Advertisement

நாகாவும் தர்மாவும் வந்துவிட்டனர். தீபனுக்குமே அவர்களை காணவும் தான் ஒரு புதிய தெம்பு வந்தது போலிருந்தது.

“என்னங்கடா…” என்றபடி அவர்களின் தோளை தட்ட,

“இதுக்கு எதுக்கு போக சொல்லணும்..” என்றான் நாகா.

தர்மாவும் அதையே சொல்லிப் பார்க்க, “ஆனா இப்பவும் நான் வர சொல்லலையே. உங்களுக்கும் எதுவும் பிராப்ளம் ஆகிடக் கூடாதுன்னு தான்..” என்றவன் “வேலை என்னாச்சு..” என,

“பக்கா.. அந்த சேட் யார்கிட்ட எங்க என்ன எப்படி இன்வெஸ்ட் பண்ணிருக்கார்.. எல்லாமே கேதர் பண்ணியாச்சு.. ஜஸ்ட் டூ டேஸ்ல எல்லா ரைட்ஸும் நம்மக்கிட்ட வந்திடும். சேட் எதையும் அவர் பேர்ல பண்ணிக்கல.. கிட்டதட்ட பத்து ஆளுங்க நேம்ல இன்வெஸ்ட் பண்ணிருக்கார்.. லீகல் டாகுமென்ட்ஸ் கொடுத்து.. எதுலயும் சேட் சைன் இல்லை சோ சிம்பிள்.. அந்த பத்து பேரும் இப்போ நமக்கு பவர் கொடுத்தாச்சு..” என்று தர்மா சொல்ல,

“வெல்டன்… கொடுன்னு மரியாதையா கேட்கிறப்போவே கொடுத்திருந்தா சேட்டுக்கு அவர் வேலைக்கான கூலியும் போயிருக்கும்.. ம்ம்.. நட்டம் அவருக்கே..” என்று தீபன் கைகளை விரிக்க, மூவர் முகத்திலுமே சிரிப்பு..

“ஓகே.. தேங்க்ஸ் கைஸ்… இந்த வொர்க் மட்டும் சரியா முடியலைன்னா.. எல்லாமே சொதப்பல் ஆகிருக்கும்.. அண்ட் இது சீக்ரெட்.. பவர் என்னோட நேம்ல வரட்டும்… தென் நீ ஆர்திக்கூட போய் இரு.. நான் சொல்றப்போ அவளை சேப்பா கூட்டிட்டு வந்திடு தர்மா…

நாகா.. தொகுதில நீ ஸ்டே பண்ணிக்கோ.. கவுன்சிலர்கிட்ட சொல்லிடறேன்.. எவ்வளோ செலவு ஆனாலும் சரி.. ஒரு வாரம்.. தொகுதி சும்மா அதிரனும். அதோட எதிரொலி எலக்சன்ல தெரியனும்.. லாஸ்ட் மூணு நாள் அன்னதானம்.. பசங்களுக்கு கட்சி கொடியோட டிசைன்ல டீ ஷர்ட் கொடுங்க. யாராவது கம்ப்ளைன்ட் பண்ணா ஒரே டிசைன்ல பசங்க எடுத்து இருக்காங்கன்னு  சொல்லிடனும்..

அப்பாவை ஒரு நாள் அன்னதானம் வர சொல்லலாம்.. முக்கியாமா லேடீஸ் கவனம் எல்லாம் நம்ம சைட் இருக்கணும்.. குத்து விளக்கு பூஜை ரெடி பண்ணி வர்றவங்களுக்கு வெள்ளிக் காசு.. ஒரு குத்துவிளக்கு பரிசுன்னு சொல்லிடுங்க.. இன்னும் என்னென்ன செய்யணுமோ எல்லாமே. இந்த டைம் எலக்சன் மாஸா இருக்கணும்…” என்று அவர்களோடு சந்தோசமாக பேசிவிட்டுக் கிளம்பினான் தீபன்..

எதுவும் மாறவில்லை தான். ஆனாலும் மனதினில் ஒரு தெளிவு கிடைத்திருந்தது. அதுவே ஒரு உற்சாகம் கொடுத்தது. அனுராகாவோடு பேசவில்லை தான். ஆனாலும் அவள் அழைத்ததே ஒரு நிம்மதி கொடுத்தது.

எதற்கு அழைத்தாள் என்பது தெரியாது. ஆனாலும் அழைத்திருக்கிறாள்.. பேசும் எண்ணமில்லை. இருந்தும் அவள் அழைத்தது பிடித்தது. பேசி இதனை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை அவன். எதுவாகினும்  சரி, எல்லாம் முடியட்டும் என்றே எண்ணினான்.

மிதுனிடம் எதையும் பட்டென்று கேட்டுவிட முடியாது. அப்பாவை வைத்தும் பேசிட முடியாது. அது இன்னமும் வீட்டில் களேபரம் வெடிக்கச் செய்யும் என்று தெரியும். ஆக அவனோடு நேரம் பார்த்து பேசவேண்டும்.. அவனின் எண்ணம் என்ன என்று தெரிந்துகொண்டால், இது எல்லாமே முடிந்துவிடும் என்றெண்ணினான்.   

எது முடியவேண்டும் என்று அவன் எண்ணினானோ, அது முடியாது எனும்வகையில் அனுராகாவே ஆரம்பித்தும் வைத்தாள்.

புனீத்திடம் சொன்ன வேலை, மறுநாளே முடிந்திருக்க, அவனாவது தீபனிடம் கேட்டுவிட்டு அனுராகாவிடம் சொல்லியிருக்கலாம். தீபனுக்கு இருக்கிற வேலைகளில் இதுவேறா என்று புனீத் நினைத்து அனுராகாவிற்கே அழைத்தும் சொல்லிவிட்டான்..

“என்னது டாட் ஆ??!!!” என்று கேட்டவளுக்கு நம்பவும் முடியவில்லை. நம்பாது இருக்கவும் முடியவில்லை..

“எஸ் அனு.. உன் டாட் தான்.. ஆள் வச்சு தீப்ஸ பார்ல வெய்ட் பண்ண சொல்லிருக்கார். அப்போதான் அந்த பிரஷாந்த் போய் பேசிருக்கான்.. பட் மிதுன் வெய்ட் பண்ண சொன்னதா சொல்லி அங்க உட்கார வச்சிருக்காங்க..” என,

“ஓ!! காட்.. இது.. இது மிதுனுக்குத் தெரியுமா என்ன??!!” என்று இவளும் கேட்க,

“அப்படித்தான் தெரியுது.. ஏன்னா அங்க பெருசா மிதுன் ரியாக்ட் பண்ணலை.. யோசிச்சுப்பார்த்தா, மிதுன் இதை எக்ஸ்பெக்ட் பண்ணிருக்கணும்.. இல்லை இது நடக்கனும்னு இண்டைரக்டா தீப்ஸ தூண்டி விட்டிருக்கணும்..” என்று புனீத் சொல்ல,

“ஓகே.. தேங்க்ஸ் புனீத்.. நான் பார்த்துக்கிறேன்..” என்றவளுக்கு, என்ன யோசித்தும் என்ன காரணமாய் இருக்கும் என்பது விளங்கவில்லை. 

லோகேஸ்வரன் ஆரம்பத்தில் இருந்து தீபன் விசயத்தினை எதிர்த்தார் தான். ஆனால் அவனை அத்தனை பேரின் முன்னிலும் இப்படி தரம் குறையச் செய்ய வேண்டிய அளவு அப்படியென்ன பகை அவனின் மீது..??!!

புரியவேயில்லை அவளுக்கு..

தீபனை தாழ்த்திட எண்ணி லோகேஸ்வரன் செய்த செயல் இப்போது அவளை அல்லவா தாழ்த்திவிட்டது அனைவரின் முன்னும்.. மனது கசந்தே போனது அனுராகாவிற்கு. ஒரு அப்பாவாய் இருந்து இப்படி செய்யலாமா அவர்??!!!

அப்படியென்ன மிதுனுக்கும் இவருக்கும் நெருக்கம்??! எதனால் வந்தது?!

மந்திரியின் மகன் என்றால், அப்போது தீபனும் தானே அப்படி.. இந்த ஒரு காரணத்திற்காக எல்லாம் லோகேஸ்வரன் இதில் இத்தனை தீவிரமாய் இருக்கமாட்டார் என்பது அவளுக்குப் புரியாதா.

தனக்கு லாபம் கொடுக்காத எதிலும் லோகேஸ்வரன் இருக்க மாட்டார் என்பது அனுராகாவிற்கு தெரியாதா என்ன??!!!

‘அப்படி என்ன தீப்ஸ் குறைஞ்சு போயிட்டான்.. மிதுன் இவருக்கு பெருசாகிட்டான்.. டாடி… நீங்க லாஸ்ட்ல என் லைப்ல ப்ளே பண்றீங்களா…’ என்றெண்ணியவளுக்கு  இல்லை இதில் வேறெதுவோ இருக்கிறது என்று புரிய,

லோகேஸ்வரனின் பிஏவிற்கு அழைத்தாள். அழைத்தவள் சாதாரணமாய் விசாரிப்பது போல் லோகேஸ்வரனின் கடந்த இரண்டு மாத அப்பாயின்மென்ட்கள், மற்றும் இனி வரும் அப்பாயின்மென்ட்கள் பற்றி விசாரிக்க, அப்போது மிதுனும் லோகேஸ்வரனும் தொழில் நிமித்தமாய் இல்லாது நட்பின் நிமித்தமாய் அடிக்கடி சந்தித்துக்கொண்டது தெரியவர,

‘வெல்டன் டாடி…’ என்று பல்லைக் கடித்துகொண்டாள்.               

அவளுக்கு அனைத்தையும் விட, அன்று தான் அத்தனை பேரின் முன்னமும் நின்றதை இன்னமும் மறக்க முடியவில்லை. கடைசியில் தீபனை விட இதற்கு மூலகாரணம் லோகேஸ்வரன் அல்லவா..

அவன் அப்படி பேசினான் என்று அவனை வேண்டாம் என்றவள், இதெல்லாம் நடந்திடவேண்டும் என்று திட்டம் தீட்டிய லோகேஸ்வரனை என்ன செய்வார்??!!

அனுவின் நேரமா இல்லை லோகேஸ்வரனின் நேரமா தெரியவில்லை, லோகேஸ்வரன் அன்றென பார்த்து வீடு வர, பிடி பிடியென பிடித்துவிட்டாள்.    

அனுராகாவிற்கும், லோகேஸ்வரனுக்கும் இப்படியொரு சண்டை வருமென்று தாரா நினைத்துப் பார்க்கவில்லை. இதற்கு முன்னமும் இருவரும் சண்டையிட்டு இருக்கிறார்கள் தான். ஆனால் இப்போதோ.. அனைத்தையும் மீறிய ஒன்றாய் இருக்க,

தாராவோ “என்ன லோகேஷ் இதெல்லாம்..” என,

அனுராகாவோ “தீப்ஸ் பண்ணது சரின்னு நான் சொல்ல வரலை.. பட் டாட் நீங்க பண்ணது ரொம்ப தப்பு.. ரொம்ப ரொம்பத் தப்பு..” என்று விரல் நீட்டி சொல்ல,

“இதெல்லாம் உனக்கு யார் சொன்னது அனு.. நீயா இமேஜின் பண்ணிட்டா ஆச்சா..” என்றார் அப்போதும் லோகேஸ்வரன் உண்மையை ஒத்துக்கொள்ளாது.

ஆம் அவர் ஆரம்பத்தில் இருந்தே, இதில் பிடிகொடுக்கவில்லை.

“ஐம் நாட் அ கிட் டாடி… இல்லைனா நீங்க ஒரு கம்பனிய அப்படியே என் கைல கொடுத்து இருக்க மாட்டீங்க.. ஐ க்னோ ப்ராபிட் இல்லாம நீங்க எதுவும் செய்ய மாட்டீங்கன்னு.. டெல் மீ டாட்.. ஏன் இப்படி பண்ணீங்க.. அப்படி என்ன மிதுன் பெரிசு.. தீபன் கம்மியாகிட்டான்..” என்று அனுராகா கத்த,

மகள் எதையோ யூகித்துவிட்டாள் என்று அறியவுமே அவருக்கு முதலில் அனுராகாவை இங்கே இருக்கவே விடக்கூடாது என்ற எண்ணம் வந்துவிட்டது லோகேஸ்வரனுக்கு.

லோகேஸ்வரன் பதிலே சொல்லாது அமைதியாய் இருக்க, தாராவிற்கே இது அதிர்ச்சியாய் தான் இருந்தது. இத்தனை தூரமா இறங்கிடவேண்டும் என்றிருக்க,

“லோகேஸ்.. அனு பத்தி கூட நீங்க நினைக்கலையா??!!” என,

“ஷ்..!! கொஞ்சம் அம்மாவும் பொண்ணும் ஸ்டுபிட் போல பேசறதை நிறுத்துங்க..” என,

“டாடி..” என்று அவளும், “லோகேஸ்..” என்று தாராவும் குரலை உயர்த்த,

“எஸ்.. ப்ராபிட் பில்லாம நான் எதுலயும் தலை கொடுக்க மாட்டேன் தான்.. ஐம் எ பிஸ்னஸ் மென்.. பக்கா பிஸ்னஸ் மென்.. அதுக்காக என் பொண்ணு லைப் மேல அக்கறை இல்லாம இல்லை.. தீபன், இன்னும் பியூ டேஸ்ல அவனோட வேல்யூ ஜீரோ..

கட்சிலையும் சரி, பப்ளிக்லயும் சரி டோட்டலா அவனோட நேம் ஜீரோ ஆகப் போகுது.. இதெல்லாம் தெரிஞ்சு நான் எப்படி அனுவை அவனுக்குக் கொடுக்க முடியும்…” என்று அனுராகாவைப் பார்க்க, அவளோ திகைத்துப் போய் நின்றாள்.

என்ன இதெல்லாம்??!!!

யார் தீபனுக்கு எதிராய் செயல்படுகிறார்கள். இதெல்லாம் தெள்ளத் தெளிவாய் லோகேஸ்வரன் சொல்கிறார் என்றால் ஊர்ஜிதம் இல்லாது சொல்லமாட்டாரே.. அப்படியிருக்க, அப்படியிருக்க.. என்று அவள் யோசிக்க, அவள் புத்தியில் மின்னல் அடித்தது மிதுன் தான்..

‘மிதுன்…’ என்று அவள் இதழ்கள் முனுமுனுக்க,

“சோ.. இதெல்லாம் மிதுனோட ப்ளான்.. எல்லாம்.. எல்லாமே.. அப்படித்தானே..” என்றவளுக்கு மிதுன் என்பவன் இப்போது இங்கிருந்தான் என்றால் அவனை கொன்றே போட்டிருப்பாள்.

இதெல்லாம் சொல்லி அனுராகாவிற்கு புரிய வைத்து அவளை சிறிது காலம் வெளிநாடு அனுப்பிவிட்டால், இங்கே தீபனும் மிதுனும் அடித்துக்கொண்டாலும் சரி, இல்லை என்னவோ செய்துகொள்ளட்டும், எல்லாம் முடிந்து ஒரு தெளிவு பிறக்கையில் எவன் இருக்கிறானோ அப்போது பார்த்துக்கொள்வோம் என்ற நினைப்பில் இருக்க, அனுராகாவோ அடுத்த நொடி மிதுன் பெயரை உச்சரிக்க,

“அனு.. ஸ்டாப் இட்.. இதெல்லாம் உனக்கு தேவையே இல்லாதது..” என்று சொல்ல,

“எனக்கு என்ன தேவைன்னு இனி நான் மட்டும் தான் டிசைட் பண்ணுவேன் டாட்..” என்றவள், தாராவைக் காண அவரோ கலங்கிப் போய் பார்த்தார்.

இதற்குமேலா மகள் தாங்கள் சொல்வதை கேட்கப் போகிறாள் என்று இருந்தது தாராவிற்கு.

உண்மையும் அதானே??!!!

“ம்மா.. ஐம் சாரி… இனி நான் இங்க இருக்கப் போறதில்லை..” என, “அனு…” என்றார் மெதுவாய் தாரா..

“தீபன் பண்ணது தப்புன்னுத்தானே அவனை வேண்டாம் சொன்னேன்.. அப்போ இவர் பண்ணதும் தப்புதானே.. என்னோட அப்பாங்கிறதுக்காக அவரை நான் அக்சப்ட் பண்ணிக்க முடியாது இல்லையா..” என்றவள்,   இங்கிருந்து கிளம்பும் வேலையில் இறங்கிவிட்டாள்.                      

லோகேஸ்வரனும் தடுக்கவில்லை..

‘எங்கே போவாள்.. கையில் இருக்கும் காசெல்லாம் கரைந்த பின் மீண்டும் இங்கேதானே வந்தாக வேண்டும்..’ என்பது அவரின் எண்ணம்..

லோகேஸ்வரனே அவளை இங்கிருந்து அகற்ற எண்ணினார் தானே. இப்போது அவளே கிளம்புகிறேன் என்றதும் ஒரு வேலை சுலபமாய் முடிந்தது.

அனுராகா அவளின் அறைக்குள் நுழைந்திட, தாராவோ “லோகேஸ்.. இதெல்லாம் என்ன??!!! அவ போறேன் சொல்றா.. நீங்க எதுவுமே சொல்லாம இருக்கீங்க..” என்று கடிய,

“போகட்டும்… தனியா எல்லாம் பேஸ் பண்ணிட்டு வரட்டும்.. அதுக்காக அவளை மானிட்டர் பண்ணாம இருக்கமாட்டேன்.. லைப்னா என்னன்னு அவளுக்குப் புரியணும்.. எது இம்பார்ட்டன்னு  தெரிஞ்சுக்கட்டும்.. எல்லாம் அவளுக்கு புரியும்.. லெட் ஹெர் கோ…”  என்று அவரும் சொல்ல,

“பட் அவ ஹெல்த்..” என்று தாரா கேட்கையிலேயே, “நான் அப்படியே விட்டுட மாட்டேன் தாரா..” என்றவரின் குரலுமே மாறியிருந்தது.

இது அவர்களின் மேல்தட்டு வாழ்வில் சகஜமும் கூட, கோபித்துக்கொண்டு பிள்ளைகள் கிளம்புவதும் பின் திரும்புவதும் என்பது. அத்தனை ஏன் அனுவே முன்னே இரண்டொரு முறை இப்படி செய்தும் இருக்கிறாள்..

ஆக தாராவிற்கு இதெலாம் புதிதில்லை என்றாலும், அவளின் உடல்நிலை கண்டு மனதில் ஒரு கலக்கம் இருந்தது.

எந்த நேரத்தில் என்ன இழுத்து வைப்பாளோ என்று.

லோகேஸ்வரனோ “சில விஷயம் அவ பட்டுத்தான் தெரியனும்னு இருந்தா நம்ம எதுவும் செய்ய முடியாது தாரா.. லெட் ஹெர் கோ..” என்றுவிட்டு சென்றுவிட்டார்.   

அனுராகா வீட்டிலிருந்து கிளம்புகிறேன் என்று யாருக்குமே சொல்லவில்லை.. தீபன் உட்பட, அவனிடம் சொல்லிடவேண்டும் என்று எண்ணிய மனதையும் இறுக்கிப் பிடித்துக்கொண்டாள்.

‘நோ… அவனோட பிரச்னைகள்ல நீ உன்னை உள்ள கொண்டு போகாத.. அது இன்னமும் அவனுக்கு டென்சன் கொடுக்கும்..’ என்றெண்ணியவளுக்கு, மனது அவனிடம் செல்லத்தான் எண்ணியது..

‘நோ அனு… லேட் ஹிம் சால்வ் எவ்ரிதிங்..’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவள், கிளம்பியும்விட்டாள்.

புனீத்திற்கு அழைத்தவள் தான் வீட்டில் இருந்து கிளம்புவதை சொல்லாது, தீபனை சுற்றி இதெல்லாம் நடக்கிறது என்று மட்டும் சொல்ல

“வாட் திஸ் இஸ் …” என்றான் புனீத்.

“எனக்கும் இதெல்லாம் தெரியலை.. பட்.. சம்திங் பிஷ்ஷி.. அவன்கிட்ட சொல்லிடு புனீத்..” என,

“நீ.. நீ என்ன செய்யப் போற அனு..” என்றான் பதறியே..

“டோனோ… தீப்ஸ்க்கு கால் பண்ணேன் நேத்து.. பட் அவன் எடுக்கலை.. ஓகே.. நானும் அவனை டென்சன் பண்ண விரும்பலை.. நீ சொல்லிடு.. இதெல்லாம் அவனுக்கு தெரியுமா தெரியாதா எனக்குத் தெரியாது…” என்றவள் அதற்கு மேல் வைத்தும்விட்டாள்.

புனீத் தீபனை தொடர்புகொள்ள முயற்சிக்க, அவனால் எது முடியவில்லை. கட்சி ஆபிஸ்க்கு அழைத்தால் இப்போது தான் கிளம்பினான் என்றார்கள்.. நாகா தர்மா இருவரில் யாருக்கு அழைத்தாலும், அவர்களையும் பிடிக்க முடியவில்லை.

‘என்னடா இது…’ என்று யோசித்தவன் தீபனின் வீட்டிற்கே செல்ல, அங்கே வேலையாட்கள் மட்டுமே இருந்தனர்.

இதெல்லாம் என்னவென்று சொல்வது.. நேரம் என்பதைத் தவிர..        

தர்மா, ஆர்த்தி இருக்குமிடம் சென்றுவிட, நாகா தொகுதியில் திருவிழா வேலையில் இறங்க, தீபன் எதிர்பார்த்து காத்திருந்த அந்த பத்து கொடுத்த பவர் ஆப் அட்டர்னியும் அவனின் கைக்கு வந்துவிட, இனி அந்த சேட் கையினில் இருக்கும் ஆதாரம் எல்லாம் தன் கைக்கு வந்துவிட்டால் போதும். ஆதாரங்கள் எல்லாம் வந்தானபின், சேட்டிற்கு கட்டளையிட்டவன் எவனாக இருந்தால் என்ன, இனி அந்த ஷர்மா என்ன ஆனாலும் என்ன, அவ்வளோ தான் என்று எண்ணியிருந்தான்.          

சேட்டிடம் தீபன் சொல்லிவிட்டான் “ஆதாரங்களை எல்லாம் என் கையில் கொடுத்தால் ஆர்த்தி வருவாள்..” என்று..

சேட்டோ “நீ.. நீ எப்படி சொல்றியோ பண்ணிடறேன்..” என்றவர் ஒரு இடம் சொல்லி வரச் சொல்ல,

“ம்ம் இதுல வேற ப்ளான் ஏதாவது இருந்தது.. ஆர்த்தியை மறந்திடுங்க..” என்று தீபன் தயை இன்றி கூற, “இல்ல இல்ல பேட்டா..” என்றார் சேட் பதற்றமாகவே.

“ஓகே..” என்றவன், சேட் சொன்ன இடத்திற்கு காரில் பயணிக்க, அவன் பயணிக்கத் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் தீபனின் காருக்கு முன்னேயும் பின்னேயும், பெரிய சரக்கு லாரிகள் வர, தீபனுக்கு அவனின் காரின் வேகத்தை கூட்டி முன்னே செல்லவும் முடியவில்லை, பின்னே வரும் லாரிக்கு வழி விடலாம் என்றால் அதுவும் முடியவில்லை..

‘ச்சே.. என்னடா…’ என்று யோசிக்கும்போதே, இரண்டு லாரிகளும் வேண்டுமென்றே வேகத்தை கூட்டியும் குறைத்தும் செல்வது போலிருக்க,

‘சம்திங் இஸ் ராங் தீப்ஸ்..’ என்று அவன் நினைத்து முடிக்கும் முன்னே, கண்ணிமைக்கும் நொடியும் அந்த விபரீதம் நிகழ்ந்திட, தீபனுக்கு என்ன நடந்தது என்றுகூட விளங்கிடவில்லை 

“ஓ… காட்…!!!” என்று தீபன், கண் முன்னே நடந்த அசம்பாவிதம் என்னவென்று புரியவே அவனுக்கு நொடிகள் பிடித்தது.

அவனின் கார் பின்னே இருந்தது, அவனின் காருக்கு பின்னே வந்த சரக்கு லாரி, இப்போதில்லை, முன்னே சென்றுகொண்டிருந்த லாரியும் இல்லை.. அதாவது சென்றுவிட்டிருந்தது. ஆனால் அவனின் காருக்கு முன்னே மற்றொரு கார் சுக்கு நூறாய் நொறுங்கியிருந்தது.

தனக்குத்தான் என்னவோ ஆகிப்போனது என்றெண்ணியவனுக்கு, எதிரே இருந்த காரில் யாரோ இருப்பதற்கு அடையாளாமாய் அந்த நபரின் கை மட்டும் வெளியே தொங்க, வேகமாய் இறங்கி வெளியே வந்தவன், அருகே சென்று பார்க்க

‘ஷர்மா!!!!’ என்று அதிர்ந்து போனான்..

எவனை ஆள் வைத்துத் தூக்கினானோ, எவனை ஆள் வைத்துத் தேடினானோ, எவனை உண்டு இல்லை என்று ஆக்கிட எண்ணினானோ இப்போது அவன் தீபனின் கண் முன்னே.. அதுவும் உயிருக்கு போராடிய நிலையில்.

“ஹேய்.. ஷர்மா..!!” என்று அவனின் கன்னம் தட்ட, அதற்குள் சாலையில் சென்றுகொண்டு இருந்த மற்ற வாகனங்கள் எல்லாம் அங்கே இங்கே என்று நின்று ஆட்களும் கூடிவிட, தீபன் அதற்குள் போலீஸிற்கு அழைத்தும் விட்டான்.

சுற்றி இருந்தவர்கள், அதனுள் ஷர்மாவை காரில் இருந்து வெளியே தூக்க முயற்சிக்க, சில நொடிகளில் ஆம்புலன்ஸ் வந்துவிட்டது, காவல்துறையும் வந்துவிட்டது.

தீபனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.. இந்த ஷர்மா உடல்நிலை சரியில்லாது இருப்பதாய் தான் தகவல்.. அவனேப்படி காரில்.. அதுவும் இப்படி என்று சிந்திக்க, விபத்து நடந்த இடத்தில் மீடியா ஆட்களும் சூழ்ந்துவிட்டனர்..

‘மயிரிழையில் உயிர் தப்பினார் மந்திரியின் மகன்..’ என்று அனைத்து சானல்களும் ஒளிபரப்பிக் கொண்டு இருக்க, தீபன் வேக வேகமாய் அங்கிருந்து நகர்ந்திட, அனுராகாவோ D- வில்லேஜில் இருந்தாள்.

அவன் – காதல் சேதாரமானதோ?!!

அவள் – காதல் சேமிப்பாகுமோ?!!!

காதல் – ஆமங்கடா நான் நகை கடை வச்சிருக்கேன் பாருங்க..!!                                                      

Advertisement