Advertisement

       மனம் – 6  

 “ பார்த்து பார்த்து இறக்கி வையுங்க. ஹ்ம்ம் மெதுவா.எல்லாம் சூடா இருக்கு…   என்று சொல்லி கொண்டு இருந்தவள் வேறு யாரும் இல்லை நித்யமல்லிகா தான்..

விபுவின் கெஸ்ட் ஹவுஸ் வேலை அன்றிலிருந்து ஆரம்பிப்பதால் அவள் ஏற்றுக்கொண்ட ஆர்டறுக்காக காலை உணவை டெலிவரி செய்ய நேரே நித்யாவே வேலை நடக்கும் இடத்திற்கு வந்து இருக்கிறாள்..

அன்று முதல் நாள் என்பதால் அசோக்கும் விபுவும் அங்குதான் இருந்தனர்.. அசோக்கோ “தான் காண்பது எல்லாம் கனவா இல்லை நினைவா??” என்று யோசனை செய்து கொண்டு இருந்தான்..

இரண்டு நாள் முன்பு தான் விபு தன்னை அழைத்து அந்த அளவுக்கு கத்தி தீர்த்தான்.. ஆனால் நித்யாவோ அந்த விஷத்தை பற்றி மூச்சு கூட விடவில்லை..

ஆனால் இன்று அத்தனையும் நேர்மாறாக நடக்கிறது.. எங்குமே டெலிவரிக்கு செல்லாத நித்யா, இன்று தானே வந்து முன்னே நிற்கிறாள்.. அன்று அப்படி கோவத்தில் கத்தியவன் இன்று சிரித்துகொண்டு நிற்கிறான்.. “ என்ன டா நடக்குது??? “ என்று தலையை போட்டு உருட்டி எடுத்துக்கொண்டு இருந்தான் அசோக்..

அவனது முகத்தை பார்ப்பதும், அமைதியாக சிரிப்பதும் இப்படியே இருந்தான் விபு.. அவனது சிரிப்பை பார்க்க பார்க்க அசோக்கிற்கு எரிச்சல் மூண்டது..

“ டேய் இப்ப எதுக்கு இப்படி சிரிக்கிற ?? இங்க கட்டட வேலை தான் நடக்குது.. டிவி விளம்பரத்துக்கு ஒன்னும் ஆள் எடுக்கலை சரியா ??” என்று பொரிந்தான் அசோக்..

“ ஹே மாப்ள.. என்ன டா இவளோ சூடா இருக்க ?? உன் தங்கச்சி கடை சாப்பாட விட நீ சூடா இருக்கியே ?? ” நக்கலடித்தான் விபுவரதன்..

“ பேசுவடா.. இதுவும் பேசுவ.. நீ இன்னும் பேசுவ.. ஏன்னா நீ பேசுறது எல்லாம் கேட்க கேனையன் நான் ஒருத்தன் இருக்கேன்ல..” என்றான் அசோக்…

விபு எதுவோ பதில் கூற வரும் பொழுது “ அண்ணா “ என்று அழைத்தபடி அங்கு வந்தாள் நித்யா..

அசோக்கை பார்த்து சிரித்துவிட்டு, விபுவிடம் “ டிபன் எல்லாம் இறக்கி வச்சுட்டாங்க.. வேலை செய்யறவங்களை நீங்க சாப்பிட கூப்பிட்டா  எல்லாத்தையும் பரிமாறிட்டு, திங்க்ஸயும் எடுத்துகிட்டு போக வசதியா இருக்கும் “ என்றாள் நித்யமல்லிகா..

“ இவளுக்கு இத்தனை தன்மையாக, பொறுமையாக, அமைதியாக கூட பேச தெரியுமா “ என்று விபுவும், அசோக்குமே யோசித்தனர்..

அவள் இப்படி வந்து தன்னிடம் அடக்கமாக பேசுவது இதுவே முதல் முறை என்பதால் விபு  தன்னை மறந்து தலை ஆட்டினான்..

“சரி “ என்று கூறி திரும்பியவள் பின் ஒரு நொடி யோசித்தவள் அவர்கள் பக்கம் திரும்பி “ நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டிங்களா ?? ” என்று வினவினாள்..

“ இல்லை “ என்று இருவருமே தலை ஆட்டினர்..

“ சரி அப்ப நீங்களும் சாப்பிட வாங்க “ என்று அவர்களை அழைத்தபடி முன்னே சென்றாள், இருவரும் மந்திரித்து விட்டது போல பின்னே சென்றனர்..

அசோக்கோ “ என்ன இது ?? இது என் தங்கச்சி நித்யா தானா ?? இப்படி பேசுறா.. இப்படி கூட இவளுக்கு பேச தெரியுமா..” என்று யோசித்தவன் தன் பக்கத்தில் நடந்து வந்த நண்பனை திரும்பி பார்த்தான்..

விபுவோ அமைதியாக நடந்து வந்தான்.. “ இவன் எதுக்கு இப்படி இவளோ அமைதியா நடந்து வரான்?? இல்லையே இதுல எதுவோ சரியில்ல.. நித்யாவோட பேச்சும் புதுசா இருக்கு, இவன் அமைதியும் புதுசா இருக்கு..” என்று யோசனையோடு சென்றான்..

விபுவின் நினைவுகளோ இரண்டு நாட்கள் முன் நடந்த நிகழ்வுகளை எல்லாம் அசைபோட்டது..

அன்று அசோக்கிடம் அவ்வளோ கோவமாக பேசிக்கொண்டு இருந்தவனுக்கு அலைபேசியில் அழைப்பு வரவும் பேசிக்கொண்டே தனியாக சென்று நின்று விட்டான்..

அவனது முக மாற்றங்களை மட்டுமே கண்ட அசோக்கோ குழப்பத்தின் உச்சியில் இருந்தான்..

“ யாரு கூட இப்படி பேசிட்டு இருக்கான் ??? ” என்று யோசனையில் இருக்கும் பொழுதே அதற்கு பதில் கூறுபவன் போல அவனது எதிரில் வந்து அமர்ந்தான் விபு..

அசோக் “ என்ன டா இவ்வளோ நேரமா அப்பளம் போரிக்கிரி எண்ணெய் மாதிரி கொதிச்சு போய் இருந்த.. இப்ப என்ன சிறுச்சுகிட்டே இருக்க ?? ”     

“ ஏன்டா அசோக் ஒரு மனுஷன் கோவமா பேசுனா எப்பயுமே அப்படியே பேசிட்டு இருக்க முடியுமா ?? ஒரு நேரம் கோவமா இருந்தா இன்னொரு நேரம் சிரிக்க கூடாதா ?? இது என்ன டா நீ கேக்குற ?? ”

“ அதெல்லாம் சரிதான்.. போன்ல உனக்கு ஏதோ ரொம்ப சந்தோஷமான விஷயம் வந்து இருக்கு போல.. அதான் இப்படி இளிக்கிற “ என்றான் அசோக்

அவனை பார்த்து மெல்ல சிரித்த விபு “ இதுக்கு நீ நேராவே யாருகூட பேசுனன்னு கேட்டு இருக்கலாம் ?? ” என்று கூறிவிட்டு பலமாக சிரித்தான்..

“ ஏன் அதை நான் கேட்டா தான் சொல்லனுமா ??” என்று முறைதான் அசோக்.

விபுவும் மீண்டும் சிரித்தபடி “ போன்ல வேற யாருமில்ல டா , சிந்து தான்.. இப்பதான் எங்க வீட்டுக்கு வந்து சேர்ந்தாலாம்.. நேத்தே அம்மா சொன்னாங்க நான் தான் மறந்து போயிட்டேன் “ என்றான்..

“ ஓ !!! சிந்துவா.. அவளை பார்த்து ரொம்ப நாள் என்ன வருசமே ஆயிடுச்சுல விபு.. நல்ல பொண்ணு.. இனிமே உங்க வீடே கலை கட்டும்.. ஏற்கனவே ஒரு வாழு அங்க இருக்கு.. இப்ப ரெண்டும் சேர்ந்தா அவ்வளோதான் “ என்றான் அசோக் அவனும் மகிழ்ச்சியாக…

“ஆமா அசோக்.. இனி என் தலை தான் உருளும் அங்க.. தேவியும் சிந்துவும் ஒன்னு சேர்ந்தா அவ்ளோதான்.. ஹ்ம்ம்.. இனி என்ன என்ன நான் சந்திக்கனுமோ ?? “ என்று அவன் விளையாட்டாய் கூறினான்..

ஆனால் அவனுக்கு தெரியவில்லை, அவன் வாழ்வில் இனிமேல் தான் பல மாற்றங்களை சந்திக்க போகிறான் என்று..

சிந்து வேறு யாருமில்லை சந்திரவரதனின் சிநேகிதர் மகள் தான்.. தாய் மற்றும் தந்தையை விமான விபத்தில் இழந்தவள்.. உறவுகள் என்று சொல்லி கொள்ள வேறு யாரும் இல்லாததால் அவளை தங்கள் பொறுப்பு ஆக்கி கொண்டனர் வரதன் குடும்பத்தினர்..

லண்டனில் ஒரு பிஸினெஸ் கோர்ஸ் முடித்துவிட்டு இன்று தான் இங்கே தாயகம் திரும்பி வந்து இருக்கிறாள்..  இது பற்றி முன்பே வேதா விபுவிடம் கூறி இருந்தார். ஆனால் அவனோ நித்யமல்லிகா என்ற பெயரிலேயே அனைத்தையும் மறந்துவிட்டு அழைத்துக்கொண்டு இருந்தான்..

சிந்து, இருபத்தி மூன்று வயது அழகு சிலை.. பார்த்ததுமே அனைவருக்கும் பிடித்துவிடும் ரகம்.. அவள் பார்வையும் பேச்சும் கூட அப்படி தான் இருக்கும். நினைத்ததை எப்படியாவது சாதித்து விடுவாள்.. அதற்காக மோசமான குணம் என்று கூறமுடியாது..

அவள் மனதிற்கு இது வேண்டும் என்று தோன்றிவிட்டால் அதை அடைந்தே தீர வேண்டும்.. அவ்வளவே.. ஆனால் விபு குடும்பம் என்றால் அவளுக்கு உயிர்..

விபுவின் தங்கை தேவசேனாவும் சிந்துவும் மிகவும் நெருக்கமான நட்பு.. ஆனால் தேவிக்கே சில நேரம் சிந்துவின் குணங்கள் புரியாத புதிராய் இருக்கும்..

விபுவிற்கு தேவி எப்படியோ அது போல தான் சிந்துவும்.. தன் தங்கையிடம் எப்படி பேசி பழகுகின்றானோ அதுபோலவே தான் சிந்துவிடமும் பேசுவான் பழகுவான்..

சிந்துவிற்கு விபு என்றால் ஒரு தனி மரியாதை, அன்பு எல்லாம்.. காரணம் அவனது திறமை, தொழிலில் அவன் காணும் வெற்றிகள்.. அவனது இன்றைய தனிப்பட்ட அந்தஸ்து..

இதெல்லாம் பார்க்க பார்க்க தானும் இப்படி ஒரு நிலைக்கு வரவேண்டும் என்று எண்ணித்தான் தன் தந்தையின் கம்பனியை சந்திர வரதனின் பொறுப்பில் விட்டு விட்டு இவள் படிக்க வெளிநாடு பறந்ததே..

இன்று படித்து முடித்துவிட்டு தாய்நாடு திரும்பி விட்டாள்.. இன்னும் சில நாட்களில் அவளது கம்பனி பொறுப்புகள் அவளிடம் வந்து சேர்ந்து விடும்..

இனி அவளும் ஒரு முதலாளி, அவளுக்கென்று சமூகத்தில் ஒரு தனி அடையாளம் கிடைக்கும். அவள் பேச்சையும் கேட்க, அவளது முடிவுகளையும் செயலபடுத்த என்று அவளுக்கு கீழே சில பேர் இருப்பார்கள்..

இதெல்லாம் எண்ணி எண்ணி கனவு கண்டபடிதான் இன்று விபுவின் வீட்டிற்கு வந்து சேர்ந்து இருக்கிறாள்..

“ ஹே!! விபு.. எப்படி இருக்கீங்க ??? “ என்று அவனை கண்டதும் ஆற்பரித்தால் சிந்து..

விபுவின் பின்னே அசோக்கும் வருவதை கண்ட சிந்து “ ஹாய் அசோக்… என்ன பாமிலி மேன்.. குடும்பம் எல்லாம் எப்படி இருக்கு ?? ” என்று கேட்டபடி அவனது கைகளை பிடித்து குலுக்கினால்..

விபு அசோக் இருவருக்கும் இவள் சிறு வயதில் இருந்து பழக்கம் என்பதால் அவளுக்கும் இவர்களிடம் எந்த வேறுபாடும் இல்லை..

சிந்து உற்சாகமாய் பேசுவதை பார்த்த தேவி “ ஹே !! சிந்து உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன், இவங்க ரெண்டு பேரையும் அண்ணான்னு கூப்பிடுன்னு.. அதென்ன பேரு மட்டும் சொல்லி மொட்டையா பேசுற ?? ” என்று கேட்டபடி வந்தாள்..

அவள் கேட்ட கேள்விக்கு அவளிடம் பதில் சொல்லாமல் “ என்ன விபு இது  தேவாக்கு கொஞ்சம் கூட கார்பரேட் கல்ச்சரே தெரியலை ??? அது சரி படிச்சிட்டு வீட்டுல சும்மா தானே இருக்கா.. ஹ்ம்ம் இப்பதான் நான் வந்துட்டேன்ல, இனிமே தேவாக்கு எல்லாம் நானே சொல்லி தரேன் “ என்று அவனிடம் கூறினாள்..

இவள் இப்படி பேசுவதை கேட்ட விபுவிற்கு மனதில் ஏனோ சுருக்கென்று இருந்தது.. தேவிக்கும் ஏனோ சிந்து தன்னை மட்டம் தட்டி பேசுவது போல இருந்தது..

ஆனால் அசோக்கோ சிறிதும் யோசிக்காமல் “ சிந்துமா முதல்ல தமிழ் நாட்டு கல்ச்சர் தெரியனும் நம்ம பொண்ணுகளுக்கு.. அதுக்கப்புறம் தான் இப்ப வந்த  கார்பரேட் எல்லாம்..” என்று கூறிவிட்டான்..

ஆனால் அவனது பேச்சை அவள் சிறிதும் சட்டை செய்யவில்லை.. தான் யார் யாருக்கு என்ன என்ன பொருட்கள் வாங்கி வந்து இருக்கிறேன் என்று கடை பரப்ப ஆரம்பித்து அனைவருக்கும் விநியோகமும் செய்துவிட்டாள்..

சந்திரவரதன், வேத விநாயகி, தேவசேனா, விபுவரதன், அசோக், சிந்து என்று அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்..

சிந்து முக்கால்வாசி பேச்சுகளை தனதாக்கி கொண்டாள்.. அவள் பேச்சின் முழு பாகமும் தொழில், அதனல் வரும் பெருமை, ஸ்டேட்டஸ், வசதி என்று இதை சுற்றியே இருந்தது..

இதை எல்லாம் விபுவும் மனதில் கவனித்து கொண்டு தான் இருந்தான்.. அவனுக்கு மனதில் “இப்பொழுது வந்து இருக்கும் சிந்து முன்பு இங்கு இருந்தவள் அல்ல.. மிகவும் மாறிவிட்டாள் “ என்றே தோன்றியது..

அசோக்கும் தன் நண்பனை இதே பொருள் படிந்த பார்வையை தான் பார்த்தான்..

சிந்து “ தென் அங்கிள்… எப்போ  என் கம்பனியை ஹென்டோவேர் பண்றீங்க ?? ” என்றாள் கூலாக..

வந்த அன்றே இவள் இப்படி கேட்பாள் என்று அங்கு இருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை..

சந்திரவரதன் தன் மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு “ என்ன சிந்துமா இப்படி கேட்டுட்ட? அது உன் கம்பெனி.. நீ எப்ப வேணா வந்து உன் பொறுப்பை எடுத்துக்கலாம்.. ஆனா இப்பதானே வந்து இருக்க.. கொஞ்ச நாள் ரெஸ்ட் எடு.. “ என்று அவர் பேசி கொண்டு இருக்கும் பொழுதே

“ நோ அங்கிள்..” என்று குறுக்கிட்டாள் சிந்து..

இதுவரை அந்த வீட்டில் சந்திர வரதன் பேசும் பொழுது யாரும் குறுக்கே பேசியது கிடையாது.. ஏன் வேறு யார் பேசினாலுமே அவர்கள் முழுதாக கூற வருவதை கூறி முடித்த பின்னே தான் மற்றவர் தங்கள் கருத்தை கூறுவர்..

ஆனால் சிந்துவின் நடவடிக்கை முழுக்க வேறுபட்டதாக இருந்தது.. ஒரு நொடி வேதவிநாயகியின் முகத்தில் கருமை படர்ந்து மறைந்தது..

அதை விபு கவனித்து விட்டான்.. அவனுக்கு உள்ளே கோவமும் தலை தூக்கியது.. ” சிந்து முதல்ல அப்பா என்ன சொல்ல வராங்கன்னு கவனி.. அதுக்கு அப்புறம் உன் கருத்தை நீ சொல்லு “ என்றான் அழுத்தமாக..

அவனை பார்த்து சலுகையாக சிரித்தவள் “ விபு !!!!! என்ன இது இன்னும் நீ மாறவே இல்லையா.. அட கடவுளே… அதே பழைய பஞ்சாங்கம் தானா.. என்ன அசோக் இது?? உன் பிரன்ட் இப்படி இருக்கான் ??“ என்று கேட்டபடி தன் கால் மேல் கால் போட்டு அதை ஆட்டியபடி வேறு அமர்ந்தாள்..   

சந்திர வரதனுக்கு இதை காணவும் எப்படியோ ஆகிவிட்டது..  நீங்கள் எல்லாம் பேசிக்கொண்டு இருங்க“  என்று கூறி எழுந்து சென்று விட்டார்..

விபு இதை அனைத்தும் கவனித்து கொண்டே தான் இருந்தான்… அவர் எழுந்து செல்லவும் சிந்து “ ஆன்ட்டி என்ன  இது , நான் பேசிட்டு இருக்கேன் அங்கிள் அவர் எதுவுமே சொல்லாம எழுந்து போயிட்டாரு.. நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா ?? ” என்றாள் பாவமாக முகத்தை வைத்து..

இது தான் சிந்து சூழ்நிலையை பொருத்து தன்னை அப்படியே மாற்றி கொள்வாள்.. அதனால் தான் இன்று வரை அவள் எப்படி பட்டவள் என்று யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை..

அவளது கேள்விக்கு வேதா பதில் கூறும்முன் தன்னறையில் இருந்து வெளியே வந்த சந்திர வரதன் “ நீ தப்பா எல்லாம் பேசலை சிந்து.. உன் கம்பனி பொறுப்புகளை நீ பார்க்கனும்னு நினைக்கிறது என்ன தப்பு இருக்கு ?? “ என்று கேட்டுகொண்டே அவள் அருகில் சென்று அமர்ந்தார்..

“ யெஸ் அங்கிள்.. அதான் நான் எப்ப ஆபீஸ் வரட்டும்னு கேட்டேன்.. எனக்கு தெரியும் நீங்க சரியா புரிஞ்சுப்பிங்கன்னு…” என்று கூறி சிரித்தாள்..

அசோக்கிற்கு ஏனோ எரிச்சலாக வந்தது.. ”என்ன இது இவள் பேசுறது, பழகுறது எதுவுமே சரி இல்லையே“ என்று எண்ணியவன்.. தான் கிளம்புவதாக கூறி விடை பெற்றான்..

சந்திரவரதன் சிந்துவிடம் அவள் அலுவலகம் சம்பந்தபட்ட ஒரு பைலை குடுத்தார்.. ”இந்தா சிந்து மா. இதுல ஆபீஸ் சமந்தப்பட்ட எல்லா டீடைல்சும் இருக்கு.. படிச்சு பார்த்துட்டு ஒரு கையெழுத்து மட்டும் போடு.. நாளைக்கு என் கூட ஆபீஸ் வந்து நீ உன் பொறுப்புகளை எடுத்துக்கலாம் “ என்று கூறினார்..

“ ஆகா !!!! தேங்க்ஸ் எ லாட் அங்கிள்… “ என்று கூறி அவர் கையில் வைத்து இருந்த பைலை வாங்கி சரியாக படித்து கூட பார்க்காமல் கையெழுத்து போட்டாள்..

இதை காணும் பொழுது விபு நினைத்தான் “ ஹ்ம்ம் இவள் ஒரு பைலை கூட சரியா படிக்காம கையெழுத்து போடுறா.. இவள் எப்படி எல்லாம் நிர்வகிக்க போறா ?? ” என்று யோசித்து தான் தாய் மற்றும் தந்தையின் முகத்தை பார்த்தான்..

அவர்கள் முகத்திலும் அதுவே இருந்தது.. ஆனாலும் வெளியே காட்டி கொள்ளாமல் “ சிந்து, நீ எப்ப வேண்டுமானாலும் உன் பொறுப்பை ஏத்துக்கலாம்.. ஆனா என்னோட ஒரு சின்ன சஜசன் என்னனா, நீ ஒரு மூணு மாசதிர்க்காவது என்கிட்டயோ இல்ல விபுகிட்டயோ ட்ரைனிங் எடுத்துகிட்டா  நல்லது..” என்று கூறினார் விபுவின் தந்தை..

அவர் கூறுவதை கேட்ட சிந்து பயங்கரமாக சிரிக்க ஆரம்பித்து விட்டாள்..” என்ன அங்கிள் இது?? என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என்ன ?? இது என் கம்பனி அதை நான் நஷ்டத்துல விட்டுடுவேனா என்ன ?? நீங்க வேணும்னா பாருங்களேன் போக போக நீங்களே என்கிட்டே ஐடியா கேட்பிங்க” என்று கூறினாள்..

இதற்கு மேல் அவரால் என்ன கூற முடியும்.. இது முழுக்க முழுக்க அவள் சொத்து.. அவளுக்கு உரிமை பட்டது.. அவள் கேட்டால் குடுத்து தானே ஆகவேண்டும்..

ஆனால் படித்து மட்டுமே முடித்து விட்டு வந்து உடனே பொறுப்பை ஏற்றுக்கொண்டு எப்படி அவளால் திறம்பட எல்லாம் செய்ய முடியும்.. அந்த கம்பெனியில் சந்திரனின் உழைப்பு பெரும் பங்கு இருக்கிறது..

அதை எல்லாம் ஒரே நொடியில் அவள் கையில் தூக்கி குடுத்து ஒன்றுமில்லாமல் செய்து விட முடியுமா..

ஆனால் இதெல்லாம் சொன்னால் அவள் புரிந்து கொள்வாளா என்று தெரியவில்லை..  தன் பெற்றோகளின் முகத்தை பார்த்த விபு “ அப்பா சிந்து சொல்லுறது சரி தான்.. நீங்க கவலை படவேண்டிய அவசியமே இல்லை.. அவளுக்கு இருக்க திறமைக்கு இன்னும் இந்த கம்பனியை நல்லா கொண்டு வருவா.. “ என்று கூறவும்

சிந்து “ யப்பா…. விபு !!! சூப்பர் மேன்.. இப்பதான் நீ ரொம்ப சரியா பேசி இருக்க..” என்று கூறி அவன் தோள்களில் கை போட்டு கொண்டாள்.. ஆனால் விபு அவள் அறியாத வண்ணம் அவளது கைகளை விளக்கிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டான்.

சிறிது நேரத்தில் சிந்துவும், தேவியும் தங்கள் அறைக்கு சென்று விட்டனர்.. வேதாவும் சந்திர வரதனும் அமர்ந்து இருந்தனர்..

“ என்னங்க சிந்து இப்படி மாறிட்டா.. நான் தேவிய எப்படி வளர்த்தேனோ அப்படிதானே இவளையும் வளர்த்தேன்.. ஒரு ரெண்டு வருஷம் வெளிநாடு போயிட்டு வந்துட்டா எல்லாம் மாறிடுமா இல்லை மறந்திடுமா ?? ” என்றார் தன் கணவரிடம் வேதா..

“ இங்க பாரு வேதா நீ இப்ப கவலை படுறதுல எந்த அர்த்தமும் இல்லை.. சிந்து நம்ம வளர்த்த பொண்ணுனாலும் அவ ஒரு தனி மனுசி.. அவளுக்குன்னு இருக்க உணர்வுகள் தனி தான்.. அதனால எந்த சூழ்நிலையிலும் அவளை நாம எதுக்கும் கட்டாயம் படுத்த கூடாது “ என்றார் விபுவின் தந்தை..

“ நீங்க சொல்லுறது சரிதாங்க.. ஆனா இவ நடந்துகிறதா பார்த்தா எனக்கு எதுவும் சரியா படலை.. நாம அப்படியே விட்டுட முடியுமா ?? ”

“ அப்படியே யாரு விட போறா ?? அவ என்ன பண்ணாலும் அவளை கவனிக்க ஒரு ஆள் ஏற்பாடு பண்ணிட்டு தான் அவகிட்ட கம்பெனி பைல் குடுத்தேன்.. அவளுக்கு கல்யாணம் ஆகியே போனாலும் நமக்கு அவ மேல பொறுப்பு இருக்கு.. அதுனால இப்ப நீ கவலை படாமா போய் வேலையை பாரு” என்று கூறி சென்று விட்டார்..

விபுவிற்க்கு ஏனோ சிந்துவை நினைத்து மனம் மிகவும் குழப்பமாக இருந்தது.. காலையில் தான் நித்யாவுடன் சண்டை, இப்பொழுது இவள் நடந்து கொள்ளும் விதம் எல்லாம் சேர்ந்து அவனை சோர்ந்து போக வைத்தது..

மனம் சிறிது அமைதி பெற மொட்டை மாடியில் நின்று இருந்தான்.. அவனது மனம் போலவே அவனது அலைபேசியும் சிணுங்கியது..

இப்பொழுது வந்ததும் ஒரு புதிய எண்.. “ யாரு இது இந்த நேரத்தில் “ என்று நினைத்து “ ஹலோ “ என்றான்

அந்த பக்கம் முதலில் அமைதியாக இருந்தது.. மீண்டும் இருமுறை “ ஹலோ ஹலோ “ என்றான் விபு..

“ நா… நான் .. நித்யா பேசுறேன் “ என்று பதில் வந்தது.. முதலில் அவனுக்கு எதுவுமே புரியவில்லை. அதன் பிறகு கொஞ்சம் சுதாரித்து மனதிற்குள் “ இவ எதுக்கு இப்ப பேசுறா?? ஒருவேலை போன்லையும் சண்டை போடுவாளோ ??” என்று எண்ணி அமைதியாக இருந்தான்..

“ வி….. விபு… Mr. விபுவரதன்.. இருக்கீங்களா ?? ” என்றாள் மென்மையாக.. இதற்குமேல் அவனால் அமைதி காக்க முடியுமா என்ன ?? அவளது குரலே அவனுக்கு கூறிவிட்டது, சமாதான கோடி பறக்க விடவே இப்பொழுது அழைத்து இருக்கிறாள் என்று..

“ அப்படி வா வழிக்கு “ என்று புன்னகைத்தபடி.. ” யாரு ?? நித்யா வா ?? எனக்கு அப்படி யாரையும் தெரியாதே ??” என்றான் வேண்டும் என்றே.. ஆனால் மனமோ “ டேய் விபு அவளே இறங்கி வந்து பேசுறா.. இதுல நீ இப்படி வேற நடிக்கிறயா ?? ” என்று கேள்வி கேட்டது..

நித்யா ஒரு நொடி யோசித்தாள் “ ஒருவேலை நிஜமாகவே இவனுக்கு நம்மளை நியாபகம் இல்லையோ ??” என்று யோசித்தவள் “ நான் தான் நித்யமல்லிகா “ என்றாள் மீண்டும்..

“ யாரு எனக்கு சரியா கேட்கலை.. நீங்க கொஞ்சம் சத்தமா பேசுங்க ப்ளீஸ் “ என்றான் சிரிப்பை அடக்கி..

அவளும் கண்டுகொண்டாள் நடிக்கிறான் என்று.. தன் குரலை சற்று கடினமாக்கி ” நான் நித்யமல்லிகா பேசுறேன்.. அசோக் ஓட தங்கை.. நான் Mr. விபுவரதன் கிட்ட பேசலாமா ?? ” என்றாள்

“ ஆகா மறுபடியும் மரம் ஏறுறா போலவே “ என்று எண்ணியவன் “ ஓ !! ம…. நித்யமல்லிகா.. நான் கூட மல்லின்னு கூப்பிட்டு அது உனக்கு பிடிக்காம நீ கூட என்னைய கண்டபடி பேசுனையே ?? அந்த நித்யமல்லிகாவா ?? ” என்றான்..

இது ஒன்றே போதாதா அவளை கோவப்பட வைக்க..  மனதிற்குள்  என்ன அவனை திட்டி இருப்பாளோ வேண்டும் என்றே அவன் இருமிவிட்டு “ யாரோ என்னை ரொம்ப திட்டுறாங்க போல…” என்றான்..

அவள் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் “ நான் ஏன் போன் பண்ணேன்னு கேட்க மாட்டிங்களா ?? ” என்றாள்.. “ போன் பண்ணது நீ மல்லி.. சோ, நீதான் என்னனு சொல்லணும் “ என்றான் நம் நாயகன்..

மனதிற்குள் “ திமிர் பிடித்தவன்.. காலையில தானே அவ்வளோ திட்டு வாங்கினான். கொஞ்சம் கூட ரோசமே இல்லாம இப்படி பேசுறான் “ என்று மேலும் அவனை கடிந்து விட்டு, ”அது… அது வந்து.. நான் சாரி கேட்க தான் பண்ணேன் “ என்றாள்..

“ சரி கேளு “ என்றான் விபு.. அவனுக்கு அவள்தான் பேசுவது என்று தெரிந்ததுமே அதுவரை இருந்த குழப்பமான மனநிலைமை மாறி மகிழ்ச்சி பொங்கியது.. அவளை சீண்ட வேண்டும், வம்பிழுக்க வேண்டும் என்றெல்லாம் அவனுக்கு தோன்றியது..

ஆனால் அப்படி எல்லாம் அவன் பேசினால் உள்ளதும் கேட்டு போய் விடும். அதனால் கொஞ்சம் அவளிடம் அடக்கி வாசிக்கலாம் என்று முடிவு செய்தான்.

“ என்ன ?? என்ன கேக்கணும் ?? ” என்றாள் அவள் குழம்பியபடி…

“ அட என்ன மல்லி?? நீதானே சாரி கேட்க போன் பண்ணேன்னு சொன்ன.. அதான் கேளு “ என்றான் விபு அமைதியாக இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல..

நித்யா மனதிற்குள் “ என்ன ஒரு நெஞ்சழுத்தம்?? இவனுக்கு.. வேணாம் நித்யா இதோட இவன் கிட்ட பேச்சை நிறுத்து.. “ என்று முடிவு செய்து “ சாரி நான் காலையில கொஞ்சம் டென்ஷன்னா இருந்தேன்.. அதான் அப்படி பேசிட்டேன்.. மத்த… மத்தபடி வேற எதுமில்ல.. உங்களை ஹர்ட் பண்ணனும்னு எதுவும் எண்ணமில்லை “ என்றாள் அமைதியாக..

“ முன்ன பின்ன இவளுக்கு சாரி கேட்டு பழக்கம் இல்லை போல “ என்று எண்ணிக்கொண்டே “ ஓ !!! வேற எதுவுமே இல்லையா ?? ” என்றான் சிரித்தபடி..

“ ஹ்ம்ம் அது வந்து.. எனக்கு மல்லின்னு கூப்பிட்டா பிடிக்காது.. சோ “ என்று அவள் பேசி முடிக்கவில்லை

அவன் “ எனக்கு அதுதான் பிடிச்சு இருக்கு.. நித்யமல்லிகான்னு அவ்வளோ பெருசா எல்லாம் என்னால கூப்பிட முடியாது.. சோ நான் மல்லின்னு தான் கூப்பிடுவேன்.. வேற ஏதாவது சொல்லனுமா ?? ” என்றான் விபு.. அவளுக்கு மேற்கொண்டு பேசவே அவன் இடம் தரவில்லை..        

என்ன இவன் இப்படி பேசுகிறான் “ என்று நினைத்தவள் “ இல்லை வேற எதுவும் இல்லை “ என்றாள் தன் கோவத்தை எல்லாம் அடக்கியப்படி.

“ ஓ !! சரி “ என்று கூறி போனை வைத்து விட்டான்.. அங்கே நித்யாவோ ஒரு நிமிடம் தன் போனையே பார்த்தபடி நின்று இருந்தாள்.. அவளுக்கு எதிர் புறம் பூபதியும் தேனம்மாவும்  இருந்தனர்..

அவர்களை பார்த்து “ இப்ப ரெண்டு பேருக்கும் சந்தோசமா ?? என்னவோ அவன் பெரிய ஆளு, நல்லவன், அப்படி இப்படின்னு இப்ப என்னைய சாரி கேட்க சொன்னிங்களே.. இப்ப பாருங்க எப்படி போனை கட் செய்யுறான்னு..” என்று கோவமாக பேசினாள்..

அவளுக்கு கோவமெல்லாம் இவர்கள் இருவரும் விபுவிற்க்கு சாதகமாக அவளிடமே பேசியது தான்..

அவர்கள் பதில் கூறும்முன் இம்முறை அவளது அலைபேசி சிணுங்கியது.. அதில் விபுவின் எண்ணை பார்த்து குழப்பத்துடன் “ ஹலோ “ என்றாள்..

“ ஹலோ நான் வி… விபு… Mr. விபு வரதன் பேசுறேன் ” என்று அவள் கூறியது போல கூறினான்..

“ சரியான திமிர் பிடிச்சவன் “ என்று அவனை திட்டிவிட்டு மனதிற்குள் தான். “ ம்ம்.. சொல்லுங்க.. என்ன விஷயம் ?? ” என்றாள்

விபு மனதிற்குள் “ பிறக்கும் பொழுதே திமிரா தான் பிறந்து இருப்பாளோ “ என்று யோசித்து கொண்டே “ ஹ்ம்ம் அது நான் உங்களுக்கு ஒரு மாசம் ஆர்டர் குடுத்து இருந்தேன் இல்லையா ?? ” என்று கூறி பேச்சை நிறுத்தினான்.

“ம்ம்.. ஆமாம் அதை தான் வேணாம்ன்னு சொல்லிட்டிங்களே?? ” என்றாள் கடுப்புடன்..

“ அது, அந்த நேரம் இருந்த கோவத்துல பேசுனது.. பட் நான் பிசினஸ்ல குடுத்த வாக்கை மீறமாட்டேன்.. சோ வர வெள்ளிகிழமை சொன்னது மாதிரி பூட் சப்பளை பண்ணிடுங்க “ என்றான் மிடுக்காக..

“ இவன் அலப்பரைக்கும் ஒரு அளவு இல்லை போலையே “ என்று சலித்துக்கொண்டு “ ம்ம் சரி, நானும் என் தொழில்ல பின் வாங்க மாட்டேன் “ என்று கூறினாள்..

ஆனால் அவனோ “ பட் ஒன் கண்டிஷன் “ என்றான்..

நித்யா “ என்ன ???”

“ அது ஒன்னும் இல்லை மல்லி, அன்னைக்கு நீ ரொம்ப கோவமா வேற பேசிட்டியா ?? நியாயமா பார்த்தா நான் உன் கூட பேசவே கூடாது, உன்கிட்ட ஆர்டர் குடுக்கவும் கூடாது.. ஆனாலும் பாவம் நீ சின்ன பொண்ணு.. இந்த வயசுல இவ்வளோ உழைக்கிற.. சோ …….” என்று நீட்டி முழக்கினான்

அவள் பல்லை கடித்து கொண்டு “ சோ…?? ” என்றாள்

விபுவோ சிரித்தபடி “ சோ … வெள்ளிகிழமை காலை டிபன் குடுக்க ஓனர் மேடம் தான் வந்து சப்பளை செய்யணும் “ என்றான் அழுத்தமாக..

“ வாட்… என்ன உளறிங்க ??? நான் அப்படி எல்லாம் எங்கயும் போனது இல்லை.. வொர்கர்ஸ் வருவாங்க..” என்று பொரிந்தாள்

“ அதெல்லாம் எனக்கு தெரியாது.. நீ நிஜமாவே மனசார தான் மன்னிப்பு கேட்ட அப்படினா நீ தான் அன்னைக்கு வரணும்.. அவ்வளோ தான் “ என்று கூறி அவளது பதிலுக்கு காத்திராமல் வைத்து விட்டான்..

என்னதான் இப்படி கெத்தாக பேசினாலும் அவனுக்குமே உள்ளே ஒரே உதறல் தான்.. முதலில் தான் ஏன் இப்படி அவளிடம் நடந்து கொள்கிறோம் என்றே புரியவில்லை..

“ சண்டை கோழி இப்ப ரொம்ப அடக்கி வாசிச்ச மாதிரி இருந்ததே “ என்று யோசித்தான்.. ஆனால் அவனுக்கு தெரியவில்லை பாவம் பூபதி, தேனம்மா புண்ணியத்தில் இவன் தப்பித்தான் என்று..

இதே நித்யா மட்டும் இருக்கும் பொழுது பேசி இருந்தான் என்றால் இந்நேரம் இருவருக்கும் நடுவில் ஒரு உலக யுத்தமே நடந்து இருக்கும்..

அவளோடு சுமுகமாக பேசவும் இல்லை, சண்டையும் போடவில்லை ஆனாலும் அவன் மனம் சந்தோசமாக இருப்பதாக உணர்ந்தான்..

“ நாம பாட்டுக்கு நீ வரணும்ன்னு சொல்லிட்டோம்.. வந்து ஒரு வேலை கோவமா சண்டை போட்டா என்ன பண்ணுறது.. இவதான் சரியான சண்டி குதிரை ஆச்சே.. பாவம் இவளை கல்யாணம் செஞ்சுக்க போறவன்.. ஹ்ம்ம் ஆசையா செல்லமா கூட கூப்பிட முடியாது.. ” என்று தன்னிஷ்டத்திற்கு நினைத்து கொண்டு இருந்தவனை அவனது மனசாட்சி இடித்தது..

“ அவளை கல்யணம் பண்ணிக்க போறவன் செல்லமா கூப்பிடுறது எல்லாம் இருக்கட்டும்.. நீ ஏன் அவளை மல்லின்னு கூப்பிடுற ??” என்று கேள்வி கேட்டது..

“ அது.. அது  அவ ஆரம்பத்துல இருந்து என்னைய எப்படி எல்லாம் கடுப்பேத்துனா.. அதான் அவளை அப்படி கூப்பிடுறேன்..” என்று அவனிடம் அவனே சமாதானம் செய்து கொண்டான்.. 

அதன் பிறகு அவனாக “ எதுக்கும் அன்னைக்கு அசோக்கை கூட கூப்பிட்டு போயிடனும்.. அப்பத்தான் இவ திட்டுனாலும் அவன் சமாளிப்பான் “ என்று எண்ணி தான் இன்று அவனது நண்பனையும் அழைத்து கொண்டு வந்து இருந்தான்..

இது தெரியாத அசோக்கோ அப்பாவியாக அமர்ந்து இருந்தான் காலை உணவு உண்ண. தன்னிடம் நின்று இருந்த தங்கையை பார்த்து “ என்ன நித்யா நீயே வந்து இருக்க?? எப்பையும் நீ இப்படி எல்லாம் வர மாட்டியே ?? ” என்று கேட்டான்..

அதற்க்கு அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு விபுவிடம் “ இங்க பாருங்க Mr. விபுவரதன், அன்னைக்கு நான் பேசுனது தப்பு.. கோவத்துல பேசிட்டேன்.. அதுனால தான் இன்னைக்கு நானே நேருல வந்தேன்.. ஆனா இதுவே தினமும் தொடராது.. புரியுதா ?? “ என்றாள் தன் ஒற்றை புருவம் உயர்த்தி..

அசோக் “ என்ன டா நடக்குது இங்க ?? “ என்பது போல பார்த்தான்.. மனதிற்குள் “ இதுங்க ரெண்டும் சரி ஆகிடுச்சுனு நினைச்சா மறுபடியும் முட்டுதே “ என்று யோசித்தபடி விபுவின் முகத்தை பார்த்தான்..

அவனோ சிரித்தபடி நின்று இருந்தான்.. “ இவன் என்ன லூசா.. அவ திட்டிகிட்டு இருக்கா.. இவன் சிரிக்கிறான்..” என்று எண்ணியவன் “ டேய் விபு “ என்றான் மெதுவாக..

அவனை கண்டுகொள்ள தான் யாருமில்லையே..  “ ஹ்ம்ம் மல்லி நீ எப்படி வேணா நினச்சுக்கோ.. நீ எந்த காரணத்துக்காக இங்க வந்தாயோ எனக்கு அது தெரியாது.. தேவையும் இல்லை.. என்னைய பொறுத்த வரைக்கும் நான் சொன்னதுனால தான் நீ வந்ததா நினைப்பேன்..” என்று தன் இரு கைகளையும் விரித்து சிரித்தான்..

அவனை நேராக பார்த்து முறைத்தாள் நித்யமல்லிகா.. அவனும் “ நான் உனக்கு சளைத்தவன் இல்லை “ என்பது போல அவளை நேராக பார்த்தான்..

ஒரு சில நொடிகளுக்கு மேல் அவளால் அவனது பார்வையைதாங்க முடியவில்லை.. ஏனோ உடலும் மனமும் இனம் புரியாத ஒரு உணர்வு பரவுவதை உணர்ந்தாள்.. இதயம் படபடவென்று அடித்து கொண்டது அவளுக்கு.

அவளை அறியாது அவள் தலை குனிந்தாள்..” நான்… நான் கிளம்புறன் “ என்று கூறி யார் பதிலுக்கும் காத்திராமல் கிளம்பிவிட்டாள்..

அவள் செல்வதையே விபு பார்த்து கொண்டு இருந்தான்.. அவள் இன்று வந்தது அவனுக்கு மனதிற்கு மிகவும் சந்தோசமாக இருந்தது..

அவனது தோள்களில் ஓங்கி அடிதான் அசோக்.. அவனது அடியில் ஒரு நிமிடம் பதறி விலகியவன் “ ஹேய் !! என்னடா ஏன் டா இப்படி அடிக்கிற?? ” என்றான் விபு..

“ ஹா !!! ஏன் டா கேட்கமாட்ட.. அன்னைக்கு என்னடானா அவ திட்டுனான்னு கூப்பிட்ட.. இன்னைக்கு என்னடான்னா அவளே வந்து இருக்கா??? என்னான்னு கேட்டதுக்கு அவளும் பதில் சொல்லல நீயும் பதில் சொல்லல.. அவ என்னவோ உன்னைய திட்டுறா.. நீ ஒண்ணுமே நடக்காது மாதிரி சிரிக்கிற.  இதை எல்லாம் பார்த்தும் நான் எதுவும் கேட்க கூடாதா டா  ??? ” என்றான் கோவமாக..

விபுவிற்கு அசோக்கின் முக பாவனைகள் அனைத்தும் சிரிப்பையே வரவழைத்தது.. சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டான்..

அவனை முறைத்து கொண்டு நின்றான் அசோக்..

மனம் – மயக்கும்                                                                         

 

                                             

           

                      

  

 

 

                 

                                           

 

                                                         

                                                           

Advertisement