Advertisement

      மனம் – 4

அன்று ஞாயிற்று கிழமை என்பதால் அன்னை மெஸ் விடுமுறை.  நித்யமல்லிகா ஓய்வாக தன் வீட்டில் இருந்தாள்..  கண்டிப்பாக வேலை செய்பவருக்கு ஓய்வு வேண்டும் என்று வாரம் கடைசி என்றால் தன் வேலை ஆட்களுக்கு விடுமுறை கொடுத்து கடையை மூடி விடுவாள்..

அடுத்து வரும் நாட்களுக்கு உழைக்க இந்த ஒரு நாள் விடுமுறை மிகவும் தேவையானதாக இருக்கும்.. அதை அவளும் உணர்ந்ததால் தான் இந்த விடுமுறை.

வீட்டில் அப்பொழுது தான் குளித்துவிட்டு ஒரு அழகான காட்டன் சுடிதாரில், தன் ஈர கூந்தலை விரித்து போட்டு, நெற்றியில் சிறு போட்டும் அதற்க்கு மேலே ஒரு சந்தன கீற்றும் இட்டு, எந்த ஒப்பனையும் இல்லாமல் அழகான தேவதை போல இருந்தாள்..

அவள் வீட்டில் இருக்கும் நாள் என்றால் கண்டிப்பாக தேனம்மா தான் சமையல் செய்வார்.. ” இன்னைக்கு ஒரு நாள் நீ கொஞ்சம் ரெஸ்ட்ல இரு கண்ணு “ என்று முதலில் அமைதியாக கூறுவார்..

அவள் கேட்காமல் அன்றும் ஏதாவது வேலை செய்தால் அவளோதான். அவளை அரட்டி உருட்டி மிரட்டி என்று அத்தனை வழிகளையும் கையாண்டு அவளை அமைதியாக இருக்க வைத்து விடுவார்..

அவளும் அவரது அன்பை புரிந்து கொண்டு “ பாட்டி வீட்டுல சும்மா இருக்க எப்படியோ இருக்கு ?? ப்ளீஸ் நானும் கொஞ்சம் உங்க கூட செய்யுறேனே “ என்று சலுகையாய் கேட்பாள்..

“ ஏன் கண்ணு வீட்டுல இருக்க எப்படியோ இருந்தா வெளிய எங்கயாது போயிட்டு வா.. கடை விட்டா  வீடு.. இல்லாட்டி கடைக்கு தேவையான சாமான் வாங்க, பேங்க் போக, இது மட்டும் தான் உனக்கு வேலையா ?? பக்கத்துல இருக்க கோவிலுக்கு போயிட்டு வா.. உனக்குன்னு கொஞ்சமாது நேரம் ஒதுக்கு “ என்று அவளை துரத்துவார்..

ஆனால் அவளோ “ கோவிலுக்கு போயிட்டு வந்தா மட்டும் என்ன ஆகிவிட  போது.. நம்ம வேலைய நாம சரியா செய்தாலே போதும் பாட்டி.. “ என்று கூறிவிட்டு சென்று விடுவாள்..

இதே முன்பிறுந்த நித்யா என்றால் வெள்ளிகிழமை ஆனால் போதும் காலை எழுந்து தலைக்கு நீர் ஊற்றி முதல் ஆளாய் பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று விட்டு வந்து தான் மறுவேலை பார்ப்பாள்.. ஆனால் இன்று அத்தனையும் தலைகீழ்..

இதை எல்லாம் எண்ணி பார்த்து “ ஹ்ம்ம் மத்தவங்களுக்கு பாத்து பாத்து பண்ணுது.. தன் வாழ்க்கைய கவனிக்க மாட்டேங்குதே இந்த பொண்ணு “ என்று புலம்பியபடி அன்றைய சமையலை தொடங்கினார்..

நித்யாவிற்கு இப்படி வார கடைசியில் வீட்டில் இருப்பது மனதிற்கு ஏனோ ஒருவித அமைதியை தரும்.. ஆனால் அவளுக்கு இப்பொழுது தெரியவில்லை இன்னும் சிறிது நேரத்தில் தான் ஏற்படுத்தி வைத்து இருக்கும் அமைதியை குலைக்க ஒருவன் வரப்போகிறான் என்று..

ஹாலில் இருந்த சாய்வு இருக்கையில் அமர்ந்து அன்றைய தினசரியை படித்து கொண்டு இருந்தாள்.. திடீரென்று அவளது கண்களை இரு பிஞ்சு கரங்கள் பொத்தின “ அட்ட  “ என்று கூறியப்படி..

முதலில் திடுக்கிட்டாலும், பின் சுதாரித்து அந்த கரங்களை பிடித்து “ கெளதம் கண்ணா “ என்று சந்தோசமாக கூறியபடி முன் இழுத்தாள்..

“ நிடியா அட்ட “ என்று கூறியபடி அந்த நான்கு வயது சிறுவனும் அவள் மீது ஏறிக் கொண்டான்..

“ என் கெளதம் செல்லம்… நீயாவா வீட்டுக்கு வந்த ?? ” என்று அந்த சிறுவனிடம் கேட்டபடி வாசலை பார்த்தாள்.. அங்கே யாரும் இல்லை..

ஆனால் “ இவனால் எப்படி அங்கு இருந்து இங்கு வந்து இருக்க முடியும் “ என்று யோசனை செய்தபடியே மீண்டும் சிறுவனிடம் வினவினாள்..

“  அப்பா கூட வண்டே…” என்று கூறிக்கொண்டே “ டேனு பாட்டி “ என்று இறங்கி ஓடினான்..

இந்த குட்டி கெளதம் வேறு யாருமில்லை.. அசோக்கின் மகன் தான்.. நித்யமல்லிகாவிற்கு கெளதம் என்றால் மிகவும் இஷ்டம்.. அவனிடம் ஒரு சிறு குழந்தையை போலவே பேசுவாள், பழகுவாள், விளையாடுவாள்..

அவனோடு அவள் அனைத்தையும் மறந்து சந்தோசமாக இருப்பதை பார்த்த அசோக் எதாவது ஒரு காரணத்தை சொல்லி அவள் வீட்டில் இருக்கும் நாள் இங்கு கொண்டு வந்து விட்டு விடுவான்.. அன்றும் அப்படிதான் அழைத்து வந்து இருந்தான்..

“ அசோக் அண்ணா வந்து இருக்காங்களா ?? ஆனா வீட்டுக்கு வராமல் எங்க போனாங்க “ என்று யோசித்தபடியே வெளியே வாசலில் சென்று பார்த்தவள் அங்கும் யாருமில்லை எனவும் தன் சகோதரனுக்கு போன் செய்தாள்..

“ ஹெலோ அண்ணா.. என்ன குட்டிய விட்டுட்டு நீங்க எங்க போயிட்டிங்க வீட்டுக்கு வராம??” என்று வினவினாள்..

அசோக்கோ “ நித்யாமா இன்னும் கொஞ்ச நேரத்துல நான் வந்துடுவேன்.. ஒரு வேலையா இந்த பக்கம் வந்தேன். அவன அங்க கூட்டி போக முடியாது.  நான் வெளிய கிளம்பவும் இவனும் ஒட்டிகிட்டான்.. அதான் அங்க இறக்கி விட்டு வந்தேன் டா.. “

“ ஓ !! சரி அண்ணா அதுனால என்ன.. நான் பாத்துக்கிறேன்.. மதியம் உங்களுக்கும் சேர்த்து சமையல் பண்ணிடுறேன் னா… நீங்க வந்துடுங்க “ என்று அவன் பதில் கூறுமுன்னே வைத்துவிட்டாள்..

அவன் பேசுவதை கேட்டிருந்தால் அவள் வாழ்வில் நடக்க இருக்கும் மாற்றங்களை தவிர்த்து இருக்கலாம்..

ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறதே.. கௌதமை தேடி தன் போனை வைத்துவிட்டு போய்விட்டாள்.. அவனோடு நேரம் கழித்ததால் அடுத்து அசோக் அழைத்ததற்கும் அவளிடம் பதில் இல்லை..

கெளதமோ தேனம்மா உடன் கொஞ்சி கொண்டும், விளையாடி கொண்டும் அவர் கூறும் கதைகளை தன் சிறு தலையை அசைத்து அசைத்து கேட்டுக்கொண்டு இருந்தான்..

“கெளதம் குட்டி பாட்டி கிட்ட வந்துடிங்களா ?? ஹ்ம்ம் அப்பாவும் கொஞ்ச நேரத்துல மம் மம் சாப்பிட வராறாம்.. ஜாலி தானே” என்று தூக்கி கொஞ்சினாள்..

தேனம்மாவோ “ இப்பையாது மனசு விட்டு சிரிக்கிறாளே “ என்று சந்தோசமாக வேலை பார்த்தார்..

“ பாட்டி நீங்க உக்காந்து எனக்கு காய் மட்டும் நறுக்கி குடுங்க. நான்  சமையல் பண்ணுறேன்.. “ என்று கூறிவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள்.

கௌதமை அங்கு இருந்த சமையல் மேடையில் கொஞ்சம் தள்ளி பாதுகாப்பாக அமரவைத்து விட்டு, அவனோடு பேசியபடியே வேலையை செய்தாள்..

இதை எல்லாம் பார்க்க பார்க்க தேனம்மாவிற்கு மனதிற்குள் வருத்தம் கூடியது.. “ அட ஆண்டவா.. இந்த பொண்ணு இன்னிக்கு மாதிரியே என்னிக்கும் இப்படியே சிறுச்சுகிட்டு சந்தோசமா இருக்கனும்.. “ என்று வேண்டிக்கொண்டார்..

நித்யமல்லிகாவோ தன் உலகம் மறந்து கௌதமோடு பேசியபடியே அவனை கொஞ்சி கொண்டும் சமையல் செய்துகொண்டும் இருந்தாள்..

ஒரு சிறு இடைவெளியில் கெளதம் அங்கும் இங்கும் அசைய  “ குட்டி கண்ணா.. சமத்தா உட்கார்ந்து இருக்கணுமாம்.. குட் பாய்ல.. இன்னும் கொஞ்ச நேரத்துல அத்தை சமையல் முடிச்சிட்டு அப்புறம் விளையாடலாம் “ என்று கூறவும்

“ ஹ்ம்ம் சரி “ என்று கூறிவிட்டு அங்கு வைத்திருந்த காரட், உருளை உடன் விளையாட ஆரம்பித்து விட்டான்..

ஒருவழியாக சமையல் முடித்து அனைத்தையும் ஒதுங்கு படுத்திவிட்டு மூவரும்  ஹாலுக்கு வந்து அமர்ந்தனர்..

“ டேனு பாட்டி கடை சொல்லு “ என்று கூறி சலுகையாய் தன் அத்தை மடி மீது படுத்து கொண்டான்..

“ இன்னும் இந்த பயலுக்கு தானா வரலை பாரு “ என்று கூறி சிரித்துவிட்டு மாயகண்ணன் சிறுவயதில் செய்த குறும்புகளை கதையாக கூற ஆரம்பித்தார்..

நேரம் போவது தெரியாமல் இப்படியே மூவரும் அமர்ந்து கதை பேசிக்கொண்டும் சிரித்துகொண்டும் இருந்தனர்.. கெளதம் வந்ததும் நித்யா தான் இருந்த கோலத்தை மறந்தாள்..

காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்கவும் கௌதமை தூக்கியபடி சிரித்த முகத்துடன் “ அப்பா வந்தாச்சு “ என்று கூறியபடியே கதவை திறந்தாள்..

கதவின் பின்னே நின்றவனை பார்த்து அப்படியே சிலையென நின்று விட்டாள்.

வாசல் படியை தன் உயரத்தால் அளந்தபடி அழகாக கம்பீரமாக கருப்பு நிற காட்டன் டி ஷர்ட்டும் நீல நிற ஜீன்சும் அணிந்து நின்று இருந்தவனை இதற்க்கு முன் பார்த்த நியாபகம் இல்லை..

ஆனாலும் அவன் நின்று இருந்த விதம் அவனது தோரணை எல்லாம் அவள் மனதில் அவளுக்கே தெரியாமல் இடம் பிடித்தன.. 

அவனுமே இவளை பார்த்து ஒரு நொடி மெய் மறந்து தான் நின்று விட்டான். எந்த வித ஒப்பனையும் இல்லாமல், வீட்டில் சாதரணமாக இருக்கும் பொழுதே இத்தனை அழகா என்று எண்ணினான் எதிரே இருந்தவன்.. அவளது சிரித்த முகமும் கண்களும் அவனது மனதின் ஆழம் வரை பதிந்தது..

ஆனால் இவர்கள் இருவரின் இந்த மோன நிலையை கௌதமின் “ விபு மாமா “ என்ற குரல் கலைத்தது.. ” அட்ட விபு மாமா “ என்று எதிரில் இருப்பவனை கை காட்டினான் குட்டி கெளதம்..

அவள் அவனுக்கு பதில் கூறுமுன் “ விபு மாமா “ என்று கூறிக்கொண்டே அவனிடம் தாவினான்.. இதை சற்றும் எதிர்பாராத நித்யா ஒரு நிமிடம் தடுமாறி விட்டாள்..

தன்னிச்சை செயலாக விபு தான் குட்டி பையனையும், அவனை தூக்கி வைத்து இருந்த நித்யாவையும் சேர்த்து தாங்கி பிடித்தான்.. அனைத்தும் ஒரு நிமிடம் கண் இமைக்கும் நொடியில் நடந்துவிட்டது..

இருவரும் இதை எதிர்பார்க்கவில்லை.. ஆனால் இதை எல்லாம் அறியாத கெளதமோ தான் விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் இருவரின் கழுத்தையும் சேர்த்து கட்டி பிடித்து கொண்டான்.. நினைத்தால் கூட இருவரும் விலக முடியாத சூழ்நிலை..

இருவரும் தவித்து கொண்டு இருந்த இந்த நேரத்தில் தெய்வம் போல வந்தான் அசோக்.. இருவருக்கும் அவனை அந்த நேரத்தில் அப்படிதான் நினைக்க தோன்றியது..

“ ஹே !!! ஹே !! கெளதம் என்ன பண்ணுற ரெண்டு பேரையும் “ என்று கூறியபடி தன் மகனை அவர்களிடம் இருந்து தூக்கி கொண்டான்.. தந்தையை காணவும் பயம் எல்லாம் போய் சிரிக்க தொடங்கி விட்டான்..

ஆனால் அங்கு நின்று இருந்த மற்ற இருவருக்கும் தான் சங்கடமாக போய்  விட்டது.. நித்யமல்லிகா தலையை விரித்து போட்டு வேறு இருந்ததால் அவளது முடியில் பாதி விபுவின் தோள்களில் இருந்தது.. அப்படி இழுத்து அணைத்து இருந்தான் கெளதம்..

இதில் யார் யார் மேல் கோவம் கொள்ள முடியும்.. ஆகவே அமைதியாக நின்று இருந்தாள்.. விபு தான் முதலில் நிலைமையை உணர்ந்து சற்று விலகி நின்றான்.

ஆனால் இதெல்லாம் அறியாத அசோக்கோ “ டேய் மாப்ள விபு நீ எப்படி டா இங்க வந்த ?? ” என்றான் சகஜமாக.. ஆனால் அவனுக்கு பதில் விபுவின் முறைப்பு மட்டுமே..

அதை புரிந்துகொண்ட அசோக் சுதாரித்து “ நித்யாமா இது.. இவன் தான் என் க்ளோஸ் பிரின்ட் விபு… விபு வரதன்… v.s குரூப் ஓட MD.. பெரிய ஆளு  “ என்று அவளிடமும் “ விபு இவ தான் என் ஆருயிர் தங்கை, இல்லை இல்லை உன் பாஷையில் பாசமலர் நித்யமல்லிகா” என்று அவனிடமும் அறிமுக படுத்தினான்..

நித்யமல்லிகா என்ற பெயரை கேட்டதும் உறைந்து விட்டான் விபு.. ஒருவழியாக இத்தனை நாள் அவனது மனதை போட்டு உருட்டி கொண்டு இருந்த பெயர்.. அந்த பெயருக்கு உரியவளை நேரில் கண்டு விட்டான்..

“ பெயரை போலவே பார்க்கவும் ரொம்ப அழகா தான் இருக்கா “ என்று கூறி அவன் கை குலுக்க கை நீட்டும் முன்னே அவள் “ வணக்கம் “ என்று கரம் குவித்து விட்டாள்..

விபு திகைத்து “ வ.. வணக்கம்..” என்று கூறி அவனும் பதிலுக்கு கரம் குவித்தான்..

அவனது திகைப்பு ஒரு புறம் இருக்க நித்யாவோ மனதிற்குள் அசோக்கின் மீது சரியான கோவத்தில் இருந்தாள். “ என்ன இந்த அண்ணன் என்னை பற்றி  தெரிந்தும் சொல்லாம கூட பிரின்ட்ட கூட்டி வந்து இருக்காறு “ என்று எண்ணினாள்..

இவள் வாசலுக்கு வந்து வெகு நேரமாகியும் உள்ளே வராததால் தேனம்மா வெளியே வந்துவிட்டார்.. “ என்ன கண்ணு இன்னும் வெளிய என்ன பண்ணுற ? ” என்று கேட்டபடி வந்தவர் அசோக் மற்றும் ஒரு புதியவன் நிற்பதை பார்த்து அமைதியாக நித்யாவின் முகம் பார்த்தார்..

“ இவங்க அசோக் அண்ணா ஓட பிரின்ட் வி.. விபு வரதன் “ என்று தேனம்மாவிடம் கூறினாள்.. அவனது பெயரை அவள் கூறும் போது ஏனோ கடவுள் வரம் கொடுத்தது போல உணர்ந்தான் நம் நாயகன்..

“ வணக்கம் பாட்டி “ என்று கரம் குவித்தான்.. ”வணக்கம் தம்பி.. ஏன் எல்லாரும் வெளியவே நிக்கிறிங்க ?? நித்யா உள்ள கூப்பிடு “ என்று கூறி அனைவரயும் உள்ளே அழைத்தார்..

ஆனால் இதற்கெல்லாம் காரணமான அசோக்கோ மனதிற்குள் தன் தங்கையும் நண்பனும் என்ன கூற போகிறார்களோ என்று யோசித்து கொண்டு  இருந்தான்..

அசோக்கிடம் ஒரு முறைப்பை தந்துவிட்டு “ உள்ள வாங்க “ என்று விபுவை பார்த்து கூறிவிட்டு வேகமாக உள்ளே சென்றாள்..

விபுவும் அசோக்கை பார்த்து முறைத்துகொண்டே “ உள்ள வந்து சேறு “ என்று கூறி அவனையும் இழுத்துக்கொண்டு சென்றான்..

“ அட இவனுக்கு வர கோவத்தை பாரு.. நியாயமா நான் தான் இவன உள்ள வான்னு கூப்பிடனும் எல்லாம் என் நேரம்  “ என்று முனங்கியபடி உள்ளே சென்றான் அசோக்..   

நித்யாவின் கோவம் அண்ணன் தன்னிடம் ஒரு வார்த்தை கூறாமல் நண்பனை அழைத்து வந்து விட்டான் என்று..

விபுவின் கோவமோ வேறு காரணமாக.. விபுவும் அசோக்கும் தான் ஒன்றாக காலையில் கிளம்பினார்கள்..

அசோக் “ டேய் மாப்ள நீ கெஸ்ட் ஹவுஸ் போய்  ஓபன் பண்ணு.. நான் இதோ ஒரு அஞ்சு நிமிசத்துல  வந்துவிடுறேன்“ என்று கூறிவிட்டு வந்தவன் இப்பொழுதான் அவனது கண்களில் படுகிறான்..

கௌதமை நித்யாவின் வீட்டில் விட்டு விட்டு விபுவிடம் தான் கிளம்பினான் ஆனால் போகும் வழியில் அவனது மனைவியின் உறவினர் ஒருவரிடம் சிக்கி கொண்டான்.. கத்தி இல்லாமல் அவனை கழுத்து அறுத்து விட்டார்..

விபுவும் அசோக் வருவான் வருவான் என்று காத்து காத்து இருந்து அவனது கண்கள் பூத்தது தான் மிச்சம். தொடர்ந்து அவனுக்கு போன் செய்து பார்த்தான் அவன் எடுக்கவே இல்லை..

சரி அவனுக்கு தெரிந்தவர்கள் இந்த தெருவில் யாரும் இருப்பார்களா என்று கேட்கவே அசோக்கின் மனைவி குமுதாவிற்க்கு போன் செய்தான்..

குமுதா தான் அசோக் நித்யா வீட்டில் இருந்தாலும் இருப்பார் என்று அவளது வீட்டு முகவரியை தந்தது.. ஆனால் இதெல்லாம் தெரியாத அசோக்கோ திருதிருவென்று முழித்து கொண்டு இருந்தான்..

விபுவிற்கோ தான் என்ன முயற்ச்சி செய்தும் அவனது பார்வையை நித்யாவின் மீது இருந்து விளக்க முடியவில்லை.. “நேத்து தேவி ஷாப்பிங் மால்ல ஒரு நித்யமல்லிகா கூட பேசுனாலே.. அவளும் இந்த பொண்ணும் ஒன்னா ? ”

“ ச்சே ச்சே இருக்காது.. நேற்று  பார்த்த அந்த பொண்ணு தூரத்துல இருந்து பார்க்க கூட நல்லா இல்ல.. ஆனா இவ.. யப்பா… கூடை  கூடையா மல்லிகைப்பூவ வீட்டுல வச்சா எப்படி மனசு மயங்குமோ அப்படி இருக்கா.. நித்யா.. ம்ம்ஹு இது எல்லாரும் கூப்பிடுற பேரு.. ம்ம் மல்லிகா அதுவும் வேணாம் பழைய பெயரா தெரியும்.. மல்லி ஹா .. இது தான் சரியான பேரு..” என்று எண்ணிக்கொண்டு இருந்தான்..

இதெல்லாம் ஒரு புறம் இருக்க நித்யாவோ “ என்ன இவன் இப்படி பார்க்குறான் ??  இப்ப திடீர்னு போயி நம்ம கண்ணாடியும் போட முடியாது, தலையையும் கொண்டை  போட முடியாது.. அது தான் ரொம்ப வித்தியாசமா தெரியும்.. ச்சே.. ஆனாலும் இந்த அண்ணனுக்கு அறிவே இல்லை.. “என்று எண்ணிக்கொண்டு இருந்தாள்..

விபுவின் மனமோ அவளை மல்லி மல்லி என்று மனதில் அர்ச்சனை செய்துகொண்டு இருந்தது..

அசோக் தான் இவர்களின் மௌனத்தை கலைத்தான் “ விபு உனக்கு எப்படி டா இந்த வீடு தெரியும் ?? நான் இங்க இருப்பேன்னு உனக்கு யாரு சொன்னா ?? ” என்று கேட்டான்..

அவனை முறைத்துகொண்டே விபு நடந்ததை கூறினான்.. “ சாரி டா மாப்ள.. சரியான ரம்பம் ஒருத்தர் கிட்ட மாட்டிகிட்டேன் “ என்று அசோக்கும் நடந்ததை கூறினான்..

தேனம்மா விபுவின் பார்வை நித்யாவின் மீதே படிவதை கவனித்து கொண்டார்.. மனதிற்குள் ஏனோ அவருக்கு முதல் பார்வையிலேயே விபுவை பிடித்துவிட்டது..

அவனிடம் வந்து அவனை பற்றியும், அவனது குடும்பம் பற்றியும் விசாரித்தார்.. அதற்கு பின் தான் அசோக் கூறினான் “ பாட்டி இங்க இருந்து இதே சந்துல கடைசியா ஒரு பெரிய வீடு இருக்குல.. அது இவங்கலோடதுதான்.. அந்த வீட்டை பார்க்க தான் வந்தோம் “ என்று விவரம் கூறினான்..

விபுவும் தன் பங்கிற்கு அந்த வீட்டில் ஷூட்டிங் நடக்க போவதாகவும், அதானால் வீட்டை கொஞ்சம் சரி செய்ய வேண்டி இருப்பதாகவும் கூறினான்..

இத்தனை கதைகளையும் நித்யா அமைதியாக கேட்டு கொண்டு இருந்தாள்.. அவளுக்கு ஏனோ எதுவும் பேச தோன்றவில்லை.. இல்லை ஒருவேளை புதிதாக வந்து இருப்பவனிடம் என்ன பேசுவது என்று நினைத்தாளோ என்னவோ..

இல்லை தான் அண்ணனின் நண்பன் என்று கொஞ்சம் பேசினாலும் அவன் அதையே அவனுக்கு சாதகமாக செய்து கொண்டால் என்ன செய்வது என்று யோசித்தாளோ என்னவோ அமைதியாக இருந்தாள்..

இதை கவனித்த தேனம்மா “ நித்யா கண்ணு.. போ போயி ரெண்டு பேருக்கும் ஜூஸ் போட்டு கொண்டு வா.. என்ன இப்படி அமைத்தியா நிக்கிற “ என்று ஒரு அதட்டல் போடவும் சமையல் அறையின் உள்ளே சென்றாள்..

அவளது மனமோ “ ஜூஸ் மட்டும் குடுத்து அவனை அனுப்பி வச்சிடணும்.. “ என்று எண்ணி கொண்டு இருக்கும் பொழுதே அசோக்கின் குரல் கேட்டது “ விபு என் தங்கச்சி சூப்பரா சமையல் பண்ணுவா.. இன்னிக்கு அவ சமையல் தான்.. இருந்து நம்ம ரெண்டு பெரும் கண்டிப்பா சாப்டிட்டு தான் போகணும் “ என்று கூறினான்..

இதை கேட்டு நித்யா தலையில் அடித்து கொண்டாள்.. அதற்க்கு விபு என்ன பதில் சொன்னானோ தெரியவில்லை..

தேனம்மா வின் குரல் கேட்டது “ அதெப்படி தம்பி.. அசோக் ஓட பிரென்ட் வேற.. வீட்டுக்கு வந்துட்டு சாப்டாம போனா நல்லா இருக்குமா ?? அதெல்லாம் இல்ல இன்னிக்கு நீங்க சாப்டிட்டு தான் போகணும் “ என்று கூறினார்..

“ ச்சே இந்த பாட்டிக்கு வயசு தான் ஆகுதே தவிர கொஞ்சம் கூட மூளையே வேலை செய்யாது போல.. அவன் தான் போறேன்னு சொல்லுராணுல, விட்டா  ஊட்டி விடுவாங்க போல” என்று கருவிக்கொண்டே ஜூஸ் போட்டு எடுத்து சென்றாள்..

“ தேங்க்ஸ் “ என்று கூறி அவனும் எடுத்து பருக தொடங்கினான்.. சம்பிரதாயமாக பேசவேண்டும் என்பதற்காக பேசுவது போல அவளை பற்றி தெரிந்துகொள்ள பேசினான்..

“ அப்புறம் ம…. நித்யமல்லிகா.. நீங்க என்ன பண்ணுரிங்க ?? ” என்றான் அவளை பார்த்து..

தன்னிடம் நேரடியாக இப்படி கேட்பான் என்று அவள் எண்ணவில்லை போல. ஒரு நிமிடம் திகைத்து விட்டாள்.. அவள் பதில் கூறும்முன் அசோக் “ என்ன டா இப்படி கேட்டுட்ட.. இந்த ஏரியா குள்ள நுழையும் போது பெரிய மெஸ் பாத்தோமே.. அன்னை மெஸ் அதோட முதலாளி அம்மா தான் இவங்க “ என்றான் பெருமையாக…

அவனது இந்த பதிலை கேட்ட விபு முகத்தில் ஒரு புன்னகையை தவழ விட்டு “ யப்பா எனக்கு ஒரு பெரிய பிரச்சனை தீர்ந்துச்சு டா அசோக் “ என்றான்..

“ அண்ணன் என்னைய பத்தி சொன்னதுக்கும் இவன் பிரச்சனை தீர்ந்ததுக்கும் என்ன சம்பந்தம் “ என்பது போல கேள்வியாக பார்த்தாள் நித்யா..

அசோக் மற்றும் தேனம்மாவின் பார்வையும் இதையே உணர்த்தியது.. அவர்களின் கேள்வியான பார்வையை உணர்ந்து கொண்ட விபு “ எங்க வீட்டு வேலை எல்லாம் முடிய எப்படியும் ஒரு மாசம் ஆகும்.. சிட்டில இருந்து தான் வேலைக்கு ஆளுங்கள கூட்டி வரணும்..

ஒரு மாசத்துக்கு அவங்களுக்கு சாப்பாடுக்கு என்ன ஏற்பாடு பண்ணுறதுன்னு நினைச்சிட்டு இருந்தேன். அதான் இப்ப அந்த பிரச்சனை தீர்ந்துச்சு சொன்னேன் “ என்றான் மூவருக்கும் பொதுவாக..   

அட நித்யா கண்ணு இது நல்ல விஷயம் தானே“ என்று கூறி சிரித்தார் தேனம்மா..

“ நித்தி உடனே சரின்னு சொல்லிடு. ஒரு மாசம் ஆர்டர்.. பையன் சரியான காசுக்காரன் டபுள் சார்ஜ் போட்டு சொல்லு டா “ என்று சிரித்துக்கொண்டே அவளின் பதிலை எதிர்பார்த்தான் அசோக்..

ஆனால் நித்யாவின் மனமோ வேறு நினைத்தது.. ” இவன் என்னிடம் எதுவும் முறையாக நேராக கேட்டானா ?? இல்லையே… அசோக் அண்ணா கூறவும் அவன் பாட்டுக்கு முடிவு செய்து கொண்டு பேசுகிறான். இவன் கேட்டால் நான் உடனே இளித்து கொண்டு சரி சொல்லணுமோ ” என்று எண்ணியவள் உதட்டை சுளித்தபடி அமைதியாக இருந்தாள்..

ஆனால் அவளது முகத்தை பார்த்தே அவளது மனத்தின் எண்ணங்களை படித்து விட்டவன் போல “ டேய் அசோக் அவசர படாத.. நான் இன்னும் அவங்க கிட்ட எதையுமே சரியா கேக்கலையே.. இப்ப ஜஸ்ட் என் மனசுல இருக்குறத உங்க கிட்ட சொன்னேன் அவ்வளோதான்” என்றான் அவளது முகம் பார்த்து..

“ அட நான் நினைத்ததை சரியா சொல்லிட்டானே.. பயங்கரமான ஆளாதான் இருக்கனும்.. எதுக்கும் இவன்கிட்ட இருந்து கொஞ்சம் ஒதுங்கியே தான் இருக்கனும்.. இவன் குடுக்குற ஆர்டர் இல்லாட்டி என்ன ?? “ என்று முடிவு செய்து கொண்டாள்..

“ என்ன ம….  ms. நித்யமல்லிகா இந்த ஆர்டர்க்கு நீங்க சரி சொல்றிங்களா ?? ஒரே ஒரு மாசம் தான்.. மொத்தம் 10  பேரு தான்.. மூணு வேளைக்கு பாத்தா 30 ஆளுங்க கணக்கு.. இது ஒன்னும் உங்களுக்கு பெரிய விஷயம் இல்லையே” என்று அவளது கண்களையே பார்த்து..

சிறிது நேரம் யோசனை செய்வதை போல பவனை செய்து கொண்டு இருந்தவள்  “ நான்.. நான் பூபதி தாத்தா கிட்டயும், சமையல் மாஸ்டர் கிட்டயும்  ஒரு வார்த்தை கேட்டு தான் முடிவு சொல்ல முடியும்  “ என்றாள் அழுத்தமாக..

அவளது குரலே அவனக்கு புரிந்துவிட்டது “ இதில் இவளுக்கு இஷ்டமில்லை ” என்று..

“ அட என்ன கண்ணு இப்படி சொல்லுற.. பூபதி அண்ணன் என்ன வேணான்னு சொல்ல போறாரா ?? நீ என்ன புதுசா சொல்லுற எல்லா ஆர்டரையும் நீ ஒன்னும் இது வரைக்கும் அவரு கிட்ட கேட்டு முடிவு பண்ணது இல்லையே “ என்று போட்டு உடைத்தார்..

“ ஓ !!! இந்த பாட்டி என்ன இப்படி எல்லாத்தையும் இவன் முன்னாடி போட்டு உடைக்கிறது “ என்று எண்ணியவள் பதில் கூறுமுன் அவன் தொடங்கி விட்டான்..

“ அது ஒண்ணுமில்ல பாட்டி.. இது ரொம்ப முக்கியமானா ஆர்டரா உங்க பேத்திக்கு நினைச்சுட்டாங்க போல அதான் யோசனை பண்ணுறாங்க” என்று சிரிப்பு கலந்த குரலில் கூறினான்..

“ நீ குடுக்கும் இந்த ஆர்டர் ஒன்றும் எனக்கு முக்கியமில்லை “ என்று அவனுக்கு உணர்த்தவே அவள் இவ்வாறு கூறினாள்..

ஆனால் அவனோ அவளது வார்த்தைகளை கொண்டே தான் கொடுக்கும் ஆர்டர் அவளுக்கு முக்கியாமாக தோன்றுவதாக கூறிவிட்டான்.. இதை அவளால் மறுத்தும் பேச முடியாது.. ஆமாம் என்று அமோதிக்கவும் முடியாது..

அனைவரும் அவள் பதிலுக்காக காத்து கொண்டு இருந்தனர்.. “ இல்ல ஏற்கனவே இப்ப நிறைய ஆர்டர் போயிட்டு இருக்கு.. அதான் யோசிக்கிறேன்.. எதுக்கும் தாத்தா கிட்ட கேட்டு சொல்லுறேன் “ என்று முடிவாக கூறிவிட்டாள்..

ஒரு பெரு மூச்சை வெளியிட்டு “ ஹ்ம்ம் சரி.. நல்லா யோசனை பண்ணி சொல்லுங்க.. எந்த அவசரமும் இல்ல.. எப்படியும் நான் இந்த பக்கம் அடிக்கடி வருவேன்.. அப்போ நான் கிளம்புறேன்.. அசோக் வரேன் டா.. பாட்டி போயிட்டு வரேன்.. கெளதம் குட்டி மாமா டா டா “ என்று அனைவருக்கும் சொல்லிவிட்டு எழுந்துவிட்டான்..

இத்தனை நேரம் அவன் பேசியதும் இப்பொழுது அவன் பேசியதற்கும் எதுவோ ஒரு அந்நியத்தன்மை வந்தது போல உணர்ந்தது.. ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல், 

நித்யாவும் வேகமாக சரி என்று கூறி தலை ஆட்டிவிட்டாள்.. ஆனால் தேனம்மா “ தம்பி என்ன இவ்வளோ நேரம் இருந்துட்டு சாப்பிடாம கூட போறீங்க ?? இருங்க தம்பி “ என்று வேகமாக அவனை தடுத்தார்..

அவனோ நித்யாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு “ இருக்கட்டும் பாட்டி.. நேரம் ஆச்சு..” என்று சிரித்தபடி கிளம்பி சென்று விட்டான்…

அவன் அந்த பக்கம் செல்லவுமே இந்த பக்கம் நித்யாவை அசோக்கும் தேனம்மாவும் பிடித்து கொண்டனர்.. இருவரின் கண்டன பார்வையும் அவள் மீது பதிந்தது..

ஆனால் அதற்கெல்லாம் அசந்து போனாள் அவள் நித்யா அல்லவே.. “ கெளதம் குட்டி வா டா நம்ம புவ்வா சாப்பிடலாம் “ என்று அவனை தூக்கி சென்று விட்டாள்..

பின்னாடியே வந்த தேனம்மா “ இந்த பாரு நித்யா கண்ணு அந்த தம்பிய பார்த்தா ஒன்னும் தப்பான பையன் மாதிரி தெரியலை.. நீ ஏன் இப்படி முகத்துல அடிச்ச மாதிரி பேசுன ?? ” என்று கேட்டார்..

அவள் பதில் கூறும் முன்னே அசோக் “ பாட்டி அவன் எவ்வளோ பெரிய ஆளு தெரியுமா ?? அவன் அப்பாயின்மென்ட் கிடைக்க பிஸினெஸ்ல ஒரு ஒருத்தனும் மாச கணக்கா காத்து கிடக்கான்..” என்று கூறினான்..

“ இப்ப ரெண்டு பெரும் என்னைய என்ன செய்யணும் சொல்றிங்க “ என்றாள் கௌதமிற்கு ஊட்டியபடியே..

“ விபு மாமா குட் மாமா “ என்றான் அவனும் தன் பங்கிற்கு…

“ இந்த ஆர்டர்க்கு சரி சொல்லு “ என்று அசோக்கும் தேனம்மாவும் ஒரு சேர கூறினார்..

அசோக் பின் தன் தங்கையிடம் வந்து “ இங்க பாரு நித்யா, இது உனக்கு கிடைக்கிற நல்ல வாய்ப்பு.. இதை நீ வெறும் ஒரு மாச ஆர்டரா மட்டும் பார்க்காத. இதுல இருந்து உனக்கு மேலும் மேலும் நிறைய வாய்ப்பு இருக்கு.. உனக்கும் தொழில்ல இன்னும் முன்னேற்றம் வேணும் இல்லையா ?? ” என்றான் அமைதியாக..

“ இருக்கிற முன்னேற்றமே போதும் அண்ணா.. மேல மேல முன்னேறி லட்ச கணக்குல சம்பாதிச்சு நான் என்ன பண்ண போறேன் சொல்லுங்க.?? இதுவே போதும்.. இதுக்கே எனக்கு நேரம் பத்தலை “ என்றாள் விரக்தியாக..

“இதற்கு மேல நான் என்ன சொல்வது” என்பது போல தேனம்மாவை பார்த்தான்.. அவரும் அவனை பாவமாக பார்த்தார்..

ஒருவழியாக அசோக்கும் கௌதமும் கிளம்பி விட்டனர்.. நித்யா உண்டுவிட்டு தன் அறை நுழைந்துவிட்டாள்.. அவளுக்கு ஏனோ மனம் அமைதியாக இல்லை.. இருதயம் வேகமாக துடிப்பது போலவே இருந்தது.

தன் வேலை எல்லாம் முடிந்து வீட்டிற்கு சென்ற விபுவின் நிலையோ வேறு விதமாக இருந்தது..

இரவு மொட்டை மாடியில் நின்று வானத்தை பார்த்து கொண்டு இருந்தான்.. அவனது மனம் எல்லாம் மல்லிகை வாசம் தான்..

மீண்டும் மீண்டும் அவள் முகமே வந்தது.. “ அப்பா வந்தாச்சு “ என்று கூறியபடி அவள் கதவு திறந்த காட்சியே கண் முன் வந்தது.. அவனது மனமோ ரெக்கை கட்டி பறந்தது..

ஆனால் அவள் கையில் இருக்கும் குழந்தை கொஞ்சம் அவன் சாயலிலும் அவளது சாயலிலும் கலந்து இருப்பது போல தோன்றியது..

அவன் வேலை முடிந்து வீட்டிற்கு வருவது போலவும் அவள் கையில் தங்களின் குழந்தையை வைத்து அவனுக்க காத்து இருப்பது போலவும் மனம் எல்லை இல்லாமல் கற்பனை செய்தது..

இதெல்லாம் ஒரு புறம் இருக்க அவனது மூளையோ “ இன்னைக்கு தான் அவளை பார்த்து இருக்க. அதுக்குள்ள கல்யாணம் குழந்தை எல்லாம் யோசனையா ??” என்று இடிக்கவும் அவனுக்கு அவனது நினைப்பை எண்ணி சிரிப்பு வந்து..

“ என்ன அண்ணா… இப்படி ராத்திரி நேரத்துல மொட்டை மாடில தனியா நின்னு சிருச்சுகிட்டு இருக்க?? என்ன விசயம் ?? ரெண்டு நாளா சரியில்லையே நீ “ என்று கேட்டபடி வந்தாள் அவனின் அருமை தங்கை தேவசேனா..

“ அய்யோ இவளா “ என்று எண்ணியபடி திரும்பினான்..” என்ன தேவி குட்டி என்ன இந்த நேரத்துல தூங்காம இங்க என்ன பண்ணுற ?? போ போ போய் தூங்கு” என்றான் அக்கறையாக..

“இந்த மழுப்பல் எல்லாம் என்கிட்டே வேணாம்.. எனக்கு தூங்க தெரியும்.. சரி நீ இப்ப விஷயத்தை சொல்லு.. யாரு அந்த பொண்ணு ??? ” என்றாள் அவனது கண்களை பார்த்து..

மனதிற்குள் திகைத்தாலும் “ யா.. யாரு … நீ யாரை பத்தி கேட்கிற  தேவி?? எந்த பொண்ணு ?? ” என்று வேகமாக பேசினான்..

அவளுக்கு தன் அண்ணனை நினைத்து சிரிப்பு தான் வந்தது.. “யாரையும் ஒற்றை பார்வையில் அடக்கி விடுவான்.. அவன் ஒரு கேள்விக்கு கூட எதிராளியால் பதில் சொல்ல முடியாது.. அப்படி பட்டவன் இப்படி தன்னந்தனியாக நின்று சிரித்து கொண்டு இருக்கிறான்.. கேட்டால் மழுப்புகிறான்.. ” என்று நினைத்தாள்..

“ என்ன என்ன சிரிப்பு ?? அதெல்லாம் ஒண்ணுமில்ல.. பேசமா போ.. போய் தூங்கு “ என்று கூறினான்..

“ சரி சரி.. கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்து தான் ஆகணும்.. உன் தனிமையை நான் ஏன் கெடுக்கணும்  “ என்று நக்கலாக கூறிவிட்டு சென்று விட்டாள்..

“ யப்பா “ என்று ஒரு மூச்சை வெளியிட்டான் விபு வரதன்.. இந்த உணர்வு அவனுக்கு முற்றிலும் புதியது..

ஆனாலும் அவனது மனம் அவசர படாதே என்று கூறியது.. அவனும் ஒன்றும் தெரியாதவன் அல்லவே..

“ ஆனாலும் இந்த மல்லிக்கு கொஞ்சம் திமிரு இருக்கு.. பின்ன அத்தனை பேரை ஒரு ஆளா நின்னு வேலை வாங்குறால.. இருக்க தானே செய்யும்.. ஆனாலும் வேற ஏதோ ஒன்னு அவகிட்ட வித்தியாசமா வேற இருந்துச்சே..” என்று யோசித்தான்..

என்ன யோசித்தும் அவளது சிரித்த முகமே அவனுக்கு பதிலாக வந்தது.. அவனது கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை..

“ ச்சே என்ன இது நம்மள யோசனை செய்ய கூட விட மாட்டுராளே.. ஹ்ம்ம் ” என்று தனக்குத்தானே நினைத்துகொண்டு தன் அறைக்கு சென்று விட்டான்..

மனம் – மயக்கும்

        

                     

                                                          

                                     

               

Advertisement