Advertisement

மிதுன் இன்னும் என்ன என்ன செய்து வைத்திருக்கிறானோ என்று ஒவ்வொரு முறையும் யோசித்து யோசித்து தலை வெடிப்பது போலிருந்தது தீபன் சக்ரவர்த்திக்கு.

உஷா பெயரில் இருக்கும் ஆறு கல்லூரிகளிலும் வருவமான வரித்துறை ரெய்ட்.. நாளை விடிந்தால் தேர்தல் எனும் நிலையில் இவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

அங்கே உஷாவோ தனியே அவரின் பங்களாவில் இருக்க, யாராலும் உள்ளேயும் செல்ல முடியவில்லை. உள்ளிருப்பவர்கள் எல்லாம் வெளியேவும் வர முடியவில்லை. பொழுது கூட விடிந்துவிட,    இந்த ரெய்ட் விஷயம் வேறு  ஒருபக்கம் செய்திகளிலும், செய்தித் தாள்களிலும் ஒளிப்பரப்பகிக் கொண்டு இருக்க,

தீபனை மொத்தமாய் மிதுனின் பால் துவேசம் கொள்ள வைத்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். உஷாவினை அழைத்து வருமான வரித்துறை ஆட்கள் கேள்விகள் கேட்கத் தொடங்க, அப்பாவின் இத்தனை ஆண்டுகால அரசியல் வாழ்வில் இப்படியானதொரு நிகழ்வு நடந்ததே இல்லை.

தீபனால் இங்கே இருக்கவும் முடியவில்லை, மிதுனை விட்டு கிளம்பிச் செல்லவும் முடியவில்லை, ஒருநிலையில் தாங்காது “டேய் எந்திரிடா..” என்று மிதுனின் கன்னம் தட்ட, அவனிடம் அசைவே இல்லை.

“டேய் மிதுன்.. எந்திரி…” என்று அவனைப் போட்டு உலுக்கியவன், அவனின் முகத்தினில் தண்ணீர் தெளிக்க, லேசாய் ஒரு அசைவு.

அவனைப் போட்டு பாடாய் படுத்தி எழுப்பி உட்கார வைக்க “என்னடா வோட் போட வரணுமா??!!” என்றான் நக்கலாய் ஒருவிதா குளறல் குரலில்.  

“ஏய்.. உன்னோட வோட் எப்படி போட்டுக்கணும்னு எனக்குத் தெரியும்.. முதல்ல இந்த ரெய்ட் மண்ணாங்கட்டி எல்லாம் ஸ்டாப் பண்ண சொல்லு..” என,

“ஹா ஹா…” என்று சிரித்த மிதுனோ, முகத்தினில் வழியும் நீரை துடைத்து “உங்கப்பா தான் மினிஸ்டர் சக்ரவர்த்தி ஆச்சே.. முடிஞ்சா பண்ணிக்கச் சொல்லு..” என்று நக்கல் பேச,    

“டேய்.. என்ன பண்ணிருக்க நீ.. அம்மாடா..!!” என்று தீபன் கத்தினான்.

“எஸ் அம்மாதான்.. சோ வாட்??!!” என்றான் மிதுன் மிதப்பாய்..

“மிதுன்…!!!” என்று கத்த, அவனோ ஹாயாகா இருந்தான்..

“என்னை யாரும் மைன்ட் பண்ணல.. சோ நான் ஏன் யாரையும் மைன்ட் பண்ணனும்..” என்று.

“மிதுன் வேணாம்.. அம்மாக்கு இதெல்லாம்..” எனும்போதே,  தீபன் சக்ரவர்த்திக்கு அனுராகா அழைத்துவிட்டாள். முதலில் தீபன் அழைப்பினை ஏற்கவில்லை.

அவளோ விடாது அழைக்க “ம்ம்ச் என்ன ராகா..” என்று இவன் சொல்லும்போதே,

“தீப்ஸ்.. ஆன்ட்டி உனக்கு எதுவும் பவர் கொடுத்து இருக்காங்களா..” என்று கேட்க, தீபனுக்கு எதுவுமே புரியவில்லை.

“வாட்..??!!” என,

“ஷ்… காம்டவுன் தீப்ஸ்.. நான் சொல்றதை நிதானமா கேளு.. ஆன்ட்டி அவங்களோட பிராபர்ட்டீஸ் ஹான்டில் பண்ண உனக்கு எதுவும் பவர் கொடுத்து இருக்காங்களா..” என்று அனுராகா நிறுத்தி நிதானமாய் கேட்க,

“ம்ம்..” என்று இருக்கும் டென்சனில் யோசித்தவன் “எஸ்.. பட் பவர் பீரியட் முடிஞ்சது..” என,

“பரவாயில்ல.. அந்த பவரோட ஒரிஜினல் வேணும்.. எப்படியாவது கொடுத்துவிடு தீப்ஸ்.. இல்லை என்னோட லாயர் அனுப்பவா??” என்ற அனுராகாவின் குரலில் என்ன இருந்ததோ..

“ராகா..??!!” என்றான் தீபன் சக்ரவர்த்தி.

“எஸ்.. நீ எலெக்சன் முடியவும் இண்டர்வியு கொடு.. எல்லாம் நான்தான் பண்ணேன்னு சொல்லு.. அம்மா மேல எதுவும் இல்லைன்னு சொல்லு.. இதுவரைக்கும் நடந்தது யாரோட ப்ளானா வேணா இருக்கலாம்.. பட் இனிமே நம்மளோட ப்ளான் தான் ஓகே வா.. ஒரு டம்மி பிஸினஸ் டீல் செட் பண்ணிருக்கேன்.. இப்போ டீடெய்ல்ஸ் சொல்ல முடியாது.. நான் கேட்டது மட்டும் கொடுத்துவிடு..” என்றவள் வைத்துவிட்டாள்.

தீபன் சக்ரவர்த்திக்கு எதுவுமே விளங்கவில்லை. ஏன் அழைத்தாள், என்ன கேட்டாள், என்று எதுவுமே.

ஆனால் அவனே ஒரு முடிவினில் தான் இருந்தான். உஷாவிற்கு ஏதேனும் ஒன்று எனில் அதனை தான் ஏற்பது என்று.

அவனுக்குத் தெரிந்து கல்லூரி விசயங்களில் எவ்வித குளறுபடிகளும் இல்லை. ஆனால் பழி தீர்த்திட என்று செய்யும் காரியங்களில் எத்தனை ஜோடனைகள் இருக்கும். அப்படி இதிலும் எதாவாது இருந்தால்??!

‘தீப்ஸ் பீ ரெடி…’ என்று தனக்குத் தானே சொல்லியவன், மிதுனைப் பார்க்க, அவனோ அப்போதும் ஏளனமாய் தான் பார்க்க, தேவ்விடம் தீபன் கண் காட்ட, தேவ், புனீத் இருவரும் மிதுனை பிடித்துக்கொள்ள, இம்முறை உறக்க மருந்து செலுத்தவில்லை. சிறிது மயக்க மருந்து தான் செலுத்தினான் தீபன். முழுதாய் மயக்கம் கொள்ளவும் வைக்காது. அதே நேரம் அவனின் தோற்றம் உடல் திடம் இல்லாதவனாய்க் காட்டும்.

“ஒரு ஆம்புலன்ஸ் ரெடிபண்ணி இவனை கூட்டிட்டு போகணும்.. எதிர்க்கட்சி ஆட்கள் செஞ்ச வேலையினால மிதுன் உடல் நிலை சரியில்லைன்னும்.. எழுந்து நடமான முடியலைன்னும் சொல்லணும்.. ஸ்ட்ரெச்சர்ல வச்சு பூத் கூட்டிட்டு போலாம்..” என்றவன், அடுத்து அனுராகா கேட்ட பவர் ஆப் அட்டார்னியை தேடி எடுத்தவன்

“தேவ்.. இதை ராகா கிட்ட கொடுத்துட்டு.. நீ பூத் வா..” என்று சொல்லி, அடுத்து ஆம்புலன்ஸ் வரச் செய்து கிளம்பியும் விட்டான் தீபன் சக்ரவர்த்தி.       

மிதுன் சக்ரவர்த்தி நடக்க முடியாது, ஸ்ட்ரெச்சரில் படுத்த படுக்கையாய் வந்து வாக்களித்து செல்வது அனைத்து மீடியாக்களிலும் ஒளிப்பரப்பு ஆக, தீபன் சக்ரவர்த்தி அவனின் வாக்கினைப் பதிவு செய்துவிட்டு வெளி வருகையில் அவனை சுற்றி ஆட்கள் சூழ்ந்து கொண்டனர்.

“சார்.. சார்.. இதெல்லாம் சிம்பதி வோட்டுக்காகன்னு சொல்றாங்களே..” என்று ஒருவர் கேட்க,

“எது சார்.. எது சிம்பதி வோட்..?? அப்படி சிம்பதி வோட் வாங்கித்தான் பதவிக்கு வரணும்னு எங்க கட்சிக்கோ இல்லை என் அப்பாவுக்கோ எந்த அவசியமும் இல்லை. வோட் போடுறது தனிமனித உரிமை. அது என் அண்ணனுக்கும் இருக்கு.. கண்டிப்பா நான் வோட் போடணும்னு மிதுன் சொன்னதுனால இவ்வளோ கஷ்டப்பட்டு கூட்டிட்டு வந்திருக்கோம் ..” என்றவன்,

பின் கேமரா பக்கம் திரும்பி “எங்கம்மா அங்க இன்கம்டாக்ஸ் ரெய்ட்ல உக்காந்து இருக்காங்க.. அவங்களோட பேர்ல, என்னோட பொறுப்புல இருக்க காலேஜஸ்ல இன்னிக்கு ரெய்ட்.. நம்ம மாநிலம் முழுக்க தேர்தல் நடக்குற இந்த நேரத்துல இப்படி ஒரு ரெய்ட்.. இது அரசியில் சூழ்ச்சின்னு சொல்லாம நாங்க வேற என்ன சொல்ல..

இதோ சிங்கம் மாதிரி இருந்த என் அண்ணன்.. படுத்து இருக்கான்.. இனி மிஞ்சி இருக்கிறது நானும் என் அப்பாவும் தான்.. அதனால மக்களே.. உங்களோட வோட்டுக்களை இப்படி வஞ்சமும், காழ்புணர்ச்சியும், குள்ளநரித் தனமும் இருக்க ஆட்களுக்கு போடாம, சிந்திச்சு செயல்படுங்க.. ” என்றவன் கரம் குவித்துவிட்டு செல்ல, எல்லாமே மாநிலம் முழுவதும் ஒளிப்பரப்பு ஆனது.

அனுராகா வீட்டினில் இருந்தாலும், வரும் ஒவ்வொரு செய்தியையும் கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தாள். அவள் அமைத்த வக்கீல்கள் குழு ஒவ்வொன்றையும் சரியாய் கவனித்து, எங்கே யாரைப் பிடித்து, யாருக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதனைக் கொடுத்து ஒவ்வொரு தகவலும் பெற்றுக்கொண்டு இருந்தது.

“மேம்.. ரெய்ட் எல்லாம் சும்மா ஒரு டென்சன் கிரியேட் பண்ண. பட் ஒரு சைக்கிள் கம்பனிக்கு நிறைய அமௌன்ட் கை மாறி இருக்காம்.. அதுக்கான ப்ராபர் டீடேல்ஸ் இல்ல.. எப்படியும் ஒரு இருபது முப்பது கோடி… இதை வச்சே ஐடி ஆட்கள் அதுவும் ஆக்சன் எடுக்க வாய்ப்பு இருக்கு..” என,

“ஓ..!! ஐ சி..” என்று யோசித்தவள், “எந்த கம்பனி..” என்று விசாரிக்க, அடுத்த பத்தாவது நிமிடம் அவளிடம் அனைத்துத் தகவலும் இருக்க, அதன் பின்னே தான் தீபனுக்கு அழைத்து அப்படி பேசினாள் அனுராகா.

பணம் கை மாறி இருந்தது, ஒரு நலிவடைந்து போன சைக்கிள் கம்பனிக்கு அதாவது ஒரு பினாமி கம்பனி அவ்வளவே..

தீபன், அனுராகா கேட்ட பவர் பத்திரம் கொடுத்துவிட “இதுல டேட் மாத்திடலாம் தானே..” என்றாள் வக்கீல்களிடம்.

“இதுபோல ஆயிரம் பத்திரம் ரெடி பண்ணலாம்..” என்றவர்கள், ஒருமணி நேரத்தில் பத்திரம் தயார் செய்துவிட, கையெழுத்து கூட உஷாவினது போலவும், தீபனது போலவும் அழகாய் போடப்பட்டு இருந்தது.

“பக்கா..!!” என்றவள் “ஓகே அந்த சைக்கில் கம்பனி ஆள் வரவும் இந்த பேப்பர்ஸ்ல சைன் பண்ணிட சொல்லுங்க..” என்றவள் அவள் தயார் செய்து வைத்திருக்கும் பத்திரத்தை கொடுக்க,

“மேடம் இதுல டேட் வேற இருக்கே..” என்று அனுராகாவின் பி ஏ சொல்ல,

“நான் சொன்னதை மட்டும் செய்ங்க..” என்றவள், அவர் செல்லவும், பின் வக்கீல்களிடம் “தீபன் ஜெயிலுக்கு போறது உறுதி.. அர்ரெஸ்ட்டா இருக்கக் கூடாது.. தீபன் சரண்டர் ஆகிடுவார்.. ஆனா மேக்சிமம் த்ரீ டேஸ் தான்.. கடைசி நிமிஷம் வரைக்கும் எல்லாமே நியூஸ்ல வந்துட்டே இருக்கணும். தீபன் சக்ரவர்த்தின்னா யார் என்னன்னு தெரியாதவங்க கூட இப்போ இனிமே தெரிஞ்சுக்கணும்..” என, அன்றைய தேர்தல் தினம் சிறப்பாய் முடிந்தது அனைவர்க்கும் அவரவர் திட்டங்களோடு.

மிதுன் உறக்கத்தில் இருந்தாலும், அவன் போட்டுக் கொடுத்திருக்கும் திட்டம் நிறைவேறும் என்பது அவனுக்கு உறுதி. ஆக நிம்மதியாய் படுத்திருக்க, அனுராகா வீட்டினிலோ நிச்சயம் நடக்குமா என்ற கேள்வியோடு இருக்க,                      

‘கைதாகிறாரா தீபன் சக்ரவர்த்தி….’

கொட்டை எழுத்துக்களில் அனைத்து சானல்களிலும் செய்திகள் வந்தவன்னம் இருக்க, சக்ரவர்த்தி டெல்லியில் இருக்க, இங்கே சென்னையில் ஒரே பரபரப்பு.

சக்ரவர்த்தி இல்லத்தின் முன், மீடியா ஆட்கள் குவிந்து கிடக்க,

“இன்கம்டாக்ஸ் ரெய்ட்ல பல பல தகவல்கள் வெளிவந்தபடி இருக்கு.. தேர்தலுக்கு முதல் நாள் இது நடந்தது அப்படின்னாலும், தேர்தல் முடிஞ்சு மூன்று நாட்கள் வரைக்கும் கூட இந்த பிரச்சனை முடியலை.. ஏகப்பட்ட வரி ஏய்ப்புகள் இருக்கிறதா செய்திகள் வெளி வருது..

அப்படியிருக்க, ‘அம்மாவிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. பொறுப்பு எல்லாம் என்கிட்டே தான் இருக்கு.. நடந்தது எதுக்கும் அம்மாவிற்கு சம்பந்தம் இல்லைன்னு.. தீபன் சக்ரவர்த்தி சொல்லியிருக்கார்…’

இதுமட்டும் இல்லாம, பலநாட்களா அனைவரையும் யோசிக்க வைத்த பிரபல தென்னிந்திய மாடலின் மரணம்.. காவல்துறைக்கு வலுவான ஆதாரம் கிடைச்சிருக்கிறதா சொல்றாங்க.. கைதாவாரா இல்லை சரணடைவாரா?!” என்று மைக் பிடித்து பேசிக்கொண்டு இருந்தாள்.  

நேரம் செல்ல செல்ல, கூட்டம் கூடிக்கொண்டு இருக்க, தீபனோ அங்க அவனின் வக்கீல்களோடு கலந்தாலோசித்துக்கொண்டு இருக்க, உஷா அப்போதுதான் வீடு வந்திருந்தார்.

தீபனுக்கு அம்மா முகம் பார்ப்பதா, நடக்கும் பிரச்னைகளைப் பார்ப்பதா, அனுராகாவின் வீட்டினில் என்ன பதில் சொல்ல என்று பல பல யோசனைகள்.

சக்ரவர்த்தியோ ‘எவ்வளோ நேரமானாலும் நான் வந்திடுவேன்..’ என்றிருக்க, அங்கே அனுராகா தான் வந்தாள், அவளின் அப்பா அம்மாவினோடு.

உஷா இதனை எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் தீபனுக்கு ஒரு ஓரத்தில் தோன்றியது போல, புன்னகை பூத்தே வரவேற்க அனுராகவோ உஷாவிடம் “ஆன்ட்டி இன்னிக்கு எங்களுக்கு எங்கேஜ்மென்ட் தானே…” என,

அவரோ என்ன சொல்வது என்று பார்க்க “எங்களுக்கு உங்களோட ப்ளஸ்ஸிங்ஸ் இருந்தாலே போதும்.. சோ…” என்றவள் தீபனைப் பார்க்க, அவனும் இவளின் அருகே வந்து நின்றவன் சக்ரவர்த்திக்கு அழைத்தும் சொல்ல,

“எல்லாம் தாண்டி நீங்க சந்தோசமா இருக்கணும்..” என்று அவர் சொல்ல, உஷாவின் காலில் இருவரும் விழுந்து எழ, லோகேஸ்வரன் ‘கங்க்ராட்ஸ்..’ என்று இருவருக்கும் கை குலுக்க,  தாராவோ கொண்டு வந்திருந்த மோதிரம் எடுத்து கொடுக்க, அனுராகா, தீபன் சக்ரவர்த்தி இருவரும் தங்கள் நிச்சய மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

இவர்களின் விசித்திர காதல் போல, இதுவும் ஒரு விசித்திர நிச்சயமே..!!

நிச்சயமான நிச்சயம்..

முகத்தினில் ஒளிரும் புன்னகையோடு அவளின் விரலில் இருந்த மோதிரம் பார்த்தவள், பின் தீபனையும் பார்த்து சிரிக்க, அவன் கண்களிலும் அதே புன்னகைதான்.

“ஓகே.. தீப்ஸ்.. ஜஸ்ட் டூ ஆர் த்ரீ டேஸ்.. எல்லாம் சால்வ் ஆகிடும்..” என்றவள், அவனை ஒருமுறை அணைத்து விடுவிக்க, அவளின் கரம் பற்றி நிறுத்தியவனோ

“யூ டேக் கேர்…” என்றுசொல்லி, அவனின் வக்கீல்களோடு வெளியே சென்றான்.

அவன் – ப்ரிய பிரிவு இது..

அவள் – பிரியா பிரிவு இது..

காதல் – ம்ம்.. எதுகையும் மோனையும்.. இவங்க காதலும்..            

Advertisement