Advertisement

உஷாவிற்கு, சக்ரவர்த்தி ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார் என்பது விளங்கவில்லை. பொதுவாய் உஷா வீட்டில் அதுவும் இந்த ஆண்களிடம் வீட்டு விசயம் தவிர வேறெதுவும் பேசிட மாட்டார். அப்படியிருக்க, சக்ரவர்த்தி என்றுமில்லாத திருநாளாய் இப்படி சொல்லவும்,

“என்னாச்சுங்க…” என்றார் புரியாது..

“என்ன ஆகக் கூடாதுன்னு நினைச்சானோ.. அது தான் ஆச்சு.. நான் இருக்கப்போவே பதவி ஆசை வந்திடுச்சு.. ஏன் நான் எதுவும் செய்யமாட்டேனா.. செய்யாமையா போயிடப்போறேன்… இல்லை நான் போயிடுவேன்னு நினைச்சிட்டானுன்களோ என்னவோ..” என,

“ஐயோ..!! என்ன இது…” என்றார் பதறிப்போய் உஷா.

“ம்ம் இவனுங்களுக்கு கை பிடிச்சு நடக்க சொல்லிக்கொடுத்தது நான். ஆனா.. எனக்கே தெரியாம  என்னை வச்சே பல பல விஷயம் பண்ணிருக்கானுங்க… இவனுங்களுக்கே இவ்வளோ தெரியும்போது, எனக்கு இதெல்லாம் புரியாதா இல்லை தெரியாதா..” என்று அவர் சொல்ல,

“இப்போ நீங்க சொல்றது தான் எனக்கு ஒன்னும் புரியலை..” என்றார் உஷா.

“ம்ம் இந்த எலக்சன் முடியவும், ரெண்டு பசங்களையும் உக்கார வச்சு, என்ன எதுன்னு பேசி செட்டில் பண்ணிட்டு அவனவன் வாழ்கைய அவனவன் பார்க்க சொல்லிடனும்.. என்னோட இருந்ததும்.. எனக்காக பண்றதும் போதும்..” என,

“இதை தான் முன்னமே சொன்னேன்.. ரெண்டு பேருக்கும் ஒரு வாழ்கைய அமைச்சுக்கொடுத்து, அவனவன் போக்குல விடுங்கன்னு…” என்று உஷாவும் சொல்ல,

மனைவிக்கு இன்னமும் தான் பேசும் உட்கருத்து புரியவில்லை என்பதனை சக்ரவர்த்தி புரிந்துகொண்டார். அனைத்தையும் சொன்னால், உஷாவினால் தாங்கிக்கொள்ள முடியாது. நிச்சயம் தன் இரு பிள்ளைகளையும் இப்போதே இங்கே வர சொல்லச் சொல்வார். அப்படி வந்தார்கள் என்றால், இருவரின் மோதலும் இங்கே பெற்றவர்களின் கண்முன்னே நடப்பது நிஜம்.

அக்காட்சியை காணக் கூடாது, அப்படியொன்று நேர்ந்திடக் கூடாது என்றுதான் சக்ரவர்த்தி இப்போது சூழலை தான் கையில் எடுத்தது. உஷாவிடம் சொல்லிவிடலாம் என்று எண்ணித்தான் வந்தார்.

ஆனால் இப்போது வேண்டாம் என்ற எண்ணம்.. எதுவாகினும் தன்னோடு போகட்டும் என்று எண்ணியவர்

“ரெண்டு பேரும் எலக்சன் முடியற வரைக்கும் இங்க வரமாட்டானுங்க.. பேசணும்னு சொல்றப்போ சொல்லு.. நான் பேசச் சொல்றேன்.. நீயா கால் பண்ணிட்டு இருக்காத..” என,

“எல்லாம் சேர்ந்து என்னவோ செய்றீங்க.. இல்லை என்னவோ மறைக்கிறீங்க.. அதுமட்டும் நல்லா தெரியுது.. நீங்க உங்க பசங்களுக்கு அப்பான்னா.. நான் அம்மா.. உங்களுக்குத் தெரியாத சில விசயங்களை கூட நான் நுணுக்கமா புரிஞ்சுக்க முடியும்..” என்ற உஷா எழுந்து சென்றுவிட்டார்.

இன்னது பிரச்னை என்று சரியாய் தெரியாவிடினும், இரு மகன்களுக்குள்ளும் பிரச்னை என்பது அவரால் புரிந்துகொள்ள முடியாதா என்ன??! மனம் கனத்துப் போனது உஷாவிற்கு. ஆனால் பிள்ளைகளிடம் என்ன விஷயம் என்று கேட்க தைரியம் இல்லை.

அவருக்குத் தெரியும்.. அரசியல் வாழ்வில், அண்ணன் தம்பி என்பது எல்லாம் அத்தனை ஷாஸ்வதமானது இல்லை என்பது.

எது எப்படியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நிலைக்கு உஷா என்றோ வந்துவிட்டார். ஆனால் அது இவர்களுக்குத்தான் தெரியாது போனது.

உஷாவின் நிலை இதுவென்றால், அங்கே மிதுனோ திடீரென்று தன்னை சுற்றி நடந்த மாற்றத்தினால் குழம்பித்தான் போனான். என்ன நடக்கிறது, யார் நடத்துகிறார்கள் இதெல்லாம் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

டில்லியில் இருக்கும் அவனின் அப்பார்ட்மெண்டில் உறங்கிக்கொண்டு இருக்க, உறக்கம் களைந்து எழுகையில், அவனின் முன்னே துப்பாக்கி ஏந்திய இருவர் நிற்க,

“ஹேய்.. வாட் இஸ் திஸ்..!!” என்று அதிர்ச்சியோடு தான் கண் விழித்தான்.

“நீங்க இந்த ரூம் விட்டு எங்கயும் போக முடியாது.. யாரோட காண்டாக்ட்டும் ட்ரை பண்ணக் கூடாது…” என்றவர்கள், ஏற்கனவே அவனின் அலைபேசி, லேப்டாப், இன்னும் அவனிடம் இருந்த மற்ற பொருட்கள் எல்லாம் எடுத்திருப்பது அப்போது தான் கவனித்தான்.

அவனின் அறையில் அவன் படுத்திருந்த கட்டில், அவனுக்கான உடைகள் ஒருப்பக்கம், தண்ணீர் பாட்டில் ஒரு பக்கம். அவ்வளவே..

“ஓ..!! காட்…” என்று சுற்றி சுற்றி பார்த்தவன், “நான் யாருன்னு தெரியாம இதென்ன சைல்டிஷ் கேம்..” என்று கோபமாய் கத்த,

“பிரெஷ் ஆகிட்டு வந்து இந்த டீ எடுத்துக்கோங்க..” என்று மற்றொருவன் கொணர்ந்து ஒரு டீ கோப்பையை வைக்க, மிதுன் இருவரையும் முறைக்கும் போதே, இருவரும் அவ்வறையை விட்டு வெளியேறி இருக்க,

“ஏய்… ஹூ ஆர் யூ..” என்று கத்தியபடி மிதுன் பின்னே செல்ல, அறையின் கதவு தாழ் பட்டது.

“ஓப்பன் தி டோர்…” என்று மிதுன் எப்படி கத்தினாலும், எத்தனை முறை கதவினை தட்டினாலும், எந்த பதிலும் இல்லை.

“ஹேய்… டோன்ட் யூ ஹேவ் எனி சென்ஸ்.. நான் யார் தெரியுமா??!! இதெல்லாம் வெளியே தெரிஞ்சா நீங்க யாரும் உயிரோட இருக்க முடியாதுடா..” என்று மிதுன் கத்த,

வெளியில் இருப்பவனோ “நீங்க அந்த டீ குடிச்சிட்டீங்கன்னு தெரிஞ்சா மட்டும் தான் அடுத்து ப்ரேக் பாஸ்ட் வரும்.. இல்லன்னா இந்த டே புல்லா அந்த சிங்கிள் டீ மட்டும்தான்…” என்று கதவின் பின்னே இருந்தே சொல்ல,

“டேய் டேய்..!!!” என்று ஆத்திரம் தாளாமல் மிதுன் கத்த, பதிலுக்கு அப்பக்கத்தில் இருந்து மௌனமே.

உறங்கி எழும் வேலையில் இப்படியென்றால், அவனால் என்ன யோசிக்க முடியும். அறையே துடைத்து வைத்தது போலிருந்தது. சுற்றி சுற்றி பார்த்தாலும் ஒன்றுமே அவனுக்கு புலப்படவில்லை..

யார் செய்தது.. ஏன்??!!

இதுவே அவனின் மனதினுள்…

கிஞ்சித்தும் அவனின் அப்பாவின் எண்ணம் வரவில்லை..

‘தீப்ஸ்.. தீப்ஸ்… ஸ்மெல் பண்ணிட்டான் தெரியும்.. பட் அவன் இப்படி செய்ய மாட்டான்.. எதுவா இருந்தாலும் நேரா வந்து தானே நிப்பான்…’ என்று தம்பியை எண்ண, அப்பாதான் இப்படி செய்திருக்கிறார் என்று தெரிந்தால் இன்னும் என்ன ஆவானோ.

“காம்.. காம் டவுன் மிதுன்.. யோசி.. அமைதியா யோசி… கண்டிப்பா எதுவும் வழி கிடைக்கும்…” என்றவன், நிதானமாய் குளித்துவிட்டு வர, அந்த டீ ஆறிப்போயிருந்தது.

இருந்தும் வேறு வழியில்லை.. பருகித்தான் ஆக வேண்டும்..

வாயில் வைத்தவனுக்கு குமட்டியது.. ஜென்மத்திலும் இப்படியொரு டீ அவன் குடிக்க நேரிடும் என்று சக்ரவர்த்தி கூட எண்ணியிருக்க மாட்டார்.

மிதுன் அங்கே யோசனைகளின் பிடியில் இருக்க, தீபனும் கூட இங்கே அப்படிதான் இருந்தான்..

சக்ரவர்த்தி இப்படி சொன்னபின்பு அவனின் சிந்தனை முழுவதும், அங்கே என்ன நடக்கிறது என்பதுதான். ஒருவகையில் மிதுன் எப்படியோ வசமாய் அப்பாவிடம் மாட்டி இருக்கிறான் என்று நன்கு புரிந்தது. காதர், நாகா, தர்மா என யாருக்கு அழைத்தும் எடுக்கவில்லை.

ஆக அப்பா, அவர்களையும் தன ஆளுகைக்கு கீழ் கொணர்ந்து விட்டார் என்றும் புரிந்தது. இருந்தும், தன்னை வரக் கூடாது என்றது தான் அவனுக்கு மனத் தாங்கலாய் போனது..

“நான்.. நான் வரக்கூடாதா??!! அப்பா.. நீங்க எப்படி அப்படி சொல்லலாம்…” என்று எண்ணினான்..

எண்ண மட்டுமே முடியும், சக்ரவர்த்தியிடம் இக்கேள்வியை கேட்டிட முடியாது. அப்படியே கேட்டலும் தயை இன்றி “நான் சொல்லாம வேற யாரடா சொல்வா..” என்பார்.

அக்கேள்விக்கு தீபனிடம் பதில் இருக்காது.

எல்லாம் எதோ ஒருவகையில் முடிவிற்கு வருகிறது என்று புரிந்தது. ஆனாலும் அதை தெரிந்துகொள்ளாமல் அவனால் இருந்திட முடியவில்லை. மண்டை காய்ந்தது தீபனுக்கு. அப்பாவின் சொல்படி அவன் இங்கிருக்கத் தயார் தான்.

ஆனால் அங்கே என்ன நடக்கிறது என்பதனை தெரிந்துகொள்ளாது இங்கிருக்க அவனின் மனது ஒப்பாது.         

இங்கிருந்து எப்படி அழைப்புப் போனாலும், அங்கே யாரும் எடுக்க மாட்டார்கள் என்பது புரிந்தது. ஆட்கள் நிறைய இருக்கிறார்கள் தான். ஆனால் விசாரித்தால், விஷயம் வெளியில் செல்லும் தானே. யோசித்துக்கொண்டே நடந்தவன், அனுராகாவின் குடில் பக்கம் சென்றிருந்தான்.

அந்த பக்கம் தான் அவள் இருக்கிறாள் என்ற சிந்தை அப்போது அவனுக்கில்லை. அவன் ஒரு எண்ணவோட்டத்தில் நடந்துகொண்டே இருக்க, அனுராகா, அவளின் குடிலின் வெளியே இருந்த ஒரு ஊஞ்சலில் மெதுவாய் ஆடிக்கொண்டு இருந்தாள்.

ஆடிக்கொண்டு இருந்தவளுக்கு மனதில் தீபனின் எண்ணங்கள் தான்..

‘இப்போ தெரிஞ்சிருக்குமா.. நான் இங்க இருக்கேன்னு… அப்போ வருவானா…’ என்ற யோசனையோடு ஆடிக்கொண்டு இருக்க, தீபனோ வேறுவித எண்ணத்தில் நடந்துவந்து கொண்டு இருக்க,

ஒருநிலையில் இருவரின் பார்வைகளும் நேர்கோட்டில் நிற்க, அவளின் ஊஞ்சல் ஆட்டமும் நின்றது.. அவனின் நடையும் நின்றது.

ஏற்கனவே தீபன் அனுராகாவை கண்டுவிட்டான் என்றாலும்கூட, இப்போது நேருக்கு நேராய் காண்கையில் அவனும்தான் அப்படியே நின்றுபோனான். அவளிடம் அவனின் மனம் நின்றது போல..

‘தீப்ஸ்…’ என்று அவளது இதழ்களும், ‘ராகா…’ என்று அவனின் உதடுகளும் சத்தமின்றி பெயர்களை உச்சரித்துக்கொள்ள, அப்படியே தான் பார்த்தபடி இருந்தனர்.

தீபனைக் கடந்து ஒரு குதிரை வண்டிச் செல்ல, அதன் சப்தத்தில் தான் தன்னை மீட்டவன், மீண்டும் அவள்புரம் பார்வையை வீச, அவளோ முறைத்துவிட்டு செல்வது போலிருக்க,

“ஹேய்.. ராகா…” என்றபடி வேகமாய் அவளின் அருகே சென்றான்.

நமக்கு பிடித்த ஒருவரை காணும் வரைக்கும், மனது ஒருவித எண்ணங்களுக்கு ஆட்படும். கண்டபின்னோ வேறுவிதமாய் நடந்துகொள்ளும், அப்படித்தான் ஆனது அணுவிற்கும்..

‘ராஸ்கல்…’ என்று மனம் கடிந்தாலும், அங்கிருந்து அவளால் நகர்ந்து செல்லவும் முடியவில்லை.

“ராகா… நீ..” என்று தீபன் ஆரம்பிக்கும்போதே,

“எப்போ வந்தன்னு தெரியாதது போல கேட்காத..” என்றாள் கைகளை உயர்த்தி.

‘அங்க உன் கண் முன்னாடி என்ன இருக்கோ.. அதைமட்டும் பாரு..’ என்று சக்ரவர்த்தி சொன்னது நினைவில் வர,

‘அப்போ.. ராகா இங்க இருக்கிறது அப்பாக்கு தெரியுமா..’ என்றெண்ணியவன் ‘அப்பா… நீங்க இருக்கீங்களே…’ என்றும் எண்ணிக்கொள்ள, தன்னைப்போல் ஒரு புன்சிரிப்பு வந்து அவனிடம் ஒட்டிக்கொள்ள,

“ஓகே எதுவும் கேட்கல.. பட் எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனுமே..” என்றான்.

அவனின் குரலுக்கும், அவனின் முகத்தினில் இருக்கும் புன்னகைக்கும் சம்பந்தமே இல்லை. அனுராகா கண்களை இடுக்கி அவனை எடை போடுவது போல் பார்க்க,

“சீரியஸா.. இப்போ நீ மட்டும் தான் எனக்கு ஹெல்ப் பண்ண முடியும்..” என்று தீபன் இலகுவாய் கேட்க,

‘எப்படி இவனால இவ்வளோ நார்மலா இருக்க முடியுது…’ என்று பார்க்க,

“உன்னோட ஆபிஸ் ஸ்டாப்ஸ்.. நம்பிக்கையான ஆள் யாரையாவது என்னோட பேச சொல்லு ராகா….” என்று தீபன் சொல்லவும்,

“அது என்னோட ஆபிஸ் இல்லை. அதெல்லாம் வேண்டாம்னு தான் தூக்கி போட்டு வந்துட்டேன்..” என்றாள் பட்டென்று.

“ம்ம் இந்த பஞ்சாயத்து அப்புறம் பேசலாம்.. கண்டிப்பா பேசலாம்..” என்று தீபன் சொல்லவும்,

“நீ… நீ கொஞ்சம் கூட மாறவே மாட்ட தீப்ஸ்..” என்று எரிந்து விழுந்தவள், உள்ளே செல்லப் போக,

“உன்கிட்ட நான் எப்பவுமே இப்படிதான் ராகா…” என்றபடி அவனும் அவளின் குடிலின் உள்ளே செல்ல,

“உன்னை நான் உள்ளவான்னு சொல்லவேயில்லை…” என்றாள் பட்டென்று.

‘தோடா..!!!’ என்று தீபன் பார்க்க, “இது உன்னோட பிளேஸ் தான்.. பட், நான் இருக்கிற வரைக்கும் இந்த ரூம் என்னோடது.. என்னோட பெர்மிசன் இல்லாம நீ உள்ள வரக்கூடாது.. வெளிய போ…” என,

“போறேன்.. எனக்கு நான் சொல்றதை மட்டும் பண்ணு..” என்று அவனும் விடாது சொல்ல,

“ம்ம்ச் இத்தனை நாள் கழிச்சு நம்ம மீட் பண்றோம், அந்த பீல் கூட உனக்கு இல்லைல்ல….” என்றாள் பொறுத்திட முடியாது.

“ஷ்…!!! ராகா…” என்று கை பிடித்து அவளை அமர வைத்தவன்,

“நான் இங்க வந்தது ஏன்னு உனக்கும் தெரியும்.. நீயும் நானுமா இந்த மொமென்ட் நான் ரிலாக்ஸா பீல் பண்ணும்னா சிலது எனக்கு கிளியர் ஆகணும்… அதுக்கு உன்னோட ஹெல்ப் வேணும்.. இப்போதைக்கு வேற யாருமில்லை எனக்கு..” என்று நிதானமாய் எடுத்து சொல்ல,

“ஏன்.. எப்பவுமே உன்னோட ரெண்டு வால்பிடி இருப்பாங்களே எங்க..” என்றாள் அப்போதும் அந்த எரிச்சல் குறையாது.

இத்தனை நாள் கழித்துப் பார்க்கிறோம், பார்த்ததுமே எப்படி இருக்கிறாய் என்றுகூட ஒருவார்த்தை கேட்கவில்லை, அதைவிட்டு மற்றது எல்லாம் பேசினால் அவளுக்கு கோபம் வராதா என்ன??!!

அவளின் முகத்தினையே உற்றுப் பார்த்தவன், “யார் இருந்தாலும் இல்லைன்னாலும் நான் கேட்டா நீ செய்ய மாட்டியா??” என, அந்தக் குரல் அவளை ஏதோ செய்தது.

‘ராஸ்கல்.. மறுபடியும் அவன் வேலையை காட்டறான்..’ என நினைத்தவள், அவனை முறைப்பதாய் எண்ணி, அவன் விழிகளைப் பார்க்க, அதில் தெரிந்த உணர்வு என்னவென்று அவளால் வகையறை செய்திட முடியவில்லை.

காதலா..

யாசிப்பா..

மன்னிப்பா..

வேண்டுதலா..

இதில் எது என்று அவளால் பிரித்துச் சொல்லிடவே முடியவில்லை. ஆனால் அவனின் கண்களில் இது அத்துனையும் தெரிந்தது.. இது போன்றதொரு பார்வை இதற்குமுன் அவன் கண்டதில்லை.

இப்போதோ அவளால் இதை மீறி பேசிடவும் முடியவில்லை..

மௌனமாய் அனுராகா இருக்க, இன்னமும் அவளை நெருங்கி அமர்ந்துகொண்டவன், “செய்வியா??!!” என, அவனின் வெகு அருகே ஸ்பரிசமும், இன்னமும் உரிமையான குரலும், அவளை ‘செய்யேன் ராகா…’ என சொல்ல,

“ம்ம் என்ன ??” என்றாள் அப்போதும் அழுத்தம் குறையாது.

“நீ சொல்றத அப்படியே கேட்டு செய்றது போல யாரையாவது பிடி.. அங்க என்ன நடக்குதுன்னு தெரியனும்..” என, தீபனை சுற்றி இருக்கும் ஆபத்துகளும், பிரச்னைகளும் நினைவு வந்தது அனுராகாவிற்கு.

‘இவனைப் பார்த்ததும் இதெல்லாம் மறந்துபோச்சு..’ என்றெண்ணியவள் “புனீத் ஆர் தேவ் இவங்கக்கிட்ட ஹெல்ப் கேட்கலாமா??!!” என,

“ம்ம்ஹும்.. விஷயம் அப்படியே அப்பாக்கு போயிடும்.. அவருக்கு ஆப்போசிட்டா எதுவும் நான் பண்ணல.. ஜஸ்ட் அங்க என்ன நடக்குது அது மட்டும் தான் எனக்கு தெரியனும்.. அதுபோதும்.. மெண்டலி நான் ப்ரீ ஆகிடுவேன்..” என்று தீபன் சொல்லவும், இரண்டொரு நொடிகள்  யோசித்தவள்,

“ஆபிஸ்ல என்னை வாட்ச் பண்ண ஒருத்தனை செட் பண்ணியே அவன் ஓகே வா…” என,

“பாரேன்.. இது எனக்குத் தோனலையே…” என்று தீபன் சிலாகிக்க,

“போதும் போதும்..” என்றவள், “எனக்குத் தெரியாது யாரதுன்னு.. சோ நீயே பேசு..” என்று அவளின் செல் போனை நீட்ட,

அதனை வாங்கிப் பார்த்தவன் “என்னை அடிக்கிறதுக்கு பதில் நான் வாங்கிக்கொடுத்த போனை ரொம்ப அடிச்சிருக்க போல…” என்று கிண்டல் அடித்தபடி அவனின் அலைபேசியில் இருந்து ஒரு எண்ணைப் பார்த்து இவளதில் இருந்து அழைத்துப் பேசினான்.

அனுராகாவும் கேட்டபடி தான் இருந்தாள். இப்போதும் கூட யார் அவன் என்று அவள் கேட்கவில்லை.. அப்படியொரு நம்பிக்கை தீபன் மீது..

முன்னே நடந்தது எல்லாம் மறந்துபோனது போல் இருந்தது. எது எப்படி இருந்தாலும், தான் இங்கிருப்பது தெரிந்ததும் வந்துவிட்டானே என்ற அந்த ஒரு நிறைவு அவளின் மனதினுள்ளே தோன்ற, அவள் பார்க்கும் பார்வையில் சிறிய மாற்றம்.

தீபன் பேசிக்கொண்டு இருந்தவன், அவளின் பார்வை மாற்றத்தை கவனித்தவன், பேசி முடித்ததும்,

“என்ன டைட்டன்.. பழைய பார்ம்க்கு வந்தாச்சா??” என,

“இப்போ ஓகேவா…” என்றாள், ‘பேசி முடித்துவிட்டாயா..’ என்பதுபோல.

“ம்ம் நான் எதிர்பார்க்கிற நியூஸ் வந்துட்டா எவ்ரிதிங் ஒகே..” என்று தீபனும் சொல்ல, அவளின் அலைபேசியை அப்போதும் திருப்பி திருப்பி பார்த்தபடி அவளிடம் கொடுத்தவன்,

“நான்லாம் உன்னோட போன் எவ்வளோ சேப்டியா வச்சிருக்கேன்..” என்று காட்ட,

“ரொம்ப முக்கியம்…” என்றாள், கழுத்தினை திருப்பி.

“ஓகே ஓகே கூல்.. சரி சொல்லு பேபி.. இங்க ஏன் வந்த.. என்கிட்டே தானே வந்திருக்கணும்..” என்று தீபன் கேட்டதும்,

“சோ வாட்.. அதான் நீ வந்துட்டல்ல…” என்றாள் அனுராகாவும்.

“ம்ம்… சோ… இது நமக்கான டைம் அப்படின்னு எடுத்துக்கலாமா??! ஐ மீ.. நம்ம எத்தன நாள் இங்க இருப்போம் தெரியாது.. பட் இருக்கற வரைக்கும் நம்ம பேட்ச்சப் பண்ண ட்ரை பண்ணலாம்…” என,

“ஓ..!!! அப்போ நீ ப்ரேக் அப் பார்ட்டி எல்லாம் கொடுத்திருக்கப் போல…” என்று அனுராகாவும் சொல்ல,

“நீ முன்ன போல இல்ல டைட்டன்..” என்ற தீபனின் வார்த்தைகளில் அவனை நிமிர்ந்து பார்க்க,

“நீ போட்டிருக்க இந்த ப்ளாக் ஸ்லீவ்லெஸ் டிஷர்ட் உனக்கு செம டைட்டா இருக்கும் டைட்டன்… இப்போ…” என்று சொல்லியபடி, அவளின் மீது தீபன் பார்வையை படரவிட,

“டேய் ராஸ்கல்..” என்று சொல்லியபடி அவளோ வேகமாய் அங்கிருந்த ஓவர் கோட்டினை எடுத்து போட்டுக்கொள்ள,

“ஹா ஹா ஹா…!!!” என்று தீபன் சத்தமாய் சிரித்தான்.

வெகு நாட்கள் ஆனது அவன் இப்படி சிரித்து.. அதை அவன் நன்கு உணர்ந்திருக்க, அவனின் சிரிப்பினைத் தான்  பார்த்தவள், சிறிது பக்கவாட்டில் திரும்பி, அங்கிருக்கும் ஆளுயர கண்ணாடியைக் காண, தீபனின் சிரிப்பு இன்னமும் அதிகரித்தது.

“ம்ம்ச் ஏன் சிரிக்கிற…” என்று எரிச்சல் ஆனாலும் அனுராகா, கண்ணாடி வழியே தன்னைத் தானே ஆராய,

“இதுக்கேன் நீ கண்ணாடி பாக்குற.. என்னை பார்க்க சொன்னா நான் பார்க்க மாட்டேனா…” என்றவன், அவளைத் தன்புறம் திரும்ப,

“நீ எதுவும் பார்க்க வேணாம்…” என்றாள் பிகு செய்து..

“சரி உன்னோட தழும்பு மட்டும் பாக்குறேன்..” என்றவனோ இன்னமும் அருகே நெருங்கி நிற்க,

“வேணாம்…” என்றாள் அப்போதும்..

“ஏனாம்…” என்று கேட்டபடி, அவளின் முகத்தினை லேசாய் தீபன் நிமிர்த்த, அடுத்து அவன் என்ன செய்யப் போகிறான் என்பது அனுராகாவிற்கு தெரியாதா என்ன??!!

உள்ளத்தோடு சேர்த்து, உடலிலும் ஒரு சிலிர்ப்பு ஓடியது அவளுக்கு..

“ஷ்.. தீப்ஸ்..” என்றவள், அவனின் மார்பில் கை வைத்து, தன்னருகே இருந்து அவனைத் தள்ளி நிறுத்த முயல, அவனோ மேலும் மேலும் அவளோடு ஒன்றிடவே எண்ண,

“தீப்ஸ்.. என்ன பண்ற நீ..” என்றாள் மெதுவாய்..

மெதுவாகத்தான் அவளால் பேசிட முடிந்தது..

“என்ன பண்றேன் நான்.. ம்ம் என்ன பண்ண போறேன் நான்.. இது எதுவும் உனக்குத் தெரியாதா…” என்றவளின் இதழ்கள் அவளின் செவியை உரச, கரங்களோ அவளின் இடையோடு சேர்ந்து கட்டி இறுக்கியது.

அவர்களின் நெருக்கத்தை எதிரே இருக்கும் கண்ணாடி பிரதிபலிக்க, அதனைக் காண இயலாதவளாய், அவனின் கரங்களுக்குள்ளே, அவன் முகம் பார்த்து திரும்பி நின்றுவிட,

“இது அதைவிட பெட்டர் டைட்டன்..” என்றான் கண்ணடித்து..

“ராஸ்கல்…” என்று முகம் சுளித்து முனுமுனுத்தாலும், அந்த ஷணம் அனுராகாவிற்கு பிடித்தே இருக்க, இப்போது அவளின் கரம் அவனை அணைக்க, அவனின் கரமோ, அவள் கன்னம் பற்றி தன்னருகே இழுக்க, இருவரின் இதயவோசையும் சப்தமாய் கேட்க, அனுராகா கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

“ஓய்… பேபி.. லுக் அட் மீ..” என்றவன், அவளின் கேசத்தை வாசம் பிடிக்க,

“ம்ம்ஹும்…” என்றவளின் பிடியோ இன்னும் இறுக்க,

“ராகா….” என்றவனின் அழைப்பிலும், அவன் கைகள் இப்போது அவளின் கழுத்துத் தலும்பினை வருடும் சுகத்திலும், அனுராகாவிற்கு தான் மொத்தமாய் காணாது போகும் உணர்வு.

“இங்கமட்டும் நீ ஆயின்மென்ட் போடலையா…” என்றவன், அந்தத் தழும்பின் மீதே இதழ் பதிக்க, அவர்களின் பிரத்தியேக வேம்பயர் முத்தம் அங்கே நீண்ட நாட்களுக்குப் பிறகு நடந்தேற, என்ன நடக்கிறது என்று இருவருக்கும் புரிந்தாலும்,

இதற்குப்பின் என்னாகும் என்று தெரிந்தாலும், இருவருமே எதனையும் ஏற்கத் தயாராகவே இருந்தனர்.           

நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்..

கண் தீண்டி உறைகிறேன்..

கை தீண்டி கரைகிறேன்..

சொல்லாமல் கொள்ளாமல் இப்பாடல் வரிகள் தான் நினைவில் வந்து தொலைத்தது அனுராகாவிற்கு.. அதுவும் மனதளவில்.. உடல் மொத்தமும் அவனில் சாய்ந்திருக்க, அவன் அவளில் உறைகிறானா இல்லை அவள் அவனில் கறைகிறாளா என்று எதுவும் விளங்கவில்லை..

எதையும் விளக்கவும் முடியா சூழல் அது..

உன்னிடம் நான்.. என்னிடம் நீ.. இதுமட்டுமே அங்கே..

“ராகா….” என்று உச்சரித்தபடி அவனிதழ்கள் போடும் முத்தக் கோலம் எல்லாம் அவளுக்கு வேண்டியதாகவே இருந்தது..

இத்தனை நாள் பிரிவென்பது எல்லாம் எங்கோ ஓடி ஒளிந்துகொள்ள, அனுராகாவோ அவளின் தீபனின் கரங்களில்.

இன்னும் எதுவும் அவர்களுள் சரியாகிடவில்லை. எதையும் மனம்விட்டு பேசிக்கொள்ளவில்லை.. எதுவும் தெரியப்படுத்தவும் இல்லை தெளியப் படுத்தவும் இல்லை.. எது எது எப்படி இருந்ததோ அதெல்லாம் இன்னமுமே கூட அப்படியே தான் இருந்தது.

என்ன இப்போது, தங்களுக்குள் இருக்கும் அத்தனை பேதைமைகளையும் தள்ளிவைத்து, தங்களின் நெருக்கமும், இணக்கமும் மட்டுமே பிரதானமாய் இருந்தது அனுராகாவிற்கும், தீபன் சக்ரவர்த்திக்கும்..

அவன் – உன்னிடம் மயங்குகிறேன்..

அவள் – உள்ளத்தால் நெருங்குகிறேன்..

காதல் – மறுபடியும் முதல்ல இருந்தா… நடத்துங்கடா….   

Advertisement