Advertisement

இருந்தாலும் தீபனிடம் ஒருவார்த்தை கேட்டிடவேண்டும் என்று உஷா நினைத்திருக்க, அதற்கான சந்தர்பங்களை மிதுன் கொடுத்திடவே இல்லை.. தீபனும் இரண்டு நாட்களாய் வீடு வரவும் இல்லை.

மிதுன் ஒரேதாய் சொல்லிவிட்டான் “ம்மா.. தீப்ஸ் இத்தனை நாள் சொல்லாம இப்போ ஏன் அப்படி சொல்லணும்.. ஏன்னா ஆர்த்தி இப்போதானே வந்திருக்கா.. கொஞ்சம் யோசிங்க..” என,

“அதுக்கில்லடா.. இருந்தாலும் அவன்கிட்டவும் கேட்டு உறுதிப் படுத்திட்டா, அப்பா வரவும் எல்லாரையும் வச்சு ஒரேதா பேசிடலாம் இல்லையா..” என்று உஷாவும் சொல்ல,

“எதுவா இருந்தாலும் இப்போ ப்ரீயா விடுங்க.. நீங்கவேணா பாருங்க பூஜை அன்னிக்கு தீபனே ஆர்த்திய கூட்டிட்டு உங்க முன்னாடி வந்து நிப்பான்..” என,

“அப்படி நடந்தா சந்தோசம் தான்..” என்றார் உஷாவும்.  

இங்கே இப்படியிருக்க, அங்கே அனுராகாவின் வீட்டிலோ,  லோகேஸ்வரன் வந்தது தாராவிற்கு ஆச்சர்யமாய் இருந்தது. தாரா அப்போது வீட்டினிலும் இல்லை.. ரூமா தான் அழைத்து “மேம் சார் வந்திருக்கார்.. உங்களுக்குச் சொல்லச் சொன்னார்..” என,

வேறொரு மீட்டிங் சென்றிருந்த தாராவிற்கோ கொஞ்சம் வியப்பாய் தான் இருந்தது. முதல் நாள் வரைக்குமே அவர் வருகிறேன் என்று சொல்லவேயில்லை. உஷா, மிதுன் அனைவரும் பூஜைக்கு அழைத்திருப்பது பற்றி தாரா சொல்கையில்  “பார்க்கலாம்..” என்றுமட்டுமே சொல்லிக்கொண்டு இருந்தார்.

“அப்போ நான் மட்டும் போய்ட்டு வந்திடுறேன்…” என்று தாரா சொல்ல,

“ஏன் அனு இருக்காதானே.. அவளும் வரட்டுமே..” என்றவர் “நான் பார்த்துட்டு சொல்றேன்..” என்றிட, இதோ இப்போது வந்து நிற்பார் என்று நினைக்கவேயில்லை.

வீடு வந்த பிறகோ,  “லோகேஷ்..!!!” என்று அப்போதும் வியப்பாகவே பார்க்க,

“ஹவ் இஸ் மை சர்ப்ரைஸ்..” என்று அவரும் கேட்கும்போதே அனுராகாவும் அங்கே வந்துவிட்டாள்.

“டாட்…!!!” என்று ஆச்சர்யமாய் பார்க்க “என்னடா நீயும் எதிர்பார்க்கலையா??!” என்றார் சிரித்தபடி.

“நோ..!!” என்று அம்மா மகள் இருவரும் தலையை ஆட்ட,

“நாளைக்கு எவ்வளோ இம்பார்டன்ட் டே.. நான் வராம இருப்பேனா..” என, இப்போது அம்மா மகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,

தாராவின் மனதில் என்ன தோன்றியதோ, ஆனால் அனுராகாவிற்கு அப்பாவிடமும் தங்களின் காதலை சொல்லிடவேண்டும் என்று தோன்ற, நாளைக்கு பூஜையில் தீபன் ஒருவேளை இதுபற்றி பேசினால் வேறுவிதமான பேச்சுக்கள் வந்துவிடக் கூடாது என்றும் எண்ணினாள்.    

ஆக  “டாட்.. நான் உங்களோட கொஞ்சம் பேசணும்..” என,

“பேசலாமே.. பட்.. இப்போ அப்பா செம டயர்ட்.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்..” என்றார் தாராவை ஒருபார்வை பார்த்துவிட்டு.

தாராவிற்கு புரிந்துபோனது, மகளோடு இப்போது எது பற்றியும் பேசிட இவருக்கு இஷ்டமில்லை என்று. மகளும் என்ன பேசிடப் போகிறாள் என்பதும் தெரியும். ஏற்கனவே உஷா, மிதுனுக்காக அனுராகவை கேட்டதும் தெரியும்..

இப்படி இத்தனை சிக்கல்கள் இருக்க, அனுராகா எப்போது எப்படி என்ன முடிவுகள் எடுப்பாள் என்பது யாருக்கும் தெரியாது.

இதில் நாளைக்கு அவர்கள் வீட்டிற்கு செல்வது வேறு…!!

தாராவிற்கு நாளை என்ன நடக்கும் என்பதை நினைத்தாலே மனது ஒருவித பதற்றம் கொண்டது நிஜம்..

அனுராகாவோ நின்று நிதானமாய் அப்பாவை ஒரு பார்வை பார்த்தவள் “ஓகே… யுவர் விஷ்…” என்றுவிட்டு செல்ல, அவள் மனதினுள்ளே என்ன நினைத்து இப்படி சொல்கிறாளோ என்று இருந்தது தாராவிற்கு.

மகள் சென்றதுமே, “என்ன லோகேஷ் இது.. அவ பேசணும் சொல்றா.. நீங்க இப்படி சொல்றீங்க??” என,

“ஷ்..!! தாரா.. அனு அகைன் பிரஷாந்த் விஷயம் தான் பேசணும்னு வருவா…” என்றவர், அந்த பார்டிக்கான ஏற்பாடுகள் பிரஷாந்த் செய்வது பற்றியும் இதுபற்றி ஏற்கனவே அனுராகா தன்னோடு பேசியது பற்றியும் சொல்ல,

“ஒருவேளை வேற எதுவா கூட இருக்கலாம் தானே..” என்றார் தாரா.

ஆனாலும் ‘இது வேறா…’ என்று இருந்தது.

நாளை, சக்ரவர்த்தி இல்லத்து பூஜை, அதற்கு மறுநாள் AR குழுமத்தின் வருடாந்திர வெற்றிகளை கொண்டாடும் விதமாய் பார்ட்டி.

“வேற என்ன??!!” என்றவரோ “தாரா.. நாளைக்கு அனுவோட லைப்ல இம்பார்ட்டன்ட் டே.. அவளுக்காக.. அவளோட சந்தோசத்துக்காக நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்… கண்டிப்பா இது அவளுக்கு தப்பா போகாது…” என, தாரா யூகித்துவிட்டார், லோகேஸ்வரன் என்ன முடிவு செய்திருப்பார் என்று..

“லோகேஷ்…!!!” என்று அதிர்ந்து விளிக்க,

“எஸ்… மிதுன் இஸ் எ ரைட் சாய்ஸ் பார் அனு…” என,

“பட். அனு மனசுல…” எனும்போதே,

“லுக் தாரா.. அனுவோட ஏஜ் எல்லாம் தாண்டித்தான் வந்திருக்கோம் நம்ம.. மனசுல ஆயிரம் தோணும்.. அதுக்காக..??!! சக்ரவர்த்திக்கு அடுத்து மிதுன் தான் வரப்போறான்.. ஹி இஸ் வெறி டீசன்ட் அண்ட் இன்டெலிஜென்ட்.. அண்ட் லாஸ்ட் வீக் நம்ம மும்பை பிரான்ச்ல நடந்த ரெய்ட் அப்போ ஹி ஒன்லி ஹெல்ப்ட் மீ…” என,

“அதுக்காக…” என்றார் கோபமாய் தாரா..

இத்தனை யோசித்த லோகேஸ்வரனுக்கு, அந்த ரெய்ட் ஏற்பாடு செய்ததும், அரசியலில் சக்ரவர்த்திக்கு அடுத்து மிதுன் தான் என்ற செய்தியைப் பரப்பியதும்,  மிதுன்தான் என்று தெரியாமல் போனது தான் விந்தை.

நேரம் அப்படி இருக்கையில் யாரை நாம் என்ன சொல்லிட முடியும்.

அனுராகாவிற்கும் இந்த ரெய்ட் விஷயம் தெரியும், ஆனால் அதில் மிதுன் இருக்கிறான் என்பது தெரியாது. அப்பா பார்த்துக்கொண்டார் அந்த அளவில் இருந்துவிட,  இப்போது தாராவிற்கோ மகளை இந்த குழப்பங்கள் தீரும்வரை எங்காவது அனுப்பிவிடுவோமா என்று கூட தோன்றிவிட்டது.

“சில் தாரா.. அனு இன்னமும் அவ்வளோ மெச்சூர்ட் ஆகலை.. ஆபிஸ் ஹேண்டில் பண்றது போல இல்லை லைப் ஹேண்டில் பண்றது வேற.. அவளுக்கு லைப் பத்தி என்ன தெரியும்??!!” என,

“இல்ல லோகேஷ்.. இதுல நம்ம அவசரப் படவே கூடாது.. அவ தீபன் சக்ரவர்த்தியை லவ் பண்றா..” என்று தாரா சொல்லியே விட,

“ஐ க்னோ தட்..” என்றார் லோகேஸ்வரன் அசராது.

மற்றது எல்லாம் விடுத்து, இது தாராவிற்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தம்பியை விரும்பும் பெண்ணை, அது தெரிந்தே அண்ணனுக்கு பேசி முடிப்பதா??!!

ஒரே வீட்டில்.. ஒரே குடும்பத்தில்.. இது எப்படி சாத்தியம்??!!

தாரா திகைத்துப் பார்க்க, “தாரா.. பிலீவ் மீ.. நான் அனுக்கு தப்பா எதுவும் பண்ணிடுவேனா??!! ஷி இஸ் ஒன் அண்ட் ஒன்லி தத்தர் பார் அஸ்.. தீபனை நான் தப்புன்னு சொல்லவே இல்லை.. பட்… தீபன் அன்ட் மிதுன் கம்பேர் பண்ணிப் பாரு.. மிதுன் தான் அனுவிற்கு பெஸ்ட் சாய்ஸ்…” என, தாரா அப்படியே அமர்ந்துவிட்டார். 

தாராவை பொருத்தமட்டில், தீபனும் மகளுக்கு பொருத்தமானவன் இல்லை என்ற எண்ணம் உண்டு. ஆனால் அவள் மனதில் அவன் இருக்க, அப்படியிருக்கையில் அவனின் அண்ணனிற்கு பேசுவதா??!!

இது எத்தனை பெரும் அபத்தம்.. எத்தனை அனர்த்தங்கள் விளைவிக்கும்…  சொல்வதறியாது அப்படியே ஸ்தம்பித்துவிட,

“நீ எதுவும் திங் பண்ணாத தாரா.. ஐ வில் ஹேண்டில் திஸ்.. அண்ட் அனு பத்தி நீ வொர்ரி பண்ணாத.. சொல்ற விதத்துல சொன்னா புரிஞ்சுப்பா…” என,

“எனக்கு இது எதுவுமே சரின்னு தோணலை லோகேஷ்…” என்றார் தாரா தெளியாத முகத்தோடு..

“எல்லாமே சரியாகும்.. நான் சரி பண்ணுவேன்….” என்ற லோகேஸ்வரனின் உறுதியில், நாளை அனுராகாவின் மனதை நோகடிக்கும் சம்பவங்கள் என்னென்ன நடக்கும் என்பதனை நினைத்தும் பார்க்க முடியாத நிலையில் இருந்தார் தாரா..

அனுராகா, அவளின் அறையில் இருக்க, லோகேஸ்வரன் தாரா இருவருக்கும் பேச்சு நின்றுபோனது.. ஒரு பெரும் மௌனம் வந்து சூழ்ந்துகொள்ள, அனுராகாவிற்கோ மனதில் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு பரபரப்பு..

ஆகமொத்தம் அவளுக்கு என்னவோ நாளை நடந்திட போகிறது என்று தோன்ற, உடனே தீபனுக்கு அழைத்து விட்டாள்.

“தீப்ஸ்.. எனக்கு என்னவோ பயமா இருக்கு..” என,

“ஏன்??!!!” என்றான் ஒற்றை கேள்வியாய்.

“டோனோ… பட்.. அப்பா வந்திருக்கார்.. திடீர்னு.. நான் அவரோட பேசணும் சொன்னதுக்கு ஹி டிட்ன்ட் கிவ் மீ எ சான்ஸ்..” என,

“அதுக்கு ஏன் நீ பயந்துக்கணும் ராகா..” என்றான் தன்மையாகவே.

அப்போதுதான் வீட்டிற்கு வந்திருந்தான் தீபன். சக்ரவர்த்தியும் வந்திருக்க, அவரோடு வந்திருந்த ஆட்கள் எல்லாம் அப்போது தான் கிளம்பியிருந்தனர். அப்பாவும் பிள்ளைகளும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கையில் தான் தீபனுக்கு அனுராகா அழைத்தது.

அவளிடம் இருந்து அழைப்பு, அதுவும் இந்த நேரத்தில் என்று இருக்க, அலைபேசியை எடுத்துக்கொண்டு நகர்ந்துவிட, மிதுன் கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.   

உஷாவோ “போதும் எல்லாரும் பேசியது.. மிதுன் நீ போய் தூங்கு.. நாளைக்கு சீக்கிரம் எழணும்…” என,

“ஓகே ம்மா..” என்று எழுந்து சென்றுவிட, சக்ரவர்த்தியோ “என்ன உஷா உனக்கு என்னோட என்ன பேசணும்???” என்று சரியாய் விசயத்திற்கு வந்தார்.

“நிறைய பேசணும்.. அரசியல் எல்லாம் கொஞ்சம் தள்ளி வைங்க.. நம்ம பசங்க லைப் பத்தி பேசணும்..” என,

“அதுதான் நீயே ஒரு முடிவுக்கு வந்துட்டியே..” என்றார் அவரும்.

“ஏன் அதுல உங்களுக்கு எதுவும்  அதிருப்தி இருக்கா??!!” என்ற உஷாவிற்கு சக்ரவர்த்தி இவ்விசயத்தில் தன் கருத்திற்கு மாற்று கருத்து சொல்லிட மாட்டார் என்பது உறுதி தான்.

இருந்தாலும் கேட்டிட வேண்டுமே..!!

சக்ரவர்த்தியோ உஷாவைப் பார்த்து சிரித்தவர் “ஹோம் மினிஸ்டர் நீதான்.. எப்பவும் இந்த வீட்ல நீ எடுக்கிற முடிவு தப்பானதாவே இல்லை.. பட் இதுல பசங்க என்ன சொல்றாங்கன்னு தான் ரொம்ப முக்கியம்..” என,

“அதெல்லாம் அவனுங்களுக்கு சம்மதம் தான்..” என்று உஷாவும் சந்தோசமாய் சொல்ல,

“ம்ம் எல்லா பதவியையும் விட, இந்த மாமியார் பதவிதான் பவர்புல்..” என்று சொல்லி மேலும் அவர் சிரிக்க,

“யப்பா எப்போ பாரு.. பதவி.. தொகுதி.. அது இதுன்னு…” என, இருவருக்குமான பேச்சு பிள்ளைகளின் வாழ்வு பற்றி பேசி நீண்டுகொண்டு போனது.

தீபனோ எதுவாக இருந்தாலும் தான் பார்த்துகொள்வதாய்  சொல்லி, அனுராகாவை சமாளித்து, பின் பெற்றவர்களிடம் வந்தவன், அப்பா உறங்கச் சென்றது கண்டு, அம்மாவிடம் மட்டும்

“ம்மா நாளைக்கு எதுவா இருந்தாலும் என்னைக் கேட்காம எதுவும் செய்ய கூடாது…” என,

“கண்டிப்பா டா.. நீயா எந்த பொண்ண கூட்டிட்டு வந்து என் முன்னாடி நிக்கிறயோ அந்த பொண்ணுதான் என் மருமக.. ஓகே வா…” என,

“அம்மான்னா அம்மாதான்..” என்றுவிட்டு சந்தோசமாகவே போனான் தீபன் சக்ரவர்த்தி.

மிதுன் அவனின் அறையில் இருந்தவனுக்கோ உறக்கம் என்ற ஒன்று வருவேனா என்றது. எங்கே எப்படி எத்தனை பேர் வைத்துத் தேடினாலும் ஷர்மா இருக்குமிடம் மட்டும் கண்டுபிடிக்கவே முடியாது போனது. அந்த கோபம் எரிச்சல் கடுப்பு எல்லாம் தீபன் மீது தான் திரும்பியது. இது போதாது என்று அவனுக்கும் அனுராகாவிற்குமான பழக்கம் தொகுதி ஆட்களுக்குத் தெரிந்துபோனது இவனுக்குத் தெரிய வர,

“ச்சேய்…!!!!”  அவன் முன்னே இருந்த மேஜையை எட்டி உதைத்தாதன்.

“தம்பிக்கு பொண்ணு வந்திடுச்சு.. உங்களுக்கு எப்போன்னு என்கிட்டயே வந்து கேட்கிறான்… என்ன தைரியம்…” என்று பல்லைக் கடித்து முணுமுணுத்தவன்,

“காட்றேன் டா.. அந்த பொண்ணு யாருக்குன்னு காட்டுறேன்…” என்றும் சொல்லிக்கொள்ள, மறுநாள் விடிந்தால் பூஜை.

ஆர்த்தி விஷயம் தவிர வேறெதுவும் அவன் நினைத்ததுபோல் நடந்திடவில்லை. ஆனால் அவனே எதிர்பாராத விதமாய், அவனுக்குச் சாதகமாய் ஒன்றும் நடந்தேறியது..

உறக்கம் வராது அறைக்குள்ளே நடந்துகொண்டு இருக்க, எப்படியாவது நாளை தீபனை வீழ்த்திடவேண்டும் என்ற வெறி மட்டும் அவனுக்குத் தீரவேயில்லை..

‘நாளைக்கு நீ அப்பா முன்னாடி தலைகுனிஞ்சு நிக்கனும்டா தீபா… என்கிட்டவே சொல்றார், தீபன் இல்லைனா எதுவும் ஒழுங்கா நடக்காதுன்னு.. அப்போ நான்??!! நான் எதுவுமே செய்யலையா??!! நிழல் போல அவர்கூடவே இருக்கேனே.. அது அவருக்குத் தெரியலையா??!! ’ என்று அவனுள்ளம் கொதிக்க, அவனாலேயே அவ கொதிப்பினை தாங்கிட முடியவில்லை போல..

வேகமாய் அறைவிட்டு வெளியே வந்தவன், தோட்டம் நோக்கிச் செல்ல, காற்றில் சரசரக்கும் இலை தழைகளின் ஓசை தவிர வேறெதுவும் இல்லை..

தோட்டத்தில் இருக்கும் நடைபாதையில் மிதுன் நடந்துகொண்டு இருக்க, சிறிது நேரத்தில் தீபன் அங்கே வருவது தெரிந்தது.

‘இவன் எங்கே இங்க..’ என்று பார்க்க, தீபனோ இவன் இருக்கும் பக்கம் வராது, தோட்டத்தின் மறுபுறம் நடந்துசெல்ல ‘அந்தபக்கம் எங்க போறான்..’ என்று மிதுனின் பார்வை கூர்மையுற, தீபனோ சுற்றிலும் பார்த்தபடி நடந்துச் சென்றான்.

அதாவது யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்று ஒருவித ஆராய்ச்சி பார்வை பார்த்து செல்ல “என்னவோ இருக்கு..” என்று மிதுன் மனதில் தோன்ற, சத்தமே வராது தம்பியை பின்தொடர, ஒரு ஐந்து நிமிட நடைக்குப் பிறகு, தீபன் ஓரிடத்தில் நின்று மீண்டும் திரும்பித் திரும்பிப் பார்க்க, மிதுன் ஓர் மரத்தின் பின்னே ஒளிந்துகொள்ள,

தீபன் யாருக்கோ அலைபேசியில் அழைத்து “வந்துட்டேன்..” என, சற்று தூரத்தில் மறைவில் இருந்து யாரோ ஒருவன் வருவது நன்றாய் தெரியாது மிதுனுக்கு..

மிதுன் ஆடவும் இல்லை.. அசையவும் இல்லை.. அப்படியே நிற்க  எதிரே வந்தவன் யாரோ புதியவனாய் இருக்க, அவர்கள் பேசுவது சரியாய் கேட்கவில்லை என்றாலும், தீபனின் உடல் அசைவுகளைப் பார்த்து எதுவோ மிக மிக முக்கியமான விஷயம் என்று புரிய,

இப்போதைக்கு தீபனுக்கு முக்கியமான விஷயம் என்றால் அது மூன்று தான். அனுராகா, ஷர்மா மற்றும் வரப்போகும் தேர்தல்..

மிதுனுக்கு மனதில் சட்டென்று இது ஷர்மா பற்றியது என்று பொறிதட்ட, ‘அப்போ.. இதோ இவனை பாலோ பண்ணா ஷர்மா இருக்கிற இடம் தெரிஞ்சிடும்..’ என்று சடுதியில் யூகித்துவிட்டான்..

ஒரு பத்து நிமிடங்கள் தீபன் அந்த ஆளோடு நின்று பேசியிருப்பான். அந்த பத்து நிமிடத்தில் மிதுன் என்ன செய்யவேண்டுமோ அதை அவனின் ஆட்களுக்கு மெசேஜ் மூலம் செய்தி அனுப்பி, அனைத்தும் ஏற்பாடு செய்துவிட்டான்..

அந்த புதியவன், இங்கிருந்து வெளியேறிய அடுத்த நொடி, மிதுனின் ஆட்கள் அவனைத் தொடரத் தொடங்க, அன்றைய விடியல் தொடங்கும் முன்னமே ஷர்மா மிதுன் ஆட்களின் கையில் கிடைத்திட, எக்காரணம் கொண்டும் இவ்விசயம் தீபனுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதிலும் திண்ணமாய் இருந்தான் மிதுன்..

பூஜை தொடங்கிவிட, சக்ரவர்த்தியின் இல்லமே தேவலோகம் போல் காட்சியளிக்க, அழைப்பு விடுத்திருந்த விருந்தினர்கள் ஒவ்வொருவராய் வரத் தொடங்க, அனுராகாவும், ஆர்த்தியும் அவரவர் பெற்றோரோடு வர, மிதுனோ மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான்.

இன்னும் சிறிது நேரமே…

எல்லாம்.. எல்லாமே அவன் நினைத்தது போல் நடந்துவிடும்….              

Advertisement