Advertisement

“சரி கவனி..” என்றான் வேகமாய்..

“ஆ….!!! என்னாது….???!!!!!”

“அடடா.. நீதான் என்னவோ கவனிக்கணும் சொன்னல்ல.. அதையாவது பண்ணேன்..” என்று பாலகுருவும் சிரிப்பினை அடக்கி நிற்க,

“ஆ.. அது.. நீ கேட்ட நான் சொன்னேன்.. அவ்வளோதான் …” என்று பூர்ணி கிளம்பப் போக,

“இப்பவும் நான் தான் கேட்கிறேன்…” என்று பாலகுரு திரும்ப சொல்ல,

“கேட்டதுக்கு கேட்டது சரியா போச்சு பாஸ்…” என்றவள் வெளியே செல்ல நினைத்தாலும் அவளால் முடியவில்லை.. அதற்கு பாலகுருவும் விடவில்லை..  

“ம்ம்ச் பூர்ணி இரேன்…” என்று சொல்ல,  “என்னவாம் திடீர்னு…” என்று சிலுப்பிக்கொண்டாள்..

“ஏன்.. உனக்கு எதுவும் தோணலையா???” என்றபடி அவளை அணைத்திருக்க, “என்ன தோணனும்??” என்றாள் இவள்..

“ம்ம்ச் போடி.. உனக்கும் சேர்த்து நானே நினைச்சுக்கிறேன்…” என்றவன் அவனின் அணைப்பை இறுக்கி, அவளோடு மேலும் மேலும் ஒட்டி நிற்க,

“பாஸ்…!!!!” என்றவளுக்கு சத்தமே வரவில்லை..

வெகு நாட்கள் ஆனதுபோல் இருந்தது இருவரும் ஒருவரின் ஸ்பரிசம் இன்னொருவர் உணர்ந்து.. ஆனால் இன்றோ, எல்லாமே அப்படியே இருக்க, இன்று இருவரையும் மீறிய நிலை இது.. அதை இருவருமே தவிர்க்க எண்ணவில்லை. மாறாய் இதோடு எல்லாம் சரியாகிடவே வேண்டும் என்றுதான் நினைத்தனர்..  

“பூர்ணி…” என்றவனின் குரலும் அவளுக்கு கேட்கவில்லை.. ஆனாலும் அவனின் அழைப்பை அவள் உணரவே செய்தாள்..

‘பாஸ்… பாஸ்…’ என்று அவளும்,

‘பூர்ணி…’ என்ற அவனது உச்சரிப்புகளும் மட்டுமே அங்கே கேட்டுக்கொண்டு இருக்க, மறுநாளைய விடியலோ அழகாய் இருப்பதாகவே தோன்றியது இருவருக்கும்..

அன்றைய தினம் வீட்டிலே பாலகுரு நிறைய நேரம் இருக்க, சாரு வந்து பூர்ணியிடம் “ஓய்??!! என்ன  சிறப்பான கவனிப்போ…???” என்று கிண்டல் செய்ய,

“தோடா… சும்மா சும்மா என்ன எதுக்கு பாக்கற??? போ போ போயி நீ உன் ஆள கவனி…” என்று தோழிகளாய் இருவரும் பேசி சிரித்துகொண்டு இருந்தனர்.

மைதிலி வந்தவர் “என்ன சிரிப்பெல்லாம் பலமா இருக்கே..”  என்று கேட்க,

“அதெல்லாம் இல்ல சித்தி, உன் மாமியார் எப்படி என் மாமியார் எப்படின்னு ரெண்டு பெரும் புரணி பேசிக்கிறாங்க.. நீங்க வரவும் அப்படியே சிரிச்சு சமாளிக்கிறாங்க…” என்று பாலகுரு சொல்லவும்,       

“அட என்ன அப்படியா??? பூர்ணி நீ சொல்லு நாங்க என்ன பண்ணோம்..” என்று மைதிலி அவரையும் முத்துராணியையும் கை காட்டி சொல்ல,

‘அடப்பாவி பாஸ்…’ என்று அவனைப் பார்த்தவள், “அதெல்லாம் ஒண்ணுமில்ல சின்னத்தை அவர் சும்மா கோர்த்து விடுறார்..” என்றவள் அவனைப் பார்த்து முறைக்க,

“என்ன டி இப்போ உன் டர்ன்னா…” என்று சாரு கேட்டு அதற்கும் சிரித்து வைக்க, அவர்களின் பொழுது இனிமையாகவே கரைந்தது..     

சாருலதாவும், சந்திப்பும் மேலும் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு கிளம்பிட, பூர்ணிமாவிற்கும் வழக்கம்போல் அவர்களது வாழ்வு சென்றாலும், அவனின் மனதில் இன்னமும் ஒரு கோபம் இருப்பது அவளுக்கு நன்றாகவே உணர முடிந்தது..   

அவ்வப்போது அதை செயலிலும் காட்டிக்கொண்டான்.. இல்லாத வேலைகளை கூட இழுத்துப் போட்டு பார்க்கத் தொடங்கியிருந்தான் பாலகுரு.. புதிதாய் இரண்டு கப்பல்கள் வாங்கும் திட்டமும் இருக்க, அதனின் ஏற்பாடுகளை பார்த்துகொண்டு இருந்தான். வெளி வேலைகளையும் இன்னமும் இருந்தது..

அந்த தினா இன்னமும் அகப்படவில்லை.. போலீஸிடம் “இனி உங்கள் பாடு..” என்றுவிட்டான்..

சும்மா சும்மா போலீஸ் ஸ்டேசன் சென்றுவருதும் அவனுக்கு எரிச்சலாய் இருந்தது….

நிர்மலாவின் திருமணம் நல்ல முறையில் நடந்திருந்தது என்ற செய்தி தெரியவும் அப்பாடி என்ற ஒரு நிம்மதி இவனுள்.. காரணம் தெரியவில்லை.. ஆனாலும் ஒரு நிம்மதி.. என்னவோ இதில் ஏதாவது குளறுபடி நடந்திருந்தால்,  ‘எல்லாம் உன்னாலதான்..’ என்று பூர்ணிமாவே வரிந்து கட்டிக்கொண்டு வந்திருப்பாள் என்றுதான் தோன்றியது..

இப்போது, இனிமே அந்த நிர்மலாவாச்சு அவ லைப் ஆச்சு என்ற நிம்மதி..

உண்மையிலேயே நிர்மலா வந்து அப்படி பேசி போனதில் இருந்தே அவனுக்கும் மனதில் ஒரு சுருக்கென்ற எண்ணம் தான்.. இவள் கிறுக்குதனமாய் எதுவும் செய்துவிடுவாளோ என்று.. ஆனால் அப்படி ஆகவில்லை என்றதும் அப்பாடி என்ற தளர்வு உடம்பில்.. மனதில்..

அதே எண்ணத்தில் வீட்டுக்கு வந்தவன் “யப்பா இனியும் நீ என்னை தப்பு சொல்லமாட்ட தானே.. அவளுக்கு கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது…” என்று சொல்ல, பூர்ணி இப்போது நன்றாகவே முறைத்து வைத்தாள்..

‘என்னதான் இவனுக்கு வந்தது…’ என்ற எரிச்சல் அவள் முகத்தில் அப்படியே தெரிய,

“என்ன டி.. நிஜமாத்தான் சொல்றேன்.. இல்ல நிர்மலா ஏதாவது லூசு மாதிரி பண்ணிருந்தா அதுக்கும் என்னைத்தானே சொல்லிருப்ப?? உன்னால தான் அவ வாழ்க்கை போச்சுன்னு கூட சொல்லிருப்ப…” என்றவன் குளிக்கப் போக, அவனை அப்படியே தடுத்து நிறுத்தியவள்,

“என்ன நினைச்சிட்டு இருக்க நீ??” என்று கடுப்பாகவே கேட்டாள்..

“நான் ஒன்னும் நினைக்கலம்மா.. நீ அப்படி நினைப்பியேன்னு சொல்ல வந்தேன்..” என்று அவனும் பதிலுக்கு சொல்ல,

“ஓ.. இப்போ என்ன அப்படி நான் தப்பா நினைச்சிட்டேன்…” என்றாள் அவளும் அசராது..

“அதான் நீயே சொன்னியே..” என்று தோள்களை குலுக்கியவன், திரும்பவும் செல்ல,

“ம்ம்ச் நில்லு பாஸ்…” என்று கத்தியவள், “நின்னு பேசிட்டுதான் போற…” என்று விரல் நீட்டி சொல்ல, “என்ன சவுண்ட்டு கூடுது…” என்றான் நக்கலாய்..

“உன்னை ஒருவார்த்தை சொன்னா உனக்கு இவ்வாளோ கோவம் வருமோ?? அப்போ தெரிஞ்சோ தெரியாமலோ உன்னால ஹர்ட் ஆகரவங்களுக்கு எத்தனை ஹர்ட்டாகும்…”

“ம்ம்ச் எனக்கு அதெல்லாம் தெரியாது பூர்ணி.. ஆனா நீ என்னை ஏதாவது சொன்னா, ஏதாவது தப்பா நினைச்சா எனக்கு ஹர்ட் ஆகும்.. கோபமும் வரும்.. ஏன்னா மத்தவங்களும் நீயும் ஒண்ணு இல்ல.. அதை புரிஞ்சுக்கோ…” என,

‘ஹா!!!!’ என்று லேசாய் அதிர்ந்து தான் பார்த்தாள்..

இதென்னடா சிறுபிள்ளை தனம் என்று சொல்வதா, இல்லை அவளின்பால் கொண்ட அன்பின் மூர்க்கம் என்று சொல்வதா?? எந்த வகையில் சேர்ப்பது இவனை என்றுதான் குழப்பமாய் இருந்தது அவளுக்கு.. இந்த லட்சணத்தில் அவனுக்கு இப்போதெல்லாம் புதிய கவலை..

‘நம்ம அல்ரடி லவ் பண்ணிருக்கலாம்…’ என்று..

அது இப்போது நினைவில் வர, அவனையே பார்த்தவள் “பாஸ் நீ அடிக்கடி சொல்றியே.. நம்ம லவ் பண்ணிருக்கலாம்னு இல்லை நீ என்னை லவ் பண்ண வச்சிருக்கணும்னு..” என,

“ஆமாம்.. என்னவாம்??” என்றான் அப்போதும் முகத்தை உர்ரென்று வைத்து..

“அந்த ரெண்டுல எது ஒண்ணு நடந்திருந்தாலும் கண்டிப்பா நம்ம கல்யாணம் வரைக்கும் கூட வந்திருக்க மாட்டோம்…” என்றாள் அவன் விழிகளையே ஆழ்ந்து நோக்கி..

அவள் சொன்னதும் அவனின் கண்கள் திகைத்து லேசாய் விரிந்து “ஏன்?? ஏன்?? ஏன் அப்படி..???” என்று வேகமாய் கேட்க,

“கண்டிப்பா… ரெண்டு பேருக்கும் செட்டே ஆகிருக்காது..” என்றவள் இவ்வளோதான் என்று சொல்லிச் செல்ல,

“ஏய் நில்லு நில்லு…” என்று அவளை பிடித்தவன் “அப்போ.. அப்போ இப்போ மட்டும் செட்டாகுதா???” என்றான் கோபமாய்..

‘என்ன இப்படி சொல்லிவிட்டாள்…’ என்ற கோபம் அவனுள்..

என்ன சண்டை வந்தாலும் என்ன பேச்சு வார்த்தைகள் நடந்தாலும் இதை சொல்லலாமா என்ற கோபம் இப்போது.. அதையும் தாண்டி பூர்ணி எப்படி இப்படி சொல்லலாம் என்ற கோபம்.. ஏற்கனவே இருந்ததும் சேர்த்து இப்போது நன்றாய் அவனை உசுப்பி விட்டது..

“எஸ் பாஸ்.. நிஜம்தான்.. இப்போ நமக்கு கல்யாணம் ஆகிருச்சு.. பட் மேரேஜ்க்கு முன்ன இருந்த சூல்நிலை வேற இல்லையா.. ஆனா நம்ம முன்னாடி இருந்தே லவ் பண்ணிருந்தா அவ்வளோதான்.. கதம் கதம்..” என்று சொல்ல, அவளை அப்படியே கட்டிலில் தள்ளிவிட்டான் பாலகுரு..

அவளுக்குத் தெரியும், அவன் இப்படிதான் ஏதாவது செய்வான் என்று.. அந்தமட்டில் கீழே தள்ளாமல் போனானே என்று எண்ணியவள், அப்போதும் அவனை நேருக்கு நேராகவே பார்க்க,

“என்ன சொன்ன என்ன சொன்ன ??” என்று அருகே வந்தவன்,

“இன்னொரு டைம் இப்படி பேசின கொன்னுடுவேன்…” என்று விரலை நீட்டி மிரட்டியவன்,

“வேணாம் பூர்ணி என்னை டென்சன் பண்ணி பார்க்காத…” என,

“இப்போ மட்டும் நீ கூலாவா பாஸ் இருக்க???” என்றாள் இதழ்களில் ஒரு நக்கல் சிரிப்பை உதிர்த்து..       

“ஏய் உன்னை பேசாதன்னு சொன்னேன்.. புரிஞ்சதா???” என்று கத்தியவன், “வார்த்தைலயே கொல்ற டி நீ…” என்றுவிட்டு, அறையின் கதவினை வேகமாய் இழுத்து சாத்திவிட்டு சென்றுவிட்டான்..

மனது அவனுக்கு சரியாகவே இல்லை.. ‘என்ன சொல்லிட்டா?? எப்படி சொல்றா??? ச்சே.. அப்.. அப்போ கல்யாணம் ஆனதுனால மட்டும் தான் எதுவுமா?..’ என்று தனக்கு தானே கேள்வி மேல் கேள்வி கேட்டவனுக்கு எங்கே செல்கிறோம் என்றே தெரியவில்லை..

கார் அதுபாட்டில் செல்ல, அவனது சிந்தை எல்லாம்  பூர்ணிமா பேசியதில் தான் இருந்தது..

‘நான் இவளுக்கு செட் ஆகமாட்டேன்னு சொல்றாளா?? இல்லை ரெண்டு பேருக்குமே செட்டாகாது சொல்றாளா?? என்ன ஒரு திமிரு.. அதுவும் என்கூட வாழ்ந்திட்டே அப்படி சொல்றா..’ என்றவனின் பிடியில் கார் பறக்கத்தான் செய்தது..

பழக்க தோஷத்தில் ஹார்பர் வந்திருந்தான்.. ஏற்கனவே நள்ளிரவு ஆகியிருந்தது.. அத்தனை ஒன்றும் ஆட்கள் இல்லை, கிளம்ப வேண்டிய கப்பல்கள் நிறைய கிளம்பியிருந்தன.. ஒரு சில கப்பல்கள் அதன் நேரத்திற்காக காத்திருந்தனர். காரை நிறுத்தியவன், அப்படியே அவனின் ஆபிஸ் வர, பாண்டியா அங்கே படுத்திருந்தவன் இவனைக் கண்டதும்

“ண்ணா.. இன்னாண்ணா???!!” என்று அதிர்ச்சியாய் கேட்க,

“ம்ம்ச் இன்னாடா… இங்கயும் வரக்கூடாதா???” என்று கத்தினான் இவன்..

“அதில்லண்ணா…!!”

“பின்ன என்ன?? போ.. போய் தூங்கு… இல்லை உன் அக்காக்கு போன் போட்டு சரியா சொல்லிடு என்ன???” என்று அவனைப் பிடித்து திட்டியவன் அப்படியே அங்கே சைட்டில் போட்டிருந்த பெஞ்சில் போய் படுத்துவிட்டான்..

அவனுக்கு வேறு என்ன செய்வது என்றே தெரியவில்லை என்பது தான் நிஜம்.. வீட்டினில் இருந்தால் நிச்சயம் பூர்ணியை அடித்திருந்தாலும் அடித்திருப்பான்.. அந்த எண்ணம் வரவும் தான் கிளம்பியிருந்தான்.. இங்கே வந்தும் அவள் பேசியதே நினைவில் வர, புரண்டு புரண்டு படுத்தவன் எப்போது உறங்கினானோ தெரியாது..

ஆனால் விடிகையில் விஷயம் பாலச்சந்திரனுக்கும் பூர்ணிமாவிற்கும் போயிருந்தது.. பாலச்சந்திரன் ஹார்பர் கிளம்புவதற்கு முன்னர் பூர்ணிமாவை ஒருநொடி பார்த்தவர் எதுவும் கேட்கவில்லை..

முத்துராணி “எங்க அவன்??” என்று பூர்ணிமாவை பார்த்து கேட்க,

“நாலு மணிக்கு ஒரு லோட் கிளம்புது.. அப்போவே போயிருப்பான்…” என்று பூர்ணிமாவிற்கு முன்னமே பதில் கொடுக்க, சரி விஷயம் அவருக்கும் போயிருக்கிறது என்று தெரிந்து போனது அவளுக்கு..

பாலச்சந்திரன் ஹார்பர் வந்தும் கூட அவனை ஒன்றும் கேட்கவில்லை.. சரி கொஞ்சம் விட்டு பிடிப்போம் என்றே இருந்தார்.. என்னவோ கணவன் மனைவியினுள் சிறு சிறு சண்டை என்று நினைக்க அது அடுத்து வந்த இரண்டு நாளும் தொடர,   அவனோ ஹார்பரே கதி என்றிருக்க,  

 “பாலா.. இதெல்லாம் அடுத்த மாசம் பண்ணா போதும்.. இப்போவே ஏன்???” என்று பொறுக்க முடியாது கேட்டேவிட்டார்..

“இல்லப்பா நேரம் இருக்கப்போ செய்யலாம்னு தான்..” என்றவன் அவரின் முகத்தை பார்க்கவில்லை..

“நேரம் இப்போ நீ பூர்ணிக்காகவும் ஒதுக்கணும் பாலா..” என்றவரின் பார்வையில் என்ன இருந்ததோ, பாலகுரு அடுத்து பதில் பேசாது அவனின் வேலையில் இருக்க,

“பாலா உன்னைத்தான் சொல்றான்.. கிளம்பு…” என்றார் அழுத்தமாய்..

இதுநாள் வரைக்கும் பாலச்சந்திரன் இப்படி பேசியது எல்லாம் இல்லை.. எப்போதுமே மகன் செய்வது சரி என்ற எண்ணம்தான் அவருக்கு.. அவன் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிப்போனது கூட அவருக்கு அத்தனை பெரிய ஒன்றும் பாதிப்பு கொடுக்கவில்லை.. எப்படியும் வருவான் என்று தெரியும்.. ஆனால் இப்போது அவன் செய்வதை பார்த்துகொண்டு தானே இருக்கிறார்.. எதுவோ சரியில்லை என்றுபட, மகனை விரட்டத் தொடங்கிவிட்டார்..

“இல்லப்பா.. கொஞ்சம் வேலை இருக்கு…”

“இப்போ நீ வீட்டுக்கு போறியா இல்லையா????” என்றவரின் சத்தம் கூடியிருக்க, “ஆமா எல்லாரும் என்னையே சொல்லுங்க…” என்றான் அவனும் சத்தமாய்..

“இப்போ நீ போறியா இல்ல, ராம்க்கு போன் பண்ணி வந்து பூர்ணிய கூட்டிட்டு போயிடுன்னு சொல்லவா??” என்றவரின் பேச்சில் அதிர்ந்தவன்

“அப்பா???!!!!!” என்றான் மேலும் சத்தமாய்..

 

Advertisement