Advertisement

                                                      நான் இனி நீ – 16 – 1

அனுராகாவிற்கு இந்த பண விசயமே மனதில் போட்டு உறுத்திக்கொண்டு இருந்தது. ஏன் திரும்பக் கொடுத்திருக்கிறான்??!!! இதற்கான காரணம் தெரிந்தே ஆகவேண்டும் போல் இருக்க, அவனை தொடர்புகொள்வது எப்படி என்று யோசிக்க,

திரும்ப மேனேஜரை அழைத்து “மிஸ்டர் தீபன் சக்ரவர்த்திக்கு லைன் கனக்ட் பண்ணுங்க..” என,

“மேம் அவரோட டைரக்ட் நம்பர் இல்லை.. அவர் பாடிகார்ட்ஸ்ல யாராவது ஒருத்தர் தான் பேசுவாங்க..” என்று அவரும் சொல்ல,  அவளுக்கு என்ன தெரியாதா?? யார் அவர்கள் என்று.

“ஓகே.. லைன் போடுங்க..”  என்றவளுக்கு, மனதில் கோபமா குழப்பமா எதுவென்று புரியவில்லை.

ஆனால் கண்டிப்பாய் இந்த பணம் திரும்ப வந்தமைக்கு தானும் ஒரு காரணமாய் இருந்திருக்க வேண்டும் என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது.

நாகா தான் அழைப்பை ஏற்றான். மேனேஜர் விபரம் சொல்லி அனுராகா தீபனோடு பேசவேண்டும் என்றும் சொல்ல,

“இப்போ அவர் பிசி..” என்றுதான் பதில் வந்தது.

“மேம் அவர் பிசியாம்..” என,

“நான் பேசணும்னு சொன்னதா சொல்லுங்க.. இல்ல எங்க இருக்கான்.. ம்ம்ச்.. எங்க இருக்கார்னு கேளுங்க நேரா வர்றேன் சொல்லுங்க..” என, அவரும் அதை அப்படியே தெரிவிக்க,

நாகாவோ “வெய்ட் பண்ணுங்க கேட்டிடு சொல்றேன்..” என்றவன், தீபனை அழைத்து விபரம் சொல்ல,

“பார்ஸ்ட்டே லைன் கனக்ட் பண்றதுக்கு என்ன??! யார் யாரை வெய்ட் பண்ண வைக்கிறதுன்னு இல்லையா..” என்று தீபனிடம் திட்டுத்தான் விழுந்தது.

“சாரி.. நீங்க பிசியா இருந்தீங்க..” என,

“என்ன பிசி.. எதுவா இருந்தாலும் பேசுறவங்க யாருன்னு பார்க்கவேணாமா??!!” என, நாகாவிற்கே ‘அப்படி என்னடா??!!’ என்ற ஆச்சர்யம்.

ஓரளவு எல்லாம் தெரியும்தான். இருந்தாலும் இப்போதும் அப்படியா என்று அவனுக்குத் தெரியவில்லை.

“ஓகே லைன் கொடுக்கிறேன்..” என்றவன், தீபனின் எண்ணிற்கு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு விலக, மேனேஜர் திரும்ப தீபனிடம் விபரம் சொல்லி ஆரம்பிக்க,

“நீங்க உங்க மேம் கிட்ட போன் கொடுங்க..” என்றன் பட்டென்று..

போனை வாங்கிய அனுவோ “சார் அவ்வளோ பிசியா??!!!” என்று பல்லைக் கடிக்க, “ஹேய்.. நீ இப்படியெல்லாம் ஏன் கால் பண்ணனும்.. என் நம்பர் உனக்குத் தெரியும்தானே ராகா..” என,

“நம்பர் என் போன்ல இருக்கு..” என்றாள் எரிச்சலை அடக்கி.

“ஓ!!!” என்றவன், “ஓகே சொல்லு..” என,

“ம்ம்ச்..” என்று நெற்றியை தடவியல், “நீங்க போங்க..” என்று மேனேஜரிடம் சொல்லிவிட்டு, அவர் செல்லவும் “நீ என்ன எல்லாம் உன் இஷ்டத்துக்கு பண்ணிட்டு இருக்க தீபன்.. இந்த பணம் ஏன் திரும்பக் கொடுத்த..” என்று ஆரம்பிக்க,

‘முதல் நாளே இதானா?!!’ என்று பார்த்தான் தீபன்.

“தீபன்..!!!”

“ம்ம் சொல்லு ராகா..”

“ரீசன் தெரியனும் எனக்கு..”

“பெருசா ஒண்ணுமில்லை.. இந்த பணத்துக்கு அவசியம் இல்லை  சோ.. ரிட்டர்ன் பண்ணிட்டேன்.. உன்னோட அப்பா ஒன்னும் இதை கேட்டுக்கல..” என,

“அப்பா இன்சார்ஜ் இல்லை இங்க.. நான் தான்..” என்றாள் அவளும்.

“இன்னிக்குதான் பர்ஸ்ட் டே… ஹேய் பொக்கே வந்ததா??!!” என்று தீபன் பேச்சை மாற்ற,

அப்போதும் அவளின் மனதில் ‘ராஸ்கல்..’ என்ற எண்ணம்தான்.

“வந்துச்சு.. பட் இது இனி அக்கவுண்ட்ல சேர்க்க முடியாது..” என்று அவள் திரும்ப பணத்தை சொல்ல,

“தோடா.. இதெல்லாம் ஒரு பெரிய விசயமா??!! நாளைக்கே எங்க ஆப்போசிட் பார்ட்டி வந்து கேட்பான்.. இதெல்லாம் சகஜம் தான். ப்ரீயா விடு.. எப்படியும் இதுக்கான வேற பில்ஸ் உன்னோட ஆபிஸ்ல ரெடி பண்ணிருப்பாங்க..” என,

“உனக்கு பண்ணி கேட்டேன் பாரு என்னை சொல்லணும்…” என்றவள் வைத்துவிட்டாள்.

இவனோடு பேச பேச, அனுராகாவிற்கு தீபனிடம் இருந்து தள்ளி நிற்கவேண்டும் என்ற முடிவின் திடம் குறைவதாகவே இருந்தது. அதுவே ஒருவித எரிச்சலும்.. ‘இவன் என்னை பேச வைக்கிறான்..’ என்ற எண்ணமும் கொடுக்க,

‘பேசவே கூடாது..’ என்று அவளாக நினைக்க, மனதை முயன்று வேலையில் திருப்பியவள்,

“இந்த அமௌன்ட்க்கு வேற எதுவும் பில்ஸ் ரெடி பண்ணீங்களா??!!” என்று அக்கவௌன்ட் செக்சனில் கேட்க, கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்ட ரசீதுகள் அவள் முன்னே இருந்தன.

அனைத்தும் தொண்டு நிறுவனங்கள் பெயரை தாங்கி நிற்க, “இதெல்லாம் கிழிச்சுப் போட்டுட்டு, நிஜமாவே பணம் தேவை படுற ட்ரஸ்ட்க்கு பணத்தை பிரிச்சு கொடுத்து லீகல் பில்ஸ் வாங்கிடுங்க..” என்றுவிட்டாள்.

“ஆனா மேம்..!!!” என்று அக்கவுன்ட் மேனேஜர் தயங்க,

“சொல்றதை செய்றதுக்குத்தான் நீங்க இருக்கீங்க..” என்றவளின் பார்வையிலேயே அவர் தன்னப்போல் சரியென்று சொல்ல,  பின் மாலை வரைக்கும் இருந்தவள், வீட்டிற்கு வந்திட,     

“என்ன அனு எப்படி இருந்தது பர்ஸ்ட் டே..” என்று தாரா கேட்க,

“ம்ம் குட் மா..” என்றவள், “டாட் எங்க??!!” என்று விசாரித்தாள்.

“அவர் எப்போ இப்போ வீட்ல இருப்பார்..” என்ற தாராவும் “ஏன் ஏதும் கேட்கணுமா??” என,

“நத்திங் மா..” என்றவள், சிறிது நேரம் அமைதியாய் இருந்தாள். அம்மாவிற்கு எந்த அளவு இந்த விஷயம் தெரியும் என்று அனுராகாவிற்கு தெரியாது. ஆக அப்பா வரட்டும் என்று இருக்க,

“இந்த பார்சல் உனக்கு வந்தது..” என்று தாரா வந்து ஒரு பார்சல் கொடுக்க, அனுராகாவிற்கு சட்டென்று யூகிக்க முடிந்தது தீபன் தான் அனுப்பியிருக்கிறான் என்று.

வாங்கியவள் அதனைப் பிரிக்காது அப்படியே வைக்க, தாராவோ “என்ன அனு..” என, “போன்  ம்மா..” என்றாள் .

“ஆர்டர் பண்ணியா??!!”

“இல்லை.. தீபன் கொடுத்திருக்கான்..” என, “அதெப்படி பிரிச்சு பாக்காம இவ்வளோ சொல்ற??” என்ற தாராவிற்கு மகளின் மனது தீபனிடம் சாய்கிறதோ என்று தோன்றியது.

இன்று நேற்றல்ல, இந்த சில நாட்களாய் தாரா மனதில் இந்த கேள்வி இருந்துகொண்டே தான் இருந்தது.

“என்னோடது மிஸ் பண்ணிட்டான்ல சோ அவன் கொடுத்து விட்டிருக்கான்….” என,

“ஏன் உனக்கு புதுசு வாங்கிக்க முடியாதாமா..” என்றவர் “பிரி..” என்று சொல்ல, அனுராகாவும் வேறு வழியில்லாது பிரிக்க, நிஜமாகவே உள்ளிருந்தது புதிய போன் தான்.

‘அவனோடது அனுப்புறேன் சொன்னான்..’ அன்று அனுராகா முணுமுணுக்க, தாராவோ “புதுசு நீ கேட்டியா??!!” என்றார் ஒருவித பார்வையில்.

“ம்ம்ச் எனக்கு வேணும்னா நான் வாங்கிக்க மாட்டேனா??!!” என்றவள், அலைபேசியை ஆன் செய்திட, அவளது பழைய போனில் இருந்த அத்தனையும் புகைப்படங்கள், பாட்டுக்கள் என்று எல்லாமே இதிலும் இருக்க,

‘ராஸ்கல்.. எல்லாத்தையும் பார்த்திருக்கான்..’ என்று எண்ண, ‘DS காலிங்…’ என்று அலைபேசி சத்தமிட்டது.

அம்மா முன்னே எடுத்துப் பேசுவதா என்று தோன்ற, தாரவோ “எடுத்துப் பேசு..” என்று சொல்ல,

“இல்லை நான் அப்புறம் பேசிக்கிறேன்..” என்றுவிட்டாள்.

திரும்ப அழைப்பு வர, தாரவோ “அனு…!!” என்று அதட்டியவர், அவள் பேசட்டும் என்றெண்ணி சற்று தள்ளிப் போய்விட்டார். ஆனால் அவளைக் கவனிக்கத் தவறவில்லை.  

அழைப்பை ஏற்றவள் “என்ன சொல்லு??!!” என்றாள் எரிச்சலாய்..

“போன் பிடிச்சிருக்கா??!!!” என்ற தீபனுக்கு எப்படியும் இவள் சண்டை போடுவாள் என்று தெரியும்..

“ம்ம்ச் ரொம்ப முக்கியம் பாரு இது..” என்றவள், “இப்போ ஏன் கால் பண்ண??!!” என,

“தோடா.. கொடுத்துவிட்டது என்னோட போன்மா.. பார்த்து பத்திரமா வச்சுக்கோன்னு சொல்லத்தான் கால் பண்ணேன்..” என்று தீபன் சிரிக்க,

“உன்னுதா??!! புதுசா இருக்கே..” என்றாள்.

“புதுசு தான்.. பெங்களூர்ல இருந்து வர்றப்போ வாங்கினேன்..” என,

“ம்ம்.. ஓகே.. தேங்க்ஸ்.. சேம்திங் என்னோடதும் பத்திரம்..” என்றுசொல்ல, தாராவிற்கு ஒன்றுமே விளங்கவில்லை..

எரிச்சலாய் இருந்தாள், இப்போது இயல்பாய் பேசுகிறாள். அவளின் பொருள் என்ன அவனிடம் இருக்கிறது??!!! எதுவும் புரியவில்லை. ஆனால் இதெல்லாம் என்றுமே தாரா மகளிடம் கேட்டதில்லை. அதாவது அனுராகாவின் நட்பு என்ற வட்டத்தில் தாரா கால் பதித்ததில்லை.

இப்போதும் அப்படித்தான்.. எதுவென்றாலும் பிரச்னை இல்லாது இருந்தால் சரி என்ற அளவில் இருக்க,

தீபனோ “உன்னோட போன் அடிக்கடி சூடாகிடுது உன்னை போல..” என,

“யூ… யூ.. சரியான் ராஸ்கல் நீ..” என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டாள்.

‘ச்சே எப்படியெல்லாம் பேசுறான்.. இடியட்..’ என்று நினைக்க, அவளையும் மீறி ஒரு புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது முகத்தினில்.   

மீண்டும் அவளின் இதழ்கள் ‘ராஸ்கல்…’ என்று உச்சரிக்க, ‘வேணாம் அனு.. இது தேவையில்லை..’ என்று அவளின் மனது எச்சரிக்கை செய்தது.

அங்கே தீபனோ, வெளியில் கிளம்ப மனது உற்சாகமாய் இருந்தது. அனுராகா எங்கே அப்படியே தள்ளிப் போய்விடுவாளோ என்று எண்ணியிருக்க, அப்படி எதுவும் நடக்கவில்லை என்றதும் அவனுக்கு அதுவே பெரும் நிம்மதி கொடுக்க, இப்போது முழு மனதாய் தன் வேலையில் கவனம் செலுத்திட முடிந்தது.      

சக்கரவர்த்தி சொன்னதே தீபனுக்கு மனதில் ஓடியது.. இந்த சேட்.. அவரின் முழுப் பெயர் பல்ராம் சேட்.. அப்பாவிற்கு நன்கு பழக்கம். பல வருடமாய். பழக்கம் தான்.. இருந்தாலும் இப்போது அவர் செய்வது எல்லாம் எதுவுமே சரியில்லை என்பதாய் இருந்தது தீபன் சக்கரவர்த்திக்கு.

இன்று நேற்று இந்த எண்ணம் வரவில்லை. நன்கு விசாரித்து, அதுவும் பல்ராமை தொடர்ந்து செல்ல, உடன் இருந்தே கவனித்து சொல்லவென்று எல்லாம் ஏற்பாடு செய்து, அவனுக்கு வந்த தகவல்கள் எல்லாம் அவனின் சந்தேகம் சரி என்பதாகவே இருக்க, சரி இந்த சர்மாவை தூக்கினால் சேட் தன்னைப்போல் அடங்கிடுவான் என்று பார்க்க இப்போது அதுவும் நடக்கவில்லை.

ஷர்மாவை வெளியில் விட்டாலாவது இதற்கான மூலக்காரணம் யார் என்று தெரியும் என்று பார்த்தால், இப்போது அவன் எங்கிருக்கிறான் என்பது சுத்தமாய் தெரியவில்லை. அவனின் இரண்டாவது மனைவியையும் இப்போது கஸ்டடி கொண்டு வந்திட, அப்போதும் அவன் வெளிவரவில்லை..

இப்போது வேறு வழியில்லை பல்ராம் சேட்டை நேரில் சந்தித்துத்தான் ஆகவேண்டும். சொன்னது போல் இரவு பத்து மணிக்கு சேட்டை சந்திக்கப் போக, அவரோ ஏக போக வரவேற்புக் கொடுத்தார்.

எப்போதும் இப்படிதான். ஆனால் இன்றோ என்னவோ அனைத்தும் நடிப்பாகவே பட்டது..

“என்ன பேட்டா.. அப்பா எப்படிருக்கார்..” என்று தங்கப்பல் தெரிய சேட் சிரிக்க,  “ம்ம் ஷர்மா எங்க சேட்..” என்று நேரடியாய் விசயத்திற்கு வந்தான்.

அடுத்த நொடி சேட்டின் முகம் மாறிட,  “வேணாம் சேட்.. அப்பாக்கும் உங்களுக்கும் இருக்க பழக்கம் வேற.. ஆனா இந்த ஷர்மா விஷயம்.. நீங்க தலையிட வேணாம்.. அவனை என்கிட்ட கொடுதிடுக்ன..” என,

“அரே.. தீபன்.. பச்சா… உன்னை எனக்கு இதோ குட்டியா இருக்கப்போ இருந்து தெரியும்.. நீ இதெல்லாம் கவலே படாதே.. நான் பார்த்துக்கிறேன்..” என்று சேட் சொல்ல,

“கவலையா??!!! நானா??!!!” என்றான் தீபன் ஒருவித சிரிப்போடு..

சேட் பதில் சொல்லாது அப்படியே பார்க்க “சோ.. என்னைப்பத்தி நல்லா தெரியும்.. தெரிஞ்சும் நீங்க ஷர்மாவ ப்ரோடெக்ட் பண்ணா.. அடுத்து எதுவும் என் கையில இல்லை.. அவன் எங்களை ட்ரேப் பண்ணான். நீங்க அவனை ப்ரோடேக்ட் பண்றீங்க.. சரியில்லை சேட்…” என்றவன் தலையை ஆட்டியபடி பேசிக்கொண்டு இருக்கையிலேயே, துப்பாக்கி எடுத்து சேட் காலின் அருகே சுட்டுவிட்டான்..

‘இனி பேசி பிரயோஜனமில்லை.. பயம் காட்டிட வேண்டும்..’ இதுமட்டுமே தீபன் மனதினில் அப்போது..

“தீபன்…!!!” என்று சேட் அதிர,

“எதுவும் தெரியாம வருவேன்னு நினைசீங்களா??!!” என்று கத்தியவன், அவரின் முகம் இன்னும் அந்த அதிர்வில் இருந்து மீளாதது கண்டு,

“இப்படி ஒருத்தர் இருந்தீங்கன்ற அடையாளமே தெரியாம பண்ணிடுவேன் சேட்.. அப்பாவுக்காக மட்டும் தான் பாக்குறேன்..” என்று துப்பாக்கி வைத்தே மிரட்ட,

“நிஜமா ஷர்மா எங்கன்னு தெரியாது..” என்று சேட் சொல்லி முடிக்கும் முன்னே இப்போது  அவர் அமர்ந்திருந்த இருக்கையில் சுட, “பேட்டா.. தீபன்.. பஸ்…!!” என்று அவர் இரு கைகளையும் உயர்த்த,

“இன்னும் டூ டேஸ் டைம்.. அதுக்குள்ள ஷர்மா என்கிட்டே வரணும்.. இல்லை.. இதெல்லாம் உங்களை யார் செய்ய சொன்னான்னு சொல்லணும்.. ரெண்டு சாய்ஸ்.. நீங்களே எது வேணுமோ செலெக்ட் பண்ணிக்கோங்க.. பட் ஜஸ்ட் டூ டேஸ் தான்..” என்றபடி எழுந்துவிட, பல்ராமோ அரண்டு போய் அமர்ந்திருந்தார்.

இத்தனை தூரம் அவர் எதிர்பார்க்கவில்லை. கேள்வி கேட்பான் திட்டுவான்.. பின் அவன் அப்பாவை வைத்து சரிக்கட்டிவிடலாம் என்று பார்க்க, அவனோ சுடும் அளவில் இருப்பான் என்று யோசிக்கவில்லை.

தீபன் பற்றி தெரிந்திருந்ததால் தான் பல்ராம் எது பேசுவதாக இருந்தாலும் மிதுனோடு பேசுவார். ஆனால் இப்போதோ வகையாய் மாட்டிக்கொண்ட உணர்வு. உயிர் பயம் என்பது சும்மாவா ?!!

“என்ன பாக்குறீங்க.. நீங்க பண்றது எல்லாமே அண்டர்கிரவுண்ட் பிஸ்னஸ்ன்னு தெரியும்.. எங்களோட பணம் நிறைய நீந்தான் ஹேண்டில் பண்றீங்கன்னும் தெரியும்.. ஹவாலானா என்னன்னு தெரியாதா பச்சா இல்லை நான்.. பட் அதே ஹவாலா வச்சே உங்களை ஒன்னும் இல்லாம பண்ணவும் தெரியும்.. யோசிங்க..” என்றவன் கிளம்பி வந்துவிட்டான்..

சக்ரவர்த்தி நேரடியாய் யாரையும் பகைத்துக்கொள்ள மாட்டார். தீபனும் இதுநாள் வரைக்கும் அப்படிதான். ஆனால் இன்று சூழல் மாறிப்போனது. நம்மை பற்றி எதுவும் தெரியாத ஆட்களை பகைப்பதே பல பிரச்னைகளை வழிவகுக்கும். அனைத்தும் தெரிந்த ஒருவரை பகைத்தால்..

இனி அந்த நிலைதான் தீபன் சக்ரவர்த்திக்கு..

ஆனால் அவனோ அதெல்லாம் தூசியாய் ஊதித் தள்ளும் உறுதியில் இருந்தான்.

மறுநாள் மாலை பொதுக்கூட்டம். அதற்கான வேலையில் இப்போது தீபன் ஆழ்ந்திட, எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகம்.. ஆனாலும் தீபன் இதனை ஓரளவே யூகித்திருக்க, அதற்கான தக்க ஏற்பாடுகள் செய்திருந்தான். மாலை ஐந்து மணியில் இருந்து இரவு ஒன்பது மணி வரைக்குமான பொதுக்கூட்டம். தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள், இன்னும் தலைமை கட்சி, கூட்டணி கட்சி பிரமுகர்கள் என்று எக்கசக்கம். அவர்களின் பந்தோபஸ்து ஆட்களும் கூட.

பொதுக்கூட்ட ஏற்பாடு என்பது தீபனுக்கு புதிது இல்லை என்றாலும், இன்றைய தினம் என்னவோ அவன் ஒவ்வொன்றையும் அதீத கவனம் கொண்டு செய்வதாய் இருக்க, நாகா “எல்லாமே ஆல்ரைட் தான்..” என,

“இருந்தாலும்..” என்றவன், கடைசி வரைக்கும் மேடைக்கு போகவேயில்லை..

எப்போதுமே அப்படிதான். சக்ரவர்த்தியோடு மிதுன் தான் இருப்பான். எத்தனையோ முறை அப்பாவும் சரி அண்ணனும் சரி இவனை மேலே வா என்று அழைத்திருக்கிறார்கள். ஆனால் இன்று வரைக்கும் அவன் மேடை ஏறியது இல்லை..

“ஏன்டா இப்படி பண்ற நீ..” என்று சக்ரவர்த்தி கூட கேட்டுவிட்டார்.

“ப்பா.. மேடைக்கு வந்தா எல்லாரோடவும் பேசணும்.. பின்ன அதுவே எல்லாருக்கும் என்கிட்டே ஒரு ஈசி அப்ரோச் கொடுக்கும்.. அதெல்லாம் உங்களோட வச்சிக்கோங்க.. சில டீலிங்ஸ் பேசுறப்போ நான் கறாரா இருக்கணும்.. அதான் நமக்கு நல்லது.. சோ நான் தள்ளியே இருந்துக்கிறேன்..” என்றிடுவான்.

இன்றும் அதுபோலத்தான் மக்களோடு மக்களாய் அமர்ந்திருந்தான். மேடையில் இருந்து கவனிக்க முடியாத, அறிந்துகொள்ள முடியாத சில விசயங்களை இப்படி மக்களோடு மக்களாய் இருக்கையில் தான் அவன் தெரிந்துகொள்வான். அவர்களின் வெற்றிக்கு இதெல்லாம் கூட ஒரு காரணம் என்று சொல்லலாம்.

அன்றைய பொதுக் கூட்டம் மாபெரும் வெற்றி.. சக்ரவர்த்திக்கு மகனை நினைத்து பெருமை தாங்கவில்லை..  அனைத்து செய்தித் தாளிலும் முதல் பக்கத்தில் இவர்களின் பொதுக்கூட்ட செய்திகளே..

இது போதாது என்று சோசியல் மீடியாக்களில் செய்திகளை பரப்பவென்றே இவனுக்கு கீழ் ஒரு ஐம்பது பேர் வேலையில் இருந்தன..

மிதுனோ “கலக்கிட்ட டா..” என்று சொல்ல,  “போ டா..!!” என்று சொல்லி சிரித்துக்கொண்டான்..

எல்லாம் முடிந்து அனைவரும் வீட்டிற்கு வர, நள்ளிரவு எல்லாம் தாண்டிவிட்டது.   

Advertisement