Advertisement

    மது – 20

“நான் இருக்கேன்னு சொன்னியாமே…” என்று பின்னிருந்தே மதுபாலாவை அணைத்தபடி, அவளின் கேசத்தை லேசாய் வாசம் பிடித்துக்கொண்டே கேட்ட ரிஷிக்கு,

மெல்ல ஒரு புன்னகை சிந்திக்கொண்டே அவனது அணைப்பை இன்னும் தன் இடையோடு இருக்கிக்கொண்டவள் “ஆமா…” என்றாள் கொஞ்சம் ராகமாய்..

“ஹ்ம்ம்.. ரிஷி என்னைப் பார்த்துப்பான்னு சொன்னியாமே…”  என்றவன் இப்போது அவளின் காதோரம் தன் இதழ்களைப் பதிக்க,

“ஹ்ம்ம் பார்த்திட்டு தான இருக்க…” என்றவள் நொடிப்பொழுதில் வேகமாய் திரும்பி, அவன் கழுத்தில் இரு கைகளையும் போட்டுக்கொண்டு,

“இதெல்லாம் உனக்கு யார் லைவ் டெலிகாஸ்ட் பண்ணா???” என்று கேட்க,

“ஹா ஹா இதெல்லாம் ஜுஜுப்பி மேட்டர்..” என்றவன், “எல்லாம் கேட்கவும் எனக்கு அப்படியே பறக்குற ஃபீல் மதுபி…” என,

“அடடா.. போதும் நீ பறந்தது.. மறுபடியும் கிளம்பிடாத…” எனும்போதே,

“நீயும் நானும் சேர்ந்து பறப்போம்…” என்றான் ரிஷி, மதுபாலாவோ அவன் சொன்னதை கேட்டு சிரித்தவள்,

“பறப்போம் பறப்போம். அங்கிள் சீக்கிரமே டேட் பாக்குறேன் சொல்லிருக்கார்…” என்றவள் அவன் மூக்கோடு தன் நாசி வைத்து உரச, அவனோ அவள் இதழோடு தன் இதழை உரசி எடுக்க,

“உன் அங்கிள் உன்கிட்ட சொல்வார்.. என்கிட்டே எல்லாமா சொல்வார்…” என,

“போடா பொறமைக்காரா…” என்றவளையும் சேர்த்து இழுத்து சோபாவில் அமர,

“என்ன இன்னிக்கு இவ்வளோ ஜாலி மூட்ல இருக்க ரிஷி.. பொதுவா எப்பவும் கொஞ்சம் உர்ருன்னு தான இருப்ப..” என்று முகத்தையும் மதுபாலா அப்படியே வைத்து சொல்ல,

“நீ பேசுவம்மா பேசுவ.. குடும்பமே உனக்கு சப்போர்ட் பண்ணுது.. நான் என்ன செய்ய மதுபி மேடம்…” என்று ரிஷி புகார் போல் சொன்னாலும் அவன் முகத்தில் சிரிப்பு தாண்டவம் ஆடியது.

கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் ரிஷியின் மொத்த குடும்பமும் கிளம்பியிருந்தது.. அவர்களை  அனுப்பிவிட்டுத்தான் இப்படிதான் வந்து மதுபாலாவோடு சல்லாபித்துக்கொண்டு இருக்கிறான் ரிஷிநித்யன். இதற்கு அவன் வீட்டிலும் சென்று ஒருநாள் தங்கிவிட்டே தான் அனைவரும் கிளம்பினர்..

மதுபாலாவையும் ரிஷி அழைக்க, “நான் வரலை ரிஷி.. இது அவங்களுக்கான டைம்.. அவங்க கூட என்ஜாய் பண்ணு…” என்று சொல்லிவிட்டாள்..

கல்யாணிகூட சொன்னார் “கொஞ்ச நேரம் வந்து இருந்திட்டு போ..” என்று,

“இருக்கட்டும் ஆன்ட்டி… நீங்க கிளம்புறப்போ வர்றேன்…” என்றவள் அதுபோலவே அவர்கள் கிளம்புகையில் தான் சென்றாள்..

அவர்கள் சென்றதும், ரிஷியோ உன்னை கொண்டுவந்து விடுகிறேன் என்று சொல்லி அவளோடு சேர்ந்து இங்கே மதுபாலாவின் வீட்டிற்கு வந்துவிட, அதன்பின் தான் இத்தனை கொஞ்சல்களும்.

“அதெப்படி மதுபி நீ எது சொன்னாலும் அப்பா எதுவுமே சொல்றதில்ல…” என்றவனை கொஞ்சம் நக்கலாய் பார்த்தவள்,

“நான் சரியா பேசுறதுனால அவர் எதுவும் சொல்றதில்ல…” என,

“அப்போ நான் தப்பா பேசுறேனா…” என்றான் வேகமாய்..

“தப்புன்னு யார் சொன்னது…”

“பின்ன…” என்று முகத்தை சுருக்க,

“இதோ சொன்னதுமே சாருக்கு சுர்ருன்னு ஏறுதே அதான் காரணம்….” என்றவள் அவன் முக்கை பிடித்து லேசாய் ஆட்ட,

“போதும் போதும் பிச்சு எடுத்துடாத…” என்றபடி “இருந்தாலும் உனக்கு கொஞ்சம் செல்லமாதான் போச்சு..” என,

“அதுக்கு நான் என்ன ரிஷி பண்ண?? நான் எப்பவும் போலதான் இருக்கேன்..” என்றாள் எப்போதும் போல் தோள்களை குலுக்கி..

“இனியும் நீ இதேபோல, நீ.. நீயா இருக்கணும்னு தான் மதுபி நானும் ஆசைப்படுறேன். எந்த ரீசனுக்காகவும் நானும் சரி.. நம்ம ரிலேஷன்ஷிப்பும் சரி உனக்கு ஒரு பலவீனமா இருந்திட கூடாது.. மதுபி நான் பர்ஸ்ட் டைம் பார்த்தப்போ எப்படி இருந்தாளோ அதே போலத்தான் எப்பவுமே இருக்கணும்..” என்றவன் மேலும் அவளை அணைக்கப் போக,

“போதும் போதும்.. கிளம்புற வழியைப் பார்.. டைம் ஆச்சு..” என்றாள் அவனில் இருந்து விலகி எழுந்து.

“போ நான் போகமாட்டேன்.. இன்னிக்கு இங்கதான்…” என்றவன் பிடிவாதமாய் அமர,

“ரிஷி…!!!!” என்று கண்களை விரித்தவள், “கிளம்பு…” என்று வாசலை நோக்கி கை நீட்ட, “நோ மதுபி.. டுடே இங்கதான்…” என்று ரிஷி சொல்லும் போதே, ஸ்ரீநிவாஸ் அழைத்துவிட்டான்..

‘இவனுக்கு மூக்கு வேர்த்திடுமே…’ என்று முனங்கியவன் “ஹலோ அண்ணா…” என,

“ரிஷி எங்க இருக்க..??” என்றான் ஸ்ரீநிவாஸ் வேகமாய்..

“ஏன்???”

“இல்லடா நாங்க உன் வீட்டு முன்னாடி தான் நிக்கிறோம்…” என்று ஸ்ரீநிவாஸ் சொல்கையிலேயே,

“என்னது?? ஏன் ???!!!” என்று ரிஷி எழுந்திட, மதுபாலாவும் ‘என்னாச்சு’ என்பதுபோல் பார்க்க,

“அது அம்மா அவங்க பர்ஸ் மறந்துட்டாங்களாம்.. சோ எடுக்க வந்தோம்…” என்று ஸ்ரீநிவாஸ் கூறியதும், ரிஷியின் முகம் போன போக்கை பார்க்கவேண்டுமே..

“அதுக்கென்ன.. சொல்லிருந்தா நான் கொரியர் கூட பண்ணிருப்பேன்..”

“அதெல்லாம் அம்மா கேட்கலை.. நீ எங்க இருக்க சீக்கிரம் வா.. வெளிய ரொம்ப நேரம் நிக்க முடியாது…”

“வர்றேன்….” என்று போனை வைத்தவன், மதுபாலாவிடம் விஷயத்தை சொல்ல, “ஹா ஹா ஹா…” என்று சிரித்தவள்,

“கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்…” என்று கைகளை விசிற, அதே கைகளை பிடித்து பின்னே முறுக்கியவன், வேகமாய் அவளுக்கு ஒரு முத்தத்தை கொடுத்து விட்டே கிளம்பினான்..

இன்னும் சிரிப்பு மறையாமல் தான் இருந்தது மதுபாலாவிற்கு… வீட்டில் இருந்த மிச்சம் மீதி வேலைகளை முடித்துவிட்டு வந்து படுத்தவளுக்கு, கன்னியாகுமரி சென்று வந்தது மனதில் ஓடியது..      

கன்னியாகுமரி…

ரயிலை விட்டு இறங்கியதுமே, இவர்கள் அனைவரையும் அழைத்து செல்லவென்று சைலேந்திரன் நின்றிருந்தார்.. சைலேந்திரன் வருவார் என்று மற்றவர்களுக்குத் தெரியுமோ என்னவோ, மதுபாலா சிறிதும் எதிர்பார்க்கவில்லை.. அவரைக் கண்டதும் கண்ணில் ஒரு சிறு திகைப்பு..

‘சைலேந்தர்….’ என்று முனுமுனுத்து அவரைப் பார்க்க,

“ஆக்சுவலி வர ப்ளான் இல்லை.. ரிஷி துரத்திட்டான்…” என்று சொல்லி அவரும் சிரிக்க, 

“ஹா ஹா..” என்று மதுபாலா மலர்ந்து சிரிக்க,

“எங்களோடவே வந்திருக்கலாமே…” என்று சாம்பசிவம் சொல்ல,

“இல்ல சார்.. நான் நேத்து மார்னிங்கே வந்துட்டேன்..” என, இது மதுபாலாவிற்கு இன்னொரு ஆச்சர்யம்..

ஏனெனில் அவளுக்குத் தெரியும், சைலேந்திரன் இப்படியெல்லாம் அவரது வேலையை விட்டு, கிளம்பி வர மாட்டார் என்று..

“என்ன மது அப்படியே நிக்கிற?? நான் தான் போகலை.. அட்லீஸ்ட் நீங்களாவது போங்கன்னு ரெண்டுநாளா ஒரே இம்சை பண்ணிட்டான்..” என்றவர்,  “எல்லாருக்குமே தெரியும் நான் கன்னியாகுமரி வர்றது.. பட் எப்போன்னுதான் தெரியாது..” என,

“யாருமே சொல்லலை…” என்று அனைவரையும் ஒரு பார்வை பார்த்தாள்..

“சரி சரி.. இப்படியே நின்னு பேசிட்டே இருந்தா எப்படி??” என்று கல்யாணி கேட்க,

“சரி போலாம்…” என்று சாம்பசிவம், சைலேந்திரன் ஸ்ரீநிவாஸ் எல்லாம் முன்னே நடக்க, பெண்கள் மூவரும் அவர்களைத் தொடர்ந்தனர்..

மதுபாலாவிற்கு அனைவரோடும்  ரயில் பயணம் செய்தது ஒரு புது அனுபவமாய் இருந்தது.. பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டு என்று பயணம் அழகாய் தான் இருந்தது..

சாம்பசிவமும், ஸ்ரீநிவாஸும் அத்தனை பேசவில்லை என்றாலும், பெண்கள் மூவரும் வெகுநேரம் பேசிக்கொண்டே தான் வந்தனர்.. கல்யாணி அவர் திருமணம் நடந்த கதையை எல்லாம் சொன்னார்..

‘நான் அப்படி பயந்தேன்… இப்படி டென்சனா இருக்கும்…’ என்று பழைய கதைகள் எல்லாம் நிறைய நிறைய பேசினார்..

சாம்பசிவம் அதெல்லாம் கேட்டும், பெண்கள் பேசிக்கொள்ளட்டும் என்று கையில் ஒரு புஸ்தகத்தோடு அவர் பர்த்தில் படுத்துவிட, ஸ்ரீநிவாஸும் அவனது மொபைலில் மூழ்கிட, இவர்கள் மூவருக்கும் உறக்கம் வந்தாலும் பேச்சு வெகு நேரம் தொடர்ந்தது..

அதெல்லாம் மதுபாலாவிற்கு மனதில் சுக அனுபவமாய் இருக்க, ரயில் விட்டு இறங்கினாலோ சைலேந்தர் நிற்க அவளுக்கு அது மேலும் ஒரு ஆச்சர்யம்.. நமக்கு யாருமே இல்லை.. நம் வாழ்வில் நாம் மட்டுமே என்று எண்ணியிருந்தவளுக்கு இதெல்லாம் அனுப்பவிக்கையில் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.. 

ஏற்கனவே ஹோட்டலில் இரண்டு ரூம் புக்காகி இருக்க, ஆண்கள் இருவரும் ஒரு அறையில் தங்களாம் என்று சொல்ல,

“வொய்??? அக்கா அண்ணா ஒரு ரூம்ல இருக்கட்டும்.. நம்ம மூணு பேர் ஒரு ரூம்ல இருப்போம்…” என்று மதுபாலா, மைதிலியை ஒருபார்வை பார்த்துவிட்டு கல்யாணியிடம் சொல்ல,

“அவர்கிட்ட கேட்கணுமே…” என்று கல்யாணி சொல்ல,

“ஆன்ட்டி இதுக்கெல்லாமா???!!! இருங்க…” என்றவள் கொஞ்சம் சத்தமாய்  “அண்ணா நீங்களும் அக்காவும் இந்த ரூம் எடுத்துக்கோங்க.. நாங்க மூணு பேர் ஒண்ணா இருந்துக்கிறோம்…” என்று சொல்லிக்கொண்டே ,

“சைலேந்தர் நீங்க எங்க ஸ்டே பண்ணிருக்கீங்க??” என,

அவரோ “நான் என் பிரன்ட் வீட்ல மதுபி…” என்றதும்,

ஸ்ரீநிவாஸ்,  “அ.. அப்படியா…” என்று மைதிலியைப் பார்த்தவன், “ம்ம்…” என்று பொத்தாம் பொதுவாய் சொல்லிட,

‘எப்புடி…’ என்று மதுபாலா மைதிலியைப் பார்த்து கண்ணாடிக்க,

“ரிஷியும் நீயும் ஜாடிக்கு ஏத்த மூடி தான் போ.. அவனும் இப்படிதான் சொல்லிட்டே இருப்பான்” என்று சொல்லி சிரித்தவர் கல்யாணி.

ஆனால் மதுபாலாவிடம் ரிஷி சொல்லித்தான் அனுப்பியிருந்தான்..

‘அண்ணா எப்போ பார் அப்பா பின்னாடியே போயிட்டு இருப்பான்.. அண்ணிக்கு மனசுல ஆசை இருந்தாலும் சொல்ல மாட்டாங்க.. சோ நீ பார்த்து கவனிச்சுக்கோ…’ என்று..

அவன் சொல்லவில்லை என்றாலும் மதுபாலா இதை தான் செய்திருப்பாள் அது வேறு விஷயம்..

சாம்பசிவம் இதெல்லாம் வேடிக்கை மட்டும் தான் பார்த்துகொண்டு இருந்தார்.. எதிலும் தலையிடவில்லை.. சிறியவர்கள் என்னவோ சந்தோசமாய் இருக்கட்டும் என்று அமைதியாய் இருந்தார்..

ரிஷி வீட்டை விட்டு போனதும், மைதிலி தற்கொலை முயற்சி எடுத்தும் கல்யாணிக்கு மனதில் ஒருவகை தாக்கம் கொடுத்தது என்றால், சாம்பசிவத்துக்கு மற்றொரு வகையான தாக்கம் ஏற்படுத்தியது. ஒருநொடியில் குடும்பமே சின்னாபின்னமாகி இருக்கும் என்று நினைக்கையிலேயே அவருக்கு இதயம் வெடித்து விடுவது போல் தான் இருந்தது..

‘காலத்திற்கு ஏற்ப நாமும் சிறிது மாறவேண்டும்…’ என்பது பிள்ளைகளின்  வாழ்வில் பிரச்னைகள் வந்தபின்னே தான் புரிந்தது. ரிஷி இந்தியா வந்து சேர்வதற்குள் அவரின் உள்ளே இருந்த ஒரு டென்சன் அவருக்கு மட்டும் தான் தெரியும்..

அதிலும் மதுபாலா போன்ற ஒரு பெண்ணை விரும்புகிறேன் என்று சொன்னதும் அவருக்கு அது பேரிடி தான்.. ஆனாலும் மகன் இங்கே வர வேண்டுமே.. கல்யாணி உடனே மதுபாலாவை ஏற்றுகொண்டது போல் அவரால் ஏற்றுகொள்ள முடியவில்லை..

இருந்தாலும் என்னவோ ஒன்று மதுபாலாவை பார்க்கையில் அவளின் பேசும் சரி, நிமிர்வும் சரி, அவளின் நடத்தையும் சரி எதுவோ ஒன்று அவருக்கு மனதில் ஒரு சின்ன அபிமானம் கொடுக்க, ஆழ யோசித்து தீர விசாரித்து தான் முடிவெடுத்தார்..

அப்படி கன்னியாகுமரியில் மதுபாலாவின் பூர்வீகம் பற்றி விசாரிக்கையில் தான் மதுபாலாவின் அப்பாவின் நண்பருக்கு இந்த தகவல் போய், அவரே சாம்பசிவத்தை தொடர்பு கொண்டது..

சில விஷயங்கள் பிடிக்கவில்லை என்றாலும் கொஞ்சம் ஒதுங்கி நின்றுகொள்ள ஆரம்பித்தார். ஆக இப்போது குடும்பத்தில் ஒருவித நிம்மதியும், மகிழ்வும் இருப்பது அவருக்குப் புரிய இன்னுமே கூட தன்னை மாற்றிக்கொள்ள தான் நினைக்கிறார் ஆனால் அது சட்டென்று தான் வருவதில்லை..

நாட்கள் போகையில் அவருமே கூட இன்னும் சகஜமாகலாம் தான்.

ரூமில் அனைவரும் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு, வெளியே செல்ல தயாராகும் போதுதான் சாம்பசிவம் கேட்டார்,

“மதுபாலா இப்போ கூட நீ கேட்கலையே எங்க போறோம்னு…” என்று..

“ஓரளவுக்கு நானே கெஸ் பண்ணினேன் அங்கிள்.. அண்ட் அன்னிக்கு சைலேந்தர் கொஞ்சம் டீடெயில்ஸ் சொன்னார்.. சோ நீங்க சொல்றப்போ கேட்டுக்கலாம்னு இருந்தேன்…” என்றவளைப் பார்த்தவர், எங்கே போகிறோம் என்று விபரம் சொல்ல,

“ஓகே அங்கிள்…” என்று மட்டும் சொன்னவளை கொஞ்சம் வியப்போடு தான் பார்த்தார்..

எந்தவித குழப்பங்களோ, யோசனைகளோ எதுவுமே இல்லை.. தெளிவாய் இருக்கிறாள் என்பதிலயே அவள் ஒரு முடிவெடுத்து தான் வந்திருக்கிறாள் என்பது அவருக்குப் புரிய, பின் அனைவரும் உணவு முடித்து கிளம்பினர்..

சைலேந்தர் வந்ததும் கொஞ்ச நேரத்திலேயே கிளம்பியிருந்தார்..

“நீங்க அங்க வர்றபோ கால் பண்ணுங்க சார்.. நான் அங்க வந்திடுறேன்…” என்று சொல்லி..

ஆக, இவர்கள் எல்லாம் நேராய் போனது, மதுபாலாவின் அப்பாவின் நண்பர் வீட்டிற்கு.. வீடு என்று சொல்ல முடியாது அக்கால மாளிகை என்று சொல்லிட வேண்டும்.. அதை கொஞ்சம் இக்காலத்திற்கு ஏற்ப மாற்றி இருந்தார்கள்..

அங்கே போனாலோ அந்த நண்பர், கிட்டத்தட்ட ஒரு ஐம்பத்து ஐந்து வயது இருக்கும்.. அவர் தான் இவர்களை உள்ளே வரவேற்றார்.. மற்றபடி அவரது வீட்டினர் யாரையும் காணோம்..

அவருமே கூட மதுபாலாவைக் கண்டதும் தன் நண்பனின் மகள் என்று அப்படியிப்படி எல்லாம் குசலம் விசாரித்து உருகிடவும் இல்லை.. பார்த்ததுமே ஒரு சிறு புன்னகை அவ்வளவே.. இது ஒரு அபிசியல் சந்திப்பு என்று அங்கே போனதுமே மதுபாலாவிற்கு நன்கு புரிந்துபோனது..

ஒருவேளை அவர் அன்பாக பேசியிருந்தால் அது தான் அவளுக்கு அந்நியமாய் தெரிந்திருக்குமோ என்னவோ..

முதல் கொஞ்ச நேரம் பொதுவான பேச்சு.. பின் அவர்கள் வீட்டு வேலைக்காரர் இவர்களுக்கு ஜூஸ் கொணர, அதை பருக்கிக்கொண்டே அவர் விசயத்திற்கு வந்தார்..

“என்ன விசயங்களையும் மதுபாலாக்கிட்ட சொல்லிட்டீங்களா சார்…” என்று சாம்பசிவத்தை பார்த்துக் கேட்க,

“நான் சொல்லிட்டேன்.. நீங்களும் ஒன்ஸ் சொல்லிட்டா நல்லது…” என,

“அதுவும் சரிதான்…” என்றவர் “மதுபாலா.. இதெல்லாம் உனக்கு வர வேண்டிய ப்ராபர்ட்டீஸ் லிஸ்ட். உன் அப்பா வழி சொத்து…” என்று ஒரு காகிதத்தை அவளிடம் நீட்ட, அதனை வாங்கி பார்வையை அதில் ஓடவிட்டவள் முகத்தில் எந்தவித பாவனைகளும் இல்லை..

பார்த்து படித்து முடிக்கவும் “ஹ்ம்ம் ஓகே..” என்றவள் பழையபடி அமர்ந்திருக்க, “என்னம்மா எதுவுமே சொல்லலை …” என்றார் அவர்.

“இதுல சொல்ல என்னயிருக்கு சார்..??” என்று மதுபாலா கேட்க, அவரோ ஸ்ரீநிவாஸ் முகத்தைப் பார்த்தார்..

“இல்லை மது.. இதெல்லாம் இத்தனை நாள் இவர் பொருப்பில இருந்தது.. இப்போ நீதான் லீகல் வாரிசுன்னு தெரியவும் உன்கிட்ட ஹான்ட் ஓவர் பண்ண நினைக்கிறார்…”என்றான்..

“அண்ணா.. இதெல்லாம் எனக்கெதுக்கு.. இத்தனை நாள் இது இல்லாம தானே வாழ்ந்தேன்.. சோ இதுல எதுமே எனக்கு வேணாம்.. பட் ஒரு விஷயம் தவிர…” என்றவள்,

அனைவரையும் ஒருபார்வை பார்த்துவிட்டு “பூர்வீக வீடு.. ஐ மீன் எங்க அப்பா அம்மா ரெண்டுபேரும் வாழ்ந்த அந்த வீடு தவிர வேற எதுவும் வேணாம்.. ஏன்னா இந்த ஒண்ணுல மட்டும் தான் ரெண்டுபேருமே சம்பந்த பட்டிருக்காங்க.. சோ மத்ததெல்லாம் வேணாம்..” என்றாள் முடிவாய்..

“மதுபாலா.. இதுதான் உன் முடிவுன்னா நாங்க எதுவும் சொல்ல போறதில்ல.. ஆனா எதுவாயிருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணு.. இன்னைக்கு வேணாம் சொல்லிட்டு நாளைக்கு வருத்தப்படக்கூடாது பாரு…” என்று கல்யாணி சொல்ல,

“நான் யோசிக்காம வந்திருப்பேனா ஆன்ட்டி.. எனக்கு ரிஷி இருக்கான் போதும்..” என்றாள் மெதுவாய் சிரித்து..

அந்த நேரத்தில் யாருக்கு எப்படி இருந்ததோ ஆனால் ரிஷியைப் பெற்றவர்களுக்கு நிச்சயம் பெருமையாய் இருந்தது.. ஒரு பெண்ணின் நம்பிக்கையை பெறுவது என்பது அத்தனை சுலபமான விஷயமல்லவே..

சாம்பசிவமும், கல்யாணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, மைதிலியோ “மது.. நீ வேணாம் சொல்ற சரி.. ஆனா அதுக்கு ஒரு ரீசன் வேணுமே.. நாளைக்கே உனக்கு ஒரு தேவைன்னு வந்தா உன் கைல எல்லாம் இருந்தா அது யூஸா இருக்குமே…” என,

“அக்கா.. எனக்கு ஏதாவது ஒண்ணு வேணும்னா ரிஷி பார்த்துப்பான்.. அதுபோக நீங்க எல்லாம் இருக்கீங்க… இந்த சொத்து பணம் எல்லாம் இல்லாம தான் இதுநாள் வரைக்கும் நான் இருந்தேன்.. நல்ல வசதியாவே தான் இருந்தேன்.. சோ இனியும் எனக்கு அது தேவையில்லை.. அப்புறம் ரீசன் சொல்லனும்னா..” என்றவள் ஒருமுறை ஆழ மூச்சுவிட்டு,

“இது பூர்வீக சொத்து தான்.. பட் என் அப்பா அம்மா ஒண்ணா வாழ்ந்து, இதெல்லாம் எனக்கு வந்திருந்தா நான் கண்டிப்பா வேணாம் சொல்லிருக்கவே மாட்டேன்.. ஆனா அப்படி எதுவும் நடக்கலை.. இத்தனை வருஷம் கழிச்சு இதோட தொடர்புடைய மனுசங்க யாருமே இல்லாம வேறும் இந்த சொத்து மட்டும் எனக்கு கிடைச்சு என்ன ஆகப் போகுது..

இது உனக்குத்தான்னு குடும்பத்துல  யாராவது இருந்து எனக்கு கொடுக்கிறது வேற.. நானா எடுத்துக்கிறது வேற.. சோ எனக்கு இது வேணாம்.. வேணும்னா உங்க எல்லாரோட மனத் திருப்திக்காக ஒரு விஷயம் செய்யறேன்…” என்றவள்,

“சார் என் அம்மாவோட பூர்வீக வீடு உங்களுக்குத் தெரியுமா??” என்றாள் அவரைப் பார்த்து..

“ஹ்ம்ம் தெரியும்மா.. ஆனா அது கை மாறி பலவருசம் ஆகிடுச்சே..”

“யார் வாங்கிருக்காங்கன்னு மட்டும் கொஞ்சம் விசாரிங்க.. அது திரும்ப எனக்கு.. இன்னிக்கு மார்கட் ரேட்ல கொடுக்கிறாங்கலான்னு கேட்டு சொல்லுங்க.. இந்த ப்ராபார்ட்டி லிஸ்ட்ல சேம் அமௌன்ட் வர சொத்தை  அவங்களுக்கு ரெஜிஸ்டர் பண்ணித் தர்றேன்.. எனக்கு இந்த ரெண்டு பூர்வீக வீடும் போதும்..

நான் இன்னாரோட பொண்ணு.. இது என் அப்பா அம்மாவோட வீடு அப்படின்னு சொல்றதுக்கு அது மட்டும் போதும்..” என, அங்கே கொஞ்ச நேரம் அமைதி நிலவியது..

சைலேந்தர் பெருமையாய் பார்த்து அவளை நோக்கி கட்டை விரலை உயர்த்த, அவளும் அதனை ஏற்று தலையை ஆட்டி சிரித்தவள், “அங்கிள் நான் சொன்னது சரிதானா???” என்றாள் சாம்பசிவத்தை நோக்கி..

“உன்னோட எண்ணப்படி.. நீ சொல்றது நியாயமான விசயமா தான் மதுபாலா இருக்கு.. இதுதான் உன் முடிவுன்னா கண்டிப்பா நாங்க அதை மறுக்கப்போறது இல்லை…” என்றவர் தன் குடும்பத்தினரையும் பார்க்க, அவர்களும் ஒன்றும் மறுப்பு சொல்லவில்லை..

“சரிம்மா நீ மத்த  சொத்து எல்லாம் வேணாம் சொல்லிட்ட.. அதை நானே இப்படியே பார்த்திட்டு இருக்க முடியாதே.. சோ அதெல்லாம் என்ன பண்றது…” என்று கேள்வி வர,

“ஹ்ம்ம்… வர்றப்போ பார்த்தேன்.. ஊரே ரொம்ப டேமேஜ் ஆகி இருந்தது.. அளவுக்கு அதிகமா வச்சு என்ன பண்றதுன்னு யோசிக்கிறதுக்கு.. இல்லாதவங்களுக்கு கொடுத்தா அவங்களும் நல்லா வாழ்வாங்க இல்லையா.. சோ அப்பா அம்மா நேம்ல ஒரு ட்ரஸ்ட் ஸ்டார்ட் பண்ணி அதுவழியா இல்லாதவங்களுக்கு ஹெல்ப் பண்ணலாமே..” என,

“நீ சொல்றதெல்லாம் சரிம்மா.. ஆனா அந்த பொறுப்பையும் யார் பார்ப்பா..?? என்னால என் வீட்டு பொறுப்பையே முழுசா பார்த்துக்க நேரமில்ல..” என்றார் அவர்..

“சார் நீங்க அம்மா பூர்வீக வீடு திரும்ப வாங்குறதுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணுங்க…” என்றவள்

“அண்ணா இதுல நீங்கதான் எனக்கு புல் சப்போர்ட் பண்ணனும்.. எல்லா ப்ராபர்ட்டீஸ் சேல்ஸ் பண்றதுக்கும், ட்ரஸ்ட் பார்ம் பண்றதுக்கும்..” என,

ஸ்ரீநிவாஸ் தன் அப்பாவின் முகத்தை ஒருமுறை பார்த்தவன் “கண்டிப்பா மதுபாலா…” என, கல்யாணி மெச்சுதலாய் அவள் முதுகை தட்டினார்..

அதன்பின் மதுபாலாவின்  கையெழுத்து   எதிலெல்லாம் தேவைப்படுகிறதோ அதிலெல்லாம் வாங்கப்பட, பின் அனைவரும் கிளம்பி மதுபாலாவின் அப்பாவின் வீட்டிற்கு சென்றனர்..

மதுபாலாவிற்கு அங்கே செல்கையில் ஒருவித உணர்வு.. கனமான உணர்வு.. அப்பாவும் அம்மாவும் ஒன்றாய் கொஞ்சம் விட்டுகொடுத்து வாழ்ந்திருந்தால், இந்நேரம் இத்தனை பெரிய வீட்டில் அவள் ராணியாய் இருந்திருப்பாள்.. இன்று யாருமே இல்லாது வெறும் வீடு மட்டும் இருந்து என்ன செய்ய என்று இருந்தது..

அனைவரும் அங்கே ஒரு அறையில் அமர்ந்திருக்க, மதுபாலா மைதிலியோடு மொத்த வீடையும் சுற்றிவந்தாள்.. கொஞ்சம் மனத்தில் கலக்கம் தோன்றினாலும் வேகமாய் அதை சமாளித்து தன்னையே நிமிர்த்திக்கொண்டாள்.

இது தான் நிதர்சனம் என்றால் இதை அப்படியே ஏற்றுகொள்ள வேண்டும் என்று தனக்கு தானே சொல்லியும் கொண்டாள்..

வீடு முழுவதும் சுற்றிப்பார்த்து வந்தவள் “அவ்வளோதானே அங்கிள் கிளம்பலாம…” என்று சம்பசிவத்திடம் கேட்க,

“ரிலேட்டீவ்ஸ்  ஒருசிலர் கிட்ட பேசிருக்கேன் மதுபாலா.. அங்க போய் உன்னை  இன்ட்ரோ பண்ணிட்டு.. உங்க கல்யாண விஷயம் பேசிடலாம்னு நினைக்கிறேன்…” என,

“ஹ்ம்ம்.. போகலாம் அங்கிள்… பட் கல்யாண விசயம் பேசுறது எதுன்னாலும் சைலேந்தர் கிட்ட பேசுங்க போதும்…” என்றவள், சைலேந்தரைப் பார்க்க, அவர் முகத்தில் சடுதியில் ஒரு மாற்றம் வந்து போனது..

எப்போதும் தள்ளியே இருப்பாள் என்று தான் நினைத்திருந்தவர் இப்போது மதுபாலா இப்படி சொல்லவும் கொஞ்சம் ஆச்சர்யப்பட்டுத் தான் போனார்..

மதுபாலா சொன்னது சாம்பசிவத்துக்கு புரிந்ததுவோ என்னவோ “அதுவும் சரிதான் ம்மா.. நம்மகூட யார் இருக்கிறாங்களோ அவங்களுக்கு நம்மதான் முக்கியத்துவம் கொடுக்கணும்..” என்றவர் பொதுவாய் சொன்னாரோ இல்லை அவருக்கே அவர் சொல்லிக்கொண்டாரோ தெரியவில்லை..

அன்று மாலையே மதுபாலாவின் அம்மா வழியிலும் அப்பா வழியிலும் இரண்டு குடும்பங்களை சந்தித்தனர்..

ஒருசிலர் நன்றாய் பேசினர்..

‘உன் அம்மாவின் ஜாடை…’ என்றனர்.. இல்லையோ ‘உன் அப்பா சிரிக்கையில் இப்படிதான் இருக்கும்…’ என்றனர்..

மற்றபடி உற்ற பேச்சு என்று எதுவுமில்லை.. ஆக மதுபாலாவும் ஒரு அளவில் நின்றுகொண்டாள்..

எதுவாக இருந்தாலும் ரிஷி இருக்கிறான்.. அவன் குடும்பம் இருக்கிறது.. சைலேந்தர் வருவார் என்று அவர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவள் அப்போது எப்படி புன்னகையோடு இருந்தாலோ இப்போதும் அதே புன்னகையோடு இப்போது உறங்கியிருந்தாள்..          

          

          

Advertisement