Advertisement

நட்சத்திர விழிகள் – 5
“என்னாச்சு டார்லிங்? இவன் ஏன் இப்டி கத்துறான்?…” என வினவிய விஷ்ணுவை பார்த்து,
“ஒண்ணுமில்லையா நீ போய் தூங்கு. அவனுக்கு கொஞ்சம் வேப்பிலை அடிக்கணும். அதான்!…” என அவனை உள்ளே அனுப்பிவிட்டு திரும்பியவரை மீண்டும் அழைத்தவன்,
“டார்லிங் அவல்கேசரி இருக்குதானே?…” என்றான் முக்கியமான சந்தேகத்தை கேட்க, நாச்சி திரும்பி முறைத்த முறைப்பில் அசடுவழிந்தபடி வந்த வழியே திரும்பினான்.
திரும்பவும், “நாச்சி!…” என வீடே அதிரும்படி கத்தினான் உதயா.
அலறலை கேட்ட அனைவரும் இவனுக்கு வேற வேலையில்லை எப்போபாரு பாட்டியும் பேரனும் சண்டைக்கு நிக்கிறது.
பஞ்சாயத்து பண்ண போனா ரெண்டும் செட்டு சேர்ந்து நமக்கே ரிவிட் அடிக்கும்ங்க தேவையா என முணுமுணுத்தபடி கலைந்து சென்ற அனைவருக்கும் முன் அனுபவம் இருப்பது தெள்ள தெளிவாகியது.
உதயாவின் அலறலில் காரணத்தை யூகித்த நாச்சி, “இவன!!….இன்னும் என்னலாம் ஆர்ப்பாட்டம் பண்ண போறானோ தெரியலையே?…” என மனதிற்குள் வசைபாடியபடி மாடிக்கு சென்றார்.
““என்ன கிழவி இதெல்லாம்?..”
“எப்போ பாரு மொட்டையாவே கேட்டுட்டே இருக்க?…” என்றார் அவனது கூச்சலுக்கான காரணத்தை தெரிந்துகொண்டே,
“அதுக்குன்னு ஆறடி கூந்தலை வளர்த்து வச்சுகிட்டா கேட்கணும்?…”
“இப்போ என்னதான் சொல்ல வர நீ?..”
“உன்னை யாரு இதையெல்லாம் ஏற்பாடு பண்ண சொன்னா?…” என்றான் உள் அறையில் கட்டிலில் செய்திருந்த அலங்காரத்தை பார்த்து கடுப்பாக.
“ம்க்கும். இதுக்குத்தான் இந்த சவுண்டா?…..ஏன் எல்லா வீட்லயும் நடக்கிறது தான?…” என்றார் அலட்சியமாக,
“அது எனக்கு தெரியாதா?, உன் கிட்ட இதை செய்ன்னு நான் வந்து கேட்டேனா?…”
“நீ கேட்டாதான் பண்ணனுமா? ரொம்பத்தான் பிகு பண்ற?….”
“பாட்டி கொலைவெறியை கிளப்பாத சொல்லிட்டேன்?..இப்போ இது ரொம்ப முக்கியமா?….” என கேட்டுவிட்டு இப்போது உள்ள சூழ்நிலையை புரிந்துகொள்ளாமல் பேசுகிறாரே என்ற ஆற்றாமையோடு அவரை பார்க்க அவரோ எதற்கும் சளைக்காமல்,
“இங்க பாரு ராசா நீ இதுக்கு சம்மதிச்சுத்தான் ஆகணும், மாட்டேன்னு அடம்பிடிச்ச உன் அப்பனை கூப்பிட்டு பஞ்சாயத்து வைப்பேன் சொல்லிட்டேன்!…” என்றார் கட்டளையான குரலில்.
“கூப்பிடு, நானும் என்ன விஷயம்னு சொல்லுறேன், நீ சொல்றது செல்லுதா, இல்லை நான் சொல்றது செல்லுதான்னு பார்க்கலாமா?….” என்று மல்லுக்கு நின்றான்.
“என்னங்கடா இது இப்படி சொல்றான்?….” என்று யோசிக்க, “என்ன கிழவி நான் கூப்பிடவா?….”
“எதுக்கு இல்ல எதுக்குங்கறேன், நான் ஒருத்தி போதாதா உன்னை சமாளிக்க?…”
“நீ கூப்பிடாட்டி போ நானே கூப்பிட்டுக்கறேன்!…” என தந்தையை அழைக்க விழைந்தவனை இழுத்து பிடித்த நாச்சி,
“நான் சொல்றதை கேளுயா!…” கிட்டத்தட்ட கெஞ்சும் குரலில்.
“அதெல்லாம் முடியாது கேட்கமாட்டேன்!…” என்றான் சற்றும் மனமிரங்காமல்.
“அடடா, என்னப்பா பிரச்சனை உனக்கு ஏன் அத்தையை இப்படி படுத்தி வைக்கிற?…” என கேட்டபடியே ஆஜரானார் சுதர்சனன்.
“வாங்க மாமா அந்த சக்கரம் மாதிரியே வந்துட்டீங்க என்னை காப்பாத்த!…” எனவும்,
“எந்த சக்கரம்?…” என்றார் புரியாமல்.
“அதான் க்ருஷ்ணபரமாத்மா கையில இருக்கும்ல அந்த சக்கரம்!…” என்றான் குறும்பாக.
“தேவைதான் எனக்கு, இப்போ எதுக்கு இந்த நேரத்துல இப்படி சத்தம் போடறீங்க ரெண்டு பேரும்?…” என வினவவும்,
“நீயே சொல்லு…” என்பது போல முறைத்தபடியே நின்றான் நாச்சியை பார்த்தவாறே.
“அது ஒண்ணுமில்லைப்பா சாந்திகல்யாணம் வேண்டாம்னு சொல்லுறான் இந்த படுவா, நீ சொல்லி புரிய வைய்யேன்!…” என்றவுடன்,
உதயா, சுதர்சனன் இருவருமே அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர்.
“ஏனப்பா பிரபா எதுக்காக அப்டி சொன்ன?…” என கேட்டுவைத்ததில் கடுப்பானவன்,
“ஏய் கிழவி நான் எப்போ உன் கிட்ட அப்படி சொன்னேன்?…” என்று வெடித்தான்.
இப்போ, “ங்கே…” என விழித்தது நாச்சியும், சுதர்சனமும்.
“இவனுக்கு என்னாச்சு?…” என பார்த்தபடி.
“பின்ன எதுக்காக நீ அப்படி கத்தின?…” – நாச்சி.
“மாமா நீங்களே கொஞ்சம் எட்டி என்னோட பெட் டை பாருங்க மாமா!…” என்றான் அழாத குறையாக.
எட்டிபார்த்தவரது விழியில் ஒன்றும் தவறாக படவில்லை. புரியாமல் பார்த்தவரை கண்டு தலையில் அடித்துகொண்டான்.
“உங்க ரெண்டு பேர் கிட்ட வந்து கேட்டேன் பாருங்க என்னை சொல்லணும்?…”
“என்னனு தெளிவா சொல்லு ராசா, அப்போதானே எங்களுக்கும் விளங்கும்!…” என்றார் கவனமாக ‘மொட்டையா’ என்ற வார்த்தையை தவிர்த்து. 
“பின்ன என்ன மாமா?…அங்க பாருங்க!…”
“அதான் பார்த்துட்டேனே?..”
“அது பெட் மாதிரியா தெரியுது?…”
“எனக்கு அப்படிதானப்பா தெரியுது!…”
“என்ன சொல்ல வரான் என்று புரியலையே? இதுக்குத்தான் இந்த வீட்டாளுங்க எல்லாம் அப்படி ஓடிட்டாங்க?…” என்று மனதிற்குள் நொந்தபடி என்ன சொல்லபோகிறான் என கவனிக்கலானார்.
“ஆட்டுக்கு சாப்பிட குலை கட்டிவிட்டது போல ஊர்ல இருக்கிற பூவையெல்லாம் இங்க கொண்டு வந்து கொட்டிவச்சா எப்படி?…”
“என் கட்டிலோட லுக்கே போச்சு!…டெக்கரேட் பண்ண தெரியலைனா என் கிட்ட சொல்லவேண்டியதுதானே? நான் ஹெல்ப் பண்ணி இருப்பேன்ல?…” என்றவனை கண்டு நாச்சி திருதிருவென முழிக்க சுதர்சனத்துக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை.
“முதல் முதல்ல என் பொண்டாட்டி என்னோட ரூம்க்கு வரபோறா, இப்டியா கோழி குப்பையை கிளறினது போல பண்ணி வச்சிருப்ப?…”
“ஐயோ!!!! இதை மட்டும் பார்த்தா என்னை பத்தி என்ன நினைப்பா?…” என தன் போக்கில் புலம்பிகொண்டிருந்தவன் தன்னையே இருவரும் வாயை பிளந்தபடியே பார்த்துகொண்டிருப்பதை கண்டவன்,
“கிழவி, வா வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு, இதையெல்லாம் அவ வரதுக்குள்ள க்ளீன் பண்ணனும். மாமா அங்க என்ன மசமசன்னு நின்னுட்டு? வாங்க இங்க!…” என ஒரு அரட்டுபோடவும், 
“அடப்பாவி!….” என பார்த்துவைத்தனர் இருவரும்.
“இதுக்காடா இந்த ஆட்டம் ஆடின?…” என்று குமைந்தபடியே அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு உதவி செய்ய முன்வந்தனர்.
செய்யணுமே. உதவி செஞ்சே ஆகணுமே? இல்லைனா  சும்மா விட்டுவிடுவானா?
உள்ளே நுழைந்த இருவரையும் யோசனையாக பார்த்து,
“கிழவி நீ போய் நந்து வரதுக்கு கொஞ்சம் லேட் பண்ணு!…” என கூறவும்,
பெருமூச்சோடு வெளியேற போனவரை தடுத்தவனை கலவரமாக பார்த்தார் நாச்சி.
“நான் விசில் அடிச்ச பின்னாலதான் அழைச்சிட்டு வரணும், புரியுதா!….” என உத்தரவிட்டவனை ‘மவனே நாளைக்கு வா உன்னை வச்சிக்கறேன்’ என கருவியபடியே நகர்ந்தார்.
சுதர்சனன் நொந்தே போனார். “நான் ஊருக்குள்ள எவ்வளோ பெரியமனுஷன்? என்னை போய் இவன் இப்படி படுத்துறானே? வெளில எவனுக்காச்சும் தெரிஞ்சா என்ன நினைப்பாங்க? மதிப்பானா எவனாச்சும்?…” என புலம்பினார்.
“அங்கதான் தப்பு பண்ணிடீங்க மிஸ்டர் சுதர்சனம் அவர்களே?….”
“என்ன தப்பு? என்ன தப்பு?…” என்றார் பதட்டமாக. 
“நல்ல பெரியமனுஷன் தான் நீங்க. மைண்ட்வாய்ஸ் ல கூட பேச தெரியாம வாயவிட்டு புலம்பிவைக்கிற உங்களையெல்லாம் பெரியமனுஷனு எவனாச்சும் இனிமே என் முன்னால சொல்லட்டும் அப்புறம் வச்சிக்கறேன் கச்சேரியை!….” என சூளுரைத்தவனை கண்டு,
“மாப்ள ஏண்டா இந்த அட்டகாசம் பன்ற?…”
“பின்ன எனக்கெதிரா நந்துகிட்ட கூட்டணியா போடறீங்க?…என்னை பத்தி அவ உங்க கிட்ட சொல்லனுமாக்கும்?…நீங்க பஞ்சாயத்து பண்ண வரிஞ்சுகட்டிகிட்டு வருவீங்கலாக்கும்?…அதை பார்த்துட்டு நான் சும்மா இருக்கனுமாக்கும்?…’ என வரிசையாக தாக்கவும்,
“டேய் எப்பயிருந்துடா நீ இப்படியான?…”என அரண்டுவிட்டார்.
“ஆளை விடு சாமி, இனி உன் சங்காத்தமே வேணாம். தெரியாத்தனமா பேசிட்டேன். அதுக்குன்னு இப்படியாடா பழிக்கு பழி வாங்குவ?…” என அங்கிருந்து ஓட்டம்பிடித்தார்.
அவரது வேகத்தை கண்டு இடியென சிரித்தவன் கதவை சாத்தி விட்டு அங்கிருந்த மலர்களை அகற்றி அறையை சுத்தம் செய்தவன்,
“இவங்ககிட்ட இப்படி பேசினதால தப்பிச்சோம் இல்லைனா இந்த பாட்டி சரியான சிஐடி. விஷயத்தை கண்டுபிடிச்சு காலி பண்ணியிருக்கும் நம்மை!…”
“இப்போ இருக்குற பிரச்சனையில இது வேற தேவையில்லாம மனுஷன் படர அவஸ்த்தை புரிஞ்சுக்காம!…”
“நல்லவேளை நந்தினி வரதுக்குள்ள எல்லாம் க்ளீன் பண்ணியாச்சு. இல்லைனா பார்த்து பயந்திருப்பா, வரட்டும் அவ கிட்ட பேசிட்டு மத்ததை அப்புறமா முடிவு பண்ணிப்போம்!…”என தீர்மானித்துவிட்டு,
முகம் கைகால் அலம்பி உடைமாற்றிவிட்டு வந்து அமர்ந்தவன் நந்தினியை அழைக்கவேணுமே என எண்ணியவாறே அறைக்கதவை திறந்து வெளியே வந்து விசிலடித்தான்.
“கிழவி இதுக்கெல்லாம் சேர்த்துவச்சு நம்மை ஆட்டும் இனி !…”என நகைத்துகொண்டான்.
சிறிது நேரத்தில் கதவை தட்டும் ஓசை கேட்டதும்,
“உள்ள வா, நந்தினி திறந்துதான் இருக்கு!…” என குரல் கொடுத்தான்.
அவனது எண்ணத்திற்கேற்ப உள்ளே வந்தவளோ வேர்வையில் குளித்தவாறு இருந்தாள் பயத்தில் வெடவெடவென நடுங்கியபடி.
இதுக்கேவா? ஹய்யோவென இருந்தது உதயாவிற்கு.
“இங்க வா ஏன் இப்டி நிக்கிற, வந்து இங்க உட்காரு?…”
அசையாமல் நின்றவளை பார்த்து, “என்னங்க மேடம், ஈவ்னிங் சொன்னது மறந்து போச்சா? அத்தனை பேர் முன்னாலையும் தூக்கிடுவேன்னு சொன்னவன் தான் நான், யாருமில்லாத இந்த ரூம்க்குள்ள தூக்க முடியாதா?…” என கூறியதுதான் தாமதம் ஓடி வந்து அமர்ந்துகொண்டாள்.
“அடேங்கப்பா என்னா ஒரு வேகம்?…”என சிலாகித்துவிட்டு சீரியஸான குரலில்,
“நந்தினி!…”
அவன் அழைப்பது தெரிந்தும் நிமிராமல் தரையில் புதையலை தேடியபடியே வேர்வையில் பிசுபிசுத்த கைவிரல்களை பிசைந்தபடி இருந்தவளிடம் மீண்டும் கடுமையாக,
“இங்க பாரு என்னால ஒவ்வொரு வார்த்தையும் ஒருதடவைக்கு மேல சொல்லமுடியாது என் பொறுமையை சோதிக்காம என்னை நிமிர்ந்து பார்த்து நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லணும் புரியுதா? திரும்ப என்னை சொல்லவைக்காத அவ்வளோதான்!…”
அவனது மிரட்டலில் அவள் மிரண்டதை பார்த்தவன் இதுதான் இப்போதைக்கு இவளுக்கு சரி என நினைத்தவாறே முறைத்தபடி இளக்கமில்லாமல் அமர்ந்திருந்தான் அய்யனார் சிலையாக.
“நான் சொல்றதை நல்லா உள் வாங்கிக்கணும். வாயை திறந்து பதில் சொல்லணும்.புரியுதா?…”
“சரிங்க!…”
“இங்க பாரு இனி இதுதான் உன் லைப். நான் தான் உன் ஹஸ்பண்ட். இது உன்னோட குடும்பம்!…” என்று அடுக்கியபடி பேசிக்கொண்டிருந்தவனை தடுக்க புயல் போல வேகமாக வந்த மனசாட்சியை உருட்டுக்கட்டையை கொண்டு தலையில் ஒரேபோடாக போட்டு மயங்கிய நிலையில் தூக்கி ஓரமாக உள்ளே தள்ளினான்.
“என்ன சரிங்க?…” என்றான் அவள் கேட்டதையே அவளிடம் திருப்பி கேட்டு,
“இல்ல நீங்க சொன்னீங்க அதுக்குதான் சரிங்கன்னு சொன்னேன்!…” என மெதுவான குரலில் கூறவும்,
“நான் என்ன சொன்னேன் சொல்லு பார்ப்போம்?..” கண்ணில் குறும்போடு.
“இது என் குடும்பம், இதுதான் என் வாழ்க்கைன்னு சொன்னீங்க!..”
“அவ்வளோதானா?…” என்றான் இதழ்கள் சிரிப்பில் துடிக்க,
“நீங்க, நீங்க தான் என்னோட ஹஸ்பண்ட்!….” என்றாள் திக்கியவாறு.
“உனக்கு திக்குவாயா? இது எனக்கு தெரியாம போச்சே?…” என வேண்டுமென்றே அதிர்ச்சியை வரவழைத்த குரலில்.
“ஹய்யோ இல்லைங்க!…” என தவித்தவளிடம் போதும் விளையாட்டு என நினைத்துகொண்டே,
“இங்க பாரு நந்தினி நீ பயப்படாம இயல்பா இரு. முதல்ல உங்க வீட்ல சமாதானமாகி வரட்டும்!…” எனவும் பெற்றோரின் நினைவில் அமைதியாகியவளை கண்டு,
“நமக்கு தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்குமா, உனக்கு ஓரளவு புரிஞ்சிருக்கும்னு தான் நினைக்கேன்!..” என்றவனை புரியாமல் பார்த்தவளிடம்,
“பழைய விஷயங்களை அவ்வளோ சீக்கிரம் ஒதுக்கிடவும், அதை விட்டு ஒதுங்கிடவும் நம்மால முடியாது!…” ஒரு விதமான வேதனையோடு,
அவன் சொல்லவுமே கலவரத்தோடு பார்த்தவளை கண்டு மென்மையாக புன்னகைத்து,
“ஏன் இப்டி பயப்படற? நான் தான் இருக்கேன்ல?அப்புறம் என்ன?…”
“சாரிங்க என்னாலதான எல்லா பிரச்சனையுமே?…” என்றாள் கழிவிரக்கத்தில்,
“ச்சே! ச்சே! அப்படிலாம் பேசப்படாது, இதுக்கு நானும் ஒரு காரணம் தானே?” என்றான்.
“இல்லைங்க என்னோட முட்டாள்தனம் தான் இதுக்கு காரணம், நான் மட்டும் அன்னைக்கு கொஞ்சம் யோசிச்சு நடந்திருந்தா இன்னைக்கு உங்களுக்கு இந்த கஷ்டமே வந்திருக்காதுல!…” என கேட்டதுமே எங்கிருந்துதான் வந்ததோ கோவம் உதயாவிற்கு,
“ஜஸ்ட் ஷட்டாப் நந்தினி!…” என இரைந்தவன் அவளது மிரட்சியை கண்டு கோவத்தை விற்று சான்றும் இறங்காமல்,
“நான் தான் சொல்றேன்ல? நாம காரணமில்லை சூழ்நிலைன்னு… மறுபடியும் அதையே சொல்ற? என் கையால தாலி வாங்கினது அவ்வளோ கஷ்டமாவா இருக்கு உனக்கு?…” என சற்று நிறுத்தி,
“அப்படி ஒரு நினைப்பு இருந்தா அதை அப்படியே நெஞ்சுக்குள்ளேயே போட்டு புதைச்சிடனும் சொல்லிட்டேன், இந்த ஜென்மத்துல நீயும் நானும் தான் புருஷன் பொண்டாட்டி!…” பொரிந்து தள்ளிவிட்டான்.
பேச ஆரம்பித்ததும் வாயை இரு கைகளாலும் இறுக பொத்திகொண்டவளை கண்டு கோவத்தை விடுத்து முகத்தை அழுந்த துடைத்தவன் அவளை நெருங்கி அமர்ந்து வாயடைத்து இருந்த கைகளை எடுத்துவிட்டு,
“நான் சொல்றதை கேளுமா, நம்மால ஒதுங்கவும் ஒதுக்கவும் முடியாதுன்னுதான் சொன்னேனே தவிர சரிபண்ண முடியாதுன்னு சொல்லலை புரியுதா?…” என்றபடி அவளது தலையை ஆதரவாக தடவியபடி கூறினான்.
சரியென தலையாட்டியவளை கண்டு, “கொஞ்சம் சிரிக்கலாம்ல. இப்படியா அழுது வடிஞ்சிட்டு இருப்ப?…”
புன்னகைக்க முயன்றவளை பார்த்து கேலியாக, “அழுததுல மேக்கப் எல்லாம் போச்சு பாரேன் பார்க்கவே பயங்கரமா இருக்கே? இப்படியா சின்னப்பையனை பயங்காட்டுவ?…” என கலாயிக்கவும்,
ரோஷமாக, “நான் ஒன்னும் இப்போ மேக்கப் போட்டுக்கலை!…” என்றாள்.
“சரி சரி நீ தூங்கு. காலையில இருந்து ஒரே அலைச்சல், எனக்கும் டயர்டா இருக்கு. நானும் தூங்கனும். நீ போய் பாத்ரூம்ல ப்ரெஷ் ஆகிட்டு வா போ!…” என்றான்.
“எனக்கு ட்ரெஸ் எதுவுமே இல்லியே நான் என்ன செய்ய?….” யோசனையாக.
“அட அறிவுகொளுந்தே? இப்போ நீ போட்ருக்கிற ட்ரெஸ் கூடதான் நீ எடுத்துட்டு வரலை. ஆனா உனக்கு எப்படி செட் ஆச்சு?…”
“ஆமாம்ல? எப்படி?…” என்றாள்.
“அம்மா தாயே, பதில் சொல்ல தெம்பில்லை எனக்கு!…”
“அந்த வார்ட்ரோப்ல சில கவர்ஸ் இருக்கும் பாரு. இப்போ நீ மாத்திக்க நைட்டி இருக்கும். மிச்சத்தை நாளைக்கு பேசிக்கலாம் இப்போ போ!…”  என அனுப்பிவைத்துவிட்டு அவள் சென்றதும் படுக்க எத்தனித்தவனின் முன்பு ஆக்ரோஷமாக வீறுகொண்டு எழுந்து நின்றது அவனது மனசாட்சி.
“இங்க என்னடா நடக்குது? நான் எழுந்திருச்சிட்டேண்டா!…..” என கொந்தளித்தவாறு.
“பெருசா என்ன நடக்கும்?… புருஷனும் பொண்டாட்டியும் எங்களோட எதிர்கால வாழ்க்கையை பத்தி பேசிட்டு இருந்தோம்…. அவ்வளோதான்!…” என்றான் தெனாவெட்டாக மனசாட்சியிடம்.
“அதுசரி. இந்த முடிவு எப்போயிருந்து எசமான்?…”
“ம்ம். என்னனே தெரியலை அவ அழுதது மனசை ரொம்ப நொறுக்கிருச்சு!…  என்னை விட யாருமே அவளுக்கு நல்ல வாழ்க்கை துணையா இருக்க முடியாது!…” என்றான் கனவில் மிதந்தவாறே சொன்னவன்,
“அவ இன்னும் இந்த வாழ்க்கையை முழுமனசா ஏத்துக்கலை, உடனேவா எல்லாம் சரியாகும்?….”
“இதைத்தானடா நானும் ஆரம்பத்திலிருந்தே சொல்லிட்டு இருக்கேன், அப்போலாம் சரிவராது சரிவராதுன்னு தட்டிகழிச்ச?…” என்ற மனசாட்சி நாம சொன்னதை கூட இவன் கேட்காம இவனா முடிவெடுக்கிறதா என்ற ஆற்றாமையோடு.
“அப்போ அப்டி தோணுச்சு. இப்போ இப்படி தோணுது விடேன்!…” என்றான் சலிப்பாக யார்கிட்டயிருந்து தப்பிச்சாலும் இந்த மனசாட்சி கேள்வி மேல கேள்வி கேட்டு உயிரை வாங்குதே என்ற கோவத்தில்.
“அப்டிலாம் விடமுடியாது. இதுக்கு என்ன அர்த்தம்?…” எனவும்,
“உன் கிட்ட சொல்றதுக்கு என்ன? என்னால அவளை யாருக்கும் விட்டுக்குடுக்க முடியலையோன்னு தோணுது!…”
“அதனாலதான் நானே அவளை அவளோட பெத்தவங்களோட அனுப்பிவச்சாலும் எப்படி இருக்கா அங்க என்ன நிலவரம்னு தெரிஞ்சுக்க அப்பப்போ ஆள் அனுப்பி விசாரிச்சுட்டே இருந்தேன்!…”
“அருவியூர்ல நடந்த சம்பவத்துக்கு நானும் ஒரு காரணம் தானேன்னு எனக்கு நானே சமாதானபடுத்திகிட்டேன். பின்தொடர்ந்து விசாரிச்சு வச்சது கூட அவ நல்லதுக்காகத்தான் செய்யறோம்.அது மனிதாபிமானம் மட்டும் தான், அதுக்கு மேல ஒண்ணுமே இல்லைன்னு எனக்கு நானே உருபோட்டுகிட்டேன்!…”
“ஆனா திரும்ப அவளுக்கு கல்யாண ஏற்பாடு நடக்கிறதை தெரிஞ்சதும் ஏதோ ஒரு ஏமாற்றம். ஆனாலும் மாப்பிள்ளை வீட்டை பத்தி விசாரிச்சிட்டு மத்ததை யோசிக்கலாம்னு பார்த்தா அது அந்த ராஸ்கலோட வேலைன்னு தெரிஞ்சதும் என்ன பன்றதுனே தெரியலை. அதுக்கப்புறம் யோசிக்க என்ன இருக்குன்னு கிளம்பி நேர மண்டபத்துக்கு போயிட்டேன்!…”
“எவ்வளவோ சொன்னேன் கேட்டாரா என் மாமனாரு!…” என்றான் மாமனாரில்  அதிகமான அழுத்தம் கொடுத்து,
மடைதிறந்த வெள்ளமாக தன உணர்வுகளை மனசாட்சியிடம் கொட்டிகொண்டிருந்தான்.
“என்னோட உரிமை அவ. என்னால நந்தினியை விட்டுட முடியாது. ஆனா இப்போவும் இது காதலானா ம்ஹூம் தெரியலையே?…அவ என்னோட மனைவி…அவ மேல ஒரு ஈர்ப்பும் பாசமும் இருக்கு. இல்லைன்னு சொல்லவே மாட்டேன். அது காதலா சீக்கிரமே மாறும்!…” என முடித்தவன்,
“அவளுக்கு எப்போ பல்ப் எரிய போகுதோ? ஹ்ஹம்…” என பெருமூச்சு விட்டவனை பார்த்தவாறே இருந்த மனசாட்சியிடம்,
“பல்ப் எரியலைனா என்ன? ஒரு காமாட்சி விளக்கு , இல்லைனா சிம்னி விளக்காவது கொளுத்தி எரியவச்சிடுவோம்ல!…”என்றான் குறும்பாக.
இப்போது உதயாவின் மனதின் சஞ்சலங்கள் அனைத்தும் விடைபெற்று தெளிவாக இருந்தது.
நந்தினி கதவை திறக்கும் அரவம் கேட்டு மனசாட்சியை உள்ளே தள்ளி மனதை பூட்டினான்.
“வா, இந்தா இந்த பாலை குடி!…” என குடுத்துவிட்டு அவள் குடித்து முடிக்கவும்,
“இப்போ கேளு!…” என அவளை பேச தூண்டினான்.
“இங்க எப்படி எல்லா ஏற்பாடும் பண்ணினாங்க?..”
“என்ன ஏற்பாடு?…” என உண்மையாகவே புரியாமல் கேட்டவனிடம்,
“நம்ம கல்யாணத்தை எல்லோருமே ஏத்துக்கிட்டாங்க, அதுமட்டுமில்லாம வரவேற்புக்கும் ஏற்பாடு பண்ணி வச்சிருக்காங்க எனக்கு ட்ரெஸ் முதற்கொண்டு இதெல்லாம் எப்படி?…உங்க மேல யாருக்குமே கோவமில்லையா?…” என மூச்சுவிடாமல் கடகடவென கேள்வி கேட்டவளை பார்த்து புன்னகைத்தவன்,
“நமக்கு கல்யாணமானது எப்போவோ வீட்ல தெரியும். அதாவது, முதல்ல நடந்ததுல, அருவியூர்ல வச்சு, அந்த கல்யாணம். அன்னைக்கே சொல்லிட்டேன். அதுமட்டுமில்லாம சொல்லவேண்டிய கட்டாயம் வேற. நடந்தது தெரியவும் எப்போ நீ இங்க வரப்போறே எல்லோருமே காத்துகிட்டு இருந்தாங்க!…”
“எனக்காகவா? எப்படி?..” என விழிகள் விரிய கேட்டாள் ஆர்வமாக.
“ஒரே நாள்ல எல்லாத்தையும் சொல்லிட்டா கதை முடிஞ்சதுமே?…” – சிரித்தபடி.
“என்ன சொல்றீங்க?…” என வினவவும்,
“இன்னைக்கு காலையில நான் மண்டபத்துக்கு வரவுமே மதி போன் பண்ணி வீட்ல எல்லோர்கிட்டையும் சொல்லிட்டான். அதுமட்டுமில்லை அங்க பிரச்சனை பெருசாகவும் அங்க நடந்த எல்லாத்தையுமே சொல்லி போட்டோவையும் எடுத்து வீட்டுக்கு மெசேஜ் அனுப்பிட்டான் கெளரிக்கு!…” என அவன் சொல்லிகொண்டே போக நந்தினியின் மனம் காலையில் நடந்தவற்றை சுற்றிகொண்டிருந்தது.
பெற்றோரை நினைத்து கலங்க ஆரம்பித்தது. அன்றைய நிகழ்வு அவளது மனதில் ஆறாவடுவாகிவிட்டதை உணராமல் போனது உதயாவின் துரதிஷ்டம் தானோ?. அடக்கிவைக்கப்பட்ட குமுறல் ஆக்ரோஷமாக வெளிப்படும் சூழ்நிலையில் அதை எவ்வாறு சரிசெய்யபோகிறான்?.
நந்தினியின் முகமாற்றத்தை கவனியாமல் தன் போக்கில் நடந்தவற்றை சொல்லிகொண்டிருந்தான். அவன் சொல்ல சொல்ல பதில் ஏதும் பேசாமல் அமைதியாக கேட்டுகொண்டே வந்தாள். அவளது அமைதியை பார்த்தவன் என்னவாகிற்று என்று வினவ, நொடியில் தன்னை சுதாரித்துகொண்டு ஒன்றுமில்லை என தலையாட்டி மேலே சொல்லுமாறு தூண்டினாள். உதயாவும் உற்சாகத்தோடு,
“இங்க எல்லோருக்குமே தெரியும், அப்போவே வெளியூர் சொந்தகாரங்களுக்கு எல்லாம் போன்ல சொல்லி வரவச்சுட்டாங்க!… எல்லாம் கிழவி வேலை!…” என்றான் பெருமிதமாக.
“இங்க ஊர்ல பாதிக்கும் மேல சொந்தகாரங்க & ப்ரெண்ட்ஸ் தான், அதனாலதான் எல்லாத்தையும் சேர்ந்து நாம வரதுக்குள்ள முடிச்சுட்டாங்க…இந்த மதி வேற அப்பப்போ எங்க இருக்கோம், வர எவ்வளோ நேரமிருக்குன்னு வரைக்கும் தகவல் குடுத்துட்டே இருந்தானே?…”
“அதுமட்டுமில்லாம இப்போதைக்கு அவசரத்துக்கு உனக்கான ட்ரெஸ் எல்லாம் என் சித்தியும் கெளரியும் தான் போய் வாங்கிட்டு வந்தாங்க!…”
“சித்திக்கு ஸ்டிச்சிங் நல்லா தெரியும், அதான் உனக்கு புடவைக்கான மேட்சிங்  ரெடி பண்ணிட்டாங்க!…”
“நீயும் கெளரியும் கிட்டத்தட்ட ஒரே போலதானே இருக்கீங்க? அதனால பிரச்சனை இல்லை உனக்கு ஏதும் சேஞ் பண்ணிக்கணும்னா நீ நாளைக்கு சித்திகிட்ட சொல்லி பண்ணிக்கோ, புரிஞ்சதா?…”
“போதுமா விளக்கம்? இல்லை இன்னும் வேணுமா?….”
அவன் பேசபேச இப்படியும் செய்வாங்களா? இவங்க எனக்கு சொந்தங்களா கிடைக்க தான் தகுதியானவள்தானா? இந்த எண்ணம் தலைதூக்கியதும் அவனிடம் கேட்டே விட்டாள்.
“தகுதியா? தகுதின்னா என்னனு நீ நினைக்க?…”
நந்தினி, “இதுக்கு என்ன பதில் சொல்றது எனக்கு தெரியலையே?…” எனவும்,
“இல்லை நீதான கேட்ட, நீதான் சொல்லேன்!…”என்றான் அவளது எண்ணமென்ன என தெரிந்துகொள்ள,
“நீங்க நல்லா படிச்சிருக்கீங்க, அப்புறம்…” என அந்த அறையை கண்களால் அளந்தபடி அதற்குமேல் பேசமுடியாம தொண்டையில் வார்த்தைகள் சிக்கிக்கொள்ள, அதை யூகித்தவனாக,
“பணத்தையும், படிப்பையும், வசதியையும் வைத்து யாரையுமே எடை போடாதே, பணம் என்பது பெருமை படகூடிய விஷயமே இல்லை, வசதியில்லாத வீட்ல பிறந்தா அதுக்காக அவமானமா என்ன?….புரியுதா?…”
“ம்ம்!..” என தலையாட்டியவளை பார்த்து,
“இப்போதைக்கு உனக்கு புரியிற மாதிரி ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன். அன்பு மட்டுமே தகுதியை நிர்ணயிக்கும். மத்தவங்க நம்ம மேல காட்டுற அன்புக்கு நாம தகுதியா இருந்தா போதும்!…”
“இந்த வசதியை பார்த்து நாம ரொம்ப பணக்காரங்கன்னு நினைச்சிடாதே புரியுதா?…” எனவும்,
“எனக்கு நீங்க சொல்றது புரியலைங்க!…”
“ப்ச், சில விஷயங்கள் நீயுமே தெரிஞ்சிக்கிறது நல்லது!…”
“நாம சம்பாதிக்கிறது நமக்காக மட்டுமில்லை. நமக்குன்னு சில கமிட்மெண்ட்ஸ் இருக்கு நந்து. நாம நிறைய வசதியில்லாத குழந்தைகளையும் ஆதரவற்ற குழந்தைகளையும் படிக்க வச்சிட்டு இருக்கோம்!..” என நாம் என்று கூறி அவளையும் அதில் இணைத்துகொண்டான்.
“இப்போ இந்த குடும்பத்தில் நீயும் ஒருத்தி. எனக்கு பக்கபலமா இனி நீ இருக்கணும். உன்னோட ஒத்துழைப்பும் இனி எல்லா விஷயத்திலும் தேவை. போக போக உனக்கே புரியும் பாட்டியும் அம்மாவும் உனக்கு துணையா இருப்பாங்க, சீக்கிரமே எல்லாத்தையும் தெரிஞ்சுப்ப!..” என்று முடிக்க,
அவனையே பிரமிப்பாக பார்த்திருந்தவளை சொடுக்குபோட்டு அழைத்தவன், “என்ன இப்படி உட்கார்ந்துட்டே தூங்க போறியா?…” எனவும்,
“ம்ம் தூங்கனும்….” என இழுத்தவளை,
“எதையாச்சும் அபத்தமா பேசி கோவத்தை கிளப்பிடாத, அப்புறம் நான் மனுஷனா இருக்கமாட்டேன். பேசாம வந்து தூங்கு!….” என மிரட்டிவிட்டு கட்டிலின் ஒருபுறம் படுத்துவிட்டான்.
மறுபுறம் வந்து படுத்தவளிடத்தில் பெற்றோரின் நினைவு வந்து ஒட்டிகொண்டது.
தூக்கம் வராமல் அழுதபடியே படுத்திருந்தவளை, “இப்போ ஏன் இந்த அழுகை?…” என உதயா கேட்டதும் திடுக்கிட்டு திரும்பினாள்.
“நீங்க இன்னும் தூங்கலையா?…” மாட்டிக்கொண்டோமே என விழிக்க,
“நீ ஏன் அழுத?…”என்றான் விடாப்பிடியாக.
சொன்னா திட்டுவானோ என்று பயந்த படி, “இல்ல அப்பாம்மா நியாபகம்  வந்திருச்சு, அதான் இப்போ என்ன செய்யறாங்களோ? தெரியலை!…” என்றவள் திடீரென  நியாபகம் வந்தவளாக,
“என்னங்க!…” என்று உதயாவை அழைக்கவும் அவனோ,
“ம்ம் என்னங்க, சொல்லுங்க!…” என்றான் நக்கலாக. அவளோ அதை கண்டுகொள்ளாமல்,
“உங்க அட்ரெஸ் எங்கப்பாக்கு தெரியுமா?…” என கேட்கவும் படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்து வயிற்றை பிடித்தபடி சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.
“இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு இப்டி சிரிக்காங்க?…” என அவளது முகமே வாடிவிட்டது.
“நல்ல நேரம் பார்த்துதான் கேட்ட போ!..”என்று அடக்கமாட்டாமல் இன்னும் சிரித்தபடியே சொன்னவன் அவளது முகத்தை பார்த்து சிரிப்பை கைவிட்டவனாக,
“நல்லாவே தெரியும். உன் அப்பாக்கு நான் யாரு? எந்த ஊரு? நம்ம குடும்பம் எல்லாமே நல்லா தெரியும்!…” என அவளுக்கு வேண்டிய தகவலை சொல்லி அவளுக்கு நிம்மதியளித்தவன்,
“உன் வீட்ல உன் கிட்ட எதுவுமே ஷேர் பண்ணிக்க மாட்டாங்களா?…”
“ம்ஹூம்!..” என்றாள் இன்னமும் வாட்டம் குறையாமல்.
“இன்னொரு விஷயம் சொல்லவா?…”
விழி உயர்த்தி பார்த்தவளிடம், “என் மொபைல் நம்பரை உன் ப்ரெண்ட் கிட்ட குடுத்திட்டுதான் வந்திருக்கேன், நீ வேணா பாரு அவனே போன் பண்ணுவான் நாளைக்கு!…” என்று சொல்லவுமே முகம் பூவாக மலர்ந்து விகசித்தது.
“நிஜமாவா? விஜி போன் பண்ணுவானா?…” என ஆர்வமாக கேட்டவளிடம் ஆமாமென தலையசைத்து விட்டு,
“அவன் பண்ணலைனா என்ன?, அங்க சூழ்நிலை எப்படி இருக்கோ?…. நாம கால் செய்து பேசலாம். நானும் அவன் நம்பர் வாங்கிட்டு வந்திருக்கேன்!…” என மேலும் அவளை குளிர்வித்தவன்,
“என்னை பற்றி தெரிஞ்சுக்கணும்னு உனக்கா தோணவே தோணாதா?” என்றவனின் குரலில் சிறு ஏக்கம் இழையோட.
“தெரிஞ்சுக்கனும்தான், ஓரளவு தெரியும். மிச்சத்தை நீங்களா சொன்னா கேட்டுப்பேன்!..” என அசடு வழிந்தவாறே சொல்லவும்,
அவளது தலையில் லேசாக ஒரு குட்டு வைத்து, “தெரிஞ்சிக்கிற லட்சணத்தை பாரு?” என புலம்பியவாறு.
“இப்போதைக்கு இந்த அளவுக்கு தெரிஞ்சுகிட்டதே போதும்!…”என கூறியவன்,
“என்னை பார்த்தா பாவமா இல்லையா?..”
“என்னாச்சுங்க?…”
“பின்ன மணியென்ன பாரு எனக்கு தூக்கம் அப்படி சொக்குதே. நீ தூங்கலைனா எனக்கும் தூங்க தோணாது!…”
“நீங்க தூங்குங்க, நானும் தூங்கிடுவேன்!…”
“இல்லை நீ தூங்கு பார்த்துட்டு நான் தூங்கறேன், உன்னை நம்ப முடியாது!..” எனவும் சட்டென படுத்து கண்ணை மூடிகொண்டாள்.
“என்னங்க நான் தூங்கிட்டேன், நீங்களும் தூங்குங்க!…”என்று கண்ணை மூடியவாறே கூறவும் அவளது சிறுபிள்ளைதனத்தில் சிரித்தபடி தானும் கண்ணயர்ந்தான்.
அலுப்போடு சேர்ந்த ஆழ்ந்த உறக்கம் இவர்களுக்காகவே  காத்துகொண்டிருந்தது போல அவசரமாக அள்ளி அரவணைத்துகொண்டது. 

Advertisement