Advertisement

காதல் – 8

காதல் ஆனது.. கலகம் பிறந்தது.. பிரிவும் நேர்ந்தது..

வேலை விட்டாகிவிட்டது இருவருமே.. காதல் ஒருவித மன கசப்பில் இருவருக்குமே.. கல்யாணம் பெரிய கேள்வி குறி இருவருக்குமே..

‘பிக்கப் செய்கிறேன்..’ என்று சொன்னவன் வரவும், பல்லவிக்கு வேறெங்கிலும் போகப் பிடிக்காது “வீட்டுக்கே போகலாம்..” என்றிட, இருவரும் அவளின் வீடுதான் சென்றனர்..

வீட்டினுள்ளே போனதுமே பல்லவி ஒன்றும் பேசாது தலையில் கை வைத்து அமர்ந்திட,

“இப்போ என்னாச்சுனு பண்ற..” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“இன்னும் என்ன ஆகனும்??.” என்று கேட்க,

“முதல்ல இப்படி அழறத நிறுத்து பல்லவி..” என்று கடிந்தவன், அவளின் அருகே அமர்ந்து,

“எதுவும் கவலைப்படாத.. நான் பார்த்துக்கிறேன்..” என்று அணைவாய் அவளை தன் மீது சாய்க்க,

“ம்ம்ச் விடு…” என்று அவனின் கரங்களை தள்ளியவள்,

“நீ ஏன் தேவ் இப்படியிருக்க.. உன்னால ஒருவிசயம் பொறுமையா ஹேண்டில் பண்ண முடியாதா…” என,

“என்ன பொறுமையா ஹேண்டில் பண்ண சொல்ற….” என்றவன்,

“கிட்டத்தட்ட ஃபைவ் இயர்ஸா அங்க வொர்க் பண்ணறேன்..  டூ டைம்ஸ் ப்ரோமோசன் வாங்கிருக்கேன்.. என்னைப் பத்தி தெரியாதா.. நேத்து வந்த பாஸ்கர்  சொல்றதை கேட்டுக்கிட்டு நான் என்னவோ தப்பு பண்ணது போல பேசினா.. என்னை மடங்கி போக சொல்றியா…” என்று பேச ஆரம்பித்தவனுக்கு என்ன முயன்றும் கோபத்தை அடக்க முடியவில்லை.

அவனின் சுயமரியாதை அல்லவா அங்கே சீண்டப்பட்டது..

“உன்னை மடங்கி போக சொல்லல தேவ்.. கொஞ்சம்.. பொறுமையா ஹேண்டில் பண்ணிருக்கலாம்னு தான் சொல்றேன்…” என்று திரும்பவும் பல்லவி இப்படியானதே என்று வருந்தி சொல்ல,

“அப்போ அந்த நாய் என்னவும் பேசுவான் என்னை சும்மா இருக்க சொல்றியா..” என்றவனின் முகமும் கண்களும் சிவந்திட,

“ஓ… காட்… இவன் என்ன சொன்னாலும் கேட்கபோறதில்லை..” என்று முணுமுணுத்தவளிடம்  “எதுன்னாலும் சத்தமா பேசு…” என்று காய்ந்தான்..

“என்ன பேச சொல்ற… இல்ல என்ன பேசினாலும் நீ கேட்பியா..?? இன்னிக்கு தான் அப்பா அம்மாவ ஊருக்கு வர வேண்டாம் சொன்னேன்… ஓரளவு எல்லாம் சரியாகட்டும்னு… இப்போ வேலை விட்டு வந்திட்ட…” என்று அவளும் காட்டமாய் பேச,

“ஓ.. இப்போ என்னோட வேலைதான் பிரச்சனை இல்ல…” என்றவன் “ஏன் இந்த வேலை விட்டா வேற வேலையே கிடைக்காதா??” என,

“நான்…. நான்.. அதுக்காக சொல்லலை தேவ்.. ஏன் நீ புரியாம நடந்துக்கிற..” என்றவள், அவன் சட்டையையே இறுகப் பற்றி,

“பயமா இருக்கு தேவ்.. நடக்கிற எல்லா பிரச்சனையும் சரியாகனும்னு தான் நானும் நினைக்கிறேன்.. ஆனா மேல மேல நடக்கிறப்போ பயமா இருக்கு….” என்று அவன் நெஞ்சில் சாய்ந்துகொள்ள, அவனுக்கே ஒருமாதிரி சங்கடமாய் தான் போனது..

அவளால் அவனை குற்றமும் சொல்லிட முடியவில்லை.. யாராக இருந்தாலும் அவரின் சுயமரியாதை சீண்டப்படுமாயின் அங்கே இருந்திட முடியாது தான்.. ஆனாலும் உள்ளம் பதறியது..

“ஷ்.. பல்லவி… ஃபீல் பண்ணாத..” என்று அவளை அணைத்தவனுக்கும் மனம் கனமாய் தான் இருந்தது..

“எப்படி எப்படி ஃபீல் பண்ணாம இருக்க சொல்ற… அம்மா என்னடான்னா ஒன் வீக்ல எல்லாம் சரி பண்ண பாருங்க.. நாங்க வர்றோம்னு சொல்றாங்க.. எதுவுமே நேர்ல பார்த்து தான் முடிவு பண்ண முடியும் சொல்றாங்க.. இப்போ இந்த பிரச்சனை..” என,

“நீ ஏன் அவங்களை வரவேண்டாம் சொன்ன??” என்றவனிடம்,

“நீ புரிஞ்சு பேசுறியா புரியாம பேசுறியா???” என்றுதான் கேட்டாள்..

“இங்க பார் பல்லவி எனக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கும்.. அதுக்காக எல்லாம் அவங்களை நம்ம தப்பு சொல்ல முடியாது.. விடு நானே கால் பண்ணி பேசிக்கிறேன்..” என,

“என்ன பேச போற நீ.. இதெல்லாம் சொல்லப் போறியா??” என்று பதறியவளை, இன்னும் இறுக அணைத்து அடக்கியவன்,

“அதுதான் சரின்னு எனக்குத் தோணுது.. இல்லைனா இவ்வளோ நடந்திருக்கு சொல்லவேண்டாமா அப்படின்னு கேட்டா..??” என்று கேட்க,

“இல்ல தேவ்.. வேண்டாம்.. நான் எப்படி சொல்லணுமோ அப்படி சொல்லிக்கிறேன்.. வேண்டாம்.. மே பீ உன்னை அவங்க அன்டர் எஸ்டிமேட் பண்ணிட்டா.. நோ நோ..” என்று அவள் தலையை உருட்ட,

“லூசு..” என்று அவள் தலையில் முட்டியவன்,

“நீ மட்டும் அப்படி நினைக்காம இருந்தா போதும்.. நான்தான் பேசிக்கிறேன் சொல்றேன்ல..” என்றவனை வருத்தமாய் பார்த்தாள்..

அவனுக்குமே உள்ளே வருத்தம் தான் ஆனால் வெளிக்காட்டவில்லை.. பல்லவி மனதில் காதல் இருந்தும் அவள் சொல்லத் தயங்கினாள் தான்.. அப்படித் தயங்கியவளை பேசி பேசித்தான் கரைத்தான் இவன்..

‘நல்ல வேலைல இருக்கேன்.. நல்ல குடும்பம்.. நானும் கொஞ்சம் நல்லவன் தான்.. இதெல்லாம் போதாதா உன் வீட்ல சரி சொல்ல..’ என்று இன்னும் எத்தனையோ காரணங்கள் சொல்லியிருந்தான்..

அனால் இன்று அந்த நல்ல வேலையும் அவனிடம் இல்லை.. அவன் சொன்ன அந்த நல்ல குடும்பமும் அவனை புரிந்துகொள்ளவில்லை..

இனி எதை வைத்து.. எந்த நம்பிக்கை கொடுத்து அவளின் பெற்றோர்களிடம் அவன் பேசிட முடியும்.. அவனுக்கு நம்பிக்கை இருந்ததுதான்.. ஆனால் அவர்கள் அதனை நம்பிட வேண்டுமே..             

வேலை விட்டாகியது தெரிந்தாலே யாரும் பின்வாங்குவர்.. இதில் வேறொரு பெண்ணோடு நிச்சயம் வேறு நடந்து அதை முறித்துத்தான் இந்த காதல் என்றால் கடவுளே என்ன நடக்கும் என்று தெரியவில்லை.. ஆனால் உண்மைகளை சொல்லிடவேண்டும் என்பதில் ஷ்யாம்தேவ் உறுதியாய் இருந்தான்.

ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் சொல்ல அவன் தயாராய் இல்லை..

“நீ மட்டும் என்னை நம்பினா போதும் பல்லவி.. டோன்ட் ஃபீல்…” என்று சொல்லி அவளின் நெற்றியில் முத்தமிட்டவனை இறுக்கமாய் அணைத்துக்கொண்டாள்..

காதல் எடையிடவே முடியாத ஒரு வல்லமையும் கொடுக்கும், கணக்கிட்டு பார்க்க முடியாத ஒரு கலக்கத்தையும் கொடுக்கும்.. அப்படித்தான் ஆனது பல்லவிக்கு..

அடுத்தது என்ன?? என்ற பெரிய கேள்வி அவளின் முன் தோன்றி பயம் காட்டியது..

“ஷ்.. என்ன பல்லவி நீ….” என்று ஷ்யாம் அவளை சமாதானாம் செய்யும் பொருட்டு, மேலும் முத்தமிட,

“போடா…” என்று அவனைத் தள்ளியவள், “நீ கிளம்பு… பேசினா பேசிட்டே தான் இருப்போம்..” என்று சொல்ல,

“நிஜமா நான் போகவா??” என்றவனோ கிளம்பும் எண்ணத்திலேயே இல்லை..

“எஸ் கிளம்பு..” என,

“வந்தவனுக்கு ஒரு டீ கூட போட்டுக்கொடுக்க கூடாதா..” என்று பரிதாபமாய் முகத்தை வைத்துக் கேட்க,

“உன்னால எப்படி தேவ் இப்படில்லாம் யோசிக்க முடியுது…” என்று அயர்ந்து அவனைப் பார்க்க,

“வேற என்ன சொல்ற.. வா நீயும் நானும் சேர்ந்து உக்கார்ந்து அழுவோம்.. வா..” என்று அவளின் கரங்களைப் பிடித்து இழுக்க,

அவன் சொன்ன, செய்த விதத்தில் அவளுக்கு சிரிப்பு வந்திட, “ச்சு.. சும்மாயிரு…” என்றவள் “டீ எடுத்திட்டு வர்றேன்..” என்று போக,

“தட்ஸ் குட்…” என்றவனும் பின்னேயே போக,

“நீயேன் இங்க வர…” என்றபடி அவள் பாலைக் காய்ச்ச, அவனோ பதிலே சொல்லாது பின்னிருந்து அவளை அணைத்து நிற்க,

“ஹேய்.. என்ன பண்ற நீ??” என்று செல்லமாய் பல்லவி அவனை மிரட்டவும்,

“கிட்சனால் பின்னால நின்னு ஹக் பண்ணா பிடிக்கும்னு நீ எத்தனை டைம்ஸ் சொல்லிருக்க..” என்றவன் என்றோ ஒருநாள் அவள் சொன்னதை எல்லாம் இப்போது திரும்ப சொல்ல,

“அச்சோ போதும் போதும்…” என்று பல்லவி கூசி அவளின் காதுகளை மூடிக்கொள்ள, பின்னிருந்தே அணைத்தவன், காதுகளை மூடிய அவளின் கரத்தின் மீதே இதழைப் பத்திதான் ஷ்யாம்தேவ்..

“தேவ்… நீ போ.. நான் போட்டு எடுத்துட்டு வர்றேன்..” என்று கை முஷ்டியால் அவனின் வயிற்றில் குத்த,

“ஹா ஹா நான் போகமாட்டேன்..” என்று சிறுவன் போல் ஷ்யாம் அடம்பிடிக்க, அவன் இதை எண்ணி வரவில்லை என்று அவளுக்கும் தெரியும், ஆனாலும் என்னவோ இத்தனை நேரமிருந்த பயம், அழுகை, எல்லாம் இப்போது காணாது போனதுபோல் பல்லவி உணர,

“தேவ்.. எல்லாமே சீக்கிரம் சரியாகிடும்..” என்று அவனுக்கு நம்பிக்கையான வார்த்தைகளை பதிலாய் கொடுக்க,

“அந்த எண்ணம் இங்க இருந்தா போதும் எனக்கு…” என்று அவளின் தலையை மெதுவாய் கொட்டியவன், வேண்டுமென்றே பயந்து போவது போல் ஹாலுக்கு போக,

“டேய் டேய்… நடிக்காதடா…” என்று இருவருக்கும் டீ எடுத்துக்கொண்டு அவளும் போனாள்..

அதன் பிறகான நேரம் கொஞ்சம் இனிமையாகவே கழிய, அனைத்துப் பிரச்சனைகளும் சீக்கிரமே சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இருவருக்குமே நிறைய நிறைய வந்திருந்தது..

பல்லவி கூட இனி ஷ்யாம்தேவிடம் அது இதென்று புலம்பக்கூடாது என்று முடிவிற்கு வந்துவிட்டாள்.. நேரம் சென்றதும் அவனும் கிளம்பிட, மகிழ்ச்சியாகவே அவனை அனுப்பி வைத்தாள்.

ஆனால் ஷ்யாம் வீடு போனவனையோ, மஞ்சுளா “என்னப்பா உன் வருங்கால பொண்டாட்டி மாமனார் மாமியார் எல்லார்கிட்டவும் பேசி முடிச்சு வர இந்த நேரம் போதுமா..” என்று கேட்க,

“ம்மா… ஏன் இப்படி பேசுற??” என்றவன் அவரின் அருகே போக,

“உண்மை அதுதானே..” என்றவர் ஒன்றும் பேசாமல் எழுந்து உள்ளே சென்றிட, ஷ்யாமிற்குத் தெரியும் மஞ்சுளாவின் குணம் இதுவல்ல என்று.. ஆகையால் அவர் என்ன பேசினாலும் கொஞ்சம் பொறுத்தே போவோம் என்று இருக்க,

சிவபாலனோ, “என்ன ஷ்யாம் பின்னாடி காலர் கிட்ட கிழிஞ்சிருக்கு..??” என்று கேட்க, அவனுக்கே அது அப்போது தான் தெரிந்தது..

காலையில் நடந்த சண்டையில் அவனின் சட்டை கிழிந்திருக்கிறது என்று.. ஆபிஸ் விட்டு கிளம்பியவன் அதனோடே தான் சுற்றிக்கொண்டு இருந்தான்.. வீட்டிற்கு உடனே வர பிடிக்கவில்லை.. ஆக வீட்டிற்கு வராமல் அப்படியே தான் பைக்கில் சுற்றிக்கொண்டு இருந்தான்..

“அதுப்பா…” என்றவன், பின் மறைத்து என்ன ஆகப் போகிறது என்று அனைத்தையும் சொல்லிட,

“ஓ.. வேலையும் போச்சா???!!!” என்று மஞ்சுளா அனைத்தையும் உள்ளிருந்து கேட்டவர் வெளிவர,

“போகலம்மா.. நானே விட்டுட்டேன்..” என்று இவனும் சொல்ல,

“எல்லாம் ஒண்ணுதான்.. எந்நேரத்துல லவ் பண்றேன் சொன்னியோ அப்போவே அனர்த்தம் தான்.. வீட்டுக்கு வந்த சொந்தம் எல்லாம் வெட்டிட்டு போனாங்க.. இப்போ உன் வேலையும் போச்சு…” என்று மஞ்சுளா ஆரம்பிக்க,

“அம்மா….” என்று பொறுக்கமாட்டாமல் கத்தியேவிட்டான்..

தான் பொறுமையாகவே போகவேண்டும் என்று நினைத்திருந்தாலும், அதற்கு பிறரும் சிறிதாய் ஒத்துழைப்பு தர வேண்டுமே..

சிவபாலனும் “மஞ்சுளா.. என்ன பேச்சிது…” என்று அதட்ட,

“ஓ.. அப்போ நான் பேசினது தான் தப்பா.. அன்னிக்கு எல்லார் முன்னாடியும் அப்படி நின்னோமே அது இவனுக்கு உறுத்தலை.. ஆனா நான் சொன்னதுமட்டும் தப்பா போயிடுச்சா…” என்று அடுத்து ஒரு சண்டைக்கு மஞ்சுளா ஆரம்பிக்க,

“ம்மா ப்ளீஸ்.. நீ அடி கூட அடிச்சுக்கோ ஆனா ப்ளீஸ் இப்படி பேசாத..” என்றவன் கொஞ்சம் தேறியிருந்த மனம் மீண்டும் தொய்வதை கண்டு சோர்வாய் அமர்ந்திட,

“என்னவோ பண்ணுங்க…” என்று மஞ்சுளா மீண்டும் உள்ளே சென்றிட,

“ஏன் ஷ்யாம் அவசரப்பட்டு வேலையை விட்ட??” என்றார் சிவபாலன் வருத்தமாய்..

“வேறே என்னப்பா செய்ய சொல்றீங்க.. என் வேலையை விட அதிகப்படியாவே வொர்க் பண்ணிருக்கேன்.. ஒரு ஜூனியர் ஸ்டாப் முன்னாடி எப்படி ட்ரீட் பண்ணணுமோ அப்படி பண்ணனும்.. என்ன எதுன்னு விசாரிக்காம சஸ்பென்ட் பண்றேன்னு சொன்னா.. நீயே வச்சிக்கோ உன் வேலையை சொல்லிட்டேன்..” என்றவனின் நியாயம் புரிந்தாலும், அவனது நிலை அவருக்கும் வருத்தமே கொடுத்தது.

பல்லவியும் ஓரளவு தைரியத்தில் இருந்தாலும், ஷ்யாம் ரவிச்சந்திரனிடம் உண்மைகளை சொல்லி, அவர் என்ன சொல்வாரோ என்று ஒரு நடுக்கம் உள்ளே ஓடிக்கொண்டே இருக்க, உறக்கம் வரவேயில்லை…

புரண்டு புரண்டு படுத்தவளுக்கு மனதில் பலவேறான யோசனைகள்.. நாளைக்கு ஆபிஸ் செல்லவேண்டும் என்று நினைத்தாலே மனம் கசந்தது.. ஒன்றைத் தொட்டு ஒன்றாய் நிறைய நிறைய யோசனைகள்.. ஆனாலும் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை..

மறுநாள் அலுவலகம் கிளம்பிப் போனவளை அனைவரும் துக்கம் விசாரிப்பது போல் விசாரிக்க, ஒருசிலரோ நக்கலாய் பார்த்து செல்ல, பல்லவிக்கு இதற்குமேல் இங்கிருக்க முடியாது என்று தோன்றிட, அடுத்த இரண்டே நாளில் அவளும் வேலையை ராஜினாமா செய்துவிட்டாள்.

என்னவோ ஷ்யாம் இல்லாது அவளால் அங்கிருக்க முடியவில்லை.. ஆனால் ஷ்யாமிடம் சொல்லவில்லை..

விடப்போகிறேன் என்றும விட்டுவிட்டேன் என்றும்.. சொல்லிடவேண்டும் என்று நினைத்திருக்க, தினேஷ் மூலமாய் ஷ்யாமிற்கு தகவல் சென்றிட,        

“நீ ஏன் பல்லவி ரிசைன் பண்ண??” என்று ஷ்யாம் அதிர்ச்சியாய் கேட்டபடி வந்தான் அவளின் வீட்டிற்கு..

“உட்கார் தேவ்…” என்றவளின் பேச்சைக் கேட்காது, “ம்ம்ச் நீ சொல்லு.. ஏன் இப்படி பண்ண??” என,  

“என்னவோ.. நீ வந்தப்புறம் எனக்கு அங்க பிடிக்கல தேவ்..” என்றவளை ‘கொஞ்ச யோசித்திருக்கலாம்..’ என்று பார்த்தாலும் அவனின் பார்வையில் ஒருவித பெருமை தான் தெரிந்தது..

“என்ன பெருமையா பாக்குற… இந்த வேலை நீ இருக்கன்னு நான் வரல.. ஆனா நீ இல்லைங்கறப்போ எனக்கு அங்க பிடிக்கலை.. அவ்வளோதான்….” என,

“ம்ம் ஆனா உன் வீட்ல என்ன சொல்வாங்க??” என்றான் கொஞ்சம் தயங்கி..

“வீட்ல இன்னும் சொல்லல.. பட் சொல்லிக்கிறேன்..” என்றவள், “அங்கிள் ஆன்ட்டி என்ன சொன்னாங்க..??” என,

“அப்பா கொஞ்சம் பேசுறார், ஆனா அம்மா ரொம்ப கோபமா இருக்காங்க..” என,

“வேலை விஷயம் என்னாச்சு??” என்றாள்,..

“சொல்லிருக்கேன்…. எப்படியும் நெக்ஸ்ட் மன்த்குள்ள கிடைச்சிடும்..” என்றவன், “ஷ்.. மறந்தே போனேன்.. உன் அப்பாக்கிட்ட பேசனும்..” என்று பல்லவியின் முன்னேயே அழைத்து, அனைத்து உண்மைகளையும் சொல்லிட, அவளுக்கோ திக் திக் என்றது..

ரவிச்சந்திரன் கேட்டவரோ “ஹ்ம்ம் நான் பல்லவிக்கிட்ட பேசிக்கிறேன்..” என்றுவிட, அதற்குமேல் ஷ்யாமும் எதுவும் சொல்லவில்லை..

“உன்கிட்ட பேசுறாராம்.. டென்சன் வேண்டாம்.. ரிலாக்ஸா பேசு…” என்றவன் “ஒருத்தரை மீட் பண்ணனும் நான் நைட் கால் பண்றேன்…” என்று சொல்லி கிளம்ப அடுத்த கொஞ்ச நேரத்திலேயே சோபனா அழைத்துவிட்டார்..

நடுங்கும் உள்ளத்தோடு அழைப்பை ஏற்றவள் வாயே திறக்கவில்லை.. அப்படி பேசித் தீர்த்துவிட்டார் சோபனா..

முடிவாய் “நீ அங்க வேலைப் பார்த்தது போதும் கிளம்பி வா…” என்றுசொல்ல, அப்போதுதான் பல்லவி வேலையை விட்டதே நினைவில் வர, அதையும் அவள் சொல்லிட,

“ஓ..” என்றவர் “சரி எப்போ ஊருக்கு வர??” என்று விசாரிக்க,

“ஏன் ம்மா நான் வேற..” என்று பல்லவி சொல்லும் போதே “இந்த கதை எல்லாம் இங்க வேணாம்.. வேலைக்காகதான அங்க போன.. இப்போ அதில்லைல.. ஒழுக்கமா கிளம்பி வா..??” என,

“ம்மா ஏன் இப்படி பேசுற???” என்று பல்லவி கேட்கும்போதே அவளின் குரல் நடுங்க,

“எங்க பேச்சுக்கு இதுலயாவது மரியாதை கொடு பல்லவி.. எல்லா நேரத்துலயும் ஒண்ணுபோல இருக்க முடியாது.. அந்த பையன் வீட்ல இருக்க பிரச்சனை, வேலை பிரச்சனை எல்லாம் சரியாகட்டும் அதுக்கப்புறம் மேற்கொண்டு பேசுவோம் ஆனா நீ கிளம்பி வர அவ்வளோதான்….” என்றவர் ஃபோனை வைத்துவிட,

‘அய்யோ….’ என்று மிக மிக நொந்து போனாள் பல்லவி..

இந்த வேலை இல்லையென்றால் என்ன வேறு பார்த்துக்கொள்வோம் என்று நினைத்திருக்க, சோபனா இப்படி சொல்வார் என்று எதிர்பார்க்கவில்லை.. ஆனால் யோசிக்கையில் அவர்களையும் தவறாய் சொல்லிட முடியாது என்றே பட, ஷ்யாமிடம் இதை பேசுவோம் என்று அழைக்க நினைத்தாள், ஆனால் உடனே எண்ணத்தை மாற்றிகொண்டாள்..

‘வேணாம் ஆல்ரடி அவனுக்கு டென்சன்…’ என்று இருந்தவள், அவளின் அப்பாவிற்கு பேச, அவரும் ஊருக்கு வா என்றுதான் சொன்னார்..

ஓரளவிற்கு மேல் சமாளிக்க முடியாது போக, வேறு வழியே இல்லை பல்லவி மதுரை கிளம்பும் நிலை.. இதை ஷ்யாமிடம் சொல்ல, அடித்து பிடித்து மறுநாள் வந்தான்.

வந்தவன் “நீ போகவே கூடாது…” என்று மறுக்க, “என்னால முடியலை தேவ்..” என்று அவளோ கண்ணீர் சிந்த,

“ம்ம்ச் என்ன முடியலை.. இல்ல என்ன முடியலை.. நான் சமாளிக்கலையா வீட்ல..” என்று கத்த,

“அய்யோ ப்ளீஸ் கத்தாத தேவ்…” என்று அவனின் கரங்களைப் பிடிக்கப் போக, அவனோ அவளைவிட்டு ஒரு எட்டு பின்னே நகர,

“தேவ்…” என்று அவனை அதிர்ந்து பல்லவி பார்த்தாள்.

“நான் சொல்றேன்.. நீ போகக்கூடாது… வேணும்னா நான் திரும்ப உங்க வீட்ல பேசுறேன்…” என்று சொல்ல,

“அய்யோ வேணாம் தேவ்.. அவங்க உன்னை ஏதாவது பேசிட்டா..” என்று பல்லவி மறுக்க,

“இல்ல பல்லவி நீ.. நீ ஊருக்கு போறது.. எனக்கு பிடிக்கல..” என,

“எனக்கு வேற வழியில்ல தேவ்..” என்றாள் வேறு வழியே இல்லாமல்.  

“நான் இதை எக்ஸ்பெக்ட் பண்ணல பல்லவி.. உன்கிட்ட இருந்து..” என்றவனின் பார்வையில் அப்பட்டமாய் குற்றச்சாட்டு தெரிய, பல்லவிக்கு இத்தனை நாள் மனதினுள் அடக்கி வைத்திருந்த கோபமும் வெளி வந்தது.. 

“சில நேரங்கள்ல வீட்ல சொல்றதயும் கேட்கணும் தேவ்..” என்று பல்லைக் கடித்து சொல்ல,

“ஓ… அப்புறம்…” என்றான் நக்கலாய்..

“என்ன??” என்று பார்த்தவள், “இப்போ நான் போகலைன்னா அவங்க இங்க வருவாங்க.. அது தேவையில்லாத இன்னொரு பிரச்சனையை கொண்டுவரும்..” என்றவளை பேசியது போதும் என்று கை காட்டி நிறுத்த,

“இல்ல தேவ்.. வீடு காலி பண்றேன்னு கூட சொல்லிட்டேன்.. கொஞ்சம் நம்மளும் பொறுமையா தான் போகணும்..” என்றவள் கிளம்புவது தான் என் முடிவு என்பதை பிடிவாதமாய் சொல்லிட,                                 

“வெரி குட்.. வெரி வெரி குட்..” என்று கைகளைத் தட்டியவன்,

“சில நேரம் வீட்ல சொல்றதையும் கேட்கணும்.. ஹா… சூப்பர்… பொறுமையா தான் போகணும்… ” என்று சொன்னவன் அவளின் தோள்களை இறுகப் பற்றி,

“ஊருக்கு போனதும் உன் வீட்ல மாப்பிள்ள பார்த்து வைப்பாங்க.. கல்யாணம் பண்ணிப்பியா? அப்பாவும் இதே டயாலாக் சொல்வியா??” என்று பிடித்து உலுக்க,

“தேவ்…!!!!!” என்று அதிர்ந்தே போனாள்..

‘அம்மாடி என்ன பேச்சு இது…’ என்று அவனைப் பார்க்க,

“என்ன பதில் சொல் டி..” என்று இன்னும் பிடியை உலுக்க,

“ஸ்டாப் இட் தேவ்..” என்று கத்தியவள், “பண்ணதெல்லாம் நீ அவசரத்துல பண்ணிட்டு.. லாஸ்ட்ல என்னை இப்படி பேச உனக்கு மனசு வந்தது..” என்று கேட்க,  

“ஏன்.. ஏன் என்ன தப்பா பண்ணிட்டேன்…” என்று தேவ் எகிற,

“ம்ம்ச் முதல்ல இப்படி எல்லாத்துக்கும் குதிக்கிறதை விடு..” என்றவள் ஒருவேகத்தில் “யோசிக்காம எல்லாத்தையும் பண்ணது நீ.. ஆனா இப்போ வந்து என்னை சொல்ற..” என்று விரலை நீட்டி சொல்ல,

“ஓ.. யோசிக்காம.. நான்.. அஹா… எப்படி யோசனை பண்ணி அந்த சுமதியை கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லிருக்கணும் சொல்றியா.. இல்லை.. அந்த பாஸ்கருக்கும் அந்த ஹெட்க்கும் காலுக்கு விழுந்திருக்கணும் சொல்றியா??” என்று திமிராய் கேட்டவனை இப்போது முழுதாய் முறைத்து நின்றவள்,

“நீ எதுவும் பண்ண வேணாம்.. நீ எப்படி இருக்கணுமோ எது உன் விருப்பமோ.. அப்படியே இரு.. ஆனா நான் ஊருக்கு போறது உறுதி..” என,

“அப்போ.. நான்..?? எனக்கு என்ன டி பதில்..” என்று ஷ்யாம் கத்த,

“ஊருக்கு போறேன்னு சொன்னா உன்னை விட்டு போறேன்னு அர்த்தமா தேவ்.. எல்லாமே உடனே நடக்காது.. ஆனா நடக்கிற வரைக்கும் நம்ம கொஞ்சம் தள்ளி இருக்கிறது பெட்டர்..” என,

“பெட்டர்.. ஹ்ம்ம்.. பெட்டர்..” என்று தலையை மேலும் கீழும் ஆட்டியவன்,

“போ… நீ போ.. ஒரு வேலைக்கு உட்கார்ந்திட்டு.. எங்க வீட்லயும் சம்மதம் வாங்கிட்டு அப்புறம் வந்து உன்னைப் பார்த்துக்கிறேன்..” என்றவன் அவளை நின்று முறைத்துவிட்டு கிளம்ப, பல்லவிக்கு அவனின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளின் உள்ளத்தை எத்தனை உடைத்தது என்று அவளுக்குத் தான் தெரியும்..

                  

Advertisement