Advertisement

     நான்  இனி நீ – 32

அனுராகாவும், தீபனும் ஒரே குடிலில் இருந்தாலும், இரண்டு நாட்களாய் ஒருவரும் பேசிக்கொள்ளவில்லை. இருவருக்குமே மனதினில் ஒருவித பிடிவாதம்.

‘என்னோட இருக்கிறப்போவே இவ்வளோ பிடிவாதமா??!!’ இந்த எண்ணம் இருவருக்கும் இருந்தது.

இங்கிருந்து கிளம்பும் எண்ணமும் இல்லை. ஒன்றாய் இருந்தாலும் அதில் ஒட்டுதல் இல்லை. இன்னமும் கூட தங்களுக்குள் புரிதல் இல்லையோ என்றுதான் தோன்றியது. சில புரிதல்கள் எல்லாம் வாழ்ந்து பார்த்தால் மட்டுமே வரும் என்பது அப்போது இருவருக்குமே புரிந்திடவில்லை. திடீர் திடீர் கோபங்கள் வருகையில், கைமீறித்தான் போகிறது..

சட்டென்று இருவரும் கட்டுக்குள் வருவதுமில்லை, இறங்கியும் போவதில்லை. தன்னைத்தானே சமாதானம் செய்துகொள்ளவே நேரம் எடுக்கிற பொழுது, எங்கே மற்றவரை சமாதானம் செய்வது??!

தீபனுக்கோ ‘சொல்ல வர்றதையே புரிஞ்சுக்கலன்னா எப்படி…’ என்ற எண்ணம்.

இருவரின் இடையிலும் மௌனம் வந்து அமர்ந்துகொள்ள, அனுராகா, குளிக்கச் சென்றிருக்க, குடிலின் முன் வெராண்டாவில் தீபன் அமர்ந்திருந்தான்.

அறையினுள்ளே அவளின் அலைபேசி விடாது அடித்துக்கொண்டு இருக்க, முதலில் கண்டுகொள்ளாது விட்டவன், அது தொடர்ந்து அடிப்பது கண்டு எழுந்து வந்து பார்க்க,  அழைப்பது அவளின் அம்மா என தெரிந்தது.

அவனுக்குத் தெரிந்து அனுராகா அவளின் அம்மாவுடன் பேசவேயில்லை. அம்மாவிடம் என்ன அம்மாவிடம், யாரினோடும் பேசவில்லை. நீரஜா அவளாகவே அழைத்துப் பேசினால் மட்டுமே. தாராவிடம் பேசச் சொல்லி இரண்டொரு முறை சொல்லியும் பார்த்தான் ‘பேசு…’ என்று.

அவளோ ‘நோ..’ என்றுவிட்டாள்.

அம்மா தன்னைத் தேடி வரவில்லை என்ற கோபம்.

நான் கோபித்துக்கொண்டால் அப்படியே போ எனுவாரா என்ற கோபம்.

அதைச் சொல்கையில் தீபனுக்கு சிறுபிள்ளைத் தனமாய் தான் இருந்தது. இருந்தும் இது யாரின் மனதிலும் தோன்றும் ஒன்று தானே. அதை சொல்லவும் செய்தான்.

“உன்ன ரூம்குள்ள இழுத்து போட்டு கட்டி வைக்க அவங்களுக்கு ஒரு நிமிஷம் ஆகுமா??!! ஆனா அப்படி செஞ்சாங்களா??!!” என,

“அப்படி செய்யவேண்டாம்.. ஆனா என்னோட வந்திருக்கலாம்…” என்றாள் பிடிவாதமாய்.

“உன்னோட எங்க??!! ம்ம் இப்படி நம்மோட அவங்களும் உக்காந்திருப்பாங்களா.. யோசிச்சு பேசு நீ..”

“ம்ம்ச் தீப்ஸ்.. நான் வந்து இத்தனை நாளாச்சு தானே.. இங்கதான் இருக்கேன்னு இந்நேரம் தெரிஞ்சிருக்கும் தானே.. வந்திருக்கலாம் தானே..” என, இதற்கு அவனால் பதில் சொல்லிட முடியவில்லை.

அவனிடம் கூட பேச்சு வாங்கினார் தானே தாரா..!!

ஆனால் தாராவும் சும்மா இருந்திடவில்லை. தினம் மகளுக்கு அழைத்தார். நீரஜாவை விட்டு பேச வைத்தார். எதற்கும் அனுராகா அசையவில்லை. இப்போதோ தொடர்ந்து விடாது அழைப்பு விடுக்க, தீபன் தான் எடுத்தான்.

மகளின் குரல் கேட்கும் என்று “அனு…” என்றழைக்க,

“நான் தீபன்..” என்ற அவனின் குரல் அவருக்கு திகைப்பத் தான் கொடுத்தது..

‘இருவரும் ஒன்றாகவா??!!!’ வார்த்தைகள் வரவில்லை தாராவிற்கு.

“ஆன்ட்டி…” என்று தீபன் திரும்பவும் அழைக்க, “ஹா..!! யா.. அ.. அனு.. அனு எங்க..??” என்றார் திணறலாய்.

என் மகளை எங்கே என்று இன்னொருவனிடம் கேட்கும் நிலை..  சட்டென்று எதையும் ஜீரணிக்க முடியவில்லை.

ஒரு பெண் அப்பா அம்மா வீடு சொத்து வசதி என்று எதையும் வேண்டாம் என்று யாரோ ஒருவனின் இடத்தினில், அதுவும் அவனோடே இருக்கிறாள் என்றால்??!!

ஒன்று அவன்மீது அத்தனை நேசமிருக்க வேண்டும்..!!

இல்லயோ, அவளின் பெற்றோர், அவர்களின் நிலையில் இருந்து இறங்கியிருக்க வேண்டும்..!!  

இங்கே இரண்டுமே நடந்திருந்தது.. அதுதான் நிஜம்..!!

“அ..!! தீபன்…” என,

“ராகா இஸ் சேஃப்… நீங்க வொர்ரி பண்ணிக்க வேண்டாம்.. ” என, எவனோ ஒருவன், சில நாட்கள் பழகியவன், அவன் என்னிடமே என் பெண்ணைப் பற்றி கவலைப்படவேணாம் என்கிறான்.

தாராவிற்கு மிகுந்த வேதனையாகிப் போனது..!!

“அனுவ என்னோட பேசச் சொல்ல முடியுமா??!!” என்று கேட்பதற்குள் தாரா, மனதளவில் வெகுவாய் பாடுபட்டு போனார்.

மேல் வர்க்கம்.. எங்கும் எதிலும் யாரிடமும் எதையும் இதை செய்ய முடியுமா??!! என்று கேட்டு பழக்கமே இருந்ததில்லை. இதை செய்.. என்ற அதிகாரத் தொனியே இதுவரைக்கும். ஆனால் இன்று.. நினைக்கவும் முடியவில்லை. தாராவின் தொனியை வைத்தே, தீபன் கண்டுகொள்ள,

“ம்ம் சொல்றேன் ஆன்ட்டி.. இப்பவும் சொல்றேன். ராகாவோட பாதுகாப்புக்கு நான் பொறுப்பு.. அவளுக்கு எப்போ அங்க வரணும்னு தோணுதோ அப்போ நானே கூட்டிட்டு வரேன். அதுவரைக்கும் நீங்களும் கொஞ்சம் பொறுமையா இருங்க..” என, அன்று அவன் கத்திவிட்டு சென்றதற்கும், இன்று பொறுமையாய் பேசுவதற்கும் எத்தனை வித்தியாசம் என்று புரிந்தது.

‘ராகா..’ என்று சொல்லும்போது தீபனின் குரலில் தெரியும் உரிமையும், அன்பும் கூட ஏன் லோகேஸ்வரனிடம் இல்லாது போனது என்று தாராவிற்கு வருத்தமாய் போனது.

அவர் அமைதியாகவே இருக்க, தீபன் தான் நிறைய பேசினான். அவரை ஆறுதல் செய்யும் விதமாய்.. அப்படிப் பேசிக்கொண்டு இருக்க, அனுராகாவும் குளித்துவிட்டு வந்துவிட, முதலில் அவன்தான் யாரோடோ பேசுகிறான் என்று இருந்தவள், பின் அவன் தன் அலைபேசியில் பேசுகிறான் என்றதும், நெற்றியைச் சுருக்கி என்னவென்று பார்க்க,

“ஓகே ஆன்ட்டி.. டேக் கேர்..” என்று பேசி முடித்தவன், அவளிடம் எதுவும் சொல்லாது, அந்த அலைபேசி எங்கே எப்படி இருந்ததுவோ, அங்கே அப்படி வைத்துவிட்டு, இப்போது அவன் குளிக்கச் செல்ல, அனுராகா வேகமாய் எழுந்துவந்து யாரோடு பேசினான் என்று பார்த்தாள்.

அவளின் அம்மா என தெரியவும், சுல்லேன்று வந்தது.

‘நானே என் அம்மாவோட பேசலை.. இவன் என்ன??!!’ என்று பார்த்தவள், “உன்னை யார் இப்போ அம்மாவோட பேசச் சொன்னா??!!” என்றாள், ஒருவழியாய் அவளின் மௌனம் தகர்த்து.

குளிப்பதற்குக் கிளம்பியவன், அவள் பேசவும் நின்று திரும்ப, அனுராகாவும் அவனைப் பார்த்து நின்றாள். தீபனோ எதுவும் சொல்லாது நிற்க,

“உன்னதான் தீப்ஸ்.. ஏன் அம்மாவோட பேசின..??!!” என்று திரும்பக் கேட்க,

“நானா பேசலை.. அவங்க கால் பண்ணாங்க..” என்றான் இவனும்.

“கால் உனக்கு பண்ணலைத்தானே..” எனும்போதே, “ஏன் நான் உன் போன் எடுத்து பேசக்கூடாதா??!!” என்று வேகமாய் தீபன் கேட்க,

‘இவன் என்னை கார்னர் பண்ணப் பாக்குறான்..’ என்று யூகித்துவிட்டாள் அனுராகா.

“என் போன் எடுத்து உனக்கு வேண்டப் பட்டவங்களோட பேசலாம்.. ஆனா என் அம்மாவோட பேசணும்னா என்னைக் கேட்கணும்..”

“ஓ!!! அப்போ உன் அம்மா எனக்கு யாரு??!!” என்று அவனும் பதில் கேள்வி கேட்க, அனுராகாவிற்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது.

“ச்சே!!!” என்றவள், கையில் இருந்த அலைபேசியை தூக்கி மெத்தையில் கிடாசிவிட்டு, போய் அங்கிருந்த டிரெஸ்ஸிங் டேபிள் முன் அமர்ந்துகொள்ள, தீபன் என்ன நினைத்தானோ, அவளிடம் வந்து பின்னே நிற்க, கண்ணாடி வழியாகப் பார்த்தும் அவனை முறைத்து வைத்தாள்.

“இப்போ உனக்கு என்ன கோபம்??!!!” அமர்த்தலாகவே வந்தது அவனின் குரல்..

அனுராகாவோ வாயே திறக்காது, பார்வையை மட்டும் அவன்மீது பதித்திருக்க, குளிப்பதற்கு என்று கிளம்பியவன், இடுப்பினில் ஒரு துண்டும், தோளில் ஒரு துண்டும் கட்டியிருக்க, அதனோடே இப்போது வந்து அவளருகிலும் நிற்க,

“நீ.. போ.. குளி…!!” என்றாள்..

அவளின் குரலில் எவ்வித உணர்வும் வெளிப்படவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் புரிந்தது தீபன் சக்கரவர்த்திக்கு, ஏதோ ஒன்று அனுராகாவின் மனதினில் பெரும் காயம் ஒன்று உண்டு என. அதன் பொருட்டே அவள், அவளின் பெற்றோர்களிடம் இப்படி நடந்துகொள்கிறாள் என்று. அதன் விளைவே தன்னோடும் அடிக்கடி அவள் முட்டுகிறாள் என்றும்.

அவள் சத்தம் போட்டாலும் பரவாயில்லை என்று, அவளின் அருகே ஒரு சேர் போட்டு அமர்ந்தவன் “ம்ம் சொல்லு ராகா..” என,

“நீ போய் குளி தீப்ஸ்…” என்றாள் குரல் கமறி.

எதுவோ ஒன்று அவளுள் உடைவது தெரிந்தது..!!

“நான் எப்போவேனா குளிக்கலாம்.. பட், இந்த செக்கன்ட் நான் உன்னோட இருக்கணும்.. அது முக்கியம்.. சொல்லு ராகா.. ஏன் நீ இப்படி பீகேவ் பண்ற??!! மத்தது எல்லாம் ஓகே.. பட் உன்னோட பெர்சனல், பேமிலின்னு எடுத்தா உனக்கு ஒரு பாண்டிங் இருந்தது போலவே தெரியலை. சட்டுன்னு எப்படி உன்னால இப்படி விட்டு, எல்லாத்தையும் தூக்கிப் போட்டு வர முடிஞ்சது..” என,

அனுராகாவின் முகத்தினில் கசப்பாய் ஒரு புன்னகை..!!

ஆனால் அது ஆயிரம் அர்த்தம் சொன்னது..

“பேசு ராகா… என்னோட நீ இதெல்லாம் சொல்லாம வேற யார்க்கிட்ட சொல்ல முடியும்??!!” என, அவளின் தலை இல்லை என்று ஆடியது.

“அப்போ பேசு.. நமக்கு நடுவில அவ்வளோ பிரச்னைகள் ஆச்சு.. ஆனா லாஸ்ட்ல நீ என்கிட்டே வந்துட்ட.. இதே அட்டாச்மென்ட் ஏன் உன் பேரன்ட்ஸ் கிட்ட இல்லை..??” என்றான், தீவிரமாய் அவளின் முகம் பார்த்து.

“ம்ம்ம்…” என்று கைகள் கோர்த்து அமைதியாய் இருந்தவள், ஆள மூச்செடுத்து “எவ்வளோ நடந்தாலும், நான் சண்டை போட்டாலும், திட்டினாலும், என்ன பேசினாலும், நீ திரும்ப எப்படியாவது என்னைத் தேடி வரத்தானே..” என, மௌனமாய் தலையை ஆட்டினான் தீபன் சக்ரவர்த்தி.

“அப்படி இதுவரைக்கும் ஒருநாள் கூட என் அப்பா அம்மா வரலை தானே..” என்றவளுக்கு கண்களில் நீர் வழிந்தது.

“ஷ்..!!! அழக்கூடாது…” என்று அவன் எதுவோ சொல்ல வர,

“நோ தீப்ஸ்..!!! அப்பா அப்பாவா என்னோட இருக்கல. அவருக்கு எப்பவுமே கால்குலேடிவ் மைன்ட் தான்.. பிஸ்னஸ் டீல் பேசுறது போலத்தான் எப்பவும்.. எங்களோடவும். நீ இப்படி இருந்தா, நான் உனக்கு இது செய்வேன்.. இப்படின்னு தான் எப்பவும்.  அம்மா அப்படி இல்லை.. என்னோட பிரன்ட்லியா இருப்பாங்க.. ஆனா அட்லாஸ்ட் அப்பாவோட பேச்சுதான் அவங்களுக்கும்..

யூ க்னோ இதுபோல நான் த்ரீ டைம்ஸ் பண்ணிருக்கேன். வீட்ட விட்டு கிளம்பியிருக்கேன். பதினாறு வயசு அப்போ.. வீட்ல யாருமே இல்லை. அப்பா அம்மா கிட்டத்தட்ட ஒன் மன்தா வீட்ல இல்லவே இல்லை. வேலைக்காரங்க தான் வீட்ல. என்னால ஒரு ஸ்டேஜ்க்கு மேல இருக்கவே முடியலை.. கிளம்பி நீரஜா வீட்டுக்கு போயிட்டேன். அங்கேயும் என்னால இருக்க முடியலை.. அப்போ என்னோட கிரேனி இருந்தாங்க.. அவங்களோட போயிட்டேன்.. அப்போக்கூட என்னை ஒன்னும் சொல்லலை. எங்க போகப் போறான்னு தான் சொன்னார்.. தென் டூ டேஸ்ல நானே திரும்பி வந்துட்டேன்.

தென் இருபது வயசுல… காலேஜ்ல என் பின்ன ஒருத்தன் சுத்தி ரொம்ப பிரச்சனை பண்ணான். என்னோட ப்ரைவசி போச்சு.  அப்பாக்கிட்ட சொன்னதுக்கு சிரிச்சார். இதெல்லாம் ஒரு விசயமான்னு. பட்.. அது அப்போ எனக்கு எவ்வளோ ஸ்ட்ரெஸ் கொடுத்தது தெரியுமா??!! நான் ட்ரின்க் பண்ற அளவுக்கு.. யூ க்னோ தீப்ஸ் குடிச்சிட்டு விழுந்து கிடந்தேன். அப்போ கூட டிரைவர் அண்ட் ரூமா தான் என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க.. அப்பாவோ அம்மாவோ வரவேயில்லை..  ப்ரெஸ்டீஜ் இஸ்யூ ஆகிடும்னு.. அவ்வளோ கோபம் வந்தது.. நெக்ஸ்ட் டே வீம்பா கிளம்பிப் போனேன்.. அப்போவும் அப்பா சொன்னது, எங்க போயிடப் போறான்னு தான்..” என்றவளைப் பார்த்து திகைத்துத்தான் போனான் தீபன்.

இதுவரை அவன் கண்டிராதா அனுராகா இவள்..

இத்தனை நாள் நிறைய நிறைய பேசினார்கள் தான். ஆனால் இதெல்லாம் அவள் சொன்னது இல்லை. சொல்லக்கூடாது என்று நினைத்திருந்தாளோ என்னவோ??!! இன்று அனைத்தையும் மீறி வெளி வந்தது.

“எனக்கு எல்லாமே இருக்கு தீப்ஸ்… கைல கோடி கோடியா பணம் இருக்கு.  ஆனா அதெல்லாம் எனக்கு சந்தோசம் கொடுத்ததா??!! நான் அப்செட்டா இருந்தா டிக்கட் போடவா, எங்கயாவது போயிட்டு வர்றியா??!! இப்படித்தான் கேட்பாங்க.. ஆனா உக்காந்து என்னோட டைம் ஸ்பென்ட் பண்ணி பேசவோ என்னோட இருக்கவோ ரெண்டு பேருக்குமே டைம் இல்லை.. இதெல்லாம் எனக்குள்ள ஒரு வீம்பும் பிடிவாதமும் நிறைய நிறைய கொடுத்தது..” என, அவனுக்கு அவளின் மனநிலை நன்றாய் புரிந்தது..

“எல்லாத்தையுமே அப்பா, அவருக்கு ஏத்தது போல மேனிபுலேட் பண்ணிப்பார்.. எதுவுமே அவருக்கு சாதாகமா இருந்தா மட்டும் தான்.. ஐம் நாட் ஹிஸ் பிஸ்னஸ் டீலிங் ரைட்… இதெல்லாம் யோசிக்க யோசிக்க, நான் என்ன பண்ணா இவங்க என்னோட இருப்பாங்கன்னு தான் தோணும்.. வீட்ல நான் அவ்வளோ ரகளை பண்றேன்னா அதுக்கெல்லாம் இதான் ரீசன்..” என்றவளுக்கு,

இப்படியொரு தன்னிலை விளக்கம் சொல்லும் சூழல் வரும் என்று நினைத்தே பார்க்கவில்லை.

அவளே அனைத்தையும் சொல்லட்டும் என்று தீபன் அமைதியாய் பார்த்திருக்க, “எனக்கு இருக்க ப்ரீடம்க்கு நான் எவ்வளோ எக்ஸ்ட்ரீம்க்கு போயி பிஹேவ் பண்ணிருக்கலாம் தானே.. எவ்வளோ தப்பு எல்லாம் பண்ணிருக்கலாம்…” என, தீபன் சட்டென்று சிரித்துவிட்டான்.

“என்ன தீப்ஸ்??!!!”

“நமக்கு மேரேஜ் ஆகல… ஆனா ஒண்ணா இருக்கோம்.. இது தப்பில்லையா..” என்று அவன் கேட்க, அவள் முகத்தினில் பட்டென்று அப்படியொரு புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.

“இப்போ நீ எதுக்கு சிரிக்கிற..??!!”

“நம்ம யாருக்கும் தெரியாம இங்க வந்து இருக்கல தானே.. நம்ம கிட்ஸ் இல்லைன்னு எல்லாருக்கும் தெரியும்.. உங்கப்பாக்கும் தெரியும்.. எங்கப்பாக்கும் தெரியும். தென் மேரேஜ்…. ம்ம்ம்….  இப்போ கூட ஐம் ரெடி..” என்றவளைப் பார்த்தவன்,

“சரி வா கிளம்பு…” என்றான்.

“எங்க..??!!”

“கல்யாணம் பண்ணிக்க ரெடி சொன்னதானே… வா கல்யாணம் பண்ணிப்போம்.. இங்க முடியாது.. சோ வீட்டுக்குத்தான் போகணும்…” என்றவனிடம்,

“ஆர் யூ சீரியஸ்??!!” என்றாள்.

“உன்னைப் பார்த்ததுல இருந்து இந்த தாட் தான்.. போதுமா??!!” என, பதில் கூறாது அவனையே பார்த்தவள், “இதான்.. இதான் தீப்ஸ்.. உன்னோட என்னை அட்டாச் ஆக வைக்குது..!!” என்றாள் உணர்ந்து.

அதனைச் சொல்கையில், அவள் முகத்தினில் அப்படியொரு பாவனை..!!

கேட்டவனுக்கோ, தான் என்ன உணர்கிறோம் என்றே தெரியவில்லை. ஒருவித பெருமையாய் இருந்தது. ஒரு பெண் அனைத்தையும் விட்டுவிட்டு வந்து நிற்கிறாள் என்பது மற்ற அனைத்திலும் பிறருக்கு தவறாய் தெரியட்டும், ஆனால், அவள் நம்பி வந்தவனுக்கு அது ஒரு பெருமைக் கொடுக்கும்.

அந்த நொடி..!! அந்த க்ஷணம்..!!

என்னை நம்பி வந்துவிட்டாள் என்ற பெருமை..!!

“என்ன பாக்குற நீ.. சண்டை போட்டோ.. பிடிவாதம் பிடிச்சோ.. மிரட்டியோ எப்படியோ ஒன்னு நீ எதோ ஒருவகைல நெருங்கித்தானே இருக்க.. ரீசன் எல்லாம் ஒன்னே ஒண்ணுதானே.. நானும் நீயும் தனியா ஆகிட கூடாதுன்னு தானே..” என, அமோதிப்பாய் தலையை ஆட்டினான் தீபன் சக்ரவர்த்தி.

அவன் தலையை ஆட்டிய விதம் கண்டவள், “ம்ம் இப்போவே தலையாட்டி பொம்மை ஆகிடாத.. போ.. போய் குளி… இப்படி அரைகுறையா நின்னு ஷோ காட்டாத..” என்று சிரிக்க,

அவன் தோளில் இருந்த துண்டினை எடுத்து, அவளின் முதுகினில் அடித்தவன் “முழுக்க நினைஞ்சதுக்கு அப்புறம் முக்காடு எதுக்கு…” என்று சொல்லிவிட்டுப் போக,

“உனக்கு கொஞ்சம் கூட ஷையே இல்ல தீப்ஸ்…” என்றாள் இவளும்.        

Advertisement