Advertisement

அனுராகா, தன்னிடம் வரவில்லை. ஆனால் தன் இடத்தில் இருக்கிறாள் என்பது அறிந்த தீபனோ என்னவிதமாய் தான் உணர்கிறோம் என்பதனைக் கூட உணர மறந்தான். நிஜமாய் வார்த்தைகள் இல்லை..

ஒரே ஒரு நொடியில் மனம் நிறைவதாய் இருந்தது அந்தத் தருணம். அவளைக் காணவில்லை. அவளை ஸ்பரிசிக்கவில்லை.. இன்னும் எதுவுமே அவர்களுள் சரியாகிடவில்லை..

ஆனாலும்…!!!!!!

அவள் அங்கே இருப்பதே, அவள் தன்னோடு இருப்பதாய் எண்ணினான். மனது அத்துனை நெருக்கம் கொண்டது.

முகத்தினில் வந்து ஒரு பெருமையும் கூட ஒட்டிக்கொள்ள ‘வந்துட்டா.. லாஸ்ட்ல என்கிட்டவே வந்துட்டா..’ என்று அவன் மனம் சொல்ல,

அட்மினோ “சார்… சார்…” என்று கத்திக்கொண்டு இருக்க,

“ஹா..!! யா என்ன சொன்னீங்க.. யார்.. யார் வந்திருக்கா??!!” என்றான் ஒன்றும் கேட்காதது போல.

“அனுராகா மேம்…” என,

“ஒ..!! ஓகே.. ரூம் அலாட் பண்ணியாச்சா??!!” என்றான் இயல்பான குரலில்.

“எஸ் சார்..”

“ஓகே.. ப்ரடக்சன் வச்சிடுங்க… அவங்களோட சேப்டி ரொம்பவே முக்கியம்.. அண்ட் அவங்களை பெர்சனலா மீட் பண்ண யார் வந்தாலும் என்னோட பெர்மிசன் இல்லாம் அலோ பண்ணக் கூடாது..” என்றவன், திரும்ப நாகாவிற்கு அழைத்து “நான் D வில்லேஜ் போறேன்.. ஓன் டே நீ மேனேஜ் பண்ணிக்கோ.. அப்பா கேட்டா மட்டும் சொல்லு.. வேற யார் கேட்டாலும் தெரியாது சொல்லிடு.. எதுவா இருந்தாலும் காதற் அண்ணாட்ட டிஸ்கஸ் பண்ணிக்கோ..” என்றுவிட்டான்.

இதற்குமேல் அவன் அனுராகாவை சென்று பார்க்காது போனால், அது காதல் குத்தமல்லவா.

அவள் வேறெங்கோ இருந்தாலும் பரவாயில்லை, அவனின் இடத்தினில் இருக்கிறாள். அது தெரிந்தபின்னும் கூட தான் செல்லாது இருப்பது அவனுக்குச் சரியானதாய் படவில்லை. அதே நேரம் அவன் வீட்டிற்கும் கூட இன்னமும் செல்லவில்லை.

உஷா ஏற்கனவே நிறைய முறை அழைத்தும்விட்டார்.. இப்போதெல்லாம் முகம் கொடுத்து கூட உஷா பேசுவதில்லை. ஆனாலும் வீட்டிற்கே செல்லாது இருந்தால் அழைத்து விடுகிறார்.

மிதுனும் வீட்டினில் இருப்பதில்லை. அன்று டெல்லி போகிறேன் என்று போனவன். அவ்வப்போது அப்பாவோடு மட்டும் பேசுகிறான். தீபனோடு பேசுவது என்பது முற்றிலும் நின்றுபோனது..

இந்த ஒருவிசயம் தான் தீபன் மனதில் சந்தேகம் வருவதற்கான காரணமாய் இருந்தது.

எது எப்படி இருந்தாலும், ஒருநாளைக்கு ஒரு முறையாவது இருவரும் பேசிவிடுவர். அன்றைய நடப்புகள் பற்றி கலந்தாலோசிப்பு கண்டிப்பாய் இருக்கும். இந்த சில நாட்களாய் அது இல்லை.  மிதுன் வீட்டிற்கும் வரவில்லை. ஆக உஷா தான் முகத்தினை தூக்கிவிட்டார்.

சக்ரவர்த்தியோடு கூட சண்டை ‘நீங்க என் பசங்களை என்னைவிட்டு பிரிச்சிட்டீங்க..’ என்று..

சக்ரவர்த்தி ‘என்ன இது பெரிய குற்றச்சாட்டு..’ என்று பார்க்க,

“ஆமா.. அம்மாக்கு பசங்கன்னு எல்லாம் விட்டு இப்போ முழுக்க முழுக்க கட்சி தேர்தல் வேலைன்னு அதுலயே போயிட்டானுங்க.. வீடுன்னு ஒன்னு இருக்கு.. நான் ஒருத்தி இருக்கேன்னு எண்ணமே இல்லை.. சரி உங்களோட பேசினா, அப்பவும் அதே பேச்சுத்தான்.. சொந்த விஷயம் எதுவும் பேசிக்கிறது இல்லை..” என்று உஷா கடிய,

சக்ரவர்த்தி “டேய் அம்மாவையும் பாருங்கடா…” என்று பிள்ளைகளுக்குச் சொல்ல, தீபன் இதோ வீட்டிற்கு செல்லக் கிளம்பிவிட்டான்.

மிதுன் செய்வது எல்லாம் அப்பா அம்மாவிற்கு தெரிந்தால், நிச்சயம் வீட்டினில் பெரும் களேபரம் தான். ஆக அவனோடு தனியாய் தான் பேசவேண்டும் .

‘உனக்கு என்னதான் வேண்டும்..’ என்று கேட்கவேண்டும்.. அதுவும் கூட தீபனாய் சென்று அல்ல.. மிதுனால் வந்தால் மட்டுமே..

இப்போது அம்மாவைப் பார்க்கவேண்டும்.. வெகு நாளைக்கு பிறகு மனது இலகுவாய் இருந்தது.

வீட்டிற்குச் சென்றாலோ, உஷா உறங்கியே இருந்தார்.. அறைக்கு போய் பார்க்க, நல்ல உறக்கம்.. பேசாது போய் அருகே அமர்ந்தும் கொண்டான்.. உஷாவின் கைகளை எடுத்து வைத்துகொள்ள, அவனின் தொடுகையில் கண் விழித்தவர்,

மகன் எப்போதும் இல்லாத வகையில் இன்று வந்து இப்படி அமர்ந்திருக்க, “என்னடா…” என்றார் மற்றதை விடுத்தது..

“ஒண்ணுமில்ல ம்மா சும்மா உன்ன பார்க்கணும் போல இருந்தது….” என,

“டேய்.. ஏன் இப்படி அர்த்த ராத்திரில வந்து வசனம் பேசுற.. என்ன உனக்கு பேச வேற யாருமில்லையா..” என்று உஷா அதே குரலில் கேட்க,

“ம்ம்ச் ம்மா.. எவ்வளோ பீல் பண்ணி சொன்னா நீ இப்படி பேசற…” என்று தீபனும் கேட்க,

“உனக்கு பீல் பண்ணி பேசவாடா சொல்லிக் கொடுக்கணும்.. ம்ம் சொல்லு.. இப்போ எதுக்கு வந்து உக்காந்து இருக்க.. என்ன வேணும் உனக்கு..” என்றபடி எழுந்தமர,

“என்னம்மா நீ.. நீ என் அம்மா.. நான் வந்து உக்காரக் கூடாதா..” என்றான் அம்மாவை ஒரு குற்றம் சாட்டும் பார்வை பார்த்து.

“ஐயோடா.. ரொம்பத்தான்.. பண்றதெல்லாம் பண்ணிட்டு, இப்போ அப்படியே என்மேல திருப்புறியா..” என்ற உஷா “ஏன்டா எல்லாம் இப்படி மாறிட்டீங்க..” என, அவரின் குரலில் அப்படியொரு வருத்தம் தெரிந்தது.

“ம்மா…!!!”

“ம்ம்ச் விடு தீபன்.. என்ன வாழ்க்கை இதுன்னு தோணுது.. உங்கப்பா எப்பவுமே நிறைய என்னோட இருந்ததில்லை. எப்பவுமே அவருக்கு கட்சி.. பதவி… அது இதுன்னு அதுலயே ஓடிருச்சு. ரெண்டு பசங்கன்னு நான் பெருமையா நினைச்சா. இப்போ நீங்க ரெண்டுபேருமே ஆளுக்கு ஒரு பக்கம்..

உங்களுக்கு ஒரு வாழ்க்கை அமைக்கணும்னு பார்த்தா, ம்ம்.. அது இன்னும் சுத்தம்.. என்னவோ போங்கடா.. எதுலயும் சிக்கி கெட்ட பேர் மட்டும் எடுத்திடாம இருந்தா சரி..” என,

தீபனுக்கு அத்தனை நேரம் இலகுவாய் இருந்த மனது, இப்போது மீண்டும் பாரமேறிக்கொண்டது.. அனைத்தையும் பார்க்கவேண்டும் என்று ஓடி ஓடி இறுதியில் அம்மாவை விட்டோமே என்று தோன்ற,

“சாரிம்மா…” என்றான் நிஜமாய் உணர்ந்து..

“உன் சாரி யாருக்கு வேணும்…” என்றவர் “சொல்லு.. எதுக்கு இப்போ வந்த..” என,

“சும்மாதான் ம்மா..” என்றான்.

இன்னமும் அவன் குரலில் ஒரு வருத்தம் தொனிக்க “ம்ம் சரி போய் தூங்கு…” என்றவர் “சாப்பிட்டியா..” என,

“ம்ம்…” என்று தலையை ஆட்டினான்.

 “போ..” என்ற உஷாவிற்கு தீபனைப் பார்க்க வருத்தமாய் இருந்தது.

தான் செய்து வைத்த குழப்பங்கள் எல்லாம் அவனை இந்த அளவில் பாதிக்கும் என்று அவர் எண்ணவேயில்லை. அனுராகாவை இவ்வீட்டிற்கு மருமகளாய் கொணர்ந்திட வேண்டும் என்று எண்ணினார் தான். அப்போது அவர் மனதில் மிதுன் திருமணம் தான் இருந்தது.

தீபன் இப்படி காதல் என்றெல்லாம் செய்வான் என்று எண்ணவேயில்லை. ஆனால் இப்போது எல்லாம், எல்லாமே குழப்பமாகிட, ஒரு அன்னையாய் உஷா மிகுந்த வருத்தம் கொண்டார்.. 

தீபன் உறங்க வந்தவனுக்குக் கூட, உறக்கமில்லை. உஷா சொன்னது போல் என வாழ்க்கை இது என்றுதான் தோன்றியது.. பணம் இருக்கிறது.. பதவி இருக்கிறது.. சொன்னதை செய்ய ஆட்கள் அத்தனை பேர் இருக்கிறார்கள். எதையும் தன் வசம் ஆக்கிக்கொள்ளும் வல்லமை இருக்கிறது..

ஆனாலும் இந்த நிம்மதி சந்தோசம் என்பது எல்லாம் எங்க ஓடி மறைந்துவிட்டது போலிருந்தது..

பின்னே ஏன் இந்த ஓட்டம்.. யாருக்காக…??!!

இக்கேள்விக்கு அவனிடம் பதிலே இல்லை..

நீ சந்தோசமாக இருக்கிறாயா என்றால் அதுவுமில்லை. சரி உன்னால் யாரேனும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா அதுவுமில்லை.. பின்னே என்னடா நீ இத்தனை பெரிய மனிதனாய் இருந்து பிரயோஜனம் என்று அவனின் மனசாட்சி கேட்க, ம்ம்ஹும் மனதினுள்ள ஒரு போராட்டம் தொடங்க, அதற்குமேல் எதுவும் அவனால் செய்திட முடியவில்லை.

உறக்கம் வருவது சந்தேகம் தான்..   நேரம் பார்த்தான்.. நள்ளிரவு இரண்டு என்று காட்டியது கிளம்பிவிட்டான்.. நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தான் கிளம்புவது, எங்கே செல்கிறோம் என்பது எல்லாம் மிதுனுக்கு செய்தி சென்றுகொண்டே இருக்கும் என்று எல்லாம் தெரியும்..

இதற்குமேல் தெரியாது செய்யவும் எதுவுமில்லை. அவனை நேரில் சந்திக்கும் நாள் அனைத்தும் வெளிப்படும் தானே.. ஆனால் ஒன்று.. எதுவாகினும் மிதுன் தன்னை தேடி வரட்டும் என்று இருந்துவிட்டான்.. இவன் யாரையும் தேடிப்போவதாய் இல்லை.. அவனே தேடி செல்லும் ஒருத்தி என்றால், அது அனுராகா மட்டுமே.

அவள் இருக்குமிடம் செல்வான்.. ஆனால் அவளிடம் செல்வானா  என்றால், அது சந்தேகமே…

இதோ அவளைக் காண கிளம்பியும்விட, அவனின் மற்றொரு எண்ணுக்கு, தர்மாவும், சேட்டும் மாறி மாறி அழைத்திருப்பது தெரிந்தது. எப்படியும் ஆர்த்தியை இரண்டு நாளுக்கு மேலே அங்கே வைத்திருக்க முடியாது என்பது தெரியும்..

ஆக தர்மாவிற்கு அழைத்து விபரம் கேட்க, அவனும் அதையே தான் சொன்னான்.

“இங்க இனி இருக்க முடியாது…” என்று.        

“அங்க இருக்கிறது சேப் இல்லைன்னா.. வேற பிளேஸ் வந்திடுங்க..” என்றவன், பின் உடனே  “ம்ம்.. D வில்லேஜ் கூட்டிட்டு போயிடு தர்மா.. நான் சொல்லிடுறேன்.. நானும் அங்கதான் போயிட்டு இருக்கேன்..” என்றான்.

தர்மா என்ன சொன்னானோ “இல்லை நீங்க ரெண்டு பெரும் அங்க வர்றதுக்குள்ள நான் அங்க இருப்பேன்… ராகா அங்கதான் இருக்கா.. வேற இஸ்யூ டைவர்ட் ஆகாது.. தனி இடத்துல வச்சிருந்தா, எப்படி வேணா வெளிய நியூஸ் வரும்.. ஆர்த்தி நேம் ஆல்சோ இதுல ஸ்பாயில் ஆகிடக் கூடாது..” என,

தர்மாவும் ஆர்த்தியை அழைத்துக்கொண்டு D – வில்லேஜ் பயணம் மேற்கொள்ள, அனைவருமே ஒரே  இடம் நோக்கிச் சென்றுகொண்டு இருந்தனர்.   

தான் இத்தனை சொல்லியும் கூட இந்த சேட் இன்னும் அந்த ஆதாரங்களை தன்னிடம் ஒப்படைக்கவில்லை எனில், அதுவும் இப்போது ஷர்மாவை வைத்து திரும்பவும் விளையாட்டு காட்டவும், தீபனுக்கு இனி எதையும் மறைத்து செய்து எந்த லாபமும் இல்லை என்றே தோன்றியது. 

அடுத்து சேட்டிற்கு அழைக்க, அந்த வேளையில் தீபனிடம் இருந்து அழைப்பு என்றதுமே சேட் பதறிப்போனார் தான்.

“பேட்டா…” என்ற அவரின் குரலிலேயே பதற்றம் தெரிய,    

“என்ன சேட் உங்க வீட்டு பொண்ணு உங்களுக்கு வேணாமா.. லாஸ்ட்ல என்னையே போட பார்த்தாச்சு இல்லையா..” என்று உறும,

“இல்ல.. இல்ல பேட்டா… ஷர்மா எப்படி வந்தான்னு தெரியாது..” என,

“ஓஹோ!!! ஷர்மா வரலைன்னா.. நான் இப்போ இல்லை அப்படிதானே..” என,

“இல்ல இல்ல பேட்டா.. எல்லாம் விட, பொண்ணு விஷயம் முக்கியம்.. ஆர்த்தி முக்கியம்.. நம்ம பிரச்னை வேற..” என்று சேட் சொல்லவும், தீபனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

சிரித்தவனோ “முதல்ல நமக்குள்ள என்ன பிரச்சனை சேட்??!! தனிப்பட்டு என்ன பிரச்சனை.. எல்லாமே ஆரம்பிச்சது யாரு.. நான் இல்லையே..” என்றவன்,   “ஆனதை பார்த்துக்கோ சேட்.. இனி உன்னால எதுவும் செய்ய முடியாது..” என்றான் உஷ்ணக் குரலில்.

“இல்ல பேட்டா.. நான்.. நான் சொல்றதை ஒரு வார்த்தை..” எனும்போதே,

“அதை போய் மிதுன்கிட்ட சொல்லு…” என்று போனை வைத்திட, சேட்டுக்கு தூக்கிவாரிப் போட்டது..

தெரிந்துபோனதா.. அனைத்தும் தெரிந்துபோனதா??!! என்று.

மீண்டும் சேட் அழைக்க “என்ன சேட் டென்சன் கூடிருச்சா..” என்றான் சிரித்தபடி.

“பேட்டா.. வேணாம்… ஆர்த்திய கொடுத்திடுங்க.. நீங்க என்ன சொல்றீங்களோ நான் செய்றேன்..” என,

“ஹா ஹா.. எனக்கு என்ன தேவைன்னு உங்களுக்கே தெரியும்.. இதுக்குமேல உங்களோட முடிவு சேட்.. இப்போ உங்க கைல எதுவுமே இல்லைன்னும் தெரியும்.. சோ.. நான் கேட்டதை கொடுத்திட்டு நிம்மதியா இருங்க.. லாஸ்ட் சான்ஸ்..

அதுவுமே அப்பா கூட உங்களுக்கான பழக்கம்னால தான்.. அண்ட் மிதுனோட சேர்ந்து நீங்க ஏன் இப்படி பண்ணீங்கன்னு எல்லாம் நான் கேட்கவே மாட்டேன்.. ஓகே வா.. ஜஸ்ட் ஒன் டே தான் டைம்.. ஆரத்தியா.. ஆதாரமா.. டிசைட் பண்ணிக்கோங்க..” என்றவன், அழைப்பைத் துண்டித்து, அந்த அலைபேசியை அமர்த்தியும் வைத்துவிட்டான்.

தீபனுக்கு ஒன்றே ஒன்றுதான்.. தன்னை சுற்றி என்ன நடந்தாலும், அதை யார் செய்தாலும், அதனால் அவனின் அப்பாவோ இல்லை ராகாவோ இந்த இருவரும் பாதிப்படையக் கூடாது.

இதுமட்டுமே அவனின் பிரதான எண்ணமாய் இருந்தது.

எல்லாமே ஒருநாள் முடியும்.. முடிவிற்கு வரும்.. அதற்காக எத்தனை தூரம் ஓடவும் தயாராய் இருந்தான்.. என்ன, இவைகள் எல்லாம் அவனின் அப்பாவின் பெயருக்கு ஒரு களங்கம் கொடுத்துவிட கூடாது.. அதையும் தாண்டி அனுராகா.. அவளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது..  

இதை யோசித்தபடியே காரினைச் செலுத்த, அனுராகா  D வில்லேஜில் இருக்கிறாள் என்ற நினைப்பே, அவள் தன்னோடு வந்து சேர்ந்தது போலிருந்தது.

‘என்கிட்டே சொல்லிருக்கலாம்..’ என்று எண்ணினாலும்,

“ராகா..!!!” என்று அவளின் பெயரை உச்சரித்தவன்,

“ம்ம் நான் வேணாம்.. ஆனா அங்க மட்டும் போவியா நீ..” என்றெண்ணியவன் “நான் வரமாட்டேன் நினைச்சியா??!!!” என்று யோசிக்க,

‘சரியான ராட்சசி.. பார்த்ததும் என்ன என்ன சொல்லப் போறாளோ…’ என்று எண்ணிட, அவளின் அலைபேசி இவன் வாங்கி வைத்து கொண்டதை எடுத்துப் பார்த்தான்.

அவளோட பிரச்னைகள் என்றானபின்னே, இதனை எப்போதாவது தான் எடுத்துப் பார்ப்பது.. அதிகமாய் அவளின் எண்ணங்கள் போட்டு இவனைப் படுத்துகையில்.. இப்போதோ அவளையே காணப் போகிறான்.. ஆக அதையும் எடுத்துப் பார்க்க,

“ம்ம்… லூசாக்கி வச்சிருக்கா என்னை..” என்று தனக்கு தானே சொல்லியும்கொள்ள,    பொழுது கொஞ்சம் கொஞ்சமாய் விடியத் தொடங்கியது.   

அவ்வப்போது தர்மாவிற்கு மட்டும் அழைத்து எங்கே வருகிறார்கள் என்று விசாரித்தபடி தீபன் சென்றுகொண்டு இருக்க, காதற் அழைத்தார்.

“தம்பி நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.. ஒரு வாரம் போல நீங்க இங்க இருக்கவே வேணாம்.. ஆர்த்தி பொண்ண அவங்க வீட்ல விட்டுடறேன்.. எதுவும் சரின்னு எனக்கு படலை..” என,

“என்ன காதற்ணா.. எல்லாமே சரியாதானே போயிட்டு இருக்கு..” என்று தீபன் சொல்ல,

“இல்ல தம்பி.. எனக்கு அப்படி தோணலை. அந்த ஷர்மா அவன் எப்படி வந்தான் நடுவில.. யோசிச்சீங்களா..” என, தீபனின் முகம் மாறிவிட்டது.

ஷர்மா நிச்சயமாய் அவனாக இப்படி காரினை எடுத்துக்கொண்டு வந்திருக்கவே மாட்டான்.. அது தீபனுக்கும் நன்றாய் தெரியும். இப்போது மருத்துவமனையில். அதுவும், காவல்துறையில் அவனுக்கு வேண்டிய ஆட்களுடன் காவலுடன்..

“காதற்ணா.. சேட் கிட்ட பேசினேன்.. பார்த்துக்கலாம்.. ஒரே நாள் தான்.. நான் வந்திடுவேன்..” என,

“ ஒருவாரம் கழிச்சே வாங்க..” என்றார் காதற்.

“அண்ணா.. தொகுதில திருவிழா நடக்குது.. பசங்க நான் வரலைன்னா சங்கடப் படுவாங்க.. அப்பாவை ஒருநாள் கூட்டிட்டு போகணும்.. இவ்வளோ இருக்கு..” என,

“எல்லாமே பார்த்துக்கலாம்.. ஆனா நீங்க நான் சொல்றப்போ வாங்க தம்பி  போதும்..” என்று காதற் சொல்ல,

‘என்னடா… இது..’ என்று எண்ணினான் தீபன்.

காரணம் இல்லாது காதற் இதனை சொல்லிட மாட்டார்..

“என்னண்ணா.. எனக்குத் தெரியாம எதுவும் நடக்குதா??” என, “இல்லைத்தம்பி நான் சொல்றப்போ வாங்க போதும்.. ஆர்த்தி பொண்ண ரெண்டு நாள்ல வீட்டுக்கு அனுப்பிடலாம்..” என்று திரும்ப சொல்ல,

“ம்ம் நாளைக்கு வரைக்கும் தான் சேட்டுக்கு டைம்.. பார்த்துக்கலாம்..” என்றவன்,

“சரி நான் போயிட்டு பேசுறேன்..” என்று வைத்துவிட்டான்..

‘என்னடா இவர் என்னையே இங்கே இருக்கவேனாம்னு சொல்றார்..’ என்று யோசித்தவனுக்கு ஒன்றும் புரிபடவில்லை..

தீபனோடு பேசிய காதற்க்குமே ஒன்றும் புரிபடவில்லை. ஏனெனில் அவனை ஒருவாரம் கழித்து வர சொல் என்று சொல்லச் சொன்னதே சக்ரவர்த்தி தான்..

“என்ன காதற் பேசிட்டயா..??!!” என்று கேட்க,

“ம்ம் தம்பி பிடிகொடுக்காம பேசுறாப்ல..” என்று காதற் சொல்ல,

“ம்ம் எல்லாமே எனக்குத் தெரியும்னு நீ காட்டிக்கவேணாம்.. அந்த அனு பொண்ணு கூட அங்கதான் இருக்கு.. இருந்துக்குவான்.. இருக்கணும்..  ஒருவாரம் இல்லை.. தேர்தல் முடிஞ்சு நான் பதவி ஏத்துக்குற வரைக்கும்.. தீபனும் சரி.. மிதுனும் சரி.. நேருக்கு நேர் பார்க்கவும் கூடாது.. இங்க வரவும் கூடாது..” என்ற சக்ரவர்த்தியின் மனதில் என்ன என்ன யோசனைகளோ..

ஆனார் காதற் தான் மலைத்துப் போனார்..

அவள் – உன்னிடத்தில் நான்..

அவன் – பின்னோடு வருவேன் நான்..

காதல் – ஹா…!!!! மறுபடியும் முதல்ல இருந்தா……..

Advertisement