நான் இனி நீ – 38

அனுராகாவின் தீவிரம் யாருமே எதிர்பார்க்காத ஒன்று. ஏன் அவளுமே கூட இதனை எதிர்பார்க்கவில்லை தான். சூழ்நிலைகள் மாறுகையில், நம் திட்டங்கள் தவிடுபொடி ஆகுகையில், யார் தான் ஒருநிலையில் இருக்க முடியும்.

இந்த மாடலின் மரணம் என்பது மிதுன் கிளப்பிவிட்ட ஒன்றுதான் என்றாலும் கூட, அதுவும் ‘கொலை கேஸ்..’ என்கையில், யார்தான் பொறுப்பர்.

அரசியல் வாழ்வில் இதெல்லாம் பெரிய விசயம் இல்லைதான். நிஜ கொலைகளே எத்தனை நடக்கிறது. பலது வெளி வராது.. பலது எதற்கென்றே தெரியாது. இங்கே என்ன,    ஒன்று முடியுமுன்னம் இன்னொன்று என்று மேலே மேலே வந்ததால்  அனுராகாவினால் பொறுத்திடவே முடியவில்லை.

அங்கே சக்ரவர்த்தி வீடே நொடியில் களேபரமாகிப் போனது…!!

சக்ரவர்த்திக்கும் சரி, மிதுனுக்கும் சரி தீபன் எப்படி எல்லாம் செய்தான். ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்தான் தானே..  பல விசயங்களில் அவனின் திட்டங்கள் தானே முன்னிற்கும். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள் தானே.

ஆனால் இப்போது..??!!

அவனுக்கு ஒன்று என்கையில் யாரினாலும் கூட எதுவும் செய்ய முடியாது போக,  அனுராகாவின் வேகம் கண்டு சக்ரவர்த்தியே கூட ஆடித்தான் போனார்..

உஷாவோ அதிர்ந்து பார்க்க, தாரா தான் மகளை “என்ன அனு…” என்று கண்டிக்க,

“நோ ம்மா… யார் சொன்னாலும் நான் இதுல கேட்க மாட்டேன்.. தீப்ஸ் இங்க வரணும் ஆர் நான் அவனைப் பார்க்கணும்..” என்று அவள் சொன்னதிலேயே நிற்க,

சக்ரவர்த்தியோ “நீ முதல்ல ரிலாக்ஸா உக்காரும்மா…” என,

“அங்கிள் ப்ளீஸ்…” என்றாள் இதற்குமேல் என் பொறுமையை சோதிக்காதீர்கள் என்று.

“சரிம்மா… நீ உட்கார் முதல்ல…” என்றவர், சற்று தள்ளி மிதுனை தாங்கிப் பிடித்திருந்த ஆட்களைப் பார்க்க, அவர்களோ மிதுனை அழைத்துக்கொண்டு செல்ல முற்பட, அப்போதும் கூட மிதுன் முகத்தினில் ஒரு ஏளனமும், வன்மமும் கலந்த புன்னகை தான்.

‘நல்லா அவதிப்படுங்கடா எல்லாம்… என்னையா ரூம்ல வச்சு லாக் பண்றீங்க.. எனக்கா ஸ்லீபிங் டோஸ் கொடுக்குறீங்க… வந்து எல்லாம் ஒருநாள் என் கால்ல விழுவீங்கடா அப்போ இருக்கு.. எல்லாத்தையும் ஒரே நேரத்துல பண்ணிட்டா ட்விஸ்ட் போயிடுமே… ஒவ்வொன்னா பண்ணா தானே நல்லாருக்கும்..’ என்று அவன் மனது எண்ண,

அவன் எண்ணத்தின் குரூரத்தை அவன் கண்கள் காட்ட,  கடைசியாய் நின்று நிதானித்து அவன் பார்வை அனுராகாவில் நிலைத்துவிட்டுச்  செல்ல,  அனுராகாவும் அசராது அவனின் பார்வையை தாங்கித்தான் நின்றாள்.

‘இன்னும் இருக்கு ..’ என்றதொரு பார்வை அவனும் பார்க்க,

அவளோ ‘போடா நீயெல்லாம் ஒரு ஆளு..’ என்றுதான் பார்த்தாள்.   

மிதுனைப் பார்க்கையில் அனைவருக்குமே ஒருவித கோபம் துளிர்க்க, சக்ரவர்த்தியோ ‘இவன் ஏன் இப்படி…’ என்று நொந்தே போனார்.  

உஷாவோ அதற்கும் மேலே..

யாருக்கும் என்ன செய்வது என்று புரியாது நிற்க, காதர் தான் வந்து “அய்யா.. ஏற்பாடு பண்ணுங்கய்யா.. நம்ம யாருமே போகலைன்னா தம்பி மனசு நோகும்.. இந்த பொண்ணாவது போயி பார்த்துட்டு வரட்டும்..” என,

சக்ரவர்த்தி அவரின் பிஏ வைப் பார்க்க, அவரோ “அய்யா நம்ம சைட்ல இருந்து ஏற்பாடு பண்றோம்னு தெரிஞ்சா அது வேற மாதிரி திரும்பவும் சான்ஸ் இருக்கு.. மேடம் அவங்க சைட்ல இருந்து பெர்சனலா பண்றதுபோல இருந்தா நல்லது..” என, அனுராகாவிற்கும் அவர் சொல்ல வருவது புரிந்தது.

ஆனால் சக்ரவர்த்திக்கு தான் அப்படியொரு கோபம்.

“ஏன்டா.. உள்ள இருக்கிறது என் மகன்.. எனக்கு சல்யூட் வைக்கிற ஆளுங்க இப்போ அவனை விசாரணை பண்ணிட்டு இருக்காங்க.. பார்க்கலாம் சொன்னா அதுக்கு ஆயிரம் காரணம் சொல்லி வேணாங்குறீங்க.. இப்போ ஏற்பாடு கூட செய்யக்கூடாதுன்னா என்னடா அர்த்தம். இல்ல என்ன அர்த்தம்ங்கிறேன்.. அனுராகா நீ வாம்மா.. நானே நேர்ல போறேன்.. எவன் என்ன சொல்றான்னு நானும் பாக்குறேன்…” என்று சக்ரவர்த்தி வெகுண்டு கிளம்ப,

“அய்யா.. சொல்றதை கொஞ்சம் கேளுங்க…” என்றார் காதர்.

“இன்னும் என்ன என்னடா சொல்லப் போறீங்க.. ஒரு பிரச்சனை ஆகுதுன்னா முதல்லயே என்கிட்டே சொல்லிருக்கணும்.. அதைவிட்டு இவ்வளோ தூரம் வந்து.. ச்சே…” என்று கத்த,

“அனு பொண்ணு மட்டும் போய் பார்க்கட்டும்..” என்றார் காதர்.

“நான் வேணாங்கலையே…” என்றவர் “யார் என்ன சொன்னாலும் சரி.. நீ ஏற்பாடு பண்ணு.. என்ன டைம்னு கேளு.. யார் கேட்டாலும் மினிஸ்டர் சொன்னார்னு சொல்லு.. எவன் வந்து என்னைக் கேள்வி கேட்கிறான்னு பாக்கலாம்..” என்று அவர் பிஏவிடம் சொல்ல, வேறு வழியின்றி அவரும் சரி என்றார்.

அடுத்த அரைமணி நேரம், அந்த பிஏ வும் யார் யாரை பிடிக்கவேண்டுமோ, எவர் எவரிடம் எப்படி பேசவேண்டுமோ அப்படி பேசி தீபனை அனுராகா சந்திக்க நேரம் ஏற்பாடு செய்ய,

“அய்யா.. பத்து நிமிஷம் தான் கொடுப்பாங்களாம்..” என,

சக்ரவர்த்தியோ இறுகிப்போய் “ம்ம்…” என்று தலையை ஆட்டியவர் “வரட்டும்.. என் மகன் வெளிய வரட்டும்.. அப்புறம் இருக்கு ஒவ்வொருத்தனுக்கும்..” என்று பல்லைக் கடிக்க,

“அது போதும்.. ஜஸ்ட் எனக்கு தீப்ஸ பார்த்தா கூட போதும்…” என்று சொல்லும்போதே அனுராகாவின் குரல் நடுங்கியது.

இத்தனை நேரம் ஆவேசத்தில் கத்தியவள், கண்கள் கலங்கி, குரல் நடுங்கிப் பேச, அனுராகாவின் இந்தத் தோற்றம் தாராவிற்கே புதிதாய் இருந்தது.

உஷாவிற்கோ அனுராகா தீபனின் உறவின் ஆழம் புரிய, சக்ரவர்த்திகூட ‘நல்ல பொறுத்தம்…’ என்றுதான் எண்ணினார்.

“என்ன டைம்…” என்று அவள் கேட்க, அதற்குள் இரண்டு பக்க வக்கீல்களின் குழுவிடமும் அவரவர் ஆட்கள் பேச,  தீபனிடம் என்ன கேட்டுக்கொண்டு வரவேண்டும் என்பது எல்லாம் வரிசைப் படுத்தப்பட்டது.

“மேம்.. சார் இந்த இந்த டேட்ல எல்லாம் எங்க இருந்தார்.. என்ன பண்ணார் இதெல்லாம் க்ளியரா கேட்டிட்டு வாங்க.. இந்த கேஸையும் ஒண்ணுமில்லாம பண்ணிடலாம்..” என, அனுராகாவோ எரித்துவிடுவதைப் போல் பார்த்தாள்.

“மேம் இதுல இருந்து வெளிய வரணும்னா சார் இந்த டீடைல்ஸ் எல்லாம் சொல்லணும்..” என்று அவர்களும் சொல்ல,

கண்களை இறுக மூடித் திறந்தவள் “நான் போறது அவனைப் பார்க்க, இன்வெஸ்டிகேஷன் பண்ண இல்லை.. மோர் ஓவர்  நீங்க சொல்ற இந்த டேட்ல தீபன் எங்க இருந்தாலும், எப்படி இருந்திருந்தாலும் அவனை வெளிய கொண்டு வர வேண்டியது நம்ம பொறுப்பு.. அதைவிட்டு எல்லாரும் ஒரு கதை சொல்லிட்டு இருக்கீங்க….” என்று சொல்ல, யாராலும் எதுவும் சொல்ல முடியவில்லை.

உண்மையும் அதுதான்..!!

ஏற்கனவே விசாரணையில் இருப்பவனை, தானும் போய் என்ன செய்தாய், எங்கிருந்தாய் என்று கேட்டால் அவனும் தான் என்ன செய்வான்.

அனுராகா தீபனைப் பார்க்கக் கிளம்பிக்கொண்டு இருக்க, தாராவோ அலைபேசியில் ரூமாவை அழைத்தவர் “சார் எங்க இருக்கார்னு பார்க்க சொல்லு.. எவ்வளோ இம்பார்ட்டன் வொர்க்னாலும் பரவாயில்ல,  கிளம்பி வரச் சொல்லு..” என்று கட்டளையிட,

அனுராகா அதனைக் கவனித்தாலும் பதிலேதும் சொல்லிக்கொள்ளவில்லை.

நீரஜாவோ “கொஞ்சம் நிதானமா இரு அனு..” என,

“என்னால எப்படி நீரு முடியும்… உள்ள அங்க என்ன நடக்குதுன்னு எதுவுமே ஒன்னும் புரியல. இங்க இத்தனை பேர் இருந்தும் யாராலையும் எதுவும் பண்ண முடியலைன்னா என்ன அர்த்தம்..” என்று ஆதங்கப் பட்டவள்,

உஷாவினைப் பார்த்து “நீங்க வர்றீங்களா..” என்று கேட்டாள்.

அவள் கேட்டதுமே, திடம் வந்தவர் போல் நிமிர்ந்து நின்றவர் “என் மகன் வெளிய வரட்டும்.. நான் பார்த்துக்கிறேன்..” என, பின் அனுராகாவும் தர்மாவும் தான் கிளம்பினர்.

இருவரும் கிளம்பி நடக்கத் தொடங்க, அதே நேரம் வேகமாய் உள்ளே வந்தாள் ஆர்த்தி.. உடன் பல்ராம் சேட். நொடிப் பொழுது அனுராகா இவர்களைப் பார்த்து தயங்கி நிற்க, ஆர்த்தியும் கூட இவளைக் கண்டு தயங்கித்தான் நின்றாள்.

மற்றவர்களோ இவர்கள் ஏன் இப்போது என்று பார்க்க, அனுராகா தர்மாவிடம் “போலாம்..” என்று சொல்லி நடக்க,

ஆர்த்தி சக்ரவர்த்தியிடம் விரைந்தவள் “அங்கிள்.. அங்கிள்.. இந்த இந்த போட்டோஸ் எல்லாம் உண்மை இல்லை. இதுல இருக்கிறது அந்த மாடல் இல்லை.. நான்… பேஸ் க்ளோஸ் அப்ல க்ளியரா இல்லைன்னாலும் என்னால கண்டிப்பா சொல்ல முடியும் இதுல இருக்கிறது நான்தான்…” என்று ஒருசில புகைப்படங்களை காட்ட,

அதில் தீபனின் கார் தெளிவாய் தெரிய, தீபன் காரின் வெளியே நிற்க, உள்ளே இருப்பது ஒரு பெண் என்பது மட்டும் தெரிந்தது. முகம் சரியாய் தெரியவில்லை. அதைத்தான் செய்தி சானல்கள் மாற்றி மாற்றி ஒளிபரப்பு செய்துகொண்டு இருந்தது.

ஆர்த்தியின் இவ்வார்த்தைகள் அனுராகாவின் காதினிலும் விழ, அப்படியே ஆணி அடித்தது போல் நின்றாள்.

இதனைக் கேட்டு சக்ரவர்த்தி “என்ன சேட் இதெல்லாம்..” என,

அவரோ “நியூஸ் பார்த்ததுல இருந்து ஆர்த்தி இதான் சொல்றா.. இங்க வரணும்னு ஒரே பிடிவாதம்.. இல்லைன்னா அவளே இன்டர்வியூ கொடுப்பேன்னு…” என்று சேட் சொல்லி முடிக்கும் முன்னம்,

“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்…” என்று கத்திவிட்டாள் அனுராகா.

ஆர்த்தி அதிர்ந்து போய் பார்க்க “இந்த விஷயம் இங்க இருக்கவங்க தாண்டி வெளிய போகவே கூடாது..” என்றவள்,

ஆர்த்தியிடம் வந்து அவளின் கையினில் இருக்கும் புகைப்படங்களை வாங்கி இரண்டொரு நொடிகள் அதனையேப் பார்க்க,

தாரா கேட்டார் “ஏன் அனு… இதுல இருக்கிறது ஆர்த்திதான்னு ப்ரூப் பண்ணிட்டா இந்த கேஸ்ல எவிடென்ஸ் ஸ்ட்ராங் இல்லைன்னு சொல்லி வெளிய வந்துடலாமே..” என்று சொல்ல,

“ம்ம்ஹும்… கேஸ் தான் இன்னும் ஸ்ட்ராங் ஆகும் மம்மி..” என்றாள் அனுராகா தீர்க்கமாய்.

“என்ன சொல்ற அனு…” என்று உஷா சிறிது பதறிக் கேட்க,

“ஏற்கனவே ஒரு மாடலோட ரிலேஷன்ஷிப்னு நியூஸ்.. மர்டர்னு கேஸ்.. இப்போ இதுல இருக்கிறது ஆர்த்தின்னு சொன்னா, இவங்க எங்க போனாங்க, ஏன் போனாங்க.. இவங்களுக்குள்ள என்ன ஏதுன்னு ஆயிரம் கேள்விகள் வரும்..” என்று அனுராகா சொல்லும்போதே அவளுக்கு மனதினில் வேறொரு யோசனை.

“இல்ல.. இது வைசாக் போறப்போ…” என்று ஆர்த்தி சொல்ல,

“வாட் எவர்??!!! வைசாக் ஏன் போனீங்கன்னு கேட்டா?? நீ சொல்வியா என்னை அங்க மறைச்சு வச்சிருந்தான்னு.. டெல் மீ ஆர்த்தி..” என்று அனுராகா கேட்க, ஆர்த்தியிடம் பதில் இல்லை.

ஆர்த்தி மௌனமாய் இருக்க “இல்லைதானே.. சொல்ல முடியாது தானே.. சொன்னா அதுக்கும் ஏன் எதுக்கு என்னன்னு பிராப்ளம் பெருசாகிட்டே தான் போகும்.. முடியாது.. புரிஞ்சதா.. எது எது எல்லாம் தீபன் வெளிய யாருக்கும் தெரியக் கூடாதுன்னு நினைச்சு பண்ணானோ.. அது எல்லாமே நம்மலே வெளிய சொல்ற சிச்சுவேசன் வரும்…” என்றவள்,

“இப்பவும் சொல்றேன் ஆர்த்தி.. இதுல இருக்கிறது நீ இல்ல புரிஞ்சதா.. மைண்ட்ல இதுமட்டும் தான் இருக்கணும்…” என, அனைவருமே கொஞ்சம் திகைப்பில் வாய் மூடித்தான் போயினர்.

தர்மா வந்து “டைம் ஆகுது…” என,

“ம்ம் இதோ போலாம்..” என்றவள் நாகாவை அழைத்து “D வில்லேஜ்ல சிசிடிவி பூடேஜ் வாங்குங்க..” என்றுவிட்டு செல்ல,

அனைவருக்குமே இவள் என்ன செய்யப் போகிறாள் என்று தான் இருந்தது. இதென்ன இப்படி இடியாப்ப சிக்கல் என்று தோன்ற சக்ரவர்த்தி தொய்ந்து போய் அமர்ந்துவிட்டார். எப்படியானதொரு பதவியில் இருந்தவர்.. இதோ இன்னும் சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை.. இடையில் இப்படியெல்லாம் என்கையில், கட்சியின் மேலிடத்தில் இருந்து ஏகப்பட்ட அழுத்தம் அவருக்கு. பதவியை உபயோகித்து எதுவும் செய்யக் கூடாது என்று.

நாம் ஒன்று ஏதாவது செய்யப் போக, அது வேறு எதையாவது கிளப்பிவிட்டு பெரும் பிரச்சனையில் யாரும் சிக்கிக் கொள்ள கூடாது என்று பொறுமை காத்திட எண்ண, சக்ரவர்த்தி மகனா, கட்சியா என்று பார்க்க வேண்டிய நிலை.

மனது அடித்துக்கொண்டாலும் அவரால் அந்த நிலையில் எதுவும் செய்ய முடியாது போனதுதான் அவருக்கே வருத்தம்..

‘எத்தனை பேருக்கு எவ்வளோ செஞ்சி கொடுத்திருப்பேன்.. இப்போ என் மகன்னு வர்றப்போ வேடிக்கைப் பாக்குற நிலைமைல இருக்கேனேடா..’ என்று காதரிடம் கூட புலம்பித் தவித்தார்.

இதற்கெல்லாம் காரணம் தன்னுடைய இன்னொரு மகன் என்பதுதான் வேதனையின் உச்சம்.

மிதுனிடம் எத்தனையோ தடவை கேட்டும் பார்த்துவிட்டார். பொறுமையாகவும் கூட..

“உனக்கு என்னடா வேணும் சொல்லு.. ஆனா இதெல்லாம் நிறுத்து..” என்று கூட கேட்டுவிட்டார்.

அவனோ “எனக்கு நீங்க கொடுத்து இனி எதுவும் வேண்டாம்…” என்பதில் தான் குறியாய் நின்றான்.  இதற்குமேல் அவரால் அவனிடம் இறங்கிப் போய் பேசிட எல்லாம் முடியவில்லை. அதற்குமேல் அவனை கண்டுகொள்ளவும் இல்லை. ஆனால் இப்போதோ, இனியும் என்ன ஆகுமோ என்று தான் நினைத்தார்..

அப்படியே தொய்ந்து போய் சோபாவில் அமர்ந்துவிட, உஷாவிற்கோ மனது அடித்துக்கொண்டு இருந்தது.

காதர் தான் சேட்டிடம் பேச, அவரோ தலையை தலையை ஆட்டிக்கொண்டு இருக்க, ஆர்த்தி சென்று உஷாவிடம் பேசினாள்.

“ஆன்ட்டி நீங்க எதுவும் கவலைப்படாதீங்க..” என,

“ம்ம்ம் நானே என் பையனை சிக்க வச்சிட்டேன்.. என்னை கேட்காம எதையும் செய்யாதிங்கம்மான்னு படிச்சு படிச்சு சொன்னான்.. ஆனா பெரியவன் பேச்சுக்கேட்டு உங்களுக்கு நிச்சயம்னு பேசி.. அடுத்து நடந்தது தானே இத்தனை குழப்பமும்…” என்று உஷா வருந்த,  

அதிசயமாய் தாராவும் கூட அவருக்கு ஆறுதல் சொல்ல,  அங்கே அனுராகாவோ தீபனைக் காண சென்றுகொண்டு இருந்தாள். உடன் தர்மாவும் நாகாவும்..

இரட்டையர்கள் இருவரும் முன்னே இருக்க, அனுராகா பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவளுக்கு எண்ணிலடங்கா சிந்தனைகள். கேள்விகள்.. அனைத்திற்கும் பதில் தீபனிடம் இருக்கும்.

ஆனால் அவனிடம் போய் எல்லாம் கேட்க முடியுமா?? அதற்கான நேரமா இது?? நேரம் தான் போதுமா?? இந்த பத்து நிமிடத்தில் அவர்களும் தான் அப்படி என்ன பேசிட முடியும்??

காரில் வருகையில் கூட அவளின் வக்கீல்கள் குழுவிடம் தான் பேசியபடி வந்தாள். யார் என்ன சொல்லியும் கூட அவளின் டென்சன் அடங்குவதாய் காணோம்.

பேசிவிட்டு வைத்தவள் நாகாவிடம் “அந்த சிசிடிவி பூட்டேஜ் சொல்லியாச்சா..” என,

“ம்ம் சொல்லியாச்சு.. பட் அது எதுக்கு??!!” என்றான்.

“ரீசன் இருக்கு.. ஆர்த்தி தீபனோட போறப்போ பிக்ஸ் எடுத்திருக்காங்க யாரோ.. அப்போ தீபனை க்ளோஸா வாட்ச் பண்ணிருக்கணும்.. அப்படி வாட்ச் பண்ணவங்க கண்டிப்பா நானும் தீபனும் D- வில்லேஜ்ல இருந்ததையும் வாட்ச் பண்ணிருக்கணும்.. எங்களை போட்டோ கூட எடுத்திருக்கலாம்..  அந்த மாடலோட டெத் பெங்களூர்ல தான் நடந்திருக்கு.. ஆப்போசிட் ஆளுங்க எல்லாத்தையும் லிங்க் பண்ணி தீபனை லாக் பண்ணத்தான் பார்ப்பாங்க.. சோ பூட்டேஜ்ல கண்டிப்பா ஏதாவது க்ளூ கிடைக்கும்.. யாரும் எங்களை பாலோ பண்ணாங்களான்னு பார்க்க..” என்று அனுராகா விளக்க, காரினுள் அமைதி..

ஆனாலும் நாகாவும் தர்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்து லேசாய் புன்னகைதுக்கொள்ள, இதனைப் பார்த்தவள்

“என்ன??!!” என,

“இல்ல.. ரெண்டுபேரும் ஒரே மாதிரி யோசிக்கிறீங்க…” என்றான் தர்மா.

“யார் ரெண்டு பேரும்..??” என்று அப்போதும் அனுராகா கேட்க,

“D – வில்லேஜ்ல இருந்த ரெண்டு பேரும்…” என்று நாகாவும் சொல்ல, தன்னப்போல்  அனுராகாவின் முகத்தினில் ஒரு புன்னகை.

அவளுக்கே அவளை எண்ணி ஆச்சர்யம் தான். தான் இத்தனை தூரம் ஒருவனுக்காக பார்ப்போமா என்று??!!

பொதுவாய் ஒரு சௌகர்யத்திலேயே வளர்ந்தவள். அதிகம் யாருக்காகவும் யோசிக்கவேண்டியதும் இல்லை. யாரைப் பற்றியும் பெரியதாய் எண்ணும் சூழலும் இல்லை. அப்படியிருக்கையில் தீபனுக்காக என்று நினைக்கையில் அவளுக்கு மேலும் மேலும் அவன் மீதான பிடிப்புதான் அதிகரித்தது.

“சப்போஸ் பூட்டேஜ்ல நம்ம நினைக்கிற எதுவும் கிடைக்கலன்னா..” என்று தர்மா திரும்பவும் கேட்க,

“கிடைக்கலன்னா.. ம்ம்… அப்போ சொல்றேன் என்ன செய்றதுன்னு..” என, சிபி சிஐடி அலுவலகமும் வந்திட, அனுராகா மட்டும் தான் உள்ளே போனாள்.

அவளுக்கான நேரத்திற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருக்க, அவளிடமும் சில விசாரணைகள் நடந்தது ஏன் பார்க்கவேண்டும் என்ன ஏதென்று.

பின் அவளை முழு பரிசோதனை செய்துவிட்டு, அவளின் கைப்பை, போன் முதலியன எல்லாம் வாங்கி வைத்தப் பிறகே அவளை தீபனிடம் அனுப்பினார்கள்.

ஒருவர் மட்டுமே தங்கக் கூடிய அறை. சுவர் ஓரத்தில் ஒரு கட்டில் மெத்தை, ஒரு பேன். சற்று தள்ளி ஒரு மேஜை நாற்காலி, மேஜையின் மீது அருந்துவதற்கு நீர் பாட்டில்.

அனுராகாவிற்கு அவ்வறையை பார்த்ததுமே மனம் கொதித்துப் போனது.

எப்படி இருந்தவன்.. அவன் இப்படியானதொரு அறையிலா??!!

‘ஓ..!! நோ…’ என்று அவள் மனம் அலற, பார்வையோ வேகமாய் மீண்டும் அறையை அலசியது. தீபன் எங்கே என்று.

தீபன் அங்கே இல்லை..

‘தீப்ஸ்…’ என்று இதழ்கள் முனுமுனுக்க பார்வையை ஓட்ட, அவனோ அறையின் மற்றொருபக்கம் இருந்த கதவினைத் திறந்துகொண்டு உள்ளே வர அவ்வளோ தான் “தீப்ஸ்…” என்றவள், வேகமாய் போய் அவனை இறுகக் கட்டிக்கொண்டாள்.

தீபனின் கரம் அவளின் முதுகை ஆதரவாய் தழுவ, “ஹேய் பேபி…” என்ற அவன் குரல் கேட்டுத்தான் முகம் நிமிர்ந்தாள் அனுராகா..

பத்து நாட்கள் மழிக்கப்படாது இருக்கும் முகம், உறக்கம் சரியாய் இல்லாததால் கண்களில் ஏறியிருந்த சிவப்பு.. கண்களை சுற்றி லேசாய் கருமை.. எல்லாம் எல்லாம் தாண்டி தன்னைப் பார்த்ததும் எப்போதும் அவன் இதழில் தோன்றும் அந்த புன்னகை..

இப்போதும் கூட அது அப்படியே அந்த இடத்தினில் தோன்றி நிற்க,

“தீப்ஸ்…” என்றவளுக்கு வார்த்தையே வரவில்லை.

கண்கள் கலங்கிப் பார்க்க “ஹேய்… அழத்தான் வந்தியா நீ…” என்றவன்

“சிட் சிட்.. இப்படி எல்லாம் ஹக் பண்ணக்கூடாது சுத்தி கேமெரா இருக்கு…” என்றபடி அவளை அங்கிருக்கும் நாற்காலியில் அமர வைத்தவன், பின் இலகுவாய் அந்த மேஜையின் மீது ஏறி அமர,

அதனைக் கண்டு புன்னகைத்தவள் “உள்ள இருந்தாலும் உன்னோட ஸ்டைல் போகல..” என்றாள்.

“எங்க இருந்தாலும் நான் தீபன் சக்ரவர்த்தி தான்.. அதை யாரும் மாத்த முடியாது பேபி…”

“அடடா..!!! நான் எவ்வளோ பீல் ஆகி வந்தேன்.. நீ இப்பவும் இப்படி..” என்றவள் “ஓ!! காட் இங்க இருக்கவங்களையும் இப்படித்தான் பேசி கரக்ட் பண்ணியா?? அதான் உன்னை வெளிய விடலயா??” என்று அனுராகா கேட்க,

“ஹா ஹா…” என்று சிரித்தவன் “சொல்லு என்னை பார்க்கணும் சொன்னியாம்..” எனவும், அனுராகாவின் பார்வை மாறிவிட்டது.

“சொல்லு ராகா..??!!”

“நீ… உனக்கு.. இங்க என்னதான் தீப்ஸ் நடக்குது.. நம்ம ஒன்னு நினைச்சா..”

“ஷ்..!! நோ இப்போ இங்க எதுவும் பேசக் கூடாது ராகா..” என்றவன், “நீ ஆளே மாறிட்ட…” என்றபடி அப்போதும் புன்னகைக்க, தாடிக்குள் இருந்தும் அவனின் சிரிப்பு அவளுக்கு வசீகரமாய் தான் தெரிந்தது.

அனுராகாவிற்கோ தீபனைக் கண்டதில் என்ன பேசவேண்டும் என்பது கூட மர்ணதுவிட, அவனோ  “இந்த மர்டர் கேஸ்.. எப்படி ப்ரேக் பண்ணனும்னு எனக்குத் தெரியும்.. சோ நீ இதுல எதுவும் பண்ணிடாத..” என்று சொல்ல,

அனுராகாவின் முகமும் மாறிப்போனது.

அவள் பதில் சொல்லாது இருக்க “ராகா.. நீ ஒரு டிஸ்கஷன் டாக் ஆகுறது எனக்கு பிடிக்காது…” என்றவனின் குரலில் உறுதி இருக்க,

“நீ இப்படி இருக்கிறது கூடத்தான் எனக்கு பிடிக்கல.. லுக்.. நீ என்ன செய்யணுமோ அதை நீ பண்ணிக்கோ.. ஐ டோன்ட் மைன்ட் இட்.. பட் நான் என்ன செய்வேனோ அதை செய்வேன்.. நீ கொஸ்டீன் பண்ணக்கூடாது…” என்று அவளும் பிடிவாதமாய் சொல்ல,

“ஷ்…!!!! இதுக்குதான் நான் யாரையும் பார்க்கவேண்டாம் சொன்னேன்…” என்றான் இறுகிய குரலில்.

“வாட்… நீ பார்க்க வேண்டாம் சொன்னியா??!!”

“எஸ்..”

“ஹவ் டேர் ஆர் யூ தீப்ஸ்.. அங்க அங்கிள் ஆன்ட்டி எல்லாம்…” என்று அனுராகா கைகளை விரித்து எதையோ சொல்ல வர,

“எல்லாம் ஐ க்னோ… நீ வெளிய போறப்போ ஒருத்தர் உன்கிட்ட ஒரு போன் கொடுப்பார்…  காருக்கு போகவும் ஆன் பண்ணி அதுல இருக்க ஆடியோ கேளு… உன்னோட யார் வந்தா தர்மா ஆர் நாகா??!!” என்று கேட்க,

“ரெண்டுபேரும் தான்..” என்றாள் பிகுவாய்.

“ஓகே குட்.. அப்போ இது உங்க மூணு பேருக்கு மட்டும் தெரிஞ்சா போதும்.. வேற யாருக்கும் தெரியவேணாம் ஓகே..” என, தலையை வெடுக்கென்று திருப்பிக்கொண்டாள் அனுராகா.

எத்தனை பதறி இங்கே வந்தால், இவன் இங்கேயும் திட்டம் தீட்டிக்கொண்டு இருக்கிறான் என்று மனது வெகுண்டது..

எது எப்படியே தீபன் வெளியே வந்தால் போதும்..

இருவருக்கும் அதன் பின் வார்த்தைகள் ஒன்றுமில்லை என்ற நிலை.. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு தான் அமர்ந்திருந்தனர்.

அனுராகா பேசவேண்டும் என்று நினைத்ததைக் கூட விட்டுவிட்டாள். அவள் மனதில் அவள் என்ன செய்திட வேண்டும் என்பது முடிவாகிப்போனது.

தீபனோ இங்கிருந்து வெளிவருவது பிரச்னை இல்லை, வந்த பிறகு என்ன செய்வது என்பதை யோசித்து முடிவுகள் எடுத்திருந்தான்..

மௌனம் என்ற ஒன்று வந்தமர்ந்த பின்னே, நேரம் மெதுவாகவே கடப்பதுபோல் தெரிய இருவரின் பார்வையும் கடிகாரத்தைத் தான் தொட்டுக்கொண்டு இருந்தது அடுத்து.

பத்து நிமிடம் முடியும் போதே “ஓகே நீ கிளம்பு…” என்று அவன் சொல்லவும்,

“அப்படியே உன்னோட ஜாயின்ட் அடிச்சு இங்க இருக்கப் போறதில்லை..” என்று வெடுக்கென்று சொன்னாலும்,

மீண்டும் ஒருமுறை அவனை இறுக அணைத்தவள் “டேக் கேர்…” என, அதற்குள் கதவு தட்டப்பட

“ஓகே… ராகா நான் இப்பவும் சொல்றேன்.. நீ எந்த மூவும் பண்ணாத…” என்று சொல்லி தீபன் விடைகொடுக்க,

“பைனல் டெசிசன் இஸ் மைன்..” என்றுசொல்லி தான் அனுராகா வெளியேவே வந்தாள்.

தீபனுக்கு கண்கள் அதிருப்தியில் சுருங்கினாலும், அனுராகாவின் முடிவு என்பது அவள் மட்டும் அறிந்த ஒன்றுதானே..

அனுராகா கீழிறங்கி வர, அவளின் கைப்பை, அலைபேசி எல்லாம் அவளிடம் கொடுக்கப்பட “மேம்…” என்று ஒருவர் அழுத்தமாய் அழைத்தே அவளின் கைப்பையை கொடுத்தார் .

“எஸ்…” என்று அவள் பார்க்க, அந்த நபரின் பார்வை, கைப்பையின் முன் பகுதியை சற்று அழுத்தி பின் அவளிடம் நீட்ட, அனுராகாவிற்கு புரிந்துபோனது.

“தேங்க்ஸ்…” என்றுசொல்லி காருக்கு வர, நாகா எதுவும் கேட்காது கார் கதவினைத் திறந்துவிட, தர்மா டிரைவர் இருக்கையில் இருந்தான்.

ஏறி அமர்ந்தவள் வேகமாய் அவளின் பையை திறக்கப் போக நாகாவோ “இங்க வேணாம்.. கொஞ்சம் தள்ளிப் போலாம்…” என, அவனை கொஞ்சம் வியப்பாய் பார்த்தாள்.

அப்போதுதான் அவளுக்கு ஒன்று நினைவு வந்தது. வீட்டினில் இருந்து கிளம்புகையில் அவள் அலைபேசி மட்டுமே தான் எடுத்துவந்தாள். நாகாதான் “உங்களோட ஹேன்ட் பேக்…” என்றுசொல்லி கொண்டு வந்து காரில் கொடுத்தான்.

அப்போதைய மன நிலையில் அவள் அதெல்லாம் பெரிதாய் நினைக்கவில்லை. ஆனால் இப்போது பார்த்தால், அவள் கைப்பை கொண்டு செல்லவேண்டும் என்பதுகூட திட்டமாய் இருந்திருக்கிறது என்று புரிய,

“சோ..!! தீப்ஸ் உங்க ரெண்டு பேரோடவும் காண்டாக்ட்ல தான் இருக்கான்.. இஸ் இட்…??!!” என்று கோபத்தை அடக்கி கேட்க,

தர்மா அதற்கு பதில் சொல்லாது “அந்த போன் ஆன் பண்ணுங்க..” என,

“டேய்..!!!” என்று பல்லைக் கடித்தவள், இருவரையும் முறைத்தபடியே அவளின் கைப்பையினுள் புதிதாய் இருந்த ஒரு அலைபேசியை எடுத்து ஆன் செய்தவள், அதில் ஏற்கனவே பதிவு செய்திருந்த ஒரு ஆடியோவை ஒலிக்கவிட,

“நாகா அண்ட் தர்மா.. கிளியரா கேட்டுக்கோங்க… நெக்ஸ்ட் இம்ப்ளிமென்ட் பண்ண வேண்டியது ப்ளான் சி.. ஓகே வா..” என்றவன்,

“அண்ட் ராகா… உன் டாடியோட காண்டாக்ட்ஸ்ல ரத்னம்னு ஒருத்தர் இருப்பார்.. ஹீ இஸ் அ மிடில் மென் ஃபோர் பிஸ்னஸ் அண்ட் பொலிட்டிக்கல் அண்டர்ஸ்டாண்டிங்.   அவரைப் பிடி.. யார் இந்த விஷயம் எல்லாம் வெளிய கொண்டு வர்றாங்கன்னு இந்தமாதிரி ஆளுங்களுக்கு ஈசியா தெரிஞ்சிருக்கும்…” என்ற தீபனின் குரல் அதோடு நின்று போனது..

அவன் – நீ ஏதும் செய்யாதே..

அவள் – நீ ஏதும் சொல்லாதே..

காதல் – என்னையதான்டா ரூம்ல போட்டு பூட்டி வைக்கணும்…!!