Advertisement

                       நான் இனி நீ – 39

தீபன் சக்ரவர்த்தி, வெளிவந்தும் கூட நான்கு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போது வரைக்கும் சென்று அனுராகாவைக் காணவில்லை. அவள்மட்டும் என்ன, அவளும்தான் வந்து அவனைப் பார்க்கவில்லை.

யார் என்ன சொல்லியும் இருவரும், இருவரையும் பார்ப்பதற்குச் செல்லவில்லை.

உஷாவும் தீபனிடம் சொல்லிவிட்டார் “இவ்வளோ தூரம் யாரும் செய்யமாட்டாங்க தீபன்.. நீ புரிஞ்சுக்கோ…” என,

“ம்மா.. அதுக்கு எந்த அவசியமும் இல்லை.. இப்போ என்ன நான் வெளிய வர கொஞ்சம் லேட்டாகிருக்கும்.. பட் இப்போ பாருங்க.. எல்லாரும் என்னென்ன பேசுறாங்க…” என்றவனுக்கு அப்படியொரு ஆதங்கம். 

அவனுக்கு மனது சொல்லிக்கொண்டே இருந்தது, அனுராகா இப்படி எதையாவது செய்வாள் என்று. சரியாய் அச்சரம் பிசகாது அவள் அப்படிதான் செய்தாள்.

தீபனின் ‘ப்ளான் சி..’ என்பது ஒரு மாபெரும் சைக்கிள் பேரணி. முழுக்க முழுக்க இளைஞர் இளைஞிகளை கொண்டு. அரசியலுக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத ஆட்களை முன்னிறுத்தி ஓர் அரசியல் நாடகம்.

தீபன் சக்ரவர்த்தி என்பவன், மத்திய மந்திரி சக்ரவர்த்தியின் மகனாய் அல்லாது, இன்றைய தலைமுறையினரின் அடையாளமாய், தன்னைத் தானே அறிமுகம் செய்துகொள்ள வேண்டி இந்த ஏற்பாடு.

நான் தனியன் அல்ல, உங்களில் ஒருவன் என்று காட்டிக்கொள்ள…!! 

முப்பது கோடி என்ன??!! அதற்கும் மேலே செலவு செய்து இதனை செய்வேன் என்று முடிவு செய்திருந்தான்..

‘ப்ளான் சி..’      

அதிலே இன்னொன்றும் அடக்கம், அது  அனுராகாவை எங்கேயும் செல்லவிடாது செய்வதும் கூட..

அது நாகா மற்றும் தர்மாவிற்கு மட்டும்தான் தெரியும்..!!

தீபனாலேயே அனுராகாவை சில நேரம் கட்டுக்குள் கொண்டுவர முடியாது. அப்படி இருக்கையில் இவர்கள் எம்மாத்திரம்.

அனுராகா சென்று தீபனைக் கண்டுவிட்டு வந்த அன்றைய மாலைப் பொழுது நடந்தது. அனுராகா அவளின் அலுவலகத்தில் இருந்து வீடு செல்ல கிளம்ப, அவளின் டிரைவர் கார் எடுப்பதற்கு பதில், கார் தர்மா எடுக்க, உடன் நாகா இருந்தான்.

“ஹலோ…” என்று கண்கள் சுருக்கி அனுராகா இருவரையும் பார்த்தவள்,  “வாட் இஸ் திஸ்..” என,

“உங்களுக்கு சேப்டி இல்லன்னு பீல் பண்றார்…” என்று தர்மா சொல்கையில், அனுராகாவிற்கு நிஜமாகவே எரிச்சலாகிப்போனது.

அவளது ‘ஸ்பேஸ்..’ அதில் அவள் அனுமதிக்காது யாருக்கும் இடமில்லை. அவளின் கார் டிரைவர் கூட வா என்றால் மட்டுமே வருவார். இல்லையெனில் அவளேதான் செலுத்திக்கொள்வாள்.

அப்படியிருக்க மற்றது எல்லாம் சரி, ஆனால் இவர்கள் உடன் இருப்பது போல் வந்துச் செல்ல, எரிச்சலாகிப் போனது. கண்டிப்பாக இது தீபனின் வேலை என்பது நன்கு தெரியும். என்னைக் கேட்காமல் எப்படி இதனை செய்யலாம் என்ற எண்ணம் வர,

“என்னை சேப்டி பண்ணிக்க எனக்குத் தெரியும்..” என்று அனுராகா இறுகிய குரலில் சொல்ல, இரட்டையர்கள் இருவரும் பதிலே சொல்லாதிருக்க,

“இதெல்லாம் உங்க பாஸ் கிட்ட மட்டும் வச்சுக்கோங்க.. தீபனே சொன்னா கூட என்னோட பெர்மிசன் இல்லாம இதெல்லாம் நீங்க பண்ண கூடாது மைன்ட் இட்..” என, அவர்கள் அதனை சட்டை செய்வதாய் இல்லை.

“சோ.. என்னை இப்படி ஹோல்ட் பண்றதுதான் உங்களோட ப்ளான் சி யா??” என்று அனுராகா கேட்க, நாகா திரும்பி அவளைப் பார்த்தவன்,

“அதுவும்…” என்றுமட்டும் சொல்லிவிட்டு திரும்ப..

“******* இடியட்**** ” என்று அவளுக்கு தெரிந்த ஆங்கில கெட்ட வார்த்தைகள் எல்லாம் அவளின் வாயில் இருந்து வர, முன்  சீட்டினில் இருந்த இருவரும் எவ்வித முக மாற்றமும் இல்லாது அமர்ந்திருந்தனர்.

அனுராகா வீடு வந்தபின்னரும் கூட நாகாவும் தர்மாவும் அங்கேயே இருக்க, தாரா கேள்வியாய் மகளைப் பார்க்க,

“மாம் டோன்ட் ஆஸ்க் மீ எனிதிங்..” என்றுவிட்டாள்.

அவளின் அறைக்குள் சென்றவள் ஒருமணி நேரமாகியும் வராது போக, தாரா வெளியே கிளம்பிக்கொண்டு இருக்க,

“அவங்க ரூம் போய் ஒன் ஹவர் ஆச்சு..” என்றான் தர்மா.

“என்னது??!!!” என்று தாரா விழிக்க, அவன் சொன்னதையே திரும்பச் சொல்லி அனுராகாவின் அறையைக் காட்ட,

“அவ ரெஸ்ட் எடுப்பா..” என்றார் தாரா.

“கன்பார்ம் பண்ணிட்டு சொல்லுங்க…” என்று நாகா சொல்ல,

‘இதென்னடா இது..’ என்று பார்த்தவர், அனுராகாவின் அறைக் கதவைத் தட்ட, சில நொடிகள் கழித்தே வந்து திறந்தாள் “வாட் மம்மி…” என்ற எரிச்சலுடன்.

தாரா ஒன்றும் சொல்லாது இவர்களைப் பார்க்க “உங்களுக்கு வேற வேலை இல்லையா??!!” என்று அனுராகா கேட்ட விதமே ‘கெட் அவுட்…’ என்று சொல்வதாய் இருந்தது.

இதெல்லாம் எம்மாத்திரம் என்பதுபோல் “ஓகே நீங்க போய் ரெஸ்ட் எடுங்க…” என்றவர்கள் திரும்பப் போய் பழைய இடத்திலேயே நின்று கொள்ள, அனுராகா அவர்களை முறைக்க, தாராவோ மகளையும் அவ்விருவர்களையும் மாறி மாறி பார்த்தார்.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் இதே வேலைதான் நடந்தது.

அனுராகா அவளின் வக்கீல்களோடு பேசுகையில் கூட இவர்கள் உடனிருக்க, பொறுமையை இழந்தவள் உஷாவிற்கு அழைத்து “ஆன்ட்டி உள்ள இருந்தும் உங்க பையன் என்னை ரொம்ப டென்சன் பண்றான்..” என,

“என்னாச்சும்மா??!!” என்றார் உஷா.

அனுராகா நடந்தவைகளை சொல்லி “ஆன்ட்டி எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனும்..” என்று கேட்க,

“என்ன அனு.. என்ன வேணுமோ சொல்லு.. அந்த பசங்களை திரும்பக் கூப்பிட்டுக்கனுமா??!!” என்றார்.

“இல்ல இப்போ வேணாம்.. அவங்க ஒருத்தர் அட்ரெஸ்காக வெய்ட் பண்றாங்க.. டாடி வர்றார்.. வந்ததும் அந்த அட்ரஸ் வாங்கிக் கொடுத்திடுவேன்..” என்றவள் “ஆர்த்தியை கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வர முடியுமா??!!” என்றாள்.

“ஆர்த்தியா??!!”

“எஸ்…”

“ம்ம் ஓகே…” என்றவர் சொன்னதுபோலவே அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆர்த்தியை அழைத்துக்கொண்டு வந்துவிட, ஹாலில் இருக்கையில் நாகாவும் தர்மாவும் அங்கேயே நிற்க,

உஷாவோ “ஏன்டா இப்படி இருக்கீங்க..” என்றார்.

இருவரும் ஒரு புன்னகை தான் சிந்தினரே தவிர பதில் சொல்லாது இருக்க “ஆர்த்தி.. என்னோட வா.. எனக்கு சில டீடைல்ஸ் வேணும்…” என்று அவளை அறைக்கு அனுராகா அழைக்க,

“நீங்க இங்கயே பேசலாமே..” என்றான் தர்மா..

“ஐ வில் கில் யூ மென்… எப்போ பார் அவன் சொல்றத மட்டுமே கேட்டு கேட்டு சொந்தமா யோசிக்க மாட்டீங்களா??!!” என்று கத்தியவள்

“கம்மான் ஆர்த்தி…” என்று அழைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.

உஷாவும், தாராவும் இவர்களின் முகம் பார்க்க, அவர்களோ அசைவதாகக் கூட காணோம்.

பின் உஷாதான் “ஏன் டா இப்படி பண்றீங்க..? அவன் சொல்றான்னா நீங்க ரெண்டு பெரும் யோசிக்கவே மாட்டீங்களா??!!” என,

தாராவோ “யார் சொன்னாலும் கேட்கமாட்டாங்க போல…” என்றுசொல்ல, அப்போதும் அவர்களிடம் பதில் இல்லை.

“இவனுங்களோட பேசுறது வேஸ்ட்…” என்று அம்மாக்கள் இருவரும் பேசிடத் தொடங்க,  அங்கே ஆர்த்தியிடம் அனுராகா பல கேள்விகள் கேட்டுக்கொண்டு இருந்தாள்.

“ஆர் யூ சியூர் அங்க வைசாக் கிட்ட போனது வேற யாருக்கும் தெரியாது தானே.. ஐ மீன் உன்னோட பிரண்ட்ஸ் சர்கிள்..??” என,

“நோ அனு.. என்னோட பிரண்ட்ஸ் புனீத் தேவ் தான்.. சோ வேற யாருக்கும் தெரியாது..” என்றாள் உறுதியாக.

“ஓகே.. உங்க பேமிலி சைட் இருந்து எதுவும் வெளிய போகாதே..”

“கண்டிப்பா போகாது..”

“எந்த ரீசனுக்காகவும் இந்த கார்ல இருக்கிறது நீன்னு யாருக்குமே யாருக்குமே தெரியக் கூடாது.. இப்போன்னு இல்ல.. இனி எப்பவுமே.. கடைசி வரைக்கும்..” என்றவள், அன்றைய தினம் என்ன நடந்தது, தீபனை எங்கே பார்த்தாள், என்ன பேசினர், எங்கே சென்றனர் என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டாள்.

ஆர்த்தியும் அனைத்தையும் சொல்ல “ஓகே…” என்றவள் “தேங்க்ஸ் ஆர்த்தி இங்க வந்ததுக்கு.. அண்ட் சாரி தீபன் அப்படி பண்ணதுக்கு..” என,

“ஹேய்… இட்ஸ் ஓகே.. நான்..” என்று ஆர்த்தி எதையோ சொல்லும் முன்னமே,

“எனக்கு தீப்ஸ் யாரோடவும் சாரி கேட்கிறது பிடிக்காது… அதனால தான் நான் சொல்றேன்.. வேறெதுவும் இல்ல..” என்று பேச்சை முடித்துவிட்டாள் அனுராகா.

ஆர்த்திக்கு ஆச்சர்யமாய் இருந்தது.. எப்படி தீபனை இத்தனை ஆழமாய் இவளால் நேசிக்க முடிகிறது என்று. அவளுக்குத் தெரிந்து இவர்கள் இருவருக்கும் எப்போதுமே சண்டை தான் வரும். அப்படி இருக்கையில் இத்தனை புரிதல் எப்படி??!!

தானும் தான் தீபன் சக்ரவர்த்தியை நேசித்தோம். ஆனால் அனுராகா அளவிற்கு இப்படி இருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.. ஏன் அந்த நேசம் கூட இப்போது இருக்கிறதா என்றால் தெரியாது என்றுதானே சொல்வாள்.

இருவரும் பேசி முடித்து அறையைவிட்டு வெளிவர, உஷாவிடம் அனுராகா “ஆன்ட்டி உங்களுக்கு என்மேல நம்பிக்கை இருக்குதானே. நான் எது பண்ணாலும் அது தீபனுக்கு நல்லது தான் செய்வேன்னு..” என்று கேட்க,

“என்னம்மா நீ… இதெல்லாம் தாண்டி எவ்வளவோ இருக்கு..” என்றார் ஆதரவாய்.

பின் உஷாவும், ஆர்த்தியும் கிளம்பிட, நாகாவிடம் “D வில்லேஜ் பூட்டேஜ் என்னாச்சு??” என,

“பூட்டேஜ் வந்திடுச்சு.. பட் நீங்க சொல்றதுபோல எதுவும் இல்லை..”

“அது நான் பார்த்து டிஸைட் பண்ணனும்…” என்றவள்

“ரெண்டு பேரும் நல்லா கேட்டுக்கோங்க.. தீபன் வந்தபிறகு அவன் சொல்றது எதுவா இருந்தாலும் செய்ங்க.. பட் அப்போவுமே என்னோட முடிவுகள் நான்தான் எடுப்பேன்… இப்போ அந்த பூட்டேஜ் நான் பார்க்கணும்…” எனும்போதே,

அனுராகாவின் வக்கீல் அழைத்து “மேம் நியூஸ் பாருங்க…” என, அனுராகா என்னானதோ என்று பதறியே டிவியை ஆன் செய்ய,

மந்திரியின் மகனுக்கும், இறந்துபோன மாடலுக்கும் இருக்கும் உறவு அம்பலமானது என்று அனுராகவும், தீபனும் D – வில்லேஜில் இருக்கும் படங்கள், ஆனால் அதில் அனுராகாவின் முகத்திற்கு பதிலாக இறந்து போனதாய் சொல்லப்படும் அந்த மாடலின் முகம்.

மார்பிங் என்று அழகாய் இவர்களுக்குப் புரிந்தது. ஆனால் செய்யவேண்டும் என்றே செய்பவர்கள், அதிலும் மத்திய மந்திரியின் மகன் என்று தெரிந்தும் செய்பவர்கள் பக்காவாய் தானே செய்வார்கள்.

ஆச்சு அசலாய் அப்படியே இருக்க, அதில் இருப்பது அனுராகா என்று யாராலுமே கூட சொல்லிட முடியாது.

செய்திகள் திரையினில் ஓட, அனுராகாவிற்கோ கண்கள் தெரித்துவிடும் அளவு கோபம் கொப்பளிக்க, கையினில் இருந்த ரிமோட் அடுத்த நொடி பறந்து சென்று சுவரில் மோதி மாண்டு போனது.

“இஸ் திஸ் ஓகே??!!! இதுதான் நடக்கனும்னு எக்ஸ்பெக்ட் பண்ணீங்களா??” என்று நாகாவையும் தர்மாவையும் பார்த்துக் கத்தினாள்.

“இதான்.. இதுக்குதான் சொன்னேன்.. அந்த பூட்டேஜ் வேணும்னு… இப்படி ஒரு விசயம் வர்றதுக்கு முன்னாடியே நம்ம ஸ்டெப்ஸ் எடுக்கனும்னு தான் சொன்னேன்.. யூ ப்ளேட்டி இடியட்ஸ்.. ச்சே..” என்று கத்த, இருவரும் பதிலே சொல்லாது நிற்க,

“இப்பவும் உங்களுக்கு புரியலையா??? இதெல்லாம் தீபன உள்ள சிக்க வைக்கிறதுக்கு இல்லை. அவனோட நேம் ஸ்பாயில் பண்றதுக்கு.. இனி அடுத்து அடுத்து என்னவேனாலும் வரும்.. அதெல்லாம் நம்புறதுக்குன்னு ஒரு கூட்டமே ரெடியா இருக்கும். இதுல இருக்கிறது பொய்னு நமக்குத் தெரியும்.. பட் எல்லாரும்.. எல்லாரும் அப்படி நினைப்பாங்களா??” என்றவளுக்கு ஆற்றாமையில் அழுகை கூட வந்திட,

நாகாதான் “சாரி..” என்றான் குரலே எழும்பாது.

‘போடா நீயும் உன் சாரியும்..’ என்று பார்த்தவள் “இனி நான் சொல்றத மட்டும்தான் கேட்கணும்… ஓகே…” என்றவள்,

“அந்த பூட்டேஜ் எடுத்துட்டு வாங்க போலாம்..” என, தர்மா “அய்யாக்கிட்ட கேட்டுட்டு..” என்று இழுக்க,

“இனி யார் சொன்னாலும் நான் கேட்கிறதா இல்லை..” என்றவள், “இந்த கேஸ் விசயமா சாட்சி சொல்ல, நான் போறதா மீடியாக்கு சொல்லுங்க..” என்றவள் அவளின் அலைபேசியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

நாகாவும் சரி, தர்மாவும் சரி இதற்குமேல் அவளை கட்டுப்படுத்த முடியாது என தோன்ற, அவள் சொன்னதைச் செய்ய, அவளோடு கிளம்பினர்.

இவர்கள் அங்கே சிபி சிஐடி அலுவலகம் செல்லும் முன்னமே அங்கே மைக்கோடும் கேமராக்களோடும் ஆட்கள் கூடிட, அனுராகா உள்ளே செல்லவே சற்று சிரமம் ஆனது.

அதற்குள் விஷயம், சக்ரவர்த்திக்கும், லோகேஸ்வரனுக்கும் எட்டிவிட, லோகேஸ்வரன் அப்போதுதான் சென்னையில் வந்து இறங்கியிருக்க, வீடு செல்லாது நேராய் அவர் சிபிசிஐடி அலுவலகம் செல்ல, சக்ரவர்த்தியும் அங்கேதான் விரைந்தார்.

அனுராகா அங்கே, D – வில்லேஜ்ஜில் இவர்கள் இருவரும் இருந்ததற்கான ஆதாரங்களையும், அவளின் செல் போனில் தீபனும் ராகாவும் எடுத்துக்கொண்ட போட்டோக்களையும், பின் முதலில் வெளிவந்த போட்டோவில் ஆர்த்தி இருந்ததற்கு பதில் தான் தான் இருந்ததாகவும் அனுராகா சொல்லிவிட்டாள்.

“சர்… இதுக்கு மேலயும் உங்களுக்கு வேற எவிடன்ஸ் வேணுமா?? வந்திருக்க எல்லா பிக்ஸ் அண்ட் நியூஸ் பொய்.. எல்லா போட்டோஸ்ம் மார்பிங்..” என,

“நீங்க இதெல்லாம் முன்னாடியே கொடுத்திருக்கலாமே…” என்றனர் அங்கே.

“எப்படி சார்.. திடீர்னு ஒரு கேஸ் வரும்.. அந்த கேஸ் வர்றப்போ இன்னொரு கேஸ் சார்ஜ் பண்ணுவீங்க.. நாங்க உடனே வந்து நின்னு பதில் சொல்லிட்டு இருந்தா, அப்போவும் நீங்க நம்பிட போறீங்களா??!!” என்றாள்.

அனுராகாவிற்கு மனது ஆராவேயில்லை..!!

“மேம்… எங்களுக்குன்னு சில பார்மாலிட்டீஸ் இருக்கு…”

“ஓகே.. நான் என்ன செய்யணும்.. பார்மல் ப்ரோசீஜர் சொல்லுங்க.. அந்த மாடல் தீபனோட இருந்ததுக்கான வந்த எல்லா சாட்சியங்களும் பொய். அந்த மர்டர் யார் பண்ணாங்களோ அவங்கள இன்வெஸ்டிகேட் பண்ணுங்க.. பட் இப்படி ஒரு ரெப்பியூட்டட் பேமிலி நேம் ஸ்பாயில் பண்ணாதீங்க..” என, அடுத்த சில நொடிகளில் சக்ரவர்த்தி, லோகேஸ்வரன் இருவரும் அங்கே வந்துவிட, அதன்பின் சூழநிலையை அவர்கள் கையில் எடுத்துக்கொண்டனர்.

அரசியல் பலமும், தொழில்துறை பண பலமும் ஒன்றாய் நிற்கையில், அங்கே அவர்கள் வைப்பது தானே நடக்கும்.

“அனு… நீ வீட்டுக்கு போ.. நாங்க பார்த்துக்கிறோம்..” என்று லோகேஸ்வரன் சொல்ல,

“நோ.. எனக்கு ஒரு முடிவு தெரியாம ஐ வோன்ட் கோ..” என்றாள்.

சக்ரவர்த்தியும் சொல்ல “அங்கிள்.. இந்த கேஸ் நீங்க எப்படி முடிப்பீங்களோ தெரியாது.. பட் முடிக்கணும்… அவ்வளோதான்..” என்றவள்,

லோகேஸ்வரனிடம் “உங்களோட பேசணும்.. கம் வித் மீ..” என்றாள்.

“நீங்க கூட்டிட்டு கிளம்புங்க.. நான் பார்த்துக்கிறேன்..” என்ற சக்ரவர்த்தி அவர்களை அனுப்ப, வெளியே அனுராகாவும், லோகேஸ்வரனும் தர்மாவும் வர, நாகா சக்ரவர்த்தியோடு நின்றுகொண்டான்.

இவர்கள் வெளியே வரவுமே, மீடியா ஆட்கள் சூழ்ந்துகொள்ள, சராமாரியான கேள்விகள் வந்தது அனுராகாவிற்கு.               

அவளும் சளைக்காது தான் பதில் சொன்னாள். இருந்தும் திரும்ப திரும்ப அவளுக்கும் தீபனுக்குமான உறவினைப் பற்றி கேள்வி வர, 

பட்டென்று அவளுக்கு கோபம் வந்துவிட்டது  “டோன்ட் யூ ஹேவ் எனி சென்ஸ்… இந்த மர்டர் நடந்ததா சொல்ற அந்த டேட்ல தீபன் என்னோடதான் இருந்தான்னு சொன்னா உங்களுக்கு அதோட ஆக்சுவல் மீனிங் புரியாதா? அகைன் அண்ட் அகைன் ரிலேஷன்ஷிப் பத்தி கேள்வி கேட்கறீங்க..” என்று அனுராகா வெகுண்டு கேட்க,

“மேம்.. இதை நீங்க இப்படியொரு நியூஸ் வந்ததுமே சொல்லிருக்கலாமே..” என்றனர் பேட்டியாளர்கள்.

“இஸ் இட்.. ஒரே நாள்ல கேஸ் முடிஞ்சிருக்கும் அப்படின்னு சொல்ல வர்றீங்களா??!!”

“அப்படியில்ல.. ஆனா இவ்வளோ நாள் டிலே பண்ணது சாட்சிகளை மாற்றன்னு எடுத்தக்கலாம் இல்லையா??” என்று அடுத்து ஒரு கேள்வி வர,

“ஓ..!! அப்போ தீபன் தான் அந்த கொலை செஞ்சான்னு நீங்க நேர்ல பார்த்தீங்களா??!!” என்றாள் அனுராகாவும்.

“மேம் நீங்க இன்டர்வியு டைவர்ட் பண்றீங்க..” என்று ஒரு குரல் கேட்க,

“ஓ..!! உங்களுக்கு நியூஸ் கொடுக்கச் சொன்னதே நான் தான்.. அப்படி இருக்க நான் ஏன் டைவர்ட் பண்ணனும்… இப்படியொரு கேஸ் அப்படின்னதுமே நாங்க உடனே வந்து இருக்கலாம்.. ஆனா அப்பவும் இதே கேள்விகள் தான் வரும்.. வந்த போட்டோஸ் எல்லாம் நாங்க மார்பிங் பண்ணிட்டோம்னு.. உண்மை என்னன்னு வெளிய கொண்டு வர எங்களுக்கும் கொஞ்சம் டைம் எடுக்கும் இல்லையா…” என்றாள்.

“பட் இந்த போட்டோ எவிடன்ஸ் மட்டுமே வச்சு தீபன் சக்ரவர்த்தி நிரபராதின்னு எப்படி சொல்ல முடியும்..”

“நியூஸ்ல நீங்க போடுறது கூட போட்டோஸ் தான்.. அப்போ எப்படி நீங்க தீபன் சக்ரவர்த்தி நிரபராதி இல்லைன்னு சொல்ல முடியும்..??” என்றவள் “பதிலுக்கு பதில் எல்லாமே பேசலாம் சர்.. உண்மையான எவிடன்ஸ் எல்லாம் சப்மிட் பண்ணியாச்சு.. இதுக்கு மேல இன்வெஸ்ட்டிகேசன் பண்ணின பிறகுதான் எல்லாம் வெளிச்சம் ஆகும்..” என்றவள், கரம் குவித்து “போதும்..!!” என்று விடைபெற,

“மேம்.. மேம்.. ஒன் மோர் கொஸ்டீன்..” என, பொறுமையை இழுத்துப் பிடித்தே நின்றாள் “எஸ்..” என்று..

“உங்களோட ரிலேஷன்ஷிப்காக கூட இந்த மர்டர் நடந்து இருக்கலாம் இல்லையா.. அப்படியும் யோசிக்கலாம் இல்லையா…” என்று ஒருவர் கேட்க,

லோகேஸ்வரன், தர்மாவிடம் கண் காட்ட “சார் போதும்.. டைம் ஆச்சு.. அவங்க வேற ஒரு மீட்டிங் போகணும்..” என்று அவன், சூழ்ந்து நிற்பவர்களை விலக்க முயல,

அனுராகா “ஒன் மினிட்..” என்று தர்மாவிடம் சொன்னவள், பின் கேள்வி கேட்ட நபரை நேருக்கு நேர் பார்த்து “நீங்க எல்லாம் என்ன மைன்ட் செட்ல இருக்கீங்கன்னு தெரியலை.. இப்போ நான் ஒரு மெடிகல் சர்டிபிகேட் கொடுத்தா கூட, நானே ஐம் நாட் விர்ஜின் அப்படின்னு சொன்னா கூட, இதை எப்படி நம்புறதுன்னு தான் கேள்வி கேட்பீங்க.. கொஞ்சம் சென்ஸோட பேசுங்க சர்..” என, கேட்டவரின் முகம் தொங்கிப் போனது.

“தேங்க்ஸ்…” என்று பொதுவாய் அனைவரயும் பார்த்து சொன்னவள், வேகமாய் காருக்கு நடக்க, அவளின் பின் லோகேஸ்வரன் வர, தர்மா சுற்றியிருந்தவர்களை விலக்கியபடி நடந்தான்.

காரில் ஏறி கார் கிளம்பிய பின்னும் கூட அனுராகாவிற்கு கோபம் தீரவில்லை. லோகேஸ்வரன் சில நொடிகள் அமைதியாய் இருந்தவர் “என்ன அனு இதெல்லாம்.. இவ்வளோ சீரியஸா இதுல இன்வால்வ் ஆகணுமா.. நாங்க பார்த்துக்க மாட்டோமா..” என,

அவரை பட்டென்று முறைத்தவள் “நான் உங்களை பார்க்கணும் சொல்லி த்ரீ டேஸ் ஆச்சு.. இப்போதான் வர்றீங்க.. இதுல என்ன நீங்க பார்த்துக்கப் போறீங்க..” என்றாள் இகழ்ச்சியாய்.

“ஷ்… பிஸ்னஸ்ல எனக்கு இருக்க டென்சன் எனக்குத்தான் தெரியும்..” என்றவர் “சொல்லு இப்படி வந்து நீ பேசணுமா.. இது எவ்வளோ பேச்சுக்கு வரும்…” என்று நிஜமாகவே கவலையாகத்தான் சொன்னார்.

“எனக்கு வேற வழி தெரியலை..” என்றவள் “ரத்தினம் யாரு?? அவரோட காண்டாக்ட் அட்ரஸ் வேணும்..” என்றாள் அடுத்து.

“ம்ம்ச்.. இப்போ கொஞ்சம் ரிலாக்ஸா வா.. வீட்ல போயி பேசிக்கலாம்..” என்று லோகேஸ்வரன் கண்டிப்புடன் சொல்லவும், அனுராகாவும் அமைதியாகி விட்டாள்.

வீட்டிற்குள் வரும்போதே அங்கே தாராவும் உஷாவும் இருக்க, தாரா கண்களில் கண்ணீர். ஒருபுறம் மகள் மீது கோபமாய் கூட வந்தது.

இப்படியார் போய் பேசச் சொன்னது என்று..

உஷாவிற்கோ என்ன சொல்வது என்றே விளங்கவில்லை.

தாரா அனுவிடம் எதையோ பேச வர “தாரா.. டோன்ட் ஆஸ்க் ஹெர் எனிதிங்… சில்லுனு ஜூஸ் ஆர் சம்திங் அவளுக்கு கொடு..” என்றவர்,

“அனுராகா.. ரத்தினம் விஷயம் நான் பார்த்துக்கிறேன்.. இதுல நீ இப்போ போய் பேசின அளவு போதும்.. மத்தது எல்லாம் நானும் மினிஸ்டரும் பார்த்துக்கிறோம்..” என,

தாரா தனியே லோகேஸ்வரனிடம், “அனு உயிரோட இருக்கணும்னா நீங்க இனியும் இப்படி இருக்கக் கூடாது.. அவளுக்கு ஒண்ணுன்னா நான் அடுத்து சும்மா இருக்கமாட்டேன்..” என்றிட,

“ம்ம்ச் நான் செய்யமாட்டேனா..” என்றவர், தர்மாவை அழைத்துக்கொண்டு அவரின் ஆபிஸ் அறைக்குள் சென்றுவிட்டார்.

தர்மா சில விபரங்கள் கொடுக்க,  லோகேஸ்வரன் ரத்தினம் மூலமாகவும், பின் அவர் சொன்ன ஆட்களிடம் விசாரித்து, யார் மூலமாக இந்தத் தகவல்கள் வெளி வருகிறது என்று பார்க்க, கல்கட்டாவில்  இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்து ஒருவனின் பெயர் சொல்லப் பட்டது.

“இப்படி ஒரு ஊரா??!!” அப்படித்தான் கேட்கத் தோன்றியது.

தெள்ளத் தெளிவாய் தகவல் வரவும், சக்ரவர்த்தி அங்கிருக்கும் தன் கட்சி ஆட்களை பிடித்து யார் அவன் என்னவென்று பிடித்து விசாரிக்க, எதிர்கட்சிக்காரன் என்ற செய்தி வர,

“யாரா இருந்தாலும் சரி.. அவன் இங்க வரணும்.. அவன் கிட்ட என்ன என்ன எவிடன்ஸ் இருக்கோ எல்லாம் இங்க வரணும்..” என்றுவிட்டார்.

இரண்டு நாட்களில் “மஹிட்…” என்று பெயர் கொண்ட, அந்த நபரை சக்ரவர்த்தியின் ஆட்கள் அழைத்துவர,               

அனுராகாவின் சாட்சியங்களை வைத்தும், அந்த மஹிட் கொடுத்த ஆதாரங்கள் வைத்தும், அடுத்து மூன்றே தினங்களில் தீபன் மீது இருந்த வழக்குகளில் இருந்து வெளிக்கொணர்ந்துவிட்டார்.

தீபன் சக்ரவர்த்தி வெளிவந்துவிட்டான் என்ற செய்தி கேட்டபிறகு தான் அனுராகாவிற்கு நிம்மதியாய் மூச்சு விடவே முடிந்தது.

அவளுக்கு நன்கு தெரியும்.. அவனுக்கு தன் மீது கோபமிருக்கும் என்று. தன்னைக் காண வரமாட்டான் என்றும் தெரியும்.

இருந்தும் எதையும் வெளிக்காட்டவும் இல்லை. யாரிடமும் எதுவும் சொல்லவும் இல்லை. வழக்கம் போல் அலுவலகம் சென்றுவர, தாரா கூட கேட்டார் “நீ போய் பார்க்கலையா..” என்று.

“எனக்கு வேற வேலை இல்லையா??!!” என்றாள்.

அவன் வரவேண்டும்.. வந்துவிட வேண்டும்.. இப்படி அடித்துக்கொண்ட மனது. அவன் வந்தபிறகு அப்படியே இயல்பிற்கு போய்விட்டது.

இனி அவனுக்கு வேண்டுமெனில் வந்து பார்க்கட்டும் என்ற இயல்பு.

தீபன் சக்ரவர்த்தி வந்தும் கூட, நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அவன் அனுராகாவைக் காணச் செல்லவில்லை என்பது உஷாவிற்கும் சக்ரவர்த்திக்கும் சங்கடமாய் இருந்தது.

இதற்கு இடையில் “மேரேஜ் ரொம்ப டிலே பண்ணிக்கவேணாம்..” என்று லோகேஸ்வரன் பேசியிருக்க, அவர்களின் திருமண தேதி கூட குறிக்கப்பட்டுவிட, அனுராகா எதற்கும் ரியாக்சன் காட்டவில்லை.     

சக்ரவர்த்தியும் மகனிடம் “தீபன் சொல்றத கேளு.. ஒன் டைம் அந்த பொண்ண போயி பாருடா…” என்று சொல்ல,

“ப்பா ப்ளீஸ்.. எனக்கு இருக்க கோபத்துக்கு நான்…” என்றவன் ஒரு பெரு மூச்சினை வெளியிட்டு,  “ப்ளீஸ் ப்பா.. கொஞ்ச நாள் போகட்டும்..” என,

“இல்லடா இது தப்பு.. கல்யாண தேதி குறிச்சாச்சு.. இதுக்கு மேலயும் இப்படி ரெண்டுபேரும் இருந்தீங்கன்னா அது சரியில்ல.. இதுக்குமுன்ன எப்படியோ.. இனி அப்படி இருக்கக் கூடாது…” என்று சக்ரவர்த்தி பொறுமையாய் எடுத்து சொல்ல,

“இப்படி அவ பண்ணிட கூடாதுன்னு நினைச்சேன் ப்பா..” என்றான் வலி நிறைந்த குரலில்.

“நாங்க யாருமே கூட நினைக்கலதான்.. ஆனா அவ ஏன் அப்படி பண்ணா யோசி.. உனக்காகத்தானே.. அப்போ நீயே அந்த கிரெடிட் அவளுக்கு கொடுக்கலன்னா எப்படி??!!” என, தீபன் சோர்ந்து போனான்.

அவளைப் எப்படி நேர் காணுவேன் என்று…!!  

கோபம் அவள் மீது ‘இப்படி ஏன் செய்தாள்..’ என்றும் இருக்க, இன்னொருபுறம் ‘என்னால் தானே அவள் இப்படி செய்யும் நிலை..’ என்று தன்மீதே கோபமாய் போனது.

தன்மீதான கோபம் தான், அவனால் வெளிவந்தும் கூட அவளைக் காண முடியாத ஓர் நிலைக் கொடுத்தது.

‘எந்த மூஞ்சிய வச்சிட்டு டா அவளைப் போய் பார்ப்ப..’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

அவளிடம் சென்று என்னவென்று சொல்வான்..

சாரி என்பானா..?!!

தேங்க்ஸ் என்பானா..?!!

இல்லை ஐ லவ் யூ என்பானா..?!!

எது சொன்னாலும் அங்கே தீபன் சக்ரவர்த்தி என்பவன் சுயநலவாதியாகிப் போவானே..!!!

அவன் – எத்தனை முறை நான் ஏங்கிச் சாவேன்..

அவள் – சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது..

காதல் – பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா..??!!

Advertisement