Advertisement

மனம் – 16

 “ விபா அத்தை சொன்ன மாதிரி நீங்க ரொம்ப சேட்டை பண்ணுரிங்க.. இது கொஞ்சம் கூட சரியே இல்ல” என்று தன் இடுப்பில் கை வைத்து அவனை முறைத்து கொண்டு இருந்தாள் நித்யமல்லிகா..

கழுத்தில் புது மஞ்சள் தாலி பலபலக்க நெற்றியில அவள் வைந்திருந்த குங்குமம் கண்ணை பறிக்க, தலையில் அவள் சூடியிருந்த மல்லிகை மனதை மயக்க அழகு தேவதையாக நின்று முறைத்து கொண்டு இருந்தாள்..

நித்யமல்லிகா விபுவரதன் திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. விபுவின் வீட்டில் இருந்து மறுவீட்டிற்கு நித்யாவின் வீட்டிற்கு கிளம்பி கொண்டு இருந்தனர்.. ஆனால் அவனோ கிளம்பும் நினைப்பே இல்லாமல் மெத்தையில் சாய்ந்து ஒய்யாரமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தான்..

“ விபா நான் பேசுறது காதுல கேக்குதா இல்லையா?? இப்படி சிலை மாதிரி இருந்தா என்ன அர்த்தம்?? ” என்று மீண்டும் தன் பல்லவியை பாடினாள் அவனின் மல்லி..

அவள் பேசுவதை கேட்டா விபு “ ஸோ !!!!” என்று கூறி தன் காதுகளை தேய்த்து விட்டு மீண்டும் அப்படியே அமர்ந்து கொண்டான். இதை கண்டவளுக்கு கோவம் வருமா வரதா ??

“ விபா “ என்றாள் பல்லை கடித்தபடி..

அவனும் அதே போல “ என்ன டி “ என்றான் வீம்பாக..

“ நேரம் ஆச்சு விபா.. நம்ம இப்ப கிளம்புனா தான் சரியாக இருக்கும்.. உங்க டிரஸ் எல்லாம் கூட நானே எடுத்து வச்சுட்டேன்.. எழுந்திரிங்க ப்ளீஸ் குட் விபால..” என்று சிறு பையனிடம் கெஞ்சுவது போல கெஞ்சினாள்.

ஒரு நிமிடம் அவளையே மேலிருந்து கீழாக பார்த்தவன் “ அப்ப நான் கேட்டத குடு.. நான் வரேன்.. இல்லாட்டி இப்படி தான் “ என்று கையை கட்டி அமர்ந்து கொண்டான்.. 

அவனது பார்வையில் ஒரு நொடி தன்னை மறந்தாலும்  “ இங்க பாருங்க நான் இப்பதான் குளிச்சிட்டு வந்தேன்.. வந்ததும் அடம் பிடிக்கறிங்க.. ப்ளீஸ் எதுனாலும் அங்க போயி வச்சுக்கலாம்.. நீங்க நல்ல பையனாம்.. சமத்து பையனாம்.. இப்ப எந்திரிச்சு கிளம்பி வருவீங்களாம்..  “ என்று அவள் கொஞ்சினாள்..

நீ கெஞ்சினாலும் சரி கொஞ்சினாலும் சரி நான் கேட்டது கிடைத்தால் தான் நான் வருவேன் என்ற தினுசில் அமர்ந்து இருந்தான்..

“ நான் இவ்வளோ தூரம் கேட்கிறேன்ல.. கொஞ்சமாது காதுல வாங்குரிங்களா ??” என்று அவள் கூறவும் அவளிடம் வந்து நின்று

“ உன்னைய யாரு அவ்வளோ தூரத்துல நின்னு கேக்க சொன்னா.. இப்படி கிட்ட நின்னு கூட கேக்கலாம்ல “ என்றான் அவளை பார்த்து கண் அடித்து.

அவன் வந்து அருகில் நின்றதும், அவனது பார்வையும் அவளுக்கு வேறு உணர்த்தவும்.” இங்க பாருங்க தள்ளி நில்லுங்க.. எனக்கும் காது கேட்கும், உங்களுக்கும் காது கேட்கும்.. இதெல்லாம் சரியில்லை “ என்று கூறி பின்னே இரண்டு அடி எடுத்து வைத்தாள்..

“ என்ன சரியில்ல.. என்ன டி சரியில்ல..?? நான் என்ன உன் கைய பிடிச்சு இழுத்தேனா?? இல்ல இப்படி கட்டி பிடிச்சேனா..?? இல்ல இப்படி கிஸ் பண்ணேனா ?? ” என்று கூறியபடி அனைத்தையும் செய்து முடித்தான்..

அவள் திகைத்து நிற்கவும் “ சொல்லு இப்படியா பண்ணேன்.. நேத்து இருந்து ஒரே ஒரு முத்தம் நீயா குடுன்னு கேக்குறேன்.. நீ காதுல வாங்குறியா ?? ” என்று இப்பொழுது அவளை பார்த்து முறைப்பது அவனின் முறை ஆயிற்று..

நித்யா மனதிற்குள் “அடப்பாவி.. இப்படியா பண்ணேன்னு கேட்டு கேட்டே எல்லாம் பண்ணிட்டானே.. பயங்கரமான ஆளு தான் “ என்று எண்ணியவள் இமைக்க மறந்து நின்றாள்.

“ ஹலோ மல்லி மேடம்.. என்னைய ரசிக்கிறது எல்லாம் அப்புறம் பண்ணலாம்.. இப்போ நான் கேட்டதை குடுங்க.. கமான்.. பாஸ்ட் “ என்று கைகளை ஆட்டியபடி அவள் முன் நின்று இருந்தான்..

அவளுக்கோ கூச்சம் பிடுங்கி தின்றது.. இரண்டு நாட்கள் தானே ஆகி இருக்கிறது திருமணம் முடிந்து.. கல்யாணத்திற்கு முன்னும் அவ்வளோ ஒன்றும் நெருக்கமாக பழகவில்லை.. அவளுக்கோ இன்னும் வெக்கம் தெளியவில்லை..

“ ம்ம் விபா “ என்று அழைத்தாள் கொஞ்சம் வெக்கம் கலந்த தயக்கமாக.. “ யெஸ்.. நான் விபா தான் உன் விபா தான்.. அதானே கேக்குறேன்..ஒரே ஒரு கிஸ் ப்ளீஸ் டி “ என்றான் கிறக்கமாக..

“ என்.. எனக்கு கூச்சமா இருக்கு.. விபா “ என்றாள் குரலே எழும்பாமல்.. “ ஹேய் நான் உன் புருஷன்.. என்கிட்டே என்ன வெக்கம் கூச்சம் எல்லாம்.. அதெல்லாம் எனக்கு தெரியாது.. இ நீட் எ கிஸ் நவ்.” என்றான்

“ ம்ம்ச் ஏன் டா என்னைய படுத்துற?? ” என்றாள் பொறுமையை இழந்து.. கீழே விபுவின் அம்மா அழைக்கும் சத்தம் வேறு கேட்டது.. “ பாருங்க விபா அத்தை வேற கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க..” என்று அவனது கைகளை பிடித்து இழுத்தாள்..

“ கூப்பிடட்டும்.. எனக்கு என்ன ?? எனக்கு நான் கேட்டது வேணும்.. ஒன்னே ஒன்னு தானே.. இப்ப என் கைய பிடிச்சு இழுக்குற இதுக்கு மட்டும் வெக்கம் இல்லையா உனக்கு ?? ” என்று கூறி அவளை தன் கை வளைவில் நிறுத்தினான்..

“ விபா. என்ன இது ப்ளீஸ் விடுங்க.. நான் வேணா அங்க போய் தரேன் சரியா.. இப்ப வாங்க கிளம்பலாம்  “ என்று கூறி நகர்ந்தாள்..

இந்த பேச்செல்லாம் வேளைக்கு ஆகாது என்று எண்ணி “ அதெல்லாம் இல்ல.. இப்ப எனக்கு வேணும்.. குடுத்தா தான் நான் வருவேன்.. இல்லாட்டி நீ மட்டும் போ.. எல்லாம் காரணம் கேட்பாங்க.. “ என்று கூறிக்கொண்டு இருக்கும் பொழுதே

“ ஆமாமா எல்லாம் கேட்பாங்க உங்க கிட்ட தான்.. எனக்கு என்ன ?? ” என்று கூறி பழிப்பு காட்டினாள்.. ” கேட்கட்டும்.. எனக்கு என்ன நான் சொல்வேன் என் பொண்டாட்டி நான் கேட்டதை குடுக்கல அதான் நான் வரலன்னு.. “ என்றான் கூலாக..

அவனது பிடிவாதம் தான் அவள் ஏற்கனவே அறிந்தது தானே “ நீங்க ரொம்ப பிடிவாதம் விபா.. ஒன்னே ஒன்னு தான் சரியா “ என்று இறங்கி வந்தாள்..

“ யப்பா ஒரு கிஸ் வாங்கவே இப்படி காவடி தூக்க வைக்கிற.. சரி சரி ஒன்னு குடு.. ” என்று அவனும் சமாதான கோடி பறக்க விட்டான்..

“ நீங்க கண்ண மூடி நில்லுங்க..” என்று கூறவும் அவனும் சரியென்று கண்ணை மூடி நின்றான் தன் மனைவி தான் கேட்டதை குடுப்பாள் என்ற நம்பிக்கையில் ஆனால் அவளோ அவன் கண் மூடி நிற்பதை பயன்படுத்தி கொண்டாள்..

ஒரு சில வினாடிகள் கழித்து அங்கே “ அம்மா “ என்ற அலறல் வந்தது… வேறு யாரும் இல்லை விபு தான் தன் கன்னத்தை ஒரு கையால் தாங்கி பிடித்து இருந்தான்.. “ ராட்சஸி ஏன் டி கடிச்ச ?? உன்னைய நான் கடிக்கவா சொன்னேன் ” என்றான் கோவமாக..

ஆனால் அவளோ நன்றாக சிரித்தாள்.. “ இதுக்கு தான் நான் சொல்லும் போதே கிளம்பி இருக்கலாம்ல.. வாங்க இப்ப “ என்று கூறி அவனது கைகளை பிடித்து இழுத்து சென்றாள்..

“ என்ன நித்யாமா அப்ப இருந்து கூப்பிட்டேன். இவ்வளோ நேரமா ?? ” என்றார் தன் மகனை பார்த்து வேதா.. அவனோ மேல இருந்து கன்னத்தில் கை வைத்தவன் இன்னும் எடுக்க வில்லை..

“ ஐய்யோ !! அத்தை வேற இவர பாக்குறாங்க.. கன்னத்துல வச்ச கைய இவன் எடுக்கவே இல்லையா.. மானத்தை வாங்க போறானே..” என்று புலம்பியபடி நின்று இருந்தாள் நித்யா..

“ என்ன விபு கன்னத்துல கை வச்சு நிக்கிற.. ஏன் டா பல்லு எதா வலிக்கிறதா ?? ” என்று அக்கறையாக கேட்டார் வேதா..

“ ஒன்னும் சொல்லாதே “ என்று பார்வையால் கெஞ்சினாள் நித்யா விபுவிடம்.. ஆனால் அவனோ அவள் பக்கம் கூட திரும்பவில்லை.. “ என்ன விபு நான் கேட்கிறேன்ல.. சொல்லு.. நித்யா சொல்லுமா ஏன் இவன் இப்படி நிக்கிறான்” என்று மகனிடம் ஆரம்பித்து மருமகளிடம் முடித்தார்..

“ அது அது வந்து அத்தை..” என்று அவள் எதுவோ கூற வரும் பொழுது, “ அவ கிட்ட கேட்டா எப்படி மா சொல்லுவா.. எல்லாம் அவனால தான்..” என்றான் பாவமாக முகத்தை வைத்து..

அவருக்கு புரிந்து விட்டது.. இது எதுவோ இருவருக்குள்ளும் நடக்கும் விளையாட்டு என்று.. உடனே “ சரி சரி நேரம் ஆச்சு.. கிளம்புங்க.. அப்பயே தேனம்மா போன் பண்ணிட்டாங்க..” என்று கூறி பேச்சை மாற்றவும் விபு முகம் ஏமாற்றம் கண்டது..

“ ச்சே.. இந்த லேடீஸ் எல்லாம் இப்படித்தான்.. எப்ப எப்படி பேசுவாங்கன்னு தெரியாது..” என்று கூறி கொண்டே முன்னே நடந்தான்.. நித்யாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.. “ வரேன் அத்தை.. தேவி கிட்ட மாமா கிட்ட எல்லாம் சொல்லிடுங்க “ என்று கூறிவிட்டு அவளும் கிளம்பினாள்.. வேதா சிரித்தபடி விடைகொடுத்தார் இருவருக்கும்..    

காரில் இருவரும் பயணித்து கொண்டு இருந்தனர்.. விபு எதுவும் பேசாமல் அமைதியாக வந்தான்.. நித்யாவிற்கு தெரியும் அவன் கோவமாக இருக்கிறான் என்று.. இரண்டு முறை “ விபா “ என்று அழைத்து பார்த்தாள். அவன் முறைத்து விட்டு அமைதியாக இருந்துகொண்டான்..

பொருத்து பொருத்து பார்த்தாள் வண்டி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்று கொண்டு இருப்பதை உணர்ந்தாள். பின் முன்னே பின்னே ஏதாவது வண்டிகள் வருகிறதா என்று பார்த்தாள். எதுவும் இல்லை என்று தெரிந்தபின் மெல்ல விபு உணராத வன்னம் அவனை நெருங்கி அமர்ந்தாள்..

ஆனால் இதை எல்லாம் அவன் கவனித்தும் கவனிக்காதது போல தான் இருந்தான். மனதிற்குள் “ அப்படி வா வழிக்கு.. உனக்கு தான் நான் அமைதியா இருந்தாலே பிடிக்காதே.. இது ஒன்னே போதும் டி மல்லி குட்டி எனக்கு உன்னைய என் வழிக்கு கொண்டு வர “ என்று எண்ணிக்கொண்டு ரோட்டில் கவனம் இருப்பது போல முகத்தை வைத்து கொண்டான்..

ஆனால் நித்யாவோ விபு கவனிக்கவில்லை என்று நினைத்து மெல்ல அவனை நெருங்கி அவன் எதிர்பார்க்காத பொழுது அவனது கன்னத்தில் இதழை பதித்தாள்.. ஆனால் இதை நிஜமாகவே அவன் எதிர் பார்கவில்லை என்று அவனது திகைத்த முகமே காட்டியது..

ஒரு வழியாக தன்னை சமாளித்து வண்டியை ஓரமாக நிறுத்தினான்.. “ ஏய் என்ன டி பண்ண இப்ப ?? ” என்றான் நம்ப முடியாதவனாய்..

அவளோ வேண்டும் என்றே “ நான்.. நான் என்ன பண்ணேன்.. நான் எதுவும் பண்ணலையே “ என்று கைகளை விரித்தாள்.. ஆனால் அவனா நம்புவான்..

“ இல்ல இல்ல நீ இப்ப என்னமோ பண்ண.. ஒரு சின்ன பையன அதுவும் கார்குள்ள வச்சு.. ஓ !! கடவுளே.. நான் மட்டும் கொஞ்சம் சுதரிக்காலனா இந்நேரம் என்ன ஆகிருக்கும்..“ என்று வேண்டும் என்றே அவளை சீண்டினான்..

அவனது பேச்சு ஒரு புறம் அவளுக்கு சிரிப்பை குடுத்தாலும் அவன் எப்பொழுதுமே அவளை சீண்டுவதால் “ ம்ம்ச் நான் தான் எதுவுமே செய்யல சொன்னேன்ல.. அப்புறம் என்ன ?? யாரு சின்ன பையன் ?? நீங்களா ??” என்றாள் சற்றே கோவம் கலந்து..

“ பின்ன இல்லையா?? “ என்றான அவனோ பாவமாக முகத்தை வைத்து..

“ ஆமாமா அப்படிதான் எல்லாம் சொன்னாங்க.. இந்த ரெண்டு நாள்லயே எனக்கு புரிஞ்சிடுச்சு நீங்க எப்படி பட்ட ஆளுன்னு.. பேசி பேசியே வழிக்கு கொண்டு வந்துடுவிங்க..” என்று கூறும் பொழுது அவள் முகம் செம்மையை பூசிகொண்டது..

அவனும் அதை ரசித்தபடி அவள் காதருகில் “ வழிக்கு கொண்டு வந்து என்ன பண்ணுனேன் ?? உன்னைய மாதிரி கார்ல வச்சா டி கிஸ் பண்ணேன்.. இதேது நீ ரூம்ல குடுத்து இருந்தா.. ” என்று இழுத்து கூறியபடி கனவில் மிதக்க ஆரம்பித்தான்..

அவனது எண்ணம் போகும் பேச்சை உணர்ந்தவள் “ போதும் கனவு எல்லாம். அங்க எல்லாம் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. வண்டிய ஸ்டார்ட் பண்ணுங்க..”

“ முடியாது.. நான் பாட்டுக்கு சிவனேன்னு வண்டி ஓட்டி வந்தேன்.. நீ தான் என் மூட மாத்திட்ட.. சோ இப்ப எனக்கு இன்னொரு கிஸ் குடு “ என்றான் உல்லாசமாக விசில் அடித்தபடி..

அவளோ தலையில் அடித்து கொண்டாள்..” அடி வாங்குவிங்க விபா “

“ அடி எல்லாம் வேணாம் செல்லம் உனக்கு கை வலிக்கும்.. வலிக்காம ஒரே ஒரு முத்தம்..” என்று மீண்டும் ஆரம்பித்தான்..

“நோ விபா.. கிளம்பலாம் “ என்று கூறி அவள் முகம் திருப்பும் பொழுது வேகமாக அவளை தன் பக்கம் திருப்பி அவளது இதழ்களை சிறை செய்தான் மல்லியின் விபா..

இப்படி எத்தனை நேரம் கழிந்ததோ யாருக்கு தெரியும்.. விபுவின் அலைபேசி விடாது ஒலிக்கவும் தான் இருவரும் நடப்பிற்கு வந்தனர்..

நித்யவிற்கோ வெட்கம் பிடுங்கி தின்றது.. இதழ்கள் நடுங்க இதயம் படபடக்க கண்கள் மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள்..

“ச்சே யாரு டா இது கரடி மாதிரி “ என்று எண்ணியவன் அசோக்கின் என்னை பார்த்து ஸ்பீக்கரில் போட்டு  “ என்ன டா மாப்ள ?? ” என்றான் நித்யாவை பார்த்தபடி

“ என்ன டா இருபது நிமிசத்துல வர வேண்டிய வீட்டுக்கு முக்கா மணி நேரமாகியும் ரெண்டு பெரும் வரல?? அம்மா கிட்ட கேட்டா அப்பையே கிளம்பிட்டிங்க சொன்னாங்க ?? ” என்று கேட்டான் அசோக்..

அப்பொழுது தான் இருவருமே உணர்ந்தனர் தாங்கள் எத்தனை நேரம் காருக்குள் இப்படியே இருந்து இருக்கிறோம் என்று.. நித்யாவிற்கு மேலும் முகம் சிவந்து விட்டது..

“ இல்ல டா மாப்பிள இன்னும் பத்து நிமிசத்துல அங்க இருப்போம் டா.. சரியான ட்ராபிக் “ என்று கூறி மழுப்பினான் விபு..

“ டேய் டேய் விபு… எனக்கு சின்ன வயசுல மொட்டை போட்டு காது எல்லாம் குத்திடாங்க.. எனக்கு மட்டும் இல்ல டா என் பையனுக்கு கூட காது எல்லாம் குத்தியாச்சு. நீ சொன்ன பதில கேட்டு என் பையன் கூட சிரிக்கிறான் டா..” என்றான் அசோக்..

இப்படியே விட்டால் அடுத்து தன் தலை உருளும் என்று எண்ணிய நித்யா “ அண்ணா இன்னும் பத்து நிமிசத்துல அங்க இருப்போம் “ என்று கூறி முடித்தாள்..

விபுவோ “ மல்லி கொஞ்சம் தலைய நல்ல சரி பண்ணிக்கோ” என்று கூறிவிட்டு   மீண்டும் விசில் அடித்தபடி வண்டியை கிளப்பினான்..

கார் சத்தம் கேட்கவும் அனைவரும் வாசலுக்கு வந்தனர்.. அசோக் “ டேய் மாப்ள உன்னைய பார்த்தா சரியான ட்ராபிக்ல மாட்டி வந்து இருக்க போல.. “ என்று கூறி நக்கல் அடித்தான்..

நித்யாவின் முகத்தில் இருக்கும் செம்மையும், விபுவின் முகத்தில் இருக்கும் சந்தோசமும் தேனு பாட்டிக்கு மனதில் நிறைவை தந்தது..

குமுதா தான் ஆரத்தி எடுத்தாள்.. அசோக் கையில் இருந்த கெளதம் “ அட்ட.. மாமா “ என்று கூறி முதல் நாள் இருவரையும் அனைத்து போல இன்றும் இருவரையும் சேர்த்து அணைத்து கொண்டான்.. இவன் இப்படி செய்வான் என்று யாரும் எதிர் பார்கவில்லை..

அதன் பிறகு விபு அவனை தூக்கி “ டேய் சின்ன மாப்பிள நீ தான் டா எல்லாத்துக்கும் காரணம்.. உன்னைய தான் ஸ்பெஷல்லா கவனிக்கணும் “ என்று கூறி தான் வாங்கி வந்து இருந்த பெரிய மில்கி பாரை நீட்டினான்..

“ ஐ !! “ என்று ஆர்ப்பரித்து விபுவின் கன்னத்தில் தன் சின்ன இதழ் பதித்தான் குட்டி கெளதம்… கெளதம் முத்தம் குடுக்கவும் விபுவின் பார்வை அவனை அறியாமல் நித்யாவின் இதழ்களில் பதிந்தது.. இதை கண்ட அசோக்

“ அம்மா நித்யா.. நீயாவது வீட்டுக்குள்ளே வா  மா.. பசிக்கிது.. நீங்க வராமா இன்னும் இவங்க ரெண்டு பெரும் டிபன் கூட குடுக்கலை..” என்றான் பாவமாக முகத்தை வைத்து..

இதை கேட்டு அங்கே ஒரு சிரிப்பலை பரவியது. அதன் பிறகு அனைவரும் ஒன்றாய் அமர்ந்து சந்தோசமாக மாற்றி மாற்றி கிண்டல் செய்து கேலி பேசி காலை உணவு உண்டனர்..

உண்டுவிட்டு அனைவரும் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்.. விபுவின் முகம் யோசனையில் இருப்பதை பார்த்த மல்லி “ என்ன விஷயம் “ என்பது போல பார்த்தாள்.. அவனோ தேனு பாட்டியை கண் காட்டினான்.. அதை புரிந்துகொண்ட நித்யா “ நீயே பேசு “ என்பது போல தலையை ஆட்டினாள்..

விபு “ தேனு பாட்டி.. நான் ஒன்னு சொல்லுவேன் நீங்க எங்களை தப்பா நினைக்க கூடாது..” என்று பீடிகையுடன் பேச ஆரம்பித்தான்.. அவரோ என்ன கூற போகிறான் என்பது போல பார்த்தார்..

“ அது ஒன்னுமில்ல பாட்டி.. இப்ப நித்யாவும் இங்க இருக்க மாட்டா.. நீங்க எங்க கூடவே அங்க வந்திடுங்களேன். அவளுக்கு மனசு நிம்மதியா இருக்கும். உங்களுக்கும் தனியா இருக்க வேண்டிய அவசியம் இல்லை..” என்றான் மெதுவாக..

இது என்ன புது கதை என்பது போல அசோக்கும் தேனு பாட்டியும் நித்யாவை பார்த்தனர். அவளோ தனக்கும் இதற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பது போல அமர்ந்து இருந்தாள்..

அவளிடம் பேசி எந்த பயனும் இல்லை என்று தெரிந்து “ இல்ல பேராண்டி.. நான் இங்கயே இருந்துக்கிறேன்.. அப்பத்தான் மெஸ் பாக்க எனக்கு வசதியா இருக்கும்.. அதுவும் இல்லாம இது பழகின இடம் “ என்று கூறி தன் மறுப்பை தெரிவித்தார்..

அப்பொழுதும் நித்யா எதுவும் கூறவில்லை. அவளுக்கு தெரியும் தான் ஏதாவது பேசினால் தேனு பாட்டி தன்னை பேசி சரி செய்துவிடுவார்  என்று.

இதை விபுவிடமும் கூறி இருந்தாள். அதனால் விபு “ பாட்டி.. நான் சொல்லுறதை கேளுங்க.. நீங்க அங்க வந்தா எங்க எல்லாருக்கும் ரொம்ப சந்தோசம்.. அதுவும் இல்லாம நீங்க தினமும் மல்லி கூட மெஸ்க்கு வரலாம்.”

“ இங்க இருந்து கொஞ்ச தூரம் தள்ளி ஒரு பிக்னிக் ஸ்பாட் ஆரம்பிக்க போறோம் அங்க இருக்கா ரெஸ்டாரன்ட்டையும் மல்லி தான் பாத்துக்க போறா. சோ அவ வரும் போது நீங்க இங்க வந்துடலாம். போகும் போது திரும்ப அவகூடவே காரில் வீட்டுக்கு திரும்பிடலாம்.. நடுவில் இங்க வீட்டையும் வந்து பாத்துக்கலாம் “ என்றான்

அவன் கூறுவதும் சரியான யோசனை தானே ஆனால் தேனு பாட்டி “ நீ சொல்லுறது எல்லாம் நல்ல யோசனை தான் பேராண்டி.. ஆனா இந்த வீடு ரொம்ப வருசமா வாழ்ந்த வீடு. இத பூட்டு போட்டு வர மனசு கேக்கல.. அதுவும் இல்லாம நாளைக்கு நித்யாக்கு ஒரு நல்லதுன்னா வந்து தங்க போக எல்லாம் பிறந்த வீடுன்னு ஒன்னு இருக்கனும்ல.. இது எல்லா பொண்ணுங்களுக்கும் ரொம்ப அவசியம்” என்றார்

அவர் கூறுவதும் சரிதானே இதற்கு விபு என்ன பதில் கூறுவான்.. இனிமேல் என்ன சொல்ல என்பது போல மல்லியின் முகம் பார்த்தான். அவளுக்கு சிரிப்பு வந்தது.. “ என்னைய ஏன் பாக்குறிங்க..?? உங்க பாட்டி பாடு உங்க பாடு.. நான் இதுல தலையிட மாட்டேன்.. தேனு பாட்டி வந்தா எனக்கும் ரொம்ப சந்தோசம் தான். ஆனா அவங்க சொல்லுறதும் ரொம்ப சரி தான் “ என்று கூறி முடித்துவிட்டாள்..

விபு “ ஆனா பாட்டி இவ கிட்ட தனியா மாட்டணுமே.. அங்க அம்மாவும் இவளுக்கு தான் சப்போர்ட்.. நீங்க வந்தா எனக்கு ஒரு நல்ல பாதுகாப்பு இருக்கும்னு நினைச்சேன்.. ம்ம் நீங்க என்ன இப்படி சொல்றிங்க.. “ என்று முகத்தை சிறு பையன் போல சுணக்கமாக வைத்து கொண்டான்..

“ சரி சரி ரொம்ப கவலை படாத விபு நான் வேணா கொஞ்ச நாளுக்கு அங்க வந்து இருக்கேன்.. ஆனா அதுக்கு அப்புறம் இங்க வந்திடுவேன்.. இதுக்கு சரினா நான் அங்க வரேன்  “ என்று கூறவும் விபு வேகமாக சரி என்று தலையை ஆட்டினான்.

தேனு பாட்டி “ நித்யாமா நீயும் தம்பியும் போயி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க.. நாங்க சமையல் எல்லாம் முடிச்சிட்டு கூப்பிடுறோம்..” என்று கூறவும் நித்யா விபுவை தன் அறைக்கு அழைத்து சென்றாள்..

அங்கே நித்யாவின் சிறு வயது போட்டோகள், அவர்கள் வீட்டு விசேஷங்களின் போது எடுத்த போட்டோகள் என்று நிறைய ஆல்பங்களை விபுவின் முன் கடை பரப்பினாள் நித்யா.. விபுவும் அதை எல்லாம் சந்தோசமாக பார்த்தான்..

பார்த்தது மட்டும் இல்லாமல் அவளை கேலி வேறு செய்தான்.. அவளும் அதற்கு எல்லாம் பதில் கூறியவாறு நான் ஒன்றும் உனக்கு சளைத்தவள் அல்ல என்று நிரூபணம் செய்தாள்..

“உங்களுக்கு தெரியுமா விபா இந்த ஆல்பம் எல்லாம் ரொம்ப வருஷம் கழிச்சு இப்பதான் நானே பார்க்கிறேன்.. இதெல்லாம் தனியா இருக்கும் போது எடுத்து பாக்கணும்னு தோணும்.. ஆனா அவ்வளோ தைரியமே இல்ல எனக்கு..”

“ ஒவ்வொரு தீபாவளி பொங்கல் எல்லாம் இங்க அப்பா அவ்வளோ கிராண்டா கொண்டாட வைப்பாங்க.. அதை எல்லாம் போட்டோவும் எடுபாங்க.. அப்புறம் அவங்க எல்லாம் என்னைய விட்டு போனதுக்கு அப்புறம் நான் எதுவுமே கொண்டாடல.. மனசுக்குள்ள பழைய நெனப்பு எல்லாம் வந்து போட்டு பாடா படுத்தும்..”

“ ஆனா இப்ப உங்க கூட இதை எல்லாம் பார்க்கும் பொழுது ரொம்ப ஹாப்பியா இருக்கு விபா.. தைரியமா இருக்கு.. எனக்கு ஒண்ணுன்னா என் மேல உயிரையே வச்சு இருக்க என் விபா என் கூட இருக்காங்கன்னு மனசுல ஒரு நம்பிக்கை வந்திடுச்சு விபா.முன்ன எல்லாம் யாரு வந்து என்கிட்ட பேசுனாலும் அவங்களை முழுமனசா நம்ப முடியாது.. ஆனா இப்ப எல்லாமே பாசிட்டிவா தெரியுது.. இதுக்கு எல்லாம் நீங்க தான் காரணம் விபா “ என்று கூறி அவனது கன்னத்தில் தன் இதழ் பதித்தாள்..

அவள் பேசுவதை எல்லாம் பொறுமையாக கேட்டு கொண்டு இருந்தவனுக்கு மனதில் “ வாழ்க்கையில ரொம்ப அனுபவிச்சுட்டா.. இவள எந்த சூழ்நிலையிலும் நான் நல்ல சந்தோசமா பாத்துகிடனும். கடவுளே நீங்க தான் எங்களுக்கு எப்பயுமே துணையா இருக்கனும் “ என்று வேண்டிக்கொண்டான்..

நித்யாவை தன் மேல் சாய்த்தபடி “ மல்லி ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ.. நான் உன்னைய உனக்காகவே காதலிச்சு பிடிவாதம் பிடிச்சு, அதுவும் யாருகிட்ட உன்கிட்ட தான், நீயே தான் வேணும்னு கல்யாணம் பண்ணேன்..”

“ சில நேரம் சூழ்நிலை மாறலாம் மல்லி, ஆனா ஒன்னு மட்டும் மனசில வச்சுக்கோ எப்பயுமே நான் உன்னை விட்டு குடுக்க மாட்டேன்.. உனக்கு மனசுல என்ன தோணுதோ அதை அப்படியே என்கிட்டே சொல்லலாம்.. அது யார பத்தி வேணா இருக்கலாம்.. ஏன் என்னைய பத்தி வேணா இருக்கலாம் “

“ நீ பண்ணுறது எனக்கு பிடிக்கலனு என்கிட்ட நீ நேராவே சொல்லலாம்.. ஏன் தெரியுமா மல்லி தப்பி தவறி கூட நான் உன் மனசை கஷ்ட படுத்திட கூடாதுன்னு நினைக்கிறன்.. எனக்கு நீ முக்கியம்.. உன் சிரிப்பு சந்தோசம் நிம்மதி இது எல்லாத்துக்கும் நான் பொறுப்பு மல்லி “

“ அதே மாதிரி நீயும் என்னைய அப்ப அப்ப நல்லா கவனிச்சு என்னைய சந்தோசமா பாத்துக்கணும் “ என்று கிண்டலாக பேசிமுடித்தான்..

“ அதானே பார்த்தேன்.. என்னடா என் புருஷன் இப்படி டச்சிங்கா பேசுறாரேன்னு.. அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில உங்க விசயத்துக்கு வராம இருப்பிங்களா என்ன ?? ” என்று கூறி சிரித்தவளை இமைக்க மறந்து ரசித்தான்..

அவனது பார்வை அவளுக்கு என்ன உணர்த்தியதோ மீண்டும் அவனது தோள்களில் சாய்ந்து கொண்டு “ விபா நான் உங்கட்ட ஒன்னு கேட்கணும் “ என்றாள்..

“ ம்ம் கேளு மல்லி “

“ இல்ல என்னய பார்த்து இப்ப ஒரு மூணு மாசம் இருக்குமா ?? என் மேல இவ்வளோ அன்பு வச்சு இருக்கீங்க.. என் சொந்தம்கிற ஒரே காரணத்துக்காக தேனு பாட்டிய அங்க வந்து தங்க சொன்னிங்க.. ஆனா ஏன் விபா சிந்து வீட்ட விட்டு கிளம்பும் போது மட்டும் எதுவும் பேசாம அமைதியா இருந்திங்க..?? ” என்று கேட்டாள்..

இவள் இப்படி கேட்கவும் விபுவின் முகம் லேசாக கருதத்து.. நித்யாவிற்கோ அன்று நடந்த நிகழ்வுகள் எல்லாம் கண் முன்னே விரிந்தது..

விபுவரதன், நித்யமல்லிகா திருமணம் முடிந்து அன்று மாலையே வரவேற்பும் நல்ல படியாக முடிந்து நடக்க வேண்டிய அணைத்து சாஸ்திர சம்பிரதாயங்கள் அனைத்தும் சீரும் சிறப்புமாக முடிந்து மறுநாள் காலை உணவு வீட்டினர் அனைவரும் சந்தோசமாக உண்டு கொண்டு இருந்தனர்..

ஆனால் சிந்து மட்டும் மௌனமாகவே இருந்தாள்.. அவளுக்கு நித்யாவின் முகத்தில் தெரியும் செம்மையும், சிரிப்பும், வெட்கமும் மனதில் மேலும் மேலும் கோபத்தை மூட்டின..

விபுவோ தன் மனைவியை தவிர வேறு யாரும் அவன் கண்ணும் தெரியவில்லை என்பது போல நித்யாவை விட்டு நகர வில்லை.. தேவி இருவரையும் வழக்கம் போல கிண்டல் செய்து கொண்டு இருந்தாள்.. நித்யாவிற்கும் தேவிக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததால் தோழிகள் இருவரும் மகிழ்ச்சியாக பேசி சிரித்து கொண்டு இருந்தனர்..

வேதா, சந்திரவரதன் இருவர் முகத்திலும் நிம்மதி, ஒரு வித மகிழ்ச்சி பெருமிதம் தெரியவும் இதை எல்லாம் காண காண சிந்துவால் பொறுக்க முடியவில்லை..

அதை விட அவளுக்கு அன்று மாலை என்ன நடந்தது என்று தெரியவில்லை. அந்த மேனேஜர் மற்றும் அவன் மகளுக்கு போன் செய்தால் அனைத்து வைக்க பட்டுள்ளது என்றே வந்தது.. இருவரும் என்ன ஆனார்கள் என்றே அவளுக்கு தெரியவில்லை..

“ எல்லா பிளானும் நல்லா தானே போட்டோம்.. அவங்க எல்லாம் சரி சரின்னு சொல்லி தானே இங்க கிளம்பி வந்தாங்க.. நித்யாவ அவங்க கிட்ட அனுப்பும் போது அவங்க மட்டும் தானே இருந்தாங்க.. ச்சே தப்பு பண்ணிட்டோம் நம்மளும் அவ கூடவே போய் என்ன பேசுறாங்கன்னு பாத்து இருக்கனும் “

“ நாம அங்க இருந்தா நம்ம பேரு வெளிய வரும்னு தானே நான் அங்க போகல.. ஆனா கடைசி நேரத்துல எதுவோ நடந்து இருக்கு.. அதான் எல்லாம் போச்சு.. “ என்று தனக்கு தானே பேசி கொண்டு இருந்தாள்..

அது மட்டும் இல்லாமல் “ இந்த வீட்டுல இருக்கிறவங்க ஏன் இவ்வளோ அமைத்தியா இருக்காங்க.. உண்மை எல்லாம் தெரிஞ்சா இந்நேரம் என்கிட்டே நேரா கேட்டு இருப்பாங்களே.. ஐயோ கடவுளே எனக்கு தலையே வெடிக்கிற மாதிரி இருக்கு “ என்று அமர்ந்து இருந்தாள்..

முதலில் சந்திர வரதன் வேதா தேவி இருவருக்கும் திருமணம் முடியும் வரை எதுவும் தெரியவேண்டாம் என்று கூறி இருந்தார் விபுவிடம்.. அதன் பிறகு அவரே இருவரிடமும் மெல்ல சிந்து பற்றிய உண்மைகளை கூறிவிட்டார்.

வேதாவிற்கு மனம் தாங்க வில்லை.. என்ன இருந்தாலும் வளர்த்த பெண் அல்லவா.. தேவியோ முதலில் நம்ப முடியாமல் தவித்தாலும் அவளுக்குமே மனம் மிகவும் வேதனை பட்டது..

ஆனாலும் இதை எல்லாம் சிந்துவிடம் கேட்டால் அவள் மனம் நோகும் என்று அமைதியாக இருந்தனர்.. எதுவும் தெரியாதது போல, எதுவுமே நடக்காதது போல அனைவரும் சிரித்து பேசி கொண்டு இருந்தனர்..

ஆனால் இது எல்லாம் புரியாத சிந்துவோ அவர்கள் சந்தோசத்தை பார்த்து “ போதும் நிறுத்துங்க எல்லாம் “ என்று கத்தி விட்டாள்.. அனைவருக்குமே இது அதிர்ச்சியாக இருந்தது..

வேதா தான் முதலில் சுதாரித்து “ என்ன சிந்து என்ன மா ??” என்றார் பதற்றமாக..

ஆனால் அவளோ ஆக்ரோசமாக “ என்ன ஆன்ட்டி போதும் எல்லாம் என்மேல பாசமா இருக்கிறது மாதிரி நடிச்சு என்னைய இத்தனை நாள் எல்லாரும் ஏமாத்திகிட்டு இருக்கீங்க.. அதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சிங்களா ?? ” என்று கத்தினாள்..

இதற்கு யாரும் பதில் பேசவில்லை.. விபு எதுவோ கூற வரும் பொழுது அவனது தந்தை வேண்டாம் என்று சைகை செய்துவிட்டார்..

அவளோ “ கொஞ்சம் கூட உங்களுக்கு எல்லாம் மன சாட்சியே இல்ல.. ஆனா வெளிய மட்டும் பெரிய குடும்பத்து தோரணை.. உள்ள அத்தனையும் களவாணி தனம்.. இப்படியே என்னைய ஏமாத்திடலாம்னு நினைச்சுடிங்களா ?? ஆனா நான் சிந்து.. சும்மா விடமாட்டேன்..”

“ என் மேல அன்பு இருக்க மாதிரி நடிச்சு என்னைய படிக்க வைக்க வெளி நாடு அனுப்புற மாதிரி அனுப்பி இங்க என் கம்பெனி பணத்தை வச்சே எல்லாம் நீங்க சம்பாரிச்சு எனக்கு நட்ட கணக்கு காட்டி இருக்கீங்க.. கேட்டா அதெல்லாம் உங்க குடும்ப சொத்துனு சொல்விங்க.. “ என்று அவள் இஷ்டத்திற்கு பேசிக்கொண்டே போகவும் ஒரு எல்லைக்கு மேல் பொறுக்க முடியாமல்

சந்திர வரதன் “ போதும் சிந்து.. நீ பேசுனது எல்லாம் போதும்.. இதோட நிறுத்திக்கோ..  “ என்றார் அழுத்தமாக..

“ இல்லாட்டி என்ன பண்ணுவீங்க ?? என்னைய வெளிய அனுப்புவிங்க அவ்வளோதானே.. தாராளம அனுப்புங்க.. ஆனா ஒன்னு வெளிய போனாலும் நான் உங்க யாரையும் சும்மா விட மாட்டேன்.. என்கிட்ட எல்லா ஆதாரமும் இருக்கு “ என்று கத்தினாள்..

நடப்பதை எல்லாம் நித்யா அமைதியாக பார்த்துகொண்டு இருந்தாள்.. அவளது கைகள் மட்டும் விபுவின் கரங்களில் இருந்தது..

“ என்ன ஆதாரம்.. அது எல்லாம் உண்மைன்னு உன்னால நிருபிக்கவே முடியாது சிந்து.. ஏன்னா அது எல்லாம் பொய்.. உண்மையான ஆதாரம் எல்லாம் என்கிட்ட இருக்கும் போது எதைவச்சு நீ  நிருபணம் செய்வ ?? ” என்று பதிலுக்கு கேட்டவர் ஒரு பையிலை எடுத்து அவள் முன் நீட்டினார்..

“ இந்தா இதை பாரு இது உன் அப்பா என்கிட்டே கம்பனியை ஒப்படைக்கும் போது இருந்து நேத்து வரைக்கும் அதுல என்ன நடந்ததுனு எல்லாமே இருக்கும்.. பாரு நல்லா படிச்சு பாரு “ என்று கூறி அவளிடம் குடுத்தார்..

அதில் இருந்ததை ஒவ்வொரு பக்கமாக பார்க்க பார்க்க சிந்துவின் முகம் மாறியது.. எத்தனை வருடமாக இப்படி எல்லாம் சரியாக கணக்கு வைத்து இருக்கிறார்கள்.. இது எல்லாம் எப்படி பொய்யாக இருக்க முடியும் என்று எண்ணியவள் அன்று எந்த மேனேஜர் காட்டிய ஆதரங்களை எடுத்து வந்து சரி பார்த்தாள்.. அதில் இருந்த அத்தனையும் பொய் என்று புரிந்தது..  

தான் தவறு செய்துவிட்டோமோ என்று உணர தொடங்கினாள்.. அழுகை முட்டியது.. “அந்த ஆள் அவன் அந்த பாழாய் போன மேனேஜர் எத்தனை மோசம் செஞ்சு இருக்கான்..    இப்போ எனக்கு நல்லது செய்யுறது போல வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டானே.. பாவி நான் உனக்கு என்ன டா பாவம் பண்ணேன்.. “

“ இந்த வீட்டுல நானும் ஒருத்தியா தானே இருந்தேன். கடைசியில் எல்லாம் போச்சு.. இனிமே எப்படி இவங்க கூட எல்லாம் நான் முன்ன மாதிரி பேச முடியும். கடவுளே நான் இவங்களுக்கு போயி துரோகம் பண்ண இருந்தேனே “ என்று மனம் வருந்தினாள்..

வந்த அழுகையை அடக்கி கொண்டு சந்திர வரதனை பார்த்தாள்.

“ என்ன சிந்து இப்ப புரியுதா எல்லாம்.. நீ அந்த பழைய மேனேஜர் கூட முதல் நாள் பேசுன அன்னைக்கே எனக்கு தகவல் வந்திடிச்சு.. நீயும் புத்தியுள்ள பொண்ணுன்னு தான் நானும் உன்கிட்ட எதுவும் கேட்கலை.. ஆனா நீ இவ்வளோ சீக்கிரம் அவனை நம்பி உன் வாழ்க்கையவே கெடுத்துப்பனு நான் கொஞ்சம் கூட எதிர் பார்களை “ என்று கூறியவர்

“ இந்தா இது உன் கம்பெனி ஓட பையில்.. இனிமேல் அங்க நீ என்ன செய்யணுமோ செய்.. நாங்க எதிலும் தலையிட மாட்டோம்.. இனிமே எல்லாமே உன் விருப்பம் தான்.. இல்ல இப்பையும் எங்க மேல தப்பு இருக்குனு நீ நினைச்சா எல்லாம் சட்ட படி நடக்கட்டும்..” என்று கூறி அமர்ந்துவிட்டார்..

சிந்துவிற்கோ மனம் மிகவும் வேதனை பட்டது.. வேகமாக ஓடி சென்று விபுவின் அப்பாவையும் அம்மாவையும் கட்டிகொண்டாள்.. “ என்னைய மன்னிச்சுடுங்க அங்கிள்.. ஆன்ட்டி நீங்களும் தான்.. ஏன் எல்லாரும் தான்.. நான் என் முட்டாள் தனத்தால பெரிய தப்பு பண்ண இருந்தேன் .. நல்ல வேலை அது நடக்கலை..”

“ ஒருவேளை அப்படி மட்டும் நடத்தா அய்யோ நான் குற்ற உணர்சியிலேயே செத்து போயி இருப்பேன்.. ஐம் ரியலி சாரி “ என்று கூறி கதறினாள் ..

வேதா அன்பாக “ போதும் சிந்து.. அழுகாத.. நீ மட்டும் இத்தனை நாள் என்ன நிம்மதியாவா இருந்திருக்க போற.. இல்லையே.. இதேது தேவி ஓர் தப்பு செஞ்சா நாங்க மன்னிக்காம இருந்திடுவோமா என்ன ?? நீ எப்பையும் எங்க பொண்ணு தான் டா “ என்று ஆறுதல் கூறினார்..

என்ன மாதரியான ஒரு பாசத்தை,  அன்பான குடும்பத்தை புரிந்துகொள்ளாமல் நடந்துவிட்டோம் என்று எண்ணி வெட்கினாள். அதன் பிறகு ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்டாள்.. விபு தேவி எல்லாம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை..

அதன் பிறகு என்ன நினைத்தாலோ நேராக தன் அறைக்கு சென்று ஒரு பத்து நிமிடம் கழித்து வந்தாள் வெளியே கையில் பையோடு..

“ அங்கிள் ஆன்ட்டி.. உங்க பெரிய மனசுக்கு என்னைய மன்னிசுட்டிங்க.. ஆனா எனக்கு என்னைய நினைச்சாலே ரொம்ப கேவலமா இருக்கு.. மனசுல இப்படி ஒரு குற்ற உணர்வு இருக்கும் போது நான் இங்க இருக்கிறது சரி இல்லை..

“ ப்ளீஸ் நான் என் மானசு கொஞ்சம் சரி ஆகிற வரைக்கும் வெளிய இருக்கேன்.. யாரும் வேணாம் மட்டும் சொல்லாதிங்க. கொஞ்ச நாள் என் மனசும் கொஞ்சம் சரியாகட்டும்.. இங்க இருந்தா நான்.. நான் “ என்று அதற்கு மேல் கூற முடியாமல் தவித்தாள்..

நித்யாவோ விபு ஏதாவது கூறுவான் என்று நினைத்து அவன் முகம் பார்த்தாள் ஆனால் அவனோ அமைதியாக இருந்தான்.. தேவியின் முகத்தில் இன்னும் கோவம் அப்படியே இருந்தது.. வேதாவோ பாவமாக தன் கணவரை பார்த்தார்..

நித்யா “ என்ன சிந்து நீ சொல்லுற.. இங்க பாரு நாங்க யாரும் உன்னைய தப்பா எல்லாம் நினைக்கல. சோ நீ எப்பயும் போல இங்கயே இரேன்.. ப்ளீஸ் “ என்றாள் அவளது கைகளை பிடித்து..

அவளை பார்த்து ஒரு வேற்று புன்னகை சிந்திய சிந்து “ இல்ல நித்யா.. நான் உன் வாழ்க்கையவே கெடுக்க இருந்தேன்.. அது சின்ன விஷயமா என்ன.. ப்ளீஸ் கொஞ்சம் புரிஞ்சுக்கோ.. எனக்கு ரொம்ப ஒரு மாதிரி இருக்கு சொல்ல கூட தெரியல” என்று அவள் கூறவும்

விபு “ மல்லி விடு சிந்து அவ மனசுக்கு எது சரின்னு படுதோ அப்படி செய்யட்டும்.. கொஞ்சம் உலக அனுபவமும் கிடைக்கும்.. “ என்று கூறி நித்யாவை அமைதியாக இருக்க சொன்னான்.. சிந்து அவனை ஒரு நன்றி கலந்த பார்வை பார்த்தாள்..

அதன் பின் சந்திர வரதனிடம் சென்று “ அங்கிள் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவிங்களா ?? ” என்று கேட்டாள்.. “ என்ன மா சொல்லு ?? ” என்றார் அவர்.

“ இந்த கம்பனியை நீங்களே எடுத்துகோங்க அங்கிள்.. எனக்கு எதுவும் வேண்டாம்.. உங்க எல்லாரோட நம்பிக்கையும் பாசமும் மட்டும் போதும்  “  என்றாள் அழுதபடி.. ஆனால் அவரோ மெல்ல சிரித்து “ அது எப்படி சிந்துமா இது உன் அப்பாக்கு சொந்தமானது.. உனக்கு தான் சேரனும்.. அதெல்லாம் வேண்டாம்.. உன் மனசு எப்ப தெளிவடையுதோ அப்ப நீ உன் பொறுப்புகளை ஏத்துக்கலாம்” என்று கண்டிப்பாக கூறிவிட்டார்..

அவர் கூறுவதும் சரி தானே.. சிறிது யோசனை செய்துவிட்டு “ ம்ம் சரி அங்கிள்.. இனிமே நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்பேன்.. கண்டிப்பா நான் திரும்பி வரும் பொழுது நீங்க எதிர் பாக்குற எல்லா தகுதியும் என்கிட்டே இருக்கும்.. ஆன்ட்டி ஏன் இவ்வளோ வருத்த படுறிங்க.. நான் இங்க அடிகடி வருவேன் சரியா..  “ என்று கூறி அனைவரிடமும் விடை பெற்று சென்று விட்டாள்..

இது தான் அன்று நடந்தது.. இப்படி ஒரு விஷயம் நடந்து விட கூடாது என்று தான் அனைத்தும் தெரிந்தும் விபுவும் அவன் தந்தையும் அமைதியாக இருந்ததே.. ஆனால் சிந்துவாக எல்லாம் இழுத்து போட்டு இப்பொழுது அவள் வெளியேறும் சூழ்நிலையும் வந்துவிட்டது.

“ ஹே மல்லி என்ன நான் பேசிக்கிட்டு இருக்கேன்.. நீ பாட்டுக்கு என்னவோ அமைதியா இருக்க ?? ” என்று அவளை உலுக்கவும் தான் நடப்பிற்க்கு வந்தாள் நித்யா..

“ ஹா !! என்ன விபு.. அது.. என்னைய அறியாம அன்னைக்கு நடந்தது எல்லாம் நினைவு வந்துச்சு அதான்” என்றாள் மலங்க மலங்க முழித்து..

“ சரியா போச்சு போ !! அப்போ நான் இவ்வளோ நேரம் பேசுனது எதுவும் நீ கேட்கலையா ?? ”

“ம்ம்ஹும் “ என்று தலை ஆட்டினாள்..

“ அடிப்பாவி இது தெரியாம நான் வேற பக்கம் பக்கமா பேசிட்டேனே.. ஹ்ம்ம் பரவாயில்ல நல்ல கேளு மறுபடியும் சொல்லுறேன்..” என்று பேச ஆரம்பித்தான்..

“ சின்ன வயசுல இருந்தே நானு சிந்து தேவி எல்லாம் ஒண்ணா தான் வளர்ந்தோம் மல்லி.. ஆனா அப்ப எல்லாம் நல்லா தான் இருந்தா.. படிக்க வெளிநாடு போய்ட்டு வந்தா அதுக்கு அப்புறம் தான் மாறிட்டா..”

“ அவ மனசுல தேவையில்லாத சிந்தனை எல்லாம் தோன ஆரம்பிச்சிடுச்சு. ஆனா நல்ல வேலை எந்த தப்பும் நடக்கலை.. அவளும் தன்னோட முட்டாள் தனத்தை எல்லாம் புரிஞ்சுகிட்டா.. இப்ப அவளுக்குன்னு ஒரு ஸ்பேஸ் தேவை படுது. அது அவளோட உரிமை. சோ நம்ம அதுக்கு மதிப்பு குடுத்து தான் ஆகனும்..”

“ அதுக்காக அவளை அப்படியே விட்டுடுவோம்னு அர்த்தம் இல்லை.. எப்பையுமே அவளையும் தேவியையும் வேற வேறயா பார்த்தது இல்லை இனிமேலும் அப்படித்தான்..” என்றான் விபு..

“ ஆனா விபா .. நடந்தது எல்லாம் யோசனை பண்ணி பார்த்தா இதுக்கு எல்லாம் ஏதோ ஒரு வகையில நானும் காரணமோன்னு தோணுது “ என்றாள் வருத்தம் நிறைந்த குரலில்..

“ அட என்ன மல்லி சொல்லுற.. இதுக்கு நீ எப்படி காரணம் ஆக முடியும் சொல்லு.. அவ தப்பு தப்பா எல்லாம் புரிஞ்சு எல்லாமே தப்பா பிளான் பண்ணி கடைசியில் எல்லாம் சொதப்புனதுக்கு நீ எப்படி காரணம் ஆக முடியும்.. ஆனா ஒன்னு மட்டும் மல்லி அன்னைக்கு அவங்க எல்லாம் வந்து பேசும் பொழுது நீ எப்படி ரியாக்ட் செய்வியோன்னு நானும் அப்பாவும் ரொம்ப டென்சன்ல இருந்தோம்.. ஆனா நீ எவ்வளோ அழகா எல்லாம் ஹான்டில் பண்ண “ என்று கூறி அவளது நெற்றியில் இதழ்கள் ஒற்றினான்..

நித்யாவும் அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்..” இப்பதான் உங்களை பார்த்த மாதிரி இருக்கு அதுக்குள்ள காதலிச்சு கல்யாணம் நடந்து “ என்று கூறும் பொழுதே

“ ஹலோ ஹலோ மேடம்.. இன்னும் நம்ம ஒழுங்காவே காதலிக்கலை.. எங்க உங்கிட்ட லவ்வுக்கு ஓகே வாங்கவே போதும் போதும்னு ஆயுடுச்சு அடுத்து ஒரு வாரத்துல கல்யாணம்.. சோ இனிமே தான் நாம ஒழுங்கா லவ் பண்ண ஆரம்பிக்கணும் “ என்று கூறியபடியே அவளை கைகளில் ஏந்தினான்..

“ ஹே விபா என்ன இது கீழ இறக்குங்க.. ப்ளீஸ்.. பட்டபகல்ல என்ன விபா இது “ என்று அவள் தன்னுடைய பல்லவியை ஆரம்பித்தாள்..

ஆனால் இது எதுவுமே தன் காதில் விழவில்லை என்பது போல அவளை மெல்ல கட்டிலில் சாய்த்து தன் கைகளுக்கும் சிறை செய்து மல்லி நான் ஒன்னு சொல்லட்டுமா என்றான் மென்மையாக..

“ம்ம் “

“ என் வாழ்கை முழுதும் இந்த மல்லியோட தான்.. என் மனசு முழுக்க இந்த மல்லியோட வாசம் தான்.. யப்பா ஆளையே மயக்குற அளவுக்கு வாசம் “ என்று கூறி அவனது காதலை உணர்த்தினான் விபுவரதன்..

                   மனம் – மயங்கியது..                                                                   

 

Advertisement