Advertisement

“உன்னோட எனக்கு பேச எதுவுமில்ல. அம்மாவைக் கூப்பிடு..” என்ற மிதுன் குரலில் களைப்பு தெரிந்தாலும், அதில் எவ்வித ஒட்டுதலும் இல்லை.

முற்றிலும் எதிரியாகிப் போன இருவர் பேசிக்கொண்டால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது இருவரின் சம்பாசனையும்.

“அம்மா.. அப்பா .. யாரும் யாருமே வர மாட்டாங்க மிதுன்.. டாக்டர் கூட நான் சொன்னா மட்டும்தான் வருவார்..”

“டேய்.. வேண்டாம்… என்னோட வச்சுக்காத…” என்று மிதுன் குரலை உயர்த்த,

“ஹா ஹா.. நான்.. உன்னோட.. ஓ..!! மை காட்… கொஞ்சம் யோசி மிதுன்… ஆரம்பிச்சது எல்லாம் நீ..” என்று விரலை அவனின் விழிகளுக்கு நேரே நீட்டியவன்,

“எப்போ கெஸ் பண்ணேன் தெரியுமா.. நானும் ராகாவும் பாரம் ஹவுஸ் போயிருந்தாப்போ என்னை போட ஆளும் அனுப்பிட்டு மறுநாளே என்கிட்டே கேட்டியே உன்னோட இருந்த பொண்ணு யாருன்னு.. அப்போவே அப்போவே கெஸ் பண்ணிட்டேன் தான்..” என,

‘அப்போதேவா??!!!’ என்று பார்த்தான் மிதுன் சக்ரவர்த்தி.

“என்னடா நம்ப முடியலையா?? அப்போகூட கெஸ் தான் பண்ணேன்.. அடுத்து ஒருநாள் நான் போதைல இருந்தப்போ நீ நாகாவும் தர்மாவும் எங்க போனாங்க போனாங்கன்னு என்கிட்ட கேட்டியே.. அப்போவே நான் சுதாரிச்சேன்.. அதுக்கு முன்னம் சந்தேகமா இருந்தது எல்லாம் அடுத்து அடுத்து ஊர்ஜிதம் ஆச்சு..” என,

“ஏய் போதும் நிறுத்துடா..” என்று கத்தினான் மிதுன்.

அவனுக்கு தீபன் சொல்பவைகளை எல்லாம் காது கொடுத்து கேட்டிட இஷ்டமில்லை. இவனோடு எனக்கென்ன பேச்சு.. அனைத்தும் வெட்டவெளிச்சம் ஆனா பிறகு இனியென்ன என்ற எண்ணம் பிறக்க,

தீபனோ “நீ நிறுத்தலையே…” என்று கைகள் விரித்து சொன்னவன், “அப்பாவுக்காக நீ கொஞ்சம் அடக்கி வாசிப்பன்னு பார்த்தேன்.. ஆனா இவ்வளோ தூரம் நீ ஏன்டா கீழ இறங்கின..” என,

“அது உனக்குத் தேவையில்லை…” என்றான் பட்டென்று.

“தேவையில்லையா??? எல்லார் முன்னாடியும் என்னை தலை குனிய வச்சது நீ.. ஆனா உனக்கு இப்போ தோணுமே, முன்னாடியே எல்லாம் தெரிஞ்சிருந்தா ஏன் இத்தனை நாள் நான் சும்மா இருந்தேன்னு…” என்றவன்

“ம்ம்… யோசி மிதுன்…” என்று மெதுவாய் அவனின் முகத்தின் அருகே சென்று சொல்ல, இனம் புரியாத ஒரு உணர்வு கலவை மிதுனுள்.

இவன் எதோ செய்து வைத்திருக்கிறான் என்பது மட்டும் புரிய, “தீ.. தீப்ஸ்… தீபன்.. என்னடா பண்ணிருக்க நீ..” என்று மிதுன் தெனாவெட்டாய் கேட்க முயன்றாலும் அது அவனால் முடியவில்லை.

“ஹா ஹா ஹா யோசி டா.. அண்ணா.. யோசி டா…” என்றபடி அந்த அறையை மெதுவாய் எட்டுக்கள் வைத்து அளந்து வந்தவன்,

“நீ இல்லாத குள்ளநரித்தனம் எல்லாம் செஞ்சு என்னை அப்பா முன்னாடி, ராகா முன்னாடி, எல்லார் முன்னாடியும் கீழ இறக்கனும்னு நினைச்ச.. உன்னோட அந்த சூழ்ச்சிய நல்லபடியா உன்னை செய்ய வச்சேன்.. அவ்வளோதான்.. இப்போ இறங்கிப் போனது நீ..” என்றவன் மிதுனின் இறுகிய பார்வை கண்டு, தீபன் சக்ரவர்த்தியின் இதழ்களில் ஒரு நக்கல் புன்னகை எட்டிப்பார்க்க,  

“ஏய் இப்போவும் சொல்றேன்.. நான் நினைச்சது தான் டா நடக்கும்…” என்றான் மிதுன்..

“நெவர்…” என்ற தீபனின் ஒற்றை ஆங்கார வார்த்தை அந்த ஏசி அறையினுள் எதிரொலித்தது..

சிறிது நேரம் அங்கே அமைதி நிலவ, மிதுனோ “இனி நான் யாருக்காகவும் பார்க்கிறதா இல்லை..” என்று மிதுன் சொல்லும்போதே,   

“ஏய்… நீ இப்போ இதெல்லாம் நிறுத்தல.. மொத்தமா உன்னை நான் நிறுத்த வேண்டியது இருக்கும் மிதுன்..” என்று தீபன் கோபத்தில் அடிக்குரலில் சீர,

“உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்கோ தீபன்..” என்றான் இலகுவாய்.

ஆம் இனி மிதுனும் நல்லவன் என்ற முகமுடி போடத் தயாராய் இல்லை. யார் வந்தாலும் சரி அது அப்பாவாகினும் சரி அம்மாவாகினும் சரி.. யார் வந்து பேசினாலும் சரி இனி எதற்கும் தான் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்ள தயாராய் இல்லை.

முழுக்க நனைந்த பின்னே முக்காடு எதற்கு..!

தீபனோ கடைசியாய் ஒருமுறை சொல்லிப் பார்ப்போம் என்றெண்ணியவன் “மிதுன்.. எல்லாம் விடு.. உன்னோட என்னோட பிரச்னை எல்லாம் விடு.. அப்பாவை நினைச்சுப் பாரு.. எலக்சன் நெருங்கி வர இந்த நேரத்துல நீ இப்படி பண்ணலாமா??” என,

“ஐ டோன்ட் கேர்…” என்றான் மிதுன்.

“வாட்??!!” என்றபடி தீபன் அவனின் அருகே சென்று, அவனின் பற்றி அழுத்த,

“என்னை ரூம் அரெஸ்ட் பண்ணி வச்சவருக்கு நான் ஏன் எதுவும் யோசிக்கணும்..” என்ற மிதுனின் வார்த்தைகள் தீபனுள் ஒரு வேகம் கொடுத்தது.  

இருந்தும் இப்போது மிதுன் என்னென்னா அடுத்து செய்யவிருக்கிறான் என்பது தெரியவேண்டும், முக்கியமாய் மாலை நடக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவன் வந்து நிற்கவேண்டும். ஆக “ஓகே.. அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.. இப்போ நீ ரெஸ்ட் எடு.. ஈவ்னிங் ஒரு ப்ரெஸ் மீட் இருக்கு.. அப்பாவோட நம்ம நிக்கணும்..” என,

“முடியாது…” என்றான் திண்ணமாய்..

“நீ வரணும் மிதுன்…”

“முடியாதுடா…!!”

“நீ வருவா மிதுன்…!!”

“நடக்கவே நடக்காதுடா…!!” என்ற மிதுனின் பார்வையில் அத்தனை குரூரம்.

“நீ வந்தா அப்பாக்கிட்ட நான் உனக்காக பேசுறேன்..” என்று தீபன் தூண்டில் போட,

“ஏய்… நான் எப்பவோ சொல்லிட்டேன் நீ சொல்லி ஒருவிசயம் எனக்கு கிடைக்கிறது எனக்கு பெரிய அவமானம்..” என்று மிதுன் சொல்ல,       

“ஏன்டா… ஏன்டா உனக்கு இப்படி புத்தி போச்சு.. எனக்கு இது வேணும்னு நீ கேட்டிருந்தா அப்பாவே எல்லாம் செஞ்சிருப்பாரே டா.. இல்லை என்கிட்டே சொல்லியிருந்தா நான் விலகி நின்னிருப்பேனே..” என்று தீபன் அப்போதும் இறங்கி வந்து பேச,

“நீ எனக்கு பிச்சை போடவேண்டிய அவசியம் இல்லடா..” என்றான் மிதுன் அப்போதும் தெனாவெட்டாக.

பொறுத்து பொறுத்து பார்த்த தீபன், “முடிவா சொல்றேன்.. இதெல்லாம் ஸ்டாப் பண்ணு.. ஈவ்னிங் ப்ரெஸ் மீட் வா..” என,

“நோ வே…” என்று மிதுன் சொல்ல,

“யோசிச்சு பதில் சொல் மிதுன்..” என்றவனின் பார்வையும் குரலும் மாற, மிதுன் அப்போதும் அதே பிடிவாதத்தில் இருக்க,  

“ம்ம்… நான் பிச்சை போடறது உனக்கு வேணாமா?? ரியலி..??!!”என்று விழிகள் விரித்தவன்  “உன் கை நீ கட் பண்ண.. பட் உன் கழுத்துல எந்த காயமும் இல்லை போலவே.. ம்ம்ம் அப்போ உயிர் பிச்சை வேணுமா வேணாமா மிதுன்??” என்ற தீபனின் பார்வை மிதுனின் கழுத்தில் நின்றது.

‘என்ன செய்யப் போகிறான்…’ என்று மிதுன் பார்க்கும் போதே, கையில் இருந்த ட்ரிப்ஸ் நீடிலை வெடுக்கென்று பிடுங்கியவன், மிதுன் யோசிக்கும் முன்னம், அவன் கழுத்தில் லேசாய் வைத்து அழுத்த,

“ஏய் ஏய்.. தீபன்.. என்ன பண்ற??” என்று கத்தினான் மிதுன்..

“மருந்துடா.. மருந்து… நீ சரியாக வேணாமா…. கை நரம்பு விட, கழுத்து நரம்பு இன்னும் பெட்டர் இல்லையா.. அதான்.. ட்ரிப்ஸ் இங்க எத்தலாம்..” என்று அடுத்த இடம் பார்க்க,

“தீபன்.. யூ ஆர் கிராஸின் யுவர் லிமிட்ஸ்..” என்று மிதுன் கத்த,

“உன்னவிடவா..” என்றவன், “ஒழுங்கா நீ ஈவ்னிங் ப்ரெஸ் மீட்டுக்கு வர.. வரணும்.. இல்ல உன் உடம்புல ஒரே நேரத்துல எங்க எங்க ட்ரிப்ஸ் ஏறும்னு நீ பார்ப்ப..” என்றுவிட்டு போனான் தீபன்.

இப்படி மிரட்டித்தான் மிதுனை அழைத்து வந்து நிறுத்தியிருந்தனர் செய்தியாளர்கள் சந்திப்பில்.

“அய்யா உங்க தொகுதில இப்போ போராட்டம் பண்றாங்க.. நீங்க சொன்னா எல்லாரும் கேட்பாங்க.. ஆனா நீங்களோ இப்போ தான் பேசவே வர்றீங்க..” என்று ஒருவர் கேட்க,

“தொகுதி மக்கள் கிட்ட பேசிட்டு உங்களோட பேச வர நேரமாகிடுச்சு.. இது அவங்க அன்பினால பண்ற போராட்டம்.. மக்களோட உணர்வுகளுக்கு நான் மதிப்பு கொடுக்கணும்.. இதெல்லாம் வேணாம்னு சொல்லிருக்கேன்..” என்றவர்,

“இதோ என் ரெண்டு பசங்க… என் பக்கத்துல தான் நிக்கிறாங்க.. எதிர்க்கட்சி ஆட்கள் செய்த சூழ்ச்சியில என் பெரிய மகனோட உயிரே போக இருந்தது..” என்றவர், அருகில் இருந்த மிதுனின் கரம் பிடித்து தூக்கிக் காட்டியவர்

“இதோ பாருங்க.. டெல்லியில கட்சி வேலையா இருந்தவனை யாரோ கடத்தி வச்சு இப்படி பண்ணிருக்காங்க.. என்னை இல்லாம செய்ய, என் பையனை சித்ரவதை பண்ணிருக்காங்க..” என்று பேசிக்கொண்டே போக, அடுத்து அடுத்து கேள்விகள் வந்தபடி இருந்தது.

அனைத்திற்கும் அசராது பதில் கொடுத்தார் சக்ரவர்த்தி..

தீபன் அவரின் அருகே நின்றிருக்க, மிதுனுக்கோ உள்ளே தீயாய் எரிந்தது. இப்போதே அனைவரின் முன்னமும் ‘இவர் தான் என்னைக் கடத்தி வைத்திருந்தார்..’ என்று சொன்னால் என்ன என்று கூட யோசித்தான்.

ஆனால் தீபன் அவனை அழைத்து வரும்போதே ‘அங்க வந்து எதாவது செய்யணும் நினைச்ச, கூட்டத்துல என்னோட ஆள் உனக்கு பின்னாடி ரெடியா நிப்பான்.. நீ வாய் திறந்தா போதும், உன் முதுகுல பிஸ்டல் முத்தம் வைக்கும்..’ என்று மிரட்டியே வந்திருந்தான்.

இத்தனை செய்து, பதவிக்காக என்று நிற்கையில், அதை அனுபவிக்க அவன் இருக்க வேண்டாமா??!!

அனைத்தையும் விட உயிர் முக்கியம் இல்லையா.. அதுமட்டுமே மிதுனை அங்கே அமைதியாய் நிற்க வைத்திருந்தது.

அரசியல் சார்ந்த கேள்விகள் தாண்டி இப்போது கேள்விகள் தீபன் பக்கம் திரும்பியது “சார் உங்களுக்கும் அந்த மாடலோட மர்மமான மரணத்திற்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்களே..” என,

“யார் சொன்னா??!!” என்றான் தீபன்.

“மீடியால அப்படித்தானே சார் நியூஸ் வருது..”

“மீடியா யாரு.. நீங்க எல்லாம் தானே.. அப்போ உங்களுத் தெரியாதா??” என்று தீபன் அவர்களின் பக்கம் திருப்பிவிட, சில நொடிகளில் அங்கே சலசலப்பு..

பின் தீபனே பேசினான்.

“அரசியல்ல அப்பாவோட செல்வாக்கையும் மீறி, என்னோட வளர்ச்சி பிடிக்காதவங்க ஸ்ப்ரெட் பண்றது தான் இதெல்லாம்..” என,

“அப்போ அந்த மாடல் உங்களுக்குத் தெரியவே தெரியாதா??” என்ற கேள்வி வர,

“ஏன் தெரியாம.. அவங்களுக்கு ஸ்பான்சர் பண்ணாதே நாங்கதான்.. அவங்கள மாதிரி எத்தனையோ மாடல்ஸ், ஸ்போர்ட்ஸ் பெர்சன், இன்னும் எத்தனையோ பேருக்கு கட்சி சார்பாவோ, நான் தனிப்பட்ட முறையிலையோ ஸ்பான்சர் பண்ணிருக்கேன்.. அதுக்காக எல்லாரோடவும் எனக்கு தொடர்பு இருக்குனு அர்த்தமா.. ” என்று தீபன் மிக மிக தெளிவாகவே பேச,

“அப்போ அவங்களோட டெத்ல..” என்று ஒருவர் கேள்வி கேட்கும்போதே,

“எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இருக்குன்னு கன்பர்ம் காவல்துறை அவங்களோட வேலையை செய்வாங்க தானே..” என,

இதெல்லாம் அனுராகாவும் அவளின் வீட்டினில் ஹாலில் இருந்த டிவியில் பார்த்துக்கொண்டு தான் இருந்தாள். அவளின் அருகே தாரா இருக்க, ஒவ்வொரு நொடியும் மகளின் முகத்தினைத் தான் பார்த்தார்.

அவளோ மிக இயல்பாய் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

லோகேஸ்வரனும் கூட இருந்தார் தான்.  

அனுராகா வருகிறாள் என்றதுமே லோகேஸ்வரன் வீட்னில் இருக்க, வீட்டிற்கு வந்தவளோ லோகேஸ்வரனிடம் கேட்டது “இதுல நீங்க பண்ணது எதுவும் இருக்கா..?” என்று..

“அனு…!!” என்று அவர் திகைக்க,

“நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” என்றாள்.

“நோ.. எனக்கு இதுல என்ன ப்ராபிட் இருக்கப் போகுது.. ஐ டின்ட் டூ எனிதிங்..” என்று லோகேஸ்வரன் அலட்சியமாய் சொல்ல,

அனுராகாவின் முக பாவனையே ‘நீயெல்லாம் என்ன மனிதன்…’ என்று சொல்லாமல் சொல்லியது.

“உனக்கும் தீபனுக்கும் பேசி முடிச்சிருக்கும் போது, இதெல்லாம் ஏன் அவர் செய்யப் போறார்..” என்று தாரா சொல்ல,

“யாரைக் கேட்டு பேசினீங்க??!!” என்றாள் பட்டென்று.

“அனும்மா..!!” என்று தாரா அதிர்ந்து அழைக்க,

“மத்தது தான் சரி.. நான் எப்படி போனா என்ன, எங்க போனா என்னன்னு இருந்தீங்க.. என்னோட மேரேஜ் பத்தி என்கிட்டே கேட்கணும் தானே.. இதுல என்ன டாடி நீங்க கால்குலேசன் போட்டீங்க..” என்று லோகேஸ்வரனைப் பார்த்து அனுராகா கேட்க,

“இங்க பார் அனு.. லைப் பத்தின உன்னோட வியூ வேற.. என்னோட தாட்ஸ் வேற.. தீபனுக்கும் உனக்கும் இருக்க ரிலேஷன்ஷிப் தெரியாம நாங்க எந்த முடிவும் செய்யலை..” என்று அவரும் சொல்ல,

லோகேஸ்வரனை நின்று நிதானமாய் ஒரு பார்வை பார்த்தவள் “ஓகே… யாரோட வியூ சரின்னு பார்த்துக்கலாம்..” என்றவள்,  அதன்பின் தொழில் சார்ந்த பேச்சுக்கள் மட்டுமே.

அதற்கு மீறி ஒருவார்த்தை அவள் பேசிடவில்லை. மறுநாளே அலுவலகம் கிளம்பிவிட்டாள். தாரா அவளின் முன்னே பின்னே என்று அலைந்தமைக்குக் கூட

“உன்னோட நேச்சர் எதுவோ அப்படியே இரும்மா..” என்றுவிட்டாள்.

இதோ இப்போதும் கூட தாரா அவளோடு இருக்க மகளின் முகம் பார்த்தவரோ “அனு… நீ என்ன திங் பண்ற..” என,

“நத்திங் மாம்…” என்று தோள் குலுக்கினாள் அனுராகா..

“எதுவுமே இல்லையா??”

“ம்ம்ஹும்… ரொம்ப நாள் கழிச்சு ஆபிஸ் போனேன் இல்லையா.. சோ திங்கிங் அபௌட் தட்…” என்றவள்,

சிறிது நேரத்தில் தேவ்விற்கு அழைத்து “யார் அந்த மாடல்..” என,

“ஹேய்.. அனு.. நீ நினைக்கிறது போல எல்லாம் இல்லை..” என்றான் வேகமாய் தேவ்.

“நான் என்ன நினைச்சேன்.. தீப்ஸ் கிட்ட கேட்டிருக்கலாம்.. அவன் பிசி.. சோ உங்கிட்ட கேட்கிறன் மத்தபடி எதுவுமில்ல..” என்றவள், “ஒரு லாயர் டீம் அரேஞ் பண்ணு தேவ்..” என,

“ஏன்.. ஏன்??!! என்னாச்சு அனு.. இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை..” என,

“தீபன் சம்பந்த பட்ட எதுவும் எனக்கு சின்ன விசயம் இல்ல தேவ். இந்த டைம்ல நான் அவனை அர்ஜ் பண்ண முடியாது. என் டாடி கிட்ட கேட்க எல்லாம் எனக்கு விருப்பமே இல்லை.. சோ ஒரு லாயர் டீம் தி பெஸ்ட் கிரிமினல் லாயர்ஸ் அரேஞ் பண்ணிக் கொடு..” என,

“முக்கியமா இது தீப்ஸ்க்குத் தெரிய கூடாது..” என்றாள் முடிவாய்.   

அவன் – சூழ்ச்சிகள் இருப்பின், சூழ்ச்சி செய்..

அவள் – காதல் தாண்டி, கண் திற..

காதல் – அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா..!!       

Advertisement