Advertisement

 

      மனம் – 9

 “ஏன் மல்லி என் பொறுமையை  சோதிக்கிற ?? உனக்கு என்ன இவ்வளோ பிடிவாதம் “ என்று கோவமாக கத்தி கொண்டு இருந்தான் விபுவரதன்..  

பின்னே அவனுக்கு கோவம் வரதா..?? ஒரு மாதமாக அவனை நன்றாக அலைய வைத்தால் அவனுக்கு எப்படி இருக்கும்.. ஆனால் நித்யா ஒன்றும் வேண்டும் என்றே எதுவும் செய்யவில்லை..

விபுவரதனை விட்டு விலக வேண்டும் என்று தான் எடுத்த முடிவை செயல் படுத்தி கொண்டு இருந்தாள்.. விபு அவளுக்கு போன் செய்தால் எடுப்பது இல்லை.. அவளை பார்க்க அன்னை மெஸ் வந்தால் சரியாக பேசுவது இல்லை..

இல்லை இவன் வருகிறான் என்று தெரிந்தே வெளியே கிளம்பி விடுவாள்.. அப்படியும் இல்லை என்றால் வேலையை கவனிப்பது போல இவனை கண்டுகொள்ள மாட்டாள்..

இப்படியே ஒரு மாதமாக நித்யமல்லிகா ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் இன்று முடிவுக்கு வந்து விட்டது.. விபுவரதணும் தன் பொறுமையை இழந்து விட்டான்..

ஆரம்பத்தில் அவளிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று தான் அவனும் அமைதியாக இருந்தான்.. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவனது மனம் நிம்மதி இழந்தது..

எதற்குமே பிடி குடுக்காமல் இருப்பவளை என்ன செய்வது.. அவனது தாய் தந்தை இருவரும் அவனிடம் இரண்டொரு முறை நித்யாவிடம் பேசினாயா என்று கேட்டு விட்டனர்..

இதற்கு நடுவில் தேவி எப்படியோ தேனு பாட்டியை தாஜா செய்து நித்யாவின் கடந்த காலம் பற்றி தெரிந்து கொண்டாள்.. அதை தெரிந்துகொண்டது மட்டும் இல்லாமல் வீட்டில் வந்து ஒரு பாடு அழுது தீர்த்தாள்..

அவளை சமாதானம் செய்வதற்குள் விபுவிற்கு போதும் போதும் என்றாகி விட்டது.. வேதா தான் ஒரு வழியாக தன் மகளை பேசி பேசி சரி செய்தார்..

தன் அண்ணனை கட்டிக்கொண்டு “அண்ணா நிஜமா சொல்லுறேன் உன் லவ் சக்செஸ் ஆகா நான் எல்லா உதவியும் செய்வேன் “ என்று கூறினாள்..

“ தேங்க்ஸ் தேவி குட்டி “ என்று அவளது அண்ணனும் பதிலுக்கு சிரித்தான்..

இப்படி அத்தனை பேருமே விபுவின் காதலுக்கு பக்கபலமாக இருந்தாலும் அவன் யாரை விரும்புகிறானோ அவள் அமைதியாக இருந்தாள்..

அதை பொறுக்க முடியாமல் தான் இன்று நேரே அவளது இல்லத்திற்கே வந்து விட்டான்..

அன்று அன்னை மெஸ் வர விடுமுறை என்பதால் நித்யா வீட்டில் இருந்தாள்.. தேனு பாட்டி “ கண்ணு பூபதி அண்ணனுக்கு இருமலா இருக்கு ரெண்டு நாளா.. நான் போயி கசாயம் வச்சு குடுத்துட்டு வரேன் “ என்று கூறி சென்று விட்டார்..

அன்று காலை கண் விழித்ததில் இருந்தே நித்யாவிற்கு மனதில் இன்னதென்று கூற முடியாத ஒரு படபடப்பு இருந்து கொண்டே தான் இருந்து.. அமைதியாக அவளது வேலையை செய்து கொண்டு இருந்தாள்..

தேனு பாட்டியும் வெளியில் சென்றபின் வீட்டின் நிசப்தமே அவளை என்னவோ செய்தது.. ஆனால் அந்த அமைதியை குலைக்கும் விதத்தில் வீட்டின் மணி சத்தம் அவளை உலுக்கியது..

“ இந்த நேரத்தில் யாராக இருக்கும்?? ஒருவேளை கெளதம் வந்து இருப்பானோ ?? “ என்று யோசித்துக்கொண்டே கதவு திறந்தவளுக்கு திகைபூண்டை மிதித்தவள் போல நின்று விட்டாள்..

அவளது மனதின் இத்தனை சலனங்களுக்கும் யார் காரணமோ அவனே நடு நாயகமாக வாசலில் நின்று இருந்தான்..

கதவை திறந்தவள் அப்படியே நின்றுவிட்டாள்.. அவளது திகைத்த முகத்தை ரசித்தவாரே “ என்ன மல்லி வீட்டுக்கு வந்தவனை உள்ளே வா என்று கூட கூப்பிட மாட்டியா ?? ” என்று கேட்டான் சிரித்தவாறு..

அவனது சிரிப்பில் தன்னை தொலைத்தவள் ஒரு நிமிடம் தன் தலையை உலுக்கி கொண்டு “ வா.. வாங்க..” என்று கூறி முன்னே சென்றாள்..

“ பாட்டி இல்லையா ?? ” என்று சிரித்து கொண்டே கேட்டான்.. அவனுக்கு தான் தெரியுமே தேனு பாட்டி இருக்கமாட்டார்கள் என்று.. இப்பொழுது அனைவரும் ஒரு கட்சி ஆகிவிட்டார்களே..

நித்யா மனதிற்குள் “ பெரிய இவன் என்னவோ பாட்டிய பார்க்க வந்த மாதிரி பாட்டி இல்லையான்னு கேள்வி வேற “ என்று மனதில் அவனை திட்டி கொண்டே “ இல்லை” என்றாள் ஒற்றை சொல்லாக..

“ ஹ்ம்ம் நல்லது.. நம்மலும் கொஞ்சம் ப்ரீயா பேசலாம்.. மனசு விட்டு “ என்றான் வார்த்தைக்கு வார்த்தை அழுத்தம் குடுத்து..

நித்யாவிற்கு பகீர் என்றது.. “ மனசுவிட்டு என்ன பேசவேண்டும்.. இல்லை இவனிடம் நான் என் மனதில் இருப்பதை எல்லாம் வெளி காட்டிவிட கூடாது.. ஆண்டவா என் விபாவிடம் என் மனசு வெளிப்பட கூடாது.. ” என்று எண்ணியவளின் முகத்தில் அப்படியே அவளது எண்ணங்கள் பிரதிபலித்தன..

அவளது முகத்தையே கூர்ந்து பார்த்தவன் “ என்ன மல்லி என்கிட்டே இருந்து எதையோ மறைக்கிற போல..?? ” என்று கேள்வி கேட்டான்..

நித்யாவிற்கு சும்மவே இவனோடு பேசுவது என்றால் உதறும்.. இதில் இவன் வந்ததில் இருந்து கேள்வி மேல் கேள்வியாக கேட்டு கொண்டு இருந்தால் இன்னும் கடுப்பு ஏறியது..

முகத்தை சுளித்துகொண்டு “ நான் என்ன மறைக்க இருக்கு.. நத்திங்.. கேள்வி கேட்க தான் இங்க வந்திங்களா ?? ஆனா நான் உங்க உப்பு பெறாதா கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லுற மன நிலையில் இல்லை “ என்று பொரிந்தாள்..

“  சரி சரி கூல் மல்லி.. நான் கேள்வியே கேட்கலை.. ஏன் இவ்வளோ டென்ஷன்.. இங்க பாரு உன் முகமெல்லாம் இப்படி வேர்த்திடுச்சு.. “ என்று அவளை சமாதானம் செய்தான்.. அவனது பேச்சில் இலக ஆரம்பித்த தன் மனதை அடக்கி

“ என்ன விசயமா வந்திங்க ?? ” என்றாள் பார்வையை வேறு எங்கோ பதித்தபடி..

“ ஹா.. புடலங்கா… இவளுக்கு தெரியாதா நான் ஏன் வந்தேன்னு  “ என்று மனதில் திட்டிக்கொண்டே, ஏன் உனக்கு தெரியாதா?? ” என்றான் மொட்டையாக..

“ தெரியாது” என்றாள் ஒரு வார்த்தையில் பதிலை..

“ ராட்சஸி” என்று கடிந்து கொண்டு “ சரி எத்தனை நாளைக்கு இப்படி நீ கண்ணாமூச்சி ஆட போற?? ” என்று நேராகவே கேட்டான்..

ஆனால் அவள் தான் மனதில் குதர்க்கமாகவே பேசவேண்டும் என்று முடிவு செய்து வைத்து இருக்கிறாளே.. பின் எப்படி பதில் கூறுவாள் சரியாக..

“ நான் என்ன சின்ன பொண்ணா கண்ணாமூச்சி ஆட ?? இல்ல நீங்க தான் என்ன குட்டி பையனா ?? ” என்றாள் நக்கலாக..

விபு தன் கைகளை உயர்த்தி “ மல்லி ப்ளீஸ்… இது ஜோக் பேசுற நேரம் இல்லை.. அதுக்கெல்லாம் நமக்கு இன்னும் நேரம் இருக்கு.. சோ.. நான் ஏன் வந்தேன்னு உனக்கே நல்லா தெரியும்.. நான் போக வேண்டிய மீட்டிங்கு அப்பாவை அனுப்பிட்டு உன்னைய பார்க்க வந்து இருக்கேன் “ என்றான் பொறுமையை இழுத்து பிடித்தபடி..

நித்யா மனதில் “ தனக்காக இத்தனை தூரம் வந்து இருக்கிறானே ” என்று ஒரு சிறு இறக்கம் தோன்றினாலும் அதை மறைத்து

 “ ஓ !! அப்படி என்ன முக்கியமான வேலை இங்க.. மீட்டிங் கூட போகாமல்.. அப்படி ஒன்னும் நாம பேச எதுவும் இல்லையே “ என்றாள் தன் கை விரல்களை ஆராய்ச்சி செய்துகொண்டு..

அவளையே பார்த்தவன் “ இங்க பாரு மல்லி.. நம்ம விஷயம் எல்லாருக்கும் தெரியும்.. வீட்டில் தேவிக்கு தான் கல்யாணம் செய்யணும்னு இருந்தோம்.. ஆனா நம்ம காதல் தெரியவும் முதல்ல நம்ம கல்யாணம் முடிஞ்சு அப்புறம் தான் தேவி கல்யாணம்னு முடிவு பண்ணியாச்சு..

“  உன் பதில்காக தான் இத்தனை நாள் போராடிக்கிட்டு இருக்கேன்.. ஆனா நீ முகம் குடுத்து கூட பேசுறது இல்லை ” என்றான் தன் வருத்தத்தை அடக்கிய குரலில்..

“ ஆண்டவா என்ன இது இவன் காதல் என்கிறான், கல்யாணம் என்கிறான்.. இத்தனை அன்பை இவனை யார் என் மீது வைக்க சொன்னது.. ?? ” என்று நித்யா எண்ணும் பொழுதே அவளது மனம் “ ஏன் நீ அவன் மீது அன்பு வைக்கவில்லையா ?? நேசத்தை நெஞ்சில் சுமக்கவில்லையா ?? ” என்று கேள்வி கேட்டது.

அவளது கண்களில் அவளையும் அறியாமல் நீர் துளிர்த்தது.. ஆனால் அவளது வேதனையை அவன் முன் காட்டாமல்.. “ இப்ப என்ன சந்தோசமா நீங்க ஒரு நல்ல பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணுங்க.. அப்புறம் தேவிக்கு கல்யாணம் பண்ணுங்க.. இதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு ?? ” என்றாள் ஒன்றும் தெரியாதவள் போல முகத்தை வைத்து..

அவ்வளோதான் விபுவரதனுக்கு இத்தனை நேரம் இழுத்து பிடித்து வைத்து இருந்த கோவமெல்லாம் காற்றில் பறந்தது..

இரண்டே எட்டில் அவளை அணுகி அவளது தோல்களை இருக்க பற்றி “ ஏன் மல்லி என் பொறுமையை  சோதிக்கிற ?? உனக்கு என்ன இவ்வளோ பிடிவாதம்.. உனக்கு நிஜமாவே புரியலையா ?? இல்லை புரியாத மாதிரி நடிக்கிறையா ?? “ என்று கோவமாக உறுமினான்..

அவன் இறுக பிடித்ததில் அவளுக்கு வலித்தது போல முகத்தை வலியால் சுருக்கவும் அவனது பிடியை தளர்த்தினான்.. அப்பொழுதான் கவனித்தான் அவளது கண்களில் இப்போ இதோ வெளி வந்து விடுவேன் என்பது போல கண்ணீர் திரண்டு நின்று இருந்தது..

அவளது வேதனை நிறைந்த முகத்தை கண்ட அவன் முகத்திலும் வேதனை படிந்தது.. தன் குரலை மெதுவாக மாற்றி “ ஏன் மல்லி மா.. உனக்கு நிஜமாவே என் மனசு புரியலையா ?? இல்லை நான் இப்போ வரைக்கும் எதையுமே உன்கிட்ட நேரா சொல்லலன்னு கோவமா ?? ” என்றான் மென்மையாக..

அவன் சாதரணமாக பேசினாலே நித்யாவின் மனம் மயங்கும் இதில் குரலிலும் முகத்திலும் மென்மையை கொண்டு கண்களில் காதலோடு பேசுபவனை அவள் எப்படி வெறுக்க முடியும்..

ஆனாலும் அவளால் இதை எல்லாம் ஏற்றுகொள்ள மனம் தடுத்தது.. முகத்தை மாற்றிக்கொண்டு “ நான் ஏன் உங்க மேல கோவப்படனும்..?? அதுவும் இல்லமால் உங்களுக்கும் எனக்கும் நடுவில் என்ன இருக்கிறது.. எதுவுமே இல்லை.. ஏன் உங்க நேரத்தை இப்படி வீனா என் கிட்ட பேசி வேஸ்ட் பண்றீங்க?? ” என்றால் கம்மி போன குரலில்..

அவள் இப்படி பேசியதற்கு அவன் எதுவும் பதில் சொல்ல வில்லை.. கைகளை கட்டிக்கொண்டு அவளது முகத்தையே பார்த்தபடி நின்று விட்டான்..

அவனும் ஏதாவது பதில் பேசுவான் என்று எதிர்பார்த்தவள் அவன் அமைதியாக நிற்பதை பார்த்து கேள்வியாக நோக்கினாள்..

அவனும் அவளது பார்வையை புரிந்துகொண்ட “ இல்லை நீயும் எவ்வளோ நேரத்துக்கு தான் உன் மனசை மறைத்து என்கிட்டே பொய் பேசுறன்னு நானும் பார்க்குறேன்..” என்றான் நக்கலாக..

“ ஹா.. பொய்யா நானா ?? அதுவும உங்க கிட்டையா ?? என்ன விளையாடுரிங்களா ?? நான் உங்க கிட்ட பேசவே எதுவும் இல்லன்னு சொல்லிட்டு இருக்கேன்.. இதுல நீங்க என்னாடானா பொய் பேசுறேன்னு கூசாம சொல்லிட்டு இருக்கீங்க.. “ என்று அவளும் பதிலுக்கு பேசினாள்..

“இவளிடம் இப்படி எல்லாம் பேசினால் வேளைக்கு ஆகாது “ என்று எண்ணி “ போதும் மல்லி நிறுத்து.. இங்க பாரு.. நான் உன்னைய லவ் பண்றேன்.. உயிருக்கு உயிரா.. என் மனசு என்னான்னு உனக்கும் தெரியும்.. அதே மாதிரி உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கும் தெரியும்.. ஆனா நீ ஏன் மல்லி இப்படி விலகி விலகி போற?? ” என்றான் வேகமாக..

நித்யாவிற்கு என்ன முயன்றும் அவளது மனதில் தோன்றும் மகிழ்ச்சியை மறைக்க முடியவில்லை.. முதல் முறையாக தன் காதலை வெளிப்படுத்தி இருக்கிறானே.. இது ஒன்றே போதாதா ??

“ ஆண்டவா இந்த காதலுக்கு நான் தகுதி ஆனவள் தானா.. என் விபா மனசை நானே நோகடிக்க வேண்டியது இருக்கே.. ஐம் சாரி விபா” என்று மனதில் அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கோவமாக அவனை நோக்கி திரும்பினாள்

“ வாட்… லவ்வா ?? என்ன இப்படி பேசுறிங்க.. வீட்டுல யாரும் இல்லைன்னு உங்க இஷ்டத்துக்கு பேசிட்டே போறீங்க.. ச்சே நீங்க எல்லாம் எப்படி தான் அசோக் அண்ணாக்கு பிரன்ட்டா இருக்கீங்களோ ?? போதும் நீங்க பேசுனதும்.. அதை நான் கேட்டதும்.. முதல்ல கிளம்புங்க..” என்று வாசலை நோக்கி கை காட்டினாள்.

ஆனால் இதற்கெல்லாம் நான் அசரமாட்டேன் என்பது போல “ உள்ள வந்த எனக்கு வெளிய போகவும் தெரியும்.. ஆனா ஒன்னு மல்லி உன்கிட்ட இருந்து சரியான பதிலை வாங்காமல் நான் இங்கே இருந்து செல்ல மாட்டேன் “ என்றான் பிடிவாதமாக..

நித்யாவிற்கு அடக்கி வைத்து இருந்த அழுகை எல்லாம் வெடித்து கிளம்பியது.. ஏனோ இதற்குமேல் அவளால் பொறுமையாக பேச முடியும் என்று தோன்றவில்லை..

லேசாக விசும்பியபடியே “ உங்களுக்கு என்ன தான் வேணும் விபா ?? ” என்றாள் சலிப்பாக..

அவளது விபா என்ற அழைப்பில் மகிழ்ச்சி அடைந்தவன்.. ” இதான் மல்லி.. இந்த அழைப்பு.. இந்த அழைப்புக்கான காரணம் வேணும்.. “ என்றான் அவளது கலங்கிய விழிகளையே ஊடுருவி பார்த்து..

அவனது பார்வையின் வீச்சை தாள முடியாமல் தலை குனிந்தாள்.. பின் மெல்ல “ என்னிடம் எந்த காரணமும் இல்லை.. நீ… நீங்கள் ஏன் என்னை மல்லின்னு சொல்றிங்க ?? அதற்கு நான் ஏதாவது காரணம் கேட்டேனா ?? இல்லையே “ என்றாள் தப்பித்துவிடும் நோக்கில்..

“ நீ காரணம் கேட்கலைன்னா அது உன் தப்பு மல்லி.. பரவயில்லை.. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு.. என் வாழ்க்கை முழுக்க உன் கூட வாழணும்னு ஆசை படுறேன்.. அந்த ஆசை ஓட வெளிபாடு தான் என் மல்லிங்கிற அழைப்பு.. சரி இப்ப நீ சொல்லு ” என்றான்..

அவனது பதிலில் உள்ளம் உருகினாலும் “ என்ன சொல்லணும்.. என்கிட்டே எதுவும் பதில் இல்லை..” என்றாள் அமைதியாக..

அவளை வேகமாக திருப்பி தன்னிடம் நிறுத்தியவன் “ ஏன் மல்லி.. ஏன் இப்படி உன் வாழ்கைய நீயே கேடுத்துகிற.. உனக்கு என்னைய பிடிக்கலைன்னா கூட பரவாயில்லை.. ஆனா உனக்கும் என்னை பிடிச்சு இருக்கு.. அப்புறம் என்ன ?? ” என்றான் ஆற்றாமையோடு..

இதற்குமேல் அவனிடம் என்ன மறைக்க முடியும்.. அவனது தோள்களில் சாய்ந்து கதறி அழ தொடங்கினாள்.. இத்தனை நாள் இல்லை இல்லை இத்தனை வருடமாக தன் உள்ளத்தில் போட்டு அமுக்கி வைத்து இருந்த வேதனை எல்லாம் இன்று இப்பொழுது அவளது கண்ணீராக கரைந்து வடிந்தது அவனது தோள்களில்..

நித்யாவின் மனம் கொஞ்சம் சமன் படட்டும் என்று அவனும் அமைதியாக அவளது கூந்தலை நீவியபடி நின்று இருந்தான்..

நேரம் ஆக ஆக அவளது அழுகை கூடி கொண்டே போனதே ஒழிய குறையவில்லை..” மல்லி போதும்டா.. நீ அழுதது எல்லாம் போதும்.. இனிமேல் நீ சந்தோசமா இருக்கனும்.. இங்க பாரு நீ எதற்கும் கவலை படாதே.. உனக்கு நான் இருக்கேன் மல்லி… நீ என்னைய கல்யாணம் பண்ணிகிட்ட அப்புறம் பாரு இத்தனை நாள் நீ அனுபவித்த கஷ்டத்துக்கெல்லாம் சேர்த்து வைச்சு நான் உன்னை சந்தோசமாக பார்த்துப்பேன் மல்லி.. என்னை நம்பு “ என்றான் அவளது காதுகளில் மெதுவாக..

அத்தனை நேரம் அவனது தோள்களில் சாய்ந்து நின்று இருந்தவள் அவன் கல்யாணம் என்று கூறிய வார்த்தையை கேட்டு படக்கென்று நிமிர்ந்து அவனை பார்த்தாள்.. அவள் முகத்தில் என்ன மாதிரியான உணர்வு என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை..

ஒரு நொடி அவனையே கூர்ந்து பார்த்தவள் “ எனக்கு எந்த சந்தோசமும் வேண்டாம்.. நான் கடைசி வரைக்கும் இப்படியே இருந்திடுவேன்.. எனக்கு இதுவே போதும் “ என்றாள்

“ ஆரம்பித்துவிட்டாள். மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறது “ என்று எண்ணியவன் “ என்ன போதும் மல்லி சொல்லு.. உன் வாழ்கைய நீ வாழ்ந்து முடிச்சுட்டியா ?? இப்ப நீ வாழ்ந்திட்டு இருக்கிறதுக்கு பேருலாம் ஒரு வாழ்க்கை..” என்று கடிந்தான்..

அவள் எதுவோ கூற வரவும் “ போதும் நீ எதுவும் பேசாதா.. நான் பேசுறதை கேளு.. உனக்கு வேணும்னா இந்த வாழ்க்கை போதுமா இருக்கலாம்.. ஆனா எனக்கு இது போதாது.. ப்ளீஸ் புரிஞ்சுகோ மல்லி.. ப்ளீஸ் டி “ என்றான் கவலையாக..

அவனது வருத்தம் நிறைந்த குரல் அவளை அவனிடம் இழுத்தாலும் தன் திடத்தை விடாமல் “ நான் தான் உங்களை நல்லா பொண்ணா பார்த்து கல்யாணம் செஞ்சுக்க சொல்றேன்ல.. பின்ன என்ன ?? ” என்றாள்..

“ அந்த நல்ல பொண்ணு நீதான் மல்லி.. ”

“ நான் இல்லை.. எனக்கு வாழ்கையில எதுவுமே வேண்டாம்..”

“ ஏன்.. ஏன் வேண்டாம்.. உனக்குன்னு ஒரு துணை வேணாமா மல்லி.. உன் மனசுல இருக்கிறது எல்லாம் ஷேர் பண்ண.. உன் கூட சிரிக்க, உன்னை சிரிக்க வைக்க, மனசில ஆழமான நேசம் வைக்க.. இப்படி எல்லாத்துக்கும் உனக்குன்னு ஒருத்தர் வேணாமா?? ”

“ வேணாம்.. அப்படி எனக்கு எதா பேசணும்னா இங்க தேனு பாட்டி இருக்காங்க.. பூபதி தாத்தா இருக்காங்க..”

“ ஆமா மண்ணாங்கட்டி.. தாத்தா பாட்டி கிட்ட நீ என்ன டி பேசிடுவ..?? வாழ்கையில எத்தனையோ இருக்கு மல்லி.. அதை எல்லாம் எல்லார்கிட்டயும் பேசிட முடியாது.. புரிஞ்சுக்கோ..

“ நான் எதையும் புரிஞ்சிக்க விருப்பப்படலை.. எனக்கு எதுவும் வேணாம்..”

“ ஏய் என்ன டி.. நானும் அப்ப இருந்து சின்ன பிள்ளைக்கு சொல்லுற மாதிரி சொல்லிட்டு இருக்கேன்.. நீ என்ன பேசுனதையே பேசிட்டு இருக்க.. இல்லை என்னை பார்த்தா உனக்கு எப்படி டி தெரியுது.. உனக்காக, உன் கூட பேசணும்கிறதுக்காக நீ கண்டுக்கலைனாலும் தினமும் உன் பின்னால சுத்துறதுனால என்னைய ரொம்ப சீப்பா நினைச்சுட்டியா ?? ” என்று கோவமாக உறுமினான்..

அவனது கோவம் அவளது உடலில் ஒரு சிலிர்ப்பை உண்டு பண்ணியது.. ஏனோ அவனது வார்த்தைகள் அவளை இன்னு பலவீனம் அடைய வைத்தது..

தன் முகத்தை இரு கைகளால் மூடி கொண்டு “ ப்ளீஸ் விபா.. இப்படி எல்லாம் பேச வேண்டாம்.. ஏன் உங்க வாழ்கைய நீங்களே இப்படி வேஸ்ட் பண்றீங்க.. நான் தான் வேண்டாம்னு சொல்றேனே விபா.. ” என்று கூறி அழுதாள்..

அவளை இழுத்து தன் மார்பில் சாய்த்து கொள்ள துடித்த மனதையும் கரங்களையும் கட்டுபடுத்தி கொண்டு “ நீ விபா விபான்னு சொல்லுரதுலையே  நீ வேணாம் சொல்லுற லட்சணம் தெரியுது “ என்றான் கோவத்தை விடாமல்..

விலுக்கென்று நிமிர்ந்தவள் அவனிடம் நெருங்கி.,.. “ இப்ப என்ன வேண்டும் உங்களுக்கு… என் பதில் தானே.. நல்லா கேட்டுக்கோங்க.. ஆமா எனக்கும் உங்களை பிடிச்சு இருக்கு.. ரொம்ப பிடிச்சு இருக்கு.. ஏன் எதுக்குன்னு காரணம் எல்லாம் தெரியாது.. ஆனா பிடிக்கும்.. இருந்தாலும் இது எனக்கு வேண்டாம்.. முக்கியமா நான் உங்களுக்கு வேண்டாம்..”

“ யப்பா தன் மனதில் இருப்பதை கூறிவிட்டாள்”  என்று சந்தோசமாக பார்க்க ஆரம்பித்த விபு அவளது கடைசி வார்த்தையில் உறைந்து போய் நின்றான்..

ஆனால் இத்தனை தூரம் அவளை பேச வைத்தவனால் இன்னும் அவளை சரி சொல்ல வைக்கவா முடியாது.. லேசாக சிரித்தபடி “ என்னை உனக்கு பிடிக்கும்னு சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ் மல்லி.. அவனவன் காதலிச்சிட்டு கல்யாணம் செய்ய வீட்டுல போராடுறான்.. ஆனா என் நிலமைய பாரேன், பிடிச்சிருக்குன்னு சொல்லுறவா கிட்ட சம்மதம் சொல்ல வைக்க போராடுறேன்..” என்றான் கேலியாக..

அவனது குரலில் கேலி இருப்பது போல தெரிந்தாலும் அதில் எத்தனை வேதனை இருக்கிறது என்று மல்லியால் புரிந்து கொள்ள முடிந்தது..   

அவனையே பார்த்தபடி நின்று இருந்தாள் அமைதியாக.. அவளது மென் கரங்களை பற்றியபடி “ இங்க பாரு மல்லி.. உனக்கு எந்த பயமும் தயக்கமும் வேண்டாம்..”

“ உன்னை நான் நல்லா பார்த்துப்பேன்.. ஒரு அப்பாவா அம்மாவா, ஒரு சகோதரனா, ஒரு லவ்வரா, ஒரு புருஷனா.. உன்னை எல்லா விதத்துலயும் நான் நல்லா பார்த்துப்பேன் மல்லி.. ப்ளீஸ் என்னை நம்பு டி ” என்று அவன் கூறும் பொழுது அவன் விழி ஓரத்திலும் நீர் துளிர்த்தது..

“ நீயே கொஞ்சம் யோசிச்சு பாரு மல்லி இப்ப உன்கூட தேனு பாட்டி பூபதி தாத்தா எல்லாம் இருக்கிறதுனால சரி.. ஆனா இதெல்லாம் எத்தனை நாளைக்கு ??”

“ உனக்குன்னு ஒரு அழகான வாழ்க்கை காத்திட்டு இருக்கு மல்லி.. உன் மனசுல என்ன இருந்தாலும் சரி அதை எல்லாம் தூக்கி போடு.. புதுசா ஒரு வாழ்கைய ஆரம்பி.. நீ யாருக்காக இப்படி இருக்கணும் “

“ ஏன் இப்படி தினமும் ஓடி ஓடி உழைக்கிற மல்லி.. யாருக்காக சொல்லு ?? இப்பவேனா நீ செய்றது எல்லாம் உனக்கு சரின்னு தோணும்.. ஆனா நான் சொல்லுறது உன் நன்மைக்குன்னு நினைச்சு யோசிச்சு பாரு மல்லி..”

“ ஒரு முப்பது வருஷம் கழிச்சு நீயே உன் வாழ்கைய பத்தி நினைச்சு பார்த்தா அதுல எதுவுமே இருக்காது.. இழந்தது தான் நிறைய இருக்கும்  மல்லி.. என் வாழ்கைய நானே கெடுத்துட்டேனேன்னு உன் மனசு அப்ப தவிக்கும்.. குற்ற உணர்வில் துடிக்கும்..”

“ அதெல்லாம் உனக்கு தேவையா மல்லிமா… யோசி டா.. இன்னும் உனக்கு டைம் வேணுமா தாராளமா எடுத்துக்கோ… ஆனா ஒன்னு.. இந்த ஜென்மத்துல எனக்கு நீ தான் உனக்கு தான்.. ” என்று தன் நீல உரையை பேசி முடித்தான் விபுவரதன்..

“ இத்தனை காதலா..?? நான் இதற்கெல்லாம் தகுதி உடையவளா ?? இவனுக்கு அப்படி நான் என்ன செய்துவிட்டேன்.. இத்தனை அன்பை என் மீது கொட்டுகிறானே.. ஆனால் என்னை திருமணம் செய்தால் இவனது வாழ்க்கை அல்லவா நாசமாகிவிடும் “ என்று எண்ணியவளுக்கு

அடக்க முடியாத வேதனை காரணமாக பெரும் அழுகை வந்தது.. “ ப்ளீஸ் விபா.. போதும்..  நான் இப்பவும் சொல்லுறேன் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சு இருக்கு விபா.. ஆனா நான் உங்க மேல வைக்கிற அன்பே உங்களுக்கு விஷமா மாறிட கூடாதே.. என்னைய கல்யாணம் பண்ணிகிட்ட உங்களுக்கு தான் கஷ்டம் விபா.. சோ ப்ளீஸ்.. நான் உங்களுக்கு வேண்டாம் “ என்று கதறி துடித்தாள்..

அழுகையில் குலுங்கும் அவளது முதுகையே வெறித்து பார்த்தவன் “ எதையுமே வாழ்ந்து பார்த்து தான் முடிவு எடுக்கணும் மல்லி.. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு.. உன் மனசு மாறும்.. என்னை நீ ஏதுப்ப.. அது வரைக்கும் நான் காத்துகிட்டு தான் இருப்பேன் மல்லி.. எனக்கு உன்னை பற்றி தெரியும் மல்லி.. சோ நான் லைப் லாங் வெயிட் பண்ணுவேன்  “ என்று கூறி வெளிய செல்ல திரும்பினான்..

அவளுக்கு இதை கேட்கவும் எங்கு இருந்து தான் கோவமும் வேகமும் வந்ததோ தெரியவில்லை.. வேகமாக அவன் முன்னே சென்று நின்று ” என்ன தெரியும் உங்களுக்கு ??இல்ல என்ன தெரியும்ன்னு கேட்கிறேன்?? ” என்றாள் கோவமாக..

“ இப்ப ஏன் உனக்கு இவ்வளோ கோவம் ?? ” என்றான் அவளது முகத்தை பார்த்து..

“ ஆமா கோவம் தான்.. எனக்கு என் மேல கோவம் தான்.. உங்களுக்கு என்ன ?? நான் எப்படியோ இருந்துட்டு போறேன்.. பெருசா பேச வந்துட்டாரு உன்னைய பத்தி எல்லாம் தெரியும்ன்னு “ என்று வெடித்து துடித்தாள்..

அவனோ அவளுக்கு மேலே கத்தினான் “ ஹே !! ஆமா டி.. உன்னைய பத்தி எனக்கு எல்லாமே தெரியும்.. நானும் பழசை பத்தி எதுவும் பேச கூடாதுன்னு நினைச்சா பேசுறா பாரு பேச்சு “ என்று பதிலுக்கு கத்தினான்..

இதை கேட்கவும் நித்யாவின் முகத்தில் கலவையான உணர்வுகள் ஆச்சரியம், அதிர்ச்சி , குழப்பம் , கோவம் , “ எப்படி தெரியும்?? “ என்ற கேள்வி.. இத்தனையும் கலந்து அவள் முகத்தில் பலவகையான உணர்வுகள்..

அங்கே ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவு அத்தனை அமைதி நிலவியது.. நித்யா தான் முதலில் தன்னை சுதாரித்து கொண்டு “ என்ன தெரியும் உங்களுக்கு ?? ஹா என்ன தெரியும்??? நித்யமல்லிகான்னா என்ன அர்த்தம் தெரியுமா ??”

“ மங்களத்துக்கு எடுத்துக்காட்டா இருக்கிற மல்லிகை பூவை எப்பயுமே தன் தலையில் சூடி இருப்பவள்ன்னு அர்த்தம்.. ஆதாவது எப்பயுமே மங்கலமானவள்ன்னு அர்த்தம் “

“ ஆனா நான் அப்படி இல்லை.. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு.. அது தெரியுமா உங்களுக்கு ??”

“அண்ட் நவ் ஐம் விடோயர்.. அது தெரியுமா உங்களுக்கு ?? சொல்லுங்க ” என்று அவனது சட்டையை பிடித்து உலுக்கினாள்..

அவளது கைகளை பற்றி அவளது கோவமும் வேதனையும் நிறைந்த முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தி “ எல்லாமே எனக்கு தெரியும் மல்லி..” என்றான் ஆழ்ந்த குரலில் விபு..

திகைப்பில் செய்வது அறியாது நின்றுவிட்டாள் விபுவின் மல்லி..                                                     

                             

                                                     

 

                          

 

                  

  

                                       

                                         

                      

Advertisement