Advertisement

எத்தனை நேரமாக இருந்தாலும், நால்வரும் ஒன்றாய் இருக்கும் தருணம் என்றால் கண்டிப்பாக வெகு நேரம் அமர்ந்து பேசுவது வழக்கம். இன்றும் அதுபோலவே இருக்க, மறந்துகூட உஷா, அனுராகாவை பெண் கேட்டது பற்றி சொல்லவில்லை.

இதைச் சொன்னால் ‘எல்லாம் முடியட்டும்..’ என்றுதான் சொல்வர் என்று தெரியும் என்பதால் அதைப்பற்றி பேசாது,

“நாளைக்கு எப்படி எல்லாரும் வீட்ல இருப்பீங்களா??!!” என்று கேட்க, சக்ரவர்த்தியோ “நானும் பெரியவனும் டெல்லி போறோம்… தீபன் நீ எப்படி..” என,

“நான் கொஞ்ச நாள் இங்கதான் ப்பா..”  என்றிட,

மிதுனோ “ரொம்ப எதையும் இழுத்துப் போட்டுக்காதடா.. முதல்ல போய் தூங்கு.. அவ்வளோ டல்லா இருக்கு பேஸ்..” என, “சரிடா அண்ணா..” என்றுவிட்டு சந்தோசமாகவே தன் அறைக்குச் சென்றான் தீபன் சக்ரவர்த்தி.

சிறியவன் சென்றதும் பெரியவனும் சென்றிட “என்ன சின்னவன் ரொம்ப குஷியா இருக்கான் போல..” என்று உஷா கேட்கவும்,

“இல்லையா பின்ன.. எப்படி ஒவ்வொன்னும் செஞ்சிருந்தான் தெரியுமா.. நானே அசந்து போயிட்டேன்.. ” என்று சக்ரவர்த்தியும் சொல்ல,

“ஒவ்வொரு வருசமும் அப்படிதான் சொல்றீங்க.. பெரியவன் பத்தி கவலை இல்லை. ஆனா இவனை ஒரு கல்யாணம் அது இதுன்னு நினைக்க முடியலை.. எப்போ என்ன பண்றான் எங்க இருக்கான் எதுவுமே தெரியலை..

அப்பப்போ பார்ட்டின்னு வேற போயிடுறான்.. சரி பொண்ணு கூட சுத்துறானா பார்த்தா அதுவும் எதுவும் இவனுக்கு செட்டாகலை போல..” என, சக்ரவர்த்தி சிரித்துவிட்டார்.

“என்னங்க??!!”

“உனக்கு இதெல்லாம கவலை..” என்றார் இன்னும் சிரித்து.

“அட போங்க.. இவனை ஒரு வழிக்குக் கொண்டு வரணும்னு நினைக்கிறதுக்கே பக்குன்னு இருக்கு..” என்ற உஷாவிற்கு தெரியவில்லை தீபனின் சங்கதிகள் எல்லாம் தெரிந்தால் என்னாகுமோ..

இப்படி பிள்ளைகளின் வாழ்வு பற்றி பேசியபடி பெற்றவர்கள் இருவரும் உறங்கிட, மறுநாள் அனைவரும் எழவே வெகு நேரம் ஆகிப்போனது. தீபன் வெகு தாமதாமாகவே வர,

சக்கரவர்த்தியோ “டேய் தீபன்.. கலக்கிட்ட டா.. பாரு.. எல்லா பேப்பர்லயும் நம்ம கூட்டம் தான்.. நியூஸ்ல புல்லா அதான் போடறான்.. கலக்கிட்ட..” என்று அவனின் தோள் தட்டியவர் “சொல்லு உனக்கு என்ன வேணும்.. அப்பாக்கிட்ட கேளு..” என,

“அப்பா..!!” என்று பார்த்தான்..

“கேளு டா.. உனக்கு என்ன வேணும்.. சொல்லு அப்பா செஞ்சு தர்றேன்..” என,

“என்னங்க அவன் என்ன சின்ன பையனா??!! இன்னும் உங்க முன்னாடி வந்து எனக்கு இது வேணும்னு கேட்க..” என்று உஷா சொல்ல,

“ம்ம்ச் இது வேற உஷா.. ஒரு அப்பாவா என்னை பெருமை பண்ணியதுக்கு. டெல்லில இருந்து எத்தனை போன்ஸ் தெரியுமா??! நீயும் பார்த்துட்டு தானே இருந்த..” என்றவர் “சொல்லுடா உனக்கு என்ன வேணும்..” என்று திரும்பக் கேட்க,

“இப்போதைக்கு எதுவுமே வேணாம்ப்பா..” என்றான் நல்ல பிள்ளையாய்..

“டேய்..!!!”

“நிஜமா ப்பா.. இப்போதைக்கு எதுவும் வேணாம்..” என்று அழுத்தி சொல்ல,

“ஓ/!! அப்போ கேட்க எதுவோ இருக்கு.. ஆனா அது இப்போதைக்கு இல்லை.. ஒருநாள் கேட்ப அப்படித்தானே..” என்று அவர் சரியாய் யூகிக்க, தீபன் சிரித்துக்கொண்டான் அவ்வளவே..

“என்னடா அப்படியா??!” என்று உஷா கேட்க, “ம்மா கேட்கிறப்போ பார்த்துக்கோங்க ரெண்டுபேரும்..” என்றிட,

“என்னவோ போடா.. நீயும் உறுப்பட்டா சரி..” என்றுவிட்டு போனார் அம்மா..

“நீ விடுடா அம்மா அப்படித்தான்..” என்று சக்கரவர்த்தியும் அவனின் தோளில் தட்டிவிட்டுப் போக, தீபனுக்கு இப்போது அனுவின் நியாபகம்..

நேரம் பார்க்காது அழைத்திட, அவளோ அழைப்பை முதலில் ஏற்கவில்லை. பின் சிறிது நேரத்தில் ‘இன் மீட்டிங்..’ என்று மெசேஜ் வர, தீபனுக்கு சட்டென்று ஓர் எண்ணம் அவளை சந்தித்தால் என்னவென்று..

வருகிறேன் என்றெல்லாம் சொல்லவேயில்லை. கிளம்பிவிட்டான்.

வெளியில் வந்ததும் தர்மா வந்து “ஷர்மா வீட்ல ரொம்ப பிரச்சனை.. அவனோட வொய்ப் அவனை டைவர்ஸ் பண்ண போறேன்னு சொல்லிட்டு இருக்காங்க..” என,

“பண்ணட்டும்.. அது அவன் பிரச்சனை. வெளிய மட்டும் அவன் வரட்டும். நம்மலே  சுமுகமா அதையும் செஞ்சிடலாம்..” என்று சொல்லி சிரிக்க, தர்மாவும் சிரித்துக்கொண்டான்.

“எங்க போகணும்??!!” என்று கேட்க,

“ஜஸ்ட் அப்படியே ஒரு டிரைவ் போய்ட்டு வர்றேன்.. இம்பார்ட்டன் அப்படின்னா மட்டும் கால் பண்ணு..” என, தர்மா யோசனையாய் பார்க்க,

“சிட்டிக்குள்ள மட்டும் தான்..” என்றவன் கார் எடுக்க “அம்மா எங்கன்னு கேட்டா??!!” என்று திரும்ப தர்மா கேட்க,

“டேய்..!!! இப்போ உனக்கு நான் எங்க போறேன் தெரியனும் அதானே..” என்று கேட்டவன் பேச்சில் அதட்டல் இருந்தாலும், முகத்தினில் சிரிப்பு இருக்க “புரிஞ்சது..” என்று தர்மா சொல்லிட,

“அது..!!!” என்றுவிட்டுப் போனான்.

நாகா கொஞ்சம் சீரியஸ் டைப் என்றால் தர்மா கொஞ்சம் ஜோவியல்..

அனுராகா அன்றைய தினம் நிஜமாகவே ஒரு மீட்டிங்கில் தான் இருந்தாள். அவள் பொறுப்பெடுத்துக்கொண்ட பிறகு நடக்கும் முதல் மீட்டிங். கொஞ்சம் மனதினில் டென்சனாகவும் இருந்தது. இருந்தாலும் அவளுக்கு உதவத்தான் அத்தனை பேர் இருந்தார்களே..

“நம்மளோட கன்சர்ன், அதோட நேச்சர் எல்லாமே உங்களுக்குத் தெரியும்.. பட்.. நம்மளோட இந்த பிராஞ் வெரி மச் ஸ்பெசல் டூ மீ.. சோ.. கண்டிப்பா நெக்ஸ்ட் மன்த் இருந்து நம்ம கிராப் ரைசிங்ல தான் இம்ப்ரூவ் ஆகணும்.. என்னோட நீங்க எல்லாம் சப்போர்ட்டா இருப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கு…” என்று அனுராகா பேச, மேலும் ஓர் அரை மணி நேரம் கலந்துரையாடல் தொடர, அதன் பின் தன்னறைக்கு அனுராகா வந்ததும்,

ரிசப்சனில் இருந்து அழைப்பு வந்தது “மேம் உங்களைப் பார்க்க தீபன்னு ஒருத்தர் வெய்ட் பண்றார்..” என, சட்டென்று ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது அனுவிற்கு.

இதயம் கொஞ்சம் வேகமாய் துடிப்பது போல் இருக்க, “எப்போ வந்தாங்க??!!” என்றாள் வேகமாய்..

“ஹால்ப் ஹவர் ஆச்சு மேம்..” என,

“வாட்??!! ஏன் என்கிட்டே அப்போவே சொல்லலை.. அட்லீஸ்ட் என் ரூம்ல வெய்ட் பண்ண சொல்லிருக்கலாம் தானே..” என்று கடிந்தவள், “ஐ வில் கம் தேர்…” என்று வைத்துவிட்டு, வேக வேகமாய் லிப்டில் ஏறி ரிசப்சன் இருக்கும் தளம் செல்ல, அங்கே காத்திருப்பு அறையில் தீபன் இருக்க,

“ஹேய் தீபன்..” என்றபடி வர, அவளுக்கு பின்னே வேகமாய் அந்த ரிசப்சன் பெண்ணும்..

“ஹாய்.. ராகா…” என்று தீபன் எழுந்திட, வரவேற்ப்பாய் ஓர் அணைப்பு இருவரிடமும் நிகழ, சட்டென்று விலகியும் கொண்டனர்.

இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று ஒட்டி பின் மீள “மேம்…” என்ற ரிசப்சன் பெண் ஒரு சிறு பொக்கே நீட்ட “யா தேங்க்ஸ்..” என்றவள் “வெல்கம்..” என்று தீபனிடம் நீட்ட,

அவனும் தேங்க்ஸ் என்று பெற்றுக்கொண்டவன் “இந்த பார்மாலிட்டி எதுக்கு..” என,

அனுராகா ‘நீ போலாம்..’ என்பதுபோல் அப்பெண்ணை பார்க்க, அவளும் சென்றிட, “எனக்கென்ன தெரியுமா இந்த பொண்ணு பின்னாடியே பொக்கே கொண்டு வருவான்னு…” எனவும்,

“அடப்பாவி அப்போ நீ கொண்டு வர சொல்லலையா??!!” என்று சிரித்தான் தீபன்..

“தோடா.. உனக்கெதுக்கு பொக்கே..” என்றவள் “சாரி ஒரு மீட்டிங்ல இருந்தேன்..” என,

“இட்ஸ் ஓகே..” என்று வெகு இயல்பாய் தோள்களை குலுக்கிக்கொண்டான் தீபன் சக்ரவர்த்தி.

அப்போது தான் கவனித்தாள், ஒரு வெள்ளை நிற சட்டை, காக்கி நிற ஜீன்ஸ்.. அவனே அழகன் தான்.. ஆனால் இப்படியான சிம்பிளான உடைகள் கூட சில நேரம் மேலும் அழகாய் காட்டும். அதுபோல அனுவிற்கு இப்போது தோன்ற,

“மேடம்..??!!!” என்று அவளின் முன்னே சொடுக்கு போட,

“ஓ!! சாரி சாரி.. வா என்னோட ரூம் போகலாம்..” என்று அழைத்துக்கொண்டு சென்றாள்.

‘நீ  என்ன நினைச்ச.. இப்போ என்ன பண்ணிட்டு இருக்க.. அனுராகா நீ சரியில்லை..’ என்று அவளின் மனது சத்தமாய் கத்த,

‘அதெல்லாம் எனக்கும் தெரியும்..’ என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டாள்,

‘ஏன் வந்திருக்கிறான்??!!’ என்ற யோசனை மட்டுமே..

“கம் கம்..” என்று அறைக்குள் அழைத்துச் செல்ல, ஒருமுறை சுற்றி நின்று பார்த்தான்,  “ம்மா செமையா இருக்கு ராகா..” என,

“சின்ன சின்ன சென்சஸ் பண்ணனும்..” என்றவள் “உட்கார் தீபன்..” என, அவன் அமர்ந்ததும் தானும் அமர்ந்துகொள்ள,

அவள் அவளின் முதலாளி என்ற இருக்கையில் அமராது, அவனுக்கு சமமாய் மற்றொரு இருக்கையில் அமர்ந்தது என்னவோ தீபனுக்கு அந்த நொடி மிக மிக அவளைப் பிடிப்பதாய் தோன்ற,

“உன்னோட சீட் இது இல்லையே..” என்றான் அப்போதும் புன்னகை முகமாகவே..

“நான் உன்னோட பாஸ் இல்லையே..” என்று அவளும் சொல்ல,

“இருந்துக்கோ.. நான்வேனும்னா என்னோட பாஸா நீ இருக்க அப்பாயின்மென்ட் தர்றேன்..” என,

“தீபன்??!!!” என்று அதிர்ந்து சிரித்தவளுக்கு, அவனின் இந்த பேச்சுக்கள் எல்லாம் அப்படியொரு ஆனந்தம் கொடுக்க, அவள் தன்னையும் மீறுகிறாள் என்பது நன்றாகவே புரிந்தாலும், மீறி சென்றிடவே விருப்பமாகவும் இருந்தது.

“சொல்லு எப்போ இருந்து பாஸ் ஆகுற??!!” என்று தீபன் கேட்க,

“இதை கேட்கத்தான் வந்தியா நீ..” என்றவள் “ஜூஸ் சொல்லவா?!!” என,

“உன் இஷ்டம்..” என்றான்..

தீபனுக்கு ஒருவகை உணர்வு என்றாள், அனுராகாவிற்கு வேறுவிதமாய் இருந்தது. தானாக தேடி வந்திருக்கிறான் என்பதே அவளுக்கு ஒரு உற்சாகம் கொடுக்க,

“என்ன இந்த பக்கம் ??!!” என்றாள்.

“சும்மாதான் உன்னோட ஆபிஸ்ல ஜூஸ் நல்லாருக்கும் சொன்னாங்க சோ குடிச்சிட்டு போகலாம் வந்தேன்..” என,

‘தோடா..!!!’ என்று பார்த்தவள், ஜூஸ் வரவும், அவனுக்குக் கொடுக்க, வாங்கிப் பருகியவன், திடுமென,                   

“ஓகே.. அப்போ ஒரு பார்ட்டி பண்ணலாமா??!!!” என்று தீபன் கேட்க,

சிரிப்பை விட்டு அனுராகா முறைக்க, “நிஜமாத்தான் கேட்கிறேன்.. இதுவரைக்கும் உன்னை நான் சரியா ட்ரீட் பண்ணலை.. நீ பாரு எப்படி கவனிக்கற.. சோ இனிமேலாவது..” என்று சொல்லும்போதே,

“இனிமேலாவது நான் எதுவும் இருக்கவேணாம் நினைச்சா நீ விடவே மாட்டேன்கிற தீபன்..” என்றாள் அவளும்.

“விடலைன்னு தெரியுது தானே.. அப்போ ஏன் இவ்வளோ பிடிவாதம் உனக்கு..” என்று அவனும் கேட்க, “ம்ம்ச் தெரியலை..”என்றாள் உதடு சுளித்து.

“நாளைக்கு நைட் ஒரு நைன்னோ கிளாக் ஓகேவா உனக்கு??!! நான்  வந்து பிக்கப் பண்ணிக்கிறே…” என,

“நான் இன்னும் டிசைட் பண்ணலை..” என்றவள் “ஆமா நீ ப்ரேக் அப் பார்ட்டி எல்லாம் நிறைய குடுப்பியாம்..” என,

‘இது யார் சொன்னா??!!!’ என்று பார்த்தான்.

“ஆன்ட்டி தான் சொன்னாங்க..” என்றவள் “இதுவரைக்கும் எத்தனை ப்ரேக் அப்ஸ்..” என்று கிண்டலாய் கேட்க,

“அட நீ நினைக்கிறது போல எல்லாம் இல்லை. எதுவும் சீரியஸ் ரிலேஷன்ஷிப் இல்லை.. என்னோட ரொம்ப க்ளோஸ் ஆகணும்னு நினைச்சா நானே கழண்டுப்பபேன்..” என்று தீபன் சிரிக்க,

“அப்போ… டைம் பாஸ்க்கா பழகின நீ??!!” என்றாள் அனுராகா கண்களை சுருக்கி..

பேச்சு வேறு திசைக்கு செல்கிறது என்று புரியவும் “ஹேய் அனு… என்னை யூஸ் பண்ணிக்கணும் நினைச்சா தென் நோ மோர் ரிலேஷன்ஷிப்.. மத்தபடி நான் யாரையும் லவ் எல்லாம் பண்ணி அது ப்ரேக் ஆகி பார்ட்டி எல்லாம் கொடுக்கலை..” என்று சீரியசாய் முகம் வைத்து சொல்ல,    

“ஹா ஹா உண்மையா??? அப்போ இந்த பார்ட்டி என்ன நேம்??!!” என்று அனுராகா கேட்க, “ம்ம் ப்ரபோசல் பார்ட்டின்னு வச்சுக்கோ..” என்று சொல்ல, அனுராகாவின் இருதயம் ஒருநொடி நின்று பின் துடித்தது.   

அவள் அமைதியாய் இருக்க “உனக்கு ஓகே வா??!!” என்று அவன் கேட்ட தொனி ‘இவன் எதுக்கு ஓகே வா கேட்கிறான்??!!’ என்று யோசிக்க வைக்க,

“நாளைக்கு ஓகே வா??!!” என்று தீபன் திரும்ப அவளின் கண்களைப் பார்த்து கேட்க,

“நைட் பார்ட்டி வேணாம்.. ஜஸ்ட் மீட் வேணும்னா பண்ணிக்கலாம்..” என்று போனால் போகுது என்பதுபோல் அவள் சொல்ல,

“மீட்டா..!! ஓகே.. பட் என்னோட சாய்ஸ் தான் எல்லாமே..” என, சரி என்றுவிட்டாள் அனுராகா..

அவளுக்கே ஆச்சர்யம் தான்.. தானா இப்படி என்று.. இருவருக்குள்ளும் கசப்பான சங்கதிகள் நிறைய உண்டு.. அதை இருவருமே நினைப்பதில்லை என்பது வேறு விஷயம்.. ஆனால் அதெல்லாம் கடந்து இப்போது இப்படி பேசிக்கொண்டு இருக்க, தீபனுக்கு எப்படியும் நாளை மனதில் இருப்பதை சொல்லி விடுவது என்ற நிலைக்கு வந்துவிட்டான்.

“அப்போ டைம் சொல்லு..” என்று தீபன் கேட்க, “ம்ம்ம் ஒரு செவன் போல ஓகே வா.. ரொம்ப லேட்டாகாது தானே..” என,

“ஓகே டன்..” என்றவன் சொன்னது போலவே மறுநாள் மாலை ஏழு மணிக்கு அவளை அழைத்திட, “ஆன் தி வே  தீபன்..” என்றவளுக்கு மனதினில் புது உற்சாகக் குமிழ்கள்..

யாரோடும் இப்படியே தனியே சென்றதில்லை. நீராஜாவோடு மட்டும் தான் தனியே எங்கு செல்வது என்றாலும்.. மற்றபடி பார்டிக்கல் என்றால் குழுவாய் செல்வதுதான்.. ஆனால் இன்றோ??!!

எந்த தைரியத்தில் அவனோடு கிளம்பினாள் என்று அவளுக்கே ஆச்சர்யம்..

தீபன் சொன்ன இடத்திற்கு வந்திட, தீபனின் கார் இருப்பது கண்டு, அவளும் காரை நிறுத்த “வெல்கம் ராகா..” என்றபடி தீபன் அவளின் கார் கதவினை திறக்க, அவளின் பார்வை சுற்றிலும் ஓடியது..

எதுவோ தோட்டம் போலிருந்தது. நகரத்தை விட்டு கொஞ்சம் தூரம் தள்ளித்தான்.. பார்த்தபடி நிற்க, “சேப் தான்.. சோ பயம் எல்லாம் தேவையில்லை..” என்று தீபன் சொல்ல,

“ஜஸ்ட் பார்த்தேன்..” என்றவளுக்கு மரம் செடி கொடிகளை தவற வேறெதுவும் தெரியவில்லை.. ஆங்காங்கே விளக்குகள் இருக்க, அந்த வெளிச்சதினில் தான் இருவரும் நடந்தனர்.

“ம்ம் நைஸ் பிளேஸ்…” என்று அனுராகா சொல்ல, தூரத்தில் சிறு குடில் ஒன்று தெரிய, “இங்கயும் குடிலா??!!” என்றாள்.

“ஹா ஹா.. எஸ்.. பட் அங்க இல்லை.. வேற ஒரு பிளேஸ் ரெடி பண்ணிருக்கேன்..” என்றவன், அவளை பக்கவாட்டு பாதையில் அழைத்து செல்ல, அங்கே ஒரு நீச்சல் குளம்.. ஆனால் நீரில்லை அதில்..

“இதுக்குள்ள உட்கார போறோமா??!!” என்று அனுராகா வியந்து கேட்க,

“ஹா ஹா.. உள்ள தான் ஆனா இதுல இல்லை..” என்றவன் “கம்மான் இறங்கு..” என, அனுவிற்கு படபடப்பாய் இருந்தது.

சுற்றிலும் யாருமில்லை.. இவன் மட்டுமே.. இருட்டியும் இருக்க, என்ன தைரியம் அனு??!! என்று அவளுக்கு அவளே கேட்டுக்கொள்ள, அவளின் இயற்கையான குணம் தலைத் தூக்கியது,

“என்னை மீறி இவனால என்ன செஞ்சிட முடியும்??!!”

இந்த எண்ணம் வந்ததுமே அவளில் ஒரு நிமிர்வு வந்திட, “நானே இறங்கிப்பேன்..” என்றவள் அந்த நீரில்லா நீச்சல் குளத்தில் இறங்க, அதன் நடுப்பகுதிக்கு அழைத்துச் சென்றவன், தன் காலின் கிழிந்த டைல்ஸில் லேசாய் கை வைத்து அழுத்த, அந்த கல்லின் ஒரு ஓரம் மட்டும் திறக்க, அதற்கான சாவி போட்டு இப்போது தீபன் திருக, இப்போது முழுதாய் அந்த கல் திறந்து ஒருவர் மட்டுமே இறங்கி உள்ளே செல்லும் வழியை கொடுக்க, அனுராகா என்னவோ அதிசயமாய் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“கம் அனு.. நான் எங்க கால் வைக்கிறேனோ.. அங்கேயே வை..” என்று அவன் கை நீட்ட, அவளையும் அறியாது அவனின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.

புதுமையாய் இருந்தது.. மூங்கிலினால் ஆனா ஒரு பதுங்குக் குழி.. இல்லை இல்லை பதுங்கு வீடு… கீழ சகல வசதிகளும் இருந்தது.. எல்லாமே மூங்கில்கள் தான்.. இருக்கைகள், படுக்கை, மேஜைகள்.. முகம் பார்க்கும் கண்ணாடி, ஒரு குளியல் அறை என்று எல்லாமே..

கண்கள் விரித்து, அதிசயமாய் பார்த்துக்கொண்டு அனுராகா நிற்க “சோ.. ஹவ் இஸ் திஸ்..” என்று தீபன் இரு கைகள் விரித்துக் கேட்க,

“நிஜமா நான் இப்படி ஒரு பிளேஸ் எக்ஸ்பெக்ட் பண்ணலை..” என்றவளுக்கு இன்னமும் அந்த பிரம்மிப்பு மாறவில்லை..

“ம்ம்.. ரொம்ப யோசிக்காத, ரெய்ட் டைம்ல யூஸ் ஆகும்னு இப்படி ப்ளான் பண்ணது..” என, “அதானே பார்த்தேன்..” என்று அமர்ந்துகொண்டாள்.  

வந்த வழியை தீபன் மூடிடவில்லை.. திறந்தே தான் இருந்தது, அந்த வழியாக மெல்லிய வெளிச்சமும், காற்றும் வீச, இங்கேயோ அறை முழுவதும் கண்ணாடி குவளைக்குள் இருந்த மெழுகு வர்த்திகள் ஒளி வீசிக்கொண்டு இருந்தன..

நிஜமாக சொள்ளவேண்டும் என்றாள், இந்த இடமும் சூழலும், யாராக இருந்தாலும் மனதை அசைத்துப் பார்க்கும் தான். அதிலும் தீபன் என்ற ஆண் மகனும், அனுராகா என்ற பெண்ணவளும் இருக்க, ஏற்கனவே இருவரின் மனதிலும் சலனங்கள் இருக்க, அந்த சூழல் இன்னும் அவர்களை மயக்கம் கொள்ளச் செய்தது என்பதுதான் நிஜம்..

இருவருக்குமே பேச்சில்லை.. ஒருவித மோன நிலை.. தீபன் நிறைய பேசவேண்டும் என்று எண்ணி அழைத்து வந்திருக்க, அவனுக்கே அவளைக் கண்டு மனதினில் தடுமாற்றமாய் இருந்தது..

அடர் நீல நிற ஸ்லீவ்லஸ் லாங் கவுன் போல ஒன்று அணிந்திருந்தாள்.. வழக்கம் போல, அவளின் கேசம் மொத்தத்தையும் தூக்கி ஒரு பக்கம் போட்டிருக்க, அவளின் கழுத்திற்கும் காதிற்கும் இடையே இருக்கும் மச்சம் அவனுக்கு அழகாய் காட்சி அளித்தது..

அன்றே அதனைப் பார்த்து முத்தமிட தோன்றியது.. இன்றோ.. கேட்கவும் வேண்டுமா என்ன??!!

தீபனின் பார்வை தன் மீது இருப்பது உணர்ந்து, அனுராகாவிற்கு உள்ளே திடுக் திடுக் என்றாலும், இந்த அவஸ்தைகள் எல்லாம் பிடித்தமானதாகவே இருக்க, ஆனாலும் எத்தனை நேரம் இப்படியே இருக்கவென்று தோன்றி

“அப்… அப்போ கிளம்பலாமா??!!” என்றாள் சட்டென்று..

“என்னது??!! கிளம்பவா??!! டின்னர் இங்கதான்..” என்றவன் ஒரு ட்ரே தள்ளிக்கொண்டு வர, “இப்போ ஏதும் வேணாம்..” என்று அனுராகா சொல்ல,

“ஜஸ்ட் ட்ரிங்க்ஸ்..” என்று தீபன் வைன் பாட்டில் காட்டிக் கேட்க, “ம்ம் கொஞ்சம் மட்டும் போதும்..” என,

“இது ஓல்ட் ஏஜ் வைன் ம்மா.. சோ கொஞ்சம் மட்டும் தான்..” என்று சொல்லி இரு கண்ணாடி குவளையில் ஊற்றிக்கொள்ள, ‘சியர்ஸ்..’ என்று இருவரும் குவளைகளை நீட்டி தட்டிட, வைன் பிடித்ததா இல்லை அந்த சூழலின் இனிமை பிடித்ததா என்று இருவருக்கும் தெரியவில்லை.

மொத்தத்தை அப்போது அவர்கள் அவர்களாக இல்லை.. இது வேறுவிதமான போதை.. காதல் போதை.. ஓர் மயக்கம்.. ஓர் மோகம்..

“ஷால் வீ டான்ஸ்..” என்று தீபன் கைகள் நீட்ட “யா..” என்று அவனி கரம் பற்றிக்கொண்டு அனுராகாவும் எழ, மெல்லிய இசையினை தீபன் ஒலிக்கச் செய்ய,  நேரம் செல்ல செல்ல, இருவரின் பார்வையும் ஒன்றாக, கோர்த்திருந்த கைகள் அணைப்பாய் மாறிட,

“ராகா…” என்ற அவனின் அழைப்பு, அவளுக்கு வெகு அருகினில் கேட்டிட,  தீபனின் வெகு நாளைய ஆசையான அந்த மச்ச முத்தம் இன்று ஈடேறியது…

அவன் – என் காதல் ராட்சசி நீ..

அவள் – அதற்கான பரிசா இந்த வேம்பையர் முத்தம்??!!

காதல் – முத்தம் எல்லாம் முதல் படி மட்டும்தான்…

Advertisement