Advertisement

சிறு சிறு குன்றுகளும் அதை சுற்றி புள் வெளிகளும் அங்கங்கே சிறு சிறு நீர் தேகங்களும் பார்க்கவே மிக ரம்யமாக இருந்தது.. அமர்ந்து பேச என்று அங்கங்கே கல் இருக்கைகளும், வட்ட வட்ட கல் மேசைகளும் போடபட்டு இருந்தன.. ஆனால் எதுவோ அங்கு வேலை நடந்து கொண்டு இருப்பது புரிந்தது நித்யாவிற்கு..

ஆனாலும் அந்த இடம் மனதை கவர்ந்தது.. பறவைகள் வந்து கூட்டில் அடையும் ரீங்காரமும், இதோ இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் வெளியே வந்துவிடுவேன் என்று மேக கூட்டத்தின் நடுவில் எட்டி பார்க்கும் பௌர்ணமி நிலவும் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை நித்யாவிற்கு..

அவளது மனதில் தோன்றும் எண்ணங்களே அவள் முகத்திலும் பிரகாசத்தை குடுத்தது.. இதை எல்லாம் விபு கவனித்தபடி தான் நடந்து வந்தான்.. அவன் மௌனமாக நடந்து வருவதை கவனித்த நித்யா “ விபா இது என்ன இடம் ?? இப்படி ஒரு இடம் இருக்குன்னு நான் கேள்வி பட்டது இல்லையே.. அதுவும் இவ்வளோ அழகா..” என்று சிரித்தபடி கேட்டுகொண்டே தன் பார்வையை அங்கே இங்கே சுழல விட்டாள்..

அப்பொழுது தான் அங்கே நிறைய செடிகள் எல்லாம் நடப்பட்டு இருந்தன.. தோட்டக்காரன் மாலை ஒரு முறை நீர் ஊற்றி இருப்பார் போல, மண் வாசம் வேறு வந்தது.. தன் மூச்சை ஆழ்ந்து இழுத்து விட்டவள் “ ஹப்பா மண் வாசம் “ என்றாள் கண்களை மூடி..

அவளது இந்த செய்கையில் சற்றே மனம் தடுமாறி தான் போனான் விபு.. ஒரு சிறு குன்றின் மீது ஏறி அமர்ந்தனர்.. “ பார்த்து பார்த்து மெல்ல ஏறு மல்லி “ என்று கூறிக்கொண்டே முதலில் அவளை ஏறவிட்டு பின் தான் ஏறினான்..

இருவரும் வாகாக அமர்ந்து பின் “ இன்னும் நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே விபா ?? ” என்றாள் அவனையே பார்த்து..

சிலு சிலுவென்று தென்றல் காற்று வீச, மனம மயக்கும் படி மண் வாசம் வேறு நாசியை நிறைக்க, யாரும் இல்லா தனிமையில் பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் இத்தனை பக்கத்தில் தன் மனம் நிறைந்தவளை காணவும் தடுமாறி போனான் விபு..

ஆனாலும் முதல் முறை வெளியே அழைத்து வந்து இருப்பதால் சற்று அடக்கியே வாசித்தான் “ ஹா என்ன மல்லி கேட்ட ?? ” என்று மறுபடியும் கேட்டான்..       

“ ஹ்ம்ம் இது என்ன இடம்ன்னு கேட்டேன் “ என்றாள் சற்றே சலிப்பாக.. “ ஓ !! இதுவா.. இது நமக்கு சொந்தமான இடம் தான் மல்லி.. ஒரு பிரைவேட் கம்பெனி கிட்ட இருந்து விலைக்கு வாங்கினோம்.. அக்சுவலா இங்க ஒரு பெரிய சிட்டி உருவாக்கனும்ன்னு தான் வாங்கினோம்..”

“ ஆனா இந்த இடம் பாரு எவ்வளோ அழகா இருக்கு.. இயற்கை நிரம்பி வழியுது.. அதான் இந்த இடத்தை கொஞ்சம் மாத்தி அமைச்சு அப்படியே பிக்னிக் ஸ்பாட் போல மாத்திகிட்டு இருக்கோம்.. இங்க சின்னதா ஒரு ரெஸ்டாரன்ட் மாட்டும் செட் பண்ணனும்.. அவ்வளோ தான் “ என்று கூறினான்..

“ ஓ !! ரொம்ப நல்ல விஷயம் செஞ்சு இருக்கீங்க விபா.. ஹ்ம்ம் எவ்வளோ அழகான இடம்.. இதை அழிச்சு கட்டிடம் கட்டினா நல்லவா இருக்கும்.. ஆமா என்னைய இங்க கூட்டிட்டு வரணும்னு ஏன் தோனுச்சு ?? ” என்று கேட்டாள்..

“ ஹ்ம்ம் நல்ல கேள்வி மல்லி.. உன்னைய முதல் நாள் பார்த்ததுக்கு அடுத்த நாள் தான் இந்த இடம் நாங்க ரெஜிஸ்டர் பண்ணோம்.. ஏனோ தெரியல இங்க வரும் பொழுது எல்லாம் உன் நியாபகம் ரொம்ப வரும்.. அப்ப முடிவு பண்ணேன்.. உன்னைய முதல் தடவை வெளியே கூட்டி போகும் போது இங்க தான் கூட்டி வரணும்னு “ என்றான் முகத்தில் அன்றைய தின நினைவுகளை சுமந்து..

“ இவனுக்கு தான் நம்ம மேல எவ்வளோ பாசம்.. இந்த அளவுக்கு நான் இவனை ஆழமா நேசிக்கிறேனா?? இதற்கெல்லாம் நான் தகுதி ஆனவள் தானா ??“ என்று மீண்டும் மனதை போட்டு குழம்பினாள் நித்யா.. குழப்ப ரேகைகள் அவளது முகத்தில் படிவது கண்டு

“ ஹலோ ஹலோ.. மேடம் என்ன மறுபடி உங்க மண்டைக்குள்ள நண்டு ஊருது?? அதெல்லாம் வேண்டாம்.. நானே இப்போ தான் ஏதோ கஷ்டப்பட்டு உன்னைய எங்க வீட்டு ஆளுங்க கிட்ட இருந்து கடத்தி கூட்டிட்டு வந்து இருக்கேன்.. அதுவும் முதல் தடவை.. சோ இன்னைக்கு எந்த குழப்பமும் உனக்கு வர கூடாது “ என்றான் அவளை சமாதானம் செய்யும் முறையில்..

அவனது பேச்சை கேட்டவளுக்கு சிரிப்பு தான் வந்தது.. “ உன் மனசுல என்கிட்டே கேட்க நிறைய விசயங்கள் இருக்கும்ன்னு எனக்கு தெரியும் மல்லி.. எந்த தயக்கமும் இல்லாம அதை எல்லாம் நீ கேட்கலாம்.. என்கிட்டே உனக்கு முழு  சுதந்திரம் இருக்கு மல்லி.. அதை நீ முதல்ல புரிஞ்சுக்கணும்.. வீனா நீயே மனசை போட்டு எதையும் நெனைச்சு குழப்பிக்காத..” என்றான் ஆறுதலாக..

அவனையே விழி விரித்து பார்த்து கொண்டு இருந்தாள் நித்யா..” இது என்ன மாதிரியான அன்பு?? இவனுக்கு என்ன தலை எழுத்தா என்னை கல்யாணம் செய்ய ?? ஆனா இப்படி அன்பா இருக்கானே.. ஆண்டவா உன்கிட்ட நான் கேட்கிறது எல்லாம் ஒன்னு தான் எந்த சூழ்நிலையிலும் நான் என் விபா மனச காய படுத்துறது மாதிரி நடந்திட கூடாது.. “ என்று மனதிற்குள் வேண்டினாள்..

“ வேண்டுதல் எல்லாம் போதும் மல்லி.. இன்னும் கொஞ்ச நேரம் தான் நாம இங்க இருக்க முடியும்.. சோ சீக்கிரம் நாம பேச வேண்டியது எல்லாம் பேசிடலாம்.. சரியா “ என்றான் விளையாட்டாய் கூறினாலும் காரியத்தில் கண்ணாக..

“ நான் மனசுல நினைக்கிறது எல்லாம் இவனுக்கு எப்படி தான் தெரியுதோ “ என்று எண்ணியவள் “ அது.. அது வந்து.. நான்.. என்..” என்று தயங்கினாள்..

“ ஹ்ம்ம் கேளு மல்லி.. நீ கேட்க போறன்னு தெரியும்.. ஆனாலும் உனக்கு என்கிட்டே இருக்க தயக்கம், கூச்சம் தெளியனும்.. ம்ம் கேளு கேளு..” என்று அவளை அவசர படுத்தினான்..

நித்யாவிற்கோ வேர்த்து கூடியது.. “அது வந்து விபா.. அது.. என் பழைய விஷயம் எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ?? ” என்று ஒருவழியாக கேட்டே விட்டாள்..

“ஹ்ம்ம் இதை கேட்க இத்தனை நாளா மல்லி.. உன்னைய முதல் நாள் பார்த்த உடனே எல்லாம் என் மனசு மாறலை மல்லி.. அதுக்கு முன்ன உன்னைய நான் பார்பதற்கு முன்னாடியே, உன் பேரை மட்டுமே கேட்டு ரொம்ப நாள் நான் தூக்கம் இல்லாம தவிச்சு போயி இருக்கேன்…” என்று முதலில் நடந்ததை எல்லாம் கூறினான்.

நித்யாவிற்கு இது முற்றிலும் புதிய விஷயம் அல்லவா.. அவளுக்கு ஒரு நொடி தான் கேட்பது எல்லாம் சரிதான என்று நம்ப கூட முடியவில்லை.. நம்ப மாட்டாமல் அவனையே பார்த்தாள் இமைக்க மறந்து..

அவளது பார்வையின் பொருளை உணர்ந்த விபு “ நிஜம் தான் மல்லி.. உன் பெயரே என்னைய அந்த பாடு படுத்திடுச்சு..” என்று கூறி மெல்ல சிரித்தான்..

“அன்னைக்கு உங்க வீட்டுக்கு முதல் முறையா வந்தேனே அதுக்கு மறுநாள் நான் அசோக் வீட்டுக்கு போயி இருந்தேன்.. ஆனா அன்னைக்கு உங்க அண்ணன் வீட்டுல இல்லை.. அவங்க வீட்டு ஹால்ல பெரிய குடும்ப போட்டோ மாட்டி இருந்தது..”

“இதற்கு முன்னும் அங்க போயி இருக்கேன் ஆனா அதை பெருசா கவனிச்சது இல்லை.. அந்த போட்டோல உன்னய பார்த்த அப்புறம் அதுல இருக்க உனக்கும் நான் நேருல பார்த்த உனக்கும் நிறைய வித்தியாசம்.. “

“ நான் போட்டோவையே பார்த்துகிட்டு இருந்ததை கவனிச்ச உன் அண்ணி தான் என்ன ஏதுன்னு விசாரிச்சாங்க.. பட் சும்மா சொல்ல கூடாது உங்க அண்ணி ரொம்ப ஷார்ப்.. என்ன ஏதுன்னு துருவி துருவி விசாரிச்சிட்டு அதுக்கு அப்புறம் தான் உன்னைய பத்தி சொன்னாங்க.. கேட்டதுமே எனக்கு என்ன சொல்லன்னு தெரியல..”

“ அதுக்கு அப்புறம் சிம்பதில எல்லாம் எங்க நித்யாவ லவ் பண்ணவேண்டாம்.. உங்களுக்கு மனசுக்கு நிஜமாவே பிடிச்சு இருந்தா மட்டும் மேற்கொண்டு முயற்சி பண்ணுங்க.. அதுவுமே நீங்க இதுல நிறைய பிரச்சனைகலை சந்திக்க வேண்டி வரும்.. இதெல்லாம் யோசனை செஞ்சு அதுக்கு அப்புறம் நல்ல முடிவா எடுங்கன்னு சொன்னாங்க ” என்று கூறி சிறு இடைவெளி விட்டான்..

அப்பொழுது தான் நித்யாவிற்கு உரைத்தது.. “ அசோக் அண்ணன் மற்றும் அண்ணியின் மூலமாக தான் இதெல்லாம் இவ்வளோ தூரம் வந்து இருக்கிறது என்று.. இல்லை என்றால் அத்தனை எளிதில் தேனு பாட்டியும் பூபதி தாத்தாவும் இதற்கு சம்மதம் சொல்லி இருக்க மாட்டார்கள்..  “

“ அது மட்டும் இல்லாம விபு வீட்டுலையும் அவ்வளோ ஈசியா இதுக்கு சரி சொன்னதுக்கும் அசோக் அண்ணன் தான் காரணமா இருந்து இருக்கணும்..” என்று எண்ணியவள் வேகமாக அவன் புறம் திரும்பி

“ அசோக்… அசோக் அண்ணன்… தான் உங்க எல்லார் கிட்டையும் பேசுனாங்களா ?? அதுனால தான் உங்க வீட்டுல இதுக்கு சரி சொன்னாங்களா ?? நீங்.. உங்க கிட்ட கூட அண்ணா எதாவது பேசினாங்களா ?? ” என்று கேட்டாள் சற்று இறங்கிய குரலில்..

அவளது எண்ணம் எல்லாம் ஒருவேளை அசோக் தான் விபு வீட்டில் பேசி என் தங்கைக்கு வாழ்கை அமைத்து குடுங்கள் என்று கேட்டு இருப்பானோ என்று.. அந்த எண்ணத்தில் தான் இப்பொழுது கேட்டாள் விபுவிடம்.. கேட்டு நன்றாக அவனது முறைப்பையும் பெற்று கொண்டாள்..

“ நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க மல்லி.. உங்க அண்ணன் பேசுனதுனால தான் நான் உன்னைய விரும்புனேன்னு நினைக்கிறியா ?? இல்லை என் குடும்பமும் ஐயோ பாவமேன்னு உன்னைய மருமகளா கொண்டு போக நினைக்கிறதா  நினைக்கிறியா ?? ” என்று பொரிந்து தள்ளினான்..

அவனது கோவத்தை எதிர் பார்க்காதவள் “ ஐயோ.. நான்.. நான் அப்படி எல்லாம் நினைக்கல விபா.. நான் ஜஸ்ட் என் மனசுல பட்டதை தான் அப்படியே கேட்டேன்.. நீங்க தானே சொன்னிங்க எதுனாலும் என்கிட்டே கேளுன்னு.. அதான்.. தோனுச்சு கேட்டேன் “ என்றாள் அவனை சமாதானம் செய்யும் குரலில்..

ஆனால் ஏனோ அவனது கோவம் கட்டுக்குள் அடங்குவதாய் இல்லை.. “ எப்படி கேட்டுட்டா.. ஒரு ஒரு நிமிஷம் இவ மனசு கஷ்டபட கூடாதுன்னு பார்த்து பார்த்து நடந்தா இப்படி கேக்குறா ?? ” என்று மனதிற்குள் கரித்து கொட்டி கொண்டு வெளியே அமைதியாக இருந்தான்..

அவனது கோவத்தை தாங்கியவள் அவனது அமைதியை தாங்க முடியாமல் “ விபா ப்ளீஸ்.. நான் தான் சொல்லுறேனே.. நான் கேட்டது தப்பு தான்.. ஒரு நிமிஷம் யோசனை பண்ணி இருக்கனும்.. சாரி.. இப்படி அமைதியா மட்டும் இருக்க வேண்டாம் விபா..” என்று அவனை சமாதானம் செய்தாள்.. அதற்கும் அமைதியாக தான் இருந்தான்..

“ என்ன விபா இது.. இப்படி முணுக்குன்னு கோவம் வந்தா நான் எப்படி என் மனசுல இருக்கிறது எல்லாம் உங்க கிட்ட சொல்ல முடியும்.. அப்புறம் லைப் லாங்கா இது சொன்னா இவருக்கு கோவம் வருமோ ?? அது சொன்னா அவருக்கு கோவம் வருமோ?ன்னு நான் யோசிச்சு யோசிச்சு தானே பேச முடியும்.. நீங்க தானே சொன்னிங்க என்கிட்டே உனக்கு முழு சுதந்திரம் இருக்குன்னு “ என்று அவளும் நன்றாகவே பேசினாள்..

“ ஆகா பாயிண்ட் போட்டு பேசுறாலே.. ஹ்ம்ம் இது கூட நல்லா தான் இருக்கு.. மேடம்க்கு நான் அமைதியா இருந்தா தாங்க முடியலை.. இந்த ஒரு பாயிண்ட்டை வச்சே நான் லைப் லாங் ஓட்டிட மாட்டேன்..” என்று எண்ணியவன் அமைதியாகவே இருந்தான்..

அவன் அமைதியாக இருப்பதை பார்த்து “ ம்ம்ச் நான் கிளம்புறேன்.. நீங்க இப்படியே இருங்க.. இவ்வளோ கோவமா உங்களுக்கு ?? அதுவும் முதல் நாளே.. நான் போறேன் “ என்று எழுந்தாள்.. எழுந்தது மட்டும் தான் அவளுக்கு தெரியும்..

அவள் எழவும் ஏதோ ஒரு வேகத்தில் விபு அவளை கை பிடித்து ” ஹே மல்லி “ என்று  நிறுத்த எண்ணி இழுத்து விட்டான்.. குன்றின் மீது இருந்த படியால் நித்யாவால் சரியாக நிற்க முடியவில்லை போல.. அவன் இழுத்த வேகத்திற்கு அவன் மீதே சரிந்து விட்டாள்..

அவனும் இதை எதிர்பார்க்க வில்லை.. எங்கே கொஞ்சம் விட்டாள் உருண்டு விடுவோமோ என்ற பயத்திலேயே அவளை இறுக அணைத்து கொண்டான்.. அவளும் பயத்தில் ஒன்றி கொண்டாள்..

இது இருவருமே எதிர் பார்க்காத ஒரு மோன நிலை.. இத்தனை மணி நேரம் பேசியும் வராத நெருக்கத்தை இந்த ஒரு அணைப்பு தந்துவிட்டது.. எத்தனை நேரம் இந்த அணைப்பு நீடித்ததோ இருவருக்கும் தெரியவில்லை..

கண்களை இறுக மூடி அவனது மார்பில் தலை வைத்து சாய்ந்திருந்தாள்.. எங்கே கையை எடுத்துவிட்டால் விழுந்து விடுவாளோ என்று எண்ணியே அவன் மேலும் மேலும் தன் மார்பில் இறுக அணைத்து கொண்டான்..  காற்று சுற்றிலும் சிலு சிலுவென்று வீசினாலும் ஏனோ அதற்கு விபுவிற்கும் நித்யாவிற்கும் நடுவில் வர மட்டும் அனுமதி இல்லை போல..

விபுவிற்கு இந்த நிலை மிகவும் பிடித்து இருந்தது.. அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில் “ மல்லி நீ உன் பிறந்த நாளைக்கு எனக்கு சூப்பர் கிபிட் குடுத்துட்ட.. இதை நான் எதிர் பார்க்கவே இல்லை மல்லி.. “ என்றான் மிகவும் மென்மையாக நகைத்தபடி..

இத்தனை நேரம் அமைதியாக சாய்திருந்தவள் விபு இப்படி கூறவும் வேகமாக எழுந்து விட்டாள்.. எழுந்தவள் நிற்க கொஞ்சம் தடுமாறினாலும் சிறிது தன்னை திட படுத்திகொண்டு நின்றாள்.. அவனோ அவளை விழுங்குவது போல பார்த்து வைத்தான்..

காற்றில் அலையும் கூந்தல். படபடக்கும் இமைகள்.. விபுவை நேர்கொண்டு பார்க்க முடியாமல் தஅங்கும் இங்கும் தடுமாறும் விழிகள்.. நடுங்கும் உதடுகள் என்று நித்யமல்லிகாவை காண காண விபு வரதனுக்கு கல் குடித்தது போல இருந்தது..

ஒருவழியாக தன்னை சமன் செய்து கொண்டு “ விபா கிளம்பலாம்.. ப்ளீஸ் “ என்றாள்.. ” இவ இவ்வளோ அமைதியா பேசுறதே பெருசு.. நல்ல மூட்ல இருக்கும் பொழுதே கிளம்பிட வேண்டியது தான் “ என்று எண்ணியவன் “ ஹ்ம்ம் உன் இஷ்டம் மல்லி.” என்று கூறி அவளது கைகளை பிடித்தபடி கீழே இறங்கினான்..

விபு நித்யாவின் கரங்களை பற்றவுமே அவளது உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடி மறைந்தது.. இதை அவனும் உணர்ந்தான்.. ஆனால் எதுவும் பேசவில்லை.. இந்த நிலை இருவருக்கும் பிடித்தே இருந்தது.. பேச ஆயிரம் வார்த்தைகள் துடித்தாலும் பேசாத மௌனம்.. நெருங்கிவிட நினைத்தாலும் நிழல் மட்டும் போதும் என்ற தூரம்.. இருவரும் இதை மனதிற்குள் ரசித்தபடி அமைதியாக காரில் ஏறி அமர்ந்தனர்..

நித்யா அமைதியாக கண்களை மூடி சாய்ந்து கொண்டாள்.. முகம் எல்லாம் சிவந்து இருந்தது.. ஏனோ விபுவரதனை அவளுக்கு நேராக பார்க்கும் தைரியம் வரவில்லை போல..

“மல்லி அம்மா நைட் டின்னெர்க்கு அங்க வர சொன்னாங்க.. எல்லாரும் அங்க தான் இருப்பாங்க.. போலாமா ?? ” என்று கேட்டான்.. அவன் குரலே முற்றிலும் வித்யாசமாக இருந்தது.. கண்களை திறக்காமல் “ ம்ம் “ என்று மட்டும் கூறினாள்.. அவனுக்கு ஏனோ மனம் மிகவும் அமைதியாக இருந்தது..

அவளுக்குமே தான் மிகவும் பாதுகாப்பாக இருப்பது போல உணர்ந்தாள்.. இருவரின் இந்த நிம்மதியை கெடுப்பது போல ஒரு சம்பவம் நிகழ்ந்தது..

 

                   மனம் – மயக்கும்                                          

                                         

Advertisement