Advertisement

நான் இனி நீ – 28

அனுராகா மனதில் மிதுன் மீது சந்தேகம் எழுந்ததுமே, அதை தீபனிடம் சொல்லத்தான் எண்ணினாள். ஆனால் அடுத்த நொடியே அது அத்தனை சரிவருமா என்பதும் அவளுக்குப் புரியவில்லை..

அவளுக்குத் தெரியும், மிதுன் மீது தீபனுக்கு எப்படியான அபிப்ராயம் இருக்கிறது என்று. தான் இதை சொன்னால், இல்லை கண்டிப்பாய் இதில் அந்த பிரஷாந்த் தான் உள்ளே புகுந்து விளையாடி இருக்கிறான் என்றுதான் தீபன் சொல்வான் என்பது அனுராகாவின் அனுமானம்.

‘எவிடன்ஸ் இல்லாம எதையுமே பண்ண முடியாது.. பட்.. பட் அனு நீ என்ன எவிடன்ஸ் இதுல ப்ரூப் பண்ண முடியும்??’ என்று அவளுக்கு அவளே பேசிக்கொள்ள, என்ன யோசித்தும் அடுத்து என்ன செய்வது என்று எதுவும் விளங்கவில்லை.

பார்ட்டி முழுக்க முழுக்க ஏற்பாடு செய்தது எல்லாம் பிரஷாந்த் தான். அவனைப் பிடித்துக் கேட்கலாம் என்றால், அடுத்து அவனின் முகம் பார்க்கக் கூட அவளுக்கு பிடிக்கவில்லை.

அடுத்தது அங்கே என்ன நடந்தது என்று   முழுதும் தெரிந்த நபர் லோகேஸ்வரன். அனுராகா வீட்டிற்கு வந்த நாள் முதலாய் அவர் இங்கில்லை..

‘ஓ!!!! காட்…’ என்று யோசித்தவளுக்கு, அங்கே பார்ட்டி ஹாலில்  இருக்கும் பாரில் சென்று விசாரித்தால் எதுவும் தெரியவருமா என்று யோசிக்க, கிளம்புவோம் என்றெண்ணி கிளம்பியும் விட்டாள்.

நேரில் இவள் செல்லப் போவதில்லை. ஆனால் அனுப்பவேண்டிய ஆட்களை இவள் நேரில்தானே காண வேண்டும்.. ஆபிஸ் ஆட்கள் என்றால் நிச்சயம் வெளியே விஷயம் வந்துவிடும். ஆக வேறு ஏற்பாடு தான் செய்யவேண்டும்.. இந்த நேரத்தில் புனீத் அல்லது தேவ் இவர்கள் உதவக்கூடும் என்றெண்ணி அவர்களுக்கு அழைத்துப் பேச, அவர்களும் கூட சரி என்றுதான் சொன்னார்கள்.     

ஆனால் அனுராகா வெளியே கிளம்புகிறேன் என்றதுமே, தாரா அதற்கு சம்மதிக்கவே இல்லை. யாரையும் பார்க்க விரும்பாது அடைப்பட்டு இருந்தவள், இப்போது நீரஜா புனீத் தேவ் வந்து பார்த்துவிட்டு போன மறுநாளே வெளியே கிளம்புகிறாள் என்றால், நிச்சயம் அவள் தீபனைத்தான் சந்திக்கக் கிளம்புவாள் என்றெண்ணி,

“நீ இன்னும் நார்மல் ஆகலை..” என,

“நோ ம்ம்மா.. சிலது எல்லாம் உடனே உடனே பேசிக்கணும்..” என,

“எல்லாத்தையும் விட உன்னோட ஹெல்த் எனக்கு முக்கியம் அனு..” என்ற தாரா சம்மதிக்கவேயில்லை.

“ம்ம்ச் ம்மா.. ஏன் நான் சொல்றதை எப்பவுமே யாருமே புரிஞ்சுக்காம என்னை பிடிவாதம் பண்ண வச்சு, எக்ஸ்ட்ரீமா பீகேவ் பண்ண வைக்கிறீங்க..” என்று அனுராகா கத்த,

“என்னது நாங்களா உன்னை இப்படி எல்லாம் செய்யச் சொன்னோம்..” என்று கடிந்தார் தாரா..

இத்தனை நாள் அவள் குணமடைய வேண்டும் என்று பொறுமையாய் இருந்தவருக்கு இப்போது அந்த பொறுமை போய்விட, எத்தனை பட்டாலும் இவள் திருந்துவேனா என்கிறாளே என்று மனது நோகவும் செய்தது அவருக்கு.

“ம்மா இப்போ இதல்லாம் பேசற டைம் இல்ல..”

“இப்போ நீ வெளிய போற டைமும் இல்லை அனு… உன்னை கேர் பண்ண நான் சில பெர்சன்ஸ் அப்பாயின்ட் பண்ணிருக்கேன்.. இப்போ வந்திடுவாங்க..” என,

“வாட்??!!” என்றாள் விளங்காது..

“எஸ்.. உன்னோட பிஸிக் முன்ன மாதிரி இல்ல.. சோ, நியூட்ரிசியன், மசாஜ் தெரப்பிஸ்ட், ஸ்கின் கன்சல்டன்ட் எல்லாம் வர சொல்லிருக்கேன்..”

“ஒ..!!! என்னோட பிஸிக் பத்தி இவ்வளோ வொர்ரி பண்ற மம்மி ஆனா ஏன் என் மனசு பத்தி நினைக்கவே இல்லை நீயும் டாடும்..” என்று அனுராகா ஏகத்திற்கு கத்த,

“நோ.. அனு நீ என்ன சொன்னாலும் இதுல என்னோட எண்ணம் மாறாது.. நீ முழுசா குணமாகனும்.. அதுவரைக்கும் நான் சொல்றத கேட்டுத்தான் ஆகணும்..” என்று தாராவும் பிடிவாதமாய் பேச,

“மாம்.. திஸ் இஸ் நாட் பேர்…” என்றாள் அனுராகா கோபத்தின் உச்சத்தில்..

“ஐ டோன்ட் கேர் அபவ்ட் இட் அனு..” என்றவர் ரூமாவை அழைத்து “நான் அப்பாயின்ட் பண்ணிருக்கவங்க வந்ததும் அனுக்கிட்ட இன்ட்ரோ பண்ணிடு ரூமா.. ஒரு மீட்டிங் இருக்கு.. கிளம்பியே ஆகணும்..” என்றுவிட்டு போக,

அனுராகாவிற்கு தன் கோபத்தினை கூட இப்போது யாரின் மீது எதன் மீது காட்டுவது என்பது தெரியவில்லை.

வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கியாயிற்று.. தன்னை தானே காயமும் செய்துகொண்டாயிற்று. இனி ஏதாவது செய்யவேண்டும் என்றால், அது பிறரை அடித்தால் தான் ஆகிற்று..

அதை செய்ய முடியுமா என்ன??!!

புனீத்கு அழைத்து “என்னால இப்போ வர முடியலை புனீத். பட் அது என்னன்னு மட்டும் செக் பண்ணிட்டு சொல்லு..” என,

“ஓகே நான் பார்த்துக்கிறேன்..” என்றவன் பின் என்ன யோசித்தானோ “தீப்ஸ் கிட்ட இதை பேசினியா??” என,

“நோ.. பர்ஸ்ட் நமக்கிது கிளியர் ஆகணும்.. அதில்லாம அவனோட பேச முடியாது.. அன்ட் அவன்மேல தப்பே இல்லைன்னு சொல்ல மாட்டேன் புனீத்..” என்றாள் இறுகிய குரலில்.

“ஓ..!! அனு.. அவனுக்கு எவ்வளோ ப்ரெஷர்னு உனக்கு இன்னமும் சரியா தெரியலை..”

“அதுக்காக என்னை அப்படி பேச சொன்னாங்களா யாரும்..” என்றவளுக்கு இன்னமும் கூட அதனை மறந்திட முடியவில்லை.

ஆனால் புனீத்தோ, “தப்பு அவன்மேல மட்டுமில்லை. உன்மேலயும் கூடத்தான்.. நீ அவனோட க்லாரிபை பண்ணிருக்கணும்.. ஏன் நீங்க மீட் பண்ணிக்கவே இல்லையா.. பேசிக்கவே இல்லையா..  பொறுமையா யோசி அனு.. இந்த ரிலேஷன்ஷிப் லைப் லாங் உனக்கு வேணும்னு நினைச்சா மட்டும் பர்தரா எதுவும் ஸ்டெப் எடுக்கலாம்.. இல்லை அவன் பண்ணது தப்புதான்.. உனக்கு அவன் வேணாம்னு தோணிச்சுன்னா எல்லாத்தையும்.. எல்லாத்தையும் இதோட ஸ்டாப் பண்ணிட்டு, நீ உன் லைப் பாரு.. அவன் அவன் வழியில போகட்டும்..” என,

“புனீத்…!!!” என்று அனுராகா அதிர்ந்து தான் விளித்தாள்.

இத்தனை நாள் அவன் அப்படியெல்லாம் பேசியதே இல்லை. நல்ல நண்பன் அவ்வளவே. அதை தாண்டி இவர்களின் பெர்சனல் விஷயம் எல்லாம் அவர்கள் என்ன ஏதென்று கேட்டது கூட இல்லை.

ஆனால் இப்போதோ அனுராகா இவ்விசயம், அதிலும் மிதுன் பற்றி சொல்லி விசாரிக்கச் சொல்லவும், தேவ் மற்றும் புனீத் இருவருக்குமே நெருடலாய் இருந்தது.

‘என்னடா அனு இப்படி சொல்றா..’ என்ற தேவ்விற்கு இன்னமும் அதில் இருந்து மீளவே முடியவில்லை.

புனீத்தோ ‘நான் பேசிக்கிறேன்..’ என்றுவிட்டு தான் இப்போது அனுவோடு இப்படி சொல்ல, அனுராகா பேச்சற்று தான் இருந்தாள்.

“எஸ் அனு.. யோசி.. இன்னும் நிதானமா யோசி.. உனக்கு தீப்ஸ் வேணும்னா மட்டும், அதாவது அவனோட எல்லா மிஸ்டேக்ஸ் ஓட அவனை நீ அக்சப்ட் பண்ணிக்கிற ஸ்டேஜ்ல இருந்தா மட்டும்  நீ சொல்லு, நான் உனக்கு என்ன ஹெல்ப் வேணுமோ செய்றேன்.. இல்லையா.. இப்போ எந்த ஸ்டேஜ்ல இருக்கீங்களோ அப்படியே இருந்துட்டு அவங்கவங்க லைப் பாருங்க.. மேல மேல நீயும் ஸ்ட்ரெஸ் ஆகி, அவனும் மேல மேல ப்ராப்ளம்ல சிக்கி.. இது எதுவுமே வேணாம்… தின்க் அண்ட் டிசைட்…” என்றுசொல்லி வைத்தும் விட்டான்.

அனுராகாவிற்கு இத்தனை நேரமிருந்த கோபமெல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை.. புனீத் சொன்னது முற்றிலும் சரிதான்.

அவனே தனக்கு வேண்டாம் என்கையில் பின் ஏன் இதை எல்லாம் கிண்டி கிளற வேண்டும்??!!

அவன் கேட்டது சரிதானே…

காதல் என்ற ஒன்று உறுதியானதுமே அவள் அனைத்தையும் சொல்லியும் இருக்கவேண்டும் தானே.. அவள் முயற்சித்தாள் தான். சூழல் அப்படி அமையவில்லைதான்.. ஆனாலும் அனுராகாவும் கொஞ்சம் அலட்சியமாகத்தான் இருந்தாளோ..??!!

இப்போது அவளுக்கு அப்படித்தான் தோன்றியது..

“ஒ காட்..” என்று முனுமுனுத்தவள், அப்படியே தலையை பிடித்து அமர்ந்துகொள்ள,

“தீப்ஸ்…” என்று அவளின் இதழ்கள் அவனின் பெயரை உச்சரிக்க, அடுத்தநொடி “ராஸ்கல்.. என்னை எப்படி பண்ணி வச்சிருக்கான்..” என்று கடிந்துகொள்ள கூட அவனையே நினைக்க,

“நோ… நான் இப்படி இருக்கக் கூடாது..” என்று தனக்கு தானே சொல்லி, மறுபடியும் புனீத்கு அழைத்தவள் “இது தீப்ஸ்காக நான் உன்னை விசாரிக்கச் சொல்லலை.. ஐ வான்ட் டு க்னோ எவ்ரிதிங்.. பிகாஸ் அன்னிக்கு எல்லார்முன்னாடியும் அவமானப்பட்டு நின்னது நான்.. அந்த ஒரு ரீசன்க்காகத்தான்..” என்றாள் தெள்ளத் தெளிவாய்..

“அப்.. அப்போ தீப்ஸ்…”

“அவனைப் பத்தி நான் உன்கிட்ட பேச முடியாதே.. புனீத்.. எங்களுக்குள்ள என்ன இருக்கோ.. அது அப்படியே இருக்கட்டும்.. அது எதுவா இருந்தாலும் சரி.. இந்த ஹெல்ப் மட்டும் நீ செய்…” என்றவளின் தொனி இதை நீ செய்து தான் ஆகவேண்டும் என்று உணர்த்த,

‘ஹ்ம்ம் நல்லா வந்து சேர்ந்துச்சுங்க..’ என்றெண்ணியபடியே “ஓகே..” என்றுமட்டும் சொன்னான்.

புனீதோடு இப்படி பேசிவிட்டாலும் கூட, அவளுள்ளே அந்தக் கேள்வி தான்..

‘அவனை உன்னால் ஏற்றுகொள்ள முடியுமா??!! உன்னிடமும் தவறுகள் இருக்கிறதுதானே.. எல்லாம் தெரிந்தும், அனைத்தையும்  தாண்டி உன்னைத் தேடி வந்தான் தானே… அதை ஏன் உன்னால் செய்திட முடியவில்லை??? அனு.. அப்.. அப்போ தீப்ஸ் அளவுக்கு நீ லவ் பண்ணலையா??!!!’

“நோ நோ…” என்று அவளே தன் முகத்தினை மூடிக்கொண்டாள்,

‘பேசாம இதெல்லாம் மறந்திடேன் அனு… அதையே நினைச்சா தானே உனக்கு அவன் பண்ணது தப்புன்னு தோணும்.. மறந்திடு.. ஜஸ்ட் தீப்ஸ் மட்டும் நினைச்சுக்கோ…’ என்று தோன்ற,

“எஸ் .. எஸ்… நான்.. நான் எதையும் எதையுமே நினைக்க விரும்பலை.. தீப்ஸ்.. தீப்ஸ் அவனோட ஒன் டைம் பேசேன் அனு…” என்று சொல்லியபடி அவனுக்கே அழைக்கவும் தொடங்கிவிட்டாள்.      

தீபனோ, காதரை தன்னோடு அழைத்துக்கொண்டவன் “என்ன காதர்ண்ணா.. பசங்களை ஏன் வரச் சொன்னீங்க…” என

“விசயம் அப்படி..” என்றவர் சதீஸ் சொன்னதை எல்லாம் சொல்ல “வாட் என்னை மானிட்டர் பண்ண சொன்னானா???” என்ற தீபனுக்கு இன்னமும் கூட அதனை நம்ப முடியவில்லை.

“ஆமா தம்பி.. ஆள் வேணும்னு சொன்னப்போவே மிதுன், அப்பாக்கு தீபனுக்கு எல்லாம் தெரியவேனாம்னு…” எனும்போதே,

“இதெல்லாம் நீங்க ஏண்ணா முன்னாமே என்கிட்டே சொல்லலை..” என்ற தீபனுக்கு, மிதுன் ஏன் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறான் என்ற எண்ணம் வர, அனுராகாவிடம் இருந்தும் அவனுக்கு அழைப்பு வந்தது.

‘ராகா…’ என்று அவளின் பெயரை உச்சரித்தவனுக்கோ, அவளின் இந்த திடீர் அழைப்பு ‘என்ன சொல்லப் போறாளோ…’ என்ற கேள்வியையும் கொடுக்க, அழைப்பை ஏற்காது அலைபேசியின் திரையை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தான்..

“என்ன தம்பி எடுத்து பேசுங்க..” என்று காதர் சொல்ல,

“இல்ல அப்புறம் பார்த்துக்கலாம்..” என்றான், அழைப்பைத் துண்டித்து.

அவர் முன்னிலையில் அவன் அவளோடு என்ன பேசுவான்?? எதை பேசுவான்..

அனுவோ திரும்பவும் அழைக்க, தீபனோ திரும்பவும் அழைப்பைத் துண்டிக்க, இருவருமே மிகவும் பொறுமை சாலிகள் வேறு அவள் மீண்டும் அழைக்கும் நேரம் இவன் அலைபேசியை அமர்த்தியே வைத்துவிட்டான்.

“முக்கியமான காலா இருக்கப் போகுது…” என்று காதர் சொல்ல,

“இல்லண்ணா…” என்றவனின் மனதோ ‘இன்னிக்குன்னு பார்த்து தான் இவளுக்கு போன் எல்லாம் செய்யத் தோணும்..’  என்று கடுபடித்தும் கொண்டான்.

வீட்டினில் இருக்கிறாள், பாதுகாப்பாய் இருக்கிறாள் அது அவனுக்குத் தெரியும். இல்லையெனில் நிச்சயம் அவளோடு பேசியிருப்பான்.. இப்போது பேசும் சூழல் இல்லை. மனதும் இல்லை..

பேசாத பேச்சுக்கள் பேசியதும் காதலாலே.. பேசும் வேளையில் பேசாதிருப்பதும் காதலாலே.. காதல் சொன்னதா பேசாதே என.. இல்லை காதல் சொன்னதா இப்படி பேசு என.. எதுவுமில்லை.. காதல் செய்த வேலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான். மனதினில் மட்டுமல்ல அவ்வப்போது நாக்கிலும் சிம்மாசனம் இட்டுக்கொள்கிறது.       

‘சுவிட்ச் ஆப்…’ என்றதுமே அனுராகாவின் பொறுமை முற்றிலும் பறந்து ‘போடா.. உனக்கு நான் பண்ணேன் பார்…. எவ்வளோ தூரம் போவியோ போ..’ என்று கடிய, அடுத்து தாரா, அவளுக்கென்று ஏற்பாடு செய்திருந்தவர்கள் எல்லாம் வந்துவிட, அவளின் நேரம் என்பது அங்கே ஓடிப்போனது.

தீபன் காதரோடு பேசியபடி, மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று கலந்தாலோசித்தபடி, காரினைச் செலுத்த, “அப்பாக்கிட்ட சொல்லிடலாம் தம்பி.. அதுமட்டும் தான் சரின்னு படுத்து..” என,

“இல்ல காதர்ண்ணா.. அப்பா எதுவேணா தாங்கிப்பார்.. ஆனா நானோ மிதுனோ ஏதாவது ஒரு பிரச்னைல சிக்குறோம்.. இல்லை எங்கனால ஒரு பிரச்னை அப்படின்னா கண்டிப்பா அவர் அதை அக்சப்ட் பண்ணவே மாட்டார்.. பெட்டர் மிதுன்கிட்ட நானே பேசுறேன்..

இதுல வேற உள்நோக்கம் எதுவுமில்லைன்னா கண்டிப்பா அவன் ஆமா உன்னை மானிட்டர் பண்ணேன் சொல்வான்.. இல்லையோ பார்த்துக்கலாம்.. நாகா தர்மா வரவும் கட்சி ஆபிஸ் அனுப்பிடுங்க.. தொகுதில கோவில் திருவிழா நாளைக்கு இருந்து.. அந்த வேலை பார்க்கச் சொல்லுங்க.. நான் நேரம் கிடைக்கிறப்போ வந்து பார்த்துக்கிறேன்..” என்றவன் வழியில் அவரை இறக்கிவிடும் சென்றுவிட்டான்.

‘மிதுன்… என்னை கண்காணிக்க ஆள் வைத்தானா??!!!’

இதில் அவனுக்கென்ன இருந்திடப் போகிறது..

பாதுகாப்பு வளையங்கள் வைப்பது சகஜம்தான்.. ஆனால் அதையும் தாண்டி.. என்று தீபன் மனம் யோசிக்க, ‘மிதுன்… சேட்… ம்ம்.. இப்போவரைக்கும் இவங்களுக்குள்ள ஒரு நல்ல ரிலேஷன்ஷிப் தான்.. பட் சேட் ஏன் என்னை மட்டும் எதிரியா பார்க்கணும்… ஷர்மா வச்சு என்னை மட்டும் ஏன் சிக்க வைக்கணும்..’ என்று யோசிக்க, மனது மீண்டும் மிதுன் என்ற புள்ளியில் வந்து நின்றது..

அரசியலில் அண்ணன் தம்பி எல்லாம் இல்லை.. பதவி என்ற ஒன்றில் அனைவரும் பகையாளிகளே. இது எப்போதுமே சக்ரவர்த்தி சொல்லிக்கொண்டே இருப்பார்..

‘அதுப்போல நீங்க இருக்கக் கூடாதுடா..’ என்பதுதான் அவரின் அறிவுரை..

தெரிந்தோ தெரியாமலோ இந்த வாக்கியங்கள் இருவரின் மனதிலும் பதிந்து போயிருந்தது.. மிதுன் என்றோ அதனை செயலில் காட்ட ஆரம்பித்துவிட்டான். தீபனுக்கு இப்போதுதான் அந்த வாக்கியங்களின் உள்ளர்த்தத்தை உற்றுப் பார்க்கத் தொடங்கிறான்..

Advertisement