Advertisement

                                                            நான் இனி நீ – 14

அனுராகாவிற்கு மனது ஒருநிலையில் இல்லை. இந்த மூன்று நாட்களில் ஓரளவு அங்கே பழகியும் தான் போயிருக்க  எதுவோ ஒரு ஒட்டாத நிலை. இதற்கும் உஷா அப்படி கவனித்தார். அனுவிற்கு மட்டுமல்ல தாராவிற்குக் கூட ஆச்சர்யம் தான்.

அனைத்திற்கும் ஆட்கள்.. இருப்பினும் கூட உஷா சிலது தானே தான் செய்தார். மிதுன் அவ்வப்போது கண்ணில் படுவான். பார்க்கையில் ஒரு சின்ன சிரிப்பு.. சினேக பாவனை.. அவ்வளவே..

பேசிட நேர்கையில் “இப்போ எப்படி இருக்கு??” இது மட்டுமே அவனிடம் இருந்து வரும்..

எல்லாம் சரியாய் தான் இருந்தது. ஆனாலும் அனுவின் மனதினை போட்டு குடையும் ஒருவன் உண்டே.. அவன் தீபன் சக்ரவர்த்தி..

‘ச்சே.. கூடவே இருந்தும் டார்ச்சர் பண்ணுவான்.. இப்போ இல்லாம பண்றான்..’ என்று மனதினுள்ளே வெடித்தவளுக்கு, அவனின் இந்த திடீர் விலகல், அப்படியொரு குழப்பம் கொடுத்தது.

பேசி தெளிவு படுத்திட வேண்டும் என்று அவள் பேச, அவனோ பாதியில் எழுந்துவிட்டான். சரி தன் அலைபேசி கேட்டுவிட, ஆளே காணோம் இப்போது..

இது அவனின் வீடு தான்.. கார் உள்ளே நுழைக்கயில் தீபன் நிவாஸ் என்றுதான் பெயர் பலகை இருந்தது..

‘அப்.. அப்போ அவன் இருப்பானோ..’ என்று எண்ணிய மனதிற்கு இப்போது வரைக்கும் ஏமாற்றமே..

‘வருவானா ?? வருவானா??’ என்று பார்த்தவளுக்கு வெறும் வாசல் மட்டுமே காட்சி கொடுத்தது..

தாராவிற்கு மகளின் மீது இப்போதும் கோபம் தான். ஆனாலும் பிறர் இடத்தில் வந்து இருக்கையில் எப்படி நடந்திட வேண்டுமோ அப்படி இருந்திட தானே வேண்டும்.. மகளின் சிந்தனை படிந்த முகம் பார்த்து,

“இப்போ என்ன உன் மனசுக்குள்ள?!!” என்றார்.

“நத்திங் மாம்..” என்று அனுராகா தோளை குலுக்க,

“எதுவுமில்லைன்னா சரிதான்.. எதுவும் இருக்கவும் கூடாது தான் அனு..” என்றவர்,

“ஊருக்கு வந்ததும் என்ன செய்யலாம்னு இருக்க நீ??” என,

“என்ன??!! என்னம்மா??!!” என்றாள் விளங்காது..

“இல்லை சென்னை வந்து நெக்ஸ்ட் உன்னோட ப்ளான் என்ன?? எதுவும் ஐடியா இருக்கா?? ஆர் மேரேஜ் பத்தி பார்க்கலாமா??” என,

‘மேரேஜ்??!! இப்போவா??!! ஓ!! நோ..’ என்று அவளுள்ளம் அடுத்தநொடி சொல்ல, “ம்மாம்… இப்போ என்ன??” என்றாள்.

“உன்னோட முடிவு தான் அனு.. எப்படியும் ஏதாவது உன்னோட ஐடியா இருக்கும்தானே..”

“ம்ம் முன்னாடியே சொன்னது தான் ம்மா.. சென்னை ஆபிஸ் நான் இன்சார்ஜ் எடுத்துக்கிறேன்..” என்றாள்.

“ம்ம் குட்… தென் கல்யாண விஷயம்??!!” என்று அம்மா திரும்ப அதையே கேட்க, “அதைப்பத்தி நான் யோசிக்கலையே ம்மா..” என,

“பிரஷாந்த் லவ் அக்சப்ட் பண்ற மைன்ட் செட்ல இருக்கப்போ கூடவா நீ மேரேஜ் பத்தி யோசிக்கலை..” என்றதும் ,

“ம்மா..!!” கொஞ்சம் திகைத்து அழைத்துவிட்டாள் அனுராகா.

தாரா எப்போதுமே இப்படிதான். மனதில் இருப்பதை அப்படியே முகத்திற்கு நேரே கேட்டிடுவார். லோகேஸ்வரன் அப்படியல்ல.. ஒரு விஷயம் என்றால் அதில் லாப நஷ்ட கணக்கு அவருள் ஓடிக்கொண்டே இருக்கும்.. தனக்கு சாதகம் என்றால் மட்டுமே அவர் பேச்சு அங்கே இருக்கும் இல்லையெனில் இல்லை..

தாராவிற்கு அனுராகா விசயத்தில் அவர் அப்படி இருப்பது சுத்தமாய் பிடிக்கவில்லை. இங்கேவைத்து இது பேசிட கூடாது என்றுதான் நினைத்தார். ஆனால் சென்னைக்கு செல்லும்முன்னே கண்டிப்பாய் லோகேஸ்வரன் மகளுக்காக எதுவும் ஏற்பாடு செய்திருப்பார் என்று நன்கு தெரியும். அதற்குமுன்னே அனுராகாவின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ளத்தான் இப்படி பேச்சு ஆரம்பித்தது.

ஆனால் அனுவோ, தாரா இப்படி கேட்டதும் திகைத்துவிட, “நான் தப்பா எதுவும் கேட்கலையே அனு..” என,

“பட்.. நான் மேரேஜ் பத்தியெல்லாம் யோசிக்கவே இல்லை மாம்..” என்றாள் திரும்ப..

“ம்ம்.. யோசிக்கலைன்னா சந்தோசம்.. ஐ மீன்.. மேரேஜ் பிரஷாந்த் இப்படி நீ எதுவும் ரிலேட் பண்ணிக்கலை தானே..” என,

“ம்மா.. ஸ்டாப் இட்.. பிரஷாந்த் இனி என் லைப்ல இல்லை.. ஹி இஸ் ஜஸ்ட் அன் எம்ப்ளாயி.. தட்ஸ் ஆல்…” என்றாள் தெள்ளத் தெளிவாய்..

அனுவின் இப்பதிலே சொல்லியது தாராவிற்கு, பிரஷாந்திடம் பேசி அனுராகா ஒரு முடிவில் இருக்கிறாள் என்று. என்ன பேசினால் என்று கேட்க முடியாது.. அது அவளின் தனிப்பட்ட விஷயம். ஆனால் தெளிவு கிடைத்தால் போதும் என்றிட,

“ஓ!!! குட்…” என்றவர் “அப்.. அப்போ தீபன்??!!” என,

“தீபனுக்கு என்ன??!!!” என்றபடி வந்தார் உஷா..

அவரின் பின்ன வேலையாள் ஜூஸ் கிளாஸ் ஏந்தி வர ‘கொடு..’ என்பதுபோல் சைகை செய்ய, அனுராகா, தாரா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,

“ம்ம் எடுத்துக்கோங்க….” என்று உஷா சொல்லவும், இருவரும் எடுத்துகொள்ள, வேலையாள் செல்லவும்,

“தீபன் பத்தி பேச்சு போயிட்டு இருந்தது போல..” என்றார் இருவரையும் பார்த்து.

தாராவோ “அது… ட்ரிப் போனாங்க இல்லையா?? அதைபத்தி கேட்டேன்..” என,

“ஆமா நானும் கேட்கனும்னு தான் இருந்தேன்..” என்றவர் “எங்க போனீங்க ட்ரிப்??” என, அனுராகாவிற்கு இருவரிடமும் நன்கு மாட்டிக்கொண்ட நிலை.

மனதோ தீபன் சக்ரவர்த்தியை அர்ச்சனை செய்தது..

‘டேய்.. நீ மட்டும் இப்போ என் கண் முன்னாடி இருந்த.. ஜூஸாபிசேகம் தான் உனக்கு..’ என்று அவளின் மனம் கடிய, உஷாவும் தாராவும் பதிலுக்காக அவளின் முகம் பார்க்க,    

“என்ன அனு…”

“ம்ம்.. மாம்..” என்றவள் “ஜூஸ் செம ஆன்ட்டி…” என,

“நம்ம தோட்டத்துல இருந்து வந்த மாதுளை தான்.. நல்ல டெஸ்ட்டா இருக்கும்..” என்றவர், “அப்புறம் ட்ரிப் போனப்போ எதுவும் போட்டோஸ் எடுத்தீங்களா??? காட்டேன்..” என,

‘போட்டோஸா… கடவுளே..’ என்றெண்ணியவள் “போ.. போன் தீபன் கிட்ட இருக்கு ஆன்ட்டி…” என்றாள் திக்கித் திணறி..

“போன்.. போன் இருக்கா?? மிஸ் ஆகிடுச்சுன்னு சொன்ன ??” என்று இப்போது தாரா மடக்க,

“அ.. அது.. திரும்ப கிடைச்சிடுச்சு..” என்றாள் சமாளிக்கும் விதமாய்..

இப்படியான சமாளிப்புகளுக்கு எல்லாம் இதுநாள் வரைக்கும் அவள் பழகியதே இல்லை. தீபன் என்ற ஒருவனை வாழ்வில் கண்ட பிறகு அனுவின் வாழ்விலும் நடத்தையிலும் தான் எத்தனை மாற்றம்..

தாரா அனுராகாவை கூர்ந்து நோக்க, அனுவின் மனது சடுதியில் கணக்கிட்டு, “ஆன்ட்டி.. நான்.. நான் தீபன்கிட்ட பேச முடியுமா?? ஆர் இங்க எதுவும் வருவானா என்ன??” என,

“ஏன் அனு?? எதுவும் வேணுமா?? தீபன் இங்க வேலை இல்லை அவனுக்கு.. சென்னைல பொதுக்கூட்டம் இல்லையா.. சோ அங்கதான் இருப்பான்..”

“ஓ… அப்போ.. நான் பேசணுமே கால் பண்ணி கொடுங்க..” என்றாள் உறுதியாய்.

“அப்படியா??!!” என்று யோசித்த உஷா, “மிதுன் வரட்டுமே.. எப்படியும் நான் பண்ணா என் பையன் எடுக்கமாட்டான்.. மிதுன் வந்து பண்ண சொல்றேன்.. ஓகே வா..” என்றுவிட்டு எழுந்து போனார்.

‘ஹப்பாடி…’ என்று அனுவிற்கு தோன்ற, தாராவோ “நாளைக்கு சென்னை கிளம்பிடலாம் அனு..” என,

“ஓகே மா..” என்றுவிட்டாள்.

இப்போதைக்கு யாரும் அந்த ட்ரிப் பற்றி பேசாது இருப்பதே போதுமாய் இருந்தது. ஆனால் திரும்ப கேட்டிட்டால்??!!!!

நாளை வரைக்கும்.. அவளின் போன்.. அந்த நம்பரை லாக் செய்துவிட்டு அதே நம்பரில் இன்னொரு சிம் வாங்கிடலாம்.. போன் நினைத்தால் இப்போதே வாங்கிடலாம்.. போனால் போகிறது என்று விட்டுவிடலாம்.. ஆனால் அதை அனுவினால் விட முடியுமா என்பது தான் சந்தேகமே??  

கடைசியாய் பார்க்கையில் அவளிடம் பேசவேயில்லை.. சொல்லாமல் கூட போனான்.. ஆனால் அவளின் போன் மட்டும் அவனுக்கெதற்கு??!!

‘சென்னைல தானே இருக்க… வர்றேன்.. வந்து நேர்ல பாக்குறேன் உன்னை..’ என்று எண்ணிக்கொண்டாள்.

கிளம்புகிறோம் என்ற நினைப்பே அவளுக்கு பெரும் நிம்மதி அளித்தது இப்போது.

அங்கே தீபனோ, அவனை சுற்றி அத்தனை ஆட்கள்.. அத்தனை வேலைகள்.. அவன் சொன்னதில் பாதி கூட இன்னமும் முடியவில்லை.. நாகாவும் தர்மாவும் அவனிடம் படாத பாடு பட்டுவிட்டனர்.

“நான் என்ன சொன்னேன் நீங்க என்ன பண்ணிருக்கீங்க…??” என,

“இதெல்லாம் முடிஞ்சா நீங்க சொன்னது போல தான் இருக்கும்..” என்றான் தர்மா..

“முடிஞ்சா??? ம்ம்ம்.. எப்போ முடியும்… இன்னும் ரெண்டே நாள் தான் இருக்கு.. என்னோட கணக்குப்படி மூணு லட்சம் பேராவது இங்க இருக்கணும்.. புரிஞ்சதா.. சுத்தி சாமியான போட்டுடுங்க.. யாரும் வெயில்ல உட்கார கூடாது..” என,

“ஓகே பண்ணிடலாம்..” என்றான் நாகா.

“எங்க.. இன்னும் ஸ்டேஜ் ரெடியாகலை.. நாளைக்கு இதெல்லாம் முடிஞ்சிருக்கணும்..” என்றவன்,

சுற்றி யாரும் இருக்கிறார்களா என்று பார்த்து “நான் சொன்னது என்னாச்சு??!!” என்றான் குரலை தாழ்த்தி..

“அது…!!!” என்று இரட்டையர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,

“என்னாச்சு??!!!” என்றான் இப்போது அழுத்தம் திருத்தமாய்..

“ஷர்மா.. அவன் காணோம்… சேட் அவனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இனி இல்லைன்னு மிதுன் சார்க்கிட்ட சொல்லிட்டான்..” என,

‘இதை நான் நம்பனுமா??!!’ என்று பார்த்தான் தீபன் சக்ரவர்த்தி..

“அண்ணனுக்கு கேளுங்க…” என,

“அது எனக்குத் தெரியும்… சேட் நான் பார்க்கணும்.. சொல்லிடுங்க நான் வர்றேன்னு.. தென் ஷர்மா??!!! அவனுக்கு ஒரு செக்கன்ட் வொய்ப் இருக்குல.. தூக்கிடு.. தன்னால வருவான்..” என்றுவிட்டு தீபன் நகர,

“செக்கன்ட் வொய்ப் தூக்கினா எல்லாம் வருவானா??!!!” என,

“கண்டிப்பா வருவான்.. அவனோட பினாமி அவதானே.. தூக்கிடு.. அப்புறம் அந்த லேடியோட போன்ல எதுவும் விடியோஸ் ஆர் போட்டோஸ் இருந்தா அதை ஷர்மா பேமிலிக்கு அனுப்பிடு….” என்றான் முடிவாய்.

“சரி..” என்றனர் இருவரும்..

இந்த ஷர்மா கண்ணில் பட்ட தூசியாய் உறுத்திக்கொண்டு இருந்தான்.. இதனை வருடம் நன்றாய் இருந்தவன், இன்று துணிந்து எதிர்க்கிறான் என்றால் கண்டிப்பாய் அவனுக்கு பின்னே வேறு யாரேனும் இருப்பர் என்றே தோன்றியது தீபனுக்கு..                 

எப்போதும் இத்தனை தூரம் இறங்கிட மாட்டான்.. ‘போறான் பெரிய இவன்..’ அப்படிதான் யாரையும் நினைப்பது.. ஆனால் என்னவோ ஆரம்பத்தில் இருந்தே இந்த ஷர்மா விஷயம் தீபன் மனதில் ஒரு எச்சரிக்கை செய்துகொண்டே இருந்தது..

நாகா, தர்மா இருவரிடமும் பேசியவன், சுற்றி வேலைகளை கவனிக்க, இரண்டு நிமிடத்தில் வந்த நாகா “சேட் பிஏ  லைன்ல..” என்று போன் கொடுக்க,

“ஹெலோ…” என்றவன், அந்த பக்கம் சொன்ன பதிலில் நெற்றி சுருங்க,

“நோ வே.. அப்பாக்கிட்ட பேசினாலும் யார்கிட்ட பேசினாலும் நான் வந்து சொல்றதுதான் முடிவு..” என்றவனுக்கு கோபம் அப்படி வந்தது.

ஆனால் இது கோபம் காட்டும் நேரமல்ல, காரியம் சாதிக்கும் நேரம் என்பதனை உணர்ந்து, “நாளைக்கு மார்னிங் பதினோரு மணிக்கு.. சேட் அங்க இருக்கணும்.. ஐ வில் பி தேர்..” என்றுவிட்டு வைத்துவிட்டான்..

மேலும் கொஞ்ச நேரம் அங்கே இருந்தவன், பின் கட்சி ஆபிஸ் செல்ல, மதியத்திற்கும் மேலே வரை அங்கே வேலை இருந்தது. கையில் இருக்கும் பணத்தினை கட்சி வேலைகளுக்கு என்று பிரித்து கொடுக்க ஆட்கள் சொல்லி, பின் கணக்குகள் அது இதென்று பார்த்து அவன் வீடு வர மாலை நான்கு..

காலையில் உண்டது.. இடையினில் அவ்வாப்போது டீயோ இல்லை ஜூஸோ.. இப்போது வீடு வர, வேலையாட்கள் மட்டுமே இருக்க,

“என்ன தம்பி வேணும்..” என்றார் சமையல்காரர்..

“என்ன இருக்கோ அதைமட்டும் எடுத்து வைங்க.. பிரெஷ் ஆகிட்டு வர்றேன்..” என்றவன் அவனின் அறைக்கு செல்ல, இத்தனை நேரம் வேலை வேலை வேலை என்று ஓடியதில் பின்னே போயிருந்த அனுவின் எண்ணங்கள் எல்லாம் இப்போது அவனை வந்து சூழ்ந்துகொள்ள,

அவனின் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டவன் அவளின் போன் எடுத்துப் பார்க்க, இப்போது வரைக்கும் அவன் அதை ஆன் செய்திடவில்லை. செய்யும் எண்ணமும் இல்லை..

ஆனாலும் அது அவனோடு இருப்பது பிடித்தது..

‘ம்ம் நீ எத்தன டைம் அவளோட கன்னம் தொட்டிருப்ப… கைக்குள்ள இருந்திருப்ப…’ என்று சொல்லியபடி, அதை தூக்கிப்போட்டு பிடித்தவன்,

“ராகா…!!!” என்று முணுமுணுக்க, சரியாய் மிதுன் அழைத்துவிட்டான்…

தீபன் பெங்களூருவில் இருந்து கிளம்பி வந்ததும் முதலில் செய்தது மிதுனை அங்கே வீட்டினில் அதிகம் தங்கிடாதபடி செய்தது. அது இதென்று நிறைய வேலைகள் இங்கிருந்தே சொல்லிக்கொண்டே இருந்தான்..

“தீப்ஸ்… திஸ் இஸ் டூ மச் டா.. நீ சொல்றதெல்லாம் பண்ணா தென் நான் வந்த வேலை என்னாகுறது..” என்றுகூட மிதுன் கேட்டிட,

“எனக்கு இத்தனை வேலை அங்க இருந்தது.. பட் இங்க வந்துட்டேன் சோ நீ தான் பார்க்கணும்..” என்றும் சொல்லிட, இப்போது மிதுனே அழைக்க,

“சொல்லுடா அண்ணா.. அந்த லேண்ட் தர்றேன் சொல்லிட்டாங்களா??” என்று எடுத்தும் பேச,

“நான் அனுராகா பேசுறேன்..” என்று அவளின் குரல் கேட்டதும், தன் செவிகளை ஒட்டியிருந்த அலைபேசியை எடுத்து ஒருமுறை அதனின் திரை பார்த்தவன்,

‘அவன் போன்ல இவளுக்கு என்ன வேலை…’ என்று கடிந்தபடி “ம்ம் சொல்லு..” என்றான் கடினக் குரலிலேயே..

இத்தனை நேரமிருந்த உணர்வு இப்போது இல்லாது போக, அனுராகா தானாக பேசியது பிடித்திருந்தாலும், அது மிதுன் வழியாக பேசியது சுத்தமாய் பிடிக்கவில்லை. நெற்றி தன்னைப்போல் சுருங்க, கண்களோ அதுவும் கூட சுருக்கம் கொண்டது.

“சொல்லா??!!! எங்க போன நீ??? ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணதானே.. டிஸ்சார்ஜ் ஆகற வரைக்கும் இருக்கணும் தெரியாதா.. நீ.. நீ என் போன் வேற எடுத்துட்டு போயிட்ட.. இங்க உன்னோட அம்மா என்னோட அம்மா எல்லாம்  ட்ரிப் பத்தி கேட்கிறாங்க.. போட்டோஸ் கேட்கிறாங்க…” என்று அவள் அடுக்கிக்கொண்டே போக,

தீபனுக்கு அந்த காட்சிகள் எல்லாம் வந்து போக, ‘செமையா மாட்டிருப்பா போலவே..’ என்று தோன்ற,

“அடடா… நான் பார்க்காம போயிட்டேனே??!!” என்றான் நக்கலாய்..

“என்ன நீ பாக்கல??”

“ம்ம்ம் நம்ம ட்ரிப்ல எடுத்த போட்டோஸ்.. உன் போன்ல இருக்கா ராகா.. நான் பார்க்கட்டுமா???” என்றபடி அவளின் போன் எடுத்து இவன் ஆன் செய்ய,

“ஏய்… இப்போ நீ ஏன் என் போன் ஆன் பண்ற??!!!” என்றாள் சரியாய் யூகித்து..

நல்லவேளை யாருமில்லை அருகே.. மிதுன் வந்ததும் உஷா சொல்லிட, “தீப்ஸ் பேசுவான்..” என்றுசொல்லி இவளிடம் போனை கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்..

அந்தத் தைரியத்தில் தான் அனுராகா இப்படி பேச, “ஹா ஹா நான் ஆண் இல்லையா அதான் ஆன் பண்றேன்..” என்று தீபன் இன்னும் அவளை சீண்ட,

“தீபன்… நீ ரொம்ப பண்ணிட்டு இருக்க…” என்று இவளும் சொல்ல,

“ம்ம்ம் சரி சரி பக்கத்துல யாரும் இல்லையா???” என்றவன் குரல் உல்லாசமாய் இருந்தது.

கோபம் காட்டிட நினைத்தவனுக்கு அது முடியாமலேயே போக, அவளோ “யார் இருந்தா இல்லைன்னா என்ன?? எனக்கு என் போன் வேணும்…” என்றாள் பிடிவாதமாய்..

வேண்டாம் என்று நினைத்தது தான்.. ஆனால் அவனிடம் பேசுகையில் பிடிவாதம்கொள்ளவே தோன்ற, அவனோ “தாராளமா.. உன் போன் வச்சு நான் என்ன செய்ய முடியும்…??? அதும் இப்படி ஒரு போட்டோ வேற வருது…” என்றவனின் பார்வை அவளின் அலைபேசி திரையில் தெரிந்த அவளின் புகைப்படத்தில் உறைந்து போனது..

கோவா திருமணத்தில் எடுத்த புகைப்படம் தான்.. அன்று அவனின் கவனத்தை சிதறச் செய்தவளின் தோற்றத்தில் இப்போதும் கூட தீபனுக்கு உள்ளம் கள்ளுண்ட வண்டாய் ஆக,

“ராகா….” என்றழைத்தான் அத்தனை மென்மையாக..

அனுராகாவே கூட அவன் அழைத்த விதத்தில் கண்கள் விரிக்க “ம்ம்…” என,

“நான் ஒன்னு சொல்லட்டுமா??!!!” என்றவனின் குரல் எதுவோ அவளுக்கு உணர்த்த,

“எ.. என்ன சொல்லப் போற நீ???!!!” என்றவளுக்கு இதயம் தடக் தடக் என்று அடித்துக்கொள்ள,

“நீ.. செம்ம பிகர்…” என்றதை கேட்டதும்,

“செருப்பு பிஞ்சிடும்…” என்று அவள் தன்னை மீறிய கோபத்தில் கத்திவிட,

அவனோ “உன்னோடதா என்னோடதா???” என்றான் அதே குரலில்..

அவன் – கொஞ்சி பேசிட வேணும்..

அவள் – கொஞ்சமும் பேசிட வேணாம்…

காதல் – நீயா பேசியது.. என் அன்பே நீயா பேசியது…                   

Advertisement