Advertisement

                                                            நான் இனி நீ – 15

தீபனின் பேச்சுக்கள் எல்லாம் அனுராகாவிற்கு புதியதாய் இருக்க, ஒருசில நொடிகள் மௌனமாகவே இருந்தாள். அவனைப்போல் அவளால் பேசிட இயலவில்லை. அதையும் தாண்டி இது மிதுனின் போன். எப்போது வேண்டுமானாலும் வந்து கேட்பான்.. கேட்காவிட்டாலும் கூட அவள் நிறைய நேரம் அதை கையில் கொண்டு இருக்க முடியாது..

“நீ என்னவோ பண்ணு போ.. ஐ ஹேட் யூ தீபன்…” என்று பேச்சுவாக்கில் சொல்லி அனுராகா வைத்திட, தீபனுக்கோ அப்படியொரு மன நிம்மதி.

‘ஐ லவ் யூவோட பர்ஸ்ட் ஸ்டெப்பே ஹேட் யூ சொல்றதுதான் பேபி…’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவன், அவன் அறையில் இருக்கும் வால் ஹேங்கிங் கணினித் திரையை உயிர்ப்பூட்ட, அவர்கள் வீட்டின் வெளியே, மற்றும் ஹாலில் நடக்கும் காட்சிகள் எல்லாம் மாறி மாறி படமாய் விரிந்தது.

இப்படியான அமைப்பு இவர்கள் நால்வரின் அறையில் எப்போதுமே இருக்கும். பொதுவாய் சக்ரவர்த்தி இதனை எல்லாம் பெரிதாய் எடுத்துகொள்ள மாட்டார். உஷாவும் கூட

‘எனக்கு இதெல்லாம் உக்காந்து பார்க்க முடியாது..’ என்றிடுவார்..

ஆனால் வீட்டு மற்றும் குடும்ப ஆட்களின் பாதுகாப்பு விசயத்தில் தீபன், மிதுன் இருவருக்குமே அதீத அக்கறை உண்டு. வெளியே சென்றுவிட்டு வந்ததுமே போதும், இப்படி என்ன நடந்தது என்ன நடக்கிறது என்று பார்த்துகொள்வார்கள். தீபன் இப்போதும் அப்படியே பார்த்தபடி இருக்க, நாகா அழைத்துவிட்டான்.

“நீங்க சொன்னது முடிஞ்சது…” என,

குட்.. ஷர்மா ட்ரேஸ் பண்ண முடிஞ்சதா??” என்று இவனும் கேட்க, “இல்லை.. பட் இன்னிக்குக்குள்ள பண்ணிடலாம்…” என்று நாகா சொல்ல,

“எனி வீடியோஸ் ஆர் போட்டோஸ்..??” என,

“நிறைய இருக்கே…” என்றான் நாகா.

“ஹா ஹா ஷர்மா கேடின்னு தெரியும்.. பட் நான் எப்படின்னு அவனுக்குத் தெரியலை..” என்றவன் “அந்த போன் அப்படியே கொண்டு போய் ஷர்மா வொய்ப் கிட்ட கொடுத்திடு.. என்னோட கெஸ்.. அவன் வெளிய வந்துத்தான் ஆகணும்…” என்றவனுக்கு கண்டிப்பாய் தன் திட்டம் பலிக்கும் என்ற எண்ணம்.

பேசிக்கொண்டு இருந்தவனின் பார்வை, திரும்ப அத்திரையில் பதிய, சக்ரவர்த்தியும், அவரோடு சில ஆட்களும் வந்து ஹாலில் அமர்வது கண்டு, தீபனின் நெற்றி சுருங்க, அப்பாவின் பிஏவிற்கு அழைத்து “என்ன இந்த டைம்ல இவங்க எல்லாம் வந்திருக்காங்க.. அப்பாயின்மென்ட் இல்லையே..” என்று விசாரிக்க,

“இல்ல சார்.. ஒரு காலேஜ் திறப்புவிழா.. நேர்ல பார்த்து அப்படியே கூடவே வந்துட்டாங்க..” என,

“செக் பண்ணிட்டு தானே உள்ளே விட்டீங்க??!!” என்றான்.

“அய்யா கூட வர்றப்போ எப்படி செக் பண்றது..” என்று பிஏ தயங்க, அவரின் தயக்கம் பார்த்தே சக்ரவர்த்தி

“என்ன மாடியில உக்காந்துட்டு கேள்வியா கேட்கிறானா??” என்றார் சின்ன மகனை சரியாய் யூகித்து.

எப்போதுமே பிள்ளைகள் மீது அவருக்கு அதீத பெருமை.

“கீழ வரச்சொல்லு…” என்று அவர் சொன்னதும், பிஏவோ “சார்..” என்று தீபனை அழைக்க,

“வர்றேன் சொல்லுங்க…” என்றவன், அடுத்து உடைமாற்றி கீழே வந்துவிட்டான்..

அப்பாவோடு வந்தவர்களை வரவேற்ப்பாய் ஒரு பார்வை “என்ன கொடுத்தீங்க??!!” என்று பிஏவிடம் கேட்க, “இல்ல தம்பி இப்போ கிளம்பிடுவோம்..” என்றனர்.

‘என்னப்பா…’ என்று சக்கரவர்த்தியை காண, “இவங்க சொல்றதை செஞ்சி கொடுத்துடு தீபன்..” என, “என்ன செய்யணும்..” என்றான்.

“ஒரு இடம்.. இவங்க அட்வான்ஸ் போட்டிருக்காங்க.. பட் அந்த பார்ட்டி இப்போ பின்வாங்குது போல.. ரொம்ப பெரிய தொகை.. எல்லா வழியில மூவ் பண்ணிட்டு ஒன்னும் ஆகலை போல..” என,

“ம்ம் சரிப்பா..” என்று வந்தவர்கள் முன்னே சொல்லி, “நெக்ஸ்ட் வீக் போல இவருக்கு போன் பண்ணுங்க.. ஒரு டைம் பார்த்துப்போம்..” என்று அப்பாவின் பிஏவை கை காட்டி, பேசி அனுப்பிவிட்டான்.

அவர்கள் சென்றதுமோ “என்னப்பா.. எலெக்சன் டைம்ல இதெல்லாம் இழுத்துக்கனுமா??” என,

“நம்ம சதாசிவம் சம்பந்திடா.. முடியாதுன்னு சொல்ல முடியலை..” என்றார் சக்ரவர்த்தி.

“யாரா இருந்தா என்னப்பா??!!!” என்றான்.

“நம்ம ஆளுங்கடா.. இந்த நேரத்துல நம்ம யாரையும் பகைச்சிக்க முடியாது.. இவங்க அங்காளி பங்காளி வோட்டே நிறைய இருக்கு…” என்று சக்ரவர்த்தி சொல்ல,

“ம்ம் ஆனா எதுன்னாலும் எலெக்சன் முடியவும் தான்..” என்றான் தீபனும்..

“அது உன்னோட பொறுப்பு…” என்றவர், “சேட் பாக்கணும் சொன்னியாம்.. அவனை ஏன்டா இவ்வளோ நெருக்குற…” என,

“நான் நெருக்கலை.. ஷர்மா எங்கன்னு அவருக்கு நல்லா தெரியும்.. என்கிட்டே சொல்லிட்டா நான் எதுவும் செய்யப் போறதில்லைப்பா…” என்றவன், “அந்த சேட் கிட்ட கொஞ்சம் தள்ளியே இருங்க…” என்றான்.

“ஹா ஹா அட போடா.. நீங்க எல்லாம் இத்துனூண்டு…” என்று கை வைத்து காட்டியவர், “அப்போ இருந்து பழக்கம்.. இப்போ வரைக்கும் அது மாறலை.. மாறாது.. நமக்கு எங்க எங்க இன்வெஸ்ட்மென்ட் செய்யனும்னு சொன்னதே அவன்தான்… பார்த்துக்கிறதும் கூட அவன்தான்.. முன்னுக்கு பின்ன இருந்தாலும் நம்பிக்கையான ஆளு..” என,

“இனி அதெல்லாம் நானும் மிதுனும் பார்த்துக்கிறோம்..” என்று தீபன் சொல்ல,

“அதுசரி.. நீ அப்பப்போ எங்க இருக்கன்னு கூட தெரியலை..” என்று மகனை கிடைத்த இடைவெளியில் சுட்டியவர், “அவனோட பார்த்து பேசு..” என்றுவிட்டு போனார்.

அப்பா சொல்லும் எல்லாமே சரிதான்.. ஆனால் காலங்கள் மாறுகையில் மனிதர்களின் மனதும் குணமும் தானே மாறிப்போகிறது.. அவரவர் மாற்றங்கள் பிறருக்கு நல்லது மட்டுமே செய்யும் என்று சொல்லிட முடியாது தானே..??!!

சிறிது நேரம் சாய்ந்து அப்படியே அமர்ந்திருக்க, சமையல்காரர் வந்து “தம்பி சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன்..” என,

“அப்பாவும் வந்திடட்டும்..” என்றவன், திரும்ப சேட்டின் பிஏவிற்கு அழைக்க, அன்றைய தினம் இரவு பத்து மணிக்கு மேலே இருவருக்குமான சந்திப்பு உறுதியானது.

சிறிது நேரத்தில் சக்ரவர்த்தி வந்திட, “சாப்பிடலாமா ப்பா..” என,

“ஆமாடா..” என்றவர் “அம்மாவும் மிதுனும் நாளைக்கு இங்க வர்றாங்களாம்..” என்றபடி அமர,

“அப்படியா??!!!” என்றவனுக்கு, அப்போ அனுராகா இன்னிக்கு கிளம்பிவிடுவாள் என்று உறுதியானது.

“என்ன அப்படியா??!!! இங்க நடக்குற எல்லாமே உனக்குத் தெரியாம போகாதே..”

“இல்லப்பா அம்மா இதுபத்தி எதுவும் சொல்லலை…” என்று பேசியபடி அப்பா மகன் இருவரும் உண்ண அதற்குமேல் அங்கே பேச்சில்லை..

உண்டுவிட்டு, சிறிது நேரம் சக்ரவர்த்தி வீட்டினில் இருந்துவிட்டு பின் வெளிக் கிளம்பிட, தீபன் திரும்ப அங்கே பெங்களூரு வீட்டு எண்ணுக்கு அழைத்தான்.

அவனுக்கு நன்கு தெரியும். எப்படியும் வீட்டினர் யாரும் எடுத்திட போவதில்லை. வேலையாட்கள் தான் எடுப்பர் என்று. அதுபோலவே நடக்க, “அனுராகா ரூம்க்கு லைன் கொடுங்க..” என, அடுத்த இரண்டு நொடியில்

அனுராகா “ஹலோ..” என, “ஹாய் டைட்டன் ராகா…” என்றான் சந்தோசமாய்.

அவளோ “நீயா??!!!” என்று அலட்சியமாய் கேட்க, “ஏன் வேற யாரு எக்ஸ்பெக்ட் பண்ண??” என்று இவனும் கேட்க,

“நத்திங்.. என்ன விஷயம்..” என்றாள் பட்டென்று.

“ம்ம்ம் என்ன விஷயம்.. உன்னோட போன் என் கைல இருக்கு.. உனக்கு வேணுமா வேணாமா??” என,

“மரியாதையா திரும்பக் கொடுத்திடு..” என்றாள் இவளும்..

“ஹா ஹா.. எப்படி மரியாதையான்னா.. மேடை போட்டு மாலை போட்டு இப்படியா??” என்றவன் “ஓகே நீ எப்போ வந்து வாங்கிக்கற சொல்லு தக்க மரியாதையா கொடுத்திடலாம்..” என 

“ம்ம்ச் தீபன்… ஒண்ணும் தெரியாதது போல பீகேவ் பண்ணாத நீ..” என்று அனுராகா அடிக்குரலில் சீர,

“சீரியஸ்லி… எனக்கு ஒண்ணுமே தெரியாது.. ராகா…” என்று அவனும் சொல்ல,

“இதை நான் நம்பனுமா??!!” என்றவள், “அந்த போன் நீயே வச்சுக்கோ.. என்னவேணா பண்ணிக்கோ.. பட் நான் உன்னை தேடி மட்டும் வரமாட்டேன்..” என,

“ஹா ஹா இதைவச்சு நான் என்ன செய்ய… ம்ம் ஒன்னு பண்ணலாம்.. இதை நான் யூஸ் பண்ணிக்கிறேன்..” என்றான் அவனோ பிடிவாதமாய்.

“என்னது??!! ஆர் யூ ஜோக்கிங்…”

“நோ நோ.. யூ க்னோ.. எனக்கு உன்னோட போன் ரொம்ப பிடிச்சிருக்கு.. கைக்கு அடக்கமா.. ஐ லவ்ட் இட்.. இனி இதுதான் என்னோடது.. என்னோடது தான் உன்னோடது ஓகே வா..” என,

பேச பேச அனுராகாவின் கோபம் எல்லாம் கரைவது போல் தான் இருந்தது..

“ஓ..!!! காட் நீ ஏன் இப்படி இருக்க??!!!” என்றவளுக்கு இப்போது குரலில் அந்த கடினம் இல்லை..

“ம்ம்ம் ஒண்ணுமில்லை உன்னை பார்த்ததுல இருந்து நான் சரியா உன்னை ட்ரீட் பண்ணலை இல்லையா?? ஹாஸ்பிட்டல்ல இருந்து கூட அப்படியே வந்துட்டேன்.. சோ இப்போ கொஞ்சம் எல்லாம் சரி பண்ணலாம் தான்.. ஒரு சமாதான உடன்படிக்கை.. உன் போன் என்னுது.. என்னுது உன்னுது.. எப்படி..” என,

“நீ என்னவோ பண்ணித் தொலை போ.. நான் ஊருக்கு வர்றேன்.. எனக்கு ஒரு போன் அண்ட் சிம் வேணும்..” என்றாள்.

“கண்டிப்பா டைட்டன்.. உன்னோட போன்ல இருக்க எல்லாமே அந்த போன்லயும் இருக்கும்..”

“போட்டோஸ் பார்த்த பிச்சிடுவேன்…”

“ஹா ஹா பார்த்ததுக்கு அப்புறம் பிச்சு என்ன செய்ய?? ஆசையா இருந்தா எப்போவேணா என்னை பிச்சுக்கோ..” என்றவன்,

“ஓகே ராகா.. வில் கால் யூ சூன்.. சீக்கிரம் மீட் பண்ணலாம்.. பை பை…” என்று வைத்துவிட்டான்.

ரொம்பவும் பேசிட கூடாது என்பது அவனது எண்ணம். அனுராகா இத்தனை இறங்கி வந்திருப்பதே பெரியதும் கூட என்று தோன்ற, இது போதும் என்று எண்ணிக்கொண்டான்.

அனுராகாவோ அவனோடு பேசிவிட்டு வைக்க, அவளையும் அறியாது ஒரு புன்னகை.. “ராஸ்கல்…” என்று அவளின் இதழ்கள் முணுமுணுத்தாலும், அதில் அப்படியொரு மென்மை இருந்தது.   

நீரஜாவை அன்றே சென்னை போ என்றுவிட்டாள். இங்கேதான் தங்குகிறோம் என்றதும் அவளை  “நீ போ நீரு..” என்றிட,

“ஆமா டி ஆமா.. தீப்ஸ் என்னன்னா போன் பண்ணி இப்போவே வான்னு சொல்றதும்.. நீ என்னடான்னா இப்போவே போன்னு சொல்றதும்.. இதெல்லாம் சரியில்ல.. ஊருக்கே வந்தாலும் என்னை எதுக்கும் கூப்பிட்டிடாத…” என்றுவிட்டு தான் போனாள்.

இனி அவளை வேறு சமாதானம் செய்ய வேண்டும் என்று எண்ணியபடி அனைத்தையும் எடுத்து வைக்க, மகளும்    மனைவியும் கிளம்புகிறார்கள் என்றதும் லோகேஸ்வரன் நேரிலேயே வந்துவிட்டார் அழைத்து செல்லவென்று.

உஷாவிற்கு இப்படியொரு தருணத்தை விட்டுவிட மனதில்லை. நல்ல விசயத்திற்கு ஏன் நாள் தள்ளிப்போட வேண்டும் என்று அவருக்கு ஓர் எண்ணம். ஆக,

“நான் இப்படி கேட்கிறேன்னு தப்பா நினைக்கவேணாம்.. முன்னாடியே எங்க வீட்ல நான் பேசினது தான்.. இப்போ உங்க கிட்டயும் கேட்டிடலாம்னு தோணிச்சு..” என்று சொல்ல,

லோகேஸ்வரன் தாராவை பார்க்க, அவரோ ‘எனக்கு ஒன்னும் தெரியாது..’ என,  

“தாராக்கிட்ட இன்னமும் சொல்லலை.. உங்க ரெண்டு பேரையும் வச்சிட்டுத்தான் பேசணும்னு இருந்தேன்..” என்ற உஷா,

“எனக்கு அனுவை ரொம்ப பிடிச்சு இருக்கு. எங்க வீட்ல எல்லாருக்கும் தான்.. எங்க வீட்டுக்கு அனு மருமகளா வந்தா நல்லாருக்கும்..” என்றதும், லோகேஸ்வரன் முகத்தினில் அப்படியொரு சந்தோசம்.

தாராவிற்கு சந்தோசமா சங்கடமா எதுவும் சொல்லத் தெரியவில்லை. ஆனால் உறுதியாய் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை அவ்வளவே.. ஏனெனில் மகள் இன்று வரைக்கும் கூட என்ன நடந்தது என்று சொல்லிடவில்லையே??!!!

தீபனோடு ட்ரிப்… கொடுத்தனுப்பிய கோடி  கணக்கான பணம் திரும்ப வந்தது.. இது போதாது என்று அனுராகா மருத்துவமனையில் வேறு அனுமதிக்கப் பட்டாள்.. எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவே தாராவிற்கு பட, இதெல்லாம் லோகேஸ்வரனுக்குத் தெரிந்தாலும் இப்படியொரு நல் வாய்ப்பினை தவறவிட அவருக்கு மனமில்லை.

“நீங்க கேட்டதுல ரொம்ப சந்தோசம்..” என,

“வந்த இடத்துல கேட்டேன்னு தப்பா நினைச்சுக்கக் கூடாது..” என்று உஷா சொல்ல, தாரா அமைதியாகவே இருந்தார்..

பேச்சுக்கள் இப்படியே போக, இறுதியில் “இந்த ஹரிபரி எல்லாம் முடியட்டும்.. ஒருநாள் எல்லாரும் எங்க வீட்டுக்கு வாங்க.. அப்போ பேசிப்போம்..” என்று லோகேஸ்வரன் சொல்ல,

உஷாவும் “ரொம்ப சந்தோசம்..” என, இது எதுவும் தெரியாத அனுவோ சென்னை சென்றதும் ஆபிஸ் பொறுப்பு ஏற்றுகொள்ளும் கனவில் இருந்தாள்.

இவர்கள் கிளம்புகையில் உஷா வெறுமெனே அனுப்பவில்லை. நிறைய பரிசுப் பொருட்கள். பட்டு.. நகை.. அழகு சாதனா பொருட்கள் என்று.. அடுக்கிவிட்டார்.  அவர்கள் வீட்டினில் அது பழக்கம் என்றாலும்  தாராவிற்கு இதெல்லாம் காரணம் கொண்டு நடக்கிறது என்பதாய் தான் இருந்தது. அனுராகாவிற்குக் கூட ஆச்சர்யமே.  மிதுன் அங்கே அப்போது இல்லை.

“மிதுன் இருந்திருந்தா இன்னமும் நல்லா இருந்திருக்கும்..” என்றபடி உஷா, இவர்களை வழியனுப்ப, அப்பா அம்மா மகள் மூவரும் கிளம்பினர்.

சென்னை வந்து சேர இரவாகிட, தாரா ரூமாவிடம் “இதெல்லாம் அனு ரூம்ல வச்சிடு..” என்று சொல்லிக்கொண்டு இருக்க,              

அனுராகா ஏன் நேரம் கடத்த வேண்டுமென்று, “அப்பா நான் நாளைக்கு இருந்து ஆபிஸ் போறேன்..” என்று  சொல்ல,

“அதுக்கென்னடா தாராளமா!!” என்று லோகேஸ்வரன் சந்தோசமாய் சொல்ல,

“இப்போவே சொல்லிட்டேன்.. எனக்கு எதுவும் தெரியலைன்னா கேட்பேன்.. அது இல்லாம நீங்க எந்த தலையீடும் செய்யக்கூடாது..” என்று அனுராகா சொல்ல,

“கண்டிப்பா.. என்னோட பொண்ணு பேச்சுக்கு மறுப்பேது..” என்ற லோகேஸ்வரனிடம்,

“அது வீட்டு விசயமா இருந்தாலும் அப்படித்தானே இருக்கணும்..” என்று தாரா சொல்ல, அனுராகா குழப்பமாய் பார்த்தாள்.

அப்பா இருவரையும் மாறி மாறி பார்க்க, லோகேஸ்வரனோ “தாரா.. இப்போதானே வந்தோம்…” என்றார்..

“நானும் அதான் சொல்றேன் லோகேஷ்.. இப்போதான் வந்தோம்.. ஆனா இவ்வளோ நேரம் ஒண்ணாதானே இருந்தோம்.. ஆபிஸ் விஷயம் பேசுறீங்க.. டேக்ஸ் பத்தி பேசுறீங்க.. பியூட்ச்சர் பிலான்ஸ் எல்லாம் பேசுறீங்க.. பட் முக்கியமான விஷயம் எதுவும் பேசலையே…” என,

லோகேஸ்வரன் பேசும் முன்னமே,

“ம்மா ம்மா ப்ளீஸ்.. வந்ததுமே எதுவும் வேணாம்.. ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வந்தது போல இருக்கு.. நாளைக்கு ஆபிஸ் வேற போறேன்.. சோ நமக்குள்ள எதுவும் பிராப்ளம் வேணாம்.. எதுவா இருந்தாலும் ரிலாக்ஸா பேசிக்கலாம்..” என்றதும், மகளுக்காக இருவரும் அமைதி காத்தனர்.

மறுநாள் அனுராகாவிற்கு விடியலே புதிதாய் இருந்தது. சொல்ல முடியாத ஒரு பரபரப்பு மனதினுள்ளே.. சந்தோசமாய் இருப்பதாய் உணர்ந்தாள். சென்னை அலுவலகம் ஒன்றும் அவளுக்குப் புதியது அல்ல. ஆனால் பொறுப்புகள் புதியது தானே..

வேலைகள் அனைத்தும் அத்துபடி.. ஆனாலும் கூட ஒருவித உற்சாகம் கலந்த படபடப்பு.. அதற்கும் இடையில் தீபனின் நியாபகம்.

லோகேஸ்வரன் “அனும்மா ரெடியா??!!” என,

“எஸ் டாட்..” என்றவள், “ம்மா..” என, மனைவியின் முகம் பார்த்தே லோகேஸ்வரன் “அம்மா இல்லாமையா??!!” என்று சொல்லிவிட்டார்.

அதுநேரம் வரைக்கும் ஒருவார்த்தை அழைக்கவில்லை ஆனால் இப்போது கிளம்புகையில் ஏன் வீண் பேச்சு என்று இப்படி சொல்லிட, தாராவோ “யார் சொன்னாலும் இல்லைன்னாலும் என் பொண்ணுக்கு நல்லது நடக்கிறப்போ நான் வருவேன்..” என, மூவரும் கிளம்பிச் சென்றனர்.

கிளாசிக் வரவேற்பு அங்கே. அனுவே நினைக்கவில்லை லோகேஸ்வரன் இத்தனை ஏற்பாடுகள் செய்திருப்பார் என்று.. முறையாய் அனைத்து நிர்வாக உறுப்பினர்களையும் வரவழைக்கப் பட்டு, எல்லார் முன்னிலும் அனுராகா சென்னை அலுவலக பொறுப்பினை ஏற்றுக்கொள்ள,

“மேம்.. உங்களுக்கான ஸ்பெசல் பொக்கே…” என்றுவந்து ரிசப்சன் பெண் அழகிய சிகப்பு ரோஜாக்களினால் ஆனா ஒரு பொக்கேவை நீட்ட,

“தேங்க்ஸ்..” என்றபடி வாங்கிப் பார்க்க அதிலோ “DS…” என்று மட்டுமே இருக்க அவளாகவே “தீபன் சக்ரவர்த்தி…” என்று சொல்லிக்கொள்ள,

தாரா “யாரது?!!” என, அனுராகா சொல்லும் முன்னமே, அலுவலக ஆட்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க வந்துவிட்டனர்.

அதன் பின் ஒரு ஒருமணி நேரம் லோகேஸ்வரனும் தாராவும் இருக்க, “இனி அவ பார்த்துப்பா..” என்று லோகேஸ்வரன் கிளம்பிவிட்டார்..

அன்றைய தினம் என்ன வேலைகள் செய்யவேண்டும் என்று அனுராகா முன்னமே மனதினில் திட்டமிட்டு வந்ததினால், மேனேஜரிடம் “மிஸ்டர். பிரஷாந்த் ரிலீவ் ஆனபின்ன இருக்க பைல்ஸ் எல்லாம் கொண்டு வாங்க..” என, அடுத்த ஐந்து நிமிடத்தில் அவளின் முன்னே மூன்று கோப்புகள்.

“தேங்க்ஸ்..” என்றவள், அவளின் வேலையை ஆரம்பிக்க, முதல் இரண்டு அத்தனை நேரம் பிடிக்கவில்லை. எல்லாம் சரியாய் இருக்க, கடைசி ஒன்று மட்டும் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாய் இருக்க, அதிலும் அது அக்கவுண்ட்ஸ் பைல் என்று பார்த்து அக்கவுண்ட்ஸ் மேனேஜரை வர சொல்லி,         

“இந்த டீடைல்ஸ் டெலி ஆகலையே…” என்று அனுராகா கேட்க,

“அது மேம்.. இது அன்னபிசியல்…” என்று மேனேஜர் சொல்ல,

“வாட்??!!” என்று அதிர்ந்த அனு, “ஓகே.. இது யாருக்கு போச்சு.. பட் இம்மிடியட் ரிட்டன் ஆகிருக்கு.. அன்னபிசியல் சொல்றீங்க நீங்க??”  என,

“மேம்.. இது எப்போதும் நடக்குறது தான்.. எப்பவும் ரிட்டன் வராது.. பட் திஸ் டைம் தான் இப்படி…” என்றார் அவரும்.

“யாருக்கு பணம் போனதுன்னு கேட்டேன்…”

“மினிஸ்டர் சக்ரவர்த்தி ஏற்பாடு பண்ணிருக்கிற பொதுக்கூட்ட செலவுக்கு…” என்று மேனேஜர் தயங்கி தயங்கி சொல்ல, அது இன்னமும் அவளுக்கு ஒருவித அதிர்ச்சி..

தொழில் – அரசியல் இரண்டும் இப்போது ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து தான் இருக்கிறது என்பது அனுராகாவிற்கு நன்கு தெரியும். இது போல எத்தனையோ கோடிகள் கொடுப்பதும் அதற்கான ஆதாயம் பல கோடிகள் என்பதும் அவளுக்கு நன்கு தெரியும்.

ஆனால் மினிஸ்டர் சக்ரவர்த்தி யாரோ அல்லவே.. அதிலும் அந்த பொதுக்கூட்டம் தீபனின் ஏற்பாடு என்பது அவளுக்கு நன்கு தெரியுமல்லவா??!!

ஆனாலும் கொடுத்தது திரும்பி வந்திருக்கிறது என்றால்??!!!

மீண்டும் அனைத்து தேதிகளையும் சரி பார்க்க, அவள் அங்கே தீபனோடு D –வில்லேஜில் இருந்த போது இவை அனைத்தும் நடந்திருக்கிறது என்று நன்கு புரிந்தது.

‘அப்போ..??!!!!’ என்று கண்கள் சுருங்கி அவளின் புத்தி பலவேறு கணக்குகள் போட, பழக்க தோஷத்தில் அவளின் அலைபேசி எடுக்கப் போனாள். அதன் பின்னே தான் புரிந்தது.. அதுவும் அவனிடம் இருப்பது..

‘இடியட்… என்னை முட்டாளாக்கிட்டான்…’ என்றெண்ணிய அனுராகா “யூ மே கோ..” என்று அவரை அனுப்பிவிட்டு, “தீபன் சக்ரவர்த்தி…” என்று திரும்ப முணுமுணுத்துக்கொண்டாள்.

அவன் – நீ என் பிரிய சகி

அவள் – நீ என் பிரிய சதி

காதல் – பிரியம்.. ப்ரேமம்… பியார் ஹா ஹா…    

Advertisement