Advertisement

மனம் – 15

 “ ஏய் தேவி !!!! என்ன தான் பண்ணுற ?? எங்க போனிங்க ரெண்டு பெரும் ?? சிந்து நீயாவது கண்ணு முன்னாடி வா.. எல்லாம் சரியா எடுத்து வச்சு இருக்கான்னு செக் பண்ணனும் “ என்று அங்கும் இங்கும் நடந்து கொண்டே வேலை ஆட்களுக்கு உத்தரவும் பிரபித்துக்கொண்டும் தங்கள் வீட்டு பெண்களை அழைத்து கொண்டு இருந்தார் வேதா..

கிட்டத்தட்ட பத்து நிமிடங்களாக சிந்துவையும் தேவியையும் மாற்றி மாற்றி அழைத்து பார்த்தார் அவர்களின் அறை கதவு மட்டும் திறப்பதாய் இல்லை..

“விபு.. விபு நீ உன் டிரஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டியா ?? பாட்டு வேட்டி சட்டையில மஞ்சள் தடவி இருக்கா பாரு “ என்று கூறிய படியே தன் மகனின் அறைக்கு சென்றார்..

அவனோ “ அம்மா அம்மா கொஞ்சம் ரிலாக்ஸ்.. நான் எல்லாம் பேக் பண்ணிட்டேன்.. கொஞ்சம் உக்காருங்க.. இந்தாங்க தண்ணி குடிங்க “ என்று தண்ணீரை நீட்டினான்..

மகனை வாஞ்சையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு “ டேய் விபு கிளம்புற நேரம் ஆச்சு டா.. உங்க அத்தை, பெரியப்பா, சின்ன தாத்தா குடும்பம் எல்லாம் இந்நேரம் அங்க போயி இருபாங்க.. உங்க அப்பா ஒருத்தரா அங்க என்னடா பண்ணுவாரு ?? வைபவ் கிட்ட கேட்டியா எல்லா ரூம்மும் சுத்தமா தானே இருக்கும் “ என்று தன் மகனிடம் சற்றே பதற்றமாக கேட்டார்..

“ அம்மா.. அம்மா.. இப்பதானே சொன்னேன். கொஞ்சம் ரிலாக்ஸ்ன்னு.. நேத்து சாயங்காலமே நான் போயி எல்லாம் பார்த்துட்டு வந்துட்டேன்.. கல்யாண் அங்க நாலு ஆளுங்களை வேலைக்கு போட்டு இருக்கான்.. தங்க வரவங்களுக்கு உதவி செய்ய..”

“ எல்லாம் சுத்தம் பண்ணி கிளீனா தான் இருக்கு மா.. இப்பதான் அப்பா போன் பண்ணாங்க எல்லாரும் வந்துட்டாங்கலாம். இப்பதான் எல்லாருக்கும் சாப்பாடு வாங்கி வந்து எல்லாம் கோவில் மண்டபத்துல சாப்பிடிட்டு இருகாங்கலாம்..”

“ நீங்க எதுவும் டென்ஷன் இல்லாம இருங்க.. அங்க வைபவ் இல்ல கல்யாண் யாராவது ஒருத்தர் அப்பா கூட இருப்பாங்க.. நல்ல நேரம் ஆரம்பிக்கவும் நாமலும் கிளம்பிடலாம் “ என்று கூறி தன தாயை ஆறுதல் படுத்தினான் புது மாப்பிள்ளை..

“ சரி டா விபு.. இப்பதான் நித்யாவும் போன் பண்ணா?? அங்கயும் எல்லாரும் தயாராம். எத்தனை மணிக்கு நம்ம கிளம்புரோம்னு சொன்னா அதுக்கு ஏத்த மாதிரி கிளம்பிடுவோம்னு சொன்னா.. சரி நீ டிரைவர் கிட்ட சொல்லு.. நான் போய் இந்த ரெண்டு வாளுங்களையும் கிளப்பி இழுத்துகிட்டு வரேன்..” என்று கூறியபடியே சென்றவரை இழுத்து

“ என்ன மா மல்லி போன் பண்ணாலா ?? நான் போட்டதுக்கு எடுக்கவே இல்ல மா.. பாத்திங்களா எப்ப பாரு நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து என்னைய டீல்ல விடுறிங்க “ என்று சிறு குழந்தை போல முகம் சிணுங்கினான்..

“அட போடா போக்கிரி .. உனக்கு எப்ப பாரு எங்களை கிண்டல் பண்ணுறதே வேலை.. சரி சரி விபு அங்க ஒரு வீடு மட்டும் ஏற்பாடு பண்ண சொன்னேனே டா “ என்றார் திடீரென்று நினைவு வந்தவராக..

“ ஐயோ அம்மா… எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு,, மொத்தம் பதினஞ்சு பேரு தங்குற மாதிரி வீடு பாத்து இருக்கு.. தேனு பாட்டி பூபதி தாத்தா எல்லாம் முன்னமே அங்க போயி எல்லாம் செட் பண்ணிட்டாங்க.. சோ இப்ப நம்ம மட்டும் தான் கிளம்பனும்.. உங்க மருமக கிட்ட நீங்களே சொல்லிடுங்க “ என்று கூறிவிட்டு வேகமாக முன்னே நடந்து சென்று விட்டான்..

“ கல்யாணம் கூட முடிஞ்சிடும் போல இதுங்க ரெண்டும் என்ன பண்ணுதுங்க.. ஏய் தேவி ,சிந்து திங்க்ஸ் எல்லாம் எடுத்துகிட்டு கீழ வாங்க. இல்ல வீட பூட்டிட்டு கிளம்பிடுவோம் “ என்று கூறவும் தான் இருவரும் இறங்கி வந்தனர்..

“ யப்பா… அம்மா ஏன் மா இப்படி அவசர படுறிங்க ?? நாளைக்கு காலை ஏழு மணிக்கு தான் முகுர்த்தம்.. ஆனா இப்ப சாயங்காலம் ஆறு மணிக்கே அங்க போயி நம்ம என்ன செய்ய போறம் ?? ஆனா ஒன்னு நல்ல வேலை ஒரு வீடு ரெடி பண்ணிங்க.. “ என்று கூறி கொண்டே தன் பையை இழுத்து கொண்டு வந்தாள்..

சிந்துவோ அமைதியாக சிரித்த முகமாக இறங்கி வந்தாள்.. அவளை பார்த்த வேதா “ சிந்து நீ மறக்காம எல்லாம் எடுத்து வசுகிட்டையா ?? “ என்று கேட்கவும் அவள் “ நான் எதையுமே மறக்கலை ஆன்ட்டி “ என்றாள்..

விபு வந்து வண்டி தயார் என்று கூறவும் வீட்டில விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்துவிட்டு அனைவரும் கிளம்பினர். வேதா நித்யாவிற்கு போன் செய்து கூறிவிட்டார்..

சிந்து தான் ஏதோ சிந்தனையில் இருந்தாள்.. அவள் மனம் எல்லாம் ஒரே பதற்றமாக இருந்தது.. “ எல்லாமே சரியா நடக்கனும் ஆண்டவா.. என்னைய ஏமாத்தனும் நினைச்சவங்களுக்கு எல்லாம் ஒரு பாடம் கத்துகுடுத்தே தான் ஆகனும் “ என்று எண்ணிக்கொண்டு வந்தாள்..

இத்தனை பரபரப்பு எல்லாம் வேறு எதற்கும் இல்லை.. விபுவரதன் நித்யாமல்லிகா திருமணம் விபுவின் குல சாமி கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.. விடிந்தால் காலை ஏழு மணிக்கு முகுர்த்தம்.. அதற்கு தான் அனைவரும் முதல் நாள் மாலையே கிளம்பி செல்கின்றனர்.

சொந்த பந்தத்திற்கு எல்லாம் அங்கேயே ரூம் ஏற்பாடு செய்து இருந்தனர்.. விபு மற்றும் நித்யாவின் குடும்பம் தங்குவதற்கு மட்டும் கோவில் பக்கத்திலேயே ஒரு வீடு ஏற்பாடு செய்து இருந்தனர்..

நல்ல நேரம் முடிவதற்குள் கிளம்ப வேண்டும் என்று தான் வேதா இத்தனை அவசரம் செய்து இதோ இப்பொழுது அனைவரையும் கிளப்பிகொண்டு சென்று கொண்டு இருகின்றனர்..

“ தேவி நித்யாக்கு போன் போட்டு எங்கன வந்துட்டு இருகாங்கனு கேளு ?? சீக்கிரமே அங்க போயிட்டா கோவில்ல போயி முதல்ல தீபம் போட்டுடலாம் “ என்று வேதா கூறவும்

“ மத்த கதை எல்லாம் உங்க மருமக கிட்ட பேசுறிங்க.. இதையும் நீங்களே கேட்கவேண்டியது தானே “ என்று தன் தாயை கடிந்து கொண்டே தனக்கு அண்ணியாய் வரப்போகிரவளுக்கு அழைப்பு விடுத்தாள்..

இதை எல்லாம் காண காண சிந்துவிற்கு கோவம் தாங்க முடியவில்லை. தன் அலைபேசியில் இருந்து அந்த மேனேஜர் மகளுக்கு குறுந்தகவல் அனுப்பினாள்.. அவளிடம் இருந்தும் சிந்துவிற்கு சாதகமாக பதில் வரவே மனம் சற்று நிம்மதி உற்றது..

“ஊப்.. “ என்று பெரு மூச்சு விட்டு அப்பொழுது தான் வெளியே கவனித்தாள் அவர்கள் போகும் காருக்கு பாதுகாப்பாக முன்னே பின்னே என்று இரண்டு கார்கள் வந்து கொண்டு இருந்தன..

இதை கண்டதும் அவள் மனம் மீண்டும் குழம்பியது.. ஆனால் என்ன கேட்க வேண்டும் என்றாலும் யாரிடம் கேட்பது.. அதனால் தன்னுடைய நேரம் வரும் என்று அமைதியாக காத்திருந்தாள்..

இதெல்லாம் இந்த பக்கம் நடந்து கொண்டு இருக்க அங்கே நித்யாவின் வீட்டில் அசோக், குமுதா அனைத்தும் சரியாக இருகிறதா என்று பார்த்து கொண்டு இருந்தனர்.. கெளதம் என்னவோ நல்ல பிள்ளைபோல் உறங்கி கொண்டு இருந்தான்..

நித்யா ஏனோ இரண்டு நாட்களாக அமைதியாகவே இருந்தாள்.. யாரிடமும் மிகவும் எதுவும் பேசவில்லை.. எதாவது கேட்டால் மட்டும் பதில் கூறுவது இல்லையெனில் தன் அறைக்குள்ளே இருப்பது என்று இருந்தாள்.. அவள் மனம் ஏனோ மிகவும் பதற்றமாக இருந்தது..

விபு பல முறை அவளுக்கு எடுத்து கூறிவிட்டான் ஆனால் “ ப்ளீஸ் விபா கல்யாணம் முடியுற வரைக்கும் எனக்கு கொஞ்சம் இப்படி தான் இருக்கும் புரிஞ்சுகோங்க..” என்று கூறி அவனது வாயை அடைத்து விட்டாள்..

“நித்யா கிளம்புற நேரம் ஆச்சு.. இப்பதானே விபு அம்மா போன் பண்ணாங்க.. இன்னும் நகரமா இருக்க ?? ” என்று கேட்டான் அசோக்..

அவனை பார்த்து “ அண்ணா “ என்று பேச அரம்பித்தவளுக்கு அதற்கு மேல் என்ன கூறுவது என்று தெரியவில்லை.. ஆனால் அவள் எதுவும் பேசவில்லை என்றாலும் அவளது மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்துகொண்ட அசோக்

“ நித்யாமா  நீ எதுவும் பயம் இல்லாம சந்தோசமா வா டா.. நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காது. நாங்க எல்லாம் இருக்கோமே. முன்ன நடந்த ஒரு தப்பு இப்ப நடக்காது.. நீ வேணா பாரு விபு கூட சேர்ந்து நீ ரொம்ப வருசத்துக்கு சந்தோசமா வாழ போற.. அதை நினைச்சு இப்ப இருந்தே நீ சந்தோசமா இரு டா “ என்று கூறி அவளது தலையை வாஞ்சையாய் தடவி குடுத்தான்..

“ ஆகா பாசமலர் எல்லாம் போதும்.. கிளம்ப வேண்டாமா.. நித்யா இங்க பாரு அவங்க எல்லாம் கிளம்பிட்டாங்க.. வா நாமலும் சாமி கும்பிட்டு கிளம்பலாம் “ என்று குமுதா கூறவும் அமைதியாக எழுந்து பூஜை அறைக்கு சென்றாள் நித்யா..

அவளை பார்த்த குமுதா “ ஏங்க அவளே டல்லா இருக்கா அவகிட்ட போயி முன்ன நடந்தது பின்ன நடந்ததுன்னு பேசிட்டு இருக்கீங்க.. கிளம்புற வழிய பாருங்க “ என்று அரட்டிவிட்டு சென்றாள்..

சாமி படத்திற்கு முன் விளக்கு ஏற்றியவள் அதன் பிறகு தன் பெற்றோர்கள் படத்திற்கு முன்னும் விளக்கு ஏற்றி மனமுறுக வேண்டினாள்..

“ அப்பா அம்மா… எனக்கு நீங்க தான் தெய்வம்.. எனக்குனு ஒரு புது வாழ்கை அமைய போது.. நான் மனசுல விரும்பின வாழ்க்கை.. ஆனாலும் இதை என்னால சந்தோசமா ஏத்துக்க முடியல.. காரணம் என்னனு உங்களுக்கே தெரியும்..”

“ இந்த வாழ்கை ஆவது எனக்கு நிலைச்சு நிக்கணும் அம்மா. அப்பா விபாவுக்கு எந்த ஆபத்தும் வராம நீங்க தான் அவருக்கு துணையா இருக்கனும்.. எனக்கு என்ன வந்தாலும் நான் தாங்கிப்பேன்.. ஆனா என் விபாக்கு ஒண்ணுன்னா என்னால தாங்கிக்கவே முடியாது.. அதுக்கு அப்புறம் நான் இருக்கவும் மாட்டேன்..”

“ நீங்க இருந்து நடத்தி வைக்கவேண்டிய கல்யாணம்.. ஆனா எனக்கு அவ்வளோ குடுப்பினை இல்ல.. பரவாயில்ல.. அம்மா நீங்க எப்பையும்  சொல்விங்க நம்ம எங்க போனாலும் எங்க இருந்தாலும் அங்க நம்ம நல்ல பெயர் வாங்கனும்னு.”

“ கண்டிப்பா விபா குடும்பத்துல நான் நல்ல பெயர் தான் வாங்குவேன்.. ஒரு நல்ல மருமகளா, நல்ல மனைவியா என் கடமையை நான் முழு மனசோட நான் நிறைவேத்துவேன்.. ஆனா இதுக்கு எல்லாம் நீங்க தான் எனக்கு துணையா இருக்கனும்” என்று வேண்டிவிட்டு வழிந்த கண்ணீரை துடைத்தபடி புன்னகையை இதழில் பூசிக்கொண்டு கிளம்பினாள் நித்யா..

விபுவின் காரும் நித்யாவின் காரும் ஒரே நேரத்தில் அந்த வீட்டின் முன் வந்து நின்றது.. வீட்டிற்கு முன் பந்தல் போட்டு வாழை மரம் கட்டி அலங்கார விளக்குகள் எல்லாம் சரம் சரமாக தொங்க விடப்பட்டு இருந்தது..

வைபவ், சந்திரவரதன், தேனு பாட்டி, பூபதி தாத்தா எல்லாம் இவர்களுக்காக வெளியே காத்து இருந்தனர்..

நித்யா அணைத்து ஏற்பாடுகளையும் கண்கள் வழியாக மனதில் நிறப்பிக் கொண்டாள்.. விபு அவளையே பார்த்தபடி நின்று இருந்தான்.. அங்கே இருந்த உறவு பெண் ஒருவர் “ மாப்பிள்ளையும் பொன்னும் ஒண்ணா நில்லுங்க “ என்று கூறி ஆரத்தி கரைத்தார்.. அதன் பின் அனைவரும் உள்ளே சென்றனர்..

உள்ளே சென்றதுமே விபு அசோக்கையும் அழைத்து கொண்டு தன் தந்தையுடன் தனியே ஒரு அறைக்கு சென்றுவிட்டான்.. சிந்து வேகமாக தன் அலைபேசியை எடுத்துக்கொண்டு தனியே சென்று விட்டாள்..

தேனு பாட்டி அங்கே இருந்த வேலை ஆட்களை வேலை வாங்கி கொண்டு இருந்தார்.. வேதாவும் அவருடன் சென்று சேர்ந்து கொண்டார்.. நித்யாவை அழைத்துக்கொண்டு தேவி தங்களுக்கு ஒதுக்கபட்ட அறையிக்கு சென்றாள்..

தனியே சென்ற சிந்துவோ யாருக்கோ அலைபேசியில் அழைத்தாள் “ ஹலோ!! நான் சிந்து பேசுறேன்.. ம்ம் நாங்க எல்லாம் வந்தாச்சு.. நீங்க எப்ப வரிங்க ?? சரி சரி இன்னும் ஒரு அரை மணி நேரத்துல நீங்க வந்தா நல்லா இருக்கும்.. சரி.. நான் சொன்னது எல்லாம் நியாபகம் இருக்குள்ள.. என் வாழ்கையே உங்க கிட்ட தான் இருக்கு.. “

“ சரி அங்கேயே கார்ல வெயிட் பண்ணுங்க.. நான் சொன்ன அப்புறம் வாங்க.. ரொம்ப நன்றி” என்று கூறிவிட்டு சுற்றும் முற்றும் யாரும் பார்கிறார்களா என்று கவனித்துவிட்டு உள்ளே சென்றாள்..

அங்கே தேவி நித்யாவுடன் கதை அளந்து கொண்டு இருந்தாள்..” நித்தி நான் கொஞ்சம் கூட எதிர்பார்களை தெரியுமா எனக்கு நீ அண்ணியா வருவன்னு.. காலேஜ் டைம்ல யாரவது இவதான் உனக்கு அண்ணின்னு சொல்லி இருந்தா நானே தலை தெறிக்க ஓடியிருப்பேன்.. எங்களை எல்லாம் எப்படி கலாய்ப்ப நீ “ என்று கூறி சிரித்து கொண்டு இருந்தாள்..

உள்ளே வந்த குமுதா அங்கே கௌதமை படுக்க போட்டு விட்டு தாங்கள் கொண்டு வந்த பொருட்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று மீண்டும் ஒருமுறை சரி பார்த்து கொண்டு இருந்தாள்..

அவளை கை பிடித்து இழுத்த தேவி “ அண்ணி இங்க வாங்க நானும் அப்ப இருந்து பாக்குறேன் வேலையே பார்த்துகிட்டு இருக்கீங்க.. கொஞ்சம் எங்க கூடவும் உக்காந்து அரட்டை அடிங்க.. நித்யா தான் வாயே திறக்க மாற்றா.. ஒருவேளை எங்க அண்ணன் பேசுனா தான் பதில் பேசுவாளோ “ என்று கேட்டுவிட்டு

“ ஆமா இந்த சிந்து எங்க ?? அண்ணி நீங்க அவளை பாத்திங்களா ?? ” என்று குமுதவிடம் கேட்க்க அவள் இல்லை என்று தலை அசைத்தாள்..

“ சரி அண்ணி இந்த அசோக், அண்ணன் புது மாப்பிள்ளை யாரையுமே காணோம் ?? ” என்று நித்யாவை பார்த்தபடி குமுதாவிடம் கேட்டாள்.. குமுதாவும் இதை பார்த்து சிரித்தபடி “ அவங்க எல்லாம் அங்க இருக்க ரூம்ல பேசிகிட்டு இருக்காங்க தேவி.. “ என்றாள் ..

இப்படியே பெண்கள் மூவரும் பேசிக்கொண்டு பொழுதை களிக்க அங்கே விபு “ அப்பா நீங்க அவங்க கிட்ட தெளிவா சொல்லிட்டிங்களா ?? கடைசி நேரத்துல வந்து ஏதா சொதப்பிட போறாங்க..”

“அப்படி மட்டும் ஏதா ஆச்சு நான் மனுசனாவே இருக்க மாட்டேன் பா.. எனக்கு என் மல்லி சந்தோசம் முக்கியம் “ என்று மிக முக்கியமாக பேசி கொண்டு இருந்தான்..

இதை கேட்ட அசோக் “ டேய் ஏன் டா இவ்வளோ டென்சன் ஆகுற.. நானும் அப்பாவும் தான் போய் பேசிட்டு வந்தோம்.. அவங்க முன்ன மாதிரி இல்ல விபு. என்னாலையே நம்ப முடியல டா.. நல்லா மாறிட்டாங்க.. சோ நீ ரிலாக்ஸ்டா இருக்கலாம்” என்று அவனது தோள்களில் தட்டினான்..

விபுவின் தந்தையும் “ டேய் ஏன் டா இப்படி பேசுற.. நாங்க இத்தனை பேரு இருக்கோம் சும்மா விற்றுவோமா ?? நீ தைரியமா இரு.. ஆனா நித்யா எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு நினைச்சா தான் கொஞ்சம் டென்ஷனா இருக்கு “ என்றார் தன் நெற்றியை தடவியபடி கேட்டார்..

“ இல்ல பா அவளை நான் சமாதானம் பண்ணிடுவேன்..  எனக்கு தேவை எல்லாம் நாளைக்கு நித்யா கழுத்துல நான் தாலி கட்டும் பொழுது மனசுல எந்த குழப்பமும் இல்லாம அவ சந்தோசமா இந்த உறவை ஏத்துக்கணும்.” என்றான் உறுதியாக..  அசோக்கும் அதை ஆமோதித்தான்..

“ நித்யா.. நித்யா உன்னைய பார்க்க யாரோ வந்து இருக்காங்க.. உங்க சொந்தகாரங்க போல “ என்று கூறியபடி அப்பாவியாய் முகத்தை வைத்துகொண்டு வந்தாள் சிந்து..

“ என் சொந்தமா?? எல்லாரும் இங்க தானே இருக்காங்க ?? ” என்று யோசனையுடன் குமுதாவை பார்த்தாள் நித்யா.. “ அட என்ன நித்யா அண்ணிய பார்த்துகிட்டு இருக்க.. அங்க தான் எல்லரும் இருக்காங்க வா.. உன்னைய தான் பார்க்கணுமாம்.. “ என்று ஒன்றும் தெரியாதவள் போல அவளது கைகளை பற்றி இழுத்தாள் சிந்து..

இதை கண்ட தேவி “ என்ன இது வந்ததும் இவளை ஆளே காணோம். இப்ப வந்து நித்யாவ வேற கூப்பிடுறா.. ஒரு வேலை நம்மக்கு தெரியாம அண்ணன் ஏதா பிளான் போட்டு இருப்பானோ “ என்று எண்ணிக்கொண்டு இருந்தாள்..

நித்யா “ விடு சிந்து நானே வரேன்.. எங்க இருக்காங்க ?? ” என்று கேட்டாள்.

“ அவங்க எல்லாம் பக்கத்து ரூம்ல இருக்காங்க. உன்கிட்ட எதோ பேசணுமாம் “ எனவும் குழப்பமான மனதுடன் எழுந்து பக்கத்து அறைக்கு சென்றாள்.

சிந்து “ யப்பாடி இனிமே எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க.. நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன்.. நேத்து இருந்து ஒரே தலை வழியா இருக்கு.. அப்பதான் நாளைக்கு நான் பிரெஷா இருக்க முடியும் ” என்று எண்ணியவள் சென்று கெளதம் அருகில் அவளும் படுத்து கொண்டாள்.

முட்டாள் பெண் இத்தனை திட்டங்கள் தீட்டி அது நிறைவேறும் சமயம் அதில் பங்கு கொள்ளாமல் இப்படி தூங்கிகொண்டு இருப்பவளுக்கு விதி கூட உதவி செய்யாது என்று அவளுக்கு தெரியவில்லை.. தன் கனவுகள் எல்லாம் அங்கே தகர்த்து எறியப்பட போகிறது என்று அவள் அறியவில்லை..

பக்கத்து அறைக்கு சென்றவள் அங்கே இருந்தவர்களை கண்டு அப்படியே திகைத்து, அதிர்ச்சி அடைந்து, என்ன செய்வது என்று கூட தெரியாமல் விக்கித்து நின்றாள் நித்யமல்லிகா.. தன் வாழ்வில் மீண்டும் ஒரு முறை யாரை எல்லாம் சந்திக்கவே கூடாது என்ற முடிவில் இருந்தாளோ அவர்கள் எல்லாம் அங்கே இருந்தனர்..

நீலவேணி, அவரது முதல் மகன் பொன்னரசன், அவனது மனைவி சந்தியா மூவரும் அமர்ந்து இருந்தனர் ஒரு பக்கம். அசோக், தேனு பாட்டி, விபு மற்றும் விபுவின் பெற்றோர் அமர்ந்து இருந்தனர் மற்றொரு பக்கம்..

அவள் திகைத்து நிற்பதை கண்ட தேனு பாட்டி அவளிடம் செல்ல முயன்றார் ஆனால் விபுதான் தடுத்து விட்டு அவன் எழுந்து வந்தான்.. நித்யாவின் கைகளை பிடித்து “ மல்லி இங்க பாரு “ என்று அவளது கைகளை அழுத்தினான் ஒரு முறை..

அவனது தொடுகை அவளுக்கு என்ன உணர்த்தியதோ இல்ல அவனது குரல் அவளது மனதை எழுப்பியதோ திகைத்து கண்ணீர் விழிகளுடன் அவனை ஏறிட்டாள்..

“ நோ மல்லி. நீ இனிமே அழவே கூடாது.. உனக்கு நான் இருக்கேன்.. தைரியமா இரு.. எது நடந்தாலும் நானும் என் குடும்பமும் உனக்கு துணையா இருப்போம். சோ நீ எதுக்கும் மனசை போட்டு அலட்டிகாதா. ஜஸ்ட் அவங்க என்ன சொல்ல்றாங்கனு மட்டும் கவனி.” என்றான் ஆறுதலாகா..

ஆனால் அவள் என்ன பதில் கூறுவாள். முதலில் அவளுக்கு பேசவாவது வருமா என்ன.?? அவளது வாழ்கையை பந்தாடுவது போல ஆடியவர்கள் அல்லவா இப்பொழுது வந்து கண் முன் நிற்கிறார்கள்..

எதுவும் கூறாமல் விபுவின் கரங்களை இறுக பற்றி கொண்டாள். விபுவும் அவளுக்கு ஆதரவாக நித்யாவின் கைகளை பிடித்து லேசாக அணைத்தவாறு உள்ளே அழைத்து வந்தான். அங்கே ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அமைதி நிலவியது..

விபுதான் தொடர்ந்து நித்யாவிடம் அவளுக்கு மட்டுமே கேட்கும்படி எதுவோ பேசிக்கொண்டே இருந்தான்.. அதன் பின் தான் லேசாக அவளது முகம் தெளிந்தது.. அழுவதும் நின்றது..

அமைதியாக நிமிர்ந்து வந்திருந்தவர்களின் முகம் பார்த்தாள்.. நீலவேணி, பொன்னரசு, சந்தியா ஆகிய மூவரின் தோற்றத்திலும் பெரும் மாற்றம்.. முன்பு இருந்தா பந்தா படோபம் எதுவும் இல்லை.. அவர்கள் முகத்தில் சோகம் அப்பி கிடந்தது.

அப்பொழுதுதான் ஒன்றை கவனித்தாள் நீலவேணி நெற்றியில் எப்பொழுதும் இடும் ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு இருக்கும் குங்குமம் இல்லை.. தங்க நகை கடையை அணிந்து இருப்பவர் கழுத்தில் ஒரு ஒற்றை சங்கிலி.. கண்களில் சோகம்.. அவளுக்கு எதுவோ புரிவது போல இருந்தது.. ஆனாலும் என்னவென்று கேட்பது என்று அமைதியாக இருந்தாள்..

தேனு பாட்டிதான்” கண்ணு நித்யா கலங்காத தாயி.. உன்கிட்ட மன்னிப்பு கேட்க தான் வந்து இருக்காங்க. பாவம் அவங்களும் வாழ்கையில ரொம்ப பட்டுட்டாங்க.. எல்லாம் மனசு திருந்தி வந்தவங்ககிட்ட நம்ம முகம் திருப்ப கூடத்துல கண்ணு..” என்றார்..

நீலவேணி தான் பொறுக்க மாட்டாமல் நித்யாவின் கரங்களை பற்றி “ என்னைய மன்னிச்சிடு நித்யா.. எல்லாம் என்னால தான்.. என் பையன் மேல உள்ள பாசத்துல உன் வாழ்க்கையவே கெடுத்து உன்னைய தனி மரமா நிக்க வச்சுட்டேன்..”

“ உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டா கூட எங்க பாவம் தீராது மா.. உனக்கு செஞ்ச கொடுமைக்கு தான் என் புள்ளையும் இழந்து, புருசனையும் இழந்து இப்ப தவிக்கிறேன்.. எங்கள மன்னிச்சிடு தாயி.. “ என்று கரம் குவித்தார்..

ஏற்கனவே நொந்து போய் வந்து இருபவர்களிடம் என்ன சொல்ல முடியும்.. தன் மன குமுறலை கொட்ட முடியுமா ?? இல்லை உங்களால் தான் நான் என் பெற்றோரை இழந்து அநாதை ஆகிவிட்டேன் என்று கதற முடியுமா ?? மன்னிப்பு கேட்பவரிடம் தங்கள் கோவத்தை காட்ட முடியுமா..

அப்படி பார்த்தால் அவர்கள் பக்கமும் இழப்பு தானே.. பெற்ற பிள்ளை, கட்டிய கணவன் என்று அடுத்து அடுத்து வாரி குடுத்து விட்டு நிற்பவரிடம் முகத்தில் அடித்த மாதிரி பேச முடியுமா என்ன.. இதை எல்லாம் அமைதியாக யோசித்தாள் நித்யா ..

அதன் பிறகு  விபுவை ஒரு பார்வை பார்த்துவிட்டு “ நா… நான்.. என் மனசுல உங்க மேல எந்த கோவமோ வருத்தமோ இல்லை.. எனக்கு என் விதி மேல தான் கோவம்.. என் அப்பா அம்மா இல்லன்னு கண்டிப்பா எனக்கு கடைசி வரைக்கும் அந்த ஏக்கம் இருக்கும்.. ஏன்னா அவங்க இடத்தை என் வாழ்கையில வேற யாரு வந்தாலும் நிரப்ப முடியாது”

“ எனக்குன்னு இல்ல எல்லருக்குமே இது பொருந்தும்.. ரெண்டு பக்கமுமே எதிர் பாராத இழப்புகள் தான்.. ஹ்ம்ம்.. போதும் இனிமே நம்ம இதபத்தி பேச வேண்டாம்.. எல்லாத்தையும் மறந்திடுவோம்.. எனக்குக்னு ஒரு வாழ்கை புதுசா ஆரம்பிக்க போறேன்.. அத சந்தோசமா வாழனும் அவ்வளோ தான். என் மனசுல வேற எதுவும் இல்லை “ என்று தெளிவாக கூறி முடித்தாள்..

இதை கேட்ட நீலவேணி “ உன் வயசுக்கு நீ எவ்வளோ பெருந்தன்மையா பேசுற மா.. ஆனா அன்னைக்கு நான் உன்னைய துரத்தி அடுச்சேன்.. தாயி உனக்கு பெத்தவங்க யாரும் இல்லைன்னு நினைக்காத.. உனக்கு நாங்க இருக்கோம்.. நீ எங்க வீடு பொண்ணு மா.. உன்னைய என் மகளா நான் ஏத்துகிறேன்.. “ என்று கூறி அவள் முகம் தடவினார்..

அவளும் எதுவும் கூறாமல் அவரது கைகளை பிடித்து கொண்டாள்.. அதன் பிறகு பொன்னரசு முன் வந்து

 “ நித்யா உங்க மனசுல நிறைய குழப்பம் இருக்குன்னு விபு சொன்னாங்க.. ஆனா அதெல்லாம் தேவையே இல்லை.. ஏன்னா உங்களை அன்னைக்கு பின் தொடர்ந்து வந்த கார் என்னோடது தான்.. நான் தான் வந்தேன்..” என்று கூறவும் நித்யா மறுமுறை திகைத்தாள்.. விபுவையும் பொன்னரசுவையும் மாற்றி மாற்றி பார்த்தாள்..

“ ஆமா நித்யா.. உங்களை ரொம்ப நாளைக்கு அப்புறம் அன்னைக்கு தான் பார்த்தேன்.. நீங்களும் விபு தம்பியும் அந்த ஹோட்டல்ல பேசிக்கிட்டு இருந்திங்க.. உங்க கிட்ட வந்து பேசலாம்னு நினைச்சேன் ஆனா முடியல..”

“ அப்புறம் இந்த தம்பி யாரு என்னானு தெரிஞ்சுக்க தான் அன்னைக்கு உங்களை பின் தொடர்ந்து வந்தேன்.. ஆனா எதிர் பாரா விதமா அன்னைக்கு உங்களுக்கு ஒரு விபத்து வேற ஆகா இருந்தது.. அந்த லாரி காரண தொடர்ந்து போய் பார்த்து விசாரிச்சதுல உங்களை குழப்பி இந்த கல்யாணம் நிக்க தான் எல்லாம் அப்படி பண்ணோம்னு சொன்னான்  “

“ அதுக்கு அப்புறம் விபுக்கு தொழில் முறை எதிரிங்க உன் பழைய வாழ்கைய பத்தி தெரிஞ்சு எங்களை வந்து பார்த்தாங்க. அப்பத்தான் எங்களுக்கு புரிஞ்சது இதுல உனக்கும் விபுக்கும் உயிருக்கே ஆபத்து இருக்குன்னு. அதுனால தான் அன்னைக்கு இருந்து விபு எங்க போனாலும் நான் அவரை பின் தொடர்ந்து போக ஆரம்பிச்சேன்..”

“ எங்களை பேச வைச்சு இந்த கல்யாணத்தை நிறுத்தி எப்படியாவது இவங்க எல்லாரையும் அசிங்க படுத்தனும்னு திட்டம் போட்டாங்க.. நாங்களும் அவங்களுக்கு உதவி செய்றது போலவே பேசி அவங்க திட்டம் என்னனு தெரிஞ்சுகிட்டோம். அப்ப தான் விபு அப்பாவும் அசோக்கும் எங்களை வந்து பார்த்தாங்க”

“ விபுவும் உன் மனசுல இருக்க பயம் குழப்பம் எல்லாம் சொன்னாங்க.. என் குடும்பத்ததுனால தான் உனக்கு வாழ்க்கையே இல்லாம போச்சு.. மேலும் நாங்க உனக்கு அமைய போற நல்ல வாழ்க்கையே கெடுக்க விரும்பல. அதுனால தான் எங்களுக்கு தெரிஞ்ச உண்மையா எல்லாம் இவங்க கிட்ட சொன்னோம் “

“ அந்த எதிரிங்க திட்டபடி இப்ப நாங்க எல்லாம் உன்கிட்ட பேசி உன் மனசை மாத்தி நாளைக்கு நடக்குற கல்யாணம் நிக்கணும்.. ஆனா எங்க திட்டபடி உனக்கு இருக்க குழப்பம் எல்லாம் வெளி ஆளுங்க ஏற்படுத்துன மாயைன்னு உனக்கு புரியணும். நீ சந்தோசமா மனசுல எந்த பயமும் இல்லாம வாழனும் அதான் “ என்று கூறி முடித்தான்.

நித்யாவிற்கு இதை எல்லாம் கேட்க கேட்க வியப்பாக இருந்தது.. “தன்னை சுற்றி இத்தனை விசயங்கள் நடந்து இருக்கிறது.. ஆனா நான் எதுவுமே புரிஞ்சுக்காம, எதையுமே தெரிஞ்சுக்காம மனசுக்குள்ளயே போட்டு நானும் சந்தோசமா இல்லாம விபா கிட்டயும் சரியா பேசாம எல்லாரையும் கஷ்ட படுத்திட்டேன் “ என்று எண்ணினாள்..

எண்ணியவள் அதை அனைவரிடமும் கூறினாள்.. இவர்களை பார்த்து நித்யா அழுவாள் ஆர்பாட்டம் செய்வாள் என்றெல்லாம் எதிர் பார்த்து இருந்தவர்களுக்கு அவள் சூழ்நிலையை சரியான விதத்தில் புரிந்து கொண்டு தன் மனதில் இருக்கும் தயக்கங்கள் அனைத்தும் விட்டு இப்பொழுது பேசியது வியப்பாக இருந்தது..

அதன் பின் அனைவரும் சிறிது நேரம் சாதரணமாக பேசிவிட்டு நாளை மாலை வரவேற்புக்கு வருவதாக கூறி சென்றனர்.. அசோக்கும் சந்திர வரதனும் மற்ற வேலையை பார்க்க கிளம்பி சென்றனர்.

வேதாவும் தேனு பாட்டியும் விருந்தினர்களை கவனிக்க சென்றனர். அந்த அறையில் நித்யாவும் விபுவும் மட்டும் தனித்து இருந்தனர். நித்யாவோ நடந்தது எல்லாம் நம்ப முடியாத ஒரு பார்வை பார்த்தாள் விபுவை. அவனோ காதலாக பார்த்தான்.. நித்யா “ விபா இதெல்லாம்..” என்று எதோ கூற வந்தாள்

“ எல்லாமே நிஜம் தான் மல்லி.. எல்லாமே நிஜம் தான்.. இப்ப சொல்லு நம்ம கல்யாணத்துக்கு நீ முழு மனசோட சம்மதம் சொல்லறியா ?? “ என்றான் புன்னகையுடன்..

அவனுடைய புன்னகை அவளையும் தொற்றிகொண்டது, ஆனால் கேலியாக அவனை பார்த்து  “ ஹ்ம்ம் விடிஞ்சா கல்யாணம்.. ஆனா மாப்பிள்ளை என்னமோ இப்பதான் வந்து பொண்ணுகிட்ட சம்மதம் கேட்கிறாரு” என்றாள் நக்கலாக..

அவளது மாற்றத்தை மனதில் குறித்து கொண்டு “ ஹ்ம்ம் என்ன பண்ணுறது எனக்கு வரபோற வீட்டமா இத்தனை நாளா ஒரே அழுமுஞ்சியா இருந்துச்சு. இப்பதான் எதோ சிரிக்கவே பழகி இருக்கு போல “ என்று அவனும் பதிலுக்கு வம்பு பேசினான்.. இருவரும் இப்படியே சிரித்தபடி பேசிக்கொண்டு இருந்தனர்.

அதன் பின் நினைவு வந்தவளாக “ ஏன் விபா யாரு அதுன்னு கண்டு பிடிச்சிங்களா ??” என்று கேட்டாள் அவன் தோள்களில் சாய்ந்து.

ஒரு நிமிட அமைதிக்கு பின் “ இப்ப எதுவும் இத பத்தி பேசவேண்டாம் மல்லி. உன் மனசுல இருந்த பயம் குழப்பம் தெளியனும் அதுக்கு தான் இவங்களை வர சொன்னேன்.. எனக்கு இப்ப உன் மன நிம்மதி தான் முக்கியம்.. கல்யாணம் எல்லாம் முடியட்டும்.. அது யாரு என்னன்னு உனக்கு அப்புறம் சொல்லுறேன் “ என்றான் ஒரு மாதிரி குரலில்.

அவனது குரலில் என்ன உணர்ந்தாளோ சரியென்று கூறிவிட்டாள்.. விடிந்தால் திருமணம். சீக்கிரம் எழவேண்டும் என்று மனமே இல்லாமல் இருவரும் தங்கள் அறைக்கு சென்றனர்..

                            

“ கெட்டி மேளம்… கெட்டி மேளம் “ என்று அய்யர் கூறி மங்கள் தாலியை எடுத்து குடுக்கவும் விபு அதை வாங்கி மனதில் ஆண்டவனை நினைத்து நித்யாவின் கழுத்தில் காட்டினான்.. தேவி தான் நாத்துனார் முடிச்சு போட்டாள்.

அனைவரின் முகத்திலும் சந்தோசம் நிம்மதி நிரம்பி வழிந்தது.. விபு நித்யா இருவரும் பெரியவர்கள் அனைவரின் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.

அணைத்து ஏற்பாடுகளையும் வைபவ் கல்யாண் சிறப்பாக செய்திருந்தனர். ஒரு பக்கம் அவர்களுக்கு பாராட்டு மழை பொலிந்து கொண்டு இருந்தது. ஆனால் நடப்பதை எல்லாம் ஏற்க முடியாமல், தன் கனவு, தன் திட்டம் எல்லாம் தவிடு பொடியானதை நம்ப முடியாமல் தவித்து கொண்டு இருந்தாள் சிந்து..

அந்த மேனேஜர் போனுக்கு அழைத்தால் அது அணைத்து வைக்க பட்டு இருந்தது.. “ இனி என்ன செய்வது ?? ” என்ற கேள்வியே அவளுக்கு மனதில் போட்டு குடைந்தது.. “ ஒருவேளை இவங்க எல்லாருக்கும் உண்மை தெரிஞ்சு இருக்குமோ ??” என்று எண்ணி பயம் கொண்டாள்..

ஆனாலும் அனைவரும் தன்னிடம் முன்போல இருப்பதை பார்த்து மனம் சற்று அமைதி கொண்டாள்.. “ என்னைய எல்லாம் சேர்ந்து ஏமாத்திட்டிங்க.. இருக்கட்டும். இந்த சிந்து லேசு பட்டவ இல்லை. கல்யாணம் முடிஞ்சா உங்களை நான் சந்தோசமா வாழ விட்ருவேனா என்ன ?? ” என்று கருவிக்கொண்டு இருந்தாள்..

ஆனால் இதெல்லாம் தங்களை பாதிக்காது என்பது போல விபுவும் நித்யாவும் தங்கள் உலகில் மூழ்கி இருந்தனர்..

அவளது கரங்களை பற்றிவன் விடவே இல்லை.. யாரும் பார்க்காத பொழுது அவளை பார்த்து கண்ணடிப்பான், அவள் பக்கத்தில் தேவியிடம் பேசி கொண்டு இருந்தால் அரவில்லாமல் அவளது விரல்களை கில்லி விட்டான் இப்படி அணைத்து சேட்டைகள் செய்து காதாலாக முறைப்பையும் பெற்றுகொண்டான்.

இதை கவனித்த அசோக் “ டேய் கல்யாணம் ஆகிடுச்சு தான். ஆனா பாரு சுத்தி எத்தனை பெருசுங்க இருக்காங்க.. என் பையன் வேற உங்களை பார்த்து கேள்வியா கேட்டு கொல்லுறான் டா.. மாமா ஏன் அத்தை கைய பிடிச்சு இருக்காருன்னு?? மானம் போகுது “ என்று சந்தோசமாக கண்டித்தான்.

ஆனால் இதற்கெல்லாமா அடங்குவான் நம் நாயகன்.. காதல் லீலைகளை இப்பொழுது இருந்தே தொடங்கி விட்டான்.

                   மனம் – மயக்கும்                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

Advertisement