Advertisement

ஆர்த்தி வீட்டினில் இல்லை, பல்ராம் வெளியிட சொன்ன ஆதாரங்களும் இப்போது அந்த நபரிடம் இல்லை என்றதும் சேட்டிற்கு பயம் வந்துவிட்டது. தீபன் ஏதும் செய்துவிட்டானா இல்லை இந்த ஆர்த்தியே எதுவும் செய்கிறேன் என்று சொதப்பி இருக்கிறாளா என்று புரியவில்லை.

ஆர்த்தி பார்க்க சாதுபோல் இருப்பவள் தான். ஆனால் நிஜத்தில் அப்படியா என்றெல்லாம் சொல்லிடவே முடியாது. பல்ராம் சேட்டின் உடன்பிறந்த தங்கையின் மகள் ஆர்த்தி. சிறுவயதில் இருந்து வளர்த்த பாசம் அவருக்கு நிறைய அவள்மீது.

தீபனை விரும்புவது தெரிந்ததும் வேண்டாம் என்றார் தான்..

ஆனால் மிதுனோ ‘நான்  பார்த்துக்கிறேன்.. எங்கேஜ்மென்ட் கூட நடக்காது.. தீப்ஸ் நடக்க விடமாட்டான்.. அப்படி ஏதாவது இஸ்யு ஆனாதான் ஆர்த்தியும் அவனைவிட்டு தள்ளி நிப்பா..’ என்று சேட்டிடம் ஒன்று சொல்லி,

ஆர்த்தியிடம் வேறு கதை சொல்லி, இத்தனை தூரம் தீபனின் நிம்மதியை கெடுத்தது.

ஆர்த்தி தீபன் இருவருக்கும் இடையில் எவ்வித உறவும் இல்லை என்று அனைவர்க்கும் தெரியவும், மிகவும் நிம்மதியடைந்தவர் சேட் மட்டுமே.

ஆனால் இப்போதோ.. அவள் எங்கே என்ற கேள்விக்கு யாரிடமும் பதிலே இல்லை.  இயன்ற வரையில், அவருக்கு தெரிந்த அனைத்து வழிகளிலும் விசாரித்துப் பார்க்க, ஆர்த்தி கடைசியாய் சந்தித்தது தீபனை என்ற செய்தி மட்டுமே எட்டியது.

அதிலும் அவளின் காரினை, சாலையோரத்தில் கண்டுபிடிக்க, ‘கடத்திவிட்டானோ.. இல்லை வேறெதுவுமோ..’ என்று தோன்ற, தீபனும் ஊரில் இல்லை செய்தி வர மனிதர் மிக மிக நொந்துபோனார்.

அதிலும் ஆர்த்தியின் அம்மாவோ “உங்களோட பிரச்சனைகள்ல இப்போ என் பொண்ணு காணோம்..” என்று அழ,

வேறு வழி தெரியாது மிதுனைக் காணச் சென்றார்.

“சேட்.. நான் கட்சி மீட்டிங்க்ல இருக்கேன்.. ரூம்ல வெய்ட் பண்ணுங்க..” என்று மிதுன் சொல்லியும் ஒரு மணி நேரத்திற்கு மேலானது..

அவன் எப்போதடா வருவான் என்றிருக்க, பொருத்து பொருத்து பார்த்தவர், திரும்ப அவனுக்கு அழைக்க,

“ம்ம்ச் இருங்க வர்றேன்..” என்றவன் அடுத்த அரைமணி நேரம் கழித்தே வந்தான்.             

மிதுன் முன் பல்ராம் சேட் அமர்ந்திருக்க, அவரின் முகத்தினில் அப்பட்டமாய் ஒரு பயம்.. மிதுன் சொன்னதை எல்லாம் செய்தார் தான். ஆனால் இப்போது தீபன் அவன் சொல்லாத ஒன்றை செய்திட பயந்துபோய் மிதுனை காண வந்திருந்தார். வேறு வழியும் தெரியவில்லை வருக்கு.

“இப்போ ஏன் இவ்வளோ டென்சன்…??!!”

“நம்ம மீடியாக்கு சொல்ல இருந்தது எப்படி பேட்டா தீபனுக்கு தெரிஞ்சது??” என்று சேட் பதில் கேள்வி கேட்க,

“ம்ம்ச் அதை நான் உங்கக்கிட்ட கேட்கணும்.. சொல்லப்போனா இப்போ அவன் பண்ணதை நான் செஞ்சிருக்கணும்.. ஷர்மாவை உங்க கைல கொடுத்து இத்தனை நாள் ஆச்சு.. என்ன யூஸ்.. எதுவுமே இல்லை.. அங்க அவன் ஒவ்வொரு ஸ்டெப்பா முன்னாடி போயிட்டே இருக்கான்..” என்று மிதுனும் கத்த,

“பேட்டா.. எல்லாத்தையும் விட ஆர்த்தி எங்க வீட்டுப்பொண்ணு…” என்றார் இறங்கிய குரலில்.

ஆனால் மிதுனோ இரக்கமே இல்லாது “அப்போ தீபன் மட்டும்  யாரு.. என்னோட ஓன் ப்ரதர் தானே.. சேட் என்ன நீங்க இப்படியாகிட்டீங்க..” என்றான் நக்கல் குரலில்..

“பேட்டா..!!”

“அப்போவே சொன்னேன்தானே ஆர்த்தியை ஒரு ஒன் மன்த் வேற எங்கயாவது அனுப்புங்கன்னு.. இப்போ காணோம்னு வந்து என்கிட்டே சொன்னா வாட் ஐ டூ??” என்று மிதுன் கத்த,

பதிலுக்கு சேட்டிற்கும் கோபம் வந்துவிட்டது.

“இதெல்லாம் எதுவும் சரியேயில்லை பேட்டா… சக்ரவர்த்திக்கிட்டே சொன்னா என்னாகும் தெரியும்தான..” என்று அவரும் குரலை உயர்த்த,

“ஓ… சொல்லுங்க..” என்று கத்தியவன், பின் அவனே பொறுமையை இழுத்துப் பிடித்து,  

“சேட் நாளைக்கு வரைக்கும் வெய்ட் பண்ணலாம்.. அப்படி இல்லையா.. லீகலா தீபன் மேல கம்ப்ளைன்ட் கொடுங்க எங்க பொண்ண கிட்னாப் பண்ணிட்டான்னு..

சேம் டைம், ஷர்மாவ வெளிய விடுங்க.. கைல இருக்க எந்த எவிடன்ஸ்ம் வேண்டாம்.. ஷர்மா அண்ட் ஆர்த்தி.. இவங்க ரெண்டு பேரு விசயமும் போதும் தீபனை ஒண்ணுமில்லாம செய்றதுக்கு.. ஷர்மா ஓட ரெண்டு வொய்ப்சும் எங்க இருக்காங்கன்னு இப்போ பாருங்க.. நமக்கு யூஸ் ஆகும்..” என்று ஒரு திட்டம் தீட்டினான். 

ஆர்த்தியின் பெயரை வெளியில் விடுவதா என்று சேட் யோசிக்க,

“நம்ம எஸ்கேப் ஆகணும்னா இதுமட்டும் தான் இப்போ இருக்க ஒரே வழி.. இல்லை தீப்ஸ் நம்மளை உண்டு இல்லைன்னு செஞ்சிடுவான்..” என்று மிதுன் பயம் காட்ட,

சேட்டிற்கு அண்ணன் தம்பி இருவரிடமும் இப்படி மாட்டிகொண்டோமே என்று இருந்தது.

இப்போது வேறு வழியும் இல்லைதானே…!! மிதுன் சொல்வதை செய்வதை தவிர..

சம்மதம் என்று சொல்லாது நொந்த மனதோடு எழுந்து செல்ல, மிதுனுக்கு எப்படியாவது இவ்விசயத்தில் தீபனை சிக்க வைத்திட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தான்..

இங்கே மிதுன் இப்படியொரு திட்டம் தீட்டினால், அங்கே தீபனோ “நான் சொல்ற வரைக்கும் நீ இங்கயே இரு ஆர்த்தி.. இது உன்னோட சேப்டிக்காகவும் தான்..” என,

“உன்னோட சேப்டின்னும் சொல்லும் தீப்ஸ்..” என்றாள் ஒரு கசந்த குரலில்..

“ம்ம்ச் என்னை சேப் பண்ணிக்க எனக்குத் தெரியும்.. நீ சொல்ல வேண்டியது இல்லை.. இந்நேரம் நீ இல்லைங்கிறதும், நானுமே அங்க இல்லைங்கிறதும் தெரிஞ்சிருக்கும்.. ஒரு டூ டேஸ் இங்க இரு நீ.. உனக்கு ஹெல்ப்க்கு ஆள் இருக்கு..” என்றவனின் குரல் சிறிது இறங்கியே ஒலித்தது.

ஆர்த்திக்கு அதுதான் விந்தையாய் போனது..

தீபனா இது??!! அவனா இப்படி பொறுமையாய் அவளிடம் நிதானமாய் பேசுகிறான்??!!

அவள் அறிந்த தீபன் சக்ரவர்த்தியின் பார்வை கூட அவள் மீது படியாது..

அப்படியிருக்க, இப்போதோ அவளை அழைத்துக்கொண்டு வந்து இத்தனை தூரத்தில், அதுவும் இப்படியொரு குக்கிராமத்தில் இருக்கச் சொல்ல, அவளால் நம்பிடவே முடியவில்லை..

ஆம்.. தீபன், ஆர்த்தியை அழைத்துக்கொண்டு சென்றது விசாகப்பட்டினத்தில் இருக்கும் சேடிக்காடா என்றொரு கிராமம்.. சென்னை தாண்டியதுமே அவனின் அலைபேசியையும் அமர்த்தி வைத்துவிட்டான். அதனால் தான் காதர் முயன்ற பொழுதுகூட தீபனை தொடர்புகொள்ள முடியவில்லை..

ஆர்த்தி, தீபனையே இமைக்காது பார்க்க, “என்ன ஆர்த்தி..” என்றான்..

“ம்ம் நீயா இதுன்னு பார்த்தேன்..” என்றவள் “இங்க இருக்கிறது பத்தி நோ பிராப்ளம் தீப்ஸ்.. பட்.. இதோட எல்லா பிரச்னையும் முடிஞ்சிட்டா நல்லதுன்னு நினைக்கிறேன்..” என,

“ம்ம்.. லெட் சி..” என்றவன், ஆர்த்தியை தங்க வைக்கப் பட்டிருந்தவரின் வீட்டு பெண்களிடம் தெலுங்கில் பேச, அவர்களோ சரி சரி என்று சொன்னதை தவிர வேறொன்றும் சொல்லிடவில்லை.

தெரிந்த ஆட்கள் தான்.. இருந்தும் ஒரு பெண்ணை வந்து இப்படி தங்க வைத்துப் போவது, அவனுக்கு இதுதான் முதல் முறை.. அப்பெண்களின் கண்களில் சிறு கேலி கூட தெரிந்தது..

ஆர்த்தி என்னவோ அவனுக்கு மிக மிக வேண்டப்பட்டவள் என்கிற கேலி அது..

இப்போது அப்படிதானே.. சொல்லப்போனால் ஆர்த்தி அவனை காப்பாற்றி இருக்கிறாள்.. இல்லையெனில் தீபனை இப்போது எப்படியான அவப்பெயர்கள் சூழ்ந்திருக்கும் என்பது அவனே அறியான்.

மனது இதெல்லாம் நினைக்க நினைக்க, ‘நோ தீப்ஸ்.. இது எதுவும் உன்னை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது…’ என்றெண்ணிக்கொண்டவன்,  

“உனக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் வந்திடும்…. இன்கேஸ் ஏதாவது என்னோட பேசணும்னா இவங்கக்கிட்ட சொல்லு, கால் பண்ணி கொடுப்பாங்க.. இப்போ நான் அங்க போயித்தான் ஆகணும்..” என,

“ம்ம் ஓகே…” என்று ஆர்த்தி புன்னகைத்து கையசைக்க, தீபன் சக்ரவர்த்திக்கு தான் தன்னை எண்ணியே கேவலமாய் இருந்தது..

தான் தப்பிக்க, இதுநாள் வரைக்கும் மதித்துக்கூட தான் பேசாத ஒருத்தியை, இப்படி ஓரிடத்தில் வந்து இருக்கச் சொல்லி, இப்போது மட்டும் அவளோடு முகம் கொடுத்து பேசி “ச்சே.. என்னடா நீ…” என்றுதான் இருந்தது அவனுக்கு..

‘எவ்வளோ செல்பிஷ் நீ தீபன்..’ என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொள்ள,

மனதில் ஒரு துவேசம் பிறந்தது..

அங்கிருந்து கிளம்பியவன், சென்னைக்குள் வரவும் தான் அவனின் அலைபேசியை உயிர்பிக்க, ஏகப்பட்ட தவரப்பட்ட அழைப்பிற்கான மெசேஜ்கள்.

முக்கால்வாசி காதரிடம் இருந்து.. பின் சில பல கட்சி ஆட்களிடம் இருந்து..

முதலில் காதருக்கு அழைத்து என்னவென்று கேட்க “எங்க தம்பி போயிருந்தீங்க…” என்றார் அப்போதும் பதற்றம் குறையாது..

“என்னாச்சு காதர்ண்ணா.??!!”

“இப்போ நீங்க எங்க இருக்கீங்க???” என்று அவர் திரும்பக் கேட்க,

“இங்கதான் இருக்கேன்.. ஏன்??” என்றான்.

“உங்கள உடனே நேரா பாக்கனும்.. நாகாவும் தர்மாவும் வந்திட்டு இருக்காங்க.. ரொம்ப முக்கியம்…” என,

“என்னாச்சு??!!” என்ற தீபனின் முகத்திலும் தீவிரம்..

சேட் வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தான்.. அதற்குள் காதர் இப்படி சொல்ல, “சரி நீங்க அப்படியே ஒரு கார் எடுத்துட்டு வாங்க, ஏரியா சொல்றேன்.. அப்படியே ஜாயின் பண்ணிக்கோங்க..” என்றவன், அவன் சென்றுகொண்டிருந்த பகுதியின் பெயரை சொல்ல,

“சரி தம்பி…” என்று வைத்தார் அவர்..

இந்த ஒரு நாளிலேயே நிறைய நிறைய நடந்திருப்பதாய் இருந்தது தீபனுக்கு..

கண்ணுக்குத் தெரியாதா நிறைய சிறு சிறு விஷயங்கள் இப்போது வெளிவருவதாய் இருக்க, எப்படியாவது சேட்டிடம் இருந்து அந்த ஆதாரங்களையும் ஷர்மாவையும் கைப்பற்றிட வேண்டும் என்ற வேகம் மட்டுமே.

தீபன் இங்க இப்படியொரு வேகத்தினில் சென்றுகொண்டு இருக்க, அனுராகாவோ தூக்கம் வராது ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்.

மருத்துவமனையில் இருக்கையில் நிறைய விசயங்கள் அவளால் சிந்திக்கவும் முடியவில்லை. ஆனால் இப்போது ‘கொஞ்சம் யோசி.. யோசி..’ என்று அவளின் மனம் சொல்ல, ஆரம்பத்தில் இருந்து அனைத்தையும் ஒன்றுவிடாது பொறுமையாகவே சிந்துத்துப் பார்த்தாள்.

அவளுக்கு இவ்வெண்ணத்தை விதைத்தது நீரஜா..

ஆம் அவளே தான்..              

அன்று மாலைதான் அனுராகாவைக் காண நீரஜா வந்திருந்தாள். உடன் தேவ் மற்றும் புனீத்.. மருத்துவமனைக்கு வருகிறேன் என்றவளை அனுதான் வேண்டாம் என்றிருந்தாள். இப்போது அனுராகா வீட்டிற்கு வந்துவிட இவர்கள் எல்லாம் அங்கே வந்திருந்தனர்.

தாராவிற்கு நீரஜா வந்தது ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் தீபனின் நண்பர்கள் வந்தது நெற்றியை சுருங்க வைக்க,

“ஆன்ட்டி நாங்க அனுக்கும் பிரண்ட்ஸ் தான்…” என,

“ம்ம்…” என்றுவிட்டு போனார்.

நீரஜாவோ அப்படியொரு கோபம் அவளுக்கு.. அனுராகாவை திட்டித் தீர்க்க, அவளோ ஒன்றுமே சொல்லாது அமர்ந்திருக்க

“இதெல்லாம் உனக்கு தேவையா அனு??!! பாரு.. கை கால் எல்லா இடத்துலயும் காயம்.. தழும்பு.. உன்னோட ஸ்கின் நீ எப்படி மெய்ண்டைன் பண்ணுவ?? லாஸ்ட்ல உன்னை புரிஞ்சுக்காத ஒருத்தனுக்காக இவ்வளோ நீ பண்ணிக்கனுமா??” என்று கத்த,

தேவ் மற்றும் புனீத் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“ப்ளீஸ் நீரு.. இதுபத்தி நீ எதுவும் பேசாத..” என்று அனு சொல்ல,

“ஏன்??! அப்போ எப்போ பேசறது.. இல்லை உன்னை நீயே இன்னும் எவ்வளோ தூரம் காயப்படுத்திப்ப..” என்று நீரு கேட்க,

“இதெல்லாம் என்ன அனுராகா..” என்றான் புனீத்..

அனுராகா அவனை நிமிர்ந்து பார்த்தவள் “ நீங்க அவனுக்குத் தானே சப்போர்ட் பண்ணுவீங்க..” என,

“ம்ம்ச் அப்படி இருந்தா நாங்க ஏன் இங்க வரப்போறோம்.. எங்களுக்கு வேலையே இல்லையா..” என்று தேவ் சொல்ல,

“ம்ம் என்னைப் பார்க்க வந்ததுக்கு தேங்க்ஸ்..” என்று மிடுக்காகவே அனுராகாவும் சொல்ல,

“இது தான்.. இந்த ஈகோ தான் உங்க ரெண்டு பேருக்குமே.. ரொம்ப பெரிய ஒற்றுமை இந்த விசயத்துல உனக்கும் அவனுக்கும்..” என்றான் புனீத்.

மூவரின் பார்வையும் அதையே சொல்ல, அனுராகாவோ அவர்களை வெறித்துப் பார்க்க,

நீரஜா “லுக் அனு.. உன்னை லவ் பண்ணவேணாம்னு சொல்லலை.. அது உன்னோட இஷ்டம். பட் இப்படி உன்னை நீயே கஷ்டப் படுத்திட்டு.. இதெல்லாம் பாக்குறப்போ தான் எனக்கு கஷ்டமா இருக்கு.. அப்போ உன்னை கஷ்டப்படுத்துற விஷயம் உனக்கு வேண்டாம்னு தான் எனக்கு சொல்லத் தோணுது..” என,

“ம்ம்… எனக்கு எதுவுமே வேணாம்  நீரு…” என்றாள் ஒரு வெற்றுக் குரலில்.

“அப்படியா இதை நாங்க நம்பனுமா??!” என்று புனீத் சொல்ல,

“வேண்டாம் சொல்ற முகத்தைப் பாரு… நாங்க உள்ள வர்றப்போவே, எங்களுக்கு பின்னாடி தீப்ஸ் வர்றான்னா நீ தேடினது எங்களுக்குத் தெரியாதுன்னு நினைச்சியா??!!” என்று தேவ் சரியாய் அவளை கண்டுகொண்டதை சொல்ல,

அனுராகாவிற்கு அமைதியாய் இருப்பது தவிர வேறு வழித் தெரியவில்லை..

எத்தனை நடந்தாலும், அவனை வேண்டாம் போ என்றாலும் கூட தன் மனம் அவனைத் தேடும் உண்மையை அவள் அறிந்துதான் வைத்திருந்தாள்.

‘அவன் உன்னை அவ்வளோ பேசியும்.. திரும்பவும் அவனைத் தானே நீ நினைக்கிற..’ என்ற நினைப்பும் அவளுக்கு சேர்ந்தே வர, தனக்குள்ளே அவளுக்கு நிறைய போராட்டம் தொடங்கிட தொடங்கியது.

அவளின் முகத்தினைப் பார்த்துக்கொண்டிருந்த நீரஜாவோ “லுக் அனு.. நிதானமா யோசி.. நீ என்ன தப்பு பண்ண.. தீபன் என்ன தப்பு பண்ணான்.. உங்களோட அண்டர்ஸ்டாண்டிங் லெவல் என்ன.. எல்லாம்.. எல்லாமே யோசி.. ஆரம்பத்துல இருந்து பொறுமையா நிதானமா யோசி…” என,

புனீத் “உனக்கு எப்படி ஆபிஸ் டென்சன் அது இதுன்னு இருக்கோ, அதைவிட பல மடங்கு அவனுக்கு இருக்கு அனு.. உனக்கு சொல்லத் தேவையில்ல, அவனை சுத்தி இப்போ என்ன நடக்குதுன்னு அவனுக்கே தெரியலை.. போதாத குறைக்கு இந்த ஆர்த்தி இப்படி சொதப்பி வைப்பான்னு நாங்க யாருமே நினைக்கலை..” என்று மேலும் தீபனின் நிலையை சொல்ல,

தேவ்வோ “ஒன் டைம் அவனோட இடத்துல இருந்தும் யோசிச்சுப் பாரு..” என்றான்..

மூவரும் அவளைச் சரி செய்வதற்காக பேச, எது எப்படியோ அது அனுராகாவின் சிந்தனையை சரியானதொரு வழியில் திசை திருப்பிவிட்டது.

விழைவு, அத்தனை சிந்தித்தவளுக்கு, நடந்த அத்தனை குழப்பத்திலும் மிதுனின் பங்கும் இருப்பதாய் புரிந்தது.

அதாவது அன்று பூஜையில் நடந்த விசயங்களிலும், பார்ட்டியில் நடந்த விசயங்களிலும் மிதுனின் செயல்கள் நிறைய இருப்பதாய் உணர்ந்தாள் அனுராகா…

தீபன் செய்தது தவறுதான்.. அவளால் இப்பொதும் அதை ஏற்றுகொள்ள முடியாதுதான்.. ஆனால் அவனை அப்படி செய்திட தூண்டியது.. மற்ற நிகழ்வுகள் தானே…

‘மிதுன்….. நீ என்னவோ ப்ளே பண்ணிருக்க… தீப்ஸ் பத்தி உனக்கு தெரிஞ்சிருக்கலாம்.. பட் இந்த அனு பத்தி உனக்குத் தெரியாது தானே…’ என்றெண்ணியவள்,

“வில் மீட் யூ சூன்…” என்றும் சொல்லிக்கொண்டாள்.

அவன் – தட்டிவிடுவதும் நீயே..

அவள் – எட்டிப்பிடிப்பதும் நீயே..

காதல் – ம்ம்ஹும் ரைமிங்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை..          

Advertisement