Advertisement

அத்தியாயம் 10 3
சசியின் இறுகிப்போயிருந்த முகத்தைப் பார்த்த நறுமுகைக்கு, ‘என்ன விஷயம்னு சொல்லித் தொலையேண்டா’, என்று கூற வேண்டும்போல் இருந்தது. அத்தனை கடினமாக அவன் முகத்தை வைத்திருந்தான். இயல்பாய் இருக்கும்போது தெரியாத நெற்றி சுருக்கம் இப்போது தெரிந்தது. சில நிமிடம் அமைதியாக இருந்தாள்.
அவனது கவனத்தை கலைக்க டேபிளில் இருந்த ஜூஸை கையில் எடுத்தாள். அந்த அசைவில் நிமிர்ந்தவன், நறுமுகையைப் பார்த்து, “என்னிக்கு இருந்தாலும் ஆரவ்-க்கு தெரியவேண்டிய விஷயம்தான் இது, ஆனா இப்போ வேணாம்னு நினைக்கிறேன்” பீடிகையோடு  ஆரம்பித்து,
“ஷீத்தல் பிரிஞ்சு போனதுக்கப்பறம் சந்த்ருவோட நடவடிக்கை மாற ஆரம்பிச்சது. அஃசுவலா அதுக்கு முன்னாடியே அவனுக்கு பிரச்சனை இருந்திருக்கணும்னு நினைக்கறேன். அங்க அவனோட வேலைபாக்கற ஆபிஸ்-ல லேடி ஸ்டாப்ஸ் கிட்ட சின்ன சின்ன விஷயத்துக்கும் தகராறு. ஒரு ஸ்டேஜ்ல staff மேல கையோங்கற அளவு போயிட்டான். அவங்க போலீஸ்ல complaint கொடுத்துட்டாங்க, இவனை அரெஸ்ட்-ம்  பண்ணினாங்க. அப்பத்தான் சந்துரு friend கால் பண்ணி அப்பாகிட்ட ‘சந்த்ரு ஒரு பிரச்சனை-ல இருக்கான்”, உடனே வாங்கனு சொன்னான்”
“நான் வேற எப்போவும் டூரிங்-ல இருந்தேனா? என்னைக் குழப்ப வேணாம்னு அப்பா நினைச்சிருக்கார், சோ, எங்கிட்ட சந்த்ரு குழந்தை டெலிவரிக்காக போறேன்னு சொன்னார். அன்ட் அங்க போற வரைக்கும் அவருக்கும் இதான் பிரச்சனைன்னு தெரியாதில்ல?”
“உடனே போறதுங்கிறது..?”, “விசா.. டிக்கெட்.. எவ்ளோ ப்ராஸஸ்?”,  “எப்படியோ ஏஜெண்ட்ஸ் மூலமா டூரிஸ்ட் விஸா எடுத்து டென்வர் போனார்”, சற்று நிறுத்தினான்.
பெருமுச்சுவிட்டு, “அங்க சந்த்ருவை பாத்தார். ஆனா prison-ல இல்ல, he was in ஹாஸ்பிடல்”, ஒருமுறை நறுமுகையை நேராக பார்த்தான், பின் வேறு பக்கம் திரும்பி,
“he was mentally collapse”
“ஷீத்தலோட ஆக்டிவிடீஸ் அவனை இப்படி மாத்திடுச்சா? இல்ல, அவனால சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தன்னை அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாததால் இப்படி ஆயிட்டானா? ன்னு தெரில. அடல்ட்ரி-ங்கிறது பெரிய விஷயமே கிடையாது, அங்க US-ல மட்டுமில்ல, எங்கேயுமே நடக்கறதுதானே? “
“அவனால ஈசியா அதைக் கடக்க முடியல, லேடிஸ் யாரைப் பாத்தாலும்.. கெட்ட வார்த்தையால திட்ட ஆரம்பிச்சிடுவான். இன்னும் கொஞ்ச நேரம் போனா அடிக்கவும் செய்வான், கண்ட்ரோல் பண்ண முடியாத லெவெல்க்கு போயிட்டான்”
“அப்போ ஷீத்தல் ட்யூ டேட்-க்கு ஒரு மாசம் இருந்தது, அவளுக்கு சந்த்ரு-வைப் பத்தி தெரிஞ்சதும்.. ஹூம் என்ன சொல்றது? இதைக் காரணம் காட்டி, அப்பாவை money vending machine ஆக்கிட்டா, வயித்துல இருக்கற குழந்தையை பாத்துக்க அட்டெண்டெர்ஸ் வச்சா”
“சந்த்ருவை வீட்ல வச்சி ட்ரீட் பண்ணலாம்-னு பர்மிஷன் வாங்கி, அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போனார். ஒரு பக்கம் சந்த்ரு, இன்னொரு பக்கம் வெளில வர காத்திருக்கிற ஆரவ், நடுல ஷீத்தல் டார்ச்சர், எல்லாம் ஒரே நேரத்துல”.
“அவரால தனியா சமாளிக்க முடில. நா பெங்களூர்லேர்ந்து இங்க வர்றதுக்கு முதல் நாள்தான் இதெல்லாம் எனக்கு தெரியும், அப்பா சந்த்ருவோட வீடியோ கால்-ல பேச சொன்னார். அவனைப் பார்த்ததும் முதல்ல எனக்கு ஒன்னுமே புரியல, இவனையா அப்பா சொல்றாருனு தோணுச்சு, பட் அவன் பேசப் பேச உள்ள எவ்ளோ டேமேஜ் ஆயிருக்கான்னு புரிஞ்சது”
“நான் அவனைப் பத்தியும் பொறக்கப்போற ஆரவ் பத்தியும் உன்கிட்ட சொல்லணும்னு இங்க வந்தேன். ஆனா… என்னன்னவோ ஆயிடுச்சு. அப்பா ஷீத்தல் பத்தி பேசினது, சந்த்ரு பேச்சு, அந்த செக்ரெட்டரியோட  கால், நா வாசல்ல இருக்கும்போது நீ போன்ல பேசினது.. ன்னு.. சரியா சொல்லனும்னா நா அப்போ ரொம்ப குழப்பத்துல இருந்தேன்.
“அண்ட் உனக்கு என்கிட்டே நிதானமா பேசற அளவு பொறுமை இல்ல, I don’t blame you, நானும் உன்கிட்ட என்னோட ரீசன்ஸ் சொல்ல விருப்பப்படல. காரணம் நம்ம ஈகோவா இல்ல டைம் சரியில்லாம போச்சா? தெரில.”
“வெல், நான் இங்க பேப்பர் குடுத்துட்டு தினமும் சந்த்ருகிட்ட பேசி பேசி ஓரளவுக்கு அவனை நார்மல் ஆக்கறத்துக்கு ட்ரை பண்ணினேன். ஓரளவு சரியா ஆறான்னுதான் தோணுச்சு”
“ஆரவ் பிறக்கும்போது என்னை அப்பா அங்க வர சொன்னார். அவனை என்கிட்டத்தான் முதல்ல குடுத்தாங்க. ஒரு பெரிய பிங்க் ரோஸ் மாதிரி இருந்தான்”, சசியின் முகத்தில் அந்த நினைவுகளில் மெல்லிய சிரிப்பு இழையோடியது.
“ஹ்ம்ம். யூ நோ, பணத்தை பத்தி, செலவு பத்தி யோசிப்பேன்னு அதுவரைக்கும் நா நினைச்சதே இல்ல, டென்வர் போனதுக்கப்பறம் எங்கிட்ட ஒண்ணுமே இல்ல, சந்த்ரு-வை பாத்துக்க நர்ஸ், ஷீத்தல் குடுத்த டிமான்ட்ஸ், ஆரவ்-க்கு பேபி சிட்டர். Life was miserable”
“அடுத்த இடியா, ஆரவ்-வை பாத்தா சந்த்ரு ஹிஸ்டீரிகல் ஆனான், இவன் என் குழந்தையில்ல, இது என் குழந்தையில்ல-னு ஒரேடியா சத்தம் போட ஆரம்பிச்சிடுவான். அப்பாவால ஆரவ் சந்த்ரு ரெண்டு பேரையும் வீட்ல வச்சு சமாளிக்க முடில, நான் கனடா-ல வேலை பாத்தே ஆகவேண்டிய கட்டாயம். ஆரவ்-வை கனடா கூட்டிட்டு போறேன்-ன்னு அப்பாட்ட சொல்லி, அவங்கள இந்தியா அனுப்பிட்டேன்”.
நறுமுகையைப் பார்த்து, “ஆரவ் க்கு முடியிறக்க வரும்போது, இங்க ஒருமுறை வந்தேன், வீட்ல நவநீத் மட்டும் இருந்தான், நீ திருச்சி போயிருக்கறதா சொன்னான், சோ you moved on -ன்னு நினைச்சுகிட்டேன்”, சில நொடிகள் மௌனமாய்.
“நான் first time கனடா கூட்டிட்டு போகும்போது, ஆரவ்-க்கு மூணு மாசம். அவனை நான் பாத்துக்கிட்டேன்-ன்னு சொல்றத விட அவனால நான் நானா ஆனேன்-னு சொல்லலாம். He was my driving force, angel in my life. நான் ஆபிஸ் போற நேரத்துல, தெரிஞ்சவங்க வீட்ல அவனை விடுவேன், of course பணம் கொடுத்தேன், ஆனா நோ சொல்லாம அவங்க ஹெல்ப் பண்ணாங்க”.
“கொஞ்சம் பெரிசா ஆனதுக்கப்பறம், பேபி ஸிட்டர்ஸ் வச்சி பாத்துக்கிட்டேன். ஆபிஸ் விட்டா எப்படா வீட்டுக்கு வருவோம்னு இருக்கும், நான் அப்போ யோசிச்ச ரெண்டே விஷயம் பணம் அண்ட் ஆரவ், சந்த்ரு ட்ரீட்மெண்ட்-க்கு அப்பா ஏறாத க்ளினிக்/ஹாஸ்பிடல் இல்ல, தவிர, பூஜை பரிகாரம்ன்னு பாத்துட்டு இருந்தார்”
“பெங்களூரை விட திருச்சி-ல காஸ்ட் of living கம்மி, மெடிக்கல் வசதியும் இருந்தது, சந்த்ருவோட அப்பா இங்க வந்து செட்டில் ஆனார், ட்ரீட்மெண்ட்-ம் நடந்தது “
“அவன் நல்லா இருக்கற மாதிரிதான் இருப்பான், திடீர்னு ‘நான் எதுல குறைஞ்சு போயிட்டேன்?, எனக்கு என்ன குறை-ன்னு’ அழுவான். அவனுக்காகவே அப்பா, வீட்ல எந்த லேடீஸையும் வர விட மாட்டார். அவரால வேறென்ன பண்ண முடியும்?”
“கொஞ்ச நாள்-ல அவன் சூசைட் பண்ணிகிட்டான். அப்பா உடைஞ்சு போயிட்டார். நமக்கு மட்டும் ஏண்டா இப்படி நடக்குதுன்னு சொல்லி சொல்லி புலம்புவார். டேக் இட் ஈஸி-ப்பா ன்னு சொல்லுவேன்”
“அவன் ஈஸியா எடுத்துக்கலையேடா, எடுத்துட்டு இருந்தா உயிரோடவாவது இருந்திருப்பானே ம்பார்”.
“வெல். That’s it”, எல்லாம் சொல்லியாயிற்று என்பதுபோல இரு கைகளையும் விரித்து செயற்கையாக சிரித்தான்.
“அப்பாவை பாத்துக்கணும், அண்ட் எனக்கும் இந்தியா வர்ற பிளான் இருந்தது, ஆரவ்-வை இங்க அப்பாட்ட அனுப்பி வச்சேன், முடியவே முடியாதுன்னு ரொம்ப அழுதான், இது நம்ம ஊரில்லைடா, அதுதான் நம்ம ஊருன்னு சொல்லி இங்க கூட்டி வந்தேன், உங்க உன் ஸ்கூல்-ல தான் அட்மிஷன் போட்டேன்”.
“மதர் நேம் கண்டிப்பா fill பண்ணனும்னு சொன்னாங்க, சட்டுனு ‘இவா’, உன் பேர்தான் தோணிச்சு, இவாஞ்சலின்-ன்னு குடுத்தேன். பிரிஞ்சிட்டாங்க-ன்னும், ஆரவ்க்கு அப்பாதான் கார்டியன்-னும் சொல்லி சேர்த்தேன்” என்று கூறி முடித்தான்.
பின், “எப்போலேர்ந்து இது உன் ஸ்கூல்? நீ எப்படி நம்ம ஃபீல்டு விட்டு இங்க வந்த?”
“முதல்ல அப்பா friend இந்த ஸ்கூல  run பண்ணிட்டு இருந்தார், அவர் பொண்ணு அவரை பூனே கூப்பிட்டதால, அப்பா டேக் ஓவர் பண்ண வேண்டியதா போச்சு, தென்.. அம்மாக்கு பாராலிஸிஸ், விது-வ, அம்மா-வ பாத்துக்க.. வேலைய விட்டேன். வந்துட்டேன். வந்து கொஞ்ச நாள்தான் ஆகுது”
“ம்ம். ஓகே என்ன பண்ணலாம் சொல்லு?”, கேள்வியில் சிறிய பயத்துடன் ஒரு எதிர்பார்ப்பு.
சிறிது நேரம் யோசித்து, “இதெல்லாம் நான் டைஜஸ்ட் பண்ணனும், அப்பா அம்மா ஆரவ், விது, தாமோதர் ஸார் எல்லாமும் யோசிக்கணும் இல்லையா?, இனிமே எந்த முடிவெடுத்தாலும் அவசரப்பட்டு எடுக்கறதில்லன்னு ஒரு பாலிசி”
என்னவோ சொல்ல வந்தவன், நிறுத்தி பின் தயங்கி.., “அந்த லிஸ்ட்-ல சசியும் இவாவும் இல்லையா?”
“சசியும் இவாவும் அவங்கள பத்தி மட்டும் யோசிச்சு, யாரைப் பத்தியும் கவலைப்படாம.. தப்பு பண்ணினாங்க இல்லையா? ஸோ அவங்களப்பத்தி யோசிக்க முடியாது. எல்லா நேரத்துலேயும் இவங்களுக்கு சப்போர்ட் பண்ணின family, அப்பறமாத்தான் சசி இவா”, அழுத்தமான அர்த்தம் பொதிந்த வார்த்தைகள், ஆனால் இலகுவான புன்முறுவலுடன் சொன்னாள்.
சசி, ஒரு நொடி முகம் சுண்டினான், பின் தெளிந்து, “ஓகே எதுவானாலும் சரி” என்றான்.
தலையசைத்து கிளம்புவதற்காக எழுந்த நறுமுகை, “நீ எப்போ சென்னை வந்த?”
“ம்ம் சரியா ஞாபகம் இல்ல, ஆரவ்-க்கு  ஒரு வயசு இருக்கும்”
“விது டெலிவரி ஆகி நான் வீட்ல இருந்திருப்பேன், அப்போதான் நவீ ஹாலிடே விசிட் வந்தான், சென்னைல நம்ம.. என் வீட்ல இருந்தான்”, என்றவள் தொடர்ந்து..
“நவீ என் மாமா பையன், அன்னிக்கு நீ வந்தபோது அவனோடதான் போன்ல பேசிட்டு இருந்தேன், என்னை அவனுக்கு மேரேஜ் பண்ணி வைக்கணும்னு அம்மாக்கும் மாமாக்கும் ஆசை, நாங்க அத அப்பப்போ கிண்டல் பண்ணி பேசிட்டு இருப்போம்”
“நான் கேக்கலையே?”, உணர்வுகளற்ற முகத்துடன் சசி.
“சொல்லியிருக்கணுமோ-னு தோணுது”, குற்ற உணர்வுடன் நறுமுகை.
“அப்போ இருந்த சூழ்நிலைல, நீ சொல்றத நம்பியிருப்பேனா தெரியாது”, உண்மை சொன்னான். அது நறுமுகைக்கு சற்று ஆறுதலாக இருந்தது.
“ம்ம்” தலையசைத்து வாசலுக்கு நடந்த நறுமுகை விடை பெறும் முன், “நேத்து அப்பாட்ட ஏதாவது பேசினியா?”
“இல்லையே, ஆரவ் அப்பான்னு இன்ட்ரோ பண்ணிக்கிட்டேன், பேர் கேட்டார் சசி-ன்னு சொன்னேன், நீங்க கனடா ல ஒர்க் பண்றீங்கன்னு ஆரவ் சொன்னான்-ன்னு சொன்னார், ஆமா சொன்னேன், அவ்ளோதான்”
இவாவிற்கு ஏதோ புரிவது போல இருந்தது, “அப்பாக்கு தெரியும்னு நினைக்கறேன்”, முணுமுணுத்தாள்.
“ஓஹ். பட் அவர் என்ன கேட்டாலும், எதுவா இருந்தாலும் நான்.. நான்தான் காரணம்னு சொல்றேன், அண்ட் என்னோட தப்பு நான் சரி பணறேன்”, என்றான் அவசரமாக.
“அது எல்லாத்தையும் அப்பா பாத்துக்கிட்டார், நம்மள யாரும் எதுவும் கேக்க முடியாத மாதிரி..”
“ஓஹ்!”…”இவா”, மென்று விழுங்கி, “வந்து.. இவ்ளோ நேரம் என் பிராப்ளம் பத்தி மட்டும் சொல்லிட்டு இருந்தேன், நீ உன்னோடத.. I mean நான் நீ எப்படி சுச்சுவேஷன்-ல இருந்தேன்னு…., அது.. உனக்கு அப்ஜெக்ஷன் இல்லன்னா..”, கேட்க வந்ததை சொல்ல இயலாமல் திணறினான். இந்த சசி நறுமுகைக்கு புதியவன். எப்போதும் எதிலும் தெளிவு அவன் குணம். விது & அவனால் இவாவிற்கு ஏற்பட்ட விளைவு, அவனைக் கொஞ்சம் பயமுறுத்தியது போலும்.
“நாம பெரியவங்களுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம், அப்பா அதுக்கு சம்மதிக்கல, உன்னை ஏத்துக்கல. so, நாம சென்னைல இருந்தோம், நீ வேலைக்காக கனடா போன, நமக்குள்ள மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆகி பிரிஞ்சிட்டோம், அப்டின்னு தான் இங்க இருக்கறவங்களும் எங்க சொந்தக்காரங்களும் நினைச்சிட்டு இருக்காங்க. அப்படி அப்பா frame பண்ணிட்டார்”
“ஓஹ்..”, “ஆனா உங்கப்பாவுக்கு தெரியுமில்லையா?”
“ம்ம். தெரியும் நீ சசி, கனடா-ன்னு தெரிஞ்ச உடனே யோசிச்சிருப்பாருன்னு நினைக்கறேன். நீ வேற ஏதாவது.. அவர் சந்தேகப்படறா மாதிரி பண்ணியா?”
அவசரமாக “நோ நோ நத்திங்”, என்றவன் புருவம் சுருக்கி “I hugged vidhu, அண்ட் kissed him”, என்றான் மெதுவாக. உடனே அவளை கைபிடித்து நிறுத்தி, “ஏன்? விது என் பையன்னு நீ சொல்ல போறதில்லியா?”, கேட்டான்.
அவனது கையை விடுவித்தவள், “நான் இப்போ எதுவும் சொல்ல முடியாது சசி, ப்ளீஸ் புரிஞ்சிக்கோ”, என்று விட்டு நேரே வீட்டுக்கு கிளம்பினாள்.

Advertisement