Advertisement

ஆனால் தீபனோ காரணமாய் தான் கேட்டான்.. அம்மாவின் மனதில் இன்னமும் அப்படியேனும் எண்ணம் இருந்தால் கண்டிப்பாய் இது வேண்டாம் என்று சொல்லவேண்டும் என்றே கேட்க, உஷா அதை ஒன்றுமில்லை என்பது போல் சொல்ல, சரியாய் தர்மாவும் அழைக்க, தீபன் கிளம்பியிருந்தான்..

ஷர்மாவிடம் கையெழுத்து வாங்கும் எண்ணமெல்லாம் இல்லை. அவனின் மனைவி இட்ட கையெழுத்து காட்டியே இவனை உண்மை சொல்லிட வைத்திடலாம் என்று பார்த்தால், அவனோ அசையவே இல்லையெனும் போது இவனுக்கும் வேறு வழி இருக்கவில்லை..

‘ஏன் இப்படி எல்லாம் திடீரென்று மாறிப்போனது??!!!’

இக்கேள்வி மட்டுமே மனதினுள்…

ஒவ்வொன்றாய் நினைக்க நினைக்க தலை சூடேறியது அவனுக்கு… எதன் பின்னாலோ ஓடுவதாய் இருந்தது அவனுக்கு.. அப்பாவிற்காக என்றாலும், அப்பாவுமே கூட சேட்டோடு சுமுகமாய் போ என்கையில் அவன் என்ன செய்வான்..??!!

ஆனால் அப்படி போனால் ஒன்று அவனின் அப்பாவின் இத்தனை நாள் பெயர் புகழ் பதவி எல்லாம்.. எல்லாமே சர்வ நாசமாகிவிடும்.. அப்படியில்லை எனில் தீபன் சக்ரவர்த்தி என்பவன் இல்லாது போய்விடுவான்…

இப்படி எண்ணியவனுக்கு, இது அனைத்துமே தனக்காக விரிக்கப்பட்ட வலை என்று தெரிகையில்  அவனுள் என்ன மாற்றங்கள் நிகழும்..?! அதுவும் உடன் பிறந்தவனே அனைத்தும் செய்தான் என்கையில் தீபன் என்ன ஆவான்?!!!!

இவை எல்லாம் தீபனின் கற்பனைகளுக்குக் கூட எட்டாதவை..

எண்ணங்கள் இப்படி போகையில், தீபனுக்கு எங்காவது ஓரிடத்தில் சென்று அமைதியாய் அமர்ந்திட தோன்றியது.. காரை நேராய் பீச்சிற்கு விட்டவன், மாலை நேர வெயில் என்றுகூட பாராது அங்கே போய் கடல் பார்த்து அமர்ந்துகொண்டான்…

நெற்றி சுறுக்கி, கண்களை இடுக்கி கடல் அலைகளை பார்த்தபடி இருந்தவனுக்கு, மனது இன்னமும் அங்கே லயிக்கவில்லை.. மனதினுள்ளே நிறைய கேள்விகள்… முன்பெல்லாம் இப்படி ஒரு அழுத்தம் என்றால் ஒருவாரமோ இல்லை பத்து நாட்களோ போய் ‘D – வில்லேஜில்’ இருந்துவிட்டு வருவான்..

எங்கே போய் எப்படி சுற்றினாலும், அவனுக்கான அமைதி எல்லாம் அவன் உருவாக்கிய இடத்தினில் மட்டுமே கிடைக்கும்..

இன்றோ அங்கும் செல்ல மனம் வரவில்லை.. ஏனெனில் ஏற்கனவே முடிவு செய்திருந்தான், இனியொரு முறை அங்கே போனால் அது அனுராகாவோடு தான் என்று..

“ண்ணா சுண்டல் ண்ணா…” என்று பீச்சில் சுண்டல் விற்கும் சிறுமி வந்து கேட்க, “ம்ம் ஒன்னு கொடு..” என்றவன் பணத்தை கொடுக்க,

“முதல் போனிண்ணா…” என்றாள்.

“நீயே வச்சிக்கோ…” என்றவனை கொஞ்சம் விசித்திரமாய் பார்த்துவிட்டு அப்பெண் செல்ல, சுண்டல் வாங்கியவனுக்கு அதை உண்ணும் எண்ணமெல்லாம் இல்லை.  

கையில் வைத்தவன் கடலையே பார்த்துகொண்டு இருக்க, வெகு நாளைக்கு பிறகு புனீத் அழைத்தான் “எங்க தீப்ஸ் இருக்க??!!” என்று..

“பீச்ல..” என்றவன் “நீ வர்றியா..??” என,

“அந்த சைட்ல தான் இருக்கேன்..” என்ற புனீத் சிறிது நேரத்தில் அங்கே வந்திட, “என்னடா இப்படி தனியா வந்து உக்காந்து இருக்க..” என்றான் நண்பனின் முகம் பார்த்தே எதுவோ சரியில்லை என்று..

“ம்ம்ச் ஒன்னுமில்லடா.. துக்கடா பசங்களுக்கு எல்லாம் ப்ளான் பண்ணி தூக்க வேண்டியதா இருக்கு…” என்ற தீபனும் நடந்தவைகள் அனைத்தயும் சொல்ல,

“ஏன்டா அப்போ.. அனுராகாவ ஓகே பண்ணிட்டியா நீ??!!!” என்றான் ஆச்சர்யமாய்..

“டேய்.. நான் என்ன சொல்றேன்.. நீ என்ன கேட்கிற…” என்று தீபன் கடிய,

“ம்ம்ச் அடிதடி எல்லாம் அசால்ட் மேட்டர்டா… ஆனா அனுராகா எப்படி டா உனக்கு ஓகே சொன்னா??!!!” என்று இன்னமும் நம்பாமல் கேட்க,

“ஏன்.. எனக்கு என்ன??!!” என்றான் தீபன் நண்பனை முறைத்து..

“உனக்கு ஒண்ணுமில்ல.. ஆனா எங்கயுமே கணக்கு டேலி ஆகலையேடா…” என்ற புனீத்துக்கு இதனை நம்பவே முடியவில்லை..

“ம்ம்ச் இப்போ அதுக்கு என்ன??!!” என,

“அப்போ ட்ரீட் கொடு.. உன் ஆளையும் கூட்டிட்டு வந்து கொடு.. நான் நம்புறேன்..” என்று புனீத் சொல்ல,

“இவ்வளோதானா??!!” என்றவன் உடனே அனுவிற்கு அழைத்தான்.

புனீத் என்னடா என்று பார்க்க, “ராகா.. ஆர் யூ ப்ரீ??!!” என்று  கேட்க,

“ஹ்ம்ம் யா தீப்ஸ்… நீரு வீட்ல இருக்கேன்..” என்றதும், அவனின் முகம் மாறிப்போனது..

“ஓ!!! ஒண்ணுமில்ல.. புனீத் ட்ரீட் கேட்கறான்.. ஜஸ்ட் ஈவ்னிங் டின்னர் போலாமா??!!” என, ட்ரீட் எதற்கு என்று புரியாதவளா அனுராகா..

“ஈவ்னிங்கா…” என்று யோசித்தவள், “ஓகே.. டைம் அண்ட் பிளேஸ் மெசேஜ் பண்ணிடு…” என்றவள், நீரஜாவிடமும் இதை சொல்ல, ஏகத்திற்கும் முறைத்தாள் நீரஜா..

முதலில் நீரஜாவிற்கு, அனுராகா தீபனோடு இப்போது பழகுவதே பிடிக்கவில்லை. தேவையில்லாத பிரச்னையில் தானே சென்று தலை கொடுக்கிறாளோ என்று இருக்க, போதாத குறைக்கு அனுராகா பிரஷாந்தை அடித்தது வேறு தெரிந்து அதுவேறு அவளுக்கு இன்னமும் என்னாகுமோ என்ற நினைப்பை கொடுத்தது..

இதில் இப்போது ட்ரீட் வேறு என, எக்கச்சக்கமாய் கோபம் வந்தது நீரஜாவிற்கு.

ஆனால் அனுவிற்கா அவளை பேசி சமாளிக்கத் தெரியாது, சொன்னது போலவே அன்றைய இரவு உணவு, ஒரு ரூப் கார்டன் ஹோட்டலில் சந்திக்க, ஏனோ இத்தனை நாள் இல்லாத ஒரு புது தயக்கம் தீபனின் நண்பர்களை காண்கையில் வந்து ஒட்டிக்கொண்டது அனுராகாவிற்கு..

புனீத் எப்போதும் போல பேச, தேவ் அப்போது தான் வந்தவன் நீரஜாவிடம் “நீ கூட சொல்லலை..” என,

“எனக்கே இப்போ தான் தெரியும்..” என்றாள் எரிச்சலை அடக்கி..

தீபனுக்கு புரிந்துபோனது, நீரஜாவிற்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்று.. ஆனால் அதெல்லாம் அவனுக்கு பெரியது இல்லையே.. அருகே அமர்ந்திருந்தாலும் அனுராகாவின் கரத்தினை இறுகப் பற்றிகொண்டான்..

“ஹ்ம்ம் சோ.. எப்படி போச்சு இன்னிக்கு..” என்று தீபன் ஆரம்பிக்கையில், அவனின் அலைபேசியில் “ராகா ஆபிஸ்…” என்ற பெயர் மிளிர, தீபன் வேகமாய் அழைப்பை நிறுத்திவிட்டான்..

அனுராகா பார்க்கிறாளா என்று பார்க்க, அவளோ நீரஜாவிடம் எதுவோ பேசிக்கொண்டு இருக்க,

தேவ் “என்னடா குடும்பஸ்தன் ஆகப்போறியா??!! நம்பவே முடியலை..” என்று தீபனை பேச்சிற்கு இழுக்க,

அனுராகா அதைக் கேட்டு “இன்னும் எங்களுக்குள்ளே எதுவுமே ஓகே ஆகலை..” என்றாள் வேகமாய்..

அவ்வளோதான்.. அனைவரின் முகமும் மாறிட, “ஹே ஹே..!! சில்… வி ஆர் இன் ரிலேஷன்ஷிப்.. அதை தாண்டி இன்னமும் யோசிக்கலை..” என,

“என்னடா இப்படி சொல்றா??!!” என்று புனீத், தீபன் காதினை கடிக்க,

“ம்ம்ச் எல்லாம் எனக்குத் தெரியும்டா.. நீங்க யாரும் பேசி சொதப்பாம இருந்தா ஓகே..” என்றவன், “ஒரு  போன் கால்…” என்றுவிட்டு நகர்ந்து சென்றான்.  

போன் பேசிவிட்டு வருவான் வருவான் என்று பார்க்க, தீபன் வரவில்லை என்றதும், அனுராகா “நான் போய் கூட்டிட்டு வர்றேன்..” என்று போக, அவன் சீரியசாக பேசிக்கொண்டு இருப்பது கண்டு திரும்பி வந்துவிட்டாள்.

அதன்பின்னும் ஒரு ஐந்து நிமிடம் கழித்து வந்தவன், “என்னடா இன்னும் ஆர்டர் பண்ணலையா??” என்று கேட்டபடி வர, அனுராகா அவன் அமர்ந்ததுமே மெதுவாய்,

“எதுவும் பிரச்சனையா தீப்ஸ்..” என்று கேட்க,

“ம்ம்ச் நத்திங்..” என்றவன் “உனக்கு ஆபிஸ்ல எதுவும் பிராப்ளமா..” என்று கேட்டுவிட்டான்..

கேட்டுவிட கூடாது என்றுதான் எண்ணினான். ஆனால் அவள் தன்னிடம் அக்கறையாய் விசாரிக்கவும், அவனுக்குமே அதுவே தோன்றியதோ என்னவோ அப்படியே கேட்டுவிட, அடுத்த நொடி அனுராகாவின் பார்வை மாறிவிட்டது.  

“என்ன ராகா??!!” என்று தீபன் கேட்க,

“என் ஆபிஸ்ல ஸ்பை வச்சிருக்கியா??!!” என்றாள் அவனை ஆழப் பார்த்து..

‘ஓ!!! காட்…!!!’ என்று தீபன் நினைப்பதற்குள்,                                        “டெல் மீ தீப்ஸ்.. என்னை வாட்ச் பண்ண என் ஆபிஸ்ல நீ ஆள் வச்சிருக்கியா??!!” அடிக்குரலில் கத்தினாள் அனுராகா..

அவர்களுக்குள் பேசுகிறார்கள் என்று மற்றவர்கள் இவர்களை கவனிக்காது இருக்க, அனுராகாவின் சத்தத்தில் மற்ற மூவரும் திரும்பிப் பார்க்க, நிலைமையை உணர்ந்த தீபனோ,   

“ஹேய்.. மை டியர் டைட்டன்.. ஏன் இவ்வளோ டென்சன்..” என்று கூலாக கேட்க,

“ஜஸ்ட் ஸ்டாப் இட்…” என்று அதற்கும் மேலாய் கத்தினாள்.

அவளுக்கு அன்றைய தினம் காலையில் இருந்து நடந்தது எல்லாம் இப்போது மொத்தமாய் சேர்ந்துகொண்டது.. எங்கே இறக்கி வைப்பது என்று தெரியாது இருந்தாள். நீரஜாவிடம் போனால் அவளும் திட்ட, இப்போது மாட்டியது தீபன் தான்.  

ஏன் இப்படி செய்கிறாள் என்று தீபன் புரியாது பார்க்க, “என்ன நினைச்சிட்டு இருக்க நீ.. அப்கோர்ஸ் நமக்கு நடுவில ஒரு ரிலேஷன்ஷிப் இருக்கு.. அதுக்காக.. நீ எதுவும் செய்யலாம்னு இஷ்டம் இல்லை..” என்றவள்,

“யாரா இருந்தாலும் சரி.. பட் நீயே அவங்களை இதெல்லாம் ஸ்டாப் பண்ண சொல்லிடு.. நான் பைண்ட் அவுட் பண்ணா.. உன்னையும் சேர்த்து என்ன செய்வேன் தெரியாது..” என,

“என்னடி செய்வ??!!” என்றான் தெனாவெட்டாக..

தீபனுக்குமே ஒருநிலைக்கு மேல் பொறுமையாய் இருக்க முடியவில்லை.. அவன் ஆள் வைத்திருக்கிறான் தான்.. அனுராகாவை கண்காணிப்பதற்கு அல்ல, அவளை பாதுகாப்பதற்கு.. ஒவ்வொரு நாளும் அன்றைய தினத்தில் என்ன நடந்தது என்ற தகவல் அவனுக்கு வந்துவிடும்..

இன்றும் அதுபோலவே வர, அதில் பிரஷாந்த் பற்றிய செய்தியும் இருக்க, அதுவே தீபனின் டென்சனிற்கு காரணமாய் போக, போதாத குறைக்கு அனுராகா சத்தமிடவும் அவனின் பொறுமை பறந்து போனது..

“வாட்??!! என்ன கேட்ட ?? கம் அகைன்…” என்று அனுராகா திரும்ப கேட்க,

“என்னை என்ன செய்ய முடியும் உன்னால..” என்றான் வார்த்தைக்கு வார்த்தை அழுத்தம் கொடுத்து..

“இந்த செக்கன்ட் நீ இப்படி உக்காந்து என்னை கேள்வி கேட்கிறதே என்னால தான்.. அன்னிக்கே  D வில்லேஜ்லயே உன்னை சுட்டு தள்ளிட்டு போயிருக்கனும்..” என்று அவளும் வார்த்தையை விட,

“சுடு.. கம்மான் சுடு.. எங்க?? எங்க உன்னோட கன்.. எப்பவும் வச்சிருப்பியே..” என்று தீபனும் பதிலுக்கு கேட்க,

“டேய் என்னடா??!!” என்றான் தேவ்..      

புனீத்தோ “தீப்ஸ் விடுடா.. என்ன இது..” என்றவன் “என்ன அனு நீ..” என்று அவளையும் சொல்ல, அனுராகா ‘நீயும் ஏதாவது சொல்..’ என்பதுபோல் நீரஜாவைப் பார்க்க,

அவளோ ‘இதெல்லாம் உனக்குத் தேவையா??!!’ என்றாள்.   

நீரஜாவிற்கு ஏக கோபம் அனுராகாவின் மீது.. அனுராகாவும் அவளின் கோபத்தின் காரணம் சரியானதே என்பதை உணர்ந்து அமைதியாய் இருக்க,

நீரஜாவோ “இதெல்ல்லாம் உனக்கு தேவையா…??!!” என்று திரும்பவும் அதே கேள்வியை இன்னும் அழுத்தம் கொடுத்துக் கேட்க, அனுராகா பதில் சொன்னாள் இல்லை.

“டெல் மீ அனு.. இதெல்லாம் உனக்கு தேவையா??!! எவ்வளோ ஜாலியா.. ஹேப்பியா இருந்த நீ.. இப்போ ஏன் இவ்வளோ டென்சன்.. இவ்வளோ ரெஸ்ட்லஸ்னஸ்.. தின்க் பண்ணு… இப்படியொரு ரிலேஷன்ஷிப் தேவையா..” என்று நீரஜா கேட்க,

“ம்ம்ச் நீரு..” என்றாள் அனுராகா.

இத்தனை நேரத்திற்கும் சேர்த்து இப்போது தான் வாய் திறந்தாள் அனுராகா.. ஆனால் நீரஜாவிற்கோ அவளின் மௌனம் உடைந்ததே பெரிதாய் தெரிந்தது.   

ஆனால் தீபனுக்கோ இப்போது கோபம் அனுவின் மீதுவிட,  நீரஜா மீது திரும்பிவிட்டது..

“அதையே தான் நானும் கேட்கிறேன்.. உனக்கு இவளோட பிரண்ட்ஷிப் தேவையா??!!” என்றான் இப்போது நீரஜாவை முறைத்து.    

அவன் – காதல் கொலைகாரி நீ..

அவள் – காதல் கொள்ளைக்காரன் நீ

காதல் – போலீஸ் கேஸ் ஆகாம இருந்தா சரி… 

Advertisement