Advertisement

மனம் – 14

 “ என்ன செஞ்சாலும் அந்த பிளான் சொதப்பிடுது.. ச்சேய்… இப்போ இப்போ பாரு அடுத்த வாரம் கல்யாணம்னு வந்து நிக்கிது.. பத்திரிக்கை அடிச்சு குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.. இதோ இன்னைக்கு முகுர்த்த சேலை எடுக்க போயிருக்காங்க.. அப்படியே கடுப்பா இருக்கு “ என்று தன் தோழியிடம் பொரிந்து தள்ளி கொண்டு இருந்தாள் சிந்து.. 

“ ஹ்ம்ம் நல்ல விஷயம் தானே சிந்து.. நம்ம பிளான் எல்லாம் சரியா நடக்கணும்னா இந்த கல்யாணம் நடக்கணுமே..” என்றாள் சிந்துவின் அருமை தோழி..

“ ஏய் என்ன சொல்ற… இந்த கல்யாணம் நடந்தா நான் நினைச்சது எப்படி நடக்கும் ?? ” என்று கோவமாக வினவினாள்..

“ கூல் கூல் சிந்து… நாம் பிளான் என்ன இந்த கல்யாணம் எந்த தடையும் இல்லாம நடக்கணும்.. அதாவது மணமேடை வரைக்கும் விபு வரணும்.. ஆனா நித்யா கடைசி நேரத்துல இந்த கல்யாணத்துக்கு சரி சொல்ல கூடாது.. இது நடக்கணும்னா மத்த எல்லா ஏற்பாடும் சரியா தானே நடக்கணும்.. அப்புறம் ஏன் மா இப்படி டென்ஷன் ஆகுற..?? ”

“ டென்ஷன் ஆகாம என்ன செய்ய சொல்லுற.. அந்த நித்யாவை குழப்ப நினைச்சா அங்க வந்து விபு நிக்கிறான்.. சரி வீட்டுல இந்த ஆன்ட்டி மனசை கொஞ்சம் மாத்தலாம்னு நினைச்சா அவங்க கதை கேட்கிற மாதிரி எல்லாம் கேட்டிட்டு கடைசில மகன் கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுறாங்க.. இதுல இந்த தேவி வேற.. எப்ப பாரு எங்க போற ?? யாரு கூட பேசுறான்னு கேள்வியா கேட்டு கொல்லுறா ” என்று இன்னும் கோவத்தை எல்லாம் கொட்டி தீர்த்தாள்..

“ ஹேய் சிந்து டியர்… கூல் பேபி.. நம்ம கிட்ட தான் இன்னும் ஒரு பிரம்மாஸ்திரம் இருக்கே.. அப்புறம் ஏன் நீ கவலை படுற.. இங்க பாரு முதல்ல நான் சொல்லுறதை எல்லாம் கொஞ்சம் பொறுமையா கேளு.. ”

சிந்து “ சொல்லு “

“ முதல்ல நீ வீட்டுல யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி நடந்துக்கோ.. தேவிக்கு ஒரு சின்ன சஞ்சலம் வந்தா கூட உடனே போயி அவ அண்ணன் கிட்ட சொல்லுவா.. அப்புறம் அவன் கொஞ்சம் உன்னை ஸ்மெல்  பண்ணா கூட எல்லாம் வேஸ்ட் ஆகிடும்..”

“ம்ம்ம் “

“ அதுனால இப்ப நீ நல்ல பொன்னு மாதிரி கிளம்பி அவங்க கூட டிரஸ் எடுக்க போ.. முடிஞ்சா அங்க எதா குட்டைய குழப்ப முடியுமா பாரு.. அப்படி இல்லைனா அமைதியா இரு.. நீ அடிகடி இப்படி வெளிய வராத.. எதுனாலும் எனக்கு மெஸ்சேஜ் மட்டும் பண்ணு போதும்..”

“ ஹ்ம்ம் நீ சொல்லுறது எல்லாம் சரி தான்.. ஆனா நம்ம இன்னும் ஒரு முக்கியமான இடத்துக்கு வேற போகணுமே.. இது வரைக்கும் அவங்க கிட்ட நம்ம போன்ல தானே பேசி இருக்கோம்.. நேருல பேசுனா தானே இந்த டீலிங் எல்லாம் சரியா முடியும் “ என்றாள் குழப்பமாக சிந்து..

“ நான் இருக்கும் பொழுது நீ ஏன் பேபி இவ்வளோ கவலை படுற.. அவங்க கிட்ட நான் பேசிக்கிறேன்.. நீ போன்ல மட்டும் பேசு.. எல்லாம் நல்லபடியா முடியும்.. நீ மட்டும் சரியா நடந்தா போதும் உன் கனவு எல்லாம் நிறைவேறும் “ என்று தவறான ஒரு ஆறுதல் கூறி அனுப்பினாள் அந்த தோழி..

விபு அசோக்கிடம் கூறிவிட்டான் இந்த திருமணத்தில் எந்த ஒரு சின்ன விஷயமும் விட்டுவிட கூடாது..  நித்யா ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியுடன் களிக்க வேண்டும் என்று விபு விரும்பினான்..

விபுவின் குடும்பத்தில் நடக்கும் முதல் திருமணம் எப்பொழுதும் அவர்கள் குல தெய்வ கோவிலில் தான் நடக்கும்.. நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்து திருமணம் முடிப்பார்.. அதன் பின் அனைவரையும் அழைத்து விமரிசையாக ஒரு வரவேற்பு வைத்து விடுவர்.

ஆனால் ஒரு வாரத்தில் திருமண நாள் குறித்து அதை எந்த குறையும் இல்லாமல் எப்படி செய்வது என்று விபு யோசிக்கும் பொழுது தான் அவனுக்கு தன் நண்பர்களான கல்யாண் மற்றும் வைபவின் நினைவு வந்தது..

கல்லூரி நாட்களில் வேறு வேறு பிரிவு என்றாலும் நல்ல அறிமுகம் இருந்தது.. அதன் பின் தொழில் முறையிலும் பழக்கம் ஏற்படவும் ஒரு நட்பு வளையம் அமைந்தது விபு , அசோக் மட்டும் வைபவ் கல்யாணிற்கு… 

அசோக்கிடம் பேசிவிட்டு வைபவை அழைத்தான் விபு.. அதன் பிறகு நால்வரும் ஒரு இடத்தில் சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டது..

இத்தனை நாட்கள் கழித்து சொந்த விசயமாக நண்பர்கள் ஒரு இடத்தில் கூடினால் அங்கே உற்சாகத்திற்கு பஞ்சமா இருக்கும்.. பொதுப்படையான விசாரிப்புகள் முடிந்து திருமண விஷயம் பேச ஆரம்பித்தனர்..

விபு கூறி விட்டான்,” காலையில கோவில்ல தான் டா கல்யாணம்..  சாயங்காலம் ஏழு மணிக்கு தான் ரிசப்சன்.. சோ மதியம் மேல தான் உங்களுக்கு கொஞ்சம் வேலை நிறைய இருக்கும்..”

“ காலை, மதியம் லஞ்ச்கு ரொம்ப நெருங்கிய சொந்தம் மட்டும் தான் இருபாங்க.. சாயங்காலம் டின்னர்க்கு தான் மெனு தயார் பண்ணனும்…. முதல்ல இப்ப பத்திரிக்கை ரெடி பண்ணனும்..” என்று கூறவுமே வைபவ் தன் மடி கணினியை திறந்து அதில் வைத்து இருந்த மாதிரிகளை காட்டினான்..

ஆனால் விபுவிற்கு தான் மட்டுமே தனியாக எந்த தேர்வு செய்யவும் சங்கடமாக இருந்தது.. ஒரு நிமிட யோசனைக்கு பின் “ டேய் அசோக் நான் இப்ப மல்லி வீட்டுக்கு போயி அவளையும் பாட்டியையும் கூட்டிட்டு வரேன்.. நீ இவங்கள கூட்டிட்டு வீட்டுக்கு போ.. அங்க அம்மா தேவி எல்லாம் இருபாங்க. அப்பாவை வர சொல்லிடுறேன்.. எல்லாம் சேர்ந்து உக்கார்ந்து முடிவு பண்ணிட்டா நல்லா இருக்குமே..??

“ என்ன வைபவ் என்ன கல்யாண் நான் சொல்லுறது சரி தானே ?? ” என்று அவர்களை பார்த்து கேட்கவும் அவர்களும் சரி என்று கூறினார்..

அசோக் தான் “ ஏன் டா இதே நான் போயி என் தங்கச்சிய கூட்டிட்டு வர மாட்டேனா ?? அதென்ன நீ போயி கூப்பிட்டு வரேன்னு இவனுங்க கூட என்னைய கோர்த்து விடுறா.. “

“ அங்க பாரு ஆல்ரெடி ஒருத்தன் அப்ப இருந்து மெசேஜ் பண்ணிக்கிட்டு இருக்கான்.. “ என்று வைபவை காட்டினான்.. அதன் பிறகே கல்யாண் வைபவிற்கும் அபிக்கும் திருமணம் நிச்சயம் ஆகி இருப்பதாக கூறவும்

விபு “ டேய் வைபவ் கிரேட் டா.. ஆல் தி பெஸ்ட்.. லவ் மேரேஜா ?? சூப்பர் டா..  “ என்று கூறி கை குலுக்கினான்..

வைபவ் “ என்ன பண்ணுறது டா காலேஜ்ல பொண்ணுகளை கண்டாலே ஒரு காத தூரம் ஓடுவ, ஆனா இப்ப இந்த பொண்ணு தான் வேணும்னு ஒரே வாரத்துல கல்யாணம்னு வந்து நிக்கிற “ என்று இருவரும் மாறி மாறி தங்கள் காதல் கதையை பேச தொடங்கி விட்டனர்..

இதை பார்த்த கல்யாணும் அசோக்கும் “ இதுக்கு தான் டா காதலிக்கிறவுனுக்கும், கல்யாணம் பண்ண போறவனுக்கும் பிரண்டா மட்டும் இருக்கவே கூடாது.. அப்பவே எங்க அம்மா சொல்லுச்சு டா இவன் கூட சேராதன்னு ” என்று இருவரும் அவர்கள் இருவரையும் கிண்டல் பேசினர்..

ஒருவழியாக விபு கிளம்பி நித்யாவை அழைக்க அவளது வீட்டிற்கு சென்றான்.. அசோக் மற்ற இருவருடனும் கிளம்பி விபுவின் இல்லம் நோக்கி சென்றனர்..

நித்யாவிற்கு விபு அன்று வந்து அத்தனை தூரம் பேசி சென்ற பின் அவனிடம் இந்த திருமணம் வேண்டாம் என்று கூற மனம் வரவில்லை.. ஆனாலும் அவளது பயம் மட்டும் தெளியவில்லை..

“ விபா இப்ப நான் சம்மதம் சொல்லுறது உங்களுக்காக.. முழுக்க முழுக்க உங்களுக்காக.. ஏன்னா எப்பையுமே என்னால நீங்க ஒரு சின்ன விஷயத்துக்கு கூட வருத்த பட கூடாது.. “

“ எனக்கும் மனசு நிறைய ஆசை இருக்கு உங்க கூட சந்தோசமா நிம்மதியா வாழணும்னு.. ஆனா எவ்வளோ ஆசை இருக்கோ அதே அளவு பயமும் இருக்கு.. இந்த பயம் ஏன்னு உங்களுக்கே தெரியும்.. ஆனாலும் என்னாலையும் உங்களை விட்டு விலகி இருக்க முடியுமான்னு தெரியல.. அது முடியாதுன்னு தான் தோணுது..”

“ சோ நான் அன்னைக்கு சொன்ன மாதிரி தான் இந்த கல்யாணத்திற்கு முழு சம்மதம்.. ஆனா என் பயம் குழப்பம் எல்லாம் தெளிய எனக்கு நீங்க தான் உதவி செய்யணும்.. நான் சொல்லுறது உங்களுக்கு புரியுது தானே “ என்று கூறி அன்று இரவே தன் சம்மதத்தை தெரிவித்துவிட்டாள்..

அதன் பிறகு தான் விபு இப்படி காலில் சக்கரம் கட்டிக்கொண்டு அலைந்து கொண்டு இருக்கிறான்.. அவனது எண்ணம் எல்லாம் ஒன்று மட்டும் தான் மேலும் எந்த குழப்பமும் நடந்து நித்யாவின் மனம் மீண்டும் மாறும் முன் இந்த திருமணம் நடந்துவிட வேண்டும்..

இதற்கு மேல் தனியாக இருந்தால் அவள் எந்த வேதனையையும் தாங்கி கொள்ள மாட்டாள்.. எத்தனை வேகத்தில் இந்த திருமணம் முடிந்து அவளை தனதாக்கி கொள்ள வேண்டுமோ அத்தனை நல்லது என்று எண்ணினான்..

எண்ணியது மட்டுமில்லாமல் அவன் தனது முடிவை தனது குடும்பத்திடமும் தெரிவித்து விட்டான்.. விபுவின் வேகத்தை கண்டு வேதா சற்று தயங்கினாலும் விபு நித்யா இருவரின் வாழ்கையை மனத்தில்கொண்டு அவரும் சரி என்று கூறினார்..

தேவி தான் “ ஒரு வாரத்துல கல்யாணமா ?? இன்னும் எனக்கு டிரஸ் எடுக்கல, நகை எதுவும் வாங்கலை, பார்லர்க்கு சொல்லல.. இதெல்லாம் இல்லாம எப்படி கல்யாணம்.. அதுவும் நான் நாத்துனார் முடிச்சு வேற போடணுமே..” என்று மனதில் சந்தோசம் நிறைந்து இருந்தாலும் வெளியே இப்படி வாயடித்தாள்..

அவளது முதுகில் ஒரு அடி போட்ட வேதா “ இன்னும் கல்யாண பொண்ணுக்கே ஒன்னும் வாங்கலையாம்.. அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்.. எல்லாம் பார்த்து வாங்கிடலாம்.. அதான் இன்னும் ஒரு வாரம் இருக்கே.. எல்லாம் ரெடி பண்ணலாம் “ என்று கூறினார்..

“ ஹ்ம்ம் மருமக வர போற சந்தோசத்துல எல்லாம் தலை கால் புரியாம ஆடுங்க “ என்று அவளும் நக்கல் அடித்தவாறே பார்க்க வேண்டிய வேலைகள் அனைத்தையும் பார்க்க சென்றாள்..

இப்படிதான் விபுவரதன் நித்யமல்லிகா திருமணம் ஒரு வாரத்தில் முடிவு செய்து இதோ அதற்கான ஏற்பாடுகளை செய்ய அசோக் வைபவ் மற்றும் கல்யாணுடன் விபுவின் வீட்டிற்கு சென்றான்..

இவர்கள் அங்கே செல்லுமுன்னே சந்திரவரதன் அங்கே இருந்தார்.. அனைவரும் அமர்ந்து பேசி கொண்டு இருந்தானர்.. விபுவும் நித்யாவுடன் சரியான நேரத்திற்கு அங்கே வர, நித்யாவை கண்ட வைபவும் கல்யாணம் அதிர்ச்சி அடைந்தனர் “ மேடம் நீங்க எங்க இங்க ?? ” என்று ஒரு ஆச்சரியம் , சந்தோசம் கலந்த கேள்வியை எழுப்பினர்.

அசோக் “ என்ன டா.. இவ தான் என் தங்கச்சி நித்யமல்லிகா.. கல்யாண பொன்னே இவ தான்.. உங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் இருக்கா ?? ” என்று கேட்கவும் கல்யாண் “ என்ன அசோக் இப்படி சொல்லிட்ட மேடம் ஓட மெஸ்ஸ நம்பி தான் எங்க பொழப்பே ஓடுது.. எங்களுக்கு சாப்பாடு போடுற அன்னபூரணி டா இவங்க “ என்று சிரித்தபடி கூறினான்..

நித்யா வரவும் வேதா அவளை அழைத்து தன் பக்கத்தில் அமர்த்தி கொண்டார்.. இதை கண்ட விபுவிற்கு ஏமாற்றமாக இருந்தது.. “ இவளுக்கும் இந்த அம்மாக்கும் வேற வேலை இல்லை.. எப்ப பாரு கொஞ்சிகிட்டே” என்று மனதில் எண்ணியவனிடம் “ என்ன அண்ணா வடை போச்சா “ என்று கேட்டு மேலும் அவனை கடுப்பேத்தினாள் தேவி..

அவளுக்கு ஒரு முறைப்பை பதிலாக தந்துவிட்டு “ மல்லி, இவங்க என் பிரண்ட்ஸ் தான்.. நம்ம கல்யாணத்துக்கு இவங்க தான் எல்லா ஏற்பாடும் செய்ய போறாங்க..” என்று கூறினான்..

ஆனால் அதே நேரம் வைபவ் அதி முக்கியமான கேள்வி ஒன்றை கேட்டான் “ ஏன் மேடம் எப்பயுமே எல்லா கல்யாணம், இல்ல எந்த ஒரு விசேஷம் எதுவா இருந்தாலும் உங்க சமையல் ஆளுங்க தான் வருவாங்க.. இப்ப உங்க கல்யாணத்துக்கு எப்படி ?? ” என்றான் சிரித்துகொண்டே..

ஏனெனில் அவனுக்கு தெரியும் தொழில் நித்யா எத்தனை கறார் என்று.. அவளோ “ முதல்ல இந்த மேடம் எல்லாம் வேண்டாம்.. இப்ப தான் நம்ம  எல்லாரும் பிரண்ட்ஸ் அகிட்டோமே.. சோ கால் மீ நித்யா.. “ என்று கூறவும் கல்யாணும் வைபவும் அவளை ஆச்சரியமாக பார்த்தனர்..

விபு “ டேய் என்ன டா அமைதியா இருக்கீங்க??” என்று கேட்கவும் “ விபு நிஜமாவே நீ சாதனை தான் செஞ்சு இருக்க.. நித்யா எப்பயுமே ரெண்டு வார்த்தைக்கு மேல பேச மாட்டாங்க.. இன்னைக்கு இத்தனை பேர் இருக்கும் பொழுது அதுவும் சிரிச்சுகிட்டே வேற பதில் சொல்றங்கன்னா அது கண்டிப்பா உன் ட்ரைனிங்கா தான் இருக்கனும்.. என்ன நித்யா நாங்க சொல்றது சரி தானே  “ என்று விபுவில் ஆரம்பித்து நித்யாவில் முடித்தனர்..

நண்பர்களிடம் ஏற்படும் இயல்பான கேலி கிண்டலுடன் பத்திரிக்கை ஒரு வழியாக தேர்வு செய்து முடித்தனர்.. சந்திரவரதனும் வேதாவும் சிறு சிறு ஆலோசனை வழங்கியதோடு இளைய தலைமுறைக்கு வழிவிட்டு அழகாக அவர்களை வழிநடத்தினர்..

தேவி தான் விபுவையும் நித்யாவையும் சலிக்காமல் கிண்டல் செய்தாள்.. அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி தன் தோழியே தனக்கு அண்ணியாக வர போகிறாள் என்று..

“ ஓகே விபு.. நாளைக்கு காலையில உங்களுக்கு தேவையான பத்திரிக்கை அப்புறம் அதோட சாப்ட் காப்பி வந்துடும்.. போஸ்டல்ல அனுப்ப வேண்டியவங்களுக்கு அனுப்பிடுங்க.. மெயில் பண்ணி சொல் வேண்டியவங்களுக்கு மெயில் பண்ணிடலாம்.”

“ அப்புறம் நீயே மண்டபம் பார்த்து புக் பண்ணதுனால எங்களுக்கு ஒருவேளை மிச்சம். நாங்க இப்படியே போயி மண்டபம் பார்த்துட்டு என்ன மாதிரி அலங்காரம் செய்யலாம்ன்னு பிளான் பண்ணிட்டு நாளை பத்திரிக்கை குடுக்க வரும் பொது டிசைன்ஸ் கொண்டு வரோம்.. “ என்று கூறி விட்டு கல்யாணும் வைபவும் கூறிவிட்டு கிளம்பினர்..

நித்யாவிற்கு எல்லாமே ஆச்சரியமாக இருந்தது.. “அடுத்த வாரம் இந்நேரம் நான் இதே வீட்டில் மருமகளாக விபுவின் மனைவியாக வளைய வந்து கொண்டு இருப்பேன்” என்று என்னும் பொழுதே அவள் முகம் லேசாக சிவந்தது..

ஆனால் அடுத்த நொடியே “ அந்த கல்யாணமும் இப்படிதானே வேக வேகமா எல்லா ஏற்பாடும் நடந்தது.. கடைசியில் கடைசியில்.. “ என்று அதற்கு மேல் அவளால் எதுவும் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

அவளது முகத்தில் நொடிக்கு நொடி ஏற்படும் மாற்றங்களை எல்லாம் விபு கவனித்து கொண்டு தான் இருந்தான்.. ஆனால் வேதாவும் இதை கவனித்தார் என்று யாரும் அறியவில்லை..

தேனு பாட்டியும் அசோக்கும் தங்கள் பக்கம் யார் யாரை அழைக்க வேண்டும் என்று பேசி கொண்டு இருந்தனர்.. விபுவும் சந்திரவரதனும் தொழில் முறை பழக்கத்தில் யார் யாரை அழைக்க வேண்டும் என்று கலந்து பேசி கொண்டு இருந்தனர்..

வேதா ஏற்கனவே தேவியோடு அமர்ந்து தங்கள் குடும்பத்தில் அழைக்கவேண்டிய நபர்களின் பெயர்களை எல்லாம் ஒரு லிஸ்ட் தயாரித்து வைத்து இருந்தார்.. அதனால் இப்பொழுது கொஞ்சம் ரிலாக்ஸ்டாக அமர்ந்து இருந்தவர் நித்யாவை அழைத்து கொண்டு வீட்டை சுத்தி காட்டினார்..

“ நியாயமா பார்த்தா இந்த வேலை எல்லாம் என் பையன் பண்ணனும்.. நித்யா உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும் அதான் உன்னைய தனியா கூட்டிட்டு வந்தேன் “ என்றார் அவள் முகம் பார்த்து..

ஏற்கனவே மனம் சஞ்சலத்தில் இருப்பவர் தனக்கு மாமியாராக வர போகும் பெண்மணி தனியாக பேச அழைத்து வந்தால் இன்னும் குழப்பம் கூடாதா ??

“ என்.. என்ன ஆன்ட்டி ?? ” என்றாள் கொஞ்சம் பதற்றமாக.. ஆனால் விபுவின் அம்மாவோ “ முதல்ல நான் ஒன்னு சொல்லுறேன் நீ அதை கண்டிப்பா கேட்டு தான் அகனும் “ என்றார் முகத்திலும் குரலிலும் கண்டிப்பை காட்டி.. அவள் என்ன கூற போகிறாரோ என்று வேதாவையே பார்த்தாள்..

மெல்ல சிரித்தபடி “ முதல்ல ஆன்ட்டின்னு கூப்பிடுறதை நிறுத்து நித்யா.. நான் என்ன உனக்கு அந்நியமா அசலா ?? ஹ்ம்ம் உன் விபு ஓட அம்மா சோ உனக்கும் அம்மா மாதிரி தானே.. ஆனா அம்மான்னு எல்லாம் கூப்பிட சொல்ல மாட்டேன்.. வாய் நிறைய அத்தைன்னு கூப்பிடு நான் ரொம்ப சந்தோஷ படுவேன் “ என்றார் அவள் முகம் தடவி..

ஒரு நொடி என்ன கூற போகிறாரோ என்று இருந்தவள் வேதா கூறியதை கேட்டு மனம் சற்று சமன் பட்டது..” சரி ஆன்ட்.. இல்லை இல்ல சாரி அத்தை “ என்று கூறி நாக்கை கடித்தாள்..

அவரும் சிரித்தபடி “ உன்கிட்ட பேசணும் சொன்னேனே என்னன்னு கேட்க மாட்டியா ?? ” என்று கேட்டார்..

“ என்ன அத்தை ?? ”

“ எதுனாலும் நீ ப்ரீயா பேசலாம் நித்யா.. எனக்கும் உன் வயசுல ஒரு பொண்ணு இருக்கா.. சோ நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன்.. அப்புறம் நீ ஏதாவது மனசு விட்டு பேசணும், இல்லை உனக்கு மனசு எதா குழப்பமா இருக்கு உனக்கு ஒரு ஆலோசனை வேணும் அப்பிடின்னு தோணுச்சுன்னா நீ எந்த தயக்கமும் இல்லாம என்கிட்டே பேசலாம்.. “

“ நான் தப்பா நினைப்பேன்னு எல்லாம் நீ தயங்க வேண்டிய அவசியம் இல்லை.. அது நீ இங்க வந்து கொஞ்ச நாள்லயே உனக்கு புரிஞ்சிடும் நித்யா.. இதை எல்லாம் நான் ஏன் சொல்லறேன் தெரியுமா இப்ப உன் வாழ்கையும் என்  மகன் வாழ்க்கையும் ஒண்ணுன்னு ஆகிடுச்சு.. எனக்கு நீங்க ரெண்டு பேருமே சந்தோசமா இருக்கனும்..”

“ அதுவும் இல்லாம தேவிக்கு சிந்துவுக்கு எல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் நடந்து வேற வீட்டுக்கு போயிடுவாங்க.. நீயும் நானும் தான் நித்யா இந்த வீட்டுல கடைசி வரைக்கும் இருக்கனும்.. அதுனால நமக்குள்ள ஒரு நல்ல புரிதல் இருக்கனும்.. அதுக்கு நீ எதுனாலும் என்கிட்டே மனசு விட்டு பேசணும் “ என்று கூறி முடித்தார்..

நித்யாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.. ” எத்தனை அழகாக என் தாயகங்களை எல்லாம் தீர்த்துட்டாங்க அத்தை.. ரியலி கிரேட்..” என்று எண்ணியவள் “ ரொம்ப தேங்க்ஸ் அத்தை “ என்றாள்..

வேதா எதுவோ பதில் கூறும் முன் அங்கே வந்த விபு “ அட டா.. என்ன மா இது உங்க ரெண்டு பேரு கூடவும் பெரிய ரோதனையா இருக்கு.. எப்ப பாரு ஒன்னு மல்லி உங்க மேல சாஞ்சு போஸ் குடுப்பா.. இல்ல நீங்க அவ கன்னம் பிடிச்சு கொஞ்சி போஸ் குடுக்கறிங்க.. அம்மா உங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்கோம்.. மருமக வர குசில எங்களை மறந்துட வேண்டாம் “ என்று கூறி அவரை வம்பிழுத்தான்..

“ டேய் போடா போக்கிரி.. நித்யா நான் உனக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்.. இவன் சிரிக்க சிரிக்க பேசுறான்னு ரொம்ப நல்லவன்னு நினைச்சுடாத.. அத்தனையும் காரியம்.. எதா பேசி நம்மளை குழப்பி அவனுக்கு சாதகமா மாத்திடுவான்.. “ என்று தன் பங்கிற்கு மகனை வாரினார்..

நித்யாவிற்கு மனம் இப்பொழுது ஏனோ மிகவும் லேசாக இருப்பது போல இருந்தது.. அவள் முகம் தெளிவாக இருந்தது.. இதை கண்ட விபு தன் அன்னையை ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்து கொண்டான்..

“ சரி சரி விபு நேரம் ஆகுது.. இப்ப நல்ல நேரம் தான் சோ முகுர்த்த சேலை எடுக்க கிளம்புனா தான் சரியா இருக்கும்.. உன் தங்கச்சி வேற கடையவே திருப்பி போற்றுவா.. எப்படியும் வர ராத்திரி ஆகிடும்.. டிரைவர் கிட்ட சொல்லி பெரிய வண்டி எடுக்க சொல்லு “ என்று தன் மகனை கூறி அனுப்பினார்..

“ வா நித்யா இனி எல்லாரையும் கிளப்பி நாமலும் கிளம்ப நேரம் சரியா இருக்கும்.. இந்த சிந்து தான் அப்ப அப்ப எங்க போனானே தெரியல “ என்று நித்யாவையும் அழைத்து கொண்டு கிளம்பினார்..

தேவி சிந்துவிற்கு அழைத்தாள்.. சிந்துவோ “ எந்த கடைன்னு மட்டும் சொல்லு நான் அங்க வந்து ஜாயின் ஆகிடுறேன்..” என்று கூறிவிட்டாள்..

வேதா, சந்திர வரதன், தேவி, அசோக், தேனு பாட்டி ஒரு காரிலும், விபு மற்றும் நித்யா விபுவின் காரிலும் பயணித்தனர்.. நித்யாவிற்கு ஏனோ வேதாவை மிகவும் பிடித்து விட்டது..

விபுவிடம் “ அத்தை டூ நைஸ்ல.. எவ்வளோ ஸ்வீட்டா பேசுறாங்க தெரியுமா ?? “ என்று சிரித்தபடி கூறவும் அவன் முறைத்தான்.

“ என்ன முறைப்பெல்லாம் பலமா இருக்கு ?? ” என்று கேட்டாள்..

“ இருக்காத பின்ன.. உன்னைய லவ் பண்ண வைக்கவே நான் பட்டபாடு எனக்கு தான் தெரியும்.. கொஞ்சம் ரிலாக்ஸ்டாக லவ் பண்ணலாம்ன்னா அதுக்குள்ள இப்ப கல்யாணமும் முடிவு ஆகிடுச்சு.. உன்கிட்ட தினமும் நான் எவ்வளோ ஸ்வீட்டா பேசுறேன்..”

“ என்னைய ஒரு தடவையாது இப்படி சொல்லி இருக்கியா ?? ஹ்ம்ம் எப்ப பாரு நீங்க ரெண்டு பெரும் தான் ரொம்ப ஓட்டிக்கிட்டு இருக்கீங்க. இந்த தேவி வேற எப்ப பாரு கிண்டல் பண்ணியே என்னைய கொல்லுறா “ என்றான் கடுப்பாக..

விபு சிறுபிள்ளை போல முகத்தை வைத்து கொண்டு கூறுவதை பார்த்த நித்யாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.. வயிறை பிடித்துகொண்டு பலமாக சிரித்தாள்.. அவள் கேட்டது போல

“ என்ன சிரிப்பெல்லாம் பலமா இருக்கு ?? ” என்று கேட்டான்..

நித்யா சிரித்தபடி “ ஒண்ணுமில்ல, உங்க அம்மா கூட பேசுனதுக்கு இவ்வளோ பொறாமையா விபா உங்களுக்கு.. அப்ப கல்யாணத்துக்கு அப்புறம் தினம் தினம் உங்களுக்கு ஸ்டொமக் பர்னிங் தானா ?? ” என்று கூறி மீண்டும் நகைத்தாள்..                                         

இருவரும் இப்படியே ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கிண்டல் செய்து கொண்டும் பேசிக்கொண்டும் சந்தோசமாக போத்தீசை அடைந்தனர்.. இவர்களுக்கு முன்னே சிந்து வந்து அங்கு காத்து இருந்தாள்..

விபுவின் காருக்கு பின்னாடியே மற்றவர்களும் வந்து சேரவும் அனைவரும் ஒன்றாக கடைக்குள் நுழைந்தனர்..

நித்யாவிற்கு இதெல்லாம் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.. தன் பழைய விஷயங்கள் அனைத்தயும் மறந்து சந்தோசமா மற்றவர்களுடன் பேசியபடியும் சிரித்தபடியும் உடைகளை தேர்வு செய்தாள்..

கண்களாலேயே விபுவிடம்” இது நல்லா இருக்கா??” என்று கேட்பதும் அவன் அதற்கு தன் விழிகளால் பதில் கூறுவதும் அங்கே ஒரு காதல் நாடகம் அரங்கேறியது.. சிந்துவிற்கு இதை எல்லாம் காண காண மனம் இன்னும் கடுப்பாகியது.

தேவி தான் தன் அண்ணனையும் நித்யாவையும் கிண்டல் பேசிக்கொண்டே சந்தோசமாக பொழுதை போக்கினாள்..

இப்படி அனைவரும் தங்களுக்கு வேண்டியது, சொந்தங்களுக்கு குடுக்க வேண்டியது ஏராளமான உடைகளை தேர்வு செய்து பில் போட்டு முடிப்பதற்கு இரவே வந்து விட்டது..

மறுநாள் சென்று நகைகள் எல்லாம் எடுப்பதாக முடிவு ஆனது.. அசோக் நித்யா தேனு பாட்டியை திருமணம் முடியும் வரை அவன் வீட்டில் வந்து தங்குமாறு கூறினான்.. ஆனால் நித்யா மறுத்து விட்டாள்..

“ வேண்டாம் அண்ணா.. அது அப்பா அம்மா வாழ்ந்த வீடு.. எல்லாமே முறைப்படி அங்கேயே நடக்கட்டுமே.. அவங்க கடவுளா இருந்து அதை எல்லாம் பார்த்துகிட்டு தான் இருப்பாங்க.. அங்க இருந்தா எனக்குமே அவங்க கூட இருந்த மாதிரி இருக்கும் “ என்று கூறினாள்..

இதை கவனித்து கொண்டு இருந்த விபு தன் நண்பனை தனியே அழைத்து “ டேய் அசோக் கல்யாணம் முடியுற வரைக்கும் நீயும் குமுதாவும் அங்க நித்யா கூட இருங்கடா.. அதுவும் இல்லாம மண்டபத்திற்கும் அது தான் பக்கம் வேற.. நீங்க எல்லாம் கூட இருந்தா நித்யா மனசு பயம் இல்லாம இருக்கும்.. பாதுகாப்பாவும் இருக்கும் “ என்று கூறவும்

அவன் கூறியதன் பொருள் உணர்ந்து அசோக்கும் சரி என்று கூறினான்.. அதன் பின் அனைவரும் ஒரு ஹோட்டலில் உண்டுவிட்டு அனைவரும் தங்கள் இல்லம் நோக்கி சென்றனர்.

அசோக் “ நித்யா நீ பாட்டிய கூட்டிட்டு முன்னால போ.. நானும் உன் அண்ணியும் வீட்டுக்கு போயி எங்களுக்கு தேவையானது எல்லாம் எடுத்துட்டு வந்துடுறோம்..” என்று கூறி சென்று விட்டான்..

விபு தான் நித்யாவையும் தேனு பாட்டியையும் அழைத்து கொண்டு சென்றான்.. அவர்கள் கார் கிளம்பும் பொழுது அன்று வந்த அதே கார் தொடர்ந்து வருவதை கண்டுவிட்டான் விபு.. ஆனால் நித்யாவிடம் கூற வில்லை.. தன் தந்தைக்கும் அசோக்கிற்கும் குறுந்தகவல் மட்டும் அனுப்பி விட்டு அமைதியாக வண்டி ஓட்டினான்..

நித்யாவும் அன்று காலை இருந்து நடந்த அனைத்தையும் அசை போட்டபடி வந்ததால் பின்னே வந்த காரை கவனிக்கவில்லை.. தேனு பாட்டி தான் “ நித்யா கண்ணு பாங்க்ல இருக்க நகை எல்லாம் எடுக்கணும்டா.. அப்புறம் மாப்பிள்ளைக்கு நம்ம பக்கம் இருந்து நகை வாங்கணும் “ என்றார் சிரித்தபடி..

இதை கேட்ட விபு “ பாட்டி இத்தனை நாள் பாசமா பேராண்டின்னு சொன்னிங்க.. இன்னைக்கு என்ன மாப்பிள்ளையா ?? எப்பயும் போலவே கூப்பிடுங்க பாட்டி.. “

“ தென் நகை நித்யாவுக்கு போட தேவையான அளவு மட்டும் வெளிய எடுங்க.. அதே மாதிரி எனக்கு பண்ணனும்ன்னு எந்த பார்மாலிட்டியும் வேண்டாம் பாட்டி..” என்றான்..

இது எல்லாம் நித்யாவின் காதுகளில் கூட விழவில்லை.. தேனு பாட்டி  “ அது எப்படி பேராண்டி.. கல்யாணம்னா  சும்மாவா? செய்யுற முறை எல்லாம் சரியா தான் செய்யணும்.. அப்பத்தான் சொந்த பந்தம் முன்னாடி நாளைக்கு எங்க பொண்ணுக்கும் ஒரு மதிப்பு கிடைக்கும்.. நீ இதுல எல்லாம் தலையிடாத” என்று கூறி அவனது வாயை அடைத்து விட்டார்..

ஒருவழியாக அவர்களை இறக்கிவிட்டு தன் இல்லம் நோக்கி பயணிதான்.. அப்பொழுதும் அந்த கார் அவனது காரை தொடர்ந்து வந்தது.. அதை கவனித்தும் கவனிக்காதது போல இருந்துவிட்டான் விபு..

அதன் பிறகு அசோக்கும் தங்கள் உடைமைகளை எடுத்து கொண்டு நித்யாவின் இல்லம் வந்து சேர்ந்துவிட்டான்.. மறுநாளும் நல்ல நாள் என்பதால் அன்றே இருவரின் இல்லத்திலும் முகுர்த்த கால் நடுவதாக இருந்தது..

வேதாவும் அன்றே நித்யாவிற்கு முகுர்த்த வளையல் போட வருவதாக கூறிவிட்டார்.. அதை முடித்து அப்படியே அனைவரும் கிளம்பி தாலி வாங்கவும் மற்ற நகைகள் வாங்க முடிவு செய்யப்பட்டது..

நித்யா இதில் எல்லாம் முழு மனதுடன் பங்கு கொண்டாலும் மனதின் ஓரத்தில் ஒரு பயம் சஞ்சலம் இருந்து கொண்டே தான் இருந்தது.. திருமண நாள் நெருங்க நெருங்க அவளது அமைதியும் கூடி கொண்டே போனது…

இதெல்லாம் ஒரு புறம் மகிழ்ச்சியாக நடந்து கொண்டு இருக்க சிந்துவோ தன் கடைசி அஸ்திரத்தை தயார் செய்து கொண்டு இருந்தாள்..

அவளது மனம் மிகவும் சஞ்சலமாக இருந்தது.. ஏனெனில் வேதா கூறி கொண்டு இருந்தார் “ சிந்து குட்டி விபு கல்யாணம் முடியவும் உனக்கும் தேவிக்கும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கணும்.. இந்த கல்யாணம் தான் கொஞ்சம் அவசரமா நடக்குது.. உங்க ரெண்டு பேரு கல்யாணத்தையும் ரொம்ப க்ரேண்டடா பண்ணனும் “ என்று மேலும் அது பற்றி பேசி கொண்டு இருந்தார்.

இதை எல்லாம் கேட்கும் பொழுது சிந்துவின் மனம் சற்று குழம்பவே செய்தது “ இத்தனை பாசமா நம்ம மேல.. அவங்க பொண்ணுக்கு எப்படி பண்ணணுமோ அது போல தானே நமக்கும் பண்ண நினைக்கிறாங்க.. நாம தான் ஒருவேளை தப்பா எதுவும் புரிஞ்சுகிட்டோமோ “ என்று எண்ணினாள்..

அவளது மனம் அன்று தன் கம்பெனி மேனேஜர் கூறியது எல்லாம் நினைவு வந்தது..

முதலில் அந்த மேனேஜெரின் பொறுப்பில் தான் சந்திர வரதன் சிந்துவின் தந்தையின் கம்பனியை விட்டு இருந்தார்.. இது தான் சமயம் என்று அந்த நபர் பொய் கணக்கு எழுதுவதும், பணத்தை சுருட்டுவதுமாக நட்ட கணக்கு காட்டி வந்தார்.. முதலில் இதை சந்திர வரதனும் நம்பதான் செய்தார்.. ஆனால் நாட்கள் ஆக ஆக எவ்வளோ முதலீடு போட்டாலும் அதில் எதிர்பார்த்த லாபம் வரவில்லை என்று மனம் சந்தேக பட்டது..

தனியாக வேறு ஒரு நபரை வைத்து அங்கே என்ன நடக்கிறது என்று விசாரிக்க வைத்தார்.. அதன் பின்னரே அந்த மேனேஜர் செய்த அனைத்து விசயங்களும் வெளியே வந்தது..

தன் ரகசியம் வெளியே தெரிந்து  விட்டது என்று தெரிந்ததும் அந்த நபர் சந்திர வரதனின் காலில் விழுந்து கெஞ்சினார் தன்னை வேலையை விட்டு நீக்கி விட வேண்டாம் என்று.. ஆனால் நம்பிக்கை துரோகம் இளைத்தவனை மன்னிக்க மனம் வரவில்லை அவருக்கு.. வேலையை விட்டே நீக்கியது மட்டும் இல்லாமல் வேறு எங்கும் வேலை கிடைக்காதபடி செய்து விட்டார் சந்திரவரதன்..

அன்றிலிருந்து அந்த நபருக்கு விபுவின் குடும்பத்தின் மேல் வன்மம் கூடியது. எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று சமயம் பார்த்து இருந்தார்.. அப்பொழுதுதான் அந்த கம்பெனி சிந்துவின் கைகளுக்கு வந்துவிட்டது என்று அவருக்கு தெரிந்தது..

உடனே ஒரு திட்டம் தீட்டினார்.. சிந்துவை வைத்து விபுவின் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்த நினைத்தார்.. அதற்கான காரியத்திலும் இறங்கினார்..

வேண்டும் என்றே சிந்துவின் முன் இறக்கம் வருவது போல நடந்து கொண்டார்.. முதலில் இதை கவனிக்கத சிந்து அதன் பின் அழைத்து பேசினாள். அவளிடம் “ நீ வரதுக்கு முன்னாடி வரைக்கும் நான் தான் மா இந்த கம்பனியை பொறுப்பா பார்த்துகிட்டு இருந்தேன்” என்று கூறி தன் நடிப்பை ஆரம்பித்தான்..

“ அப்படியா அங்கிள்.. அப்புறம் ஏன் வேலையை விட்டு நின்னுடீங்க ??” என்று கேட்டாள் அப்பாவியாக..

“ நான் எங்க மா நின்னேன்.. படுபாவிங்க.. அப்பனும் மகனும் சேர்ந்து என்னைய துரத்தி அடுச்சுட்டாங்கமா.. என் வாழ்க்கையவே நாசம் பண்ணிடனுங்க.. எங்க என்னய மாதிரி நீயும் ஆகிட கூடாதேன்னு தான் ஒரு வேகத்துல உன்னைய பார்க்க கிளம்பி வந்தேன்” என்றான் பரிதாபமாக..

“ வாட்.. யாரு உங்கள என்ன பண்ணாங்க ?? ஆனா நீங்க சொல்லுறது எல்லாம் நம்புற மாதிரி இல்லையே ?? ” என்றாள் சந்தேகமாக..

“ இப்ப நான் சொல்லுறது எல்லாம் நம்புற மாதிரி இருக்காதுதான்.. ஆனா நீ வாழ வேண்டிய இளம் குருத்து.. இந்த வரதன் குடும்பத்துகிட்ட மாட்டி உன் வாழ்கையும் கெட்டு போயிட கூடாது.. அதனால தான் சொல்லுறேன்.. தயவு செஞ்சு நான் சொல்லுறதை நம்பு மா” என்று அவளது காலில் விழ போனார்..

“ ஐயோ!!! என்ன பண்ணுரிங்க ?? நில்லுங்க.. ஏன் இப்படி எல்லாம் நடந்துகிறிங்க?? நான் எப்படி நீங்க சொல்லுறதை எல்லாம் நம்புறது?? ” என்று கேட்டாள்..

அதற்கு தான் தயாரித்து வைத்த போலியான ஆதாரங்களை எல்லாம் காட்டினார் அந்த நபர்.. “ இதெல்லாம் பாரு மா.. அவங்களுக்காக நான் நாயா உழைச்சு இருக்கேன்.. இத்தனை வசதி, இத்தனை பேரு புகழ் எல்லாம் எப்படி அவங்களுக்கு வந்துச்சுன்னு நினைக்கிற எல்லாம் இந்த கம்பெனி அவங்க கிட்ட இருந்தனால தான்.”

“ நேரம் காலம் பார்க்கமா நான் இங்கயே கிடந்தேன்..  கோடி கோடியா வருமானம் வந்தது.. எல்லாத்தையும் அவங்க கம்பனிக்கு முதலீடு பண்ணி இந்த கம்பனிக்கு நட்ட கணக்கு எழுத சொன்னாங்க. நான்  மாட்டவே மாட்டேன் அப்படின்னு சொன்னேன் “

“ அதுக்கு அந்த சந்திரன் இங்க பாரு நாங்க சொல்லுற மாதிரி பண்ணுனா உனக்கு தான் நல்லது.. இன்னும் கொஞ்ச நாள்ள அந்த பொண்ணு வந்திடும். அதுகிட்ட இதை எல்லாம் ஒப்படைக்கணும்.. அதுக்குள்ள நான் சொல்லுறதை எல்லாம் முடிச்சு குடுக்கணும்னு என்னைய போட்டு படுத்துனாரு “

“நான் எவ்வளவோ சொன்னேன் அது பாவம் தாய் தகப்பன் இல்லாத பொண்ணு.. இத்தனை நாள் தான் இதுல இருந்து வர வருமானத்தை எல்லாம் நீங்க எடுத்திங்க.. கடைசியில் அந்த பொண்ணு வாழ்க்கையும் கெடுத்துட வேண்டாம்னு எவ்வளவோ கெஞ்சினேன். அதுக்கு பலன் என்னைய கையாடல் பண்ணிட்டேனு பொய் சொல்லி வேலையே விட்டே நீக்கிட்டாங்க..”

“ நீ உலகம் அறியாத சின்ன பொண்ணு.. நீ வந்து கேட்ட உடனே கம்பனியை உனக்கு குடுக்க தயங்கி இருப்பாங்களே “ என்று அவளிடம் மெல்ல கேட்டார்.. சிந்துவிற்கு இதை எல்லாம் கேட்க கேட்க தலையே சுற்றியது.. இப்படியும் இருக்குமா இதெல்லாம் உண்மையா என்று குழம்பி தவித்தாள்..

ஆனால் அவளது போறாத காலம் அந்த நபர் கூறுவதை அவள் மூளை ஏற்றுகொண்டது “ ஆமா அங்கிள் நான் வந்ததும் கம்பனியை குடுக்க அவங்க தயங்கினாங்க.. நான் தான் பிடிவாதமா பேசி வாங்கினேன்” என்று கூறினாள்..

“ ஆமா மா உனக்கு இதை குடுக்கக் அவனுங்களுக்கு கொஞ்சம் கூட மனசு இல்லை.. நீ வந்ததும் எதோ ஒரு மாப்பிள்ளையை பார்த்து உன்னைய அனுப்பிடனும்ன்னு இருந்தாங்க.. அதிலும் இந்த விபு இருக்கானே.. அப்பனுக்கு மேல..  நீ தான் மா பார்த்து நடந்துக்கணும் “ என்றார் அவள் மீது அக்கறை இருப்பவர் போல..

“ ஹ்ம்ம் சரி அங்கிள் நான் பார்த்து நடந்துக்கிறேன்.. நீங்க கவலை படமா போய்ட்டு வாங்க “ என்று கூறினாள்..

“ நான் வந்து பேசுனது அவங்க யாருக்கும் தெரிய வேண்டாம்மா. அப்புறம் என்னய கொன்னாலும் கொன்னுடுவாங்க.. நீ எந்த உதவி வேணாலும் என்கிட்டே கேளு “ என்று நல்லவர் போல வந்த வேலையை முடித்துவிட்டு சென்றார்..

அன்றிலிருந்து சிந்துவின் மனம் ஒரு நிலையில் இல்லை.. சந்திர வரதனும் விபுவும் எது செய்தாலும் அது அவளுக்கு தப்பாகவே தெரிந்தது. இவளது நன்மைக்கு என்று எது கூறினாலும் அது அவளுக்கு விஷமாகவே பட்டது. அவர்களின் V.S குழுமத்தில் தனக்கும் உரிமை இருப்பதாகவே அவள் மனம் எண்ண ஆரம்பித்தது..

இதை அப்படியே அந்த கயவனிடமும் கூறினாள்.. அதை கேட்ட அவன் “ என்னமா இப்படி சொல்லிட்ட.. உனக்கு தான் அதில் நிறைய பங்கு இருக்கு.. ஆனா கேட்டா குடுக்கக் மாட்டானுங்க. குடும்ப தொழில், நிறைய பேருக்கு பதில் சொல்லனும் அப்படி இப்படின்னு சொல்லி முடியாது சொல்லுவாங்க..” என்றான்..

“ அதெப்படி அங்கிள் நான் நேராவே கேட்டா கூட அவங்க எப்படி முடியாது சொல்ல முடியும்.. நம்மகிட்ட தான் இவ்வளோ ஆதாரம் இருக்கே “ என்று கேட்டாள்..

“ நீ கேட்டு பாருமா. ஆனா நேரடியா எதுவும் கேட்காத.. சுதாரிப்பு வந்திடும். நான் சொல்லுறது போல கேளு “ என்று அவளுக்கு ஒரு சில யோசனைகளை வாரி வழங்கினார்.. இதற்கு நடுவில் தன் புத்தியுடன் பிறந்த தன் மகளையும் சிந்துவிற்கு தோழியாக பழக வைத்துவிட்டார்.

சிந்துவும் அவர் கூறியது போல சந்திர வரதனிடம் “ ஏன் அங்கிள் கிட்டத்தட்ட இருபது வருசமா இந்த கம்பெனி உங்க பொறுப்புல தான் இருக்கு.. அப்புறம் ஏன் இந்த கம்பனியை மட்டும் உங்க குரூப் கூட சேர்க்கலை..” என்று கேட்டாள் அப்பாவியாக..

விபுவின் தந்தையும் இவளது சூழ்ச்சி புரியாமல் “ இல்ல சிந்து மா அது எல்லாம் குடும்ப சொத்து.. சின்ன தாத்தா பெரிய தாத்தா பிள்ளைங்கன்னு எல்லாருக்கும் பதில் சொல்லணும். எங்களை பொறுத்த வரைக்கும் நீ எங்க பொண்ணு தான் டா.. ஆனா இதை மத்தவங்களும் ஏத்துகனுமே?? அதுவும் இல்லாம நீ இன்னொரு வீட்டுக்கு வாழ போற பொண்ணு.. சொத்து, பிசினஸ் இது எல்லாம் உனக்கு ஒரு பிரச்சனையா இருக்க கூடாது பாரு.. அதான் உன்கிட்ட ஒப்படைக்கிற வரைக்கும் தனியாவே வச்சு இருக்கோம் “ என்று காரணம் கூறினார்..

தன் முகத்தில் எதையும் காட்டி கொள்ளாமல் சிரித்தபடி கேட்டு கொண்டு இருந்தாள் சிந்து.. அவர் அந்த பக்கம் போன பிறகு “ என்ன ஒரு சூழ்ச்சி.. என் கம்பெனில இருந்து வர பணம் மட்டும் வேணும். ஆனா எனக்கு பங்கு குடுக்க மட்டும் முடியாது”

“ கேட்டா குடும்ப சொத்து, அது இதுன்னு காதுல பூ சுத்துரிங்களா ?? எனக்குன்னு யாரும் இல்லைனு தானே என்னைய இப்படி ஏமாத்தி வச்சு இருக்கீங்க.. இருக்கட்டும் இருக்கட்டும் இந்த சிந்து யாருன்னு காட்டுறேன்.. உங்க குரூப்ல இருந்து எனக்கு சேர வேண்டிய பெரும் பங்கு ஷேர்ஸ் நான் வாங்காம விட போறது இல்லை..” என்று மனதில் முடிவு செய்து அந்த மேனேஜர்கு போனை போட்டு பேசினாள்..

முதலில் அவன் கூறிய திட்டம் எல்லாம் விபுவை மடக்கி அவனை திருமணம் செய்துகொள் அதன் பிறகு பங்கு என்ன முழுவதுமே உனக்கு தான் வந்து சேரும்.. ராணி மாதிரி உட்கார்ந்த இடத்திலேயே ஆட்சி செய்யலாம்.. எல்லாரையும் ஆட்டி படைக்கலாம்.. “ என்று புத்திமதி கூறினார்.. ஆனால் சிந்துவோ

“ என்ன நான் விபுவை கல்யாணம் பண்ணனுமா ?? முடியவே முடியாது.. அவனும் அவன் பழக்க வழக்கமும்.. எப்ப பாரு ரூல்ஸ் லாஜிக் பேசிக்கிட்டு.. என்னால முடியாது.. அதுவும் இல்லாம அவனை என் வாழ்கை துணையா எல்லாம் நினைச்சு கூட பார்க்க முடியாது அங்கிள்.. சோ வேற ஐடியா சொல்லுங்க “ என்று கூறிவிட்டாள்..

“ சரி மா எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் குடு யோசனை பண்ணி சொல்லுறேன்..” என்று கூறிவிட்டு அந்த ஆள் சென்று விட்டான்.. அன்றிலிருந்து அவனும் அவன் மகள் கூறுவதும் தான் சிந்துவிற்கு வேத வாக்கு.. விபு நித்யாவை விரும்புவது தெரிந்ததும் முதலில் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது..

அதன் பின் நித்யாவின் பழைய கதை எல்லாம் தெரிய வரவும் அதை எப்படி தங்களுக்கு சாதகமாக மாற்றலாம் என்று யோசித்தனர்.. யோசிதவர்களுக்கு ஒரு பெரிய திட்டம் வாய்த்தது..   

அப்பாவும் மகளும் தான் இதை கூறினர்” இங்க பாரு சிந்து உன்னைய நாங்க அந்த விபுவை  கல்யாணம் செஞ்சு குடும்பம் நடத்த சொல்லல.. ஆனா உன் கனவு நிறைவேறணும்னா நீ கொஞ்ச நாளாவது அந்த வீட்டு மருமகளா இருக்கனும். அப்பத்தான் நீ எதிர் பார்க்கும் உரிமை உனக்கு கிடைக்கும் “ என்று கூறவும் சிந்து அதிர்ந்து நோக்கினாள்..

“ முதல்ல நாங்க சொல்லுறதை பொறுமையா கேளு மா.. இந்த கல்யாண ஏற்பாடு எல்லாம் நடக்கட்டும்.. ஆனா உன்னால எவ்வளோ முடியுமோ அவ்வளோ அந்த பொண்ணு நித்யா மனசை குழப்பு.. நமக்கு  வேண்டியது எல்லாம் கடைசி நேரத்துல கல்யாணம் நிக்கணும் “

“ கடைசி நிமிஷம் அந்த பொன்னு இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லி போகணும். சொந்த பந்தம் முன்னாடி வேற வழி இல்லாம அந்த சந்திரனும் அவன் பொண்டாட்டியும் உன் கால்ல வந்து விழுவாங்க.. நீயும் நல்ல பொண்ணாட்டம் அவங்களுக்கு சம்மதம் சொல்லி விபு கையாள ஒரு தாலிய மட்டும் வாங்கு “

“ அவன் எப்படியும் அந்த நித்யா பொண்ணு பின்னால தான் போக நினைப்பான். அவன்கிட்ட சொல்லு நீங்க எப்ப விவாகரத்து கேட்டாலும் நான் தரேன்னு.. நீங்க விரும்புன பொண்ணு கூட நீங்க சந்தோசமா வாழணும்னு சொல்லு. “

“ அவனும் இது தான் வாய்புன்னு விவாகரத்துக்கு எல்லா ஏற்படும் செய்வான்.. ஏன்னா அவன் மனசு அந்த பொண்ணு கூட சேர தான் துடிச்சுகிட்டு இருக்கும். அதுனால அவன் மூளை ரொம்ப வேலை செய்யாது.. நீ என்ன கேட்டாலும் குடுப்பான்..”

“ அந்த சந்திரனுக்கும் தன் மகன் வாழ்க்கை முக்கியமா இல்லை சொத்து முக்கியமான்னு வந்தா மகன் பக்கம் தான் சாய்வான்.. நீ பாட்டுக்கு லட்டு மாதிரி உனக்கு எவ்வளோ பங்கு வேணுமோ கேட்டு எந்த பிரச்னையும் இல்லாம வெளிய வந்துடலாம்.”

“ உனக்கு பங்குக்கு பங்கும் ஆச்சு.. அவனுங்களை பழி வாங்குன மாதிரியும் ஆச்சு.. அதே நேரம் நீ எதிர் பார்த்த மதிப்பு, மரியாதை, தொழில் பங்கு எல்லாம் கிடைக்கும்.. உன்னைய கேட்காமலும் அவனுக பிசினஸ்ல எதுவும் செய்ய முடியாது.. கடைசி வரைக்கும் கண்ணுல விழுந்த தூசியா அவனுங்களை படுத்தி எடுக்கலாம்..”

என்று அழகாய் திட்டம் தீட்டினர் மூவரும்.. சிந்துவிற்கு இதை எல்லாம் தான் எப்படி செய்ய போகிறோம் என்று முதலில் மலைப்பாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவளது மனம் முழுக்க முழுக்க மாறிவிட்டது..

எப்படியாவது இவர்கள் அனைவரையும் ஆட்டி படைக்க வேண்டும் என்று தான் இப்பொழுது தங்களின் கடைசி திட்டத்தை நிறைவேற்ற காத்து இருந்தாள்.. அதையும் அவளது தோழி செய்வதாக கூறிவிடவும் ஒவ்வொரு நொடியும் சிந்து விபு நித்யாவின் திருமண நாள்காக காத்து இருந்தாள்..

இதோ நாளை விடிந்தாள் திருமணம்.. சிந்துவின் மனம் எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என்று மனதில் உரு போட்ட படி இருந்தது..

இதையே தான் விபுவும் நித்யாவும் எண்ணியபடி உறக்கம் இல்லாமல் படுத்து இருந்தனர்.. தங்களின் வாழ்கையில் வர போகும் விடியலுக்காக காத்து இருந்தனர்..

                        மனம் – மயக்கும்..                      

                                                                                

Advertisement