Advertisement

          மனம் – 5

 “ ஹலோ… டேய் அசோக் இப்ப நீ எங்க இருக்க ?? ” என்று மிகவும் கோவமாகவும்  முகத்தில் கடுகு போட்டால் பொரிந்து விடும் அளவு சூடாகவும் கேட்டது விபு தான்..

….

“ ம்ம்ச்.. எங்க இருந்தாலும் சரி.. என்ன பன்னிட்டு இருந்தாலும் சரி உடனே வா..” என்று கூறி அலைபேசியை அணைத்துவிட்டு தன் இருக்கையில் பொத்தென்று அமர்ந்தான்..    

மனதிற்குள் “ என்ன திமிர் அவளுக்கு?? ஆள் பார்க்க சுண்டைக்கா அளவு இருந்துகிட்டு என்ன திமிரா பேசிட்டா.. ச்சே இவளை போய் நான் ஒரு நிமிஷம் என்ன என்ன நினைச்சுட்டேன்…   “ என்று பொரிந்து தள்ளி கொண்டு இருந்தான்..

விபுவை சிறிது நேரம் காக்க வைத்துவிட்டு வந்து சேர்ந்தான் அவனின் அருமை நண்பன் அசோக்..

“ என்ன இவ்வளோ கோவமா இருக்கான் “ என்று யோசித்தபடியே அவன் முன் அமர்ந்து “ என்ன விபு ஏன்டா அவசரமா வர சொன்ன ?? எதுவும் பிரச்சனையா ?? ” என்றான் அமைதியாக..

“என்ன பிரச்சனையா ?? நீ ஏன் கேட்க மாட்ட.. ஹ்ம்ம் அவன் அவன் என் கூட டீலிங் வச்சுக்க வருஷ கணக்கா காத்துகிட்டு இருக்கான்.. ஆனா ஆனா உன் தங்கச்சி இருக்காளே.. பொண்ணா அவ ?? கொஞ்சம் கூட மரியாதை தெரியாதா அவளுக்கு?? அவ எல்லாம் எப்படி தான் பிசினெஸ் பன்னுறாலோ  “ என்று தலையும் இல்லாமல் காலும் இல்லாமல் பேசினான்..

அசோகிற்கோ ஒன்றும் புரியவில்லை.. ” என்ன ஆச்சு ?? இப்ப ஏன் இவன் நித்யாவ பத்தி பேசுறான்.. ரெண்டு பேருக்குள்ளையும் என்ன பிரச்சனை.. நித்யாவும் எதுவும் சொல்லையே “ என்று யோசித்து கொண்டிருந்தவன் விபுவின் “ அசோக் “ என்ற அதட்டலில் நடப்புக்கு வந்தான்..

“ என்ன டா விபு?? என்ன நடந்தது ?? எனக்கும் தலையும் புரியல காலும் புரியல..” என்று அவன் கூறும் முன்னே

“ நீயும் நானும் எத்தனை வருசமா டா பிரிண்ட்ஸ்.. ஹ்ம்ம் சொல்லு “ என்றான் அவனை பார்த்து முறைத்தபடி

“ ஏன் டா இதை கேட்கவா நீ இப்ப என்னைய அவசரமா வர சொன்ன ??? எனக்கு வேலை இருக்கு தெரியுமா ?? எல்லாம் அப்படி அப்படியே போட்டு வந்து இருக்கேன் டா ” என்று அசோக் கேட்கவும்

“ கேட்டதற்கு பதில் சொல்லு அசோக் “ என்றான் விபு ஒரு மாதிரியான குரலில்..

“ சரி எதுவோ சரியில்லை “ என்று எண்ணிய அசோக் “ இதுல என்னடா சந்தேகம் நீயும் நானும் கிட்டதட்ட பத்து வருசமா ப்ரெண்ட்ஸ்..” என்றான்..

“ ஹ்ம்ம் டென் இயர்ஸ்… இதுவரைக்கும் நான் யாருகிட்டயாவது தப்பா பேசி தப்பா நடந்து இப்படி ஏதா நீ பார்த்து இருக்கியா ?? இல்ல கேள்வி பட்டு இருக்கியா ?? “ என்றான் இன்னும் கடினமான குரலில்..

இந்த கேள்வியை கேட்டதும் அசோக்கிற்கு ஒரு நிமிடம் கல்லூரி நாட்கள் நினைவு வந்தது..

தங்களிடம் பேச வரும் பெண்கள் எல்லாம் அங்கு விபு இருந்தால் ஓடிவிடுவார்கள்.. “ ச்சே இவனை வச்சுக்கிட்டு ஒரு சைட்டு அடிக்க முடியல, ஒரு பொண்ணு கிட்ட கூட பேச முடியல “ என்று நண்பர்கள் புலம்பியது இன்றும் அவன் காதுகளில் ஒலித்தது..

“ ஹே என்ன டா ?? கனவு எதுவும் கண்டுட்டு இருக்கியா ?? “ என்று அவனை உலுக்கினான் விபு..

“ஹா இல்ல மாப்ள.. நீ கேள்வி கேட்டதும் ஒரு நிமிஷம் நம்ம காலேஜ் நாட்கள் நினைச்சு பார்த்தேன் “ என்றான் நக்கலாக சிரித்தபடி..

கல்லூரி நாட்கள் என்று கூறவுமே விபுவின் முகத்திலும் லேசான ஒரு இதமான உணர்வு எட்டி பார்த்தது.. அவனது கடுமை சிறிது குறைந்தது போல இருந்தது..

அசோக் “ பின்ன எத்தனை பேரோட வயித்தெரிச்சல்ல வாங்கி கட்டிக்கிட்ட நீ” என்று கூறி சிரித்தான்..

“ சிரித்தது போதும்.. முதல்ல உன் தங்கச்சி கிட்ட போய் என்னைய பத்தி சொல்லிவை.. நான் நினைச்சா அவ அங்க பிசினஸ் எதுவுமே பண்ண முடியாது.. அவ தொழில் நடத்துற அதே இடத்துல ஒரு ஸ்டார் ஹோட்டல் என்னால கட்ட முடியும்.. அவ்வளோ ஏன் அவ பிஸினெஸ்ஸ இல்லாமையே பண்ண என்னால முடியும்.. என்ன திமிர் அவளுக்கு என்கிட்டேயே இப்படி பேசுறா “ என்று மறுபடியும் கோவமாக பேசினான்..

விபு இத்தனை கோவமாக அதுவும் ஒரு பெண்ணை பற்றி பேசுவது இது தான் முதல் முறை.. இதை அசோக்கும் அறிவான்.. ஆனாலும் அவனால் இவர்கள் நடுவில் என்ன பிரச்சனை நடந்து இருக்கும் என்று அறிய முடியவில்லை..

“ ஹேய் ஏன் டா இப்படி சிலை மாதிரி உட்கார்ந்து இருக்க ?? இவளோ பேசுறேன்ல ஏதாவது பதில் சொல்லு “ என்று கூறினான் விபு.

“ என்ன சொல்ல சொல்லுற ?? நீ தான் என்ன நடந்ததுன்னு இன்னும் ஒண்ணுமே சொல்லல.. வந்ததுல இருந்து கோவமா பேசிக்கிட்டே இருக்க.. நானா என்ன சொல்லுறது “ என்றான் அழுத்தமாக அசோக்..

“ ஹ்ம்ம் அது.. அது இன்னைக்கு காலையில உன் தங்கச்சிய பார்க்க போயிருந்தேன் “ என்றான் அமைதியாக விபு.. நடந்ததெல்லாம் இது தான்…

நித்யா பம்பரமாக சுற்றி கொண்டு இருந்தாள் தன் அன்னை மெஸ்ஸில்.. ஏனோ அன்று அவளுக்கு மனம் ஒரு நிலையாகவே இல்லை..

சரியான நேரத்தில் டெலிவர் செய்ய வேண்டிய ஆர்டர் வேறு கொஞ்சம் நேரம் இழுத்து கொண்டு போனது.. அன்று பார்த்து வேலைக்கு ஆட்கள் சரியாக வேறு வரவில்லை..

இதெல்லாம் போட்டு அவளை பாடாக படுத்தி கொண்டு இருந்தது.. “ பூபதி தாத்தா எப்படியாவது ஒரு அரை மணி நேரத்துல ரெண்டு ஆளுங்க வேலைக்கு வேணும்.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் எப்படியாவது ஏற்பாடு பண்ணுங்க.. முழு நாள் சம்பளம் குடுத்துடலாம் ” என்று அவள் கூறிக்கொண்டு இருந்தாள்..                   

“ நித்யாமா பொறுமையா இரு நம்ம பால்காரன் கிட்ட சொல்லி இருக்கேன் இன்னும் பத்து நிமிசத்துல வந்திடுவாங்க.. நீ முதல்ல இந்தா  இந்த காப்பியை குடி “ என்று ஒரு டம்ப்ளரை நீட்டினார்..

“ இல்ல தாத்தா இருக்கட்டும்.. நீங்க குடிங்க .. ஆமா இந்த தேனு பாட்டி எங்க ?? ஹ்ம்ம் சொல்ல சொல்ல கேட்காம சமையல் பண்ணுற இடத்துக்கு போயிட்டாங்களா..” என்று கூறி கொண்டே அங்கே சென்றாள்..

வேலைக்கு ஆள் போதாததால் ஆட்களோடு சேர்ந்து தேனம்மாவும் வேலை செய்து கொண்டு இருந்தார்.. அவரை கையை பிடித்து இழுத்து வந்தாள் நித்யா.

“ பாட்டி என்ன நீங்க?? எத்தனை தடவை சொல்லுறது.. நீங்க ஏன் இதெல்லாம் பண்ணனும்?? ” என்றாள் சற்றே கோவமாக..

“ ஏன் கண்ணு நான் பண்ண கூடாதா ?? நீ காலையில இருந்து எவளோ டென்ஷனா இருக்க.. அதை பார்த்துட்டு நான் எப்படி சும்மா இருக்கிறது கண்ணு ” என்று கூறவும்

“ பாட்டி… பாட்டி… நீங்க இங்க சும்மா வேலை நடக்கிறதை மேற்பார்வை பார்த்தாலே போதும்..  இதோ இன்னும் பத்து நிமிசத்துல ஆள் வந்திடுவாங்க வேலைக்கு.. நீங்க தயவு செஞ்சு அமைதியா இருங்க “ என்று கூறி கொண்டு இருக்கும் பொழுதே வாசலில் ஒரு பெரிய கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது..

“ நித்யா கண்ணு யாரோ வராங்க போல.. நீ போயி பாரு.. நான் என் கண்ணாடிய அங்கேயே வச்சிட்டு வந்துட்டேன் எடுத்துட்டு வரேன் “ என்று கூறி சென்றார்..

“ யாராக இருக்கும்.. அதும் இந்த நேரத்தில் “ என்று யோசித்தபடியே வந்தவள் விபுவை காணவும் ஒரு நிமிடம் திகைத்து நின்று விட்டாள்..

அவன் நடந்து வரும் கம்பீரம், அவனது உயரம், என்று எல்லாம் எல்லாமே அவளது மனதில் இடம் பிடித்தன.. ஆனால் இந்த எண்ணமே அவளுக்கு சற்று எரிச்சலையும் கோவத்தையும் குடுத்தது..

“ இவன் எதற்கு இங்கு வந்தான்.. அதான் நான் அன்னைக்கே சொல்லிட்டேனே முடியாதுன்னு “ என்று யோசித்தபடி நின்று இருந்தாள்..

நேராக வந்தவன் நித்யாவிடமே வந்து “ ms. நித்யமல்லிகா இருக்காங்களா ??” என்று கேட்டான்..

அவனுக்கு சுத்தமாக அடையாளம் தெரியவில்லை.. அவளது முகத்தை பாதி அவள் போட்டு இருந்த கண்ணாடி மறைத்து இருந்தது.. அவள் அணிந்து இருந்த உடைக்கும் கொண்டைக்கும் அவளது வயதை அதிகம் காட்டியது..

விபு யாரோ இங்கு வேலை பார்க்கும் பெண் என்று நினைத்து கொண்டான்.. அந்த நேரம் நித்யா பதில் கூறுமுன் அங்கு வந்த தேனம்மா “ அட விபு தம்பி வா பா.. வா… “ என்றி சிரித்த ப=முகமாக வந்தார்..

“ பாட்டி எப்படி இருக்கீங்க ?? ஹ்ம்ம் எங்க உங்க முதலாளி அம்மா ?? ” என்றான் அவரிடம்..

இதை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி நின்று இருந்தாள் நித்யமல்லிகா. அவனது கேள்வியை கேட்ட தேனம்மாவோ சிரித்தபடி “ என்ன தம்பி இந்த வயசுல கண்ணு எதுவும் கோளாறா ?? ” என்று கேட்கவும் அவனுக்கு புரியவில்லை..

அதே நேரம் “ நித்யா மா “ எண்டு அழைத்து கொண்டு பூபதி அங்கு வரவும் சரியாக இருந்தது..

“ நித்யாவா?? இவளா ?? அப்போ அன்னைக்கு ஷாப்பிங் மால்ல இவளையா பார்த்தேன்.. கடவுளே.. இது என்ன குழப்பம் “ என்று மனதிற்குள் குழம்பி கொண்டு இருந்தான்..

“அன்று வீட்டில் பார்த்த நித்யமல்லிகா எங்கே.. இங்கே கண் முன் நிற்பவள் எங்கே.. இருவருக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை..” என்று என்னும் பொழுதே அவனது விழிகள் அவளை மேலிருந்து கீழாக அளவேடுத்தது..

அவனது பார்வையை ஏனோ அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.. “ச்சே என்ன இவன் பார்த்து வைக்கிறான்..” என்று அவள் என்னும் பொழுதே “ நித்யா மா.. யாரு இந்த தம்பி “ என்று மறுபடியும் கேட்டார் பூபதி..

முதலில் இவருக்கு என்ன என்று கூறுவது என்று யோசித்த நித்யா “ அது.. தாத்தா.. இவ்.. இவரு .. நம்ம அசோக் அண்ணன் பிரின்ட் விப்… விபு வரதன்.. VS குருப் ஓட MD “ என்று என்று ஒரு வழியாக திக்கி திணறி அறிமுகம் செய்தாள்..

“வணக்கம் தம்பி “ என்று அவர் கூறும் முன்னே அவன் “ வணக்கம் தாத்தா “ என்று கூறிவிட்டான்..

இது ஒன்றே போதாதா அவருக்கு அவனை பிடித்துவிட.. அவனை பார்த்து சிநேகமாக முறுவலித்தார்.. அதை அவனும் தனக்கு சாதகமா பயன் படுத்தி கொண்டான்..

“ தாத்தா.. நீங்க தான் எனக்கு உதவி செய்யணும்..” என்று ஆரம்பித்து அவரை கேட்டு தான் எந்த ஆர்டறும் எடுப்பேன் என்று நித்யா கூறியதை கூறி தனக்கு ஒரு ஒரு முடிவு சொல்லுமாறு கூறினான்..

அவனது தெளிவான பேச்சிலும் பார்வையிலும் பூபதி மட்டுமில்லை நித்யாவுமே சற்று அசந்து தான் போனாள்..

ஆனால் இதை எல்லாம் கேட்ட பூபதி தாத்தா நித்யாவை ஒரு பார்வை பார்த்தார்.. அவர் பார்த்ததிலே விபு புரிந்துகொண்டான்.. அன்று நித்யா அனைவரிடமும் சொன்னது எல்லாம் பொய்.. வேண்டுமென்றே தன்னை உதாசீனபடுத்த தான் அவள் அன்று அப்படி கூறினாள் என்று புரிந்து கொண்டான்..                                

அதனால் தான் இன்னும் அவள் இது பற்றி பூபதியிடம் பேசவில்லை.. அவளுக்கு அவன் முக்கியமாக படவில்லை.. அவன் சம்பந்தப்பட்ட எதுவுமே முக்கியமாக படவில்லை..

இதை எல்லாம் நினைக்க நினைக்க விபுவிற்க்கு மனதிற்குள் ஏனோ அவள் மீது கோவமாக வந்தது.. அந்த கோவத்தில் அதிக உரிமை இருப்பது போல தான் உணர்ந்தான்..

“என்னை எப்படி இவள் முக்கியம் என்று நினைக்காமல் இருக்கலாம் “ என்றே அவன் மனம் நினைத்தது..

ஆனால் அவளது தோற்றம் அவனை மிகவும் குழப்பியது.. ஒருவேளை இவளை பற்றி தன் தங்கைக்கு தெரிந்து இருக்குமோ என்று யோசித்தான்.. ஆனால் ஏன் இவள் இப்படி ஒரு ரூபத்தில் இருக்கிறாள்.. இவளுக்கு என்ன தலை எழுத்தா என்று யோசிதவனின் சிந்தனையை நித்யாவின் குரல் கலைத்தது.

“ ஓகே Mr.விபுவரதன்… நாங்க இந்த ஆர்டர்க்கு சரி சொல்லுறோம்.. என்னைக்கு இருந்து உங்களுக்கு டெலிவரி குடுக்கணும், எத்தனை மணிக்கு, எத்தனை பார்சல் இதெல்லாம் சொல்லிட்டா எங்களுக்கு இன்னும் நல்லா இருக்கும் “ என்று அவனை மேற்கொண்டு அவளை பற்றி யோசிக்க விடவில்லை அவள்..

அவளது நிதானமான பேச்சையும், திடமான பார்வையும், விபுவை மேலும் கவர்ந்தது.. “ யப்பா எப்படி பேசுறா.. கொஞ்சம் கூட ஒரு குழப்பமே இல்லை.. நான் இப்படிதான் அப்படிங்கிற மாதிரி இருக்காளே.. ஆனா ஏன் இவ இப்படி இருக்கா ?? “ என்று மீண்டும் தனக்குள் மூழ்கினான்..

இவர்களது பேச்சும் பார்வையும் தேனம்மாவிற்கும், பூபதிக்கும் முற்றிலும் வேராக தெரிந்தது,.. இரண்டு சண்டை கோழிகள் ஒன்றை ஒன்று கொத்தி குதற நேர் எதிரே நின்று பேசுவது போல உணர்ந்தனர் இருவரும்..

மீண்டும் அவனின் சிந்தனையை “ Mr.விபுவரதன் “ என்று அவள் குரல் அழைத்தது..

ஒரு நொடி தன் தலையை உலுக்கியவன், ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை சமன்படுத்தி கொண்டு “ யெஸ் ம… Ms.நித்யமல்லிகா “ என்று அவளை போலவே முழு பெயரையும் அழுத்தம் திருத்தமாக கூறினான்..

ஒரு நொடி ஒரே ஒரு நொடி அவள் முகத்தில் இனம் புரியாத ஒரு வேதனையின் சாயல் வந்து போனது போல தோன்றியது அவனுக்கு..

“இன்னும் நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் கூறவில்லை “ என்றாள் அவனையே உற்று பார்த்து.. அவளுக்குமே தெரியவில்லை அவனிடம் தான் ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்று..

இடையில் புகுந்த தேனம்மா “ நித்யா கண்ணு ஏன் ரெண்டு பெரும் நின்னுகிட்டே பேசிட்டு இருக்கீங்க.. தம்பி நீ உக்காருப்பா.. நீயும் உக்காரு கண்ணு “ என்று நாற்காலியை காட்டினார்..

“ ஹ்ம் என்ன இருந்தாலும் பெரியவங்க பெரியவங்க தான். தேங்க்ஸ் பாட்டி “ என்று கூறி கொண்டே அமர்ந்தான்.. அதாவது அவன் வந்ததில் இருந்து நிற்க வைத்தே அவள் பேசியதை குத்தி காட்டினான்.. அது அவளுக்கும் புரிந்து தான் இருந்தது..

மனதிற்குள் “ என்ன திமிர் இவனுக்கு “ என்றே எண்ணினாள்.. ஆனால் அவளது சிந்தனையில் கல் எறிந்தான்  அவன் “ இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வேலை ஆரம்பிக்க போறோம். அதாவது வர வெள்ளிகிழமை.. மொத்தம் பத்து பேரு தான்.. அங்கேயே தங்கி தான் வேலை செய்வாங்க.. காலை, மதியம் மட்டும் அங்க டெலிவெரி பண்ணனும், நைட்டு அவங்க இங்கயே வந்து சாப்பிடுவாங்க.. நீங்க எத்தனை டோக்கன்னு கணக்கு வச்சுக்கிட்டா போதும் “ என்று அவன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே அவள்

“ நீங்க எத்தனை மணிக்கு டெலிவரி பண்ணனும்ன்னு மட்டும் சொல்லுங்க. எப்படி கணக்கு வச்சுக்கனும்னு நாங்க பாத்துகிறோம் “ என்றாள்..

“ அட கடவுளே இந்த பொண்ணு ஏன் இப்படி பேசுது “ என்று நினைத்தனர் பூபதியும், தேனம்மாவும்..

அவளுக்கே தெரியாதே தான் ஏன் இப்படி இவனிடம் பேசுகிறோம் என்று.. விபுவிற்கு ஒரு நொடி முகத்தில் அடித்தது போல இருந்தது. ”ஒரு தட்டு தட்டினால் ஏழு குட்டிகரணம் போடுவாள் போல.. அப்படி இருந்துகொண்டு எப்படி திமிராக பேசுகிறாள்.. இருக்கட்டும்.. ஒரு நாள் இல்லை ஒருநாள் இவள்  திமிரை அடக்குகிறேன் “ என்று மனதிற்குள் கருவிக்கொண்டான்..

இருவரின் முக மாற்றங்களையும் பார்த்த பூபதி, ” தம்பி வாங்க.. நாம நடந்துகிட்டே பேசலாம்.. இங்க கொஞ்ச நேரத்துல அனல் அடிக்க ஆரம்பிச்சிடும்..” என்று அவனை இழுக்கத குறையாக இழுத்து சென்றார்..

விபு அவருடன் சென்றபின் “ ஏன் நித்யா கண்ணு ஏன் அந்த தம்பி கிட்ட அப்படி பேசுற?? ” என்றார் தேனம்மா..

இதற்க்கு அவள் என்ன பதில் கூறுவாள்.. ”ம்ம் ஒண்ணுமில்ல பாட்டி.. என்ன திமிர் என் கிட்டையே வந்து Ms.நித்யமல்லிகா எங்கன்னு கேட்டா கோவம் வராதா “ என்றாள் பொய்யாக..

“ ஹ்ம்ம் உன்னைய அன்னைக்கு வீட்டுல அப்படி பார்த்துட்டு இன்னைக்கு அடையாளம் தெரியல போல. இதுக்கெல்லாமா கோவிப்பாங்க?? போ கண்ணு “ என்று சிரித்துவிட்டு சென்றார் தேனம்மா..

நித்யாவிற்கு ஏனோ இவனை பார்த்த முதல்  நிமிடத்தில் இருந்து மனதில் இன்னது என்று கூற முடியாத ஒரு உணர்வு.. அது கோவமா, வெறுப்பா, இல்லை பிடித்தமா என்று சரியாக கூற முடியவில்லை..

தன் மனதை அலசிப்பார்க்க அவளும் விரும்பவில்லை.. மனதிற்குள் இவனை விட்டு எத்தனை தூரம் விலகி இருக்க வேண்டுமோ அத்தனை தூரம் விலகி இருக்க வேண்டும் என்று முடிவு செய்து வைத்து இருந்தாள்..

ஆனால் அதை எல்லாம் தவிடுபொடி ஆக்குவது போல, இன்று இவன் நேரே வந்து நிற்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை..

யாரையும் நேருக்கு நேர் பார்த்து பேசுபவள் அவனது பார்வையை சாதரணமாக கூட எதிர்கொள்ள முடியவில்லை..

இப்படி எல்லாம் தனக்குள்ளே யோசித்தபடி தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் நின்று விட்டாள்..

அந்த பக்கம் இருந்து பூபதியிடம் பேசிவிட்டு வந்த விபு இவளிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று அவளை நோக்கி வந்துகொண்டு இருந்தான்.. அவளோ எதோ ஒரு மோன நிலையில் இருந்தாள்..

நித்யாவிற்கு சரியாக பின்னால் வேலை செய்யும் இருவர், பெரிய பாத்திரத்தில் சூடான சாம்பாரை தூக்கி கொண்டு வந்தனர்.. அதில் ஒருவன் “ நித்யாமா தள்ளுங்க “ என்று கூறிக்கொண்டே வந்தான். ஆனால் அது அவளது காதுகளில் விளவில்லை..

இதனை கண்ட விபு வேகமாக அவள் புறம் வந்து அவளை தன் பக்கம் இழுக்கவும் அவர்கள் நித்யாவை கடக்கவும் சரியாக இருந்தது..

விபு மட்டும் வரவில்லை என்றால் நிச்சயம் எதாவது ஒரு விபரீதம் நடந்து இருக்கும்.. அவள் என்னவென்று சுதாரிக்கும் முன் “ ஹேய் மல்லி.. உனக்கு ஒன்னும் ஆகலையே.. ஏன் இப்படி சிலை மாதிரி நின்னுகிட்டு இருக்க ??” என்று அவளது கைகளை பற்றி தன் மேல் சாய்திருந்தான்..

இது அவளும் எதிர்பாராமல் நடந்த ஒன்று தான்.. ஆனால் அவளுக்கு ஏனோ அவனது அருகாமை மனதில் இனம் புரியா படபடப்பை ஏற்படுத்தியது.. அவளது காதில் கேட்டது அவனது இதயத்தின் ஓசையா இல்லை அவளது இதய துடிப்பா  இல்லை இருவரின் இதயமும் ஒரே தாளத்தில் துடிக்கின்றதா என்று அவளால் உணரமுடியவில்லை..

ஏனெனில் இருவருமே சற்று படபடப்பாக தான் இருந்தனர்.. “அவ்வளோ பெரிய பத்திரத்தில் இருந்த சூடான சாம்பார் அவள் மீது விழுந்து இருந்தால் இந்நேரம் என்ன ஆகி இருக்கும்??” என்று அவன் எண்ணும் பொழுதே அவன் பிடி இன்னும் இறுகியது..

அவனது பிடியின் அழுத்தத்தில் தான் சுய உணர்வு பெற்றாள் நித்யா.. தான் நின்ற கோலம் இப்பொழுதுதான் அவளுக்கு மனதில் பதிந்தது..

அங்கு வேலை பார்க்கும் அத்தனை பெரும் அவர்களை தான் பார்த்து கொண்டு இருந்தனர்.. பூபதியும் தேனம்மாவும் “ நித்யா “ என்று பதறியபடி வந்தனர்..

இது அத்தனையும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்தேறிவிட்டது.. விபுவிற்க்கு ஏனோ அத்தனை நேரம் அவள் மீது இருந்த கோவம் எல்லாம் போய்விட்டது.. அவளது வாசம் அவனது மனதை நிறைத்தது..

கண்களும் முகமும் கனிய “ ஆர் யூ ஓகே மல்லி ?? ” என்று கேட்டான் மென்மையாக..

அவ்வளோதான் இத்தனை நேரம் அவள் இழுத்து பிடித்து வைத்து இருந்த பொறுமை எல்லாம் காற்றில் பறக்க, வேகமாக அவனை விட்டு விலகியவள்  ”எல்லாரும் வேலைய பாருங்க “ என்று மற்றவர்களுக்கு கூறிவிட்டு

“ டோன்ட் கால் மீ மல்லி.. ரைட்.. ஜஸ்ட் கால் மீ நித்யா ஆர் நித்யமல்லிகா…” என்று உறுமினாள் அமைதியாக அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்..

அவளது சீற்றம் கண்டு அவனுக்கு முதலில் வியப்பாக தான் இருந்தது.. அவள் கோவமாக கூறுகிறாள் என்று அவனுக்கு முதலில் புரியவில்லை.. அவளது பெயரை சுருக்கி அழைத்ததால் அவளுக்கு பிடிக்காமல் இப்படி பேசுகிறாள் என்றே எண்ணினான்..

அவனும் விளையாட்டாய் “ ஏன் மல்லி நல்ல பெயர்தானே..??  எவ்வளோ அழகான பெயரா இருக்கு.. நான் அப்படிதான் கூப்பிடுவேன் “ என்றான் மெல்ல புன்னகைத்தபடி..

ஒரு நிமிடம் அவனது புன்னகையில் மனம் மயங்கித்தான் போனால் அவனின் மல்லி..

அவளது எண்ணங்கள் அவளுக்கே ஆச்சரியமாகவும், வித்தியாசமாகவும் இருந்தன.. ஒன்றை மட்டும் அவள் உணர்ந்தால் “ இவன் முன்னால் தானும் தன் உணர்வுகளும் பலவீன படுகிறோம் “ என்று. அந்த எண்ணமே அவன் மீது தீராத கோவத்தை குடுத்தது..

“ ஹே !! Mr.. என்ன விட்டா ரொம்ப பேசிகிட்டே போறீங்க.. ஆர்டர் குடுக்க வந்தோமா, குடுத்தோமா, வேலைய பார்த்துட்டு போனோமான்னு இருக்கனும்.. அதை விட்டு ரொம்ப அட்வான்டேஜ் எடுத்திங்க நல்லா இருக்காது..” என்றாள் ஆங்காரமாக..

அவனுக்கு முதலில் இவள் ஏன் இப்படி பேசுகிறாள் என்று புரியவில்லை.. முகத்தில் அப்பட்டமாக தன் திகைப்பை காட்டினான்.. அவளுக்கு அது மேலும் எரிச்சலை தந்தது..

“ என்ன ஒன்னும் தெரியாது போல பாக்குறிங்க.. உங்க புத்தி எல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சிங்களா ?? ச்சே அசோக் அண்ணன் பிரின்ட்ன்னு தான் உள்ள விட்டேன்.. இல்ல நடக்குறதே வேற “ என்று அவள் பாட்டுக்கு பேசிக்கொண்டே போனாள்..

விபுவிற்க்கு கோவம் தலைக்கு ஏறியது.. அவனுக்கு விவரம் தெரிந்து யாரும் இப்படி அவனிடம் பேசியது இல்லை.. அவன் தங்களுடன் பேசமாட்டானா என்று ஏங்கியவர்கள் தான் பலர்..

ஆனால் இன்று அவன் எந்த ஒரு தவறுமே செய்யாது இருக்கும் பொழுது இப்படி அமைதியாக பேச்சு வாங்குவது அவனுக்கு தாங்க முடியவில்லை..

தேனம்மா “ நித்யா கண்ணு.. என்ன இப்படி பேசுற ?? தம்பி இப்ப உனக்கு நல்லது தானே பண்ணுச்சு.. இல்லாட்டி கொதிக்கிற சாம்பார் உன் மேல விழுந்து இருக்குமே “ என்று அவர் கூறுவது எல்லாம் அவள் காதில் விழவில்லை.

பூபதி “ என்ன நித்யாமா நாங்க எல்லாம் இத்தனை சொல்லுறோம்.. நீ இப்படி பேசிட்டே இருக்க ?? ” என்றார் சற்று கோவமாக..

தன்னை இப்படி இருவரும் கண்டிப்பதே அவளுக்கு இன்னும் கோவத்தை கிளறியது.. “ இருந்து இருந்து இவனால், இவன் முன்னால் தன்னை இத்தனை நாள் அதிர்ந்து கூட பேசாத இருவரும் இப்படி பேசுகிறார்களே “ என்று எண்ணினாள்..

அவனோ அவளுக்கு மேலே கோவமாக நின்றான்.. “ ஹேய் என்ன விட்டா ரொம்ப பேசுற.. கொஞ்சம் யோசிச்சு பாரு நீ பேசுறது எதுவுமே கொஞ்சம் கூட விஷயம் இல்லாதது.. இப்ப எதுக்கு உனக்கு இவ்வளோ கோவம் வருது?? நான் உன்னைய காப்பாத்துனதுக்கா?? இல்ல உன்னைய மல்லின்னு சொன்னதுக்கா ?? ” என்றான் கர்ஜிப்பது போல..

பூபதியும் தேனம்மாவும் திகைத்து விட்டனர் ” இது என்னடா இது.. இப்படி ஒரு பிரச்சனை” என்று. பின் “ தம்பி வேணாம் தம்பி. சொன்னா கேளுங்க..” என்று அவனை சமாதானம் செய்தனர்..

“ விடுங்க தாத்தா.. நானும் வந்ததுல இருந்து பார்த்துட்டு தான் இருக்கேன்.. இந்த ஆர்டர் எடுக்க பிடிக்கலைனா முதலையே வேணாம் அப்படின்னு சொல்லி இருக்கனும்.. அதை விட்டு தாத்தாட கேட்டு சொல்லுறேன்னு ஏன் சொல்லணும்?? சரி இன்னைக்கு வந்தேனே கொஞ்சமாது நல்லா ட்ரீட் பண்ணாங்கள ?? ” என்று பொரிந்து தள்ளினான்..

அவன் கூறுவது எல்லாம் நியாயம் தானே.. இதற்க்கு என்ன பதில் கூறுவார்கள் இருவரும்..

ஆனால் நித்யாவிற்க்கோ இது எதுவுமே காதிலும், மூலையிலும், மனதிலும் பதியவில்லை.. இவன் முன் தான் தோற்பதா?? இவன் முன்னால் தான் பலவீன படுவதா?? என்ற எண்ணங்களே அவளை கொதி நிலையை அடைய வைத்தது..

“ ஹலோ ஹலோ என்ன இவங்க ரெண்டு பேரையும் உங்க சப்போர்ட்டுக்கு கூப்பிடுரிங்களா ?? நான் பேசுனா முதல்ல என்கிட்டே பதில் பேசுங்க..” என்றாள்..

“ அய்யோ !! இந்த பொண்ணு சும்மாவே இருக்காது போலவே..” என்று தன் தலையில் அடித்து கொண்டார் தேனம்மா..

“ நீ எல்லாம் எப்படி தான் இவ்வளோ பெரிய வியாபாரம் பண்ணுறயோ ?? இங்க வர எல்லாருகிட்டயும் இப்படி தான் நடந்துப்பியா ?? அப்புரோ எப்படி உன்கிட்ட எல்லாம் ஆர்டர் குடுக்குறாங்க..??”

“ உன்கிட்ட இவ்வளோ பேச்சு கேட்டு நீ குடுக்குற சாப்பாட என் வொர்கர்ஸ் வாங்கி சாப்பிடணும்ன்னு எந்த அவசியமும் இல்லை.. அப்படி சாப்பிடுற சாப்பாடு உடம்புல கூட ஒட்டாது. ச்சே நீ எல்லாம் ஒரு பொண்ணா?? இப்படி பேசுற.. உன்னைய மாதிரி யாரையும் நான் பார்த்தது இல்லை… அசோக் ஓட தங்கச்சிங்கற ஒரே காரணத்துனால உன்னைய நான் சும்மா விட்டு போறேன்.. நீயும் உன் ஆர்டரும்..” என்று பொரிந்து தள்ளி விட்டு சென்று விட்டான்..

“ ஹா !! தாராலமா போங்க.. நீங்க குடுக்கிற ஆர்டர்ல தான் நான் வியாபாரம் செய்யனும்னு எந்த அவசியமும் இல்ல. மனசுக்குள்ள பெரிய இதுன்னு நினைப்பு.. இவன் பூச்சாண்டிக்கு எல்லாம் நான் பயந்து ஒன்னும் இங்க வியாபாரம் செய்யல..” என்று அவள் பேசியது காற்றோடு போனது..

விபுவரதன்  அளவில்லாத கோவத்துடன் தன் அலுவலகம் வந்து சேர்ந்தான்.. “ எப்படி இவளால் இப்படி பேச முடிந்தது ?? காரணமே இல்லாமல் ஏன் இவள் பேசினாள்.. அவளது உடையும், கண்ணாடியும், அன்று பார்த்ததற்கு இன்று முற்றிலும் வேறாக இருந்தாலே..” என்றெல்லாம் யோசித்தான்..

என்ன யோசித்தும் அவனது கோவம் மட்டும் அடங்குவதாக இல்லை.. “ ஒரு வேலை ரெட்டை பிறவியோ “ என்று கூட சிந்தித்தான்.. ஆனால் அவளது பேச்சுக்கு நிச்சயம் பதிலடி ககுடுக்கவேண்டும் என்று எண்ணும் பொழுது தான் அசோக்கின் நியாபகம் வந்தது..

இதை எல்லாம் கேட்ட அசோக்கோ தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.. “ தேவையே இல்லாத ஒரு விஷயம்.. சொல்ல போனால் இதில் விஷயம் என்று எதுவுமே இல்லை.. ஆனால் இரண்டு பெரும் முட்டிக்கொண்டு இருகின்றனர்.. இதில் இவர்களுக்கு நடுவில் நான் வேறு.. “ என்று மனதிற்குள் புலம்பினான்..

“ என்ன அமைதியா இருக்க ?? நீ தானே கேட்ட என்ன நடந்துச்சுன்னு.. இப்ப பதில் பேசுடா உன் தங்கச்சி பேசுனது எல்லாம் சரியா ??” என்று மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தான்..

ஒரு பெருமூச்சை வெளியிட்ட அசோக்கோ “ அவ பேசுனது எல்லாம் இருக்கட்டும், நீ ஏன் அங்க போன ??  ஏன்டா வேற ஹோட்டல் இல்லையா ?? சரி சரி முறைக்காத.. “ என்றான்

“ இது என்னடா கேள்வியா இருக்கு கிறுக்கு மாதிரி.. அந்த ஏரியால இருக்குறது அந்த ஒரு மெஸ் தான்.. அதுவும் உன் தங்கச்சி நடத்துறதுன்னு தெரிஞ்சும் அங்க போகாம வேற எங்க போவாங்க ?? ” என்று பதில்  கேள்வி கேட்டான்  விபு..

அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு “ சரி போனது தான் போன, ஆர்டர் குடுத்தோமா, வந்தோமான்னு இருக்க வேண்டியது தானேடா… உன் ஹீரோயிசம் அங்க ஏன் டா காட்டுன?? ” என்றான் சலிப்பாக..

“ என்ன ஹீரோயிசம் காட்டுனேனா ?? நேரம் டா… எல்லாம் என் நேரம்.. கொதிக்கிற சாம்பார் அவ மேல கொட்டுனா என்ன, இல்ல அவ எப்படி போனா என்னனு அப்படியே விட்டு வந்து இருக்கனும்.. நல்லது பண்ணேன் பாரு  என்னை சொல்லணும் “ என்று அவன் மேஜையில் குத்தினான்..

“ சரி நல்லது பண்ண.. அதோட நிறுத்தி இருக்க வேண்டியது தானே. அவளை ஏன்டா மல்லினு கூப்பிட்ட.. அவளை மல்லிகான்னு கூப்பிட்டாலே பிடிக்காது.. இதுல சுருக்கி மல்லியாம்… ஹ்ம்ம் ஏன் டா ?? ” என்றான் அசோக் பரிதாபமாக..

“ அது எனக்கு எப்படிடா தெரியும்.. அவளுக்கு இது பிடிக்கும் பிடிக்காதுன்னு எனக்கு தெரிய நான் என்ன அவ லவ்வரா.. சாரி டா தப்பா நினைக்காத.. ஒரு பிளோவ்ல வந்துடுச்சு.. கேக்குற பாரு கேள்வி ??” என்று முறைதான்..                                      

“ என்ன  பிளோவா ??? என்ன பிளோவ் ராஜா ?? ” என்றான் கேளியாக..

அவனை முறைத்துகொண்டே அவன் எதுவோ கூற வரும் பொழுது விபுவின் அலைபேசி சிணுங்கியது..

யாராக இருக்கும் என்று யோசித்தவன் பின் “ ஹலோ “ என்றான்.. எதிர் புறம் யார் பேசினார்களோ, என்ன பேசினார்களோ தெரியாது..

அசோக்கை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒரு சிறு யோசனையின் பின் தன் போனை எடுத்துக்கொண்டு அறையின் மறுபக்கம் இருந்த ஜன்னல் அருகில் நின்று கொண்டான்..

பேசும் போது ஆரம்பத்தில் முகத்தில் எதையும் காட்டாவிட்டாலும் போக போக அவன் முகத்தில் அத்தனை நேரம் இருந்த கோவம், உக்கிரம் எல்லாம் காற்றில் பறந்து போனது போல..

அவன் முகத்தில் அப்படி ஒரு பொழிவு.. சிரிப்பு… எதையோ வென்று விட்ட உணர்வு..

ஆனால் அங்கு பாவமாக அமர்ந்து இருந்த அசோக்கோ எதுவும் புரியாமல் திகைத்து ஏமார்ந்து இருந்தான்..

“ இவளோ நேரம் காச்சு காச்சுன்னு காச்சி எடுத்தான்.. இப்ப யாருகிட்ட இப்படி சிரிச்சு சிரிச்சு பேசுறான் “ என்று மண்டையை போட்டு குழப்பி கொண்டு இருந்தான்..

“ ஹ்ம்ம் யாரா இருக்கும் ?? ” என்ற அவன் யோசனைக்கு விபுவிடம் மட்டுமே பதில் இருக்கிறது..           

                           

                             மனம் – மயக்கும்                                                           

                                                                  

                        

              

                            

 

 

              

                              

Advertisement