Advertisement

அதற்குள் முத்துராணியும் மைதிலியும்  கதவை தட்டிவிட்டு உள்ளே வர, பூர்ணிமா மேற்கொண்டு எதுவும் பேசவில்லை..

முத்துராணியோ, “ரெண்டு பேரும் எழுந்து ஒண்ணா நில்லுங்க.. கண்ணு நிறைய பட்டிருக்கும்… அதான் இப்படி எல்லாம் நடக்குது…” என்று சொல்ல,

“ம்மா என்னம்மா நீ…” என்றான் சலிப்பாய்..

“டேய் சொன்னா கேளு… வா திருஷ்ட்டி சுத்தனும்..” என்றார் பிடிவாதமாய்..

“இப்போ அதான் குறைச்சல்…” என்று முனங்கியபடியே பாலகுரு எழுந்து நிற்க,

“இதெல்லாம் அப்பப்போ செய்யணும் பாலா…” என்று மைதிலி தான் திருஷ்டி கழித்தார்..

பூர்ணிமா அமைதியாகவே இருக்க, “ரெண்டு பேரும் நல்லா தூங்கி எழுங்க.. எதுன்னாலும் அப்பா சித்தப்பா பார்த்துப்பாங்க…” என்றுவிட்டு இருவரும் வெளியே செல்ல, மீண்டும் பாலகுரு தொப்பென்று கட்டிலில் விழுந்தான்.

அவன் முகத்தினை காண காண பூர்ணிமாவிற்கு என்னவோபோல் ஆனது.. என்ன சொன்னாலும் இவன் சமாதானம் ஆகிட மாட்டன் என்று அவளுக்கு நன்கு தெரியும்.. அவன் குணமே அப்படித்தான்.. எந்த விஷயம் என்றாலும் அவனாக எதுவும்  செய்தால் தான் உண்டு..

யார் எது சொன்னாலும் கேட்டுக்கொள்வான் அவ்வளவே.. ஆனால் முடிவு அவனே தான் எடுக்கவேண்டும்..

விளக்கை அமர்த்திவிட்டு பூர்ணிமாவும் வந்து படுக்க, பாலகுரு கண்கள் மூடாது எதோ யோசனையாய் மேலே விட்டத்தை பார்த்துகொண்டு இருந்தான்.. அவளும் அவனையே எத்தனை நேரம் அப்படி பார்த்துகொண்டு இருக்க முடியும்..

“பாஸ்…” என்றுசொல்லி அவனின் கரத்தினை பற்ற,

“ம்ம்..” என்றவன் பார்வையை திருப்பவேயில்லை..

தன்னால் தான் இவை அனைத்தும்.. தான் ஒருவனால் தான் பூர்ணிமா இத்தனை கஷ்டங்கள் சந்திக்கிறாள் என்று அவனுக்கு இப்போது கஷ்டமாய் இருந்தது.. பூர்ணிமா அழுதது.. கசங்கிய முகத்துடன் அங்கே கமிஷனர் ஆபீஸில் அமர்ந்திருந்தது..

ராமலிங்கமும் சந்தியாவும் “அவளைப் பார்த்துக்கோ பாலா…” என்று சொல்லிவிட்டு சென்றது இதெல்லாம் மனதில் வந்து வந்து போக, பாலகுருவிற்கு எதிலோ தோற்றதாய் ஒரு உணர்வு..

கண்களை இறுக மூடிக்கொண்டான்..  அவனையே பார்த்துகொண்டு இருந்த பூர்ணிமாவோ இதற்குமேல் பொறுக்காது என்று,

“பாஸ் இப்போ ஏன் நீ இப்படி இருக்க…???” என்றாள் குரலில் கடுமை கூட்டி..

அப்போதும் அவனிடம் இருந்து பதில் வராது போக, “இப்போ நீ பேசலை.. நான் என்ன செய்வேன் தெரியாது…” என,  

“ம்ம்ச் ஒண்ணுமில்ல பூர்ணி..” என்றான் சுரத்தே இல்லாது..

“நான் நம்பனுமா இதை???”

“நிஜமா ஒண்ணுமில்ல..” என்றவன் புரண்டு படுக்க, அவன் குரலில் இருந்த வேதனை அவளை என்ன செய்ததோ  

“ஒண்ணுமில்லயா.. உன் மூஞ்சிய பார்த்தாலே தெரியலை…” என்றவள் வந்து அவன் முகத்தோடு முகம் வைத்து தடவ,

“என்னடி பண்ற??????” என்றான் முனுமுனுப்பாய்..

“ஹா.. சமைக்கிறேன்…” என்றவள் இன்னமும் அவன் முகத்தோடு அவள் முகத்தினை அழுத்த,

“பூர்ணி…” என்றான் கொஞ்சம் கரகரப்பாய்…

“ம்ம் சொல்லு பாஸ்…”

“என்னை கொஞ்சம் கடியேன்…” என, அவன் சொன்னதில் விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் பூர்ணிமா…

இருவரின் முகங்களும் வெகு நெருக்கத்தில் இருக்க, பாலகுருவின் கண்களோ ஏதோ ஒரு வலியை காட்ட, பூர்ணிமாவோ ஆச்சர்யமாய் அவனைப் பார்த்தாள்..

“பாஸ்…!!!” என்று அவளின் இதழ்கள் முணுமுணுக்க,

“எஸ் பூர்ணி. ஏதாவது செய்.. கடி.. அடி.. என்னவோ பண்ணு.. ஆனா எனக்கு இப்போ மனசு வலிக்கிறது அந்த வலியில கொஞ்சமாது மறக்கணும்…” என்றவன் திரும்பவும் இமைகள் மூடிக்கொள்ள,

“பாஸ்… பாஸ்… இங்க பாரேன்..” என்று அவன் முகத்தினை திரும்ப தன்னை நோக்கி பூர்ணி திரும்ப,

“ம்ம்ச் நான் சொன்னதை செய், என்னை இதெல்லாம் மறக்க வை.. நான் ரொம்ப உன்னை ஹர்ட் பண்ணிட்டேன்.. இப்பவும் என்னால தான் எல்லாம்… நீ… பூர்ணி… எப்பவுமே என்னால உனக்கு கஷ்டம் தான்… பூர்ணி டூ இட் சம்திங்.. கிவ் மீ எ பெய்ன்…..” என்று பிதற்ற தொடங்கிவிட்டான் பாலகுரு..

பூர்ணிமாவோ ‘என்ன இது இப்படி எல்லாம்’ என்று விழிகள் விரித்து தான் பார்த்துகொண்டு இருந்தாள்..

பாலகுருவின் கரங்கள் அப்படியே அவளை அணைத்து இறுக்க ”கம்மான் பூர்ணி.. டூ இட் சம்திங்.. கிவ் மீ எ பெய்ன்… என்னால உனக்கு எவ்வளோ கஷ்டம்… நீ ப்ரொபோஸ் பண்ணப்பவே நான் ஓகே சொல்லிருந்தா நீ… நீ.. நீ இப்போ இவ்வளோ ஹர்ட் ஆக மாட்ட…” என்று அவன் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ல,

“ஷ்!!! பாஸ் ப்ளீஸ்.. நீ அமைதியா தூங்கு.. ஒண்ணுமில்ல.. எல்லாம் சரியாகிடும்..” என்று அவன் இதழில் விரல் வைத்து மூட,

“ம்ம்ஹும்….. என்ன சரியாகும்…?? உன்னை இப்படி எல்லாருக்கும் பதில் சொல்ல வச்சிட்டேன்…” என்றவன் அவளை இன்னும் தன்மீது அழுத்த,

“ரிலாக்ஸ் பாஸ்…” என்றாள் மெதுவாய் அவன் கன்னத்தை மெதுவாய் வருடி..

“ம்ம்ஹும்… இப்படி பண்ணாத..” என்றவன் அவளின் விரல் நகம் கொண்டு தன் கன்னத்தினை அழுத்த,

“ஏய்… என்ன பண்ற நீ…” என்று வேகமாய் அவனில் இருந்து விலகி எழுந்தாள்..

“ஏதாவது செய் டி… நான் தான் ரொம்ப பண்ணிட்டேன்.. எல்லாத்துக்கும்…” என்றவன் திரும்பவும் அவளை பிடித்து தன் மீது சாய்க்க,

‘கடவுளே இவன் இப்படியெல்லாம் பேசினால் வழிக்கு வரமாட்டான்..’ என்றெண்ணியவள் மெதுவாய் அவன் கன்னம் கடிக்க,

“ஹ்ம்ம் இன்னும் அழுத்தமா..” என்றான் இவன்..

“நான் என்ன வெம்பைரா???” என்றாள் அவன் செவிகளில்..

“அப்படி மாறிடு.. ஆனா என்னை எல்லாத்தையும் மறக்கவை..”

“பாஸ் நீ என்னை இப்போதான் படுத்துற..” என்றவள் அவனை இறுக அணைத்துக்கொள்ள,

“ம்ம்ம் நான் உன்னை முன்னாடியே லவ் பண்ணிருக்கணும்…” என்றபடி அவனும் அவளை இறுக்கிக்கொள்ள,

“கண்டிப்பா நான் உனக்கு செட்டாகிருக்க மாட்டேன்…” என்றாள் பூர்ணிமா…

“எது???!!! என்னது….” என்று கேட்டவனுக்கு அவள் சொன்னது புரியவில்லை என்றாலும், என்னவோ அவளில் இருந்து விலகும் எண்ணமுமில்லை.. அதற்குமேல் அவளிடம் விளக்கம் கேட்கும் யோசனையும் வரவில்லை..

அவன் மனதிலும், புத்தியிலும் பூர்ணியின் வாசமே படர, வலிக்க வை என்றவன் மெது மெதுவாய் அவளின் மென்மையில் கரைந்துகொண்டு இருந்தான்…

பொழுது விடிகையில், பூர்ணிமாவே முதலில் விழிக்க, என்றுமில்லாத ஒரு உற்சாகம் இன்று வந்தது அவளுக்கு.. அவர்களை சுற்றி ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் ஏனோ இந்த விடியல் அவளுக்கு உற்சாகம் தர, அருகே படுத்திருந்த பாலகுருவைத் தான் பார்த்தாள்..

அவன் முகத்திலும் ஒரு நிம்மதி தெரிய, மெதுவாய் அவன் முகம் வருடிவிட்டு எழுந்துவிட்டாள்… சீக்கிரமே எல்லாம் முடிந்து பழையபடி அவர்கள் வாழ்வு திரும்பிவிடும் என்ற நம்பிக்கை மனதினில் பிறக்க, சந்தோசமாகவே அவளின் நாள் தொடங்கியது….

சாருலதா, மகிலா எல்லாம் இவளுக்கு அழைத்து பேசிட, அனைவரோடும் இயல்பாகவே பேசினாள் பூர்ணிமா.. மைதிலியும் முத்துராணியும் ஒருவர் முகத்தினை ஒருவர் பார்த்துக்கொள்ள,

“என்ன???” என்று இருவரையுமே பார்த்தாள்..

“ஹ்ம்ம் சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்…” என்று முத்துராணி சொல்ல,

“ஆமா பெரியத்தை சீக்கிரமே.. எல்லாம் சரியாகிடும்…” எனும்போதே தனபால் வந்து “பாலா எங்கம்மா..” என்றார்..

“இன்னும் எழுந்துக்கல சின்ன மாமா…” என்றவள் பின் வேகமாய் “எழுப்பட்டுமா???!!” என்று கேட்க,

“இல்ல இல்ல வேண்டாம்..” என்று யோசனையாய் சொன்னவர், “உனக்கு தினேஷ்னு யாரையும் தெரியுமா பூர்ணி…” என்று கேட்க,

“ம்ம்.. இல்லையே மாமா..” என்றாள் மறுத்து..

“கொஞ்சம் யோசிச்சு பாரேன் பூர்ணி.. அங்க முன்னாடி உங்கப்பா வீட்ல யாரும் அப்படி வேலைக்கு இருந்தாங்களா???” என.

“ம்ம்ஹும் மாமா.. அப்படி யாருமில்லை…” எனும்போதே, “ஏன் சித்தப்பா???” என்றபடி வந்தான் பாலகுரு..

வெளியே செல்வதற்கு தயாராகவே வந்திருந்தான். அவன் முகத்திலும் ஒரு தெளிவு தெரிய, முத்துராணிக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது..

“இல்லடா நீ ஒரு நம்பர் கொடுத்தல்ல.. அது தினேஷ்ங்கற நேம்ல இருக்கு.. நமக்கு யாருக்கும் அந்த வீடியோ வரலை.. ஆனா பூர்ணிக்கு மட்டும் தானே வந்திருக்கு.. அதான் கேட்டேன்.. யாரையும் தெரியுமான்னு..”

“ஓ……!!!” என்று யோசித்தவன் பூர்ணி முகம் பார்க்க, அவள் அப்போதும் தெரியவில்லை என்றாள்..

“எந்த ஏரியான்னு தெரியுமா சித்தப்பா???”

“ஏரியா லாஸ்ட்டா இருந்தது  திருவான்மியூர் டவர்டா…”

“திருவான்மியூரா??!!!!” என்று யோசித்தவனுக்கு அந்த ஏரியாவில் யாரும் தனக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று யோசிக்க, அங்கே நிர்மலாவின் வீடு இருப்பது தான் நினைவு வந்தது..

உடனே “சித்தப்பா அங்கதானே நிர்மலா வீடு இருக்கு..” என,

“ம்ம் அதை தான் டா நானும் நேத்திருந்து யோசிக்கிறேன்.. அண்ணன்ட சொன்னா அவங்க அப்படியெல்லாம் பண்ணிருக்க மாட்டாங்க அப்படின்னு சொல்றார்…” என்று அவரும் சொல்ல,

“எனக்கென்னவோ அவங்க பண்ணிருக்க மாட்டங்கன்னு தோணுது..” என்றாள் பூர்ணிமாவும்..

“அவங்க பண்ணிருக்க மாட்டாங்க சரி.. ஆனா??!!!!!” என்று யோசிக்க  யோசிக்க, யாருக்கும் ஒன்றும் புரிவதாய் இல்லை..

பாலச்சந்திரன் அங்கே வந்தவர், “பாலா இன்னிக்கும் பூர்ணிக்கிட்ட என்னவோ விசாரிக்கனுமாம்.. நீ கூட்டிட்டு போயிட்டு வந்திடுறியா??” என்றபடி வர,

“ம்ம்ம் சரி..” என்றவனுக்கு முகம் அப்படியே வாடிப் போனது..

ஆனால் பூர்ணிமாவோ  “பாஸ்..” என ,

“சரி ரெடியாகு போகலாம்..” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு செல்ல, அங்கேயோ இவர்களுக்கு முன்னே அந்த போஸும், அவன் அனுப்பியவனும் இருந்தனர்..      

பாலகுருவிற்கு அவர்களை கண்டதும் ஒருவித அதிர்ச்சி தான்..  பூர்ணிமாவோ ‘போலீஸ் பிடிச்சிட்டாங்களோ..’ என்று யோசிக்க, அவர்களோ சாதாரணமாய் ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தானர்..

‘பார்த்தா அப்படி தெரியலையே…’ என்று யோசிக்கும் போதே,  

“இன்னா குரு பாக்குற… இன்னாடா இவனா வந்து சரண்டராகுறானேன்னா…. ஹா ஹா… நேத்து ஒரு நாள்ல அப்படியே மனசு கெடந்து கரைக்கு வந்த மீனாட்டம் துடிச்சிருக்குமே…” என்று பேசிய போஸை கொன்று விடுவது போல்தான் பார்த்தான் பாலகுரு..

“இப்பயும் சொல்லிக்கிறேன்.. இது உனக்காக இல்ல குரு.. உன் பொஞ்சாதி.. அதான் அந்த பூர்ணிமா புள்ளைக்காக… இன்னா பாக்குற.. ஷாக்காகீதா…. இக்கும் இக்கும்… எனக்கு நல்லா தெரியும் குரு.. உன் பொண்டாட்டி முட்டும் இல்லாங்காட்டி நீ என்னிக்கோ என்ன போட்டிருப்பன்னு.. அதான்…” என்றான் மெதுவாய் அவனருகே நின்று..

“டேய் டேய் டேய்.. சும்ம்மா சலம்பாத…. நீ சரன்டரே ஆகலைன்னாலும் எனக்கு எப்படி இதை ஹேண்டில் செய்யணும் தெரியும்.. பெரிய இவன்னாட்டம் வந்து பேசாத என்ன..” என்று அப்போதும் பாலகுரு கெத்து காட்ட,

“ஹா ஹா உனக்கு இன்னாப்பா… எதுன்னாலும் செய்யுவ.. கேஸை முடிச்சிட்டு என்னையும் கூட முடிப்ப..,” என, அவன் பேச்சு பாலகுருவை தூண்டி விடுவதாகவே இருந்தது..

இதனை கவனித்த பூர்ணிமா, “பாஸ்.. நம்ம எதுக்கு வந்தோமோ அதை மட்டும் பாக்கலாமே..” என்று அவனை கொஞ்சம் தள்ளிக்கொண்டு போனாள்..   

ஆனால் உண்மையில் சொல்லபோனால் போஸ் வந்து சரண்டர் ஆகவுமே அவனுக்கு மனதில் அப்பாடி என்ற ஒரு நிம்மதி எழுந்தது நிஜம்.. முதல்நாள் கமிஷனர் இவர்கள் சரண்டர் ஆகிவிட்டால் கூட நல்லது என்று சொல்கையில், ஒருநொடி பாலகுருவிற்கு போஸிடம் இதனை கேட்போமா என்றுதான் தோன்றியது..

ஆனாலும் இவன் தயவிலா என் மனைவியை நான் காப்பாற்றிட வேண்டும், ஏன் என்னால் முடியாதா?? எது எப்படி வந்தாலும் பூர்ணிமாவை இந்த விசயத்தில் இருந்து மீட்டுக்கொண்டு வருவேன் என்ற உறுதி பிறந்த பின்னே தான்  பாண்டியாவிடம்   இவர்களை விட்டுவிட சொன்னான்….

இப்போது அதுவும் கூட ஒரு நல்லதில் தான் முடிந்தது.. ஆனால் அடுத்தோ அந்த தினேஷ் யார் என்ற கேள்வி மண்டையை குடைந்தது..

 

 

Advertisement