Advertisement

மனம் – 13

 “ நித்யா நீ ரொம்ப வீம்பு பண்ணுற.. இப்படியே இருந்த அப்புறம் எங்க அண்ணன் உன்னய தூக்கிட்டு போயி தான் தாலி கட்டுவான்.. நீ என்ன சின்ன புள்ளையா ?? ” என்று அறிவுரை கூறுவது போல திட்டி கொண்டு இருந்தது தேவசேனா தான்..

தேவசேனாவும் சிந்துவும் நித்யாவின் இல்லத்திற்கு வந்து இருந்தனர்… சிந்து நல்ல பிள்ளை போல தன் கம்பெனி பொறுப்புகள் முழுவதையும் மீண்டும் சந்திர வரதனிடமே ஒப்படைத்து விட்டாள்.. ஆனாலும் தொழில் பழகுகிறேன் என்று அவ்வபோது விபுவின் அலுவலகத்திற்கும், சந்திரவரதனின் அலுவலகத்திற்கும் சென்று வந்து கொண்டு இருந்தாள்..

ஆனால் ஒரு கணம் கூட நித்யா மற்றும் விபுவிற்கு நடுவில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்க தவறவில்லை..

அன்று நித்யாவின் பிறந்த நாள் இரவு நித்யாவும் விபுவும் வீடு திரும்பும் வேலை வரை எல்லாம் நன்றாக தான் இருந்தது.. ஆனால் தங்களுக்கு பின்னால் ஒரு கார் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதை விபு தான் முதலில் கவனித்தான்.. அத்தனை நேரம் அவன் முகத்தில் இருந்த உற்சாகம் சற்றே மறைந்து குழப்ப ரேகைகள் படர்ந்தன..

அவன் அமைதியாக வருவதை கண்ட நித்யா தன் விழி திறந்து அவனை பார்த்தாள்.. அவள் பார்ப்பதை உணர்ந்த விபு வேகமாக தன் முகத்தை மாற்றி கொண்டான்.. “ என்ன விபா எதுவும் பிரச்சனையா ?? ” என்று கேட்டாள் அவனின் மல்லி..

“ அதெல்லாம் ஒன்னும் இல்லை மல்லி.. ஒரு சின்ன குழப்பம்..”

“ என்ன குழப்பமா ?? இவ்வளோ நேரம் எனக்கு அட்வைஸ் எல்லாம் பண்ணிங்க..  இப்ப என்ன ஆச்சு உங்களுக்கு ?? ”

“ மல்லி பின்னால வர கார் நம்மளை மோட்டல்ல இருந்து தொடர்ந்து வருதுன்னு நினைக்கிறன்..  நான் முதல்ல சாதரணமா தான் நினைச்சேன் மல்லி. பட்  இப்ப தான் புரியுது அது நம்மளை தான் தொடர்ந்து வருதுன்னு..” என்றான்

“ வாட்.. பாலோ பண்ணி வருதா ?? என்ன விபா சொல்றிங்க ??” என்று வேகமாக ஜன்னல் பக்கம் திரும்பி வெளியே எட்டி பார்த்தாள்..

“ ஹே ஹே மல்லி என்ன பண்ணுற.. எட்டி பார்க்காத.. சொன்னா கேளு.. முதல்ல ஜன்னல்ல சாத்து.” என்று கூறிவிட்டு காரை வேகம் எடுத்தான்..  

அவனது முகமும், குரலுமே எதுவோ பிரச்னை என்று உணர்த்தியது நித்யாவிற்கு. அவன் கூறியதை செய்துவிட்டு  “விபா “ என்றாள் குரல் இறங்க..

ஒரு கையால் அவளது கையை பற்றி “ நத்திங் டு வொர்ரி மல்லி.. நான் தான் இருக்கேன்ல.. எதுவும் இல்லை.. “ என்று அவன் அவளுக்கு கூறிக்கொண்டு இருக்கும் பொழுதே வேகமாக பின்னே வந்த கன்டைனர் லாரி ஒன்று இவர்கள் காரை இடிப்பது போல வந்து முன்னே சென்றது..

விபு தான் எப்படியோ சமாளித்து தங்கள் காரை ஒரு ஓரமாக நிறுத்தினான்.. இருட்டாக வேறு இருந்ததாலும் அவசரத்தில் நிறுத்த முயற்சி செய்ததாலும் கீழே இருந்த பெரிய கல் அவனது கண்களுக்கு தெரியவில்லை..

கல்லில் மோதி தான் நிறுத்தினான்.. மோதிய வேகத்தில் அவனுக்கு தலையில் சிறு அடி பட்டு வீங்கி விட்டது.. நித்யாவிற்கும் தோளில் தான் அடி.. ஆனால் கன்டைனர் லாரி  சற்று இடித்திருந்தால் கூட இருவரும் என்ன ஆகியிருப்பர் என்று நினைத்து கூட பார்த்து இருக்க முடியாது..  

கண் இமைக்கும் நொடியில் இது நடந்தது என்பதால் இருவருமே எதிர் பார்கவில்லை.. நித்யா தான் பதறிவிட்டாள்.. “ விபா “ என்று வேகமாக அவனை பார்த்தாள் அவன் இறுகிய முகத்துடன் அமர்ந்து இருந்தான்..

“ உங்.. உங்களுக்கு எதுவும் அடி படலையே விபா ?? ” என்ற கேள்வியோடு அவனை ஆராய்ந்தாள்.. ஒரு ஆழ்ந்த மூச்சை வெளி விட்டு.. “ ஒண்ணுமில்லை மல்லி “ என்று கூறி பின்னே திரும்பி பார்த்தான்.. இதுவரை அவர்களை தொடர்ந்து வந்த அந்த கார் அங்கு இல்லை..

“ ஊப்..” என்று பேரு மூச்சு விட்டவன் கண்களை இறுக மூடி சாய்ந்து அமர்ந்தான்.. அங்கே ஒரு பயம் கலந்த அமைதி நிலவியது..

“ மல்லி நீ எதுவும் நினைக்காத.. இது சாதாரண விசயம்.. ரோட்ன்னு இருந்தா இதெல்லாம் சகஜம் தான்.. சோ “ என்று அவன் அவளுக்கு ஆறுதல் கூறும் பொழுதே அவள் அழ தொடங்கிவிட்டாள்..

“ ஹேய் மல்லி.. ஏன் டா அழுகுற.?? . வேண்டாம்.. இங்க பாரு கண்ணை திறந்து பாரு மல்லி.. நமக்கு ஒன்னும் ஆகலை. இது.. இது எல்லாம் சகஜம் தான்.. பிசினஸ்ல எனக்கு நிறைய எதிரிங்க இருக்காங்க.. சோ இதெல்லாம் நான் பேஸ் பண்ணி தான்  ஆகனும்.” என்றான் அவளை தன் மேல் சாய்த்து..

அவன் மார்பில் முகத்தை புதைத்து இருந்தவள் மெல்ல தன் விழிகளை மட்டும் உயர்த்தி “ இது.. இப்படி.. இப்படி எல்லாம் இதுக்கு முன்னாடி நடந்து இருக்கா விபா ?? ” என்று கேட்டாள்  பரிதாபமாக..

அவள் எதற்கு கேட்கிறாள் என்று சற்றும் யோசிக்காமல் அவள் பரிதாபமாக கேட்டதில் “ இப்படி நடந்தது இல்லை.. பட் போன் கால்ஸ் நிறைய மிரட்டல் எல்லாம் வரும்.. பட் இதெல்லாம் சில்லி மேட்டர் டா.. எனக்குமே இது தான் முதல் டைம் இப்படி “ என்று அவளை சமாதானம் செய்கிறேன் என்று அவளது இடியை இறக்கினான்..

“ என்ன.. உங்.. உங்களுக்கு.. “ என்று கூற வந்தவள் “ எல்லாம் என்னால தான் விபா.. “ என்று கூறி முடித்தாள்.. அவன் புரியாமல் பார்த்து வைத்தான் அவளை..

“ ஆமா விபா. இத்தனை நாள் உங்களுக்கு இப்படி நடந்து இருக்கா ?? இல்லையே.  இதோ இன்னைக்கு தான் நம்ம கல்யாணம் பத்தி பேசி முடிச்சாங்க. பாருங்க இன்னைக்கே இப்படி ஒரு சம்பவம் நடந்ததுன்னா… ப்ளீஸ் விபா… நான் .. நான் “ என்று கூற முடியாமல் வார்த்தைகளை முழுங்கினாள்..

நித்யா என்ன கூற வருகிறாள் என்று புரிந்தும், “ ஹ்ம்ம் சொல்லு.. சொல்லி முடி.. நீ ?? ” என்றான் கோவமாக… அவனது குரலில் இருந்த அழுத்தமே அவளுக்கு வியர்க்க வைத்தது..

“ அது வந்து.. நான் சொல்லுறதை நீங்க நல்லா புரிஞ்சுக்கணும்.. இப்ப நடந்தது..” என்று அவள் திக்கி திணறி பேசும் பொழுதே தன் கைகளை போதும் என்பது போல உயர்த்தி “ முதல்ல நீ என்ன சொல்ல வந்த அதை மட்டும் சொல்லு “ என்றான் அவளது விழிகளை ஊடுருவி..

அவனது பார்வையை நேர்கொண்டு காண முடியாமல் தலை குனிந்தாள்.. அவளது முகத்தை மெல்ல நிமிர்த்தினான் “சொல்லு மல்லி “ என்று மீண்டும் கேட்டான். அவனது முகமும் பேசுமே புரிந்தது விபு எல்லையில்லா கோபத்தில் இருக்கிறான் என்று..

ஆனாலும் நித்யாவிற்கு தேவை விபு எந்த வித ஆபத்தும் இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும்.. அது ஒன்றே அவளுக்கு போதும். அதனால் தைரியத்தை வரவழைத்து  “ நான்.. நான் உங்களுக்கு வேண்டாம் விபா “ என்றாள் குரலே எழும்பாமல் கண்ணீர் வழிந்தபடி..

இதை கேட்டவன் பதில் எதுவும் கூறாமல் இறுகிய முகத்துடன் காரை புயலென கிளப்பினான்.. நேராக நித்யாவின் வீட்டிற்கு முன் சென்று நிறுத்தினான்.. அவளை இறக்கி விட்டு அவளது முகம் கூட பார்க்காமல் காரை கிளப்பிக்கொண்டு சென்று விட்டான்.. அவன் போன பாதையை இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தாள்..

இது நடந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன.. விபுவிடம் இருந்து எந்த போன் காலோ இல்லை குருந்தகவளோ இல்லை.. நித்யாவும் எதுவும் செய்யவில்லை. ஆனாலும் அவளது மனம் ஒவ்வொரு நொடியும் அவனை நினைத்து ஏங்கியது..

அவனது கோவமும் அமைதியும் அவளை போட்டு வாட்டி எடுத்தது.. சாதரணமாக நடந்து கொள்ள முடியவில்லை.. மெஸ்சுக்கும் செல்ல வில்லை.. எதோ பெயருக்கு உண்பது உறங்குவது என வீட்டில் சுற்றி கொண்டு இருந்தாள்…

தேனு பாட்டி எத்தனை கூறியும் அவள் மனம் ஆறவில்லை.. அவள் மனதில் இருந்தது எல்லாம் விபுவுடன் அவள் சேர்ந்து வாழவில்லை என்றாலும் பரவாயில்லை அவன் நன்றாக இருக்க வேண்டும்.. அதுவும் முதலில் உயிரோடு இருக்க வேண்டும்..

“ ச்சே நான் பாட்டுக்கு நான் உண்டு என் வேலையுண்டுன்னு இருந்தேன்.. இவன் ஏன் என் வாழ்கையில வந்தான்..?? ” ஏன் விபா ஏன் ?? ஏன் என்கிட்டே இவ்வளோ காதலை காட்டுறிங்க ?? என்னால உங்களுக்கு எப்பையுமே கஷ்டம் மட்டும் தான் விபா வரும்.. இதுக்கு தானே நான் உங்களை விட்டு ஒதுங்கி ஒதுங்கி போனேன்..” என்று மனதிற்குள்ளேயே அவனிடம் பேசினாள்..

இப்படி இவள் அமைதியாக இருப்பதை கண்டு தான் தேனு பாட்டி மிகவும் குழம்பி போய்விட்டார்.. என்ன செய்வது என்று தெரியாமல் விபுவிற்கு போன் போட்டு பேசினார்.. அவன் என்ன கூறினானோ ஆனாலும் இவர் மனம் மட்டும் தெளிய மறுத்தது..

விபு தான் தேவியை அனுப்பி வைத்து இருப்பான் போல.. ஆனால் கூடவே ஒட்டுண்ணியாக சிந்துவும் ஒட்டி கொண்டு வந்துவிட்டாள்..

“ இங்க பாரு நித்யா உனக்கு நாங்க எடுத்து சொல்லி தான் புரியணும்னு எதுவும் இல்லை.. அன்னைக்கு நீ சரி சொன்ன அப்புறம் தான் இந்த கல்யாண ஏற்பாடே பண்ண ஆரம்பிச்சோம்.. இன்னும் அப்பா அம்மாகிட்ட அண்ணன் எதுவும் சொல்லலை.. அவங்களுக்கு தெரிஞ்சா அவங்க மனசு எவ்வளோ கஷ்ட படும் நீயே நினைச்சு பாரேன் “ என்று சிறு பிள்ளைக்கு கூறுவது போல கூறினாள் தேவி..

ஆனால் சிந்துவோ “ என்ன தேவி இது.. நித்யா தான் எவ்வளோ பயந்து போயி இருக்கா பார்த்தையில.. இப்போ போயி கல்யாணத்துக்கு கட்டாயம் செய்யலாமா.. அவளுக்கு கொஞ்சம் டைம் குடுத்து தான் பார்க்கணும் “ என்று நித்யாவிற்கு ஆதரவாக பேசுவது போல பேசினாள்..

ஆனால் இவர்கள் இருவரும் தான் பேசிக்கொண்டு இருந்தனரே ஒழிய சம்பந்தப்பட்ட நித்யமல்லிகா வாயே திறக்கவில்லை..

அந்நேரம் விபு புயலென உள்ளே நுழைந்தான்.. “ ஹேய் நீ என்ன தான் டி நினைச்சுகிட்டு இருக்க?? ” என்று கேட்டுகொண்டே வந்தான்..

அவன் வருவான் என்று யாருமே எதிர் பார்கவில்லை.. சிந்து “ ச்சே இவன் எதுக்கு இப்ப வந்தான்.. தேவி மட்டும் இருந்தா கூட நாம ஏதாவது பேசி நித்யாவை குழப்பி விடலாம்.. இப்ப இவன் வந்துட்டா அவளோதான் “ என்று பல்லை கடித்தாள்..

தேவி “ அண்ணா கொஞ்சம் பொறுமையா பேசு.. நான் தான் அவ கிட்ட எடுத்து சொல்லிக்கிட்டு இருக்கேன்ல.. இப்ப ஏன் வந்த நீ ?? ” என்று கேட்டாள்..

“ வேணாம் தேவி யாரும் அவளுக்கு எடுத்து சொல்ல வேண்டாம்.. நானே பேசிக்கிறேன்.. எனக்கும் இவளுக்கும் நடுவில இருக்க பிரச்சனை தானே இது.. சோ நானே பார்த்துகிறேன்..” என்றான் உறுதியாக நித்யாவின் முகத்தை பார்த்து..

இதற்கு மேல் தாங்கள் அங்கு நிற்பது சரியில்லை என்று உணர்ந்த தேவி “ வா சிந்து நம்ம போயி தேனு பாட்டி கிட்ட பேசலாம்”  என்று அவளை இழுத்து கொண்டு சென்றாள்..

“ ஹே என்ன தேவி இப்படி இழுத்துகிட்டு வர.. அவங்க எதா பேசி சண்டை போட போறாங்க..” என்று சிந்து கூறவும் “ அதெல்லாம் அண்ணன் பார்த்துப்பான் “ என்று கூறி இழுத்து சென்றாள்.. அவளை மனதிற்குள் திட்டியபடி சென்றாள் சிந்து..

அங்கே விபுவோ நித்யாவையே வைத்த கண் வாங்காமல் நித்யாவை முறைத்து கொண்டு இருந்தான்.. “ சோ உன் முடிவு இது தானா ?? ” என்றான் ஏதோ மாதிரி குரலில்.. அவனை முழுதாக மூன்று நாட்கள் கழித்து பார்க்கிறாள்.. அவனது குரலை கேட்கிறாள்..

தன் விழி வழியாக மனதில் அவனை நிரப்பும் பொருட்டு இமை மூடாமல் பார்த்தாள்.. அவளது பார்வையில் சற்று மனம் குளிரினாலும் “ என்ன அப்படி பாக்குற ?? என்னைய யாருன்னு அடையாளம் தெரியுதா ?? இல்லை அதும் மறந்திடுச்சா ?? ” என்றான் தன் பார்வையை எங்கோ பதித்தபடி..

“ விபா ப்ளீஸ்..” என்று அவள் ஆரம்பிக்கும் முன்னே..

“ போதும் நீ ப்ளீஸ் சொன்னது.. இப்ப நான் ப்ளீஸ் சொல்றேன்.. ப்ளீஸ் மல்லி என்னைய விட்டு விலகி போகதே.. “ என்று கூறியபடி அவளை இழுத்து வேகமாக அணைத்தான்.. இதை அவள் எதிர் பார்த்தாள் இல்லையே..

அவனை விட்டு விலக வேண்டும் என்று எண்ணியவள் அவனது அணைப்பில் ஆறுதல் கண்டாள்.. ஆனாலும் அவள் கருத்தை மட்டும் மாற்ற தைரியம் வரவில்லை.. அவனது மார்பில் முகம் புதைந்து நின்று இருந்தவள்.. மெல்ல “ நான் உங்க நல்லதுக்கு தான் சொல்றேன் விபா “ என்றாள்

அவளை நிமிர்த்தி அவளது முகத்தை கைகளில் ஏந்தி “ என்ன நல்லது மல்லி ?? என்னைய பொறுத்த வரைக்கும் உன்கூட வாழும் வாழ்கை தான் எனக்கு நல்லது மல்லி.. விலகி போறேன்னு சொல்லுறதை தவிர வேற எதுவேணாலும் சொல்லு நான் கேட்கிறேன் “ என்றான் வேதனை நிரம்பிய குரலில்..

அப்பொழுதுதான் அவனை நன்றாக பார்த்தாள் இரண்டு நாட்களும் சரியாக உறங்கி கூட இருக்க மாட்டான் போல… கண்கள் சிவந்து, இமைகள் எல்லாம் வீங்கி இருந்தது.. சவரம் செய்யாத முகம் வேறு கருத்து தெரிந்தது..

அவள் அமைதியாக இருப்பதை பார்த்த விபு “ என்ன டி பதில் பேசு “ என்றான்..

“ எனக்கு நீங்க நல்லா இருக்கனும் விபா.. என்னால உங்களுக்கு ஏதாவது நடந்தா அதை என்னால தாங்கிக்கவே முடியாது.. நான் வாழ்கையில நிறைய இழந்துட்டேன்.. உங்களை முழுசா இழக்க விரும்பலை விபா..”

“ என்ன டி  மல்லி நீ.. முதல்ல நீ அழாம இரு.. இங்க பாரு.. நான் நல்லா தான் இருக்கேன்.. இனியும் நல்லா தான் இருப்பேன்.. எனக்கு எதுவும் ஆகாது மல்லி.. சொன்னா புரிஞ்சுக்கோ.. உன் பயம் தேவையே இல்லாதது.. “

“ பொறு பொறு நானே பேசிக்கிறேன்.. அன்னைக்கு ஒருவேளை நீ என்கூட இல்லாம இருந்தாலும் இதே மாதிர தான் நடந்து இருக்கும்.. ஒரு விஷயம் நடக்கணும்ன்னு இருந்தா அது கண்டிப்பா நடக்கும் மல்லி.. ஒரு வேலை இப்படி நினைச்சு பாரு நீ என்கூட இருந்தனால தான் நமக்கு எதுவும் ஆகாமல் தப்பிச்சோம்.. கொஞ்சம் அப்படி நினைச்சு பாரேன் “ என்றான் பொறுமையாக

“ இல்லை விபா நீங்க என்ன சொன்னாலும் என் மனசு தெளிவாகாது.. ஏன்னா நான் ரொம்ப அடி பட்டுட்டேன் வாழ்கையில.. இந்த பயம் என்கூடவே உறைஞ்சு போனது விபா.. “

“ இங்க பாரு மல்லி.. நான் உனக்கு எப்பயுமே துணையா இருப்பேன்னு அன்னைக்கு ப்ராமிஸ் பண்ணேன்.. இப்பயும் அதை தான் சொல்றேன்.. உன்னைய நான் தனியா எந்த சூழ்நிலையிலும் விடமாட்டேன்.. நீயே வேண்டாம் சொன்னா கூட ” என்றான் உறுதியாக..

அவள் பதில் ஏதும் கூறாமல் அவனை திகைத்து பார்த்தாள்..

Advertisement