்தில் பாதியைக் காணோம். என்றும் இப்படி இருந்திட மாட்டான். மீசை மட்டும் தடிமனாய் வைத்திருப்பான். சில நேரம் முறுக்கு மீசை கூட. அதை அவ்வப்போது அவனின் விரல்கள் தானாய் முறுக்கிவிட்டுக்கொள்ளும்..!!

அவனின் முகத்தையே பார்த்தவள் “ஏன் இப்படி??” என, அவனின் இன்னொரு கரமோ அவனின் தாடியை தடவிக்கொள்ள,

“இந்த மூஞ்சி வச்சிட்டு இனி என் முன்னால வந்திடாத..” என்றாள் வேண்டுமென்றே.

“அப்படியா??!! ஏன்.. ஏன் அப்படி??!!” என்று அவனும் கேட்க,

“உன்ன அங்க பார்க்க வர்றப்போ நீ இப்படிதான் இருந்த.. சோ.. ஐ டோன்ட் வான்ட் டு சி யு லைக் திஸ்..” என

“தென் டெல் மீ வொய் டிட் யூ..” என்று அவனும் வேகத்தில் கேட்க வரும் போதே,

“பயந்துட்டேன் தீப்ஸ்..” என்றாள் பட்டென்று.

“வாட்??!!” என்று தீபன் அதிர்ந்து பார்க்க,

“எஸ்.. ரொம்ப பயந்துட்டேன்.. உனக்கு.. ஏதாவது ஆகிடுமோன்னு ரொம்பவே பயந்துட்டேன்..” என்றவளுக்கு கண்களில் நீர் தேங்கிவிட்டது.

இத்தனை நாள் அழாத ஓர் அழுகை.. அழுகையை விழுங்கி விழுங்கி வைத்திருந்தது இப்போது வெளிவரத் தயாராகிக்கொண்டு இருந்தது.

“ராகா??!!” என்றவனின் குரலில் இன்னும் அதே அதிர்ச்சி இருக்க,

“எஸ்.. நிஜமா ரொம்ப பயந்துட்டேன்.. எதுக்காகவும் யாருக்காகவும் உன்ன மிஸ் பண்ண நான் விரும்பல.. அப்படி இருக்கப்போ, இந்த பிரச்சனை எல்லாம் ஸ்டார்ட்டிங்கல நார்மல் ஒன் அப்படின்னு தான் நினைச்சேன் தீப்ஸ்.. பட் என்னவோ.. போக போக, நீ வெளிய வர்றது டிலே ஆக ஆக எனக்கு டென்சன்.. அங்கிள் எவ்வளோ ட்ரை பண்ணிக்கூட முடியலைங்கிறப்போ எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை..” என,

“அதுக்காக.. நீ அப்படி சொல்லனுமா ராகா..” என்றான் அவளின் இரண்டு கைகளையும் பற்றி, அவனின் கண்ணில் அழுத்திக்கொண்டு.

“உனக்கு வேற யாரோடவும் ரிலேஷன்ஷிப் இருந்தது.. கொலை அது இதுன்னு மத்தவங்க பேசுறதுக்கு.. உனக்கும் எனக்கும் இருக்க ரிலேஷன்ஷிப் வெளிய தெரியறது எவ்வளவோ பெட்டர் தீப்ஸ்..” என்று அனுராகா சொல்ல சொல்ல, தீபனின் கண்கள் கலங்கியது.

கண்கள் மட்டுமா.. மனதும் கலங்கியது.. அவனின் உயிரும் கலங்கியது..

கவலையினாலோ, கோபத்தினாலோ வந்த கலக்கம் அல்ல இது.. அவன்மீது அவள் கொண்டிருக்கும் காதலை எண்ணி வந்தது.

அட எண்ணம் மீறுது..

வண்ணம் மாறுது..

கண்ணோரம்…

‘ஆண் பிள்ளை அழலாமா??!!’ இப்படித்தானே அனைவரும் சொல்வர்.. அதிலும் தீபன் சக்ரவர்த்தி போன்ற ஒருவனின் கண்களில் கண்ணீரா??!!!

இது சாத்தியமா??!!

சாத்தியம் தான். மனம் நிறைந்த காதலில்.. மனதை நிறைத்த காதலியால் இது சாத்தியமே.

அனுராகாவின் கரம் பிடித்து தன் கண்கள் ஒற்றியிருந்தவன் என்ன நினைத்தானோ அப்படியே தன்னுடலை வளைத்து  மடியினில் முகம் புதைத்திருந்தவன் “எனக்காக ஏன் ராகா இப்படி பண்ண நீ??!” என்று திரும்பக் கேட்கையில் அவனின் குரல் உடைந்து போனது.

“ஐம் நாட் விர்ஜின்னு சொன்னா கூட நீங்க யாரும் நம்ப மாட்டீங்கன்னு.. நீ சொல்றப்போ எனக்கு.. எனக்கு எப்படி இருந்தது தெரியுமா.. இப்படியெல்லாமா டா நீ உயிரோட இருக்கணும்னு நினைச்சேன்..” என,

“ஷ்..!! தீப்ஸ்…” என்றாள், திகைத்து.

“போ டி… எனக்கு அப்படியே உயிர் எவ்வளோ துடிக்குது தெரியுமா??!! உன்ன எவனாவாது சும்மா பார்த்தாலே கொல்லனும் போல இருக்கும்.. ஆனா நீ.. இப்…” என்றவன் அதற்குமேல் சொல்லாது தவிக்க,

“காம் டவுன் தீப்ஸ்..” என்றவள் அவனின் முதுகை ஆதுரமாய் வருடிக் கொடுக்க,

“எனக்கு நிஜமா தெரியலை.. இனி உன்னை எப்படி நான் ட்ரீட் செய்யணும்.. எப்படி ஹேண்டில் செய்யணும்.. எதுவும் எனக்குத் தெரியலை..” என்று பிதற்றத் தொடங்க,

“தெரியாததை ஏன் யோசிக்கிற??!!” என்றாள் அனுராகா.

சின்ன சின்ன கண்ணசைவில்

உன் அடிமை ஆகவா..

செல்ல செல்ல முத்தங்களால்

உன் உயிரை வாங்கவா??!!   

“போ டி..” என்றவன் அவளின் இடுப்பினை சுற்றி வளைத்து, வயிற்றினில் முகம் புதைக்க,

“ம்ம்.. இதோ தெரியுதே.. எப்படி ட்ரீட் பண்ணனும்னு..” என்றாள் அவள்.

“ம்ம்ச் போ டி” என்று அப்போதும் அவன் சொல்ல,

“சம்டைம்ஸ் நீ சைல்டிஷ்ஷா பிஹேவ் பண்ற தீப்ஸ்..” என்றாள் ஒரு சிரிப்போடு.

என்னவோ அனுராகாவிற்கு சிரிப்புதான் வந்தது. மாறாக அவன்மீது கோபமோ, இல்லை புரியாது பேசுகிறானே என்ற எரிச்சலோ எதுவுமே இல்லை. எல்லாம் தாண்டி என்னிடம் வந்துவிட்டான் என்ற நிம்மதி..

மனது ஓர் அமைதி கொண்டது அந்த நொடி.. அதுமட்டுமே நிஜம். அவர்களின் திருமணம் கூட அப்படியொரு நிம்மதி அமைதி கொடுக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த நொடி, அவன் தன்னிடம் இப்படி கட்டுண்டு கிடக்கையில் அவள் அதனை உணர,

“ம்ம் தீப்ஸ்…” என்றாள் மெதுவாய்.

“ம்ம்ம்…”

“கம்மன் கெட்டப்.. வா.. வெளிய போலாம்..” என்றாள், வெளியே போனாலாவது அவன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிடுவான் என்று.

“நாட் இன் எ மூட்..” என்றவன், எழுந்து அமர்ந்து, அவளை தன் மார்பில் சாய்த்துக்கொள்ள, இப்போது அனுராகாவின் புன்னகை மேலும் மலர்ந்தது.

“இங்கயே இருக்கலாம்.. இப்படியே இருக்கலாம்..” என்றவன், அவளின் தலையை மேலும் தன் நெஞ்சில் வைத்து அழுத்தி, அவன் முகத்தினை அனுராகவின் தலைமீது சாயத்துக்கொள்ள,

“தீப்ஸ்.. நமக்கு மேரேஜ் ஆகப் போகுதாம்..” என்றாள் மெதுவாய்.

“ஆமா.. அதை நினைச்சா வேற ஒரே பயமா இருக்கு..” என்று அவன் சொல்ல,

“ஹா??! என்னது..??!!” என்று அவள் வேகமாய் நிமிர்ந்து கேட்க,

“ஆமா.. என்னோட அப்பா அம்மா.. அவ்வளோ ஏன்.. என்னோடவே என்னோட ஷேடோ போல இருந்தவனுங்கக் கூட இப்போ உன் சைட்.. உனக்கு சப்போர்ட்.. இதுல மேரேஜ் ஆகி நீ அங்க வந்துட்டா.. டோட்டலா எல்லாம் ஒரு டீம் ஆகிடுவீங்க.. நான் மட்டும் பாவம்..” என்று பாவமாய் தீபன் முகம் வைத்து சொல்ல,

“ராஸ்கல்…!!” என்று சிரித்தவள்,

“யார் வேனா உனக்கு எதிரா நிக்கட்டும்.. உனக்கு பின்ன நிக்கட்டும்.. ஆனா உன்னோட கை பிடிச்சு நான் நிப்பேன்.. போதுமா..” என, அவளை இழுத்து அணைத்துக்கொண்டான் தீபன் சக்ரவர்த்தி..

“டோன்ட் பி டூ இமோசனல்..” என்றவளும் அவனை தனக்குள் இறுக்க,

“ஐ வான்ட் டு பி வித் யு ராகா.. பார் எவர்…” என்றவனின் இதழ்கள் தன்னப்போல் அவள் கழுத்து மச்சம் நோக்கிச் சென்றது..

அவன் – ராட்சஸி..

அவள் – ராஸ்கல்..

காதல் – நல்ல காலத்துலேயே இதுங்க அப்படி.. இப்போ அண்டர்ஸ்டாண்டிங் வேற…!!! என் நிலமைய கேட்கவா வேணும்..??!!

Advertisement