Advertisement

                           நான் இனி நீ – 13

அனுராகா அடுத்து கண்விழித்துப் பார்க்கையில் அவளருகே நீரஜா அமர்ந்திருந்தாள். உஷாவும் மிதுனும் வருவதற்கு முன்னமே இவர்கள் வந்து சேர்ந்திருந்தனர். தீபனோடு பேசியதும், அவன் பாதியில் எழுந்து போனதும். அனுராகா பிரஷாந்தோடு பேசியதையும் சேர்த்து யோசித்தபடி இருக்க, செலுத்தப்பட்ட மருந்துக்களின் தாக்கத்தில் மீண்டும் நன்கு உறங்கிப்போய் இருந்தாள்.

இடையில், நீரஜா, தேவ், புனீத்  எல்லாம் வந்து இவளைப் பார்த்தது  பின் சிறிது நேரத்தில் உஷாவும் மிதுனும் வந்து பார்த்தது இதெல்லாம் எதுவும் அவளுக்குத் தெரியவில்லை.

எல்லாம் முடிந்தது இனி வீடு போய் சேர்ந்திடலாம் என்ற ஆசுவாசத்தில்  வந்த உறக்கமோ என்னவோ.. பிரஷாந்த் மற்றும் தீபன் சக்ரவர்த்தியிடம் தான் பேச எண்ணியதை செய்து முடித்த நிம்மதியில் வந்த உறக்கமோ என்னவோ..  அப்படியொரு உறக்கம்.

அடுத்து கண் விழிக்கையில் நீரஜா அவளின் அருகே இருக்க, சட்டென்று ஒரு உற்சாகம் வந்து ஒட்டிக்கொண்டது அனுராகாவிற்கு.

“நீரூ…” என்றபடி எழுந்து அமர முயன்றாள்.

“ஏய் இரு இரு… ஸ்ட்ரெயின் பண்ணாத நீ..” என்றவள், தீபன் செய்தது போலவே கட்டிலின் மேற்புறம் மட்டும் நிமிர்த்திவிட,

“இ.. இது ஆல்ரடி இப்படிதானே இருந்தது…” என்று அனு கேட்க,

“ம்ம் இருந்தது.. நாங்க வர்றப்போ கூட.. தென் தீபன் தான் நார்மல் பண்ணார்..” என்று நீரஜா சொல்லவும், “அவனுக்கு என்ன மரியாதை..” என்று கடிந்தாள் அனுராகா.

“ம்ம்ச்.. அனு… உன்னோட இந்த பிஹேவியர் இப்படி வந்து படுக்க வச்சிருக்கு.. அப்படி என்ன உனக்கு எல்லா விசயத்திலும் பிடிவாதம்.. நானும் இப்போ பேசிக்கவேணாம் நினைச்சா நீ மாறவேயில்லை…” என்ற நீரஜாவிற்கு சரியாய் கோபம் வந்தது அனுவின் மீது.

அனுராகாவோ பதில் சொல்லாது அமைதியாய் இருக்க, “என்ன அனு.. ஆன்சர் பண்ண முடியலையா??!! ஏன் உன் மனசுக்கு உண்மை என்னன்னு தெரியாதா..?? அப்படி என்ன உனக்கு பிடிவாதம்..” என்றதும்,

“ஏன்.. என்மேல தப்பு இல்லைங்கிறப்போ.. நான்.. நான் பிடிவாதம் செய்யக் கூடாது..” என்றவள் “உனக்குமா என்னை புரியலை..” என,

“நிஜமா புரியலை.. அந்த பிரஷாந்த் போறான்னா போனான்னு விட வேண்டியது தானே.. அவனைப் பார்க்கப் போறேன்னு கிளம்பி இப்போ தீபன் வரைக்கும் பிரச்னை இழுத்து வச்சிருக்க..” என்றாள் நிஜமான அக்கறையோடு.

ஆனால் அனுவோ, தன் தோழி வந்து எப்படி இருக்கிறாய் என்றுகூட கேட்காது வந்ததுமே இப்படி அர்ச்சனை ஆரம்பிக்கவும், முகம் வாடிட,

“இப்போ நீ என்னை திட்டத்தான் வந்தியா??” என்றாள் இறங்கிப்போன குரலில்.

“ஹேய்.. அப்படியில்லை அனு…” என்று வந்து லேசாய் அனுவை அணைத்து விடுவிக்க,

“ம்ம்ச் வாட் எவர்…” என்று சலித்த அனுராகா “பிரஷாந்த் ப்ரொபோஸ் பண்ணான் தான்.. பட் என்னால உடனே அக்சப்ட் பண்ணிக்க முடியலை.. இட் டேக் சம் டைம்.. எனக்கு அவனை பிடிச்சதா இல்லையா அதெல்லாம் தெரியலை.. ஒரு ஸ்டேஜ்ல அவனோட லவ் புரிஞ்சது.. என்னை எனக்காக விரும்பறான்னு தெரியவும் தான் ஐம் ரெடி டு அக்சப்ட் ஹிஸ் லவ்..

என்னோட பிஹேவியர் சரியில்லைன்னு நீ சொல்றபடி இருந்தா, பிரஷாந்த் என்கிட்ட ப்ரொப்போஸ் பண்ண அப்போவே என்னால அவனை இங்க இருந்துன்னு இல்லை எங்களோட எந்த பிரான்ஞ்லயும் கால் வைக்க முடியாம பண்ணிருக்க முடியும்..” என்று தன்மையாகவே சொன்னவள்,

“டிட் ஐ டூ திஸ் நிரூ??” என்றாள் அடிபட்ட குரலில்..

நீரஜாவிற்கு அப்போது தான் புரிந்தது தான் பேசியது அனுராகாவை எத்தனை காயம் செய்திருக்கும் என்று.. இப்படியான பேச்சுக்கள் எல்லாம் அவர்களுள் அத்தனை எளிதில் நடக்காது.. கை நிறைய பணம்.. செலவு செய்தாலும் ஏன் என்று யாரும் கேட்டதில்லை இது வரைக்கும்.. ஆக வேறு பிரச்னைகளும் இதுநாள் வரைக்கும் இருந்ததில்லை..

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் மட்டுமே..

ஆனால் இப்போதோ எல்லாமே மாறிப்போனதாய் இருந்தது நீரஜாவிற்கு. அதிலும் அனுராகா.. அவளை இப்படி காண இயலாது தான் அப்படியான வார்த்தைகளை சொல்லிவிட்டாள்.

இப்போது தான் சொல்லியது தவறென புரிய, “அனு.. ப்ளீஸ்.. எதுவும் யோசிக்காதே.. லீவ் இட்.. நான்.. நான் எதோ ஒரு வேகத்துல சொல்லிட்டேன்..” என,

“இல்லை நீரு.. ஸ்டார்டிங்ல இருந்தே எல்லாரும் என்னவோ நான் தப்பு பண்றமாதிரி தான் நினைக்கிறாங்க.. அப்பா கூட அப்படித்தான். அவருக்கு ஸ்டேட்டஸ் பிரச்னை.. என்ன, பிரஷாந்த் விஷயத்துல நான்.. ம்ம்ச்..” என்று வார்த்தைகளை தேடியவள்,

“நான்.. நானே தேடி போனேன்… இதுவரைக்கும் என்னோட வேலைகளுக்கு கூட நான் யாரையும் இப்படி அப்ரோச் பண்ணிருக்கேனா?? சொல்லு.. ஆனா அவன்..” என்று சொல்லும் போதே, அனுராகாவின் முகம் அவமானத்தில் கசங்கியது..

“ஹேய்.. அனு… லீவ் இட் ப்ளீஸ்..” என்று நீரஜா சமாதானம் செய்தாலும்,

“நோ.. நான் பேசத்தான் செய்வேன்..” என்றவள்,

“அவன் போனான் தானே.. அது என்னாலன்னு எனக்கு அப்போ தெரியலை.. இருந்தாலும், என்னால அவனுக்கு ஒரு ப்ரெஷர் அப்படின்னதும் நிஜமா எனக்கு வருத்தமா தான் இருந்தது.. நானே அவனோட லவ் அக்சப்ட் பண்ண போனப்போ வேணான்னு சொல்லிட்டுப் போனான்.. அப்.. அப்போ எனக்கு எப்படி இருக்கும்?? எனக்கு ஒரு பேட் பீல் கொடுத்துட்டு அவன் போயிட்டான்.. அப்.. அப்போ நான் அதை அப்படியே விட சொல்றியா??!!” என்றவளுக்கு இப்போது மீண்டும் மனதும் உடலும் சோர்வாய் உணர,

“நீ.. நீ எதுவும் பேசாத இப்போ.. ஓகே வா.. நான் போய் நர்ஸ் வர சொல்றேன்..” என்று நீரஜா வெளியே கிளம்ப எழும்போதே, தீபன் ஒரு நர்ஸை அழைத்துக்கொண்டு வந்துவிட்டான்.

“சாரி லேட்டாகிட்டே இருந்தது..” என்ற தீபனின் பேச்சு நீரஜாவிடம் இருக்க, அனுவின் பார்வையோ தீபன் சக்ரவர்த்தி மீது இருந்தது.

அவனோ அவளை திரும்பியும் பார்க்கவில்லை. அவள் சொன்ன வார்த்தைகளின் வீரியம் இன்னும் குறையவில்லை. மனதினுள்ளே அப்படியொரு கோபம் கனன்றுகொண்டே இருந்தது.

அவளோடு வார்த்தைக்கு வார்த்தை சண்டையிட வேண்டும் போல இருந்தது. பதிலுக்கு பதில் பேசி மல்லுக்கட்ட வேண்டும் போல இருந்தது.

இப்போது நண்பர்கள் மட்டுமல்ல, அம்மாவும் அண்ணனும் கூட வந்துவிட்டனர். ஆக தன்னையே அவனுக்குக் கட்டுப்பாட்டில் வைப்பது மிக மிக சிரமமாய் இருக்க, இதில் அனுராகாவோடு பேசினால் தன்னையும் மீறி எதுவும் சொல்வோம் என்றே அவளைப் பார்ப்பதைக் கூட தவிர்த்தான்.

அனுராகா இப்போது நீரஜாவையும் தீபனையும் மாறி மாறி பார்க்க, அவளோ “இப்போதான் முழிச்சா..” என்றபடி வெளியேற, தீபனும் அவளோடு வெளியேற,

நர்ஸ் வந்தவரோ, “மேம் பிரெஷ் அப் பண்ணிக்கிறீங்களா??” என்று கேட்க, பார்வை அவர்கள் மீது இருந்தாலும், தலை தன்னைப்போல் சரியென்று ஆடியது.

கோபம்.. பதற்றம்.. ஆக்ரோசம்.. பரிதவிப்பு.. அக்கறை என்று அனைத்தையும் தீபனின் கண்களில் கண்டவளுக்கு இப்போது அவன் செய்யும் தவிர்ப்பு என்னவோ புரியாத ஒன்றாய் இருக்க,

‘அனு.. நீயே இதைத்தானே நினைச்ச?? பின்ன என்ன??’ என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டு, பிரெஷ் அப் ஆகி வர, “மேம் உங்களுக்கு ட்ரெஸ்..” என்று ஒன்றை நர்ஸ் நீட்ட, வாங்கிப் பார்த்தவளுக்கு அது அவளின் உடை என்று நன்கு தெரிந்தது.

D – வில்லேஜில் இருந்தது.. தீபன் அவளின் பொருட்களை கொண்டு வர செய்திருக்கிறான் என்று புரிய,

நர்ஸிடம் “தீபன்கிட்ட என்னோட போன் இருக்கு.. நான் கேட்டேன் சொல்லுங்க..” என்றுசொல்லி அனுப்பினாள்.

உடல் அசதி இருந்தாலும், மனதில் நிறைய யோசனைகளை.. என்னவோ விடுபடவே முடியாத ஒரு சுழலில் வந்து சிக்கிக்கொண்ட உணர்வு அனுராகாவிற்கு.

நர்ஸ் சென்று தீபனிடம் கேட்டதற்கு “நீங்க போங்க.. நான் பார்த்துக்கிறேன்..” என்றவனுக்கு,

‘அவளே கேட்கமாட்டாலாமா??!!’ என்று தோன்ற, உஷாவோ “தீபன்.. போன் கேட்டா கொடுத்து விட வேண்டியது தானே..” என,

“ம்மா.. அனுராகா இன்னும் சாப்பிடலை.. முதல்ல அதை பண்ணட்டும்..” என்றவன், அங்கிருந்தும் வெளியில் வந்து நின்றுகொண்டான்..

மிதுன் டாக்டரிடம் பேசிவிட்டு வந்தவன், “ தீப்ஸ் ஈவ்னிங் கூட டிஸ்சார்ஜ் பண்ணலாம் சொல்றாங்க.. அனுவோட அப்பா இப்போதான் பேசினார்.. தே ஆர் ஆன் தி வே..” என,

“ம்ம்..” என்று தலையை ஆட்டிக்கொண்டான்..

மிதுன் இதெல்லாம் செய்வது அவனுக்கு துளியும் இஷ்டமில்லை. ஆனால் சொல்லவும் முடியாது. உஷாவோ பெங்களூரூவில் இருக்கும் அவர்களின் கெஸ்ட் ஹவுசை தயார் செய்து வைத்திருக்க, அனைவரும் அனுராகாவின் பெற்றோருக்காக காத்திருக்க, அங்கே அனுராகாவோ அவளின் அலைபேசி வரும் என்று காத்திருக்க, நீரஜாவும் வேறொரு நர்சும் தான் அவளுக்கு உணவு எடுத்து வந்தனர்..

“நீரு என் போன் எங்க??” என,

“உன்கிட்ட இல்லையா??” என்றாள் அவள்.

“ம்ம்ச்.. இப்போ தீபன்கிட்ட வாங்கிட்டு வர சொல்லி நர்ஸ் அனுப்பினேனே..” என்றவள், வந்திருந்த நர்ஸைப் பார்க்க,

“அவங்க டியூட்டி முடிஞ்சு கிளம்பிட்டாங்க..” எனவும், “வாட் எ ஹெல்…” என்று அனுராகா கத்திவிட்டாள்.

அவள் கத்திய கத்தலில் நர்ஸ் அதிர்ந்து பயந்துப் பார்க்க, நீருவோ “அனு…” என்று அதட்ட,

“நீ போய் தீபன் வர சொல்லு..” என்றாள் வார்த்தைகளை கடித்துத் துப்பி..

“அனு…!!”

“டூ வாட் ஐ சே நீரூ..” என்று அப்போதும் கத்த,

“தீ.. தீபன் இங்க இல்லை.. கிளம்பியாச்சு???” என,

“என்னது??!!!!” என்று மேலும் அதிர்ந்து போனாள் அனுராகா..

ஆம்.. தீபன் கிளம்பிவிட்டான்.. அவளோடு இருந்திடவேண்டும் என்று நிறைய நிறைய ஆசைகள் இருந்தாலும், ‘இங்கிருந்து போயிடு டா..’ என்று அவனின் மனது சொல்லிக்கொண்டே இருந்தது.

ஒருபக்கம் அனுவின் பேச்சு.. இன்னொருபுறம் மிதுன் அனைத்தையும் தன் பொறுப்பாக்கிக் கொண்டது. இன்னொருபுறம் அவனின் அம்மா.

உஷாவே தான்.. “இந்த அப்பாக்கிட்ட பேசு…” என்று சக்ரவர்த்திக்கு அழைத்து பேச வைக்க,

அவரோ “தீபன் உன்னோட ஹெல்ப் இங்க வேணும்.. கிளம்பி வா.. இந்த பசங்க உருப்படியா பண்ணிருக்காங்களா நீ தான் பாக்கணும்.. அங்க மிதுன் பார்த்துப்பான்..” என்றிட,

“அப்பா..!!!” என்று தயங்கினான் தான், “நீ வா தீபன்..” என்று வைத்துவிட்டார்.

“என்னடா.. கிளம்புறியா??!!” என்று உஷா கேட்கையில் தான்  நர்ஸ் வந்து அனு அவளின் போன் கேட்பதாய் சொல்ல, ஒருபக்கம் எகிறியது அவனுக்கு. ஆக மொத்தம் யாருக்கும் தான் இங்கிருப்பது பிடிக்கவில்லை என்று தோன்ற, அனுவிடம் சொல்லாமல் கூட கிளம்பிவிட்டான்..

அவளின் போன் அவனிடம் தான் இருந்தது..

‘போ டி கொடுக்க முடியாது.. வேணும்னா நீயா வந்து கேளு..’ என்ற நினைப்பு.

தீபன் கிளம்பிவிட்டான் என்றதுமே, அனுராகாவிற்கு அப்படியொரு கோபம். யாரைக் கேட்டுப் போனான் என்ற வேகம்..

“போயிட்டானா?? ஏன் போனான்.. எதுக்கு போனான்…” என்று எழுந்து வெளி வர, சரியாய் அப்போது உஷாவும் உள்ளே வந்திட, அனுராகா அப்படியே நின்றுவிட்டாள்.

“ஹாய் அனு.. இப்போ ஓகே வா..” என்றவர் “இன்னும் சாப்பிடலையா நீ??” என,

“ஆன்ட்டி…” என்று அனு திகைக்க,

“என்ன நாங்க வந்ததே தெரியாதா??!!” என்று அவரும் கேட்க,

‘நாங்களா??!!’ என்று பார்த்தாள் அனுராகா..

அதன் பின் நேரம் அத்தனை வேகமாய் சென்றது என்றுதான் சொல்லவேண்டும். எதுவும் என் செயலில் இல்லை என்பதுபோல் ஆகிப்போனால் அனுராகா..

அனைத்தும் உஷாவின் செயலாகிப் போனது..

‘தீபன் அப்படியே அவன் அம்மா போல..’ என்றுதான் எண்ணத் தோன்றியது..

நீரஜா மட்டும் அனுவோடு இருக்க, தீபன் கிளம்பியதும் தேவ் புனீத் இருவரையும் கூட உஷா அனுப்பிவிட்டார். மிதுன் வந்து பேசினான் அனுவோடு. வேறெதுவும் இல்லை,

“இப்போ எப்படி இருக்கு?? கெட் வெல் சூன்…” என்பது மட்டும்.

அனுவோ “ம்ம்..” என்றுமட்டும் சொல்லிக்கொள்ள,  அடுத்து சிறிது நேரத்தில் லோகேஸ்வரன் தாரா வந்துவிட்டனர்.  

லோகேஸ்வரன் “ஹவ் ஆர் யூ அனு..” என்று மகளின் கன்னம் தட்ட, தாராவோ வெளிப்படையாய் முறைத்தார்.   

“பைன் டாட்..” என்றவள் “மாம்..” என்று தாராவின் முகம் பார்க்க,

அவரோ “நீங்க எப்போ வந்தீங்க??” என்று உஷாவிடம் பேசச் செல்ல, அம்மாவிற்கு சரியான கோபம் என்பது நன்கு புரிந்தது அனுராகாவிற்கு..

தீபன் ஒருபக்கம் பாதியில் கிளம்பிட, அம்மா ஒருப்பக்கம் வந்ததும் முகம் திருப்பிட, அனுராகவோ சென்னை போய்விட்டால் போதும் என்ற நிலையில் வந்துவிட்டாள். போதுமடா சாமி என்று தோன்றவும்,

“டாட்.. வீட்டுக்கு போயிடலாம்..” என்றாள் லோகேஸ்வரனிடம்.

அவரோ “அப்படியா??? உனக்கு ஓகேனா இப்போவே டாக்டர்ஸ் கிட்ட பேசலாம்..” என்று எழுந்துவிட்டார் அவர்.

தாராவோ “அவளைப் பார்த்தா ஓகே போலவா இருக்கு??” என,

உஷா “நம்ம வீடு ரெடியா இருக்கு.. டூ டேஸ் அங்க ரெஸ்ட் எடுக்கட்டும்.. நர்ஸ் கூட அங்க வந்தாச்சு..” என, அனுராகாவிற்கு திக்கென்றது.

முன்பு மகனின் பிடிவாதம்.. இப்போது அம்மாவின் பிடிவாதம். அனுராகாவிற்கும் பிடிவாதமா மறுக்கவேண்டும் போலிருந்தது. மறுப்பாய் அம்மாவின் முகம் பார்த்தாள் அனுராகா. ஏற்கனவே அந்த பணம் திருப்பிக் கொடுத்த விசயத்தில் தாராவிற்கு கொஞ்சம் யோசனைகள் இருக்க,

இப்போது அனுவின் முகம் சொன்ன சேதி புரிந்து “அட.. இங்க எங்க வீடே இருக்கே.. நான் வர்றப்போவே ரெடி பண்ணிட சொல்லிட்டுத்தான் வந்தேன்..” என்று அவரும் சொல்ல,

“நோ நோ.. கண்டிப்பா எங்க வீட்ல தான்..” என்றார் உஷாவும்..

தாரா அதற்கு பதில் சொல்லாது “தீபன் எங்கே??” என,

“அவன் அப்பா கூப்பிட்டார் சோ கிளம்பிட்டான்..” என்ற உஷாவோ “ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம் சொல்லிட்டார் டாக்டர்.. நீங்க எல்லாம் வந்து நம்ம வீட்லயே இருக்கலாம்.. நானும் கூட இருப்பனே.. டூ டேஸ் தானே..” என,

தாரா இப்போது லோகேஸ்வரன் முகம் பார்க்க, அவரோ எதுவோ யோசிப்பது போலிருந்தது..

“லோகேஷ்….” என்று தாரா அழைக்க, “அனுவோட முடிவு தான்..” என்றுவிட்டார்..

அனுவிற்கும் சரி, தாராவிற்கும் சரி இருவருக்குமே அங்கே செல்வதில் இஷ்டமில்லை. ஆனால் நம் இஷ்டங்கள் மட்டுமே நடப்பதில்லையே..???

அவன் – பெண்ணே பெண்ணே ராவோடும் பகலோடும் உந்தன் ஞாபக தொல்லை..

அவள் – ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்அதில் புயல் வீசி குலைத்தது யார்

காதல் – இது ரெண்டும் ஒரே பாட்டுத்தான்.. ஹா ஹா….

Advertisement