Advertisement

அன்று தாரா வருவதாய் இருக்க, அனுராகா அம்மாவிடம் தீபனுக்கும் அவளுக்குமான காதல் பற்றி பேசிடலாம் என்றிருக்க, அதனை தீபனிடம் சொல்லவே இத்தனை அழைப்பு. கோபங்கள் இருந்தாலும் அதை எதில் காட்ட வேண்டும் என்று அவளுக்கு நன்கு தெரியும் என்பதால்,

மற்றதை விடுத்தது அவனுக்கு அழைத்து அழைத்துப் பார்த்தாள். அவனோ எடுப்பேனா என்க, இதுபோக அவளுக்கு அலுவலகத்திலும் வேலைகள் நிறைய நிறைய.. இன்னும் நான்கு நாட்களில் இந்திய அளவிலான அவர்கள் குழுமத்தின் உறுப்பினர்கள் கூடும் விழா..

அதுதான் அந்த பிரஷாந்த் சொன்னானே… பார்ட்டி என்று..

அதுவும் அவன் தலைமையில் பொறுப்புகள் இருக்க, அவனைத் தவிர்ப்பதே அனுராகாவிற்கு பெரும் தலைவலியாய் இருந்தது. இரண்டு நாட்களும் பிரஷாந்தும் இங்கே அலுவலகத்திற்கு வந்துகொண்டே இருக்க, அனுராகாவிற்கு பொறுமை என்பது குறைந்துகொண்டே வந்தது.

லோகேஸ்வரனிடம் கேட்டேவிட்டாள் “இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சு தான் செய்றீங்களா..” என்று.

அவரோ வெகு சாதாரணமாய் “அவன் அவனுக்கு கொடுத்த வேலையை செய்றான் அனும்மா… நீ ஏன் இவ்வளோ டென்சன் ஆகுற… பிரஷாந்த் பேசி முடிச்ச டீலிங்னால நமக்கு எத்தனை க்ரோர் ப்ராபிட்னு பாரு..” என,

“நீங்களே பார்த்துக்கோங்கப்பா.. இது என் ஆபிஸ்.. என்னை கேட்காம டிசிசன் எடுக்க உங்களுக்கு கூட ரைட்ஸ் இல்லை..” என்று கத்தியேவிட்டாள்.

ஒரு அப்பாவாய் பேசாது, பிராஷாந்தினால் என்ன லாபம் என்று பேசும் அவரிடம் அவளால் இப்படிதான் பேச முடிந்தது. அவளைப் பொருத்தவரைக்கும் அவன் சரியாய் இருப்பானாயின் அனுராகாவிற்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் வேலை செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, அவளை நெருங்க முயற்சித்தால் அனுராகாவும் தான் என்ன செய்வாள்..

“பிரஷாந்த் பார்ட்டி அரேஞ்மென்ட்ஸ்காக மட்டும் தானே இங்கே இருக்கார்.. ஒரு ஸ்டார் ஹோட்டல்ல ரூம் போட்டு கொடுத்திடுங்க.. டெய்லி வொர்க்ஸ் என்னவோ அவர் அங்கிருந்தே பார்த்துக்கட்டும்.. இங்க வரக் கூடாது…” என்று திட்டவட்டமாய் மேனஜரிடம் சொல்லிவிட்டாள்.

அதன்பிறகு பிரஷாந்த் அங்கு வருவதில்லை என்றாக, இது எத்தனை நாளைக்கு என்பதும் அவளுக்குத் தெரியாது.. சீக்கிரம் இந்த பார்ட்டி முடிந்துவிட்டால் கூட நல்லது என்றானது.

இதற்கு நடுவில் தீபன் வேறு..

தான் அப்படி என்ன சொல்லிவிட்டேன் என்று அவனுக்கு அப்படியொரு கோபம் என்றெண்ணியவள், தாரா வருவது தெரியவும் மேலும் ஒரு பதற்றம் வந்து ஒட்டிக்கொண்டது..

தீபனோடு பேசினால் மனது சிறிது சமாதானம் அடையும் என்றே அனுராகா அவனுக்கு அழைத்துக்கொண்டு இருக்க அவனோ இப்படி செய்ய, கடைசியில் தாரா வந்தேவிட்டார்..

அனுராகா விமான நிலையம் சென்று அழைத்துவர, வரும் வழியில் எல்லாம் பொதுவான பேச்சுக்கள் மட்டுமே.. தாராவின் ட்ரிப் பற்றி, பின் இங்கே என்ன ஏது என்று விசாரிப்புகள்.. எதுவும்.. எதுவுமே அனுராகாவின் மனதினை எட்டவில்லை..

தாராவிற்கு மகளிடம் பழைய உற்சாகமும் ஒரு பளிச்சிடலும் இல்லை என்று பார்த்த முதல் நிமிடமே புரிந்துபோனது. இருந்தும் இப்போது எதுவும் பேசக்கூடாது என்று

“நீ கண்டிப்பா ஒன்ஸ் எங்கயாவது போய்ட்டு வரணும் அனு.. யு லுக் சோ டயர்ட்…” என்றுமட்டும் சொல்ல,

“யா.. மாம்…” என்று மட்டும் அவளும் சொல்லிக்கொள்ள, வீடு வந்துவிட்டனர்.    

அனுவிற்கோ எப்போதடா நேரம் கிடைக்கும் என்று பார்க்க, தாராவோ “கொஞ்சம் உறங்குறேன்…” என்று அவரின் அறைக்கு போய்விட, அனுராகா அப்போதும் கூட தீபனுக்கு அழைத்துப் பார்த்துவிட்டாள்.

அப்போதும் அவன் எடுக்கவில்லை ..

‘நான் சொல்றப்போ அவ்வளோ தயக்கம் இவளுக்கு.. என்னை லவ் பண்றேன் சொல்றதுக்கு அப்படி என்ன தயங்கிட இருக்கு.. இப்போ ஏன் இவ்வளோ டைம்ஸ் கால் பண்ணனும்…’ என்ற கோபம் அவனுள் இப்போதும்..

கூடவே, அனுராகா இறங்கி வந்து இத்தனை முறை அழைப்பதும் ஒரு அல்ப சந்தோசமும் கொடுத்தது.

எடுத்து பேசுவோமா என்று அவன் யோசிக்கையில், தொகுதியில் உள்கட்சி பூசல் என்று ஒரு அடிதடி நடந்திட, இவனே நேரில் சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்யும் நிலை.

அன்றைய இரவு தீபனுக்கு அப்படியே நகர்ந்திட, அனுராகாவும் தாராவிடம் அவள் மனதில் இருப்பதை சொல்லிவிட்டாள்.

தாரா இதை ஒருவகையில் எதிர்பார்த்தார் என்றே சொல்லிட வேண்டும், முகத்தினில் அப்படியொன்றும் அதிர்ச்சி தெரியவில்லை என்றாலும் கூட, அவரின் முகத்தினில் அனுராகாவிற்கு சாதகமாய் எவ்வித உணர்வும் வெளிப்படவில்லை.

தாராவின் முகம் பார்த்து அனுராகா அமைதியாய் இருக்க, தாராவோ எதுவுமே பேசாது இருக்க,

“ம்மா…” என்றாள் மெதுவாய்..

“ம்ம்…”

“சைலெண்ட்டா இருக்க…”

“வேற என்ன சொல்ல??!!! முதல்லயே என் மனசுல ஒரு சந்தேகம் இருந்தது.. லவ் இஸ் நாட் எ சின்.. பட்.. அது யார பண்றோம்.. அந்த லைப் எப்படி இருக்கும் இதெல்லாம் யோசிக்கணும்.. அதுவும் என் பொண்ணுன்னு வர்றப்போ நான் ரொம்ப யோசிப்பேன்..” என்றவரிடம்,

“ம்மா தீப்ஸ் விட எனக்கு…” என்று அனுராகா சொல்லும்போதே,

“நோ…!! தீபன் உனக்கு சரியா செட்டாகாது..” என்றார் உறுதியாய்.

“மாம்..!!!!” என்று அனுராகா அதிர,

“உங்களுக்குள்ள என்ன நடந்தது அது எனக்கு தேவையில்லை அனு.. பட் இது.. ஐ மீன் உங்களோட இந்த ரிலேஷன்ஷிப் கண்டிப்பா உன்னை நிம்மதியா இருக்க விடாது…” என,

“அப்படியெல்லாம் இல்லைம்மா…” என்றாள் அனுராகா..

“ஏன் இல்லை.. உன் முகம் பார்த்தா தெரியலையா??!!! லவ் பண்றேன்னு சொல்றப்போ உன் முகத்துல கொஞ்சம் கூட ஒரு என்து இல்லை.. ஒரு ஜோஸ் இல்லை… லைப்கான டிசிசன்னு சொல்ற, பட் அந்த ஹப்பினஸ் உன் முகத்துல கொஞ்சம் கூட இல்லை அனு.. ஒரு அம்மாவா நான் எக்ஸ்பெக்ட் பண்றது உன்னோட சந்தோசம் நிம்மதியை தான்.. பட் அது ரெண்டுமே இப்போ உன்கிட்ட இல்லை…” என்று தாரா சரியாய் கணித்து சொல்ல, அனுராகாவினால் அந்த நொடி எதுவும் பதில் சொல்ல முடியாது தான் போனது.

உண்மையும் அதுதானே..!!

அவள் மனதில் இப்போது நிம்மதி இருக்கிறதா?? இல்லை..

முன்பிருந்த உற்சாகம் இருக்கிறதா?? இல்லை..

காதல் வந்த சந்தோசமோ அதற்கான துள்ளளோ இருக்கிறதா?? இல்லை..

இப்படி எதுவுமே இல்லை என்கையில் அவள் நிஜமாகவே காதலிக்கிறாளா என்ற சந்தேகமே அவளுக்கு வந்துவிட்டது.

தீபனோடு ஒருமுறையாவது மனம் விட்டு பேசியிருந்தால் இப்போது இதெல்லாம் நேர்ந்தேயிருக்காது..

பேசுகையில் எல்லாம் சண்டை.. அப்படியில்லையெனில் மற்றவர்களினால் தொல்லை.. இதில் இவர்கள் காதல் வளர்த்து, கல்யாணம் செய்து, அனுராகாவிற்கு ஏனோ நெஞ்சை அடைப்பது போலிருந்தது..

இப்போது அவள் மௌனமாகிவிட, தாரா மெதுவாய் அவளின் கரம் பிடித்தவர் “உன்னோட லைப் உன்னோட விருப்பம் தான். ஆனா அதுக்காக நீ அதை கெடுத்து வைக்கனும்னு இல்லை.. அதுக்கு அலோ பண்ணவும் மாட்டோம்.. நீ தீபனோட சந்தோசமா வாழ்வன்னு எனக்கு ஒரு நம்பிக்கை கொடு, நான் உன் அப்பாக்கிட்ட பேசுறேன்..” என,

“ம்மா.. தீப்ஸ் கூட மட்டும் தான் ம்மா நான் சந்தோசமா இருக்க முடியும்..” என்று அனுராகா வேகமாய் சொல்ல,

“ஹா ஹா.. உன்னோட கண்ல தெளிவு இல்லை அனு.. இப்போ என்ன தீபன் அவங்க வீட்டு பூஜை அப்போ உங்களோட ரிலேஷன்ஷிப் பத்தி அவங்க பேரண்ட்ஸ் கிட்ட சொல்லணும் சொல்றானா??? சொல்லட்டும்.. நான் வேணாம் சொல்லலை.. பட் மேரேஜ்னு வர்றப்போ கண்டிப்பா நான் யோசிப்பேன்..” என்றுவிட்டு சென்றுவிட்டார்.

அனுராகாவிற்கு ஒருபக்கம் தலையை பிய்த்துக் கொள்ளவேண்டும் போல இருந்தது. அம்மா ஒருபுறம் இப்படி சொல்ல, தீபனோ பேசவேயில்லாது இருக்க, தவித்துதான் போனாள்.

நீரஜா சொன்னது போல் ‘இதெல்லாம் உனக்குத் தேவையா??!!’ என்றே தோன்றியது.

தலையை தன் இரு கைகளால் தாங்கிக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டாள். நேரம் கடந்துகொண்டே இருக்க, அவளால் அந்த இம்சையை தாங்க முடியும் என்றும் தோன்றவில்லை..

அப்போதே அந்த நிமிடமே தீபனிடம் பேசவேண்டும் என்று அப்படியொரு பிடிவாதம் அவளுள்..

எப்படி அவன் என்னுடைய அழைப்புகளை ஏற்காமல் போகலாம் என்ற பிடிவாதம்..

எடுத்து பேசும் வரைக்கும் விடமாட்டேன் என்ற பிடிவாதம்..!!               

கிட்டத்தட்ட ஐம்பது முறைக்கும் மேலே தீபனுக்கு அழைத்துப் பார்த்துவிட்டாள், அவனோ எடுக்கவேயில்லை.. அம்மா இப்படி சொன்ன பிறகு நிச்சயமாய் தீபனோடு கலந்து பேசவேண்டும், அவசரப்பட்டு எதுவும் செய்திட கூடாது என்று..

அதைப்பற்றி அவனோடு பேச அழைத்தால், அவனோ ம்ம்ஹும் அதற்கான சந்தர்ப்பமே கொடுத்தான் இல்லை.. எத்தனை முயற்சித்தும் அவனைப் பிடிக்க முடியாது போக, தேவ்விடம் அழைத்துக் கேட்க,

அவனோ “அது… அவங்க தொகுதில நாளைக்கு இருந்து பிராச்சாரம்..”  என,

“அதுக்கு..??!!!” என்றாள் கோபத்தை அடக்கி..

கோபம் தான் வந்தது அவளுக்கு.. இத்தனை முறை ஒருத்தி அழைக்கிறாள் என்றால் என்னவென்று கேட்க வேண்டாமா…??!! பொறுப்புகள் என்றால் அது எல்லாத்திலும் தானே உண்டு.. கட்சியானால் என்ன காதலியானால் என்ன??!!

அவன் எங்கிருக்கிறான் என்பதை மட்டும் கேட்டுக்கொண்டு காரை அங்கே செலுத்தினாள்..

நள்ளிரவு தான். இரண்டு மணி.. இந்த நேரத்தில் கிளம்புகிறோம் என்றெல்லாம் அவளுக்கு தோன்றவேயில்லை. அவளுக்கு தீபனை காண வேண்டும். அவ்வளவே..

ஆள் நடமாட்டமே இல்லை.. சாலையில் செல்லும் வாகனங்களே.. அதுவும் விரல் விட்டு எண்ணிவிடலாம்… ஒருவித நிசப்தம் சூழ்ந்திருக்க, அதெல்லாம் எதுவுமே அனுராகாவின் கவனத்தில் பதியவில்லை..

அனுராகா தீபனைக் காண வருகிறாள் என்று தேவ் அதற்குள் அழைத்து சொல்லிட,

தீபனோ “நீ ஏன் டா நான் இங்க இருக்கேன்னு சொன்ன..” என்றான் எரிச்சலை அடக்கி..

“இது நல்லாருக்குடா.. சொன்னா ஏன் சொன்னன்னு கேட்கிறது.. இதேது நான் சொல்லலைன்னா ஏன் சொல்லலைன்னு கூட நீ கேட்ப.. இது எனக்குத் தேவையா..” என,

“ம்ம்ச் இங்க கட்சி ஆளுங்க நிறைய பேர் இருக்காங்க..” என,

“அதுக்கு??!!” என்றான் அவளைப் போலவே தேவ்வும்.

“டேய்…!!!”

“அப்படிதான் அனுவும் கேட்டா… நீயே பதில் சொல்லிக்கோ..” என்று தேவ் வைத்துவிட,

தீபனுக்கோ சுற்றிலும் இத்தனை பேர் இருக்க இப்போது அனு வந்தாள் அது சரியாகவே இருக்காது என்று தோன்ற, சற்று தள்ளியிருந்த தர்மாவை அழைத்தவன்

“ஒரு ஹால்ப் ஹவர் மேனேஜ் பண்ணு..” என்றவன், அவர்கள் இருந்த வீட்டில் இருந்து வெளியே வர,

அதற்குள் அனுராகாவின் கார் அவனை மோதுவது போல் வந்து நின்றது.

“ஹேய்..!!!” என்று தீபன் அதிர்ந்து விளிக்க, அவன் சத்தம் கேட்டு உள்ளிருந்து கொஞ்சம் பேர் வந்துவிட்டனர்

“என்னாச்சு… என்னாச்சு தம்பி..” என்று..

அங்கே இங்கே என்று வெளியே நின்றிருந்தவர்களும் அப்படியே சூழ்ந்துவிட, தீபன் எது நடக்கக் கூடாது என்று எண்ணினானோ அதுவே நடந்தது..

அனுராகா காரினுள் சட்டமாய் அமர்ந்திருக்க, சுற்றிலும் இருந்த ஆட்களோ  “ஏய் யாரும்மா நீ.. வெளிய வா..” என்று கார் ஜன்னலையும், காரின் மீதும் தட்ட, நொடிப் பொழுதில் அங்கே சூழலே மாறிப்போனது.

வீட்டினுள் இருந்த அனைவரும், அங்கே நாளைக்கு பிரச்சாரத்திற்கு என்று தெருவினில் வேலைகள் செய்துகொண்டு இருந்த ஆட்கள் எல்லாம் சூழ்ந்துவிட, தீபன் சொல்வது எல்லாம் யாருக்கும் காதிலேயே விழ வில்லை..

“நீங்க சும்மா இருங்க தம்பி.. நான் பார்த்தேனே வேணும்னே உங்களை இடிக்கிற மாதிரி வந்துட்டு…” என்று ஒருவர் சொல்ல,

“இதெல்லாம் சும்மா விடக்கூடாது..” என்று மற்றவர் சொல்ல,

‘உள்ள லைட் போட்டு எவ்வளோ திமிரா உக்காந்து இருக்கா…’ என்றுதான் பார்த்தான்.

நாகாவும், தர்மாவும் கூட ஆட்களை கட்டுப்படுத்த முயல, ஒருநிலையில் அனுராகாவே காரை விட்டு இறங்கிவிட்டாள்.

இறங்கியதும் இல்லாது “இப்போ என்ன.. இறங்கிட்டேன்.. இப்போ என்னவாம்??!!” என்று அங்கிருந்தவர்களை பார்த்து கேட்க,

தீபன் முன்னே அவளிடம் வர, அதற்குள் அங்கிருந்த ஒருவர் “என்னம்மா எங்க தம்பியை இடிக்கிறது போல வந்துட்டு இப்படி பேசுற…” என்று எகிற,

“அப்படியா உங்களுக்கு இவர் தம்பியா.. அப்போ எனக்கு இவர் யார்னு இவரையே சொல்ல சொல்லுங்க…” என்று அனுராகா சொல்ல,

‘இதுக்கு நீ போன் எடுத்து பேசிருக்கலாம் தீப்ஸ்…’ என்று அவனே அவனை கடிந்துகொண்டான்.

அவள் சொன்ன விதத்திலும், அவளிடம் இருந்த நிமிர்விலும், அவள் சுற்றி நின்றவர்கள் எல்லாம் இரண்டடி தள்ளிப் பின்னே போக,

“எல்லாம் போங்க.. போய் வேலைப் பாருங்க.. போங்க..” என்று தீபனும் சொல்ல, அனுராகாவோ காரின் மீது சாய்ந்து கைகளை கட்டிக்கொண்டு நின்றாள்.

“என்ன பண்ற நீ…” என்று தீபன் அவளைக் கடிந்தாலும், அவளிடம் இருந்து சிறிதும் நகரவில்லை.

நாகாவும் தர்மாவும் “போங்க .. போங்க…” என்று அனைவரையும் நகரச் செய்ய, அந்த வார்டில் இருக்கும் முக்கியப் புள்ளியோ

“தம்பி..!!!” என்றார் தீபனைப் பார்த்து..

“நீங்க போங்க காசிண்ணா நான் பார்த்துக்கிறேன்..” என,

“அதுக்கில்ல தம்பி..” என்று அவர் இழுப்பது பார்த்து,

“எங்க கல்யாண வேலை எல்லாம் நீங்கதான் செய்யணும்… இப்போ போய் எலெக்சன் வேலைப் பாருங்க..” என்று தீபன் சொன்ன விதத்தில், அனுராகாவிற்கே

‘இவன் சரியான பேச்சுக்காரன்..’ என்றே தோன்றியது.

அதிலும் அவன் சொன்ன விதத்தில் இதழில் ஒரு முறுவல் வேறு..

அந்த மனிதரோ, தீபனின் பதிலில் சற்று திகைத்தாலும், முகத்தினில் தோன்றிய சந்தோஷத்தில் “அப்படிங்களா…” என்று இருவரையும் மாறி மாறிப் பார்த்தவர்,

“சந்தோசம்…” என்றுவிட்டு செல்ல, சுற்றியும் ஒருவரும் இல்லை என்று ஆகவும் தான்

“ஏன் இப்படி??!!” என்றான் தீபன்..

“இப்போ நீயா கார் குள்ள ஏறிட்டா பெட்டர்.. இல்லை திரும்பவும் இப்படி காரை உன் மேல ஏத்தப் பார்ப்பேன்..” என்று அனுராகா சொல்ல,

“சரியான ரத்தக் காட்டேரி டி நீ…” என்று முனங்கியபடியே காரினுள் ஏறி அமர, அனுராகாவோ எங்கே செல்கிறோம் என்றே சொல்லாது காரினைக் கிளப்ப, முதல் ஐந்து நிமிடம் இருவருமே பேசவில்லை.

ஒருவித அமைதியில் இருக்க, அடுத்து தீபன் தான் “இப்படியெல்லாம் வரக்கூடாது..” என்று சொல்ல,

“வர வச்சது நீ..” என்றாள் பல்லைக் கடித்து..

“ம்ம்ச்.. ரொம்பத்தான் என்மேல லவ் இருக்கிறது போல…” என்று சொல்லும்போதே, அனுராகா வேகமாய் காரினை சாலையின் ஓரத்தில் நிறுத்தியவள்

“என்னடா சொன்ன நீ??!!” என்று கேட்டபடி தீபனின் கழுத்தினை நெறித்தேவிட்டாள்.

அவள் கண்களில் அப்படியொரு துவேசம்..!!!

அவன் – அம்மாடியோ கொலைகாரியா இவ!!!!

அவள் – கொலையும் செய்வாள் காதலி…

காதல் – என்னைத்தான்டா ரெண்டு பேரும் கொல்றீங்க…                                                                          

Advertisement